ஜெய்பூர் காலே ஹனுமான்ஜி மந்திர் (Post No.14,304)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,304

Date uploaded in London 24 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 23-3-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானர யூதமுக்யம் ஶ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி!

ஆஞ்சநேயர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஜெய்பூர் நகரில் உள்ள காலே ஹனுமான்ஜி மந்திராகும்

இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த அதிசயமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அற்புதமானதொரு ஆன்மீக அனுபவத்தை அடைகின்றனர்.

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.

சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.

தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான்  குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.

ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.

சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.

அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.

காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.

எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோவிலில் உள்ள தூண்கள் புஷ்ய நட்சத்திரத்திற்கு இணங்கக் கட்டப்பட்டுள்ளன.

கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கச் மூன்று திசைகளைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.

முகலாயர் மற்றும் ராஜ்புத்ர கட்டிடக் கலையின் படி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கோவில் அமைப்பில் ஒரு சிறிய கர்ப க்ருஹத்தில் ஒரே கல்லால் அமைந்துள்ள ஹனுமானின் விக்ரஹம் உள்ளது. இங்கு விநாயகர், ஶ்ரீ ராமர், சிவன், துர்க்கை ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கல்கத்தாவிலிருந்து வந்த கட்டிடக் கலை நிபுணர்கள் இந்தக் கோவிலை பெரிதாக்கினர்.

கோவிலைச் சுற்றி பெரிய தோட்டங்களும், விருந்தினர் விடுதிகளும் உள்ளன.

ஒரே சமயத்தில் 5000 பக்தர்கள் உணவருந்தும் விதத்தில் பிரம்மாண்டமான உணவருந்தும் கூடமும், பெரிய சமையல் அறையும் இங்கு உள்ளன.

கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.

சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.

சாமானியன் முதல் உயர் பதவி வகிப்பவர் வரை ஹனுமனை வழிபட்டு அதனால் தாங்கள் பெற்ற பயன்களை கூறுவதால் ஹனுமனின் புகழ் பெருகிக் கொண்டே இருக்கிறது

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தனது பையில் அனுமனது சிலையைக் கொண்டு செல்வதை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காலே ஹனுமான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

மலர் மருத்துவம் தரும் 38 மலர் மருந்துகள்! (Post No.14,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,303

Date uploaded in London – –24 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கிஆன்லைன் 6-3-25 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!

மாற்று மருத்துவம்!

மலர் மருத்துவம் தரும் 38 மலர் மருந்துகள்!

ச. நாகராஜன்                                                

இங்கிலாந்தில்  பர்மிங்ஹாம் அருகே உள்ள மோஸ்லி (Mosely)

என்ற கிராமத்தில் மலர் மருத்துவம் என்னும் புது சிகிச்சை முறையைக் கண்டறிந்த டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach) பிறந்தார்.

(பிறப்பு 24-9-1884 மறைவு 27-11-1936)

கேம்பிரிட்ஜில் படித்து பப்ளிக் ஹெல்த்தில் ஒரு டிப்ளமாவை அவர் பெற்றார்.

பின்னர் லண்டனில் யுனிவர்ஸிடி காலேஜ் ஹாஸ்பிடலில் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்க ஆரம்பித்தார். நேஷனல் டெம்பரன்ஸ் ஹாஸ்பிடலில் 21 வருடம் வேலை பார்த்து நல்ல அனுபவத்தைப் பெற்றார் அவர்.

டாக்டர்கள் வியாதிகளை இனம் கண்டு குணப்படுத்தும் விதத்தில் அவர் அதிருப்தி கொண்டார். நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் வருத்தமுற்றார்.

தனது 43வது வயதில் தனது மருத்துவ பிராக்டீஸை அவர் விட்டு விட்டார். தாவர வகைகளை ஆராய ஆரம்பித்தார். 1932 வாக்கில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு 12 மருந்துகளை அவர் கண்டுபிடித்தார்.  அடுத்து 1933ல் இன்னுமொரு ஏழு மருந்துகளை அவர் உருவாக்கினார்.

1934ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்ஷைரில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு அவர் இடம் பெயர்ந்தார். அங்குள்ள தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலும் அவர் அலைந்து திரிந்து தன் ஆய்வை மேற்கொண்டு இன்னும் 19 மருந்துகளைக் கண்டுபிடித்தார்.  தன்னிடம் வருவோருக்கு மலர் மருந்துகளை அவர் தர ஆரம்பித்தார்.

பத்திரிகைகளில் அவரது மலர் மருந்துகளைப் பற்றிய செய்திகள் வரவே பொதுமக்கள் திரளாக அவரை நாடி வந்தனர். ஆனால் ஜெனரல் மெடிகல் கவுன்சில் அவரது மலர் மருத்துவ  விளம்பரங்ளை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் தனது மலர் மருத்துவ முறைகளை அவர் தொடர்ந்து பரப்பினார். 1938ம் ஆண்டு மிக அமைதியாக தன் உயிரை நீத்தார்.

அவர் கண்டுபிடித்த மருந்துகள் மொத்தம் 38.

