Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Swami came to London from India and stayed here for two days. He addressed a small group of people in Harrow on 17-5-2025. After a brief introduction by Mr M Rajagopalan, Swamiji spoke and insisted that Sandhyavandanam is an essential ritual, and one should ask any questions only after doing the basic duty. He insisted that Gayatri recitation will clear many of our doubts. Swamij quoted from many Upanishads and scriptures while answering many questions.
Questions were asked about rituals for the departed souls, a place for doing such Apara karmas, clash of dates in celebrating Hindu festivals between different Mutts as well between Sri Lankans and Indian Tamils. Swamiji answered that he was happy to note they are at least interested in celebrating the festivals and there is nothing wrong in doing it. Even in India different Panchangs are followed in different parts.
Another problem that was raised about cremating dead bodies a week or two after the person’s death. He said that the soul will be released from the place of death when the Karma is done. In India the body is cremated within 24 hours. He narrated many anecdotes to make his point. Discussion about Advaita and Vishistadvita also came up. Swamiji was a strong follower of Advaita.
Swamiji also related his personal experience in Rishikesh and current ashram or residence in Tamil Nadu. He is widely read and well versed in Hindu scriptures. He has written books in Tamil and English.
He was in London on his way to Scotland from Ireland.
At the end of the session Sri Kalyansundara Sivachariar thanked Swamiji for his speech and Rajagopalan for organising it.
Prasad was distributed at the end.
Please see the attachments for his websites and his Ashram in Tamil Nadu.
–subham—
Tags—Dravidacharyar, Ramakrishna Swami, London meeting, Q and A session.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-5
யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்
யாகம் செய்தால் குழந்தை பிறக்கும் என்ற செய்தி குறைந்தது மூன்று பெரிய நிகழ்ச்சிகள் மூலம் நமக்குத் தெரிகிறது
1.தசரத மாமன்னனுக்கு புத்திரப்பேறு இல்லாதபோது புத்ர காமேஷ்டி யாகம் செய்து ராமலெட்சுமண பரத சத்ருக்குனன் என்ற நான்கு குழந்தைகளை மூன்று மனைவியர் மூலம் பெற்றார் .
2.பாஞ்சால மன்னனான த்ருபதனுக்கு குழந்தைகள் இல்லாதபோது யாகம் செய்து திரவுபதியையும் சகோதரன் த்ருஷ்டத்யும்னனையும் பெற்றார்.
3.இதே போல பாண்டியநாட்டினை ஆட்சிசெய்த மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் குழந்தை இல்லாமல் தவித்தபோது ரிஷி,முனிவர்களின் சொற்படி யாகத்தைச் செய்தார்கள்; அந்தத் தடவில், அதாவது யாக குண்டத்திலிருந்து, மீனாட்சி என்ற பெண் அவதரித்தார் . அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் ஒரு புதிய பிரச்சனையும் தோன்றியது ; பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று முலைகள் இருந்ததைக் கண்டு ராஜாவும் ராணியும் கவலையுற்றனர்; அப்போது ஒரு அசரீரி கேட்டது; இவள் மணம் முடிக்கும்போது — அதாவது உரிய கணவனைக் காணும்போது – மூன்றாவது முலை மறைந்துவிடும் என்று அசரீரி கூறியது .
****
Draupdi coming out of Yaga Kunda
அதை பரஞ்சோதி முனிவர் பாடிய பாடல்களில் காணலாம் :
மனு நீதிப்படி ஆட்சி ; தமிழ் சம்ஸ்க்ருதப் புலமை
மனுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு ணைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.
பொருள்
மலயத்துவசனென்பான், மனுதருமமானது மகிழந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்; வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன்; சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன்; காண்டற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன்; வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் கடந்தவன் .
“தென்சொற் கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்”
எனக் கம்பர் ராமாயணத்தில் கூறுவது இங்கு நோக்கற் பாலது.
*****
சூரசேன மன்னன் புதல்வி காஞ்சனமாலா
வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வார்கள் பதி னாயிரிவ ருள்ளான்
வானொழுகு பானுவ வந்தொழுகு சூர
சேனன்மகன் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.
வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய,
காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வானிற் செல்லாநின்ற,சூரியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.
நன் பொருள் விரும்பினை அதற்கு இசைய ஞாலம்
இன்புறு மகப்பேறு மகத்தினை இயற்றின்
அன்பு உறு மகப் பெறுதி என்று அமரர் நாடன்
தன் புலம் அடைந்திடலும் நிம்ப நகுதாரான்.
நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால் தனது பதவி போய்விடுமென்று அஞ்சிய இந்திரன் மன்னனிடம் வந்து மகப்பேறு யாகத்தைச் செய்க என்றான்.
ஆசற மறைப் புலவர் ஆசிரியர் காட்டும்
மாசு அறு சடங்கின் வழி மந்திரம் முத்தாத்த
ஓசை அனுத்தாத்த சொரிதந்து அழுவ ஓதி
வாசவன் இருக்கையில் இருந்து எரி வளர்ப்பான்.
வைதீகர்கள் சொல்லியபடி உதாத்தம், அநுதாத்தம் ஒலிகளுடன் மந்திரங்களைச் சொல்லி நெய்யும் பொரியும் சமித்துகளும் தீயில் வார்த்து யாகம் செய்தான்.
வள்ளல் மலையத் துவசன் மீனவன் வலத்தோள்
துள்ள மனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ள எழு கொங்கைகள் ததும்ப நிமிர் தீம்பால்
வெள்ள மொழுகக்கு அரிய வேல் கணிட ஆட. 11
அந்த வேள்வியில் புகை ஆகாசமும் பூமியும் திசைகளும் பரவி போர்வை போல மறைத்தது. பின்னும் குடம் குடமாக நெய்யும் பொரியும் சமித்துக்களும் தேவர்க்குப் ப்ரீதியாக தேவாமிர்தம் போல ஆகுதி கொடுத்தான் . பரமசிவன் திருவாய் மலர்ந்தருளிய வாக்கியப்படியே நெய் நிரம்பப்பெய்து அக்கினியை அதிகப்படுத்தியபோது; காஞ்சனமாலா கொங்கைகள் ததும்பித் தீம்பால் வெள்ளம் பெருக்கவும் இடக்கண் துடித்தது .
பாண்டிய நாடு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி பெருகியது. சைவம் முதலிய தவ மார்க்கங்கள் உயர்ந்தன ; பாபங்கள் கெட்டு புண்ணியங்கள் வளர்ந்தன. தெய்வ வேதங்களும் தெய்வ துந்துபியும் திசை எல்லாம் முழங்கின. தேவ அரம்பையர் ஆடினார். மதுரை நகரில் உள்ளோர் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
531. மைம் மலர் நெடும் கண் அர மங்கையர் நடிப்ப
மெய்ம் மன மொழிச் செயலின் வேறு படல் இன்றி
அம்மதுரை மா நகர் உளர் ஆக மகிழ்ச்சி
தம்மை அறியாதன தலைத்தலை சிறப்ப. 13
Yaga Devata coming out of Putra Kameshti Yaga in Ramayana.
532. மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்
தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப
ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த. 14
18 பாஷைகள் வழங்குகின்ற நாடுகளில் தமிழ் நாடு சிறப்படைய மூவேந்தர் ஆளும் நாடுகளில் பாண்டியநாடு மென்மேலும் பெருமை அடைந்தது. அக்கினிதேவன் இதுவரை செய்த தவத்தின் பயனை அடைந்தான்.
533. நொய் தழல் எரிக் கடவுள் நோற்ற பயன் எய்தக்
கொய் தளிர் எனத் தழல் கொழுந்து படு குண்டத்
தைதவிழ் இதழ்க் கமலம் அப்பொழுது அலர்ந்து ஓர்
மொய் தளிர் விரைக் கொடி முளைத்து எழுவது என்ன. 15
534. விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை
வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்
கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை
சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப. 16
535. தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி
ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன
வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி
வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால. 17
536. சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்
பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப
வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை
சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட. 18
537. தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்
முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண்
பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்
எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள். 19
538. குறும் தளிர் மெல் அடிக்கிடந்த சிறு மணி நூபுர சதங்கை குழறி ஏங்க
நறும் தளிர் போல் அசைந்து தளர் நடை ஒதுங்கி மழலை இள நகையும் தோன்றப்
பிறந்த பெரும் பயன் பெறு பொன் மாலை மடி இருந்து ஒரு பெண்பிள்ளை ஆனாள்
அறம் தழுவு நெறி நின் றோர்க்கு இகம் போகம் வீடு அளிக்கும் அம்மை அம்மா. 20
மாந்தளிர்போல நெருப்பு வீசுகின்ற அந்த யாக குண்டத்தில் நெருங்கிய தளிர்களுடைய ஒரு வாசனைக்கொடி அநேக இதழ்களுடைய தாமரை மலர் முளைத்தெழுந்தது போல அம்மையார் தோன்றினார். தரும வழியில் செல்வோருக்கு இகபர சுகம் தரும் அவள் கொண்டையுடன் தோன்ற அதில் தொங்கிய முத்துமாலை சந்திரன் ஒளி போல இருந்தது . அவள் அணிந்த பவள மாலை சூரியப் பிரகாசத்தை வென்றது. இடையில் சிற்றாடையும் நவரத்தின மேகலையும் அசைந்தாடின ; காதிலணிந்த குண்டலமும் குதம்பையும் இருளை போக்கினை. அமுதம் போல மழலை சிந்த மூன்று வயதுள்ள பெண்பிள்ளை மூன்று ஸ்தனங்களுடன் தோன்றினாள். மெல்லடியில் அணிந்த சதங்கையும் சிலம்பும் ஒலித்தன ; உமையே பெண்ணாகத் தோன்றினாள்.
இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் ஒடிஸா மாநிலத்தில் பார்ப்பதற்கும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி கொள்வதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.
அதன் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.
மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய காலத்தில் இதன் பெயர் கலிங்க தேசம்.
புகழ்பெற்ற புனிதமான புரியைச் சுற்றியுள்ள சில இடங்களை இங்கு பார்ப்போம்.
புரி ஜகந்நாதர் ஆலயம்
புனிதமான இந்தத் தலம். புவனேஸ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான்.
பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.
15 நாட்கள் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், “21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை நீ ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர்” என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.
கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.
16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர்.
ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மஹாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.
தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.
முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில் நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.
புரி கோவிலில் முதலில் சிங்க த்வார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.
இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது.
சிலிகா ஏரி
பூரியிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலிகா ஏரி ஆசியாவிலேயே மிகப் பெரிய உப்பு ஏரியாகும் இதை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. இது மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ஏரியாகும். இது டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும். சடப்படா நகரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் பல்வேறு இடங்களிலிருந்தும் வரும் காட்வால், முள்வால் பறவை உள்ளிட்ட ஏராளமான பறவைகளையும் காணலாம். பேரிக்காய் வடிவத்தில் உள்ள இந்த ஏரியுடன் 52 ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு எராளமான ஹோட்டல்கள் உள்ளன.
கொனார்க் சூரியன் கோவில்
பூரி நகரிலிருந்து வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தூரத்தில் கொனார்க் உள்ளது. இங்குள்ள கோவில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சிவப்பு மணல்கற்களாலும் கருங்கற்களாலும் அழகுற அமைக்கப்பட்ட இந்தக் கோவிலை ஐரோப்பிய மாலுமிகள் கறுப்பு கோயில் – ப்ளாக் பகோடா என்று அழைத்தனர்.
நூறு அடி உயரமுள்ள ரதமானது 24 சக்கரங்கள் கொண்டதாகவும் ஆறு குதிரைகள் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும் படி அமைக்கப்பட்டது.
இந்த தேரின் சக்கரத்தை வியப்புடன் அனைவரும் பார்ப்பது வழக்கம்.
“இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியையும் தாண்டிச் செல்கிறது“ என்று நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வியந்து போற்றுகிறார்.
யுனெஸ்கோ இதை பாரம்பரியக் கலைச்சின்னமாக அறிவித்துள்ளது.
சந்திரபாகா கடற்கரை:
பூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சந்திரபாகா கடற்கரை. இது உலகப் பிரசித்தி பெற்ற கொனார்க் சூரியதேவன் கோவில் தலத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து சூரிய தேவனை வழிபடுகின்றனர்.
எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு, ரத சப்தமி தினத்தன்று வந்து கூடுகின்றனர்; சூரியனைத் தொழுகின்றனர். இங்கு நீர் விளையாட்டுக்கள் பிரபலம். படகு சவாரி உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.
சூரியதேவன்கோவிலுக்கு உலகின் பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.
ராம்சண்டி ஆலயமும் கடற்கரையும்
குசபத்ரா நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது ராம்சண்டி ஆலயம். கொனார்க் சூரிய கோவிலிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவி ராம்சண்டி இங்கு கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கிறாள். தேவி ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கோவிலின் பின் பக்கம் ஓடும் குசபத்ரா நதி கண்ணுக்கு இனிமையான காட்சியைத் தரும். இங்கு தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள கடற்கரையும் மிகவும் பிரபலமான ஒன்று.
இவை தவிர பார்க்க வேண்டிய ஆலயங்களும் பூங்காக்களும் அருங்காட்சியகங்களும் நிறையவே இந்தப் பகுதியில் உள்ளன.
அவரவர் பட்ஜெட்டிற்கும் ஓய்வெடுக்க உள்ள காலத்தையும் பொறுத்து இந்த இடங்களுக்குத் திட்டமிட்டுப் பயணிக்கலாம்; புத்துணர்ச்சியைப் பெறலாம்!
