ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 9-3-2025 (Post No.14,287)

Written by London Swaminathan

Post No. 14,287

Date uploaded in Sydney, Australia –  10 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Complied from National newspapers and edited for broadcast.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்


அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ;  மார்ச் மாதம் 9-ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு

 ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-3-2025 (Post No.14,287)

இமய மலையில் இரண்டு தலங்களுக்கு  ‘ரோப் கார்’ வசதி —  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

கேதார்நாத், ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாரா புனித தலங்களில், 6,800 கோடி ரூபாய் மதிப்பில் ‘ரோப் கார்’ வசதி அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களின் புனித தலமான கேதார்நாத்தில், ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

ஏப்ரல்,மே -மாதத்தில் அட்சய திரிதியை தினம் துவங்கி, அக்டோபர்  – நவம்பரில் தீபாவளி வரை கோவில் திறந்திருக்கும். 11,968 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலை மீது இருக்கும் கேதார்நாத் கோவிலுக்கு, கவுரிகுண்டில் இருந்து 16 கி.மீ., துாரம் மலை மீது நடந்தும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்ய வேண்டும்.

கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில்  நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதையடுத்து, 4,000 கோடி ரூபாய் செலவில், சோன் பிரயாக் – -கேதார்நாத் இடையே 12.9 கி.மீ., துாரத்துக்கு தனியார் பங்களிப்புடன் ரோப் கார் அமைக்கப்படுகிறது.

 கேதார்நாத் ரோப் கார் திட்டம்; 9 மணி நேரம் பயணத்தை 36 நிமிடங்களாக குறைக்கும்!

அதிவேக காற்று மற்றும் கடுங்குளிரை தாங்கும் வகையில் அமைக்கப்படும் ரோப் காரில், ஒரு மணி நேரத்துக்கு 1,800 பேர் வீதம், நாள் ஒன்றுக்கு 18,000 பேர் பயணிக்கலாம்.

 இதே போல், உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஹேம்குண்ட் ஷாகிப் குருத்வாராவுக்கும் 2,730 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் திட்டத்தை அமைக்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சீக்கிய குரு கோவிந்த் சிங் நினைவாக அமைந்துள்ள இந்த குருத்வாரா, 15,000 அடி உயரத்தில், ஏழு மலை முகடுகளுக்கு மத்தியில் பனி பிரதேசத்தில் உள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை திறந்திருக்கும்.

கோவிந்த் காட்டில் இருந்து 21 கி.மீ., துாரத்துக்கு கடுமையான மலைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இதை தவிர்க்கும் வகையில், 12.4 கி.மீ., துாரத்துக்கு, மணிக்கு 1,100 பேர் செல்லும் வகையில் ரோப் கார் அமைக்கப்படுகிறது.

****

அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி அறிவிப்பு

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

கவர்னர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களிலிருந்தும் ஒரே நேரத்திலதொடங்கி, ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா  பந்தன் அன்று முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

*****

திருப்பதி பாலாஜி கோவிலில் ப்ரோக்கர் மோசடி ; தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் மொத்தம் 7,500 தங்கும் அறைகள் உள்ளன. இதில் உள்ள 3,500 அறைகள் சி.ஆர்.இ. அலுவலகத்தில் இருந்து நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் வழங்கப்படுகிறது.மேலும் 1,580 அறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்வதற்கும், 400 அறைகள் நன்கொடையாளர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் 450 அறைகள் வருகைப் பதிவுக்கு உட்பட்டவையாக வழங்கப்படுகின்றன. இதையடுத்து மீதமுள்ள அறைகள் நேரடியாக வரும் விஐபிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஆதாரை பயன்படுத்தி புரோக்கர்கள் விஐபி அறைகளை அதிகளவில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். மேலும் இந்த அறைகளை 48 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பதால், ஒரு பக்தர் தரிசனத்தை முடித்துவிட்டு அறையை காலி செய்தவுடன் அதே அறையை அடுத்தடுத்து 2 அல்லது 3 பக்தர்களுக்கு கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சாமி தரிசனம் செய்யாமல் சுற்றுலா வந்து தங்கிவிட்டு செல்வதற்கும் இந்த அறைகளை பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது .  இதைத் தடுக்க தேவஸ்தானம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

*****

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும் சினிமா பாடல்களை பாடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின்போது வளாகத்திற்குள் இசைக் கச்சேரி நடத்தப்பட்டதாகவும்,

அதில், பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், ஆகையால் கோயிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான இந்து அறநிலையத்துறை தரப்பு கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்றும், அறங்காவலர் நியமனம் தொடர்பான அரசின் கருத்தை அறிய அவகாசம் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும் என்றும், பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

*****

மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி வருமானம் : படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதை!

பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில்படகு உரிமையாளர் ஒருவர், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல், மகா சிவராத்திரி வரை 45 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரமே விழாக் கோலம் கொண்டிருந்தது. உலகமெங்கும் இருந்து சுமார் 66 கோடி பக்தர்கள், மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இவ்வளவு மக்கள் ஒரு இடத்தில் கூடிய போதிலும், ஒரு குற்றச் சம்பவங்கள் கூட நடக்கவில்லை. துன்புறுத்தல், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இதுவே மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பெரிய சான்றாகும் என்று கூறப்படுகிறது.

மகா கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. 45 நாட்களில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது.

