8 Pictures of 2500 Indian Stamps!- Part 8 (Post.14,389)
Written by London Swaminathan
Post No. 14,389
Date uploaded in London – 14 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART EIGHT
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
MARI CURIE, MARTIN LUTHER KING, INDIAN BIRDS, POET GHALIB, JAKIR HUSSAIN, SHIPS, JHALIANWALA BAGH, MAXIM GORKY, WORLD TAMIL CONFERENCE, BHAGAT SINGH, RANA PRATAP,
–Subham—
Tags- MARI CURIE, MARTIN LUTHER KING, INDIAN BIRDS, POET GHALIB, JAKIR HUSSAIN, SHIPS, JHALIANWALA BAGH, MAXIM GORKY, BHAGAT SINGH, RANA PRATAP, WORLD TAMIL CONFERENCE
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? என்று கேட்டால் பலருக்கும் சரியான விடை தெரியாது.
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? என்றால் மஹாத்மா காந்தி என்று பலரும் உளறுவது போல மாக்ஸ்முல்லர் என்று பதில் சொல்லி தங்கள் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்பு போட்டுக் காட்டிக்கொள்வார்கள் அறியாத பேர்வழிகள் ; ; ஆயிரம் ஆயிரம் தேச பக்தர்கள் குண்டு அடி பட்டும், தூக்கில் தொங்கியும், சிறை சென்றும் வாங்கிக்கொடுத்தது நமது சுதந்திரம் !
ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார் என்றால் பேராசிரியர் எச் எச் வில்சன் Horace Hayman Wilson ஆவார்
திருக்குறளுக்கு இன்றும் கூட பல திராவிட சுள்ளான்கள் உரை எழுதும் அவலத்தைத் தமிழுக்கு வந்த சாபக்கேட்டினைப் பார்க்கிறோம். பரிமேல் அழகர் சொன்ன உரையை வைத்துக்கொண்டு பல இடங்களில் திரித்து எழுதுவது திராவிடங்களின் வேலை; அது போல பேராசிரியர் வில்சன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு மாற்றி எழுதியவர் வில்ஸனிடம் வேலை பார்த்த மாக்ஸ்முல்லர்!
இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ; வில்சன் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டு சம்ஸ்க்ருத, வேத பண்டிதர்களிடம் கற்றவர் ; மாக்ஸ்முல்லருக்கு இந்தியாவும் தெரியாது; வேத பண்டிதர் என்றால் என்ன என்றும் தெரியாது. இந்தியாவுக்கு வந்தால் தன்னை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்று அஞ்சி இந்தியாவுக்கு வந்ததே இல்லை; ஒரு வேளை, அவர் சந்தித்த ஒரே இந்து விவேகானந்தர் தான் போலும் ; ஸ்வாமி விவேகானந்தர் வேதம் கற்றவர் அல்ல; வேத பண்டிதரும் அல்ல. மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்க்ருதம் பேசத் தெரியாது என்பதால் அவரைக் கண்டவர்கள் ஆங்கிலத்திலேயே உரையாடியதையும் எழுதிவைத்துள்ளனர்.
மாக்ஸ்முல்லர் , யாரிடம் வேலை பார்த்தரோ அவரது புகழினைக் காண்போம்.
****
யார் இந்த வில்சன்?
Horace Hayman Wilson (26 September 1786 – 8 May 1860)
பேராசிரியர் எச் எச் வில்சன் கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஒரு சாதாரண உதவியாளராக 1808- ஆம் ஆண்டில் கல்கத்தாவுக்கு வந்தார். அவருக்கு ரசாயன பாடத்தில் தேர்ச்சி இருந்ததால் கல்கத்தா நாணயசாலையில் தரம் பிரிக்கும் பரிசோதகராக இருந்தார். ; இந்துக்களின் குணாதிசயங்களைக் கண்டு அதிசயித்துப்போன அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதத்தைக் கற்றார். பின்னர் வேத பண்டிதர்களின் உதவியுடன் சாயன பாஷ்யத்தை அடிப்படையாக வைத்து ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் .
அவர் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு இந்தியாவில் இருந்து இந்து மதத்தை அறிந்தார்; நேரில் எல்லாவற்றையும் கண்டார். இந்தியாவுக்கே வராத, வேத பண்டிதர்களையே காணாத, வேதத்தையே காதில் முறையாகக் கேட்டறியாத மாக்ஸ்முல்லரை ஒப்பிட இது உதவும்.
பேராசிரியர் எச் எச் வில்சன், ரிக்வேதம் மட்டுமின்றி விஷ்ணுபுராணம் , காளிதாசனின் மேகதூதம், சம்ஸ்க்ருத இலக்கணம் ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். இவை தவிர ரசாயன நூல்களையும் எழுதியுள்ளார்.
