குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம், ந தும், தர்பார் கம் ?” (Post No.13,965)

Hindu Devotees Pictures from Daily Mail, year 2014

Written by London Swaminathan

Post No. 13,965

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா”

****

எவ்வளவோ பாபாக்களின் பெயர்களைக் கேட்டிருப்பீர்கள்  குடிடி பாபா-வின் சுவையான கதையைக் கேட்டிருக்கிறீர்களா?

****

குடிடி பாபா யார்?

ற்புதங்களைப் புரிந்த ஒரு சித்தர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த மஹான் என்று ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்

****

குடிடி என்றால் என்ன ?

பஞ்சு வைத்து தைக்கப்பட்ட போர்வையை குடிடி என்பார்கள்; அதன் மீது வண்ணத் துணிகளையும் தைத்து, போர்த்திக்கொண்டு பில்குவா என்னும் இடத்துக்கு. அவர் வந்தார். அது ஆர்ய சமாஜிகளும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்த வட இந்திய நகரம்.

****

அவருடைய சிறப்புகள் என்ன ?

நாஸ்தீகவாதிகளும் வியக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.

தொலைதூரத்திலுள்ள பொருளகளை கொண்டுவரும் அதிசய சக்தி அவருக்கு உண்டு.

மூலிகை பற்றிய ஞானம் உடையவர்; அவற்றின் மூலம் நோய்களைத் தீர்த்தார்.

குடிடி பாபா நன்றாகப் பாடி பக்தி இசையைப் பரப்பினார்.

****

அவர் சமாதி ஆனது எப்போது ?

1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று குடிடி பாபா தமது பூத உடலை விட்டு  நீங்கினார் .

அவருடைய ஜாதி, மதம், இனம், முதலியவை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது; ஆயினும் அவர் பாடியது கிருஷ்ணர் மேலான பக்திப்  பாடல்களே. அவரிடம் மூங்கில் குழாய் ஒன்றும், ஒரு பாத்திரமும் மட்டுமே இருந்தன. மூங்கில் குழாயில் பாலோ நீரோ அருந்துவார்; அதையே இசைக்  கருவியாகவும் பயன்படுத்துவார்

****

முதல் அற்புதம் என்ன?

சிவன் கோவிலில் குடிடி பாபா தங்கி இருந்தபோது ராஜபுதன சிறுவர்களை அழைத்தார். கையில் நூலைக் கொடுத்து    மூ டிக்   கொள்ளுங்கள் என்றார்; கையை   திறவுங்கள் என்றார். திராட்சைப் பழங்களும் சர்க்கரையும் இருந்தது; சிறுவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

****

அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன ?

முப்பது வயது தோற்றமே உடைய அவரிடம் கோமணம் மட்டுமே இருந்தது; அருகில் குடிடி போர்வை இருந்தது; ஆனால் தன்னை அவர் ஷா இன்  ஷா (சக்ரவர்த்தி) என்று அழைத்துக் கொள்ளுவார்; உண்மைதான்! ஆசையே இல்லாத விருப்பு வெறுப்பற்ற அந்த முனிவர் முன்னால், இந்திரனே வந்தாலும் அவன் ஒரு பொருட்டல்ல. அப்படியிருக்கும் போது இவர் இந்திரனுக்கும் மேலானவரே

****

குடிடி பாபாவின் உபதேசம் என்ன ?

இரண்டாவது என்று ஒருவரும் இல்லை; நான் ஒருவன் மட்டுமே; யார் யாருடன் பேசுவது ?  “என்று சொல்லி அத்வைதக் கருத்தினை வலியுறுத்துவார்.” ந ஹம் ந தும் ,தர்பார் கம் ?”

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா “

உலகில் எல்லோரும் துன்புறுகின்றனர்.  ஆனால் பகவான் நாமத்தை ஜெபிப்பவன் மட்டுமே சந்தோஷமாக இருப்பான்” என்பது இதன் பொருள்.

****

நாத்தீகர்கள்  முன்னால் நாணயங்கள் வந்த அற்புதம் என்ன ?

பில்குவாவில் நடந்த கூட்டத்தில் இந்து மத சடங்குகளை மட்டம் தட்டிப் பேசிவந்தார்கள்; குடிடி பாபா மெளனம் சாதித்தார்

நாத்தீகர்கள் பாபாஜியை மந்திரவாதி என்பர். அவர்களும் இவரது கூட்டத்துக்கு வருவார்கள்; அவர்களுக்கு முன்னால் சீடன் ஒருவன் அவருக்கு மூங்கில் குழாயில் பாலை ஊற்றினான். அது மறைந்தது; அதற்குப்பதிலாக திராட்சைப் பழம் கொத்து கொத்தாக வந்தது  அவர்கள் முன்னால் பல அ ற்புதங்களைச் செய்வார்  ஒருமுறை அவர்களுக்கு முன்னால் ஒரு சீடனைப் பால் வாங்கிவர அனுப்பினார். அவன் பாலைக்  கொண்டுவந்து மூங்கில் குழாயில் ஊற்றினான்; அதைக் குடித்துவிட்டு அவன் கொண்டுவந்த டம்பளரைத் திருப்பிக் கொடுத்தார் அதைக் குலுக்கு என்றார். ஒரு ரூபாய் நாணயம் வந்தது; இப்படி ஐந்து முறை குலுக்கச் சொன்னார்; ஐந்து ரூபாய் நாணயங்கள் வந்தன; இதை பால்காரன் கடையில் கொடுத்துவிடு என்றார்.

****

காந்தார மாதுளம்  பழம் வந்த அற்புதம் என்ன ?

