Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Shripad Damodar Satwalekar (19 September 1867 – 31 July 1968) was a great Vedic scholar. He is known for his paintings, social health, Ayurveda, Yoga, and Vedic literature. He was also the founder of the Swadhyaya Mandal – A Vedic Research Institute.
He translated all the four Vedas into Hindi and a few other north Indian languages. He was the editor of a few magazines and author of several books .
He was addressing Hindi audiences about Vedas . Once he started writing articles on Bhumi Sukta in the Atharva Veda. That was the first patriotic hymn in the world. The long Sukta sings about patriotism, glory of motherland and love for nature. Someone complained that it was against the ruling British government in India. They wanted to arrest S D Satwalekar for this write up. But he was hiding in different towns at the advice of his friends. But the British arrested him one day with the help of their spy network. Despite his clarifications, he was sent to prison. At the end, Annie Beasant and others used their influence and got him released.
There are some interesting information about S D Satwalekar. He lived for 101 years according to the Vedic dictum. Brahmins recite the Vedic mantra every day that we should live for one hundred years healthily.
Another information is that his Samskruta Swayam Sikshak book received very well and Sanskrit learners use this book until today.
His Bhagavad Gita commentary is one of the best commentaries according to learned scholars.
He wrote with his own hand in a foolscap size paper that went to 60,000 pages.
He authored over 400 books in Hindi, Marathi, Gujarati and English.
He was awarded Padma Bhusan in 1968. Many universities awarded him honorary doctortaes.
He was born in Kolgaon in Maharashtra; his father Damodar Bhatta, was a Rig Vedic scholar and a priest. Hi mother’s name was Laskhmibai. He learnt Vedas from the age of eight.
He was the Aundh Nagar Sangachalak of RSS for 16 years. His centenary celebration was attended by RSS Chief Sri M S Golwalkar.
He started one Vedic Mandir/ temple where all books from different religions were kept.
People from different political parties visited him and paid their respect.
Those who wanted to know the meaning of all the four Vedas read Sayana Bhashyam . S D S Vedic commentary in Hindi got the same merit.
He was inspired by Sri Dayananda Sarasvati, the founder of the Arya Samaj.
During his lifetime, he lived in different cities in North India and settled at Killa Pardi in Gujarat.
His important works are as follows:
Commentaries on Vedas
ṛgveda kā subodha bhāṣya (in four volumes; published from Swadhyay Mandal, Pardi)
yajurveda kā subodha bhāṣya (in two volumes)
sāmaveda kā subodha anuvāda
atharvaveda kā subodha bhāṣya (in four volumes)
vaidikasaṃhitāḥ
ṛgveda mūla saṃhitā
yajurveda mūla saṃhitā
sāmaveda mūla saṃhitā
atharvaveda mūla saṃhitā
yajurvedīya kāṭhaka saṃhitā
yajurvedīya maitrāyaṇī saṃhitā
yajurvedīya kāṇva saṃhitā
kṛṣṇa yajurvedīya taittirīya saṃhitā
vedaviṣayakāḥ anyāḥ granthāḥ
vaidika vyākhyānamālā
go-jñāna kośa (A compilation of the proofs in the Vedas for the inviolability of cows and bulls and the proper contextual meaning of the mantras related to them and the explanation of the mantras related to cows)
vaidika yajña saṃsthā
mānavī āyuṣya
dīrgha jīvana aura ārogya
veda meṃ kṛṣividyā
vaidika sarpa-vidyā ((with the assistance of Ramachandra Kashinath Kirloskar)
veda-paricaya (for readers to practice Vedic mantras in simplicity)
Puranic books
mahābhārata-gītā
mahābhārata (saṭīka) – 18 bhagon mein (Hindi translation of the text of the critical edition published by Bhandarkar Oriental Research Institute, Pune)
mahābhārata kī samālocanā (Explanation and Discussion of Certain Aspects of the Mahabharata)
Other books
saṃskṛta pāṭhamālā
saṃskṛta svayaṃśikṣaka (in two volumes) – Published by Rajpal and Sons, Delhi
Literary works
Satwalekar was interested in both individual and social health, Ayurveda, Yoga, and Vedas[7] (particularly in the analysis of the Vedas at the level of adhibhuta) and wrote several books on these subjects, including ‘
Sanskrit Svayam Shikshak (संस्कृत स्वयं-शिक्षक) – Self-learning book for learners of Sanskrit through the medium of Marathi. These were also available in Hindi and English(“Sanskrit Self Teacher”).
Puruṣārtha-Bodhinī-Bhāṣā-Ṭīkā – A four volume Commentary on Bhagavad Gita – S.Rama calls this the best commentary on the Gita by a 20th century author[10][2]
Translation of the Mahabharata – The Government of India assigned the task of translating the constituted text of the Mahabharata published by the Bhandarkar Oriental Research Institute to Satwalekar. After his death, the task was taken up by Shrutisheel Sharma.[11]
Hindi knowing people are very lucky to get S D S commentaries in the language. If someone translates his important woks in English and other South Indian languages it would be very useful.
–subham—
Tags—S D Satwalekar, Jail, Bhumi Suktam, Atharvana Veda, Sanskrit teaching,
அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதி புகழ் பெற்றவர் வாக்பட்டர் . அவர் பற்றிய இரண்டு சுவையான கதைகளை (சம்பவம்) படிப்பதற்கு முன்னால் அவர் செய்த நூலினை அறிவோம். மருத்துவ உலகில் சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவருக்கு அடுத்தாடியாக நிற்பவர் வாக்பட்டர்;
இலக்கண உலகத்தில் பாணினி- வரருசி -பதஞ்சலி ஆகிய மூவரையும் மும்முனிகள் என்பார்கள் அதே போல இந்துக்கள் , சரகர், சுஸ்ருதர்,வாக்பட்டர் ஆகிய மூவரையும் மருத்துவத்தின் மும்முனிகள் என்பார்கள் .
சரகர் சுஸ்ருதர் போலவே ஐவரும் சம்ஸ்க்ருத மொழியில் ஏழாயிரம் சூத்திரங்களடங்கிய அஷ்டாங்கஹ்ருதயம் என்ற பெரிய மருத்துவ நூலை எழுதியுள்ளார்.
வாக்கபட்டரின் வாழ்க்கை பற்றி ஆராய்வதில் ஜெர்மானியர்கள் இறங்கினர் ; அவர் எழுதிய நூல்களுக்கான உரைகளின் அடிப்படையில் அவர் ஒரு காஷ்மீரி என்ற முடிவுக்கு வந்தனர். .நீண்ட நாள் வாழ்வது எப்படி என்ற காய கல்ப விஷயங்களை எழுதியதால் இவர் புகழ் ஜாவா /இந்தோனேஷியா, கம்போடியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் பரவியது . ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் வாக்பட்டர், எகிப்துக்குச் சென்று அந்த நாட்டிலேயே இறந்ததாகச் சொல்கின்றனர் . அவர்கள் இரண்டு உண்மைக் கதைகளையும் எழுதியுள்ளனர்.
