மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
XXXX
SLOKA 17
இன்னுமொரு பாடல்
अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥
அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்
த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி
அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்
ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளை தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
உண்மை வித்துவான்களைநீ உல்லிங்கனஞ் செய்யேல்
எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்
கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற்
கொண்டே கட்டலாகுமோ கூறு –17
xxx
SLOKA 18
இன்னுமொரு பாடல்
अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥
அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ
ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா
ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்
வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.
October 31, 2023(Article lifted from HINDU POST)Thanks to Hindu post
Posted on 1-11-2023 by swami_48@yahoo.com
What is Sandhya Vandana?
The Sandhya Vandana ritual is performed for Devi Gayatri, Savitri, and Saraswati, thrice a day:
· just before dawn
· at noon
· in the evening when the sun is half set
The steps in the ritual may differ as per the instructions of your kula-guru (family’s religious teacher). Generally, it includes performing pranayama, offering arghya to Surya, and chanting the Pranava mantra Aum with the Gayatri mantra. After the Sandhya Vandana ritual, the person can perform an Agnihotra or other prescribed yagnya and proceed with routine work. A person who regularly performs Sandhya Vandana with devotion obtains a healthy life.
Who can perform Sandhya Vandana?
1. Son of a Vaishya and Shudra
While hunting, Dasharatha fatally hurt Shravana by mistake. Dasharatha then informed his aged parents. Shravana was the dutiful son who took meticulous care of his blind and dependent parents. Shravana’s Vaishya (merchant) father and Shudra (service-oriented) mother were grief-stricken because he was a devoted child and their only support. His sad ascetic father remarked that Shravana used to do his Sandhya Vandana and Yagnya rituals every day. He then cursed Dasharatha to die pining for his son. Indra himself came in an aerial chariot to take Shravana to Deva-loka.
· Brahmana(s) and Kshatriya(s)
Rishi Vishwamitra took Shree Rama and Lakshmana to the forest to deal with the Rakshasa(s) who were disturbing their Brahmanical rituals. The trio performed the Sandhya Vandana rituals at dawn before traveling further. After many Rakshasa(s) were killed, they reached Videha, where Rama married Seeta.
· Sumantra, a charioteer
Just before Rama’s coronation, Kaikeyi wished for his exile and her son Bharata’s kingship. Rama, Lakshmana, and Seeta decided to leave the lavish palace of Ayodhya. Dasharatha’s charioteer Sumantra escorted them out of the city towards the forest. In the evening, Sumantra unyoked the horses and performed his Sandhya Vandana rituals. The next day, he dropped them at Shringaverapura on the banks of River Ganga and returned.
· Ravana, the son of a Brahmana and a Rakshasi
Ravana worshipped Bhagwan Shiva, who reluctantly granted him the Atma-linga. While carrying it, Ravana felt a tremendous urge to urinate due to Bhagwan Shiva’s powers of Maya. Ravana saw a young cowherd and asked him to hold the Atma-linga while he completed the job, which took quite a long time. The cowherd was Bhagwan Ganesha in disguise, who ran away with the Atma-linga, with Ravana in pursuit.
Further, Bhagwan Vishnu clouded the sun, making Ravana stop for his Sandhya Vandana evening prayers. The cowherd called out Ravana 3 times as pre-decided and put down the heavy Atma-linga. The furious Ravana hit out at the boy. When Bhagwan Ganesha appeared in his true form, Ravana apologized. Ravana then tried his best to dislodge the Atma-linga but failed.
· Vali, the monkey king
Vali was the brave and strong ruler of Kishkindha. Once, he was reciting his Sandhya Vandana prayers at the confluence of 3 oceans in the south. Ravana had attacked him from behind, only to have Vali toss him all around the world. The Rakshasa swore that he would never attack Vali again and begged for his friendship which the vanara granted. Ravana was to later abduct Seeta, and Vali would kidnap his brother Sugreeva’s wife Ruma.
· Seeta, the Queen of Ayodhya
When Hanuman was searching for Seeta, he reached the beautiful Ashoka Vatika. It was almost daybreak. Thinking she might come to a water stream for her Sandhya Vandana, he decided to wait on a nearby tree. There, he found and recognized Seeta since he had seen her fly past in the Pushpaka vimana. Later, Hanuman burned down Lanka and reported the events back to Rama. This led the vanara sena to construct the auspicious Rama Setu and the start of the war against the Rakshasa(s).
