1.மயில் வளர்க்கும் சாதாரணக் குடிமகனை, கோபக்கார குடுமிப் பார்ப்பான் சாணக்கியன் அழைத்து , பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அலெக்சாண்டரை நடுங்க வைத்த அந்த சாம்ராஜ்யத்தின் பெயர் என்ன ?
xxxx
2.மயில் வளர்க்கும் அதே குலத்தில் பிறந்த அசோகன் , எத்தனை மயில்களை தினமும் வெட்ட உத்தரவிட்டான் ?
xxxx
3.மயில் கொடி, மயில் வாகனம் உடைய இந்துக் கடவுள் யார் ?
xxxx
4.மயில் பற்றி குறிப்பிடும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூல் எது ?
xxxx
5.மயில் பறவை மூலம் இந்துக்கள், பாபிலோனியர்களை வியப்படைய வைத்தது எப்படி ?
xxxx
6.மயிலுடன் தொடர்புடைய சங்க கால மன்னன் யார் ?
xxxx
7.மயிலின் பெயர் உடைய இரண்டு மாவட்டங்கள் யாவை ?
xxxx
8. மயிலுக்கு சம்ஸ்க்ருதத்தில் பல சொற்கள் உள்ளன ; அதில் ஒன்று எபிரேய/ Hebrew மொழியில் உள்ளது. அது என்ன?
xxxx
9.மயில் பறவையின் பெயர் உடைய கவிஞர் இயற்றிய புகழ்பெற்ற சம்ஸ்க்ருத சதக நூல் எது?
xxxx
10.மயில் குறித்து கம்பன் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?
XXXX
விடைகள்
1.மெளரிய சாம்ராஜ்யம். மயூர என்றால் சம்ஸ்க்ருதத்தில் மயில் என்று பொருள். இது ரிக் வேதத்தில் உள்ளது .மயூர என்ற சொல்லிலிருந்து வந்தது மெளரிய.
xxxx
2.அசோகன், சந்திர குப்தன் ஆகியோர் எல்லாம் மயில் மாமிசப் பிரியர்கள் அசோக மாமன்னன், புத்த மதத்தில் சேருவதற்கு முன்னர் அரண்மனையில் நூற்றுக் கணக்கான மான்களையும் மயில்களையும் வெட்டி கறி சமைத்து உண்டனர் . ஆனால் புத்த மதத்தில் சேர்ந்த பின்னர், அரண்மனையில் இரண்டே மயில்களை மட்டுமே வெட்டி கறி சமைக்கலாம் என்று உத்தரவிட்டதாக அசோகன் கல்வெட்டு கூறுகிறது .
மகத தேச மக்களுக்கு மயில் மாமிசம் ‘பிடித்த உணவு’ என்று புத்த கோஷரும் குறிப்பிடுகிறார் .
Formerly, in the kitchen of Beloved-of-the-Gods, King Piyadasi, hundreds of thousands of animals were killed every day to make curry. But now with the writing of the Dhamma edict, only three creatures, two peacocks and a deer, are killed, and the deer not always. And in time, not even these creatures will be killed.(Asokan Inscription)
xxxx
3.முருகப்பெருமான்
xxxx
4.காளிதாசன் இயற்றிய மேகதூத காவியத்தில் (46) மயில் வாகன முருகன் பற்றிப் பாடியுள்ளான் அவனுடைய காலம் சம்ஸ்க்ருத அறிஞர்களின் கூற்றுப்படி கி.மு முதல் நூற்றாண்டு .
xxxx
5.இந்தியாவின் தேசீய பறவை மயில்; அதை வளர்த்து சாப்பிட்ட வம்சம் வட இந்திய மெளரிய வம்சம். அவர்களுடைய முன்னோர்கள் பாபிலோனியா என்னும் மத்தியக் கிழக்கு பிரதேசத்துக்கு மயில் பறவையைக் கொண்டு சென்று அரசவையில் ஆட வைத்தனர். மேகம் கர்ஜித்தால் மயில்களாடும் என்பது இயற்கை விதி. மேளம், மத்தளம் கருவிகள் மூலம் மேகம் உறுமும் சப்தத்தை உண்டாக்கி மயிலை ஆட வைத்தவுடன் பாபிலோனிய மன்னர்கள் அசந்து போனார்கள் . இது பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன.
Xxxx
6.மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் ; இவனை கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று சங்க கால நூல்கள் செப்புகின்றன.
xxxx
7.தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் ; ஒடிஷாவில் மயூர்பஞ்ச் Mayurbhanj district in Odisah (Orissa).
மயிலை/ மயிலாப்பூர் என்பது சென்னையின் ஒரு சிறிய பகுதி; ஆனால் மாவட்டம் அல்ல .
xxxx
8.சிகித்வஜன் என்றால் மயில்கொடியோன் இது முருகனின் ஒரு பெயர். சிகி.என்பது ஹீப்ரு மொழியிலும் பிற மொழிகளிலும் ‘தகி’ என்று மாறும் ; இன்றும் கூட சம்ஸ்க்ருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கில மொழியில் Tion = Sion என்பதை நாம், Sion ஷன் என்றுதான் உச்சரிக்கிறோம். இதே விதியைப் பின்பற்றி சிகி என்பது ஹீப்ரு Hebrew மொழியில் துகி Siki=Tuki என்று ஆகியது ; பன் மொழி அறிவற்ற அரை வேக்காடுகள் இதை தோகை, என்று நினைத்துப் பிதற்றிவிட்டன.
xxxx
9.மயூர கவி இயற்றிய சூரிய சதகம்
xxxx
10.கம்பராமாயண அயோத்தியா காண்டப் பாடலில் மயில் தனது குலமுறையை, மனு நீதி நூல் சொல்வதுபோல செய்கிறது என்கிறான் கம்பன்; அதாவது குலத்தில் மூத்தவனுக்கே அரசன் பட்டம் அல்லது குலத்து தலைமை !!
1470. ‘வெயில் முறைக் குலக் கதிரவன்
முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்,
உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை,
மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால்,
என் சொனாய்? – தீயோய்!
