Cuckoo/Koel Bird/ Kokila in Hinduism (Post No.13,018)

cuckoo and crow

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,018

Date uploaded in London – –   18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindus give utmost respect to all birds and animals and trees and creepers. Koel (Kuyil) குயில் is a Tamil word used in most of the languages in India or its Tamil sound cuckoo is used. It will be interesting to do research on the words Koel and Kokila. They are onomatopoeic words (sound based words).

xxxx

The Sanskrit word for Koel is Kokila, which is a popular feminine name used by Indian women (My aunt’s name in Mayuram and another aunt in Nagpur was Kokila). From Kalidasa to Bharatiyar , all famous poets sang about it’s beautiful voice.

xxxx

Great Saivite saint Manikka vasagar used Koel bird to pray to god Shiva in Tiruvasagam under the title Kuyil Pathu குயில் பத்து .

xxxx

Greatest of the Modern Tamil Poets , Subrahmanya Bharati (bhaarathiyaar) composed a whole poem with the title Kuyil Paattu குயில் பாட்டு . The theme of the song is Love.

Kuyil’s Song (Kuyil Pattu) குயில் பாட்டு is a narrative poem in nine parts, totalling about 750 lines. It may be called a fable, because the principal character is a Kuyil and two of the other characters are a monkey and a bull. It may be called a dream-sequence, for some of the events partake of the tantalising quality of dreams. A fable and a dream poem, it is also a sort of vision seen or imagined by the poet.

The framework of the story is rather simple. It is neither tangled nor complex. The story which is narrated is in keeping with the traditions and beliefs of our race. The transmigration of souls, the relentless pursuit of love down the ages, the overwhelming power of fate which shapes even the course of love, all this is traditional and having this as an effective scaffolding, he has raised an immortal palace of art.

Bharati’s “Kuyil Pattu” discloses the splendour of human love with a keen sustained undercurrent of allegory; the material love with a spiritual glow pervades the entire poem in an exalted diction; simple words, hurled by the poet’s creative spell, speak lofty truths from height of emotional excellence, and candour.

Music, O sweet music;
And when music fails,
And when music fails,
Only cacophony.
Beat the rhythm, beat the rhythm:
And when rhythm fails,
Mere confusion.
Divine the poetic voice;
But when poetry fails,
Only the dross of the earth. (used from Wisdom Library website)

xxxx

Andal used Koel like Manikavasagar in her divine poem Nachiyar Tirumozi (நாச்சியார் திருமொழி).  It has 143 verses which is part of the 4000 divine hymns of Nalayira Divya Prabandham.  Kuyil Pattu or cuckoo’s song forms the fifth decad where Andal requests cuckoo to sing in praise of Krishna.

xxxx

Bharatidasan was a great disciple of Bharati. He started a magazine called Kuyil/ Cuckoo . He imitated Bharati in many of his poems; His love for Tamil language is well known; but he was misguided by anti Hindu, anti India and anti god bad elements of Dravidian movement. Following it, he advocated for separate Tamil Nadu from India. Because of his Anti India writings his Kuyil magazine was banned.

xxx

In Subhashitas

Sanskrit has another word for Cuckoo – Pikah.

There is a popular Subhasita in the language

काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।

वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।

It mocks at imitations.

Crow is black, cuckoo is black… what’s the difference between the two. Come spring, a crow is a crow, a cuckoo is a cuckoo

.

In appearance, a crow and a cuckoo aren’t very different. A crow is black and so is a cuckoo. How can we tell the difference? It doesn’t matter… Come spring, the difference automatically becomes evident! While a cuckoo sings melodiously, a crow, well…, crows.  Lot of people dress like VIPs, pretend like VIPs; dull wits pretend like scholars; once they open their mouths people will find their true nature .

This Subhasita is based on a nature’s wonder. Cuckoo lays its eggs in Crow’s nest and the innocent crow takes care of them. By the time the difference is noted, cuckoos fly away. Cuckoos never build its own nests. It is a kind of cheating. This behaviour is used as similes in literature.

xxxx

In Puranas

In  Siva Purana

Wisdom Library adds more points from Hindu scriptures:  Kokila (कोकिल) refers to “cuckoos”, according to the Śivapurāṇa 2.2.22. Accordingly as Śiva said to Sitā:—“[…] O my beloved, beautiful woman, clouds will not reach the place where I have to make an abode for you. […] O beloved, do you wish to go to the Himālayas, the king of mountains wherein there is spring for ever, which abounds in hedges and groves where the cuckoos (kokila) coo in diverse pleasing ways and which contains many lakes filled with cool water and hundreds of lotuses”. Chandas (prosody, study of Sanskrit metres)

xxxx

Kokila in Chandas /Prosody

Kokila (कोकिल) is the name of a catuṣpadi metre (as popularly employed by the Apabhraṃśa bards), as discussed in books such as the Chandonuśāsana, Kavidarpaṇa, Vṛttajātisamuccaya and Svayambhūchandas.—Kokila has 25 mātrās in each of their four lines, divided into groups of 4, 5, 5, 4, 3 (IS) mātrās.

xxxx

Cuckoo meat for departed souls

Dharmashastra (religious law)

Kokila (कोकिल) refers to “coeal”. The word is used throughout Dharmaśāstra literature such as the Manusmṛti. (See the Manubhāṣya, verse 8.250)

Kokila (कोकिल) refers to the bird “Cuckoo” (Eudynamys scolopacea enumerated in almost several Smṛtis in context of specifying the expiations for killing them and their flesh being used as a dietary article to give satisfaction to the manes (Pitṛs) in Śrāddha rites. These are elaborated especially in the Manusmṛti, Parāśarasmṛti [chapter VI], Gautamasmṛti [chapter 23], Śātātapasmṛti [II.54-56], Uśānasmṛti [IX.10-IX.12], Yājñavalkyasmṛti [I.172-I.175], Viṣṇusmṛti [51.28-51.29], Uttarāṅgirasasmṛti [X.16].

Please use and support Wisdom Library site; it is free; support it with donations.Doing wonderful work.

—subham—

Tags Koel. Kuyil, Bharati, Andal, Manikkavasagar, Kuyil Pattu, Kuyil Paththu, Cuckoo, Kokila, in Hinduism , குயில் பாட்டுகுயில் பத்து குயில்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 9 (Post No. 13,017)

உத்தாமணி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,017

Date uploaded in London – –   18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Part 9 

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார் 

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

சென்ற பகுதியில் 80  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

 xxx

81 .பித்த சுரத்திற்கு

ஈச்சங்குத்து- வெட்டிவேர்- கோவைக்கிழங்கு -விளாமிச்சம் வேர்- வில்வம் வேர்- சித்தாமுட்டி-  தாமரைக்கிழங்கு- சந்தனத்தூள்- இலுப்பைப்பூ- இவை சமன்கொண்டு இரண்டுபடி தண்ணீர் வைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும்; சுரம் தணியும்

XXXXX

82.கண் சதை வளர்த்திக்கு

ஈருள்ளியும் குறிஞ்சாநிலையும் சமயிடை எடுத்து சிதைத்து கண்ணில் 4-5 துளி பிழியவும். இப்படி இரு இரண்டோரு  வேளை பிழியத் தீரும்.

