சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7 (last part) Post.14,458)

Written by London Swaminathan

Post No. 14,458

Date uploaded in London –  1 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்ஸ்க்ருதத்தில் 650-க்கும் மேலான நாடகங்கள் இருக்கின்றன என்று பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதியுள்ளார்.

“Europe first learned of the old Indian drama from Sir William Jones translation of Kalidasa’s Shakuntala, published in 1789. Something in the nature of a commotion was created among European intellectuals by the discovery and several editions of the book followed. Translations also appeared in German, French Danish and Italian. Goethe was powerfully impressed and he paid a magnificent tribute to Shakuntala.

The stream of Sanskrit drama continued to flow for centuries but after Murari , early in the ninth century, there is a marked decline in the quality. That decline, and a progressive decay, were visible in other forms of life’s activities. It has been suggested that this decline may be partly due to the lack of royal patronage during the Indo -Afghan and Mogul periods and the Islamic disapproval of the drama as an art form, chiefly because of its intimate association with the national religion. But there is little substance in the argument though political changes at the top had some indirect effect. The decline was obvious long before the political changes.

Yet , in spite of all this, it is astonishing the Sanskrit drama continued to be produced right through the mediaeval period and up to recent times. In 1892 appeared a Sanskrit adaptation of Shakespeare’s Midsummer Night’s Dream. Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.

—Jawaharlal Nehru in his book Discovery of India.

ஆக உலகிலேயே அ திக நாடகங்களை உடைய பழைய மொழி சம்ஸ்க்ருதம் தான். கிரேக்க மொழியில் புகழ்பெற்ற பழைய நாடகங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் குறைவு!

65& 66வால்மீகியும் வியாசரும்

4000 ஆண்டுக்கு (Professor Wilson’s dating; he  translated Rig Veda before Max Muller) முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.

உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன. இது வியாசர் எழுதியது என்பதைச் சொல்லத் தேவை இல்லை 

 வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.

18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. புராணங்களில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன.

உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.

கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்). பாரசீக மொழியில் உள்ள செண்ட் அவெஸ்தாவின் காலம் கி.மு 600.

கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.

பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

நமது காலத்திலேயே ரமண மகரிஷி சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகங்களை இயற்றியுள்ளார் ; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருதத்தை முறையாகப் படித்தது இல்லை.

****

67.இருபதாயிரம் சுபாஷித பாடல்கள் !

பெங்குவின் வெளியிட்ட, ஜான்ப்ரோ எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் என்று நூல் கீழ்கண்ட புள்ளி விவரத்தைத் தருகிறது :

சுபாஷித ரத்ன கோச – தொகுத்தவர் வித்யாகார – ஸ்லோக எண்ணிக்கை 1738 – காலம் 11 ஆம் நூற்றாண்டு. 

சுபாஷிதாவலி – வல்லபதேவ- 3527- காலம் 12 ஆம் நூற்றாண்டு. 

சார்ங்கதர பத்ததி – சாரங்கதேவ –  4620- காலம் 14 ஆம் நூற்றாண்டு. 

John Brough, Poems from the Sanskrit Language, Penguin Publications,1968

***

இன்னும் ஒரு புள்ளிவிவரம்:–

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் /சுபாஷித பாடல்கள்

சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்

பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,

சதுக்தி கர்ணாம்ருத 2370 பாடல்கள்–485கவிஞர்கள்,

சூக்தி முக்தாவளி 2790 பாடல்கள், 240கவிஞர்கள்,

சரங்கதார பத்ததி 4689 பாடல்கள்–282கவிஞர்கள்

ப்ருஹத் பத்ததி 7586 பாடல்கள்,

வல்லப தேவ சுபாஷிதாவளி 3527 பாடல்கள் 360 கவிஞர்கள்

(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு !

இரண்டாம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன!

ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

****

68.அமரசிம்மன்

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் தலைப்பு வாரியாக பெயர்களை அடுக்குகிறார் அமரசிம்மன்.

தெய்வங்கள், தேவர்கள், மிருகங்கள் , கிரகங்கள் போன்ற தலைப்புகளில் பெயர்களை அடுக்குகிறார்  இந்த அகராதியில் யமனுக்கு 14 பெயர்கள் சிவனுக்கு 52 பெயர்களும், விஷ்ணுவுக்கு 46 பெயர்களும், பலராமனுக்கு 17 பெயர்களும்,அம்பாளுக்கு 21 பெயர்களும், லெட்சுமிக்கு 14 பெயர்களும், கணபதிக்கு 8 பெயர்களும்,

முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்,இந்திரனுக்கு 35 பெயர்களும்,

அக்னிக்கு 34 பெயர்களும்,  வருணனுக்கு 5 பெயர்களும், வாயுவுக்கு 20 பெயர்களும், குபேரனுக்கு 17 பெயர்களும், மன்மதனுக்கு 19 பெயர்களும்,  ஜினதேவனுக்கு 18 பெயர்களும், புத்தபகவனுக்கு 7 பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.. குருகுலத்தில் சம்ஸ்க்ருதம் பயிலச் சென்றோர் இதை மனப்பாடம் செய்துவைத்திருந்தனர். இதில் மூவாயிரம் வரிகள் உள்ளன ; மூன்று காண்டங்களாகவும் 26 வர்க்கங்களாகவும் பிரிக்கப்பட்ட இதிலுள்ள சொற்களின் எண்ணிக்கை 11,580.

