Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 20-4-2025
COLLECTED FROM POPULAR DAILY NEWSPAPERS AND EDITED FOR BROADCAST.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 20-ஆம் தேதி 2025-ம் ஆண்டு
*****
முதலில் தமிழ் நாட்டுச் செய்திகள்
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து உயர் நீதி மன்றம் உத்தரவு
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
” ஆபாச பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது:பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு பெண்களை மட்டும் அல்லாமல், சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதற்கு மாலை 4:45 மணிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
பொன்முடியின் பேச்சு வில்லில் இருந்து விடுபட்ட அம்பை போல் மக்களை சென்றடைந்துவிட்டது. மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நன்றாக தெரிந்தே பொன்முடி பேசி உள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. வேறு யாராவது பேசியிருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலை போல் வெறுப்பு பேச்சை சகித்து கொள்ள முடியாது. பா.ஜ.,வின் ராஜா, நடிகை கஸ்தூரி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட பொன்முடி மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த சலுகையை தவறாக பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளார். இந்த பேச்சுக்காக சலுகையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை வீடியோ கான்பரன்ஸ் அல்லது அரசு வழக்கறிஞர் மூலம் டிஜிபி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மாலை 4:45 மணிக்கு ஒத்திவைத்தார்.
5புகார்
இந்த வழக்கு மீண்டும் மாலை 4:45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேச்சு தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்., 12ல் புகார் மனு பெறப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:ஒரு புகாரில் மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4, 5 வழக்குப்பதிவு செய்தால், விசாரணை நீர்த்து போய்விடும். புகார் இல்லாமல் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா?
பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.,23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
****
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் புகார்!
இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் தர்ம யாத்திரா பொறுப்பாளர் சிவலிங்கம், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : அதிமுக வளர்மதி
இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
****
வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசித்து வரும் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 150 ஹிந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்களது நிலத்தை, தங்கள் நிலம் என்று வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அங்குள்ள மசூதி மற்றும் தர்ஹாவின் பராமரிப்பாளர் சையத் சதாம் என்பவர், கிராம மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், ஒட்டு மொத்த நிலமும் வக்ப் வாரியத்திற்கு சொந்தம். இதனால், அனைவரும் வாடகை கொடுக்க வேண்டும். அல்லது காலி செய்து வக்ப் வாரியத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆங்கில டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் என்பவர் கூறுகையில் இக்கிராம மக்கள் 3 – 4 தலைமுறையினராக வசிக்கின்றனர். நிலம் கிராம மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் திடீனெர சர்வே எண் 333/1 வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கின்றனர். கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மக்ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும்.. இது சட்டவிரோதம். கலெக்டர் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் கூறினார்.
****
விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் திறப்பு – போலீஸ் குவிப்பு
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் உள்ள மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவில் அந்த ஊர் மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது மற்றொரு பிரிவினை சேர்ந்தவர்கள் அவர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தனர். நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அதுவரை கோயிலும் மூடப்பட்டு இருந்தது. இரு தரப்பினரும் சுமூகமாக சாமி தரிசனம் செய்யும் வகையில் வருவாய்த்துறை சார்பிலும், போலீசார் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் இன்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அங்கிருந்த ஒருவர் அங்கு வந்து, பட்டியலின மக்களுக்காக இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தீர்கள்.. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மட்டும் ஏன் எங்களுக்கு வழங்க மறுக்கிறீர்கள் என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டார். எனினும் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
****
மருதமலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். திருச்செந்தூர் கோயிலில் கடற்கரை பாதுகாப்பு பணி 30 கோடியில் மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது மருதமலையில் முருகனுக்கு 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றார்.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடற்கரை கடல் அரிப்பை தடுக்கும் பணி மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் கோயில்களின் சார்பில் 4 கிராம் தங்க தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி ஆயிரத்து 800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும், நடப்பாண்டும் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மருத மலை அறிவிப்பு வந்தது குறிப்பிட தக்கது; தமிழ் இந்துக்களின் கொதிப்பைக் கண்டு அஞ்சிய திராவிடர்கள் அடுத்த ஆண்டு தேர்தலை ஒட்டி மந்திர தந்திரங்களில் இறங்கிவிட்டனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்
****
சபரிமலையில் புதிய பஸ்ம குளம்: 6 மாதத்தில் பணி முடிக்க திட்டம்
சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலை சன்னிதானத்தின் பின்புறம் பாரம்பரியமான பஸ்ம குளம் உள்ளது. பக்தர்கள் இந்த குளத்தில் குளித்த பின்னர், ஸ்ரீ கோவிலில் அங்க பிரதட்சணம் செய்துவிட்டு, மீண்டும் குளத்தில் குளித்து திருநீறு அணிந்து செல்வர்.