பழம்பெரும் ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், அடர்ந்த வனாந்திரங்கள், புகழ் பெற்ற பண்டைய வரலாறு, மனதை ஈர்க்கும் இயற்கை வனப்பு கொண்ட ஒடிஸா இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்வது சரிதானே!
240 books, 50 research papers: Read why was Swami Rambhadracharya awarded the Jnanpith Award – Not the saint but the award itself has been honoured
Most of those who are targeting Ram Bhadracharya were either not born or would have been playing in diapers 27 years ago, when the then Prime Minister Atal Bihari Vajpayee was unveiling his book ‘Shri Raghava Kripa Bhashyam’ in April 1998.
Do scholars belong to any particular group? Will only a person who quotes the writers of America and Europe be called a scholar, a person engaged in Indian philosophy has no right to get a certificate of scholarship? Certificate, because there is a special gang in India which keeps distributing it. It is the gang that decides who is a writer and who is not, who is an intellectual and who is not, who is a scholar and who is not. After Swami Rambhadracharya received the ‘Gyanpeeth Award’, it has become clear that he does not fall in the list of scholars imagined by this gang.
President Draupadi Murmu on Friday (May 16, 2025) honoured Jagadguru Swami Rambhadracharya of Ramanandi sect with the 58th ‘Gyanpeeth Award‘. Established in 1944 by industrialist Sahu Shanti Prasad, every year ‘Bharatiya Gyanpeeth’, has been honouring writers who have made significant contributions in the field of literature. This award was started in 1965. Big names like Sumitranandan Pant, Ramdhari Singh Dinkar, Amrita Pritam, Mahasweta Devi, Nirmal Verma, Kedarnath Singh and Krishna Sobti have been honoured with this award. Now the name of Swami Rambhadracharya, founder of ‘Tulsi Peeth’ located in Chitrakoot, has also been added to this league.
Why did Swami Ramabhadracharya get the ‘Gyanpeeth Award’?
After Jagadguru Swami Rambhadracharya received the ‘Gyanpeeth Award’, it is being repeatedly asked as to why this honour was given to him? Most of the people asking this question are those who do not even know the names of the bigwigs in Indian literature, or the names of important books or the types of works that have dominated the field of Indian literature in different periods. Those who are not aware form their opinion on the basis of social media. If they have not seen the literary works of Swami Rambhadracharya on social media, then they will definitely ask questions.
It is not that the people asking these questions are ignorant because they do not have money or access to the mainstream, they have themselves chosen to live in the well of ignorance. The reason is – they hate Indian culture, traditions and history. This hatred leads them to ignorance and this ignorance provokes them to oppose anyone doing serious work. In this article, I am not going to reply to them, but I am going to explain to the common people, to trap whom in the web of delusion the ignorant gang plans all the conspiracies.Again the same question – why was a blind sadhu wearing saffron clothes given the ‘Jnanpith Award’? Is there no secularism left in India? How can a Hindu saint be honoured by the President? I am going to answer all such questions through this article. The direct answer to the first question is – Swami Rambhadracharya, a scholar of 22 languages, has written more than 240 books and more than 50 research papers. The direct answer to the second question is – no jargon can prevent a person who has taken the religion and culture of this land forward from being honoured.
Contribution of Jagadguru Swami Rambhadracharya in the field of literature
Swami Rambhadracharya writes mostly in Sanskrit, a language in which our Vedas, Upanishads, Puranas, Ramayana and Mahabharata were written. A language that needs preservation. A language whose literature has influenced the practices of upbringing of many generations. From respect for parents and teachers to war to protect religion, we have been inspired by this literature. Swami Rambhadracharya is one of the rare scholars of this cultural language in the present era.
He also writes in Hindi, which is the official language of India and is spoken and understood by most people in the country. He has also been creating literature in Awadhi and Bhojpuri, the languages spoken in Uttar Pradesh-Bihar, the most populous states in the country. The works of Swami Rambhadracharya are referred by researchers and also influence the common people. His study on Goswami Tulsidas is so extensive that he is considered the undeclared final authority on Ramcharitmanas. Following the eternal principles of curiosity, review, faith and belief, he presented the authentic sanskar of Ramcharitmanas. Ramcharitmanas is the poem that re-established the Ramkatha in our lives in North India.
Since childhood, Jagadguru Swami Rambhadracharya has preached Ramcharitmanas Katha in India and abroad for about 5000 times. After 8 years of intensive research and study of 27 editions of this immortal literature, he presented his version through ‘Tulsi Peeth’ . Although, there were protests against him in 2008-09 due to tampering with the book, but there has been a tradition of Shastrartha in Indian history and Shankaracharya also became Jagadguru only when he won the hearts of scholars across the country through debate. Therefore, it is important that our ancient literature does not become extinct and research work continues on it with devotion.
9000 pages, 50000 verses and 9 volumes… The Mahabhashya written by him on the Sanskrit grammar ‘Ashtadhyayi’ written by Panini is unprecedented. Prime Minister Narendra Modi himself unveiled it. ‘Ashtadhyayi’ is not an ordinary book, Patanjali referred to it as ‘Sarvaved-Parishad-Shastra’. Prime Minister Narendra Modi, who went to Chitrakoot in February 2025, unveiled 3 books of Swami Rambhadracharya – Panini’s ‘Ashtadhyayi’ Mahabhashya, Ramanandacharya Charitam and Rashtra Leela of Lord Shri Krishna. PM Modi follows the policy of ‘development as well as heritage’, in such a situation, the works of Swami Rambhadracharya automatically get established as the main pillar of that ‘heritage’.‘Ashtadhyayi’ is a book of Sanskrit grammar written hundreds of years before the birth of Christ, on the basis of which literature succeeding the Vedic period was written. Even in ancient foreign languages like Greek and Latin, there is no example to match this work. Swami Rambhadracharya should have received many awards like Jnanpith for just this work. He did many times more than that.
Apart from the critical edition of Ramcharitmanas and ‘Ashtadhyayi’ Mahabhashya, his another important work is ‘Shriraghavakripabhashyam’ based on Brahmasutra, Bhagvadgita and 11 Upanishads. Most of those who are targeting Swami Rambhadracharya ji today were either not even born 27 years ago or would have been playing in diapers when the then Prime Minister Atal Bihari Vajpayee launched this book in April 1998. Brahmasutra, Upanishad and Gita are called ‘Prasthanatrayi’, no Sanskrit commentary had been written on them for 500 years, but this was done by Swami Rambhadracharya.