XXXXX
பாடலின் பொருள்
கொடியவளே! சூரியன்; முதலாகிய உயர்ந்தோர்கள், உயிரே
போவதாயினும் சத்தியத்தினின்றும் மாறுபடார்; மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய
மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின் அரச பரம்பரையை கீழ்மைப் புத்தியால் யாது பேசினாய்?’
(தீய எண்ணம் கொண்ட மந்தரை என்னும் கூனியை நோக்கி கைகேயி சொன்ன சொற்கள் இவை.)
XXXXX
பாடலின் விளக்கம்
மயிலின் குஞ்சுகளுள், முதற் பார்ப்புக்கே (குஞ்சுக்கே) , தோகையின் பீலி பொன்னிறம் பெறும். ஏனைய குஞ்சுகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்த மகன் அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் நடக்கிறது . அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் வழிப்படியே என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ‘யான் பிறந்த கேகய குலத்துக்கும் அதுவே விதி , மனு மரபுக்கு குற்றம் தரக்கூடிய என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் கைகேயி எனலாம்.
XXXX
பிற்காலத்தில் எழுதப்பட்ட தணிகைப் புராணமும் கம்பன் சொன்ன கருத்தையே மொழிகிறது
ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும், கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற பாடல் (தணிகைப். களவு. 244) பொருந்துவதாகும்.
xxx SUBHAM xxx
Tags- மயில் தோகை, சிகி ,மெளரிய சாம்ராஜ்யம் அசோகன் மயூர கவி, மயூரநாதர், மயில் கொடி , வாகனம், பாபிலோனியா , சங்க இலக்கியத்தில் மயில் , கம்ப ராமாயணம் , மயில் குல முறை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2
ச.நாகராஜன்
ஃப்ராங்க்ளின் எபெக்ட்
அரசியல் வாழ்வில் அவர் தன் கொள்கைகளை எதிர்க்கும் பலரையும் அன்றாடம் சந்திக்க வேண்டியிருந்தது.
எதிராளிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் அவர்கள் தன்னைத் தாக்குவதைக் குறைப்பதிலும் அவர் ஒரு புதுவழியைக் கையாண்டார்.
ஒரு முறை தன்னை வெகுவாக எதிர்த்து வந்த சட்ட மன்ற உறுப்பினரை தானும் தீவிரமாக எதிர்க்காமல் அவரிடம் சென்று அவரது நூலகத்தில் உள்ள ஒரு நூலைப் படிக்கத் தர முடியுமா என்று வேண்டினார். இந்த வேண்டுகோளினால் புளகாங்கிதம் அடைந்த எதிராளி தனது நூலை அவரிடம் படிக்கக் கொடுத்தார். பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். அன்றிலிருந்து பிராங்க்ளினை ஆக்ரோஷமாக விமரிசிப்பதைக் அவர் குறைக்க ஆரம்பித்தார். இதிலிருந்து அவர் கற்ற பாடம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் போது அவரைப் பற்றிய நல்லபிப்ராயம் அதிகமாவதோடு அவரை விரும்பவும் ஆரம்பிக்கிறார் என்பது தான்.
இந்த உத்தியை அறிவியல் அறிஞர்கள் ‘பிராங்க்ளின் எபெக்ட்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
இது சரிதானா என்பதைக் கண்டுபிடிக்க பின்னால் அறிவியல் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1969, 2004, 2012, 2014ஆம் ஆண்டுகளில் நடந்த ஆய்வுகள் இது அதிசயிக்கத்தக்க விதத்தில் பலனைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இது மட்டுமல்ல, பிறர் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதில் அவர் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டிருந்தால் அதை நேரடியாக எதிர்த்துப் பேசுவதை கை விட்டார். ‘சந்தேகமின்றி’, நிச்சயமாக’ என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, ‘நான் நினைப்பது என்னவென்றால்’, ‘எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது’ என்ற வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். இது நல்ல பலனைக் கொடுத்தது. விவாதங்களை இதன் மூலமாக நிறுத்திய அவர் அனைவராலும் போற்றப்படும் உயரிய நிலையை அடைந்தார்.
குழந்தைகளிடம் அன்பு
அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை ,”ஐயா! கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள் தான் பெரிய மேதை ஆயிற்றே! எனக்கு வழியைச் சொல்லுங்கள்” என்று கேட்டது. பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பிரகாசிக்கிறதே, அந்த சூரியனைக் கொஞ்சம் பாரேன்” என்றார். அந்தக் குழந்தை பார்க்க முயன்றது. ஆனால் உடனே கையால் கண்களை மூடிக் கொண்டு, “சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை’ என்று கூறியது. பிராங்க்ளின், “என் அருமைச் செல்வமே! இறைவனைக் கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம். ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ அது போல முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு தான் இறைவன். எல்லையற்ற பேரறிவே இறைவன். நன்றாக ஆராயத் துவங்கு. உனது ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்வாய்” என்றார்.
இப்படி அவர் வாழ்க்கை முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை அவரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
விஞ்ஞானி ப்ராங்க்ளின்
இயல்பாகவே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ப்ராங்க்ளின் அச்சகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை அவர் ஆதரித்தார். இதற்காக புதிய பேப்பரையும் புதிய மையையும் தயாரித்தார். 1729ஆம் ஆண்டு பேப்பர் கரன்ஸியைத் தயாரித்தார்.
ஒரு பட்டத்தை இரும்புத்தடி ஒன்றுடன் பறக்க விட்டு மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தில் பாஸிடிவ், நெகடிவ் என்ற வார்த்தைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவரே.
. ஜனத்தொகை கணக்கெடுப்பை முதலில் ஆரம்பித்தவர் அவரே. அதே போல கடல் சம்பந்தமான பல ஆய்வுகளை ஆரம்பித்தவரும் அவரே.
C, J, Q,W,X, Y ஆகிய ஆறு எழுத்துக்கள் ஆங்கிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறி அதற்கு பதிலாக ஆறு புது எழுத்துக்களை அவர் அறிமுகப்படுத்த விழைந்தார். இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் அதை கை விட்டார்.