தற்போது கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளதால், சீசன் காலங்களில் அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி கிடையாது
சபரிமலை மாஸ்டர் பிளான் படி, கோவிலின் கிழக்கு பக்கத்தில் பஸ்ம குளம் அமைக்க நேற்று பூமிபூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணியை துவங்கி வைத்தனர்.
மொத்தம், 15.72 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பஸ்ம குளம், 13 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது.
ஐந்தடி தண்ணீர் இருக்கும். தண்ணீரை சுத்திகரிக்க, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங்கள் குளத்தின் பக்கத்தில் அமைக்கப்படுகின்றன.
ஆறு மாதத்தில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர் ஒருவரின் நன்கொடையில் குளம் அமைக்கப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
*****
பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு
பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் பூணூல் அணிந்து இருந்தனர். அவர்களிடம் பூணூலை அகற்ற கோரி, தேர்வு அதிகாரி வற்புறுத்தி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2 hour(s) ago
இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம் தொடர்பான அடையாளங்களை அகற்ற சொன்ன தேர்வு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறியதாவது: இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிதர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்தும் இதே போன்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம்.
எந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் கூட, பூணூலை அகற்ற ஒருபோதும் அறிவுறுத்தப்படவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.
*****
ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள்: பா.ஜ., தலைவர் பேச்சு
மேற்கு வங்கத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம்,” என, அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திலீப் கோஷ் அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் முர்ஷிதாபாத் உட்பட சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
முர்ஷிதாபாத் வன்முறை சம்பவத்தை கண்டித்து சமீபத்தில் சார்பில் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது:
ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். ஆனால், இதுவரை தங்கள் வீடுகளுக்கு என எந்த ஆயுதத்தையும் வாங்கியது இல்லை.
தங்கள் பாதுகாப்புக்கு, போலீசை அழைப்பது வழக்கம். தற்போது, எந்த போலீசாரும் உங்களை காப்பாற்ற மாட்டார்கள். எனவே, தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. திலீப் கோஷின் பேச்சுக்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
****
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.
கடந்தாண்டு ராம்சரித்மனஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், ஹிந்துக்களின் புனித நூலக கருதப்படும் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது..
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது. யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.
பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
*****
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியதையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து யாத்ரீகர்கள் பதிவு செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரைக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால் ஏராளமான யாத்ரீகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஏப்ரல் 27- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
மறம்பயம் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புறம்பயம் திருத்தலமாகும்.. சோழநாட்டு வடகரைத் தலங்களில் 46வது தலமாக இது அமைகிறது.
இறைவன் திருப்பெயர் : சாட்சி நாதேஸ்வரர், புன்னைவனநாதர், புறம்பயநாதர், கல்யாண நாதர்
சந்நிதி: கிழக்கு
இறைவி திருப்பெயர்: கரும்படுசொல்லம்மை, இக்ஷுவாணி
தல விருட்சம் : புன்னை மரமாகும்.