இதற்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே தமிழில் நிகண்டுகள் வந்தன . அதிலும் சம்ஸ்கிருத சொற்கள் மிகுதி!

***

69.சாணக்கியன்

சாணக்கியன் எழுதியதாக பல நீதி வாக்கிய நூல்கள் கிடைத்திருக்கின்றன. அவர் எழுதிய ர்த்த சாஸ்திரம் உலகின் முதல்பொருளாதார நூல் ஆகும் . அதில் அரசாட்சி, படை பலம், வரி விதிப்பு, ஊதியம். உளவுத்துறை, தண்டனைகள் என்று பல விஷயங்களை அலசி ஆராய்ந்து அரசனுக்கு அறிவுரை வழங்குகிறார் 2300ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நூல் எழுத வேண்டுமானாலால் அந்த  சமுதாயம் அப்போதே மிகப்பெரிய நாகரிக நிலையை அடைந்திருக்க வேண்டும் உலகில் அக்காலத்தில் இதற்கு ஈடு இணையான நூல் வேறு எந்த மொழியிலும் இல்லை.

***

70.மூககவி

இவர் இயற்றிய கவிதையின் பெயர் மூக பஞ்சசதி; மூக பஞ்சசதீயின் முதல் பாகம் ஆர்யாசதகம். ஏனைய நான்கு பகுதிகள் – பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் , கடாக் ஷசதகம் , மந்தஸ்மித சதகம். மொத்தம் 500 பாடல்கள்

ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு ஸ்லோகம் உண்டு :

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்.

யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.

பல ஊமைகள் தெய்வ சந்நிதியில் வாக்கு வண்மை பெற்றதை மூககவி, குமரகுருபரர் போன்றோர் வாழ்க்கையில் அறிகிறோம் .

****

71.விசாகாதத்தர்

சாணக்கியரின் பெருமையை  நாடக ரூபத்தில் சொல்லும் நூல் முத்ரா ராக்ஷஸம் . இதை சம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் விசாகதத்தர். பிராமணர்களை அவமதித்த நந்த வம்சத்தை வேரோடு சாய்ப்பேன் ;அதுவரை குடுமியை முடியமாட்டேன் என்று வீர சபதம் செய்து அதை நிறைவேற்றியதால் சாணக்கியரின் பெருமை இன்றுவரை நீடிக்கிறது ;அவரது அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல் ஆகும்.

விசாகாதத்தர் பெண்களை புகழும் அழகு அந்தக் காலத்தில் பெண்கள் இருந்த உயர் நிலையைக் காட்டுகிறது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சியில் “பெண்ணை நீயே வாழ்கைக்கு வழிகாட்டிகுடும்பம் நடத்தும் கலையின் தலைவி குடும்பத் தலைவிகுணவதிஇல்லத்தில் உறையும் தெய்வம்ஆன்மீக உண்மைகளை அறிய உதவும் உத்தமிஅறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்ந்த பெண் மணி” என்று புகழ்கிறார் .

முத்ரா ராக்ஷஸம் பற்றி பி ஆர் ராஜாராம் மொழிபெயர்த்த இருபது பக்க கட்டுரை  1964 -ஆம் ஆண்டு மஞ்சரி மாத இதழில் வந்திருக்கிறது . இது மராட்டிய பத்திரிக்கைக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு ;நல்ல வரை படங்களும் உள்ளன.

***

From Wikipedia

இந்நூல் 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது[1].

பரிதிமாற் கலைஞர் எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை முத்திராராட்சம் எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்,

***

72 % 73 சரகர் சுஸ்ருதரின் மருத்துவ சம்ஹிதைகள்

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் உலகில் முதலில் எழுதப்பட்ட விரிவான மருத்துவ நூல்களாகும்

இவைகளில் டாக்டர்களுக்குப் பயன்படும் மருத்துவ, மூலிகைக் குறிப்புகளைத் தவிர பொதுவான ஆரோக்கிய விஷயங்களும் மருத்துக்கருக்கு இருக்கா வேண்டிய குணங்கள் பற்றியும் உள்ளன.

74.ஷ்யாமிளகா

ஓரங்க நாடகம் பாதத்தாடித்தகா எழுதியவர் இவர். அங்கதம், கிண்டல் நிறைந்த நாடகம் காலம் ஐந்தாம் நூற்றாண்டு 

***

75.வல்லனா

பாலா வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த இவர் கவிதை எழுதியுள்ளார்; காலம் ஒன்பதாம்  நூற்றாண்டு  .

***

76.வத்ஸபட்டி

இவருடைய கவிதை மாண்டசோரி கல்வெட்டில் இருக்கிறது காலம் 436 CE.

***

77.வித்யா

இந்தப் பெண் கவிஞரின் பாடல்கள் கவிதைத் தொகுப்பு நூல்களில் மட்டும் காணப்படுகிறது . காலம் எட்டாம் .

