கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 7 (Post No.12,282)


Saumya Keava Temple, Karnataka 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,282

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part Seven

39.Nimishamba Temple, Sri Rangapatnam

39. நிமிஷாம்பா கோவில் காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.

சென்னை உள்பட ஏராளமான இடங்களிலும் நிமிஷாம்பா கோவில்கள் இருக்கின்றன. பார்வதி தேவி இவ்வாறு வணங்கப்படுகிறாள்

Xxxx

40. Pancha Lingeshwara Temple, Govindanahally பஞ்ச லிங்கேஸ்வரர் கோவில்

கோவிந்தனஹல்லி என்னும் இடத்தில் அமைந்த பஞ்ச லிங்கேஸ்வரர் கோவிலும் , ஹொய்சாள பாணியில் இருக்கிறது. ஐந்து முக லிங்கம் உள்ள கடவுளை இப்படி அழைப்பர். ஆனால் இந்தக் கோவிலில் சிவபிரானுக்கு ஐந்து தனி கர்ப்பக்கிரகங்கள்  இருக்கின்றன மைசூரு தலக்காடில் 5 தனிக்  கோவில்கள் இருக்கின்றன இங்கோ ஒரே கோவிலில் ஐந்து சிவாம்சங்களை தனித்தனி சந்நிதிகளில் காண்கிறோம்.

இங்குள்ள கணேசர் , மகிஷாசுர மர்தனி , பைரவர், சரஸ்வதி,வீரபத்ரர் உமாமஹேஸ்வரர், சப் த மாதா  சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன 5 கர்ப்பக்கிரகங்களில்/ சந்நிதிகளில் சிவ லிங்கங்கள் சத்யஜோ  தீஸ்வர, வாமதேவ, அகோர, தத்பருஷ ஈசான அமசங்களைக் குறிக்கின்றன.

விஷ்ணுவின் பல அவதாரங்களும் கல் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன ; கிளியுடன் பேசும் பெண் , பூப்பறிக்கும் காட்சி, கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் ஆகியன குறிப்பிடத்தத்தக்க சிற்பங்கள் 1236-ம் ஆண்டு மன்னர் சோமேஸ்வர் கல்வெட்டு , புகழ்பெற்ற சிற்பி ருவரி மல்லிதாமா ஆகியோர் கல்வெட்டுகளையும் கோவில் சுவர்களில் காணமுடிகிறது

Xxxx

41. Narasimhaswamy temple, Holenarasipur நரசிம்ம சுவாமி கோவில்

ஹாசன் ஜில்லாவில் ஹேமாவதி  நதிக்கரையில் இருக்கும், ஹோல நரசிப்பூரில் நரசிம்ம சுவாமி கோவில்  இருக்கிறது.மைசூரிலிருந்து 80 கி.மீ .

சோழர் பாணியில் கட்டப்பட்டாலும் சுமார் 600 ஆண்டு வரலாறு உடையதுதான் ; வசிஷ்ட மகரிஷி வந்து பிரார்த்தித்த இடம் என்பது நம்பிக்கை த்ரி கூடாசல என்றும் இக்கோவிலை அழைப்பர். ஏனெனில் லட்சுமி நாராயணர், லெட்சுமி நரசிம்மர் , கோபால கிருஷ்ணர் மூர்த்திகள் இருக்கின்றன.

கோவிலில் ஸ்ரீ பிரசன்ன கமல மகாலெட்சுமி சந்நிதியும் உளது.

Xxxx

42. Bhoo Varaha Swamy Temple, Kallahalli பூ வராக சுவாமி கோவில்

மைசூரிலிருந்து 45 கி.மீ .தொலைவில் கல்லஹல்லியில் பூவராக சுவாமி கோவில்  இருக்கிறது. 18 அடி உயரத்தில் வராக அவதாரத்தில் விஷ்ணு கா ட்சி தருகிறார்.மூன்றரை அடி உயர பூதேவியுடன் அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது . கோவிலுக்குள்ளேயே  ஹேமாவதி நதி  ஓடுகிறது . பரு வமழைக் காலங்களில்  கோவில் சுவர் வரை தண்ணீர் வந்துவிடும் . மன்னர் வீர வல்லாளன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ; 25 வகையான பூக்கள், பொருட்கள் மூலம் அபிஷேகம்  செய்வது கோவிலின் சிறப்பு அம்சம்.

xxxx

43. Soumyakeshava Swamy Temple, Nagamangala நாக மங்கல ஸெளம்ய கேசவ கோவில்

மைசூரிலிருந்து 60 கி.மீ . தொலைவில் உள்ளது நாகமங்கலம்..

மாண்ட்யா மாவத்த த்தில் உள்ள இந்தக் கோவில் 12 ஆம் நூற்றாண்டை ச் சேர்ந்த ஹொய்சாள பாணி கோவில் ஆகும் . இந்த விஷ்ணு கோவில்,  ராகு-கேது பரிகார தலம் . மன்னர் விஷ்ணுவர்தன் காலத்தில் வைஷ்ணவம் பரவியது . மங்கலம் என்றால் பிராமணர் ஊர்.. வீர வல்லாள சதுர்வேதி பட்டார நகர என்ற பெயரும் உண்டு .

நிறைய கலைவேலைப்பாடமைந்த  இந்தக் கோவில் தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது ஏழு நிலைக் கோபுரத்துடன் கட்டப்பட்டது .

மண் டபத்தில் செதுக்கப்பட்ட ஆதி சேஷ னைச் சுற்றி 108 சங்குகள் காணப்படுகின்றன. தலைப்பகுதி ராஹு என்றும் அடிப்பகுதி கேது என்றும் சொல்லப்படுகிறது  பரிகாரம் செய்ய விரும்பு வோர் சிலைக்கு கீழே நிற்க அர்ச்சகர்  பரிகார பூஜைகளைச்  செய்கிறார். கோவிலில் 3 சந்நிதிகள் முக்கியமானவை நரசிம்ம சுவாமி, ருக்மிணி சத்யபாமாவுடன் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஸெளம்ய கேசவரை அடுத்தடுத்து உள்ளனர் . கேசவர் சிலை ஆறு அடி உயரம் . கலை வேலைப்பாடு அமைந்த தூண்களை எங்கும் காணலாம்.