****
முதல் கதை
எகிப்தை ஆண்ட மன்னர்களில் ஒருவருக்கு தீராத வயிற்று நோய் ஏற்பட்டது ; அவருக்கு வாக்பட்டரின் புகழ் தெரிந்தது. எகிப்து நாட்டுக்கு வந்து தனக்கு சிகிச்சை தரும்படி வேண்டினார். அக்காலத்தில் கடல்கடந்து செல்வது கடினமானது; சாஸ்திர விரோதமானது ; ஆயினும் வாக்பட்டரோ ஆயுர் வேதம் மட்டுமின்றி ஜோதிடத்திலும் வல்லவர் . தனது ஜாதகப்படி வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து துணிச்சலாக கடற்பயணம் மேற்கொண்டார் . அங்கே மன்னரின் தீராத வயிற்று நோயைத் தீர்த்துவைத்தார் .
ஒரு நோயாளி கூப்பிடும்போது நோயினைத் தீர்க்கப் போகாமல் இருந்தால் அது பாவம் , குற்றம் என்று வைத்திய நூல்கள் கூறுவதால் அவர் இந்த முடிவினை எடுத்தார். நான்கு மாத காலம் கப்பல் பயணம் செய்து, எகிப்துக்குச் சென்ற அவருக்கு மன்னர் ராஜ உபசாரம் செய்தார் . மன்னரின் நோயினை மூன்றே மாதங்களில் தீர்த்து வைத்தார் . நாடே அதை விழாவாகக் கொண்டாடியது . மன்னர் மனம் மகிழ்ந்து, அந்தக் கால வழக்கப்படி பாதி நாட்டினை பரிசாகக் கொடுத்தார் ஆனால் வாக்பட்டரோ அதை ஏற்க மறுத்து, என்னை நாட்டுக்குத் திருப்பி அனுப்புங்கள்; அதுவே போதும் என்றார் . உடனே மன்னர் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்குள் திரைப்படக் கதைகளைப் போல வேறு ஒரு திருப்பம் ஏற்பட்டது! .
****
இரண்டாம் கதை அல்லது சம்பவம்
எகிப்து நாட்டின் அரசகுமாரி, திருமணம் ஆவதற்கு முன்னரே கருவுற்றாள்; காரணம், அந்தப்புர வேலையாள் ஒருவன் அவளை ஆசைகாட்டி ஏமாற்றிக் கற்பழித்து விட்டான். இந்தச் செய்தி பரவினால் அந்த வேலையாளுக்கு மரண தண்டனை கிடைக்கும்; அரச குமாரி தனது மானத்தைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொள்வாள் ; இதனால் அரசியும் அரச குமாரியும் வாக்கபட்டரை ரகசியமாகச் சந்த்தித்துக் கருவினைக் கலைத்துவிடுங்கள் என்ற மன்றாடினார்கள் .
இந்து மத நூல்களில் ப்ருணுஹத்தி (கருக் கொலை ) என்பது பிரம்மஹத்தி (பிராமணாள் கொலை) –க்கு சமம் என்று சொல்லியுள்ளது ஆகையால் கருவினைக் கொல்ல முடியாது என்றார் . அப்போது அவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்தனர் நீங்கள் மறுத்தால் வேலைக்காரன் மரண தண்டனையால் சாவான்; என் மகள் தற்கொலையால் சாவாள்; அவளுடைய வயிற்றிலுள்ள கருவும் சாகும்; மூவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்வது பாவம் இல்லையே என்று அரசி வாதாடினாள் ; வாக் பட்டர் மனம் இரங்கி, மூவரின் உயிரையும் காப்பாற்றுவதாக வாக்களித்தார் ; ஜோதிடப்படி தனக்கு வெளிநாட்டில்தான் மரணம் என்பதை அறிந்து இருந்ததால் தன்னுயிரைக்கொடுத்து மூன்று இன்னுயிர்களைக் காப்பாற்றுவோம் என்று முடிவு செய்தார் ..
அரசனின் முக்கிய மந்திரியிடம் சென்று மன்னர் மகள் கர்ப்பவாதியாகிவிட்டாள்; அதற்கு காரணம் தான்தான் என்றார் . மன்னருக்கும் செய்தி கிடைத்தது ; யாரும் வாக்பட்டரை நம் பத்தயாராக இல்லை ;ஆனால் பொறாமை கொண்ட அரசவை வைத்தியர்கள் வாக் பட்டர் கற்பழித்தது உண்மையே என்று வாதாடினார்கள் ; மன்னரும் வேறு வழியின்றி மரண தண்டனைக்கு நாள் குறித்தார் . விஷயம் அறிந்த அரசியும், அரச குமாரியும் பதறிப்போனார்கள் ; அரச குமாரிக்கு ஒரு யோஜனை பிறந்தது . வாக்பட்டரின் முழு மருந்துகளையும் அறிந்தவள் அவள் .
வாக்பட்டர் பலவித ரசாயனங்கள், ரசக்குப்பிகள் ஆகியவற்றைச் செய்து வைத்திருந்தார் ; அதில் மாரக தூபம் என்னும் குப்பியைத் திறந்தால், விஷப்புகை பரவி அனைவரும் இறக்க நேரிடும்; இன்னும் ஒரு குப்பி அமர தூபம் ; அதைத் திறந்து வரும் புகையைச் சுவாசித்தால் அனைவரும் சாகா வரம்பெற்று நீண்ட காலம் வாழ்வார்கள் . அரச குமாரி என்ன செய்தாள் தெரியுமா ? எல்லோரையும் சாகடிக்கும் குப்பியைக் கொண்டு வந்து அதில் அமர தூபம் என்று எழுதினாள் . அரண்மனையிலுள்ள வைத்தியர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து அதன் பலனைப் பெறலாம் என்று அறிவித்து அழைப்பும் அனுப்பினாள்; இளவரசியின் அழைப்பினை எவரும் அவமதிக்க முடியாதே; முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே வந்தார்கள் வாக்பட்டரும் அங்கே வந்தார் ; தன்னைக் காதலித்துக் கற்பழித்த பணியாளையும் அரச குமாரி அழைத்தாள்; எல்லோரும் உள்ளே வந்த பின்னர் அறைக் கதவினைத் தாளிட்டாள் ; புகை வெளியே போகாமல் இருப்பதற்கு அந்த ஏற்பாடு என்று எல்லோரும் மகிழ்ந்தார்கள் திடீரென அரசி குமாரி தனது உடைவாளினை உருவி கற்பழித்தவனை சதக் சதக் என்று குத்திக் கொன்றாள்; அவன்தான் தன்னைக் கற்பழித்தவன் என்றும் அறிவித்தாள்; எல்லோரும் திகைத்து நின்றார்கள்; நாம் எல்லோரும் இப்போது அவனுடன் செல்வோம் என்று குப்பியைத் திறந்தாள் ; எவரும் பேசுவாதற்கு நா எழுவதற்கு முன்னாள் மயக்கம் போட்டு உயிர் நீத்தார்கள் ஆக , அவளும் வாக்கபட்டரும் உள்ளே இருந்த கருவும் உயிர்த்தியாகம் செய்தன ; வாக்பட்டரின் பூத உடல், ஜோதிடத்தில் சொன்னபடி, மறைந்தது; புகழ் உடம்போ உலகம் முழுவதும் பரவியது .
அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டியது அவர் எழுதிய ….. அஷ்டாங்கஹ்ருதயம் நூல்; அது பற்றித் தனியாகக் காண்போம் .