Along with religion and culture, they also run a university for the disabled
For many decades, the society has been benefiting from his historical and spiritual knowledge through Ram Katha, is this contribution any less? And yes, he has done all this despite being a Pragya Chakshu. He lost his eyesight, but he acquired vision through hard work and penance. He did PhD in 1991 and DLitt in 1998 – most of those who abuse him are still surviving on taxpayers’ money. Additionally, he got the post-doctorate degree from the then President of India KR Narayanan, who was from the Dalit community. Those who are hatching the conspiracy of Dravid vs Aryan to break the Hindu unity will not like this.His testimony and the evidence given by him were mentioned in the judgment of the Shri Ram Janmabhoomi case in the Allahabad High Court. He gave such evidence from the scriptures regarding the Ram temple that even the judges were stunned. He opened an entire university for disabled students. He established ‘Tulsi Peeth’ for the service of spirituality and society. Not only in India, but in the entire world there was no university for the disabled. Through the ‘Viklang Seva Sangh’ he started many programs for the welfare of disabled men and women.
Rambhadracharya ji has written so many works that one can go on talking about them from morning till evening. Just imagine how many years it will take to read, understand and analyse them or comment on them. Just imagine, those who have not read even the basics of Swami Rambhadracharya’s literature are raising questions on his contribution. His contribution in all three fields – literature, society and culture – is unprecedented. The ‘Tulsi Peeth Seva Nyas’ that he has founded will continue the campaign started by him for many years to come. Swami Rambhadracharya’s works are on Sanatan, and are Sanatan.
Table of compositions of Swami Ramabhadracharya
Here I am presenting the compositions of Swami Ramabhadracharya with details:
Year
Title
Language
Publisher
Summary
1994
Arundhati
Hindi
Shri Raghav Literature Publication Fund, Haridwar
Epic poem of 1,279 verses divided into 15 cantos based on the life of Vasistha and Arundhati.
2002
Sri Bhargava Raghaviyam
Sanskrit
Jagadguru Rambhadracharya Divyanga University
Epic of 21 cantos and 2,121 verses. With Hindi commentary. Received many awards.
2010
Ashtavakra
Hindi
Jagadguru Rambhadracharya Divyanga University
Composed in 864 verses in 8 cantos, based on sage Ashtavakra.
2011
Geeta Ramayana
Sanskrit
Jagadguru Rambhadracharya Divyanga University
A musical rendition of the Ramayana consisting of 1,008 songs in 28 cantos.
1980
Kaka Vidur
Hindi
Shri Geeta Gyan Mandir, Rajkot
Short poem on Vidur of Mahabharata.
1980
Mukunda Smaranam
Sanskrit
Shri Geeta Gyan Mandir, Rajkot
A short poem in two parts in praise of Krishna.
1982
Ma Shabri
Hindi
Giridhar Koshalendra Chintan Committee, Darbhanga
A short poem based on the character Shabari from Ramayana.
1996
Azad Chandrashekhar Charitam
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
Short poem on revolutionary Chandrashekhar Azad. With Hindi commentary.
2000
Sarayulhari
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
Short poem based on Saryu river.
2001
Laghuraghuvaram
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
Short poem on child Rama, in short letters only.
2004
Bhringadutam
Sanskrit
Jagadguru Rambhadracharya Divyanga University
Depiction of the message sent by Rama to Sita, in Mandakranta verse.
1991
Raghavgeetgunjan
Hindi
Shri Raghav Literature Publication Fund, Haridwar
Lyrical poem.
1993
Bhaktigeetasudha
Hindi
Shri Raghav Literature Publication Fund, Haridwar
A poem of 438 songs based on Rama and Krishna.
1997
Sri Ramabhaktisarvasvam
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
A poem of 100 verses.
—
Arya Shatakam
Sanskrit
—
A poem of 100 verses in Arya Chhand.
—
Chandi Shatakam
Sanskrit
—
A poem of 100 verses in praise of the goddess Chandi.
—
Raghavendra Shatakam
Sanskrit
—
A poem of 100 verses in praise of Rama.
—
Ganapati Shatakam
Sanskrit
—
A poem of 100 verses in praise of Ganesha.
—
Sri Raghavacharana Chihna Shatakam
Sanskrit
—
100 verses in praise of Rama’s footprints.
1987
Sri Janaki Kripakataksha Stotram
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
Praise of Sita’s kind glance.
1992
Sri Ramavallabha Stotram
Sanskrit
Shri Raghav Literature Publication Fund, Haridwar
Praise of Sita.
1994
Sri Gangamahimnastotram
Sanskrit
Shri Raghav Literature Publication Fund, Haridwar
Praise on the glory of river Ganga.
1995
Sri Chitrakuta Vihara Ashtakam
Sanskrit
Shri Raghav Literature Publication Fund, Haridwar
Praise of Ram’s Chitrakoot Vihar in 8 verses.
2002
Sri Raghavbhavadarsanam
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
Praise of Rama’s birth through similes; with Hindi commentary.
2003
Kubjapatram
Sanskrit
Jagadguru Rambhadracharya Divyanga University
Letter written by Kubja to Krishna.
2008
Sri Sitaramkelikaumudi
Hindi
Jagadguru Rambhadracharya Divyanga University
A riti kaavya based on childhood pranks in 327 verses.
2009
Sri Sitaramasuprabhatam
Sanskrit
Jagadguru Rambhadracharya Divyanga University
Dedicated to Sita and Rama. With Hindi translation.
1996
Sriraghavabhyudayam
Sanskrit
Shri Tulsi Peeth Seva Trust
A one-act play based on the rise of Ram.
