இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! (Post.14,381)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,381

Date uploaded in London – –13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்த கட்டுரை! 

நட்சத்திர மர்மங்கள்! 

இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! 

ச. நாகராஜன் 

MILKY WAY GALAXY 

உலகில் வானவியலின் உச்சத்தைக் கண்டது இந்திய நாகரிகமே. 

வானத்தை 360 டிகிரிகளாகப் பிரித்ததும், 12 ராசிகளை அதில் அமைத்ததும், 28  நட்சத்திரங்களை அமைத்ததும் இந்திய நாகரிகமே.

அபிஜித் என்ற நட்சத்திரம் காலப்போக்கில் அதன் சுழற்சியினால் இந்த வட்டத்தை விட்டு அகன்றதும் அசுவதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் மட்டும் எந்தக் கணிப்பிற்கும் உதவும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

இதுவே உலகெங்கும் அனைத்து நாகரிகங்களாலும் இன்றளவும் பின்பற்றப்படுவது பிரமிப்பூட்டும் ஒரு விஷயமாகும்.

யஜூர்வேதத்தில் குறிப்பிடப்படும் யாக்ஞவல்க்ய மஹரிஷி சூரிய மண்டலத்தில் 95 வருட சுழற்சியைக் கண்டு அதை அமைத்ததோடு, அது சமச்சீரற்றதாக இருப்பதையும் கண்டார்.

பின்னால் வந்த லகாதர் இன்னும் கிரகங்களின் இயக்கத்தை விரிவாக எழுதினார்.

கல்பம் யுகம் ஆகியவை பற்றி இந்திய வானவியல் மிகத் துல்லியமாகத் தெரிவித்ததோடு அதற்கான வருடங்களையும் நிர்ணயித்துத் தந்தது.

பூமி தோன்றிய காலத்தை இந்திய வானவியல் நிபுணர்கள் நிர்ணயித்ததை கார்ல் சகன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வியப்புடன் நோக்கினர்.

உலகின் அனைத்து நாகரிகங்கள் கூறும் தோற்றத்தை விட இந்திய நாகரிகம் துல்லியமாகக் கூறிய பிரபஞ்ச தோற்றத்தைக் கண்டு வியந்த அவர் நேராக சிதம்பரத்திற்கு வந்து பிரபஞ்ச நடனம் ஆடும் நடராஜரைத் தரிசித்தார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பேயே சித்தாந்த நூல்கள் தோன்றின. 18 சித்தாந்த நூல்கள் அனைத்து வானவியல் ரகசியங்களையும் வெளியிட்டன.

சூரிய சித்தாந்தம் கிரக இயக்கங்களைக் கூறியதோடு அவற்றை ஒன்றோடு ஒன்று பிணைக்கும் விவரத்தையும் தெரிவித்தது.

பின்னர் வந்த ஆர்யபட்டர் பூமி தன்னைத் தானே சுழல்கிறது என்ற விவரத்தைத் தந்தார்.

கணேசர், கேசவர் ஆகியோரின் நூல்கள் இன்றளவும் நமக்கு வழிகாட்டி வருகின்றன.

பிரம்மகுப்தா, பாஸ்கரா ஆகியோரின் நூல்கள் அராபிய நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குச் சென்றன.

வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகியவற்றிலும் பின்னர் வந்த காளிதாஸன் நூல்களிலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் உள்ளன.

ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் உள்ள நட்சத்திரங்களை பாமரரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கதை ரூபத்தில் அனைத்தும் தரப்பட்டன.

பாலகங்காதர திலகர், காளிநாத் முகர்ஜி உள்ளிட்ட அறிஞர்கள் மிகத் தெளிவாக வானத்தில் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் சித்தரிக்கும் நட்சத்திரங்களைச் சுட்டிக் காட்டினர்.

இந்த பிரம்மாண்டமான கலைக்களஞ்சியம் எப்படிப்பட்டது என்பதை விளக்க கீழே இரு உதாரணங்களைப் பார்க்கலாம்.

பிரபஞ்சத்தின் தலை நகரம்

மில்கி வே எனப்படும் பால்வீதி மண்டலத்தில் உள்ள அக்கிலா எனப்படும் திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவை அதி தேவதையாகக் கொண்டது. மகர ராசியில் உள்ளது இந்த நட்சத்திரத் தொகுதி. அக்கிலா தொகுதியில் மேலே உள்ள மூன்று நட்சத்திரங்கள் கருடனின் தலைப்பகுதியை உருவாக்குகின்றன.

பால்வீதி மண்டலத்தில் உள்ள பத்து நட்சத்திரங்களான ஊர்ஸா மேஜர், பூட்டஸ், செர்பன்ஸ், ஓபியுகஸ், தேன் கூடு M 13, கரோனா பொராவிஸ், லிரா, சிக்னஸ், அக்கிலா, டெல்பினஸ் ஆகியவற்றை இணைத்தால் குடை விரித்த பாம்பான ஆதிசேஷனைப் பார்க்கலாம். இதுவே பிரபஞ்சத்தின் தலை நகரமாகும்.