அக்ரிமனி, ஆஸ்பென், பீச், செண்டாரை, செராட்டோ, செஸ்ட்நட் ப்ளம், செஸ்ட்நட்பட், சிக்கரி, க்ளெமடிஸ், க்ராப் ஆப்பிள்,  எல்ம். ஜென்ஷன், கார்ஸ், ஹீதர், ஹால்லி,  ஹனிசக்கிள், ஹார்ன்பீம், இம்பேஷன்ஸ், லார்ச், மிமுலஸ், மஸ்டர்ட், ஓக், ஆலிவ், பைன், ரெட் செஸ்ட்நட், ராக் ரோஸ், ராக் வாட்டர், செலெராந்தஸ்,  ஸ்டார் ஆஃப் பெத்லஹேம், ஸ்வீட் செஸ்ட்நட், வெர்வெய்ன், வைன், வால்நட், ஒய்ட் செஸ்ட்நட், வைல்ட் ஓட், வைல்ட் ரோஸ், வில்லோ ஆகிய இந்த 38 மலர் மருந்துகளே அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகின்றன.

மலர் மருந்துகளின் விலை மற்ற அல்லோபதி மருந்துகளை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு,

இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

ஆண், பெண் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் நல்ல ஒரு மலர் மருத்துவரிடம் சென்று தனது குறைகளைச் சொன்னால் போதும். கூறுகின்ற வார்த்தைகளிலேயே மலர் மருத்துவர் வியாதி இன்னதென்று நிர்ணயம் செய்து மருந்தை சிபாரிசு செய்வார்.

ஹோமியோபதி மருந்துகளைப் போல சின்னச் சின்ன உருண்டைகளில் இரண்டு அல்லது மூன்றை வாயில் போட்டு சிறிது நீரை அருந்த வேண்டும். ஓரிரு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும்.

முக்கியமாக மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது தரும் பலனை உடனே உணர முடியும்.

அதிகமான பயமா, ரெட் செஸ்ட்நட் சாப்பிட வேண்டும்.

வேலை செய்து செய்து உடலும் மனமும் களைத்து விட்டனவா, ஆலிவ் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரே டென்ஷன் என்றால் வெர்வெய்ன் சாப்பிடலாம்.

இப்படி ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மலர்  மருந்து உண்டு.

கர்ப்பிணிகள் தங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசித்தபின் இவற்றை உட்கொள்ளலாம். 

இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்துகளை விற்கும் மருத்துவக் கடைகளில் வாங்கலாம். 

மலர் மருந்தைப் பயன்படுத்துங்கள்;  அதிக டென்ஷன், உடல்சோர்வு, களைப்பு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கிக் கொள்ளுங்கள்.

***

My Visit to Petronas Twin Towers in Malaysia (Post.14,302)

Written by London Swaminathan

Post No. 14,302

Date uploaded in London –  23 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I decided to stay in Kuala Lumpur, capital of Malaysia for two days on my way back to London from Sydney in Australia. The reason for the visit is to take rest and visit Batu Caves Murugan Temple and Petronas Twin Towers. The Twin Towers is in the congested area of the town and so we took Grab (like Ola and Uber is Grab) and it cost us only nine RM (ringitt). But the entrance fee for the Twin Towers is RM 100 for me and my wife; actually it is a concession for senior citizens like us. Others pay double the amount. All the visitors are taken in batches. We stopped at three places: 1.Sky Bridge connecting Twin Towers; 2.Eighty Fourth Floor and 3.Shopping Floor where you can buy momentous, gifts etc.

When you enter the building, they take a photo of you and your companion. It will be ready when you get out of the building; if you want you may buy your picture.

At each stop you are given 10 minutes to fifteen minutes and you can take pictures of the sky scrapers of Kuala Lumpur.

Local people are reluctant to pay and visit the building; but tourists think that it is onetime opportunity in life. The Twin Towers is with a huge shopping mall. When you come out you see a fountains and a park. If you want to cover the tall towers while taking pictures you must walk away.

Following are the details:

  • Name: Petronas Twin Towers (also known as the KLCC Twin Towers)
  • Location: Kuala Lumpur, Malaysia
  • Height: 1,483 feet (452 meters)
  • Floors: 88 stories
  • Architects: Cesar Pelli & Associates
  • Official Opening: August 28, 1999
  • Design: The design incorporates Islamic arabesques and repetitive geometries characteristic of Muslim architecture.
  • Historical Significance: From 1996 to 2004, they were the tallest buildings in the world.
  • Now the tallest Twin Towers in the World.

–subham—

Tags- my visit, Petronas , twin towers, Kuala Lumpur,

Around (half) the world in 100 Days! (Post No.14,301)

Written by London Swaminathan

Post No. 14,301

Date uploaded in London –  23 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

SRI VENKATESWARA TEMPLE, AUSTRALIA

SYDNEY OPERA HOUSE

DARLING HARBOUR, SYDNEY

SYDNEY MURUGAN TEMPLE

Four Countries! Over 40,000 Kilometres! 100 days.

Most of you would have read Jules Verne’s book Around the World in 80 days or at least seen the film. I , London Swaminathan , did go around half of the world in one hundred days. I left London on December 11, 2024 and came back on 20th March 2025. I covered over 40,000 kilometres by travelling to Australia, Singapore, Malaysia and India. Two times I had transit at Frankfurt airport in Germany. But I can claim only covering half of the world because I did not touch American and African continents. Following are the places I visited:

December 11, 2024- I left London Via Frankfurt

December 12-  reached Singapore

December 13- visitedSingapore Muthumaramman Temple, and had lunch at famous  Komala Vilas

December 14, 2024- reached Sydney in Australia

December 20,21,22- visted Shell Cove beach

December 22- I did Minnamurra Rain Forest Walk

December 23- I had Darshan at Sri Venkateswara Temple at Hellensburg.