ஹோட்டல் தொழிலில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையில் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்குக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. போக்குவரத்து துறை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.

கோயில் சார்ந்த பொருட்கள் மற்றும் ஆன்மிக பூஜை பொருள்கள் விற்பனையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நன்கொடையாக மட்டும் 660 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சுங்கச்சாவடிகள் மூலம் 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதர வருவாய் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

மகா கும்பமேளாவுக்கு செலவு செய்யப்பட்ட 7500 கோடி ரூபாய் கும்பமேளாவுக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பிரயாக்ராஜின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப் பட்டது.

மகா கும்பமேளாவுக்காக மாநிலத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. 14 மேம்பாலங்கள், 9 சுரங்கப்பாதைகள் மற்றும் 12 வழித்தடங்கள் கட்டப்பட்டன. நவீன விமான நிலைய முனையம் அமைக்கப்பட்டது.

இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் நாட்டின் திட்டமிடப்பட்ட 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மகா கும்பமேளாவின் மிகப்பெரிய பொருளாதார வெற்றியைக் குறிப்பிட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் ஒரு குடும்பம் 130 படகுகளை வைத்து குடும்பத் தொழிலாக படகு தொழில் செய்து வருவதாகவும், ஒவ்வொரு படகு மூலமும் 50,000 ரூபாய் முதல் 52,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்தார்.

மகா கும்பமேளா நடந்த 45 நாட்களில் அந்த குடும்பம் 30 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. ஒவ்வொரு படகின் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது.

இதுபோல், படகோட்டிகளில் பலர் நாள்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியதாக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், மகா கும்பமேளா திருவிழா மிகப்பெரிய பொருளாதார வெற்றியாகவும் அமைந்து விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

****

பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

புகழ்பெற்ற ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா  மார்ச் 05ம் தேதி புதன்கிழமை துவங்கி, மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடை  பெறுகிறது . பொங்கல் வைக்கும் விழா  மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கூடுவார்கள். இந்த பொங்கல் வைக்கும் திருவிழாவின் போது ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவலும்   நடைபெறும்.

திருவனந்தபுரம் ஆட்டுக்கால் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், பார்வதியின் மறு வடிவமான கண்ணகி பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.

****

கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்

கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது ,” என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோவில்களில் ஒரு கோவிலை தனியாக பிரிக்கக் கோரி கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.

அப்போது, ஜாதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர், கோவில் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் நிர்வகிக்கலாம். வழிபடலாம். ஜாதி என்பது மதத்தின் பிரிவு அல்ல. ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மத போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொதுக்கோவில்கள் குறிப்பிட்ட ஜாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்துகின்றனர். எந்த கோவிலுக்கும் எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது. கோவில் ஜாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

******

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க பயங்கரவாதி சதி அம்பலம்

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள மில்கிபூரைச் சேர்ந்த அப்துல் ரெஹ்மான் ஃபரிதாபாத்தில் நள்ளிரவு நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹரியானா அருகே இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் 19 வயது அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது ஹரியானாவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, அப்துல், ராமர் கோவிலை பலமுறை உளவு பார்த்ததாகவும், அனைத்து தகவல்களையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் ராமர் கோவிலை வெடிக்க சதி செய்தது அம்பலமானது.
தாக்குதலின் போது வீட்டிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

*****

ஹோலி பண்டிகை ; ஹிந்து அமைப்புகள் கோரிக்கை

புதுடெல்லி: மார்ச். 6- உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்​தாவனில் பிரஜ் ஹோலி கொண்​டாட்​டங்​கள் மிக​வும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்​பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ம் தேதி ஹோலி பண்​டிகை தொடங்கி ஒரு வாரம் நடை​பெறுகிறது. இந்​நிகழ்ச்​சிகளில் உள்​ளூர் முஸ்​லிம்​களும் பங்​கேற்​பது வழக்​கம். இதற்கு தடை விதிக்க உ.பி.பாஜக எம்​எல்​ஏ.​வும், இந்​து அமைப்​பினரும் வலி​யுறுத்தி உள்​ளனர்

 .இதுகுறித்து மதுரா பாஜக எம்​எல்ஏ ராஜேஷ் சவுத்ரி கூறும்​போது, “இந்து பண்​டிகை​களில் முஸ்​லிம்​கள் பங்​கேற்​பது சமூக முரண்​பாடு​களுக்கு வழி​வகுக்​கிறது. எங்​கள் விழா​வில் முஸ்​லிம்​கள் பங்​கேற்​ப​தன் மூலம், அவர்​கள் ‘காதல் ஜிஹாத்’ மற்​றும் துன்​புறுத்​தல் போன்ற சம்​பவங்​களில் ஈடு​படு​கின்​றனர். இதன் மூலம், முஸ்​லிம்​கள் இந்து பண்​டிகைகளை சீர்​குலைக்க முயற்​சிக்​கின்​றனர்” என்​றார்.

