ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ (Post No.12,377)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,377

Date uploaded in London –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7 

ச.நாகராஜன் 

ஶ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர் அருளிய நூல் ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ 

இதில் 100 ஸ்லோகங்கள் உள்ளன.

இந்த நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 41 ஸ்லோகம் முடிய ஆனந்த லஹரீ என்று கூறப்படுகிறது.

அடுத்து 42 முதல் 100 ஸ்லோகம் முடிய சௌந்தர்ய லஹரீ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நூலில் ஏராளமான சிறப்புகள் உண்டு,

முதலில் இது ஒரு மந்திர சாஸ்திர நூலாகும்.

மந்திரம், தந்திரம், யந்திரம் அடங்கியுள்ள இந்த நூல் ஶ்ரீ வித்யா உபாசகர்களால் பெரிதும் மதிக்கப்படும் நூலாகும்.

ஏராளமான பிரயோக முறைகள் இதில் இருப்பதால் இதை குரு மூலமாகக் கற்பதே சிறந்தது.

தேவியின் பல நாமங்களை சங்கரர் அழகுற இதில் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு சக்தி உண்டு என்பதால் நூல் முழுவதையும் பாராயணம் செய்வோர் தேவியின் அருளுக்குப் பாத்திரமாகி அபாரமான சக்தியைப் பெறுவர்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறலாம். எந்த ஸ்லோகத்தை என்ன பலனுக்காகப் பெற, எப்படி நியமத்துடனும் நிவேதனத்துடனும் செய்ய வேண்டும் என்பதற்கான நியதிகள் உண்டு.

சிவ சக்த்யோ என்று முதல் ஸ்லோகத்தில் ஆரம்பித்து தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் என்று நூல் முடிகிறது.

இகலோகத்தில் சகல சுகமும் பெற 22ஆம் ஸ்லோகத்தைத் துதிக்கலாம்.

பவானி என்று ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகம் பவானி என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அம்பாள் பக்தனுக்கு ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுவதாக உறுதி கூறுகிறது.

ஸ்லோகம் இதோ:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவானி த்வமிதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ||

இதன் பொருள்:

“ஹே, பவானி! உன் அடிமையான் என்னை நீ கருணையுடன் கூடிய உனது கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று துதி செய்ய விரும்பி ஒருவன், “பவானி, நீ” என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அவனுக்கு விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்களாரத்தி செய்யப்பட்ட திருவடிகளுடன் கூடியதாக உன் ஸாயுஜ்ய பதவியையே நீ அளித்து விடுகிறாய்”.

பத்தாம் ஸ்லோகமான ஸுதாதாராஸாரை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் துதித்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளின் அருள் வாக்கு,

செல்வம் செழிக்கக் கூற வேண்டிய ஸ்லோகம் ஸ்மரம் யோநிம் என்று ஆரம்பிக்கும் 33வது ஸ்லோகமாகும்.

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரியமித மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா: |

பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்ஹ்தாக்ஷ வலயா:

சிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி ஸதை: ||

இதன் பொருள்:

“ஓ, பராசக்தியே! புண்ணியவான்களான சில யோகிகள் தமது கையில் தாமரை மணிமாலையைத் தரித்து முறையே காம, யோநி, லக்ஷ்மீ பீஜாக்ஷரங்களான க்லீம், ஹ்ரீம், ஶ்ரீம் என்னு பீஜாக்ஷரங்களையும் சேர்த்து ‘ஸௌபாக்ய பஞ்சதசீ’ என்னும் இந்த மந்திரத்தை திரிகோணாகாரமாகிய சிதக்நியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னைத் திருப்தி செய்விக்கிறார்கள்.”

ஸௌபாக்ய பஞ்சதசீ என்னும் அபூர்வமான மந்திரம் இந்த ஸ்லோகத்தில் சங்கேதமாகக் குறிப்பிடப்படுகிறது.

சௌபாக்யம் அருளும் இந்த ஸ்லோகம் அபூர்வமான ஸ்லோகங்களுள் ஒன்று.

இதைக் கையில் பணத்தை வைத்துக் கொண்டு சொன்னால் அது போல பத்து மடங்காக நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு என்ன பலன் என்பதை லிப்கோ (தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி) வெளியீட்டில் காணலாம்.

ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடாக அண்ணா அவர்களின் சௌந்தர்ய லஹரீ விரிவுரை மிக நிச்சயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.

அம்பாளின் அருளுக்கு உடனே பாத்திரமாக விரும்புவோர் அணுக வேண்டிய நூல் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரீ.

இதன் பெருமையை யாராலும் முற்றிலுமாக உரைக்க முடியாது!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 582023 (Post No.12,376)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,376

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 11 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

 2 3  
     4 5
   6    
      
  9   

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

Brwon and Blue colours

1. பாரசீகத்திலிருந்து வந்த மலரைக்கொண்டு ஜாம் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அதன் பெயர் என்ன?