December 29- visited to Bobbin head

December 30- I went to Lane cove National Park

****

TRAIN RIDE, BLUE MOUNTAINS, AUSTRALIA

Now to Year 2025

January 1, 2025 –  visited Palm beach, had a ferry ride

January 2, 2025—had Darshan at Sydney Murugan Temple

January 9, 2025– visited University of Sydney  chauchakming Museum

January 16, 2025- went to famous Australian Nuseum

January 22, 2025- visited Parramatta lake

January 23, 2025- visited Darling Harbour in Sydney

January 27, 2025- visited Opera house by ferry, and returned by train to my son’s house in Pennants Hill.

January 30, 2025- visited Shoal Bay, and Port  Stephenson

January 31, 2025- I went to Nelson bay , watched dolphins .

February 8, 2025- visited Blue Mountains in New South Wales

February 16, 2025- I had Darshan at Minto Shiva Temple near Sydney

February 19, 2025- I went to New South Wales State Library

February 22, 2025- visited Sydney Art Gallery

February 26, 2025—visited Museum of Sydney

February 28, 2025- visited Royal Botanic Gardens in Sydney

March First Week 2025- Final Shopping in Sydney

March 12,  2025- Left Australia after three months stay at my son’s house.

MINTO SHIVA TEMPLE, AUSTRALIA (NAGARATHAR CHETTIYAR KAVADI DAY)

****

March 12, 2025- Reached Capital of Malaysia Kuala Lumpur and stayed at Indigo Hotel

March 13, 2025- Visited Batu Caves Murugan Temple, and Petronas Twin Towers

March 14, 2025– Left Kuala Lumpur and arrived at Chennai Airport in India.

BATU CAVES , MALAYSIA

****

Temple Visits in India

March 15, 2025- Kanchipuram Kamakshi Temple

Sri Shankaracharya’s Mutt in Kanchipuram

Sri Vaitheeswaran Koil near Mayuram

I had good Darshan at the above three places.

Stayed at Akshardham in Vaitheeswrankoil.

March 16, 2025- Koothanur Sri Saravathi Temple

Sri Meganathar, Lalithambikai Temple at Thirumeyachur; reached Srivathsam home for old age people Guest House

March 16, 2025 evening – Swamimalai Murugan Temple;

Mahamakam tank; Kumbeswarar Temple

Sri Ramaswami Temple; stayed at the Sri Vathsam Guest House

March 17, 2025- I went to Gangaikonda Cholapuram Temple

Parikkal Sri Narasimhan Temple

Reached Madras

March 18, 2025- Sri Muralidhara Swamikal Ashram at Maharanyam, Malaippattu Village

Urgent trip to collect Passport that was lost in Kumbakonam temple

PARIKKAL SRI NARASIMHAN TEMPLE

THIRUMEYACHUR

KANCHIPURAM

March 19- Reached Madras by Taxi early morning

After hectic shopping left for Chennai Airport at 10 pm.

GANGAIKONDA CHOLAPURAM

March 20, 2025- Reached London

Next day Heathrow Airport was shut down because of a Fire Accident and 1300 Flights cancelled.

By God’s grace we came just before the fire accident.

–Subham—

Tags- around the world, in 100 days, My trip, London swaminathan, Four countries, 40,000 kilometres

நான் கண்ட மலேசியாவின்  உயர்ந்த கட்டிடம் 1483 அடி! (Post No.14,300)

Written by London Swaminathan

Post No. 14,300

Date uploaded in London –  23 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மலேஷியா நாட்டின் தலை நகரம் கோலாலம்பூர்; அங்கு 2025 மார்ச் மாதம் பதிமூன்றாம் தேதி (13-3-2025) தங்கியதற்கு இரண்டு காரணங்கள். 1.பத்துமலை முருகனைத் (BATU CAVES SHRINE)  தரிசிக்கவேண்டும் ; 2.உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் (PETRONAS TWIN TOWERS)  ஏறி நகரம் முழுவதையும் பார்க்கவேண்டும் என்பதே; இரண்டு ஆசைகளும் இனிதே நிறைவேறின .

ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம்; பத்துமலை முருகனைத் தரிசிக்க டிக்கெட் கிடையாது; இரட்டைக் கோபுரத்தைத் தரிசிக்க கட்டணம் உண்டு  நானும் என் மனைவியும் சீனியர் சிட்டிசன் என்பதால் (கிழவன்-கிழவி என்பதால் ) ஆளுக்கு ஐம்பது வெள்ளி (மலேசியன் ரிங்கட் Malaysian ringgit- RM) கட்டணம். ஏனையோருக்கு இரு மடங்கு கட்டணம்.