· Hanuman, the vanara Dev
When Shree Ram and Lakshmana were hurt on the battlefield, Hanuman carried a mountain with the sanjeeevani herbs to cure them. While returning the mountain back, Hanuman took a break for his Sandhya vandana prayers. Later, Lakshmana killed Indrajit, who wanted to perform an Asuric yagnya, and Rama killed Kumbhakarna and Ravana.
1. The royal couple
Rama and Seeta returned to Ayodhya and sat on the throne. Their daily routine concluded with the performance of the Sandhya Vandana ritual in the evening, having dinner, visiting temples for devotional worship, and resting at night.
Thus, Ramayana shows that a person from any of the 4 varnas (profession) or 4 varga (stages of life) can perform the Sandhya Vandana rituals.
(This article is part of an ongoing series on Ramayana by Shri Gaurang Damani and excerpted from his book “Untold Stories of Ramayana”.)
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45
இலங்கைத் தீவிலுள்ள சுமார் 4000 கோவில்கள் பட்டியலும் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆயினும் அதிலுள்ள பழமையான, முக்கியமான 108 ஆலயங்களை பற்றி எழுதத் துவங்கினேன். இன்னும் ஐயனார் கோவில்கள், ஐயப்பன் கோவில்கள் , நாச்சிமார் கோவில்கள், சப்த மாதா கோவில்கள், சீதா தேவி கோவில், ராமாயணத் தொடர்புள்ள கோவில்கள், நாகர் கோவில்கள்,பாபா கோவில்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவைகளில் முக்கியமானவற்றைக் காண்போம் .
103.சப்தமாதா கோவில் , இலங்கை
இலங்கையில் 7 கன்னிமார்கள் சப்தமாதா கோவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்னும் இடத்தில் சப்த கன்னிமார் ஆலயம் உள்ளது. இங்கு ஜூஉலை மாதம் வருடாந்திர உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்துவந்து வழிபாடு செய்கின்றனர் .
பண்டத்தரிப்பு வட்டாரத்தில் கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம் இருக்கிறது.
ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புக்கு இடையிலுள்ள மண்ணாக்கண்டல் பகுதியில் கோவில் இருப்பதை நவரட்ணம் தனது புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவைகளில் பல, நாச்சிமார் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வன்னி பிரதேசத்தில் 7 கன்னிமார்கள் வழிபாடு அதிகம் காணப்படுகிறது
xxxxxxx
வன்னியில் 7 வீர தெய்வங்கள்
ஹாலந்து நாட்டு ஒல்லாந்துப் படைகள் வன்னி குறுநில மன்னர்களையும் தளபதிகளையும் கொன்றபோது அவர்களுடை மனைவியர் 7 பேர் தீக்குளித்து இறந்ததால் அவர்களை 7 வீர தெய்வங்கள் என்று வணங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆயினும் சப்த மாத்ரிகா சிலை கள் இதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் கிடைப்பதால், இது ஆதிகாலத்திலேயே இங்கு இந்துக்களால் அறிமுகப்படுத்தகப்பட்டதும் தெரிகிறது.
மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை
ஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்
பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை
செங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….
பேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து
வீரா வேசமுடன் நஞ்சுண்டு மடிந்தனரே …
கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது
அற்புருக நின்றார்கள் வன்னிவள நாட்டினர்
( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)
அவர்கள் இறந்தபின்னர் தகனம் செய்யப்பட்டதால் தீக்குளித்தனர் என்ற சொல்லும் பொருத்தமாகவே உள்ளது.
Xxx
104. ஐயனார் கோவில்கள்
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஐயனார் உருவ சிலைகளையும் அருகில் குதிரைகளையும் காணலாம். தர்ம சாஸ்தா என்று ஐயனாரை அழைப்பதால் சபரிகிரி ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் தொடர்பு உண்டு; இருவரும் ஒருவரே என்று சொல்லுவோரும் உண்டு.