Temple in Melkote, Karnataka 

To be continued………………………..

Tags– கர்நாடகம், மாநிலம், கோவில்கள், பாகுதி 7

Sanskrit in Thailand – Part 3 (Post No.12,281)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,281

Date uploaded in London – –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is the third and last part.

Sanskrit inscriptions are available from the sixth century CE in Thailand. At least 44 inscriptions are known.

Multi language dictionaries with Thai and Sanskrit, Pali are available.

Both long and short inscriptions are copied. The longest inscription has 128 stanzas in 412 lines.

Xxx

RAMAYANA- RAMAKIEN

In Thailand also Rama and Sita are greatly respected but with the distortion of the original Ramayana which is over 2000 years old. They call Ramayana , RAMKIEN, may be a distortion of Ramayan or Ramakirti. They distorted the story (Details are in my earlier post)

Here we look at the names to see how a language will get distorted when it is spread by word of mouth. Those who do research in linguistics must know this. When Dasaratha and Pratardhana and other Sanskrit names were found in Bogazkoi in Turkey in 1380 BCE, Westerners deliberately wrote that these are not Dasaratha because the spelling is Tushratta in cuneiform clay tablets. Then I showed in my article how London Tamils (Sri Lankan Tamils) write Durga and Malaysian Tamils write Damayanti  and Mauritian Tamils write Tamil name Mari Muthu (Thurkkai, Tamayanthi and marther mutoo)

Here is the list from Ramakien of Thailand

Strange names

Kucchi= Manthara (Kubja=Kubji=Kuchi)

Svaahaa= Anjanaa

Kallaacanaa= Ahalyaa

Kaakanaasuraa= Tadakaa

Khukhan= Guhan

Mongkut= Kusa (Rama’s son)

Vajmrga=Vaalmiiki

Satrud= Satrughna

Khrut= Garuda

Lak= Lakshmana

Pulastya= Lastian

Bibhek= Vibhishana

Chiuha= Vidyukkja

Monto=Mandodari

Totskan= Ravana (Dasa kantha)

 (more details and pictures are in my old articles)

The following have distorted spelling but easily recognisable:

Siidaa (Sita Devi),Phaali (Vaali), Sukrip= Sugreevan, Intharachit (Indrajit), Kumphakhan (Kumbakarna)

New names which are not identifiable:

Benchakai, Maiyaraab, Maalivaggabrahmaa, Suvannamachchaaa, Machchaanu, Mahaapaal, Debaasura and Unraaj.

Once we know the linguistic rules like B=V=B, whether it is Avestan of Iran, or Tamil of Sangam age or Thai of Thailand, then we can easily understand the changes.

In Thai, we see Sanskrit V is changed to P/B.

Vaali is Phali and Vibhishana is Bibhek etc

Xxxx

Brahmins in Thailand

Though a Buddhist country , Brahmin is the Raja Guru. They don’t call all the Brahmins as Brahmins; those who have had the initiation/Diksha is a Brahmin. The chief of the Brahmins is called Huana Phram, probably a distortion of Suvarna Shri .

We already know that S=H in Greek and Persian

(Sanskrit Sindhu= Hindu in Greek and Persian)

Thais recite Triyampavaaya every year. Sanskrit Professor Satya Vrata Sastri of Delhi University wrote in 1982 that it is Tamil Thiruvmpavai , திருவெம்பாவை  of Manikkavasagar. Later T P M தெ பொ .மீ.of Madurai University also told the Tamils in Tamil Nadu about it.

Andal’s Tiruppavai திருப்பாவை is called Tripavaaya. Prof S V Sastri has given full details about this annual festival in his 1982 book ‘STUDIES IN SANSKRIT AND INDIAN CULTURE IN THAILAND’.

XXX

HINDU CEREMONY OF PLOUGHING RITE

Janaka found Sita in the filed only during annual Ploughing rite. The king will plough the field with a Golden Plough and then the farmers will start the cultivation. Even in India it is followed in several parts today; but instead of King, local God/Murti from temple is used for this ceremony.

( I will give details of Thailand Hindu Temples separately)

— subham—

Tags- Thai, Thailand, Sanskrit, Tiruppavai, Tiruvempavai, Ploughing Rite

வெற்றி தரும் விஜய யோகம்! (Post No.12,280)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,280

Date uploaded in London –  16 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சுபாஷித செல்வம் 

வெற்றி தரும் விஜய யோகம்!

ச.நாகராஜன்

வெற்றி தரும் விஜய யோகம்! 

கிஞ்சித் சந்த்யாமதிக்ரம்ய கிஞ்சிதுன்னேதின்னாதாரகம் |

விஜயா நாம யோகோயம் சர்வகார்யாதி சித்தித: ||

மாலை நேர சந்த்யாகாலம் முடிந்த பின்னர் சற்று நேரம் கழித்து நக்ஷத்திரங்கள் வானில் சிறிது தோன்ற ஆரம்பிக்கும் போது அந்த (அற்புதமான காலச் சேர்க்கையானது) யோகம் விஜயா என்று அழைக்கப்படுகிறது. அது எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றியைத் தரும் ஒன்று. 

குத்தமிதம் என்றால் என்ன?

கேஸஸ்தனாதிக்ரஹணே ஹர்ஷாதிப்ரமித்தே முகே |

துக்காதிஷ்கரணம் தன்வயா யத் தத் குத்தமிதம் மதம் ||

அழகிய மேனி கொண்ட ஒரு யுவதி அவளது தலை கேசத்தை இழுத்துப் பிடிக்கின்ற போதோ அல்லது அவளது மார்பகம் அழுத்தப்படும்போதோ வலிப்பது போலப் பாசாங்கு செய்கின்ற போது அவள் முகம் பரவசத்தை அடைகின்றதைக் காண்பிக்கும், அந்த நிலையே குத்தமிதம் என்று கூறப்படுகிறது.

புதிர்க் கவிதை

காக்கைக்கு சந்தோஷம்நரிக்கோ..?

