Hindu Crossword7325 (Post No.14,279)

Written by London Swaminathan

Post No. 14,279

Date uploaded in Sydney, Australia –  7 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2    3
4       
5       
        
6       
        
7       
        
8       
        
   9 10 11

Across

1. four Hindu pilgrimage sites of Badrinath, Dwarka, Puri, and Rameswaram are known as…….

5.Author of Tamil Epic Silappadikaram

6. perturbed, (mentally) upset, restless; impatient;in Sanskrit

7.Night, Turmeric, name of Durga; name of Tamil Superstar

8.  Name of a celebrated monarch of the lunar race (son of king Nahuṣa whom he succeeded ; from his two wives came the two lines of the lunar race, Yadu being the son of Devayānī, daughter of Uśanas or Śukra, and Puru of Śarmiṣṭhā, daughter of Vṛṣa-parvan; he  is also represented as the author of [Ṛg-veda ix, 101, 4-6]), [Ṛg-veda; Maitrī-upaniṣad; Mahābhārata; Kāvya literature etc.]

11. AJOWAN.is the name of a plant in TAMIL identified with Trachyspermum ammi (L.) Sprague from the Apiaceae (Carrot) family having the following synonyms: Carum copticumTrachyspermum copticumCarum ajowan

Down

4. a mountain range located near the city of Salem in Tamil Nadu, southern India, and are part of the Eastern Ghats. The local Tamil name comes from a local deity, 

2.Pure Gold; the quality of being pure, excellent; absolute purity.

9. A fathom, or the space between the tips of the fingers of either hand when the arms are extended. 2. Disregard. 3. Smoke. E. bi before am to go, with ā prefix and ac aff.in Sanskrit

10.A kind of serpent in Atharvaveda; also in Sumerian language.

3. The term xxxxxx  Coast, in historical contexts, refers to India’s southwestern coast, which lies on the narrow coastal plain of Karnataka and Kerala between the Western Ghats range and the Arabian Sea. The coast runs from south of Goa to Kanyakumari on India’s southern tip.

11.Pranavakaram

C1HA2RDHAM3
S4 P    A
E5LANGO L
R R    A
V6YAKULAB
A N    A
R7AJANI R
A IM G A
Y8AYATI K
A  Y L M
N  V9MA10MO11

subham–

Tags- Hindu Crossword7325

ஆண்டவனிடம் புரந்தரதாசர் கேள்வி: நீ கருணை உள்ளவனா ? (Post.12,278)

Written by London Swaminathan

Post No. 14,278

Date uploaded in Sydney, Australia –  7 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

(புரந்தரதாசர் பற்றிய 8–வது கட்டுரை இது)

முதலில் புரந்தரதாசர் சவுக்கடி வாங்கிய கதையைக் கேளுங்கள்

புரந்தரதாசருக்கு சவுக்கடி!

Date: 5 March,2016: Post No. 2600

கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.

பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.

ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,

இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!

வாழ்க புரந்தரர் நாமம்!

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

******

கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?

புரந்தரதாசர் ராம நாமத்தையும் ஹரி நாமத்தையும் புகழ்ந்து பாடினாலும் நீ ஏன் எனக்கு உடனே உதவி செய்யக்கூடாது ? கஜேந்திரன் போன்ற யானைக்குக்கூட உடனே ஓடி வந்து உதவி செய்தாயே என்று கேள்வி கேட்கிறார்

நீ கருணை உள்ளவனா ? உன்னை நம்ப முடியவில்லையே என்கிறார் ; உடனே மோட்சமடைய விரும்பும் பரிதவிப்பை இது காட்டுகிறது .

இதோ அவரது சவால் விடும் கீர்த்தனை :

கருணாகர நீனெம்புவது யாதகோ

பரவச வில்ல எனகே

பரி பரியலி நர ஜெம்னவனித்து

திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)

கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?