ஒருமுறை மஹாத்மா ஆத்மாராம்ஜியுடன் குடிடி பாபா தங்கி இருந்தார் அப்போது பெரும் கூட்டம் கூடியது. நாத்தீகர்களின் தலைவர் ஒருவரும் அந்தக்கூட்டத்தில் இருந்தார் பலரும்  ஏதேனும் அற்புதம் செய்யுங்கள் என்று மன்றாடினார். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்றார்; அந்த வட்டாரத்தில், மாதுளம் பழமே கிடையாது; ஒருவர் காண்டஹார் நகரில் விற்கப்படும் மாதுளம்  பழம் வேண்டும் என்று கேட்டார். தனது கையில் இருந்த ஒருகை க்குட்டையில் அதை வரவழைத்து அவரிடம் கொடுத்தார் ; எல்லோரும் அதைச் சுவைத்துவிட்டு சுவையான பழம் என்று கூறினார்கள்

****

மருத்துவ அறிவுக்குச் சான்றுகள் என்ன ?

குடிடி பாபா பல நோயாளிகளை மூலிகை மூலம் குணப்படுத்தினார்; கந்தகதத்திலிருந்து எண்ணெய் வடித்து மருந்தாகப் பயன்படுத்தினார். அதே கந்தகத்திலிருந்து மற்றவர்களும் முயற்சி செய்தபோது வரவில்லை; அவர்கள் ஏன் எஙகளுக்கு வரவில்லை? என்று கேட்டபோது மணிமந்திரம் ஒளஷதம் மூன்றும்  தெரிந்தால்தான் வரும் என்றார்; சிக்கலான மருந்துகளைத் தயாரிக்க மருத்துவர்களுக்கு உதவினார். பாதரசத்தைக் கெட்டியாக்கி அதை வைத்துக்கொண்டு குடிடி பாபா வானில் பறந்தார். ஒருவருக்கு குழந்தை இல்லை; தனக்கு மகப்பேறு கிடைக்க அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தவுடன் தங்க பஸ்பத்தைக் குடிடி பாபா கொடுத்தார். அவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களைச் செய்த குடிடி பாபா பற்றி, அவருக்கு சம காலத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தா எழுதுவதால் நாம் அதை அப்படியே நம்பலாம்.

–subham—

Tags- நாத்தீகர்கள் ,பில்குவா  ,குடிடி பாபா , சுவாமி சிவானந்தா, அற்புதங்கள், ந ஹம் ந தும் ,தர்பார் கம்

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2 (Post No.13,964)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.964

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )

ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2

அடுத்து திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இன்னொரு புத்தகம் நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

இதன் விலை ரூ 100.  85 பக்கங்கள்

கிடைக்கும் இடம் : http://www.pustka.co.in

தொலைபேசி எண் 91 7418555884 

இந்த நூலுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரை இது:

நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.

இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.

இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.

இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com  பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.

இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

31-7-2023

இதற்கு அடியேன் வழங்கியுள்ள அணிந்துரை இது:

வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது  மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.

மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம்,ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.

அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்

   ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்

சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா

   பதே பதே ப்ரத்யய பாவஹந்தி

மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளுல் ஒருவரான டபிள்யூ. டபிள்யூ. பார்ட்லி ஆங்கிலத்தில் ஒரு சுவையான சிறு அறிவுரையைத் தருகிறார் இப்படி:

For every ailment under the Sun

There is a remedy, or there is none;

If there be one, try to find it;

If there be none, never mind it.

 ― W.W. Bartley

ஆதவனுக்குக் கீழுள்ள மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு அல்லது இல்லை. உண்டென்றால் அதைக் கண்டுபிடி; இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலையே படாதே என்பதே இதன் பொருள்.

ஆனால் ஹிந்து சாஸ்திரங்களோ ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு; ஒரு பரிகாரம் உண்டு என்று திடமாகக் கூறுவதோடு வழிமுறைகளையும் விளக்குகின்றன.

அந்த வகையில் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் நவகிரகங்கள் நல்லனவற்றையும் தீயனவற்றையும் நமக்கு நல்கின்றன – நமது பழைய நல்ல மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப!

ஆனால் தீமையான விளைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவற்றை மாற்றவோ அல்லது குறைந்த விளைவுகளை மட்டும் நம்மை அதிகம் பாதிக்காதபடி ஏற்படுத்தவோ நவகிரக வழிபாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிபாட்டிற்கு நவகிரகங்களைப் பற்றிய உரிய ஞானம் நமக்கு வேண்டும்.

அதற்கு இந்த நூல் மிக அருமையாக உதவி செய்கிறது.

 நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.

வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்

இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.

நவ கிரகங்களைப் பற்றி அறிவோம்; உரிய முறையில் வழிபடுவோம். வளமான வாழ்வைப் பெறுவோம்.

நன்றி வணக்கம்.

பங்களூர்                                                       ச.நாகராஜன்

31-7-23

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள் 10

அத்தியாயங்கள்

 1. சூரியனே போற்றி!

 2. அம்புலிமாமா வாவா!

 3. மங்களம் தரும் அங்காரகன்!

 4. புத்தி தரும் புதன்!

 5. குரு பகவான்!

 6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!

 7. சனீஸ்வர பகவான்!

 8. ராகு பகவான்!

 9. கேது பகவான்!

10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!

பெயருக்கேற்ப இது நவகிரகங்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்பதில் ஐயமில்லை.

அவரது நினைவைப் போற்றுவோம். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

நன்றி, வணக்கம்.

***

tags– சந்தானம் சீனிவாசன்,  அஞ்சலி – 2,  நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

HINDU CROSSWORD 21224 (Post No.13,963)

Written by London Swaminathan

Post No. 13,963

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1  2    3
       
 4      
    5  
 6      
       
7      
A      
D      
8      

Yellow colour words- Across

1.Lord Krishna shifted his capital to this Gujarat port city

4.Persian word for Pomegranate

6. The Sanskrit word …….. has multiple meanings, including “pleasant, sweet, snow, beautiful, clouds, morning dew“. It is also the origin of the Indian name …….. which is primarily given to girls. In Tamil also it means cloud.