****

78.விகடனிதாம்பா

கவிதை இயல் நூல் எழுதிய ராஜசேகரா வாலும் பாராட்டப்பட்ட புலவர். காலம் ஒன்பதாம்

****

79.யசோதர்மன்

கன்னோசியிலிருந்து ஆண்ட எடடாம் மன்னர். அவர் எழுதிய நாடகத்தின் பெயர் ராம அப்யுதயா.

***

80.யோகேஸ்வர

பாலா வம்ச ஆட்சிக்காலத்தில் கவிதை இயற்றிய புலவர். அபினந்தா என்பவர் இவரைப் பாராட்டியதால் இவரது பெருமை நன்கு தெரிகிறது.

**** 

81.கல்வெட்டுக் கவிதைகள்

மாண்டசோர் கல்வெட்டில், வத்ஸபட்டியின் நீண்ட கவிதை உள்ளது குமாரகுத்தார் காலத்திய கவிதை. லாட தேச நெசவாளர்களை புகழ்கிறது .

சங்கு நாராயண தூண் ஸ்துபிக் கல்வெட்டு , நேபாளம்

நேபாள நாட்டிலுள்ள இந்த நீண்ட கவிதைக் கல்வெட்டு மஹாராணி ராஜ்யவதியை லெட்சுமி தேவி என்று புகழ்கிறது ;காலம் 464 CE

ஜாவா கல்வெட்டுINDONESIA ; மேர்பாபு பாறைக் கல்வெட்டு

இது வசந்த காலத்தைப் புகழும் நான்கு வரி  பாடல் கல்வெட்டு.

***

82.அண்மைக்காலத்தில் சம்ஸ்க்ருத மழை பொழிந்த சதாசிவ பிரம்மேந்திராள் நாராயண தீர்த்தர்நாராயண பட்டதிரி போன்ற நூற்றுக் கணக்கான பெரியோர்கள் சம்ஸ்க்ருதம் வாழும் மொழி என்பதைக் காட்டியுள்ளார்கள் ; அவர்களுடைய பாடல்கள் இன்றும் பஜனைகளில் ஒலிக்கின்றன. பாகவத சப்தாஹம், கேரளத்தில் மிகவும் சர்வ சாதாரணம். அங்கு பாகவத முற்றோதல் சம்ஸ்க்ருதத்தில் நடைபெறுகிறது!

சுமார் இரண்டாயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களின்  பெயர்களை நாம் அறிகிறோம். நான் சொன்ன சுமார் 80 கவிஞர்கள் ஒரு சாம்பிள்தான் ; உணவு விடுதியில் சாப்பிடப்போனால் ஸ்டார்ட்டர் என்று சில பண்டங்கள் வரும்; நான் சொன்னது ஸ்டார்ட்டர். மெயின் டிஷ் — முழு உணவு — வேண்டுவோர் கட்டாயம் சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டும் அல்லது தமிழில் வந்த மொழிபெயர்ப்புகளை வாங்கிப் பயன் அடையவேண்டும் . இந்துக்கள் ஸம்ஸ்க்ருதத்தைப் பயிலாவிடில் வெள்ளைக்காரன் பிதற்றியது எல்லாம் உண்மை என்றாகிவிடும்!

—subham—

Tags-  சாணக்கியன், அர்த்த சாஸ்திரம் ,அமரசிம்மன் ,மூக கவி, கல்வெட்டில் ஸம்ஸ்க்ருதக் கவிதைகள், சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7

NEW RECORD -TWO CRORE HITS

LONDON SWAMINATHAN, LONDON, UK

SANTANAM NAGARAJAN, BANGALORE

Thanks to your support we have crossed two crore hits today.

Tamilandvedas.com

15,663, 069 hits as of 1 May 2025

***

swamiindology.blogspot.com

4 735398 hits 

Total = 203998467 as of 1 May 2025.

PLEASE KEEP READING 

WE HAVE PRODUCED 270 BOOKS FROM OUR ARTICLES IN BOTH THE ABOVE BLOGS.

WE HAVE PUBLISHED 25,000 PICTURES.

THANKS AGAIN.

துக்காராம்! – 2 (Post No.14,457)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,457

Date uploaded in London – –1 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

துக்காராம்! – 2 

ச. நாகராஜன்

இதே போல இன்னொரு சம்பவமும் உண்டு.

ஒரு நாள் ஏழைப் பெண்மணி ஒருத்தி துக்காராமைப் பார்த்து, ‘உடுத்திக் கொள்ள ஒரு துணியும் இல்லை. ஏதாவது ஒரு ஆடையைத் தாருங்கள்” என்று கெஞ்சினாள்.

மனம் இரங்கிய துக்காராம் வீட்டின் கொல்லைப்புறத்தில் உணர்த்தி இருந்த தன் மனைவி கமலாபாயின் புடவையை எடுத்துக் கொண்டு அவளிடம் கொடுத்தார். அவளும் அவரை வாழ்த்தியவாறே அதைப் பெற்றுக் கொண்டாள்.