(நீ கருணாகரன் என்ற) நம்பிக்கையில்லை எனக்கு

மறுபடி மறுபடி எனக்கு மானிட ஜென்மத்தைத் தந்து

திரும்பத் திரும்ப என் மனம் கஷ்டப்படுவதைக் காணும் உன்னை (கருணாகர)

கரி த்ருவ பலி பாஞ்சாலி அஹல்யெயா

பொரெதெவா நீனந்தே

அரிது விசாரிசி நோடல தெல்லவு

பரி பரி கந்தேகளெந்தே (கருணாகர)

யானை (கஜேந்திரன்), துருவன், பலி மகாராஜா, பாஞ்சாலி, அகல்யை

(ஆகிய எல்லாரையும்) காப்பாற்றியவன் நீயே என்கிறார்கள்

தானாகவும், கேட்டு தெரிந்துகொண்ட இது (மேற்கண்ட) எல்லாமும்

மறுபடி மறுபடி (கற்பனைக்) கதைகளாகவே தோன்றுகிறதே? (கருணாகர)

கருணாகர நீனாதரே ஈகலே

கரபிடிதென்னனு ஹரி காயோ

சரசிஜாக்‌ஷனே அரச நீனாதரே

துரிதகளென்னனு பீடிபதுண்டே? (கருணாகர)

நீ கருணையுள்ளனவன் என்றால் இப்போதே

என் கைகளைப் பிடித்து என்னை காப்பாயாக ஹரியே

தாமரைக் கண்ணனே, நீ (அனைவருக்கும்) அரசன் என்றால்

கஷ்டங்கள் என்னை பீடிப்பது ஏன்? (கருணாகர)

மரண காலதல்லி அஜாமிள கொலிதே

கருடத்வஜனெம்ப நாமதிந்தா

வரபிருதுகளு உளிய பேகாதரே

த்வரிததி காயோ, புரந்தர விட்டலா (கருணாகர)

மரணத் தருவாயில் (இருந்த) அஜாமிளனுக்கு கருணை காட்டினாய்

கருடத்வஜன் (வாகனம்) என்ற பெயரால் அழைக்கப்படுபவனே

(உனக்கு இருக்கும்) நல்ல பெயர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால்

உடனடியாக என்னைக் காப்பாற்றுவாய், புரந்தர விட்டலனே (கருணாகர)

*****

எப்போதும் ஹரியை நினை!

ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர

பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு

மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)

துரித கஜக்கே கண்டீரவ எனிசித

சரணாகத ரக்‌ஷக பாவன நீ (ஹரி)

கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக

சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)

ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்‌ஷிஸித

துருள ஹிரண்யகன கரவ சீளித

தருணி த்ரௌபதி மொரெயிடதாக்‌ஷண

பரதிந்தாக்‌ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)

எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து

ஹிரண்யகசிபுவின் கையை முறித்து

(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்

முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)

அந்து அஜாமிள கந்தன கரெயலு

பந்து சலஹி ஆனந்தவ தோரித

ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன

சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)

அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது

உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய

ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;

பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)

Song and tamil translation taken from dasar-songs.com; Thanks.

—-SUBHAM——

Tags- புரந்தரதாசர் ,சவுக்கடி , கதை,   புரந்தரதாசர் கேள்வி, நீ கருணை உள்ளவனா ?

கல்கி வார இதழும் பரமாசார்யாளும்! (Post No.14,277)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,277

Date uploaded in Sydney, Australia – –7 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கி ஆன் லைன் 1-3-25 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கல்கி வார இதழும் பரமாசார்யாளும்!

                            ச.நாகராஜன்                                                                   

அது ஒரு பொற்காலம்! 

காஞ்சி பரமாசார்யாள் (ஶ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்) கால்நடையாக நாடெங்கும் ஒவ்வொரு ஊருக்கும் வந்து அருளுரை தந்த காலம்!

இளையாத்தங்குடி சதஸ், நாராயணபுரம் சதஸ், மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தங்கி அருளுரை ஆற்றல், சென்னையில் பல இடங்களில் தங்கி உபந்யாசங்கள் செய்தல், மூதறிஞர் ராஜாஜி உட்பட அதை நேரில் வந்து இருந்து கேட்டு அனுபவித்தல் என்று இருந்த காலம்!

நாத்திகம் தன் கோர முகத்தைக் காட்டியபோது அதிசயிக்கத்தக்க விதமாக மார்கழி மாதம் ஒவ்வொரு சிறிய கோவிலிலும் கூட திருப்பாவையும் திருவெம்பாவையும் இதர பக்திப் பாடல்களும் லவுட் ஸ்ப்பிக்கரில் பெரிதாக ஒலி எழுப்ப வைத்து அனைவரையும் ஆனந்திக்க வைத்த  காலம்!

அந்தக் காலத்தில் ஆசார்யாளின் சிறப்பு ஊடகமாக அவரது ஆசீர்வாதத்தையும் அருளுரைகளையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் சென்று சேர்க்கும் அரிய தெய்வீகப் பணியை கல்கி வார இதழ் மேற்கொண்டு அனைவரைது பாராட்டையும் பெற்றது.

