இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 38
77. இணுவில் சிவகாமி அம்மன் கோவில்
புலவர் ஒருவர் வாழ்வில் அற்புதம் நடத்தியதால் புகழ் பரவிய கோவில் சிவகாமி அம்பாள் கோவில் ஆகும். இலங்கையில் இரண்டு சின்னத்தம்பி புலவர்கள் தமிழ் மணம் பரப்பிப் புகழ்க்கொடி நாட்டினார்கள் அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்து சின்னத்தம்பிப் புலவர் ; இன்னும் ஒருவர் இணுவை சின்னத்தம்பிப் புலவர். அவருடைய தந்தை பெயர் சிதம்பர நாதர் அவர் டச்சுக்காரர் / ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் . அதாவது இற்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரை தவறான குற்றச்சாட்டின் பேரில் ஆட்சியாளர்கள் சிறையில் தள்ளினார்கள் . மனம் நொந்து போன அவர் சிவகாமி அம்மையின் அருள் வேண்டி, ஒரு பாமாலை புனைந்தார் . . அவர் பாடிய பதிகத்தில் எட்டாவது செய்யுள் பாடுகையில் சிறைக்கதவுகள் தானாகாத் திற க்கவே அவர் கம்பீரமாக வெளியே நடந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அதுமுதல் அவர் புகழும் அம்மன் புகழும் திக்கெட்டும் பரவியது . இது நடந்தது 1760 ஆம் ஆண்டில் .
அவர் பல துதிகளை அம்மன் மீது பாடினார் . அவைகளின் பெயர்கள் —
சிவகாமியம்மை பதிகம்
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை
சிவகாமியம்மை துதி.
கோவிலுக்குள் உள்ளூர் மக்கள் புலவர் பெயரில், ஒரு மண்டபத்தைக் கட்டி , அவர் புகழ் நீடித்து நிற்கச் செய்துள்ளனர்
பஞ்சவன்ன தூது , நொண்டி நாடகம், கோவலன் நாடகம் முதலிய பல நாடகங்களையும் இயற்றினார். இவருக்கு சான்றோர்கள் ஒன்று கூடி, கதிர்காம சேகர மநு முதலியார் என்ற பட்டத்தினையும் நல்கி னர் .. புலவர் வாழ்ந்த காலத்தில் பிரபல கணேச ஐயர் 1709- 1784, மயில்வாகனப் புலவர் 1770-1867, நல்லூர்க் கவிஞர் 1716-1780 ஆகியோரும் வாழ்ந்தனர்
xxxxx
கோவில் வரலாறு
யாழ்ப்பாண நகரிலிருந்து 4 மைல் தொலைவில் இணுவில் இருக்கிறது . தமிழ் அரசர்கள் ஆண்ட காலத்தில் இந்தியாவிலிருந்து பல தளபதிகளை மன்னர்கள் வரவழைத்தார்கள் ; அவர்களில் ஒருவர் திருக்கோவிலூரிலிருந்து வந்த பேராயிரவன் ஆவார். மக்களுக்கும் தெய்வத்துக்கும் அருந்தொண்டாற்றியதால் அவர் மக்களின் பேராதரவினைப் பெற்றார். அவர் சிதம்பரத்திலிருந்து சிவகாமி அம்மனின் விக்கிரகத்தைக் கொண் டுவரச் செய்து இந்தக் கோவிலைக் கட்டினார் அந்தப் பகுதியில் ஏற்கனவே பல ஆலயங்கள் இருந்தன பேராயிரவன் இறந்த பின்னர் காலிங்கராயன், கைலாயநாதன் ஆகியோர் அப்பகுதியை நிர்வகித்தனர் . அவர்களும் அம்பாள் மீது தூய அன்புகொண்டு ஆலயத்தைப் பராமரித்தனர் . போர்சுகீசிய- ஹாலந்து நாட்டு மதவெறியர்கள் ஆட்சி அழிந்த பின்னர், கோவில் புத்துயிர் பெற்றது..
காலப்போக்கில் கோவிலை விரிவுபடுத்தினார்
இந்தக் கோவில் பல சிறப்புகள் உடைத்து. அவையாவன :
.சாத்திரம்மா என்பவர் ஊர் மக்களிடம் பிடி அரிசி வாங்கி கோவிலின் கோபுரத்தைக் கட்டினார் .
