Lord Shiva and the Sacred Animals (Post No.11,836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,836

Date uploaded in London – –  24 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Among the Hindu gods, Shiva is associated more with the animals. There are many temples in Tamil Nadu where Lord Shiva blessed them and helped them to attain Mukti or liberation.

Since Hindu religion believes in Karma theory and rebirth, many stories say that the animals are rebirths of some people, but cursed to become animals for their bad behaviour.

Here is a list of shrines and the animals associated with the temples:

Vaitheeswaran koil – Jatayu (Falcon or Eagle)

Thiru Kazukukundram – Eagle

Tiruchirappalli – Jatayu

Tiruchchirukuti – Gauda/ Falcon

Kuranganil muttam- Squirrel

Kuranganil muttam – Crow

Tirukkachur – Tortoise

Tiruvermbur – Ant

Thiru Engoi malaai- Fly

Thiruvalivalam- Black bird

Thiruvanaikkaval – Spider

Thiruvanaikkaval- Elephant

Karivalamvantha Nallur – Elephant

Pennakatagam – White Elephant

Tiruppananthal – Airavatham (white elephant)

Tirukkalahasthi – Elephant

Tiruchchivapuram – Pigs

Pandrimalai- Pigs

Thirukutallaval- Monkey

Thirumaraikkadu -Rat or Mouse

Thirunallur – Beetle

Nannilam – Honey bee

Thirunaraiyur -Heron or Stork

Avur pasupatheeswaram – Cow

Thillai sthanam – Kamadhenu

Thirup Pampuram – Snake

Nagerkoil – Snake

Kovil Perumalam- snake

Thepperumanallur- snake

Thiruthevankudi- Crab

Thiruppathiripuliyur – Rabbit or Hare

Athur – Frog

Melappathi- Cat

Kovil thevarayanpettai- Fish

Xxxx

Vishnu and Gajendra Moksha

Vishnu and other gods and goddesses are also associated with many birds, reptiles, and animals. Hindu Goddesses keep parrots in their hands or shoulders.

I posted the following in 2013 under Hindu Gods and Animals (May 3, 2013)

Gajendra Moksha episode is linked with many shrines including Tirumohur near Madurai. Lord Vishnu saved the elephant Gajendra from the mouth of a crocodile.

The spider and elephant story of Tiruanaikkaval near Trichy is very popular.

Elephant :Madurai, Trukkanapper, Tirukkurraalam, Tiruanaikka, Kalahasthi

Karivalam vantha nallur

Lion – Tirunallur ( Vishnu: Narasingam near Madurai, Sholingar,Hampi in A.P.)

Tiger –Perumpuliyur, Puliyur/ Chidambaram Vyagrapureeswarar

Horse – Ayavanthi

Cow  — Thirukkondeeswaram, Tiruaduthurai, Karuvur, Avur ,Patteeswaram , Tiruamathur

Goats – Tiruadanai

Bull/ eru—Tiruvaiyaru

Monkey – Kurankaduthurai, Kurankanimuttam, Kurankukaa, Kurankuth thali, Valikandapuram

Pig –sivapuram ,Pandrimalai, Madurai

Donkey – Karaveeram

Rabbit—Tiruppathiripuliyur

Birds

Crow — Kurankanimuttam, Tirunallaru (as Vahana of Tirunallaru Saneeswaran)

Heron – Naraiyur ,Madurai

Kari kuruvi– Valivalam  ,Madurai

Eagle/ falcon /Garudan—Sirukudi, Tirukkazuku kundram, Vaitheeswaran kovil

(Parrots: Madurai, Srivillliputtur, Kanchipuram )

Beetle – Srisailam, Tiruvendurai, Valoliputhur

Amphibians and water living creatures

Frog –Utrathur

Crab –Tirunthuthevankudi

Turtle –Tirumanamcheri

Fish – Tiruchelur

Reptiles and small insects

Fly – Eengoimalai, Tiruchitremam

Ant – Tiruerumpur, Erumpiiswaram

Snake –Kalahasthi, Tiruppampuram, Kutanthai keelkottam, Tirunageswaram, Tirunagaikaronam, Nagarkoil,  Sankarankoil

Spider –Kalahasthi, tTruanaika

Squirrel – Kurankanimuttam

Iguana/Udumpu – Tirumakaral

Tirumakaral  is near Kanchipuram. King Rajendra Choza built a temple for lord Shiva 1000 years ago at Tirumakaral. The king saw a golden colour iguana in a shrub. When he ordered his servants to catch it, they cut the plants in the bush. When they accidentally cut the tail of the animals, blood gushed out. On seeing it, the king fainted and heard a voice from the sky that he should build a temple there.