இர்ண்டு ராஜாக்கள் என்று ஒரு கட்டுரை. ஒருவர் நடராஜா. இன்னொருவர் ரங்கராஜா! “இப்படி ஈருருவில் ஓருருவாக உள்ள நடராஜாவுக்கு உரிய திருவாதிரை, ரங்கராஜாவுக்கு உரிய வைகுண்ட ஏகாதசி  இரண்டும் மார்கழி மாதத்திலேயே வருகிறது” என்று சுட்டிக்காட்டி இரு மூர்த்திகளையும் பிரார்த்தனை பண்ணுவோம் என்று அருளுரை முடிகிறது.

ஆறுகால் ஸ்தோத்திரம் என்று ஒரு தொடர். ஐம்பது வாரங்கள் தொடர்ந்த இந்த ஷட்பதி ஸ்தோத்திர விளக்கம் 3-12-1978 இதழில் முடிந்த போது அனைவருக்கும் தெரியாத ஷட்பதி பற்றிய பல ரகசியங்களை அறிந்து ஆத்திக அன்பர்கள் பரமானந்தம் கொண்டார்கள். இது 1932 வருட உரை என்பதால் காலத்தால் அழியாதபடி அச்சில் ஏற்றி அதற்கு சிரஞ்சீவித்வம் கொடுத்து நிரந்தரமாக்கியது கல்கி.

முடிவாக உள்ள கட்டுரையில் அவர், “பகவத்பாதாளே இந்த ஷட்பதியின் இரண்டாவது ஸ்லோகத்தில் ஶ்ரீபதியின் பாதாரவிந்தத்திலிருந்து தேவகங்கை பொழிகிறதைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். ஜனன மரணமாகிய பவபயத்தை பகவானின் பாதம் போக்குகிறது என்று இங்கே நம் பகவத் பாதாள் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதரோ ஆசார்ய பாஷ்யத்தையே ‘ஜனன ஹரணி’ (பிறவியைப் போக்குவது என்கிறார்!

ஸுப்ரம்மண்யர், அம்பாள் முதலியவர்களின் பாத கமலத்தில் தமது உள்ளம் வண்டாகப் படிய வேண்டும் என்று ஆசார்யாள் சொல்ல, ஆயிரம் வருஷத்துக்கு முந்திய கம்போடியா தேசத்துக் கல்லேட்டில், நம் ஆசார்யாளுடைய பாத கமலத்தில்

(அங்க்ரி பங்கஜ) ஸகல பண்டிதர்க:ளையுடைய தலைகளும் வண்டுக்கூட்டம் மாதிரி (நிச்சேக்ஷமூர்த்த அலிமாலா) மொய்த்துக் கொண்டிருப்பதாக ஸம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது. இதைப் பற்றியும் முன்னேயே சொன்னேன். (கல்கி 3-4-77ல் வெளியான “ஆறுகால் ஸ்தோத்திரம்) …. சுலபமாக நம்மை பவ ஸாகரத்திலிருந்து கரை சேர்ப்பது பகவானின் பாதகமலம் தான். அதுவே தான் “பகவத்பாதர்” என்றே சொல்லப்படுகின்ற நமது ஆசாரியாள்”” என்று இப்படி விவரித்து முடிக்கிறார்.

“கல்கி, கல்கி” என்று கூவியவாறே பேப்பர் போடுபவர் புதிய இதழை வாரந்தோறும்  தரும் போது ஒவ்வொரு வீட்டிலும் அதை முதலில்  யார் வாங்குவது என்ற போட்டி நடப்பது வழக்கம்.  முதலில் பெறுபவரே முக்கியமான அனைத்தையும் படித்து விட்டுத் தான் அடுத்தவருக்குத் தருவது வழக்கம்.

இரவில் வீட்டில் அனைவரும் அவரவரது வேலைகளை முடித்த பின்னர் கூடத்தில் அமர்ந்து ஒருவர் இந்த ஆசார்யாள் உபதேசக் கட்டுரையைப் படிக்க அனைவரும் கேட்டு ஆனந்திப்பது அந்தக் காலத்திய வழக்கம்.

ஒரு வள்ளலும் ஒரு நாணய சாலையும் என்று ஒரு கட்டுரை.

