என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் ராமர் மருகாந்தாரத்திற்கு அளித்த வரம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
லங்கையை அடைவதற்காக வந்த ஶ்ரீ ராமர் சமுத்திரராஜனை வழி விடுமாறு வேண்டினார். ஆனால் சமுத்திரராஜன் வழி விடவில்லை.
இதனால் வெகுண்ட ராமர் தனது அஸ்திரத்தில் பிரம்மாஸ்திரத்திரத்தினால் பாணத்தை அபிமந்திரித்து இழுக்கலானார். உடனே உலகமே இருண்டது. புயல்காற்று அடிக்கத் தொடங்கியது. மின்னல்கள் தோன்றி நெருப்பைக் கக்கின. உடனே சமுத்திரராஜன் ஶ்ரீ ராமர் முன் கை கூப்பியவாறே வந்து வணங்கி ஒரு விண்ணப்பத்தைச் செய்தான்.
“நான் தாண்ட முடியாதவன். அதுவே என் இயற்கைக் குணம். என்றாலும் நீங்கள் சமுத்திரத்தைக் கடக்கும் விஷயத்தில் ஒரு வழி செய்வேன்” என்று உறுதி கூறினான்.
ராமர், “தொடுத்து விட்ட பாணமானது வீணாகாதது. ஆகவே இது எந்த இடத்தில் வீழ்த்தப்பட வேண்டும்” என்று சமுத்திரராஜனைக் கேட்க, அவன், “ வடக்கில் துருமசூல்யம் எனப் பெயர் பூண்ட என்னுடைய தேசத்தை பாபிகள் ஆக்கிரமித்திருக்கின்றனர். அவர்கள் மீது இந்த பாணமானது செலுத்தப்படட்டும்” என்று கூறினான்.
உடனே ராமரும் அங்கு பாணத்தை விடுத்தார். அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது. பாணத்தால் பூமி பிளக்கப்படவே அங்கு ஜலமானது பொங்கி வந்தது. அது விரண கூபம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது.
அப்போது ராமர் மருகாந்தாரத்திற்கு ஒரு வரத்தை அளித்தார்.
பஷவ்யஸ்சால்பரோகஸ்ச பலமூலரஸாயுத: |
பஹுஸ்நேஹோ பஹுக்ஷீரசுகந்திவிர்விதௌஷத: ||
ஏவமேதௌர்குணைர்யுக்தோ பஹுபி: சததம் மரு: |
ராமஸ்ய வரதானஸ்ச சிவ: பன்யா பபூவ ஹ |\
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 41,42
ராமஸ்ய – ஶ்ரீ ராமரது
வரதானாத் – வரம் பெற்றதனாலேயே
மரு: – மருகாந்தாரமானது
பஷவ்ய ச – பசுக்களுக்கு நன்மை பயப்பதாயும்
அல்ப ரோக: ச- வியாதி என்பதே அபூர்வமாய் விளங்குகிறதாயும்
பலமூலரஸாயுத: – கனி, கிழங்கு, தேன் இவைகள் நிரம்பியதாயும்
பஹுஸ்த்ரேஹ: – ஏராளமான நெய் உடையதாயும்
பஹுக்ஷீர சுகந்தித: – ஏராளமான பாலை உடையதாயும்,
நறுமணங்களை உடையதாயும்
விவிதௌஷத: – பல வகை ஔஷதிகளை உடையதாயும்
ஏவம் – இப்படியாய்
எதௌ – மேற்கண்ட
பஹுபி: குணை: – பல நற்குணங்களால்
சததம் – எப்போதும்
யுக்தஸ் ச – விளங்குகிறதாய்
சிவ: பந்தா: – மங்களகரமான இடமாக
பபூவ ஹ – ஆயிற்று.
இப்படியாக மருகாந்தாரத்திற்கு ராமர் அளித்த வரம் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் காண்கிறோம்.
சமுத்திரராஜன் நளனை சேது அமைக்க உதவி செய்வான் என்று கூற நளனும் சேது அமைக்க உதவினான்.
சேது அமைக்கப்பட்டது. ராமரும் கடலை சேது வழியே தாண்டினார்.
Date uploaded in Sydney, Australia – 24 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia -Part 54; One Thousand Interesting Facts -Part 54
Item 387 Valmiki Echo
In Puranānūru verse 34, Poet Ālathūr Kizhār said………………..
“They say that even those who are not righteous and chop off the udders of cows, or abort the fetuses of women wearing fine ornaments or who harm their parents, may atone for their evil deeds. But if someone ruined the kindness done to them even if the earth moved, there is no forgiveness for that, say the righteous books”.
These lines are adapted from Valmiki Ramayana 4-34-12. This is in Panchatantra and Mahabharata as well.
Valmiki Ramayana sloka 4-34-12
ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा। निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।। (Valmiki Ramayana, 4-34-12)
go ghne ca eva suraape ca caure bhagna vrate tathaa | niShkR^itir vihitaa sadbhiH kR^itaghne na asti niShkR^itiH || 4-34-12
12. go ghne = in respect of – cow, slayers; suraape ca eva = liquor-drinkers, also, thus; caure = for thieves; tathaa = likewise; bhagna vrate = infringers, of solemnity; sadbhiH niSkR^itiH vihitaa = by savants, atonement, ordained; kR^ita ghne niSkR^itiH na asti = for treacherous one, atonement, not, available.
” ‘The savants have ordained atonement for slayers of cows, for drinkers of liquors, thus for thieves and infringers of solemnity, but no atonement is available to a treacherous person. [4-34-12]
Valluvar also said in his Tirukkural
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(குறள் 110 )
One may slain every goodness and yet escape,
But no escape for one who slain gratitude.
***
Item 388 Non Veg. Food Items
Tamil bards and kings used lot of non-vegetarian food ; Here Hare meat is referred to.
wealth to bards who utter sweet words and eat huge balls of rich, cooked rice mixed with honey and millet grown in dry fields, that are as large as the eggs of pigeons, with cooked hare meat.”
***
Item 389 Monsoon and Kalidasa Echo
Kalidasa’ Meghadutam is the first travelogue in the world; he traced also the course of South West Monsoon progressing towards the Himalaya. Here poet Ālathūr Kizhār sang about the East wind (Kondal in Tamil) blowing towards the Himalaya.
***
Item 390 Rain Drops Simile
Hindu poets use the simile of countless rain drops or the uncountable sand particles when they wish someone a long life.
May you live for more years than the many raindrops showered by large clouds that that come with the eastern wind and rumble sweetly in the Himalayas, because of the good deeds that noble people have done in this world!
***
Item 391 Sanskrit words
Brahmins do Sandhya (Vandanam) three times a day.
That is referred to as ANTHI here, because Tolkappiam banned SA in Tamil as initial letter
காலை அந்தியும், மாலை அந்தியும், Pratha Sandhya and Sayam Sandhya are dome by Brahmins everyday.
***
Item 392 Dravidian Corruption
Purananuru is corrupted by the Davidians in many places. One of the places is here. Instaed of Brahmins in the old boos in the libraries they replaced Gurvar (Guru)
(குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,)
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்,
(Old Puram Books say Paarppaar/Brahmins)
But all the lines are from the Hindu Smritis (Law Books of Hindus)
Brahmahaththi (Brahmin murder)
Brunu haththi ( abortion done by anyone)
Guru Nindha ( Insulting Guru is one of the Pancha Maha Patakas)
Go Haththi (Cow murder) it is in all the Tamil and Sanskrit Inscriptions as well as all Smritis of Hindus
Now the BJP State Governments in India banned Go Haththi (Killing Cows)
***
Item 393
Hindus believe the rains will pour down even if there is one good person in the city.
இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண்டாயின், 20
Tamil poetess Avvaiyar says it in one of her verses.
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை
When one irrigates the field that benefits not only the pady crops but also the grass there, the rain fall happens for one good person in the town (that benefits others too)
இதோ வள்ளூவன் எழுதியகுறள்:–
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் ‘பெய்’ என்றால் மழை பெய்யும்..
மநு நீதி நூலிலும் (9-247) நல்ல மன்னவன் ஆட்சியில் பருவ மழை தவறாது என்கிறார்.