அர்ஜுனனும் பீஷ்மரும்

அர்ஜுனனுக்கு பல்குனன் என்ற பெயர் உண்டு. பங்குனி மாதம் பல்குனி நட்சத்திரத்தில் உதித்ததால் அவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. (பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்பவை பூரம்  மற்றும் உத்தர நட்சத்திரங்களாகும்.)

மகாபாரத யுத்தம் நடந்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக சட்சத்திரத்தில் வான ரேகை சென்றது. இந்த நட்சத்திர தொகுதிக்கு சிகண்டி மண்டலம் (மயில்) என்று பெயர்.

பூரம், உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே வரும் இது தோன்றியவுடன் பீஷ்மர் தனது கொள்கையின் படி சிகண்டியை எதிர்க்காது போரை நிறுத்தி விடுகிறார். அர்ஜுனனின் அம்பால் அவர் வீழ்ந்து படுகிறார். அர்ஜுனன் விட்ட அம்பு நேரே பல்குன நட்சத்திரத்திற்கு நேர் எதிரே 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தை – பீஷ்மரைக் குறி பார்த்து அடித்தன. பீஷ்மர் அடியுண்டு வீழ்ந்தார். இன்றும் கூட அர்ஜுனனின் பல்குன நட்சத்திரம் வானில் உதித்தால் பீஷ்மரின் அவிட்ட நட்சத்திரம் கீழே மறைவதைக் காணலாம்!

இப்படி நூற்றுக் கணக்கில் ஏராளமான வானவியல் குறிப்புகள் இதிஹாஸ, புராணங்களில் உள்ளன. அவற்றை ஆர்வமுள்ளோர் தொகுத்துப் பார்த்து இன்புறலாம்!

***

University of Sydney Museum Pictures-1 (Post No.14,380)

Written by London Swaminathan

Post No. 14,380

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

london swaminathan in the museum 

I have already written about my visit to the Sydney University Museum.

Micro models, Macro models of things, Roman period mummies, stuffed animals, Chinese sculptures, ceramics, Modern paintings ,machines and instruments are arranged in several floors. It was quite with a few visitors when we went there. I took lot of pictures; here I post them in two parts. It is called Chau Chak Wing Museum .

Part one

–subham—

Tags- University of Sydney museum, Chau Chak Wing Museum

 Pictures of 2500 Indian Stamps!- Part 6 (Post.14,379)

Written by London Swaminathan

Post No. 14,379

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  SIX

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

NEHRU STAMPS,  children’s day, geological congress, Rajaram, world map, Aurobindo, Birds, world map, freedom fighters, Patel, Jai Jawan, Aravindar, Dayananda sarasvati, Abraham Lincoln 

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 6, Nehru , children’s day, geological congress, rajaram, world map, freedom fighters, Patel, Jai Jawan, Aravindar, Dayananda sarasvati, Abraham Lincoln, Tilak, Birds

மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது ! (Post.14,378)

Written by London Swaminathan

Post No. 14,378

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

EDGAR CAYCE, THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH

புத்தர் , மஹாவீரர் அகியோருக்கெல்லாம் மிகவும் முன்னாள் தோன்றியவை உபநிஷத்துக்கள்  குறிப்பாக சின்னப்ப பையன் நசிகேதனுக்கு யமன் அளித்த பதில் கடோபநிஷதத்தில் உள்ளது ; இறந்த பின்னர் ஆத்மா அழிவதில்லை; மறுபிறப்பு உண்டு என்று யமன் விளக்குகிறான் . எல்லா உபநிஷத்துக்களையும் ஜூஸ் பிழிந்து கொடுக்கும் பகவத் கீதை 2-22; 2-27  இன்னும் தெளிவாகவே கூறுகிறது.

எட்கர் கேய்ஸ்  என்பவர் 1877- ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எழுத்தறிவில்லாத குடியானவர் குடும்பத்தில் பிறந்தார் அவர்க்கு பிறவியிலேயே சில அபூர்வ சக்திகள் இருந்தன வருங்காலத்தை உரைத்தல், ஒருவரின் நோய் நொடியைக் கண்டுபிடித்தல், அந்த நோயினைத் தீர்த்தல் CLAIRVOYANCE முதலியன சில. அவர்க்கு இந்துமதம் பற்றியோ மறுபிறப்பு பற்றியோ ஒன்றும் தெரியாது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் ஆயினும் ஒருவரின் உடல் நிலை பற்றி ஆராய்கையில் தன்னை அறியாமலேயே அந்த நோயாளியின் பூர்வ ஜன்மத்தைப் பற்றிப் பேசாத தொடங்கினார் . இவை எல்லாம் பதிவாகி அக்கால பத்திரிக்கைகளிலும் வெளியாகின .

