மாம்பழம், அத்தி,  நாவல், வாழைப்பழம்:  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post.13,231)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,231

Date uploaded in London – –   11 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் வரும் தாவரங்கள், பிராணிகளின் எண்ணிக்கை நமக்கு வியப்பை ஏற்படுத்தும். சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடாத்தியதால்  நாட்டையே  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்  என்று நானிலமாகப் பிரித்து வறண்டுபோன இட ங்களை பாலை என்றும் பகன்றனர். திருமூலரோ அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தாலும் இயற்கையின் மூலம் ஆன்மீகக் கருத்துக்களை பரப்பினார்

இதோ சில மரம் செடி கொடிகள் பழங்கள்:

தோட்டத்து மாம்பழம் தோண்டிக்குள் விழுந்துவிட்டது. அதனை நரி என்ன செய்யும்?

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரிஅழைத்து என்செய்யும்?

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக்

காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.–(திருமந்திரம் 2933

தொண்டி என்பது வந்து குடைந்த பழுத்த மாம்பழம்.

தோட்டம் என்பது நற்றவம் புரியும் இடம்

மாம்பழம் என்பது நிட்டை.

நிட்டை கலைந்து விட்டால் உள்ளம் அலைபாயும்; அதனால் பயன் கிடைக்காமல் போகும்.

இதற்கு உவமை; பழுத்த மாம்பழம் கீழே விழுந்ததைப்  பார்த்த நரிகள்  ஊளை இடுவதாகும் ; அவைகளுக்கு ஒரு பயனுமில்லலை  நமக்கு பரம்பொருளைக் காட்டிய குரு நம்மைக் கைவிட்டது போலத்தான் இது

ENGLISH TRANSLATION

2933: Body No More Counts When Jiva-Siva Union is Effected

When in the Garden,

The Fruit of Mango, ripened, dropped,

What matters if Jackals outside howl?

When the Primal One was by Kundalini Fire reached,

The fleshly body that led to it,  Forever left.

XXXXX

பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்

தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து

நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு

தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.

இது மூச்சுப் பயிற்சி தொடர்பான பாடல்; எண்ணத்தைக் கண்டபடி அலையவிடாமல் அடக்கி அகமுகப் படுத்தினால் மாம்பழம் கிடைக்கும்; மாம்பழம் – சிவக்கனி,

தேட்டற்ற – மேற்செல்லுதலற்ற.; அந்நிலம் – அந்தப் பேருறக்க இடமாகிய கொப்பூழ் (துரியத்தானம்).; நாட்டத்தை மீட்டு – புறஞ்செல்லவொட்டாது அகமுகப்படுத்தி.; நயனத்திருப்பார்க்கு – இடையறாது எண்ணியிருப்பார்க்கு.; தோட்டத்து – திருவருள் வெளியில்;. தூங்கல் – உண்டுறைதல்..(பொறிப்பட்ட – அடக்கப்பட்ட;.

மாம்பழம்: இனிமை பற்றி வந்த உவம ஆகுபெயர்..

ENGLISH TRANSLATION

624: Samadhi Leads to Siva

Within the locked body

Is trapped the life-breath;

Course it to the Land

That no desire knows;

They who fix their gaze on Goal True

Will reach the Mango Fruit

That in the garden there hangs.

XXXXX

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்

பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.  

சிறப்பான  ஒட்டு மாங்கனியை உரமிட்டு வளர்த்து நல்ல மாம்பழம் பழுத்துவிட்டது.அதைப்  பறித்துப் புதைத்துவிட்டு புளியம்பழத்தைப்  பறிக்க  மரமேறி கீழே விழுந்து காலையும் ஒடித்துக்கொள்ளுவது போன்றதே  அடுத்தவன் பெண்டாட்டியை நாடுவதாகும்

மாம்பழம் – தன்  மனைவி;  புளியம் பழம் – அடுத்தவன் மனைவி

காலை ஒடித்துக்கொள்ளுதல் என்பது சமுதாயத்தில் அவமானப்படுத்தல் என்ற பொருளது தருவதாகும் .

ENGLISH TRANSLATION

202: Seek Not the Sour Tamarind: Sweet Mango is at Hand

The sweet, ripe mango, tended with loving care,

They bury deep, deeming it unripe still;

And up the gnarled tamarind they climb for the sour fruit,

Only to break their limbs–they whom the senses beguile.

XXXX

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தரும் கனி

ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே.2846

இது மூச்சுப் பயிற்சி தொடர்பான பாடல்

நாவலின் கூழை= சரீரம், உடல். இதை நாவல் கனி என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதைக்  காண்க

போகின்ற பொய்யாகிய விடுத்தல் மூச்சும், புகுகின்ற பொய்யாகிய எடுத்தல் மூச்சும், ஓவாது பயிலப்படுதலால் வீணாகக்கழியும் நால்விரல் மூச்சு கூகின்ற வித்தெனப்படும்.

போகின்ற பொய் – இரேசக வாயு. புகுகின்ற பொய்வித்து – பூரக வாயு. கூகின்ற (பொய்) – கூடுகின்ற வாயு, அஃதாவது நான்கு விரற்கடையுள்ள வாயு. நாவலின் கூழை – சரீரம். பைங்கூழ் – இரு வினைப்பயன். ஐவர் – ஞானேந்திரியங்கள். வேகின்ற கூரை – சரீரம்.

ENGLISH TRANSLATION

2886: Sure Death, if Breath is not Controlled

The deceptive one that leaves,

The false seed that enters;

The Five who eat of the broth made

Of the ripe fruit of flourishing Jamun tree;

-All, all, went the burning roof’s way.

XXXXXX

1933. வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறுமந் நீள்வரை யொட்டிப்
பொறிக்கின்ற வாறுமப் பொல்லா வினையை
அறுக்கின்ற நால்வரும் அத்திப் பழமே.

(ப. இ.) திருவருள் வலத்தால் விந்துவினைக் கட்டுப்படுத்தும் முறை ஏற்படும். மனத்தை அடக்கிப் புலத்தைத் தன்வழிப்படுத்தும் வெற்றியும் உண்டாகும். அவ்வெற்றியினை மனத்தே நிறுத்தும் நிறையும் உண்டாகும். பொன்வரையாகிய நீண்டமலையை ஒத்த நடுநாடிவழியை ஒட்டிச் சேர்கின்ற முறைமையும் ஏற்படும். அக்காலத்துப் பிறப்பிற்கு வித்தாம் பொல்லாவினைகள் இரண்டும் அறுக்கப்பட்டொழியும். அப்பொழுது தொன்மையனாய்த் தீமேனியையுடைய நன்மையனாய் விளங்கும் ‘கற்றவர்களுண்ணும் கனியாம்’ சிவபெருமான் வந்தருள்புரிவன். அத் + தீ + பழம் என்பன அத்திப்பழம் என்றாயிற்று.

(அ. சி.) வறுக்கின்றவாறு – விந்துவைக் கட்டும் உபாயம். நிறுக்கின்ற – அடக்குகின்ற. நீள்வரை – வீணாத் தண்டு. பொறிக்கின்ற – சேர்க்கின்ற. அத்திப்பழம் – உடல்.

TO BE CONTINUED………….

TAGS -திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 8, மாம்பழம் அத்தி, நாவல் வாழைப்பழம்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-31 (Post.13,230)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,230

Date uploaded in London – –   11 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 31

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 31

xxxx

சூ

340. சுகவிரோசனம்

சூரத்து நிலாவிரையை இடித்து வஸ்திரகாயம் செய்து அதற்கு சரியிடை சுக்கு- அதிமதுரம்- ரோஜாமொக்கு- விளக்கெண்ணெயில் வறுத்த பிஞ்சு கடுக்காய்- இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து ,- சேர்த்து அரைப்பங்கு சீனி சேர்த்து புட்டியில் வைத்துக்கொண்டு– அரை ரூபாய் எடை எடுத்து வெந்நீரில் கலக்கியுண்டு வந்தால் மலக்கட்டு நீங்கும்- இரண்டொரு  விசை விரோசனம் ஆகும் .