அகில இந்​திய சந்த் சமிதி இந்​து அமைப்​பின் தேசிய பொதுச் செய​லா​ளர் சுவாமி ஜிதேந்​தி​ரானந்த் சரஸ்​வதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், முஸ்​லிம்​கள் வேடிக்​கையை விரும்​பு​கின்​றனர். எனவே, பிருந்​தாவன் ஹோலி பண்​டிகை​களில் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைவதை முழு​மை​யாக யோகி அரசு தடை செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

*****

திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்ய மார்ச் 24-ல் முடிவு – ஐகோர்ட்

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது தொடர்பாக வரும் 24ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரைவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இதன் தென்பகுதியில் உமையாண்டார் குகைக் கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இதன் அருகே உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில், கடந்த ஜனவரி மாதம் ஆடு, கோழி போன்றவை பலியிட்டு சமபந்தி உணவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இது கோயில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாளில் திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கான அனுமதி வழங்குமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தது.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

****

அடுத்த ஒளிபரப்பு , மார்ச் மாதம் 23-ஆம் தேதி

லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

****

அடுத்தவாரம் அதாவது மார்ச் பதினாறாம் தேதி ஒளிபரப்பு கிடையாது ஆகையால் மார்ச் மாதம் 23-ஆம் தேதி சந்திப்போம்.

வணக்கம்.

—SUBHAM—

tags-ஞானமயம் , உலக இந்துமத செய்தி மடல் , 9-3-2025 , world hindu news, in tamil,

ஆலயம் அறிவோம்! திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் (Post.14,286)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,286

Date uploaded in Sydney, Australia — 10 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை! 

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

மருந்து அவை மந்திரம் மறுமை நன் நெறி அவை மற்றும் எல்லாம்

அருந்துயர் கெடும், அவர் நாமமே சிந்தை செய் நன் நெஞ்சமே

பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூஞ்

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது சிவபெருமான் நடனமாடிய ஐந்து தலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி திருத்தலமாகும்.

இது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.

இறைவன் : நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள்

இறைவி: காந்திமதியம்மவடிவுடையம்மை

தீர்த்தம் : பொற்றாமரைக் குளம், கருமாரி தீர்த்தம், சிந்து பூந்துறை

தல விருட்சம் : மூங்கில்

இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான பழமையான வரலாறுகள் உண்டு.

திருநெல்வேலி என்ற ஊரின் பெயருக்கான காரணத்தைக் கூறும் மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.

இன்னொரு வரலாறும் உண்டு.

முன்பொரு காலத்தில் ராம கோனார் என்பவர் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார்  அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இது ஐந்து கோபுரங்களைக் கொண்டுள்ளது.

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இங்கு பல அழகிய மண்டபங்கள் உள்ளன.

இங்குள்ள மணிமண்டபத்தின் நடுவில் தொங்கும் மணி ஒன்று உள்ளது. அதன் பெயரால் மணிமண்டபம் என்று இது அழைக்கப்படுகிறது.

இங்கு இசைத் தூண்கள் ஒரு பாறையைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன,

இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டதாக விளங்குகிறது.

இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் 96 தூண்கள் உள்ளன. இவை 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. திருக்கல்யாணத்திற்குப் பிறகு, இறைவனும் இறைவியும் இந்த மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடுகின்றனர்.

இங்குள்ள சோமாவர் மண்டபம் கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 78 பெரிய தூண்களைக் கொண்டுள்ளது.

இங்குள்ள சங்கிலி மண்டபம் சுவாமி சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் இணைக்கிறது. ஆகவே இது சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் தலம் இது. அருணாசலக் கவிராயர், சொக்கநாத பிள்ளை உள்ளிட்டோர் இறைவனைப் போற்றித் துதித்துப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள தேவி சந்நிதியில் தேவி மீது ஹேமாவதி ராகத்தில் “ஸ்ரீ காந்திமதிம்” என்ற கீர்த்தனையைப் பாடியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நெல்லையப்பரும் காந்திமதி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

யுதிஷ்டிரரா, கர்ணனா, யார் சிறந்த கொடையாளி? (Post.14,285)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,285

Date uploaded in Sydney, Australia – –10 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கிஆன்லைன் 28-2-25 இதழில் வெளியான கட்டுரை!

மஹாபாரதத் துளிகள் 

யுதிஷ்டிரராகர்ணனா, யார் சிறந்த கொடையாளி? 

ச .நாகராஜன்

ஒரு சமயம் அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

கிருஷ்ணர் அருகில் இருந்தார். தன் சந்தேகத்தை அவரிடமே அர்ஜுனன் கேட்டான்;

“பகவானே! யார் உண்மையில் சிறந்த கொடையாளி? யுதிஷ்டிரரா அல்லது கர்ணனா?”

“யுதிஷ்டிரரின் கொடை என்பது கவனித்து ஆராய்ந்து செய்யப்படும் கொடை. ஆனால் கர்ணனின் கொடையோ அந்த க்ஷணமே எதையும் எதிர்பார்க்காது செய்யப்படும் கொடை. ஆகவே கர்ணனே சிறந்த கொடையாளி” என்று கிருஷ்ணர் பதில் கூறினார்.

அர்ஜுனன் சற்றுத் தயங்கி நின்றான்.

“என்ன? சந்தேகமா, என் பதிலில்?, வா போவோம்” என்றார் கிருஷ்ணர்.

ஒரு பிராம்மண வேடம் தரித்துக் கொண்ட கிருஷ்ணர் அர்ஜுனனுடன் யுதிஷ்டிரரை நோக்கிச் சென்றார்.

யுதிஷ்டிரர் அப்போது கங்கையில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.