பெரியவர்களைத் தரிசிக்க வந்த ஒருவர், ‘நான் வள்ளலார் நாகரிலிருந்து வந்திருக்கிறேன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அத்தோடு தங்கசாலைக்கு இப்போது பெயர் இப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார். உடனே யாருக்கும் தெரியாத ஒரு பெரிய விளக்கத்தைப் பெரியவாள் கூறுகிறார். தங்க சாலை என்றால் தங்க நாணயங்கள் தயாரிக்கும் இடம் இல்லை அது.  தங்கத்தின் மாற்று, எடை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே தெரிந்து கொள்ள டங்கம் என்று ஒரு கருவியை அந்தக் காலத்தில் உபயோகிப்பது வழக்கம். அந்த ஓசை ஜல்ஜல் என்று அந்தக் காலத்தில் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும். ஆகவே அந்த இடத்திற்கு டங்க சாலா என்று பெயர். அது சம்ஸ்கிருதப் பெயர். அதைத் தான் நாம் இப்போது தங்கசாலை என்கிறோம்”

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஆன்மீக உயரத்தில் ஏற அருளுரைகளும் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் பலவற்றிற்கான சுவையான காரணங்களையும் அவர் விளக்கும் அழகே அழகு!

அதை வாரந்தோறும் பிரசுரித்த கல்கி இதழின் பெருமையே பெருமை!.

இவற்றை இடைவிடாது தொகுத்தார் கல்கி ஆசிரியக் குழுவில் பணீயாற்றிய ரா.கணபதி அவர்கள்.

அந்தக் கட்டுரைகளை (பைண்ட் செய்து வைத்து) இப்போதும் படிப்பவர்கள் பாக்கியவான்கள்!

கல்கி இதழுக்கு பரமாசார்யாளின் விசேஷ அனுக்ரஹம் உண்டு. அதற்கும் பல சம்பவங்கள் உண்டு. அதையும் அனைவரும் அறிவர்.

அந்தக் காலம் ஒர் பொற்காலம்!

***

Hindu Crossword6325 (Post No.14,276)

 Written by London Swaminathan

Post No. 14,276

Date uploaded in Sydney, Australia –  6 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2     3
         
4        
      5 ↑ 6←
  7      
        8←
         
9       10←
         
         
11 12 ↑ 13 ↑ 14 ↑  

Across

1 It is the Kāligaṅgā River or the western Kāli , which rises in the mountains of Kedāra in Gharwal. It is a tributary of Alakānandā River.

4.Aim, Object in Indian Languages

6.Word, or Speech ←

7.Sanskrit word for Elephant found in Rig Veda and First Thiruppugaz in Tamil

8.Number Three is derived from this word ←

10. Giving or yielding water; forming the essential portion of water (apāṃ sārabhūto rasaḥ). ←

9. Mahatma Gandhi built his last ashram in this town in Maharashtra; Other renowned social activists that lived and worked in this town include Vinoba Bhave, Baba Amte, and Jamnalal Bajaj.

11.World’s first thesaurus; it is in Sanskrit.

Down

1.Madurai Goddess Meenakshi’s father; meaning King with Mountain Flag

2.Sangam Tamil Poet who challenged Lord Shiva in an argument .

5.Goddess worshipped by Saint Sri Ramakrishna Paramahamsa. ↑

3.Name of Indra’s elephant; First Name of famous Tamil Brahmi Epigraphist

12. A house, dwelling; room, covered place.also Amavasya ↑

13.That which is not a metal. ↑

14. shining; bright; having lustre; radiant; brilliant in Sanskrit. Brahmin boys use it in Samidhaadhaanam everyday. ↑

M1AN2DAKINI3
A A   L R
L4AKSHYA A
A K   K5AV6←
Y I7BHA  A
A R   IRT8←
D A A   H
W9ARDHASPA10←
A A O A M
J G L J  
A11MA12RA13KO14SA

—subham—

Tags– Hindu Crossword6325

டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர் ! (Post No.14,275)

Painting of Diogenes in Sydney Art Gallery

Written by London Swaminathan

Post No. 14,275

Date uploaded in Sydney, Australia –  6 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிட்னி ஆர்ட் காலரியில் டயோஜெனிஸ் ஓவியம்!

ஆஸ்திரேலியாவில் சிட்னி ஆர்ட் காலரிக்குச் (Sydney Art Gallery) சென்றபோது என்னைக் கவர்ந்த ஓவியங்களில் ஒன்று கிரேக்க தத்துவ ஞானி டயோஜெனிஸ் ஓவியம் ஆகும்.