மறைவு
நடு வயதிலிருந்தே பிராங்க்ளினுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையாக இருந்தது. கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1787இல் அமெரிக்க சட்டம் கையெழுத்திடப்படும் போது உடல் நிலைமை மோசமாக ஆகவே வெளியுலகில் வருவதைத் தவிர்த்தார்.
1790, ஏப்ரல் 17ஆம் நாளன்று நுரையீரல் உறை வீக்கத்தால் மரணமடைந்தார். இறக்கும்போது அவரது மகள் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறிய போது “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதுவும் சுலபமில்லை” என்று கூறியவாறே உயிர் துறந்தார். பிலடெல்பியாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது 20000 பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
நமக்கென ஒரு வெற்றித் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதை வகுத்து, கடைப்பிடித்து வெற்றி கண்ட ப்ராங்க்ளின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமே இல்லை!
*** மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 51 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி
XXXX
குறிப்பு
என்னைப் பொருத்த வரையில் இதிலுள்ள மொழியில்தான் , மொழிப் பிரயோகத்தில்தான் ஆர்வம் அதிகம் ; அந்தக் காலத்தில் நிலவிய கிராமீய வைத்திய பாஷை இதில் இருக்கிறது . ஏராள மான மருந்துச் சரக்குகள் , மருத்துவ மூலிகைகள் பற்றிய விஷயங்களும் உள. ஆனால் வரிக்கு வரி எழுத்துப் பிழைகள் ; இதைப் படித்தால் தமிழே மறந்து விடும்!!! எதிர்கால மருத்துவ மொழி ஆராய்ச்சியாளருக்கு இந்த நூல் உதவும். 100 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிகைகளில் வந்த மருத்துவ விளம்பரங்களைப் பார்த்தால் இதே மொழி பயன்பட்டதைக் காணலாம்; யுனானி மருத்துவ விளம்பரங்களை ஒரு டாக்டர் படிப்பு மாணவர்க்கு நான் லண்டன் வெல்கம் சென்டரில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன் ; இன்றுள்ள தமிழர்க்கு பல விஷயங்கள் புரியாது என்று அப்போது அவருக்கு சொல்லிக் கொடுத்தேன் .
XXXX
52 .பிள்ளையில்லாதவற்கு
இலவம் சருகையிடித்து எட்டுக்கொரு பாகமாய்க் கஷாயம் வைத்து ஒரு வேளைக்கு இரண்டு பலம் கியாழத்திற்குக்குறையாமல் குடித்து வந்தால் பித்தம் பயித்தியம் இவைகளை போக்கிவிடும். கெற்பக்குழியை சுத்தம் செய்து கருத்தரிக்கச் செய்யும்.
இஞ்சியை மேல் பரணி சீவிவிட்டு துண்டு துண்டாய் அறுத்து ஆரே க …..ல் ரூபா இடைநிறுத்து பொங்கப்பொங்க கொதி வரும்படி காச்சி இறக்கி அரைக்கால்படி ஜலத்தில் மேற்படி இஞ்சிகளைப் போட்டு நாலு மணி நேரம் ஊரவைத்து வடிகட்டி அந்த ஜலத்தையடுப்பிலேற்றி 75 ரூபாயிடை வெள்ளை சக்கரை போட்டு கலக்கி பாகுபதத்தில் எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு வேளைக்கு அரை ரூபாயிடை சாப்பிட்டு வரவும்; பித்த சாந்தி, மனோ தைரியம் உண்டாகும் .
XXXX
55 . ஈளை இருமலுக்கு
இஞ்சிச் சாறும், மாதுளம் பூச்சாறும் தேனும் சமனாய்க் கலந்து ஒருவேளைக்கு அரைக்கால் படி வீதம் சாப்பிட்டுவர மேற்படியிருமல் சாந்தியாகும்.
XXXXX
56. இண்டந்தண்டை ஊதின தண்ணீர் அரைக்கால்படி திப்பிலிப் பொகடி திருகடி பொரித்த வெங்காரப்பொடி மூன்று களஞ்சி இதுகளை ஒன்றாய்க்கூட்டி கொடுக்கவும்; ஈளை இருமல் சாந்தியாகும்.
XXXX
57 .இந்துப்பும் கற்கண்டும் பொடித்து திருகடிப் பிரமாணம் ஒருவேளைக்கு கொடுத்து கொஞ்சம் வெந்நீர் கொடுக்கவும். இப்படி 5-6-10 வேளை வரையில் கொடுக்கவும்; (இருமல்) சந்தியாகும்
XXXX
58 . பித்த சாந்தி
இஞ்சி- திரிகடுகு- ஏலம்- அதிமதுரம்- சீரகம்- சந்தனத்தூள் வகைக்கு வராகநிடை 1 எடுத்து சிதைத்து ஒரு படி தண்ணியில் போட்டு அரைக்கால் படியாகக் கஷாயமிட்டு இறக்கி கொஞ்சம் சீனி கலந்து கொடுக்கவும். இப்படி5-6 வேளையில் கொடுக்க பித்த சிலுமிஷம் சாந்தியாகும்.
XXXX
59 . பித்தஎரிவுக்கு
இஞ்சிச் சாறும் கழுதைப்பாலும் ஒரேயளவாய்க்கலந்து வேளை ஒன்றுக்கு அரிக்கால்படி வீதம் உள்ளுக்குக் கொடுத்து ஆதளை யிலையும் முத்தெருக்க ..செவியும் ஓர் நிறையெடுத்து ஒரு வருஷத்துக் காடிவிட்டு மைபோலயிடித்து உச்சி முதல் பாதம் வரை யில் பூசிவைத்து மாலையில் நீராடிவரவும். இப்படி பத்து நாள் செய்ய அசாத்தியமான உடம்பெரிவு தீரும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1
ச.நாகராஜன்
நூறு டாலர் நோட்டு
அமெரிக்க நூறு டாலர் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? அவர் தான் அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின். அவரை கௌரவிக்கும் விதமாகவே அமெரிக்கா தனது நூறு டாலர் நோட்டில் அவர் படத்தைச் சித்தரித்துப் பெருமைப்படுகிறது; அவரைப் பெருமைப்படுத்துகிறது!
பன்முகப் பரிமாணம் கொண்ட அவரது வாழ்க்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. அவரது சுயசரிதை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.