7.Son in all Indian languages

8.World famous Indian caves with old paintings and Buddha sculptures.

*****

Orange brown words – Down

1.Buddhists’s Holy book

2.Ice Linga of Lord Shiva in this cave in Kashmir

3. Capital of Tripura state in India

5.It means religious debt or religious obligation in Sanskrit  owards Deva/God, Pitru/ancestors and Rishis/seers

*****

Ujjayanta palace in the capital city, Tripura

HINDU CROSSWORD 21224 answer

D 1WA 2RAKA 3
H M   G
A 4NAR  A
M R R 5 R
M 6ANJU T
A A N A
P 7UTRA L
A H   A
D      
A8JANTA 
D 1WA 2RAKA 3
H M   G
A 4NAR  A
M R R 5 R
M 6ANJU T
A A N A
P 7UTRA L
A H   A
D      
A8JANTA 

–subham—

Tags– Hindu Crossword21224

LAST SUNDAY GNANAMAYAM BROADCAST 1-12-2024


ON SUNDAY 1-12-2024 FOLLOWING PEOPLE TOOK PART IN THE GNANAMAYAM BROADCAST FROM LONDON.

POSTED BY LONDON SWAMINATAN ON 2nd  DECEMBER 2024.

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

PRAYER BY MRS HAMSINI RAJARAM FROM IRELAND

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Books written by Late Srinivasan’s

***

Talk by Brahannayaki Sathyanarayan on SRI VAIKUNDAM temple from Bengaluru

***

Talk on Navagrahas by Chennai Srinivasan; Rebroadcast in Memory of Late Santanam Srinivasan .

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

சென்னை சந்தானம் சீனிவாசன் நூல்கள்

—subham—

Benglauru Nagarajan spoke on Late Chennai Srinivasan’s two books.

Sri Kalyanasundara Sivacharya did play Late Srinivasan’s broadcast on Mars graha (Angaraka)

Mrs Anand

Mrs Hamsini Rajaram, Ireland

London swaminathan

Mrs B Sathyanarayanan

–subham—

tags- LAST SUNDAY, GNANAMAYAM BROADCAST, on 1-12-2024 

QUIZ நாம தேவர் QUIZ (Post No.13,962)

Written by London Swaminathan

Post No. 13,962

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.நாம தேவர் யார், எங்கே எப்போது பிறந்தார் ?

அவர் மகாராஷ்டிரத்தில் 1269-ஆம் ஆண்டு  பிறந்தார் . பெரிய ஞானி; இறைவன் மீது பக்திப்பாடல்களைப் பாடிய பெரியவர் . அவர் நர்சி என்னும் கிராமத்தில் பிறந்தார் . ஹிங்கோலி , றிசாத் என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ளது

****

2.நாமதேவருடைய குடும்பம் என்ன தொழில் செய்தது ?

அவருடைய குடும்பம். தையல்கார குடும்பம். அவர்கள் தையல் தொழிலைச் செய்தனர்.  வருமானத்தைப் பெருக்குவதற்காக விட்டோபா கோவில் கொண்டுள்ள பண்டரீபுரத்துக்குக் குடியேறினர்.

****

3.நாமதேவர் கற்றது என்ன ?

இரண்டு வயதில் அவர் சொன்ன பிழையற்ற முதல் சொல் விட்டல. ஏழு வயதில் அவர்  பஜனை செய்வதற்கான தாளக் கருவிகளை செய்து பஜனை செய்யத் துவங்கினார் . பள்ளிப்படிப்பைப் புறக்கணித்தார். பிரஹலாதன் போல சிறு வயதிலிருந்தே விட்டல நாமத்தைச் சொல்வதில் இன்பம் கண்டார்.

*****

4.நாமதேவருடைய மஹிமையை தாயார் அறிந்தது எப்படி ?

விட்டோபா கோவிலுக்கு நாமதேவரை அவரது தாயார் தினமும் அழைத்துச் சென்று நைவேத்தியங்களைப் படைப்பார். ஒரு நாள், வேலை மிகவும் இருந்ததால் நாமதேவரிடம் நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்பினார். அவரும் இறைவன் முன்னால் அதை வைத்துவிட்டுக் காத்திருந்தார். விடோபா வரவில்லை; விம்மி விம்மி அழுதார் ; அப்போது இறைவனே வந்து அதைச் சாப்பிட்டார் . இதைத் தாயாரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை மறுதினமும் சிறுவனிடம் நைவேத்தியத்தைக் கொடுத்தனுப்பி, மறைவாக பின்னே தொடர்ந்து சென்று பார்த்தார். இறைவனே வந்து அதை உண்டதைக் கண்டு அதிசயித்தார்.

****

5.தந்தையார் அவருக்கு கொடுத்த வேலை என்ன ? அவர் என்ன செய்தார் ?