இந்த ஓவியத்தை வரைந்தவர் ஜான் வில்லியம் வாட்டர்ஹவுஸ் (1849-1917)) ஆவார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில ஓவியர் . அவர் கிரேக்க நாட்டு விஷயங்களை ஓவியத்துக்கு எடுத்துக்கொண்டு அதில் நல்ல புகழையும் பெற்றார்; குறிப்பாக டயோஜெனிஸ்

ஓவியம் எல்லோரையும் கவர்ந்தது. அந்த கிரேக்க அறிஞர், சாலை ஓர தண்ணீர் குழாய்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வசித்தார்; பகல் நேரத்தில் விளக்கினைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவார்; யாரேனும் ஏன் என்று வினவினால் நல்ல மனிதனைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று விடை பகர்வார் .

Diogenes looking for Good People with a lantern in the Day Time

*****

டயோஜெனிஸ் (412-323 BCE)

டயோஜெனிஸ் (Diogenes)  , 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்? என்று வினவினார்கள்.

தத்துவ வித்தகர் சொன்னார்:

திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!

உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!

****

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

டயோஜெனிஸ் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.

 இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார். 

Alexander meeting Diogenes

“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.

அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.

****

விளக்குடன் போன குருடர்

இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.

அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.

****

பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !

தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.

மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லக்கைப் பயன்படுத்தவே இல்லை.

–subham—

Tags– சிட்னி ஆர்ட் காலரி, டயோஜெனிஸ் ஓவியம், டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர்

நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்! (Post No. 14,274)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,274

Date uploaded in Sydney, Australia – –6 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நாரத புராணம் விவரிக்கும் ஒன்பது பக்திகள்! 

ச. நாகராஜன் 

நாரத புராணம் மஹா புராணங்களில் ஒன்றாக அறிஞர்களால் கூறப்படும் சிறந்த ஒரு புராணம்!

ப்ரஹன் நாரதீய புராணம் என்ற ஒரு நூலும் உள்ளது. ஆனால் இது சிறிய புராணம். இதில் 3600 செய்யுள்களே உள்ளன. இதில் உள்ள அத்தியாயங்கள் 38.

ஆனால் நாரத புராணத்தில் 25000 செய்யுள்கள் உள்ளதாக கூறப்பட்டாலும் நமக்கு இன்று கிடைத்திருப்பவை மொத்தம் 18550 செய்யுள்கள் மட்டுமே தான்!

 13144 செய்யுள்கள் பூர்வார்த்த என்று சொல்லப்படும் முதல் பாகத்திலும் 5406 செய்யுள்கள் உத்தரார்த்த என்று சொல்லப்படும் இரண்டாம் பாகத்திலும் உள்ளன.

எல்லா புராணங்களிலும் உள்ளது போல பல ஸ்ருதியும் இதில் உண்டு. அத்துடன் புராணம் முடிவடைகிறது. 

பொதுவாக நினைப்பது போல இதை நாரதர் இயற்றவில்லை.

நாரதரின் நான்கு சகோதரர்களான சன்கர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் ஆகிய நால்வருமே இதில் பேசிக் கொள்கின்றனர்.

நாரத புராணம் யோகம் பற்றி நன்கு விளக்குகிறது.

அஹிம்சை,  சத்தியம், அன்பு, தியாகம், ஆகிய நற்குணங்கள் யோகத்திற்கு அடிப்படையாகத் தேவை.

இதன் மூலம் பரா மற்று அபரா ஆகியவற்றை உணரலாம்.

இது அஷ்டாங்க யோகம் எனப்படும் எட்டு விதமான யோகத்தின் அடிப்படைகளையும் நன்கு விவரிக்கிறது.

பக்தியைப் பற்றி விவரிக்கும் இந்தப் புராணம் பக்தியை மூன்று விதமாகப் பிரிக்கிறது.

சத்வம், ரஜஸ், தாமஸம் ஆகிய  மூன்று வித பக்திகளில் தாமஸ பக்தி அதமம். ராஜஸ பக்தி மத்யமம். சத்வ பக்தி உத்தமம். இந்த மூன்று வகைகளையும் கீழ்க்கண்டபடி இந்தப் புராணம் பிரிக்கிறது.

1)அதம தாமஸ பக்தி : மற்றவர்களை அழிக்க விஷ்ணுவைத் துதிப்பது.