கேசவம் பதிதம் த்ருஷ்டதா த்ரோணோ ஹர்ஷமுபாயத: |

ருதந்தி கௌரவா: சவேம் ஹா கேசவம் கதம் கத: ||

ஒரு சவம் நீரில் விழுகின்ற போது ஒரு காக்கை மிகுந்த சந்தோஷத்தை அடைகிறது (தனக்கு விருந்து கிடைத்து விட்டது என்று).

ஆனால் நரிகளோ ஏமாற்றத்தால் ஊளையிடுகின்றன – “ஓ, கடவுளே க்ருஷ்ணா! எப்படி அது போனது?” என்று!

இந்த சுபாஷிதத்தில் கேசவம் என்ற வார்த்தை இரு இடங்களில் வருகிறது. முதல் இடத்தில் கே + சவம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இது சவத்தைக் குறிக்கிறது. அடுத்த இடத்தில் கேசவம் என்பது பகவான் கிருஷ்ணனைக் குறிக்கிறது.

இது ஒரு சொல் விளையாடல்!

இது கூட ஸ்லோகம் புதிர் என்ற வகையில் சேர்ந்த ஒன்று!

கெட்ட சகுனம் காட்டும் நாய்! 

கேஷாஸ்மபஸ்மோல்முகஜீர்ணவஸ்த்ராண்யு

     அங்காரரஜ்ஜிவந்தனகர்பராணி |
வக்த்ரே சமாசாத்ய ச யாதி யாதுர்

     த்ருக்கோசரே பூரிபயாவஹ: ஷ்வா ||

ஒரு நாயானது மனிதனின் தலை மயிர், அல்லது ஒரு கல், சாம்பல், தீச்சுள்ளி, கிழிந்த துணி, கரி, கயிறு, விறகு, ஓட்டாங்குச்சி ஓடு ஆகிய இவற்றில் எதையாவது ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு பயணத்திற்கு புறப்பட இருக்கும் ஒருவனின் முன்னால் வந்தால் அப்படிப்பட்ட நாய் அந்த மனிதனுக்கு தீய சகுனத்தைக் காண்பிக்கிறது.

கிம் த்வம் ந வேத்ஸி ஜகதி

    ப்ரக்யாதம் லாபகாரணே மூலம் |

விதிலிகிதாக்ஷரமாலம்

  பலதி கபாலம் ந பூபால: ||

இந்த உலகில் அடையும் அனைத்து லாபங்களுக்கும் அடிப்படையான காரணம் என்ன என்று உனக்குத் தெரியுமா?

தலையில் கபாலத்தில் விதியினால் வரிசையாக எழுதப்பட்ட அக்ஷரங்களே பலனைத் தருகிறது.

பூபாலனுக்கு – அரசனுக்கு- செய்த சேவைகள் அல்ல!

இந்த சுபாஷிதத்தில் லாபகாரணே மூலம், அக்ஷரமாலம், கபாலம் பூபால: என்ற வார்த்தைகள் ஒரு சொல் ஜாலத்தை அர்த்தத்தோடு தருகிறது!

***

subhasita

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15 7 2023 (Post No.12,279)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,279

Date uploaded in London – –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 12 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

         
2  34 5 6  
     7     
           
   8       
    9      
           
10          

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.திரிபலாசூரணத்தில் உள்ள காய் ;

2.தெனாலி  ராமன் போல புத்திசாலி நீதிபதி 

8.ஆலய மணி செய்யப் பயன்படும் உலோகம் ,

9.இந்தப் பானையில் வாசிப்பது நம்மூர் கச்சேரிகளில் வழக்கம் ;

10.திருவாதவூரில் அவதரித்த சைவப் பெரியார் .

XXXXXX

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 1. இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், , கரிசனம், பொற்றலைக்கையான்  ஆகிய வேறு பெயர்களை உண்டு

2.மணமகனுக்குப் பெண் வீட்டார் இடும் முதல் விருந்து,

3.இதன் ‘பால்’ MILK காந்திஜிக்குக்குப் பிடிக்கும்; இங்குள்ள பெயர் தொல்காப்பியத்தில் உள்ளது 

4.மார்கழி முடிந்த மறுநாள்  தமிழர் கொண்டாடும் பண்டிகை.

 ,5.பிராமணர்களுக்கு தானம் கொடுக்கப்பட்ட ஊர்ப்பெயர்களில் இது இருக்கும்; சுபம் என்ற பொருளும் உண்டு

6.காலடி என்னும் ஊரில் அவதரித்த ஞானி ,

7.கஷ்டம் என்பதன் மற்றோர்  சொல்

விடைகள்

 க1டுக்காய்    
ம2ரியா3தை4ராம5ன்ஆ6  
று ப்ச7ங் தி  
வீலா பொங்ல்  
டுங்வெ8ண்ம்ங்  
  க9ம்   
 ண்  ம்   ர  
மா10ணிக்வா ர்  

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.கடுக்காய்; 2.மரியாதை ராமன் ; 8.வெண்கலம், 9.கடம்; 10.மாணிக்க வாசகர்.

Xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

,1. கரிசலாங்கண்ணி, 2.மறு வீடு , 3.யாடு 4.தைப் பொங்கல் , ,5.மங்கலம், 6.ஆதிசங்கரர், 7.சங்கடம்

xxxxx

—subham—

QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ  (Post No.12,278)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,278

Date uploaded in London – –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி -பதில் பகுதியில்  இது 40- ஆவது க்விஸ்

1.கண்ணப்பநாயனாரின் நாடு எது ஊர் எது?

XXXX

2.அவருடைய தாய் தந்தை யார் ?

XXXX

3.சிலர் வாழ்நாள் முழுதும் சிவனைத் துதித்து அவனைக் கண்டதில்லை. கண்ணப்பர் எத்தனை நாட்களில் சிவ பெருமானைக் கண்டார்?

XXX

4.காளத்தி என்னும் தலத்தின் மலையில் இது நடந்தது; அங்கு ஓடும் ஆற்றின் பெயர் என்ன ?

XXXX

5.கண்ணனப்ப நாயனார் கன்னிவேட்டைக்குச் சென்றபோது உடன் என்ற இரு வேடர்கள் யார் ?

XXXX

6.காட்டில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்த அந்தணர் பெயர் என்ன? மலையிலுள்ள இறைவனின் பெயர் என்ன?