4. விருது ; மின்னல், இடி

6. அஸ்வினிக்கு அடுத்த நட்சத்திரம்; கார்த்திகையுடன் சேர்த்துப் பேசுவர் (Go left)

6. சூரியனுக்குள்ள தமிழ்ச் சொற்களில் ஒன்று

7. புலவர்களில் அரசன் என்று பொருள்; வீரை —பண்டிதர், சந்திரசேகர —— பண்டிதர் என்ற பெயர்களில் இந்தச் சொல்லக் காணலாம்.

8. சேரர்களின் தலை நகர்; தற்போதைய பெயர் வஞ்சி

9. சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஊர்கள் இந்தப் பெயரில் வரும்

xxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

Green Colour

1. தமிழர்கள் கல்யாணம் செய்த நட்சத்திரம் என்று அகநாநூறு கூறும் ; சந்திர பகவானுக்கு வேண்டிய பெண்.

(2.) 12 ராசிகளில் குடத்தின் படத்துடன் தோன்றும்

3. சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடிய பிராமணன்; சங்கப்புலவர்களால் அதிகமாகப் பாடப்பெற்ற அந்தணன்

5. சிறிய மலை; குமரன் குடி இருக்கும் குட்டி மலை; மதுரைக்கு அருகிலுள்ள அறுபடை வீட்டில் கூட இந்தச் சொல் உண்டு.

picture by Silpiதிருமாலிருங்குன்றமும் திருப்பரங்குன்றமும் 

ரோ1ஜாகு2ல்க3ந்து
கி ம் பி4டுகு5
ணிப6ன்
க7விரான் 
வ8ஞ்சிந9ம்

Answers

1.ரோஜா குல்கந்து

4.பிடுகு

6.பரணி (Go left)

6.பகலவன்

7.கவி ராஜன்

8.வஞ்சி

9.நக ரம்

xxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

Green Colour

1.ரோகிணி

2.கும்பராசி

3.கபிலன்

5.குன்றம்

Xxxx subham xxxx

Hinduism Crossword Puzzle 5 8 2023 (Post No.12,375)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,375

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ACROSS (Violet and Green colour words)

1.Only when Krishna showed this form, Arjuna was convinced and obeyed his commands.

5.I bow to you, I worship You in Sanskrit; one comes across this word in Hymns.

7.This attribute to Lord comes in Vishnu Sahasranama meaning ‘Immeasurable, unbounded, boundless’

8.Grammatical term in Sanskrit; There are 4 types: 1) āvyayi bhavaṉ, 2) tatpuruṣa, 3) dvandaṉ, and 4) bahuvr̥hi.

9.King of the Bears in Ramayana who helped Rama in search of Sita.

Xxxxx

DOWN (Yellow colour words)

1.Name of Lord Ganesh; meaning one who is the leader; one who has no superior to him.

 2.Arch enemy of Indra in Rig Veda; also Asura name in Ramayana who was killed by Dasaratha.

3.Rishi or Hindu saints’ shelter/house in Forest

4.common word for Musical instrument

6.Pisces sign in Zodiac

123 
    4 
56 
    
    
7
    
 8
9

ANSWERS

V1IS2VARUPA3 
I A   V4 S
N5AMAM6IA H
A B E D R
Y A E H A
A7PRANEYAM
K A A A A
A S8AMASAM
J9AMBHAVAN

ACROSS

1.VISVARUPA

5.NAMAMI

7.APRAMEYA

8.SAMASAM

9.JAMBHAVAN

Xxxxx

DOWN

1.VINAYAKA

 2.SAMBARA

3.ASHRAMAM

4.VADHYA

6.MEENAM

 —subham—

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்! கர்நாடக மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 17 (Post.12,374)

Picture of Veeranarayana Temple, Belavadi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,374

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Temple Pictures are Taken from Wikipedia

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 17

79.வீரநாராயண கோவில், பெலவாடி The Veera Narayana temple, / Viranarayana temple of Belavadi

சிக்மகளூர் நகரிலிருந்து 25 கி.மீ.

ஹொய்சாளர் தலைநகரான ஹளபீடுவிலிருந்து 10 கி.மீ.

இங்குள்ள வீரநாராயணர்  கோவில், ஹொய்சாளர் கட்டிடக் கலையை அப்படியே பாதுகாத்துவைத்துருக்கிறது. மூன்று கர்ப்பக்கிரகங்களை மிகப்பெரிய ரங்க மண்டபம் இணைக்கிறது . வேறு எங்கும் இவ்வளவு பெரிய மண்டபம் கிடையாது .வீரநாராயண பெருமாள் எனப்படும் விஷ்ணு, யோக நரசிம்மர், கோபாலன் ஆகிய மூவர் சந்நிதிகள் முக்கியமானவை  800 ஆண்டு வரலாறு உடைய இந்தக் கோவிலில் கூரை மீது செதுக்கப்பட்டுள்ள கிருஷ்ண லீலைகளும் வேறு எங்கும் காண இயலாத ஒப்பற்ற வடிவங்களாக உள்ளன, பகாசுரனை பீமன் வதைத்த இடம் இதுதான் என்பது மக்களின் நம்பிக்கை .