திருமணமாகியும் குடும்பத்தில் பற்று இல்லாமல் விட்டல நாமம்  ஜெபிப்பதிலும் பஜனை செய்வதிலும் நாமதேவர், காலத்தைக் கழித்தார். இவருக்கு வேலை  கொடுத்து வெளியே அனுப்புவதற்காக  புதிய துணிகளைக் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பினார்; அவர் துணியை விற்காமல் ஒரு கல்லினை இறைவன் என்று சொல்லிக் காவலுக்கு வைத்து விட்டு பஜனை செய்தார். துணிகள் அப்படியே இருந்தன . மராத்திய மொழியில் கல்லுக்குத் தொண்டியா என்ற சொல்லும்ஒரு ஆள் என்றும் பொருள். இரவில் வீட்டுக்குத் திரும்பிய போது தந்தை கேட்ட கேள்விக்கு தொண்டியாவை நிறுத்திவிட்டு வந்ததாகச் சொன்னார். மறு நாள் போனபோது அந்த இடத்தில் துணிகள் இல்லை. உடனே தொண்டியாவைக் (கல்லைக் ) கொண்டுவந்து ஒரு அறையில் பூட்டினார். தந்தை மீண்டும் கேட்டபோது துணிகள் மாயமாய் மறைந்துவிட்டதால் தொண்டியாவைக் அறையில் பூட்டி வைத்ததாகச் சொன்னார். கதவைத் திற அவனைப் பார்க்கிறேன் என்று சொன்னவுடன், தந்தை திட்டப்போகிறார் என்று பயந்து கொண்டே கதவைத்Nதிறந்தார். உள்ளே இருந்த கல் தங்கக் கட்டியாக மாறியிருந்தது. இந்த அற்புதம், அவர் பெரிய யோகி என்பதைக் காட்டியது.

****

6.நாமதேவரின் புகழ்பெற்ற தோழர் – சகா யார் ?

மஹாராஷ்டிர பஜனைகளில் ஒலிக்கும் போற்றி நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏகநாத  நாமதேவ் துகாராம் என்பதாகும். இதன் பின்னர் சமர்த்த ராமதாசுக்கு போற்றி சொல்லுவார்கள் அப்படிப் புகழ் வாய்ந்த ஞானேஸ்வர், மற்றும் அவருடைய அண்ணனான  நிவ்ருத்தியின் நட்பினால் பெரும் நன்மை அடைந்தவர் நாமதேவ். ஞானேஸ்வருடன் இறுதிவரை தல யாத்திரை செய்தார்.

****

7.நாமதேவரின் குரு யார்?

நாமதேவர் வாழ்ந்த காலத்தில் கோரா என்ற ஞானியும் வாழ்ந்தார்; அவர் தொழிலால் குயவர். ஒரு முறை பக்குவப்படாத பக்தர்கள் யார் என்று சிலர் கேட்டனர். அந்தக்  கூட்டத்தில் நாமதேவரும் இருந்தார் . பிரம்மத்தை உணர்ந்து கொள்ளாத பாத்திரங்கள்  (மட்கலங்கள்) யார் என்று கண்டுபிடிக்க அவர் ஒவ்வொருவர் தலையிலும் சந்தன கட்டையால் தட்டினார். நாம    தேவர் தலையைத் தட்டியபோது அவர் அலறினார்; அவர் ஒருவர்தான் பக்குவப்படாத மட்கலம் என்று எல்லோரும் நகைத்தனர். பின்னர் அவர் தனக்கும் ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார் . விட்டோபாவிடம்/ இறைவனிடம் முறையிட்டார். இறைவனே அவருக்கு  விசாபகேச்சர் என்ற ஞாநியைக் காட்டினார் அவரிடம் நாமதேவர் சரணடைந்து உபதேசம் பெற்றார்.

****

8.நாமதேவர் எங்கே சமாதி அடைந்தார் ?

ஞானதேவர்,  தான் ஆலந்தி என்னும் இடத்தில் சமாதி அடையப்போவதாக அறிவித்தவுடன் அவருடன் நாமதேவரும் சென்றார். நிவ்ருத்தி, ஞானதேவர், சோபானர், அவர்களின் தங்கை முக்தாபாய் ஒவ்வொருவரும் உலகை விட்டு நீங்கும்போதும் நாமதேவர் அருகில் இருந்தார்; அவர்களின் பிரிவினையும் பாடிவைத்தார்  இவையாவும் ஓராண்டுக் காலத்துக்குள் அடுத்தடுத்து நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.; நாமதேவரும் இருபத்தாறாவது வயதில் (1295-ஆம் ஆண்டு) பண்டரீபுரத்தில் சமாதி அடைந்தார்.  சிலர் 1350-ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள்.

****

9.அவர் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ? அவர் பாடல்களில் ஜனாபாயை பாராட்டியது ஏன்?

நாமதேவர் புஸ்தகம் எதுவும் எழுதவில்லை. ஆயினும் அவர் பாடிய நாலாயிரம் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர் நீண்ட காலம் பஞ்சாபில் தங்கி யாத்திரையும் தியானமும் செய்தார்; அவருடைய பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிக்கிரந்தத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

நாமதேவரின் குடும்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்த ஜனாபாய் என்ற பெண்ணும் அடக்கம்  அவர் பல பாடல்களில் ஜனி என்ற பெயரில் அவருடைய பக்தியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஜனாபாயும் பாடல்களைப் பாடினார்; எந்த விலங்காகப் பிறந்தாலும் பண்டரீபுரத்தைத் தரிசிக்கவேண்டும்; நாமதேவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று ஜனாபாய் பாடினார்.

****

10.நாமதேவரின் போதனைகள் என்ன ?

நாமதேவரின் மார்க்கத்தை வர்கரி சம்பிரதாயம் என்று சொல்லு வார்கள்; அதாவது பக்தி மார்க்கம்; கீர்த்தனையும் யாத்திரையும் இறைவனை அடைவதற்கான சிறந்த வழிகள் என்கிறார். இன்றும்  பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பண்டரீபுரத்துக்குச்

சென்று விடோபாபாவை /இறைவனைத்  தரிசிப்பதை பக்தர்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்.

—subham—–

Tags—விடோபாபா,வர்கரி சம்பிரதாயம், ஜனாபாய், . தையல்கார குடும்பம், பண்டரீபுரம், ஆதிக்கிரந்தம்

ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வைகுண்டம் தலம் (Post No.13,961)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,961

Date uploaded in London – –2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-12-2024 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து

    வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தையகங் கழியாதே

   என்னை ஆள்வாய்! எனக்கருளி

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

   நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

   கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

–    நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான ஶ்ரீ வைகுண்டம் தலமாகும். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதியாக அமைவதும் இதுவே,

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

விண்ணுலகில் இருக்கும் ஶ்ரீ வைகுண்டம் என்ற பெயரைத் தாங்கி பூலோகத்தில் இருக்கும் திருத்தலம் இது.