–subham–

 Tags- animals, gods, shrines, association, birds

Part 3 of Kumbakonam Wonders: Ramayana Paintings on Temple Wall (Post No.11,835)

Rama, Lakshmana, Sita blessed by Rishis/ seers

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,835

Date uploaded in London – –  24 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Rama learning archery

Rama, lakshmana and Sita meeting Jatayu

Part 3

Let us continue with the wonderful Ramayana paintings at Ramaswami Temple in Kumbakonam, Tamil Nadu.

The paintings on the wall are in three tiers. Here are 15 more pictures.

Rama killing Kara dushanaathi demons

Tadaka Samharam by Rama

Viswamitra blessing Rama Lakshmana

Neelan fighting with Ravana

Hanuman’s fight with Ravana

On the first day battle with Rama, all the crowns of Ravana were smashed

Ravava returning to Lanka

Dushana was killed by Rama

Three headed Tri Siras killed

Kumbakarna was awoken with elephants

–subham—

tags- Part 3, Ramayana pictures

பவானியின் அருள்பெற பெரியபாளையம் செல்வோம் (Post No.11,834)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,834

Date uploaded in London – –  24 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அருணகிரி நாதர் பாடிய சிறுவாபுரி முருகனை வேண்டித் துதித்த பின்னர், பெரிய பாளையம் சென்று பவானி அம்மனைத் தரிசித்தோம். அங்கிருந்த கூட்டத்தையும் பெண்களின் பக்தியையும் கண்டபொழுதே அவள் வரம் கொடுக்கும் சக்தி தேவி என்பது புரிந்தது. வரிசையின் நின்று அம்மனைத் தரிசித்ததால், அம்மன் திருப்தியாக தரிசனம் தந்தாள். அதுவோ பிப்ரவரி மாத (2023-ம் ஆண்டு) வெள்ளிக்கிழமை வேறு; கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்.

பெரிய பாளையம் எங்கே உள்ளது ?

பெரியபாளையம்  என்னும் ஊர், சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காலை எ ட்டு மணிக்குப் புறப்பட்டு சிறுவாபுரி முருகனையும் பெரிய பாளையம் பவானி  அம்மனையும்  தரிசித்துவிட்டு நாலே மணி நேரத்துக்குள் பெரம்பூருக்குLUNCH  லஞ்ச் சாப்பிட வந்துவிட்டோம்.

பவானி அம்மனின் சிறப்பு என்ன?

இது பெரிய பெரிய கோவில். முதலில் வரம் தரும் அற்புத. விநாயகர் கோவில். பின்னர் பெரிய த்வஜ ஸ்தம்பத்துடன் அம்மன் கோவில்.. விநாயகர் சந்நிதியை ஒட்டி அன்னை மாதங்கியின் சந்நிதி இருக்கிறது.

பவானி அம்மனின் சந்நிதிக்கு எதிரே பெரிய குத்து விளக்குகள். அதில் நெய் ஊற்றி வழிபட்டால் நேர்ந்தது நிறைவேறும் என்பதால் பெண்கள் கூட்டம் . அருகிலேயே மாவிளக்கு ஏற்றும் பகுதிப்  பரவசம் ஊட்டும் காட்சிகள்.

அம்மன் திருமுகம் அருள் பொழியும் முகம். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால் உற்சவர் நமக்கு தரிசனம் தருகிறார்..

வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும்.

சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் அன்னையை நாராயணீ என்று புராணங்கள் போற்றும்.

இங்குள்ள பவானி, கிருஷ்ணனை கம்சனிடமிருந்து காப்பாற்றிய சகோதரி என்ற நம்பிக்கையும் நிலவுகிறது (கிருஷ்ணன் பிறப்பு பற்றிய கதையை அறிந்தவர்களுக்கு இது விளங்கும்).

நாங்கள் தரிசனம் முடித்துவிட்டு வருகையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, உடலைக் கட்டாந்தரையில்  உருட்டிக்கொண்டு அங்கப் பிரதட்சிணம் செய்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. பக்திக்கு எல்லை உண்டோ?

