49.ஹ்ரித் ரோக – இருதய நோய்கள் – ஐந்து வகை HEART DISEASE 1-17-6
50.ஹ்ரிம் மோஹ – சீரற்ற இருதயத்துடிப்புCARDIAC IRREGULARITY OR HEART BLOCK 1-20-11
ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து ஹார்ட் HEART என்ற ஆங்கிலச் சொல் வந்ததை அறிந்தால் இந்த நோய்களின் பெயர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் . உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லையே பயன்படுத்துவதால் இந்துக்கள்தான் மருத்துவத்தின் தந்தை என்பதையும் அறியலாம் .
51.இக்ஷுவாளிகரசமேக -கிளைகோசூரியா என்பது சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகும்.GLYCOSURIA 2-4-10
52.ஜலககர்தப- கிருமிகளால் சீழ்பிடித்து ஏற்படும் ஜுரம் FEVER DUE TO SUPPURATION 6-12-99
53.ஜானுபேத – கால் வளைவு, சின்னி நாய்-BOW LEGS 1-20-11
55.ஜடராக்கினிவிகார – ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வு – இதில் நான்கு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் MORBID APPETITE 3-6-12
56.ஜ்வர – காய்ச்சல் – இதில் எட்டு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் FEVER 6-3
57.கக்ஷ – அக்கி- 3 HERPES 1-20-14
58.கண்டு – உடலில் ஏற்படும் அரிப்பு PRURITUS 6-29-17
59.கர்ண ரோக – காது நோய்கள்DISEASES OF THE EAR 6-26-127
கர்ண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு காது என்பது பொருள்; இதை கர்ணன் கதை மூலம் எல்லோரும் அறிவார்கள். காதில் கவச குண்டலங்களுடன் பிறந்தவன் அவன் . அதாவது குந்தி தேவி அவனை குழந்தையாக ஆற்றில் ஒரு கூடையில் மிதக்கவிட்டபோது காதில் குண்டலங்களைப் போட்டு அவனை அனுப்பினாள்; யார் குழந்தையை எடுத்தாலும் அவர்கள் அந்தக் குழந்தையை பராமரிக்க பணம் தேவை அல்லவா ? அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஏழைத் தேரோட்டியின்கையில் அந்தக் கூடை குழந்தையுடன் அகப்பட்டது .
A – பதிர்யா – செவிட்டுத்தனமை DEAFNESS 6-26-128
B – கர்ண ஸ்போட்டை- காதுக்குள் வீக்கம்/ புண்INFLAMMATORY SWELLING INSIDE THE EAR 6-29-127
C- கர்ண ச்ரவ – காதுக்குள் சீழ் வடிதல் PUS DISCHARGE FROM THE EAR 6-26-127
D – புதிஸ்ரவண- உட்காதில் வீக்கம் – இதில் எட்டு வகைகள் உள்ளன SUPPURATION OF THE INNER EAR 6-26-127
60.காச – நிற்காத இருமல் – இதில் ஐந்து வகைகள் உள்ளனCHRONIC COUGH 6-18
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-3-25 கல்கிஆன்இதழில் பிரசுரமான சிறுகதை!
மாற்றி யோசித்தால்! (ள்) (ன்)
ச. நாகராஜன்
ஹால் நிரம்பி வழிந்தது.
வானதி பேச ஆரம்பித்தாள்.
“பண்பாடு பற்றி ஒரு பண் பாடு என்று சொன்னவுடன் அந்தப் பண் பாட நான் பட்ட பாடு பெரும்பாடு” என்ற அவளது பேச்சின் ஆரம்பத்தை அனைவரும் ரசித்தனர்.
“பண்பாடு சீரழியும் விதத்தால் மனமே
சஞ்சலம் நீ படாதே தினமே
அறிவியலும் ஆன்மீகமும் இணையட்டும்
அறிஞரெல்லாம் அதைப் போற்றிப் புகழட்டும்”
என்று இனிய குரலில் பாட ஆரம்பித்தாள் வானதி.
வரிசையாக பண்பாடு சிறக்க பாஸிடிவான வழிகளை அவள் பாடவே கூட்டம் ஆரவாரித்தது.