கருணையே வடிவான சிவ பெருமான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்ததும் அவன் அதை சிவன் தலையிலேயே கை வைத்து சோதிக்க எண்ணிய போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவனை மயக்கியதும் புராணக்கதைகளில் வருகிறது.. அப்போது, சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவரே ஐயனார் என்பது பிற்காலப் புராணங்கள் தரும் செய்தியாகும் ; கிராம மக்கள் வறட்சி நீங்கி, வளம் கொழிக்க ஐயனாரை வணங்குகின்றனர் .
யாழ்ப்பாண அராலி கிழக்கில் இருக்கும் மலையாளங் காடு ஐயனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உத்தர உற்சவம் நடைபெறுகிறது
வண்ணார் பண்ணை , அராலி, சுன்னாகம் , ஐயனார் கோவிலடி,வரணி ஐயனார் கோவில்கள் அருகிலுள்ள பெரிய கோவில்களாலும், கட்டிடங்களாலும் காண்பதற்கே அரியன ஆகிவிட்டன
புத்தகளம் – அனுராதபுரம் வழியில் பழமையான அய்யநாயக்க தேவாலய (தப்போவ) கோவில் இருக்கிறது. சிலாபம் வரையில் A12 மற்றும் A3 வீதிகளில் பிரதான வீதியில் மட்டும் ஏறத்தாழ இருபது அய்யனார் /அய்யநாயக்க கோவில்களை காணலாம்
சிலாவம் அருகில் மாதம்பையில் உள்ள ஐயனார் கோவிலில் பெரிய குதிரையைக் காணலாம். சிங்களத்தில் ஐயனார் என்பதை அய்யன என்பார்கள்.
மன்னார்- பூநகரி வழியில் உள்ள வெள்ளங்குளம் ஐயனார் கோவில் , அந்த வழியில் செல்லும் யாத்ரீகர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஏராளமானோர் கற்பூரம் ஏற்றிவிட்டு, சதிர் தேங்காய் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம்..
திருகோணமலை அருகில் பெரியகுளத்தில் ஐயனார் கல்லுக்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
மட்டக்களப்பு வட்டாரத்திலும் ஐயனார் கோவில்கள் இருக்கின்றன
ஹிந்து மதத்தில் ஏராளமான பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதாகப் பொய்க் கதை பேசித் திரியும் அரசியல்வாதிகள் ஏன் மற்ற மதங்களைப் பற்றிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?
சுயநலவாதிகள்! அதனால் தான்!
ஹிந்து மதத்தை ஆதாயமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த நினைக்கும் இவர்களை ஹிந்துக்கள் ஒதுக்க வேண்டும்; அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
இவர்களில் சிலர் நான் கிறிஸ்துவன் என்று மேடையிலேயே கர்வத்துடன் கூறிக் கொள்கிறார்கள்!
கிறிஸ்தவத்தில் பிரிவே இல்லையா?
இஸ்லாத்தில் பிரிவே இல்லையா?
பார்ப்போமா?
ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் – பிரிவே இல்லாத அபூர்வமான அதிசயமான சமநீதி பேசி அதைக் கடைப்பிடிக்கும் ஒரே உலக மதம் – கிறிஸ்தவம்! அடடா? அப்படியா?!
ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் (Roman Caholic and Syrian Catholic Church) நுழைய மாட்டார்கள்!
இந்த இரண்டு பிரிவு கத்தோலிக்கர்களும் மார்தோமா சர்ச்சுக்குள் (Marthoma Church) நுழைய மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்த் சர்ச்சுக்குள் Pentecot Church)
நுழைய மாட்டார்கள்.
இந்த நான்கு பிரிவினரும் சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் (Salvation Army Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஐந்து பிரிவினரும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சுக்குள் (Seventh Day Adventist Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஆறு பிரிவினரும் ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்குள் (Orthodox Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஏழு பிரிவினரும் ஜோகோபைட் சர்ச்சுக்குள் (Jacobite Church) நுழைய மாட்டார்கள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
146 பிரிவுகள் உள்ளன கிறிஸ்தவ மதத்தில்.
ஒரு சர்ச்சை இன்னொரு சர்ச் ஆதரிக்காது. அனுமதிக்காது. உள்ளே நுழைய மாட்டார்கள் என்றால் நுழைய விட மாட்டார்கள் என்று அர்த்தம்!
இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?
பதில் யாருக்கும் தெரியாது? …. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!
சரி இஸ்லாமுக்கு வருவோம்.
ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!
இஸ்லாமில் முஸ்லீம்களில் ஷியாவும் சன்னியும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கண்கூடு. இதனால் ஏற்பட்ட போர்களையும் அதில் இறந்த இஸ்லாமியரையும் எண்ணிப் பார்த்தால் வருத்தமே ஏற்படும்.
உலகில் உள்ள மதக் கலவரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் இந்த இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட அடிதடி, சண்டை, கலவரம் நம்மைத் திகைப்புறச் செய்யும்.
ஷியா பிரிவினர் சன்னி பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சூபி மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
குறைந்தபட்சம் 13 பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன.
இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்ட இஸ்லாமில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 73!
இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள், குண்டு போட்டு அழிக்கிறார்கள், கூண்டோடு ஒழிக்கிறார்கள்.
ஆஹா! ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!
இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?
பதில் யாருக்கும் தெரியாது? ….. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!
இது போக சிலுவைப் போர்கள், சமீபத்தில் நடந்த குவைத் போர் இவற்றையும் சற்றுப் படித்து ஆராய வேண்டும்.
நல்ல கிறிஸ்தவர்களும், நல்ல இஸ்லாமியரும் இந்த போலிப் பசப்புவாதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களைப் பகடைக் காய்களாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களை அரசியலை விட்டு அப்புறப்படுத்த இறைநம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்தால்…..
PICTURES ARE FROM COLOMBO MUSEUM; TAKEN BY LONDON SWAMINATHAN
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 5
SLOKA 13
येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न धर्मः । ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥
13. Those without learning, penance, charity, awareness, good conduct and righteousness, are animals roaming in human garb, and are a burden to this earth.
14. Roaming in unapproachable mountains in the company of forest-dwellers, is superior to the company of fools even if in the palaces of Indra’s heaven.
வரம் பர்வத துர்கேஷு
ப்ராந்தம் வனசரை ஸஹ
ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ
ஸுரேந்த்ர பவனேஸ்வபி
பொருள்
முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட
காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.
15. The king, in whose territory well-known, learned people, whose words are embellished by the Shastras and hence pleasing, whose knowledge of sacred works is worthy of imparting to disciples, live in poverty – it speaks of the ruler’s ignorance indeed. Learned ones are masters even without wealth. The gem appraisers are to blame, and not the gems, if the latter are valued less than their real worth.
சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால், அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;
பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின் பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!
xxxx
குறள் 834, 835
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்- 834
நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு-835
ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.
ஒவ்வொரு மூலிகைக்கும் உள்ள வெவ்வேறு மாற்றுப்பெயர்களையும் 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியில் காணலாம். நீங்கள் மூலிகைப் பிரியராக இருந்தால் பதினைந்து மூலிகைகளையும் கண்டுபிடித்துவிடுவீர்கள்
This is Part 8
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
நவம்பர் மாத பண்டிகைகள் – 12 –தீபாவளி; 13- கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் ; 18- சூர சம்ஹாரம் , 23- சத்திய சாயிபாபா பிறந்த தினம்; 26- திருக்கார்த்திகை;
நவம்பர் மாத முகூர்த்த தினங்கள் – 16, 19, 29.
அமாவாசை -நவம்பர்13; பெளர்ணமி – 27; ஏகாதசி -8, 23
(Sri Anandamayi Ma April 30, 1896 – August 27, 1982)
ஸ்ரீ ஆனந்தமயி மா — பிறப்பு ஏப்ரல் 30, 1896 – சமாதி ஆகஸ்ட் 27, 1982
xxxxx
நவம்பர் 1 புதன் கிழமை
இன்பமும் துன்பமும் கால எல்லைக்குட்பட்டவை. அவை நீண்ட காலம் இராது ஆகையால் ஒருவர் அதனை எண்ணி கலங்க வேண்டியது இல்லை கடவுள் பற்று அதிகரிக்க ,அதிகரிக்க அடிமனத்திலிருந்து பிரார்த்தனையும் அதிகரிக்கும் . முதிர்ச்சி ஏற்படுகையில் , அந்த சக்தி உங்கள் வசப்பட்டுவிடும்.
xxx
நவம்பர் 2 வியாழக் கிழமை
ஆன்மீக வழியில் செல்லும்போது உள்ளுக்குள்ளே சில அனுபவங்கள் தோன்றாமல் , அதில் நீடித்து இருக்கமுடியாது.