9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்–குறள் 559
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
xxx
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு–குறள் 545
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
***
Item 395 Earthquake
நிலம் புடை பெயர்வதாயினும்
Even if the earth moved – shows Tamil poets knew about h earth quakes that were happening in the northern parts of India.
***
Puranānūru 34, Poet Ālathūr Kizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan
1 They say that even those who are not righteous and chop off the udders of cows, or abort the fetuses of women wearing fine ornaments or who harm their parents, may atone for their evil deeds. But if someone ruined the kindness done to them even if the earth moved, there is no forgiveness for that, say the righteous books.
2
O husband of a woman with fine jewels! May the many rays of the sun no longer rise for me, unless I sing of your proud, strong effort, every morning and evening, singing, “May he live long, our king Valavan, who gives with an open mind abundant wealth to bards who utter sweet words and eat huge balls of rich, cooked rice mixed with honey and millet grown in dry fields, that are as large as the eggs of pigeons, with cooked hare meat.”
3
O Greatness, I am a humble man! May you live for more years than the many raindrops showered by large clouds that that come with the eastern wind and rumble sweetly in the Himalayas, because of the good deeds that noble people have done in this world!
***
Tamil Verse in full
புறநானூறு34, பாடியவர்: ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், திணை:பாடாண், துறை: இயன் மொழி
1 ‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், (குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,)
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்,
(Old Puram Books say Paarppaar/Brahmins)
GURAVAR is wrongly interpreted as Parents. It is GURU/Teacher
2 ‘காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக், 10 குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15 எங்கோன் வளவன் வாழ்க என்று, நின்
3 பீடுகெழு நோன் தாள் பாடேன் ஆயின், படுபு அறியலனே பல் கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெரும இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண்டாயின், 20 இமயத்து ஈண்டி இன் குரல் பயிற்றிக் கொண்டல் மா மழை பொழிந்த நுண் பல் துளியினும் வாழிய, பலவே.
***
Item 396 Three Kingdoms (Puranānūru 35)
From the ancient days only three kingdoms- Chera, Choza, Pandya Kingdoms were recognised as the original rulers. This shows that Tamils were well organised
***
Item 397 Venus and Rain (Puranānūru 35)
Forecast of rains was based on the movement of the planet Venus. At the end of Purananuru all Venus poems are placed together. So this is NOT the only reference to Venus and rains. So far we have no scientific evidence to this belief. Further research is required
***
Item 398
Importance of Farming
Here in the verse Puram 35 the poet advises the king to focus his attention on cultivation and irrigation. We have proof that Tamil kings like Karikalan built dams for irrigation.
***
Item 399 (Puranānūru 35)
Another advice by the poet is
Don’t listen to useless words.
If you really understand this, you will not listen to uselesswords that are uttered by slanderers! If you take care of farmers who work with their oxen and all the other communities, even your enemies will praise your feet!
Tiruvalluvar also emphasized the importance of Agriculture in ten couplets
Farmers are the linchpin of the world For they support all others who cannot till.
They only live who live by the plough. The rest must stoop and trail behind.
Those who eat what their hands produce Neither beg nor refuse a beggar.
Mother Earth laughs at the sight of those Who remain idle pleading poverty.
****
Puranānūru 35, Poet Vellaikudi Nākanār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan
1
In this dense world where winds cannot penetrate, decorated with the sky, with huge ocean as its limits, among the three who rule over the cool Thamizh land with roaring drums and armies, your royalty alone is true royalty! O greatness!
2
Even if the moving sun’s rays appear on four sides, even if Venus moves to the south, your country alone is truly a country where lovely, cool Kāviri flows through many canals and feeds the land, and appearing like spears, flowers of the sugarcanes with swaying nodes sway!
O very proud king of a greatly prosperous country! I will tell you something that concerns you! Listen to me! When one rules with a perfect scepter like righteousness itself is ruling, the poor receive showers when they ask for drops of rain. Is your wide umbrella, which touches the sky and blinds the eyes with its brightness, a shield against the sun, like a huge, round cloud in the sky? No! O Valavan with sharp spears! It is a shield for the suffering citizens!
On the wide battlefield where elephants lie scattered like pieces of young palmyra tree trunks, your army withstands the onslaught of attacking forces, and cheers as it retreats, its victories rising from what grows inthe furrows dug by plows.
3
If the rains should fail, if harvests shrink, and if people do deeds that are not natural, those in this vast world blame the kings. If you really understand this, you will not listen to uselesswords that are uttered by slanderers! If you take care of farmers who work with their oxen and all the other communities, even your enemies will praise your feet!
நளி இரு முந்நீர் ஏணியாக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானை மூவர் உள்ளும், அரசு எனப்படுவது நினதே பெரும! 5
2 அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத், தோடு கொள் வேலின் தோற்றம் போல ஆடு கண் கரும்பின் வெண்பூ நுடங்கும் 10 நாடு எனப்படுவது நினதே அத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! நினவ கூறுவல் எனவ கேண்மதி!
ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக.
வள்ளுவர் கூறுகிறார்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார்.
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான். எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.
அக்ரே வன்ஹிஹி ப்ருஷ்டே பானுஹு
ராத்ரௌ சுபுக சமர்ப்பிதஜானுஹு
கரதலபிக்ஷஸ்தருதலவாசஹ
ததபி ந முஞ்சத்யாஷாபாஷஹ
துறவியாய் வெயிலில் குளிர்காய்ந்திருப்பார்;
உறங்கிட முடங்குவார் காட்டாந்தரையில் ;
கரமேந்தி உணவு; மரத்தடி வாழ்க்கை;
இருப்பினும் துறந்திலை பலவித வேட்கை.
***
பிரம்மா மீது கண்டனம்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் அதிக ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவது பிரம்மாதான் . பிரணவத்தின் பொருள் தெரியாததால் குட்டுப்பட்டார்; சிறைப்பாட்டார்; ஐந்து முகங்களில் ஒன்றினை இழந்து நான்முகன் ஆனார்; வள்ளுவனோ பிரம்மா அழியட்டும் என்று சபிக்கிறார். அருணகிரியும் விடவில்லை பிரம்மாவை !
இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல்………………….
* நீதியற்ற வேதன் – தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.
பிரம்மா மீது வள்ளுவர் சாபம்!
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்- குறள் 1062
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
ஞாலா மேலா வேதா போதா … பூமியில் மேம்பட்டு நிற்பவனே,
பிரமனுக்கு போதித்தவனே,
நாதா சோதிக் கிரியோனே … நாதனே, ஜோதி மலையாகிய
அருணாசலப் பிரானே,
ஞான ஆசார வான் ஆள் கோனே … ஞான மார்க்கத்தில்
முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே,
நானா வேதப் பொருளோனே … பல வகையான வேதங்களுக்கும்
உட் பொருளானவனே,
வேலா பாலா சீல ஆகாரா … வேலனே, பரமசிவ பாலனே,
பரிசுத்த வடிவனே,
வேளே வேடக் கொடி கோவே … செவ்வேளே, கொடி போன்ற
வேடப் பெண் வள்ளியின் மணவாளனே,
வீர ஆதாரா ஆறு ஆதாரா … வீரத்துக்கு ஆதாரமானவனே,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே,
வீரா வீரப் பெருமாளே. … வீரனே, வீரமுள்ள பெருமாளே.
***
நான் கோமாளி, ஏமாளி, கபோதி, ஊதாரி,முழு முட்டாள்!
புலையனான மாவீனன் … கீழ்மகனாக மிகவும் இழிந்தவன்,
வினையிலேகு மாபாதன் … தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன்,
பொறையிலாத கோபீகன் … பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன்
முழுமூடன் புகழி லாத தாமீகன் … முழு முட்டாள், புகழில்லாத
வெறும் டாம்பீகன்,
அறிவிலாத காபோதி … அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக்
கபோதி,
பொறிகளோடி போய்வீழும் அதிசூதன் … ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன்,
நிலையிலாத கோமாளி … ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,
கொடையி லாத ஊதாரி … ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,
நெறியிலாத ஏமாளி … நல்லொழுக்கம் இல்லாத பேதை,
குலபாதன் … நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் … உன்
திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல்
நினையுமாறு நீமேவி யருள்வாயே … நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக.