இலக்கியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவரான மணிசங்கருக்கு ஒரே சந்தோஷம். இறுதியாக நன்றியுரை சொல்ல வந்தவர் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்ட ‘ஏஐ க்ரேட்’ நிறுவனத்தின் நிறுவனர் உமாகாந்தனுக்கு நன்றி கூறி தம்பதி சகிதமாக வந்து பரிசு வழங்க மேடைக்கு வருமாறு அவரை அழைத்தார். அத்தோடு நிகழ்ச்சியில் பேச பலரையும் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கியச் செல்வர் மகாதேவனுக்கும் நன்றி கூறி அவரையும் மேடைக்கு அழைத்தார்.
பாஸிடிவ் சிந்தனையை வழங்கிய வானதிக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்ட போது அனைவரும் ஆரவாரித்தனர்.
உமாகாந்தனின் மனைவி வானதியைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
“நீ ஒரு நாள் என் வீட்டுக்கு வாயேன்” என்ற அவரது அன்பு அழைப்பைக் கேட்டு வானதி திகைத்துப் போனாள்.
பில்லியரான அந்தப் பணக்காரக் குடும்பம் எங்கே, தான் எங்கே – அவள் மலைத்தாள்.
“இவள் என் பெண் தான்” என்றார் இலக்கியச் செல்வர் மகாதேவன்.
பெரிய தோட்டத்தின் நடுவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பங்களாவைப் பார்த்து திகைத்தனர் வானதியின் பெற்றோரும், வானதியும்.
அன்போடு அவரை வரவேற்ற உமாகாந்தனும் அவர் மனைவியும் தங்கள் மகனான சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
“உங்கள் பேச்சு பிரமாதம்! பாஸிடிவ் சஜெஷன் இஸ் க்ரேட்” என்றான் சங்கர்.
வானதி வெட்கத்தால் சிவந்தாள்.
சற்று நேர உரையாடலில் இரு குடும்பங்களும் நெருக்கமாகி விட்டன.
“சாப்பிடலாமா” என்று விருந்துக்கு அழைக்கப்பட்ட போது பெரிய டைனிங் டேபிளையும் அதில் பரப்பப்பட்டிருந்த வெள்ளி பேஸின்களையும் தட்டுக்களையும் விதவிதமான உணவு வகைகளையும் பார்த்து மலைத்தது வானதியின் குடும்பம்.
எப்படி வெள்ளி ஸ்பூன்களையும் போர்க்குகளையும் கையாள்வது என்று யோசித்தாள் வானதி.
“ஒரு முக்கிய விஷயம்! என் பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் வானதியை கல்யாணுக்குத் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்றார் உமாகாந்தன்.
இதைக் கேட்ட மகாதேவன் திகைத்தார்.’இப்படி ஒரு பெரிய இடத்துச் சம்பந்தமா?
“ஓகே! முதலில் பையனும் பெண்ணும் பேசட்டும். அவர்கள் ஓகே என்றால் மீதியை நாம் பேசுவோம்” என்ற உமாகாந்தன், “கல்யாண்! நீ வேண்டுமானால் ஒரு சின்ன டிரைவுக்கு வானதியுடன் போய் விட்டு வாயேன்” என்றார்.
“வேண்டாம், வேண்டாம். மாடியே இருக்கிறது; அது போதும்” என்றான் கல்யாண்.
மேல்மாடிக்குச் சென்ற கல்யாண் வானதியைப் பார்த்து, “ ஐ லைக் யூ.
யுவர் பாசிடிவ் அப்ரோச் இஸ் ரியலி குட். இந்த மேரேஜ் ப்ரபோஸலுக்கு சம்மதமா?” என்றான்.
“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். உங்கள் குடும்பமோ பில்லியனர் குடும்பம், எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.” என்றாள் வானதி.
“ஓகே! நாளைக்கு ஆகாஷ் ரெஸ்டாரண்டில் சாயங்காலம் மீட் பண்ணுவோம். நீங்கள் முடிவைச் சொல்லலாம் என்றான் கல்யாண்.
பெற்றோர்கள் மறுநாள் மாலை வரை காத்திருக்கச் சம்மதித்தனர்.
ஆகாஷ் ரெஸ்டாரண்ட் நகரின் பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட். பல ஏசி ஹால்கள் உண்டு.