அவர் கல்கத்தா சம்ஸ்க்ருத கல்லூரியிலும் பொறுப்புவகித்தார் இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உருவாக்கிய ஸம்ஸ்க்ருதத் துறையின் முதல் பேராசிரியர் பதவியில் 1832- ஆம் ஆண்டில் பேராசிரியர் எச் எச் வில்சன் அமர்த்தப்பட்டார்.
****
மத வெறிபிடித்தவன் துறை
ஆனால் வில்ஸனும் அவரைத் தொடர்ந்து மாக்ஸ்முல்லரும் பதவிவகித்த இந்த போடன் பேராசிரியர் பதவி இந்து மத விரோதியால் உருவாக்கப்பட்டது; இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்ற இந்தத் துறையை நிறுவுவதாக போடன் என்பவன் அறிவித்தான் .
The position of Boden Professor of Sanskrit at the University of Oxford was established in 1832 with money bequeathed to the university by Lieutenant Colonel Joseph Boden, a retired soldier in the service of the East India Company.
He wished the university to establish a Sanskrit professorship to assist in the conversion of the people of British India to Christianity, and his bequest was also used to fund scholarships in Sanskrit at Oxford.
.இப்படி ஒரு ஒரு அயோக்கியத் துறைக்குத் தலைமைப் பதவி வகித்தாலும் இந்துக்களைப் புகழந்தே வில்சன் பேசியுள்ளார் .
இங்கிலாந்துக்குத் திரும்பியவுடன் அவர் இந்துக்களைப் பற்றிச் சொன்னது பின்வருமாறு :
“கல்கத்தாவில் நாணயசாலையின் தொழிலாளர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது ;அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள் தமது பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்; அந்த மகிழ்ச்சி பொங்கும் அறிவு பொழிந்த முகங்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவர்கள் மது வகை எதையும் குடிப்பதில்லை. ஒழுங்கு முறையை மிகவும் அனுசரிக்கிறார்கள்; சொன்னதைச் செய்கிறார்கள்; அவர்களிடம் சூதுவாது கிடையாது; மற்ற நாடுகளில் காவல், பாதுகாப்பு ஆகிய எச்சரிக்கை நடவடிகைகள் தேவை ; காலத்தாவில் இது இல்லை ; இவர்களிடம் அடிமைப் புத்தி துளியும் இல்லை”.
(இதை பாஹியான், யுவாங் சுவாங் ஆகியோர் புகழுரையுடன் ஒப்பிடலாம் வீட்டுக்குப் பூட்டுப் போடாத ஆட்சி நடந்த நாடு இது ; ஆனால் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று பாரதியார் குறிப்பிட்டார்; அந்த ஆயிரம் ஆண்டுக்குப்பின்னர் இந்துக்களின் தரம் தாழ்ந்ததையும் நாம் அறிவோம் ;புதுச்சேரியில் பணிபுரிந்த ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய துபாஷி டயரி- நாட்குறிப்பில் இந்த வீழ்ச்சியைக் காணலாம்)
“ பண்புகளையும் நேர்மையையும் சொல்லிலும் செயலிலும் காட்டுகிறார்கள் ; இவர்களுக்கு உரிமைகளை அளித்து நட்பு பாராட்டினால் மிக்க தரமான நகைச்சுவையையும் அனுபவிக்க முடிகிறது நம்மை உயர்தரமாகக் கிண்டல் செய்து நம்மை மகிழ்விக்கிறார்கள்”.
சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பற்றியும் பேராசிரியர் வில்சன் கூறுகிறார்:
“எனக்கு ஓய்வு கிடைத்த நேரங்களில் சம்ஸ்க்ருதம் படிக்கத் துவங்கினேன். பல வித்வான்கள் அறிமுகம் ஆனார்கள்; இவர்களிடம் பரி பூரண ஞானத்தையும், மதி நுட்பத்தையும் செயல்முனைப்பையும் , சத்தியம் பேசுவதையும், சுவையாக உரையாடுவதையும் காண முடிந்தது. இவர்களுடைய பேச்சில் இனிமையும் பெருமிதமும் துளிர்த்தது ; ஹிந்து வித்வான்களிடம் அதிசயத்தக்க எளிமை இருக்கிறது. தன்னடக்கம் இவர்களிடையே இயல்பாகவே இருக்கிறது ; ஆனால் ஐரோப்பியர்களின் தொடர்பால் சிலரிடம் ஆடம்பரம் குடிகொண்டு வருகிறது.
****
பேராசிரியர் வில்சன் வகித்த பதவிகள்
1811- 1833 வங்காள ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளர்;
1833- ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்;
1836- லண்டன் இந்தியா ஹவுஸ் நூல், நிலைய தலைவர்
1837- ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் டைரக்டர்.