***
நான் ஒரு முட்டாளுங்க நல்லாப் படிச்சவங்க நாலு பேரு என்ற திரைப்படப் பாடலில் நகைச் சுவை நடிகர் சந்திரபாபுவும் இதை எதிரொலிக்கிறார் :
நான் ஒரு முட்டாளுங்க!
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ.ஏ.ஏ கைதே.. டாய்
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க
நான் ஒரு முட்டாளுங்க
கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டுபோறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க
நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் என்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
திரைப்படம்: சகோதரி: இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: ஆர். சுதர்சனம் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஆண்டு: 1959
***
சோமுகன் கதை
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக
சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ்
பெருமாளே. … பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்*
மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி
நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து
வீற்றிருக்கும் பெருமாளே.
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.
***
கோடி நோய்கள் நீங்கி சிவஞான சித்தி கொடு
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி … வலிப்பு நோய்,
பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண்,
வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் … உடல் இளைப்பு, வயிற்று
உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,
மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு … மிக்க நீரிழிவு,
மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,
களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி … அயர்ச்சிதரும்
மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான
சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை … சீறி எழும்
நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்
தெளியாவெ னக்குமினி முடியாதே … தெளிந்த அறிவு இல்லாத
எனக்கும் இனிமேல் முடியாது.
சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை … மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு
சிவஞான சித்திதனை யருள்வாயே … சிவஞான சித்தியை
தந்தருள்வாயாக.
—subham—
Tags- சங்கரர், வள்ளுவர், நான் ஒரு முட்டாளுங்க ,-PART 30 , பிரம்மா ,கோமாளி, ஏமாளி, அரிய செய்திகள், ஆ ஆ பாடல், மழித்தல் நீட்டல், பஜ கோவிந்தம், ஜடிலோ முண்டி, திருப்புகழ், அருணகிரிநாதர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
உண்மையான பந்து யார்?
ச. நாகராஜன்
சில அருமையான சுபாஷித ஸ்லோகங்கள் இதோ
உண்மையான பந்து யார்?
உத்ஸவே வ்யஸனே சைவ துர்பிக்ஷே சத்ருவிக்ரஹே |
ராஜத்வாரே ஸ்மஷானே ச யஸ்திஷ்டதி ச பாந்தவ: ||
உற்சவ காலங்களிலும், அபாயத்திலும், வறுமையிலும், எதிரிகளுடனான சண்டையிலும் அரண்மனை வாயிலிலும் சுடுகாட்டிலும் எவன் ஒருவன் விடாது கூட இருக்கிறானோ அவனே உண்மையான பந்து.
சூரியனும் பெரியோரும் ஒன்று போல ஜொலிப்பர்!
உதேதி சவிதா தாம்ரஸ்தாம்ர ஏவாஸ்தமேதி ச |
சம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா ||
சூரியன் உதிக்கும் போது செக்கச் சிவந்த வர்ணத்தில் இருக்கிறான். அவன் அஸ்தமிக்கும் போது மீண்டும் செக்கச் சிவந்த வர்ணத்தில் ஜொலிக்கிறான். அதே போலவே பெரியோர் வளமாக வாழும் காலத்திலும் வறுமையில் இருக்கும் போதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
பெரியோரின் குணம்!
விவேக: சஹ சம்பத்த்யா வினயோ வித்யயா சஹ |
ப்ரபுத்வம் ப்ரஸ்னயோபேதம் சின்ஹமேதன்மஹாத்மனாம் ||
இவை தான் உண்மையான பெரியோரின் குணமாகும்: செல்வத்துடன் கூடவே அறிவு; கல்வி அறிவுடன் பணிவடக்கம், , மேலாளுமையுடன் எளிமை
தாய், தந்தை, நண்பர் செய்யும் உதவி இயல்பானது!
மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவாதித்ரயம் ஹிதம் |
கார்யகாரணதஶ்சான்யே பவந்தி ஹிதபுத்தய: ||
தாயார், நண்பன், தந்தை ஆகிய மூவரும் ஒருவனுக்கு இயல்பாகவே இதம் (நன்மை) செய்பவராவர். இதே போல இதம் செய்யும் மற்றவர்களும் உண்டு என்றாலும் அவர்கள் காரண காரியத்திற்காகவே அதைச் செய்வர்.
ஏழையாக இருக்கும் ஒருவன் இறந்தவனுக்குச் சமானம். குழந்தை இல்லாதவனும் இறந்தவனுக்கும் சமம் தான். இறந்தவர்களுக்குச் செய்யும் சிரார்த்த காரியத்தின் போது ஸ்ரோத்ரிய பிராமணன் இல்லை என்றால், அவனுக்கு தக்ஷிணையாக தானம் வழங்கப்படவில்லை என்றால் அதுவும் இறப்பிற்குச் சமம் தான்!
மணமில்லாத கிந்சுகா மலர் போல ஒருவன் சோபிக்கமாட்டான்!|\
ரூபயௌவனஸம்பன்னா விஷாலகுத்னசம்பதா: |
வித்யா ஹீனா ந ஷோபந்தே நிர்கந்தா இவ கிந்ஷுகா: |\
ஒருவன் அழகாக இளமையுடன் இருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் கூட கல்வி இல்லையென்றால் மணமின்றி இருக்கும் கிந்ஷுகா புஷ்பம் போல ஒருவன் சோபிப்பதில்லை.
Date uploaded in Sydney, Australia – 23 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள் தொடர்ச்சி………………
Words beginning with “J”.
Tamil version continued…………………..
ஜயத்ரதன்
சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், துரியோதனன் சகோதரியான துஸ்சலாவை மணந்தான் . மஹாபாரதப் போரில் கெளரவர்கள் தரப்பில் நின்று சண்டையிட்டான். கடுமையான போரில் 13 ஆவது நாளில் அர்ஜுனன் மகனான அபிமன்யுவைக் கொன்றான். உடனே அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைத் தீர்த்துக் கட்டுவேன் என்று அர்ஜுனன் சபதம் செய்தான். மறுநாள் சூரியன் அஸ்தமனம் ஆனது போல இருள் கவ்வியது . இது கிருஷ்ணன் தனது சுதர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்தத்தால் ஏற்பட்டதாகச் செப்புவர். உடனே ஜயத்ரதன் தன்னை அர்ஜுனன் கொல்ல முடியவில்லை என்ற வெற்றிக் களிப்பில் வெளியே தலை நீட்டினான். கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்ரத்தை விலக்கவே மீண்டும் சூரிய ஒளி பிரகாசித்தது . உடனே அவனைக் கொல்லும்படி கிருஷ்ணன் சொல்லவே அர்ஜுனன் அவனைக் கொன்றான் என்பது மஹாபாரதக் கதை
உண்மையில் இது சூரிய கிரகண சம்பவம் ஆகும். பாண்டவ சகோதரர்களில் நகுலனும் சகாதேவனும் சோதிடத்தில், வானவியலில், மஹா மேதாவிகள் மறுநாள் முழு சூரிய கிரகணம் நிகழப்போவதைக் கிருஷ்ணனிடம் கூறியிருந்தனர். அதை கிருஷ்ணன் பயன்படுத்திக்கொண்டு இந்த வெற்றியை அர்ஜுனனுக்கு ஈட்டித் தந்தான் . மாபாரதப்போர் துவங்கிய நாள் அமாவாசை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் போர் நட ந்தது என்று பார்த்தால் அடுத்த அமாவாசையில் சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
இன்னுமொரு சம்பவமும் உள்ளது . பாண்டவர்கள் காட்டில் வேட்டையாட்சி ச் சென்ற சமயா த்தில் அவர்களுடைய மனைவி திரவுபதி தனியாக இருந்தாள்; அப்போது ஜயத்ரதன் அவளை அணுகி உணவு கேட்கவே அவளும் உணவினை வழங்கினாள். அவள் கறுப்பி என்றாலும் பேரழகி. அவளை அடைய ஆசை கொண்ட ஜயத்ரதன் தனது தேரில் அவளைக் கடத்திச் சென்றான் பாண்டவர்கள் அவனைத் துரத்திச் சென்று திரவுபதியை மீட்டனர்.