அக்கால பிரபல டாக்டர்களிடம் போயும் வியாதி தீராத நோயாளிகள் பலர் இருந்தனர்; அவர்கள் எட்கர்ட்டிடம் வந்தனர் ; அவர் நோயை சரியாகக் கண்டுபிடித்ததோடு அதற்கு கரணம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினைகள் என்று பேசத தொடங்கினார்.  முதலில் அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஆழ்ந்த மயக்க நிலைக்குச் HYPNOTIC TRANCE சென்றுவிடுவார்; பின்னர் நோயாளி பற்றிப் பேசுவார் இவரது அபூர்வசக்தியை அறிந்த ஆர்தர் லாமரஸ் Arthur Lammers, என்பவர் இவர் மோளம் ஜாதகங்களையும் அச்சத்தை கொடுக்காத துவங்கினார் . எட்கர் , மயக்க நிலையிலிருந்து திரும்பியவுடன் தான் சொன்ன மறு பிறப்பு பற்றிய விஷயங்களைக் கண்டு வியந்தார்.

நோயாளியின் பூர்வ ஜென்ம தொழில் என்ன, அவருடைய பூர்வ ஜென்ம பெயர் என்ன அப்போது அவர் செய்த வினை எப்படி நோயாக இந்த ஜென்மத்தில் வந்தது என்ற விவரங்களை அளித்தார். அவருக்கு இந்துமத மறுபிறப்பு விஷயங்கள் பற்றி ஒன்றுமே தெரியாததால் அவரால் அதற்குமேல் விளக்கமும் சொல்ல முடியவில்லை

அவர் 1923 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையுள்ள 22 ஆண்டுகளில் பார்த்த நோயாளிகளின் எண்ணிக்கை 30,000; இதில் மறுபிறப்பு பற்றி சொன்ன நோயாளிகளின் எண்ணிக்கை-2500. எட்கர் 67வயதில் 1945 ஆம் ஆண்டில் இறந்தார்

அவரை வர்ஜீனியா பீச் –சின் அற்புத மனிதர் THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH என்று மக்கள் அழைத்தனர். இப்போதும் வர்ஜீனியா பீச் என்னுமிடத்தில் அவரால் உண்டாக்கப்பட்ட காகித ஏடுகள் மற்றும் விஷயங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன .

****

மறுபிறப்பு பற்றிய பகவத் கீதை மேற்கோள்கள்

वासांसि जीर्णानि यथा विहाय

नवानि गृह्णाति नरोऽपराणि |

तथा शरीराणि विहाय जीर्णा

न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ‌பராணி |

ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ||2-22||

ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.

****

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।

तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|

தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி ||2-27||

பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 2-27

–SUBHAM—

TAGS- மறுபிறப்பு , உண்மை, எட்கர் கேய்ஸ்,  ஆராய்ச்சி, வர்ஜீனியா பீச், அற்புத மனிதர்

ஞானமயம் ஒலிபரப்பில் தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்

GNANAMAYAM BROADCAST PROGRAMME FOR 13-4 -2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

13-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathy Karthikeyan from Chennai

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Two Shrines at SeyJnalur and Thiruaappadi

***

Bengaluru S Nagarajan speaks on Bhadrachala Ramdas.

****

TAMIL NEW YEAR DAY SPECIALEVENT-

TRADITIONAL PANCHANGAM READING BY SRI RAMESH GURUKKAL.

****

Songs by Sathyarthi Chandrasekaran (Senior NRPSI Tamil Interpreter (12904); Japanese>English Translator;

Online Tutor (Tamil; Japanese; English; South-Indian Classical Music)

&  Other Singers.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு – சேய்ஞலூர் மற்றும் திரு ஆப்பாடி ஆகிய இரு தலங்கள் 

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

பத்ராசல ராமதாஸர் – பற்றி உரையாற்றுவார்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்  BY

ஸ்ரீ ரமேஷ் குருக்கள்

*****

பாடல்கள், கீர்த்தனைகள், கிருதிகள்

பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில  மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர்) மற்றும் பலர்.

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,13-4-2025, BROADCAST PROGRAMME

27500 மகள்களுக்கு ஒரு அப்பா! (Post No.14,377)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,377

Date uploaded in London – –12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27500 மகள்களுக்கு ஒரு அப்பா! 

ச. நாகராஜன் 

27500 மகள்களுக்கு ஒரு அப்பாவா? அடேயப்பா, யார் அது? 

அவரது உண்மைப் பெயர் கே.பி.ராமசாமி. கோவையில் உள்ள கே ஆர் பி மில்ஸ் என்ற டெக்ஸ்டைல்ஸ் மில்லின் (KRP Mills) சொந்தக்காரர்.

 இன்றைய நாளில் தினசரி செய்தித் தாள்கள் மற்றும் இணையதள வாயிலாக நாம் காண்பது 20000 பேர் வேலை இழப்பு, 10000 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்திகளைத் தான்.

 ஆனால் கேபி ராமசாமியோ யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையையும் மேலே உயர்த்தி மாற்றி விடுகிறார்.