9 நாட்களுக்கு நவராத்திரி உற்சவம் நடத்தப்பட்டு விஜயதசமி அன்று மானம்புத் திருவிழா நடத்துகின்றனர்
பங்குனி மாதத்தில் வருடாந்திர உத்சவமும் , ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் டிசம்பரில் திருவெம்பாவை விழாவும் நடத்ததப்படுகின்றன . ஆண்டு விழா பங்குனி உத்தரத்தன்று முடிவடையும் .
திருவிழாவின்போது ராஜ ராஜேஸ்வரி விக்கிரகம் பவனி வரும்.
மூலஸ்தானத்தில் அம்பாளும், பிற சந்நிதிகளில் நடராஜர் , விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்களும் உள்ளனர்.
மகிழ மரம் கோவிலின் தல விருட்சம் .ஆகும்.
Xxxxxx
78. வண்ணார் பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்)
விஸ்வ குல பொற்கொல்லர்களின் குலாதெய்வம் காமாட்சி அம்மன். யாழ்ப்பாணத்தின் வண்ணார் புண்ணை பகுதியில் காமாட்சி கோவில் இருக்கிறது . இந்தக் கோவில் கல் வழிபாட்டிலிருந்து காமாட்சி அம்மன் வழிபாட்டுக்கு உரு மாறியது சுவையான வரலாறு ஆகும்.
பெண்ணொருத்தி காலைக்கடன் கழி க்கச் சென்றபோது அவள் நின்ற மருத மரத்துக்கு அடியில் ஆளே இல்லாத இடத்தில் தன்னுடைய முலைகளை யாரோ திருகுவது போல உணர்ந்து பீதி அடை ந்தாள் ; ஊர் மக்களிடையே செய்தி பரவியது. நாவல் மரங்களும், மருத மரங்களும் பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளும் சூழ்ந்த இயற்கை வனப்பும் செழிப்பும் உடைய இடம் அது.
ஊரிலுள்ள ஒரு வயதான பெண்மணி, மக்களின் அச்சத்தை அகற்ற, அந்த குறிப்பிட்ட மருத மரத்தடியை சுத்தம் செய்து ஒரு கல்லினை நட்டார் . அதை நாச்சிமார் அம்மன் என்று சொல்லி வழிபடவைத்தார். மக்களின் பக்தி பெருகவே, முறையான மாரி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அக்காலத்தில் வைத்திலிங்க பத்தர் என்பவர் தென்னிந்தியாவில் தல யாத்திரை மேற்கொண்டார் . அவரிடம் கண்ணையா ஆச்சாரியார் என்ற பிரபல சிற்பி , ஒரு காமாட்சி விக்கிரகத்தை வழங்கவே, அதை நாச்சிமார் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் பின்னர் அது காமாட்சி அம்பாள் ஆலயம் என்றும் நாச்சிமார் கோவில் என்றும் அழைக்கப்படலாயிற்று .
ஓரிடத்தில் வசிக்கும் மக்களுக்கு இறைவன் அருள்புரிய எண்ணுகையில், அவ்விடத்தில் வசிக்கும் ஒருவரிடம் அற்புதங்களை நிகழ்த்துவதை பெரும்பாலான கோவில் வரலாறுகளில் காண்கிறோம் .
இப்போது கோவிலில் முறையான பூஜைகளும், பல விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மார்ச்- ஏப்ரலில் 15 நாள் உற்சவம் ; ராஜ கோபுரத்துடன் திகழும் இக்கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ள தேரும் உளது .
இலங்கையில் நீர்வேலி முதலிய இடங்களிலும் காமாட்சி அம்மனுக்கு ஆலயங்கள் உள ..
—subham—
Tags – வண்ணார் பண்ணை, காமாட்சி ஆலயம், நாச்சிமார் கோவில், சிவகாமி அம்மன் , கோவில்
Both GO and SAY are irregular verbs in Tamil. They don’t follow the rules followed by other 7 Classes of Verbs. That is why we call them irregular verbs.
xxxx
சொல் SOL
1.அவனிடம் சொல்லிவிட்டுப் போ =
Avandidam, Sollivittup Po
At him, say and go.