—subahm—-
Tags- அஷ்டாங்கஹ்ருதயம் , மருத்துவ நூல் , வாக்பட்டர், எகிப்து , மன்னர் , நோய், ரசக்குப்பி, மாரக தூபம் , அமர தூபம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
17-5-25 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
அமைதியின் உறைவிடம் பீஹார்!
ச. நாகராஜன்
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் பீஹார். பழைய காலத்தில் மகதம் என்று இது அழைக்கப்பட்டது.
இந்துக்களுக்கு மிக முக்கியமாக அமைவது கயா திருத்தலமாகும். இதுவே புத்தமதத்தினருக்கும், ஜைன மதத்தினருக்கும் கூட மிக முக்கியமான திருத்தலமாகவும் திகழ்கிறது.
இத்திருத்தலம் பீகார் மாநிலத்தில் அதன் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. கல்கத்தா- வாரணாசி செல்லும் ரயில் பாதையில் கயா ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர் : கதாதரர்
தீர்த்தம் : ராமாயணத்தில் நிரஞ்சனா என்று குறிப்பிடப்படும் பல்குனி நதி
தல விருட்சம் : அட்சய வடம் எனப்படும் ஆலமரம்
இந்தத் தலத்தைப் பற்றிய முக்கியமான புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்பொரு காலத்தில் கயாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா, சிவன் ஆகியோருடைய சரீரங்களை விடத் தனது சரீரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அதன் படியே அவன் பரிசுத்தமாக ஆனான். இதனால் அவன் யாரைத் தொட்டாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைய ஆரம்பித்தனர். அவனால் பாவிகளும் கூட ஏராளமானோர் சொர்க்கத்திற்குச் செல்லவே தேவர்கள் விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தித்து இதற்கு ஒரு தீர்வைத் தருமாறு வேண்டினர். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா ஒரு யாகத்தை கயாசுரனின் சரீரத்தின் மீது செய்தார். யாகத்திற்கு பிரம்மாவும் சிவனும் வந்திருந்தனர்.
அக்னியின் சூடு அந்த அசுரனை ஒன்றும் செய்யவில்லை. யமனை அழைத்து அவனை எழுந்திருக்காதபடி செய்ய முயன்ற போதும் அவன் தலை ஆடியது. யமனின் மகன் அந்தத் தலை மீது காலால் அமுக்கியபோதும் உடல் அசைவு நிற்கவில்லை.
விஷ்ணு நேரில் பிரத்யட்சமாகி அசுரன் தலை மேல் தன் பாதத்தை வைத்தார். அத்துடன் அவன் தலை ஆடாமல் நின்றது. யாகமும் பூர்த்தியாயிற்று.
இங்குள்ள கோவில் விஷ்ணுவின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவே இந்த விஷ்ணு பாதம் ஆகும்.
இது கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு உள்ளது. எண்கோண வடிவில் அமைந்த இந்த கோவில் 30 மீட்டர் உயரமும் எட்டு அடுக்குகளும் கொண்டதாகும்.
அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள அட்சய வடத்தில் திதியை முடிப்பவர்களுக்கு முக்தி நிலையைக் கொடுக்க வேண்டும் என்ற கயாசுரனின் வேண்டுதலும் அருளப்பட்டது.
ஆகவே இங்கு சிரார்த்தம் செய்தால் ஏழு தலைமுறை பித்ருக்கள் மோக்ஷம் அடைவார்கள் என்பது ஐதீகம். ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் இங்கு வந்ததையும் ராமர் தசரதருக்கு பிண்ட தானம் கொடுத்ததையும் ராமாயணன் குறிப்பிடுகிறது
இங்கு வருபவர்கள் காமம், கோபம், மோகம் ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது ஐதீகம். அட்சய வடத்தில் சிரார்த்தம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரு காய் அல்லது பழம் போன்ற எதையாவது விட்டு விடுதல் வேண்டும். இந்த உறுதி மொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
இங்குள்ள அட்சய வடத்தின் வேர்ப்பகுதி பிரயாகையிலும் நடுப்பகுதி காசியிலும் உச்சி மரக்கிளை கயாவிலும் இருப்பதாக ஐதீகம். இதை மூலம் – மத்யம் – அக்ரம் என்று குறிப்பிடுவது வழக்கம்.
இது உயரமான ஒரு இடத்தில் இருப்பதால் படிகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கலாம்; கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
புத்த கயா
கயாவிலிருந்து புத்தகயா பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும். இங்குள்ள போதிமரத்தடியின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற நாள் புத்த பூர்ணிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
புத்த கயாவில் போதி விருட்சம் எனப்படும் அரச மரம் உள்ளது.
இங்கிருக்கும் புத்தர் கோவில் 185 அடி உயரம் கொண்டது. இங்குள்ள போதி விருட்சத்தின் அடியில் புத்த பிட்சுக்கள் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பது பாரம்பரியப் பழக்கமாகும். இந்த மரத்திலிருந்து உதிரும் இலைகளே இங்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை மீது நமஸ்கரித்து அனைவரும் வணங்குகிறார்கள்.
இங்குள்ள பிரகாரத்தைச் சுற்றி மணி மகுட அமைப்புகள் உள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாறு இங்கு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள உருளைகளைச் சுற்றினால் செய்த பாவம் போகும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தாய் மடாலயம், முச்சலிண்டா ஏரி, பல்கு நதி, பிரம்மயோனி கோவில், சங்கமனா, சீனக் கோவில். வியட்நாம் கோவில் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றிற்கும் அனைவரும் செல்வது வழக்கம்.
நாலந்தா பல்கலைக்கழகம்
கயாவிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நாலந்தா.
800 வருடங்களுக்கும் மேலாக கல்வி அளித்து வந்த நாலந்தா பல்கலைக் கழகம் உலகெங்கிலுமிருந்து மாணவர்களை ஈர்த்த பிரம்மாண்டமான பழம்பெரும் கல்வி நிலையமாகும்.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.
இங்குள்ள நாலந்தா அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் புத்தமதம் சம்பந்தமான அனைத்து நூல்கள் உள்ளிட்டவற்றைக் காட்சிப் படுத்துகிறது.
ஹுவான்சுவாங் நினைவகம்
பிரபல சீன யாத்ரீகரான யுவான் சுவாம் ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த நினைவகம்.
சூரியன் கோவில்
நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடத்திற்கு அருகில் சூரியனுக்கான கோவில் ஒன்று உள்ளது. கட்டிடக் கலையின் உன்னதத்தைக் காட்டும் சிதிலமடைந்த கோவில் இது.
குண்டல்பூர்
நாலந்தாவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் குண்டல்பூர் அமைந்துள்ளது. இங்கு தான் ஜைன மத நிறுவனரான மஹாவீர் அவதரித்தார். 11 அடி உயரமுள்ள மஹாவீரரின் சிலை இங்கு அமைந்துள்ளது. கோவிலின் உயரம் 101 அடியாகும்.
இந்தக் கோவிலுக்கு இரு புறமும் ரிஷப்தேவ் கோவிலும் த்ரிகால் சௌபிசி கோவில்களும் உள்ளன.
பாவாபுரி
பாவங்களே இல்லாத நகர் என்ற பெயரைக் கொண்ட பாவாபுரி பாட்னாவிலிருந்து 95 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு தான் ஜைன மதத்தை நிறுவிய பகவான் மஹாவீர் சமாதி அடைந்தார். அழகிய குளமும், குளத்தின் நடுவில் கோவிலும் உண்டு. இங்கு மஹாவீரரின் பாதச்சுவடுகள் உள்ளன.