—
Utsaah
Hindi
Shri Tulsi Peeth Seva Trust
—
See some other works of Swami Ramabhadracharya here:
Year
Title
Subject
Publisher
Comment
1998
Sri Raghavakripabhashyam
Brahmasutras
Shri Tulsi Peeth Seva Trust
Commentary on Prasthanatrayi in Sanskrit
1998
Shrimadbhagavadgitasu Sri Raghavakripabhashyam
Bhagavadgita
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
kathopanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
Kenopanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Mandukya Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Ishavasya Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
Prashna Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Taitriya Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Aitareya Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Swetasvatara Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Chāndogyopanishadi Sri Raghavkripabhashyam
Chandogya Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Brihadaranyaka Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1998
Sri Raghavakripabhashyam
The Mundaka Upanishad
Shri Tulsi Peeth Seva Trust
–
1991
Sri Raghava Kripa Bhashyam
Narada Bhakti Sutra
Shri Tulsi Peeth Seva Trust
–
1997
Ashtadhyayapratisutram Shabdhabodhsameekshanam
Research on the Ashtadhyayi Sutras
Rashtriya Sanskrit Sansthan (under publication)
D.Litt Dissertation
2001
Sri Rama Stavaraja Stotram Sri Raghava Kripa Bhashyam
Sri Ram Stavraj Stotra
Shri Tulsi Peeth Seva Trust
–
1983
Mahaveeri
Commentary on Hanuman Chalisa
Shri Krishna Birth Service Institute, Mathura
–
1985
Sri Gita Tattva
Bhagavadgita
Shri Raghav Literature Publication Fund, Haridwar
–
2005
Bhavarthbodhini
Ramcharitmanas
Jagadguru Rambhadracharya Handicapped University
–
–
Shri Raghavakripa Bhashya (in 9 volumes)
Ramcharitmanas
–
–
1981
Adhyatmaramayane Apaniniyaprayo Ganam Vimarshah
A review of the anti-Panini tendencies of Adhyatma Ramayana
–
PhD dissertation
1982
Manas mein Tapas Prasang
Discussion of the story of an ascetic in Ayodhya Kand of Ramcharitmanas
Shri Geeta Gyan Mandir, Rajkot
–
1988
Sanatan Dharma ki Vigrahaswaroop Gaumata
Discussion on the status of cow in Sanatan Dharma
Shri Raghav Literature Publication Fund, Haridwar
–
1988
Sri Tulsi Sahitya mein Krishna Katha
Review of Krishna’s character in Tulsidas’ literature
Shri Raghav Literature Publication Fund, Haridwar
–
1990
Sita Nirvasan Nahi
A critical treatise that proves that Sita’s exile in Valmiki Ramayana is a figment of Uttarakand
Shri Raghav Literature Publication Fund, Haridwar
–
2007
Shripanchadhyayivimarsha
Discussion on Raas Panchadhyayi of Bhagwat
Jagadguru Rambhadracharya Handicapped University
–
1980
Bharat Mahima
Navahanika discourse on the glory of Bharata in Ramayana
Shri Geeta Gyan Mandir, Rajkot
–
1985
Sugreeva ka Agh aur Vibhishan ki Kartuti
Navahanika discourse on two characters of Ramayana
Shri Krishna Birth Service Institute, Mathura
–
1989
Sumitra in Manas
Navahanika discourse on the role of Sumitra in Ramacharitmanas
Shri Raghav Literature Publication Fund, Haridwar
–
1992
Prabhu Kari Kripa Panvari Di
–
–
Incomplete sermon texts
Just imagine, the child who lost his eyesight at the age of just 2 months, touched the pinnacle of wisdom and gave the message that there is no excuse for not being successful. Everything is possible with hard work and dedication. The child who was considered a bad omen and was not even allowed to participate in marriages and other auspicious events of the family and society, became a walking symbol of good fortune. That is why during his early works, he addresses himself before God by saying ‘Anatham Jadam Mohapashen Bandham’, meaning – “one who is orphan, inert, and bound in the bondage of attachment.”
(This article is a translation of the original article published in OpIndia Hindi.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 41
Stamps posted today include 1992, 1993 STAMPS
DADHABAI NAOROJI, SWAMI VIVEKANANDA, NATIONAL INTEGRATION, KHAN ABDUL GAFFAR KHAN,MAHALANOBIS, BOMBAY MUNICIPAL BUILDING, FOUR DIFFERENT ENGINES, TRAINS, FLOWERS, BLOCK OF STAMPS- PARAMAHAMSA YOGANANDA, RAMAKRISHNA PARAMAHAMSA, RAM CHARIT MANAS, BHAGAVAD GITA, LIC,
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 41, year 1993 , 1992, DADHABAI NAOROJI, SWAMI VIVEKANANDA, NATIONAL INTEGRATION, KHAN ABDUL GAFFAR KHAN,MAHALANOBIS, BOMBAY MUNICIPAL BUILDING, FOUR DIFFERENT ENGINES, TRAINS, FLOWERS, BLOCK OF STAMPS- PARAMAHAMSA YOGANANDA, RAMAKRISHNA PARAMAHAMSA, RAM CHARIT MANAS, BHAGAVAD GITA, LIC,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-4
தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி பற்றி பரஞ்சோதி முனிவர் சொன்ன செய்தி திருவிளையாடல் புராணத்தில் உள்ளது ; ஒவ்வொன்றுக்கும் பின்னல் ஒரு கதையும் உளது.
தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். —திருவிளையாடல் புராணம்
பரஞ்சோதி முனிவருக்குத் தமிழ் மொழி மீது தீராக்காதலுண்டு; இதனால் தமிழ் மொழிக்கு நிகரான மொழி வேறு உண்டா? என்று சவால் விடுக்கிறார் . தமிழின் மந்திர சக்தியைத் தேவாரமும் திருவாசகமும் காட்டியபடி அவர் பாடினார்
****
TIME TRAVEL, PARALLELUNIVERSE, SPACE TRAVEL , ALBERT EINSTEIN
சுந்தரர், சம்பந்தர் தொடர்பான இந்த இரண்டு சம்பவங்களிலும் டைம் டிராவல் எனப்படும் காலப்cபயணம் , பாரலல் யூனிவெர்ஸ் எனப்படும் இணை உலகம் கருத்துக்கள் , விஞ்ஞான உண்மைகள் இருப்பதை முன்னரே விளக்கியுள்ளேன் . மேலும் நம்மாழ்வார் பாசுரத்தில், இறந்த பிராமணச் சிறுவர்களை மீட்க ஒரே நாளில் விண்வெளிப்பயணம் செய்த ஸ்பேஸ் டிராவல் பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். இவை அனைத்தும் ஐன்ஸ்ட்டின் சொன்ன விசயங்களைப் பொய்யாக்கியதையும் கண்டோம்.
****
“சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவை நாச்சியார்பால் தூது நடந்தான். முதலை வாய்ப்புகுந்த மகன் உயிர் பிழைத்து மீளவும் இத்தமிழே காரணமாக அமைந்தது. மயிலாப்பூரில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணின் எலும்பிலிருந்து, மீண்டும் ஒரு மகள் உயிர் பெற்று எழுவதற்குத் திருஞானசம்பந்தரின் தமிழே காரணமாயிற்று. வேதங்கள் பூசித்து அடைத்திருந்த திருமறைக்காட்டுச் சிவாலயக் கோபுர வாயில் கதவைத் திருநாவுக்கரசரின் தமிழே திறக்கச் செய்தது. இத்தகு ஆற்றல் தமிழைத் தவிர பிற மொழிகளுக்கு உண்டா? (திருவிளையாடல் புராணம்) என்று பரஞ்சோதி முனிவர் கேட்கிறார்.
****
தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி
உலகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் மந்திர சக்தி உண்டு ; ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இறந்தவர்களையும் உயிர் பெறச் செய்த ஏராளமான சம்பவங்கள் இந்துசமய நூல்களில் இடம்பெற்றுள்ளன. ஏழைப் பெண்மணிக்கு இரங்கி ஆதிசங்கரர் கனகதாரா துதியைப் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்ததையும் சம்ஸ்க்ருத மொழியில் கீர்த்தனைகளை இயற்றிய முத்துசாமி தீட்சிதர் வறட்சியைக் கண்டு மனம் இரங்கி அமிர்த வர்ஷனி ராகத்தில் பாடியவுடன் மழை கொட்டியதையும் எல்லோரும் அறிவர். இத்தகையை மந்திர சக்தி துதிகள் அதர்வண வேதத்திலும் ருக் வேதகித்தலும் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணருக்காக யமுனை நதி வழிவிட்டதுபோல வசிஷ்டருக்காக சிந்து நதி வழிவிட்ட பாடல் ரிக்வேதத்தில் உள்ளது .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 26-4-25 இதழில் வெளியான கட்டுரை!