***
ஜெயதேவர்
கீத கோவிந்தம் என்னும் புகழ்பெற்ற அஷ்டபதி பாடல் நூலை சம்ஸ்க்ருத மொழியில் இயற்றிய ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞர் இவர்
ஜெய கோவிந்தரின் கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்டபதிகளில் மிகவும் ‘விரசமான’ பகுதிகள் என்று கருதப்படும் வசனங்களும் உண்டு. அதாவது கடவுளை நாயக நாயகி பாவத்தில் வழிபடும் ஒரு சிறந்த அணுகுமுறை. உலகில் வேறு எந்த மதத்திலும் இந்த சுதந்திரத்தைக் காணமுடியாது.
ஆனால் கோபியரின் காதல் பற்றி சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவாற்றி இருக்கிறார். “முட்டாள்களே (Fபூல்ஸ்) இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தெய்வீக அன்புக்கு ஈடு இணையானது எதுவும் உலகில் இ ல்லை” என்று இடி முழக்கம் செய்கிறார். அது உடல் ரீதியான சிற்றின்ப அன்பு இல்லை. உள்ளம் ரீதியான பேரின்ப அனுபவம். அதைப் புரிந்து கொள்ள வியாசருடைய சுகர் போல உள்ளத் தூய்மை இருக்கவேண்டும்” என்கிறார் சுவாமிஜி.
இந்தப் புலவருக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு . விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரையும் ஒரு அவதாரமாக்கி புரட்சி செய்தார் . இவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஸம்ஸ்க்ருதக் கவிஞர் ஆவார் .இன்றுவரை சம்பிரதாய பஜனைகளில் அஷ்டபதிப் பாடல்களை பாடிவருவதால் இவர் அழியாத புகழ் எய்திவிட்டார் .
***
ஜீவன்
உயிருள்ள எதையும் ஜீவன் என்பர்; எறும்பு முதல் யானை வரை ஜீவனுள்ள பிராணிதான் ; உயிர் மூச்சு, பிராண சக்தி என்பது பொருள். மனிதர்களை ஜீவாத்மா என்றும் இறைவனைப் பரமாத்மா என்றும் உபநிஷத்துக்கள் பகர்கின்றன.
ஜீவ என்பதை பைபிளில் ஈவ் என்றும் ஆத்மா என்பதை ஆடம் என்றும் மாற்றிவிட்டனர்!
Jeev = Eve; Atma= Adam in Bible.
***
ஜீவன் முக்தன்
உயிருடன் உலவும்போதே இறைவனை முழு அளவில் உணர்ந்து விட்டவர்களை ஜீவன் முக்தர்கள் என்பார்கள் ; அவர்களும் சாதாரண மனிதர்களைப் போலவே நோயவாய்ப்படுவர்; இன்ப துன்பங்களை அனுபவிப்பர் ஆயினும் அவர்கள் என்றும் பேரின்ப நிலையில் திளைத்து இருப்பர் ; நமது காலத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்த நிலையை அடைந்தவர்கள் ஆவர்.
***
ஞானம்
அறிவு என்று பொருள் ஆங்கிலச் சொற்களான க்னோ னாலேட்ஜ் Knowledge. Know என்பன இந்தச் ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே பிறந்தன. ஆயினும் இது வரலாறு, விஞ்ஞானம் முதலிய புஸ்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் அறிவு அல்ல; இது மெய்யறிவு என்னும் பொருளில் பயன்படுகிறது . இறைவன் என்னும் உண்மைப் பொருள் பற்றிய அறிவு இது.
***
ஞானேந்திரியங்கள்
கண் காது மூக்கு தோல், நாக்கு என்ற ஐம்புலன்கள் நமக்கு உண்மை அறிவினை நாட்டை உதவுகின்றன .
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (குறள் – 27)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
***
ஜாதவேதஸ் :
அக்கினியின் பெயர்களில் ஒன்று; எல்லாம் அறிந்தவன் என்பது பொருள்; வேதத்தில் வரும் முதல் சொல் அக்கினி. இந்தப் பிரபஞ்ச்மம் முழுதும் அக்கினி வியாபித்துள்ளது சூரியன் முதலான நட்சத்திரம் முதல் நமது உடல்வரை அக்கினியால் இயங்குகின்றன. அக்கினி இல்லையேல் பிரபஞ்சசமோ நாமோ இல்லை இதைக் கடவுளின் தூதர் என்று கருதும் இந்துக்கள் அக்கினியில் ஆகுதி செலுத்தி அவைகளை இறைவனுக்கு அனுப்புகின்றனர் இந்தாளு சமய சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படுவது அக்கினி.
அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்வதைச் சங்க இலக்கியமும் வேதங்களும் செப்புகின்றன . அக்கினி சாட்சியாக உடன்படிக்கை செய்ததைக் கல்வெட்டுகளும் இதிகாசங்களும் இயம்புகின்றன.
***
ஜ்வரதேவேர்
ஜ்வரதேவேர் சிவனின் ஒரு வடிவம் ஆகும் . பஸ்மாசுரனை அழிக்க சிவன் எடுத்த ரூபம் இது ஆகம நூல்களில் இவருடைய வடிவம் வருணிக்கப்படுகிறது . அவருக்கு மூன்று தலைகள் , மூன்று கால்கள், ஆறு கைகள், ஒன்பது கண்கள் உள்ளன . சில இடங்களில் கைகளில் உள்ள பொருள்கள் மாறு படுகின்றன
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில், திருநெல்வேலி , மதுரை, திருப்பரங்குன்றம், , மயிலாடுதுறை, பவானி உள்பட எண்ணற்ற சிவன் கோவில்களில் ஜ்வரதேவர் சன்னதி உள்ளது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஷ்வரர் கோவிலிலும் இவர் சிலை உள்ளது. மூன்று தலைகளில் இரண்டு தலைகள் பிராணிகளுடையவை ; சிங்கம், மான் ஆகியவற்றின் தலைகள் மனித தலைக்கு இரு புறமும் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கையில் தீர்க்க கலசம் இன்னொன்றில் திரிசூலம் காணப்படுகின்றன.
சிவபெருமான் உடலுக்கு வரும் நோய்களையும் பிறவிப்பிணி என்னும் நோயையும் தீர்ப்பவர் என்று கருத்து வேதத்திலேயே உள்ளது; அவரை டாக்டர் என்றும் மருந்து என்றும் அழைக்கும் பிஷக், பேஷஜம் என்ற சொற்கள் யஜுர் வேத ருத்ர மந்திரத்திலேயே வருகிறது வைத்தீஸ்வரன் என்ற அவருடைய பெயரும் இதை மெய்ப்பிக்கிறது.
ஜுரம் என்றால் காய்ச்சல்; ஆகவே நோய்களைத் தீர்ப்பதற்கு இவரை கஷாயம் வைத்து வழிபடுவதும் உண்டு.
பிற்கால வைஷ்ணவ நூலான ஹரிவம்சத்தில் கிருஷ்ணன் உருவாக்கிய ஜூர தேவர் இவருடன் சண்டையிட்டதாகவும் கதைகள் இருக்கின்றன.
***
ஜ்யோதிஷ
தமிழில் ஜோதிடம் என்றும் ஜோதிஷம் என்றும் சொல்லுவார்கள் . ஒளி என்று பொருள்; வேத காலப் படிப்பில் உள்ள ஆறு பாடங்களில் ஒன்று ஜோதிடம். உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதம் முதல் ஜோதிடக் குறிப்புகள் உள்ளன வானவியல் இதில் அடக்கம் . சங்க இலக்கியத்தில் சுமார் 200 ஜோதிடக் குறிப்புகள் உள்ளன.
ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions) ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில் சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .
தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை தமிழ் நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர் என்ற புலவர் .
ஒருவர் பிறவியின் காரணமாக குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார் புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)?
மிருகங்கள் கூட ஜோதிடம் பார்த்ததாக- சகுனம் பார்த்ததாக சங்கப் புலவர்கள் பாடி வைத்தனர். சம்ஸ்கிருதத்தில் கிரஹங்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு. ஆனால் தமிழில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நிறைய பெயர்கள் வருகின்றன.
