Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
S Nagarajan Article Index November 2024
1-11-24 13838 தண்டனை செய்யும் உத்தண்டன், மூதண்டனே கோதண்டன்! (தனிப்பாடல் தமிழின்பம்) 2-11-24 13842 வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 1 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.)
2-11-24 13843 ஆலயம் அறிவோம் பட்டீச்சுரம்! – ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
3-11-24 13847 வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.) 4-11-24 13850 நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்!
5-11-24 13854 S Nagarajan Article Index October 2024. 6-11-24 13687பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்! (16-9-24 கல்கி கட்டுரை). 7-11-23 138360 விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது? (29-9-24 கல்கி கட்டுரை).
8-11-23 138364 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1 (6-11-24 மாலைமலர் கட்டுரை.
9-11-23 138367 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2 (6-11-24 மாலைமலர் கட்டுரை.
10-11-23 13870 மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு!
வரமா, சாபமா? (ஹெல்த்கேர் அக்டோபர் 24இதழ் கட்டுரை 11-11-24 13874 ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் (10-11-24 ஞானமயம் உரை) 12-11-24 13877 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா
14-11-24 13884 ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்!
15-11-24 13887 ராமாயணத்தில் வரங்கள் (18) காளிந்திக்கு ச்யவனர் கொடுத்த வரம்! 16-11-24 13891 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1 (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.)
17-11-24 13894 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2 (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.) 18-11-24 13898 ஶ்ரீ அன்னை – 1 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை.
18-11-2024 13899 ஆலயம் அறிவோம் – திருக்கழுக்குன்றம் 17-11-24அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன் ஆற்றிய உரை.
19-11-24 13903 ஶ்ரீ அன்னை – 2 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Paramahamsa is teaching us lot of spiritual truths and practices through the life of Adi Sankara. I have found many interesting anecdotes or quotes in the book “Teachings of Sri Ramakrishna”. Reading them together will help any spiritual aspirant.
Here are the anecdotes:
1
Sri Sankaracharya had a disciple who had been serving him for a long time but was not still given any instruction by him. Once, while seated alone, Sankara heard the footsteps of someone coming behind. So, he called out, Who is there? The disciple answered, It is I. The Acharya thereupon said, If this “I” is so dear to you, then expand it to Infinity (i.e. know the universe as yourself) or renounce it altogether.
****
2
After the attainment of Samadhi, some still retain the ego—the “I” of the servant or worshipper of God. Sankaracharya kept the ego of Vidhya (knowledge) for the purpose of teaching others.
****
3
Sankaracharya’s exposition of the Vedanta is indeed true and true also is what Ramanuja speaks of it – the Visishtadvaita philosophy.
****
4
There is a fabled species of birds called HOMA. They live so high up in the heavens and love those high regions so dearly that they never come down to earth. And it is said that they lay eggs in the sky and their young ones are hatched in mid-air as the eggs fall, pulled down by gravity. No sooner these fledgelings find out that they are falling downwards, than they immediately change their course and indistinctively fly upwards towards their home. Men like Narada, Sukadeva, Jesus and Sankaracharya are like these birds. Even in their boyhood they became free from all attachments to the things of the world and betook themselves to the highest regions of True Knowledge and Divine Light.
****
5
The great Sankaracharya had a foolish disciple who used to imitate his master in all matters. Sankara uttered Sivoham (I am Siva); the disciple also repeated Sivoham. To correct his disciple’s folly, Sankara one day while passing by a smithy, took a pot full of molten iron and asked the disciple also to do the same. Of course, the disciple could not imitate this act of his master, and thenceforward he left off saying Sivoham. Base imitation is always bad, but to attempt to correct one’s own self by the noble examples of the great ones is always good.