 ஒரு சின்ன வேண்டுகோளில் இந்த பெரும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

 ஒரு நாள் ஒரு சிறுமி அவரிடம் வந்து, “அப்பா! நான் படிக்க விரும்புகிறேன். ஆனால் பணம் கட்ட வழியின்றி எனது பெற்றோர்கள் என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் நான் படிக்க விரும்புகிறேன்” என்றாள்.

 இதைக் கேட்ட கேபிஆரின் மனம் உருகியது.

அந்த சிறுமியின் வார்த்தைகள் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

 மாதாமாதம் சம்பளத்தைத் தருவதை விட அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையே தர விரும்பினார் அவர்.

மில்லுக்குள்ளேயே ஒரு கல்வி அமைப்பை அவர் நிறுவினார்.

1)   எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் நான்கு மணி நேர படிப்பு.

2)   வகுப்பறைகள், ஆசிரியர்கள், ஒரு பிரின்ஸிபால், ஒரு யோகா பயிற்சியும் கூட.

3)   யாரும் எதற்கும் பணம் தர வேண்டாம். இதற்கான பணத்தை அவரே ஏற்றுக் கொண்டார்.

 இதன் விளைவு என்ன?

 24536 பெண்கள் தங்களது பத்தாவது, பன்னிரெண்டாவது யுஜி  மற்றும் பிஜி டிகிரிகளைப் பெறப் படித்தார்கள்.

அதில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் இப்போது நர்ஸ்களாக, ஆசிரியைகளாக, போலீஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்திலிருந்து 20 தங்க மெடல் பெற்றவர்கள் ஒரு வருடத்தில் மட்டும் உருவாகி விட்டார்கள்.

சரி, இவர்கள் எல்லாம் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள் என்றால்…

இதை எண்ணிக் கவலைப்படவே இல்லை கேபிஆர்.

 “அவர்கள் தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவர்கள் இங்கு இருப்பது ஏழ்மையினால் தான். தங்கள் விருப்பத்தினால் அல்ல. எனது வேலை அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தான்!” என்றார் அவர்.

 படிக்கிறார்கள். வெளியே செல்கிறார்கள். நல்ல ஒரு எதிர்காலத்தை அவர்கள் கொள்கிறார்கள். பிறகு..?

 இன்னும் ஏராளமான பெண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து மில்லுக்கு அனுப்புகிறார்கள்!

சமீபத்திய பட்டமளிப்பு விழா ஒன்றில் 350 பெண்கள் தங்கள் பட்டத்தைப் பெற்றனர்.

அனைவரையும் பார்த்து கேபிஆர் சொன்னார் : “உங்களால் அவர்களை நல்ல ஒரு வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றால் மற்ற பெண்கள் படிப்பதற்கு அது உதவியாக இருக்கும்.”

 பல கோடி ரூபாய் வரும்படி வரும் வணிகத்தை நடத்தும் ஒரு பெரிய மில்லின் சொந்தக்காரர் இன்னும் கொஞ்சம் பிஸினஸ் தாருங்கள் என்று கேட்கவில்லை. மாறாக தனது மில் பணியாளர்களுக்காக தகுதியான நல்ல வேலையைக் கேட்கிறார்.

 இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

 உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று சும்மாவா சொன்னார்கள்!

 ***

More Pictures from Art Gallery, Sydney (Post.14,376)

Written by London Swaminathan

Post No. 14,376

Date uploaded in London –  11 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 In my article on My Visit to Sydney Art Gallery in Australia, I posted some pictures. here is the full quota.

wooden mosquito model

image of the devil


–Subham—

Tags- Sydney, art gallery, Australia , more pictures

Pictures of 2500 Indian Stamps!- Part 5 (Post No.14,375)

Netaji 

Written by London Swaminathan

Post No. 14,375

Date uploaded in London –  11 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

part five

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

Veera Sivaji

Indus Script

Tyagaraja

Sarojini Devi

Purandradas

Foreigners – Roosevelt, Annie Besant, Henri Dunant

–Subham—

Tags– Swami Vivekananda, Veera Sivaji, Netaji, Pictures ,2500 Indian Stamps, Part 5, Foreigners, on stamps Roosevelt, Annie Besant, Henri Dunant

கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல தரிசனம் (Post No.14,374)

 Written by London Swaminathan

Post No. 14,374

Date uploaded in London –  11 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

FAMAOUS Mahamakam tank at kumbakonam

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2025 மார்ச்  16-ஆம் தேதி கும்பேஸ்வர கோவிலுக்குள் நுழைந்தோம் நல்ல சுவாமி தரிசனம் கிடைத்தது . சூரியன் மறைவதற்குள் மகாமக குளத்தைக் காரில் வலம் வந்து கோவிலுக்குள் பிரவேசித்தோம் சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் சாய ரக்ஷை மஹா தீபாராதனை நடந்தது; நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில்  ஸ்ரீவத்சம் முதியோர் இல்ல கெஸ்ட் ஹவுசுக்குத் திரும்பிவந்து நல்ல இரவுச் சாப்பாட்டினை உண்டு மகிழ்ந்தோம்

(அங்கு பாஸ்போர்ட் பறிபோய் அதை மறுநாள் ஒரு குருக்கள் மூலம் மீட்ட கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன்)

இந்த முறையும் கோவில் நுழைவாயிலில் யானை நின்றது ; பலரும் ஆசீர்வாதம் பெற்றனர்; அதையும் படம் எடுத்தேன்

மகாமக குளம் , மற்றும் கோவில் பற்றி முன்னர் எழுதிய இணைப்புகள் கீழே உள்ளன .