அந்தணர் அவரை நோக்கி, “ஐயனே!! யாசிக்க வந்துள்ளேன். எனக்கு எதையாவது கொடுத்தால் நல்லது” என்றார்.

உடனே யுதிஷ்டிரர், “ ஐயா! நான் இப்போது அசுத்தனாக இருக்கிறேன். குளித்து விட்டு வருகிறேன். வரும் போது தருகிறேன்” என்றார்.

கிருஷ்ணர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நேராகக் கர்ணனைச் சந்திக்கக் கிளம்பினார்.

கர்ணனும் கங்கையில் குளிப்பதற்காக வந்து கொண்டிருந்தான்.

அந்தணர் கர்ணனை நோக்கி, “ஐயனே! யாசிக்க வந்திருக்கிறேன்” என்றார்.

உடனே கர்ணன், “ஐயா, என் பாக்கியம்! இதோ தருகிறேன்” என்று கூறியவாறே தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் கையில் இருந்த தங்கத்தினால் ஆன கங்கணத்தையும் கழற்றி அவர் கையில் கொடுத்தான்.”

இதைப் பார்த்த அர்ஜுனன் குறுக்கிட்டு, “கர்ணா! நீ குளிக்க அல்லவா போய்க் கொண்டிருக்கிறாய். இப்படி அசுத்தனாக இருக்கும் நீ கொடுக்கலாமா? குளித்து விட்டு வரும் போது இதைக் கொடுக்கலாமே” என்றான்.

“அர்ஜுனா! இவர் கேட்பது என் பாக்கியம்! குளித்து விட்டுத் திரும்பும் போது இவர் இங்கு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? அது வரை நான் உயிரோடிருப்பேன் என்பது என்ன நிச்சயம்? ஆகவே தான் உடனேயே கொடுத்தேன்” என்றான் கர்ணன்.

அர்ஜுனன் உண்மையான கொடை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டான்.

, எதையும் எதிர்பார்க்காது கொடுப்பதை உடனே கொடுக்க வேண்டும்; அதையும் கர்வமின்றிக் கொடுக்க வேண்டும்!

ஆகவே தான் ‘தானவீரன் கர்ணன்’ என்ற பெயரைப் பெற்றான் கர்ணன்!

***

தந்தை யார்?குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post No.14,284)

Written by London Swaminathan

Post No. 14,284

Date uploaded in Sydney, Australia –  9 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தந்தை யார்? குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1

குமரேச சதகம் என்றால் என்ன ?

முருகப்பெருமான் பெயரில் நூறு பாடல்கள் என்று பொருள். சதகம் என்றால் நூறு பாடல்கள். இவை முழுதும் முருகனைப் பற்றியவை அல்ல. பொது விஷயங்களும் வருகின்றன அதாவது சமயம் பற்றியில்லாத தகவல்களும் வருகின்றன.

இயற்றியவர் யார் ?

நூறு பாடல்களை இயற்றியவர் குருபாததாசர்  ஆவார். அவர் புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள புல்வயல் என்னும் ஊரைச் சேர்ந்த சைவ வேளாளர்;  சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் . புல்வயலில் குடிகொண்டமுருகப்பெருமானைப் போற்றி , அவரை நினைத்துக்கொண்டு, பொது அறிவுரைகளை வழங்குகிறார் .

இதில் பல சுவையான செய்திகளும் வருகின்றன .

முதலில் முருகனைப் போற்றி வழிபட்டுவிட்டு பிராமணர், க்ஷத்ரியர் வைசியர் வேளாளர் பற்றி  நான்கு பாடல்களை பாடிவிட்டு யார் தந்தை என்று சொல்கிறார் . இதை சம்ஸ்க்ருதத்திலும்  காண்கிறோம்.

****

தந்தை நிலையில் / ஸ்தானத்தில் வைக்கப்படுவோர் யார் ?

பாடல் எண் ஆறு

6. பிதாக்கள்

தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,

     தனைவளர்த் தவன் ஒரு பிதா,

தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,

     சார்ந்தசற் குருவொருபிதா,

அவம் அறுத்தாள்கின்ற அரசொருபிதா, நல்ல

     ஆபத்து வேளை தன்னில்

அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,

     அன்புள முனோன் ஒருபிதா,

கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,

     கலிதவிர்த் தவன் ஒருபிதா,

காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்

     கருதுவது நீதியாகும்

மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு

     மதலையென வருகுருபரா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!

இவரது பட்டியல் சம்ஸ்க்ருத சுபாஷிதப் பட்டியலிலிருந்து வேறுபடுகிறது ; சம்ஸ்க்ருத மொழியில் உள்ள பொன்மொழிப் பாடல்களில் பொதுவாக ஐந்து தந்தைஐந்து தாய் ஐந்து குரு என்றுதான் பாடியிருக்கிறார்கள்

இவரோ பெரிய பட்டியல் தருகிறார்.