*****
6
Picture of Sri Ramakrishna
An outcaste was carrying baskets of meat from the slaughter house. On the way he met Sankaracharya who was returning after his bath in the sacred Ganges. It chanced that the outcaste touched the person of the holy man . Sankara was offended and cried out “ You have touched me sirrah!”. The outcaste replied, Sir neither have I touched you, nor have you touched me. Please reason with me and say whether your true Self is the body or the mind or the intellect; tell me what you truly are. You know that the true Self is not attached to any of the three Gunas of Nature, Satva, Rajas, Tamas. Then Sankara was abashed and had the true awakening.
–subham—
Tags- Sri Ramakrishna , Adi Sankara, anecdotes, imitation , by devotee, outcaste, touch. True Self
அற்புதங்களைப் புரிந்த ஒரு சித்தர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த மஹான் என்று ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்
****
குடிடி என்றால் என்ன ?
பஞ்சு வைத்து தைக்கப்பட்ட போர்வையை குடிடி என்பார்கள்; அதன் மீது வண்ணத் துணிகளையும் தைத்து, போர்த்திக்கொண்டு பில்குவா என்னும் இடத்துக்கு. அவர் வந்தார். அது ஆர்ய சமாஜிகளும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்த வட இந்திய நகரம்.
****
அவருடைய சிறப்புகள் என்ன ?
நாஸ்தீகவாதிகளும் வியக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.
தொலைதூரத்திலுள்ள பொருளகளை கொண்டுவரும் அதிசய சக்தி அவருக்கு உண்டு.
மூலிகை பற்றிய ஞானம் உடையவர்; அவற்றின் மூலம் நோய்களைத் தீர்த்தார்.
குடிடி பாபா நன்றாகப் பாடி பக்தி இசையைப் பரப்பினார்.
****
அவர் சமாதி ஆனது எப்போது ?
1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று குடிடி பாபா தமது பூத உடலை விட்டு நீங்கினார் .
அவருடைய ஜாதி, மதம், இனம், முதலியவை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது; ஆயினும் அவர் பாடியது கிருஷ்ணர் மேலான பக்திப் பாடல்களே. அவரிடம் மூங்கில் குழாய் ஒன்றும், ஒரு பாத்திரமும் மட்டுமே இருந்தன. மூங்கில் குழாயில் பாலோ நீரோ அருந்துவார்; அதையே இசைக் கருவியாகவும் பயன்படுத்துவார்
****
முதல் அற்புதம் என்ன?
சிவன் கோவிலில் குடிடி பாபா தங்கி இருந்தபோது ராஜபுதன சிறுவர்களை அழைத்தார். கையில் நூலைக் கொடுத்து மூ டிக் கொள்ளுங்கள் என்றார்; கையை திறவுங்கள் என்றார். திராட்சைப் பழங்களும் சர்க்கரையும் இருந்தது; சிறுவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.
****
அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன ?
முப்பது வயது தோற்றமே உடைய அவரிடம் கோமணம் மட்டுமே இருந்தது; அருகில் குடிடி போர்வை இருந்தது; ஆனால் தன்னை அவர் ஷா இன் ஷா (சக்ரவர்த்தி) என்று அழைத்துக் கொள்ளுவார்; உண்மைதான்! ஆசையே இல்லாத விருப்பு வெறுப்பற்ற அந்த முனிவர் முன்னால், இந்திரனே வந்தாலும் அவன் ஒரு பொருட்டல்ல. அப்படியிருக்கும் போது இவர் இந்திரனுக்கும் மேலானவரே
****
குடிடி பாபாவின் உபதேசம் என்ன ?
“இரண்டாவது என்று ஒருவரும் இல்லை; நான் ஒருவன் மட்டுமே; யார் யாருடன் பேசுவது ? “என்று சொல்லி அத்வைதக் கருத்தினை வலியுறுத்துவார்.” ந ஹம் ந தும் ,தர்பார் கம் ?”
“ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா,
ஸுகியா வஹி ஜோ நாம அதாரா “
“உலகில் எல்லோரும் துன்புறுகின்றனர். ஆனால் பகவான் நாமத்தை ஜெபிப்பவன் மட்டுமே சந்தோஷமாக இருப்பான்” என்பது இதன் பொருள்.