Avanidam= to him or on him (Locative)
Sollivittu = it is a compound verb with more meaning than SAY and GO.
VIITU is added to mean COMPLETE THE ACTION AND THEN GO TO THE NEXT ACTION.
Suppose I receive a telephone call while I am eating, then I will tell the person on the phone:
I am having dinner now SAPPITTU VITTU PHONE SEYKIREN= AFTER FINISHING EATING I WILL PHONE YOU. So the VITTU has more meaning.
xxxx
2.நான் காலை 10 மணிக்கு விருந்து என்று சொல்லியிருக்கிறேன் =
Naan, Kaalai 10 Manikku, Vurundhu, Endru, Solliirukkiren = I have said the feast is at 10 O’Clock in the morning.
விருந்து= VIRUNDHU= Feast;
என்று = That
காலை = KAALAI = Morning.
xxxx
Two things must be noted here:
10 Manikku = it is equivalent to AT TEN O’clock in English; Like we add AT and O’Clock, Tamils add MANI + KKU with the specific hour , 1 to 12.
12 Mani+kku= At 12 O’clock
Second point is SOLLI+ IRUkkiren; this also a compound verb like SOLLI+ VITTU.
Here the meaning is HAVE or HAS.
xxxx
3.நீ சொன்னால் அவன் வருவானா? =
Nee sonnaal, Avan , Varuvaanaa = If you say will he come?
Sonnaal சொன்னால்= If say= conditional
SONN=AAL = Sonnaal
PON+AAL = PONAAL = If go
VANTH +AAL = Vanthaal = IF come
PESIN+ AAL = PESINAAL = IF TALK or IF SPEAK
You add AAL with the PAST STEM SONN, PON, VANTH,PESIN.
First person Past tense for these verbs are SONNEN, PONEN,VANTHEN, PESINEN
Please use my Conjugation chart posted previously.
This is Part 5ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்
அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “ சும” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 37
74.சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு
இலங்கைத் தலை நகரான கொழும்பு நகரில் இருக்கும் பழைய ஆலயங்களில் ஒன்று சிவ சுப்பிரமணியசாமி கோவில். 1902-ம் ஆண்டில் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் என்பவரால் துவக்கப்பட்டது. ஸ்லேவ் ஐலண்ட் , கியூ ரோட்டில் (Kew Road, Slave Island) இருக்கும் இந்த ஆலயம் 1962-ம் ஆண்டுவரை மிகவும் சிறிதாக இருந்தது. மூலஸ்தானத்தில் 6 அங்குல உயரமுள்ள சுப்பிரமணியர் விக்கிரகம்தான் வழிபாட்டில் இருந்தது அப்போது கதிரேசன் கோவில் என்ற பெயரில் இருந்தது
கொழும்பு Dam Street டேம் ஸ்ட்ரீட்டில் 1822-ம் ஆண்டிலேயே முருகன் கோவில் இருந்தது; பெரியதம்பி என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சிறிய கட்டினார் கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும்– போயர் யுத்தத்தில் Boer War கலந்து கொள்ள ஆப்பிரிக்காவுக்குச் சென்ற — தமிழர்களுக்கு கோவிலாக விளங்கியது. Dam Street டேம் ஸ்ட்ரீட் அரசாங்க பணிகளுக்குத் தேவை என்று சொல்லி, வேறு புதிய இடத்தில் கோவில் கட்டுங்கள் என்று அரசாங்கமே 1867-ல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரிடம் £.500 அளித்தது. அவர் 1870ல் தற்போதுள்ள இடத்தில் கதிரேசன் கோவிலைக் கட்டினார். அதை அவருடைய மகன் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் 1902 ஆம் ஆண்டில் புதுப்பித்தார் .அப்போது ஸ்ரீ சிவ சுப்பிரமணியசாமி கோவில் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது
கோவிலுக்கு முன் பெரிய மண்டபமும், வசந்த மண்டபமும் கட்டப்பட்டன கட்டிடம் பழுதடைந்து வந்ததால் திருப்பணி வேலைகள் துவங்கின. 1975-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது விநாயகர், நடராஜர், மஹாவிஷ்ணு , சனைச் சரன் / சனீஸ்வரன் சந்நிதிகள் கட்டப்பட்டன சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்தப்பட்டு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது விழாவின் கடைசி நாள் நடக்கும் தேர் விழா கொழும்பு நகரில் மிகவும் பெயர்பெற்ற விழா ஆகும் தேரில் வேல் பவனி வருவதைத் தரிசிக்கப் பெரும் பக்தர் கூட்டம் சேருகிறது.