விருந்தினர் அறைக்குச் செல்வதற்கு முன்னர் மீண்டும் ராமசாமி கோவிலுக்குச் சென்று ராம பிரானையும் தரிசித்தோம்;   முடிந்த மட்டும் படங்கள் எடுத்தேன். .

****

 மீண்டும் கும்பகோணம் ராமசாமி கோவில் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் ராம சுவாமி கோவில் பற்றி விரிவான படங்களுடன் பல கட்டுரைகள் எடுத்திவிட்டேன் (இணைப்புகளில் காண்க)

மீண்டும் புல்லட் பாயிண்டில்…….

அற்புதமான ராம பட்டாபிஷேகக் காட்சி கர்ப்பக்கிரகத்தில் உள்ளது; ராம, லட்சுமண, பரத ,சத்ருக்னர்  முன்னிலையில் ஆஞ்சனேயர் வீணை வாசிக்கிறார்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது 

தூண் எங்கும் ராமாயண, கிருஷ்ணாவதார, தசாவதார சிற்பங்கள்! 

சுவரெங்கும் மூன்று வரிசையில் அற்புத வண்ணங்களில் சித்திர ராமாயண ஓவியங்கள்  ; அனுமனை இவ்வளவு அழகாகக் காட்டும் ஓவியங்கள் வேறெங்கும் இராது .

பூட்டி வைக்கப்பட்ட அறையில் அழகான அனுமன் ஓவியம் உள்ளது; கம்பிக் கிராதி வழியாகக் காணலாம் 

காணக் கண்கோடி வேண்டும்! 

கோவில் அதிகாரிகளே அத்தனை சித்திரங்களையும் படம் எடுத்து நூலாக வெளியிட்டால் நன்றாக விற்பனை ஆகும் .

அனைவரும் பார்க்க வேண்டிய கோவில்.

*****

MY OLD ARTICLES ON THESE TWO TEMPLES

கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11,860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,860

Date uploaded in London – –  1 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கும்பகோணத்தில் இறங்கிய 19-2-2023 அன்றே ஆறு கோவில்களைத் தரிசனம் செய்தோம் !!! அப்படி ஆசைப்பட்டதில் கொஞ்சம் இழப்பும் இல்லாமல் இல்லை. கடைசியாக கும்பேஸ்வரர்  தரிசனத்தை வைத்துக்கொண்டதால் இரவு எட்டு மணி ஆகி விட்டது. நல்ல புகைப்படம் எடுக்க முடியவில்லை. மகாமக குளத்தையும் காரில் வலம் வந்தோமேயன்றி இறங்கிப் பார்க்க முடியவில்லை. இருந்த போதிலும் கும்பேஸ்வரர் நல்ல தரிசனம் கொடுத்தார்.

கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம்  அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் .

என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பார்ப்பனர் இடையே ஒரு பழமொழி உண்டு. அவனாஅவன் மாமாங்கத்துக்கு ஒரு முறை வந்தாலே அதிசயம் என்போம். அத்தி பூத்தாற்போல என்பதற்கு இணையான பழமொழி இது. அதாவது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம்! திருவிழா போன்றது , அபூர்வமாக நிகழக்கூடியது என்பது இதன் பொருள்.

கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்து, பின்னர் கும்போணம்

 (இப்படி உச்சரித்தால் அவன் தஞ்சாவூர்க்காரன் என்று பொருள் ; அல்லது எம்பளத்தைந்து 85, திருப்ளாத்துறை , திருக்ளாவூர் என்பதைவைத்தும் கண்டுபிடிக்கலாம்).