****
நாத்தீகர்கள் முன்னால் நாணயங்கள் வந்த அற்புதம் என்ன ?
பில்குவாவில் நடந்த கூட்டத்தில் இந்து மத சடங்குகளை மட்டம் தட்டிப் பேசிவந்தார்கள்; குடிடி பாபா மெளனம் சாதித்தார்
நாத்தீகர்கள் பாபாஜியை மந்திரவாதி என்பர். அவர்களும் இவரது கூட்டத்துக்கு வருவார்கள்; அவர்களுக்கு முன்னால் சீடன் ஒருவன் அவருக்கு மூங்கில் குழாயில் பாலை ஊற்றினான். அது மறைந்தது; அதற்குப்பதிலாக திராட்சைப் பழம் கொத்து கொத்தாக வந்தது அவர்கள் முன்னால் பல அ ற்புதங்களைச் செய்வார் ஒருமுறை அவர்களுக்கு முன்னால் ஒரு சீடனைப் பால் வாங்கிவர அனுப்பினார். அவன் பாலைக் கொண்டுவந்து மூங்கில் குழாயில் ஊற்றினான்; அதைக் குடித்துவிட்டு அவன் கொண்டுவந்த டம்பளரைத் திருப்பிக் கொடுத்தார் அதைக் குலுக்கு என்றார். ஒரு ரூபாய் நாணயம் வந்தது; இப்படி ஐந்து முறை குலுக்கச் சொன்னார்; ஐந்து ரூபாய் நாணயங்கள் வந்தன; இதை பால்காரன் கடையில் கொடுத்துவிடு என்றார்.
****
காந்தார மாதுளம் பழம் வந்த அற்புதம் என்ன ?
ஒருமுறை மஹாத்மா ஆத்மாராம்ஜியுடன் குடிடி பாபா தங்கி இருந்தார் அப்போது பெரும் கூட்டம் கூடியது. நாத்தீகர்களின் தலைவர் ஒருவரும் அந்தக்கூட்டத்தில் இருந்தார் பலரும் ஏதேனும் அற்புதம் செய்யுங்கள் என்று மன்றாடினார். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்றார்; அந்த வட்டாரத்தில், மாதுளம் பழமே கிடையாது; ஒருவர் காண்டஹார் நகரில் விற்கப்படும் மாதுளம் பழம் வேண்டும் என்று கேட்டார். தனது கையில் இருந்த ஒருகை க்குட்டையில் அதை வரவழைத்து அவரிடம் கொடுத்தார் ; எல்லோரும் அதைச் சுவைத்துவிட்டு சுவையான பழம் என்று கூறினார்கள்
****
மருத்துவ அறிவுக்குச் சான்றுகள் என்ன ?
குடிடி பாபா பல நோயாளிகளை மூலிகை மூலம் குணப்படுத்தினார்; கந்தகதத்திலிருந்து எண்ணெய் வடித்து மருந்தாகப் பயன்படுத்தினார். அதே கந்தகத்திலிருந்து மற்றவர்களும் முயற்சி செய்தபோது வரவில்லை; அவர்கள் ஏன் எஙகளுக்கு வரவில்லை? என்று கேட்டபோது மணி, மந்திரம் ஒளஷதம் மூன்றும் தெரிந்தால்தான் வரும் என்றார்; சிக்கலான மருந்துகளைத் தயாரிக்க மருத்துவர்களுக்கு உதவினார். பாதரசத்தைக் கெட்டியாக்கி அதை வைத்துக்கொண்டு குடிடி பாபா வானில் பறந்தார். ஒருவருக்கு குழந்தை இல்லை; தனக்கு மகப்பேறு கிடைக்க அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தவுடன் தங்க பஸ்பத்தைக் குடிடி பாபா கொடுத்தார். அவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களைச் செய்த குடிடி பாபா பற்றி, அவருக்கு சம காலத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தா எழுதுவதால் நாம் அதை அப்படியே நம்பலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
( ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )
ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2
அடுத்து திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இன்னொரு புத்தகம் ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’
தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.
பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.
இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.
இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.
உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.
இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.
இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சென்னை சந்தானம் சீனிவாசன்
31-7-2023
இதற்கு அடியேன் வழங்கியுள்ள அணிந்துரை இது:
வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.
மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம்,ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.
அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்
ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்
சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா
பதே பதே ப்ரத்யய பாவஹந்தி
மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளுல் ஒருவரான டபிள்யூ. டபிள்யூ. பார்ட்லி ஆங்கிலத்தில் ஒரு சுவையான சிறு அறிவுரையைத் தருகிறார் இப்படி:
For every ailment under the Sun
There is a remedy, or there is none;
If there be one, try to find it;
If there be none, never mind it.
― W.W. Bartley
ஆதவனுக்குக் கீழுள்ள மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு அல்லது இல்லை. உண்டென்றால் அதைக் கண்டுபிடி; இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலையே படாதே என்பதே இதன் பொருள்.
ஆனால் ஹிந்து சாஸ்திரங்களோ ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு; ஒரு பரிகாரம் உண்டு என்று திடமாகக் கூறுவதோடு வழிமுறைகளையும் விளக்குகின்றன.
அந்த வகையில் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் நவகிரகங்கள் நல்லனவற்றையும் தீயனவற்றையும் நமக்கு நல்கின்றன – நமது பழைய நல்ல மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப!
ஆனால் தீமையான விளைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவற்றை மாற்றவோ அல்லது குறைந்த விளைவுகளை மட்டும் நம்மை அதிகம் பாதிக்காதபடி ஏற்படுத்தவோ நவகிரக வழிபாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழிபாட்டிற்கு நவகிரகங்களைப் பற்றிய உரிய ஞானம் நமக்கு வேண்டும்.
அதற்கு இந்த நூல் மிக அருமையாக உதவி செய்கிறது.
நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.
வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்
இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.
இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.
நவ கிரகங்களைப் பற்றி அறிவோம்; உரிய முறையில் வழிபடுவோம். வளமான வாழ்வைப் பெறுவோம்.
நன்றி வணக்கம்.
பங்களூர் ச.நாகராஜன்
31-7-23
இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள் 10
அத்தியாயங்கள்
1. சூரியனே போற்றி!
2. அம்புலிமாமாவா, வா!
3. மங்களம் தரும் அங்காரகன்!
4. புத்தி தரும் புதன்!
5. குரு பகவான்!
6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!
7. சனீஸ்வர பகவான்!
8. ராகு பகவான்!
9. கேது பகவான்!
10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!
பெயருக்கேற்ப இது நவகிரகங்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்பதில் ஐயமில்லை.
அவரது நினைவைப் போற்றுவோம். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.
நன்றி, வணக்கம்.
***
tags– சந்தானம் சீனிவாசன், அஞ்சலி – 2, ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6
7
A
D
8
Yellow colour words- Across
1.Lord Krishna shifted his capital to this Gujarat port city
4.Persian word for Pomegranate
6. The Sanskrit word …….. has multiple meanings, including “pleasant, sweet, snow, beautiful, clouds, morning dew“. It is also the origin of the Indian name …….. which is primarily given to girls. In Tamil also it means cloud.
7.Son in all Indian languages
8.World famous Indian caves with old paintings and Buddha sculptures.
*****
Orange brown words – Down
1.Buddhists’s Holy book
2.Ice Linga of Lord Shiva in this cave in Kashmir
3. Capital of Tripura state in India
5.It means religious debt or religious obligation in Sanskrit owards Deva/God, Pitru/ancestors and Rishis/seers
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.நாம தேவர் யார், எங்கே எப்போது பிறந்தார் ?
அவர் மகாராஷ்டிரத்தில் 1269-ஆம் ஆண்டு பிறந்தார் . பெரிய ஞானி; இறைவன் மீது பக்திப்பாடல்களைப் பாடிய பெரியவர் . அவர் நர்சி என்னும் கிராமத்தில் பிறந்தார் . ஹிங்கோலி , றிசாத் என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ளது
****
2.நாமதேவருடைய குடும்பம் என்ன தொழில் செய்தது ?