XXX X

7.கண்ணனப்பருக்கு தாயும் தந்தையும் இட்ட பெயர் என்ன?

XXX

8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர், பட்டினத்தார் கூறியது என்ன?

Xxxxx

9.கண்ணப்பர் பற்றி சிவபெருமான் என்ன சொன்னார் (சேக்கிழார் கூற்றுப்படி):?.

xxxxx

10.அறுபத்து மூவர் சிலைகள், பெரிய சிவன் கோவில்களில் இருக்கும். அதில் கண்ணப்பனாரின் சிறப்பு என்ன?

Xxxxxxxxxxxxxxx

Answers

1.பொத்தப்பி  நாடு; உடுப்பூர்

xxx

2.தந்தை பெயர் — நாகன்; தாய் பெயர்- தத்தை

xxx

3.ஆறே நாட்களில் கண்டார்

Xxxx

4.பொன் முகலி ஆறு

xxxx

5.நாணன், காடன்

xxxx

6.அந்தணர் பெயர் –சிவகோசரியார் ; இறைவனின் பெயர் –குடுமித்தேவர்

Xxxxx

7.திண்ணன் .

xxxxx

8.கண்ணப்பர் பற்றி மாணிக்கவாசகர்

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை

சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

கண்ணப்பர் பற்றி பட்டினத்தார்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான்  இனிச் சென்று

ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே

Xxxx

9.சிவகோசரியார் கனவில் சிவன் சொன்னது:

 அவனுடைய வடிவெல்லாம்

நம்பக்கல் அன்பென்றும்

அவனுடைய அறிவெல்லாம் 

நமையறியும் அறிவென்றும்

அவனுடைய செயலெல்லாம் 

நமக்கினிய வாமென்றும்

அவனுடைய நிலைஇவ்வா 

றறிநீயென் றருள்செய்வார்.

வலக்கண்ணைத் தோண்டி அப்பிவிட்டு இடக்கண்ணையும் எடுக்க முயன்ற கண்ணப்பரிடம் சிவன் கண்ணப்ப நிற்க என்று மூன்று முறை சொன்னார்.

தங்கண்முன் னிடக்குங் கையைத் 

தடுக்கமூன் றடுக்கு நாக

கங்கணர் அமுத வாக்குக் 

கண்ணப்ப நிற்க வென்றே

Xxxxx

10.கண்ணப்பரின் சிலைதான் முதலில் இருக்கும்

—–subham—– 

Tags- கண்ணப்ப நாயனார், quiz,

திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 (Post No.12,277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,277

Date uploaded in London – –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tiruvathavur Temple

முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது

லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி  13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).

ராஜாஜியும் திருவாசகமும்

ராஜாஜி என்னும் ராஜா கோபாலாச்சாரியாரை அறியாதோர் எவருமிலர்; இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்; தியாகி; மாபெரும் அறிஞர். சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தையும், வியாசர் விருந்து என்ற தலைப்பில் மஹாபாரதத்தையும் எழுதி புகழ் அடைந்தவர்.

அவர் சேலத்தில் வழக்கறிஞராக இருந் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்தவர் கிருஷ்ண ஐயர் . இருவருக்கும் ஒத்துவராது ; கிருஷ்ண ஐயர் ஒரு தரப்பை எதிர்த்தால் இவர் வக்கீல் என்ற முறையில் அவருக்குப்  பாது காப்பு தருவார் . இருவரும் கான்டீனில் சாப்பிடுகையில் வெவ்வேறு டேபிள் . ஒருநாள் கிருஷ்ண ஐயர் வழக்கம் போல ஒரு பாடலைச் சொல்லிவிட்டு, இறைவனை வணங் கிச் சாப்பிட்டார் . அது ராஜாஜியின் காதிலும் விழுந்தது.

அந்தப் பாடல் திருவாசகம்  அடைக்கலப்பத்து பகுதியில் வரும் பாடல் 

வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால்

தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்

அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 

அதை மீண்டும் சொல்லக்கேட்ட ராஜாஜி எனக்கு ஒரு திருவாசகம் வாங்கிக் கொடுங்கள் என்றார் . அவரும் அதை வாங்கிக் கொடுக்கவே ராஜாஜி அதை முழுதும் படித்துப் பொருள் உணர்ந்தார்

நான் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள அருமையான முருகன் கோவிலுக்குச் சென்றேன். அது யாழ்ப்பாணத் தமிழர்கள் நடத்தும் கோவில்; சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். போது ஒரு அம்மையார் உள்ளே நுழைந்தார். உடனே எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். எல்லோரும் எழுந்திருந்ததால் நானும் எழுந்தது மரியாதை செலுத்தினேன். என்னைத் தெரியுமா ? என்று கேட்டார். நானோ ஆஸ்திரேலியாவுக்குப் புதிது. இவரை எப்படித் தெரியும்? திகைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .

நான்தான் சேலம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண அய்யரின் மகள் . யாழ்ப்பாணத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு அறிஞரைத் திருமணம் செய்துகொண்டேன். இப்போது இங்கு சிட்னியில் இருக்கிறேன் என்றார் .