****
வில்சன் எழுதிய நூல்கள்
1813 The Mēgha Dūta; or, Cloud messenger by Kālidāsa (Revised Second Edition, 1843)
1819 A Dictionary, Sanscrit and English (Revised Second Edition, 1832)
1827 Select Specimens of the Theatre of the Hindus Volume 1, Volume 2 (Revised Second Edition, 1835 Volume 1, Volume 2)
1827 Documents Illustrative of the Burmese War
1828 Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts, co-authored with Colin Mackenzie
1828 Sketch of the Religious Sects of the Hindus, in Asiatic Researches, Volume XVI, Calcutta. (Expanded edition, 1846)
1840 The Vishnu Purána: a system of Hindu mythology and tradition
1841 Travels in the Himalyayan Provinces of Hindustan and the Panjab… Volume 1, Volume 2
1841 Ariana Antiqua: A descriptive account of the antiquities and coins of Afghanistan
1841 An Introduction to the Grammar of Sanskrit Language for the Use of Early Students
1845–48 The history of British India from 1805–1835 Volume 1, Volume 2, Volume 3
1850–88 Rig-veda Sanhitá : a collection of ancient Hindu hymns Volume 1, Volume 2, Volume 3, Volume 4, Volume 5, Volume 6
1852 Narrative of the Burmese war, in 1824–25
1855 A glossary of judicial and revenue terms and of useful words occurring in official documents relating to the administration of the government of British India
1860 The Hindu History of Kashmir
1862–71 Posthumous Collected Edition: Works by the Late Horace Hayman Wilson Volume 1: Religion of the Hindus Vol 1, Volume 2: Religion of the Hindus Vol 2, Volume 3: Essays on Sanskrit Literature Vol 1, Volume 4: Essays on Sanskrit Literature Vol 2, Volume 5: Essays on Sanskrit Literature Vol 3, Volume 6: The Vishnu Purana Vol 1, Volume 7: The Vishnu Purana Vol 2, Volume 8: The Vishnu Purana Vol 3, Volume 9: The Vishnu Purana Vol 4, Volume 10: The Vishnu Purana Vol 5, Volume 11: Theatre of the Hindus Vol 1, Volume 12: Theatre of the Hindus Vol 2
Principles of Hindu and Mohammedan Law
Metaphysics of Puranas
எச்சரிக்கை
மாக்ஸ்முல்லர் ஆகட்டும் வில்சன் ஆகட்டும் ; இவர்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறேன் என்று கையெழுத்துப் போட்டு Boden Professor of Sanskrit போடன் பேராசிரியர் பதவியை ஏற்றவர்கள் இதை நிர்வகித்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ இன்று வரை ஐயோ , பறையா போன்ற சொற்களை தமிழ்ச் சொற்களாக அகராதியில் சேர்த்து தமிழன் அசிங்கமானவன் என்று காட்டி வருகின்றன. பறையா, ஐயோ சொற்களை நீக்குக என்று குரல் கொடுப்பவன் நான் ஒருவன்தான் ! ஆகையால் இந்து விரோத துறைகளை இனம் கண்டு உலகிற்கு அறிவிப்பது நம் கடமை. இப்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகம் இதைவிட அதி திகமான விஷமங்களில் ஈடுபட்டு வருகிறது .
— சுபம்—
Tags- மாக்ஸ்முல்லர் , பேராசிரியர் வில்சன், ரிக் வேதம் ,மொழிபெயர்த்தவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 13-4-2025
Collected from popular national dailies and edited for broadcasting.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்து வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13-ஆம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவருக்கும்,
நாளை துவங்கவிருக்கும்
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
******
முதலில் ராமர் கோவில் பற்றிய புதிய செய்தி
அயோத்தி கோவிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு
அயோத்தி ராமர் கோவிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.
எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார் கட்டப்பட்டு வந்தது. இப்பணியும் முழுமையடைந்து மே 23-ல் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா நேற்று கூறும்போது, “இந்த மாத இறுதியில் ராம் தர்பாரில் ஸ்ரீராமர், சீதா, பரதன், லஷ்மணன், அனுமன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இவை உள்பட கோயிலின் அனைத்து சிலைகளும் ராஜஸ்தானின் மக்ரானா சலவை கற்களால் ஜெய்ப்பூரில் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் வந்துசேர உள்ளன என்றார்.
இத்துடன் கோவில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, இறுதியில் வளாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது.
ராமர் கோவில் வளாகத்தில் சூர்யதேவ், பாக்வதி, அன்னபூர்ணா, சிவன், விநாயகர், அனுமன் ஆகிய கடவுள்களுக்கும் கோவி ல்கள் அமைகின்றன. மேலும் சப்தரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்திய முனி, சிஷாத்ராஜ், சபரி, அகல்யா ஆகியோருக்கும் ஏழு கோவி ல்கள் இடம் பெறுகின்றன.
தியாகராஜர், புரந்தரதாசர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு புனிதரின் சிலைகளும் அமைகின்றன.