இதோ சம்ஸ்க்ருத ஸ்லோகம்

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

****

குருபாததாசர் சொல்லும் தந்தையர்கள்/ பிதாக்கள்

சம்ஸ்க்ருத  ஸ்லோகத்தில்  சொல்லப்பட்ட  ஐந்து தந்தையரை ஒப்புக்கொள்ளும் குருபாததாசர் மேலும் சிலரையும் தந்தை ஸ்தானத்தில்/ நிலையில் வைக்கிறார் 

தன்னை வளர்த்தவன் ஒரு பிதா – தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, (GOD FATHER)

சார்ந்த சற்குரு ஒரு பிதா – உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக் கொடுத்தவன் ஒரு தந்தை,

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா –

துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை,

நல்ல ஆபத்துவேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா – கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை,

அன்பு உள முனோன் ஒரு பிதா – அன்புடைய தமையன் ஒரு தந்தை,

கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா –

உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு தந்தை,

கலி தவிர்த்தவன் ஒரு பிதா – வறுமையைப் போக்கியவன் ஒரு
தந்தை (நமக்கு உணவு கொடுத்து உதவியவர்).

காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும்

– உலகில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது அறம் ஆகும்.

—SUBHAM—-

TAGS– தந்தை யார் ? குருபாததாசர் ,குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை -1

கடவுளே நீ இருக்கயா? (Post No.14,283)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,283

Date uploaded in Sydney, Australia – –9 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கி ஆன் லைன் இதழில் 2-3-25 அன்று பிரசுரிக்கப்பட்டது.

குட்டிக் கதை!

கடவுளே நீ இருக்கயா?

ச. நாகராஜன் 

கோவில் அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டிலிருந்து துளஸியை எடுத்து வெங்கடேசன் கையில் கொடுத்தார். 

கோபத்துடன் அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன், “கடவுளே நீ இருக்கயான்னு கேட்கத்தான் வந்திருக்கேன்” என்றான்.

அர்ச்சகருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன இது இப்படிச் சொல்லலாமா? சூரியன் தவறினாலும் நீங்க தவற மாட்டேள். கரெக்டா வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாம இருந்த நாள் உண்டா? ஏன் லேட்டுன்னு கேட்க வந்தேன் கடவுளே நீ இருக்கயான்னு கேக்கலாமா?”

“ஸ்வாமி இத்தனை நேரம் ரொம்ப தூரம் போயிருப்பேன். ஹைதராபாத்திலே நாளைக்கு இண்டர்வியூ. நல்ல வேலை. இரட்டிப்பு சம்பளம். பெர்க்ஸ் நிறைய -காரு, வீடுன்னு.. டிராபிக் ஜாம்லே மாட்டிகிட்டதனாலே ரயில் கிளம்பிடுச்சு. ‘ஈசன் வானவர்க்கு என்பன் ஆகில் தேசம் உண்டாமோ திருவேங்கடத்தானே’ என்று சரியாத் தான் ஆழ்வாரே கேட்டிருக்கார். நீ தேவர்களுக்கு மட்டும் தான் தெய்வமா? மனிசனுக்கு நீ தெய்வம் இல்லையான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்.” 

“ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். இதுல ஏதோ சூட்சுமம் இருக்கு. இதை விட நல்ல வேலையா அமையுமோ என்னவோ” 

“ஹூம்” என்று உறுமிவிட்டு வெங்கடேசன் கிளம்பினான் சந்நிதியை விட்டு.

அடுத்த நாள். தலையை குனிந்து கொண்டு வந்த வெங்கடேசனைக் அர்ச்சகர் பிரமிப்புடன் பார்த்தார்.

“என்ன நடந்திருக்குன்னு பேப்பர்ல பார்த்தேன்.” 

குரல் தழுதழுக்க வெங்கடேசன் சொல்ல ஆரம்பித்தான்: “ஆமாம், ஸ்வாமி ட்ரெயின் டீ ரெயில் ஆகி ஒரு கம்பார்ட்மெண்ட் கவிழ்ந்து மூன்று பேர் பலி. ஒண்ணு தெரியுமா? அது நான் போக வேண்டிய அதே ஏ கம்பார்ட்மெண்ட் தான்!”

அர்ச்சகர் பெருமாளைப் பார்த்துக் கும்பிட்டார்.

“இன்னும் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும். கம்பெனிலேர்ந்து போன் வந்தது. அந்த இண்டர்வியூ நடக்கவே இல்லையாம். அதை நடத்தறவரும் அந்த ரயில்லே தான் வந்தாராம். நல்ல வேளை அவர் தப்பிச்சார். வெளியூர்லேர்ந்து வர எல்லோருக்கும் கம்பெனியே ஃ;ப்ளைட் டிக்கட் அனுப்பி இருக்கு. நாளைக்குத் தான் இண்டர்வியூ.”

“ஆஹா!” என்ற அர்ச்சகர் துளஸியைக் கொடுக்க தட்டில் நூறு ரூபாய் நோட்டைப் போட்டு விட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.

டுத்த நாளுக்கு அடுத்த நாள். வழக்கமான நேரம்.

மலர்ச்சியுடன் வந்த வெங்கடேசனை புன்னைகையுடன் வரவேற்றார் அர்ச்சகர்.

“என்ன ஜயமா?” என்ற கேள்விக்கு பதிலாக ‘வெற்றியோ வெற்றி’ என்ற வெங்கடேசன் “வேலை கிடைச்சதுமட்டுமில்ல, அதில ஒரு அதிசயம் வேற இருக்கு.” என்றான்.

“என்ன?” என்ற பாணியில் வியப்புடன் அவனை நோக்கினார் அர்ச்சகர்.

“இங்கே சென்னைலே ஆள் இல்லையாம். அதனாலே எனக்கு போஸ்டிங் இங்க தான்!”