சென்று மஹாமக குளத்துக்குச் சென்றதை கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன (என் முந்தைய கட்டுரைகளில் கல்வெட்டு விவரம் காண்க )

தஞ்சாவூர்ப் புராணத்தை இன்னும் ஒன்று சொல்லி முடித்து விடுகிறேன்  . ஒரு முறை நான் என்  நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கத்தரிக்காய் ரசவாங்கி ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் கத்தரிக்காய் பிட்டளை தான் செய்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னேன். நீங்கள் தஞ்சாவூர்க்காரரா?  என்றார்.. சிரித்துக்கொண்டே ஆமாம், அதற்கும் ரசவாங்கிக்கும் என்ன சம்பந்தம் ? திடீரென்று கோகுலகுஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே! என்று வினவினேன். ரசவாங்கி என்பது மராட்டிய ஐட்டம் item ; தஞ்சாவூர், சிவாஜி மன்னரின் பரம்பரையினர் (சரபோஜி)ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அந்த உணவு பிரபலமாகியது என்றார் . புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.

xxx

சென்ற முறை கும்பகோணம் சென்றது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர். தொல்பொருட் துறை பேரறிஞர்  டாக்டர் இரா. நாகசாமி நடத்திய 1000 மைல் இலவச வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் சென்றதுதான். அதற்குப்பின்னர் கார் மட்டும் அவ்வழியே பறக்கும். இறங்கியது இல்லை .

கும்பேஸ்வர் என்னும் பெயரில் இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமான் மங்களாம்பிகை என்னும் தேவி சகிதம் இந்தக் கோவிலில் இருக்கிறார். ஊர்ப்பெயர் முதல் கடவுள் பெயர் வரை எல்லாம் அமிர்தம் சம்பந்தப்பட்டது. அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப பதிகங்களில் பாடிப் பரவியுள்ளதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கும்பேஸ்வரரின் புகழ் பரவி இருந்ததை அறிய முடிகிறது . குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் அமிர்த கலசத்துடன் தொடர்புடையதே. அமுத கலசத்திலிருந்து தோன்றிய இறைவன், அமுதக்  குடம் சிந்திய திருத் தலம் என்ற பொருளில் அமுத கும்பேசர் என்றும் திருநாமம்.

இறைவி மங்களாம்பிகை, மந்திர பீடேஸ்வரி எனப்படுவதால் இந்தத்தலம் சாக்தர்களுக்கும் முக்கியமானது. மந்திர சக்தி நிறைந்த பீடத்தில் இறைவி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

xxx

தீர்த்தவாரி

இந்தக் கோவில் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது. மஹாமகம் குளத் திருவிழா வடக்கேயுள்ள கும்பமேளாவுக்கு நிகரானது. அந்தக்காலத்தில் சுற்றுவட்டாரக் கோவில் மூர்த்திகள் அனைவரும் இங்கே தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். கும்பேஸ்வர சிவன் தான் தலைவர்.

அது மட்டுமல்ல கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 6 கோவில்களின் மூர்த்திகள் சப்தஸ்தான திருவிழாவிலும் பங்கு கொள்கின்றனர். (குடந்தையையும் சேர்த்து 7= சப்த)

xxxx

விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண  தேவராயன்

மஹாமக விழாவுக்கு விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண  தேவராயனே துங்கபத்ரா நதிக்கரையில் இருந்து வந்திருப்பானால் இது தென்னிநிதிய இந்துக்களை ஒற்றுமைப்படுத்தியதையும் அறியலாம் . அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதனும், திருவலம் சுழி வெள்ளைப் பிள்ளையாரும் இக்கோவிலுக்கு மேலும் மஹிமை சேர்க்கின்றனர் .

மகா மக குளத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லும். குள த்தைச் சுற்றியுள்ள மூர்த்திகளின் கதைகளை எழுதப்போனால் அது கும்பகோண  என்சைக்ளோபீடியாவாகி  விடும்.

12 ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாத மக நட்சத்திரத்தன்று காசியிலுருந்து கங்கை நதி , மஹா மக குளத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்    .

12 வருஷத்திற்கு ஒரு முறை, குரு  சிம்மராசியில் பிரவேசிக்கும் காலம் , மஹா மகத் தீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர்.

குடந்தைக் கோவிலின் ஐந்து தேர்கள், சுற்றியுள்ள கோவில்களின் பல்லக்குகள் எல்லாம் சீரழிந்து போயிருந்தன. அண்மைக்காலத்தில் இவை சோழர்கால சீரும் சிறப்பும் புடை சூழ பவனி வருகின்றன .

xxxx

கும்ப முனி, ஏம ரிஷி

நாங்கள் பிரதான சந்நிதிகளை விட்டு வெளியே வருகையில் தொலைலிருந்தே கும்ப முனி சந்நிதிக்கு கும்பிடு போட்டோம்.இந்தக் கோவில் , ஏம ரிஷி ,கும்ப முனி முதலியோரால் பூஜிக்கப்பட்ட தலம் .