அயோத்தியில் ராமர் மீது சூரிய ஒளி
ராம நவமியனறு, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிர்ந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், ராம கீர்த்தனங்கள் நடத்தப்பட்டன.
நண்பகல் 12:00 மணிக்கு, குழந்தை ராமர் நெற்றியில் நேரடியாக திலக வடிவில் படர்ந்த சூரிய ஒளியை, பக்தி பரவசத்துடன் ஏராளமானோர் தரிசித்தனர். அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டன. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் மூன்று நிமிடங்கள் நீடித்தது.
மாலையில் இரண்டு லட்சம் நெய் தீபங்கள் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டன.
லக்னோவில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி, மங்காமேஷ்வர், காளி பாரி மற்றும் சைலானி மாதா கோவில்களிலும் ராம நவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரம்பரிய கன்னிகா பூஜையை நிகழ்த்தினார். துர்காதேவியின் வடிவமாக அலங்கரிக்கப்பட்ட ஒன்பது சிறுமியருக்கு அவர் பாதபூஜை செய்தார்.
வாரணாசியில் உள்ள ராமர் கோவில்களில், அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சம்பல் மாவட்டம் சந்தவுசியில் உள்ள 51 அடி உயர ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேற்கு வங்கத்தில் முதல் ராமர் கோவிலுக்கு பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார் வரலாறு காணாத அளவில் 2,500 ஊர்வலங்கள் நடந்தன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கல்வீச்சு நடந்தது
*****
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கண்டனம்
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என , பாரதீய ஜனதாக கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரத்தில் நடைபெற்ற தத்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை. இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார் எனறும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர் ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக அவர் கூறினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? என்றும், எனவே பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்து அன்னையர் முன்னணியும் மாநிலம் எங்கும் ஏப்ரல் 15-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது .
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சி கோரியுள்ளது
******
புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்
விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
*********
கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!
திமுக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரதீய ஜனதாக கட்சி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களிலும் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
****
மருதமலை கோவில் வேல் திருட்டு– வெங்கடேஷ் சர்மா கைது
மருதமலை முருகன் கோயிலில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்;
முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படும் மருதமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏப்ரல் 2ஆம் தேதி மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, வேல் திடீரென திருடுபோனது.
தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சாமியார் வேடத்தில் வந்த ஒருவன் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அப்போது பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது.
வெங்கடேஷ் சர்மா, அதனை சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்று வெள்ளி தட்டு, குவளை வாங்கியுள்ளார். இதன் பின்னர் திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
****
தனது சொத்துக்களுக்கு யார் வாரிசு? – சர்ப்ரைஸ் அளித்த நித்தியானந்தா!
தன் பெயரில் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஆன்மிக ஏஐ நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தாம் எழுதிய ஆன்மிக நூல்களே தனது சொத்துக்கள் என தெரிவித்துள்ளார். தம்முடைய காலத்திற்கு பிறகு அது (ஆன்மிக நூல்கல்)யாருக்கு செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டடதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு சொத்துக்கள் இல்லை என்றும், தம்முடைய காலத்திற்கு பிறகு அது யாருக்கு செல்லும் என்ற கவலை பக்தர்களுக்கு தேவை இல்லை என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
*****
ஹிந்துகள் மீது திடீர் பாசம் : ஸ்ரீ ராமர் கோயிலில் கனடா பிரதமர் வழிபாடு!
தேர்தல் நெருங்கும் நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி, டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் நடந்த ராம நவமி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம், ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார். இதனால், கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
நேபியன் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான அவரது வேட்புமனுவையும் லிபரல் கட்சி ரத்து செய்தது.
மூன்று முறை லிபரல் எம்.பி.யாக இருந்த அவரைத் தடை செய்ததற்கான எந்த காரணத்தையும் லிபரல் கட்சி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கனடாவில் வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாலும், காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாலும் தான், தலைமை பதவிக்கு லிபரல் கட்சி தடை செய்ததாகச் சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம், கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவிலில் தாக்குதல் நடந்தது..
கனடாவில், லிபரல் கட்சி, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது, இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய சுமார் 600,000 இந்துக்கள் கனடாவில் உள்ளனர். மெட்ரோ வான்கூவர், கால்கரி மற்றும் எட்மண்டன் போன்ற நகரங்களில் இந்து வாக்குகளே தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன.
இந்துக்களைச் சமாதானப்படுத்த பிரதமர் கார்னி டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் ராமநவமி வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
*****
அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக கோயில் ஆகம விதிகள் மீறல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் லுக்கு, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, தரிசனம் செய்தார். அப்போது அவரது வருகைக்காக வழக்கமாக நடை சாத்தப்படும் நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணிநேரம் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அம்மனுக்கு நடத்தப்படும் உச்சி கால பூஜையும் தாமதமானதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உச்சிகால பூஜைக்காக தாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
****
பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக குண்டம் தயாரானது.
குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 4 மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, கோயில் பூசாரி ராஜசேகர் மற்றும் கோயில் பூசாரிகள், கட்டளைதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டம் இறங்கினர்.
இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா, ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, அமுதா ஐஏஎஸ், குண்டம் இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டார்.
*****
பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்த பக்தர்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில்பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை ஏற்படுத்தினார்.
சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30ஆம் தேதி பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயர்குத்து திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்து அம்மனை தரிசித்த நிலையில், ராட்சத கிரேன் மூலம் பக்தர் பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
*****
இலங்கைத் தமிழர்களுக்காக பத்தாயிரம் வீடுகள்.. சீதை கோவில்..
பாரதப் பிரதமர் அறிவிப்பு..!!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, “இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள் மற்றும் புனித சீதை தேவி ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் போன்ற திட்டங்களுக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கும் என அறிவித்துள்ளார்..
பிரதமரின் இந்த அறிவிப்பை இந்து முன்னணி பாராட்டியது..!!
****
திருப்பதி பாலாஜி கோவிலில் வசந்தோற்சவம்
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை வசந்தோற்சவம் தொடங்குகியது.காலை 6.30 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதியுலா நடந்தது. அதன்பின்னர் வசந்தோற்சவ மண்டபத்திற்கு கொண்டு வந்தார்கள் .
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலையில் மாட வீதிகளில் வீதியுலா வந்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
13-4-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து
வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே
– திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சோழவளநாட்டில் மண்ணியாற்றின் கரையில் உள்ள சேய்ஞலூர் என்னும் திருத்தலமாகும்
கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம். இப்போது இது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.
இது முருகன் வழிபட்ட தலமாகும். சேய் + நல்லூர். அதாவது முருகன் வழிபட்ட தலம் என்று பொருள். முருகன் இந்தத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சூரசம்ஹாரத்திற்கு உறுதுணையாக இருக்க பாசுபதாஸ்திரம் பெற்றார்.
சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்ட ஐந்து ஊர்களில் இதுவும் ஒன்று.
இறைவன் திரு நாமம் : சத்யகிரீஸ்வரர்
இறைவி : சகிதேவியம்மை
திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.
திரு ஆப்பாடி
சேய்ஞலூரிலிருந்து திரு ஆப்பாடி திருத்தலம் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
இறைவன் பெயர் – பாலுகந்த ஈஸ்வரர்
இறைவி பெயர் : பெரிய நாயகி
சண்டேஸ்வர நாயனார் பசுக்கள் மேய்த்த தலம் என்பதால் இது ஆப்பாடி என்று அழைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசர்,
“சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே”
என்று பாடி சண்டேஸ்வர வரலாறை தனது பதிகத்தின் நான்காவது பாடலில் இப்படிச் சுட்டிக் காட்டுகிறார்:
அண்டம் ஆர் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே.
ஒருகாலத்தில் அந்தணர் மரபில் எச்சதத்தன் – பவித்திரை என்ற தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விசாரதர்மர் என்று பெற்றோர் பெயரைச் சூட்டினர்.
குழந்தைக்கு ஏழு வயதிலேயே உபநயனம் செய்விக்கப்பட்டது.
ஒரு நாள் பசுக்களை மேய்க்கும் இடையன் ஒருவன் தன் கையிலிருந்த கம்பால் தன்னை முட்ட வந்த பசுவை அடித்தான்.
இதைக் கண்டு வருந்திய விசாரதர்மன், “ஐயா! பசுக்கள் தங்கள் உடலில் தேவர்களையும் முனிவர்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளன. பஞ்சகவ்யங்களை ஈசனுக்கு அளிக்கும் பசுக்களை அடித்தல் தவறு” என்று கூறி பசுக்களை மேய்க்கும் பணியை தானே மேற்கொண்டான்.
சிவபக்தி மேலிட மண்ணியாற்றின் கரையில் ஒரு ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து பசுவின் பாலினால் அதற்கு அபிஷேகம் செய்வித்து விசாரதர்மன் வழிபடலானான்.
இதைக் கண்ட ஒருவன் ஊருக்குள் சென்று பசுவின் பாலை விசாரதர்மன் கொட்டி வீணாக்குகிறான் என்று கூறினான்.
உண்மையை அறிய விழைந்த தந்தையான எச்சதத்தன் மரத்தின் மீது ஏறி ஒளிந்திருந்து நடப்பதைப் பார்த்தார்.
விசாரதர்மன் லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்து வெகுண்ட எச்சதத்தன் பாற்குடங்களை எட்டி உதைத்தார்.