XXXX

83 .வைசூரியினால் மலஜலம்காட்டினால்

ருள்ளி- கற்கண்டு- வகைக்கு விராகனிடை 5 இவை இரண்டும் அரைத்து அரைக்கால் படி  ஆமணக்கெண்ணெயில் கலக்கி  கொஞ்சம் கொஞ்சம் உட்கொண்டு வந்தால் மலஜலக்கட்டு உப்பிசம் இவை தீரும்

XXXX

84 .கணக்கழிச்சலுக்கு

ஈருள்ளி பத்து திரி – கருவேப்பிலை ஈர்க்கு- ஒரு  பிடி – சீரகம் விராகநிடை  1 வெந்தயம் விராகநிடை 2 – இவைகளை வறுத்துக் கிஷாயம் வைத்துக் கொடுக்கவும் தீரும்

XXXX

85 . வைசூரியினால் ரத்த பேதி கண்டால்

ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக் கொடுத்தால் நிவர்த்தியாகும் .தேக திடமறிந்து 3-4 வேளை வரை நிதானமாய் கொடுக்கவேண்டியது .

இதுவுமது

ஈருள்ளிச்சாறும் பசு நெய்யும் சமனாய்க் கலந்து வீசம்படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால் , கடுப்பு- இரத்தம்- சீதம் இவை நிவர்த்தியாகும்

XXXX

86 . க்ஷயத்திற்கு

ஈனாத எருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிகட்டி ஆவின் பாலும் நெய்யும் சமன் கலந்து அரைக்கால்படி வீதம் அந்தி சந்தி கொடுத்துவர தீரும். க்ஷயம் 96 -ம்  சாந்தியாகும் . பத்தியம் புளி தள்ளவும் .

XXXX

87 .நேத்திரபேதி

ஈனாத எருமை சாணிப்பாலில் சித்தாமணக்குப் பருப்பை இழைத்து கண்ணில் தடவ துர்நீர் யாவும் நீங்கிவிடும்; நேத்திரம் சுத்தியாகும்

XXXXX

உ 

88 .ஆமைகணத்துக்கு 

உத்தாமணி – பாவட்டை- காவட்டை- சங்கு- முருங்கை- துனா- பொடுதலை — இவைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு  பிடியிடித்து  ஒரு படி தண்ணீர் விட்டு- ஓமம் -திப்பிலி- வசம்பு- ஆமையோடு- கருஞ்  சீரகம் – ஓர் நிரையாய் அறைத்து துணியில் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காய்ச்சி மேற்படி மருந்தையெடுத்து அந்த கிஷாயத்தினால் அறைத்து கழச்சிக்காயளவு மூன்று வேளை கொடுத்துவர தீரும்.

இதுவுமது

உத்தாமணிக் கொழுந்து- வசம்பு- உள்ளி– விளாம் ஓடு –ஓமம்- ஆமையோடு- வகைக்கு  இருகளஞ்சி எடுத்து இடித்து வறுத்து  விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணெயில் போட்டுக் காய்ச்சிக் கொடுக்கத் தீரும் .

இதுவுமது 

உத்தாமணி- சங்கு- தூதுவளை- கொடும்பை – இவைகளின் வேர் வகைக்கு ஒரு பிடி நறுக்கி ஒரு படி தண்ணியில் போட்டு பொடுதலை- ஓமம்- திப்பிலி- வசம்பு- மிளகு- பூண்டு- ஆமையோடு ஓர் நிறையாய்  இடித்து துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்து வந்தால் ஆமை கணம் சுரம் தீரும் .

XXXXX

89.பிள்ளைகள் கழிச்சல் வாந்திக்கு

உத்தாமணிச் சாறு- எருமை வெண்ணெய் – வகைக்கு கால் படி- கருஞ்சீரகம்-  ஒரு களஞ்சி அறைத்துப் போட்டு காய்ச்சி மேற்படி மருந்தை  அறைத்துக் கொடுத்துவரத் தீரும் .

XXXX

90 .மாந்தக் கழிச்சலுக்கு

உத்தாமணி வேளை, நாய் வேளை, குப்பைமேனி -இவைகளைத் தட்டி  சாறு வாங்கி துட்டு இடை உள்ளுக்குள் கொடுத்து மேலுக்கு துவாலையிடவும்

சுபம்—

Tags- உத்தாமணி, முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-, part 9

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 2 (Post No.13,016)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.016

Date uploaded in London – — 18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 2

ச.நாகராஜன்

தோல்விகளில் துவளாதே

வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் பல. தடைகளும் பற்பல.

இரண்டாம் உலகப் போரில் இடாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை மீது குண்டு போடப்பட்டு அது முற்றிலுமாக சேதம் அடைந்தது.

1945இல் மிகாவா என்ற  இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை பெரிய பூகம்பம் ஒன்றினால் சேதமடைந்தது.

ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்ததில்லை.

உலகப்போர் முடிந்த பிறகு கார் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே அனைவரும் சைக்கிளுக்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார். அனைவரும் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவைக்குத் தகுந்தபடி அவரால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

ஜப்பானை வலிமையுள்ளதாக்க தனக்கு உதவி செய்யுமாறு 18000 சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அவர் உத்வேகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். 5000 பேர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அதை வைத்து சிறிய எஞ்சின்கள் ஏராளமானவற்றை அவர் உருவாக்கி அனைவருக்கும் தந்தார்.

முதலில் அவர் உருவாக்கிய எஞ்சின்கள் சற்று பெரிதாக இருந்ததால் சந்தையில் விற்பனையாகவில்லை. ஹோண்டா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து சிறிய மாடல் எஞ்சினை உருவாக்கினார். விற்பனை சக்கை போடு போட்டது. சூப்பர் கப் என்ற அந்த மாடலை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும்  வாங்க ஆரம்பித்தன.

இதே போல இன்னொரு முறை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கார் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட மறுபடியும் களத்தில் இறங்கினார் ஹோண்டா. இந்த முறை அவர் சிறிய காரைத் தயாரித்தார். எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட அந்த காரை அனைவரும் வாங்க இந்த முறையும் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்தது!

1973ஆம் ஆண்டு வரை தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்தார். பின்னர் ஆலோசகராக மாறினார். பீப்பிள் பத்திரிகை

1980ஆம் ஆண்டின் உலகின் ஆகப்பெரும் மனிதர்கள் 25 பேரில் ஒருவராக அவரை அறிவித்தது. அனைவரும் அவரை ‘ஜப்பானின் ஹென்றி போர்டு’ என்று புகழ ஆரம்பித்தனர்.