Xxxx
நவம்பர் 3 வெள்ளிக் கிழமை
இங்கு தோன்றுவன எல்லாம் இறைவனின் தெய்வீக சக்தியின் காட்சிதான் — கடவுளே ஆக்க சக்திதான்.
Xxxx
நவம்பர் 4 சனிக் கிழமை
இறைவன்தான் நம் காதலன் என்பதை மறக்கும்போது , ஏனைய புலன் இன்பத்தில் நாட்டம் ஏற்படுகிறது
xxxxx
நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை
துன்பத்தை நீக்கும் ராம நாமத்தில் அராம ( அமைதியும் பதற்றமில்லாமையும்) இருக்கிறது. ராமா இல்லாத இடத்தில் வ்யராம (நோயும், பதற்றமும் ) இருக்கிறது.
Xxxx
நவம்பர் 6 திங்கட் கிழமை
நமக்கு நாமே ஆத்ம சோதனை செய்துகொண்டால் , ஒரு விஷயத்தை அறியமுடியும்; பறவைகளும் மிருகங்களும் கூடத்தான் உண்டு களிக்கின்றன.குடும்ப வாழ்வு நடத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆத்மாவின் உண்மை நிலையை அறிய முடியும்.இந்த வாய்ப்பினை மனிதர்கள் நழுவ விடக்கூடாது.
xxxx
நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை
நாம் யார் என்பதை ஒவ்வொரு நாளும் சில வினாடிகளாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.மீண்டும் மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் Return ticket வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது; அதாவது ஜனன- மரணம் ; உண்மையில் இது நம்முடையது அல்ல ;அதை முதலில் உணரவேண்டும்.
Xxxx
நவம்பர் 8 புதன் கிழமை
பூமிக்கு அடியில் விலையுயர்ந்த ரத்தினங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனாலும் கடின உழைப்பின் மூலமே அவைகளை அடைய முடியும்.
xxx
நவம்பர் 9 வியாழக் கிழமை
நீங்கள் எவ்வளவு பலவீனன் ஆனாலும் எந்த அளவுக்கு உங்களால் அதிகமாக இயலுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள். மிச்சத்தை இறைவன் செய்துகொடுப்பான்.
Xxxxx
நவம்பர் 10 வெள்ளிக் கிழமை
இறைவனிடம் எந்த நிபந்தனையும் போடாது (பரிபூரண) சரணாகதி அடைவதே மனிதனுக்கு ஆறுதல் தரும் அருமருந்து ஆகும்.
xxx
நவம்பர் 11 சனிக் கிழமை
இறைவனின் நாமமும், அவனும் ஒன்றே; அவன்தான் நாமம்.
Xxxx
நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
ஒருவர் இஷ்ட தேவதையை அதிகமாக நினைக்க, நினைக்க, அந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும்.
xxxxx
நவம்பர் 13 திங்கட் கிழமை
உலக ஆசாபாசங்களுக்கும் மேலே சென்றால்தான் மன அமைதி கிட்டும்.
xxxx
நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை
மனிதன் என்பது ஆத்மா ; ஆனால் அதை அவன் தன்னுடனும், தன் பெயருடனும் தவறாக தொடர்புபடுத்திக் கொள்கிறான்.
xxxx
நவம்பர் 15 புதன் கிழமை
உங்களுடைய துணைவரையும் குழந்தைகளையும் தெய்வீக அம்சம் கொண்டவர்களாக நினைத்து செயல்படுங்கள் ; உங்கள் மனதை அங்குமிங்கும் சிதறவிடாதீர்கள்; ஒரே குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.
xxxx
நவம்பர் 16 வியாழக் கிழமை
ஒன்று இருக்கும் இடத்தில் இரண்டைக் காண்பதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். இரண்டாகக் காண்பது வேதனை . ஒன்றாகக் காண்பதே காட்சி; அதை உணராத வரை ஜனன- மரண சுழற்சி நீடிக்கும் .