சாரிபுத்திரர் ஸ்தூபி
நாலந்தா ரயில் நிலையத்தின் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சரிபுத்ரா ஸ்தூபி. இதை நாலந்தா ஸ்தூபி என்றும் அழைப்பதுண்டு. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும்.
பிரமிட் போல இதன் மேற்புறம் அமைந்துள்ளது. கிமு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனால் நிறுவப்பட்டது இது.
கௌதம புத்தரின் முக்கியமான பத்து சீடர்களுள் ஒருவர் சாரிபுத்திரர்.
புத்தபிரான் மஹாநிரிவாணம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தாவிலேயே கார்த்திகை மாத பௌர்ணமி அன்று பரிநிர்வாணம் அடைந்தார். அவரது எலும்புகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏழு அடுக்கு கொண்டது இந்த ஸ்தூபி, இங்கு புத்த மதத்தின் புனித நூல்களின் உபதேசங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ககோலாட் நீர்வீழ்ச்சி
புத்த கயாவிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ககோலாட் நீர்வீழ்ச்சி. உலகெங்கிலுமிருந்து பயணிகள் விரும்பி வரும் இடம் இது. சுமார் 160 அடி உயரத்திலிருந்து விழும் நீர் கீழே ஒரு நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதைப் பற்றிய பழைய புராண வரலாறு ஒன்று உண்டு.
திரேதா யுகத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் மலைப்பாம்பாக போகும்படி சபிக்கப்பட்டான். அவன் இந்த நீர்வீழ்ச்சியில் வாழ்கிறான் என்பது ஐதீகம்.
பாண்டவர்கள் வனவாச காலத்தில் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் பாம்பாக இருந்த மன்னன் சாப விமோசனம் பெற்றான். ஆகவே இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்கள் ஒருபோதும் பாம்பாக பிறவி எடுக்க மாட்டார்கள் என்று அந்த மன்னன் உறுதி கூறியதாகவும் வழிவழி கதை கூறுகிறது.
இப்படி பீஹார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் சுமார் 150 சுற்றுலா இடங்கள் உள்ளன. பாட்னா உள்ளிட்ட இடங்களிலிருந்து சுற்றி உள்ள பல மாநிலங்கள் அருகிலும் இவை அமைந்துள்ளன என்பதால் முதலிலேயே நல்லதொரு சுற்றுலா திட்டத்தை வகுத்துக் கொள்வது இன்றியமையாதது.
ஆன்மீக யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கயாவே மையத் தலமாக அமையும்.
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
***
Prayer by Mrs Jayanthi Sundar.
***
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.
***
Mrs. Brahannayaki Sathyanarayan spoke on NAGAPPATTINAM SHRINE.
****
Professor S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College spoke on Great Mathematician Ramanujan (in Tamil)
****
SPECIAL EVENT-
VARANASI KUMBABHISHEKAM BOOK REVIEW BY AUTHOR SRI SUBBU SUNDARAM FROM CHENNAI.
****
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
****
18-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சிநிரல்
நேரில் காணலாம்; கேட்கலாம்via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் .
****
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்
***
ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —
தலைப்பு – திருநாகைக்காரோணம் (நாகபட்டினம்)
****
சொற்பொழிவு:-
பேராசிரியர் எஸ். சூரியநாராயணன் , மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் பிரின்சிபால் .
தலைப்பு — கணிதமேதை ராமானுஜன் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சொற்பொழிவு – திரு சுப்பு சுந்தரம், ஆசிரியர் — காசி கும்பாபிஷேகம்
இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சுப்பு சுந்தரம் நூல்
விமர்சனம்.
சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூல் பற்றி திரு சுப்பு சுந்தரம்,
*****
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
****
JOIN US ON EVERY SUNDAY.
—subham—
Tags- GNANAMAYAM ,18-5-2025, BROADCAST, PROGRAMME
சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் (NEWS ABOUT THE BOOK LAUNCH IN JANUARY 2025)
.
சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூலுக்கான வெளியீட்டு விழா. விழா 29/1/2025
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சுலந்துகொண்டு நூலை வெளியிட்டார். இந்திகழ்ச்சியில் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் குருமூர்த்தி பேசும் போது. ஆன்மிகத்திற்காகவே பிறந்து அதற்காகவே வியாபாரம் செய்தவர்கள் நகரத்தார். தலைமுறை தலைமுறையாக வேதத்தையும் கோயில்களையும் பாதுகாத்தவர்களும் அவர்களே காசி பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆன்மிக பணி யாற்றிய நகரத்தாரின் தாழ்வுக்கு திராவிடம்தான் காரணம் திராவிட இயக்கத்தால் ஆன்மிகம் குறைந்ததால்தான். நகரத்தார் சமுதாயம் தாழ்ந்தது. காசி தமிழ் சங்கத்திற்கு வித்திட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளதால், இந்நூலுக்கு இன்னும் பெருமை சேர்கிறது என்றார்.
விழாவில் ஆளுநர் ஆர்.எஸ். ரவி தனது உரையில் “ஆன்மிகத் தலமாக விளங்கும் காசியில் 40,000 தமிழக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக தமிழர்கள் காசியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் காசி, பாரதத்தின் ஆன்மிக ஈர்ப்பு மையம் ரிஷிகளால் பாரதம் உருவாக்கப்பட்டபோது, அவர்கள் சனாதன தர்மத்தை மட்டும் வழங்கவில்லை. நமது நாட்டின் பாரம்பரியமும் நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மேலும் ரிஷிகள் நாடு முழுவதும்
ஒரு கட்டமைடையும் உருவாக்கின செல்வத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை துரதிரஷ்ட வசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நாம் திசையை இழந்தோம் பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மமே பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார். சமூகத்தில் நடந்த தவறுகளை திருக்கி அவர் மீண்டும் பாரதத்தை மீட்டுக் கொண்டுவர் முயற்சிக்கிறார். அந்த வகையில் இந்தியா வரும் காலங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மலரும் என்றபோது, எழுந்த பலந்த சுர கோஷம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு
காசிக்குப் போய்வந்த அனுபவத்தையும்; காசியிலே பல நூற்றாண்டுகள் வாழ்ந்த அனுபவத்தையும் இந்த நூல் தருகிறது. காசி எனும் பெயர் காரணம். , வரலாறு அதை ஆண்ட மன்னர்களின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சிறப்பு என விரிவாக எழுதப்பட்டுள்ளது. சில அற்புதங்கள் சிலரது கையால்தான் நிகழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அப்படி சுப்பு சுந்தரத்தின் திருக்கரங்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 42
Stamps posted today include 1993, 1994 STAMPS,
People with stress, mental health, children on elephant, children s day, india tea, papal seminary, speed post letters, custom house wharf, Calcutta, dr sampurnanad, kirkee miltary college, ilo, ipta, drum beating, statue of sepoy, institute of mental health, madras regiment, sepoy statue, human resources centre, khuda bakhs library, j r d tata, beghum Akhtar, international year of family, small family, baby, polio immunization, upasi centenary, , world of work, international cancer congress, eigth triennale, heart care festival, sanchi stupi, satellite dish, otter, pune military engineering college, new definitive series , Calcutta Blind School, Bombay GPO
–subham—
Tags– Pictures of 2500 Indian Stamps, Part 42, year 1993 , 1994, People with stress, mental health, children on elephant, children s day, india tea, papal seminary, speed post letters, custom house wharf, Calcutta, dr sampurnanad, kirkee miltary college, ilo, ipta, drum beating, statue of sepoy, institute of mental health, madras regiment, sepoy statue, human resources centre, khuda bakhs library, j r d tata, beghum Akhtar,international year of family, small family, baby, polio immunization, upasi centenary, , world of work, international cancer congress, eigth triennale, heart care festival, sanchi stupi, satellite dish, otter, pune military engineering college, new definitive series , remount vetenary corps, Bombay GPO, Calcutta Blind School
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
(Collected from Popular newspapers and edited for broadcast.)