பழகுவதற்கு இனிமையானவர், தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்வார். அதைத் திருத்திக் கொண்டு முன்னேறுவார். இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அவர் அன்புடன் வளர்த்தார்; நற்பண்புகளை தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார்.

ஆனால் தனது மகன்களை அவர் வற்புறுத்தி தனது நிறுவனத்தை மேற்கொள்ளச் செய்ய அவர் விரும்பவில்லை. அவரது மகன் ஹிரோடோஷி ஹோண்டா தனக்கென ஒரு மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தனது தொழிலகத்தில் அவர் தரத்தைக் கண்டிப்பாக வற்புறுத்துவார். நேரம் தவறாமை அவரது முக்கியப் பண்பானது. தனது தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிஸ்டர் தண்டர்ஸ்டார்ம் – மிஸ்டர் இடிமின்னல் புயல்- என்று அறியப்பட்டார்.

ஹோண்டாவிற்கும் அவரது மனைவி சசிக்கும் விமானம் ஓட்டுவது பொழுது போக்கு. ஸ்கீயிங், பலூனில் பறப்பது உட்பட்ட பல பொழுதுபோக்குகளில் அவர் தனது 77ஆம் வயதிலும் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

மறைவு

ஹோண்டா 1991ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஈரல் கோளாறு  காரணமாக மரணமடைந்தார். அவர் மரணமடையும் போது அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 470. காப்புரிமைகள் 150. ஜப்பான் நாட்டின் உயரிய விருதான ‘ப்ளூ ரிப்பன்’ விருது அவருக்கு தரப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் 3 கோடி வாகனங்களை அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

3200 டாலருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரது நிறுவனம் 30 பில்லியன் டாலர் அதாவது 3000 கோடி டாலர் (ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ரூ 83) என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.

ஹோண்டாவின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, பிரிடன் ஆகிய நாடுகளில் உள்ளன. அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும்ஹோண்டா அக்கார்ட் காரைப் பார்க்கலாம்.

ரேஸுக்கான ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன.

வெற்றிக்கு வழி

ஹோண்டாவின் கருத்துப்படி அவர் தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறியவை இரண்டு விஷயங்கள்

1) ட்ரையல் அண்ட் எர்ரர் வழிமுறை: ஒரு பொருளைத் தயாரித்து சோதனை செய்து அதில் உள்ள குறைகளைக் களைந்து கொண்டே இருந்தால் நல்ல பொருள், தரத்துடன் உற்பத்தியாகி விடும்.

2) தோல்விகளால் துவளாதீர்கள் ; ஒரு பொருளைக் கண்டுபிடித்து தயாரிக்கும் போது ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள்

Every Stumbling Block is a stepping stone – ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிக்கான படிக்கல் – என்று உணருங்கள்.

ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது என்பது அவரது கொள்கை.

மூன்று கொள்கைகளைத் தனது கம்பெனி கொள்கைகளாக அவர் கொண்டிருந்தார். வாங்குவதில் சந்தோஷம், விற்பதில் சந்தோஷம், உருவாக்குவதில் சந்தோஷம் ஆகியவையே அந்த மூன்று.

அவர் ஒரு முறை கூறினார் இப்படி: பலரும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றனர். வெற்றியானது பல தோல்விகளுக்கும் சுயபரிசோதனைகள் செய்த பின்னருமே அடையப்படும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற ஒரு சதவிகித உழைப்பே தேவை மற்ற 99 சதவிகிதம் தடைகளை மீறி முன்னேறுவது தான்! தடைகளைக் கண்டு பயப்படவில்லை என்றால் வெற்றி தானே உங்களை வந்து அடையும்!

அவரது வாழ்க்கை போதித்த போதனை :தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் என்பது தான்.

****

QUIZ குயில் பத்து QUIZ (Post No.13,015)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,015

Date uploaded in London – –   17 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.111

1.குயில்- காகம் பற்றிய பிரபல சம்ஸ்க்ருத சுபாஷிதம் என்ன சொல்கிறது ?

XXXX

2.இந்தப் பாடலுக்கு (சம்ஸ்க்ருத சுபாஷிதம்) காரணம் என்ன ?

XXXX

3.இந்தியாவின் கவிக்குயில் யார் ?

XXXX

4.சங்க இலக்கியத்தில் குயில் எங்கெங்கு வருகிறது ?

XXXX

5.குயில் பத்து பாடிய சைவப் பெரியார் யார் ?

XXXX

6.மயில் அகவும் காகம் கரையும் குயில் என்ன செய்யும் ?

XXXX

7.குயில் பழமொழிகள் -பூர்த்தி செய்யுங்கள்

………….. இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

………… இடக் காகம் கண்டு களிக்க.

………….. கூவுகிறான்.

XXXX

8.குயில் பாட்டு எழுதிய தமிழ்க் கவிஞன் யார் ?

XXXX

9.குயில் என்ற பெயரில்  பத்திரிக்கை நடத்தியவர் யார் ?

XXXX

10.குயிலுக்குள்ள தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன ?

XXXX

விடைகள்

1.काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।

वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।

காகமும் கருப்பு குயிலும் கருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

வசந்தகாலம் வந்துவிட்டால் காகம் ரகம்தான் ; கையில் குயில்தான்

வசந்த காலம் வந்துவிட்டால் காகம் கரையும்; குயில் கூவும் ; அப்போது சாயம் வெளுத்துவிடும்!

XXXX

2.குயிலுக்கு முட்டையிடத்  தெரியும் ஆனால் முட்டையை அடைகாத்து குஞ்சசுபொரிக்கத் தெரியாது .ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும். காக்கைக்கு வேறுபாடு தெரியாதாகையால் அதை காக்கும் ; குஞ்ச்சுகள் வெளியே வந்தபோதுதான் குரல் ஓசை வித்தியாசத்தால் உண்மை வெளிப்படும்; நிறத்தைப் பொறுத்தமட்டில் இரண்டும் கருப்புதான்.

xxxx

3.சரோஜினி சட்டோபாத்தியாயா என்ற வங்காளி பிராமணப் பெண் கவிஞர்; பின்னர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடுவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் சரோஜினி நாயுடு என்று அழைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட தியாகி; கவிதைகள் இயற்றியதால் இந்தியாவின் கவிக்குயில் என்று அவரை  அழைத்தனர்.

XXXX 

4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் சுமார் 35 இடங்களில் குயில் பற்றிக் கவிஞர்கள் பாடியுள்ளனர்

XXXX

5.மாணிக்க வாசகர்

XXXX

6.குயில் கூவும் .

xxxx

7.குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

குயில் முட்டை இடக் காகம் கண்டு களிக்க.

குயிலைப் போலக் கூவுகிறான்.

XXXX

8.தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார்.