கட்டிடத்தில் ஏறிச் செல்ல லிப்ட் உள்ளது. ஆயினும் அணி அணியாகவே செல்ல முடியும்; இரட்டைக் கோபுரங்களையும் இணைக்கும் பாலத்தில் உலவ பத்து நிமிடம் கொடுக்கிறார்கள் . இரு பக்கங்களிலும் உள்ள கண்ணாடி வழியாக மலேஷியத் தலை நகரைக் கண்டு களிக்கலாம். பின்னர் உயரமான 84-ஆவது மாடிக்கு அழைத்துச் செல்வார்கள்; அங்கு மேலும் பல கட்டிடங்களை நான்கு திசைகளிலும் கண்டு களிக்கலாம் . அங்கே ஒரு பத்து நிமிடம் நிற்கலாம். பின்னர் ஷாப்பிங் ஏரியாவில் இறக்கிவிடுவார்கள்; பை கனமாக இருந்தால் பரிசுப் பொருட்களையும் வாங்கலாம். உள்ளே நுழையும் போதே உங்களை தனித் தனியாகவோ, கணவன் மனைவி ஜோடியாகவோ ,காதலன்- காதலி ஜோடியாகவோ போட்டோ எடுத்து விடுவார்கள்; நீங்கள் வெளியே செல்லுகையில் அது தயாராக இருக்கும்; விருப்பப்பட்டால் காசு கொடுத்து அதையும் வாங்கலாம். எங்களை காரில் சுற்றிக் காட்டிய இளைஞனைக் கேட்டேன்; அவன் மேலே ஏறியது இல்லை என்றான்; சுற்றுலாப்பயணிகளுக்கு அது வினோதம்; உள்ளுர்க்காரர்களுக்கோ அது காசினைக் கொள்ளை அடிக்கும் இடம் என்பது புரிந்தது!

கோபுரக் கட்டிடம் மிகப்பெரிய SHOPPING MALL ஷாப்பிங் மால்- உடன் இணைந்தது அதில் ஏராளமான கடைகள். நாங்கள் சென்றபோது கூட்டம் அதிகம் இல்லை.

வெளியே வந்தவுடன் பொங்கும் நீறுற்றுடன் பூங்கா  உள்ளது அதில் கொஞ்ச தூரம் சென்றால் கட்டிடத்துடன் செல்பி எடுக்கலாம்.

****

கட்டிடம் பற்றிய புள்ளி   விவரங்கள்

இரட்டைக் கோபுரங்களின் உயரம் –1483 அடி!

மொத்தமுள்ள மாடிகள் — 88

கட்டிடத்தில் உள்ள பகுதிகள் – கடைகள்; பெட்ரோலியம் மியூசியம்

இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் Skybridge பாலம் – 44– ஆவது மாடி

  • Location: Kuala Lumpur, Malaysia. 
  • Architect: Cesar Pelli. 
  • Completion: 1998. 
  • Height: 451.9 meters (1,483 feet). 
  • Floors: 88 floors per tower. 
  • Purpose: The towers house offices for Malaysia’s national oil company, Petronas, a large mall, a concert hall (home to the Malaysian Philharmonic Orchestra), and a petroleum museum. 

ஏன் பெட்ரோனாஸ் என்ற பெயர்?

இதைக் கட்டியவர்கள் பெட்ரோனாஸ் பெட்ரோலியக் கம்பெனிக்காரர்கள் அந்தக் கம்பெனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

நாங்கள் விமான நிலையத்திலிருந்து,  தங்கும் இண்டிகோ ஹோட்டலுக்குச் சென்றபோது நகரம் இருள்மயமாக காட்சி அளித்தது. இது ஒரு கிராமமோ என்ற நினைப்பு ஏற்பட்டது. ஆனால் கட்டிட உச்சியிலிருந்து நகரத்தைக் காண்கையில் நியூயார்க்குக்கு வந்து விட்டோமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது அவ்வளவு உயரமான கட்டிடங்கள்! வண்ண வண்ண கட்டிடங்கள்; விதவிதமான வடிவங்களில்!.

கட்டிடம் எங்கே இருக்கிறது?

கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் ஹோட்டல் ரூம் வாடகை எடுத்தால் நடந்தே செல்லலாம். அல்லது உள்ளூர் பஸ், ரயிலிலும் எளிதில் அடையலாம்

யார் இதை வடிவமைத்தார் ? – சீசர் பெல்லி

எப்போது கட்டப்பட்டது ? 1998

இதன் சிறப்பு என்ன? இதைவிட உயரமான கோபுரங்கள் இருந்தபோதிலும் இரட்டைக் கோபுரம் என்ற வகையில் இதுதான் உலகிலேயே உயரமான கட்டிடம் !

கட்டிடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் மடபமும் மண்  உளது

உள்ளூர்க்காரருடன் சென்றிருந்தால் எது, என்ன என்று சொல்லியிருப்பார்கள்  காசு இருந்தால் போங்கள்; இல்லாவிடில் உள்ளூர்க்காரர்கள் மூலம் வேறு உயரமான கட்டிடத்தில் ஏறி காசு இல்லாமலேயே நகரினைக் காணலாம்

ஆனால் நான் நியூயார்க் சென்றபோதும் இப்படி காசு கொடுத்து உயரமான கட்டிடத்தைப் பார்த்தேன் .