இதனால் கோபமடைந்த விசாரதர்மன் அருகிலிருந்த கம்பு ஒன்றை எடுத்தான். அது உடனே மழுவாக மாறியது. அதனால் எட்டி உதைத்த தன் தந்தையின் இரு கால்களையும் வெட்டினான். அவர் உயிர் நீத்தார்.
விசாரதர்மரின் பூஜையால் மகிழ்ந்த சிவபிரான் உமாதேவியோடு காட்சி அளித்து அவரைத் தன் கரங்களால் எடுத்து அணைத்து அவருக்கு சண்டீசன் என்னும் பதத்தை அளித்தார். சண்டீசம் என்பது ஒரு பதவி.
அன்றிலிருந்து அவர் சண்டேஸ்வர நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.
இங்குள்ள கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரபீடம் நந்தி பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். இங்கு வடக்கே உள்ள அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் தல விருட்சமான ஆத்திமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது.
இந்த ஆத்திரமரத்தின் நிழலில் தான் சண்டிகேஸ்வர நாயனார் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். கருவறை கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்திலும் பல சந்நிதிகள் உள்ளன.
வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது. இது தவிர கர்பக்ருஹத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேஸ்வரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடுகிறார். ஆக இப்படி இந்தக் கோவிலில் மட்டும் இரண்டு சண்டேஸ்வரர் திரு உருவங்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்பு அம்சமாகும்.
இங்கு மஹாசிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சத்யகிரீஸ்வரரும், சகிதேவியம்மையும், பாலுகந்த ஈஸ்வரரும்
பெரிய நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏப்ரல் 14 1950: ரமண மஹரிஷி சமாதி அடைந்த தினம்.
ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்!
ச. நாகராஜன்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலுமிருந்து ரமண மஹரிஷிக்கு உண்டு.
அவரது முதல் மேலை நாட்டு பக்தரின் பெயர் எஃப்.ஹெச். ஹம்ப்ரீஸ்
(F.H.Humphreys). பகவானுடனான அவரது முதல் அனுபவமே ஆச்சரியகரமானது.
1911ம் ஆண்டு தனது 21ம் வயதில் அவர் இந்தியாவுக்கு வந்தார். போலீஸ் சேவையில் ஒரு வேலைக்காக அவர் வெல்லூர் வந்தார்.
தெலுங்கைக் கற்பிக்க தனக்கு ஒரு ஆசிரியரை அவர் நியமித்துக் கொண்டார். அவர் பெயர் நரசிம்மய்யா.
அவரிடம் ஹிந்து ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் ஆங்கிலப் புத்தகம் எங்கேனும் கிடைக்குமா என்று ஹம்ப்ரீஸ் கேட்டார். விசித்திரமான இந்த வேண்டுகோளைக் கேட்ட நரசிம்மய்யா மறு நாள் நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தார்.
அடுத்த நாள் .”உங்களுக்கு இங்கே மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா?” என்ற இன்னொரு விசித்திரமான கேள்வி நரசிம்மய்யாவை நோக்கி வந்தது.
“எனக்குத் தெரியாது” என்று சுருக்கமாகக் கூறி முடித்து விட்டார் நரசிம்மய்யா.
அடுத்த நாள் ஹம்ப்ரீஸ், “நேற்று உங்களிடம் மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொன்னீர்கள். ஆனால் இன்று காலை உங்கள் குருவை நான் எழுந்திருப்பதற்குச் சற்று முன்னால் பார்த்தேன். அவர் என் அருகில் உட்கார்ந்து ஏதோ சொன்னார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.” என்ரார்.
நரசிம்மய்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவர் நம்பாமல் இருப்பதைப் புரிந்து கொண்ட ஹம்ப்ரீஸ் தொடர்ந்தார்:
“நான் வெல்லூரில் முதன்முதலில் பார்த்த ஆள் நான் முன்னமேயே பம்பாயில் பார்த்திருந்த நீங்கள் தான்.”
உடனே நரசிம்மய்யா, “நான் பம்பாய்க்கே சென்றதில்லையே” என்று தனது மறுப்பைத் தெரிவித்தார்.
உடனே ஹம்ப்ரீஸ் விவரித்தார்: “நான் பம்பாய்க்கு வந்தவுடனேயே ஜுரத்தால் பாதிக்கப்பட்டேன். உடல் நலம் தேற வெல்லூருக்கு வர மனம் கூறவே ஆஸ்ட்ரல் பாடி எனப்படும் சூக்ஷ்ம சரீரத்தில் வெல்லூருக்கு வந்தேன். அங்கே நரசிம்மய்யாவைப் பார்த்தேன்:
நரசிம்மய்யா உடனே, தனக்கு சூக்ஷ்ம சரீரம் என்றால் என்ன என்றே தெரியாது என்று கூறி விட்டார்.