—subham—
Tags- ஜோதிடம், ஜயத்ரதன், HINDU DICTIONARY , IN ENGLISH AND TAMIL – 38; இந்து மத கலைச்சொல் அகராதி-38, ஜுரதேவர்
Date uploaded in Sydney, Australia – 23 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 29
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 29
திருப்புகழில் அணு விஞ்ஞானம் – மேலும் ஒரு புதிய தகவல்
பிரம்மத்தைக் /கடவுளை/
“அணுவுக்கும் சிறியதாய் பெரியதற்கும் பெரியதாய்” என உபநிஷத்துக்கள் சித்தரித்துள்ளன.
கடோபநிஷத் , ச்வேதாச்வரோபநிஷத்தில் உள்ள வாக்கியம் “அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் “
இதை அவ்வையார், திருமூலர், இடைக்காடர் முதலியோரும் பின்னர் செப்பியுள்ளனர். உபநிஷத்துக்கள் வருணிப்பதை எல்லா அடியார்களும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்; ஆனால் அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான், எலெக்ட்ரான் நியூட்ரான் பற்றிய அறிவு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் மேலை நாட்டினருக்குத் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அணுவுக்குள் இருக்கும் அசைவு பற்றி முதல் முதலில் தமிழில் சொன்னவர் அருணகிரிநாதர்தான்; ஏனைய எல்லோரும் அணுவினை விடச் சிறியவன் மலையை விடப்பெரியவன் என்றே பாடியுள்ளனர் அணுவுக்குள் என்ன நிகழ்கிறது என்று பாடவில்லை
அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் (Date uploaded in Sydney, Australia – 30 January 2026 ;Post No.15,375) என்ற எனது ஜனவரி கட்டுரையில் சொன்னதைவிட இங்கு இன்னும் தெளிவாகப் பேசுகிறார் அருணகிரி!
“உனது பததூள் புவன கிரிதான் … உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம்.
உனது கிருபாகரம் ஏதோ … அப்படியென்றால் உன் திருவருள்
எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்).
பரம குருவாய் அணுவில் அசைவாய் … மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய்,
பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் … காற்று முதலிய
ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே,
சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா … எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே,”
குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே. … வஜ்ராயுதத்தைக்
கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே.
* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.
***
திருப்புகழில் சுந்தரமூர்த்தி நாயனார் கதை
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ
வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து உலகு அறிய இவன்
அடிமை யாம் என கொணர்ந்து சபை ஊடே … ஒப்பற்ற
சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச்
சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க,
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு
அவன் அது வலியவே கிழிக்க நின்று உதறி முறை இடு
பழைய வேத வித்தர் தந்த சிறியோனே … ஒரு பழைய
ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை
வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த
முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே,
அரிய உடு பதி கடவி ஆடகச் சிலம்பொடு அழகு வட(ம்)
மணி முடி வியாளம் இட்டு அழுந்த அமரர் ஒடு பலர் முடுகி
ஆழியைக் கடைந்து அமுதாக அருளும் அரி திரு மருக …
அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து,
பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை
உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக
தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்)
அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த
திருமாலின் மருகனே,
வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து
உகந்த அருண கிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த
பெருமாளே. …
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.
***
பெண்களின் மார்பக வருணனை
கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை நிலை
குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய கலச வர்க்கத்தைத்
தகர்த்து … தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க்
குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து,
மருப்பைப் புக்கு ஒடித்து … குலை குலையாயிருக்கும் அழகு
ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து,
திறல் மதன் அபிஷேகம் அமலர் நெற்றிக் கண் தழற்குள்
பொடி செய்து அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில் அடல்
படைத்து அச்சப்படுத்தி … சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து,
இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து,
மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா?
இது தனங்களின் அழகை விவரிக்கும் பாடல். கமல மொட்டு, நீர்க்குமிழி, பொன் குடம், பொன் கலசம், இள நீர், வட்டு, செப்பு, யானைத் தந்தம், மன்மதன் மகுடம், சக்ரவாகப் பறவை, தாளம், மலை இவைகளை மார்பகங்கள் வெல்கின்றன என்பதை முதல் 12 அடிகள் விளக்குகின்றன.
***
7 தமிழ் இசைக் கருவிகள்
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம்
தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த …
தனனதன தனனதன தந்தனந்
தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் – என்று வளைந்த
மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப,
வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல்ஒலி செய்ய,
***
சரப பட்சி கதை
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண்
கற்புடைய பெண் நாயகி விந்தைச் செம் கைப் பொலி சுத …
கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே,
கிழவனே, அதி துங்கத் துங்கக் கிரி அருணாபுரி வெம் கண் சிங்கத்து
அடி மயில் ஏறிய பெருமாளே. … மிக உயர்ந்ததும்,
பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில்,விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே.
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின – சிவ புராணம்.
***
சிவாய நம மந்திர விளக்கம்
செயசெய அருணாத்திரி சிவய நம … அஜயஜெய அருணாசலா,
சிவயநம,*1
செயசெய அருணாத்திரி மசிவயந … அஜயஜெய அருணாசலா,
மசிவயந,*2
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா … அஜயஜெய
அருணாசலா, நமசிவய*3, மூலப் பொருளே,
செயசெய அருணாத்திரி யநமசிவ … அஜயஜெய அருணாசலா,
யநமசிவ*4,
செயசெய அருணாத்திரி வயநமசி … அஜயஜெய அருணாசலா,
வயநமசி*5,
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி …
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து*6 என்று மாறி மாறிச் செபித்து,
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து … ஜெயஜெய
என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து,
அர கர சரணாத்திரி என உருகி … ஹர ஹர திருவடி மலையே
(சிவ மலையே) என்று கூறித் தியானித்து,
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை … ஜெய ஜெய
என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை
சிவசிவ சரணாத் திரிசெய செயென … சிவசிவ திருவடி
மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக … திருவடி
(சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ …
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில்
இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?
*1 ‘சிவயநம’ என்பது வேதாகமப்படியான பஞ்சாட்சரம்.
*2 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘மசிவயந’.
*3 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘நமசிவய’.
*4 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘யநமசிவ’.
*5 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘வயநமசி’.
மீண்டும் கடைசி அட்சரத்தை முதலாக வைத்தால் ‘சிவயநம’ என்ற பஞ்சாட்சர சக்கரம் தொடர்ந்து மாறி மாறி வரும்.
To be continued…………………………..
–subham—
Tags- திருப்புகழில் அணு விஞ்ஞானம்,புதிய தகவல்; சரப பட்சி கதை – 29 ,சிவாய நம மந்திர விளக்கம்,சரப பட்சி, அருணகிரிநாதர்,அரிய செய்திகள், வியாக்ரபாதர், பதஞ்சலி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் மிக அதிக ஆழமான ஏரி – பைகால்!
ச. நாகராஜன் .
உலகில் புதிய ரயில்பாதைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
மூன்றாம் அலெக்ஸாண்டர் ஜார் தென்கிழக்கு சைபீரியாவில் ட்ரான்ஸ் சைபீரியா ரயில் பாதையை அமைக்க 1891ம் ஆண்டு கட்டளை இட்டார்.
அப்போது தான் மிக அழகிய பைகால் ஏரி (LAKE BAIKAL) பற்றி உலகிற்குத் தெரிய வந்தது. அதுவரை அந்தப் பகுதி டுங்கஸ் மற்றும் எவண்டி ஆதிவாசிகளுக்கு மட்டுமே தெரிந்த இடமாக இருந்தது.
அமாவாசைக்குப் பிறகு முதல் நாளில் தோன்றும் சந்திரப் பிறை போல மிக அழகிய வடிவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஏரி பைகால்.
636 கிலோமீட்டர் நீளமும் சராசரியாக 48 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரி இது. இதன் பரப்பளவு 31500 சதுர கிலோமீட்டர் ஆகும். அதாவது அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மற்றும் கனெக்டிகட் ஆகிய இரு மாகாணங்களின் பரப்பளவைச் சேர்த்தால் வரும் பரப்பைக் கொண்டது இது.
அது மட்டுமல்ல உலகின் மிக அதிக ஆழம் கொண்ட ஏரியும் இது தான்!
இதன் ஆழம் 1620 மீட்டர் ஆகும்.
அது மட்டுமல்ல உலகின் மிகப் பழமையான ஏரியும் இது தான்!
எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வெடிப்பு ஒன்று ஏற்பட நிலங்கள் நகர்ந்தன; மலைகள் உருவாயின. நடுவில் அழகிய ஏரி ஒன்று உருவாக ஆரம்பித்தது. இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பைகால் என்ற இந்த ஏரி உருவானது.
இதில் மலைக்க வைக்கும் முந்நூறு நதிகள் நீரைக் கொண்டு வந்து சேர்த்தன. ஒரே ஒரு நதியான அங்க்ரா மட்டும் இதிலிருந்து நீரை வெளியே கொண்டு சென்றது.
இதில் உள்ள நீரின் கொள்ளளவு 23000 கியூபிக் கிலோமீட்டர் ஆகும்.
விளக்கமாகச் சொல்வதென்றால் உலகில் உள்ள சுத்த நீரில் ஐந்தில் ஒரு பங்கை இந்த ஏரி கொண்டுள்ளது.
1862ல் ஒரு பூகம்பம் இங்கு ஏற்பட ஏரியிலிருந்து நீர் வெளியேறி ஒரு புதிய வளைகுடாவையே உருவாக்கி விட்டது.
600 வகையான தாவர வகைகளும் 1500 வகையான மிருக வகைகளும் இந்தப் பகுதியில் உள்ளன.
உலகில் மூன்றில் ஒரு பங்கு ஷ்ரிம்ப் வகை மீன்கள் இங்குள்ள சுத்த நீரில் வாழ்கின்றன. இவற்றில் 255 வகைகள் இங்கு உண்டு!
வேறு எங்கும் காண முடியாத 50 வகை மீன் இனங்கள் இங்கு வாழ்கின்றன.
பெரிய அளவிலான மீன் ஒன்று அசிபென்ஸர் என்று அழைக்கப்படுகிறது. அதன் நீளம் ஆறு அடி. எடையோ நூறு கிலோ!
இங்குள்ள பல மீன்கள் பற்றிய செய்திகளைக் கேட்டால் பிரமித்து விடுவோம்!
ரயில் போக்குவரத்து இந்தப் பகுதியில் தொடங்கவே மீன் வியாபாரம் சூடு பிடித்தது. மக்களின் வருகையும் இங்கு அதிகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதியில் ஏரியின் நீர் பனிக்கட்டியாக மாறி விடும். ஐந்து மாதங்கள் பனிக்கட்டியாகக் காட்சி அளிக்கும் இந்த ஏரியில் பனிக்கட்டியின் கனம் நான்கு அடியாக இருக்கும்.
ஆனால் இங்குள்ள நெர்பா சீல் என்ற ஒரு வகை மீன் பனிக்கட்டியில் துளைகளைப் போட்டு, தான் உயிர்வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்கிறது.
ரஷியாவின் பெருமையைக் கூட்டும் இந்த அழகிய ஏரி உலக அதிசயங்களுள் ஒன்றாகும்!
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “J”.
English version was posted yesterday. Here is the Tamil version:
ஜனார்த்தனன் (Sanskrit: जनार्दन) விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் வரும் பெயர். (126th name in the Vishnu Sahasranama) விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் வழங்கும் ஒரு நாமம்., பக்தர்களை பாதுகாத்து தீமைகளை அழிப்பவர் என்றும் எல்லோருக்கும் வரம் அளிப்பவர் என்றும் பொருள்.
***
ஜகத் குரு
ஜகத் என்றால் உலகம் மற்றும் அதிலுள்ள மக்கள்; குரு என்றால் ஆசிரியர்; உலகத்திற்கே குருவாக விளங்குபவர் என்று அர்த்தம்; சிவபுராணத்தில் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் இந்த அடைமொழி உள்ளது. ராமாயணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் , ராமன் ஆகியோரை இந்தச் சொல்லால் வருணிக்கிறார் வால்மீகி. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராசார்ய (1894-1994) சுவாமிகளை இந்தச் சொல்லால் பக்தர்கள் போற்றினார்கள் .
***
ஜைன
தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் பொருள்; சமண மத த்தைப் பின்பற்றுவோரை இப்படி அழைக்கிறோம். அவர்கள் அஹிம்சையிலும் சைவ- காய்கறி உணவுகளிலும் – மிகவும் பற்றுடையோர். இந்த சமயம் புத்தருக்கு முந்திய மகாவீரர் என்ப வரால் மிகவும் பிரபலமானது . தமிழ் நாட்டில் அரசியலில் ஈடுபட்ட சமணர்கள், பல்லவ பாண்டிய மன்னர்களை மதம் மாற்றியதால் சைவ நாயன்மார்களால் பழிக்கப்பட்டார்கள் ; ஞான சம்பந்தர் இந்த மதத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றினார் .மத்திய கால தமிழில் நிறைய நூல்களை சமண முனிவர்கள் இயற்றினார்கள் தமிழ் காவியமான சிலப்பதிகாரம் சமணர்களைப் போற்றியது .
***
ஜைன அல்லது சமண சமயம்
இவர்கள் வேதத்தையும் கடவுளையும் ஏற்கவில்லை ஆனால் இந்துக்களைப் போலவே மறுபிறப்புக் கொள்கையையும் கர்மா வினைக் கொள்கையையும் ஏற்றார்கள். 24 தீர்த்தங்கரர் என்ற துறவிகள் இந்தக் கொள்கைகளைப் பரப்பினார்கள் அவர்களில் கடைசியாக வந்த வர்த்தமான மஹாவீரர் பீஹார் மாநிலத்தில் இந்த சமயத்தை வேரூன்றச் செய்தார் அவர் புத்தருக்கு முன்னால் தோன்றியவர்
இவர்களில் நேமிநாதர் (அரிஷ்டநேமி), பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உறுதியாகியுள்ளது.
பிற்காலத்தில் சமணர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் ; திகம்பரர் – ஆடை அணியாத பிரிவினர்; ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை உடுத்துவோர் . தமிழ்நாட்டில் இவர்கள் எங்கே, எப்படி இருந்தார்கள் என்பதை அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்து அறியலாம்.
***
ஜம்பு த்வீபம் – நாவலந் தீவு
மஹாபாரதத்திலும், அசோகன் கல்வெட்டிலும் இந்தப் பெயரைக் காணலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் நாவலந் தீவு என்று பெயர். தாவரங்களின் அடைப்படையில் நிலங்களுக்குப் பெயரிட்டவர்கள் இந்துக்கள்; நாவல் பழத்தைக் கொண்டு பாரத தேசத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஏழு அல்லது ஒன்பது தீவுகளில் இது ஒன்று என்று புராணங்கள் விளம்புகின்றன.
ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் காம்போஜ என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன்படுத்தினர்.
நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி
கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்:
‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது.
ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.
சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை (25-2-12/16) ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.
நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவு, நாவலொடு பெயரிய பெருந்தீவம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.
ஜம்பூத்வீபம் பற்றி காளிதாசனும் பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.
ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதை புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் காணலாம்.
***
ஜமதக்னி
காதி மன்னரின் மகள் சத்யவதிக்கும் ருசிக ரிஷிக்கும் மகனாகப் பிறந்தவர் இவர் .
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ரிஷிகளில் ஒருவரின் வம்சத்தில் வந்தவர் ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவியின் கணவரும் பரசுராமரின் தந்தையும் ஆவார். உக்ர தபஸ்வி; தந்தை ஜமதக்னியின் கட்டளைக்கு இணங்கி தாயின் தலையை பரசுராமர் வெட்டினார் . பின்னர் அவரை உயிர்பெறவும் செய்தார். ரேணுகா தேவி கற்புக்கரசி; அவள் சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் கொண்டுவந்த போதும் பானையில் தண்ணீர் அப்படியே நின்றது!
***
ஜனகர்
விதேக நாடு அல்லது மிதிலை நகரின் மன்னர் ; சீதா தேவியின் வளர்ப்புத் தந்தை ; பிருஹத் ஆரண்யக உபநிஷத், சதபத பிராமண நூல்களில் இவர் பெயர் உள்ளது; ராஜ ரிஷியான இவர் பற்று இல்லாமல் ஆட்சி செலுத்தினார் . பெரிய சபைகளைக் கூட்டி தத்துவ மகாநாடுகளை நடத்தினார் அதில் கார்க்கி வாசிக்கனவி போன்ற பெண்களும் பங்கேற்றுப் பேசினர். இவரது காலத்தில் வாழ்ந்த யாக்ஞவல்க்ய ரிஷி பெரும் புகழ்பெற்றவர் .