XXXXX

வெட்பந்தணிய

சூரியகாந்தியை அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சூடு-உஷ்ணம் – இவைகளைத் தணிக்கும் .

சூரிய காந்தி- சந்திர காந்தி

இவைகளின் குணம்

சந்திராகாந்திக்குத் தழலெரிச்சல் நீர்க்கடுப்பும்

உந்திவலியாவு மொடுங்குங் காண் — சந்திவரும்

பாரியவாதம் பருகு நீரேற்றமும்  போம்

சூரிய காந்திக்குச் சொல்

XXXX

செ

சீழ் மூலக் கிஷாயம்

செந்நாயுருவி ஒருபிடி கற்றாஞ் சோறு ஒருபிடி சக்கரை இவைகளை கால் படி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இருவேளையுமாக  பத்து நாளருந்தி வர சாந்தியாகும் .

XXXX

நீரடைப்புக்கு சாந்தி

செம்பசளை — அதாவது  செகப்புப் பசளையை பச்சைப் பயறு கூட்டி  கிரமமாய் சமைத்து உண்டால் நீர்க்கட்டு உடையும் அரோசகம் தீரும் .

XXXX

இரத்த வெள்ளை பிரமியத்திற்கு

செம்பரத்தம் பூவை புளிப்புத் தயிர் விட்டரைத்து தயிரில் கலக்கி மிதமாயுண்டுவந்தால் இரத்த வெள்ளை பிரமியம் பெரும்பாடு இவை தீரும் .XXXX

கண் குளிர்ச்சிக்கு

செண்பகப் பூவை  வேண்டியவரையில் பசும்பாலில் போட்டுக்காய்ச்சியுண்டுவந்தால் மேகம் போம் .அஸ்திசுரம் வாதம்பித்தம் இவை தீரும். கண் குளிர்ச்சியுண்டாம் . தாது கட்டும். போகம் மிகுதியுண்டாம் .

XXXX 

கீல்வலி  காசத்திற்கு

செந்தொட்டி வேரை பால் விட்டரைத்து  பாலில் கலக்கியுண்டுவந்தால் கபம் கரப்பன் கீல்வலி  சுரம் சுவாசகாசம் வாதம் போகும் . பெண்கள் உண்டுவந்தால் கட்டுப்பட்ட சூதகத்தை உடைக்கும்.

XXXX

திரிதோஷ சாந்தி

செந்தாழப்பூவை  பாலில் அரைத்து உபயோகித்தாலும் சூரணித்து சீனி கூட்டியுண்டுவந்தாலும் கபம் காசம் நீரேற்றம் சகல தோஷமும்  தலை நோயும் தீரும்.

XXXX

348. குறை நோய்களுக்கு

செவ்வல்லிக் கொடியை சூரணித்து சமனிடை  திரிகடுகு சூரணம் கூட்டி யாவுக்கும் அரைப்பங்கு சீனி கூட்டி திருகடியளவு உண்டுவந்தால் கரப்பான் குட்ட உற்பத்தி குறை நோய் மூலரோகம் இவை தீரும்.

XXXX

கட்டிகள் உடைய

செகப்புக் கீரைத் தண்டு, அதாவது செங்கீரைத்தண்டுயிலையை அரைத்து கட்டிகள் பருவுகளுக்குத் தடவி வந்தால் பழுத்து உடையும்

XXXX

தேகக் குளிர்ச்சிக்கு

செகப்புக் கற்றாழைச் சோற்றை ஏ ழுதரம் சுத்தி செய்து   சீனி கூட்டி பிசைந்து உண்டு வந்தாலும் சிலாகித்து கல்நார் முதலிய பற்பங்கள் கூட்டி யுண்டுவந்தாலும் கூடிய சீக்கிரத்தில் உடம்பு குளிர்ச்சியுண்டாகும் . வெட்டை சூடு தணியும்.

XXXXX

அழல் தணிய

செங்கழுநீர்க் கிழங்கை சூரணித்தாவது அரைத்துப் பாலில் கலக்கியுண்டாவது உண்டுவந்தால் காசம் – ஸ்த்ரீகளால் வந்த தேக அழல் -திரிதோஷம் – பித்தாதிக்கம் – இவை தீரும்- கண் குளிர்ச்சியுண்டாகும் .

XXXX

அசாத்திய நோய்க்குத் தைலம்

செம்முள்ளி வேண்டியவரை கொண்டுவந்து சிதைத்துப்போட்டு எ ட்டுக்கொரு பங்காய் கிஷாயம் வைத்து சரியிடை நல்லெ ண்ணெய் விட்டு தாழை விழுது ஏலம் – கருஞ் சீரகம் – கார்க்கோலரிசி – வகைக்கு கொஞ்சம் எடுத்துக் பால் விட்டரைத்து கலக்கி தைல பதமாய்க் காய்ச்சி முழுகி வந்தால் க்ஷயம் – ஈளை மந்தார காசம் அண்டவாதம் இவை தீரும்.

XXXXX

353. கரப்பான் ரிணங்களுக்கு

செங்கத்தாரி அல்லது செஞ்சூரை மூலத்தைப் பாலில் அரைத்து பாலிற்  கொள்ள கிரந்தி – செவ்வாப்புக்கட்டி – செங்கரப்பா ன் – கருங்கரப்பான் — கொள்ளிக் கரப்பான்- கரப்பான்- பல விஷங்களும் தீரும் .

இதுவுமது

செங்கத்தாரிப்  பட்டையை அரைத்து உடம்பில் பூச மேற்படி வியாதிகள் யாவும் தீரும்.

XXXX

TAGS-

முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள், part-31,

பார்க்க வேண்டிய ஒரு ஹிந்தி திரைப்படம் ஆர்டிகிள் 370! (Post No.13,229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.229

Date uploaded in London – — 11 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பார்க்க வேண்டிய ஒரு ஹிந்தி திரைப்படம் ஆர்டிகிள் 370!

ச.நாகராஜன்

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக வெளி வந்து  அனைவரையும் ஈர்க்கும் ஒரு ஹிந்தி திரைப்படம் ஆர்டிகிள் 370!

2024 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட்ட இந்தப் படம் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நெட்ப்ளிக்ஸிலும் திரையிடப்படுகிறது.

2024 மார்ச் மாதத்தில் இதற்கு மத்ய பிரதேச அரசு வரிவிலக்கை அளித்தது.

ஆர்டிகிள் 370 என்பதைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை முதலில் படித்து விட்டால் இந்தப் படத்தின் அருமை தானே புரியும்.

இதே பிளாக்கில் வெளிவந்துள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளை முதலில் படித்து விட்டு கட்டுரையைத் தொடர வேண்டுகிறேன்.

2-11-23 12664  ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது?    

10-11-23 12693 30 நிமிடத்தில் மூட்டையைக் கட்டு! மோடிஜியின் அதிரடி நடவடிக்கை! 

திரைப்படத்திற்கு வருவோம்:

திரைப்படத்தை இயக்கியவர் : ஆதித்ய சுஹாஸ் ஜம்பலே

இணையாக இதை எழுத உதவியவர் ஆதித்ய தார், அர்ஜுன் தவான், மோனல் தக்கர்.

இதைத் தயாரித்தவர் ஜோதி தேஷ்பாண்டே. ஆதித்ய தார், லோகேஷ் தார்.