என்றாலும் ஹம்ப்ரீஸ் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமா என்று சோதிக்க எண்ணிய நரசிம்மய்யா போட்டோக்கள் அடங்கிய ஒரு கட்டை ஹம்ப்ரீஸின் மேஜையின் மேல் வைத்து விட்டு இன்னொரு போலீஸ் ஆபீஸருக்குப் பாடம் சொல்லிதர கிளம்பி விட்டார்.
போட்டோக்களைப் பார்த்த ஹம்ப்ரீஸ் கணபதி சாஸ்திரிகளின் போட்டோவைப் பார்த்தவுடன், “இவர் தான்” என்று கூவினார்.
நரசிம்மய்யா திரும்பி வந்தவுடன், “இதோ, இவர் தானே உங்கள் குரு” என்றார்.
நரசிம்மய்யா அவர் தான் தனது குரு என்று ஒப்புக் கொண்டார்.
பிறகு மீண்டும் ஹம்ப்ரீஸின் உடல் நலம் பாதிக்கப்படவே அவர் ஊட்டிக்குச் சென்று விட்டார். பல மாதங்கள் கழித்துத் தான் அவர் மீண்டும் வெல்லூர் வந்தார்.
திரும்பி வந்தவுடன் இன்னொரு ஆச்சரியத்தை நரசிம்மய்யாவுக்கு அவர் அளித்தார்.
ஒரு மலைக்குகை படத்தையும் அதன் முன்னால் நீரோடை ஓடுவதையும் குகையின் வாயிலில் ஒரு மகான் நிற்பதையும் தான் கனவில் கண்டபடி வரைந்து அந்தப் படத்தை நரசிம்மய்யாவிடம் காண்பித்தார் ஹம்ப்ரீஸ்.
அது விரூபாக்ஷ குகை தான். குகையின் வாயிலில் நிற்பது பகவான் ரமணர் தான்!
நரசிம்மய்யா இப்போது ரமண மஹரிஷியைப் பற்றி ஹம்ப்ரீஸிடம் கூறினார்.
Pictures of 2500 Indian Stamps!- Part 7 (Post.14,384)
Written by London Swaminathan
Post No. 14,384
Date uploaded in London – 13 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART SEVEN
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part Two
Roman Inscriptions; Peacock shows Hindu Influence
I have already written about my visit to the Sydney University Museum.
Micro models, Macro models of things, Roman period mummies, stuffed animals, Chinese sculptures, ceramics, Modern paintings ,machines and instruments are arranged in several floors. It was quite with a few visitors when we went there. I took lot of pictures; here I post them in two parts. It is called Chau Chak Wing Museum .
Part Two
–subham—
Tags- University of Sydney museum, Chau Chak Wing Museum , Part 2, Mummy room, Roman mummies,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
J.J. Goodwin 1870 – 1898
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளை நமக்கு ஆங்கிலத்தில் அளித்த ஜே. ஜே. குட்வின் என்பவரைப் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்தான் சுவாமிஜியின் ஆங்கில உரைகளை சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டுவந்து நமக்கு நூலாகத் தந்தார் அவரை சுவாமிஜியே தன்னுடைய பொன்னான வார்த்தைகளால் பாராட்டியுள்ளார் .
இதுபற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பின்னர் மஞ்சரி மாத இதழ் வெளியிட்டது ; அத்தோடு ஆங்கில வெப்சைட்டுகளில் கண்ட விஷயங்களின் தொகுப்பு இது.
ஜே. ஜே. குட்வின் கடைசியில் தமிழ்நாட்டில்தான் இறந்தார். அவருடைய கல்லறை உதகமண்டலத்தில் இருக்கிறது . அங்கு ராம கிருஷ்ண மிஷன் இயக்கம் ஒரு சமாதியையும் எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தியது ;அதை சுவாமி ரெங்கநா தானந்தா திறந்துவைத்தார் .
விவேகானந்தர் ஆங்கிலத்தில் மிகவும் வேகாமாகப் பேசுவார்; மேலும் அவருடைய பெரும்பாலான உரைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்தன.அவைகளை குட்வின் சுருக்கழுத்தில் எழுதிக்கொண்டுவந்து பின்னர் முழு நீள சொற்பொழிவுகளாக நமக்குத் தந்தார் .
சுவாமிஜி தனது உரைகளை எழுதிவைத்துப் படிப்பவர் அல்ல; மேலும் ஒவ்வொரு உரையிலும் புதிய கருத்துக்களைக் கூறி வந்தார். அவரது உரைகளை நகல் எடுக்க சில சுருக்கெழுத்தாளர்களை மேலை நாட்டு நண்பர்கள் நியமித்தனர்; ஆனால் அவர்களுடைய பணி திருப்தி தரவில்லை.