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி –(சுப்ரமண்ய பாரதி)
‘’ஜனகன் முதலானோர் கர்மத்தாலேயே உயர்ந்த சித்தியை அடைந்தனர் அன்றோ! மேலும் உலகை நல்வழிப் படுத்தவும் கர்மத்தைச் செய்வதற்கே நீ உரியவன் ஆகிறாய்’’. (பகவத் கீதை ,அத்தியாயம் 3, ஸ்லோகம் 20).
கண்ணனும் பாரதியும் ஏன் இப்படி ஜனகனைப் புகழ்ந்தார்கள்?
மிதிலாபுரியை தலைநகராக கொண்டு ஜனகர் ஆண்டான். சீதா தேவியின் தந்தை பெயரும் ஜனகர் தான். ஆனால் பல ஜனக மன்னர்கள் இருந்தது ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது. வேதகால ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. ஜீவன் முக்தர். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல் வாழ்க்கை நடத்திய அறிஞன். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு பூண்டவர்.
குருவின் அன்பில் சிலருக்கு சந்தேகம். ஜனகன் ஒரு மன்னன் என்பதால் அவருக்கு குரு அதிக சலுகை காட்டுவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. இதைப் பொய் என்று காட்ட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடோடி வந்து மிதிலை நகரம் தீப்பிடித்து எரிவதாகப் பதறினான். எல்லா சிஷ்யர்களும் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கு இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.
***
ஜானகி
சீதா தேவியின் பெயர்களில் ஒன்று ; ஜனகர் மகள் என்று அர்த்தம்; மிதிலை நகரில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் உண்டு.
***
ஜரத்காரு
ஒரு ரிஷியின் பெயர்.
கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ வனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது
பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ नर्मदायै नमः प्रातः नर्मदायै नमो निशि என்ற மந்திரத்தில் பாம்புகளையும் ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு.
(யஜுர்வேத சந்தியாவந்தன மந்திரம்)
நர்மதாயை நமஹ பிராதர் நர்மதாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ சர்பதஹ
அபசர்ப்ப சர்ப்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹாயசாஹா
ஜனமேஜஸ்ய யக்ஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்
ஜரத்காரோர் ஜரத்கார்வாம் சமுத்பன்னோ மஹாயசாஹா
ஆஸ்தீக சத்ய சந்தோமாம் பன்னகேப்யோ அபிரக்ஷது
பன்னகேப்யோ அபிரக்ஷது ஓம் நம இதி
***
ஜனமேஜயன்
மஹாபாரத போருக்குப் பின்னர், ஹஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னன் ; பரீக்ஷித் மன்னனின் மகன்; அர்ஜுனனின் பேரன் ; பரீக்ஷித்தை நாக வம்ச காட்டு வாசிகள் கொன்றதால் அவர்களைக் கொல்வதற்கு சர்ப்பயாகம் நடத்தியவன்; அதன் கதை பின்வருமாறு :
காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ வனத்தை விட்டுவிடுங்களேன் அந்த இடத்தில் வாழ்ந்த நாகர்கள் மன்றாடினார்கள் (காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்; பலருக்கு இது தெரியாததால் அர்த்தம் புரியாமலேயே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர்).
நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).
இப்படி நாகா இன மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .
***
ஜபம்
மனதிற்குள் உருப்போடுதல்; இறைவனின் நாமத்தை ஜபமாலையை வைத்துக் கொண்டோ அது இல்லாமலேயோ முனுமுனுத்தல்.
***
ஜாதகர்ம
பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்கள் செய்யும் நாற்பது கருமங்களில்– செயல்களில்– ஒன்று; குழந்தை பிறந்தவுடன் அதன் நாக்கில் மந்திரங்களைச் சொல்லி நெய்யினைத் தடவும் கிரியை.; நாற்பது என்பதை ஷோடச/ பதினாறு கர்மங்கள் என்றும் சொல்லுவார்கள்; மனு ஸ்ம்ருதி முதலிய சட்டப் புஸ்தகங்களில் இதைக் காணலாம்.
***
ஜாதி
ஒருவருக்கு பிறப்பினால் ஏற்படும் பிரிவினை; வேத காலத்தில் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்ற நான்கு ஜாதிகள் மட்டும் இருந்தன; இப்போது ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உள்ளன . தொழில் முறையில் ஏற்பட்ட பிரிவுகள் குலத் தொழில் காரணமாக பிறப்பினால் சொல்லப்பட்டது .
உயர்ந்த வகைப் பொருளுக்கும் இதைப் பயன்படுத்துவர் உ-ம். ஜாதி மல்லி.
இன்ன வகை என்ற பொருளிலும் வரும். …… இந்த ஜாதி மாம் பழம் ; இந்த ஜாதி ….. குதிரை etc
To be continued………………………….
–Subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 36; இந்துமத கலைச்சொல் அகராதி-37, ஜாதி , நாவலந் தீவு, ஜகத் குரு
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 28
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 28
திருப்புகழில் ஐம்படைத்தாலி
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ
ஆயுதபாணி … வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன்,
நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே …
நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே,
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர்
ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே …
அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி)வலம் வருபவனே,
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக
மேனியனே … கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்:
சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.
இவைகளை ஐம்படைத்தாலியாக குழந்தைகளுக்கு அணிவிப்பது தமிழர்தம் வழக்கம்.
சங்கத் தமிழ் நூல்களிலும் அதர்வ வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் உள்ளன.
சிறுவர்கள் ஐம்படைதாலி என்று விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாயத்தை அணிந்தனர். சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.
குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.
பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர்.
ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77
பி.டிசீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாலியே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார்.
பிற்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்கள் தாலி புலிப் பல் தாலி முதலியன பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கின்றன.
“வனமாலி கதி சார்ங்கி
சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர்
வாசுதேவோ அபிரக்ஷது.”
‘வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால் என்னைக் காக்க வேண்டும்.– என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது
தாயத்துக்களை ஏன் அணிந்தனர்?
அவைகள் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பினர். தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும் எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வ வேத மந்திரங்களில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.
ஒரு காலத்தில் பனை மர ஓலைச் சுருளில் மந்திர தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வடமொழியில் ‘’தால’’ என்று பெயர். இதில் இருந்தே தாலி, டாலிஸ்மேன்Talisman (ஆங்கிலச் சொல்) ஆகியன வந்தன.
***
திருமாலின் மகன் மன்மதன்!
கரி உரி அரவம் அணிந்த மேனியர் … யானையின் உரித்த
தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர்,
கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர் … ஒளிகள் கொண்ட
திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர்,
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் … நெருப்பையும்,
மானையும், பரசையும் ஏந்திய கையினர்,
கஞ்ச மாதின் கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர்
கயிலை அமர்ந்த காரணர் … தாமரையில் வாழும் லக்ஷ்மியின் முலைப் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர்,
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.
***
பாற்கடலைக் கடைந்த காட்சி
(லண்டன் சுவாமிநாதன் ஜனவரி 2026 -ல் தாயலாந்தின் தலைநகரமான பாங்காக் நகர சுவர்ணபுரி விமான நிலையத்தில் எடுத்த பாற்கடல் கடைந்த சம்பவ படங்கள்)
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட … ஒலிக்கின்ற பாற்கடலின்உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட,
வட தமனிய கிரி கம்பமாய் நட … வடக்கே உள்ள பொன்
மலையாகிய மேருவை மத்தாக நட்டு,
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் கயிறு என …
விபரீதமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு,
அமரர் அநந்த கோடியு(ம்) முறை முறை அமுது கடைந்த
நாள் … பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில்,
ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல … உய்யும்
வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரியமேகத்தின் வரிசை போல எழுந்து,
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் முறுகிட
அண்ட கோளகை வெடிபட … செயலாற்றும் மத யானைகளும்,
எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக,
Astronomy in Thiruppugaz
(இந்தப்பாடலில் வரும் அண்ட கோளங்கள் என்ற சொற்கள் அக்காலத்திலேயே எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் வட்ட வடிவானவை- கோளவடிவானவை- என்று இந்துக்கள் அறிந்ததைக் காட்டுகிறது. மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் இதை இன்னும் விரிவாகவே பாடியிருக்கிறார் இவை எல்லாம் மேலை நாட்டு அறிவியல் நூல்களில் மிகவும் பிற்காலத்தில்தான் இடம்பெற்றன. .அண்டம் என்றால் முட்டை கோளம் என்ற சொல்லிலிருந்தே க்ளோப்Globe என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது.)
எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல … யாவரையும்
மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல,
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவர் உறு …
தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம்
கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும்,
பஞ்ச பாதக விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது
ஒழிந்திடாதோ … ஐந்து பாதகங்களுக்கும் இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ?
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.
***
நரகம் பற்றிய பாடல்
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே … ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும்,
தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக.
****
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று … இருமலில்
வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய்,
இளையா உளம் உக்கு உயிர் சோர … இளைத்து, உள்ளம்
மெலிந்து, உயிர் சோர்வுற்று,
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு … நெருப்பு கொளுத்தும்
(கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம்,
இரு பாதம் எனக்கு அருள்வாயே … உனது இரு திருவடிகளை
எனக்குத் தந்து அருளுக.
* எரிவாய் நரகம் – கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.
கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர்
கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே,
***
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு
திங்களாலே … இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை
விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்,
இந்த வரிகள் கடல் பற்றிய தமிழர் அறிவினைக் காட்டுகிறது சுறாமீன்களுக்கு எதிரி டால்பின்களும் கில்லர் வேல் என்னும் திமிங்கிலங்களும் Killer Whales, Dolphins ஆகும்; இவை மீன் போன்ற வடிவத்தில் இருந்தாலும் இவைகள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல ; குட்டி போட்டு பாலுவுட்டும் மிருகங்கள் வகை ஆகும்.
****
இரவிலும் பகலிலும் முத்தமிழில் பாட ஆசை
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி … இரவும், பகலும்,பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே …
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
பரகருணைப் பெருவாழ்வே … மேலான கருணையுடன் விளங்கும்பெருவாழ்வே,
பரசிவதத்துவஞானா … உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப்பொருளே,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அன்னை ஜெயந்தி தினம் – சிறப்புக் கட்டுரை!
புதுவை ஶ்ரீ அன்னை ஜனனம்: 21-2-1874 சமாதி: 17-11-1973
யமன் நிஜம் தான்! மரண தேவதைகளைச் சந்தித்த ஶ்ரீ அன்னை!
ச. நாகராஜன்
கேள்வி: மரண தேவன் ஒருவன் இருக்கிறான் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?
ஶ்ரீ அன்னையின் பதில் : ஆம், நான் அதை,, மரணத்தின் அதிதேவதை என்பேன், எனக்கு அவனை நன்றாகத் தெரியும்.
மரண தேவதைகள் பலர் இருக்கின்றனர். நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு பேரையாவது நான் பார்த்திருக்கிறேன். ஒருவனை பிரான்சில் சந்தித்தேன். இரண்டாமவனை ஜப்பானில்.
அவர்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டின் கல்வி, பண்பாடு நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி வெவ்வேறு மரண தேவதை இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்படியே எல்லா இயற்கை சக்திகளுக்கும் அதி தேவதைகள் இருக்கின்றன. நெருப்புத் தெய்வம், காற்றுத் தெய்வம், நீர்த் தெய்வம், மழைத் தெய்வம் என்றிப்படி. அதைப் போல மரண தெய்வம் அல்லது மரண தேவதையும் உண்டு.
ஒவ்வொரு மரண தேவதைக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் என்று கணக்கு உண்டு. இந்த ஏற்பாடு மிகப் பிரமாதமானது. பிராண சக்திகளுக்கும், இயற்கை சக்திகளுக்கு ஓர் உடன்படிக்கை இருப்பது போலத் தெரிகிறது. மரண தேவதை இன்றைக்கு எனக்கு இத்தனை மரணங்கள், இன்னார் எல்லாம் இன்று சாக வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு, உரிமையுடன் சாகப் போகிறவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வான். உனக்கு இதை உணரக் கூடிய சக்தி இருந்தால், மரண தேவதை நீ சாக விரும்பாத ஒருவனைப் பிடிக்கப் போவதைக் கண்டால், உனக்கு ஒருவகை நுண்ணுலகு சக்தி (Occult Power) இருந்தால், “கூடாது, நீ அவன் உயிரை எடுக்கக் கூடாது” என்று தடுக்கலாம். இப்படி ஒரு தடவை அல்ல, பல தடவைகள் இங்கும் ஜப்பானிலும் நடந்திருக்கின்றன. இரண்டும் ஒரே தேவதை அல்ல. அதனால் தான் பல தேவதைகள் இருக்கின்றன என்றேன்.
ஓர் உயிரைக் கவர மரண தேவதை வரும் போது சூட்சும சக்தி படைத்த யாராவது இந்த உயிரைக் கொண்டு போகக் கூடாது என்று தடுத்து விட்டால் பக்கத்திலுள்ள வேறு யாருடைய உயிரையாவது, முதலில் குறிக்கப்பட்டவனுக்குப் பழக்கமானவன் அல்லது அவனுடைய பகைவன் இப்படி அவனோடு தொடர்புடைய ஒருவனுடைய உயிரைக் கொண்டு போய் விடுவான். வெளிப்பார்வைக்குத் தற்செயலாக நடப்பது போல் தோன்றும். உண்மைக் காரணம், மரண தேவதைக்கு அன்றைக்கு அவனுக்குரிய எண்ணிக்கை தேவைப்பட்டது என்பதுதான். அவனுக்கு ஓர் உயிர் வேண்டும். நீ இந்த உயிரைக் கொண்டு போகக்கூடாது என்று தடுத்துவிட்டால் (அதற்கு உனக்குச் சக்தி இருக்க வேண்டும்) வேறு ஓர் உயிரைக் கொண்டு போய் விடுகிறான்.
நெருப்பு தேவதை விஷயமும் இப்படித்தான். நான் நெருப்பு தேவதையை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஜப்பானில். ஜப்பானில் நெருப்பு மிகவும் அபாயமானது. எங்காவது தீப்பிடித்துக் கொண்டால் அந்தப் பகுதி முழுவதுமே எரிந்து போகும். அங்கு வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருப்பதால் நெருப்புக்குச்சி எரிவது போல் கணநேரத்தில் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிடும்,
ஒரு நாள் நான் எனது படுக்கையில் இருந்தேன். ஒருமுனைப்பட்டு மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென வீட்டுப்பக்கத்தில் நெருப்பு மேகம் போல் ஓர் உருவம் தெரிந்தது. உற்று நோக்கிய போது அது ஓர் உணர்வுள்ள ஜீவன் என்பது தெரிந்தது.
“ஏய் உனக்கு என்ன வேண்டும்?”
“இந்த வீட்டை எரிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நெருப்பு மூட்டி.”
“எரிக்கும் உரிமை உனக்கு இருக்கலாம். ஆனால் இந்த வீட்டில் நடக்காது.”
அதனால் என்னை மீற முடியவில்லை.’
யார் பலவான் என்பதைப் பொறுத்த விஷயம் இது. இங்கே உன் வேலை நடக்காது என்று சொன்னதும் போய்விட்டது.
ஐந்து நிமிடம் கழித்து கூச்சல் கேட்டது. இரண்டு மூன்று வீடுகளுக்கு அப்பால் ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டது. நான் இருந்த வீட்டை எரிக்கக் கூடாது என்ற உடனே அது போய்விட்டது. ஆனால் அதற்கு ஒரு வீட்டை எரிக்க உரிமை உண்டல்லவா? அதனால் அது அந்த அடுத்த வீட்டைப் பிடித்துக் கொண்டது.
அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடான வைகறை பத்திரிகையில் 1973ம் ஆண்டு இரண்டாவது இதழில் வெளியான கட்டுரை. இதே இதழில் மரண பயத்தை வெல்வது எப்படி என்றும் அன்னை அற்புதமாகக் கூறி இருக்கிறார். அரவிந்த ஆசிரமம், பாண்டிச்சேரியில் அரவிந்தர் மற்றும் அன்னை நூல்களைப் பெறலாம்.