பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1(Post No.12,387)

Picture of Sawlumin Inscription with Sanskrit words

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,387

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1

பர்மாவில் பாலி , பியூ , மோன் , பர்மிய மொழிகள் பேசப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன இந்த நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்ததால், தெரியாத மொழிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பாலி என்பது சம்ஸ்கிருத மொழியின் பேச்சு வழக்கு; . சம்ஸ்க்ருதம் தெரிந்த எவரும் பாலி சொற்களை புரிந்து கொள்ளலாம்.

பிராமி என்பது சரஸ்வதியின் பெயர். பிரம்மா என்பவர் அவளுடைய கணவர். இந்த பிராமி எழுத்திலிருந்துதான் தமிழ் உள்பட, தென் கிழக்காசிய மொழிகள் உள்பட, தென் ஆசிய மொழி எழுத்துக்கள்  வந்தன. சுருங்கச் சொன்னால் தெற்காசியா முழுதும் இந்துக்கள் நாகரீகத்தையும் மொழி அறிவையும் பரப்பினர்.

பர்மா என்ற பெயர் பிரம்மா தேசம் என்பதன் மரூஉ ; சிலர் இது பாமர் என்னும் பர்மிய மக்களின் பெயரிலிருந்து வந்ததாக செப்புவார்கள். ஆனால் அந்த பாமர் என்னும் சொல் எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியாமல் திகைக்கின்றனர் . பர்மா, மியன்மார் என்பனவெல்லாம் பிரம்மன் (கடவுள் ) அல்லது பிரம்மா (மும் மூர்த்திகளில்  ஒருவர்) அல்லது பிராமணர்கள் — என்ற மூன்று சொற்களில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்று மொழி இயல் அறிவுடையோர் வாதிடுகின்றனர்.

xxxx

ஒரே தமிழ் கல்வெட்டிலும் சம்ஸ்க்ருதம்

பர்மாவில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் , பெரும்பாலும் தூய சம்ஸ்க்ருத வரிகளில்தான் துவங்குகிறது . தமிழ் மொழியும் இதற்கு விலக்கல்ல. சுமார் 800 ஆண்டு பழமை உடைய ஒரே தமிழ் கல்வெட்டுதான் பார்மாவில் கிடைத்தது. அதுவும் குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்தமாலா என்ற சம்ஸ்க்ருத நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்துடன்தான் துவங்குகிறது!

இப்போது சம்ஸ்க்ருத சொற்களின் பட்டியலைக் காண்போம் :-

1.ஸ்ரீ க்ஷேத்ரம் –  முக்கியமான ஊரின் பெயர் ஸ்ரீ க்ஷேத்ரம்; இது காஷ்மீ ரிலுள்ள ஸ்ரீநகரம் போன்றது. ஒரிஸ்ஸாவில் உள்ள புரி நகருக்கும் இந்தப் பெயர் உண்டு . இதை பர்மிய உச்சரிப்பில் சரே க்ஷேத்தரா என்பர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்பதை சிறி என்று இலங்கையர் எழுதுவது போல.

2.மும்பை என்ற தேவியின் பெயரை வெள்ளைக்காரர்கள் பம்பாய் என்றது போல. பர்மா என்பதை பர்மிய மொழியில் மியான்மா என்பர் .

3.பர்மாவின் முக்கிய அரசர்களில் ஒருவர் பெயர் அநிருத்த (1044-1077); இது விஷ்ணு ஸஹஸ்ரநாம பெயரில் ஒன்று. இதை பர்மிய உச்சகரிப்பில் அனவ்ரஹ்தா என்பர் .

4. இன்னும் ஒரு மன்னரின் பெயர் நரசிங்கன் . அதை பர்மியர்கள் நரதெய்ங்க என்கிறார்கள் .

உலகம் முழுதும் இந்த த = ஷ ச = த மாற்றத்தைக் காணலாம். தமிழர்களும், ஆங்கிலேயர்களும் இப்படி உச்சரிப்பை  மாற்றுவதால் பர்மியர்களைக் குறை சொல்ல முடியாது !

பாஷை என்பதை தமிழ்ப்படுத்தி பாடை என்றும் , விஷயம் என்பதை விடயம் என்றும் எழுதுகிறோம் .