செட்டிப் பெண்ணுக்குச் சாட்சியாக மதுரைக்குச் சென்ற மிகப் பழைய வன்னி மரமும் உண்டு.
தீர்த்தம்: பிரம தீர்த்தம், சப்தசாகரகூபம், சூரிய புட்கரிணி, சந்திர புட்கரிணி
இங்கு வழிபட்டோர்: அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர், சம்பந்தர் உள்ளிட்ட ஏராளமான முனிவர்களும் மகான்களும்.
பாஹ்யாம்புபுரம் என்றும் கல்யாண நகரம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் ஏராளம் உண்டு.
மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்ற ஒரு வணிகன் இந்த ஆலயத்தில் வன்னி மரத்தின் கீழ் பாம்பு கடித்து இறந்தான். இவனுடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இந்த ஆலய ஈசனிடம் அழுது புலம்பினாள். உடனே ஈசன் வணிகனை உயிர்ப்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியவற்றை சாக்ஷியாக வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மதுரைக்கு இருவரும் சென்ற போது வணிகனின் மூத்த மனைவி, ரத்தினாவளியை ஏற்காத நிலையில் திருமணம் நடந்ததை இறைவன் சாட்சிகளுடன் தோன்றி உண்மையை உரைத்தார்.
இன்றும் மதுரை மீனாட்சிகோவிலில் சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன உள்ளன. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
இப்படி செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் என்பதால் இறைவனுக்கு சாட்சிநாதேஸ்வரர் என்ற திருப்பெயர் அமைந்தது.
அம்பிகை தவிர ஏனைய நான்கு சாக்ஷி சொன்ன வடிவங்களும் இதற்கு அறிகுறியாக பெரிய பிரகாரத்தில் அக்னி மூலையில் சேர்ந்து உள்ளன.
சிவலிங்கம் மதுரைக்கு சாக்ஷி சொல்லச் சென்ற போது மூலஸ்தானத்திலிருந்து காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்து, பின்னர் அவர் திரும்பி வந்தவுடன் தனியே வேறு இடத்திற்கு வந்தவர் பிரத்தியக்ஷநாதர் என்ற பெயரில் லிங்க வடிவமாக உள்ளார். இவரது ஆலயம் தனியாக கர்பக்ருஹத்திற்கு வடக்கே உள்ளது.
இந்த ஊரின் வரலாற்றைச் சொல்லும் வன்னிநாடகம் என்னும் ஒரு நூல் செய்யப்பட்டு அது ஆடப்பட்டு வருகிறது.
இந்தத் தலத்தில் சனகாதி முனிவர்களுக்கு சிவபிரான் தக்ஷிணாமூர்த்தி வடிவமாக எழுந்தருளி ஞானோபதேசம் செய்தார். இந்த மூர்த்தி பெரிய கோபுரத்துக்கு வெளியே சந்நிதிக்கும் வடக்கே இடது புறத்தில் தனியாக உள்ளது. இதையே மாணிக்கவாசகர் “புறம்பயந்தனில் அறம் பல அருளியும்” என்று குறிப்பிடுகிறார்.
இங்குள்ள பிள்ளையார் பிரளயங்காத்த பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் உருவம் நத்தாங்கூடு, கிளிஞ்சல், மணல் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது. ஒரு காலத்தில் கடல் வெள்ம் தோன்றி இந்த நகரை அழிக்க இருந்த தருணத்தில், கடல் வெள்ளத்திலிருந்து நத்தாங்கூடு முதலியவற்றை விநாயகராகப் பிடித்து வைத்துக் கடல் வெள்ளம் நகரை அழிக்காதவாறு காப்பாயாக என்று சிவபிரான் நியமிக்க அப்படியே பிள்ளையார் செய்து நகரைக் காத்ததால் அவர் இந்தப் பெயரைப் பெற்றார்.