அதில் சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்தாள் வானதி. கல்யாண் காத்திருந்தான்.
“என்ன ஆர்டர் பண்ணலாம்?” கேட்டான் கல்யாண்.
பாஸந்தி, தோசை, காபி. லைட் டிபன் போதும் என்றாள் வானதி.
“என்ன முடிவு?”கல்யாண் ஆவலுடன் கேட்டான்.
வானதி மெதுவாகப் பேசினாள்: ”என்ன சொல்வது என்று தெரியவில்லை. பணக்காரக் குடும்பத்திற்கு நான் ஒத்துவருவேனா என்ற குழப்பம் இருக்கிறது” .
இதை அவள் சொல்லும் போதே எதிரிலிருந்த ஹாலிலிருந்து லவுட் ஸ்பீக்கரில் பெரிய குரல் ஒன்று ஒலித்தது.
“என்ன அங்கே நடக்கிறது? என்று வெயிட்டரிடம் கேட்டான் கல்யாண்.
“பல கம்ப்யூட்டர் கம்பெனிகளில் உள்ள டெக்னிகல் ஸ்டாபுக்கு மீட்டிங் சார்” என்றார் வெயிட்டர்.
எதிர் ஹாலிலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஆகவே நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டும். எதிரெதிர் சிந்தனைகளை ஒதுக்காதீர்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. பாஸிடிவாக மாற்றி யோசிப்பவரை உங்களுடன் இணைத்துக் கொண்டால் வாழ்வே செழிக்கும்”
இதைக் கேட்ட வானதியின் முகம் மலர்ந்தது. கல்யாண்,”ஆஹா! அருமையான யோசனை ஆல்டர்னேடிவ் திங்கிங்” என்று பேச்சைப் பாராட்டினான்.
“நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு சம்மதம். மாற்றி யோசித்தேன். கணப்பொழுதில் இப்படி முடிவெடுத்து விட்டேன். எப்போதும் ஏன் ஒருதலைப்பட்சமாக பயந்து கொண்டு சிந்தனை செய்ய வேண்டும். நடுத்தரக் குடும்பம் பணக்காரக் குடும்பத்தை இன்னும் செழிப்பாக ஆக்கக் கூடாதா என்ன?” என்றாள் வானதி.
“சூப்பர்! நானும் ஆல்டர்நேடிவ் திங்கிங் செய்து முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு நல்ல மாதிரியாக யோசனை கூறி எனக்கு ஆதரவு தந்து கம்பெனியையும் முன்னேற்ற ஒரு நல்ல பாஸிடிவ் திங்கர் லைஃப் பார்ட்னராகத் தேவை. எனக்கும் சம்மதம். இதோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்தியைச் சொல்லி விடுகிறேன்” என்றான் கல்யாண்.
“வானதி போனை எடுத்து, “நான் வீட்டிற்கு சற்று நேரத்தில் வந்து விடுவேன்” என்று சொன்ன போது, “அதற்கு அவசியமே இல்லை” என்று அடுத்த ஹாலிலிருந்து சொல்லிக் கொண்டே முன்னால் வந்தது வானதியின் குடும்பம். அதைத் தொடர்ந்து பின்னால் கல்யாண் குடும்பமும் வந்தது.
‘அட, நீங்கள் வீட்டில் அல்லவா இருப்பீர்கள் என்று நினைத்தேன்’ என்ற கல்யாணுக்கு பதிலாக அவனது பெற்றோர் ஹாஹா என்று சிரித்து “நாங்கள் இங்கே தான் காத்திருந்தோம்” என்றனர்.