கும்ப முனி , குட முனி என்பது அகத்தியரைக் குறிக்கும். அகத்தியர் சித்தியான தலங்களில் குடந்தையையும், திருவனந்தபுரத்தையும் சொல்லுவார்கள். இரண்டு அகத்தியர்களை இது குறிப்பதாகக் கொள்ளலாம் . ரிக்வேதம் சொல்லும் லோபாமுத்திரை- அகத்தியர் வேறு ; அவர் பரம்பரையில் வந்த அகத்தியர்கள் வேறு. தென் கிழக்காசியாவுக்குச்  சென்று ஏழு, எட்டு நாடுக்ளில் இந்து சாம்ராஜ்யக் கொடியைப் பறக்கவிட்ட அகத்தியர் வேறு. குள்ளமாக இருக்கும் பேரை இன்றும் அகத்தியர் என்று  அழைப்பதுண்டு (லண்டனில் கூட ஒரு குருக்களுக்கு நாங்கள் அகத்தியர் என்றே சொல்லுவோம் ; குருக்கள் மிகவும் குட்டையானவர்)

கும்பகோணத்தின் ஒரு புறம் காவிரி ஆறும் மற்றோர்  புறம் அரிசிலாறும் ஓடுகின்றன .

Xxx

தருமபுர ஆதீனத் தேவரப்பதிப்பு மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது :

இத்தலம் தேவாரங்களில் குட மூக்கு என வழங்கப்பெறும்.பஞ்சக்ரோச தலங்கள் சூழ்ந்தது .

கங்கை, யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து

வழிபடும் பெருமை உடையது.

பதினான்கு கோயில்களையும் பதினான்கு தீர்த்தங்களையும் உடையது..

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சோழ அரசர்கள் இதைத்   தலைநகராகக் கொண்டனர்.

சோழர்கள் இருந்த இடமாகிய சோழ மாளிகையும் , இடிந்துபோன கோயில்களும் இதன் பழமைக்கு அறிகுறியென்பர் பெர்கூசன் (James Fergusson) என்னும் அறிஞர்.

ஏழாம் நூற்றாண்டில் மூலைக்கூற்றம்  என வழங்கட்டதென்பர் பர்னல் (Burnell) துரை .

இங்கேயுள்ள பாடல்பெற்ற சிவத் தலங்கள் திருக்குடமூக்குகுடந்தைக் கீழ்க்கோட்டம்குடந்தைக் காரோணம் என்பன .

குடமூக்கு கும்பேசுர சுவாமி கோயில் , கீழ்க்கோட்டம் நாகேஸ்வரன்  கோயில், காரோணம் காசி விசுவநாதர் கோயில் . இவையன்றிச் சோமேசம் முதலிய பல கோயில்கள் உள்ளன

இத்தலம் மூர்க்க நாயனார் வாழ்ந்த தலம் .

இறைவன் பெயர் கும்பேசர், அமுத கும்பேசர், ஆதி கும்பேசர்

அம்மையின் பெயர் – மங்களாம்பிகை

பிரமன், அகத்தியர் , கிருத வீரியன், வீர வர்மன், இந்திரன், மாந்தாதா முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்

கல்வெட்டு

இத்தலம் உய்யக்கொண்டான் வளநாட்டு வட கரம்பையூர் நாட்டுத் திருக்குடந்தை என வழங்கும் .

கல்வெட்டுகள் பெரும்பாலும் நாகேச்சரமாகிய கீழ்க்கோட்டத்தைப் பற்றியனவே . குடமூக்கு என்னும் இத்திருத்தலத்தைப் பற்றியன அல்ல.

xxx

My old article

மகாமகம்

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag

28 Aug 2019 — Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com …

-subham—

Tags–  கும்பேசர், கும்பமுனி, மகாமகம், குளம், விழா ஸப்தஸ்தானம், மாமாங்கம், கிருஷ்ணதேவராயர், 

கும்பகோணம் ராமசாமி கோவில் 

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,827

Date uploaded in London – –  22 MARCH 2023                  

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2 

Post No. 11,828

Date uploaded in London – –  22 MARCH 2023 .

   உலகம் முழுதும் ஹனுமான் (Post No.13, 667)   

Post No. 13,667

Date uploaded in London – 14 September 2024 .    

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,827

Date uploaded in London – –  22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.கம

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2 

Post No. 11,828

Date uploaded in London – –  22 MARCH 2023 .

   உலகம் முழுதும் ஹனுமான் (Post No.13, 667)   

Post No. 13,667

Date uploaded in London – 14 September 2024 .       

—subham—

Tags-மீண்டும் , கும்பகோணம், கோவில்கள் , ராம சாமி கோவில், கும்பேஸ்வரர் கோவில் , மார்ச் 2025

பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா மனித குலத்தின் மிகப்பெரிய கூட்டம்! (Post.14,373)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,373

Date uploaded in London – –11 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

15-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா மனித குலத்தின் மிகப்பெரிய கூட்டம்! 

ச. நாகராஜன் 

காலித் உமர் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்.

அவர் கும்பமேளாவைப் பற்றி, “ பூமி என்ற கிரகத்தில் ஹிந்துக்களின் விழாவில் மனிதகுலத்தின் மிகப் பெரிய கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். 

அதன் சாரம் இது: 

“அது ஒரு தூய்மையான சந்தோஷம். பரவசம். 