வீட்டில் உலர்த்தி இருந்த தன் புடவையைக் காணாது திடுக்கிட்டுத் தேடிய கமலாபாய் அதைத் தெருக்கோடியில் சென்று கொண்டிருந்த ஏழைப் பெண் எடுத்துச் செல்வதைப் பார்த்துக் கோபம் கொண்டாள்.

அவளிடம் சென்று கேட்க அவளோ துக்காராம் தான் அதைக் கொடுத்தார் என்றாள்.

இதனால் மிகவும் கோபமுற்ற கமலாபாய் ஒரு அம்மிக் குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி ஓடினாள். ‘இதனால் கோவிலில் உள்ள பண்டரிநாதனின் திருவடிகளை நசுக்கி விட்டுத்தான் அடுத்த வேலை’ என்ற அவளது குமுறலைக் கேட்ட துக்காராம் திடுக்கிட்டார்.

கோவிலில் நுழைந்த கமலாபாயைக் கண்ட கிருஷ்ணன், ருக்மிணியைப் பார்த்து, “ஹே ருக்மிணி! ஏழைப் பெண் வேஷம் போட்டு புடவையை துக்காராமிடமிருந்து வாங்கி வந்தாயே. இதோ துக்காராமின் மனைவி கமலாபாய் ஓடி வருகிறாள். அவளுக்கு ஞானோபதேசம் செய்” என்றார்.

கமலா பாய் ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் கதவுகள் பலத்த மணி ஓசை எழுப்பி  தாமாக மூடிக் கொண்டன.

ருக்மிணி தேவி கமலாபாயின் புடவையை உடுத்திக் கொண்டு கமலாபாயின் முன்னே காட்சி அளித்தாள்

தன் கையிலிருந்த குண்டுக்கல் நழுவி விழ கமலாபாய் மனம் தெளிந்து ஞானம் பெற்றாள். வெளியே வந்த போது தன் உடலில் பட்டாடையும் பலவித ஆபரணங்களும் ஜொலிக்கக் கண்டாள்.

துக்காராமிடம் ஓடி வரவே, “ஆஹா! எனக்குக் கிடைக்காத தரிசனம் உனக்குக் கிடைத்து விட்டது! நீயல்லவோ பாக்கியசாலி! போயும் போயும் இந்தப் புடவையையா கேட்பது. மோக்ஷம் அல்லவோ கேட்க வேண்டும்” என்றார் அவர்.

கமலாபாயோ,” உங்களை வணங்கி நல்ல வாழ்வு வாழ்ந்தால் மோக்ஷம் தானே அல்லவா வரும். உங்களைப் பணிந்து வாழ்வதே எனக்குப் போதும்” என்று மனம் திருந்தி வாழலானாள்.

துக்காராமின் பக்திக்கு மெச்சிய விட்டலன் அவரிடம் அடிக்கடி வரலானான். விருந்தினனாக வருவான். உருவமற்றவனாக வருவான். கூட இருந்து சாப்பிடவும் செய்வான்.

இந்தச் செய்தி ஊரார் அனைவருக்கும் பரவியது. தேஹு கிராமத்திற்கு அருகில் கிஞ்சன்வாடி என்று அழகிய ஒரு சிறு கிராமம் இருந்தது. அங்கு விநாயகரை பூஜித்து வந்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் துக்காராமுடன் பண்டரிநாதன் உணவு உண்பதைக் கேட்டு நாமும் தான் விநாயகரைப் பூஜிக்கிறோம்; நம்முடன் ஒருநாளும் விநாயகர் கூட இருந்து உண்ணவில்லையே” என்று பொறாமை கொண்டார்.

துக்காராமைச் சந்தித்து இதைப் பற்றி அவர் நேரடியாகவே கேட்க, அன்று துக்காராம் அவருடன் சாப்பிட உட்கார்ந்தார். ஒரு இலை பண்டரிநாதனுக்கும் இன்னொரு இலை விநாயகருக்காக அந்த பக்தரின் அருகிலும் போடப்பட்டன.

கணேச பக்தர் நெடுநேரம் காத்திருந்தும் விநாயகர் வரவில்லை. துக்காராம் அவரிடம், “இப்போதுதான் ஒரு அடியவரின் கப்பலை மூழ்காமல் காக்கச் சென்ற விநாயகர் அந்தப் பணியை முடித்து விட்டு இதோ உள்ளே வருகிறார்” என்றார்.

உடனே விநாயக பக்தர் உள்ளே ஓடிச் சென்று பார்த்தார். விநாயகர் ஈரம் சொட்டச் சொட்ட அங்கே உட்கார்ந்திருந்தார். அவர் உடலிலிருந்து உப்பு நீர் சொட்டிக் கொட்டிருந்தது. ஆனால் அவர் எதையும் எடுத்து உண்ணவில்லை.

அவர் துக்காராமிடம் ஓடி வந்தார். “ஸ்வாமி! நீங்கள் அழைத்தால் தான் அவர் உணவை எடுத்துக் கொள்வார்” என்று கூற துக்காராமும் அங்கு சென்று பாண்டுரங்கனையும் விநாயகரையும் வேண்ட அவர்கள் இலையில் இடப்பட்டவைகளை எடுத்து உண்ண ஆரம்பித்தனர்.