“அட, பெருமாள் விட மாட்டேங்கறாரோ!” என்றார் அர்ச்சகர்.

“நீங்க சூட்சுமம் இருக்குன்னு சொன்னதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. பெருமாள் தேவர்களுக்கு மட்டும் தானா என்று நம்மாழ்வார் பாடியதைச் சொன்னேன். அவரே ‘பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே” என்று பாடி இருக்காரே! இனி எனக்கு என்ன ப்ராப்ளம்” என்று சொன்ன வெங்கடேசன் தட்டில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தான்.

“என்ன உண்டியல்ல போடணுமா?’ என்ற அர்ச்சரகரை வேகவேகமாக மறுத்த வெங்கடேசன், ‘இது உங்களுக்கு! இதோ இது தான் உண்டியலுக்கு’ என்று இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவர் கையில் தந்தான்.

பெருமாளைக் கும்பிட்டுத் திரும்பப் போன அவனை அழைத்த அர்ச்சகர், :’ ஒரு விஷயம் எனக்குத் தெரியவந்தது. அந்த ஏ கம்பார்ட்மெண்ட்ல மூணு பேர் பலி என்று அன்னிக்கி சொன்னது ஞாபகம் இருக்கா? அதுலே ஒருத்தன் பக்கா கொலைகாரனாம். அவன் ஜெயில்லேர்ந்து தப்பிச்சு இரண்டு மாசம் ஆயிருக்கு. அவனைத் தேடிண்டு இருந்த போலீஸ் அவனையும் அவன் ரெண்டு கூட்டாளிகளையும் ஐடென்டிஃபை பண்ணி இருக்கு” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“இது எப்படி எனக்குத் தெரியும்னு கேட்க வேணாம். நம்ப பெருமாள் பக்தர், தினமும் வருவாரே போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர் தான் சொன்னார்” என்று முடித்தார்.

“ஆஹா!”அடியார் தமக்கு அல்லல் நில்லாவே” என்று பரவசமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் வெங்கடேசன்.

**

 புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :

 புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :

சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.

சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.

இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.

RAJANI KANTH CONGRATULATED ILAYARAJA

1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.

‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ‘மூடுபனி’-யில் வரும் “என் இனிய பொன் நிலாவே”, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.

Hindu Crosswoord8325 (Post.14,282)

Written by London Swaminathan

Post No. 14,282

Date uploaded in Sydney, Australia –  8 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1 2 3   4 
          
5         
         6
7      8  
          
9    10   11
       12  
13         

Across

1great heroine also known as Rani of Jhansi

5.One of the Avatars of Vishnu with Lion face

7New moon day of Hindus when they worship departed souls

9.Parents, grand parents of both mother and father sides

13The flag that is hoisted during Indra Festival; Valmiki used this simile very often—he fell like …..

Down

1.The city burnt by Hanuman

2.One who does a work; also one who creates

3 Laugh, laughter.2) Derision.3) Merriment, mirth.in Sanskrit

4. Favour; अग्नेरवेण मरुताम् (agneraveṇa marutām) Ṛgveda 1.128.5.

6. A musical mode or order of sound; Loveliness, beauty. Love, passion, affection, amorous or sexual feeling

****

8. 1) A disease of the eye.

2) A country to which one should go (gantavyadeśaḥ or cirantanagrāmanivāsaḥ.

3) A cemetery.

4) (pl.) Ruins, rubbish; 

****

10. To say, speak utter, address, speak to in Sanskrit

11. aloe (wood); in India is also identified with Acorus calamus It has the synonym Acorus americanus

12.Mango

L 1AK2SH3MIBA4I
A A A   V 
N5ARASIMHA 
K T A    R6
A7MAVASYA8 A
P V    R G
U9BAYAV10AMSA11
R H  A A12  
I13NDRADWAJA

—subham—

Tags- Hindu Crosswoord8325

புரந்தரதாஸரின் புகழ்மிகு கீர்த்தனைகள் (Post.14,281)

Written by London Swaminathan

Post No. 14,281

Date uploaded in Sydney, Australia –  8 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 9–வது கட்டுரை இது)

வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்

பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்

சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)

****

சரணு சித்தி விநாயகா சரணு வித்ய பிரதாயகா

சரணு பார்வதி தனைய மூர்த்தி சரணு மூஷிக வாகனா (சரணு)

****

ஏனு ஹேளலி தங்கி திம்மய்யனா பாதவனு கண்டே

கனசு கண்டேனே மனதல்லி களவளகொந்தேனே (ஏனு)

****

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணவ

பரிதே மாதேகின்னு அரிது பேளுவேனய்யா (தொரெது)

****

கருணிசோ ரங்கா கருணிசோ

ஹகலு இருளு நின்னா

****

கருணாகர நீனெம்புவது யாதகோ

பரவச வில்ல எனகே

பரி பரியலி நர ஜெம்னவனித்து

திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)

****

ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர

பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)

*****

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

****

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

****

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

****

க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

யாரிகே வதுவாகுவே – நீனு யாரிகே வதுவாகுவே

*****

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம

ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

*****

யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா

யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

*****

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

*****

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே

கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

****

தாள பேகு பக்க மேள பேகு

சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

****

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன

யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

****

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி

நித்ய தானவ மாடி பலவேனு

சத்ய சதாசார இல்லதவனு ஜப

ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

*****

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

****

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா

ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

****

ஆச்சாரவில்லத நாலிகே

நின்ன நீச புத்திய பிடு நாலிகே

விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே

சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

****

கோவிந்தா நின்ன நாமவே சந்தா

கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

****

ராகி தந்தீரா பிக்*ஷக்கே ராகி தந்தீரா

யோக்யராகி போக்யராகி

பாக்யவந்தராகி நீவு (ராகி)