Xxxxx

80. அங்காடி கோவில்  Durga or Vasantha Parameshwari Temple /Vasanthika Temple, Angadi

முடிகரே என்னும் இடத்திலிருந்து 18 கிமீ. ஹொய்சாளர்களின் மூன்று பாழடைந்த கேசவ, வீரபத்ர, மல்லிகார்ஜுன கோவில்கள் இருக்கின்றன. அங்காடி என்னும் ஊர்ப்பெயர் சந்தை, மார்க்கெட் என்று பொருள்படும். சங்க இலக்கியத்தில் மாத்திரை நகர நாள் அங்காடி, அல்லங்காடி பற்றிப் படிக்கலாம் . சாலை என்பவன் புலியைக் கொன்ற இடமும் இதுதான் (ஓய் +சால ). சசகபுரம் என்றும் பெயர்.. இங்குள்ள வஸந்திக ஹொய்சாள கோவிலில் இன்றும் துர்க்கையை தரிசிக்கலாம்.இங்குள்ள கருங்கல் தூண்கள் மிகவும் அழகானவை.

Xxxxx

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

81.ஹாஸனாம்பா  கோவில் Hasanamba temple , Hassan,

ஹாசனாம்பா என்ற பெயரில் சக்தி தேவி வணங்கப்படுகிறாள் . தீபாவளி காலத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் கோவிலுக்குள் புற்று வடிவத்தில் இறைவன் உளார் .800 ஆம்தட்டுகளுக்கும் மேல் பழமை உடையது .ஒரே வாரம் மட்டும் கோவில் திறந்து இருப்பதால் அப்போ து பல்லாயிரக் கணக்கனமாக்கல் விஜயம் செய்கிறார்கள். கோவில் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் நந்தா தீபம் மாட்டும் எரிந்து கொண்டிருக்கும் .

இங்கு ஒரு வினோதம் என்னவென்றால், ஒன்பது தலையுள்ள ராவணன் வீணை வசிப்பதாகும் ; மற்ற இடங்களில் நாம் பத்து தலை ராவணனைக் காண்கிறோம் . சித்தேஸ்வர சுவாமியும் சிவன் ரூபத்தில் காட்சி தருகிறார்.

மும்பை , கோல்கத்தா  முதலிய ஊர்களுக்கு அந்தந்த ஊர் சக்தி தேவியே பெயர் கொடுத்தது போல இந்த ஹாஸன் நகருக்கும் தேவி ஹானாம்பாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது ..

Xxxxx

82.ஹளபீடு 35,000 சிற்பங்கள் 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.ஆகா உலகியேயே பணக்கார நறு இந்தியாதான் என்பதற்கு நம் சிலைகளில் உள்ள நகைகளைப் பார்த்தால் போதும்.

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து.

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

4..துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

5.ஹளபீடு என்றால் பழைய வீடு /தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது

150 அற்புதக் கோவில்கள்

. 6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்

7.      இந்த ஊர்பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

8.       .முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 35,000 சிற்பங்கள்

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 ‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!! 

11.  காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 To be continued……………………………………

Tags- ஒரே வாரம், ஹளபீடு, அங்காடி, பெலவாடி, ஹொய்சாளர், ஹாசனாம்பா,

QUIZ காவிரி நதி பத்து QUIZ (Post No.12,373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,373

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz குவிஸ் வரிசை எண் –  60

QUIZ காவிரி நதி பத்து QUIZ

1.காவிரி நதியில் உள்ள பழைய அணை எது அதை யார் கட்டியது ?

XXXXXX

2.காவிரி நதியின் நீளம் என்ன அதன் மறு பெயர் என்ன ?

XXXX

3.காவிரி நாதியின் பெயருக்கு கரணங்கள் என்ன?

XXXX

4.காவேரி நதியை உருவாக்கிய ரிஷியும் அதற்குக் காரணமான பறவையும் எவர் எது?

XXXX

5.காவேரி திருவையாற்றில் ஐந்து நதிகளாகப் பிரிவதால் அந்த  ஊருக்கு  திருவையாறு என்று பெயர்அந்த 5 கிளை நதிகளின் பெயர்கள் என்ன?

XXXX

6.துலா காவேரி ஸ்னானம் என்பது என்னகாவேரியின் பெருமையைக் கூறும் சம்ஸ்க்ருத நூலின் பெயர் என்னகாவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் சங்கமம் ஆகும் இடம் வரை விவரிக்கும் தமிழ் புஸ்தத்தின் பெயர் என்ன?

XXXX

7.இந்த நதி உற்பத்தி ஆகும் இடத்தின் பெயர் என்னஅங்குள்ள தலங்கள் யாவைகாவேரி நதி எந்தக் கடலில் கலக்கிறது ?

XXXX

8.காவிரி நதிமலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் யாவை?

XXXX

9.காவிரி நதியின் புகழ் பாடும் நூல்கள் எவை?