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மே 18- ஆம் தேதி 2025-ம் ஆண்டு
*****
முதலில் வெளிநாட்டுச் செய்திகள்
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்
வட அமெரிக்க நாடான கனடாவில் புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
அனிதா ஆனந்த் பகவத் கீதை மீது கை வைத்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்( 57).
அனிதா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம்.
அனிதா ஆனந்த் கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா பஞ்சாபி சரோஜ், மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.
2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார்.
* 2021ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார்.
* இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு, டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இவர் 2019ல் அரசியலில் நுழைந்தார். இரண்டு சகோதரிகள் உள்ளனர்; அவர்களுடைய பெயர்கள் சோனியா, கீதா.
****
இனி வெளி மாநிலச் செய்திகள்
10 லட்சம் முறை கோவிந்தா நாமம் – திருப்பதி திருமலையில் 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம்!
திருப்பதி திருமலையில் 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வந்த இளம் பெண் உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.
இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின் மீதான பக்தியை வளர்க்கவும், 10 லட்சம் முறை கோவிந்தா நாமத்தை எழுதி வரும் 25 வயதுக்குட்பட்ட பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் எனத் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்தா நாமம் எழுதி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா உட்பட 3 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டுள்ளது.
****
ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில்மனுதாக்கல்!
கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் உரையாற்றிய ராகுல் காந்தி ராமர் ஒரு புனைக்கதை கதாப்பாத்திரம் என்று கூறினார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தியதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் MAY 19-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
*****
இனி தமிழ்நாட்டுச் செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்திரை மாத நிறைவையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.
இதையொட்டி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினார்கள்.
பின்னர் அவர்கள் அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்த புரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை அடைந்தார்கள்.அங்கு பஜனை, பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மீக சொற்பொழிவைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ரேகா தவே குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.
***
கோனேரிராஜபுரத்தில் பரதம் ஆடி உலக சாதனை
மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வந்திருந்த மொத்தம் 2,200 பரதநாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்து நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்தனர்.
நடராஜர் ஆலயம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள நடராஜர் கோவில் தான். ஆனால் நடராஜர் சுயம்புவாக, உயிரோட்டமுள்ள திருமேனியாக காட்சி தரும் தலம் ஒன்று உள்ளது. அது தான் கோனேரிராஜபுரம். பலரும் அறிந்திடாத இந்த கோவிலில் நடராஜரின் திருமேனி, உளி கொண்டு செதுக்கப்படாதது. இதில் நகரங்கள், ரோமங்கள், நரம்புகள் உள்ளிட்டவைகள் மனித உடலில் இருப்பது போலவே காட்சி தரும். அதே போல் மன்னர் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்பும் நடராஜரின் வலது காலில் இன்றும் இருக்கும்.
இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கோனேரிராஜபுரம் திருக்கோவில். இங்கு, தில்லை அம்பலம் என்ற பெயரில் மே 12ம் தேதி மாலை 4 மணிக்கு, மாபெரும் பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடைபெற து.
இங்கு ஐந்து உயர ஐம்பொன்னாலான நடராஜர் அருள்பாலிக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சி மொரைஸ் நகரில் இதேபோன்ற பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
****
ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் பண்பு பயிற்சி முகாம்
செங்கல்பட்டு அருகே ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ராஷ்டிர சேவிகா சமிதி சார்பில் இந்து மகளிருக்குப் பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு அண்ணா நகரில் இயங்கி வரும் சுனிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஏப்ரல் 30ஆம் தேதி பண்பு பயிற்சி முகாம் தொடங்கியது.
15 நாட்களாக நடைபெற்ற முகாமில் 16 பிராந்தியங்களைச் சேர்ந்த 75 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.
இறுதி நாள் நிகழ்ச்சியில் பெண்கள் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைச் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை சாரதா ஆசிரமம் பூஜினிய ஸவாமினி கிருஷ்ண பெரியாம்பா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
****
கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை
கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னை குறித்து இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே விண்ணேற்றிப்பறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி முழுநிலவு திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
வண்ணத்திப்பாறை பகுதிக்கு இரு மாநிலம் உரிமை கொண்டாடுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், கண்ணகி கோயில் பிரச்சனை தொடர்பாக இருமாநில அரசும் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
****
கோபியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கள் பயிற்சி முகாம்!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் செய்து காண்பித்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இளைஞர்களுக்கான பஜ்ரங்கள் பண்புப் பயிற்சி முகாமும், பொறுப்பாளர்களுக்கான பரிஷத் முகாமும் தொடங்கியது.
இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு தியானம், பிரார்த்தனை, சிலம்பம், கராத்தே, யோகா, வில்வித்தை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சியின் நிறைவு நாளான புதன்கிழமையன்று விஷ்வ இந்து பரிஷத்தின் வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, வட தமிழக பஜ்ரங்கள் பொறுப்பாளர் கிரண், மாநில அமைப்பு செயலாளர் ராமன் ஆகியோர் முகாமுக்கு வருகை தந்தனர். அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.
******
சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்
சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக இரு தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், மண்டல ஐஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பாக எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கலாவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசின் கொள்கைகள் அனைத்தும் பேப்பர் வடிவில் மட்டுமே இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து இதே நிலை தொடராத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் எனவும், விரைவில் இந்த வழக்குகளில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
****
புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
******
பிரதமர் மோடி, இந்திய ராணுவம் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனை!
.பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி கோட்டி விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி, விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
மேலும் இதில் முன்னாள் கர்னல் சதீஷ்குமார் மற்றும் ராணுவத்தில் பங்காற்றியவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
*****
மதுரை சித்திரைத் திரு விழா நிறைவு ;அழகர்கோவில் வந்தடைந்தார் கள்ளழகர்!
திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் என்னும் கள்ளழகர்., திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார்.
சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருலினார்
பின்னர் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த விழாவில் ,ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.
கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்ட தோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் மீனாட்சி கோவிலில் பத்து நாட்களுக்கு நடந்த விழாவில் மீனாட்சி கல்யாணம், தேரோட்டம் முதலியன நடந்தன. ஆக சிவன் , விஷ்ணு கோவில் இரண்டிலும் நடக்கும் விழாவினை சித்திரைத் திருவிழா என்று அழைப்பார்கள்
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஜூன் மாதம் முதல் தேதி
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
மே மாதம் 25ஆம் தேதி ஒளிபரப்பு இல்லை என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறோம்.