ஒரு மிருகமும் பலி இடப்படவில்லை. ஒரு துளி ரத்தமும் சிந்தப்படவில்லை. வன்முறை இல்லை. ஒரு அரசியலும் இல்லை. ஒரு மதமாற்றமும் இல்லை. ஒரு பிரிவும் இல்லை; ஒரு பாகுபாடும் இல்லை. ஒரு விற்பனையும் இல்லை. ஒரு வியாபாரமும் இல்லை!

 அது தான் ஹிந்து மதம்! 

ஒரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மனித குலத்தில் இவ்வளவு பேர்கள் கூடியது இல்லை. அது மதம் சார்ந்ததாக இருக்கட்டும்; விளையாட்டாக இருக்கட்டும்; போராக இருக்கட்டும். ஒரு ஈமச் சடங்காக இருக்கட்டும் அல்லது ஒரு திருவிழாவாகத் தான் இருக்கட்டும்; இத்தனை பேர் உலகில் இதுவரை கூடியதே கிடையாது!

 அது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் அது மஹா கும்பமேளா ஆகிவிட்டது – 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் பெரிய திருவிழா!

 உலகம் அதைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கேட்டு வாயைப் பிளக்கிறது!

40 கோடி பேர்களுக்கும் மேல் 44 நாட்களில் கூடினர். முதல் நாளில் மட்டும் ஒன்றரை கோடி பேர்கள் புனித ஸ்நானம் செய்தனர்.

4000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது நடந்தது. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் கூடாரங்கள் இருந்தன. 3000 சமையலறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்காக நாற்பதினாயிரம் பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நான்காயிரம் கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. வியக்க வைக்கும் ஒரு புள்ளி விவரம் இல்லையா இது?!

 எனது வியப்பும் பிரமிப்பும் உலோகாயத விஷயத்திலோ, புள்ளி விவரத்திலோ அல்லது நிகழ்வின் பல்வேறு அம்சங்களிலோ அல்ல.

 அது நமது கண்கள் காணும் காட்சி பற்றியதும் இல்லை. அது எண்ணிக்கை அல்லது அளவைப் பற்றியும் அல்ல.

 மனிதகுலம் பிரபஞ்சத்தோடு எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி எண்ணியதால் ஏற்பட்ட மலைப்பு அது!

 வானில் உள்ள கிரகங்களோடு எப்படி மனித குலம் தொடர்பு படுத்தப்படுகிறது என்பதையும் அதன் இயல்பான நகர்வுகளும் ஆன்மீக விளைவும் எப்படி மனித குலத்தின் விதியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க உதவுகிறது என்பதைப் பற்றியும் எண்ணித் தான் இந்த பிரமிப்பு!

 இதில் அதிகாரம், அந்தஸ்து எதுவுமில்லை. அரசியல் பின்னணியும் இல்லை. அது தானாகவே ஏற்பட்ட நம்பிக்கை. அது ஒரு திட்டமிடப்பட்ட மதக் கூட்டம் இல்லை. அது பாரம்பரியத்தின் வழியே வந்த வழிபாடு!

 ஹிந்து தர்மம் என்பது பிரபஞ்சத்துடன் மனித குலம் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு அழகிய புரிதலாகும். அது நமது காலடியில் உள்ள தாவரங்களில் ஆரம்பித்து பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களுடான நமது இணைப்பைக் குறிக்கும் மிக அதி நவீன முன்னேறிய அறிவாகும்.

 தியானம் செய்கின்ற சாதுக்களின் பிரக்ஞையும் கூட காலம் வெளி ஆகியவற்றைத் தாண்டிச் செல்ல வல்லதாயிருக்கிறது! என்னையும் பிரபஞ்சத்தையும் வேறாகச் சொல்லும் த்வைதம் என்னும் மாயையை அது உடைத்து ஒன்றாக்குகிறது

 இன்றைய விண்வெளிப் பயணம் என்பது ஒரு கற்காலத் தொழில்நுட்பம் தான் என்றே நான் நினைக்கிறேன். நமது பௌதிக உடல்களில் நாம் இல்லை. தூய்மையான பிரக்ஞையாக, தெய்வீக ஒளியின் அங்கமாக, வடிவமற்ற காலம் கடந்த ஒரு நிலையை எட்டும்போது தூரம், காலம் ஆகியவற்றைத் தாண்டியவர்களாக ஆகி விடுகிறோம் நாம்!

 இமயமலை சாதுக்களும் க்வாண்டம் மெகானிக்ஸும் இணைந்து ஒரு புனித ஸ்நானத்தை பிரம்மாண்டமான அறிவுக் கடலில் குளிக்கும் பிரமிப்பு அது!

 ஹிந்துவாக இருப்பது என்பது உங்களின் இயற்கையை நிலையை உணரும் ஒரு நிலையாகும்.

இயற்கையே ஹிந்து!”

 அற்புதமான ஒரு கட்டுரையை வழங்கிய காலித் உமர் என்ற இந்த பாகிஸ்தானிய பத்திரிகையாளரை உலகமே பாராட்டுவதில் வியப்பில்லையே!

***