கிராம தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும், சிவன் விஷ்ணு, பிள்ளையார், கந்தன்  ஆகியோர் இறக்குமதித் தெய்வங்கள் என்றும் சில அசட்டுப்பிஸட்டுக்கள் புரட்டி எழுதுவதை படித்திருப்பீர்கள். இவையெல்லாம் பேத்தல், பிதற்றல் என்பது காஞ்சி பரமாசார்யாரின் சொற்பொழிவிவுகளைப் படித்தோருக்கு நன்கு விளங்கும். பவானி, ரேணுகா, அம்மன், மஹா மாயா (மகாமாயீ) ராகா தேவி (ராக்காயீ) மூகாம்பிகை (மூக்காயீ) ஆயீ , காளி , மதுர காளி , மாரி , ஆத்தா முனி ஆண்டி , ஆர்ய (அய்யனார்), சாஸ்தா (சாத்தன்) முதலியன எல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மேலும் இவர்களில்  பல பெயர்கள் ரிக்வேதத்தில் கூட இருக்கினறன.

தெய்வங்களில் ஆரிய, திராவிட பேதத்தைக் காட்டும் பி.எச் .டி . காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் கிராமீய தெய்வங்களைப் போற்றி வழிபடுவோம்.. பல பிராமண குடும்பங்களுக்கு கிராமீய தெய்வங்கள்தான் குல தெய்வம் என்பதும் அரைவேக்காடுகளுக்குத் தெரியாது . இதுகளுக்கும் அதுகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கும் அறிவிலிகளுக்கு புத்தி தடுமாறாமல் இருக்க இறைவியை வேண்டுவோம்.

ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லுகையில், இருபுறமும் உள்ள கடைகளையும், பூ, பழம் விற்போரையும் காணுகையில் நாள் தோறும் பல கோடி மக்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க இந்தக் கோவில்கள்தான் உதவுகின்றன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அதைவிட இந்த பிரமாண்டமான கோவிலை எழுப்பியபோது வேலையில் ஈடுபட்ட கட்டிடக் தொழிலாளர்களின் , சிற்பிகளின் வாழ்க்கை முன்னேறியதையும் நினைவுகொள்ள வேண்டும்.பூக்களையும், பழங்களையும் பயிரிடும் விவசாயிகளுக்கு திருவிழா நாட்கள் வந்தால் கொண்டாட்டம்தான். நல்ல போனஸ் கிடைக்கும் .

ஒருவேளை கோவில்களை எள்ளி  நகையாடும் திராவிடங்களும் பிற மதங்களும் வெற்றி பெற்றால், இந்தப் பல  கோடி மக்களும் வேலை இழப்பார்கள் ; அந்த நிலை வராமல் தடுப்பது இந்துக்களின் கடமை.

–subham—

Tags–பவானி அம்மன், பெரியபாளையம், மாவிளக்கு, குத்துவிளக்கு, கிராம தெய்வங்கள்

காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே (Post No.11,833)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,833

Date uploaded in London   24 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 10

காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே!

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் பார்வதி தேவியாரின் திருமண நாளில் தேவர் முதல் யாவரும் மேருமலையில் திருமண விழாவிற்காக ஒருங்கு திரண்டனர். ஏராளமான சுமை ஏறியதால் வடதிசை அழுந்தியது.

தென் திசையோ மேல் எழுந்தது. பூமியைச் சமனாக்குமாறு அகத்தியரை நோக்கிச் சிவபிரான் கட்டளையிட்டார்.

தமிழ்த் தேர்ச்சியுற்று அகத்தியர் காவிரி நதியைக் கையில் உள்ள கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு கொங்கு நாட்டை அடைந்தார். சூரபத்மன் முதலியோரின் துன்பத்துக்கு ஆற்றாத இந்திரன் வேற்று உருவம் கொண்டு சீர்காழிப் பதியில் நந்தனவனத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தான்.

நீர் இன்றிச் செடிகள் காயிந்திருந்தமை கண்டு வருத்தமுற்று ஆனைமுகப் பிள்ளியாரை வேண்டினான். வெண் காக்கை வடிவு கொண்ட விநாயகப் பெருமான், அகத்திய முனி வைத்திருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். உள்ளே இருந்த காவேரி நதி நிலத்தில் பீறிட்டுப் பெருக்கெடுத்து சீர்காழி வழியே ஓடியது.

இந்த வரலாற்றைப் பெருமையுடன் கொங்குமண்டல சதகம் 10ஆம் பாடலில் வழங்குகிறது.

சீரார் வளவ னிலம்புன நானாடாச் செழிப்புறவும்

பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்

ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி

வாரார் பெருமை படைத்தது நீள் கொங்கு மண்டலமே

  •   கொங்குமண்டல சதகம் பாடல் 8

பாடலின் பொருள் :

சோழ மண்டலம் நீர்ப்பாசனமாகவும் கங்கை நதி தனது பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி.

அந்தக் காவேரி நதி அகத்திய முனிவர் கரத்திலிருந்து விழுவதற்கு முதலில் இடம் கொடுத்து உதவியது கொங்கு மண்டலமே.