வியப்பில் ஆழ்த்தும்விசாகப்பட்டினம்!
ச. நாகராஜன்
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அழகிய காஷ்மீர் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கடற்கரைகள், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள், அருமையான ஆலயங்கள் உள்ள இடமாகும். குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி தரும் இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்க்ள் உள்ளன: அவற்றில் சில இதோ:
கைலாஸ கிரி
நூறு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா 360 அடி உயரத்தில் ஒரு குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.
இங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள முக்கியமான ஈர்ப்பு வெண்மை வண்ணத்தில் உள்ள சிவ பார்வதியின் அழகிய சிலைகளாகும். நாற்பது அடி உயரம் உள்ளவை இந்தச் சிலைகள்.
இங்கு ரோப் கார் வசதி உள்ளது. ஆகவே அதிக உயரத்திலிருந்து கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
ஆர்.கே.பீச்
ராமகிருஷ்ணா கடற்கரை என்பதன் சுருக்கமே ஆர்.கே.பீச். இதன் அருகே தான் டால்பின் நோஸ் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. மக்கள் விரும்பி வரும் கடற்கரை இது.
சப்மரீன் மியூஸியம்
இந்த அருங்காட்சியகம் நிஜமாகவே ஒரு சப்மரீனுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐஎன்எஸ் குருசுரா என்ற இந்த சப்மரீன் இந்தியாவின் ஐந்தாவது சப்மரீன் ஆகும்.
இந்த மியூஸியம் ஆர் கே கடற்கரை அருகில் வார் மெமோரியல் அருகே உள்ளது. நமது வலிமை, தேசபக்தி, வீரர்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் இங்கு உள்ளன.
டால்பின் நோஸ்
விசாகப்பட்டிணத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியிலிருந்து வங்கக் கடலில் அழகைப் பார்த்து மகிழலாம்.1175 அடி உயர்ததிலிருந்து சூர்யாஸ்தமனத்தையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது.
ரிஷிகொண்டாகடற்கரை
வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய கடற்கரை இது. 15 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. பெயருக்கேற்றபடி இது கிழக்குக்கடற்கரையின் மணிமகுடமே தான்!
கடலில் பல்வேறு நீர் விளையாட்டுக்களை விளையாட விரும்புவோர் இங்கு அவற்றை விளையாடி மகிழலாம்
போர்ரா குகைகள்
விசாகப்பட்டினத்திலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது போர்ரா குகைகள்
சுமார் 2600 அடி உயரத்திலிருந்து 4300 அடி உயரம் வரை உள்ள . அனந்தகிரி மலைத்தொடரில் 2310 அடி உயரத்தில் அமைந்துள்ளது பொர்ரா குகைகள்.
இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. பசுக்களை மேய்க்கும் சிறுவன் பசு ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த போது அது அங்கிருந்த துளை ஒன்றின் வழியே கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிச் சென்றவர்கள் இந்த குகைகயைக் கண்டு அதிசயித்தனர். அங்கு ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. சிவபிரானே பசுவைக் காப்பாற்றியதாக ஐதீகம் நிலவுகிறது. இங்கு பின்னர் ஒரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பெரிய குகைகளுள் இதுவும் ஒன்று.
யாரடா கடற்கரையில் சூர்யாஸ்தமனக் காட்சி
யாரடா கடற்கரை விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கங்காவரம் கடற்கரை மற்றும் துறைமுக, டால்பின் மூக்கு, ஆகியவை இதன் அருகிலேயே உள்ளன.
இந்தக் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி அழகிய காட்சி என்பதால் இங்கு ஏராளமானோர் திரள்வது வழக்கம்.
இங்கு படிந்துள்ள வண்டல் மண் பற்றிய ஆய்வில் இந்த மண்ணானது அருகில் உள்ள புறா மலை அமைந்திருப்பதன் விளைவால் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டல்கள் சேர்வதும் பின்னர் அரிமானத்தால் அவை நீங்குவதுமாக இருக்கின்றன!
விசாகப்பட்டிணம் மிருகக்காட்சி சாலை
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இது.
இங்கு அழகிய மான்கள், யானைகள், இமயமலைக் கருங்கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் பட்டாம்பூச்சிகளையும் ஏராளமான பறவைகளையும் பார்த்து மகிழலாம். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். மூன்று பக்கம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் இருக்க நான்காவது பக்கம் வங்கக் கடல் திகழ 625 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இது.
சிம்மாச்சலம் கோவில்
விசாகப்பட்டினத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிம்மாசலம் மலையில் ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வராக நரசிம்மர் எழுந்தருளி அருளும் இந்தத் தலம் 32 நரசிம்மத் தலங்களில் ஒன்றாகும். ஐந்து வாயில்களுடன் அமைந்துள்ள இது ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும், சரித்திர வரலாறுகளும் ஏராளம் உள்ளன.
கடிகி நீர்வீழ்ச்சி
கடிகி நீர்வீழ்ச்சி இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி. கோஸ்தானி ஆற்றிலிருந்து வரும் நீர் 50 அடி உயரத்திலிருந்து கடிகி என்ற கிராமத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. போர்ரா குகை அருகே உள்ளது இது.
இங்கு மலைமீது ட்ரெக்கிங் செய்ய வசதிகள் உண்டு. .இங்கு முகாமிட்டும் தங்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இங்கு கிடையாது. மேலே செல்ல ஜீப் வசதிகள் வாடகைக்குக் கிடைக்கப்படும். போரா குகைக்கும் இதற்கும் உள்ள தூரம் ஐந்து கிலோமீட்டர் தான்!
அரக்கு பள்ளத்தாக்கு
கடிகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பார்க்க வேண்டிய இடம் அரக்குப் பள்ளத்தாக்கு என்ற மலை வாசஸ்தலம் ஆகும். காடுகள் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இது காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இது உள்ளது. இந்தப் பகுதியில் தான் 30க்கும் மேற்பட்ட போர்ரா குகைகள் உள்ளன.
பீம்லி பீச்
பீமுனிப்பட்டனம் கடற்கரை என்பதே பீம்லி பீச்சாக மருவி அழைக்கப்படுகிறது.
பஞ்ச பாண்டவரில் ஒருவரான பீமனின் பெயரைக் கொண்டது இது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்தக் கடற்கரை உள்ளது. பக்கத்தில் உள்ள் பவுரலகொண்டா மலைப்பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்களைக் கண்டு மகிழலாம். 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை விசாகப்பட்டணத்தில் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.