XXXX

9.பாரதிதாசன் ; பின்னர் தேச விரோதக் கருத்துக்கள் காரணமாக தடை செய்யயப்பட்டது .

XXXX

10.கோகிலம் ,களகண்டம், கோரகை , பிகம், பரபுட்டம் அந்நியம்

—subham—

Tags- குயில் பத்து, குயில் பாட்டு, கோகிலம்

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 1 (Post13,014)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.014

Date uploaded in London – — 17 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 1 

ச.நாகராஜன்

மேட் இன் ஜப்பான் 

ஹோண்டா – இந்தப் பெயரை அறியாதவரே இன்று இருக்க முடியாது. ஏனெனில் சாலையில் நாம் பார்க்கின்ற கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பெரும்பாலும் ஹோண்டாவாகவே இருக்கும். ஜப்பானுக்கு ஒரு தனி கௌரவத்தைத் தந்தது ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகள்.

ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ‘மேட் இன் ஜப்பான்’ என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை எந்த ஒரு பொருள் மீதும் பார்த்தாலும் அனைவரும் எள்ளி நகையாடுவர். அது தரமில்லாத உதவாக்கரை பொருள் என்று தூக்கி எறிவார்கள்.

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத ஜப்பானியர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். தரமில்லாத எதையும் விற்பனைக்கு அனுப்பாதே என்று.

நாளடைவில் தரக் கட்டுபாடுகள் அதிகமானது. உற்பத்தி உத்திகள், கடுமையான மேற்பார்வை சோதனைகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரத்தில் நம்பர் ஒன்

என்ற பெயரைப் பெற ஆரம்பித்தன.

இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சொல்லலாம்.

ஹோண்டா உற்பத்தி செய்யும் கார், மோட்டார் சைக்கிளைப் பார்ப்பவர்கள் அந்த நிறுவனத்தின் நிறுவனரான ஹோண்டாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிறப்பும் இளமையும்

சோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda) 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாளன்று ஜப்பானில் உள்ள கோம்யா என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்தந்தை ஜிஹெய் ஒரு கொல்லர். தாய் மைகா ஒரு நெசவாளி. ஏழ்மையான குடும்பம் என்றாலும் மனதிருப்தியுடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்த குடும்பம் அது.

ஹோண்டாவின் இளமைப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் சைக்கிள் மயம். ஆகவே சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் சைக்கிளை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் ரிப்பேர் செய்யவும் ஹோண்டாவின் தந்தையிடம் வருவது வழக்கம். அங்கு ஆரம்பித்தது ஹோண்டாவின் மெஷின்கள் மீதான ஆர்வம். தானே சொந்தமாக ஒரு ரிப்பேர் கடையை ஆரம்பித்தார்.

1922இல் பள்ளியை விட்டு வெளி வந்த ஹோண்டா டோக்கியோ சென்று கார்கள், மோட்டார்சைக்கிள்கள் பற்றி அறிய ஆர்வம் கொண்டார்.

ஆகவே வீட்டை விட்டு வெளியேறி டோக்கியோவில் ஹோங்கோ என்ற இடத்தில் யூஜோ சகாகிபாரா என்பவரிடம் கத்துக்குட்டி வேலையாளாகச் சேர்ந்தார். ஹோண்டாவின் ஆர்வத்தைப் பார்த்த யூஜோ அசந்து போனார். ஹோண்டாவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர ஆரம்பித்தார்.

1928இல் வீடு திரும்பிய ஹோண்டா தன் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு வயது 22 தான்! இரண்டே வருடங்களில் அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்தனர். ஹோண்டாவிற்கு திருமணம் ஆனது. அவரது மனைவி சசியும் (Sachi) நிறுவனத்தில் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார்.

உழைப்பதில் இன்பம்

உழைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் பசி, தாகத்தையே மறந்தார்.

அவரே பின்னால் கூறியது இது: “நான் கத்துக்குட்டி பயிற்சியாளராக உழைத்துக் கொண்டிருந்த போது எனது கவனத்தைத் திசை திருப்ப விடமாட்டேன். எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்தாலும் போக மாட்டேன். ‘உணவுக்கான நேரம் வந்து விட்டது. சாப்பிட வா’ என்று என் தாயார் என்னை அழைத்தாலும் போக மாட்டேன். என்னை இழுத்துக் கொண்டு போய் எனக்கு உணவைப் பரிமாறுவார் அம்மா. என் காதுகள் இப்படி ‘செயலிழப்பதைக்’ கண்ட எனது தாயார் நாளடைவில் எனது கவனத்தின் தீவிரத்தை உணர்ந்து  கொண்டார். ‘வேலையை முடித்து விட்டு சாப்பிட வா’ என்று கூறும் அளவுக்கு அவருக்கு மனப்பக்குவம் வந்து விட்டது. பசி தாகம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை 

ரேஸ், ரேஸ், ரேஸ்

ரேஸில் பங்கு எடுப்பது ஹோண்டாவிற்கு மிகவும் பிடிக்கும் ஆனால் 1936இல் ஒரு பெரிய விபத்தில் அவர் சிக்க அவர் மனைவி அழ ஆரம்பிக்க, ரேஸில் பங்கு பெறுவதை அவர் விட்டு விட்டார். 

அப்போது நடந்த ஒரு ரேஸ் போட்டியில் மணிக்கு 78 மைல் வேகத்தில் காரை ஓட்டி அனைவரையும் அவர் பிரமிக்க வைத்தார். 

உலகப் போர்

 காலம் மாறத் தொடங்கியது. 1937இல் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போர்.

பின்னர் வந்தது இரண்டாம் உலகப் பெரும்போர். ரிப்பேர் செய்வதை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஹோண்டா. சிசிரோ கதோ என்ற நண்பருடன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிஸ்டன் ரிங்குகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினார் ஹோண்டா. ஆனால் அவை தரத்துடன் இல்லை. ஒரே தோல்வி மயம். ஆகவே உலோக இயல் பற்றிய தனது அறிவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹோண்டா அதில் கவனம் செலுத்தி தரமான படைப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார். 

நிறுவன வளர்ச்சி 

1939ஆம் ஆண்டு அவர் ஒரு தேர்ந்த நிபுணராக ஆக முடிந்தது. மெல்ல மெல்ல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. தரமோ சூப்பர். 2000 பேர்கள் உள்ள பெரிய நிறுவனமாக அவரது நிறுவனம் வளர்ந்தது.

 1948இல் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் சைக்கிளை அவர் அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பின் பெயர் ட்ரீம் (கனவு).

 1959இல் அவர் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

 தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரில் அவர் பழைய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சினைப் பொருத்தி ஓட்டினார்.