மஹாமண்டபத்தில் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி இந்தப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். விநாயக சதுர்த்தி தோறும், நூறு சேருக்குக் குறையாமல் தேன் அபிஷேகம் இவருக்குச் செய்யப்படுகிறது. எல்லாமே திருமேனியில் உறிஞ்சப்பட்டு வற்றி விடும்.
தீர்த்தங்கள்:
சப்தசாகர கூபம் என்னும் தீர்த்தம் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து உலகத்தை அழிக்க வந்தபோது அவற்றை அடங்கச் செய்தமையால் இந்தப் பெயரைப் பெற்றது.
பெரிய கோபுரத்திற்கு இடப்புறத்தில், நந்தவனத்துக்குள், பிரமதீர்த்தத்தின் தென்கரையில் இது உள்ளது. அமாவாசையன்று இதில் ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
பிரம தீர்த்தம்: பெரிய கோபுரத்தின் இடப்புறத்தில் குள வடிவில் இது உள்ளது.
சூரிய புட்கரிணி: இந்தத் தலத்துக்கு ஈசானத்தில் குள வடிவில் இது உள்ளது.
சந்திர புட்கரிணி: மேற்கு வடக்கு மதிலின் புறத்தே ஓடை வடிவில் இது உள்ளது. சித்திரா பௌர்ணமி தோறும் இங்கு ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.
இந்தத் தலத்தில் தான் துரோணாசாரியர் உபாஸித்து அஸ்வத்தாமனைப் பெற்றார்.
இமவான் வழிபட்டு மைநாகத்தைப் பெற்றார்.
இந்த ஊரைப் பற்றி ஏராளமான புலவர்கள் எழுதியுள்ள நூல்கள் உண்டு.
இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.
இந்த ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள இன்னொரு தலம் பொன்பற்றி என்ற பெயரைப் பெற்ற தலமாகும். இங்கு தான் சுந்தரமூர்த்தி நாயனார் பொன் பெற்றார். சுக்ரீவனும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட தலமும் இதுவே.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சாட்சிநாதேஸ்வரரும், கரும்படுசொல்லம்மையும்,
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
ஜெய் ஜெய்பூர் – 1
ச. நாகராஜன்
இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும், கலைகளின் மேன்மையையும்பக்தியின் உச்சத்தையும்கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.
கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?
ஹவா மஹால்
ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.
தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மஹாராஜ சவாய் ப்ரதாப் சிங் 1799ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.
பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மஹாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம். அவர்கள் இதிலிருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.
அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மஹால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு
ஆம்பர் ஃபோர்ட்
அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.
கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.
ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.
ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.
ஜெய்கர் ஃபோர்ட்
ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.
ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது; இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!
சிடி பாலஸ் (நகர அரண்மனை)
மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மஹால், சந்திர மஹால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.
ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான்
என்கின்றனர் பயணிகள்!
ஜந்தர் மந்தர்
திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல இயந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734ல் கட்டப்பட்டது.
எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!
பாபு பஜார்
ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது. இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 14
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS, HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, AJANTA, TAGORE, TORCH
–SUBHAM—
TAGS– PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS, HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, TAGORE, PARAMAHAMSA, HIMALAYAS
71.SUPPURATION AND SORES OF THE PENIS 6-30-168 லிங்கபாக – ஆண்குறியில் வீக்கம், புண்
72.CHRONIC ALCOHOLISM -SIX TYPES 6-24 குடி போதைக்கு அடிமை ஆதல் – ஆறுவகை உண்டு —மதத்யாய
73.DIABETES 2-4-44; 6-6-56 நீரிழிவு , சர்க்கரை வியாதி
74.SOFTENING AND DEGENERATION OF MUSCULAR TISSUES 1-20-14 மாம்சக்லேத- சதையிலுள்ள திசுக்கள் பலவீனம் அடைதல்
75.PSYCHIC DISORDERS 1-7-52 மனோவிகார – மனா உளைச்சல் முதலியன
76. POX 6-12-93 மசூரிக – அம்மை நோய்
77. URETHRITIS 1-20-14 சிறுநீரைக் கொண்டுவரும் குழாய்கள் வீங்குதல்; எரிச்சல் -மேத்ரபாக
78.CHRONIC ABORTION- 4-8-30 ம்ரித கர்ப்ப – அடிக்கடி குழந்தை இறந்து பிறத்தல் அல்லது கர்ப்பம் சிதைதல் ;
ம்ருத், ம்ரித என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களிலிருந்து மரணம் , மரித்தல் என்ற சொற்கள் வந்தன .
