லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள் (Post.11,543-part 4)  

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543- Part 4

Date uploaded in London – 27 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 4 of Dr A Narayanan’s Reflections on Tiruppavai of Andal 

மார்கழித்திங்கள் 9

தூமணிமாடத்தில் துலங்கும் தீப ஒளியில்

தூப நறுமணமிணைந்த துயிலணையில்

தூங்கும் பாவை ஊமையோ?செவிடோ?

சோம்பலுற்றாளோ? காவலுக்குட்பட்டாளோ?

மந்திர வயப்பட்டாளோ? மாமீர்! அவள்

மாயன்,மாதவன் மேலும் பல பேரோயிர

முடையான் நாமம் கேட்டெழாத தேனென

முன்னிலையிலொருத் தோழியைத்

தன்னிலையாய் வைத்துப் பாடிய தாரகை வாழி                                                   1             

வீங்கு நீர் விரி புனல் காவிரி                                                             

விரைந்து கொள்ளிடமாய் பிரிய

விளைந்ததோர் தீவினிடைவெளியே

வளர்ந்தோங்கிய கோபுரங்கள் பலவும்

வளைந்து சூழ்ந்த மதில்களேழிடையே

விரிந்த  வீதிகள் பிராகாரங்களாக

வியப்பரோவிது கோயிலோ கோட்டையோ

வென அறிவரோ  எடுத்த படம் குடையாக

விரித்த உடலரவமீது படுத்த நிலையில்

உறங்குமரங்கனே அடியார்க்கெலாமிரங்கு   

மரங்கனே இக்கோட்டையின் கொற்றவன்

கொண்ட திரு நாமம் ரங்கராசன்

கிடந்திடுமிடமோ திருவரங்கம் விண்ணோர்

வியக்க மண்ணோர் போற்றும் இப்புவி

விழைந்த திரு வைகுந்தமாய் நாளும்

கிழமையும் ஆண்டுமுழுதும் நன்னாளாய்

மார்கழித்திங்களோ ரங்கன் சங்கமமாக 

நங்கை கோதை நோன்பு காத்த நன்னாளாம்                            2            நாராயணன்

XXXXXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 10

நோன்பின் பயனெய்திக் கிருட்டிணனுக்குக்

கிட்டியவளே! துழாய் மாலைக் கமழுமணம்

வீட்டினுள் விந்தை புரிந்த நந்தன் வந்ததைக்

காட்டிக்கொடுத்தும்,  நீ!  அவ்வின்பமெமைக்

கூட்டிப் பகராமல், ராமனால் மரண மடிதவழிய

கும்பகரணனின் நித்தம் தழுவிய நித்திரை

யுன்னைப் பற்றியதோ? பக்குவ ரூபமாய்

வாசல் வந்தெம் தலைவியாய் சேர தோழிமார்

பரிகசித்துக் கூப்பிட்டப்  பாவை வாழியே 

கண்ணுக்கு மையழகு 

விண்னுக்கு மதியழகு

விளக்குக்கு  ஓளியழகு

கண்ணனுக்கு கோதையழகு

பக்திக்குக் கோதை

முக்திக்குக்  கீதை

எத்திக்குமொலிக்கும்

தித்திக்கும் திருப்பாவை

நாராயணன்     

XXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 11

கணக்கிலடங்காக் கறவைகள் முலை

கடுப்புத்தீர கை ஓயாக் கறந்த

கரையற்றக் கோவலனின் திறநறியாக்

கடும் பகைவரை வலியச்சென்றழித்தோன்

காமுறும் பொற்கொடியாளும் புன மயில்

குந்தலாளும் அரவம் படமொத்த அல்குல்

உ டையாளு மான நீ! உன் முற்றம் முன் 

முகில்வண்ணன் பேர்பாட கூடிய தோழியர்

குழாம் சேராதுறங்குவதேனோ? வென

தன்னையே நிந்தித்த நிலமகள் வாழியே 

முத்துக்குமரி விட்டு சித்தன் மகள் மூன்று

பத்தாகத் தொகுத்த சரள தரள சரத்தில்

பத்து நூறும் மேலும் பல பேரு டைய புருட

உத்தமன் புகழ் மாலையே திருப்பாவை

 நாராயணன்   

XXXXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 12

கனத்தமடி சுமந்த எருமை இளங்கன்று

கனைத்த தறிந்து முலை சொரிந்த பால்

நனைத்த இல்லமே  சேறாகும் செல்வம்

படைத்தவனின் சோதரியே ! பனி பெய்து

படர்ந்த தலையோடு நின் வாசலெய்தி

சினத்தினால் சிரம் பத்து கொண்ட தென்

இலங்கை கோமானை சரம் தொடுத்து

சிரம் கொய்த சீதா ராமனின் பேர் பாட

வந்த எம்மொடு  கூடாதுறக்கமேனோ? வென

தோழியர் பள்ளி எழுப்பிய பாவை வாழியே

  மார்கழிப் பூக்கள் மலர்ந்து மணம் கமழ      

  மது அருந்தும் வண்டுகளின் ரீங்காரமே   

  மதுசூதனன் பேர் சுமந்த கீதமாகிய

  மாதவிக் கோதையின் திருப்பாவையே 

   நாராயணன் tags- Dr Narayanan, Andal, Markazi, Poems, Part 4

திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய பாடல்! (Post.11,591)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,591

Date uploaded in London – 27 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கொங்குமண்டல சதகம் பாடல் 48

திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய பாடல்! 