 மெல்ல மெல்ல வளர்ந்த அவரது நிறுவனம் 1959இல் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தனது மாடலை மாற்றும் போதெல்லாம் அந்த மாடலின் முதல் காரை அவரே ஒட்டிப் பார்ப்பது வழக்கமானது. இந்தப் பழக்கத்தை தனது 65 வயது முடிய அவர் விடவில்லை.

To be contined…………………………

மயில் தோகை மர்மமும்,  மகத்துவமும் (Post No.13.013) 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,013

Date uploaded in London – –   16 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மயில் தோகைக்கு மதிப்பும் புனிதமும் அதிகம் ; க்ருஷ்ண பரமாத்மாவின்  தலையை அலங்கரிப்பது மயில் இறகு  ; சரஸ்வதி தேவியின் அருகில் நிற்பது தோகை மயில்.  முருகப் பெருமானுக்கோ கொடியிலும் வாகனத்திலும் இருப்பது மயில்தான் ; முருகனைப்பாடும் அருணகிரி ஆடு மயிலை ஒவ்வொரு பாடலிலும் வருணிக்கிறார் .

மயில் தோகையை திகம்பர பிரிவு சமண முனிவர்கள் பயன்படுத்துகின்றனர் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளோர் வீட்டில் அதிர்ஷ்டம் பொங்க மயில் தோகையை பயன்படுத்துகின்றனர். சீனர்களோ கல்யாணங்களிலும் சமய விழாக்களிலும் இதை பயன்படுத்துகின்றனர்  கோவிலில் மயில் விசிறி கொண்டு வீசுவோரையும் காணலாம். (நான் மதுரையில் வசித்த மாணவப் பருவ காலத்தில் மதுரை மீனாட்சி கோவிலில் ஒருவர்,  பக்தர்கள் மீது பெரிய மயில் விசிறி கொண்டு வீசுவதைக் கண்டு ரசித்தேன் )

பல்லாயிரம் மயில்கள் படுகொலை

நேற்று 15 -2-2024 ஆம் தேதி   செய்திப்  பத்திரிக்கைகளில் வந்த செய்தியைப் படித்தோருக்கு இதன் மதிப்பு விளங்கும் .

மயில் தோகையை வைத்திருப்பது மங்களத்தைக் கொண்டுவரும், அதிர்ஷ்டத்தைக்  கொண்டுவரும் என்பது சீனர்களின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றும் சீனர்கள் இதை இந்தியாவிலிருந்தே கற்றிருக்கவேண்டும்.

ரெவின்யூ புலனாய்வுத்துறை டைரக்டர் அலுவலக அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்  28 லட்சம் மயில் தோகைகள் சிக்கின. இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய்கள். நவி மும்பையிலுள்ள நவஸேவா துறைமுகத்தில் பிப்ரவரி  February 14, 2024 இந்த சோதனை நடந்தது .இது சீனாவுக்குச் செல்லவிருந்த சரக்கு.

மயில்  மற்றும் அதன் தோகைக்கு இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஏற்றுமதித் தடை விதித்துள்ளது; ஆகையால் இதை ஏற்றுமதி செய்த குற்றவாளிகள், சரக்குப் பெட்டிக்குள் கயிற்றினால் நெய்யப்பட்ட வாசல் மிதியடிகள், பாய்கள் Door Mats இருப்பதாக பொய் சொல்லி இருந்தனர் ; அதி காரிகளுக்குத் துப்புக்கிடைக்கவே சோதனையில் இறங்கினர். .குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.

மயில் இறகு நிற்கும் தோகையின் அடிப்பாகம் 1,6000   அந்தப்பெட்டிக்குள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான மயில்களை படு கொலை செய்த்து இதில் கண்டுபிடிக்கப்பட்டது

The Directorate of Revenue Intelligence (DRI) of Mumbai zonal unit seized a stock of 28 lakh peacock tail feathers at Nhava Sheva Port on Wednesday, which were allegedly being smuggled to China via export cargo as mis-declared coir doormats.

The seized stock is estimated to be worth ₹2.01 crore in the illicit market, DRI sources said. The export of peacock tail feathers is prohibited as per Schedule 2 of the Export Policy of ITC (HS), 2018 notified by the Directorate General of Foreign Trade read with the Wildlife (Protection) Act, 1972.

A detailed examination of the export cargo had allegedly revealed, apart from the peacock tail feathers, 16,000 peacock feather stems, all of which were seized under provisions of the Customs Act, 1962.

சமண மதத்தில் ஒரு சர்ச்சை

சமணர்களில்  இரு பிரிவினர் உண்டு ; ஸ்வேதாம்பரர்கள்  வெள்ளை ஆடை உடுப்பார்கள் ; திகம்பர பிரிவு முனிவர்கள் ஆடைகளை அணிய மாட்டார்கள்;  ஆனால் மயில் விசிறி அல்லது விளக்குமாறு  (பிச்சி) , தண்ணீர் ஏந்திய கமண்டலம் ஆகிய இரண்டு மட்டும் கொண்டு செல்லுவார்கள் .  அவர்கள் உட்காருமிடத்தை சுத்தப்படுத்த இந்த மயில் விசிறியைப்  பயன்படுத்துவார்கள்; அவர்கள் மிகவும் கடுமையான அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடிப்பதால், ஈ எறும்பு கூட இறந்துவிடக்கூடாதே என்ற காருண்ய உணர்வில் விசிறியை வைத்து விசிறிவிட்டு அமர்வார்கள். முன்காலத்தில் மாதம் தோறும் மயில்கள் இயற்கையாக உதிர்க்கும் இறகுகளை வைத்து இது செய்யப்பட்டது . தற்காலத்தில், கொல்லப்பட்ட மயில்களின் இறகுகளிலிருந்து இது செய்யப்படுகிறது. ஏனெனில் முனிவர்கள் தொகையும் அதிகமாகியது. மேலும் ஆண்டு தோறும் அவர்களுக்குப் புதிய மயில் தோகை அளிக்கும் ஒரு வினோத விழாவும் நடைமுறைக்கு வந்துவிட்டது . சில சமண பக்தர்கள் தங்களுடைய  குருமார்களுக்கு இப்படி புதிய விளக்குமாறு/ விசிறி அளிப்பதை ஒரு புனித கைங்கர்யமாக நினைக்கின்றனார்.. இப்படிச் செய்வது அஹிம்சைக்கு எதிரானது ஆகுமே என்ற சர்ச்சை சமண மத வட்டாரங்களில்  எழுந்துள்ளது . திருமதி இந்திராகாந்தி குடும்பத்தின் மருமகள் மேனகா காந்தியும் இது போன்ற விசிறிகளை பயன்படுத்துவது அஹிம்சைக்கு எதிரானது என்று நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் ; சர்ச்சை நீடிக்கிறது.

—subham—

Tags- peacock tail feathers, seized, மயில் தோகை, மர்மம், மகத்துவம், திகம்பர முனிவர், மயில் விசிறி சமணர் சர்ச்சை, மேனகா காந்தி 

தம் மாரோ தம்; மிட் ஜாயே கம்! (Post No.13,012)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.012

Date uploaded in London – — 16 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தம் மாரோ தம்மிட் ஜாயே கம்!