XXXX

10.தமிழ் நாட்டில் மேட்டூர் அணை உள்ளது. கர்நாடகத்தில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் மீதுள்ள அணைகள் யாவை ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture shows Dams across River Kaveri

ANSWERS

1.திருச்சிக்கு அருகில் உள்ள கல்லணை ; இதை கரிகால் சோழன் கட்டினான். உலகிலேயே பழைய அணை இதுதான் OLDEST DAM IN THE WORLD . ஆங்கிலத்தில் கிராண்ட் அணைக்கட் GRAND ANICUT என்று சொல்லுவார்கள்

XXXXX

2. காவிரி நதியின் நீளம் 800 கி.மீ ; மைல் கணக்கில் சுமார் 500 மைல் ; மறு பெயர் பொன்னி .

XXXXX

3.காவிரி நதியின் பெயருக்கு காரணங்கள்:

ஆறு பாயும் இடம் எல்லாம் பூங்காக்களை உண்டாக்கி செல்லுவது முதல் காரணம்.

காகம் விரித்த நதி என்பதால் – காக + விரி என்பது இரண்டாவது காரணம்;

பொன் போல் விளையும் நெற்பயிருக்கு காரணமாவதால் பொன்னி;

இந்தியாவின் ஒரே தங்கச் சுரங்கமான கோலார் தங்கச் சுரங்கம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆவதால் பொன்னி .

XXXX

4.அகஸ்திய மகரிஷி ; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிட்டு நதியைத் திருப்பிவிடும் பாதையைக் காட்டிய பறவை காகம். அகஸ்தியர் மாபெரும் சிவில் மற்றும் மரைன் என்ஜினீயர் CIVIL AND MARINE ENGINEER. ராமன் ,அர்ஜுனன் போன்றோர் பெரிய நதிகளைக் கடக்க முடியாமல் கடலோரமாகவும் படகுகளில் பயணம் செய் தும்  தென்னாட்டிற்கு வந்தனர். அகஸ்தியர்CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர் என்பதால் விந்திய மலையை உடைத்து, காடுகளை அழித்து தமிழ் நாட்டிற்கு சாலைப்பாதை LAND ROUTE/ ROAD ROUTE அமைத்தார். பகீரதன் என்ற என்ஜினீயர் CIVIL ENGINEER  கங்கையைத் திரும்பிவிட்டது போல காவிரியையும் தமிழ் நாட்டிற்குப் TO DIVERT THE RIVER FROM KERALA  SIDE பயன்படும் வகையை எண்ணி தவம் இயற்றுககையில்  காகம் வந்து கமண்டல ததைத் தட்டவே அதிலுள்ள நீர் வழிந்தோடிய பாதையில் காவிரியைத்திருப்பிவிட்டார். இதை கல்லணையில் சிலைகளாகக் காணலாம்STATUES DEPICTING THIS ANECDOTE ARE IN GRAND ANICUT NEAR TRICHY.

XXXX

5. திருவையாறு :–காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு , வடவாறு ; இங்குதான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதி இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் அங்கு ஆராதனை நடைபெறும்

XXXXX

6.ஐப்பசி மாத முதல் நாளில் மாயவரத்தில்  காவிரி துலா ஸ்நானம் துவங்கி ,மாதம் முழுதும் மக்கள் புண்ணிய நீராடுவர் . இதோ காஞ்சி பரமாசார்ய  (1894-1994)சுவாமிகளின் அருளுரை

காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

XXXXX

7.கர்நாடக மாநிலத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில்  குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரியில் தோன்றுகிறது.; குடகு என்பதை ஆங்கிலத்தில் கூர்க் COORG என்பர்.

பூம்புகார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

தலைக் காவேரி , அதன் கீழுள்ள தர்மஸ்தலா ஆகியன முக்கிய தலங்கள்.

XXXXX

8.காவிரி நதி, மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் :–கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஹொகனேகல் /ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு நீர்வீழ்ச்சிகள் ஆகும்

XXXX

9.முன் காலத்தில் சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களில் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆயினும் முழுக்க, முழுக்க காவிரி நதியைப் போற்றும் நூல்கள் :–

சம்ஸ்க்ருத மொழியில் துலா காவேரி மஹாத்மியம் , தமிழ் மொழியில் நடந்தாய் வாழி காவேரி;   ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய பயண நூல்.

XXXXXX

10. கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர்,

Krishna Raja Sagara Dam. கிருஷ்ணராஜ சாகர்

Hemavathy Dam. ஹேமாவதி அணை

Harangi Dam.ஹாரங்கி அணை

Kabini Dam.கபினி அணை

Banasura Sagar Dam.பாணாசுர சாகர் அணை

தமிழ்நாட்டில்

Kallanai.கல்லணை

Mettur Dam (Ellis Park, Stanley)மேட்டூர் அணை

Amaravati Dam.அமராவதி அணை

இவை முக்கிய அணைகள். இவை தவிர குட்டி அணைகளும் உண்டு.