மொத்தத்தில் அழகிய கடற்கரைகள், ஆறு கடலில் கலக்கும் சங்கம இடம், கோவில், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள் என பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட விசாகப்பட்டினம் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகும்..
சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூலுக்கான வெளியீட்டு விழா. விழா 29/1/2025
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சுலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்திகழ்ச்சியில் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் குருமூர்த்தி பேசும் போது. ஆன்மிகத்திற்காகவே பிறந்து அதற்காகவே வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார். தலைமுறை தலைமுறையாக வேதத்தையும் கோயில்களையும் பாதுகாத்தவர்களும் அவர்களே காசி பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்மிக பணி யாற்றிய நகரத்தாரின் தாழ்வுக்கு திராவிடம்தான் காரணம் திராவிட இயக்கத்தால் ஆன்மிகம் குறைந்ததால்தான். நகரத்தார் சமுதாயம் தாழ்ந்தது. காசி தமிழ் சங்கத்திற்கு வித்திட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளதால், இந்நூலுக்கு இன்னும் பெருமை சேர்கிறது என்றார்.
விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். ரவி தனது உரையில் “ஆன்மிகத் தலமாக விளங்கும் காசியில் 40,000 தமிழக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக தமிழர்கள் காசியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் காசி, பாரதத்தின் ஆன்மிக ஈர்ப்பு மையம் ரிஷிகளால் பாரதம் உருவாக்கப்பட்டபோது, அவர்கள் சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. நமது நாட்டின் பாரம்பரியமும் நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் நாடு முழுவதும்
ஒரு கட்டமைடையும் உருவாக்கின செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை துரதிரஷ்ட வசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம் பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மமே பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்தில் நடந்த தவறுகளை திருக்கி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டுக் கொண்டுவர் முயற்சிக்கிறார். அந்த வகையில் இந்தியா வரும் காலங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மலரும் என்றபோது, எழுந்த பலந்த சுர கோஷம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
காசிக்குப் போய்வந்த அனுபவத்தையும்; காசியிலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்த அனுபவத்தையும் இந்த நூல் தருகிறது. காசி எனும் பெயர் காரணம். , வரலாறு அதை ஆண்ட மன்னர்களின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சிறப்பு என விரிவாக எழுதப்பட்டுள்ளது. சில அற்புதங்கள் சிலரது கையால்தான் நிகழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அப்படி சுப்பு சுந்தரத்தின் திருக்கரங்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.
—subaham—
Tags-Gnanamayam Broadcast, May 18, 2025, Programme
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 40
Stamps posted today include 1991, 1992 STAMPS
Children’s Day, EAGLE, FALCON, BIRDS OF PREY , ASANAS, USTRASAA, DHANURASANA, TRIKONASANA, BHUJANGASANA, AIRFORCE GOLDEN JUBILEE, MADAN LAL DHINGRA, TIGERS OF THE SKY, PARA REGIMENT, RAHUL SANKRIYAYAN, PARLIAMENT CONFERENCE, SISTERS OF THE MARY, RUN FOR YOUR HEART, PANDIT RAVISHANKAR SHUKLA, MEERUT COLLEGE, FAKIRMOHAN SENAPATI, CSIR GOLDEN JUBILEE,
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 40, year 1991 , 1992, Children’s Day, EAGLE, FALCON, BIRDS OF PREY , ASANAS, USTRASAA, DHANURASANA, TRIKONASANA, BHUJANGASANA, AIRFORCE GOLDEN JUBILEE, MADAN LAL DHINGRA, TIGERS OF THE SKY, PARA REGIMENT, RAHUL SANKRIYAYAN, PARLIAMENT CONFERENCE, SISTERS OF THE MARY, RUN FOR YOUR HEART, PANDIT RAVISHANKAR SHUKLA, MEERUT COLLEGE, FAKIRMOHAN SENAPATI, CSIR GOLDEN JUBILEE, HARYANA SILVER JUBILEE
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுவாமி ராம தீர்த்தர் ராம நாம மஹிமை பற்றி விளக்குவதற்காக சொன்ன கதை இது :
ராம் தீர்த்தர் வழக்கம் போல போதனை செய்து முடித்தவுடன் சீடர்களை நோக்கி ஏதேனும் சந்தகங்கள் இருந்தால் கேட்கலாம் என்றார். ஒரு சீடர் எழுந்து நின்று அவரை முறையாக வணங்கி விட்டுக் கேட்டார்:
“சுவாமிகளே! நீங்கள் அறுபது நாழிகைப்பொழுதும் ராம ராம என்று ஜபித்துக் கொண்டு இருக்கிறீர்களே. காலையிலும் மாலையிலும் மட்டும் ஜபித்தால் போதாதா? இந்த சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இன்று பதில் செல்லுங்களேன்” என்று பணிவுடன் கேட்டார் . அந்த சீடனின் பெயர் சிதானந்தம் .
சுவாமிகளும் புன்னகையுடன் பதில் கொடுத்தார் ; “உங்களில் பலருக்கும் இப்படி சந்தேகம் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். இதோ என்னிடம் உள்ள பல கற்களில் ஒன்றை சிதானந்தத்திடம் கொடுக்கிறேன்” என்று சொல்லித் தந்தார் .
ஓ சிதானந்னதா! இதை பத்துப் பேரிடம் காட்டி விலை மதிப்பினை அறிந்து வா. ஆனால் ஒரு நிபந்தனை. கல்லை யாரிடமும் விற்றுவிடாதே; திருப்பிக் கொண்டு வா; பின்னர் உங்கள் சந்தேகத்தைத் தெளிவிக்கிறேன்” என்றார் .
சீடனும் அதை ஆவலுடன் பெற்றுக்கொண்டு நடந்தான். முதலில் அவன் போனது ஒரு சந்தை ; எங்கு பார்த்தாலும் கடைகள். ஒரே கூட்டம். யாரிடம் விலையைக் கேட்பது என்று எண்ணி திகைத்துக் கொண்டிருந்தபோது ஒரு மூலையில் ஒரு கிழவி காய்கறி விற்றுக்கொண்டிருந்தாள்; அவளிடம் போய், கூட்டம் இல்லாதபோது, ‘பாட்டி இந்தக் கல்லின் விலை என்ன இருக்கும்?’ என்று சொல்லி அவளிடம் கொடுத்தான். அவளும் அதை பார்த்துவிட்டு ‘ரோம்ப அழகாக இருக்கிறது மழ மழ என்று வழு வழுப்பாக இருக்கிறது ; இதை வீசைக் கல்லாகப் பயன்படுத்தலாம். என்னிடம் கொடு; ஒரு கிலோ கத்தரிக்காய் கொடுக்கிறேன்’ என்றாள் .அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்புதானா! எதற்கும் இதற்கு வேறு ஒருவரிடம் விலை கேட்கலாம் என்று எண்ணிக்கொண்டே அடுத்த கடைத்தெரு வுக்குப் போகலாம் என்று கருதி, அங்கே இருந்த ஒரு கடைக்குப் போனான் அந்தக் கடைக்காரன் கல்லை வாங்கிப் பார்த்துவிட்டு , ‘அன்பரே இது சாதாரண கல் அல்ல ; என்னால் விலை மதிப்பிட முடியாது; என்னிடம் விற்றால் ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிறேன் என்றான். சீடன் சிதானதத்து க்கு ஒரே வியப்பு! அட ஒரு கிலோ கத்தரிக்காயிலிருந்து ஒரு பவுனுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே என்று சொல்லிக் கொண்டே நகைக்கடைத் தெருவுக்குப் போனான். ஒரு திண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பொற்கொல்லனிடம் காட்டி இதன் மதிப்பினைச் சொல்ல முடியுமா? என்று வினவினான். அவனும் தன்னுடைய கருவிகளைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, ‘சுவாமி இது ரத்தினக் கல்; கட்டாயம் பத்து பவுனுக்கு மேல் விலை மதிப்பிடலாம்’ என்று சொன்னான் .