பிறப்பும் இளமையும்
மிக சாதாரணமான எளிய குடும்பத்தில் 1706ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அவரது தந்தை ஜோசையா பிராங்க்ளின் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பவர். அவருக்கு இரு மனைவிகள் மூலம் 17 குழந்தைகள் உண்டு. பத்தாவதாகப் பிறந்தவர் பிராங்க்ளின்.
ஏழ்மையான குடும்பம். ஆகவே அவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. ஒராண்டு மட்டுமே அவரால் பள்ளிக்குப் போக முடிந்தது.
ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிக்கும் அவர் ஏழாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நான்கு மொழிகளைக் கற்றார். பதினேழாம் வயதில் பிலடெல்பியாவிற்குச் சென்றார்.
இளம் வயதில் செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்த அவர் தானாகவே ஒரு செய்தித்தாளை ஆரம்பித்து சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ஒரு பிரிண்டிங் பிரஸை நிறுவிய அவர் அதில் ஏராளமான சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவரது வழக்கமாக ஆனது.
இதனால் தான் அவர் 23 வயதிலேயே ஒரு அச்சக முதலாளியாகவும், பத்திரிகை வெளியீட்டாளராகவும் எழுத்தாளராகவும் ஆக முடிந்தது. பின்னால் அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு ராஜ தந்திரி ஆனார். விஞ்ஞானி ஆனார். பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக 1737 முதல் 1753 வரை பதவி வகித்தார்.
அரசியல் வாழ்வு
சமுதாய அக்கறை கொண்டு அதை மேம்படுத்தும் எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட ஆரம்பித்தார். பிரான்ஸுக்கான முதல் யு.எஸ். தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். 1785 முதல் 1788 முடிய அவர் பென்சில்வேனியா தலைவராக ஆனார்.இங்கிலாந்துடன் நல்ல உறவை மேற்கொண்ட அவரது புகழ் பரவியது. முதலில் தனது பத்திரிகையில் ‘அடிமைகள் விற்பனைக்கு’ என்று விளம்பரத்தை பிரசுரித்து வந்த அவர், பின்னர் அது தவறு என்று உணர்ந்து மனம் மாறி அடிமைத்தனத்தை ஒழிக்க வெகுவாகப் பாடுபடலானார். அப்போது அமெரிக்க புரட்சி தோன்றவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அமெரிக்க காலனிகள் 13ஐயும் ஒன்றிணைக்க முனைந்து உழைத்தார்.
அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவர்
அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் (Founding Fathers) ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார்.
அமெரிக்க புரட்சியை நடத்தி 13 காலனிகளை ஒருங்கிணைத்து யுனைடட் ஸ்டேட்ஸின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் இவர்களே.
13 அம்சத் திட்டம்
தனக்குத் தானே அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி பெற வாழ்நாளில் தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய 13 அம்சங்களை ஒரு தாளில் அவர் குறித்து வைத்துக் கொண்டார்.
அது என்ன 13 அம்சம்?
1.நடுநிலைமையுடன் அணுகல் 2. மௌனம் 3. ஒழுங்கு 4. உறுதி எடுத்தல் 5. சிக்கனம் 6. உழைப்பு 7. நேர்மை 8. நியாயம் 9. சுத்தம் 10.மிதமான போக்கு 11.அமைதி 12. தூய்மை 13. எளிமை
இந்த 13 அம்சங்களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டு எதிரே வார நாட்களைக் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அம்சத்தை மட்டும் மிகுந்த கவனத்துடன் மனமூன்றி அவர் கடைப்பிடிப்பார். அதை நாள்தோறும் அவர் சரி பார்ப்பார். அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஏராளமான X குறிகளை இடுவார். இப்படி தினமும் இவற்றைச் சரிபார்க்கப் பார்க்க நாளடைவில் அவரது தாளில் X குறிகளே குறைந்தது. இப்படி வருடத்தில் உள்ள 52 வாரங்களில் நான்கு முறை இந்த 13 அம்ச திட்டத்தை அவர் கடைப்பிடித்தார். இதன் பலன் அபாரமாக இருந்தது. அதை அவரது வாழ்க்கையின் வெற்றி காண்பித்தது;
நேர்மை, நியாயம் என்பதில் தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். முறை தவறி தனக்கு ஒரு மகன் பிறந்ததை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். வில்லியம் என்ற அந்த மகனைத் தானே வளர்த்தார்.
இந்த 13 அம்சத் திட்டம் அனைவருக்குமானது. உலகின் ஆகப் பெரும் விற்பனையாளராகத் (Salesman) திகழ்ந்த பிராங்க் பெட்கர், பிராங்கிளினின் திட்டத்தினால் உத்வேகம் பெற்றார். தனது விற்பனைத்துறையில் தனக்கேற்றவாறு 13 குணாதிசயங்களை அவர் குறித்து வைத்துக் கொண்டு முன்னேறலானார்.
அவர் கொண்ட 13 அம்சத் திட்டம் 1. உற்சாகம் 2. ஒழுங்கு 3. மற்றவர் பார்வையில் எதையும் பார்த்தல் 4. கேள்விகளைக் கேட்டல் 5. மற்றவரின் முக்கிய தேவையை உணர்தல் 6. மௌனம் (எதிரில் இருப்பவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டல்) 7.நேர்மை 8.தனது வேலை பற்றிய அறிவு 9. மற்றவரைப் பாராட்டுதல், புகழ்தல் 10. புன்சிரிப்புடன் பழகுதல் 11. பெயர்களையும் முகங்களையும் நினைவிலிருத்தல் 12. வாடிக்கையாளர் சேவை 13. விற்பனையைத் திறம்பட முடித்தல்
தனக்கென ஏற்படுத்திக் கொண்ட இந்த கொள்கை திட்டத்தை அவர் கடைப்பிடித்ததால் உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக ஆனார்.
ஆகவே முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு 13 அம்சத் திட்டத்தை உருவாக்கி அதைத் தினமும் ஊன்றிக் கவனித்துக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். இப்படி வெற்றிக்கு ஒரு புதுமுறை வழிகாட்டியாக ஆனார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அவர் செஸ் விளையாட்டில் நிபுணர். நீச்சல் வீரர். வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே மேற்கொண்டார்.