—SUBHAM—

Tags- துலா காவேரி மஹாத்மியம் , நடந்தாய் வாழி காவேரி, சிவசமுத்திரம் ,ஹொகனேகல், கல்லணை, காவிரி, குடகு , பூம்புகார், திருவையாறு

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை-2 (Post No.12,372)

Kollur Temple from Wikipedia 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,372

Date uploaded in London –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி  மாத அம்மன் தலங்கள் வரிசையில் 2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை

(இரண்டாம் பகுதி )

ச.நாகராஜன்

வாக்தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம்.  ஆகவே ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து வழிபட்டு சரஸ்வதியின் அருளைப் பெறுகின்றனர். சரஸ்வதி பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் துறை சார்ந்தோர், ஓவியர்கள் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பித்து அருள் பெறுகின்றனர்.

இங்குள்ள அம்மனின் சிலை பஞ்சலோகத்தினால் ஆனது. காலையில் சரஸ்வதியாகவும் பகலில் லக்ஷ்மியாகவும் மாலையில் பார்வதியாகவும் அம்பிகை வழிபடப்பட்டு போற்றப்படுகிறாள்.

விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்கு பல திருப்பணிகளைச் செய்துள்ளார். மூகாம்பிகை அம்மனுக்கான முக கவசத்தையும் அவர் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஷிமோகா பிரதேசமான அன்றைய கேளடி பகுதியை ஆண்ட கேளடி நாயக்க மன்னர்கள் இந்தக் கோவிலை நல்ல முறையில் அமைத்தனர். இதே வமிசத்தைச் சேர்ந்த ராணி சென்னம்மாவும் இந்தக் கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடும் இந்தத் திருத்தலத்திற்கு அரசியல் தலைவர்களும் பெருமளவில் வந்து வழிபடுவது வழக்கம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

இங்கு வந்து வழிபட்டவுடன் எந்தக் காரியத்திலும் பக்தர்கள் வெற்றியை அடைவது நிதர்சனமாக இன்று வரை காணப்படுகிறது.

பங்குனி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று தேவி அவதரித்த நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஐயாயிரம் பேர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச உணவு வழங்கப்படுகிறது.

இங்கு தங்குவதற்கு வசதிகள் நல்ல முறையில் உள்ளன. 250 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள விருந்தினர் விடுதியில் 350 அறைகள் உள்ளன. சுமார் 4000 பேர் தங்க இங்கு வசதி உள்ளது..

ரகசிய பொக்கிஷ அறை

இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போலப் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள ரகசிய அறை பற்றிக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள சங்கரபீடத்தில் ஒரு நாகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே ரகசியத்திற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது.

இந்தப் பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாகவும், அதில் ஏராளமான வைரம், மரகதம் உள்ளிட்ட மணிகளோடு தங்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தினாலான தங்க ரதம் ஒன்றும் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இது தவிர பல கோடி பெறுமான தங்க நகைகளும் சுமார் 50 கோடிக்கும் மேலான மதிப்புள்ள மாணிக்கம், வைரம் கொண்ட நகைகளும் அம்மனுக்கு உள்ளன.

கர்நாடகத்தின் செல்வச் செழிப்புள்ள ஆலயம் இது என்றால் அது மிகையல்ல.

இங்கு அம்மனுக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் லிங்கத்திற்கு மட்டும் நடைபெறும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. மூகாம்பிகையின் குங்குமத்தை இட்டுக் கொண்டால் கெட்ட தலையெழுத்து நீங்கும் என்பது ஐதீகம்.

லிங்கத்தின் நடுவே தங்க நிற ரேகை உள்ளது. அபிஷேக சமயத்தில் இதைக் காணலாம்.

எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சண்டி ஹோமத்தை பக்தர்கள் இங்கு செய்கின்றனர்.

ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் துன்பப்படுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய அவை அகலும்.

இங்கு ஒரு கோசாலையும் உண்டு.

பொதுவாகவே தேவியைக் கும்பிட்டால் அவள் தனம் தருவாள், கல்வி தருவாள், தளர்வறியா மனம் தருவாள். தெய்வ வடிவு தருவாள். நெஞ்சில் வஞ்சமில்லா  இனம் தருவாள் நல்லன எல்லாம் தருவாள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு தேவி மூகாம்பிகை. அவள் குடியுருக்கும் இடம் கொல்லூர்.

அம்மனை வணங்குவோம்; அருள் பெறுவோம்.