–SUBHAM—

TAGS- மலேஷியா , கோலாலம்பூர், இரட்டைக் கோபுரம், பெட்ரோனாஸ் டவர், நான் கண்ட கோபுரம், லண்டன் சுவாமிநாதன்

வெற்றிக்கு பெங்சுயி வழியைக் காட்டும் லில்லியன் டூ! (Post No.14,299)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,299

Date uploaded in London – –23 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கிஆன்லைன் இதழில் 4-3-25 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 

வெற்றிக்கு பெங்சுயி வழியைக் காட்டும் லில்லியன் டூ! 

ச. நாகராஜன்

உலகின் ஆகப் பெரும் பெங்சுயி நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மலாசியாவைச் சேர்ந்த லில்லியன் டூ (LILLIAN TOO).

பெங் சுயி பற்றி 200க்கும் மேற்பட்ட வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களை எழுதியவர் இவர்.

இவரது புத்தகங்கள் 30 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

சுமார் 60 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.

ஹார்வர்ட்  பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார் லில்லியன் டூ. பின்னர் சாதாரண வங்கி ஊழியராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் அவர்.

பெங்சுயி பற்றி அவருக்கு ஆர்வம் எழுந்தது. அதை நன்கு கற்றார். வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றார். தனது வெற்றியை மற்றவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பெங்சுயி பற்றிய வகுப்புகளையும் இன்று வரை நடத்தி வருகிறார்.

தனது வெற்றிக்கான முக்கியமான காரணங்களாக அவை கூறும் காரணங்கள் இரண்டு:

1)      “ஓம் மணிபத்மே ஹூம்” என்ற மந்திரத்தை 10 லட்சம் முறை ஜபித்தது முதல் காரணம்.

2)      அடுத்த காரணம் சீனர்கள் புனிதமாகக் கருதக் கூடிய ‘டிராகன்’ வடிவுடைய அரவணா என்ற மீனை வளர்த்தது.

மணிபத்மே ஹூம் மந்திரம் வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்த்தும் புத்தமத மந்திரம் ஆகும். அது அதிக செல்வத்தையும் தரும். இதை ஜபிக்க ஆரம்பித்தவுடன் ஹாங்காங்கில் வேலை பார்த்து வந்த அவர் வேலையை விட்டு விட்டு பெரும் பெங்சுயி நிபூணராக மாறினார். வாழ்க்கையின் குறிக்கோள்,, அதை அடையும் வழி ஆகியவற்றை உணர்ந்தார்.

அரவனா மீன் என்பது செல்வத்தையும் அதிகாரத்தையும் குறிக்கும் ஒரு வகை மீனாகும். அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஒருங்கே சேர்த்து இது தரும். இந்த மீனை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்தாலேயே பணம் வந்து குவியும் .புகழ் பெருகும்.

மீனைக் கடையில் வாங்கி உரிய முறையில் வளர்த்தால் இதன் பலனை நேரடியாக அனுபவிக்கலாம். இல்லையேல் முதலில் அந்த மீனின் சின்னத்தை வாங்கி அதை வீட்டில் வைத்துப் பார்த்து நல்ல பலனைப் பெறலாம்.

பணத்தோடு வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை அளிப்பதால் இதை பேரரசர் என்று சீனாவில் அழைப்பது வழக்கம்.

இப்படி மந்திரத்தாலும் அரவணா மீனாலும் பெரும் புகழ் பெற்ற லில்லியன் டூ மற்றவர்களுக்கும் தான் உணர்ந்த உண்மைகளைக் கூற ஆர,ம்பித்தார்.

ஒருவனின் உள்ளத்தூய்மையும் மனப்பாங்கும் அவனது உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது இவரது கொள்கை.

வீட்டில் வேண்டாத பொருள்களை வெளியே தூக்கி எறி என்பது இவர் செல்வம் பெறக் கூறும் முதல் வழி. DECLUTTERING  என்னும் வேண்டாத குப்பையை அகற்றும் வழி மகத்தான ரகசியத்தைக் கொண்ட வழி.  அதே போல உள்ளத்திலிருந்தும் கசப்புகளையும் அழுக்குகளையும் வெளியே தூக்கி எறி என்கிறார் இவர்.

ஒருவர் இவரிடம் வந்து ,”மேடம், நீங்கள் கூறியபடி என் எண்ணத்தைச் சீராக்கி உள்ளேன். எனக்கு ஒரு கார் வேண்டும். இதை அடைவது தான் என் லட்சியம்” என்றார்.

உடனே லில்லியன் டூ. அவரிடம்,” கட்டாயம் கிடைக்கும். கார் வேண்டும் என்பதை மனதில் புரோகிராம் செய்யுங்கள். கிடைத்தால் எப்படி எல்லாம் இருப்பீர்கள் என்பதை கற்பனை செய்து மகிழ்ச்சியை உணருங்கள்’ என்றார்.

அவரும் அப்படியே செய்தார்.

லில்லியன் டூவுக்கு ஒரு போன் வந்தது – அவரிடமிருந்து.

“கார் கிடைத்து விட்டது” என்று மகிழ்ச்சியுடன் அவர் கூவினார்.

அத்தோடு அவர் கேட்டார்: “மேடம், நான் இதற்குத் தகுதி உடையவன் தானா? என்று.

லில்லியன் டூ, “நீங்கள் தகுதி உள்ளவர் என்பதால் தானே இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அனுபவியுங்கள்: என்றார்.

ஆனால் தொடர்ந்து அவர் தான் அந்தக் காரைப் பெறத் தகுதி இல்லாதவன் என்றே நினைத்தார்.