“ஆல்டர்நேடிவ் திங்கிங்” என்று ஒரே சமயத்தில் அனைவரும் ஒரு மனதாகச் சொல்ல ஹாலே சிரிப்பில் மிதந்தது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 12
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI,
SANT RAVIDAS, LENIN, V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON
1969 STAMPS
–SUBHAM—
PART 12, INDIAN STAMPS, ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI, SANT RAVIDAS, LENIN, V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON , YEAR 1969
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 3
சங்கல்ப ஸூக்தம்
ஒளிப்பொருளான எந்த ஆன்மா விழிப்பு நிலையில் வெளியே செல்கிறதோ, அதுவே தூக்கத்தில் அப்படியே அகமுகமாகச் செல்கிறது. தொலைதூரங்களை எட்டுவதும், ஒளிக்கெல்லாம் ஒளியாய் இருப்பதும், ஒன்றெயானதுமான அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
1. அறிஞர்கள் வேள்விகளில் அபஸ் போன்ற கர்மங்களை எதனால் செய்கிறார்களோ, அறிவாளிகளின் பிரார்த்தனைகளில் எது முதன்மையானதோ, எது போற்றத் தக்கதோ, எது உயிர்களின் உள்ளே உறைகிறதோ அந்த ஆன்மா எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
2. எந்த ஆன்மா தன்னறிவு, ஞாபகசக்தி, மன உறுதி, ஆகியவற்றின் பிறப்பிடமோ, எந்த ஆன்மா உயிர்களில் அழிவற்ற ஒளியாக உள்ளதோ, எது இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
3. கழிந்தது, இருப்பது, வரப்போவது எல்லாம் எந்த அழிவற்ற ஆன்மாவால் அறியப்படுகிறதோ, வேள்வி செய்கிற எழுவரும் எதனால் வேள்வி பற்றி விரித்துரைக்கிறார்களோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
4. ஆரங்கள் தேர்ச்சக்கரத்தின் அச்சில் நிலைபெற்றிருப்பது போல், ரிக் சாம யஜுர் வேதங்கள் எதில் நிலைபெற்றுள்ளனவோ, மக்களின் மனம் எல்லாம் எதில் ஊடும்பாவும் போல் நிலைபெற்றுள்ளதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
5. நல்ல சாரதி குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், மனிதர்கள் கடிவாளத்தால் குதிரையை வழிநடத்துவதுபோல், எந்த ஆன்மா இதயத்தில் நிலைபெற்றிருந்து மனிதர்களை வழி நடத்துகிறதோ, எந்த ஆன்மா என்றும் இளமையானதோ, அனைத்திலும் வேகமானதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
Shiva Sankalpa Sukta forms the first 6 mantras of the 34 chapters of Vajasaneyi Samhita of Shukla Yajur Veda. It is also found in the Rig Veda Rudrashtadhyayi. Sankalpa means will, right intention, or good omen. Reciting the six mantras of Shiva Sankalpa for some time every day is considered a good method of stabilizing and controlling the mind.
May my mind be calm and focused Which while we wake soars into the heavens And even in sleep roams about The far-ranging one light among lights
May my mind be calm and focused With which the mindful initiate actions And the insightful perform rituals The unprecedented, mysterious being within all living beings
May my mind be calm and focused Which includes intuitive knowledge, consciousness, and mental stability That immortal inner light in all beings Without which no action can be performed
May my mind be calm and focused The immortal one by which all that has been, is now being, and will be in the future is grasped By which the seven priests extend and perform the selfless giving
May my mind be calm and focused In which the verses of the Vedas are fixed like spokes around the hub of a chariot wheel In which is interwoven the consciousness of all living beings
May my mind be calm and focused That which by mindfulness is controlled as a skillful charioteer controls horses Leading the powerful forces of the senses by their reigns Which is seated in the heart, though agile and speedy
1. That mind which wanders in the waking state as well as in sleep, the far-wanderer, that which is the one and only illuminator of knowledge, may that mind of mine have auspicious thoughts.
2. That mind, by the help of which men who are experts in a variety of knowledge perform sacred sacrificial fire ceremonies (Yajña), which is unique and is the inner power of all people, may that mind of mine have auspicious thoughts.
3. That mind which is embodied with knowledge, consciousness, and steadfastness, that which is the inner light and ambrosia (Amṛta) of the people, that without which no action can be performed, may that mind of mine have auspicious thoughts.
4. That immortal one with which the past, present, and future are grasped, that by which the sacred fire ritual is performed by the seven priests, may that mind of mine have auspicious thoughts.
5. That mind in which the knowledge of Ṛg, Sāma, and Yajur Vedas is placed like the spokes in a chariot wheel, which is intertwined with the minds of all people, may that mind of mine have auspicious thoughts.