வணக்கம்.
—SUBHAM—-
Tags, Gnanamayam News, 18 5 25, Broadcast ஞானமயம், உலக இந்து செய்திமடல் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத விற்பன்னருக்கு சிறைத் தண்டனை !
Shripad Damodar Satwalekar (19 September 1867 – 31 July 1968)
श्रीपाद श्रीदामोदर सातवळेकर
101 ஆண்டுகள் வாழ்ந்து வேதத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஸ்ரீபாத அம்ருத சாத்வலேகர் பற்றிய சில சுவையான செய்திகளைக் காண்போம்.
இவர் இந்தி மொழியில் இந்து மத வேதங்களைப் பற்றி பல நூல்களை எழுதினார் ; சொற்பொழிவுகள் மூலம் சாதாரண மக்களுக்கும் வேதத்தின் சாரம் தெரியவேண்டும் என்று பாடுபட்டார் ; வெறும் வேத அறிஞர் மட்டுமல்ல ஓவியரும் கூட .
வேதங்களைப் பற்றி அவர் பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்; அதர்வண வேதத்தில் பூமி சூக்தம் என்ற அற்புதமான கவிதை உள்ளது ; உலகில் வேறு எந்த மொழியிலும் இதற்கு நிகரான தேச பக்திக் கவிதை இல்லை! அதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ! தாய் நாடு -தேச பக்தி பற்றி எவ்வளவோ கவிதைகளை- குறிப்பாக பாரதியார் போன்றோர் கவிதைகளை நாம் இன்று படிக்க முடிகிறது . சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமித் தாயை வணங்கிய முதல் மனிதர் அதர்வண வேதப் பூமி சூக்தத்தை எழுதியவர்தான்! (பூமி சூக்தம் பற்றி பல தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை இந்த ‘பிளாக்’கில் நான் எழுதியுள்ளேன்).
****
சாத்வலேகர் , நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதர்வண வேத பூமி சூக்தத்தை வெளியிட்டு அதற்கு விளக்கங்களையும் இந்தி மொழியில் எழுதியிருந்தார் . இதன் மொழிபெயர்ப்பினை அறிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் நடுங்கினர் . பாரதி பாடல்களைக் கண்டு நடுங்கியது போல் ! உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் . ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர் .
பின்னர் அன்னி பெசன்ட் அம்மையார் போன்ற பலர் தலையிட்டு சாத்வலேகரை விடுதலை செய்தனர் . வாழ்நாளில் பெரும்பகுதியை வேதம் பற்றி பாமர மக்களுக்கு சொல்வதையே தம் பணியாகக் கொண்டார் . பிரிட்டிஷாரின் தொல்லைக்கு அஞ்சி நகரம் நகரமாக ஓடி ஒளிந்து வாழ நேரிட்டது ; இதிலும் இவர் நம்மை பாரதியாரை நினைவுபடுத்துகிறார்.
பாரதி பாடல் புஸ்தகக்ங்களை பிரிட்டிஷார் கைப்பற்றியவுடன் அனல் பறக்கும் சொற்பொழிவினை மதராஸ் மாகாண அசெம்பிளியில் அறிஞர் சத்திய மூர்த்தி ஆற்றிய உரையை முன்னரே இங்கே எழுதியுள்ளேன் .
****
அறிஞர் சாத்வலேகரின் வாழ்க்கைக் குறிப்பினைக் காண்போம்:
பிறந்தது — மகாராஷ்டிரத்தில் கோல்காவன் என்னும் இடம் .
தந்தையின் பெயர்- தாமோதர பட்ட, தாயின் பெயர் லட்சுமி பாய். தாமோதர பட்ட ரிக்வேத அறிஞர், புரோகிதர்; அவரிடமிருந்து சாத்வலேகரும் சிறு வயதிலேயே வேதம் கற்கத் துவங்கினார் .இவர் வாழ்நாளில் பாகிஸ்தானின் லாகூர், மூல்தான் முதல் பம்பாய், ஹைதராபத், ஆமதாபாத் பரோடா, நாசிக் மஹாராஷ்டிரத்தின் பல்வேறு நகர்கள் வரை வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்தார்.
வேதத்தில் உள்ள ஒரு மந்திரத்தை பிராமணர்கள் தினமும் சொல்கிறார்கள்; அதில் நூறு ஆண்டுக் காலம் வாழ்க என்று வரி உள்ளது; வேத வாழ்வைக் கடைப்பிடித்த சாத்வலேகர் அதன்படி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் . நானூறு புஸ்தகங்களுக்கு மேல் எழுதினார்; கைப்பட எழுதிய பெரிய அளவு காகிதங்கள்- 60,000 பக்கங்கள்!
Satvalekar painting
****
ஆர் எஸ் எஸ் தலைவர்
ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியால் ஊற்றுணர்ச்சி பெற்ற இவர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்து பதினாறு ஆண்டுகளுக்கு அவுந்த் நகர (சதாரா ஜில்லா, மஹாராஷ்டிர மாநிலம்) சங்கசாலக் பொறுப்பில் இருந்தார் ; இவரது நூற்றா ண்டு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கர் கலந்து கொண்டார்.
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் சாத்வலேகரின் சம்ஸ்க்ருத, வேத, ஆயுர்வேத, யோகாசன தொண்டினைப் பாராட்டி அவர் இருப்பிடத்துக்கு வந்தனர். திருமதி இந்திராகாந்தி ,மொரார்ஜி தேசாய் உள்படப் பலரும் வந்தனர்; அவர் சுவாத்தியாய மண்டல் என்ற அமைப்பினை நிறுவி இந்தப் பணிகளைச் செய்தார்; வேத மந்திர் என்ற கோவிலைக் கட்டி எல்லா மத நூல்களையும் அங்கே வைத்தார்.
இவருக்கு நிறைய நிறுவனங்கள் டாக்டர் பட்டத்தை அளித்தன. அரசாங்கத்தின் பத்ம பூஷன் விருதும் கிடைத்தது .
இவர் வெளியிட்ட முக்கிய நூல்கள் – ரிக்வேத சம்ஹிதை, சுபோத பாஷ்ய, சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் , இந்தி மொழி உரையுடன் அதர்வண வேதம், பகவத் கீதை பேருரை, மஹாபாரத மொழிபெயர்ப்பு .
இவர் வெளியிட்ட சம்ஸ்க்ருத ஸ்வயம் சிக்ஷக் நூலும் பகவத் கீதை உரையும் இன்று வரை வரவேற்பினைப் பெற்று வருகிறது.
குஜராத்தில் கில்லாபார்தி என்னும் இடத்தில் வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்தார்; அதைத் துவக்கும் போது அவருடைய வேண்டுகோளுக்கிணங்கக நாடு முழுதும் கோடி காயத்ரீ மந்திரத்தை மக்கள் உச்சரித்தனர் அவரும் காயத்ரீ ஹோமத்துடன் தனது நிறுவனத்தைத் துவக்கினார் .
சம்ஸ்க்ருதத்தில் சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைத்தான் பெரும்பாலோர் பின்பற்றுகின்றனர்; அதே போல இந்தி மொழியில் 4 வேதங்களுக்கு சாத்வலேகர் எழுதிய உரையும் புகழ் பெற்றது.