மூலவர் திருநாமம் : ஶ்ரீ வைகுண்ட நாதர் (நின்ற திருக்கோலம்)_

உற்சவர் : ஶ்ரீ கள்ளப்பிரான்

தாயார்: வைகுந்தவல்லி, சோரநாத நாயகி

தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்  மற்றும் கலச தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படும் வரலாறு இது. பிரம்மா எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருந்த நேரத்தில் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் அவரிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று விடுகிறான்.

பிரம்மா இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுந்தத்தில் உள்ள நாராயணனை நோக்கித் தவம் புரிய நாராயணன் வேதங்களை அவரிடம் மீட்டுத் தருகிறார்.

வைகுண்டநாதராய் அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இன்னொரு வரலாறு இது. வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் என்னும் திருடன் வைகுண்டநாதரைத் தொழுத பின் தனது திருட்டில் பாதியை தர்மத்திற்குச் செலவிட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரண்மனையில் திருட முயன்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, காலதூஷகனை அரண்மனை சேவகர்கள் தேடலாயினர்.இதை அறிந்த காலதூஷகன் வைகுந்தநாதரைப் பணிய அவன் வேஷத்தில் வைகுந்தநாதரே அரண்மனையில் அரசன் முன் சென்று நின்றார். மன்னன் காலதூஷகனிடம் திருடியதைப் பற்றிக் கேட்க அரசனின் குற்றங்களை வரிசையாக அடுக்கினார் வைகுண்டநாதர். செல்வத்திற்கு சத்ருக்கள் நால்வர். தர்மம், அக்னி, சோரன், ராஜா ஆகிய நால்வரே அவர்கள். நீ கொஞ்சமேனும் தர்மத்தைச் செய்யவில்லை. ஆகவே தான் இந்த நாடகத்தை நாம் ஆடினோம்” என்றார் வைகுந்தநாதர். திடுக்கிட்ட அரசன் இப்படிச் சொல்வது யார் என்று யோசிக்க அரசனுக்கும் காலதூஷகனுக்கும் தரிசனம் தந்து மறைந்தார் வைகுண்டநாதர். திருடன் வடிவில் வந்ததாலும் பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாலும் அவர் கள்ளபிரான் என்று அழைக்கப்படலானார்.

Pictures from trip advisor; thanks.

காலகிரமத்தில் கோவில் இடிபாடு அடைந்தது. ஒரு சமயம் பாண்டிய மன்னனின் அரண்மனைப் பசு ஒன்று ஓரிடத்தில் தினமும் பால் சொரிந்து வர அங்கு சென்ற பாண்டியன் அந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு அதை மீண்டும் கோவில் எழுப்பி நிறுவினான்.

இங்குள்ள கள்ளபிரானின் சிலையை வடிவமைத்த சிற்பி அதன் அழகில் சொக்கி கன்னத்தைக் கிள்ளி விட்டான். ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட அந்தக் கிள்ளலை கள்ளபிரான் ஏற்றுக் கொண்டார். அந்தக் கிள்ளலின் வடுவை இன்றும் சிலையில் காணலாம்.

நவத்திருப்பதிகளுள் முதலாவதாக அமையும் இதை முதலில் அடைந்து வழிபட்டு பின்னர் இதர தலங்களான  வரகுணமங்கை எனப்படும் நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மரபாகும்.

இங்குள்ள முகப்பு கோபுரத்தின் அடி 136 அடியாகும். கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நாம் காண்பது பெரிய மண்டபமும் அதன் நடுவே ஒரு காட்சி மண்டபத்தையும் நாம் காணலாம்.

மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ் ஆதி சேஷன் குடைபிடிக்க  நான்கு கரங்களுடன் மார்பில் மஹாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். ஆதிசேஷன் நின்றவாறே கொடைபிடிக்கும் காட்சி இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. வைகுண்டநாதருக்கு இங்கு தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலின் உள்ளே உற்சவர் கண்ணபிரான் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வைகுந்தநாயகியும் சோரநாத நாயகியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்..

பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை  மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாள் சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஶ்ரீ வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற் போலக் கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆண்டு தோறும் கருடசேவை திருவிழா உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இத்தலம் பற்றி ‘புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள  வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாளப் பெருமாள், புளியங்குடியில் படுத்த கோலமாகக் கிடந்தும், வரகுணமங்கையில் அமர்ந்தும், வைகுண்டம் தலத்தில் நின்றும் காட்சி தருகிறார் எனக் கூறுகிறார்.

சோரநாதர் மீது இயற்றப்பட்ட சோரநாத சுப்ரபாதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தலத்தைத் தனது கோட்டையாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைகுண்டநாதரும் வைகுந்த நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

 –subham—

 tags- ஆலயம் அறிவோம்,  ஶ்ரீ வைகுண்டம் தலம் 

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1 (Post No.13,960)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.960

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களேதிரு கல்யாண்ஜி அவர்களேலண்டன் சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் ஒரு அபூர்வமான மனிதருக்கு நமது அஞ்சலியைச் செலுத்தும் நிகழ்ச்சி இது.

திரு சந்தானம் சீனிவாசன் என்ற மாமனிதர் மறைந்து ஒராண்டு ஆக இருக்கும் நிலையில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் படைத்து வெளியாகியுள்ள இரு புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார். 10-12-2023 அன்று மறைந்தார்.

அவரது படைப்புகள் பல. இரு புத்தகங்களை www.pustaka.co.in  என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நவீன ஞான மொழிகள் பாகம் 1 என்ற அவரது புத்தகம் 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் 654 நவீன ஞான மொழிகள் உள்ளன.