ச.நாகராஜன்

தேவ் ஆனந்த் நடித்து உலகெங்கும் பிரபலமான படம் ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா!.

1971இல் வெளியான படம் இது.

சந்துபொந்துகளில் எல்லாம் இந்தப் படத்தின் பாடல்கள் பாடப்பட்டன. முக்கியமான ஒரு பாடல் தம் மாரோ தம்; மிட் ஜாயே ஹம்!

பாடல் இது தான்:

தம் மாரோ தம்

மிட் ஜாயே கம்

போலோ சுப ஷ்யாம் ஹரே க்ருஷ்ணா, ஹரே ராம்

துனியா நே ஹம் கோ தியா க்யா

துனியே சே ஹம் நே லியா க்யா

ஹம் சப் கி பர்வா க்ரே க்யோ

சப் நே ஹமாரா கியா க்யா

தம் மாரோ தம்

மிட் ஜாயே கம்

போலோ சுபஹ் ஷாம் ஹரே க்ருஷ்ணா, ஹரே ராம்

பாடலின் பொருள்:

ஒரு இழுப்பு இழு (தம்மை இழு)

துயரங்கள் எல்லாம் போய்விடும்

காலை மாலை சொல்

ஹரே க்ருஷ்ணா ஹரே ராம்

உலகம் நமக்குத் தந்தது என்ன?

உலகிலிருந்து நாம் எடுத்துச் செல்வது என்ன?

மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.

மற்றவர்கள் எனக்குச் செய்தது என்ன?

ஒரு இழுப்பு இழு (தம்மை இழு)

துயரங்கள் எல்லாம் போய்விடும்

காலை மாலை சொல்

ஹரே க்ருஷ்ணா ஹரே ராம்

(யூ டியூபில் இதைக் கேட்கலாம்)          

·          

பாடலைப் பாடியது ஆஷா போன்ஸ்லே.

படத்தை எழுதி, இயக்கி, நடித்தவர் தேவ் ஆனந்த்.

ஹிப்பி கல்சர் பரவிய காலம் அது. அதை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க எண்ணினார் தேவ் ஆனந்த்.

ஹிப்பிகளின் அடைக்கல பிரதேசமாக அப்போது திகழ்ந்தது இமயமலையில் உள்ள நேபாளம்.

நேராக அங்கே சென்றார் தேவ் ஆனந்த். நேபாள மன்னரைச் சந்தித்தார்.

அவரது தம்பியிடம் ஹெலிகாப்டரைப் பெற்று வானிலிருந்து நேபாளத்தைப் பார்த்தார்.

சந்து பொந்துகளில் எல்லாம் இருந்த ஹிப்பிகளைப் பார்த்து வியந்தார்.

தேவ் ஆனந்தின் தங்கையைத் தேடி அவர் அலைவது தான் கதையின் மையம்.

ஜஸ்பிர் என்ற தங்கையாக நடித்தது ஜீனத் அமன். காதலி சாந்தியாக நடித்தது மும்தாஜ். கதாநாயகன் ப்ரசாந்தாக நடித்தது தேவ் ஆனந்த்.

பாடலின் தாக்கத்தைப் பார்த்து பயந்தே போன தேவ் ஆனந்த், ‘எங்கே இந்தப் பாடல் படத்தின் கதையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுமோ என்ற எண்ணத்தில் முழுப் பாடலையும் திரையில் காட்டவில்லை. எடிட் செய்து விட்டார். இரண்டரை நிமிடம் தான் பாடல் என்று ஆனது.

உலகமெங்கும் பாடல் தம் மரோ தம் என்று முழங்க எங்கும் ஒரே ஆட்டம்.

இதைப் பற்றி பின்னால் விமர்சித்த ஹரே க்ருஷ்ணா இயக்கத்தின் ஸ்தாபகர் ஶ்ரீலஶ்ரீ பிரபுபாதா, “தம் போய்விடும்; ஆனால் ஹரே க்ருஷ்ணா” நிலைத்து நிற்கும் என்றாராம்! அவர் வாக்கு பொய்க்கவில்லை!

படத்தில் ஹிப்பிகள் வரும் காட்சிகளுக்காக தனது உதவியாளர்களை அன்றாடம் காலையில் நேப்பாளத்தில் காத்மாண்டுவில் சுற்ற விடுவாராம் தேவ் ஆனந்த்.

ஹிப்பிகளை அவர்கள் பார்த்து அன்றைய காட்சியில் வந்து பங்கு பெற்றால் அவர்களுக்கு “வேண்டியது” கிடைக்கும் என்று சொல்ல ஹிப்பிகளுக்கு ஒரே ஆனந்தம்.

சந்தோஷமாக படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டனர்.

இந்தப் பாடல் பிரபலமாக ஆகி விட்ட போது அதன் தாக்கமும் இருந்தது.

படம் வெளியான பல நாட்களுக்குப் பின்னர் தேவ் ஆனந்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்ணின் தந்தை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அதில் அவருக்குத் தந்ன் நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் தேடிக் கொண்டிருந்த அவரது அருமை மகள் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் வருகிறார். உலகில் எந்த மூலையில் தன் மகளைத் தேடுவது என்று தெரியாமல் தவித்த தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் ஒரே மகிழ்ச்சி! படத்தில் அவளைப் பார்த்ததால் அவள் நிச்சயம் நேபாளத்தில் தான் இருக்க வேண்டும் என்று தெரிய வர அவர்கள் நேபாளத்தில் தேட ஆரம்பித்தனர். அவளை காபூலில் கண்டுபிடித்தனர்.

இதை தேவ் ஆனந்த் தனது சுயசரிதையில் (பக்கம் 234) குறிப்பிடுகிறார்.

 26-9-1923ல் பிறந்த தேவ் ஆனந்த் 3-12-2011இல் மறைந்தார்.

Romancing with Life – An autobiography என்ற அவரது சுயசரிதை ஏராளமான சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டுள்ள நூல். 438 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 2007இல் வெளியானது.

திரை இசைப் பிரியர்களும், சினிமா ஆர்வலர்களும் படிக்க வேண்டிய சுவாரசியமான நூல் இது!

***

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-8 (Post.13011)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,011

Date uploaded in London – –   15 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 8

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 70  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

Xxxx

குழந்தை இளைப்பு இருமலுக்கு

71 . இரண்டு சமூலம் தூதளை கண்டங்கத்திரி , வகைக்கு ஒரு பிடி திப்பிலி பூண்டு வகைக்கு துட்டிடை ஒரு படி தண்ணீரில், தட்டிப்  போட்டுக் காய்ச்சி அந்தி சந்தி பதமாய் கொடுத்துக்கொண்டுவர நிவர்த்தியாகும். பெரியோர்க்குமாகும்.