XXXX

காந்திஜியும் திருவாசகமும்

காந்திஜி தென் ஆப்ரிக்காவில் இருந்த காலம் . ஒருவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் வந்து சேர்ந்தார். அவர் பெயர் பாலசுந்தரம். என்ன இது ரத்தக் காயங்கள் என்றார் . நாங்கள் எல்லோரும் தென் ஆப்ரிக்காவில் வெள்ளைக்கார்களிடம் அடிமைத் தொழில் செய்துவருகிறோம். எங்களுக்கு ஒரு உரிமையும் சுதந்திரமும் இல்லை.எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டார். ஏனெனில் அப்போது காந்தி அங்கே வழக்கறிஞர் . காந்தி,  அவர்களுடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அனைவரையும் அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது . அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் குன்றியதால் விடுவிக்கப்பட்டார். அவர் தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் சிறு வயதிலேயே இறந்தார். இறக்கும் தருவாயில் பாலசுந்தரத்தைப் பார்த்து “அண்ணா அந்தப்பாட்டைப் பாடுங்கள்” என்னு சொன்னவுடன் பாலசுந்தரமும் பாடினார். காந்தி , பால சுந்தரத்திடம் அது என்ன பாட்டு என்றவுடன் அவர் அது திருவாசகப்  பாடல் என்றார் . இறக்கும் திருவாயில் ஒருவர் திருவாசகத்தைக் கேட்டாலோ இறந்த ஆவி உலவும் இடத்தில் அதைப்    பாடினாலோ அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்; எந்த சிந்தனையுடன் ஒருவர் இறக்கிறோமோ அந்த சிந்தனையோடு மறுபிறப்பு ஏற்படும் . அந்தக் காலத்தில் காந்தியின் பெயர் எம்.கே .காந்த்திதான். மஹாத்மா எனும் பட்டம்  பிற்காலத்தில் தாகூர் மூலம் வந்ததே . காந்தியும் திருவாசகத்தைப் படிக்க ஆவல் கொண்டார். தமிழும் அவர் கற்கத் துவங்கினார் . திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் (TRANSLITERATION)  எழுதிப் படித்து அதன் பொருளையும் அறிந்தார்.

வள்ளியம்மையின் காதில் பால சுந்தரம் சொன்னது திருவாசகத்தின் கடைசி பகுதியாகும்; அதன் பெயர் அச்சோ பதிகம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.–என்று துவங்கும் பதிகம் ஆகும்.

(தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் ஓர் செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி முதலியார் பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார். 1914ம் ஆண்டில் இறந்ததும் தென் ஆப்ரிக்க நகரமான ஜோஹன்னஸ் பரக்கில்தான். )

XXXX

திரு வி க வும் திருவாசகமும்

ரெவரெண்ட் ஜி.யூ .போப் இறக்கும்போது தமிழ் நாட்டு மக்க்கள்தான் தனது இறுதிச் சடங்கிற்கும்  கல்லறைக்கும் பணம் தரவேண்டும். அது தான்  என் விருப்பம் என்று தெரிவித்திருந்தார் . தமிழ்நாட்டிலுள்ள எல்லா பள்ளி களிலும் இந்த அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் அறிவித்தவுடன் பல மாணவர்கள் நாலணா கொடுத்தனர். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. ஒரு மாணவன் மட்டும் எழுந்து ஐந்து ரூபாய் கொடுத்தான். என்னப்பா இது! என் மாத சம்பளமே ஐந்து ரூபாய்தான் — என்று சொல்லி வாத்தியார் வியந்தார். அந்த மாணவன் சொன்னான்- அவ்வப்போது எனக்குக் கிடைக்கும் காசுகளை ஒரு டப்பாவில் போட்டுவைத்தேன். வீட்டிற்கு வந்து போவோர் கொடுத்த காசு அது. என் அப்பாவுக்கு திருவாசகம் பிடிக்கும். அதைப்படித்துவிட்டு அது பற்றி எனக்கும் சொல்லுவார் . ஆகையால் டப்பியில்  இருந்த பணத்தைக் கொடுக்கிறேன்.

இப்படிச் சொன்ன அந்த மாணவன் யார் தெரியுமா ?

பிற்காலத்தில் தமிழ் அறிஞர், பேச்சாளர், நூலாசிரியர் என்று பெயர் எடுத்த திரு. வி. கலியாண சுந்தர முதலியார் .

XXXX

அண்ணாமலை செட்டியாரும் திருவாசகமும்

திருவாசகம் பிரதிகளை அச்சடிக்கப்போகின்றோம் . அது வேண்டுவோர் பிரதிக்கு பத்து ரூபாய்வீதம் அனுப்புங்கங்கள் என்று அறிவிப்பு வெளியான து . 1900ம் ஆண்டில் பத்து ரூபாய் என்பது மிகப்பெரிய  தொகை. பள்ளத்தூர் அண்ணாமலை செட்டியார் 5000 ரூபாய் அனுப்பி 500 பிரதிகளை அனுப்புங்கள் என்றார். திருவாசகத்தின் மீது அவ்வளவு மதிப்பு!.

XXXX

ரமண மகரிஷியும் திருவாசகமும்

ரமண மகரிஷியின் தாயார் தனது இறுதிக்காலத்தில் திருவண்ணா மலையில் ரமணருடன்  வசிக்க விரும்பினார் . இறுதி நாள் நெருங்கியதை அறிந்த ரமணர், தாயாரின் தலையைத் தன் மடியில் கிடத்தி திருவாசகத்தை ஓதினார் . அவர் இறந்தவுடன் எல்லோரும் சாப்பிட்டப் போங்கள் என்றார் . எல்லோரும் திகைத்து நின்றனர். இறந்த வீட்டில் , காரியங்கள் முடியும் வரை யாரும் சாப்பிடமாட்டார்கள்; தீட்டு என்று கருதும் காலம் அது. ஆனால் ரமணர் சொன்னார் — திருவாசகத்துக்கு தீட்டு என்பதே கிடையாது . எல்லோரும் சாப்பிட்டு  வந்த பின்னர் திருவாசகப் பாராயணம் தொடர்ந்தது .

XXX

தாய் தள்ளிய பிள்ளையை பேயும் அணுகாது — ரமண மகரிஷி – தாய்- திருவாசகம் பற்றிச் சொன்னபோது சொ சொ மீ சொன்ன பழமொழி

XXXX

ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும்

ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரம் ஜி.யூ போப்பும் நண்பர்கள் . ஜியூ போப் அவருக்கு ஒரு பரிசு அனுப்பினார். அது என்ன தெரியும?. கண்ணீர் துளி விழுந்த தாள் . போப் மனம் உருகி திருவாசகம் படித்தபோது அவர் கண்ணீர்த் துளிகள் ஒரு பேப்பரில் விழுந்தது.

தமிழில் பேப்பரை தாள் என்போம். இறை வனின் பாதகமலங்களையும்  தாள் என்போம். திருவள்ளுவரும் அப்படிப்படியுள்ளார். . இரு பொருள் படும்படி திருவாசக தாள் , சுப்ரமண்ய அய்யருக்கு பரிசாக வந்தது. அவரும் நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார். நீங்கள் அனுப்பிய தாளை நடராஜ பெருமானின் தாளில் (பாத கமலம் )வைத்து வணங் குகிறேன் என்று .