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் என்று வள்ளுவரின் கோட்பாட்டை கடைப்பிடித்தவர் அவர்..
Tirumala Tirupati Devasthanam’s 3-day conclave ends with plans to stop conversions among Hindus, propagate Hindu Dharma & initiate non-Hindus into Sanatana Dharma.
TTD Chairmam Karunakar Reddy stressed upon revival of dilapidated temples.
The Hindu Dharma conference concluded that it is necessary to teach as many people as possible to protect their religion and promote spirituality in every person.
The Tirumala Tirupati Devasthanams (TTD) to start a system to prevent religious conversions and encourage “ghar wapsi” for Hindus who converted to other religions in the past.
The Tirumala Tirupati Devasthanams (TTD) chairman Bhumana Karunakar Reddy on Monday said the discriminatory attitude of some sections of the Hindu society towards certain castes has led to religious conversions especially in rural areas, adding that TTD would take initiatives to prevent such conversions in the state and encourage “ghar wapsi” (reconversion) of the Hindus who had converted into other religions in the past. TTD will establish a system to take the initiative forward, he said.
“The three-day conference suggested that religious activities in Harijanawadas and Girijanawadas, like Dalita Govindam and Girijan Govindam, construction of Hindu temples in their respective areas and appointment of priests belonging to SCs and STs in such temples have to be taken in a widespread manner to avoid conversions,” Reddy said while briefing reporters on the resolutions adopted at the conclusion of Dharmika Sadas at Tirumala.
The Dharmika Sadas observed that many of the youngsters belonging to Hinduism are changing their religion due to poverty and the influence of the environment around them. “The conference concluded that many training camps and other schemes are necessary to put an end to this situation,” he said.
Stating that the TTD would take initiatives to encourage “ghar wapsi” of such people who want to come back to Hinduism, Reddy said it was resolved that the TTD would establish a system for the same.
“If people of any other religious faiths voluntarily come forward to practise Hinduism, such people will be initiated into Hinduism by a “samprokshana” (sprinkling of sacred water) ceremony at the Lord Venkateshwara temple in Tirumala,” the TTD chairman said.
Such converted Hindus would be provided with a darshan of the Lord on the same day. Subsequently, they would be trained in Hindu rituals and taught traditions and practices as part of the Sanatana Dharma, he said.
The Dharmika Sadas resolved that Itihasas and Puranas (ancient Hindu religious scriptures) would be propagated in a big way so that all sections of people, right from children to adults, can easily understand the essence. “For this, there is a need to train Dharma Pracharakas (propagators of Dharma),” he said.
Among other resolutions adopted at the conclave are: development of Tirupati as a spiritual city to create a spiritual atmosphere on the lines of Tirumala, restoration of dilapidated temples across the state, construction of temples in Dalit, tribal and fishermen colonies in a big way, taking up of special measures for the protection of cows, promotion of Dravidian Vedas and extensive usage of social media to promote the principles of Sanatana Dharma to every nook and corner of the society.
TTD constructed thousands of temples in the backward areas under SRIVANI Trust and would continue the programme. ‘Gou Samrakshana’ activity would be taken forward in a widespread manner to protect cows. Measures would be taken towards the preservation of Veda Dharma and Vedic sciences Hindu Sanatana Dharma needs to be propagated so that its essence reaches every common man and village folk. The place of a mother is highly revered in the society. So mothers should be given training in Hindu Sanatana Dharma so that they could teach their children from a tender age and make them good citizens.
The Dravida Veda, which was given by the 12 Alwars for the welfare of mankind, akin to Vedas would be encouraged. The priority of Hindu Dharma should be emphasised in the existing curricula of various schools. To teach Telugu and Sanskrit to young men and women to understand and practice Hinduism. The principles of Sanatana Dharma should reach every nook and corner utilising the tools of social media in a big way. Such conferences should be held in Tirumala or Tirupati once every year as this conference contributes to the preservation of Hindu Dharma. Dharmic sadas to be held at village and district levels to enlighten the rural masses. The resolutions passed in this conference should be implemented not only by the Tirumala Tirupati Devasthanams but also by all the Hindu religious and charitable institutions present across the globe towards the preservation of Hindu Dharma.
The participants also felt that Hindu dharmic activities need to be taken up in a widespread manner in Harijanawadas and Girijanawadas to avoid conversions. “During the conference, the members opined that Dharmic programmes will be successful only when they reach the target audience. So, it is necessary to teach as many people as possible to protect their religion and promote spirituality in every person,’’ the TTD Trust Board chairman said.
Asserting that temples help inculcate good manners in society, Karunakara Reddy said, “Thousands of temples are crumbling, and in some places, they are disappearing altogether. Revival of dilapidated temples and construction of mandirs in Dalit, tribal and fishing areas need to be taken up in a big way.’’
He added that the TTD has already constructed thousands of temples in backward areas under SRIVANI Trust and will continue the programme.
The TTD has received several suggestions from the pontiffs, which include propagating ‘Itihasas’ and ‘Puranas’ (written texts of Hinduism) to all sections of people to help them understand their essence easily.
The TTD has also decided to train women in the ways of Sanatana Dharma so that they could teach their children to be “good citizens of Bharat” from a young age.
Sixty Pontiffs and Spiritual Gurus
Chilkur Balaji Temple head priest CS Rangarajan lauded the Tirumala Tirupati Devasthanams (TTD), under the chairmanship of Bhumana Karunakar Reddy and Executive Officer AV Dharma Reddy, for conducting the Dharmika sadas with over 60 pontiffs and spiritual gurus.
The priest cited an instance from the Munivahana Utsavam in 2018 where he had carried a Dalit on his shoulders in Jiyaguda to demonstrate that Sanatana Dharma does not discriminate against anyone. This incident received a lot of positive responses from devotees, he added.
The priest said that the Ahobila Mutt is spearheading the move in involving Chenchus as Narasimha Dasas and during the Paruvetta Utsavam, the deity of Ahobilam – Sri Prahlada Varada – travels to 44 villages in a palanquin and spends time in the most backward areas in Ahobilam.