ஆர்டிகிள் 370ஐ அடியோடு நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்கெனப் பாடுபடுபவர் NIA  ஏஜன்ட் ஜுனி. இந்தப் பாத்திரத்தில் நடித்து நம்மை அசத்துகிறார் யமி கௌதம் தார். அவரது முகபாவங்கள் சோகம், வீரம், ஏக்கம், தைரியம், வெற்றி உள்ளிட்ட பல உணர்வுகளை நன்கு காண்பிக்கிரது.

பிரதம மந்திரி அலுவலகத்தில் பணியாற்றும் ஜாயின்ட் செக்ரட்டரி ராஜேஸ்வரி ஸ்வாமிநாதனாக வந்து அனைவரையும் கவர்பவர் ப்ரியா மணி. அமைதியான ஆனால் புத்திகூர்மையான பாத்திரம் – இயல்பாக நடித்திருக்கிறார் ப்ரியா மணி.

பிரதம மந்திரி நரேந்திர மோடியாக வந்து  சிறப்பாக நடித்திருப்பவர் அருண் கோவில். உள்துறை மந்திரி அமித் ஷாவாக வந்து நம்மை ஆச்சரியப்படுத்துபவர் கிரண் கர்மார்கர்.

இந்த 370 என்னும் அநியாய ஆர்டிகிளை நீக்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

காஷ்மீரின் தனி அந்தஸ்தைப் பாதுகாக்க கல்லெறியும் கூலிப் படை, பாரத தேசத்தை கூறுகளாக உடைக்க நினைக்கும் தீவிர வாதிகள், அரசியல் ஆதாயம் தேடும் லோக்கல் அரசியல்வாதிகள், எப்போதடா வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்க்கும் பாகிஸ்தான் இந்த அனைத்தையும் எதிர் கொண்டு ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் அரசியல் சட்ட அமைப்பின் படி நடந்து கொண்டு ஆர்டிகிள் ரத்து செய்யப்பட்டதே, அது எப்படி?

அது தான் திரைக்கதை!

இது நிஜத்தின் அடிப்படையிலான கதை. ஆனால் உண்மைக்கு மாறான சில பிழைகள் உள்ளனவென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு திரைப்படத்தில் உண்மைச் சம்பவம் காட்டப்படும் போது இப்படி ஓரிரு சம்பவங்கள் மாற்றப்படுவது இயல்பே.

வெறும் கூச்சலாகவே இதை நாம் கருதலாம்.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் முடிவில் சுமார்  ஒரு பில்லியனை-  நூறு கோடி ரூபாய் வசூலை படம் எட்டியுள்ளது ஒரு நல்ல சாதனை.

பாரதத்தின் முதல் பிரதம மந்திரியாக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு ஷேக் அப்துல்லாவுடன் கொண்டிருந்த நட்பு நமக்குப் புரிகிறது.

அது ஒரு நிரந்தர சிக்கலுக்கு வழி கோலியதா? கேள்வி நம்முள் எழுகிறது!

எப்படியாவது தனி அந்தஸ்தைக் கொண்டு தனி நாட்டு உரிமை, தனிக் கொடி என காஷ்மீரை அப்படியே ஒரு விவகாரமாக நிரந்தரமாக ஆக்க முடிவு செய்த சக்திகளையும் அதை முறியடிக்க நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் அனைவரும் அறியப்பட வேண்டியவை.

இதை நன்கு சித்தரித்துக் காட்டுகிறது இந்தப் படம்.

படத்தில் குறிப்பாக நம்மைக் கவர்பவர்கள் யமி கௌதம்,, ப்ரியா மணி,, அருண் கோவில் மற்றும் கிரண் கர்மார்கர்.

1958 உள்ளிட்ட ஆண்டுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட்டன என்பதை கண்டுபிடிப்பதே ஒரு சவாலாக அமைந்து விட்டதைப் படம் நன்கு சித்தரிக்கிறது.

அனைத்து தீய சக்திகளையும் முன்னதாகவே ஒடுக்கி வைத்து, இந்த ஆர்டிகிளை மோடி அரசு ரத்து செய்வது மனதைக் கவர்கிறது.

அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் படம் என்று சிலர் கூறுவதை ஏற்க முடியாது; உண்மையை உலகிற்குச் சொல்லும் படம் என்றே அனைவரும் இதைப் பார்ப்பர்.

படத்தை வரவேற்று அனைவரும் பார்க்க வேண்டும்.

அப்போது தான் காஷ்மீர் மூலம் எப்படிப்பட்ட தலைவலி இந்தியா மீது திணிக்கப்பட்டது, அது எப்படி அகற்றப்படுகிறது என்பதை உணரலாம்.

படத்தை உருவாக்கி, நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் – வாழ்த்துக்கள்!!!

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama -10 (Post No.13,228)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,228

Date uploaded in London – –   10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Rudra – – Word No 114 in VS

For history part, I take two names Siva and Rudra

In the last article, I gave details about Rudra Daman who gave us the first Sanskrit language inscription dated 150 CE. That is Gujarat.

xxxx

Sivah – Word No.600 in VS

Lord Siva’s different names appear in VS. but Siva is important in history because many kings like Siva Skanda Varman (Pallava), Sivasvati Satavahana, and early kings of Sri Lanka (BCE period) had Siva in their names.

xxxx

Srir Vijaya

V S palasruti/benevolent couplets has an important statement from Sanjaya. He says,

Where Krishna is, Where Arjuna holding bow is, there will be Victory, Glory, Justice , prosperity and Auspiciousness. He used the word Sri Vijaya. The mighty Indonesian empire took that name.

Srivijaya was a mighty  empire based on the island of Sumatra (in modern-day Indonesia) that influenced much of Southeast Asia. Srivijaya was an important centre for the expansion of Buddhism from the 7th to 11th century AD. Srivijaya was the first polity to dominate much of western Maritime Southeast Asia. They ruled for over 400 years.

xxxxx

Surya ad Chandra Dynasty

Suuryah – 883

Hindu Puranas have great historical details. Famous kings of India were divided as Surya Kula  (Solar Dynasty ) Chandra Kula (Lunar Dynasty). Surya and Chandra appears in VS with various names such as Surya, Aditya, Bhaskara et and Chandra as Chandra, Soma, Sasabindu etc

xxxx

Sisirah – 913

one who is the shelter to those who are burning in the three types of worldly fires—sufferings arising from material causes, psychological causes and spiritual causes.

My comments

It looks like Roman philosopher Cicero ‘s name is linked to this word.

Marcus Tullius Cicero (106–43 BCE) is best known to posterity as a prominent statesman and orator in the tumultuous period of the late Roman republic. As well as being a leading political actor of his time, he also wrote voluminously. Among his writings, around a dozen philosophical works have come down to us.

xxxx

Suurasenah – 704

one having an army of heroic people like hanuman

My comments

Sura sena dynasty is one of the oldest dynasties in India.

Wisdom library website says,

Sūrasena (सूरसेन) refers to one of the sixteen Mahājanapadas of the Majjhimadesa (Middle Country) of ancient India, as recorded in the Pāli Buddhist texts (detailing the geography of ancient India as it was known in to Early Buddhism).—In the Aṅguttara Nikāya, the Sūrasena country is mentioned as one of the sixteen Mahājanapadas. The country had its capital at Madhurā or Mathurā, which like Kausāmbī stood on the river Yamunā. The ancient Greek writers refer to the Sūrasena country as Sourasenoi and its capital as Methora.

xxxxx


Abhu- 437

One without birth.

My comments

Mount Adbhuta got corrupted and got the name Mount Abu . It is a hill resort in Rajasthan. There are famous Jain temples with lot of beautiful architecture and Devi temple. From Puranic days the place is referred to.

Maanadah – 748

One who has regard and beneficence towards devotees.

My comments

Manetho was an Egyptian priest, and he wrote the history of Greece in Greek language. Through him we know Egyptian and contemporary Sumerian kings.

xxxx

Samitnjayah- 362- one who is victorious in Samithi.