2) மத்யம தாமஸ பக்தி;  ஒழுக்கங்கெட்ட ஒரு பெண் தன் கணவனை நேசிப்பது போல விஷ்ணுவின் மீதான பக்தி

3) உத்தம தாமஸ பக்தி: மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பொறாமையுடன் பக்தி செலுத்துவது

4) அதம ராஜஸ பக்தி: பணம், தானியம், செழிப்பு ஆகியவற்றிற்காக விஷ்ணுவைத் துதிப்பது

5) மத்யம ராஜஸ பக்தி: பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு விஷ்ணுவைத் துதிப்பது

6) உத்தம ராஜஸ பக்தி: விஷ்ணுவின் லோகத்தில் இருக்கும் சாலோகதா முக்தியைப் பெற துதிப்பது

7) அதம சாத்வீக பக்தி: தனது பாவங்களைத் தொலைப்பதற்காக விஷ்ணுவைத் துதிப்பது

8) மத்யம சாத்வீக பக்தி: விஷ்ணுவின் இச்சைப் படி விஷ்ணுவுக்கு சேவை செய்து துதிப்பது

9)  உத்தம சாத்வீக பக்தி: விஷ்ணுவைச் சந்தோஷப்படுத்தும் ஆராதனையாகத் துதிப்பது

10) உத்தமோத்தம பக்தி: மிக மிக உயரிய நிலை பக்தி இது. தன்னையே விஷ்ணுவாக உணர்ந்து தன்னுள்ளேயே பிரபஞ்சம் இருப்பதை உணர்வது.

அடுத்த அத்தியாயத்தில் பக்தி வேறு விதமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

1)       ச்ரத்தா பக்தி: தான் உட்பட அனைத்துப்  பிரபஞ்சமுமே விஷ்ணு என்பதை பக்தன் உணர்கிறான். விஷ்ணுவே அனைத்துக்கும் ஆதாரம். அவரை விதிப்படி துதிக்க வேண்டும். இது ச்ரத்தா பக்தி.

2)       சமதா பக்தி: விஷ்ணு எங்கும் நிறைந்திருப்பவர் அவரையன்றி வேறொன்றுமில்லை என்பதை பக்தன் உணர்வது சமதா பக்தி.

3)       சாந்தி பக்தி: பக்தன் தனக்கு என்ன நேர்ந்தாலும் நண்பர்களையும் எதிரிகளையும் சந்தோஷத்துடன் ஒரே விதமாகப் பாவிப்பது என்ற மனநிலையைக் கொண்டிருப்பது சாந்தி பக்தி.

ஆக நாரத புரானம் இப்படி விரிவாகவும் தெளிவாகவும் பக்தி நிலைகளை விவரிக்கிறது. 

இது தவிர நாரதர் இயற்றிய நாரத பக்தி சூத்ரம் அருமையான்  அருமையான ஒரு நூல். நாரதர்  பக்தியைப் பற்றி முற்றிலுமாக விவரிப்பதை இதில் படித்து உணரலாம்!

***

London Swaminathan’s February 2025 Articles Index;Index No. 147 (Post No.14,273)

Written by London Swaminathan

Post No. 14,273

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

First place for London ;Tenth place for Sydney -1 (Post No.14,166)2/2/25

March 2025 Calendar with Mirabai Quotes 14244, 25/2/25

My Trip to Blue Mountains in Australia (Post No.14,185)8/2

My Trip to Nelson Bay to Watch Dolphins (Post.14,163)1/2

My Visit to Art Gallery in Sydney (Post No.14,236)23/2

My Visit to Minto Shiva Temple in Australia (Post No.14,211)16/2

My Visit to Royal Botanic Garden in Sydney (Post No.14,253)28/2

My Visit to the State Library in Sydney (Post No.14,222)19/2

No Tamil, No Sanskrit in Australian Aborigine Languages! (Post No.14,250)27/2

GNANAMAYAM 2-2-2025 BROADCAST PROGRAMME, 2, 9, 16, 23 February 2025

GNANAMAYAM 2-2-2025 BROADCAST AUMMARY 3,10, 17, 24 Feb.2025

Hindu Crossword 4, 7, 20, 21, 10,12, 13, 14, 15, 23, 26,9 Feb.2025

London Swaminathan’s January 2025 Articles Index; Index No. 146 (Post No.14,176)

FIND GOLD FROM THIS CROSSWORD (Post No.14,179)6/2

****

Tamil Articles

ராமன் ஒரு யமன்: புரந்தரதாசர் புகழ்மாலை! (Post.14,249)27/2

மார்ச் 2025 காலண்டர்; புரந்தரதாசர் பொன்மொழிகள் (Post No.14,240) 24/2

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-1 ; சீதக் களபச் செந்தாமரைப்பூம் (Post No.14,200) 13/2