—subham—
Tags- Tirupati, TTD, Hindu Conference, resolutions, conversion
1.ஜெய்ப்பூர் நகரம் எங்கே இருக்கிறது?அதன் சிறப்பு என்ன ?
xxxx
2.ஜெய்ப்பூரில் கோவில்கள் உள்ளனவா ? முக்கியக் கோவில்கள் எவை ?
xxxx
3.குரங்குக் கோவில் எங்கே இருக்கிறது?
xxxx
4.ஜெய்ப்பூர் அரண்மனைகளில் ஹவாமஹால் ஏன் மிகவும் பிரசித்தமாகியது?
xxxx
5.ஜல் மஹால் என்று அழகிக்கப்படும் நீர் அரண்மனையை யார் காட்டினார்?
xxxx
6.முதல் சுதந்திர போரில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் கோட்டை எது?
xxxx
7.ஜெய்ப்பூருக்கு அருகில் பவானி அம்மனின் பெயர்தாங்கிய கோட்டை எது ?
xxxx
8.நகரிலுள்ள முக்கிய மியூசியத்தில் பெயர் என்ன ? அங்கே என்ன என்ன பார்க்கலாம் ?
xxxx
9. சிட்டி பாலஸ் அரண்மனையை யார் கட்டினார் ? அங்கே இப்போது என்ன உள்ளது?
xxxx
10.ஐந்து நகரங்களில் ஜந்தர் மந்தர் Jantar Mantar என்ற பெயரில் ஜெய்ப்பூர் மன்னர் வானாராய்ச்சிக் கூட்டங்களைக் கட்டினார் ; ஜெய்ப்பூர் நிலையத்தின் சிறப்பு என்ன?
xxxx
Jaipur Bag
Jal Mahal, Water Palace
விடைகள்
1.இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகரம் ஜெய்ப்பூர் இங்குள்ள கட்டிடத்தின் நிறம் இளம் சிவப்பு; ஆகையால் இதை பிங்க் சிட்டிPink City என்று அழைக்கிறார்கள் . இங்குள்ள அரண்மனைகள் காரணமாக இது மிகவும் புகழ்பெற்றது . அத்தோடு இங்கு தயாரிக்கப்படும் துப்பட்டிகள், கம்பளங்கள், நெய்யப்படும் புடவைகள், செய்யப்படும் பளிங்குக்கல் பெட்டிகள் , நகைகள், வளையல்கள் ஆகிய அனைத்தும் ஒப்பற்ற ராஜஸ்தான் பாணியில் கண்ணைக் கவரும் பொருட்களாக மிளிரும் . பல வண்ணங்கள் ஜொலிக்கும். டில்லியிலிருந்து 288 கிமீ தொலைவில் இருக்கிறது.பிர்லா மந்திர் முதலிய கோவில்கள் இருக்கின்றன.
Xxxx
2.பத்து கி.மீ தொலைவில் ஆரவல்லி குன்றுகளின் பாறைகளிடையே அமைந்த கல்தாஜி கோவில் மிகவும் பிரசித்தமான வைஷ்ணவ கோவில் ஆகும். இது 500 ஆண்டு பழமையான ராமானந்த சம்ரதாயத்தினரின் புனிதத் தலம் . பல மாநில பக்தர்கள் இங்கு வருகிறார்கள். ராமானந்த சம்பிரதாய மகான்களின் புனித குகைகள் உள்ளன. மேலும் ஏழு புனித ஊற்றுகளிலிருந்து வரும் நீர் கல்தா குண்டத்தில் சேருகின்றன. அங்கே குளிப்பது புனித நீராடல் ஆகும். மகர சங்கராந்தி / பண்டிகையின்போது பல்லாயிரக் கணக்கானோர் நீராட வருகின்றனர் . மலை மீதும் இயற்கை நீரூற்று உண்டு. அங்கிருந்துநகர் முழுதையும் காணலாம்; சூரியன் கோவிலும் இருக்கிறது .
xxxx
3.கல்தாஜி கோவில் வளாகத்தில் சீதாராம் கோவில் இருக்கிறது; இங்கு சுமார் 200 குரங்குகள் இருக்கின்றன. இதனால் இதை ஆங்கிலேயர்கள் குரங்குக் கோவில் என்று அழைத்தனர் .
xxxx
4.ஹவா என்றால் காற்று ; இதில் சுமார் ஆயிரம் ஜன்னல்கள் இருப்பதால் இதை காற்று வீசும் அரண்மனை என்று அழைத்தனர். இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூர் மன்னர் சவாய பிரதாப் சிங் கட்டினார். இளம் சிவப்புக் கற்களினால் கட்டப்பட்ட இங்தக கட்டிடம் காலை சூரிய ஒளியில் பொன்போல தகதகக்கும் . 953 சிறிய ஜன்னல்களை ஜரோகாக்கள் என்று கூறுவர். ஐந்தடுக்குக் கட்டிடத்தின் மேல்புற ஜன்னல்களிலிருந்து ராணியும் அவருடைய தோழிகளும் நகரின் முக்கியவீதியைப் பார்க்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டது ராஜஸ்தானி/ மார்வாரி குடும்ப பெண்கள் வெளியே வரமாட்டார்கள் .
ஜெய்ப்பூர் நகரத்தை திட்டமிட்டு உருவாக்கிய லால் சந்த் உஸ்தா இந்த ஹவா மஹாலையும் திட்டமிட்டார்.