Xxxx
75. மண்டூர் கந்தசாமி கோவில்
மட்டக்களப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் மட்டக்களப்பு வாவிக் கரையில்
அமைந்த இந்த ஆலயத்தை தில்லை மண்டூர் திருத்தலம் என்றும் அழைப்பார்கள். சூர சம்ஹாரம் நடந்த பொழுது , முருகப்பெருமானின் வேல் கடலில் விழுந்து மூன்று ஒளிக்கற்றைகளாகப் புறப்பட்டு மூன்று இடங்களில் விழுந்தன . மண்டூர் தில்லை மரம் அதில் ஒன்று. இதைக்கண்ட வேடர்கள் அங்கு சிறிய குடிலை அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் மீன்பிடித்து தொழில் ,பயிர்த் தொழிலில் ஈடுபட்டோர் வீடுகட்டி வசிக்கத் துவங்கியவுடன் கிராமம் தோன்றியது
மாக மன்னன் ஆட்சிக்காலத்தில் 1215-1255, அவனுடைய தளபதி மண்டூர் நாகன் முறையான கோவிலாக கட்டுவித்தான். அத்தோடு போரத் தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவிலையும் கட்டினான். கதிர் காமம் போலவே திரைக்குப் பின்னால் பூஜைகள் நடத்தப்படுவதால் இதை சின்னக் கதிர்காமம் என்றும் அழைப்பார்கள்.
நிழல்தரு மரங்களும் அலை வீசும் ஏரியும் சூழ கோவில் இருப்பது மன அமைதியையும் தெய்வ பக்தியையும் அதிகரிக்கிறது. இயற்கை வனப்பானது பலரையும் கவி மழை பொழியவைத்ததால் மண்டூர் வேலனுக்கு பாமாலைகள் அதிகம்.
ஆகஸ்ட் மாத பெளர்ணமியில் 20 நாள் உற்சவம் நிறைவு அடையும். கதிர்காமம் போலவே தெய்வத்தை வள்ளி கோவிலுக்குக் கொண்டு சென்று வருவார்கள். கந்த சஷ்டி உற்சவத்தின்போது , வள்ளி திருமணமும் நடக்கும்.
திருச்செந்தூர் புராணம் பாராயணம் செய்யப்படும். பல வகைக் காவடிகளை சுமந்து கொண்டு பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஆடிக்கொண்டு வருவது பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் .
இங்கு நடந்த அற்புதங்களில் ஒன்று போர்ச்சுகீசியப்ப படைகளை குளவி வண்டுகள் விரட்டியதாகும். ஆலயத்தை இடித்துத்தள்ள மத வெறி யர்கள் வந்தபோது, அவர்களைக் குளவிகள் கொட்டவே அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓட நேரிட்டது
இந்த ஆலயத்தின் மஹிமை பற்றி மட்டக்களப்பு மான்மியத்தில் தாவல் உள்ளது.
பெளத்தர்களும் இந்துக்களும் வழிபடும் தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும் . அம்பாறை மாவட்டத்தில் நீலக்கடலின் கரையில் குன்றின் மீதமர்ந்து முருகப்பெருமான் அருள் புரிகிறார். முருகப் பெருமானின் வேல், கடலில் விழுந்த போது எழுந்த கதிர்களில் ஒன்று இங்கே விழுந்ததாகவும் பின்னர் வேடர்கள் கோவிலை எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது . கதிர்காம யாத்திரை செல்லுவோரின் வழியில் இருப்பதால் எல்லோரும் தங்கி வழிபட்டுச் செல்லுவார்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை மெய்ப்பிக்கும் மலை இது. இங்கு 7, 8 கிணறுகள் இருக்கின்றன. வன்னியர் ஆட்சிக்காலத்தில் சிங்க குமரன் வெட்டியவை இவை என்பர் .