ஸ்காந்தத்தில் காவிரி நீங்கு படலத்தில் இந்த வரலாறு இப்படி பதிவு செய்யப்படுகிறது:

கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மீதிற்பொன்னி
சங்கர னருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்திய னவனென் றோரான்
இங்கொரு பறவை கொல்லா மெய்திய தென்று கண்டான்,


என்னலுங் காஞ்சி தன்னி லெம்பிரா னுலக மீன்ற
அன்னைத னன்பு காட்ட வழைத்திட வந்த கம்பை
நன்னதி போல விண்ணும் ஞாலமும் நடுங்க வார்த்துப்
பொன்னியா றுலகந் தன்னிற் பொள்ளெனப் பெயர்ந்ததன்றே.

              – காந்தம், காவிரி நீங்கு படலம்

***

Part Two of Kumbakonam Wonders ; Ramayana on Temple Walls (Post No.11,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,832

Date uploaded in London – –  23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part two of Ramayana paintings at Ramaswami Temple in Kumbakonam, Tamil Nadu

 Since the pictures are in three rows and the rope fence is before the wall, my photographs are not in order and not in full.

This post is to highlight the significance of such a magnificent art. Temple must bring out all the pictures in book format, view card format, fridge format and curtain format etc.

Had it been Britain or Italy or Spain or Portugal they would have made big money out of the art.

The temple has beautiful sculptures as well. Please see my Tamil articles for the Dasavatara and Ramayana sculptures. Over 200 Ramayana pictures are there. It is believed they are hundreds of years old.

We must preserve them for future generations.

–Subham—

Tags -Ramayana paintings, on walls, Ramaswami temple, part two, Kumbakonam

Kumbakonam Wonders- Ramayana on Walls (Post No.11,831)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,831

Date uploaded in London – –  23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is my umpteenth trip to India; may be 40th trip!

Every time I make it a point to visit some new temples; seeing my parents to get their blessings and having Darshan at our Kula Devata temple in Vaitheeswaran Koil and my favourite temple Madurai Meenakshi temple, where we used to play hide and seek in the dark corridors 60 years ago , was also on the itinerary. Now my parents are no more and Meenakashi temple has become Tirupati Balaji temple; no easy access.

So we covered 40 places from Vaitheeswarankoil to Tiruvannamalai.

xxx

We landed in Madras called Chennai on 12th February 2023. We covered 40 temples, Adhistanams, Ashrams in three weeks time.

Kumbakonam is six hours drive (including lunch break) from Chennai. We landed at Srivathsam, an old age community centre for mostly Brahmins and only vegetarians at 3-30 pm . There is a lodge cum restaurant called Divine Inn. You get true Kumbakonam filter copy and typical brahmin food from 5-30 am to 8-30pm.

If you book your room through a resident there, you get discount as well. We paid Rs.1200 per day for a double bed room (AC) instead of 1500 per day. Just six kilometers from Kumbakonam. They are building another community centre called Kausthubam.

My friend Mr V S Srinivasan asked us to get ready by 4-30 pm. We visited six temples in five hours:
Ramaswami temple, Chakrapani temple, Sarangapani temple (all Vishnu), Kumbeswar Temple, Nageswar temple and Karumbaayiram Pillaiyar/ Ganesh temple.

Xxx

Ramayana on walls

Ramaswami temple, though only 500 year old, is an art gallery of Ramayana. I posted 20 plus pictures of sculptures there yesterday. They are about Ramayana and Dasavatara. The temple belongs to Nayak Period.

The idols look majestic; no one can forget the Rama, Lakshmana, Bharata ,Satrugna with Sita Devi and Hanuman. The strange thing about these Murtis is Hanuman playing Veena with Ramayana book by his side. My policy is Not to take pictures of idols that are worshipped in the Garba Griha (sanctum sanctorum)

Today I post the Ramayana paintings on the wall in parts (Please all the parts); they need better preservation and better protection. If it is a cathedral in Rome or Madrid or Lisbon, they would have printed View cards, key chains, Coffee Cups, Scores of books with the temple pictures. The temple must print all the pictures in good quality and sell them to fund the temple.