***

London Swaminathan July 2023 Articles Index (Post No.12,371)


30-7-2023 London Rath Yatra Picture; London swaminathan with Harekrishna Ratha.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,371

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

London Swaminathan Article Index for July 2023 (Index No.128)

Ati Rudra Yagam — Guide to Hindu Homas- 7  (Post No12,213) 1 July 2023

Purusha Sukta Homa, Sri Sukta Homa and Gayatri Homa (Post No.12,225) 4/7

Chandi Homam, Bhagavad Gita Homam, Pratyankara sulini homam (Post No.12,229)5/7

Vastu Homa : Guide to Hindu Havans ,Homas, Yagas and Yagnas- Part 8 (Post No.12,216)2/7

Guide to Hindu Havan, Homa, Puja: Things needed for Puja,

Havan, Homa and Yagna (Post No.12,220) 3/7

Sister Nivedita Statue in London (Post No.12,234)6/7

Sudarsana Homam : Hindu Guide to Havan ,Homas and Yagas (Post No.12,239) 7/7

Two Tree Wonders in Karnataka(Post No.12,249) 9/7

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-1 (Post No.12,338)28/7

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-2 (Post No.12,342)29/7

Sanskrit in Burma /Myanmar -Part 1 (Post No.12,289) 17/7

Sanskrit in Burma /Myanmar -Part 3 (Post No.12329) 26/7

Sanskrit in Thailand (Post No.12,265) 12/7

Sanskrit in Thailand –2 (Post No.12,270)13/7

Sanskrit in Thailand – Part 3 (Post No.12,281)16/7

Shiva and Ganesh in Burma (Post No.12,310)22/7

Tamil Chettiars in Burma (Post No.12,315) 23/7

Vishnu and Surya in Burma/Myanmar (Post No.12,319)24/7

AUGUST 2023 GOOD THOUGHTS CALENDAR (Post No.12,350)31/7

Brahma in Burma (Post No.12,306) 21/7

Great Demand for Astrologers in London(Post No.12,323) 25/7

Tamil or English Crossword Puzzles posted on all days

XXXXXXXXX

1-7-2023 Nivedita statue opened in Wimbledon in London

TAMIL ARTICLES

QUIZ  ரிஷிகள் பத்து QUIZ (Post No.12,304)21/7

QUIZ உபநிஷத் பத்து QUIZ (Post No.12,313)23/7

QUIZ ஒளவையார் பத்து QUIZ (Post No.12,331)26/7

QUIZ தொல்காப்பியப் பத்து QUIZ (Post No.12,212)1/7

QUIZ தேதிப் பத்து QUIZ (Post No.12,219) 3/7

QUIZ காஷ்மீர் அதிசயங்கள் பத்து QUIZ (Post No.12,223)4/7

QUIZ கண்ணப்பநாயனார் பத்து QUIZ  (Post No.12,278)15/7

QUIZ கல்கத்தா பத்து QUIZ (Post No.12,262) 12/7

QUIZ கவிதைப் பத்து QUIZ (Post No.12,215)2/7

QUIZ காஞ்சீபுரம் பத்து QUIZ (Post No.12,275) 14/7

QUIZ சித்தர் பத்து QUIZ (Post No.12,235)6/7

QUIZ சுந்தரர்  பத்து QUIZ (Post No.12,244) 8/7

QUIZ தஞ்சைப் பத்து QUIZ (Post No.12,267) 13/7

QUIZ தமிழ் ஓரெழுத்துகள் பத்து QUIZ (Post No.12,336)28/7

QUIZ திருச்சிப் பத்து QUIZ (Post No.12,312)23/7

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291) 18/7

QUIZ  நவக்கிரக பத்து QUIZ (Post No.12,321) 25/7

QUIZ நவரத்தின பத்து QUIZ (Post No.12,327) 26/7

QUIZ பகவத் கீதை பத்து QUIZ (Post No.12,349)31/7

QUIZ ஸம்ஸ்க்ருதப் பத்து QUIZ (Post No.12,227)5/7

QUIZ அப்பர் பத்து QUIZ (Post No.12,238)7/7

QUIZ மணிமேகலை பத்து QUIZ  (Post No.12,258) 11/7

QUIZ மதுரை மீனாட்சி பத்து QUIZ (Post No.12,248)9/7

QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253) 10/7

QUIZ மும்பை பத்து QUIZ (Post No.12,301)  20/7

Quiz ராகப் பத்து Quiz (Post No.12,298) 19/7

QUIZ  ரிஷி முனிவர்கள் QUIZ (Post No12,348)31/7

QUIZ  பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283) 16/7

QUIZ கும்பகோணம் பத்து QUIZ (Post No.12,286) 17/7

அதிகம் அடிபட்டவர் சிவபெருமான் ! (Post No.12,255) 10/7

அப்பர் பற்றிய அரிய தகவல்கள்– சொ. சொ. மீ. உரை (Post No.12,288)17/7

ஆகஸ்ட் 2023 நற்சிந்தனை காலண்டர்  (Post.12,351) 31/7

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் –Part 1 (Post No.12,232) 6/7

பகுதி 1- பகுதி  14 Part 1 to Part 14

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 14 (Post No.12,344)30/7

காசியின் 5 சிறப்புகள் ; திருமீயச்சூர் அதிசயங்கள் (Post No.12,250) 9/7

சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன? (Post N.12,269) 13/7

ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை (Post No.12,297)19/7

தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !! (Post No.12,340)29/7

திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 (Post No.12,277) 19/7

திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No.12,274)14/7

தெரிந்த ஊர், தெரிந்த கதை: புதிய விளக்கங்கள்!! (Post No.12,260)11/7

நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு (Post No.12,243)8/7

மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது (Post No.12,322) 25/7 25/7

Picture -London Swaminathan near Nivedita statue in Wimbledon 1-7-2023

—subham—-

 Tags: July 2023 Index, London Swaminathan

Tamil Crossword Puzzle 4 8 2023 (Post No.12,370)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,370

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குறுக்கே

1. இவர் மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்தே  இராசராச சோழன் அரியணை ஏறினார்.