இதன் விலை ரூ 160 பக்கங்கள் 140

கிடைக்கும் இடம் : www.pustka.co.in

தொலைபேசி எண் 91 7418555884

இந்தப் புத்தகத்தில் திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரை இது.

நவீன ஞான மொழிகள் பாகம் 1

முன்னுரை 

கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.

இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.

அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!

இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.

அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

19-7-2023

இந்த நூலுக்கு அணிந்துரையை அடியேன் வழங்கியுள்ளேன். அணிந்துரை இது:

காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.

இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.

இந்தப் பழமொழிகளை பெரும் புலவர்களும் மகான்களும் தம் தம் இலக்கியங்களிலும் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.

நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.

அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.

இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.

இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.

ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.

இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.

இதற்கான மகத்தான பின்னணியை அவர் கொண்டவர். பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட தேசபக்த, பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே இதை வெற்றிகரமாகச் செய்யும் நுட்பமான வழிமுறைகள் அவருக்குக் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.

அத்தோடு தொழில்ரீதியாகவும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுய முன்னேற்றம், வாழும் வழி முறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் அவர் பயிற்சி வகுப்புகளைப் பல ஆண்டுகள் எடுத்து வந்துள்ளார்.

இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

இந்தப் பயிற்சிகளில் இவரது நகைச்சுவை ததும்பிய பேச்சுக்கு ஒரு காரணமாக அமைந்தது இந்த நவீன ஞான மொழிகளின் தொகுப்பு என்றால் அது மிகையல்ல.

இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.

இவரது முயற்சியை அனைவரும் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.

அவருக்கு எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த முதல் பாகத்தில் சுமார் 500 மொழிகளையே நாம் படித்து மகிழ்கிறோம்.

அடுத்து பல பாகங்கள் வெளிவரும்படி ஏராளமான நவீன ஞான மொழிகள் அவரிடம் இருப்பதால் அவற்றையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அவர் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

பங்களூர்                                       ச.நாகராஜன்

19-7-2023

நூலில் உள்ள அனைத்து நவீன ஞான மொழிகளைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட எடுத்துக்காட்டாக சில மொழிகளை இப்போது பார்க்கலாம்:

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை

படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது

மூட நம்பிக்கை!!!

கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்

எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………

உலகத்தில் தலை சிறந்த ஜோடி எது????

செருப்பு…..

ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாழாது.

ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???

ரேஷன்லே எடை குறையும் !!!

பேஷன்லே உடை குறையும்!!!

கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷனானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….

டாக்டர் டென்ஷனானா கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!

எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,

என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!

திருவள்ளுவர் இப்போதிருந்து திருக்குறள் எழுதியிருந்தாலும்,

இறுதி வரியில் “உண்மையான தமிழனாக இருந்தால் இதை

ஷேர் செய்” என்றே எழுதியாகணும்!!!

HOTEL ADVT

WE OFFER THREE KINDS OF FOOD!!!

GOOD. – CHEAP – FAST

BUT YOU CAN PICK ONLY TWO.

GOOD AND CHEAP. WON’T BE FAST

FAST AND GOOD. WON’T BE CHEAP

CHEAP AND FAST. WON’T BE GOOD

நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும்,

மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார், உன் முகம்

எல்லோருக்கும் பிடிக்கும்!!!

மேடம், நாங்க சோப்பு கம்பேனிலேர்ந்து சர்வே எடுக்க வரோம்.

துணி துவைக்க நீங்க எதை உபயோகிக்கிறீங்க???

என் கணவரை……!!!!

ஓரெட்டில் (8) வளர்க்காத வளர்ப்பும்,

ஈரெட்டில் (16) படிக்காத படிப்பும்,

மூவெட்டில் (24) நடவாத மணமும்,

நாலெட்டில் (32) பிறவாத மகவும்,

ஐயெட்டில் (40) சேர்க்காத பொருளும்,

ஆறெட்டில் (48) பெறாத புகழும்,

ஏழெட்டில் (56) கற்காத ஞானமும்,

எட்டெட்டில் (64) சாவாத சாவும்,

பின்னால் துன்பமே விளைவிக்கும்.

உலகில் ஏழு பாவங்கள்

1.உழைப்பில்லாத சொத்து

2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை

3.ஒழுக்கமில்லாத கல்வி

4.நாணயம் இல்லாத வார்த்தை

5.மனித நேயமில்லாத அறிவியல்

6.தியாகமில்லாத பிரார்த்தனை

7.கொள்கையில்லாத அரசியல்

டீக்கும் காப்பிக்கு என்ன வித்தியாசம் தெரியுமா???

டீ (TEA) ல ஒரு ”ஈ“ இருக்கும், காப்பில இரண்டு “ஈ” இருக்கும்!!! (COFFEE)

KNOWLEDGE DECIDES WHAT TO SAY……

SKILL DECIDES HOW TO SAY….

ATTITUDE DECIDES HOW MUCH TO SAY

WISDOM DECIDES WHETHER TO SAY OR NOT!!!

திருடனுக்கு பிடித்த ராகம்……………”சுருட்டி”!!!

உடுத்திக்கொள்ள முடியாத டிரஸ்……..”அட்ரஸ்”

உண்ண முடியாத பன் …………….”ரிப்பன்”

சாப்பிடக்கூடிய கட்டை………….”கொழுக்கட்டை”

பேச முடியாத வாய் …………… “செவ்வாய்” 

ஜெயிலர் ஒரு கைதியைப் பார்த்து :  உன்னைப் பார்க்க நண்பர்களோ,

உறவினர்களோ ஏன் யாரும் வருவதில்லை???