xxxx
நவம்பர் 17 வெள்ளிக் கிழமை
நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறீர்களோ அவர்களிடத்தில் சமமான அன்பைக் செலுத்துங்கள்.அப்போதுதான் நான் என்பதற்கும் நீங்கள் என்பதற்கும் நடுவில் உள்ள இடைவெளி நிரப்பப்படும் . எல்லா சமய வழிபாடும் அதே லட்சியத்தை காட்டுகிறது.
xxxxx
நவம்பர் 18 சனிக் கிழமை
புலன் இன்பம் என்பது மெதுவாகக் கொல்லும் விஷம்; அது மரணத்தை நோக்கி நம்மைச் செல்ல வைக்கிறது ; ஆகையால் மரணமில்லாப்பெரு வாழ்வு நோக்கிச் செல்லும் வழியில் செல்லுவது மனிதனின் கடமை .
XXXXXX
நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
நான் யார்? என்று சிந்த்தித்துப் பாருங்கள்; உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ; விடை கிடைக்கும் .
XXXX
நவம்பர் 20 திங்கட் கிழமை
ஒரு பெரிய மரத்தைப் பாருங்கள் அதிலிருந்து வரும் விதைகள் மேலும் பல மரங்களை உருவாக்குகின்றன. ஆனால் அவைகளில் தோன்றும் பழங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை .ஆயினும் அவற்றில் துடிக்கும் உயிர் சக்தி ஒன்றுதான்; ஆகையால் ஒரே ஆத்மாதான் எங்கும் நிறைந்துள்ளது.
XXXX
நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை
ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணம், பேரன்புடன் உண்மையாக உழையுங்கள்;.உங்களை படிப்படியாக முன்னேற்றுங்கள் ; எல்லாப் பணிகளிலும் தெய்வீக இருக்கட்டும்.அப்போது உங்கள் பணியும் சிறக்கும்
xxxx
நவம்பர் 22 புதன் கிழமை
ஒரு தாயார் தன் மகனை எப்படி பாலூட்டி, சீராட்டி வளர்த்து அவனை எல்லாப் புகழோடும் விளங்கும் இளைஞன் ஆக்குகிறாளோ அவ்வாறே தெய்வீக அன்னையும் ஒருவனுடைய ஆன்மீக வாழ்வில் ஒருவனை முழு வளர்ச்சி அடைய வைக்கிறாள் .
XXXX
நவம்பர் 23 வியாழக் கிழமை
துறவு என்பது பொருட்களைத் துறப்பது அல்ல; வேறு வேறு என்ற வேற்றுமையை/ பிரிவினையைத் துறப்பதே துறவு
xxx
நவம்பர் 24 வெள்ளிக் கிழமை
உலக பாசங்களால் மனிதனின் மனது களங்கமுற்றுள்ளது ஆயினும் கவலை வேண்டாம்.தூய்மையுடனும், பேரார்வத்தோடும் , நம்பிக்கையுடனும் முயன்றால் உள்ளே உறையும் ஆன்மாவை அறிவீர்கள் .
xxx
நவம்பர் 25 சனிக் கிழமை
வெளியே உள்ள, அதாவது மனைவி, மக்கள், பணம், புகழ் இவற்றால் கிடைக்கும் இன்பம் நீடித்து நிற்காது ; ஆனால் எங்கும் நிறைந்த, உன்னுள்ளேயும் உறையும் இறைவனிடத்தில் இன்பம் பெற்றால் , அது உண்மையான இன்பமாக அமையும் .
xxxxx
நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
எல்லோரும் அமைதி பெறத் துடிக்கிறார்கள். ஆனால் இறைவன் என்பவன் உள்ளுக்குள்ளே இருக்கிறான் என்பதை அறியும் வரை பரி பூரண அமைதி கிட்டாது என்பது சிலருக்கே தெரிகிறது.
xxx
நவம்பர் 27 திங்கட் கிழமை
மனிதனின் கடமை சத்திய வேட்கையுடன் இருப்பதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஆகும் ‘உண்மை’-யில் நங்கூரம் பாய்ச்சி நிற்க இயன்ற அளவுக்கு முயலுங்கள் ; தனிமையான இடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் .