Xxx

Tags- Ramaswami temple, Kumbakonam, Paintings, sculptures, wonders

வாரியார் சொன்ன கிழவி கதை; நரை  ஏன் வருகிறது ? (Post No.11,830)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,830

Date uploaded in London – –  23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீத …… மருள்வாயே- திருப்புகழ்

தமிழில் பொருள்படைத்த , நகைச் சுவை மிக்க சமயச் செற்பொழிவுகளை நமக்கு வழங்கிச் சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் . அவர் ஆற்றிய  சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை இதோ:–

 ( எனது சொற்களில் வடிக்கிறேன் ; பிழை இருப்பின் எமதே )

இந்த பூமியில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. காக்கைக்கு மயிர் நரைத்து வெள்ளைக் காக்கை ஆனதுண்டா? பன்றிக்கு மயிர் நரைத்து வெள்ளைப் பன்றி ஆகிறதா? ஆனால் மனிதனுக்கு மட்டும் நரை வருகிறதே  ஏன் ?

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது .

என்னுடைய ஊர் காங்கேய நல்லூர்; அங்கிருந்து ஒரு வயதானவர் என்னைப் பார்க்க வந்தார். ஏன் மறுமணம் செய்யவில்லை என்றேன்? பையன்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்

அவருக்கு நரை  வந்தும் ஆசை விடவில்லை (மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது ).

யாருக்கு ஆசை விட்டது? நரையை மறைக்க கருப்பு டை Dye (சாயம் வேறு).

மிருகங்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்கின்றன

மனிதர்கள் எண்ணவும் (பிறருக்காக) இரங்கவும் வாழ்கின்றனர் .

ஏன் இறைவன் மனிதனுக்கு நரையைக் கொடுத்தான் ?

அதுதான் இறைவன் அனுப்பும் First Notice முதல் நோட்டீஸ் . உனது காலம் விரைவில் முடியப்  போகிறது. இப்போதாவது இறைவனை நினை; நாலு பேருக்கு உதவி செய் .

கொஞ்சம் நாளுக்குப் பின்னர் கண்ணாடி தேவைப்படுகிறது .

அது கடவுள் அனுப்பும் Second Notice இரண்டாவது நோட்டீஸ்.

பின்னர் பற்கள் ஆட்டம் காணும். அது Third Notice from God மூன்றாவது நோட்டீஸ் .

அதற்கு அடுத்துவரும் நோட்டீஸ் Last Notice from God – மரணம் .

நரை வந்த பின்னரும் இறை – வனை நினையாவிட்டால் அது நமது பிழை.

வயதான மனிதனுக்குத் தள்ளாதவன் என்று ஏன் தெரியுமா பெயர் ?

அவன் எதையும் வேண்டாம் என்று  தள்ளாதவன்!!

ஆசையை ஒதுக்கித் தள்ளாதவன்!!!

(தள்ளாத வயதில் பொல்லாத ஆசைகள்)

புதுமணத் தம்பதிகள் ரயில் பெட்டியில் உட்கார்ந்து இருக்கினறனர்; இவனோ  தள்ளாதவன். அந்தப் பெண்ணை வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

Xxxxx

கிழவி கதை

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள் ; பொல்லாத கிழவி. எதையும் எடுத்துக்கொண்டு விடுவாள்; எதையும் யாருக்கும் கொடுத்ததில்லை ; தானம்  கொடுத்ததில்லை ; அவளும் இறந்தாள் ; நரகத்துக்குச் சென்றாள் ; கடும் துயரம் . அந்தப் பக்கம் வந்த தேவ தூதரிடம் அப்பா , கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை இங்கிருந்து வெளியே எடு– என்றாள்

அவன் கேட்டான் – நீ எப்போதாவது தானம் தருமம் செய்து இருக்கிறாயா ? யாருக்காவது காசு போட்டு  தருமம்  செய்து இருக்கிறாயா? 

பரிசாகத் தருவது தானம் ; இல்லாதவருக்குக் கொடுப்பது தருமம் ; தருமம் போட்டாயா ?

பாட்டி சொன்னாள் : ஒரு குருடன் தட்டில் காலணா காசு போட்டேன் ; ஆனால் அவன் பார்க்க முடியாததால் அவன் தட்டிலிருந்து நாலணா எடுத்துக் கொண்டேன் .

அடிப் பாவி !!

தேவதூதன்: வேறு என்ன நல்லது செய்தாய்?

என்னிடம் ஒரு அணா  இருந்தது; அந்தக் காலத்தில் அதற்கு 12 தம்பிடிகள். 12 வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். அப்போது ஒருவர் வந்து வயிறு பசிக்கிறது என்றார் . நான் எதையும் கொடுக்கவில்லை. கடைசி வாழைப்பழம் பாதி அழுகி இருந்ததால் அதைத் தூக்கி எறிந்தேன். அவர் பாதி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுச் சென்றார் – என்றாள்.

அடக்கிழவி ! வா உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றான் தேவதூதன்.