அவருடைய குடும்பம். தையல்கார குடும்பம். அவர்கள் தையல் தொழிலைச் செய்தனர். வருமானத்தைப் பெருக்குவதற்காக விட்டோபா கோவில் கொண்டுள்ள பண்டரீபுரத்துக்குக் குடியேறினர்.
****
3.நாமதேவர் கற்றது என்ன ?
இரண்டு வயதில் அவர் சொன்ன பிழையற்ற முதல் சொல் விட்டல. ஏழு வயதில் அவர் பஜனை செய்வதற்கான தாளக் கருவிகளை செய்து பஜனை செய்யத் துவங்கினார் . பள்ளிப்படிப்பைப் புறக்கணித்தார். பிரஹலாதன் போல சிறு வயதிலிருந்தே விட்டல நாமத்தைச் சொல்வதில் இன்பம் கண்டார்.
*****
4.நாமதேவருடைய மஹிமையை தாயார் அறிந்தது எப்படி ?
விட்டோபா கோவிலுக்கு நாமதேவரை அவரது தாயார் தினமும் அழைத்துச் சென்று நைவேத்தியங்களைப் படைப்பார். ஒரு நாள், வேலை மிகவும் இருந்ததால் நாமதேவரிடம் நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்பினார். அவரும் இறைவன் முன்னால் அதை வைத்துவிட்டுக் காத்திருந்தார். விடோபா வரவில்லை; விம்மி விம்மி அழுதார் ; அப்போது இறைவனே வந்து அதைச் சாப்பிட்டார் . இதைத் தாயாரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை மறுதினமும் சிறுவனிடம் நைவேத்தியத்தைக் கொடுத்தனுப்பி, மறைவாக பின்னே தொடர்ந்து சென்று பார்த்தார். இறைவனே வந்து அதை உண்டதைக் கண்டு அதிசயித்தார்.
****
5.தந்தையார் அவருக்கு கொடுத்த வேலை என்ன ? அவர் என்ன செய்தார் ?
திருமணமாகியும் குடும்பத்தில் பற்று இல்லாமல் விட்டல நாமம் ஜெபிப்பதிலும் பஜனை செய்வதிலும் நாமதேவர், காலத்தைக் கழித்தார். இவருக்கு வேலை கொடுத்து வெளியே அனுப்புவதற்காக புதிய துணிகளைக் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பினார்; அவர் துணியை விற்காமல் ஒரு கல்லினை இறைவன் என்று சொல்லிக் காவலுக்கு வைத்து விட்டு பஜனை செய்தார். துணிகள் அப்படியே இருந்தன . மராத்திய மொழியில் கல்லுக்குத் தொண்டியா என்ற சொல்லும், ஒரு ஆள் என்றும் பொருள். இரவில் வீட்டுக்குத் திரும்பிய போது தந்தை கேட்ட கேள்விக்கு தொண்டியாவை நிறுத்திவிட்டு வந்ததாகச் சொன்னார். மறு நாள் போனபோது அந்த இடத்தில் துணிகள் இல்லை. உடனே தொண்டியாவைக் (கல்லைக் ) கொண்டுவந்து ஒரு அறையில் பூட்டினார். தந்தை மீண்டும் கேட்டபோது துணிகள் மாயமாய் மறைந்துவிட்டதால் தொண்டியாவைக் அறையில் பூட்டி வைத்ததாகச் சொன்னார். கதவைத் திற அவனைப் பார்க்கிறேன் என்று சொன்னவுடன், தந்தை திட்டப்போகிறார் என்று பயந்து கொண்டே கதவைத்Nதிறந்தார். உள்ளே இருந்த கல் தங்கக் கட்டியாக மாறியிருந்தது. இந்த அற்புதம், அவர் பெரிய யோகி என்பதைக் காட்டியது.
****
6.நாமதேவரின் புகழ்பெற்ற தோழர் – சகா யார் ?