My comments

Samithi gave birth to the word Committee in English. C should be pronounced as S. This is Rig Vedic word where it meant Assembly. So the Mother of Parliament is in the Rig Veda. Another word for the same is Sabhaa. This Rig Vedic word gave birth to Tamil word Avai, now used for  State Assembly. It shows Rig Vedic people set up the two houses of Parliament.

xxxx

Purandarah – 335

One who destroys the cities of the enemies of Devas.

My comments

This epithet is used for both Siva and Vishnu. In the Vedas destroying forts is attributed to Indra. Lot of people misused the word to accuse Indra as the destroyer of Indus Valley cities. Nowadays that controversy is settled, because we knew the civilisation disappeared due to climatic changes.

xxxx

Manu -51; Swayyambhuuh –37

Both referred to Manu who appears in Rig Veda many times.

But according to Shankara the meaning is,

He who thinks; or He is called Manu because he manifests in the form of mantra and of Manu (Patriarch)

The story of Manu and Great Floods is in all religions. He was the one saved all creatures. The author of Manu Smrti is also considered a historical figure.

—Subham—

tags- More ( History ) Secrets , Vishnu Sahasranama -10

எட்டும் இரண்டும், காயத்ரீ மந்திரமும் ; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 7 (Post.13227)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,227

Date uploaded in London – –   10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மாணிக்கவாசகர் யாத்த திருவாசகத்திலும் திருமூலர் இயற்றிய திருமந்திரத்திலும் ஒரு சுவையான வரி எட்டும் இரண்டும்.இது பற்றி நிறைய விளக்கங்கள் உள்ளன. .8+2 என்றால்  பள்ளிக்கூட குழந்தைகளும் 10 என்று பதில் எழுதி விடும். ஆனால் நாம் நினைக்கும் 10 அல்ல இது. தமிழில் 8 என்பதை அ என்று எழுதுவார்கள்; 2 என்பதை உ  என்று எழுதுவார்கள் ;10 என்பதை ய என்று எழுதுவார்கள். இதை வைத்து உரைகாரர்கள் சொற் சிலம்பம்  ஆடுகிறார்கள் .

திருவாசகம்  திருச்சதகம்

   கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு

    இட்ட அன்பரொ டியாவருங் காணவே

    பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

    எட்டினோடிரண்டும் அறியேனையே.

பட்டிமண்டபம்-வாத சபை..

திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?

இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.

எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).

இன்னும் ஒரு உரை

பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீஎன்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவேநாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?  

 Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thoudidst to me, although I have come to know nothing of the scriptures.

பத்து என்பதற்கு தசகாரியம் என்றும் பொருள் சொல்லுவார்கள்

1. (Śaiva Philosophy) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz.,

tattuvarūpam, tattuvataricaṉam, tattuvacutti, āṉmarūpam, āṉmataricaṉam, āṉmacutti, civarūpam, civataricaṉam, civayōkam, civapōkam;

தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்மாநுபவ நிலைகள்.

xxxxx

இப்போது திருமூலர் சொல்லுவதைக் காண்போம்

985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி

நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து

ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்

தேடி அதனைத் தெளிந்தறி யீரே.

பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.

xxxxxx
986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி – சிவக் கொழுந்து – சிவலிங்கம்)

xxxxxxxx

“எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி

எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்

எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”- திருமந்திரம்

காயத்ரி மந்திரம் ஜபித்தால் மறுஜென்மம் கிடையாது

ஆறெழுத்தாவது ஆறு (1)மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 994.

994: Six Letters Aum are the Six Faiths and Savitri Mantra

The Six Letters are the Six religions,

The Six Letters multiplied by four,

Into four-and-twenty proliferated,

That the Letters of Savitri mantra art;

Savitri has the Letter First (that is Aum)

They whom separate meditate on it,

Have no more the birth-travail.

பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி – காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து – பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)

ஒப்பிடுக – திருவாசகம் – சிவபுராணம்- மாணிக்கவாசகர்

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

Xxxxxx

எட்டும் இரண்டும்,  காயத்ரீ மந்திரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 7 , திருமூலர்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 9 (Post.13,226)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,226

Date uploaded in London – –   10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART-9

F35. Family: Lauraceae 

126. Litsea ligustrina Hook. f.

126.லிஸ்டியா லீகுஸ்ட்ரீனா / காட்டு செண்பகம்

திருநெல்வேலி மலைவாழ் மக்கள், பாம்பு கடித்தால்  இதன் இலை, பட்டை, பூ  ஆகியவற்றைப் பொடி செய்து வெந்நீரில் கலக்கி மேலும் 3 தாவரங்களுடன் குடிக்கின்றனர் .

Powder of leaf, stem bark and flower along with leaves of Vitex altissima, Hygrophylla auriculata and Pavetta indica is mixed and heated with water and taken internally by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).

XXXX

F36. Family: Lecythidaceae 

127. Barringtonia racemosa (L.) Spreng.

குடும்பம் லெசிதிடேசி

பாரிங்டோ னியா ரேசிமோசா

வங்க தேச மக்கள் இதன்  இலைகளை பயன்படுத்துகின்றனர்.

XXXX

F37. Family: Loganiaceae 

128. Strychnos nux-vomica L.

குடும்பம்- லோகனியேசி

ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா

ஒரிஸ்ஸா மக்கள் விதைகளை நசுக்கி சாறாக்கி பயன்படுத்துகிறார்கள். வேரின் மசியலையும் பயன்படுத்துகிறார்கள்

XXXX

F38. Family: Malvaceae 

129. Althaea officinalis L.

குடும்பம் மால்வேசி

129.ஆல் தேயியா அஃபிசினாலிஸ்

பாகிஸ்தானில் விஷக்கடி சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள்

XXXX

130. Bombax ceiba L.

130.பாம்பக்ஸ் செய்பா / இலவு

கேரளத்தில் வயநாடு பழங்குடி மக்களும், மிஜோரம், உத்தரபிரதேச  மக்களும் இலவ மரத்தின் இலைகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறார்கள்

XXXX

131. Grewia gamblei J.R. Drumm.

131.கிரிவியா காம்பலை / கரடி கசவு

திருநெல்வேலி ஜில்லா மலைவாழ் மக்கள் இல்லை மரப்பட்டை சாற்றை வேறு சில தாவரங்களுடன் சேர்த்து 5 நாட்களுக்கு கொடுக்கிறார்கள் (பாம்பு கடித்தால்).

XXXX

132. Helicteres isora L.

132.ஹெலிக்ட்டரிஸ் ஐஸோரா

வேரின் கஷாயத்தை உத்தர பிரதேச சோன்பஹ்ரா வட்டார மக்கள் குடிக்கிறார்கள்.

XXXX

133. Malva sylvestris L.

மால்வா  சில்வெஸ்டரிஸ்

மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட்  வாட்டர் மக்கள், இதன் இலையின் சாற்றை எலுமிச்சம் பழம் சாற்றுடன் கலந்து கொடுக்கிறார்கள்.

XXXX

134. Sida acuta Burm. f.

சிடா அக்யூடா

ரேவா ஜில்லா பழங்குடி மக்கள் இலைகளை உபயோகிக்கிறார்கள்.

XXXX

135. Sida cordifolia L.

135.சிடா கார்டிபோலியா

நிலத்துத்தி .சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia)

கன்யாகுமரி ஜில்லா மக்களும் ராஜஸ்தான் ஆள்வார் ஜில்லா மக்களும் இலையின் சாற்றை பாம்பு கடித்த இடத்தில் தட வுகிறார்கள்

XXXX

136. Sida rhombifolia L.

136.சிடா ராம்பிபோலியா

மேகாலயா காசி, ஜயந்தியா பழங்குடி மக்கள் இலைகளையம் வேரையும் அரைத்து மிளகுடன் சேர்த்து  உபயோகிக்கிறார்கள் .