நரகத்தில் ஒளியே கிடையாது; கும் மிருட்டு; இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த 4 பாவிகள் , நைஸாக கிழவியின் காலை பிடித்துக்கொண்டார்கள் ; சொர்க்கத்துக்கு வந்த கிழவி பெரிய ஒளியை, வெளிச்சத்தைப்பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நாலு பேர் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மேலே வருவது.

டேய் ! யாரடாவன்? எனது அரை வாழைப்பழத்துக்கு நான் சொர்க்கம் செல்கிறேன். நீங்கள் எப்படியடா வர முடியும்? என்றாள்

அவள் மீண்டும் நரகத்துக்குள் விழுந்தாள் யாரோ ஒருவனுக்கு கொடுத்த அரை  வாழைப்பழத்தை எனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடினாள் .

இதனால்தான் அருணகிரி நாதர் யான் எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கேட்டு திருப்புகழ் பாடினார்.

எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ

     மெளிது சால மேலாக …… வுரையாடும்

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீத …… மருள்வாயே

என்கிறார் அருணகிரிநாதர்

((எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் … நமனையும்

தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை

எளிது சால மேலாக உரையாடும் … மிகவும் எளிதான வகையில்

மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற

எனது யானும் வேறாகி … எனது என்ற மமகாரமும், நான் என்ற

அகங்காரமும் நீங்கி,

எவரும் யாதும் யான் ஆகும் … பிற பொருள்கள் யாவும் நானே

ஆகக்கூடிய

இதய பாவன அதீதம் அருள்வாயே … மனோ பாவத்திற்கு எட்டாத

பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.(தமிழிலும் ஆங்கிலத்திலும்

    பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்;kaumaram.com)

யான், எனது என்ற எண்ணம் அகல வேண்டும்; எல்லோருக்கும் உதவ வேண்டும்.

Xxxx

கவிழ்த்த பானையும் ; விரியாத பாய் மரமும்

மழையே பெய்யாத ராயல சீமையில் ஒரு நாள் மழை கொட்டித்தீர்த்தது . எல்லோரும் வீட்டிலுள்ள அண்டா , குண்டா, பானை, சட்டி எல்லாவற்றையும், ஓட்டிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வைத்து நிரப்பிக்கொண்டு இருந்தனர் ; ஒரு கிழவி இருந்தாள் ; உடலை நகர்த்த முடியாத அளவு பலவீனம்;பேத்தியை அழைத்தாள் :

அடியே வீட்டிலுள்ள பானைகளை அந்த ஓட்டுத் தண்ணீர் விழும் இடத்தில் வையடி ; தண்ணீர் எல்லாம் வீணாக்கப் போகிறதே என்றாள் .

அந்தச் சிறுமி ‘கேரம் போர்டு’ carrom board  விளையாடிக்கொண்டிருந்தாள் ; வேண்டா வெறுப்பாக நாலு பானைகளை நாலு இடங்களில் வைத்தாள்

மழையும் நின்றது ; பாட்டி ஆர்வத்தோடு மெல்ல நகர்ந்து வந்து பார்த்தாள் ; பானையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. ஏன் ?

அந்த அறியாத சிறுமி பானைகளைத் தலைகீழாக கவிழ்த்து வைத்திருந்தாள்

நாமும் அது போலத்தான் இருக்கிறோம். இறைவன் அருள் மழை பொ ழிகிறான் ; நாம் கவிழ்த்த பானைகளாக இருக்கிறோம் ; திறந்த மனது இருக்க வேண்டும் ; மனது அகன்று விசாலமாக இருக்க வேண்டும் .

xxx

நாகப்பட்டினத்தில் 12 பாய் மரக்கப்பல்கள் இருந்தன.

துறை முகத்தில் கடலில் அந்த மரக்கப்பல்கள் நின்றன ;

நல்ல காற்று அடித்தது ; நாலு கப்பல்கள் அழகாகச் சென்றன .

நகராத 8 கப்பல்கள் காற்று ஒழிக காற்று ஒழிக ;என்று கோஷம் போட்டன .

அது காற்றின் பிழை அன்று; நான்கு கப்பல்களின் பாய் மரம் விரிந்து இருந்தன ; அவை காற்றின் சக்தியால் அழகாக மிதந்து சென்றன; மீதி எட்டுக் கப்பல்களின் பாய் மரம் ஒடுங்கி இருந்தன .

நாமும் அப்படித்தான் இருக்கிறோம்; இறைவனின் அருள் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது ; அதை ஏந்துவதற்கு நமக்கு விரிந்த மனம், திறந்த மனம் வேண்டும்

(கடவுள் ஒழிக என்று கோஷமிட்டுப் பலன் இல்லை).