6. That mind which leads men to discover their inner immortal self in the heart as well as a good charioteer guides the horses of the chariot, which is very fast, may that mind of mine have auspicious thoughts.
—-SUBHAM—-
TAGS-வேதத்தில் சைக்காலஜி, மன இயல், உள இயல் , மாமனோ தத்துவம் , யஜுர் வேதம், சிவ சங்கல்ப சூக்தம், part 3
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
19-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
மெடியோரா ( MATEORA)– கிரீஸின் மலை அடர்ந்த காடு!
ச. நாகராஜன்
கிரீஸ் தேசத்தின் வடக்கே தெஸாலி (THESSALY) சமவெளியில் பிரம்மாண்டமான 24 பாறைகள் தரையிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் காட்சி உலகினரை அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.
மழையாலும் காற்றாலும் காலம் காலமாகத் தொடர்ந்து அழகுறச் செதுக்கப்பட்ட இவற்றை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் மெடியோரா பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன!
மெடியோரா என்ற இந்தப் பகுதியில் தான் துறவிகள் தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் இடைவிடாது செய்து வந்தனர். பாறைகளைக் குடைந்தும் செதுக்கியும் தங்கள் மடாலயங்களை அவர்கள் இந்தப் பகுதியில் அமைத்துக் கொண்டனர்.
1800 அடி உயரத்தில் பாறைகளில் உள்ள இந்த மடாலயங்கள் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டவை. முக்கிய திருவிழா நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து துறவிகளும் பக்தர்களும் ஒருங்கிணைந்து பிரார்த்தனை செய்வது இங்கு வழக்கமானது!
இது ஏதன்ஸ் நகரத்தின் வடமேற்கே 234 மைல் தூரத்தில் உள்ளது.
மலைப்பாறை உயரத்தில் உள்ள மடாலயத்திற்குச் செல்ல நம்ப முடியாத அளவிலான பெரிய ஏணி ஒன்று இருந்தது. தங்களுக்கு அயலாரால் ஆபத்து வரும் என்று பயந்த காலத்தில் இந்த ஏணி அப்புறப்படுத்தப்பட்டு விடும்!
இவ்வளவு உயரத்திற்கு யார் தான் வரமுடியும்?
பெரிய மெடிரான் என்று கிரேக்க மொழியில் அழைக்கப்பட்ட இதற்கு ‘வானத்தில் உயரத்தில் உள்ளது’ என்று அர்த்தமாகும்.
மணல்பாறைகளாலும் கருங்கற்களாலும் சேர்ந்து உருவான கடினமான இந்தப் பாறைகள் ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் உருவாகி இருக்க வேண்டும் என்பது புவியியல் வல்லுநர்களின் கணிப்பு.
கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹெரரெடோடஸ் கடல், நிலத்தில் புகுந்து அமைக்கப்பட்ட பகுதி தெஸ்ஸாலி என்று அங்கிருந்த பூர்வ குடியினர் நம்பியதாக தனது ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடுகிறார்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராபர்ட் கர்ஸான் என்ற ஐரோப்பிய பயணி இங்கு வந்து மடாலயங்களையும் வனப்பகுதியையும் பாறைகளையும் பார்த்து அசந்து போனார்.
பிரளயத்திலும், பூகம்பத்திலும் தப்பிப் பிழைத்து ஓரமாக வந்து ஒதுங்கிய பாறைகளோ இவைகள் என்று அவர் வியந்தார்.
1896ம் ஆண்டு இங்கு வந்த ஒரு ரஷ்ய யாத்ரீகர் உச்சியை அடைய கயிறில் ஏற முயன்றார். அங்கும் இங்கும் கயிறு ஆட ஒரு வழியாக உச்சியை அடைந்த கதையை மிக மோசமான அனுபவம் என்று வர்ணிக்கிறார்! “பயந்து நடுநடுங்கிப் போன நான் எனது கண்களை மூடிக் கொண்டேன்” என்று அவர் விவரித்தார்.
13 முதல் 16ம் நூற்றாண்டு முடிய 24 மடாலயங்கள் இங்கு அமைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து இன்றும் நன்கு இயங்குகின்றன!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த அதிசய இடம் பற்றிக் கேள்விப்பட்ட உல்லாசப் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் வந்து குவிய ஆரம்பித்தனர்.