வியப்பு மேலிட்ட சீடன் சிதானந்தம், இரத்தின வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குள் நுழைந்து, ஒருவரிடம் கொடுத்து, இதன் மதிப்பு என்ன இருக்கும்? என்றான். அவர் அதைப்பார்த்துவிட்டு இது நல்ல ரத்தினக் கல் ; நிச்சயமாக ஐநூறு பவுன் விலை கிடைக்கும் ஆனாலும் இதோ என் நண்பர் ரத்தின வியாபாரி; அவரிடமே கேட்டு விடலாமே என்று இரத்தின வியாபாரியிடம் கல்லினைக் கொடுத்தான் . அவர் அதைப் பார்த்தவுடனேயே அடடா , இது அரியவகை ரத்தினைக் கல்; ஆனால் கச்சாச் சரக்கு;நன்றாக வெட்டி பட்டை தீட்டினால் ஆயிரம் பவுன் வரை கிடைக்கும் என்றார் ; அடுத்த வியாபாரி இடை மறித்து இல்லை இல்லை ; இதற்கு அதற்கு மேலும் மதிப்பு உண்டு நான் 5000 முதல் பத்தாயிரம் வரை மதிப்பு போடுவேன் ஆயினும் இந்த ஊரிலேயே பெரிய இரத்தின வியாபாரி தனபாலன்தான் அவர் கடைக்குப் போங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சீடர் சிதானந்தத்துக்குத் தலை சுற்றியது; ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பிலிருந்து பத்தாயிரம் பவுன் அளவுக்கு மதிப்பு உயர்ந்து விட்டதே! நம் குருவிடம் இதே போல பல கற்கள் இருக்கின்றனவே; அவருக்கே மதிப்பு தெரியாதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே ,
தைரியமாக தனபாலனின் ரத்தினக் கடைக்குள் நுழைந்தான் . அவர் அதைப் பார்த்த உடனேயே அரிய ரத்தினம் என்று சொல்லிக்கொண்டே அதைக் கருவிகளைக் கொண்டு அடித்தும் கீறியும் பலவித இரத்தின பரீட்சைகளைச் செய்தார்.
சுவாமி , உங்களைப் பார்த்தால் சந்நியாசி போல இருக்கிறது; இது போன்ற கற்கள் முனிவர்கள், அரசர்களிடம் மட்டுமே இருக்கும். என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு அபூர்வக் கல்லினைப் பார்த்ததே இல்லை; என்னுடைய சொத்து முழுவதையும் உங்களுக்குக் கொடுத்தாலும் இந்தக் கல்லின் விலையைக் கொடுத்ததாக ஆகாது; இதன் மதிப்பு அதற்கும் மேலானது என்று சொல்லி கல்லினைத் திருப்பிக்கொடுத்தார்.
சீடன் சிதானந்தம் மறுநாள் சுவாமி ராமதீர்த்தரின் கூட்டத்துக்குச் சென்றான்; அவருடைய பாடத்தைக் கேட்க பெரிய சீடர்கள் கூட்டம் அங்கே இருந்தது அனைவரின் முன்னமும் சீடன் சிதானந்தம் நட ந்தது அனைத்தையும் சுவாமி ராமதீர்த்தரிடம் எடுத்துரைத்தான் .
அவரும் புன்னகை செய்துகொண்டே கல்லினை வாங்கிக்கொண்டு உபதேசத்தைத் தொடர்ந்தார்;
“கேட்டீர்களா, சீடர்களே முதலில் கல் என்று எண்ணிக்கொண்டுபோன பொருள், ஜாதி ரத்தினம் ஆனது; ரத்தினத்தை மதிப்பிட அது பற்றிய நல்ல அறிவுவேண்டும். ரத்தினம் பற்றிய அறிவு இல்லாததால் கறிகாய்க்காரி அதற்கு ஒரு கிலோ கத்தரிக்காய் மதிப்பு போட்டாள். மற்றவர்களுக்கு ரத்தினக் கற்கள் பற்றிய அறிவு இருந்ததால் ஒரு பவுனிலிருந்து பத்தாயிரம் வரை மதிப்பு போட்டார்கள் ரத்தினப் பரீட்சையில் தேர்ந்த ஞானமுள்ள தனபாலரோ இதற்கு விலையே சொல்ல முடியாது என்றார் . ராம நாமம் என்னும் ரத்தினத்தின் மதிப்பும் அப்படிப்பட்டதே ரா மா என்பது இரண்டே எழுத்துக்கள்தான்; அதன் மதிப்பினை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? அதைத் தினசரி ஜபிப்பதின் மதிப்பினை உங்களுக்கு நான் எப்படிச் சொல்லமுடியும்? ராமநாம மதிப்பினை அறிய, அதை உள்ளபடி ஜபித்து ஞானம் அடைய வேண்டும்; அது வந்துவிட்டால் இரத்தின வியாபாரி தனபாலன் சொன்னது போல ராமநாமத்தின் மதிப்பினை சொல்லவே முடியாது! அரைகுறை அறிவு பெற்றவர்கள் அவரவர் அறிவுக்கு ஏற்ப மதிப்பிடுவார்கள்; பரிபூரண ஞானம் எய்தியவர்களுக்கு ராம நாமம், விலை மதிக்க முடியாத ரத்தினம் என்பது தெரியும். ஆகவே நீங்களே முயன்று ராம நாமத்தின் மதிப்பினை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; உங்கள் ஐயம் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு சுவாமி ராம் தீர்த்தர் ராம ராம என்று சொல்லிக்கொண்டே ஜபத்தில் ஆழ்ந்து விட்டார் .
–SUBHAM—
TAGS- ராம ரத்தினத்தின் விலை , ராம நாமம், மதிப்பு, சுவாமி ராம தீர்த்தர்,கதை