நாம் எல்லோரும் இறைவனின் அருள் மழையையும் , அருள் காற்றையும் பெற வேண்டும் .

எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் . அருணகிரிநாதர் வேண்டியது போல யான், எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்

(வாரியார் சொற்பொழிவில் கேட்டதில் நினைவில் நின்றதை எழுதியுள்ளேன் ).

அனைவரும் யூ டியூபிலும் , ஒலித் தட்டு , ஒலி நாடாக்களில் கேட்டு மகிழ்க.

–subham—

Tags- கிருபானந்த வாரியார் , யான், எனது, கிழவி கதை, கவிழ்ந்த பானை , பாய்மரக் கப்பல் , தள்ளாதவன், நரை , ஏன்

இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி? (Post No.11,829)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,829

Date uploaded in London –   23 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மஹாபாரத மர்மம்!

இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?

ச.நாகராஜன்

இறைவன் மனிதனைப் படைத்து பல அங்கங்களைக் கொடுத்திருக்கிறான். அதைக் காக்கும் விதத்தையும் பெரியோர் மூலமாக நம்மை அறிய வைக்கிறான்.

மஹாபாரதத்தில் விளக்கப்படாத ரகசியம் எதுவுமில்லை.

இந்த அங்க ரகசியங்களையும் சாந்தி பர்வம் 275வது அத்தியாயத்தில் விளக்கமாகக் காணலாம்.

கைகள் முதலானவற்றைக் கொண்டு நான்கு துவாரங்களைக் கொண்டது மனித சரீரம்.

சரீரம், இந்திரியம், மனம், புத்தி என்ற நான்கு முகங்களைக் கொண்டவன் புருஷன்.

வேதவாக்கியத்தால் விராட், ஹிரண்டகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தம் என்கின்ற நான்கு விதமாக ஜீவன் அடைகிறான்.

கைகளும் வாக்கும் உதரமும் ஜனன ஸ்தானம் என்கின்ற குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள்.

அந்த வாயில்களை ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.

எப்படிக் காப்பது?

கைகால்களைப் பாதுகாப்பது எப்படி?

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் சொக்கட்டான் காய்களால் சூதாட்டம் ஆடக் கூடாது.

பிறருடைய பொருளைக் கவரக் கூடாது.

உறவினரல்லாதவருடைய ஹவிஸைக் கிரகிக்கக் கூடாது. அதாவது அவருக்கு யாகம் செய்விக்கக் கூடாது.

கோபமடைந்து ஒருவரை அடிக்கக் கூடாது.

இப்படி இருந்தால் அவனுடைய கால்களும் கைகளும் நன்கு பாதுகாக்கப்பட்டவையாக ஆகும்.

வாக்கைப் பாதுகாப்பது எப்படி?

கடும் சொல்லைச் சொல்லக் கூடாது.

வீண் வார்த்தை சொல்லக் கூடாது.

கோள் சொல்லக் கூடாது.

மற்றவரைக் குறித்து அபவாதம் சொல்லக் கூடாது.

சத்தியத்தையே விரதமாகக் கொள்ள வேண்டும்.

அஜாக்கிரதையின்றி மிதமாகப் பேச வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவனுடைய வாக்கு நன்கு காக்கப்பட்டதாகும்.

உதரவாயிலைக் காப்பது எப்படி?

உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

அதிக உணவையும் உட்கொள்ளக் கூடாது.

நாக்கு சபலமின்றி இருத்தல் வேண்டும்.

உணவைத் தேடி பெரியோர் வரத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.

சரீர யாத்திரைக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.

இப்படி இருப்பவனது உதரவாயில் (வயிறு) நன்கு காக்கப்பட்டதாகும்.

ஜனன ஸ்தானம் எனப்படும் குறியைக் காப்பது எப்படி?

பிறன்  மனைவியை விரும்பக் கூடாது.

ருதுவில்லாத காலத்தில் தனது மனைவியை உறவுக்கு அழைக்கக்கூடாது.

பத்நி விரதனாக இருக்க வேண்டும். அதாவது விவாம் செய்து கொள்ளாத பெண்களை விலக்க வேண்டும்.

இப்படிப்பட்டவனுடைய ஜனன ஸ்தானம் எனப்படும் குறி நன்கு காக்கப்பட்டதாகும்.

இப்படி எந்த புத்திசாலியினுடைய குறி, உதரம், கைகள், நான்காவதான வாக்கு ஆகிய நான்கு வாயில்களும் நன்கு காப்பாற்றப்படுகின்றனவோ அவன் தான் இரு பிறப்பை உடையவன்.