Xxxx
(5). 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டது ஜல மஹால்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் ஜெயசிங் என்ற மன்னர் கட்டினார். மாழைக்காலத்தில் கட்டிடத்தின் ஐந்து அடுக்குகளில் 4 அடுக்குகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
Xxxx
(6). 1857-ல் பிரிட்டிஷாரை எதிர்த்து இந்தியப்படையினர் புரட்சி செய்தனர். இதை சிப்பாய் கலகம் என்று வெள்ளைக்காரர்கள் மட்டம்தட்டி இகழ்ந்தபோதும் இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று வீர சாவர்க்கர் அழைத்தார். மராத்திய படைகளையும் ஆங்கிலப் படைகளையும் சமாளிப்பதற்காக ஜெய்ப்பூர் மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங், கிபி 1734ல் நாகர்கர் கோட்டையை நிறுவினார். 1857 ல் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கின. இது நகருக்கு அருகில் இருக்கிறது.
xxxx
7.நகரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கோட்டை அம்பாளின்(பவானி அம்மன்) பெயரில் ஆம்பர் கோட்டை என்று அழைக்கப்படுகிறது ; இது ஆயிரமாண்டுகளுக்கும் மேலான பழமை உடையதால் யுனேஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் குலத்தினர் முதலில் அமைத்த சிறிய கட்டிடத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜ மான் சிங் அரண்மனையாகக் கட்டினார். பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டது. அருகில் பெரிய ஏரி இருக்கிறது; ஆமேர் என்னும் ஊரில் இருப்பதால் ஆமேர் கோட்டை என்றும் சொல்லுவார்கள் .
xxxx
8.ஜெய்ப்பூரில் பத்து மியூசியங்கள் இருக்கின்றன . அவைகளில் மிகவும் புகழ்வாய்ந்தது ஆல்பெர்ட் ஹால் மியூசியம். இது இரண்டு அடுக்குமாடி கட்டிடம் . ராஜஸ்தான் மாநில ம்யூசியமாக கருதப்படும் இங்கு ஓவியங்கள் கம்பளங்கள், நகைகள், தந்தத்தினாலான பொருட்கள், கற்சிலைகள், உலோக விக்கிரகங்கள், கிரிஸ்டல் என்னும் பலிங் கு கற்களிலான உருவங்கள் முதியவற்றைக் காணலாம்.இவை அனைத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. பல கைவினைப் பொருட்களையும் காணலாம்.
xxxx
9.ஜெய்ப்பூர் சமஸ்தான தலைநகரை ஆம்பர் நகரிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றியவுடன் இரண்டாம் ஜெய் சிங் 1732- ல் இதை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினார் . அதுமுதல் மன்னர் குடும்ப வசிப்பிடமாகவும் நிர்வாக அலுவலமாகவும் திகழ்கிறது.
இளஞ்சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டது; அரண்மனை சுவர்களையும் , கூரைகளையும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகள் அலங்கரிக்கின்றன.
ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தின் மேற்கு பகுதியில் அமைந்த சந்திர அரண்மனை ஏழு தளங்கள் கொண்டது. இவ்வரன்மனை அழகிய ஓவியங்கள், பல நிறக் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பூக்களால் ஆன சுவர்கள், தரைகளைக் கொண்டது..
சந்திர மகாலின் நான்காம் தளத்தை, சோபா நிவாஸ் என்பர். இது கண்ணாடி மாளிகை .ஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தை ஸ்ரீ நிவாஸ் என்பர். ஏழாம் தளத்தை மணி மகுடக் கோயில் என்பர். அரண்மனைக்குள் கிருஷ்ண கோவில் இருக்கிறது ப்ரீத்தம் நிவாஸ் சதுக்கத்தில் இந்துக் கடவுளர்களைக் காணலாம்.
இங்கு ஒரு மியூசியமும் இருக்கிறது; அரச குடும்பத்தினர் 500 ஊழியர்கள், சேவகர்களுடன் வசிக்கின்றனர் . திவானி ஆம், திவானிகாஸ் என்று பல பகுதிகளைக் கொண்ட விஸ்தாரமான அரண்மனை இது.
Xxxx
10.இங்குள்ள சன் டயல்,Sun Dial, கருவிதான் உலகிலேயே மிகப்பெரியது ; சூரியனின் நிலையையும் துல்லியமான நேரத்தையும் காட்டுவது சன் டயல் என்னும் சூரிய கடிகாரம் ஆகும்.
City Palace
–சுபம்–
Tags- சிட்டி பாலஸ், சன் டயல், கண்ணாடி மாளிகை, ஆல்பெர்ட் ஹால் மியூசியம், குரங்குக் கோவில், ஹவா மஹால், ஜெய்ப்பூர், அரண்மனை
இயற்கையில் ஒரு அதிசயம் வெட்டிவேர் ; இந்தியாவில் தோன்றி இப்பொழுது பல நாடுகளில் பயிரிடப்படும் இந்த தாவரத்தின் அதிசயம் என்னவென்றால் இறைவன் இதன் வேரில் நல்ல மணத்தை, நறுமணத்தை வைத்துள்ளான் . வாசனை வீசும் பூக்கள் பல்லாயிரம் உள; வாசனை தரும் இலைகள் பல உள;ஆனால் உலகம் முழுதும் அதிக விலை கொடுக்கத் தயாராகவுள்ள வேர் ஒன்றே ஒன்றுதான்; அதுதான் வெட்டிவேர் .
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இந்த தமிழ்ச் சொல் இன்று உலகெங்கிலும் அப்படியே உச்சரிப்பு, ஸ்பெல்லிங் Spelling மாறாமல் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதாகும்
(கொஞ்சம் சுய சரிதை:- மதுரையில் வடக்குமாசி வீதியில் வசித்த காலத்தில் வீட்டிலும் சரி, வெளியே வைக்கும் தண்ணீர் பந்தலிலும் சரி, குளிர்ந்த பானை நீரில் வெட்டிவேரை வாங்கிப் போடுவோம். நறுமணம் தரும் அந்த நீர் , உடலுக்கும் மனத்துக்கும் நலம் தந்தது ; சிலர் பந்தல் அமைத்து இலவசமாக நீர் மோரையும் வழங்குவர்; அருகிலுள்ள கருவேப்பிலைக்கார சந்தில் ஒண்டிப்பிலி நன்னாரி சர்பத் Syrup சிரப் செய்வோரிடம் ஒரு பாட்டில் நன்னாரி எசன்ஸ் வாங்கி எலுமிச்சம் சாறு பிழிந்து சர்பத்தும் குடிப்போம் ; இப்போது லண்டனில் ரோட்டைல் நடக்கும் போதோ , ட்யூப் ரயிலில் பயணம் செய்யும்போதோ வெட்டிவேர் பெர்Fயூம், Perfume, சென்ட் வாசனை வருகையில் பழைய நினைவுகள் திரும்பி வருகிறது ).