தனிமையை விரும்பி இங்கு வந்த துறவிகள் இதனால் நொந்து போய் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர்.
1517ல் தியோபனஸ் மற்றும் நெக்டோரியோஸ் என்ற இரு சகோதரர்களால் கட்டப்பட்ட வர்லாம் மடாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற மடாலயம் ஆகும். பாறையைக் குடைந்து 195 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறி மடாலயத்தை அடையலாம்.
நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இதில் ஆனந்தமாக வழிபாடு நடத்த இன்றும் ஏராளமானோர் வருகின்றனர்.
அதி உயரத்தில் வித்தியாசமான இடத்தில் வழிபாடு நடத்தப்படும் மெடியோரா உலகின் அதிசயமான இடம் தான்!
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலில் காணப்படும் நோய்களையும் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் கீழே கொடுத்துள்ளேன் ; இந்தியாவில் வானவியல் துவங்கி பிராணியியல்வரை ASTRONOMY TO ZOOLOGY ;A TO Z எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; அந்த மொழியின் நுணுக்கங்களை, நெளிவு சுளிவுகளை அறிந்தோர் எழுதிய நூல்களையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கற்பது மிகவும் அவசியம் ; மேலும் இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதே ஸம்ஸ்க்ருதச் சொற்களோ அல்லது அதைத் தழுவிய சொற்களோ புழக்கத்தில் உள்ளன ; ஸம்ஸ்க்ருதத்தை அறிந்தால் அவர்களுடனும் பேச, பழக முடியும்.
எடுத்துக்காட்டாக நேத்ரம், நயனம் என்றால் கண் , சிரஸ் என்றால் தலை, ரோக, வியாதி என்றால் நோய் என்ற சொற்களை நாம் அறிவோம் ; இவைகளைத் தெரிந்து கொண்டால் பல சம்ஸ்க்ருத சொற்களை அறியலாம் .
இதோ நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–
தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்
1.அதி ஜிஹ்வா 6-12-77 – ABCESS UNDER THE TONGUE, நாக்கின் கீழ் புண், ரத்தம் கசியும் கொப்புளம்.
காமாட்சி, மீனாட்சி விசாலாட்சி, நீலாயதாட்சி போன்ற அம்மன் பெயர்களில் அக்ஷி என்பது கண் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும் . இங்கு அக்ஷியில் பேதம்/ வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது.
5.அக்ஷிரோக 6-26-130- OPTHALMITIS கண் நோய்கள்
96 வகை கண் நோய்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ரிக் வேதத்தில் வரும் ஶ்ரத்தா FAITH சூக்தமும் யஜுர்வேத வாஜசநேயி சம்ஹிதையில் வரும் சிவ சங்கல்ப சூக்தமும் வாழ்க்கையில் நம்பிக்கைFAITH என்பது எவ்வளவு முக்கியம் என்று காட்டுகின்றன.
நமக்கு நாமே மனதில் AUTO SUGGESTION/ ஆட்டோசஜ்ஜஷன் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டால், அது வெற்றியைத் தரும்
என் தலை முடி விழுந்துகொண்டே இருக்கிறதே ! ஐயோ நான் என்ன செய்வேன்? என்று பெண்கள் சொல்லக்கூடாது
அட! என் அழகான தலை முடி இதை விட நீண்டு அழகாக வளரும் என்று சொல்லிக்கொண்டே தலையில் தைலத்ததைத் தடவினால் அது நீண்டு வளரும்! இதை தனக்குத்தானே போதித்தல் AUTO SUGGESTION /ஆட்டோசஜ்ஜஷன் என்று மன இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிராமண சிறுவர்கள், கல்யாணம் ஆவதற்கு முன்னர் தினமும் சமிதாதானம் என்று சொல்லி தீயில் அரசங்குச்சியைப் போட்டு சொல்லும் மந்திரங்களில் இது வருகிறது ; நீ ஓஜஸ், தேஜஸ் வர்சஸ் உள்ளவன்; மேதாவி எனக்கும் அதைத் தருவாயாக என்று தினமும் சொல்லுவார்கள் சந்தியா வந்தனத்திலும் காயத்ரீ தேவியை இப்படிப் புகழ்ந்து இருதயத்துக்குள் ஆவாஹனம் செய்வார்கள் இதனால் அவர்களுக்கு முகத்தில் ஒளி /பிரகாசம்/ தேஜஸ் பெருகும்.