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 ; மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (Post.14,204)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3; மூஷிக வாகனம் ஏன்?(Post No.14,207)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4; ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி(Post.14,210)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5 ; என்னை யறிவித்து எனக்கருள் செய்து (Post.14,216)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; வித்தக விநாயக  விரைகழல் சரணே ( Post No.14,218)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-2-2025 (Post.14,189)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  16-2-2025 (Post.14,214)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  2-2-2025

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  23-2-2025 (Post N.14,239)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18 (Post.14,162) 1-2-2025

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 19 (Post.14,173)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20 (Post.14,175)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 21 (Post.14,178)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 22 (Post.14,181)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 23 (Post No.14,184)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 24 (Post.14,195)

ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில் -25 (Post No.14,215)

சிட்னி நூலகத்துக்கு விஜயம் -26 (Post.14,221)

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?– 27 (Post No.14,234)

சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்- 28 (Post.14,232) 22-2-25

ஆதிவாசி மொழி சொற்கள் -சிட்னி மியூசியத்துக்கு விஜயம்-29 (Post.14,247)26/2

கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்! (Post.14,235) 23/2

கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய்  பெயர் காரணம் (Post No.14,228) 21/2

தமிழ் தெரியுமா  20225 ?  (Post No.14,225) 2,5,8,20,12,16,19,25,28

—subham—

Tags- London Swaminathan’s February 2025 Articles Index,Index No. 147

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு! (Post.14,272)

Written by London Swaminathan

Post No. 14,272

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)

புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத்  தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர்  நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு

(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***

சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

****

தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!

புது வகைப்    பழச்சாறு SWEET — வள்ளலார்

வள்ளலார்  பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

*****

புது வகைக் கற்கண்டு  – புரந்தரதாசர்

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா

ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா

எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா

உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது

எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது

எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது

உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா

எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா

கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா

பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது

(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது

கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது

பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா

சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா

சந்தத பக்தர நாலகே சவிகொம்ப

காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது

சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது

எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்

புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)

***

ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே

அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்

அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர

சல பீதியொளு உச்சரிப மந்த்ர

ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர

சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்

சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்

எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்

சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர

சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர

துரித கானனகிது தாவானல மந்த்ர

பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்

அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்

பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்

உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு

சானுராகதி நித்ய சேவிப மந்த்ர

பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர

தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)

காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்

சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்

(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

****

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.

—subham—

Tags–  புரந்தரதாசர் கண்டுபிடிப்பு,  ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு, வள்ளலார், தனித்தனி முக்கனி,  ராம மந்தரவ ஜபிஸோ, கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு, ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது? (Post No.14,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,271

Date uploaded in Sydney, Australia – –5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 13-2-25 kalkionline இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அற்புதமான ரகசியங்களை விளக்கும் அரிய நூல்!

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?

ச. நாகராஜன் 

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?

மிக மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை : யோக வாசிஷ்டம்!

எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள் – மனிதன் ஏன் பிறக்கிறான், எப்படி வாழ்கிறான், ஏன் இறக்கிறான், மறு பிறப்பு உண்டா,  உருவ வழிபாடு வேண்டுமா, கர்மா என்பது உண்மையா, சொர்க்கம், நரகம் உள்ளதா, நாம் காணும் உலகியல் இன்பங்கள் உண்மையா, பொய்யா – இப்படி எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள்.

சரியான, அருமையான பதில் இந்த நூலில் கிடைக்கும்.

சுவாமி ராமதீர்த்தர் இந்த நூலைப் பற்றிக் கூறுகையில், “சூரியனுக்குக் கீழ் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அற்புதமான நூல் இது; இதைப் படிப்பவர் கடவுள் அநுபூதியை உணராமல் இப்பூவுலகில் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறுகிறார்.

ஶ்ரீ ராமர் கேட்ட கேள்விகளுக்கு வசிஷ்ட மாமுனி கூறும் பதில்கள் இதில் உள்ளன.

இதை இயற்றியவர் வால்மீகி முனிவர்.

ஒரு லட்சம் சுலோகங்கள் ஆதியில் கொண்டிருந்த சம்ஸ்கிருத நூல் இது. இது பின்னர் 27687 முக்கிய ஸ்லோகங்களைக் கொண்டு யோகவாசிஷ்ட சாரமாகத் தொகுக்கப்பட்டது. இதையும் படிக்க முடியாதவர்களுக்காக 2500 ஸ்லோகங்களில் இதன் சுருக்கம் இப்போது கிடைக்கப் பெறுகிறது.