இதுவுமது

இண்டம் வேர் தூதனம் வேர் வகைக்கு ஒரு பலம் , சுக்கு- திப்பிலி-  வெந்தயம் விராகநிடை வகைக்கு அரை  இடித்து ஒருபடி நீரில் போட்டு காய்ச்சி வடித்து அந்தி சந்தி கொடுத்துவரத் தீரும் .

xxxxx

மாலைகாசத்திற்கு

72 .இந்துப்பு மஞ்சள் சாரடை வேர்  துத்தம் இவைகளை ஓர் நிரையா எடுத்து பழச்சாறு விட்டரைத்து கயறுபோல் திரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொகொண்டு முலைப்பாலில் இழைத்து  கண்ணில் தீட்டி வந்தால் மாலைகாசம் கண் படலம் தீரும். இந்தக் கண் வியாதிகள் 96-ஆரின் பெயரும்  அதுகளுக்கு மருந்து முறையும் பார்க்க வேண்டியவர்கள் (திருநேத்திர சிந்தாமணி என்னும்) சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும் .

xxxxx

விக்கலுக்கு

73 . இம்பூராவேரைத்தட்டி பசும்பால் விட்டு அறைத்துக் கலக்கி  இரண்டொரு வேளை கொடுத்தால் விக்கல் வயிற்றிரைச்சல் பித்தம் இவை தீரும்.

xxxxx

சீழ்மூலத்திற்கு

74. ஈருள்ளி ஐந்து பலம் எடுத்து சிறுக அரிந்து பண்ணி நெய்யில் பொறித்து ஐந்து நாள் கொடுக்க சீழ்மூலம் சவுக்கியமாகும்.

xxxxxx

இரத்தமூலத்திற்கு

75 . ஈருள்ளிச் சாறு பசும்பால் வகைக்கு அரைப்படி பசும் நெய் கால் படி  ஒரு பலம் அதிமதுரத்தை பால் விட்டரைத்து யாவும் ஒன்றாய்க்கலந்து பதமாய்க்காய்ச்சி இறக்கி ஒரு வேளைக்கு உச்சிக்கரானடி வீதம் இருவேளையும் ஐந்து நாள் சாப்பிட்டால் சீழ்  மூலம், இரத்த மூலம் சாந்தியாகும். பத்தியம் – கைப்பு- புளிப்பு- தள்ளவும்

xxxxxx

காது குத்தலுக்கு

76 . ஈருள்ளியை சிதைத்து வெதுப்பி துணியில் முடிந்து பிழிந்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டால் காது குத்தல் சயித்தியம் தீரும்.

XXXX

77 . சயித்தியத்திற்கு

ஈருள்ளியை சிதைத்து ஐந்து துளிகள் முலைப்பால் விட்டு கசக்கிப்பிழிந்து காதின் பின்புறத்தில் தடவி அனலில் காட்டினால் சயித்தியம் காதுவலி இவை தீரும்.

XXXXX

78 . இருமலுக்கு கிஷாயம்

ஈயத்தண்டு இலை –தூதுவளையிலை – நல்வசங்கனிலை — சுக்கு–திப்பிலி– முட்டது முழுதும் சமநிட்டை கொண்டுஇடித்து கேட்டுக்கொன்றாய்க் கிஷயமிட்டுக் கொடுத்தால் நிவர்த்தியாகும்.

XXXX

79 .நீர்க்கடுப்புக்கு

ஈருள்ளிச்சாறு ஒரு பலம் பொரித்த வெண்காரம் பொடி ஒரு விராகநிடை  இவை ஒன்றாய்க் கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று நாள் இருவேளையும் கொடுக்கவும் .

இதுவுமது

ஈர வெங்காய சாறு அரைக்கால்படி பனங்கற்கண்டு ஒரு பலம் போட்டுக்கலக்கி வடிகட்டிக்கொடுக்க உடனே நீர்க்கடுப்பு நிவர்த்தியாகும்.

XXXX

80 . மேகத்திற்கு

ஈச்சங்கள்ளு அதிகாலை உபயோகித்து வரவும், மேகம்-வெட்பம்-மேக ஒழுக்கு இவைகள் தீரும். இடைவிடாமல் சதா உபயோகித்தால்  திரேகம் வீக்கமுண்டாகும் .

XXXX SUBHAM XXXX

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள, PART -8,

மூலிகை மர்மம்

புத்தக அறிமுகம் : சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- – 2 (Post.13,010)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.010

Date uploaded in London – — 15 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 2

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1. சித்ரக்கூடத்தை அடைதல்

2. தசரதன் மரணம்

3. பரதன் வருகை

4. பரதன் – குஹன் சந்தித்தல்

5. பரதன் – இராமன் சந்திப்பு

6. தண்டகாரண்யத்தை அடைதல்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் ஆறாவது நூலாக அமைகிறது.

தூத்துக்குடியில் பாரம்பரியம் மிக்க பெரும் இசைக் குடும்பத்தில் பிறந்த திரு சேஷாத்ரிநாதன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என பல்மொழிகளில் வல்லுநர். இராமாயண மஹாபாரத இதிஹாஸங்களையும் புராணங்களையும் நன்கு பயின்றவர். சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்,  வால்மீகியின் ஸ்லோகங்களிலும், கம்பனின் கவிதைகளிலும், துளஸிதாஸரின் தோஹாக்களிலும் ஓராயிரம் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன என்றும் அவற்றை உபன்யாசகர்கள், உரையாசிரியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள் ஆகியோரின் உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள், காணொளிகள் மூலமாக தான் தெரிந்து கொண்ட சுவையான விஷயங்களைத் தொகுத்து கட்டுரைகளாகப் படைத்ததாகவும் தெரிவிக்கிறார்.

திரு சேஷாத்ரிநாதன் தனது அருமையான ஆய்வினால் பல்வேறு இரகசியங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் விதம் பயனுள்ளது. பாராட்டுக்கும் உரியது என்று அணிந்துரை வழங்கியுள்ளார் ச.நாகராஜன்.

வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி. நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களிலிருந்து ஆங்காங்கு மேற்கோள்களைத் தந்து அவர் நூலில் தந்திருப்பதால் பல சிறந்த அறிஞர்கள், உபந்யாசகர்களின் கருத்துக்களை ஒருங்கே சேர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை இந்த நூல் நல்குகிறது.

சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஆங்காங்கே மேற்கோளாகத் தரப்படுகின்றன.

பிற்சேர்க்கையில் வால்மீகி முனிவரின் அயோத்யா காண்டத்தில் உள்ள 119 ஸர்க்கங்களின் பட்டியலையும் நூலுக்கு உதவிய நூல்களின் பட்டியலையும் காண முடிகிறது.