விளவு இன்னொரு போன் அவரிடமிருந்து லில்லியன் டூவுக்கு வந்தது; “மேடம்! கார் திருடு போய்விட்டது!” என்று.

மனதின் சக்தி மகோன்னதமானது. அதன் சக்தி ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.

இதை உணர்பவர்கள் வெற்றி பெறுவர். இதற்கு நூற்றுக் கணக்கான் பெங்சுயி வழிமுறைகள் உதவி புரிகின்றன.

அவற்றைக் கற்று கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் லில்லியன் டூ!

***

Wonders of Batu Caves Skanda Shrine in Malaysia (Post No.14,298)

Written by London Swaminathan

Post No. 14,298

Date uploaded in London –  22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Durga Temple at  Batu Cavea

Forty feet long Durga Statue

Batu Caves near Kuala Lumpur, Capital of Malaysia, is famous for its tallest Muruga statue in the world.

I and my wife visited the shrine on 13th March 2025 on our way back to London from Sydney, Australia.

Though the temple is up above the hill, the golden coloured statue at the foothill is the most attractive one.

One should climb 272 steep steps to have the darshan of Lord Skanda/ Kartikeya/ Murugan.

Following are some interesting titbits about the Caves.

The Hill itself 400 million old geological calcite formation.

There are 272 steep, colourful steps.

Up above the hill is the Murugan shrine. During Thaipusam festival there will be a huge crowd.

The golden coloured Murugan statue at the foothills is 140 feet tall. It is the tallest Skanda statue in the world.

At the foothills, there are several temples including Hanuman, Vishnu, Ganesh, Durga and Ayyappan temples.

On the way to the main shrine smaller shrines are located. No fee is collected to enter the temple.

In addition to the temples, there are paid shows such as Gitopadesam and Ramayana show.

There are beautiful peacock statues and a huge Garuda statue; there is also a huge Hanumans statue near the Anjaneya temple.

Durga temple at the foothills has a beautiful idol; and a devotee has made a forty feet long Durga figure inside the temple.

Malaysia being a Muslim country, it is difficult to find a pure vegetarian restaurant; but inside the temple complex the restaurants serve pure vegetarian food.

One can reach the Batu Caves within half hour from the capital city Kuala Lumpur. Good parking space is provided in the temple complex.

One remarkable thing about the place is the presence of a big number of aggressive monkeys and the pigeons like old Trafalgar Square of London.

I found 50 %  devotees and 50 % tourists, mostly foreigners and local Chinese. We finished the  Darshan of all the temples in three hours. People travelling to Malaysia, must visit this temple.

london swaminathan

london swaminathan in batu caves

Extremists are demanding to cut down part of the mountain saying it creates traffic problems; but Hindus are resisting it.

I took lot of pictures there .

-subham—

Tags- Batu Caves, Murugan shrine, Skanda, monkeys, steep steps, temples  for all Gods, tallest, forty feet long, Durga

பத்து மலை (மலேசியா) முருகனைப் பார்க்க வாருங்கள்! (Post No.14,297)

Written by London Swaminathan

Post No. 14,297

Date uploaded in London –  22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செங்குத்தாக  ஏறும் 272  படிகள் !

140 அடி உயர தங்க நிற முருகன்!!

40 அடி நீள துர்க்கை!!!

BATU CAVES NEAR KUALA LUMPUR IN MALAYSIA

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது சிங்கப்பூரில் இறங்கி முத்துமாரியம்மனைத் தரிசித்தோம். ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்குத் திரும்பிச் செல்லுகையில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தங்கி அங்கு  பத்துமலைக் குகையில் Batu Caves உள்ள முருகனைத் தரிசித்தோம்.

நாங்கள் அங்கே சென்ற தேதி 13-3-2025

அங்கே மலைமீது முருகன் குடிகொண்டுள்ளார். கீழேயோ ஏகப்பட்ட சாமிகள்; கோவில்கள் .

நீங்களும் பத்து மலை முருகனைத் தரிசிக்க சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்

இது இருக்கும் பகுதியை செலாங்க்கூர் என்று அழைப்பார்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தங்க நிற முருகன் பொம்மையின் உயரம் 140  அடி.

குகைகளும் மலையும் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையான இயற்கை அமைப்பு ஆகும் ; இதை கால்சிய உப்பு மலைகள் என்பர் 

நகரின் மையப்பகுதியிலிருந்து காரில் செல்ல அரைமணி  நேரம்  தான் ; நல்ல பார்க்கிங் Parking வசதி இருப்பதால் காரை நிறுத்திவிட்டு மலையில் ஏறலாம். மலேசியா துலுக்க பூமி. ஆனால் கோவில் வளாகத்திலுள்ள உணவுவிடுதிகள் அனைத்தும் நல்ல சைவ– வெஜிட்டேரியன் உணவகங்கள். நாங்கள் முருகனைத் தரிசித்த பின்னர் சாப்பிட்டோம்.