உலக வாழ்க்கை எப்படிப்பட்டது?

பெரிய ஆமை ஒன்று கடற்கரை ஓரம் இருந்த பாறைகள் ஒன்றில் ஒரு துளையில் புகுந்து கொண்டது. அது தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டும் போது பெரிய அலைகள் அதன் மீது படும். அப்போது சடக்கென்று அது தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அந்த அலை கடலுக்குள் உள்வாங்கிய பிறகு மீண்டும் ஆமை தன் தலையை வெளியே காண்பிக்கிறது.

இப்போது இன்னொரு பெரிய அலை! மீண்டும் தலை துளைக்குள்…!

இது தான் மனித வாழ்க்கை!

வாழ்க்கையில் நுழையும் போது பிரபஞ்ச சாகரம் என்னும் அகண்ட சமுத்திரத்திலிருந்து பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் அவன் சிக்குகிறான்.

ஐம்புலன்களை வைத்துக் கொண்டு அவன் படும் பாடு, சொல்லி முடியாது! ஆமை போல அவன் உலகிலிருந்து வெளியேறும் போது அவனது ஐம்புலன்களும் விடுபடுகிறது. அலைகள் தாம் சந்தோஷம் (அல்லது இன்பம்) மற்றும் துக்கம் (அல்லது துன்பம்).

இன்பம் மறையும் போது துன்பம் தோன்றுகிறது!

இதிலிருந்து விடுபட்டு மெய்யான மெய்யை – உண்மையான உண்மையைக் காண வழி உண்டா?

உண்டு என்கிறது – மர்மங்கள் அனைத்தையும் விளக்கும் யோக வாசிஷ்டம்.

நான்கு வழிகள்!

இந்த உலக இன்ப துன்பங்களைக் கடந்து மெய் ஞானத்தை அடைய நான்கு வழிகள் உண்டு.

சந்தோஷம்சாது சங்கம்விசாரம்சமஸ்தம்அவ்வளவு தான்!

சந்தோஷம்

விஷயங்களில் ஆசையை அகற்றி எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவனிடம் மாபெரும் சக்திகள் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும்.

சாது சங்கம் (நல்லோர் இணக்கம்)

மனதில் இருக்கும் இருளைப் போற்றி அகண்டாகாரமான ஒளியைக் காண்பிப்பர் நல்லோர். இதற்கு ஈடான எதையும் மதச் சடங்குகளாலும், விரதங்களாலும் கூடப் பெற முடியாது.

விசாரம்

நான் யார்? ஏன் இந்த பிறப்பு என்ற தோஷம் என்னை வந்து சேர்ந்தது? தர்க்கரீதியாக இப்படி விசாரம் செய்வது அடுத்த வழி!

சமஸ்தம்

அனைத்து உயிர்களையும் நேசித்து நட்புடன் இருப்பது ஆத்மாவைச் சுத்தப்படுத்துவதற்கான வழியாகும். இதுவே சமஸ்தம்!

இதைத் தான் வசிஷ்டர் ராமர் மூலமாக உலகிற்குத் தரும் செய்தியாகச் சொல்கிறார்.

இந்த நான்கு வழிகளையும் மேற்கொண்டால் உலக மர்மங்கள் தானே விடுபடும்! உயர் ஜோதியுடன் ஒன்றாகலாம்!

***

ச.நாகராஜன் எழுதி புஸ்தகா வெளியீடாக வந்த புத்தகம்

உலகின் ஒப்பற்ற நூல் யோகவாசிஷ்டம்

Ferns for Breakfast in Sydney (Post No.14,270)

Written by London Swaminathan

Post No. 14,270

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I visited Royal Botanic Garden in Sydney, Australia on 28-2-2025. I found very interesting details about Ferns. They showed that ferns can be used as food. But like mushrooms, there are some poisonous ones as well.

What are Ferns?

Ferns are plants that do not have flowers. Ferns generally reproduce by producing spores. Similar to flowering plants, ferns have roots, stems and leaves. However, unlike flowering plants, ferns do not have flowers or seeds; instead, they usually reproduce sexually by tiny spores or sometimes can reproduce vegetatively, as exemplified by the walking fern.

 19 Ferns are named after Pop Star Lady Gaga.

More information is on display boards:

*****

Other Display Boards

–Subham—

Tags- Ferns, Sydney, Botanic Gardens, Breakfast, Fernery