இந்தக் கோவில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறது.
ஆலயத்தின் அருகில் 2 குன்றுகளில் வள்ளி அம்மன் , வேல்சாமி கோவில்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மார்க்கண்டு என்பவரசுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால் கோவிலைக் காட்டினார். அதற்கு முன்னர், வெறும் குடில் மட்டுமே இருந்தது.
ஜுலை மாத அமாவாசையில் 15 நாள் உற்சவம் முடிவடையும்; முருகப்பெருமான் வள்ளியை ரகசியமாக சந்திக்கும் மலை த் திருவிழா ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.
முருகப்பெருமான் தங்கக் கப்பலில் வந்ததாகவும் பின்னர் அது மலைப் பாறை ஆகிவிட்டதாகவும் கடலிலுள்ள பாறையைக் காட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டைப்போல முருகனுக்கு இலங்கையிலும் அறுபடை வீடுகள் உண்டு என்று சொல்லுவோர், இதையும் ஆறில் ஒன்றாககக் கணக்கிடுவர்.
–subham—
Tags–உகந்தமலை ,வேலாயுத சுவாமி கோவில், . மண்டூர், கந்தசாமி கோவில், சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு, Okanda
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மகான்கள் வாழ்வில் ..
பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்!
ச.நாகராஜன்
பஹினாபாய் ஒரு பெரும் பக்தை. அவரது கணவர் கங்காதர ராவும் அப்படியே ஒரு சிறந்த பக்தர்.
இருவரும் மிகுந்த ஆசையுடன் ஒரு பசுவை வளர்த்து வந்தனர்.
ஒரு நாள் துகாராம் யாத்திரையாக வரும் போது தங்கள் ஊருக்கு வந்திருப்பதைக் கேட்ட அவர்கள் அவரது தரிசனத்திற்காக அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.
மாம்பாஜி என்ற பணக்காரர் வழியிலே கங்காதரரைப் பார்த்தார்.
‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்க கங்காதரர் துகாராமின் புகழ் பாடி அவரை தரிசிக்கச் செல்வதாக கூறினார்.
துகாராம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த மாம்பாஜிக்கு அவரைச் சற்றும் பிடிக்கவில்லை.
அவரை இகழ்ந்து ஏளனமாகப் பேசத் தொடங்கினார்.
இதைப் பொறுக்க மாட்டாத கங்காதரர், “ஒரு பெரும் மகானைப் பற்றி இப்படி இழிவாகப் பேசாதீர்கள். இதனால் மாபெரும் பாவத்தைச் செய்தவராவீர்கள்” என்றார்.
மாம்பாஜிக்கு கோபம் இன்னும் அதிகரித்தது.
நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் கங்காதரர் பஹினாபாயுடன் துகாராமின் வழிபாட்டில் முழுமனதுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
சமயம் பார்த்துக் கொண்டிருந்த மாம்பாஜி அவரது பசுவைக் கவர்ந்து கொண்டு சென்று தனது இல்லத்தில் பாதாள அறை ஒன்றில் அடைத்தார்.
அத்தோடு மட்டுமல்லாமல் அதை அடி அடி என்று அடிக்க பசுவோ அலறியது.
வழிபாடு முடிந்தவுடன் தன் பசுவைக் காணாத கங்காதரர், அதைத் தேட ஆரம்பித்தார். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.
தனது கிராமம் மட்டுமல்லாமல் அயல் கிராமங்களிலும் பசுவைத் தேடலானார் கங்காதரர். பயனில்லை.
பின்னர் துகாராம் மஹராஜிடம் தனது இழப்பைக் கூறி வருந்தினார்.
துகாராம் மஹராஜும் வருந்தினார். இதைப் பற்றியே அவர் சிந்திக்கலானார்.
அன்று இரவு அவர் கனவில் வந்த பசு, தான் அடிபட்டு அலறுவதைக் காட்சியாகக் காட்டியது.
துகாராம் மஹராஜும் அலறியவாறே எழுந்தார்.
இறைவனை நோக்கி ஆழ்ந்து துதிக்க ஆரம்பித்த துகாராம், “பசுவைக் காக்குமாறு” வேண்டினார்.
இறைவனும் மனமிரங்கினார்.