XXXX

திருவாசகம் = தேன்

திருவாசகத்தை தேன் என்பார்கள். ஏன் தெரியுமா?

தேன் எப்போதும் கெடாது . தேனில் போட்டுவைத்த பொருளும் கெடாது . பலாச் சுளைகளை தேனில் போட்டுக் கெடாமல் வைத்திருப்பதைப் பார்த்து இருப்பீர்கள் . திருவாசகம் ஒரு தேன் . அதில் நாம் திளைத்தோமானால் கெட்டுப்போக மாட்டோம்

XXX

தமிழ்நாட்டு வைஷ்ணவர்கள் சோற்றை, சாதத்தை திருவமுது என்பார்கள். சாப்பாடு நமக்கு இறைவன் படைக்கும் அமுதம் . சேக்கிழாரும் காரைக்கால் அம்மையார் பற்றிப் பாடுகையில் திரு அமுது சமைத்ததாகவே பாடுகிறார்.

XXX

1950ம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனம் முயற்சியில் தண்டபாணிதேசிகர் எழுதிய திருவாசக உரை நூல் வெளியானது ; அதற்கு முன்னுரை எழுதித் தருமாறு ராஜாஜியிடம் கேட்டபோது அவர் தனக்கு அந்தத் தகுதி கிடையாது என்று சொல்லி மறுத்துவிட்டார். தான் அதை சிறையில் முழு க்கப்  படி த்ததாகவும் அது தன் உயிர் நூல் என்றும் சொன்னார்

XXX

(காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் சொ சொ மீ  ஆற்றிய  உரை முழுதையும் எழுதவேண்டுமானால் அது புத்தக வடிவிற்குப்  பெருத்து விடும் . ஆகையால் புல்லட் பாயிண்டு BULLET POINTS களை மட்டும் கொடுத்தேன். இதில் பிழை இருப்பின் அது என் காதில் தவறாகக் கேட்ட குற்றமே. சொ சொ மீ. சுந்தரம் அவர்களின் குற்றம் அன்று . பிழை பொறு த்தருள்க ) 

–சுபம் —

TAGS மாணிக்கவாசகர், சொ சொ மீ. சுந்தரம்,

எது கொடியது? எது இனியது? (Post No.12,276)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,276

Date uploaded in London –  15 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எது கொடியதுஎது இனியது?

ச.நாகராஜன்

எது கொடியதுஎது இனியது?

எது கொடியது?

ஒரு பெண்ணின் இதயம்.

ஒரு இல்லறத்தானுக்கு எது இன்பமும் லாபமும் தரத்தக்கது?

மனைவியின் நல்ல குணங்கள்.

எது காதல்?

மனதில் சுழலும் எண்ணம்.

எது கிடைப்பதற்குக் கடினமானது?

ஞானம்.

இதைச் சொல்லும் சுபாஷிதம் இது:

கிம் க்ரூரம்  ஸ்த்ரீ ஹ்ருதயம்

    கிம் க்ருஹிண: ப்ரியஹிதாய தாரகுணா: |

க: காம: சங்கல்ப:

     கிம் துஷ்கரசாதனம் ப்ரக்ஞா ||

சேவை செய்யா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு!

நன்கு சத்துணவு ஊட்டப்பட்டு வலிமை கொண்டு நீண்ட ஆயுளுடன் இருக்கும் உடலால் என்ன பயன்?

மற்றவருக்கு சேவை செய்யாது வாழும் ஒருவன் பயனற்றவனே!

கிம் காயேன சுப்ருஷ்டேன வலினா சிரஜீவிதா |

யோ ந சர்வோபகாரி ஸ்யாஜ் ஜீவன்னபி நிரர்தக: ||

ஒரு பைசாவை ஏளனம் செய்பவன் பணக்காரனாக மாட்டான்!

ஒரு கௌரியை (கௌரி என்பது ஒரு மிகச் சிறிய மதிப்புள்ள நாணயம்) வெறுத்து ஏளனம் செய்பவன் ஆயிரம் காசைச் சேர்க்க மாட்டான்.
(அதாவது அவன் ஒருபோதும் பணக்காரனாக மாட்டான்)

அதே போல, ஒரு வினாடியை வீணாக்குபவன் வித்தையின் அடுத்த கரையை ஒரு போதும் அடைய  மாட்டான்.

அதாவது கல்விக் கடலை நீந்திக் கடக்கவே மாட்டான்.

கிம்காகிணீக: புருஷ: சஹஸ்ரம் நாஹிகச்சதி |

ததைவ கிம்முஹூர்தோபி வித்யாபாரம் ந கச்சதி ||

கல்வியும் காசும் சேரும் விதம்!

சிறு நொடிகளை வீணாக்குபவனுக்கு கல்வி எப்படி வரும்?

சிறு பைசாக்களை அலட்சியப்படுத்துபவனுக்கு பணம் எப்படி சேரும்?

கல்வியையும் பணத்தையும் ஒருவன் சிறு சிறு நொடிகளிலும் சிறு சிறு காசுகளினாலும் சேர்க்க வேண்டும்.

கிம் க்ஷணஸ்ய க்ருதோ வித்யா கிம்கணஸ்ய க்ருதோ தனம்|

க்ஷணஷ: கணஷச்சைவ வித்யாமர்த்தம் ச சாதயேத் ||

விதியே வெல்லும்!

எதற்காக அதிகம் சிந்தனை செய்கிறாய்?

ஏன் கவலையினால் சோகம் அடைகிறாய்?

தலையில் என்ன எழுதி இருக்கிறதோ

அதன் படி தான் அனைத்தும் நடக்கும்!

கிம் சிந்ததேன பஹுனா

   கிம் பா ஷோகேன மனஸி நிஹிதேன |

தன்னிச்சிதே பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத் ||

வாழ்க்கை என்பது தான் என்ன?

வாழ்க்கை என்பது தான் என்ன”

குற்றமில்லாமல் இருப்பது.

சோர்வாக (மந்த்மாக) இருப்பது எதனால்?