மலைக்குப்போகும் முன்னர், கீழே கணபதியைத் தரிசித்தூப். பின்னர் முருகனைப் பார்க்க மலையில் ஏறினோம். உயரமான படிகள் ; நமது வீடுகளில் பத்து அல்லது இருபது படிகள் இருந்தால் கூட வயது ஆக ஆக நாம் கஷ்டப்படுவோம். பத்து மாலையிலோ சுமார் 272 படிகள். அதுவும் உயர உயர போய்க்கொண்டே இருக்கிறது .ஆங்காங்கு உள்ள மேடையில் தங்கிச் செல்லவேண்டும்.

மேலே செல்லும்போது குரங்குத் தொல்லை மிக அதிகம். என் கைப் பையை குரங்குகள் இரண்டு முறை சோதனை செய்தன நான் விரட்ட வேண்டியதாயிற்று.

நாங்கள் சென்றபோது போட்டோ எடுக்காத ஆளே  இல்லை ; செல்பி எடுக்காத ஆட்கள் இல்லை. பக்தர்கள் பாதி என்றால், வேடிக்கை பார்க்கவந்த டூரிஸ்டுகள் பாதி; அவர்கள் வெளிநாட்டினர் மற்றும் சீனர்கள் ஆவர்.

மலை உச்சிக்குச் சென்ற பின்னர் முருகன் , சிறிய கோவிலில் உள்ளார். படாடோபம், பந்தா எதுவுமில்லை. எனக்கு எனது மதுரை அருகிலுள்ள பழமுதிர்ச் சோலையை நினைவுபடுத்தியது . மலையின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மொட்டை மலை. அதிகம் செடி கொடிகள் இல்லை கீழே இறங்குவதும் கடினம்தான் இதற்குக் காரணம் செங்குத்தாக இறங்கும் படிகள்

தைப்பூசத் திருநாளின்போது போனால் கோவிலை நெருங்க முடியாது .

கீழே வந்தவுடன் பெருமாள் கோவில், அனுமார் கோவில், துர்கா கோவில்களைத் தரிசித்தோம். எந்தக் கோவிலுக்கும் நுழைவுக் கட்டணம் கிடையாது .

அனுமார் கோவில் அருகில் கட்டணம் கொடுத்துப் பார்க்கக்கூடிய ராமாயணக் காட்சி சாலை, கீதோபதேசக் காட்சிகள் உள்ளன. எங்களுக்கு நேரம் இல்லாததால் பார்க்கவில்லை  இது தவிர ஐயப்பன் கோவிலும் உளதாம் ஆண்டுதோறும் அய்யப்பன் சீசனில் இரு முடி கட்டுவது அங்குதான்.

****

நாற்பது அடி துர்க்கை

துர்க்கை கோவிலில் தமிழ் நாட்டிலுள்ள கோவில் போல அழகான துர்க்கை விக்கிரகம். எல்லா இடங்களிலும் இந்திய அர்ச்சகர்கள்தான் அந்தக் கோவிலில் சந்நிதிக்கு வெளியே ஒரு அன்பர் நாற்பது அடி நீளமுள்ள துர்க்கை பொம்மையை வைத்துள்ளார் .

பக்தர் கூட்டத்துக்கும், குரங்குக்கு கூட்டத்துக்கும் போட்டோ எடுக்கும் டூரிஸ்ட் கூட்டத்துக்கும் குறைவில்லாத இடம்! கீழே கூண்டுகளில் பறவைகள் வைக்கப்பட்டுள்ளன. மயில்களையும் வைத்துள்ளார்கள் லண்டன் ட்ரபால்கர் ஸ்கொயர் போல ஏராளமான புறாக்கள் வேறு உள்ளன. மயில்கள் அகவும் ஒலி யையும் கேட்கலாம்

பத்து மலை என்றவுடன் தங்க நிறத்தில் நிற்கும் பிரம்மாண்டமான முருகன் சிலைதான் நம் மனக் கண் முன் வரும். அது வெறும் அலங்கார உருவமே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ஆனால் மலை மீதுள்ள முருகனோ உருவத்தில் சிறியவர். அவரை வணங்கத்தான் இத்தனை கூட்டம்!

பல காரணங்களை சொல்லி பத்துமலையை மட்டம் தட்ட, அதாவது உயரத்தைக் குறைக்,க இந்து விரோத சக்திகள் குரல் கொடுத்தன . ஆயினும் இது வரை முருக பக்தர்கள் கை ஓங்கியே இருக்கிறது எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று சொல்வதற்கில்லை . விரைவில் தரிசித்துவிடுங்கள்.

மலைக்குச் செல்லும் வழியில் உள்ள மயில் பொம்மைகள் , பெருமாள் கோவில் மலைக்கு அருகில் உள்ள பெரிய கருடன் பொம்மை, மிக உயரமான அனுமார் சிலை ஆகியன பார்த்து ரசிக்க வேண்டியவை .

–subham—

Tags- பத்து மலை,  மலேசியா, முருகன் ,  பார்க்க வாருங்கள்,

செங்குத்தாக  ஏறும் 272  படிகள் , 140 அடி உயர தங்க நிற முருகன்,

40 அடி நீள துர்க்கை, குகைக் கோவில்

சித்தராஜ ஜெயசிம்மன் நீக்கிய யாத்ரீகர் வரி! (Post No.14,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,296

Date uploaded in London – –22 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

3-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

 இந்தியப் பண்பாடு : சுவாமியை தரிசிக்க கட்டணமாவேண்டாம் என்ற மன்னனின் அரும் செயல்! 