இந்த துவாரங்களைக் காப்பாற்றாதவனுக்கு அனைத்துமே பயனற்றவை ஆகி விடும்.

இது கபிலருக்கும் ஸ்யூரமரஸ்மிக்கும் நடந்த உரையாடலில் இடம் பெறுகிறது.

இந்த உரையாடலில் ஏராளமான ரகசிய விஷயங்களைப் பற்றி முற்றிலுமாக அறிய முடிகிறது.

***

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,828

Date uploaded in London – –  22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

KUMBAKONAM RAMASWAMI TEMPLE; TAMIL NADU.

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN ON 19TH FEBRUARY 2023

PART TWO

KUMBAKONAM RAMASWAMI TEMPLE; TAMIL NADU.

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN ON 19TH FEBRUARY 2023

–SUBHAM—

TAGS- KUMBAKONAM, RAMASWAMI TEMPLE, SCULPTURES, கும்பகோணத்தில்,  அற்புத ,ராமாயண சிற்பங்கள், சிலைகள்,

கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,827

Date uploaded in London – –  22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆயிரம் கண் போதாது  வண்ணக்கிளியே

குடந்தைக் கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே

ராமசாமி கோவிலைக் காண்பதற்கு –வண்ணக்கிளியே

என்று பாடத் தோன்றுகிறது . முதலில் பக்தியுடன் ராம பிரான் குடும்பத்தைப் பார்த்து, ரசித்து, , பக்தி செலுத்திவிட்டுப் பின்னர் ராமாயணக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களையும் சித்திரங்களையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம் .

ஆயினும் பிப்ரவரி 19ம் தேதி (2023) தேதியன்று 5 மணி நேரத்துக்குள் ஆறு கோவில்களை பார்க்கத் திட்டமிட்டதால். என்னுடைய I pad ஐ பேட் மூலம் முடிந்த மட்டும் படம் பிடித்தேன் .

(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே- பாவை விளக்கு திரைப்படப்  பாடல்).

XXX

முதலில் ராமசாமியைத் தரிசிப்போம். மாலை நாலரை மணி வாக்கில் கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். பட்டாசார்யார் சரியாக 5 மணிக்கு சந்நிதியைத் திறந்தார். அற்புத தரிசனம்.

ராமன் பட்டாபிஷேகக் காட்சியில் லக்ஷ்மணன், சீதா தேவி, பாரத, சத்ருக்னன் ஆகியோரை ஒருங்கே காணலாம். அவர்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்க ஆஞ்சநேயர் வீணாகானம் செய்கிறார். ராமாயண பாராயண புஸ்தகமும் வைத்திருக்கிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, இலக்குமணன் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து காட்சி தருகிறார். இது தஞ்சை நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவில். ஆகையால் மங்களாசாசனம் செய்யப்படவில்லை; அதாவது ஆழ்வார்கள் அறியாத புதிய கோவில் இது. சுமார் 500 ஆண்டுக்குட்பட்டதே . ஆனால் உருவத் திருமேனிகள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. பார்த்தால் மறக்க முடியாத அற்புத வடிவங்கள்.

xxxx

கோவிலா கலைக்கூடமா ?

சந்நிதிக்கு முன்னர் உள்ள மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. அங்கு ராமாயணக் காட்சிகளையும் தசாவதார உருவங்களையும் தனித் தனியே தூண்கள் தோறும் காணலாம்.

பிரகாரத்தில் ராமாயணக் கதையை சித்திர ராமாயணமாக வரைந்து வண்ணமும் தீட்டியுள்ளனர். ஒவ்வொரு படத்தையும் ராமாயணக் கதை அறிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.

சிற்பங்களுடன் சுமார் 60 தூண்களும்,, சுவர்களில்  200 சித்திரங்களும் இருக்கின்றன.

XXXX

இந்த இடத்திற்கு இன்னும் கொஞ்சம்  பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை. சித்திரங்களை  நெருங்காமல் இருக்க கயிறு கட்டி இருக்கிறார்கள். அது படம் எடுப்பதை பாதிக்கிறது . சில அடி தூரத்தில் கம்பி வேலி போட்டால் படங்களையும் பாதுகாக்கலாம் . மற்றவர்கள் படமும் எடுக்கலாம். கோவில் நிர்வாகமே அங்குள்ள சிற்பங்களையும் படங்களையும் அச்சிட்டு விற்கலாம்.

100 MORE PICTURES ARE COMING

—SUBHAM—

TAGS– ராமசாமி கோவில், கும்பகோணம், ராமாயண, சிற்பங்கள், சித்திரங்கள்