79. DUMBNESS 1-20-11 மூகத்வ – செவிட்டுத் தன்மை
80. ORAL DISEASES 6-26-19 வாயில் ஏற்படும் நோய்கள் – முகரோக
சஸ்ம்க்ருதத்துக்கு வாய் இல்லை ; தமிழுக்கு முகம் இல்லை என்று ஆன்றோர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. . ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் முகம் என்றால் வாய்; தமிழில் முகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே இன்று வரை பயன்படுத்துகிறோம் ; யாரும் மூஞ்சி என்று சொல்வதில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அருகில் ஒரு தீவாக உள்ள நாடுREPUBLIC OF CHINA/ TAIWAN தைவான் என்று அழைக்கப்படுகிறது ; அந்த நாடு சீனப் பழமொழிகள் சொல்லும் கதைகளை அடிக்கடி தபால்தலைகளாக வெளியிடுகிறது .
வீட்டையும் நேசி காகத்தையும் நேசி “love house and crow,” என்பது சீனப் பழமொழி ; இதன் பொருள் ஒருவரை விரும்பும்போது அவர்களிடத்தில் உள்ள குறைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும் காதலன், காதலிகளுக்கு இது ஒரு முக்கிய பாடம் ; கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதை இது வலியுறுத்துகிறது ஆங்கிலத்தில் என்னையும் விரும்பு, என் நாயையும் விரும்பு என்று சொல்லுவார்கள் .
****
பச்சை கல்லுக்கு ஒளியூட்ட செங்கலை கொடுத்தானாம்“offering bricks to elicit jade,” என்பது ஒரு சீனப்பமொழி.
இது தங்கத்தைக் கொடுத்து பித்தளை வாங்குவதற்குச் சமம் ; இதன் பின்னால் ஒரு சீனக்கதை உளது ஒரு பிரபல கவிஞர் இன்னும் ஒரு பெரியவர் கோவிலுக்கு வருவதை அறிந்து இரண்டு வரி கவிதையை சுவற்றில் எழுதினாராம்; அவர் எதிர்ப்பார்த்தது மீதி இரண்டு வரிகள் தன்னுடையதையும் மிஞ்சுவதாக இருக்கும் என்று . ஆனால் அவ்ருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது; அந்தப் பெரியவர் எழுதியது சோடை போனது அவர் பாரதி அல்லது காளிதாசனைப் போன்ற்வர் அல்ல. பாரதி சின்னப்பயல் என்று கவிதை எழுத்ச் சொன்ன காந்திமதி நாதனை பாரதி மட்டம் தட்டினார்; எப்படி? காந்தி மதி நாதனைப் பார் அதி (பாரதி) சின்னப்பயல் என்று!
அதேபோல கோபித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிய காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் இரண்டு வரி கவிதை எழுதி இதை பூர்த்தி செய்வோருக்குப் பரிசு என்றவுடன் காளிதாசன் அதை அற்புதமாகப் பூர்த்தி செய்தான்; உடனே காளிதாசன் இருக்குமிடத்தைப் போஜராஜன் கண்டு பிடித்தான் அப்படியெல்லாம் இல்லாமல் சொத்தைக் கவிதையை எழுதியதால் செங்கலை வைத்து பச்சைக் கல்லுக்கு மெருகு ஊட்டியது போல என்ற சீனப் பழமொழி எழுந்தது !