XXXXX

137. Urena lobata L. subsp. lobata (L.) Bross. Wal.

137.யுரீனா லோபாட்டா / கொடி துத்தி

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேரின் கஷாயத்தை வேறு இரண்டு தாவரங்களுடன் சேர்த்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

XXXX

F39. Family: Meliaceae 

138. Aglaia roxburghiana var. courtallensis Gamble

குடும்பம் – மெலியேசி

அக்லையா  ராக்ஸ்பார்கை யானா / சொக்கலை

நெல்லை  ஜில்லா மக்கள் இல்லை, விதைகளின் கஷாயத்தை வேறு சில தாவரங்களுடன் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

XXXX

.

139. Cipadessa baccifera (Roth.) Miq.

139.சிபடெக்ஸா பாக்சிபெரா / மரமல்லி

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இலையின் கஷாயத்தை வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து 41  நாட்களுக்கு குடிக்கிறார்கள்

XXXX

.140. Melia azadirach L. (Azadirachta indica A. Juss.)

140.மெலியா அசாதிராக்

மத்திய பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது

XXXXX

TO BE CONTINUED………………………………..

tags-  பாம்புக் கடி , 200  மூலிகை மருந்துகள் , பகுதி 9

ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்! (Post No.13,225)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.225

Date uploaded in London – — 10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் மே மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்!

ச. நாகராஜன் 

    நைமிசாரண்யத்தில் குழுமும் ரிஷிகளும் மகான்களும் தங்களை விட மூத்த ரிஷிகளை  அணுகி, “எங்கள் முன்னோர்களின் சரித்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பயபக்தியுடன் பவ்யமாகக் கேட்பது வழக்கம்.

அவர்களது சிரத்தையினால் மகிழும் மாபெரும் ரிஷிகள் அற்புதமான முன்னோர்களின் வரலாறுகளைக் கூறுவர்.

அதைக் கேட்கும் ரிஷிகள், எப்படிப்பட்ட உன்னதமான பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்று மனம் மகிழ்து உத்வேகம் பெற்று இன்னும் அதிகமதிகம் முன்னேறத் துடிப்பார்கள்.

ஆனால் இன்றைய கால கட்டத்திலோ நம் முன்னோர்கள் சரித்திரத்தைக் கேட்பாரும் இல்லை; அதைச் சொல்வாரும் இல்லை; ஏன், அதை அறிந்து சொல்லக் கூடியவரும் அவ்வளவாக இல்லை.

இதனால் தான் நமது சரித்திரம் சிதைந்து சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது.

உலகிற்கே ஆயுர்வேதம் என்ற அற்புத சிகிச்சை முறையை அளித்தவர்கள் நாம்.

அதற்கு ஆசாரியராக சரகர், சுஸ்ருதர் போன்ற மாபெரும் மேதைகள் இருந்தனர்.

இவர்களைப் பற்றி முழுவதுமாக யாருக்குத் தெரியும்? அவர்களின் சிறப்புகள் பற்றி யார் அறிவர்? அறிவதற்கு ஆசையுடன் இருப்பவர்கள் யார்?

சுஸ்ருதர் 122 (சிலர் 125 என்று  குற்ப்பிடுகின்றனர்) சஸ்த்ர சிகிச்சைக் கருவிகளை உருவாக்கி அனாயாசமாக உடலை பதமாக அறுத்து சிகிச்சை செய்ய வேண்டிய அங்கங்களுக்கு உரிய சிகிச்சை அளித்தவர் என்றால் நம்ப முடிகிறதா?

மூளை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக ஏராளமானோரின் உயிரைக் காத்த மாபெரும் வைத்தியர் அவர் என்பதை நமது வரலாறை சரியான முறையில் அணுகிப் பார்த்தால் தெரியவரும்.

இப்போது ஒரு கேள்வி எழும்?

அப்படியானால் அவர் கண்டுபிடித்த கருவிகள் எங்கே? அநத சிகிச்சை முறைகளை ஏன் யாரும் மேற்கொண்டு பின்பற்றவில்லை?

சரியான கேள்வி.

விடை  காண சரித்திரத்தை நாட வேண்டும். 

ஆயிரக்கணக்கான பேர்களை கலிங்கப் போரில் கொன்று குவித்த அசோக சக்கரவர்த்தி மனம் மாறி புத்த மதத்தை ஏற்றான். அஹிம்சையே பரம தர்மம் என்பதை உணர்ந்தான். கொலைகாரக் கருவிகளை அவன் தடை செய்தான். ஆனால் சுஸ்ருதர் மருத்துவத்திற்காகக் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை கருவிகளையும் சேர்த்து அவன் தடை செய்தான்.

அதைப் பின்பற்றுபவரையும் அவன் தடுத்து நிறுத்தினான்.

உயிர் காக்க உதவிய சஸ்த்ர சிகிச்சை கருவிகள் முற்றிலுமாக ஒழிந்து போயின.

பின்னால் ஏற்பட்ட முகலாய மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் கொஞ்ச நஞ்சமிருந்த மீதிக் கலைகள் பற்றிய  அறிவை  முற்றிலுமாக ஒழித்தன. அது இன்றைய நிலையில் கொண்டு விட்டிருக்கிறது!

மிஸௌரி கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் 2003-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒரு அபூர்வ உண்மையைக் கண்டறிந்தனர்.

8000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் பல்லைக் குடைந்து பல் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர் என்பதே அந்த உண்மை. படிமப் பாறைகளை ஆராய்ந்த அவர்கள் இதைக் கண்டுபிடித்துக் கூறினர்.

இப்படி மருத்துவத் துறையில் சிகரம் ஏறிய ஒரு நாடு இந்தியா என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சுஸ்ருத சம்ஹிதா 

சுஸ்ருதர் கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 

அவர் எழுதிய நூல் : சுஸ்ருத சம்ஹிதா. 

இதில் 186 அத்தியாயங்கள் உள்ளன.

1120 வியாதிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.

700 மூலிகைகள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தாது வகைகளில் 64  தயாரிப்புகளும் மிருகங்களின் அடிப்படையில் 57 தயாரிப்புகளும் விளக்கப்படுகின்றன.

வியாதி வந்து சிகிச்சை தருவதை விட வியாதி வராமல் இருக்க வழி வகைகளைக் கூறுவதே முக்கியம் என்பது சுஸ்ருதர் கருத்து.

1.சூத்ர ஸ்தானம் 2. நிதான ஸ்தானம் 3. சரீர ஸ்தானம் 4. சிகித்ஸா ஸ்தானம் 5. கல்ப ஸ்தானம் 6. உத்தர ஸ்தானம்

என்று இப்படி ஆறு பிரிவுகளைக் கொண்டது இந்த நூல் 

ஆஹர்யம் – உடலிலிருந்து அழுகிய பகுதிகளைப் பிரித்தெடுத்தல், பேத்யம் – துண்டித்தல், சேத்யம் – ஆழமாகக் கிழித்தல், எஸ்யம் – கண்டறிதல், லெக்ய – சுரண்டுதல், சிவ்யம் – தையல் போடுதல், வேத்யம் – சிறு துவாரம் இடுதல், விஷ்ரவனியம் – திரவங்களைப் பிரித்தெடுத்தல், என இப்படி பல்வேறு சிகிச்சை முறைகளை சுஸ்ருதர் நுட்பமாகக் குறிப்பிடுகிறார்.

அகுப்ரஷர்

சுஸ்ருதர் அகுப்ரஷர் பற்றியும் குறிப்பிடுகிறார்.

சூஸோ வேத சிகித்ஸா என்று இது குறிப்பிடப்படுகிறது.