திடீரென்று மாம்பாஜியின் பெரிய வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
மாளிகை இடிந்து தரைமட்டமாகியது. அப்போது பசு ஒன்றின் ஓலம் பெரிதாகக் கேட்க அனைவரும் அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராய ஆரம்பித்தனர். பாதாள அறையைக் கண்டு, பசுவை உடனடியாக விடுவித்தனர்.
துகாராம் இதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து பசுவின் முன் வந்து வணங்கினார்.
பஹினாபாயும், கங்காதரரும் துகாராம் மஹராஜின் தவ வலிமையைக் கண்டு போற்றிப் புகழ்ந்தனர்.
மக்கள் அனைவரும் இந்த அதிசய சம்பவத்தால் பசுவின் மீது துகாராம் மஹராஜ் வைத்திருந்த பக்தியைக் கண்டு வியந்து போற்றினர்.
பசு ஹிந்துக்களின் தெய்வம்! அதை எந்நாளும் எங்கும் போற்ற வேண்டும் என்பது ஹிந்துக்களின் ஒரு அடிப்படை நம்பிக்கை!
6..நீ ஏன் நேற்று பள்ளிக்குப் போகவில்லை? = nee, en, netru, pallikku, pogavillai ? You Why Yesterday school to , did not go?
Why didn’t you go to school yesterday ?
Word order in English sentence is completely different.
போகவில்லை = Pogavillai = common for both present tense and past tense
xxx
7.அவள் போனால் நீயும் போ.ஆனால் தனியாகப் போகக்கூடாது.= Aval Ponaal Neeyum Po. Aanaal Thaniyaagap Pogakkoodaathu = She, if goes, you too, Go. But, Alone, Should not go = If she goes, you too go. But you should not go alone.
போனால்= ponaal = conditional.
போகக்கூடாது. = pogak koodaathu = prohibitive
xxxx
8. சரி அப்பா. நான் தனியாகப் போகமாட்டேன்.= Sari Appaa. Naan THaniyaagap, Pogamaatten = Ok, Dad. I wont go alone.
9. அப்பாவும் அம்மாவும் அடுத்த வருசம் அமெரிக்காவுக்குப் போவார்கள்.= Appaavum, Ammaavum, Aduththa, Varusham, Amerikkavukkup Povaargal = Appaa and Ammaa, Next Year, America to, will go = Dad and Mum will go to America next year .
போவார்கள் = Povaarkal = Future Plural, Third Person
When you add UDANE with the infinitive of a verb, you get the sense AS SOON AS.
Vanthavudane = as soon as come
Kettavudane = as soon as ask or as soon as hear/listen
xxxxx
11.நீ இப்போது போனாலும் உனக்கு பஸ் கிடைக்கும்.= Nee Ippothu Ponaalum Unakku Bus Kidaikkum = You Now Even go, To you, Bus Available = even if you go now, you will get the bus (Bus will be available)
8 Oct 2022 — Go, Come, Say are irregular verbs; that means they wont follow the rules in some places. Let us look at verb Vaa= Come. Present Tense. Varukiren …
9 Oct 2022 — But the stem changes if they are irregular verbs like Come, Go, Say etc. Xxx. Future tense also is simple/ there are only two forms; either …
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “குட” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36
71.பொலிகண்டி கந்தவன கடவை கந்தசாமி கோவில்
இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறை நகருக்கு அருகில் பொலிகண்டி என்னும் இடத்தில் இந்த முருகன் கோவில் இருக்கிறது .
வல்வெட்டித்துறை கடற்கரையில் ஒரு முருகன் சிலை கரை ஒதுங்கியது அதை வழிபடத் துவங்கியவுடன் கோவில் எழும்பியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். ஆகையால் இந்த இடம் கந்த வனம் என்றும் இதைக் கடந்து செல்லவேண்டும் என்பதால் கடவை என்றும் பெயர்கள் தோன்றின. ஆயினும் இவை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தது . கோவில் வரலாறு மிகப் பழையது அந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்திருக்கக் கூடும்.