கூரிய புத்தி என்றாலும் கூட பயிற்சி இல்லாமல் இருப்பதால்!

உலகியலில் எவன் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பவனாவான்?

பகுத்தறிந்து ஆராயும் ஒருவனே எச்சரிக்கையுடன் இருப்பான்.

தூக்கம் என்பது என்ன?

உயிர் வாழ்வனவற்றின் அறியாமையே!

கிம் ஜீவிதமனவத்யம்

  கிம் ஜாடுத்யம் பாடவேப்யநம்யாஸ: |

கோ ஜாயந்தி விவேகீ

   கா நித்ரா மூடதா ஜந்தோ: ||

இப்படி சுபாஷிதங்கள் தரும் வாழ்க்கை உண்மைகளை அறிந்து கொண்டால் வாழ்க்கை வளமாக விளங்குமல்லவா? 

***

QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ (Post No.12,275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,275

Date uploaded in London – –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேள்வி -பதில் பகுதியில்  இது 39 ஆவது க்விஸ்

1. பட்டுச் சேலைக்குப் பெயர்போன காஞ்சீபுரம் யாருடைய தலைநகராக இருந்து சீரும் சிறப்பும் பெற்றது?

xxxxx

2.காஞ்சீபுரம் உள்ள பகுதியை எந்த நாடு என்று சொல்லுவார்கள் ?

xxxx

3.சோழ நாடு சோறுடைத்து, பாண்டிய நாடு முத்துடைத்து … அப்படியானால் காஞ்சீபுரம் உள்ள நாடு எது உடையது ?

xxxxx

4.காஞ்சீபுரத்தில் மாமரத்துக்குள்ள  சிறப்பு என்ன?

XXXXX

5.காமாட்சி கோவிலுக்குள் உள்ள வைணவ திவ்ய க்ஷேத்திரம் எது ?

XXXX

6.பஞ்சபூத ஸ்தலங்களிலும், ஏழு மோக்ஷ புரிக்கள் பட்டியலிலும் காஞ் சிக்கு உள்ள சிறப்பு என்ன ?

XXXX

7. காஞ்சீபுரத்தில் அத்திவரதரின் புகழ் பரவுவது ஏன் ?

Xxxxx

8.காஞ்சீபுரத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன? குறைந்தது எத்தனை கோவில்கள் இருக்கின்றன?

Xxxx

9.காஞ்சீபுரத்தில் உள்ள மியூசியத்தின் , பல்கலைக்கழகத்தின்  பெயர்கள்  என்ன ?

Xxxxx

10. கந்தபுராணம் எங்கு அரங்கேறியது ?

விடைகள்

1.பல்லவர் தலைநகர்

xxxxxx

2.தொண்டை நாடு

xxxxx

3.வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்

xxxxx

4.ஏகாம்பரேஸ்வர் கோவிலின் தல மரம் –மாமரம்

xxxx

5.காமாட்சியின் பெருமையை அனைவரும் அறிவர். ஆயினும் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் – கருவறையில் — ஒரு திவ்ய தேசம் இருப்பது பலருக்கும் தெரியாது  காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலப்பக்கத்தில் திருக்கள்வனூர் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.

xxxxxx

6.பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி என்னும் மண் / பூமியைக் குறிப்பது காஞ்சீபுரம் ; ஏகாம் பரேச்வர கோவிலில் மணலில் லிங்கம் இருக்கிறது ; சப்த புரிக்கள் என்ற ஸ்லோகத்தில் காஞ்சி உள்ளது .

xxxxxx

7.காஞ்சிபுரத்தில் . கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருக்கிறார்  இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

xxxxxx

8.காஞ்சீபுரத்தில் சின்ன காஞ்சி , பெரிய காஞ்சி , ஜைன காஞ்சி  என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன குறைந்தது 108 கோவில்கள் உள்ளன (இதே பிளாக்கில் 108 கோவில்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

xxxxxx

9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியம் ; Shakuntala Jagannathan Museum of Folk Art

காஞ்சீபுரத்தில் பல்கலைக்கழகத்தின்  பெயர்–ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வா மகாவித்யாலயா காஞ்சீபுரம் -631 561Sri Chandrasekarendra Saraswathi Viswa Maha Vidyalaya [ SCSVMV ] is deemed university at Kancheepuram.

xxxxx

10.காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். அவர் எழுதிய கந்தபுராணம் காஞ்சீபுரத்தில் குமரகோட்டத்தில் அரங்கேறியது

அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் ..

Xxxxxxx subham xxxxxxx

Tags

காஞ்சி , காஞ்சிபுரம்  , பல்கலைக்கழகம் , மியூசியம், மா மரம், அத்தி  வரதர் , கந்த புராணம்  , Quiz

 திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No.12,274)

Temple priest is welcoming speaker Prof. S S M. Sundaram

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,274

Date uploaded in London – –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனில் தொடர் சொற்பழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ சுந்தரம் (PROFESSOR S S M SUNDARAM, MADURAI), மாணிக்கவாசகரின் திருவாசகம் பற்றி நேற்று 13-7-23 காலையில் நடத்திய சொற்பொழிவில் பல வியப்பான தகவல்களைத் தந்தார் . 18-7-23 முடிய காலையிலும் மாலையிலும் 60 நிமிடச் சொற்பொழிவுகள் லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெறும் ( 11 AM , 7 PM ).

Xxxxx

திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் பாடலில் மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார். முதல் பாடலான சிவபுராணத்தில் முதலில் 6 வரிகளில் வாழ்க, அடுத்து 5 வரிகளில் வெல்க, அடுத்த 8 வரிகளில் போற்றி (6,5,8) வருகின்றன!!!

xxx

ஏனைய பாடல்கள் கடவுள் பற்றிய பாடல்கள் ; திருவாசகமோ கடவுளோடு பேசிய பாடல்கள்

xxx

யார் புத்திசாலி?

தந்தது உன் தன்னை கொண்டது என்தன்னை

யார்கொலோ சதுரர் ? என்று மாணிக்கவாசகர் சிவனிடம் கேட்கிறார் .