****
ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்
அதர்வ வேத பூமி சூக்த உரைக்காக இவர் சிறையில் இருந்தபோது ஒரு ஆங்கிலேய அதிகாரி சிறையை மேற்பார்வையிட வந்தார் . விலங்கும் சிறைக்கு கம்பிகளும் உங்களைத் துன்புறுத்துகின்றனவா? என்று பேச்சுவாக்கில் கேட்டார் . அவை என் உடம்புக்கு அப்பால்தானே இருக்கின்றன எப்படி துன்புறுத்த முடியும்? என்று சாத்வலேகர் பதில்கொடுத்தார் ஆங்கிலேய அதிகாரி அப்படியே திகைத்து நின்றார். சாத்வலேகர் ஒரு யோகியாக வாழ்ந்தார்.
புருஷார்த்த போதினி என்று ஆங்கில மொழியில் இவர் வெளியிட்ட பகவத் கீதை உரை இன்றுவரை மிகவும் வாசிக்கப்படுகிறது
குஜராத்தி, மராத்தி, இந்தி, ஆங்கில மொழி களில் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார் .ஓவியங்களுக்காக இரண்டு முறை தங்கப்பதக்கமும் பெற்றார்
இவரது வேத விளக்கங்கள் ஆணித்தரமாகவும் தர்க்கரீதியிலும் பாமர மக்களுக்குப் புரியும் விதத்திலும் உள்ளது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
18-5-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை
ஆலயம் அறிவோம்
வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன்
நிருத்தனை நிமலன் தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன
கருத்தனைக் கடல் சூழ் நாகைக்காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே
– திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநாகைக்காரோணம்
திருத்தலமாகும். சோழநாட்டில் காவிரியின் தென்கரைத் தலங்களில் 82வது தலமாகும் இது.
மூலவர் : காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்
இறைவி : நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தங்கள் : சர்வ தீர்த்தம், தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகளும் மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்திய சம்பவங்களும் உண்டு.
பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதால் இறைவன் ஆதிபுராணர் என்றும், ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகை என்றும், புண்டரீக முனிவர் இறைவனை தன் உடம்பில் ஆரோகணம் செய்து கொண்டதால் காயாரோகணம் என்றும் இறைவன் பெயர் பெற்றார். நாகப்பட்டிணம் என்று பேச்சு வழக்கில் இந்தத் தலம் இன்று அறியப்படுகிறது.
ஆதிபுராணம், சிவ ராஜதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
அகஸ்திய முனிவருக்கு இறைவன் இந்தத் தலத்தில் தான் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.
சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து சோமாஸ்கந்தராய் காட்சி அளித்த தலமும் இதுவே தான்.
சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சகுரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இது அமைகிறது.
சுந்தரர் பற்றிய இந்தத் தலத்துடன் தொடர்பு கொண்ட வரலாறு ஒன்று உண்டு.
திருவாரூரிலிருந்து திருநாகைக்காரோணம் அடைந்த சுந்தரர் சுவாமி தரிசனம் செய்து பதிகங்களைப் பாட இறைவன் அவருக்கு குதிரை, உடைவாள், முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவற்றை வழங்கி அருளினார். ஆகவே அன்று முதல் இந்தக் கோவிலில் குதிரை வாகனவிழா சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறுகிறது.
நகரின் மத்தியில் 180 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டு இரு பிரகாரங்களுடன் கம்பீரமாக இந்தக் கோவில் காட்சி தருகிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவாலயத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நாகாபரண விநாயகர், சுதையால் ஆன நந்தி, முக்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இங்கு கயிலை மற்றும் காசியில் உள்ளது போல முக்தி மண்டபம் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
ஐந்து நிலை கொண்டது கோபுரம். உள்ளே தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அருகே கொடிமரம் உள்ளது. சுவாமி சந்நிதியில், பிரகாரத்தில் தியாகராஜ ஸ்வாமி சந்நிதியும் எதிரில் சுந்தரரும் இருப்பதைப் பார்க்கலாம். தியாகராஜர் சந்நிதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம்.. இதே பிரகாரத்தில் அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சனீஸ்வரர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
தல விருட்சமான மாமரத்தின் அடியில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும் சிவகங்கை என்னும் தேவதீர்த்தம் முக்தி மண்டபத்தில் அருகிலும் தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன.
கடலும் சிறந்த தீர்த்தமாக அமைவதால் விசேஷ நாட்களில் பக்தர்கள் இதில் நீராடி வருகின்றனர்.
இந்தத் தலத்தில் தான் அதிபத்த நாயனார் அவதரித்து வழிபட்டு முக்தி அடைந்தார். இவரது திருவுருவச் சிலை கோவிலில் உள்ளது.
ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் அருளப்பட்ட தலம் இது.
அருணகிரிநாதர் “நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த நாகபட்டினத்தமர்ந்த பெருமாளே” என்று இந்தத் தலத்தில் திருப்புகழ் பாடலைப் பாடி அருளியுள்ளார்.
நாகைக்காரோணப் புராணம் என்ற நூலை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி 1860ம் ஆண்டில் அரங்கேற்றினார். இது 61 படலங்களையும் 2506 பாடல்களையும் கொண்டது. இப்புராணத்தின் அருமை பெருமைகளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் விரிவாக விளக்கியுள்ளார்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயாரோகணேஸ்வரரும் அன்னை நீலாயதாட்சியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலம் இமயமலையின் தெற்குப் பகுதியில் உள்ளது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கும் இதையொட்டியே உள்ளது. ஈடு இணையற்ற இடம் என்ற சிறப்புப் பெயரை இது பெற்றுள்ளது.
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
காஸிரங்கா தேசிய பூங்கா
இது அஸ்ஸாமின் தலைநகரான கௌஹாதியிலிருந்து 105 மைல் தூரத்தில் உள்ளது.
காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் அபூர்வமான வன விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். இங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நீர்யானை, சிறுத்தை, சிங்கம், புலி என எல்லா மிருகங்களையும் காணலாம்.
வடதுருவத்தில் இருந்து வரும் அபூர்வமான பறவைகள் இங்கு வந்து மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. ஆண்டுக்கு இரு முறை பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி உலகெங்கிலுமிருந்து இந்தப் பறவைகள் வருவது குறிப்பிடத் தகுந்தது. யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது.
ஜீப் சஃபாரி
பூங்காவைத் திட்டமிட்டபடி சுற்றிப் பார்க்க வசதியாக ஜீப்பில் செல்லும் ஜீப் சஃபாரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் உண்டு. இரண்டு மணி நேரம் ஜீப்பில் சென்று இந்தப் பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.
யானை சஃபாரி
யானை மீதமர்ந்து காண்டாமிருகம் உள்ளிட்ட மிருகங்களைப் பார்ப்பது என்பது தனி ஒரு அனுபவம் தான். ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த யானை மீதான சவாரிக்குக் கட்டணம் உண்டு.