விலை அதிகம் உள்ள வெட்டிவேர் எண்ணெய் இன்று நறுமணப்பூச்சில் அதிகம் பயன்படுகிறது; PERFUME பெர்Fயூம், சோப்பு, வாசனை வீசும் மெழுகுவர்த்தி என்று பல பயன்கள் இதற்கு உள்ளன.
தமிழ்நாட்டில் வெட்டிவேர் விசிறி, பாய் , ஜன்னலுக்கான தட்டிகள் ஆகியனவும் கிடைக்கின்றன.
மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தரும்.
நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரும்.
காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் ஆகியன நீங்கும்
மொத்தத்தில் இந்தியா போன்ற வெப்பநாடுக்ளில் சூட்டைத் தணிக்க இது பல வகைகளிலும் பயன்படுகிறது.
VETTIVER IN AROMATHERAPY
.அரோமா தெரபி (AROMATHERAPY0 எனப்படும் வாசனை எண்ணெய் சிகிச்சையில் வெட்டிவேர் ஆயில் தரும் பலன்களை
இந்த எண்ணெயை முகர்ந்து பார்த்தால் மன உளைச்சல் Relieve Stress மன இறுக்கம் தீரும் .
மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும் aid concentration .
படுக்கை அறையில் வைத்திருந்தால் நல்ல தூக்கம் வரும் Promote Sleep Moisturizer
இது உள்ள க்ரீம் அல்லது மாயச்சரைசர் Moisturizer பயன்படுத்தினால் சருமம்/தோல் ஆரோக்கியம் பெறும் Vetiver oil has skincare benefits.
XXXXX
விலை அதிகமாக காரணம் என்ன ?
ஒரு ஹெக்டேரில் வெட்டிவேர் பயிர் செய்தால் 3 அல்லது 4 டன் வேர் கிடைக்கும் . அதிலிருந்து 15 அல்லது 16 கிலோ ஆயில் / எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும்..
விலை என்ன ?
ஒரு லிட்டர் சுமார் £-600; அதாவது 60,000 ரூபாய் (600X100=60,000) முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை.
வெட்டிவேர் ஏற்றுமதி 2023 புள்ளிவிவரம்
வோல்சா சேகரித்த புள்ளிவிவரப்படி 545 நிறுவனங்கள் வெட்டிவேர் பொருட்களை/ எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. .அதை 1,487 நிறுவனங்கள் வாங்குகின்றன .
As per Volza’s Global Export data, Vetiver oil export shipments stood from World at 18.4K, exported by 545 World Exporters to 1,487 Buyers
அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் — இந்தியா 2,731 ஷிப்மென்ட்ஸ் கப்பல்களில் அனுப்புகிறது. இந்தோனேஷியா
பிரான்ஸ் – 2,027 ; நெதர்லாந்து -1,584 shipments.
ஹைட்டி (Haiti) என்னும் நாடும் இதை அதிகம் பயிர் செய்து அனுப்புகிறது
அதிகமாக வாங்கும் நாடுகள் : நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஸ்பெயின் , சிங்கப்பூர் , மலேசியா, அமெரிக்கா.
நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஆகியன இதை வாங்கி பிறருக்கு ஏற்றுமதி செய்வதை மேற்படி புள்ளிவிவரம் காட்டுகிறது .
எல்லா நாடுகளின் விவரங்களும் Volza இணைய தளத்தில் உள்ளன ( Volza’s Global Export data).
XXXXX
WISOM LIBRARY GIVES FOLLOWING DETAILS
வெட்டிவேரின் தாவரவியல் பெயர் –1) Vettiver in India is the name of a plant defined with Plectranthus vettiveroides in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Coleus vettiveroides Jacob (among others).
2) Vettiver is also identified with Vetiveria zizanioides It has the synonym Anatherum muricatum (Retz.) P. Beauv. (etc.).
2. Black cuscus-grass. See குறுவேர்¹. [kuruver¹.] Local usage
இதன் சிறப்பு என்னவென்றால் இதை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். வெட்டிவேரொடு வேறு பல நறு மணப் பொருட்களையும் கலந்து இருதரப்பினருக்கும் விற்கிறார்கள்
XXXX
வெட்டிவேர் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்குமிடம் :
Example references for further research on medicinal uses or toxicity (see latin names for full list):
· Bulletin de l’Institut Française d’Afrique Noire (1960) · Flora of the Southeastern United States … · Symbolae Antillarum (1903) · Anales del Museo Nacional de Buenos Aires (1904) · Journal of the Bombay Natural History Society (1941) · Petite Flore de l’Ouest-Africain (1954)
If you are looking for specific details regarding Vettiver, for example chemical composition, pregnancy safety, extract dosage, health benefits, side effects, diet and recipes, have a look at these references.
XXXXX
ஆண்கள் பயன்படுத்தும் 12 வெட்டிவேர் cologne, eau de toilette
Defy eau de toilette from (£33 for 30ml by Calvin Klein, available at Boots)
Amazingreen eau de parfum (from £59.50 for 50ml by Comme Des Garcons, available at Escentual)
Cèdre Vetiver eau de parfum (£32.80 for 30ml by Typology)
Light Blue Forever Pour Homme eau de parfum (from £46.75 for 50ml by Dolce & Gabbana at Look Fantastic)
Vetiver & Golden Vanilla cologne intense (from £86 for 50ml by Jo Malone London)
Vetiver Pamplemousse eau de parfum (from £15.89 for 40ml by Zara)
Vetiver Fatal cologne absolute (from £55 for 30ml by Atelier Cologne at John Lewis)
Grey Vetiver eau de toilette (from £57 for 50ml by Tom Ford, available at The Fragrance Shop)
Bel Ami eau de toilette (£98 for 100ml by Hermes, available at Selfridges)
Luna Rossa Ocean eau de toilette (from £54 for 50ml by Prada, available at Boots)
Vetiver eau de toilette (from £55 for 50ml by Guerlain)
Dark Spice & Vetiver eau de toilette (£12.50 for 100ml by M&S Fragrance Collection)
—subham—
Tags- வெட்டிவேர், Vetiveria zizanioide, வெட்டிவேர் ஏற்றுமதி