****

தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன

தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)

****

கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே

குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)

****

நான் ஏகே படவனு நான் ஏகே பரதேசி

ஸ்ரீநிதி ஹரி எனகே நீ இருவ தனகா (நான் ஏகே)

****

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே

நாமகிரீஷனே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு

சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே

****

கும்மன கரெயதிரே அம்மா நீனு

கும்மன கரெயதிரே

சும்மனே இருவேனு அம்மிய பேடெனு

மம்மு உண்ணுதேனு அம்மா அளுவுதில்லா (கும்மன)

****

KRITIS BY PURANDARADASA

  Neenyako Ninna • Neene Anaatha bandhu

 Kaliyugadalli Harinaamava • Yaake Murkhanaadyo

 Yaadava Nee Baro • Naanenu Maadideno Rangayya

Innu daya Baarade • Dasana Maadiko Yenna

Naa Maadida Karma • Bhaagyaada Lakshmi Baaramma

Baaro Murare – Behag

Barayya Namma Manege

Bhagyadha Lakshmi Bharamma

Deva Banda Namma, Swami Bandano

Enna Paaliso Karunakara

Hari Smarane Maado

Kande Na Udupi Krishnane – Neelambari/Ragamalika

Kelano Hari Taalano

Murahara nagadhara neene gati – Arabhi

Naanena Maadideno Rangayya

Naarayana ninna naamada smaraneya

Nara Janma Bandhaaga

Ragi Tandira

Ranga Baro Panduranga

Sakala Graha Bala Neene

Smariso Sarvadha Hariye – Hamir Kalyani

Tanu Ninnadu Jeevan ninnadu swami

Venkatachala Nilayam

Yadava Nee Baa

UpaBhogas

Bhagyada Lakshmi Baramma. Uthara Unnikrishnan.

Jagadoddharana. Vani Harikrishna, Karthik, V. …

Chandrachooda Shiva Shankara. Sooryagayathri.

 Jagadhodarana. Vidyabhushana.

 Rama Mantrava Japiso. …

Pavamana Jagada Prana.

—subham—-

Tags— புகழ்மிகு கீர்த்தனைகள் , புரந்தரதாசர், 9–வது கட்டுரை, Purandaradasa, Keertanas

மவுண்ட் வெசுவியஸ்! (MOUNT VESUVIUS) உலகின் அதிபயங்கர எரிமலை! (Post.14,280)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,280

Date uploaded in Sydney, Australia – –8 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 கல்கி ஆன் லைன் 2-3-25 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

 மவுண்ட் வெசுவியஸ்! (MOUNT VESUVIUS) உலகின் அதிபயங்கர எரிமலை! 

ச. நாகராஜன்

   TACITUS

இத்தாலியில் உள்ள கம்பேனியாவின் தலை நகரம் பழம் பெரும் நகரமான நேபிள்ஸ். புகழ் பெற்ற கவிஞனான கதே, “நேபிள்ஸைப் பார்த்து விட்டுச் செத்துப் போ” என்றான். ஏனெனில் அதற்குப் பின்னர் உலகில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது அவனது அறிவுரை!

அப்படிப்பட்ட நேபிள்ஸின் நகரின் கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உலகின் அதிபயங்கரமான எரிமலையான மவுண்ட் வெசுவியஸ் (MOUNT VESUVIUS)!

இந்த எரிமலையின் மெற்குப் பகுதி சரிந்து பே ஆஃப் நேபிள்ஸைத் தொடுகிறது.

இங்கு தான் ஹெர்குலனியம் (HERCULANEUM) என்ற பழம் பெரும் நகரின் சிதைபாடுகள் உள்ளன. பாம்பி (POMPEI) என்ற இன்னொரு பழம் பெரும் நகரத்தின் சிதைபாடுகள் தென்கிழக்கில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த எரிமலையின் வாய் 2000 அடி குறுக்களவும் 300 அடி ஆழமும் உள்ளது. இதை அடைய கேபிள் கார் வசதி உண்டு. சுற்றுப்பாதை ஒன்றும் உண்டு.

இந்த எரிமலையின் சரித்திரம் சுவையான ஆனால் பயங்கரமான ஒன்று.

கி.பி. 79ம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி!

நேபிள்ஸ் வளைகுடாவின் மேற்குப்பகுதியில் உள்ள மிஸனம் என்ற இடத்தில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வந்தான் பதினேழே வயதான ப்ளினி என்ற பையன்.. திடீரென்று எரிமலை வெடிக்க தன் அன்னையுடன் ஓடி அவன் உயிர் பிழைத்தான்.

நடந்தது என்ன என்பதை இரு கடிதங்கள் மூலம் விரிவாக எழுதி பிரபல ரோம் நகரத்து வரலாற்று அறிஞரான டாசிடஸுக்கு (TACITUS) அவன் அனுப்பினான்.