ககோசாங் நீர்வீழ்ச்சி
காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 47 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அருமையான ககோசாங் நீர்வீழ்ச்சி. போககாட் என்ற நகரிலிருந்து இது 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காஸிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்வோர் இதையும் திட்டத்தில் சேர்த்து திட்டமிடலாம். தேவையான உணவுப் பொருள்களைத் தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். ட்ரெக்கிங் உள்ளிட்ட மலைப் பிரதேசத்திற்கே உரித்தான பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் இது. தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், ரப்பர் காடுகள் உள்ளிட்டவற்றை இங்கு பார்த்து மகிழலாம். 116 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சியையொட்டி அமைந்துள்ள குளத்தில் குளிக்கலாம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம் இது.
அகர்டோலி மலைத்தொடர்
காஸிரங்கா தேசிய பூங்காவின் கிழக்கு வாயிலிலிருந்து அருகில் உள்ளது அகர்டோலி மலைத்தொடர். இங்கு ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்க்கும்படியான திட்டங்கள் உள்ளன.
புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் வண்ண வண்ண அழகிய பறவைகளை இங்கு காணலாம். இங்கு செல்லவும் சுற்றிப் பார்க்கவும் விசேஷ அனுமதியை இங்குள்ள அலுவலகத்தில் பெற வேண்டும். கட்டணமும் உண்டு.
மஹாபைரவ ஆலயம்
காஸிரங்கா பூங்காவிலிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மஹாபைரவ் ஆலயம். பாணாசுரன் என்னும் அசுரன் சிவனுக்கு ஒரு கற்களால் ஆன கோவிலைக் கட்டினான். சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் திரண்டு இங்கு வருவது வழக்கம்.
இந்தக் கோவிலில் ஒரு மாபெரும் அதிசயம் உண்டு. இங்குள்ள சிவலிங்கம் உயிருள்ள கல்லால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது வருடங்கள் ஆக ஆக இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். பாணாசுரனின் வலிமைக்கும் வளத்திற்கும் அவன் இந்த இடத்தில் சிவபிரானை வழிபட்டதே காரணம் என்பது ஐதீகம்.
இங்கு பிரசாதமாக தரப்படும் லட்டு ஒரு விசேஷமான தயாரிப்பாகும்.
பிஸ்வநாத் காட்
காஸிரங்கா தேசீயப் பூங்காவிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிஸ்வநாத் காட். பிரம்மாண்டமாகப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதிக் கரையில் உள்ள பிஸ்வநாதர் ஆலயம் குப்த காசி என்று அழைக்கப்படுகிறது. அதாவது காசிக்கு நிகரான மகிமை பொருந்திய ஆலயம் இது என்பது பொருள். இயற்கைக் காட்சிகள் ஒரு பக்கம் பிரமிக்க வைக்க இங்கு ஆலயத்தில் உள்ள கட்டிட மற்றும் சித்திர வேலைப்பாடுகள் நம்மை இன்னும் அதிகம் பிரமிக்க வைக்கும்.
நகர்ப்புற வாழ்க்கையை ஒதுக்கி விட்டு அமைதியான இயற்கை சார்ந்த இடத்தில் ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கான இடம் பிஸ்வநாத் கிராமமாகும். இது இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா கிராமம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
மானஸ் தேசிய பூங்கா
இது கௌஹாதியிலிருந்து 137 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\யுனெஸ்கோ இதை பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.
இதற்கும் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள தூரம் 274 கிலோமீட்டர். இதை அடைய புகைவண்டி வசதி உண்டு. காரிலும் செல்லலாம். இது புலிகளிள் மற்றும் யானைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமயமலை அடிவாரத்தையொட்டி பூடானின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது இது. பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான மானஸ் நதி இந்தப் பூங்காவின் நடுவே பாய்ந்து செல்கிறது. அதையொட்டி இந்தப் பூங்கா மானஸ் தேசீய பூங்கா என்ற பெயரைப் பெறுகிறது.
அஸ்ஸாமில் உள்ள இதர சுற்றுலா இடங்கள்
தெற்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்கையும் அழகிய மலைத்தொடரையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம். இதன் பரப்பளவு 78438 சதுர கிலோமீட்டரகள். தேயிலைக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.
மஹாபாரதத்தில் ப்ரக்ஜ்யோதிஷா என்ற பெயரால் குறிப்பிடப்படும் இந்த மாநிலம் பழம்பெரும் வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள 33 மாவட்டங்களிலும் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
ஓவ்வொரு இடத்தையும் அது அமைந்திருக்கும் இடம், தூரம், சிறப்பு ஆகியவற்றை முன்னமேயே நன்கு தெரிந்து கொண்டு சுற்றுலாத் திட்டத்தை வடிவமைக்க வேண்டுவது அவசியம்.
அஸ்ஸாமில் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்னும் சில இடங்களை மட்டும் இங்கு பார்ப்போம்:
காமாக்யா ஆலயம்
சக்தி பீடங்களில் ஒன்று இது. நிலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்த துர்க்கையம்மன் ஆலயம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
மஜுலி தீவு
பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள அற்புதமான தீவு இது. இதன் பரப்பளவு சுமார் 880 சதுர கிலோமீட்டர். படகில் சென்று இங்குள்ள இயற்கைக் காட்சிகளையும் தாவர பறவை இனங்களையும் பார்ப்பது ஒரு அதிசயமான அனுபவமாகும்.
சிவசாகர்
அஸ்ஸாமின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிவசாகர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடித்தள நகரமாகும். கௌஹாதியிலிருந்து இது சுமார் 360 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள சிவசாகர் நீர்த்தேக்கம், அஹம் அரசர்களின் கல்லறைகள் உள்ளிட்டவை பார்க்கத்தக்க இடங்களாகும்.
கௌஹாதி
வடகிழக்கின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த நகரம் அஸ்ஸாமின் தலை நகரமாகும். இங்குள்ள தேசியப் பூங்கா மிகவும் பிரபலமானது. 2405 மைல் நீளம் ஓடும் பிரம்மபுத்திரா நதிக் கரையோரம் அமைந்துள்ளது இது.
ஜோர்ஹாட்
கலையழகு பொருந்திய நகரம் ஜோர்ஹாட் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. இங்குள்ள ஏராளமான ஆலயங்களும் தேயிலைத் தோட்டங்களும் அனைவரையும் ஈர்க்கின்றன.
இன்னும் ஹாஃப்லாங் ஏரி, ஜம்பு மலை மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ள மாநிலம் அஸ்ஸாம்.
வடகிழக்குப் பகுதிக்கு வாருங்கள் என அழைக்கும் அஸ்ஸாமின் புகழுக்கு ஈடு இணையில்லை என்பதை அது நியூயார்க் டைம்ஸ் இதழில் நான்காவது இடத்தைப் பிடித்ததிலிருந்தே தெரிகிறல்லவா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Annual Thiruppugaz Festival was held in London Murugan Temple Hall on 17-5-2025. Mrs Jayanthi Sundar has been teaching Arunagirinatha’s Thiruppugaz to young and old disciples for decades. Every year her group assemble in London and do Puja to Lord Muruga. They sing selected verses in chorus.Apart from the main Puja, Padapuja of Kanchi Shnkaracharya is also done.
On Saturday Mrs Jayanthi Sundar led her group singing Thiruppgaz verses for more than hour. An added attraction was that little boys and teenagers were also give an opportunity to show their talents. Mr Sundar spoke about the significance of New Kanchi Acharya’s initiation event.
Over 100 people attended the Saturday event. And Mahaprasad was distributed at the end. Gift and Sweet packets were also given to the participants.