நூலின் அச்சுப் பதிப்பு மிக்க தரத்துடன் அமைந்துள்ளது.

500 ஆண்டுகளுக்கு மேற்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, அயோத்தியில் ராமர் தனது சொந்த இருப்பிடத்திற்கு வந்து விட்ட இந்த காலகட்டத்தில், காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

tags- valmiki, ayodhya kanda

Hindu Temple in Muslim World : Modi Miracles Increasing day by day!

Compiled BY LONDON SWAMINATHAN

Press Cuttings with swaminathan comments

 Date uploaded in London – –   14 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Qatar imposed death sentence to 8 Indian Navy personnel saying they are spies; but Indian PM Narendra Modi commuted the sentence through his influence and ultimately they are released and back in India now.

Now United Arab Emirates allowed Modi’s friends to erect largest Swami Narayan Temple. Scoundrels in Indian Mass Media and Opposition political parties in India use Muslims as weapons to destroy India. But world Muslims salute Modi; not only Muslims but also Jews in Israel, Christian countries around the world elect Modi as the top most leader in all the surveys.

Anti Indian and Anti Hindu scoundrels in the BBC, CNN, Al Jazira, NY Times and London Times constantly attack India and in particular PM Narendra Modi. This si because Modi stopped all foreign fuding to Christian cheats in India.

Press is angry because Modi never give them monthly party like Indira Gandhi and her predecessors; Modi never take three plane load of Press and TV scoundrels like Mrs Indira Gandhi. Journalists are like dirty pigs that roll in drainages (author of this article, London swaminathan, was a senior Sub Editor for 16 years in Madurai and BBC Broadcaster for six years in London; author of 116 books in Tamil and English).

After 2024 election victory Modi will become Kalki Avatar and destroy evil forces in India and abroad.

When the largest Swami Narayan temple was opened by Modi today 14-2-2024, Arti was done at the same time in 1200 Swami Narayan Temples around the world. Whenever Modi is mentioned, it is aways a Record Book Entry, which we saw on January 22, 2024 when Ram Temple in Ayodhya was opened.

We can expect more miracles in 2024 after the election.

Indian Muslims who are led by bad people should learn a lesson from world Muslims.

God must provide Narendra Modi a long life. Every Indian should pray everyday for good people to win the elections and lead us in the right direction.

Bharat Mata Ki Jai.

Xxxx

Abu Dhabi Temple Facts

UAE has scripted a golden chapter in human history, says PM Modi at inaugural event of BAPS Mandir in Abu Dhabi

Prime Minister Narendra Modi said that the UAE has written a golden chapter in the history of human history.

Addressing the gathering at the inaugural event of BAPS Hindu Mandir in Abu Dhabi, PM Modi said that this temple will be a symbol of unity & harmony. The role of the UAE government in the construction of the temple is commendable, he said.

“Today, the United Arab Emirates has written a golden chapter in human history. A beautiful and divine temple is being inaugurated here. Many years of hard work has been involved behind this moment. The blessings of Lord Swaminarayan are attached (to this occasion)”

The Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) temple in Abu Dhabi was built after UAE allocated land for its construction following Modi’s first visit to the country in 2015

xxxxx

VISHNU, SHIVA, AYYAPPA

The idols of deities include Lord Ram and Sita, Lord Shiva and Parvati, Lord Jagannath, Lord Krishna, Lord Swaminarayan, Tirupati Balaji and Lord Ayappa. The BAPS mandir is the first Hindu temple in Abu Dhabi and the largest in the Gulf

The Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Hindu Mandir has been built on a 27-acre site in Abu Mreikhah, near Al Rahba off the Dubai-Abu Dhabi Sheikh Zayed Highway.

It costs around Rs 700 crore. 

According to the temple authorities, the grand temple has been built as per an ancient style of construction and creation mentioned in the Shilpa and Sthapathya Shastras, Hindu scriptures which describe the art for mandir design and construction.

 “The architectural methods have been clubbed with scientific techniques here. Over 300 high-tech sensors have been installed at every level of the temple to measure temperature, pressure and movement (seismic activity). The sensors will provide live data for research. If there is any earthquake in the region, the temple will detect it, and we will be able to study,” Swami Brahmaviharidas, head of international relations for BAPS, told PTI.

No metal has been used in the construction of the temple and fly ash has been used to fill up the foundation, replacing 55 per cent of cement in the concrete mix, reducing the carbon footprint of the temple.

XXXX

But what do we know about the idols?

As per News18, the entrance to the temple has eight idols — representing eight values central to the Sanatan Dharma.

Lord Ayappa, Lord Tirupati Balaji, Lord Jagannath, Lord Krishna and his wife Radha, Lord Hanuman, Lord Shiva and his wife Parvati and children Ganesh and Karthik, and Lord Ram and his wife Sita are among the deities.

Intricate carvings illustrate the lives and teachings of these deities.

As per Indian Express, the Ayappa idol was made by Ananthan Achari and his son Anu Ananthan at Parumala in Kerala’s Pathanamthitta district.

“We are very proud about being associated with the temple. We have made idols and dhwaja stambha (flag pole) for hundreds of temples. But the opportunity to make the idol for BAPS temple is really a blessing of Ayappa,” Anu was quoted as saying.


Anu said the idol is the largest panchaloha, an alloy comprising gold, silver, copper, zinc, and iron, in the world.

Constructed with 18 lakh bricks, seven lakh man hours and 1.8 lakh cubic metres of sandstone sourced directly from Rajasthan — Abu Dhabi’s first Hindu temple has been made in the Nagara style of architecture, just like the recently inaugurated Ram Temple in Ayodhya. According to Umesh Raja, a volunteer at the temple, 20,000 tonnes of sandstone pieces were carved in Rajasthan and then shipped to Abu Dhabi in 700 containers.

The UAE has three other Hindu temples that are located in Dubai.

XXXX

Eight Idols, Seven Shrines
The temple is built on a 27-acre plot of land donated by the UAE government in Abu Mureikhah, near Al Rahba off the Dubai-Abu Dhabi Sheikh Zayed Highway.

The sprawling structure has a prayer hall with the capacity to hold 3000 people, a community centre, an exhibition hall, library and a children park.

The BAPS Mandir is surrounded by meticulously crafted ghats and features of Ganga and Yamuna Rivers. The temple has two central domes namely the Dome of Harmony and the Dome of Peace.

The entrance of the temple is marked by eight idols, which symbolizes eight values foundational to the Sanatana Dharma. Additionally, the temple space also featured stories from ancient civilisations …such as Maya, Aztec, Egyptian Arabic, European, Chinese and African all captured in stone. Tales of Ramayana can also be found on the structure.

The temple houses seven shrines, each dedicated to different deities hailing from North, East, West and South parts of India.
—-SUBHAM—-

TAGS – Abu Dhabi, Hindu Temple, Narendra Modi, Miracles,all Hindu Gods, BAPS, Mandir