இப்போதுள்ளஆறுமுக சுவாமி பற்றிய கதை வேறு; யாழ்ப்பாண கடற்கரை வட்டாரத்திலிருந்து வியாபாரம் செய்ய ஒரு வணிகர் குழு உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றது அப்போது வன்னி பகுதியில் ஒரு சண்முகர் சிலை கேட்பாரற்றுக் கிடந்தது . நாம் செய்யப்போகும் வியாபாரம் வெற்றி அடைந்தால் , லாபம் கிடைத்தால், இந்தச் சிலையை எடுத்துச் செல்லுவோம் என்று தீர்மானித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வியாபாரம் நடந்தவுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் முருகனையும் எடுத்துச் சென்று கோவில் கட்டினார்கள். பின்னர் உற்சவ மூர்த்தி, விநாயகர் விக்கிரகங்கள் செய்யப்பட்டன. வடக்குப் பிரகாரத்தில் ஆறுமுகசாமி வள்ளி, தெய்வானை சமேதராக, மயில் மீதமர்ந்து, காட்சி தருகிறார். எல்லாம் ஒரே கல்லில் ஆனது.
Xxxx
72.காட்டுமலை கந்தசாமி கோயில்
காலப்போக்கில் புதிய முருகன் கோவில்களும் தோன்றின .
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. 1928ம் ஆண்டில் கதிர்காம யாத்திரைக்குச் சென்றவர், அங்கிருந்து கொண்டுவந்த
வேலினை 1929ல் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். கோவிலை உருவாக்கிய
அருளாளர் சீனியர் 1939 ஆம் வருடம் இறந்த பின், அவருடைய குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் கோவில் பராமரிப்பினை ஏற்றனர். தற்காலத்தில் 29 நாள் விழா நடத்தப்படுகிறது .
இந்தியாவிலுள்ள கோவில்களில் பொதுவாக 10 அல்லது 12 தினங்களுக்கு விழாக்கள் நடைபெறும் . இலங்கையில் 15 நாள் முதல் 30 நாட்கள் வரை விழாக்களை நடத்துகின்றனர்.
குன்றுதோராடும் குமரன், என்பதும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதும் ஆன்றோர் வாக்கு .கந்தசாமி மலை என்ற பெயரில் பல குன்றுகளில் முருகன் வழிபாடு நடந்து வருகிறது
1905ம் ஆண்டு தொல்பொருட் துறை அறிக்கையில் கந்தசாமி மலை, தென்ன மரவாடி, கொக்கிலை வாவி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன்கோவில் இடிபாடுகள் பற்றிய தகவல் உள்ளது. கந்தசாமி மலை என்ற பெயருள்ளதால் முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
யாழ்ப்பாண நல்லூரில் ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டபோது ஆறு கோவில்கள் இருந்தன அவற்றில் தையல் நாயகி அம்மன் கோவில் , சாலை விநாயகர் கோவில்களை கண்டுபிடிக்க முடியவில்லை போர்ச்சுகீசிய வெறியர்களின் குண்டுகளில் தரை மட்டம் ஆகியிருக்கலாம்.
நல்லூர் கந்தசாமி கோவிலில் ‘கட்டியம்’ கூறுகையில் ஸ்ரீ மத் சங்கபோதி புவனேக பாஹு போற்றப்படுகிறார். . அவர் மந்திரி பதவி வகித்தார். அவர் நல்லூருக்கு மதில் சுவர்களை எழுப்பி கந்தசாமி கோவிலையும் கட்டினார் என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது . அந்த இடத்தில்தான் இப்போதைய கிறிஸ்தவ CHURCH சர்ச் இருக்கிறது . இதை பறங்கியர்களே எழுதிவைத்துள்ளனர் .
போர்ச்சுகீசிய மதவெறியர்கள் படை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அவர்களுடன் கிறிஸ்தவ பாதிரியார் குரோஸ் FATHER QUEROZ என்பவரும் வந்தார் . அவருக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டு. குமார கம்பண்ணன் மதுரை மீது படையெடுத்து முஸ்லீம் சுல்தான்களை கொன்று குவித்து, இந்து சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்தபோது அவனுடைய மனைவி கங்கா தேவியும் கூடவே வந்து தனது கணவனின் வீரதீரச் செயல்களை மதுரா விஜயம் என்ற அற்பு தமான சம்ஸ்க்ருத கவிதை நூலில் எழுதிவைத்தார். அவர்தான் உலகின் முதல் பெண் WORLD’S FIRST WAR FRONT CORRESPONDENT போர்முனை பத்திரிக்கையாளர். இது நடந்தது 700 ஆண்டுகளுக்கு முன்.