இறைவன் புண்ணியத்தில் ஜோஷியா குட்வின் 1895-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார் .அவர் இங்கிலாந்திலிருந்து வேலை தேடி அமெரிக்காவுக்குச் சென்றவர். இது தவிர அவர் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
சாதாரண ஒரு மனிதராகத் தோன்றிய அவர் முதலில் சுவாமிஜியின் நண்பராகி, பின்னர் சீடராகி அவருடைய ஆருயிர் நண்பராகவும் மாறினார்; நல்ல திறமையும் ஒருமுகப்பட்ட மனமும் இருந்ததால் சுவாமிஜியின் பிரசங்கங்களை அதே வேகத்தில் நமக்கு எழுதித்தந்தார் அமெரிக்காவில் சுவாமிஜியின் உரைகளைக் கேட்ட குட்வின் , சுவாமிஜியைப் பின்தொடர்ந்து இங்கிலாந்துக்கு வந்தார். பின்னர் இந்தியாவுக்கும் வந்து அதே பணியைச் செய்தார்
கொழும்பிலிருந்து அல்மோரா வரை என்ற சுவாமி விவேகானந்தரின் சொபொழிவு நூல் அவரால் உருவாக்கப்பட்டதே
இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின்னர் மெட்றாஸ் மெயில் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர். பொறுப்பினை குட்வின் ஏற்றார்.
ஆயினும் சுவாமிஜி உயிர்வாழ்ந்த காலத்திலேயே குட்வின் உயிர் பிரிந்தது; 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி டைபாய்டு ஜுரம் கண்டு உதகமண்டலத்தில் இறந்தார். குட்வின் இறந்த செய்தியைக் கேட்டு சுவாமிஜி மிகவும் வருந்தினார்.
சுவாமி விவேகானந்தர் சொற்களில் குட்வினின் புகழை அறிவோம்
குட்வின்னுக்கு நான் பட்டுள்ள நன்றிக்கு கடன் என்னால் எக்காலத்திலும் திருப்பித் தரவொண்ணாதது. என் கருத்துக்களில் எதுவேனும் பயன்தரக்கூடியதாக எவரேனும் நினைப்பார்களானால் அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லும் குட்வினின் தன்னலமற்ற சலியாத உழைப்பினால் வெளிப்பட்டவை என்று அறிந்து கொள்ளவேண்டும். அவருடைய மறைவினால் எக்கைப் போன்ற உறுதிபடைத்த நண்பரையும் தவறாத பக்தியுடைய சிஷ்யரையும் களைப்பு இன்னதென்றே அறியாத தொண்டை ரையும் நான் இழந்துவிட்டேன். பிறருக்காக வாழவதற்கென்ற பிறந்த மனிதருள் ஒருவரை இன்று உலகம் இழந்துவிட்டது
Vivekananda – on the death of Mr J. J. Goodwin May 1898, wrote to Goodwin’s mother.
With infinite sorrow I learn the sad news of Mr. Goodwin’s departure from this life, the more so as it was terribly sudden and therefore prevented all possibilities of my being at his side at the time of death. The debt of gratitude I owe him can never be repaid, and those who think they have been helped by any thought of mine ought to know that almost every word of it was published through the untiring and most unselfish exertions of Mr. Goodwin. In him I have lost a friend true as steel, a disciple of never — failing devotion, a worker who knew not what tiring was, and the world is less rich by one of those few who are born, as it were, to live only for others.
இத்தோடு சுவாமிஜி நிற்கவில்லை குட்வினின் தாயாருக்கு கவிதை வடிவில் இரங்கல் செய்தியையும் அனுப்பினார்.
இத்தகைய ஒரு பெரியாரின் உடலை உதகையில் எங்கு அடக்கம் செய்தார்கள் என்பதை மிகவும் சிரமப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தினர் கண்டுபிடித்து அவருக்கு ஒரு சமாதியையும் கட்டி நன்றிக்கடனைச் செலுத்தினார்கள் அந்த சமாதியை 23-4-1967 அன்று ராமகிருஷ்ண மடத்தின் காரியதரிசி சுவாமி ரெங்கநாதானந்தா தலைமை ஏற்று திறந்துவைத்தார் குட்வின் நினைவினை போற்றும் வகையில் அவர்கள் செய்த பணியால்தான் நாம் இன்று ஒரு பெரியாரை நினைவு கூறமுடிகிறது.
Most of the important lectures delivered by the Swami in America, and in England, and all those given in India from Colombo to Almora, were taken down by Mr. Goodwin’s hand. And when he suddenly passed away from an attack of enteric fever in Ootacamond, the Swami, who chanced to be at the time in distant Almora, was visibly affected. When the sad news reached him he wrote a poem, “Requiescat in Pace“, that for its tenderness, its beauty and depth of feeling makes a sweet and touching appeal.
–SUBHAM—
TAGS- விவேகானந்தர் உரை, ஜே. ஜே. குட்வின் , உதகையில் சமாதி