கைதி : அவர்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்………

A ENGLISH PUBLICATION OFFERED A PRIZE FOR THE BEST DEFINITION OF A “FRIEND”

OUT OF THOUSANDS OF ANSWERS, BEST ANSWERS WERE GIVEN PRIZES.

“ONE WHO MULTIPLY JOYS, DIVIEDS GRIEF,AND WHOSE HONESTY IS INVIOLABLE”.

“ONE WHO UNDERSTANDS OUR SILENCE “.

“A WATCH WHICH BEATS TRUE FOR ALL TIME AND NEVER RUNS DOWN”.

“A VOLUME OF SYMPATHY BOUND IN CLOTH”

BEST PRIZE GOES TO,

“A FRIED IS ONE WHO COMES IN, WHEN THE WHOLE WORLD HAS GONE OUT !!!

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்

வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

என்று எழுதியிருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை

பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்

கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

 to be continued………………………………………

tags- சந்தானம் சீனிவாசன் , அஞ்சலி – 1,

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 1-12-2024

Written by London Swaminathan

Post No. 13,959

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR TAMIL AND ENGLISH DAILIES AND EDITED FOR BROADCAST.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் முதல்  தேதி 2024-ம் ஆண்டு

********

வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் ஆகியவற்றை கொடுப்பதற்காக ருத்ரபிரோதி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாதசியாம சுந்தர் ஆகிய 2 சாமியார்கள் சென்றுள்ளனர். அப்போது அந்நாட்டு போலீசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் :

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும்பாஜக மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

, வங்கதேசத்தில் இடைக்கால அரசால் இந்து கோயில்கள் எரிப்பு, இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் பிரச்சனை உருவாகும்போதெல்லாம் இந்து மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் கரு.நாகராஜன்  கூறினார்.

இந்து மக்களை காக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்றும், வங்கதேச இந்து மக்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்பதகாவும் கரு.நாகராஜன் கூறினார்.

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் மீது, வன்முறை கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது.

வங்க தேசத்தில் ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சிறுபான்மை ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சின்மாய் கிருஷ்ண தாஸ், ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்ததால், இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணி  

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி யினர் பேரணி நடத்தினர்.

கொல்கத்தாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமான பாரதீய ஜனதா கட்சியினர்  வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

**********

அடுத்ததாக ஆந்திர மாநில செய்தி

திருப்பதி லட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கியது

திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. திருப்பதி, ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குக் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்தவிசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ‘சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது

அதன்படி, சிபிஐ இந்த மாத தொடக்கத்தில் 5 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.

********

அடுத்ததாக தமிழ் நாட்டுச் செய்திகள்

இசைவாணிரஞ்சித் மீது நடவடிக்கை தேவை:

கஸ்தூரிக்கு ஒரு நீதி;  இசைவாணிக்கு ஒரு நீதியா ?

இந்துக்கள் கேள்வி

ACTRESS kASTURI

: ”சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்’ என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார்.

திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.

அண்மையில் வேறு ஒரு விஷயத்தில், மன்னிப்புக் கேட்டும் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார் ; அவர் எனக்கு ஒரு நீதி இசைவாணிக்கு ஒரு நீதியா என்றும்  கேட்டிருக்கிறார்.

 இசைவாணி மீது ,சில நாட்களுக்கு முன்னால், பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில்  பாரதீய ஜனதாக கட்சி பிரமுகர்களும் ஹிந்து முன்னணி, மஸ்துார் யூனியன் பிரமுகர்களும் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர்.

 அதில், இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். ‘ஐம் சாரி ஐயப்பா’ என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல் ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

 மதுரையில் பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ”இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதித்துறையை நாடுவோம். இது ஒரு திட்டமிட்ட சதி. இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது” என்றார்.

பாரதிய பார்வர்டு பிளாக் புகார்

சபரிமலை ஐயப்பனை இழிவு படுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக்., கட்சியினர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.

 அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

*******

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற  கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

******

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி:

 சென்னை: ‘கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில்சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.

நிபந்தனை

பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.

அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ”ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ”கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.

XXXXXXXXX

பிற மாநிலச் செய்திகள்

 சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

 உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.

ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம்.

சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

*******

ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்

ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம்து.

அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.

இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.

இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

******

இடஒதுக்கீடுக்கான மதமாற்றம் ஒரு மோசடி!

இடஒதுக்கீட்டுப் பலன்களுக்காக மட்டுமே மத மாற்றம் செய்வது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இந்து தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு பிறந்த பெண் ஒருவர், சில மாதங்களிலேயே கிறிஸ்தவராக ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரியில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்காக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.

இதனை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் செய்யப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த பதிவை ரத்து செய்ய அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தது.

தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தை தழுவுவதாகக் கூறுவது, இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இடஒதுக்கீட்டு கொள்கையின் சமூக நெறிமுறைகள் தோற்கடிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்      எட்டாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல் 1-12-2024, HINDU NEWS

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—3 (Post No.13,958)

Written by London Swaminathan

Post No. 13,958

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Final Part

Sri Ramakrishna Paramahamsa refers to Sri Chaitanya Mahaprabhu in more places.

Lord Chaitanya used to have three sorts of states

1.the conscious state in which the mind dwelt on the gross and the subtle bodies.,

2.the semiconscious  in which the mind soared to the casual body felt the the caul bliss, and

.the state of in-turned consciousness (superconscious state) in which the mind used to merge completely in the Mahakarana- the Great First Cause.