அதே போல .கிறிஸ்தவ பாதிரியார் குரோஸும் உள்ளதை உள்ளபடி எழுதிவைத்தார் நல்லூரில் இருந்த மிகப்பெரிய பகோடாவை / கோவிலை போர்ச்சுகீசிய வெறியர்கள் Catholics தரை மட்டமாக்கி அங்கே சர்ச் CHURCH கட்டியதைக் குறிப்பிடுகிறார் இது நடந்தது 1621ல் . அதற்குப்பின்னர் ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒல்லாந்த வெறியர்கள் Protestant வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ மத்தில் வேறு ஜாதி (Protestant)
கிறிஸ்தவ மதத்தில் 200 ஜாதிகள் உண்டு . இதுபற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதுரை ஆதீன கர்த்தர் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி இருக்கிறார். அவரை அடிக்கடி மதுரை ஆதீனத்தில் சந்தித்து அவர் வெளியிட்ட புஸ்தகங்களை நாங்கள் வாங்குவோம். மூக்குப்பொடி அளவுக்கு ஒரு சிட்டிகை விபூதி கொடுப்பார் அதன் வாசனை, மண்டபம் முழுதும் பரவும் .
அயர்லாந்தில் Catholic கத்தோலிக்க கிறித்தவர்கள் அதிகம் ; அதன் ஒரு பகுதியான வட அயர்லாந்தை இப்போதைய பிரிட்டிஷ் அரசு பிடித்துவைத்துள்ளது ; பிரிட்டிஷ் அரசர்கள் Protestant ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் . இரண்டு கிறிஸ்தவ ஜாதிகளும் எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல விரோதிகள். இரு கோஷ்டிகளும் சண்டை போட்டு குண்டு வைத்ததில் 5000 பேர் வரை கொல்லப்பட்டனர் லண்டனில் என் வீட்டுக்கு அருகில் Staples Corner Bob Explosion ஸ்டேபிள்ஸ் கார்னர் பகுதியில் குண்டு வெடித்தவுடன் நாங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஒரு முறை லனடன் பஜார் வீதியான ஆக்ஸ்போர்ட் வீதி Oxford Street in Londonக்குச் சென்ற பொழுது பாண்ட் ஸ்ட்ரீட்Bond Street ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு அறிவிப்பு ஸ்டேஷன் ஒலிபெருக்கிகளில் அலறியது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன் .
யாழ்ப்பாண கிறிஸ்தவ வெறியர்களின் செயல்களை இப்போது எழுத்தில் வடிக்கையில் அவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன.
நல்லூர் கந்தசாமி கோவில்
மீண்டும் நல்லூருக்குப் போவோம். அங்கு பெரிய கோவிலை இடித்து போர்ச்சுக்கீசியர் கட்டிய Catholic சர்ச்சினை ஹாலந்து Protestant கிறிஸ்தவ ஜாதி இடித்துத் தள்ளி தங்கள் ஜாதி சர்ச்சினைக் கட்டியது . அதுதான் பழைய கந்தசாமிக் கோவில் என்பது ஆராய்சசியாளரின் துணிபு . இது யமுனேரி தீர்த்தம் அருகில் இப்போதுள்ளது
தற்போது நல்லூரில் உள்ள புகழ்மிகு கந்தசாமிக் கோவில் 1749ம் ஆண்டில் ரகுநாத மாப்பாண முதலியார் ஆதரவில் எழுந்தது. டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) இடம் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஓர் மடத்தில் கந்த புராணம் வாசிக்க அனுமதி பெற்றார். 1807-ம் ஆண்டில் அது கோவிலாக மலர்ந்தது . பின்னர் வந்த ஆறுமுக நாவலர் அதில் 1870 முதல் முறையான பூஜைகள் நடைபெற வழிவகுத்தார்.
–subham–
Tags- அழிந்து போன முருகன் கோவில்கள் அழிந்து போன முருகன் கோவில்கள் , காட்டுமலை, பொலிகண்டி, கந்தசாமி, ஆலயம்