When the Tang dynasty poet Chang Jian learned that Zhao Gu was going to the Lingyan Temple in Suzhou, he wrote on the temple wall: “At this old temple beside the Guanwa Palace / The clouds over the watery expanses are many, and the visitors few.” His expectation was that Zhao would add the final two lines to the poem. Zhao did indeed add: “Upon hearing of spring’s arrival, my melancholy doubles / Amid hundreds of blooms, a monk returns.” Later generations felt that Chang Jian had “offered bricks to elicit jade”—and the expression came to describe the act of offering clumsy lines of poetry or unpolished efforts in the hope of eliciting outstanding work from another person.
****
நான்கு தபால் தலைகளை வெளியிட்ட தைவான் நாடு, நாலாவது அஞ்சல் தலைக்கான சீனக்கதையையும் வெளியிட்டது ; உண்மையைப் போலவே “true to life”என்பது அந்தப் பழமொழி. ஒரு சிந்தனையாளர் நன்றாக உறங்கினார்; அப்போது அவர் பட்டுப்பூச்சி பறப்பது போலக் கனவு கண்டார்; விழித்து எழுந்தவுடன் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் பட்டுபூச்சியிலிருந்து வந்தவனா அல்லது நான் நான்தானா என்று; ஏனெனில் அவரது கனவு அவ்வளவு தத்ரூபமானது; ஆகையால் ஏதெனும் ஒன்று உணமையைப் போலவே தோன்றினால் இந்தப் பழமொழியை சீனர்கள் சொல்லுவார்கள் .
****
கல்வி என்பது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயன்தருகிறது “Education benefits both students and teachers,”
என்பது ஒரு சீனப் பழமொழி
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலில் இதே கருத்து உள்ளது
हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदाஉप्य्
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
****
தமிழ்ப்பாடலிலும் இதே கருத்து உள்ளது
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீ-தமஸ்து
மா வித் விஷா வஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ॐ सह नाववतु ।
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
என்ற உபநிஷத் மந்த்ரத்தை குருகுலத்தில் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து சொல்லுவார்கள் ; இதிலும் இருவர் முன்னேற்றமும் வலியுறுத்தப்படுகிறது
பொருள்
நான் கற்கும் விஷயத்தில் இருவரும் ஒன்றாக முன்னேறுவோமாக;
இருவரும் அதை விருப்பத்தோடு படிப்போமாக;
இருவரும் முழு ஈடுபாட்டுடன் முழு சக்தியுடன் கற்போமாக;
இதன் மூலம் இருவரும் ஒளிமிக்க அறிவினை அடைவோமாக ;
வெறுப்பு என்பதே தோன்றாமலிருக்கட்டும் ;
எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எல்லோரிடத்திலும் அமைதி நிலவட்டும்!
****
இது போல இந்தியாவும் பழமொழித் தபால்தலைகளை வெளியிடலாம். பெரும்பாலான பழமொழிகள் தமிழ், இந்தி, சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளைத் தருகிறது.
பகவத் கீதை வரிகள், ராமாயண வரிகள், வந்தே மாதரம் வரிகளை இந்தியா தபால் தலைகளாக வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, அந்த நாட்டு ஜனாதிபதிகள் சொன்னதை- பொன்மொழிகளை — அஞ்சல்தலைகளாக வெளியிட்டுள்ளது; நாமும் ஆயிரக் கணக்கான சாது சந்யாசிகளின் பாடல் வரிகளை– பொன்மொழிகளை தபால் தலைகளாக வெளியிடலாமே!
4. True to Life (NT$8): Chuangzi was a thinker of the Warring States era. He once dreamt that he was a butterfly, flitting hither and thither. He completely forgot he was a person. Yet when he awoke, he found that he was still Chuangzi. The vividness of the butterfly made Chuangzi remark upon how true to life his dream was. He wondered: Am I a person who has awoken from a dream that I was a butterfly, or a butterfly dreaming that I am a person? Chuangzi’s phrase is now commonly used to describe something that is extremely vivid and lifelike.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்காலத் தலைநகரமான ஶ்ரீ நகரைப் பற்றி அனைவரும் கூறும் பிரபலமான புகழ் மொழிகள் இரண்டு உண்டு.