மருத்துவர்களிடையே மிகவும் பிரபலமானது பிளாசிபோ எபெக்ட் .PLACEBO EFFECT அதாவது போலி மாத்திரைகளையும் உண்மை மாத்திரைகளையும் நோயாளிகளுக்கு கொடுத்து அதன் பலனை அறிவார்கள்; யாருக்கு எதைக்கொடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இதைச் செய்வார்கள்; பல ஆராய்ச்சிகளில் போலி மாத்திரை சாப்பிட்ட நோயாளிகளும் குணம் அடைந்துள்ளனர்; இதற்கு நம்பிக்கையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நம்பிக்கை விஷயத்தை நமது மருத்துவ நூல்களும் வேத இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் சொல்கின்றன . சுருங்கச் சொன்னால் மேலை நாட்டு மனோ தத்துவ நிபுணர்கள் புதுப்புது சொற்களை பயன்படுத்துகின்றனர் இவை எல்லாம் குரு குல வாச மந்திரங்களில் மாணவர்களுக்கே தெரிந்த விஷயங்கள்தான் !
CHILD PSYCHOLOGY, EDUCATIONAL PSYCHOLOGY, NEURO PSYCHOLOGY, CRIMINAL PSYCHOLOGY, PARA PSYCHOLOGY, ORGANISATIONAL PSYCHOLOGY, COMMERCIAL PSYCHOLOGY, சைல்ட் சைக்காலஜி எஜூ கேஷனல், ஆர்கனைசேஷனல், கமர்ஷியல், நியூரோ, பாரா, க்ரீமினல் சைக்காலஜி என்றெல்லாம் மன இயல் துறை கிளைவிட்டுப் போய்விட்டது! அவர்கள் INSIGHT THERAPY, இன்சைட் தெரபி, ஸெல்ப் பியூல்பில்லிங் பிராப்பசிSELF FULFILLING PROPHESIES
, ஹ்யுமன்ஸ்டிக் ட்ரீட்மெண்ட்HUMANISTIC TREATMENT , பிளாசிபோ எபெக்ட், ஆட்டோசஜ்ஜஷன் எம்பதி, சிம்பதி EMPATHY SYMPATHY என்றெல்லாம் புதுப்புது சொற்களை சொல்லி நமது மந்திரங்களில் சொல்லும் விஷயத்தையே சொல்கின்றனர்; அவர்கள் புதிதாக எதைச் சொன்னாலும் அவை இந்துக்களின் அன்றாட செயல்களில் வேண்டுதல்களில் இருப்பதைக் காணலாம்; வாழ்க்கை எனது சகடம்/ சக்கரம் பன்றது; வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் என்று சம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் தமிழ்ப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன. ஆனால் தோல்வியைக் கண்டு துவள்பவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கே செல்வதை பத்திரிக்கையில் படிக்கிறோம். தற்கால சைக்காலஜி பத்திரிகைகளில் இது ஒரு முக்கிய விஷயமாக அலசப்படுகிறது. ஆனால் மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதம் இந்தத் தலைப்பினை எடுத்துக்கொண்டு நம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் என்று காட்டுகிறது.நம்பிக்கை என்று சொல்லும்போது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; தன் மீது தனக்கு நம்பிக்கை வேண்டும்; செய்யும் தொழிலில், பணியில் நம்பிக்கை வேண்டும்
இதை பாரதியார் ஒரே வரியில் சொல்லிவிட்டார் — நம்பினர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்று; பகவத் கீதையில் கிருஷ்ணனும் ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறார் .श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥– B.G.4-39
எவரொருவர் ஆழமான நம்பிக்கையுடன் தங்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்த பழகுகிறார்களோ அவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள். இத்தகைய ஆழ்நிலை அறிவின் மூலம், அவர்கள் விரைவில் நிரந்தரமான உயர்ந்த அமைதியை அடைகிறார்கள்.
ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பரஹ ஸந்யதேந்த்ரியஹ |
ஞானம் லப்த்வா பராம் ஶான்திமசிரேணாதகச்சதி ||4-39||
****
ச்ரத்தா ஸூக்தம் – ரிக் வேதம் 10.151
இப்போது ரிக் வேத சூக்தத்தைக் காண்போம் :
சிரத்தை என்றால் நம்பிக்கை. அது நம்மிடம் வருமாறு பிரார்த்திக்கிறது இந்த ஸூக்தம்.
வேள்வித்தீ சிரத்தையால் வளர்க்கப்படுகிறது. ஆஹுதி சிரத்தையால் அளிக்கப்படுகிறது. இறைவனின் தலையில் இருக்கின்ற சிரத்தையைப் பாடல்களால் போற்றுகிறோம். 1
ஓ சிரத்தையே, கொடுப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. கொடுக்க நினைப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. வேள்வி செய்பவர்களின் விருப்பங்களை நான் சொன்னதுபோல் செய்து நிறைவேற்று. 2
பயங்கரமான அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்கள் எப்படி சிரத்தையைக் கைக்கொண்டு போரிட்டார்களோ அதுபோல், வேள்வி செய்பவர்களின் ஆசைகளை எங்களிடம் தோன்றுகின்ற எண்ணங்கள் போல் 3 நிறைவேற்றுவாய்.
தேவர்கள், மனிதர்கள், வாயுகோபர்கள் (வாயுவால் காப்பாற்றப்படுபவர்கள்) எல்லாரும் சிரத்தையை வழிபடுகிறார்கள். இதய தாகத்தின் வாயிலாகவே சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் பெறப்படுகிறது. 4
சிரத்தையைக் காலையில் வழிபடுவோம்.நண்பகலில் வழிபடுவோம். சூரியன் கீழே இறங்கி மறையும்போது வழிபடுவோம். சிரத்தையே எங்களுக்கு சிரத்தையைத் தருவாய். 5
பொருள்:- ஏனையோருக்கு சமாதி என்னும் உயர்நிலை நம்பிக்கை சக்தி, நினைவாற்றல், மனதைக் குவியவைக்கும் / ஒருமுகப்படுத்தும் திறமை, விவேகம் ஆகியவற்றால் கிடைக்கிறது .
இந்துக்கள் எந்த ஒரு சடங்கினையும் செய்வதற்கு முன்பாக இட து கையின் மேல் வலது கையை வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வார்கள் ; இதன் பொருள் இப்பொழுது நான் இந்த நோக்கத்துக்காக இந்தச் சடங்கினைச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளேன் என்று சொல்லிவிட்டு கைகளைக் கூப்பிக்கொண்டு பணியைத் துவங்குவார்கள் இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது; பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் இன்றும் இதை நாள்தோறும் செய்கின்றனர் ஆகவே எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னர் குறிக்கோள் என்ன என்பதை அறிந்து நம்பிக்கையுனும் திட உறுதியுடனும் செய்ய வேண்டும் அப்படி சங்கல்பம் செய்கையில் மோதிர விரலில் தர்ப்பைப் புல்லால் ஆன பவித்ரம் என்னும் மோதிரத்தை அணிந்து கொள்ளுவார்கள் ஒரு பணி, பல மணி நேரம் நடந்தாலும் கூட அது மோதிரவிரலில் இருக்கும்; பணி முடிந்தவுடன் அதை அவிழ்த்துப் போடுவார்கள்; இது மனதை ஒரே பணியில் ஒருமுகப்படுத்தும் சைக்காலஜி தந்திரம் ஆகும்.
****
மந்திரமும் மொழிபெயர்ப்பும் ராமகிருஷ்ண மடத்தின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது; ஆங்கிலத்தில் படித்தால் சிலருக்கு நன்றாக விளங்கும் என்பதால் இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் வேறு வேறு வெப்சைட்டுகளிலிருந்து கொடுக்கிறேன்.
to be continued…………………………………..
—-SUBHAM—-
TAGS- வேதத்தில் சைக்காலஜி, மனோதத்துவ சாஸ்திரம் – PART 2 , ச்ரத்தா சூக்தம், சிவ சங்கல்ப சூக்தம்