ஆனால் இலையில் இடப்பட்ட உணவுகள் மறைவது மட்டும் அனைவருக்கும் தெரிந்தன. துக்காராம் கண்களுக்கு மட்டும் அவர்கள் தெரிந்தனர்.

பிறப்பால் தாம் உயர்ந்தவர்கள் என்ற கர்வம் அங்கிருந்த அனைவருக்கும் நீங்கிற்று.

அவர்கள் துக்காரராமைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாட ஆரம்பித்தனர்.

இப்படி இன்னும் ஏராளமான அற்புத சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் உண்டு.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஶ்ரீ மஹாபக்த விஜயம் நூலில் உள்ள படி இங்கு தரப்படுகிறது.

துக்காராம் பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

1937, 1938,1963,1973, 2012 ஆகிய ஆண்டுகளில் வெளி வந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் அமைந்திருந்தன; மக்களின் வரவேற்பையும் பெற்றன.

துக்காராமின் அபங்கங்களின் திரண்ட கருத்துடன் இந்த உரையை முடிக்கிறேன்.

இறைத்தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அதிலிருந்து ஒருபோதும் நழுவாதீர்கள்.

எனது அபங்கங்கள் பக்தியின் இரகசியத்தைக் கொண்டுள்ளது.

75 என்பது லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 75 என்பது ஏழு  மற்றும் ஐந்து ஆகியவற்றைக் கொண்டது.

ஏழு என்பது ஐந்து புலன்கள் மற்றும் மனம் மற்றும் புத்தியாகும் ஐந்து என்பது ஐந்து புலன்களாகும். இவற்றை வென்றால் துறவு ஏற்படும். .

சகுணமும் நிர்க்குணமும் ஒன்றே. இந்தப் புரிதல் துக்காராமுக்கு வந்தது.

துக்காராமின் இந்த அபங்கங்களை எவர் ஒருவர் தினமும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சொல்கிறாரோ அவர் அதுவாகவே ஆவர்.  எவர் ஒருவர் இதை அன்புடனும் பக்தியுடனும் தினமும் சொல்கிறாரோ அவர் ஆன்மீகப் பாதையில் நிலையாய் இருப்பர். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராது. இதைச் சொல்பவர்கள் எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பர்.

துக்காராம் மஹராஜின் திருவடி போற்றி.

நன்றி வணக்கம்.

**

Part Two of Fourth Kumbabishekam of London’s Famous Tamil Temple! (Post No.14,455)-2

Pictures of Kalyanji of Gnanamayam Broadcast and Ramesh Kurukkal of Madurai in London

Part Two Pictures from London Highgate Hill Murugan Temple on 30-4-25

Sri Kalyana Sivacharya with Kasi Visvanatha Lingam in the temple

Picture of Sri A V Swaminatha Sivacharya from Mayiladuthurai in Tamil Nadu

Picture of Sri A V Swaminatha Sivacharya from Mayiladuthurai with Balasubrahmanya Kurukkal of Vellore (now in London Kanaka Durga Temple)

Priest from London Murugan Temple with Lord Ganesh

Mulavar Abishekam seen on TV Screen

Sri Swaminatha Sivacharya of Sivapuram Veda Patasala in Mayuram was invited to do the Kumbabishekam

More pictures are posted on Facebook.

–Subham–

Tags- Part Two Pictures , London Highgate Hill Murugan Temple,30-4-25

Fourth Kumbabishekam of London’s Famous Tamil Temple! (Post No.14,455)- PART 1

Written by London Swaminathan

Post No. 14,455

Date uploaded in London –  30 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One of the oldest Tamil Temples, known as Highgate Hill Murugan Temple in London, celebrated its Fourth Maha Kumbabishekam- Consecration Ceremony today 30-4-2025. It was attended by 200 to 300 people this morning. Every 12 year a Hindu temple must have a renovation and consecration according to Hindu scriptures.

Murugan is the Tamil name of Lord Skanda/ Kartikeya.

Run by Sri Lankan Tamils with the support of all the Tamils from different countries, started Pujas in 1979 and celebrated first Kumbabishekam in 1986. Late Sri Sabapathi Pillai was the force behind the temple construction.

In addition to daily Pujas, the temple runs several classes to spread Saivism and regularly conduct Manikkavasagar Festival every December.

Queen Elizabeth

Queen Elizabeth visited only one Hindu temple and that was this Highgate Hill Murugan Temple.

Queen Elizabeth II visited the Highgatehill Murugan temple on the 6th of June 2002, in her first major engagement after the “Golden Jubilee” celebration. Highgatehill Murugan Temple is the first Hindu temple to be visited by the British monarch in the British history. Accompanied by Prince Philip, the Queen spent about 45 minutes at the temple and a “Special Pooja of blessings” was performed during the visit.

Another notable thing about the temple is Mr Nagarajan has been the manager of the temple for very long time. He is known to everyone.

Mayuram Priest

For this Kumbabishekaam, the temple  has invited Sri A V Swaminatha Sivachariyar from Mayiladuthurai in Tamil Nadu. He runs a successful Veda Patasala in Mayuram (Sivapuram Veda Patasala). He is expanding his Vedic Education.  He was assisted by all the priests from different temples in London today. London has 28 Tamil Temples, both big and small. North Indians have more temples in London.