மஹாராஷ்டிர பஜனைகளில் ஒலிக்கும் போற்றி நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏகநாத நாமதேவ் துகாராம் என்பதாகும். இதன் பின்னர் சமர்த்த ராமதாசுக்கு போற்றி சொல்லுவார்கள் அப்படிப் புகழ் வாய்ந்த ஞானேஸ்வர், மற்றும் அவருடைய அண்ணனான நிவ்ருத்தியின் நட்பினால் பெரும் நன்மை அடைந்தவர் நாமதேவ். ஞானேஸ்வருடன் இறுதிவரை தல யாத்திரை செய்தார்.
****
7.நாமதேவரின் குரு யார்?
நாமதேவர் வாழ்ந்த காலத்தில் கோரா என்ற ஞானியும் வாழ்ந்தார்; அவர் தொழிலால் குயவர். ஒரு முறை பக்குவப்படாத பக்தர்கள் யார் என்று சிலர் கேட்டனர். அந்தக் கூட்டத்தில் நாமதேவரும் இருந்தார் . பிரம்மத்தை உணர்ந்து கொள்ளாத பாத்திரங்கள் (மட்கலங்கள்) யார் என்று கண்டுபிடிக்க அவர் ஒவ்வொருவர் தலையிலும் சந்தன கட்டையால் தட்டினார். நாம தேவர் தலையைத் தட்டியபோது அவர் அலறினார்; அவர் ஒருவர்தான் பக்குவப்படாத மட்கலம் என்று எல்லோரும் நகைத்தனர். பின்னர் அவர் தனக்கும் ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார் . விட்டோபாவிடம்/ இறைவனிடம் முறையிட்டார். இறைவனே அவருக்கு விசாபகேச்சர் என்ற ஞாநியைக் காட்டினார் அவரிடம் நாமதேவர் சரணடைந்து உபதேசம் பெற்றார்.
****
8.நாமதேவர் எங்கே சமாதி அடைந்தார் ?
ஞானதேவர், தான் ஆலந்தி என்னும் இடத்தில் சமாதி அடையப்போவதாக அறிவித்தவுடன் அவருடன் நாமதேவரும் சென்றார். நிவ்ருத்தி, ஞானதேவர், சோபானர், அவர்களின் தங்கை முக்தாபாய் ஒவ்வொருவரும் உலகை விட்டு நீங்கும்போதும் நாமதேவர் அருகில் இருந்தார்; அவர்களின் பிரிவினையும் பாடிவைத்தார் இவையாவும் ஓராண்டுக் காலத்துக்குள் அடுத்தடுத்து நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.; நாமதேவரும் இருபத்தாறாவது வயதில் (1295-ஆம் ஆண்டு) பண்டரீபுரத்தில் சமாதி அடைந்தார். சிலர் 1350-ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள்.
****
9.அவர் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?அவர் பாடல்களில் ஜனாபாயை பாராட்டியது ஏன்?
நாமதேவர் புஸ்தகம் எதுவும் எழுதவில்லை. ஆயினும் அவர் பாடிய நாலாயிரம் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர் நீண்ட காலம் பஞ்சாபில் தங்கி யாத்திரையும் தியானமும் செய்தார்; அவருடைய பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிக்கிரந்தத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
நாமதேவரின் குடும்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்த ஜனாபாய் என்ற பெண்ணும் அடக்கம் அவர் பல பாடல்களில் ஜனி என்ற பெயரில் அவருடைய பக்தியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
ஜனாபாயும் பாடல்களைப் பாடினார்; எந்த விலங்காகப் பிறந்தாலும் பண்டரீபுரத்தைத் தரிசிக்கவேண்டும்; நாமதேவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று ஜனாபாய் பாடினார்.
****
10.நாமதேவரின் போதனைகள் என்ன ?