5. ஒருவகைக் கைவளை; முழு சூரிய கிரகணம் ஏற்படாதபோது அதை இந்த சொல்லாலும் குறிப்பர்

6. கடலின், ஆகாயத்தின் நிறம்

7. இந்த சமண மத பிரிவினருக்கு வானமே ஆடை

xxxxxx

கீழே

1. உலகநாதர் இயற்றிய நூலின் பெயர்

2. இந்தக் கடையில் எப்போதும் பெண்கள் கூட்டம்; அக்ஷய திருதியை வந்தால் இன்னும் கூட்டம்

3. இது இல்லாவிட்டால் சினிமா கொட்டகைகளில் Pop Corn பாப் கார்ன் கிடைக்காது

4. மதுரையில் இவர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவன்று லட்சம் பேர் பார்ப்பார்கள்

8. மகேந்திரன், நரசிம்மன் ஆகிய மன்னர்கள் இந்த வம்சம் ஆதலால் அவர்கள் பெயர்களில் இந்தச் சொல் இருக்கும். (go up)

xxxxx

1 2 3  
     4 
5      
6      
7     8  

விடைகள்

உ1த்த2சோ3ன்
 ங் அ4
க5ங்ம்
நீ6ம்  ல்
தி7ம்ர்ப8  

–subham–

Hinduism Crossword 4 8 2023 (Post No.12,369)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,369

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find eight words beginning with the letter Y.

1.Second Veda of the four; Deals with Yagas and Yajnas

2.Great river on the banks of which Krishna played,

3.Lucky woman who raised Lord Krishna,

4.Sanskrit word for Fire ceremony,

5. the ritual patron, on whose behalf a religious ritual or a yajna is performed by a Hindu priest. Now used for boss, proprietor in Indian languages.

6.The wooden post planted at the place of Vedic ceremonies, 7.word for Fame; many girls and boys have this name

8.the grain which gave name to Java in Indonesia

    1     
          
          
         2
8         
          
          
          
7   Y    3
          
          
          
6         
         4
          
    5     

ANSWERS

1.Yajur veda, 2.Yamuna, 3.Yasoda, 4.Yajnam, 5Yajamana, 6.Yupam, 7.Yasas, 8.Yavam

    A1     
    D     
    E     
    V    A2
M8   R   N 
 A  U  U  
  V J M   
   AAA    
S7ASAYASODA3
   UAA    
  P J J   
 A  A  N  
M6   M   A 
    A    M4
    N     
    A5     

—subham—-

QUIZ புராணப் பத்து QUIZ (Post No.12,368)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,368

Date uploaded in London – –  4 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ புராணப் பத்து QUIZ

1.புராணங்கள் 18 என்பர்உப புராணங்கள் மேலும் 18 என்பர். அவை யாவை?

Xxxx

2.புராணங்கள் பழையதாவேதங்கள் பழையதா?

Xxxx

3.புராணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு என்ன பொருள்?

Xxxx

4.புராணங்கள் எவ்வளவு பெரியவைபடிக்க முடியுமா?

Xxxx

5.புராணங்களில் பெரியது எது சிறியது எது பழையது எது?

xxxx

6.புராணத்துக்கு என்று ஒரு இலக்கணம் உண்டு என்று சொல்லுவார்கள். எல்லா புராணங்களும் சொல்லும் 5 விஷயங்கள் என்ன ?

xxxx

7.புராணங்கள் என்ற பெயரில் தமிழ் மொழியில் தோன்றிய புகழ்பெற்ற நூல்கள் எவை?

xxxx

8.புராணங்களில் இன்று அதிகம் பயிலப்படுவது எது ?

Xxxx

9.எந்த புராணத்தை இறந்தோர் வீட்டில் வாசிப்பதும் கேட்பதும் ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப்படுகிறது ?

xxxxx

10.அறப்பளிச்சுர சதகம்  என்னும் நூலில் 18 புராணங்களையும் ஒரே பாடலில் அம்பலவாண கவிராயர் சொல்கிறாராமே . அது என்ன பாடல்?

xxxx

விடைகள்

1.பதினெட்டு புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்.