சரீர ஸ்தானம் பிரிவில் 6 மற்றும் 8-ம் அத்தியாயங்களில் இது விவரிக்கப்படுகிறது.

ஆறாவது அத்தியாயத்தில் நாளங்கள் மற்றும் அது இருக்கும் இடங்கள் பற்றி நுட்பமாக விளக்கப்படுகிறது. இதை நன்கு அறிந்தால் தான் சிகிச்சை வெற்றிகரமாக இருக்கும் என்பதால் இதில் உள்ள 34 அத்தியாயங்களையும் ஒருவர் முறைப்படி படித்து அனுபவபூர்வமாக தேர்ந்தால் தான் சிறந்த வைத்தியராக ஆக முடியும்.

7வது அத்தியாயத்தில் 12 பகுதிகள் உள்ளன.  இதில் நாளங்கள் உள்ள இடங்கள் கூறப்படுகின்றன. தமனிகள் எந்த நாளங்கள் வழியே செல்கின்றன என்பது உள்ளிட்ட நுண்ணிய விவரங்கள் தரப்படுவதோடு எந்த நாளங்கள்  வாயு, பித்தம், கபம் ஆகியவற்றை ஏந்திச் செல்கின்றன என்பதும் விளக்கப்படுகிறது!

எட்டாவது அத்தியாயத்தில் இப்படிப்பட்ட சிகிச்சைமுறையில் தேர்ச்சியைச் சிலரே பெறமுடியும் என்பதும் எல்லோரும் சகட்டுமேனிக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

எந்த பருவத்தில் எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

45 விதமான வியாதிகளுக்கு ஊசியின் அளவும் வடிவமும் தனித்தனியே இருக்க வேண்டும்.

இவர்களுக்கான பத்திய உணவு தனி.

சீனாவில்  அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாக அகு ப்ரஷர் ஆனதும் அது பிரபலமாக ஆரம்பித்தது.

ஆனால் அதன் ஆரம்பம் பாரதமே என்பது சுஸ்ருத ஸம்ஹிதையால் தெரிய வருகிறது.

பழைய கலைகளை அதன் ,மகோன்னதமான ஸ்தானத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் அதற்கு ஆதாரமாக அமைவது ஆயுர்வேதமாகும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் எல்லாக் கலைகளும் தானே வரும் இல்லையா, சிந்திப்போம், செயல்படுவோம்!

***

https://archive.org/details/sushruta-samhita

என்ற தளத்திலிருந்து இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருத நூல் இது. மொத்த பக்கங்கள் 500.

https://indianculture.gov.in/rarebooks/english-translation-sushruta-samhita-based-original-sanskrit-text-vol-i-sutrasthanam

என்ற தளத்திலிருந்து இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் தொகுதி இது..

Kaviraj Kunja Lal அவர்களால் எடிட் செய்யப்பட்ட நூல் இது. 332 பக்கங்கள் கொண்ட நூல் இது. இதில் சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை கருவிகளின் படங்களையும் பார்த்து பிரமிக்கலாம்.

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama -9 (Post No.13,224)

Mitanni/ Vedic Civilization in Middle East in 1600 BCE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,224

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

The biggest blow to Max Muller (1823-1900) gang and Dravidian gang came from the discovery of Sanskrit words, names of Vedic Gods and Vishnu Sahsranama name in Turkey. They were dated 1400 to 1600 BCE. Since they were archaeological objects (cuneiform tablets) no one in the world denied them; but they completely hid them. No white skinned fellow mentioned it in any Vedic article. Only Kanchi Paramacharya (1894-1994) mentioned it in his 1950 Madras lectures as soon as the German discovery appeared in News Papers. The Germans discovered it only after many famous Indologists death.

Since this blog has full details in several articles about Mitannian (Turkey-Syria) civilization, I will briefly mention it.

1.Bogazkoy inscription in Turkey

2.Kikkuli’s horse manual in Turkey

3.Tushrata Letters ( Amarna Letters) in Egypt

Vedic Gods are mentioned in the inscription in the same order as we see it in Rig Veda. Asko Parpola, top most Indus Valley researcher, has pointed it out. His book Deciphering the Indus Script is the best book on the subject ( I have almost memorised the book by reading it many times).

The reason for mentioning it here is the following word in Vishnu Sahasranama (VS)

xxxx

Pratardanah- Word No.59 in VS

Shankara says, destroyer of all at the time of cosmic dissolution.

My comments

This is one of the names in Mitannian civilization along with Dasaratha.

MaittaEponymous founder, maybe mythical
Kirtac. 1540 BCFirst known king, may be also legendary
Shuttarna ISon of Kirta based on Alalakh seal[89]
Parattarna Ic. 1500 BCSon of Kirta, contemporary of Idrimi of Alalakh, Pilliya of Kizzuwatna, Zidanta II of Hatti
Parshatatarc. 1485 BCSon of Parattarna I
Shaushtatarc. 1465 BCContemporary of Sinia and Qis-Addu in Terqa; Tudhaliya I of Hatti; Niqmepa of Alalakh, sacks Ashur
Parattarna IIc. 1435 BCContemporary of Qis-Addu in Terqa
Shaitarnac. 1425 BCContemporay of Qis-Addu in Terqa
Artatama Ic. 1400 BCTreaty with pharaoh Thutmose IV, contemporary of pharaoh Amenhotep II
Shuttarna IIc. 1380 BCDaughter marries pharaoh Amenhotep III in his year 10
Artashumarac. 1360 BCSon of Shutarna II, brief reign
Tushrattac. 1358 BCContemporary of Suppiluliuma I of the Hittites, and pharaohs Amenhotep III and Amenhotep IVAmarna letters
Artatama IIc. 1335 BCTreaty with Suppiluliuma I of the Hittites, contemporary of Ashur-uballit I in Assyria
Shuttarna IIIc. 1330 BCContemporary of Suppiluliuma I of the Hittites
Shattiwazac. 1330 BCVassal of the Hittite Empire, also known as Kurtiwaza or Mattiwaza
Shattuarac. 1305 BCVassal of Assyria under Adad-nirari I
Wasashattac. 1285 BCSon of Shattuara
Shattuara IIc. 1265 BCLast king of Mitanni before Assyrian conquest

All Sanskrit names!! Pratardana is written as Parattarna 1500 BCE and Dasaratha is written as Tushratta 1358 BCE.

Sri Lankan, Malaysian and Mauritius people spell their names only like the above list. My friends in these countries write Puvana (Bhuvana), Tamayanti (Damayanti), Tasrata (Dasarathan), Rasendran (Rajendran), Kiruttinan (Krisna). Even today millions of Sanskrit names are written this way. In South East Asian countries we need dictionary to identify even Ramayana, Mahabharata characters. They distorted Hindu names beyond recognition.

In Tamil we have inscriptions staring from 3rd century BCE only. That too one line or two line inscriptions with Prakrit names

Cyliner Seal from Vedic Civilization in Iraq, Syria, Turkey etc.

xxxx

Vardhamaanah- 262

one who multiplies in the form of the universe, according to Shankara.

My comments

Jain Tirtankara Vartamana Mahavira lived around 600 BCE and the most revered of all the 24 Tirtankaras. He was the 24th one. In India only two people are called Mahavir in religion- Anjaneya and Mahavira.

xxxx

Viirah – 643

One who is courageous. Tamils use it very often.

Many South Indian kings used this word in their names.

e.g, Veera Pandya Kattabomman, Veera Pandyan, Veera Vallalan and many more.

xxxx

Aadityah- 563

One who was born of Aditi in His incarnation as Vaamana, according to Shankara.

My comments

Aaditya means sun. Many Choza kings had this name. (E.g. Aditya Karikalan)

xxxx

Sumukah- 456

One with a pleasant face. Shankara gives three quotes from Vishnu Purana, Valmiki Ramayana and Svatesvatara Upanishad.