xxxx
நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை
எல்லாம் ஜோதியிலிருந்து தோன்றுகிறது; எல்லாம் ஜோதிமயம் ; நீங்களும் கூடத்தான்.
xxxx
நவம்பர் 29 புதன் கிழமை
நீங்கள் மிக உயர்ந்த லட்சியத்துக்குக் குறைவான எதையும் நாடாதீர்கள்.
xxxx
நவம்பர் 30 வியாழக் கிழமை
நான் பிறந்த போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறேன்;முடிவே இல்லாத மண்டபத்தில் நடக்கும் படைப்பு நடனம் மாறிக்கொண்டே இருந்தாலும் , நான் அப்படியே சாஸ்வதமாகவே இருப்பேன் (வெளியில் நடக்கும் மாற்றங்கள் என்னைப் பாதிப்பது இல்லை.
—-SUBHAM—-
TAGS- மா ஆனந்தமயி, பொன்மொழிகள், நவம்பர் 2023, காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!
இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
அப்பரின் அருள் வாக்கு
தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர்பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
என்று அவர் பாடி அருள்கிறார்.
இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப் பெறுகிறது தில்லைத் திருத்தலம்!
கண்ணனின் அருள் வாக்கு
கண்ணபிரான் கீதையில் (அத் 3 – 14) அன்னாத் பவந்தி பூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பௌதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.
அறநெறிகளை அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.
நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.
ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
இரு கதைகள்
அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிஹாஸ புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன.
இரு சம்பவங்களை இங்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.
இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.
குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக் கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப் பார்க்கச் சென்றார் குசேலர்.
குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக் கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.
இதுவே அன்ன தான பலன்.
அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.
பெரும் தான வீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.
அதன் காரணத்தைக் கேட்ட போது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : “நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்”
உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.
வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: “ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக் காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்ன தானத்தின் மகிமை அப்படிப்பட்டது!” என்று பதில் கூறினான்.
இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.
ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில் மட்டும் முப்பத்திஐந்து கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.
ஆகவே இந்த ஐப்பசி பௌர்ணமி நன்னாளில் உலகில் உள்ள அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..
November Festivals – 12 –Deepavali/ Diwali; 13- Kantha Sashti Vrata begins; 18- Skanda Vrat ends , 23- Sathya Sai Baba Birth Day; 26- Kartikai Lamp Festival in Tamil Nadu;
November Auspicious Days – 16, 19, 29.
New moon day -13; Full moon day – 27; Ekadasi Hindu Fasting Days -8, 23
(Quotations of Sri Anandamayi Ma; April 30, 1896 – August 27, 1982)
Joys and sorrows are time-born and cannot last. Therefore, do not be perturbed by these. The greater the difficulties and obstructions, the more intense will be your endeavour to cling to His feet and the more will your prayer increase from within. And when the time is ripe, you will gain mastery over this power.
xxxx
November 2 Thursday
In RAMA (GOD), who is the dispeller of all sorrow, there is arama — rest and ease; where RAMA is not, there is vyarama — discomfort and disease
xxxx
November 3 Friday
It is impossible to continue on the spiritual path without some inner experience occurring.
xxxx
November 4 Saturday
The whole of manifestation is but a display of GOD’s divine power — GOD Itself as vibhuti (creative power).
xxxx
November 5 Sunday
Forgetting that GOD is the sole Beloved, one has come to love sense objects.
xxxx
November 6 Monday
If you examine yourself, you will see. There is beauty in the birds and in the animals. They too eat and drink like us, mate and multiply; but there is this difference: we can realize our true nature, the Atman. Having been born as human beings, we must not waste this opportunity.
xxxx
November 7 Tuesday
At least for a few seconds every day, we must enquire as to who we are. It is no use taking a return ticket over and over again. From birth to death, and death to birth is ‘samsara.’ But really we have no birth and death. We must realize that.
xxxx
November 8 Wednesday
Precious gems are profoundly buried in the earth and can only be extracted at the expense of great labour.
xxxx
November 9 Thursday
Exert yourself to the limits of your power, however feeble. He is there to fulfill what has been left undone.
xxxx
November 10 Friday
Unconditional surrender to Him is the best solace for man.