நாமதேவரின் மார்க்கத்தை வர்கரி சம்பிரதாயம் என்று சொல்லு வார்கள்; அதாவது பக்தி மார்க்கம்; கீர்த்தனையும் யாத்திரையும் இறைவனை அடைவதற்கான சிறந்த வழிகள் என்கிறார். இன்றும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பண்டரீபுரத்துக்குச்
சென்று விடோபாபாவை /இறைவனைத் தரிசிப்பதை பக்தர்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்.
தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம் மற்றும் கலச தீர்த்தம்
இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படும் வரலாறு இது. பிரம்மா எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருந்த நேரத்தில் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் அவரிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று விடுகிறான்.
பிரம்மா இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுந்தத்தில் உள்ள நாராயணனை நோக்கித் தவம் புரிய நாராயணன் வேதங்களை அவரிடம் மீட்டுத் தருகிறார்.
வைகுண்டநாதராய் அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.
இன்னொரு வரலாறு இது. வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் என்னும் திருடன் வைகுண்டநாதரைத் தொழுத பின் தனது திருட்டில் பாதியை தர்மத்திற்குச் செலவிட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரண்மனையில் திருட முயன்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, காலதூஷகனை அரண்மனை சேவகர்கள் தேடலாயினர்.இதை அறிந்த காலதூஷகன் வைகுந்தநாதரைப் பணிய அவன் வேஷத்தில் வைகுந்தநாதரே அரண்மனையில் அரசன் முன் சென்று நின்றார். மன்னன் காலதூஷகனிடம் திருடியதைப் பற்றிக் கேட்க அரசனின் குற்றங்களை வரிசையாக அடுக்கினார் வைகுண்டநாதர். செல்வத்திற்கு சத்ருக்கள் நால்வர். தர்மம், அக்னி, சோரன், ராஜா ஆகிய நால்வரே அவர்கள். நீ கொஞ்சமேனும் தர்மத்தைச் செய்யவில்லை. ஆகவே தான் இந்த நாடகத்தை நாம் ஆடினோம்” என்றார் வைகுந்தநாதர். திடுக்கிட்ட அரசன் இப்படிச் சொல்வது யார் என்று யோசிக்க அரசனுக்கும் காலதூஷகனுக்கும் தரிசனம் தந்து மறைந்தார் வைகுண்டநாதர். திருடன் வடிவில் வந்ததாலும் பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாலும் அவர் கள்ளபிரான் என்று அழைக்கப்படலானார்.
Pictures from trip advisor; thanks.
காலகிரமத்தில் கோவில் இடிபாடு அடைந்தது. ஒரு சமயம் பாண்டிய மன்னனின் அரண்மனைப் பசு ஒன்று ஓரிடத்தில் தினமும் பால் சொரிந்து வர அங்கு சென்ற பாண்டியன் அந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு அதை மீண்டும் கோவில் எழுப்பி நிறுவினான்.
இங்குள்ள கள்ளபிரானின் சிலையை வடிவமைத்த சிற்பி அதன் அழகில் சொக்கி கன்னத்தைக் கிள்ளி விட்டான். ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட அந்தக் கிள்ளலை கள்ளபிரான் ஏற்றுக் கொண்டார். அந்தக் கிள்ளலின் வடுவை இன்றும் சிலையில் காணலாம்.
நவத்திருப்பதிகளுள் முதலாவதாக அமையும் இதை முதலில் அடைந்து வழிபட்டு பின்னர் இதர தலங்களான வரகுணமங்கை எனப்படும் நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மரபாகும்.
இங்குள்ள முகப்பு கோபுரத்தின் அடி 136 அடியாகும். கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நாம் காண்பது பெரிய மண்டபமும் அதன் நடுவே ஒரு காட்சி மண்டபத்தையும் நாம் காணலாம்.
மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ் ஆதி சேஷன் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மார்பில் மஹாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். ஆதிசேஷன் நின்றவாறே கொடைபிடிக்கும் காட்சி இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. வைகுண்டநாதருக்கு இங்கு தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கோவிலின் உள்ளே உற்சவர் கண்ணபிரான் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வைகுந்தநாயகியும் சோரநாத நாயகியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்..
பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாள் சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஶ்ரீ வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற் போலக் கொடிமரம் சற்றே விலகி உள்ளது.
ஆண்டு தோறும் கருடசேவை திருவிழா உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இத்தலம் பற்றி ‘புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாளப் பெருமாள், புளியங்குடியில் படுத்த கோலமாகக் கிடந்தும், வரகுணமங்கையில் அமர்ந்தும், வைகுண்டம் தலத்தில் நின்றும் காட்சி தருகிறார் எனக் கூறுகிறார்.
சோரநாதர் மீது இயற்றப்பட்ட சோரநாத சுப்ரபாதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தலத்தைத் தனது கோட்டையாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைகுண்டநாதரும் வைகுந்த நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
( ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )
சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் ஒரு அபூர்வமான மனிதருக்கு நமது அஞ்சலியைச் செலுத்தும் நிகழ்ச்சி இது.
திரு சந்தானம் சீனிவாசன் என்ற மாமனிதர் மறைந்து ஒராண்டு ஆக இருக்கும் நிலையில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் படைத்து வெளியாகியுள்ள இரு புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார். 10-12-2023 அன்று மறைந்தார்.
அவரது படைப்புகள் பல. இரு புத்தகங்களை www.pustaka.co.inஎன்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நவீன ஞான மொழிகள் பாகம் 1 என்ற அவரது புத்தகம் 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் 654 நவீன ஞான மொழிகள் உள்ளன.
இந்தப் புத்தகத்தில் திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரை இது.
நவீன ஞான மொழிகள் பாகம் 1
முன்னுரை
கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.
இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.
அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!
இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.
இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.
அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சென்னை சந்தானம் சீனிவாசன்
19-7-2023
இந்த நூலுக்கு அணிந்துரையை அடியேன் வழங்கியுள்ளேன். அணிந்துரை இது:
காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.
இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.
இந்தப் பழமொழிகளை பெரும் புலவர்களும் மகான்களும் தம் தம் இலக்கியங்களிலும் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.
நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.
அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.
இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.
இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.
ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.
இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.
இதற்கான மகத்தான பின்னணியை அவர் கொண்டவர். பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட தேசபக்த, பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே இதை வெற்றிகரமாகச் செய்யும் நுட்பமான வழிமுறைகள் அவருக்குக் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.
அத்தோடு தொழில்ரீதியாகவும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுய முன்னேற்றம், வாழும் வழி முறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் அவர் பயிற்சி வகுப்புகளைப் பல ஆண்டுகள் எடுத்து வந்துள்ளார்.
இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
இந்தப் பயிற்சிகளில் இவரது நகைச்சுவை ததும்பிய பேச்சுக்கு ஒரு காரணமாக அமைந்தது இந்த நவீன ஞான மொழிகளின் தொகுப்பு என்றால் அது மிகையல்ல.
இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.
இவரது முயற்சியை அனைவரும் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.
அவருக்கு எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த முதல் பாகத்தில் சுமார் 500 மொழிகளையே நாம் படித்து மகிழ்கிறோம்.
அடுத்து பல பாகங்கள் வெளிவரும்படி ஏராளமான நவீன ஞான மொழிகள் அவரிடம் இருப்பதால் அவற்றையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
அவர் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
19-7-2023
நூலில் உள்ள அனைத்து நவீன ஞான மொழிகளைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட எடுத்துக்காட்டாக சில மொழிகளை இப்போது பார்க்கலாம்:
நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???
குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை
படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது
மூட நம்பிக்கை!!!
கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???
கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்
எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………
உலகத்தில் தலை சிறந்த ஜோடி எது????
செருப்பு…..
ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாழாது.
ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???
ரேஷன்லே எடை குறையும் !!!
பேஷன்லே உடை குறையும்!!!
கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.
கடவுள் டென்ஷனானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….
டாக்டர் டென்ஷனானா கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!