My comments

We know this is one of the 16 popular names of Lord Ganesh as well. But Manu Smritis gives us a list of bad kings and Sumuka is one of them. Other bad kings’ names are identifiable in our Puranas, but Sumuka remains a mystery till this day. Neither history books nor Puranas have this king!

So there is lot of work for Indiana Jones!

xxxxx

Still we have more words from History  :  Manetho, Sammata, Samitnjayah, Purandarah ,Abu , Chaturdharmstraya , Sargon , Sri Vijaya . Solar- Lunar Dynasty, Manu , Madhwaya ,Garuddwaja

TO BE CONTINUED…………………….

Tags- More History Secrets , Vishnu Sahasranama- 9 , Mitanni, Dasaratha, Pratardana

சூ மந்திரக் காளி வசியம்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 6 (Post No.13,223)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,223

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பதினெட்டு  சித்தர்கள் பட்டியலில் திருமூலரின் பெயரையும் காணலாம். ஆனால் ஏனைய 17 சித்தர்களுக்கும் திருமூலருக்கும் பெருத்தவேறுபாடு இருப்பதை சித்தர் பாடல்களைப் படித்தோர் அறிவர். கிரியைகளை, சடங்குகளை உடைத்தெறிவது சித்தர்களின் பொதுவான போக்கு .

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்ற சிவவாக்கியர் பாடலைக் காட்டி பல அரைவேக்காடுகள் கோவில் வேண்டாம், குளம் வேண்டாம் என்பர்; திருமூலரோ ஏராளமான சடங்குகளை ஆதரிக்கிறார். அதில் ஒன்று மந்திர தந்திர சக்கரங்கள். அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்களையும் சொல்கிறார். ஏனைய சித்தர்கள் ஒரு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்டினால் இவரோ ஒரு ‘என்சைக்ளோப்பீடியா’வையே நம் கையில் கொடுத்து இருக்கிறார்.

ஒவ்வொரு பாட்டையும் எடுத்துக்கொண்டு ‘வெப்சைட்’டுக்குப் போனால் பழைய உரைகாரர்களுக்கும் புதிய உரைகாரர்களுக்கும் வித்தியாசம் – பெருத்த வேறுபாடு — இருப்பதைக் காணலாம்.

நான் சுலபமாக எட்டு கோடு போடு; குறுக்கே எட்டு கோடு போடு; அதை எழுது இதை எழுது ; அப்போது என்ன நடக்கிறது பார் என்று எழுதிக்கொண்டே போகலாம்.; இப்படித்தான் லண்டன் சாமிநாதன் உள்பட அனைவரும் எழுதுகின்றனர். அவை ஏட்டுச் சுரைக்காய்கள். யார் ஒருவர் அதை பின்பற்றி சித்தி அடைந்திருக்கிறார்களோ அவர்கள் சொல்லுவதைத்தான்  நம்பவேண்டும் . தற்காலத்தில் , திருமந்திர உரைகாரர்கள் யாரும்,  அப்படி பக்குவ நிலை எய்தியதாக நான் நம்பவில்லை; ஆயினும் திருமந்திரத்தில் பல ரகசியங்கள் இருக்கின்றன; படியுங்கள், பாதுகாருங்கள் என்று சொல்லுவதில் தவறில்லை .

ஆதி சங்கரர் போல சகல கலா வல்லவர் ஒருவர் அவதரிக்கையில், அற்புதங்கள் நிகழும்போது, இந்தப்பாடல்களின் பொருள் நமக்கு விளங்கும் ; அவர் நாடெங்கும் சென்றதும் உக்கிர தேவதைகளின் சக்தியைக் குறைக்க தாடங்கம் பிரதிஷ்டை செய்ததும் காசியில் மக்களை ஈர்க்க ஜன ஆகர்ஷண சக்கரத்தையும் திருப்பதியில் பணத்தை ஈர்க்க  தன ஆகர்ஷண சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்ததையும் நாம் அறிவோம் ; திருமூலரும் அதிசய சித்திகளை அடைய சில வழிமுறைகளை சொல்கிறார். இவைகளை யாராவது செயல் முறையில் செய்து காட்டும்வரை பாடல்களுக்கு ஓரளவு தான்மதிப்பு ; அது பாடல்களின் குறை இல்லை ; அதை பயிலுவோரின் குறைபாடே.

இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்

தம்பனம்

எந்த ஒரு பொருளையும் , ஆளையும் ஸ்தம்பிக்கச் செய்தல்; அதாவது இயங்க முடியாமல்  செய்யும் வித்தை
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் புசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 997.

997: Sthambana Chakra

On fresh plank of a peepul tree wood

Figure out Five Letter Mantra with “Ma” to begin–Ma, Si, Va, Ya, Na

In similar fashion inscribe it on leaf of palm

Smear it with wax

And warm it gently over fire,

Center thy meditation on it,

Strong the concentration thou attain

Thine enemies rendered actionless, sure (Sthambana*).

பொருள் : நிலையான அரசம் பலகைமேல் நேராகப் பொருத்த மகரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையில் அவ்வாறே அடைத்து சாதகன் பொருந்தும் தேன் மெழுகை ஓலையுள் பூசிச் சுடரில் சிறிது வெதுப்பத் தம்பன கன்மமாகும். (தம்பனம் – கட்டுதல் அரசமரம் மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாகும்.)

xxxxx

மோகனம்

mōkaṉam  .Bewildering; confusing; மயக்கமுண்டாக்குகை. Magic art of fascinating aperson, one of aṣṭa-karumam, q.v., also one ofaṟupattu-nālu-kalai, q.v.; அஷ்டகருமத்துள் ஒன்றும் அறுபத்துநாலு  கலையுள் ஒன்றுமான பிறரை  மயங்கச்செய்யும் வித்தை.; ஒருவரை வசப்படுத்தும் வித்தை
கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 998.

998: Mohana Chakra

On a plank of Konrai tree wood

At the lower end

Inscribe “Na” and “Si”

And on palm leaf write letter “Ma”

Smear it with ingredients five,

(Ginger, Pepper, mustard, garlic and asofetida)

Bury it head downward in the hearth’s fire

You shall attain powers of Mohana* (Fascination).

பொருள் : கொன்றை மரப் பலகையைக் கருவியாகக் கொண்டு யமன் திசையாகிய தெற்குத் திசையில் அப் பலகையை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழித்தற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் மகாரம் மட்டும் இட்டு மறைப்பற்ற ஐங்காயத்தைப் பூசி அடுப்பில் தலை கீழாகப் புதைத்தால் மோகன சத்தியுண்டாம். (நசி என்றது மரண மந்திரம். ஐங்காயம் – சுக்கு, மிளகு, கடுகு, உள்ளி, காயம் ஆகிய ஐந்து. மோகனம் – மயங்க வைத்தல்)

xxxxx

உச்சாடனம்

இருப்பிடத்தைவிட்டு விரட்டும்  தொழில்.2. Expelling an evil spirit from a person orplace, exorcism, one of aṟupattu-nālu-kalai;  பேயோட்டுகை. 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury ; பேய்  முதலியவற்றை ஏவுகை
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 999.

999: Uchchadana Chakra

On a plank of portia tree wood

At the north-west corner

Where Aiyanar his temple has,

And on a dark leaden-plate smear poison,

Inscribe mark of Bindu. (dot)

And surround it by “Om”

Then concentrate on the Mantra,

Uchchadana* (the Science of Exorcism) will be yours.

பொருள் : அவ்விடம் வடமேற்குப் புலமாகிய வாயுதிக்கில் ஐயனார் கோயிலில் தொழும் படியாகப் புரசப் பலகையில் காரீயத் தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் சூழ உச்சாடனத்திற்கு இடவும். (உச்சாடனம் – ஏவுதல்; பேயோட்டுதல்.)

xxxxx

ஒருவனை மந்திரத்தாலிறக்கச்செய்யும் வித்தை;  மரணம்
மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. 1000

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 1001.