Late historian and famous archaeologist Dr R Nagaswamy has performed several Dance Dramas with the help of this temple – all the dramas were about Tamil Saints and Hindu stories.

The temple is visited by hundreds of people during weekends.

At the end of three hour ceremony today, all were given pack lunch and water bottle. The temple committee has done fool proof arrangements to perform everything on time.

—Subham—

Tags- Highgate Murugan Temple, Kumbabishekam, consecration, cowd, Swaminatha Sivacharyar, Mayuram, Queen Elizabeth

Pictures of 2500 Indian Stamps!- Part 24 (Post No.14,456)

Written by London Swaminathan

Post No. 14,456

Date uploaded in London –  30 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Stamps posted today include

Brides of India: Tamil, Bengali, Kashmiri, Rajasthani Hindu Brides, Jayaprakash Narayan, Gandhi in Gold Colour Salt Satyagraha, Schubert, Annamalai Chettiyar,  Great Indian Bustard, Ansari, Gold Mining, Hijri, Mavlankar, St Stephens college Scottish Church College , Government Mint, Childrens day dancing, Gold Mining etc.

–Subham—

Tags Part 24, “500 Indian Stamps, Brides of India: Tamil, Bengali, Kashmiri, Rajasthani Hindu Brides, Jayaprakash Narayan, Gandhi in Gold Colour Salt Satyagraha, Schubert, Annamalai Chettiyar,  Great Indian Bustard, Ansari, Gold Mining, Hijri, Mavlankar, St Stephens college Scottish Church College , Government Mint, Childrens day dancing, Dhyan Chand, HaqueGold Mining etc.

மே 2025 காலண்டர்- புத்தரின் பொன்  மொழிகள் (Post No.14,454)

Written by London Swaminathan

Post No. 14,454

Date uploaded in London –  30 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தம்மபதம் என்பது பெளத்தர்கள் பின்பற்றும் வேத புஸ்தகம். இதிலிருந்து 31 பொன்மொழிகளை 2025 மே மாத   காலண்டரில் கொடுத்துள்ளேன் ; இவை புத்த பெருமான் சொன்ன  அருள் மொழிகள்.

பண்டிகை நாட்கள் : மே தினம்-1; சங்கர ராமானுஜர் ஜயந்தி-2; அக்கினி நக்ஷத்திர ஆரம்பம்-4; குரூப் பெயர்ச்சி-11; புத்த பூர்ணிமா /சித்திரா பெளர்ணமி-12; அக்கினி நக்ஷத்திர முடிவு-28.

அமாவாசை– மே 27; பெளர்ணமி– மே 12;

ஏகாதசி உணாவிரத நாட்கள்– மே 8, 23.

சுபமுகூர்த்த தினங்கள் – மே 16, 18, 23.

Auspicious Dates and Muhurat Timings in May 2025: (North Indian Panchang)

  • May 15th: Auspicious Muhurat timings start at 02:09 PM and end at 03:15 PM. 
  • May 16th: Muhurat timings from 05:30 AM to 04:07 PM, with the Tithi being Chaturthi. 
  • May 17th: Muhurat timings from 05:44 PM to 05:29 AM on May 18th, Tithi Panchami. 
  • May 18th: Muhurat timings from 05:29 AM to 06:52 PM, Tithi Shashthi. 
  • May 22nd: Muhurat timings from 01:12 AM to 05:26 AM on May 23rd, Tithi Ekadashi. 
  • May 28th: Auspicious Muhurat timings start at 05:45 AM and end at 07:06 PM. 

சில மாநிலங்களில் அனுசரிக்கப்படும்

நரசிம்ம ஜயந்தி- மே 11;

நாரத ஜயந்தி- மே 13;

ராணாபிரதாப் ஜயந்தி- மே 29;

சூர்தாஸ் ஜயந்தி – மே 2;

ரவீந்திரநாத் தாகூர் ஜயந்தி- மே 89;

****

மே மாத காலண்டர் புத்தரின் பொன்  மொழிகள்

மே 1 வியாழக் கிழமை

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)

***

மே 2 வெள்ளிக்கிழமை 

பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்-321

***

மே 3 சனிக்கிழமை 

பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும்  பயிற்சி பெற்றவுடனேயே  நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.-322

***

மே 4 ஞாயிற்றுக்கிழமை 

மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)

****

மே 5 திங்கட் கிழமை

ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)

****

மே 6 செவ்வாய்க்கிழமை

பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே—(தம்மபதம் 317)

***

மே 7 புதன் கிழமை

தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் –70

***

மே 8 வியாழக் கிழமை

உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

***

மே 9 வெள்ளிக்கிழமை 

காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

***

மே 10 சனிக்கிழமை

நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)

***

மே 11 ஞாயிற்றுக்கிழமை 

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும். – தம்மபதம் 1

*** 

மே 12 திங்கட் கிழமை

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.– தம்மபதம் 2

***

மே 13 செவ்வாய்க்கிழமை

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.–தம்மபதம் 28

***

மே 14 புதன் கிழமை

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30

***

மே 15 வியாழக் கிழமை

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் (தம்மபதம்-119)