அதாவது ஒன்றுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு உன்னையே தந்துவிட்டாய் . நீ புத்திசாலியா? என்பது கேள்வி . நாமும் யார் புத்தி சாலி என்று யோசிப்போம் .

உண்மையில் சிவன்தான் புத்திசாலி. அதனால்தான் தேன்  போன்ற திருவாசகம் நமக்கு கிடைத்தது..

Xxx

சிதம்பரத்தில் நடராஜக் கடவுளுக்கு வலது பக்கம் மாணிக்கவாசகர்; இடது பக்கம் சிவகாமி . அவ்வளவு முக்கியத்துவம்.

மாதவ சிவஞான முனிவர், இவரை ஞானத்தால் சிவமே ஆனவர் என்று போற்றுகிறார்  .

முதலில் மூவர் மட்டுமே இருந்தனர். சிவப்பிரகாச சுவாமிகள்தான் மூவரோடு இவரையும் சேர்த்து நால்வர் என்ற அணியை உருவாக்கினார்.

Xxxx

பைபிளைத் தவிர வேறு எந்த நூலையும் அச்சிடக்கூடாது என்று கிறிஸ்தவ வெள்ளைக்காரர்கள் உலகம் எங்கும் தடை போட்டிருந்தனர். அந்தத் தடை நீக்கப்பட்டவுடன் முதலில் வெளியான பக்தி நூல் திருவாசகமே.

xxx

மேலை நாட்டிலுள்ள எல்லா பக்தி இலக்கியத்தையும் ஒரு தராஸுத் தட்டில் வையுங்கள். திருவாசகத்தின் ஒரு வரியை இன்னொரு தட்டில் வையுங்கள். திருவாசகம் எடை மிக்கது என்று கிறிஸ்தவ குருநாதரிடம் ரெவரெண்ட் ஜி.யூ.போப் REV. G U POPE சொன்னார். அவர் வியப்புடன் காரணம் கேட்டபோது இமைப்பொழுதும் என்  நெஞ்சில் நீங்கதான் தாள் என்ற ஒரு திருவாசக வரிக்கு சமம் எதுவும் இல்லை என்றார்  ஜி.யூ.போப்..

xxx

ஜி.யூ.போப்  மீது வழக்கு

ஜி.யூ.போப்  கிறிஸ்தவ பாதிரியார்.. அவர் கிறிஸ்தவ மதத்தைப்  பரப்பாமல் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால் ஏசு சபையாருக்குக் (SOCIETY OF JESUS) கோபம்; ஆத்திரம் பொங்கியது . அவர் மீது லண்டனில் கேஸ் போட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு ஒரு வாரத்துக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கினார் ; கோர்ட்டில் ஒரே கூட்டம் ;பரபரப்பு . போப்புக்கு நிச்சசயம் சிறைத்தண்டனை என்று எல்லோரும் கருதினர். ஆனால் நீதிபதியோ ஜி.யூ போப் அவர்களை வணங்கிவிட்டு அவர்தான் உண்மையான கிறிஸ்தவர் HE IS A TRUE CHRISTIAN  என்றார் . அவர் இவ்வளவு அருமையான நூலை மொழிபெயர்த்த பின்னரும் மதம் மாறவில்லை ; அவரே உண்மையான கிறிஸ்தவர் என்றார் . ஏசு சபை யாருக்கு பெருத்த ஏமாற்றம்.

Xxxx

திருவாசகத்துக்குள் சொ சொ மீ .

நானும் என் தம்பியும் சிறுவயது முதலே தினமும் திருவாசகம் படிப்போம். மதுரையில் என் வீட்டின் பெயரே திருவாசகம்தான் . . ஒருவர் என் வீட்டிற்கு வருகை புரிந்தார். இதுவரை திருவாசக ம் வெளியே இருந்தது . இப்பொழுது திருவாசகத்துக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிறார்! (உங்களுக்குள் திருவாசகம் வந்துவிட்டது)

XXXX

ராஜாஜியும் திருவாசகமும், காந்திஜியும் திருவாசகமும் திரு.வி.க. கவும் திருவாசகமும் , ஜட்ஜ் சுப்ரமண்ய ஐயரும் திருவாசகமும் என்ற தலைப்பில் இன்னும் அரிய விஷயங்களைத் தொடர்ந்து சொன்னார். அவற்றையும் காண்போம்.

தொடரும்………………..TAGS- திருவாசகம், சொ சொ மீ , லண்டன் சொற்பொழிவு

Hinduism Crossword Puzzle 1472023 (Post No.12,273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,273

Date uploaded in London – –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the following 12 words with clues and colour coding.

1 2       
     3    
4         
    5     
6         
          
8         
         H
       9 10

1. One of the nine Varshas or divisions of the known world, comprehending the highest and most centrical part of the old continent (beginning with’ I’

3.Long sound- it means musical Veda; short  sound means ‘same’, equal to

4.Snake in Sanskrit (not Naga, Not Sarpa)

6.Vedic sage who Rama met in the forest

8.In the Hindu Calendar eight day after Full moon or New moon

10.Sentiment of disgust, odious , repulsive in dance; in Natya sastra (go left)

NUMBER SEVEN DROPPED

XXXXXX

2.In Sanskrit grammar letters beginning with’ A’. In Tamil, first Tirukkural couplet has this Sanskrit word.

5. Self command, subduing or curbing the passions, self restraint

6.Earth; even in Atharva Veda we have a hymn with this word (go up)

6.Brother is derived from this Sanskrit word; same meaning Brother (go down)

9.Strongest and hugest of the Pandava brothers (go up)

10.Famous Purana giving life history of Krishna (go up)

Answers 

I1LA2VRTA  A
M K  S3AMAT
U4RAGA  A A
H R D5  A V
B6HARADVAJA
R   M  M G
A8SHTAMII A
T      H H
A ASTAHB9IB10

Answers

Across

1.ILAVRTA, 3.SAMA, .URAGA, 6.BHARADVAJA, 8.ASHTAMI, 10.BIBHATSA (go left)

XXXXXX

Down

2.AKARA; 5.DAMA, 6.BHUMI (go up), 6.BRATA (go down), 9.BHIMA (go up), 10.BHAGAVATA (go up)

—subham—

Tags – CW, 1472023, Hinduism