1000: Marana Chakra

Smear a green palm leaf with ingredients five stated

In a triangle Chakra in the cremation ground

Bury it at noon in southeast corner,

Where God Agni stands,

That the Mantric device for Marana*,

(Death) spell for enemies to destroy.

***********

1001 : Vasiya* Chakra

Smear palm leaf with yellow arsenic

Inscribe on it letters “A” and “U”

Place it on a bilva plank,

For a receptacle to serve,

And chant the Mantra eighty thousand times.

பொருள் : நண்பகற் போதில் ஒளி உடைத்தாகிய தென் கிழக்கு மூலையில் பச்சையான பனைஓலையில் ஐங்காயத்தைத் தடவி முச்சந்தியிலோ சுடுகாட்டிலோ புதைத்து வைத்திட பகையை அழிக்கும் மாரணமாக. அஃது அமையும் (மாரணம் – ஏவலால் செய்யும் கொலை, வசியம்)

973ல் ஓதியபடி மகர முதலாக வரைந்த ஐந்தெ ழுத்து ஏட்டின் மேல் அரிதாரமாகிய மருந்து பூசி , அதன்மேல் அகார உகாரங்களை எழுதி, வில்வப் பலகையின் மேலும்  மகர முறையாக வரைந்து முன்னெழுத்திய ஏட்டையும் அதன் மேல் வைத்து வசியமென்னும் கவர்ச்சி அமைத்தற்பொருட்டு, அம்மந்திரத்தினை எண்பதாயிரம் திருவுரு ஏற்றல் வேண்டும் ஜெபம் செய்தல் = திருவுரு ஏற்றல்

xxxxx

ஆகர்ஷணம்- தன முன் நில்லாதவரை தனக்கு முன்னே கொண்டுவரச் செய்யும் வித்தை  magic art of summoning an absent person into one’s presence, one of aṣṭa-karumam,

ஆகர்ஷணம்
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 1002.

1002: Akarshana Chakra

Smear palm leaf with silver powder on a Thursday

Inscribe letter “U”,

Place it on the plank of white Jamun tree

Face Westward,

And Chant Pranava mantra (“Aum”) eight thousand times;

This the way to attain

Power of bringing things and people unto you–Akarshana*.

ஓலையில் யகார முதலாக மாறி அமைத்து , ஐந்தெழுத்தினையும் எழுதி , வியாழக் கிழமையில் அவ்வோலையில் வெண்ணிறமான பொடியைப் பூசி வெண் நாவல் மரப் பலகையில் அதை வைத்து மேற்கு பார்த்து அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி 8000 தடவை உரு ஏற்றல் வேண்டும்.

To be continued………………………….

xxxxx

Tags-திருமந்திரம், திருமூலர் , சூ மந்திரக் காளி வசியம் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 6

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 30 (Post No.13,222)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,222

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 29

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 30

xxxx

சீ

326. வெட்டுக் காயத்திற்கு

சீதா செங்கழுநீர் இலையை அரைத்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டினால் இரண்டு மூன்று கட்டில் ஆறிவிடும்.

XXXXX

மேக ரோகிகளுக்கு உண்டாகும்

தாக ரோகத்தத்திற்கு

சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணீரில் காய்ச்சி,  வேண்டிய போது தாகத்திற்கு கொடுத்துவர வேண்டியது.

XXXX

பித்தத்திற்கு

சீரகம்- சுக்கு- நெல்லி வற்றல் -ஏலம் – இவை சமன் கொண்டிடித்து இதற்குப் பாதி சீனி கலந்து திருகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர   நிவர்த்தியாகும்

xxxx

மந்த வாய்வுக்கு

சீரகம்-ஏலம் –  பச்சைக் கற்பூரம் — ஓர் நிறையாய்  சூரணித்து சரி பங்கு சீனி சக்கரை கூட்டி திருகடியளவு அந்திசந்தி கொடுத்துவரத்  தீரும் .

xxxx

குளிர் சுரத்திற்கு கிஷாயம்

சீந்தில் — நிலவேம்பு – சிறு காஞ்சொரி – மல்லி – வட்டத்திருப்பி- விலா மிச்சம் வேர் — வேலிப்பருத்தி  பற்பாடகம் – சுக்கு – வகைக்கு  ஒரு பலம் இடித்துப் போட்டு  தண்ணீர் விட்டு அரைப்படியாகக் காய்ச்சி  ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.

இதுவுமது

சீரகமும் குருந்தொட்டி வேரும் ஓர் நிறையாய் எடுத்து கிஷாயம் செய்து ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.

xxxx 

உடம்பு நோயும் காய்ச்சலுக்கும்

சீதேவிப் பூண்டை இடித்துப் புட்டவித்து சாறு பிழிந்து கடுகு ரோகணியை அரைத்துக் கலக்கி வெள்ளாட்டுப் பாலுடன் கலந்து கொடுக்க நிவர்த்தியாகும்.

xxxx

படர்தாமரைக்கு

சீமை அகத்தியிலையை அரைத்து தேங்காயெண்ணெயில் குழைத்து படர்தாமரை — இடுப்பரணை  முதலிய படைகளுக்குத் தேய்த்தால் நிவர்த்தியாகும்.

xxxx

சு

மூல வாய்வுக்கு சாந்தி

சுக்கையிடித்து வஸ்திரகாயம் செய்து, அப்போது கறந்த பால் அரைக்கால் படியில் திருகடிப்பிரமாணம்  சுக்குத் தூள் போட்டு சாப்பிடவும். இப்படி சில நாள் சாப்பிட்டால் மூல வாய்வு உருத்தி வாய்வு தீரும்  பசியுண்டாம் .

xxxx

வாய்வு முதலிய சில்லறை விடம் தீர

சுடுதுரட்டி மூலத்தை பாலில் அரைத்து  அருந்தி வந்தால் சில்லறை விடங்கள் புடை கிரந்தி  கரப்பான் இவை தீரும் .

xxxx

336. நீர்க்கட்டு உடைக்க

சுறா மீன் தலையிருக்கிற இரண்டு கல்லையெடுத்து உலர்த்தி இளம் வெந்நீரில் உரைத்துக்கொடுக்க உடனே நீர் கட்டு உடையும்.

xxxxx

பிரமியத்திற்குப் பொதுப்பிரயோகம்

சுண்ணாம்பு தெளிவு , தண்ணீர் , நல்லெண்ணெய் — வகைக்குப்படி மாகாணி ஒன்றாய்க் கலந்துகொடுக்கத் தீரும் .

xxxxx

இரத்த மூலத்திற்கு

சுருள் பட்டையைச் சூரணித்து தேனில் குழைத்து இருபோது தின்று வந்தால் இரத்த மூலம் சாந்தியாகும் .

xxxx

சுண்டைக்காய் குணம்

வெண்பா

நெஞ்சிற் கபம் போம் நிரை கிருமி நோயும் போம்

விஞ்சுவாதத்தின் விளைவும் போம் – வஞ்சியரே

வாயைக் கசப்பிக்கும் மாமலையிலுள்ள சுண்டைக்காய்

காயைச் சுவைய்ப்பவர்க்கு காண் .

*************

சுண்டைக்காய்வற்றல் உபயோகம்

வெண்பா

பித்தவரோசகம் போம் பேராப்புழுச்சாகும்

உற்ற கிறாணியும் போம் — உட்பசியாம்

பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்

சுண்டைக்காய்  வற்றலுண்ணச் சொல்

தொடரும் ………………………………….

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 30, சுண்டைக்காய், சீந்தில் கொடி