“அட கடவுளே! இனி சொர்க்கம் என்று ஒன்று இல்லை; இது தான் சொர்க்கமே!”
“பண்பாடு, இயற்கை அழகு, அமைதி ஆகிய அனைத்தும் கலந்த அற்புத இடம் ஶ்ரீ நகர் தான்!”
கிழக்கின் வெனிஸ் நகரம் (VENICE OF THE EAST ) என்று புகழப்படும் இதை அடைய ஜம்மு, மும்பை, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான வசதி உண்டு. ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் பல்வேறு இடங்களிலிருந்து இதை எளிதில் அடைய முடியும்!
அழகிய இமயமலை பின்னணியும் பிரம்மாண்டமான ஏரியும் அனைவரையும் இங்கு ஈர்க்கின்றன என்றால் அது மிகையல்ல!
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.
என்றாலும் முக்கியமான இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்..
சங்கராசார்யர் கோவில்
ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது ஶ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் சங்கராசார்யா மலை உச்சியில் உள்ளது.
பிரபல மன்னனான கல்ஹணர் காலத்திலிருந்து இது மிகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இதை அவர் கோபாத்ரி என்று அழைத்தார். சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு திரள்வர்.
தால் ஏரி
மிகவும் அழகிய தால் ஏரி ஶ்ரீ நகரின் முக்கிய ஈர்ப்பு மையமாகும். மிதக்கும் தோட்டங்களுக்கும் படகு வீடுகளுக்கும் இது மிகவும் புகழ் பெற்றது. பின்னணியில் மாபெரும் இமயமலை இருக்க இதன் அழகில் சொக்கிப் போகாதவர் இருக்கவே முடியாது.
ஏரியின் தூய்மையான நீரில் மலையின் பிரதிபலிப்பைக் காணலாம். இங்கு ஷிகாரா ரைட் எனப்படும் பாரம்பரிய படகு சவாரியை மெற்கொள்ளாதவர் இல்லை. சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள ஏரியில் அழகாகப் படகு சவாரி செய்தவாறு இயற்கையை அணுஅணுவாக ரசிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. குறைந்தபட்சம் 45 நிமிடங்களை எடுக்கும் இந்த சவாரிக்கு கட்டணம் உண்டு. ஒரு நாளில் எந்த நேரத்திலும் இந்த சவாரியை மேற்கொள்ளலாம்.
ஷாலிமார் பாக், – முகல் கார்டன்
முகலாய மன்னனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக அமைத்த தோட்டம் முகல் கார்டன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தோட்டங்கள், நீரூற்றுகள் மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன. பின்னால் உள்ள பிர்பஞ்சல் மலைத்தொடர் சரியான பின்னணியைத் தருகிறது. மலர்ந்து குலுங்கும் ஒளி வீசும் மலர்கள் மனதிற்கு இன்பத்தைத் தரும்.
நைகீன் ஏரி
நாகீன் ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த நைகீன் ஏரி பர்பத் மலையின் அடிவாரத்தில் வில்லோ மரங்களும் பாப்லர் மரங்களும் ஏரியைச் சூழ்ந்திருக்க பரந்திருக்கும் ஒரு ஏரியாகும், படகு வீடுகளும் ஷிகாரா படகுகளும் இங்கு உண்டு. இது தால் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. பரபரப்பில்லாமல் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இது.
ஹரி பர்பத்
ஹரி பர்பத் என்றால் மைனா குன்று என்று பொருள். ஹிந்து, முஸ்லீம்,, சீக்கியர் ஆகியோர் வழிபடுவதற்காகன் அநேக வழிபாட்டு இடங்கள் இங்கு உள்ளன.