சித்தராஜ ஜெயசிம்மன் நீக்கிய யாத்ரீகர் வரி! 

ச. நாகராஜன்

குஜராத்தை ஆண்ட மன்னர்களுள் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தவன் சித்தராஜ ஜெயசிம்மன்.

மூன்று வயதிலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

எட்டு வயதில் தந்தை கர்ணா இறக்கவே இவன் மன்னனான்.

‘திவ்யாஸ்ரய காவ்யா’ என்னும் நூல் இவனை வெகுவாகப் புகழ்ந்து இவனது அரும் செயல்களைப் பட்டியலிடுகிறது.

இதே காலத்தில் இங்கு வந்த இஸ்லாமிய யாத்ரீகர்களான அல் – இத்ரிஸி மற்றும் முகம்மது உஃபி ஆகியோர் முறையே தங்களது நூல்களான நுஜாத் – அல் – முஷ்டக் மற்றும் ஜமே – அல்- ஹிகயாதா என்ற நூல்களில் இவனைப் பற்றி விவரிக்கின்றனர். இவனது அரசவைக்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்.

கி.பி, 1094 முதல் கி.பி. 1143 முடிய இவன் ஆண்ட காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது.

சித்தராஜ என்று இவனுக்குப் பெயர் ஏற்பட்ட காரணம் இவன் பல வித அரும் சித்திகளைக் கொண்டிருந்தான் என்பதால் தான்.

இன்னொரு காரணம் சித்தர்கள் இருந்த பூமியை ஆண்ட அரசன் என்பதாலும் இவனுக்கு சித்தராஜன் என்ற பெயர் வழங்கப்பட்டது.

இவன் உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன் போலத் தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான பண்புகளை வளர்த்துக் கொண்டான்.

இன்றும் கூட குஜராத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் நாட்டுப்புறப் பாடல்களில் இவனது அரும் செயல்களைப் பாடி வருகின்றனர்.

இவனுக்கு அமைச்சராக இருந்த அறிஞர் சம்பத்காரா என்பவர் இவனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் தெற்கிலிருந்து பஹுலோடா என்ற தலத்திற்கு வரும் யாத்ரீகர்களிடமிருந்து யாத்திரை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

ஒருமுறை சோமநாதபுரத்திற்கு தல யாத்திரை செய்ய ஜெயசிம்மனின்  தாயார் மயநல்லா  (குஜராத்தில் அவர் மினலா தேவி என்று அழைக்கப்பட்டார்) கிளம்பினார். அந்தக் கால வழக்கப்படி சேனையின் முக்கியமான பகுதி அவருடன் கிளம்பியது.

மயநல்லா பஹுலோடாவை நெருங்கியபோது எதிரில் ஏராளமான யாத்ரீகர்கள் வருவதைப் பார்த்து அவர்களை நோக்கி, “யாத்திரை நன்றாக நடந்ததா?” என்று அன்புடன் விசாரித்தார்.

அவர்களோ, “தாயே! எங்களுக்கு அங்கு செல்ல வரி விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களோ ஏழைகள். தெய்வ தரிசனத்திற்காக வந்தோம். ஆனால் வரி கொடுக்கப் பணமில்லை. ஆகவே தரிசனம் செய்யாமல் திரும்புகிறோம்” என்று வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினர்.

இதைக் கேட்ட மஹாராணி திடுக்கிட்டார்.

“நீ”ங்களே பார்க்கமுடியாத போது நான் எதற்கு அங்கு போக வேண்டும்? நானும் உங்களுடன் திரும்புகிறேன்” என்றார் மஹாராணி.

செய்தி ராஜா ஜெயசிம்மனுக்குப் பறந்தது. உடனே ஓடோடி வந்த ஜெயசிம்மன் இந்தக் கணமே யாத்திரை வரி நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டான். தாயாரின் மீது அளவற்ற பக்தியும் பாசமும் கொண்ட அவனது உத்தரவால் ராணியார் மகிழ்ந்தார். மக்களின் உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லாமல் போயிற்று.

இந்தக் கால வழக்கப்படி 72 லட்சம் நாணயங்கள் மதிப்பாகும் அந்த வரித் தொகை!

மக்களின் மீது அவன் செலுத்திய அதே அன்பை மக்களும் அவன் பால் திருப்பிச் செலுத்தினர்.

அவனைப் பற்றிய சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. அவை விக்ரமாதித்த மஹாராஜாவின் கதை போலவே இருக்கும். அவற்றில் வேதாளம் போன்ற பேய், பிசாசு, ராட்சஸன் ஆகிய எல்லாமும் உண்டு! ஆனால் அனைத்தும் உண்மையாக நடந்தவையே!

***

GNANAMAYAM 23-3-2025 BROADCAST PROGRAMME


GNANAMAYAM 23-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

23-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Jaipur Kale Hanuman Temple

***

SPECIAL TALK ON VAISHNAVITE  SAINTS/ ALVARS

By Dr Sri Lakshmi from Singapore

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு 

ஜெய்ப்பூர் ஹனுமான் கோவில்  

*****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

ஆழ்வார்கள் பற்றிய தொடர் சொற்பொழிவு

வழங்குபவர் – சிங்கப்பூர் டாக்டர் ஸ்ரீ லட்சுமி

 ***

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,23-3-2025, BROADCAST PROGRAMME