உபபுராணங்கள் 18

சிறிய புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

xxx

2.புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள. ஆயினும் அவைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தது குப்தர்  காலத்தில்தான். அப்போதுள்ள விவரங்ககளையும் சேர்த்து அவர்கள் அவைகளை புதுக்க்கினர் ; அதாவது அப்டேட் செய்தனர். எல்லாவாற்றையும் எதிர்காலத்தில் நடப்பது போலச் சொல்லுவது பெளராணிகர்களின் ஸ்டைல்.இதே போல் பிற்கால வரலாற்றைச் சேர்த்ததனால் அவைகளை பிற்கால நூல்கள் என்று சொல்லிவிட்டனர் .Atharva Veda (25-6-4); (11-7-24), Satapata Brahmana (11-5-6-8)

முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில், நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

உபநிஷத்துக்களில் பழையது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அதில் கூட இதிஹாச புராணக் குறிப்புகள் இருக்கிறது:

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்

மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம

வேத சுதர்வாங்கிரச இதிஹாச

புராணம் வித்யா உபநிஷத் —என்று

பிருஹதாரண்யம் கூறுகிறது. இதை 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பொருள்: இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

XXXXX

3.‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழி யாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். புரா – முந்திய /பழைய ; நவம் – புதுமையானது. ஆங்கிலச் சொல் நியூ NEW என்பது இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்ததே.

XXXX 

4.முக்கிய புராணங்கள் 18 ; அவைகளில் உள்ள ஸ்லோகக்ங்கள் நாலு லட்சம்; அதாவது சம்ஸ்க்ருத மொழியில் எட்டு லட்சம் வரிகள் ! ஒரு வாழ்நாளில் பிடித்துவிடலாம்; ஆயினும் அவைகளின் பொருளை உணர்வது எளிதல்ல. குறைந்தது 40 லட்சம் சொற்கள் .

XXXX

5.மிகப் பெரிய புராணம் : கந்த புராணம்  Skanda Purana.

மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana.

மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம்  Vishnu Purana ( இப்போது கிடைக்கும் வடிவத்தின் காலம் பொ .ஆ 300 CE ).

XXXX

6.புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்;

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்;

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்;

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்;

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

XXXX

7.பெரிய புராணம், திருவிளையாடல் புராணம்; புலவர் புராணம் ; ஏனைய கந்த புராணம் போன்றவை சம்ஸ்க்ருத மொழியில் உள்ளவரின் மொழிபெயர்ப்பே.

XXXX

8.அவதாரங்கள் பற்றி, குறிப்பாக கிருஷ்ணரின் வாழக்கையைக் கூறும் பாகவத புராணம்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதை ஏழே நாட்களில் பாராயணம் செய்யும் — முற்றோதல்– மிகவும் புண்ணியமானது என்பதால் பல குடும்பங்களும் சங்கங்களும் இதை ஏற்பாடு செய்கின்றன . அதற்கு பாகவத சப்தாஹம் என்று பெயர்.சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்தார். அதிலிருந்து இது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்பட்டது .இப்போதும் கார்த்திகை, மார்கழி  மாதங்களில் பாலக்காடு, குருவாயூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் பாகவத சப்தாஹம் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது .

Xxxxx

9.கருட புராணம் வாசிப்பது சம்பிரதாயம் ; கருடபுராணத்தை 13-ம் நாளில்  வாசிக்க வேண்டும் காரணம் என்னவென்றால் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.

xxxxx

10.தலைமை சேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

          சாரும் வாமனம், மச்சமே,

     சைவம், பெருங் கூர்மம், வருவராகம், கந்த

          சரிதமே, பிரமாண்டமும்,

தலைமை சேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம்;

          நெடிய மால் கதை; வைணவம்

     நீதி சேர் காருடம், நாரதம், பாகவதம்,

          நீடிய புராணம் நான்காம்;

கலை வளர் சொல் பதுமமொடு, கிரம கைவர்த்தமே,

          கமலாலயன் காதை ஆம்;

     கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

          கனல் காதை ஆக்கினேயம்;

அலை கொண்ட நதியும் வெண் மதியும் அறுகும் புனையும்

          அத்தனே! அருமை மதவேள்

     அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

          அறப்பளீசுர தேவனே!

பொருள்:: முதலில் உள்ளது பௌடிகம் , லிங்கம், மார்க்கண்டேயம், வாமனம் ,

சைவம், மச்சம், கூர்மம், வராஹம், ஸ்கா ந்தம் ,பிரம்மாண்டம்  ஆகிய இவை பத்தும் சிவன் தொடர்புடைய புராணங்கள்;

வைணவம், கருடம், நாரதம் பாகவதம் ஆகிய நான்கு புராணங்கள்  திருமாலின் புகழ் பாடும் புராணங்களாம் .

பத்ம புராணமும், பிரம்ம கைவர்த்தமும் பிரம்மதேவன் தொடர்பான புராணங்கள். இவை தவிர சூரியன் புகழ் படும் சூரிய புராணமும் அக்கினியைப் போற்றும் அக்கினி புராணமும் ஆக மொத்தம் 18 புராணங்கள் .

18 புராணங்கள் எவை என்ற பட்டியலில் கருத்து வேறுபாடு உண்டு

XXXXX

Tags- பதினெட்டு புராணங்கள், பெயர், பாகவத சப்தாஹம், கருட புராணம் , உப புராணங்கள், அர்த்தம், என்ன