***

மே 16 வெள்ளிக்கிழமை

 “கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – 314

***

மே 17 சனிக்கிழமை

 மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

***

மே 18 ஞாயிற்றுக்கிழமை 

பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)

***

மே 19 திங்கட் கிழமை

ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263

***

மே 20 செவ்வாய்க்கிழமை

நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359

***

மே 21 புதன் கிழமை

ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347

***

மே 22 வியாழக் கிழமை

ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338

***

மே 23 வெள்ளிக்கிழமை 

ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335

***

மே 24 சனிக்கிழமை 

உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

***

மே 25 ஞாயிற்றுக்கிழமை 

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389

***

மே 26 திங்கட் கிழமை

நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.- தம்மபதம், 393

***

மே 27 செவ்வாய்க்கிழமை

காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் – தம்மபதம், 387

***

மே 28 புதன் கிழமை

ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்–தம்ம பத பாடல் 294

***

மே 29 வியாழக் கிழமை

 ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383

***

மே 30 வெள்ளிக்கிழமை 

“ஒரு மனிதன் அறியாமையாலோ, மூடத்தனத்தாலோ பேசாமல் இருந்தால் அவன சிந்தனைச் சிற்பி அல்ல. ஒரு முனிவர் சிந்தனையாளர் ஆவார். ஒரு தராசுத் தட்டில் நல்லதையும் கெட்டதையும் தனித்தனியே வைத்து சீர்தூக்கிப் பார்ப்பவன் முனிவன், சிந்தனையாளன் ஆவான்.—269

***

மே 31 சனிக்கிழமை 

உண்மையே பேசு, கோபப் படாதே, கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு; இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (224)

***

Bonus Quotes

ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)

***

கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)

–Subham—

Tags- மே 2025 காலண்டர், புத்தர் , பொன்  மொழிகள்,  தம்மபதம்

துக்காராம் மஹராஜ்- Part 1 (Post 14,453)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,453

Date uploaded in London – –30 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

துக்காராம்! – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் வணக்கம். நமஸ்காரம்.

இன்று பகவானின் பக்தர்களில் சிறந்தவராகக் கருதப்படுபவரும் ஏராளமான அபங்கம் என்னும் துதிப்பாடல்களைப் பாடி அருளியவருமான துக்காராம் மஹராஜ் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்.

மகராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள தேஹுவில்  துக்காராம் மஹராஜ் அவதரித்தார். அவரது தந்தையின் பெயர் போல்ஹோபா. தாயார் கங்காயி என்பவர். இவரது காலம் சிவாஜி மஹாராஜின் காலத்தை ஒட்டியது. சிவாஜியின் பிறந்த தேதி19-2-1630. சிவாஜி மறைந்த தேதி 3-4-1680. ஆகவே அவர் 1630க்கு முன்னர் பிறந்தவர் என்பது தெரிகிறது. 1608ம் ஆண்டு அவர் பிறந்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

துகோபா உள்ளிட்ட பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். வர்காரி சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.

கிருஷ்ணரை அவர் விதோபா என்றே அழைத்தார்.

துக்காராம் இறை பக்தியில் ஜாதியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

‘ஒரு மனிதனின் ஜாதியைப் பற்றி ஒருபோதும் கடவுள் சிந்திப்பதில்லை. கடவுளுக்கு அவரது பக்தர்கள் அனைவரும் சமமே” என்றார் அவர். மிகப் பெரும் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த அவரை மக்கள் பெரிதும் மதித்தனர்.

இந்த ஒன்றே அவருக்குப் பல விரோதிகளைத் தந்தது. மாம்பாஜி என்ற ஒருவன் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். முதலில் துக்காராம் அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் பொறுப்பைத் தந்திருந்தார். ஆனால் கிராமத்தில் உள்ள அனைவரும் துக்காராமை பெருமதிப்புடன் வணங்குவதைக் கண்ட அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. ஒரு முறை முள் கம்பினால் அவன் துக்காராமை அடித்தான். அவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டுவது அவனது வழக்கம்.  ஆனால் இறுதியில் அவனும் துகாராமின் நல்ல சீடர்களுள் ஒருவனாக ஆனான்.

4600 அபங்கங்களை அவர் இயற்றியுள்ளார் என்று தெரிகிறது.

மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏழு கோடி பேர்கள் ஜாதி வித்தியாசம் இன்றி அவரது அபங்கங்களைப் பாடுகின்றனர் என்ற ஒன்றே அவரது சிறப்பைச் சுட்டிக் காட்டும்.

சத்ரபதி சிவாஜி, துக்காராமைத் தனது குருவாக மதித்தார். ஒரு முறை பண்டரிபுரத்தில் நடைபெறும் ஆஷாட சுக்ல ஏகாதசி உற்சவத்தில் தனது அபங்கங்களைப் பாட விரும்பிய துக்காராம் அங்கு சென்றார்.

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் துக்காராமின் அபங்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைக் கேட்க விரும்பி மாறுவேஷத்தில் கிளம்பினார்.