இந்தக் குன்றின் மீதுகுள்ள துர்ரானி கோட்டையை அக்பர் 1590ல் கட்ட ஆரம்பித்தார். ஆனால் திட்டம் முழுவதுமாக முடியவில்லை. இப்போது நாம் காணும் கோட்டையை 1808ல் ஷூஜா ஷா துரானி என்பவர் கட்டி முடித்தார். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் உள்ள ஷாரிகா தேவி ஶ்ரீ நகரின் காவல் தெய்வமாக இருக்கிறார் என்பது ஐதீகம்.
துலிப் கார்டன்
இந்திரா காந்தி நினவாக இது ‘இந்திரா காந்தி நினைவக துலிப் கார்டன்’
என்றும் அழைக்கப்படுகிறது. ஜபர்வான் குன்றில் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களை இமயமலை பின்னணியோடு பார்த்து மகிழலாம், இந்த மலர்ப் படுக்கை மையத்தில் ஓய்வாக நடந்து செல்வதே மனதுக்கு இதம் தரும்.
துலிப் என்பது ஒருவகை தண்டுக் கிழங்கு கொண்ட காட்சிப் பூக்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இது லிலியாசே என்று அழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. காணக் கண் கொள்ளாக் காட்சி தரும்
60 வகைக்கும் மேற்பட்ட 15 லட்சம் துலிப் இங்கு உள்ளன.
பாரி மஹால்
தால் ஏரிக்குத் தென்மேற்கே அமைந்துள்ள பாரி மஹால் பெரிய தோட்டமாகும். க்விண்டிலான் என்று பிரசித்தி பெற்றிருக்கும் இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 400 அடி. அகலம் 205 அடி. பாரி மஹால் என்றால் தேவதைகளின் இல்லம் என்று பொருள். இது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிகோவினால் தனது ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். பழைய காலத்தில் இது ஒரு புத்த மடாலயமாக விளங்கியது. தாரா வானவியலில் ஆர்வம் கொண்டவர். வானவியல் மற்றும் ஜோதிடம் கற்பிக்கும் மையமாக இது முன்பு திகழ்ந்தது.
லால் சௌக்
இது சந்தடி நிறைத்த ஒரு பிரபலமான சந்தையாகும். ஏராளமான கடைகளில் விதவிதமான பொருள்களை வாங்கலாம். இந்தப் பகுதியில் ஒரு சுற்று சுற்றினாலே காஷ்மீர் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதால் பல நாட்டினரும் இங்கு சுற்றி வருவதைப் பார்க்கலாம்.
இன்னும் ஜாமா மசூதி, மகிழ்ச்சியின் தோட்டம் எனப்படும் நிஷாத் பூங்கா உள்ளிட்ட ஏராளமான இடங்கள் ஶ்ரீ நகரில் பார்ப்பதற்கு உள்ளன.
நதிகள் கீதம் பாட, மலைகள் முணுமுணுக்க, காற்று சிலுசிலுக்க சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Two years ago I posted here a lot of pictures of paintings from the famous Ramaswami temple at Kumbakonam. The idols in the Garbhagriha are as beautiful as the idols in Vaduvur and Mathuranthakam. Once you see them you would never forget the images or Lord Rama and his retinue
I made a very quick visit this time after having Darshan at Kumbeswarar Temple in March 2025. Though it was a very short visit, I couldn’t resist clicking with my Samsung Camera. This time I did not use my I pad.
I took the pictures on the wall and some sculptures. Since the paintings on the wall are in three rows, one must spend hours to take all the figures separately.
The temple must preserve the 500 year old paintings and publish them in a book which will be sold as hot cakes.
They have protected paintings of Anjaneya and Rama in a locked room. The temple must publish them. The department of archaeology can do this with the permission of the temple authorities.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 13
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
PART 13, INDIAN STAMPS,
Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day
–SUBHAM—
TAGS– PART 13, INDIAN STAMPS, Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day