There is a great similarity between this and five sheaths or kosas of the Vedanta. the First Cause is beyond these kosas. When the mid used to merge in  this First Cause  , Sri Chaitanya used to fall in Samadhi; this is known as Nirvikalpa samadhi  or Jada Samadhi

****

One day while a disciple was shampooing his feet , the Master said, referring to this act of service, “This has a deep significance “. Then placing his hand on his own heart, he said, “If there is anything (Divine) in it , then (by this act of service) ignorance and Avidhya will vanish at once for all “

And then he added with a serious look , “There is no outsider here. That day I had a vision. Harish was near me then. I saw Sachitananda coming out of the sheath ( his body). Having come out, He said, I incarnate in every age. I thought I was delirious. So, I kept quiet. Then I heard that He was even saying, “Even Chaitanya worshipped Sakti.”

These Chaitanya references or anecdotes were taken from the book Sayings of Sri Ramakrishna.

****

Some years ago I got a hundred year old book and posted  Chaitanya’s quotations. I attach it here:

Live Like a Tree: Chaitanya’s Advice! (Post No.4099)

Date: 20 July 2017


Post No. 4099

“A man must attain the nature of a tree, which lives solely for the benefit of others, before he can become a true worshipper”—Chaitanya Mahaprabhu

Chaitanya was a great devotee of Lord Krishna. His principal place of worship is Nadia in West Bengal. He has a big following in Bengal and adjacent states. Krishna devotees consider him as an incarnation of Lord Krishna himself. They say that amongst the many incarnation of Vishnu four are most important

the White incarnation named Ananta

the Red incarnation named Kapila

the Black incarnation named Krishna

the Yellow incarnation named Chaitanya

Chaitanya was born in CE. 1484 in Nadia and died at Puri in 1527

His father was a Brahmin named Jagannath Misra and his mother’s name was Suchi. Their first son Visvarupa became a religious mendicant. Second son Chaitanya was born when his mother was old. Consequently the child was very weak and did not take milk for three days. They thought that the child would die soon and hung him in a tree in a basket. A Brahmin called Adaitya happened to pass at that time, saw the child and thought that it was a divine child. He wrote Hare Krishna mantra in  the sand below the tree with his toe. Chaitanya’s mother took it as a positive sign and took the child back into the house. The child quickly recovered and took food. 

Chaitanya s a youth made good progress in learning. He married twice, first at the age of eleven a girl named Lakshmi, and on her early decease, he married another girl Vishnupriya. They lived together for some time. When Chaitanya was 24, he decided to find a way to solve the distresses of mankind. He took off his sacred thread and became an ascetic. Leaving his home, parents, and wife, he spent six years as a wandering saint (Bairagi), travelling all over India teaching his doctrines, acquiring followers, and extending the worship of Lord Krishna. 

Varanasi has been the meeting point of scholars from time immemorial Buddha, Adi Shnkara and other saints went to Varanasi and convertedgreta people to their faiths. Chaitanya also went to Kasi (Varanasi= Benares) and converted the chief pundit Prakashananda to his faith. 

Chaitanya was a great reformer; his success may be traced to his extraordinary fervour and his love for men. He preached utterly unselfish love to Vishnu/Krishna.

Worship from interested motives was not worship at all, but shop keeping, barter – he said.

The chief tenets of his faith are:

1.A disregard of caste distinctions

2.Emphasis was laid on mendicant life

3.     All must worship Krishna with a rosary made up of Tulsi beads

4.     He taught his followers to follow Radha, the beloved mistress of Krishna. The best form of devotion was that which Radha, as the beloved mistress of Krishna, felt for him.

5.They must exercise Bhakti (devotion) in Krishnain five ways:

Quite contemplation of the deity- Santi

The devotion of a servant to his master – Dasya

Friendship to him – Sakhya

Love to him resembling h love of children to their parents – Vatsalya

Passionate attachment of a girl to her lover or as the Gopis felt for Krishna -Madhurya.

He allowed widows remarriage and forebode the drinking of intoxicants and the eating of fish and meat.

He preached against animal sacrifices and Tantric practices.

He saw visions of Krishna and his attendant Gopis and terminated his life by walking into the sea in one of these ecstatic moments. Another version says that he entered the sanctum of Lord Jagannath and disappeared in a flash of light. We have similar disappearances in the lives of Tamil saints Sambandar, Vallalar and Andal.  Chaitanya before his disappearance gained many adherents and honours. The independent King of Orissa became his disciple. As Chaitanya left no issue, Aditya and Nithyananda, became the leaders of the new faith.

Source book: Wilkin’s Hindu Mythology

—Subham—

Tags- Sri Ramakrishna, on Chaitanya, third part, Wilkin’s Hindu Mythology

ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.


குவலயமெங்கும் குமரனைப் போற்றுவோம்

ஞான தீபம் ஏற்றுவோம்

திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

எல்லாம்வல்ல அறுமுகசிவனாகிய ஸ்ரீ முருகப்பெருமான் அனுக்கிரஹம் துணைக்கொண்டு,

 உலகநலனை வேண்டி முருகப்பெருமானுக்குகந்த கார்த்திகை தீபதினத்தைக்

கொண்டாடும் விதமாக

எதிர்வரும் குரோதி வருடம்

கார்த்திகை மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று

உலகளாவிய முருகன் அடியார்கள் கந்தப்பெருமானை சிந்தையில்கொண்டு சந்தக்கவிச் சக்ரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மற்றும்

கந்தரனுபூதி கந்தரலங்காரம் முதலியவற்றில்

ஏதேனும் ஓர் பாடலை பாடி வீடியோவாக அனுப்பினால்

எங்களது ஞானமயம் முகநூல் பக்கம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் 13/12/24

வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படும். பதிவுகளை

10/12/24ஆம் தேதிக்குள்

அனுப்பி வைக்கவும்.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.

இணையம் மூலம் நடைபெறும்

இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்

சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.

  வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.

சாற்றுவோம் திருப்புகழ் மாலை

போற்றுவோம் முருகனின் தாளை

வாசிப்போம் கந்தனின் நூலை

பூசிப்போம் குமரனின் வேலை

—SUBHAM—-