அப்போது ஔரங்கசீப் எப்படியேனும் சிவாஜியைப் பிடிக்க எண்ணி தன் ஒற்றகளை நாலா பக்கமும் அனுப்பிக் கொண்டிருந்தான். சிவாஜி பண்டரிபுரத்தில் துக்காராமின் அபங்கம் கேட்க வரலாம் என்ற செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த அவன் அவரைக் கைது செய்து கொண்டு வர ஒரு குதிரைப் படையையே அனுப்பினான்.

 இதை துக்காராமும் அறிந்தார். குதிரைப் படை வந்து கோவிலை முற்றுகை இட மன்னருக்குத் தீங்கு வராமால் காக்க பண்டரிநாதனை வேண்டினார் துக்காராம். பண்டரிநாதன் மனம் கனிந்தான், சிவாஜியைப் போல ஒரு உருவம் குதிரை மீதேறிச் செல்வதைக் கண்ட ஔரங்கசீப்பின் குதிரைப் படை சிவாஜியைத் தொடர்ந்தது. காடு மேடெல்லாம் சுற்றி அலைந்த சிவாஜி பின்னர் திடீரென்று காணாமல் போனார்.

மறுநாள் சிவாஜி மஹாராஜ் தன்னைப் போலவே ஒரு சிவாஜி குதிரையில் ஏறிச் சென்றதையும், ஔரங்கசீப்பின் குதிரைப்படை அழிந்த விதத்தையும் கேட்டு பாண்டுரங்கனின் கருணையை எண்ணி மனம் கசிந்தார்.

துக்காராம் ஒரு  முறை வறுமையால் வாடியதை அறிந்த சிவாஜி தானே ஒரு வியாபாரி வேஷம் பூண்டு துக்காராமிடம் வந்து தானிய மூட்டைகளை அளித்தார். அவர் சிவாஜி தான் என்பதை அறிந்து கொண்ட துக்காராம் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார். அதை வழக்கம் போல பக்தர்களுக்கு விநியோகித்தார்.

துக்காராமின் வாழ்வில் இறைவன் நடத்திய அற்புதங்கள் பல. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். துக்காராமின் பக்திப் பாடல்களை கேட்டு பக்தி மேலோங்கிய குடியானவன் ஒருவன் தன் குடும்பப் பொறுப்பைக் கவனிக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனது சிறிய குழந்தை இறந்து விட்டது. இதனால் துக்கமும் வெறுப்பும் கோபமும் அடைந்த அந்தக் குடியானவைனின் மனைவி நேராகத் துக்காராமிடம் வந்து முறையிட்டாள்

“உங்களால் தானே என் கணவர் குடும்பத்தையே மறந்து விட்டார். அதனால் தானே என் குழந்தையின் வியாதியைக் கூட அவர் தீர்க்க முனையவில்லை. இதோ! குழந்தை இறந்து விட்டதே? இதற்கு நீர் தானே பொறுப்பு?“ என்று அழுது புலம்பினாள்.

இதைக் கேட்ட துக்காராம் மிக்க வருத்தமுற்றார். “பாண்டுரங்கா, இந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாட்டாயா?” என்று முறையிட்டார்.

அவர் மெய்மறந்து கண்களை மூடிப் பாடுகையில் குழந்தை எழுந்து வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. அவர் கண் விழித்துப்ப் பார்த்து பாண்டுரங்கனின் கருணையைக் கண்டு வியந்து போற்றினார்.

ஊரார் அனைவரும் தம் கண் எதிரில் நடந்த இந்த சம்பவத்தால் மெய் சிலிர்த்தனர்.

*

 To be continued…………………………….

23Pictures of 2500 Indian Stamps!- Part 23 (Post 14,452)

Written by London Swaminathan

Post No. 14,52

Date uploaded in London –  29 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  23

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

Four different Aeroplanes, Helen Keller, Olympics Jumping, Horse Riding, Prem Chand, Kesav Chandra Sen, N M Joshi, Aman Ali, Madras Sappers, Darul Deoband, Army Post Office, Ulloor Parameswara Iyer, Bulb, Hirakud dam mint, Table tennis, paddy field, Breast feeding, Shivaji 30p, Apiculture, Rs Ten Stamps, Book Fair, Copper Ticket, Bulb mint, Welthy Fisher, Mount batten, 

–Subham—

Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 23, Four different Aeroplanes, Helen Keller, Olympics Jumping, Horse Riding, Prem Chand, Kesav Chandra Sen, N M Joshi, Aman Ali, Madras Sappers, Darul Deoband, Army Post Office, Ulloor Parameswara Iyer, Bulb, Hirakud dam mint, Table tennis, paddy field, Breast feeding, Shivaji 30p, Apiculture, Rs Ten Stamps, Welthy fisher, Rowland Hill, Theresa, Mountbatten

Rare Pictures from Cities of India book -Year 1905 (Post.14,451)

Written by London Swaminathan

Post No. 14,451

Date uploaded in London –  29 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Book Title – Cities of India

Author-  G W Forrest  C I E

Publication – London 1905

I have taken only some pictures from the book.

–Subham—

Tags- Cities of India, Rare Pictures, Year 1905