ஆங்கிலத்திலும் எடுகேடியன் என்று எழுதிவிட்டு அதை  எஜுகேஷன் என்கிறோம். ஏராளமான சொற்களில் TION என்பதை SION என்றுதான் உச்சரிக்கிறோம். இது உலகம் முழுதும் இந்துக்கள் பரப்பிய மொழி. அதே போல ஜே என்பதை ஒய் (J=Y) என்று மாற்றுவதும் இந்துக்கள் உலகம் முழுதும் பரப்பியதே; இதனால் தான் யூத என்பதை  ஜுத என்றும் ஏசு என்பதை ஜீசஸ் என்றும் ஜோசப் என்பதை யூசுப் என்றும் ஜேக்கப் என்பதை யாகூப் என்றும் எழுதுகின்றனர்.

மூன்று நான்கு மொழி இயல் விதிகளைத் தெரிந்து கொண்டால் அத்தனை பர்மிய சொற்களின் சம்ஸ்க்ருத மூலத்தையும் கண்டுபிடித்து விடலாம்  . 

5.பஞ்ச கல்யாணி

அநிருத்த என்ற புகழ் பெற்ற மன்னன் இறந்தபோது அவனுக்கு  இரண்டு மகன்கள் . ஒருவர் மன்னராவதற்கு முன்னர் மணந்துகொண்ட பெண்ணுக்குப் பிறந்த சாவ்ளு ; மற்றோர் மகன் இந்திய இளவரசி 

பஞ்ச கல்யாணி  என்பவருக்குப் பிறந்தவர-.ஞான சித்த ; . அருமையான சம்ஸ்க்ருதப் பெயர் பஞ்ச கல்யாணி. அவருடைய இன்னும்  ஒரு பெயர் வைசாலி .; நாம் காந்தார திலிருந்து வந்த ராணியை காந்தாரி என்றும் , மிதிலா நகரிலிருந்து வந்த சீதையை மைதிலி என்றும் அழைப்பது போல..

6.வைசாலி

வைசாலி என்பது புத்தரின் வாழ்க்கையில் மிகவும் தொடர்புடைய பீஹார் மாநில ஊராகும். இதே பெயரில் பர்மாவிலும் ஒரு நகர் உண்டு.

7.ஞான சித்த

பஞ்ச கல்யாணிக்குப் பிறந்த மகன் பெயர் கியான் சித்து. இது ஞான சித்த என்பதன் திரிபு.

8.ஸ்ரீ வஜ்ர ஆபரண (மான லோல ; சாவ்ளு )

சாவ்ளு பதவி ஏற்கையில் வைத்துக் கொண்ட பெயர் ஸ்ரீ வஜ்ர ஆபரண; உலகம் முழுதும் ப= வ B=V ஆக மாறுவதையும் மொழியியல் அறிஞர்கள் அறிவர் ஆகையால் பஜ்ராபண  என்று பர்மியர் உச்சரிப்பர். வங்கம் என்பதை பெங்கால், பங்களாதேஷ் என்பது போல..

9.சந்திரா தேவி.

தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலைநகர்களில் இருந்து ஆண்டதைப் போல பர்மாவிலும் ஒரே நேரத்தில் பல ஆட்சிகள் இருந்தன. பெகு நகர மன்னனின் மனைவியின் பெயர் சந்த / சந்திரா தேவி. இன்னும் ஒரு பெயர் மணி சந்தா ; அவளுடன் ஞானசித்தாவுக்கு (கியான் சித்து) கள்ளத் தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு .

10..நராதிபதி

இந்தியாவில் ஜனாதிபதி என்று சொல்கிறோம். இதற்கு இணையான சொல் நர +அதிபதி = நராதிபதி.

நராதிபதி 1256- முதல் 1287 வரை பகான் (Pagan) பிரதேசத்தை ஆண்டார். பர்மிய எழுத்துக்களில் இவர் பெயரை நரதிஹபதே என்பர்

11.வேலுவதி

இது பாதி தமிழ், பாதி சம்ஸ்க்ருதம் உடைய பெயர்.. இவர் ஒரு பர்மிய மஹாராணி. வதி , மதி, பதி என்று முடியும் சொற்களை வேத காலத்தலிருந்து இந்துக்கள் பயன்படுத்திவருகின்றனர் வதி , பதி என்ற சம்ஸ்க்ருத பின்னொட்டுக்களை  இன்றும் பார்வதி, சுமதி போன்ற பெயர்களில் காண்கிறோம். அவ்வகையில் வேலு வதி சிறப்புடையது

12.ஸ்வர்ண பூமி

சம்ஸ்க்ருத நூல்கள் பர்மா என்பதை சொர்ணபூமி என்றே குறிப்பிடுகின்றன. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தங்க நாடு அல்லது தங்கம் கொழிக்கும் நாடு என்று பொ ருள்

To be continued……………………………………………

tags- பர்மா ,சம்ஸ்க்ருதம்

Leave a comment

Leave a comment