“பெரும் வெள்ளம் வருவது போல எங்களுக்குப் பின்னால் ஒரு கருமேகம் துரத்தி வந்தது. எங்கும் ஒரே இருள்மயம். கடல் தண்ணீர் வற்றிப் போய் கடலே உள் வாங்கியது”என்று அவன் விவரித்திருந்தான்

ஹெர்குலனியம், பாம்பி, மற்றும் ஸ்டாபியா ஆகிய மூன்று நகரங்கள் தீ ஜுவாலையால் கொழுந்து விட்டு எரிந்தன. மக்கள் கிடைத்த விலைமதிக்கத்தக்க பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடினர். அடுத்த நாள் சூரியனையே காணோம். சூரியனை அடர்த்தியான கரும் மேகங்கள் மறைத்திருந்தன.

எரிந்தது போக மீதம் இருந்த கட்டிடங்கள் மீது கட்டியான சாம்பல்கள் படிந்திருந்தன. 20 அடிக்கு சாம்பல் படிந்திருந்தது. ஹெர்குலனியம் நகரம் 55 அடி ஆழத்தில் சகதியில் மூழ்கி அழிந்தது. 2000 மக்கள் பாம்பி நகரில் மட்டும் உயிரிழந்தனர்.

நேபிள்ஸ் வளைகுடாவிலிருந்து மாண்டி சொம்மா என்ற அரைவட்ட வடிவமான எரிமலையின் வாய்ப்பகுதி 4200 அடி உயரத்தில் உள்ளது. இது ராக்ஷஸப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்த எரிமலை கி.பி. 79லிருந்து 1036ம் ஆண்டு வரை ஒன்பது முறை வெடித்திருக்கிறது. 1631ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெடித்த இந்த எரிமலை ஒரு கணத்தில் 15 கிராமங்களை விழுங்கியது. எரிமலை வெடிப்பு தணிந்த போது எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு அடர்த்தியான சாம்பல் படிந்திருந்தது. 3000 பேர் இறந்திருந்தனர்.

உடனே நேபிள்ஸ் நகரத்து வைசிராய் இங்கு ஒரு நினைவு நின்னத்தை எழுப்பி “குழந்தைகளே! குழந்தைகளின் குழந்தைகளே,உங்களை நான் எச்சரிக்கிறேன். இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் – உடனே” என்று அதில் பொறித்து வைத்தார்.

1906ம் ஆண்டு மீண்டும் மவுண்ட் வெசுவியஸ் சீறியது. 1845ல் இங்கு மலைச்சரிவில் 2000 அடி உயரத்தில் ஒரு ஆப்ஸர்வேடரி அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து எரிமலையின் சீற்றத்தை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். 18 நாட்கள் எரிமலைப் பொங்கி வழிந்தது. அந்தப் பகுதியில் இருந்த கிராமங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. எரிமலையின் வாய் இன்னும் ஆயிரம் அடி அகலமானது.

1944க்குப் பின்னர் இங்குள்ள செழிப்பான மண்வளத்தைக் கண்ட விவசாயிகள் இங்கு திராக்ஷை செடிகளைப் பயிரிட்டனர். இதிலிருந்து பிரசித்தமான லாக்ரிமா க்றிஸ்டி ஒயின் (Lacrima Christi Wine) தயாரிக்கப்பட்டது.

இந்தப்பகுதியில் மொத்தமாக இருபது லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

ஐரோப்பாவின் உயிருள்ள எரிமலையான இது என்று மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்கின்றனர்.

வானளவு உயர்ந்து எரியும் தன்மை கொண்ட இந்த எரிமலையை, இந்த எரிமலை அமைதியாக இருக்கும் போது  பார்க்க மக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லையே!

**

GNANAMAYAM 9-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM 9-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

9-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  TIRUNELVELI NELLAIAPPAR  Temple

***

Talk  by Bengaluru S Nagarajan on Tamil Poet Villippuththurar

***

SPECIAL INTERVIEW ( on his novels ) BY Dr V S MANI OF AMERSHAM, GREATER LONDON, UK (President of South Indian Society and London Novelist)

Dr V Subramanian

Was born in Madras (now Chennai) is from Tanjore but grew up in Calcutta (now Kolkata). Studied in Bengal Engineering College in Calcutta university. Worked in Durgapur, near Calcutta. Then he came to the UK and worked with The British Aluminium Co. (BA). He did a Ph. D in Metallurgy in Swansea University in Wales and rejoined BA. In later years he was the Practice Manager for a 6 Partner GP Practice in Tottenham in London. Then in GP practices in Edgbaston, Birmingham and in Manchester. He is now retired and embarked on writing books.

 ****

Ravi – the Interviewer. 

He is the brother-in-law of Mani, who studied in Jadavpur university in Calcutta. He has wide experience in Marketing and worked in India, and finally for a few decades in Dubai.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

*****

பெங்களூரு எஸ். நாகராஜன், தலைப்பு– தமிழ் கவிஞர் வில்லிபுத்தூரார்

*****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்பு பேட்டி அளிப்பவர் லண்டன் நாவலாசிரியார் – டாக்டர் வி.எஸ் மணி , சவுத் இந்தியன் சொசைட்டி தலைவர் ; பேட்டித் தலைப்பு – டாக்டர் மணி எழுதிய ஆங்கில நாவல்கள்

பேட்டி காண்பவர்- திரு. ரவி.

 ***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,9-3-2025, BROADCAST PROGRAMME