xxxx
November 11 Saturday
God’s name is He Himself – The name and the named are identical.
xxxx
November 12 Sunday
The more one thinks of one’s Ishta (beloved Deity), the firmer will one’s faith in Him grow.
xxxx
November 13 Monday
You will have peace only if you rise above worldly desires.
xxx
November 14 Tuesday
There is nothing in this world, yet everyone is madly pursuing this nothing – some more, some less.
xxxx
November 15 Wednesday
Man is no other than the Self; but he wrongly thinks of himself as a separate individual centered in his body and identified by a particular name.
xxxx
November 16 Thursday
Love and serve your consort and children as Divine manifestations. Perform all work as God’s service. Do not allow your mind to wander here and there. Endeavor to make it one pointed. Have one single end in view.
Xxxx
November 17 Friday
All sorrow is due to the fact that many are seen where there is only one. Duality is pain. So long as man does not wake up to his identity with the one, the round of birth and death continues for him.
xxxx
November 18 Saturday
Try to treat with equal love all the people with whom you have relations. Thus the abyss between ‘myself’ and ‘yourself’ will be filled in, which is the goal of all religious worship.
xxxx
November 19 Sunday
Ever afterward, though the dance of creation change around me in the hall of eternity, I shall be the same.
xxxx
November 20 Monday
Do not set your hopes on anything less than supreme beatitude.
xxxx
November 21 Tuesday
Everything originates from light and everything in its essence is light, even You.
xxx
November 22 Wednesday
The quest after truth and to be Truthful is a human beings duty. Do your utmost to become anchored in Truth and spend much time in the contemplation of the Lord in a quiet secluded place.
xxxx
November 23 Thursday
The life in the world is to be on the way to Self- Realization.
xxxx
November 24 Friday
Everyone thirsts for peace, but few people understand that perfect peace cannot be obtained as long as the inner soul is not filled with the presence of God.
Xxxx
November 25 Saturday
Man’s mind is clouded by worldly ties. But there is no cause for despair. With purity, unflinching faith and burning eagerness go ahead and you will realize your true Self.
xxxx
November 26 Sunday
Happiness that depends on anything outside of you, be it a wife, a child, money, fame, friends cannot last. But if you find happiness in God who is everywhere, all pervading, who is your own self, that is real happiness.
Xxx
November 27 Monday
Renunciation is the giving up of the idea of separateness, not the giving up of things.
xxxx
November 28 Tuesday
With earnestness, love and goodwill carry out life’s everyday duties and try to elevate yourself step by step. In all human activities let there be a live contact with the Divine and you will not have to leave off anything. Your work will then be done well and you will be on the right track to find the Master.
xxxx
November 29 Wednesday
Just as a mother nourishes her child with all possible care and affection and makes him grow up into a healthy boy and a handsome youth, so you will find the subtle touches of the Divine Mother shaping your inner life and making you reach your full height and stature.
xxxx
November 30 Thursday
Sense enjoyment acts like slow poison. You are driven thereby towards death. Therefore, it is man’s duty as a human being to get into the current that leads to immortality.
–subham—
Tags- November 2023, calendar, Ma Anada mayee, quotations
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4
நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதிசதகம் – 4
பர்த்ருஹரி ஸ்லோகம் 10
Slokam 10
शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधोஉधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥
சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்
மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்
அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்
விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10
கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில் கீழே விழுவார்.(1-10)
அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.
வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-
சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ
நன்றின் பால் உய்ப்பதறிவு – 422
பொருள்
மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில் ஈடுபடுவதே அறிவு/ விவேகம்.
ஆகாயகங்கை அரண் முடியில் வந்ததன்பின்
வாகா யிமயமலையிடத்தில் — ஓகோவித்
தொல்லுலகில் பாதலத்தில் தோய்ந்தது தம் வாய்ப்பிழந்தோர்
Fire can be put out by water. An umbrella can be used as protection from the sun. The rutty elephant can be controlled with an ankush (a weapon with a sharp hook at one end used by a mahout). A cow or donkey can be herded with a stick. A disease can be treated with medicines. Poison can be counteracted by chanting mantras. There is a remedy for everything prescribed in the shaastras. But there is no remedy for the fool.-11