ச.நாகராஜன் 

சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அவர் நிகழ்த்திய அற்புதங்களோ அதை விட ஏராளம்.

ஒவ்வொரு ஊராகச் சென்று இறைவனை வழிபட்டு தேவாரப் பதிகங்களை அவர் பாடிக் கொண்டே இருந்தார்.

கொங்கு மண்டலத்தில் காவேரிக்குத் தென்கரையிலிருந்த ஆலயங்களைத் தரிசித்த பின்னர்  வடகரையில் இருந்த திருச்செங்கோடு ஆலயத்திற்கு அவர் சென்றார்.

திருச்செங்கோடு அந்தக் காலத்தில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பிரசித்தி பெற்றிருந்தது.

அங்கு தேவாரம் பாடி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டார். பின்னர் மேல் பக்கம் திருநண்ணா முதலிய தலங்களுக்கு யாத்திரை சென்றார். பின்னர் மறுபடியும் திருச்செங்கோட்டில் எழுந்தருளினார்.

அப்போது பனிக்காலம். பல நாள் அங்கு தங்கி இருந்த போது பனிகாலத்தில் பொதுவாக அனைவரையும் வருத்தும் குளிர் ஜுரம் அவருடன் இருந்த திருக்கூட்டத்தாரையும் பிடித்தது. அனைவரும் அதனால் வருந்தினர்.

இதைப் பார்த்த திருஞானசம்பந்தர், “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத்  தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார்.

அடியார்களை வருத்தும் நளிர் ஜுரம் நீங்க வேண்டி, “அடியார்களை நளிர் ஜுரம் தீண்டப்படா” என்று ஆணை வைத்துத் திருநீலகண்டம் என்னும் பதிகத்தை ஓதி அருளினார்.

என்ன ஆச்சரியம்! உடனடியாக திருக்கூட்டத்தாரை மட்டுமின்றி அங்கு நளிர் ஜூரம் பீடித்திருந்த அனைவரிடமிருந்தும் நளிர் ஜுரம் நீங்கியது. அந்த நாட்டிலேயே நளிர் ஜுரம் நீங்கவே அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

இந்த திருநீலகண்ட பதிகத்தை மந்திரமாக ஓதி விபூதி பூசினால் குளிர் ஜுரம் போகும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்.

அப்படியே இன்றும் நடப்பதும் கண்கூடு.

இந்த வரலாறு நிகழ்ந்தது கொங்குமண்டலத்தில் என்பதால் கொங்குமண்டல சதகம் பாடல் 48இல் இந்தப் பெருமையைப் பேசுகிறது.

பாடல் இதோ:

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்

பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்

திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்

வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள்:

சீகாழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூர்க்கு திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியபொழுது, நளிர் ஜுரமானது அனவரையும் பீடிக்கவே, “அவ்வினைக் கிவ்வினையாம்” எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தை அன்பின் பெருக்கால் பாடி அவ்வூர் மட்டுமின்றி அந்த நாடு முழுவதும் அந்த விஷ நோய் தீரும்படி ஓதப் பெற்றதும் கொங்குமண்டலமே என்பதாகும்.

அவ்வினை எனத் தொடங்கும் பாடல் இது:

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மதுவறியீர்

உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே

கைவினை செய்தம்பி ரான்கழல் போற்றுது நாமடியேஞ்

செய்வை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

பதிகத்தின் இறுதிப் பாடல் இது:

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்              இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்           திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்             நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே      

***

Do You Agree with Me?  ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ (Post No.11,590)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,590

Date uploaded in London – 26 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Read my books and then decide. 

BOOK 52

தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

பொருளடக்கம்

1.வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

2.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

3.கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்புவது ஒன்றே!

4.அசுரர்கள், அரக்கர்கள் அகராதி

5.இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

6.ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1

7.சூத்திரன் யார்? பிராமணன் யார்?

ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2

8.பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம்

 வேறு, ஜாதி வேறு- பகுதி-3

9.வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பாரதி

10.ஸந்யாஸி செய்த ஒரு லக்ஷம் பொம்மைகள்!

11.புறச் சூழல் விஷயத்தில் இந்துக்களின் அபார முன்னேற்றம்

12.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

13.இதனை இதனால் இவன் முடிக்கும்…..

14.நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!

15.வேதத்தில் பரத நாட்டியம்!

16.மிதிலையில் ராமன் கண்ட பரத நாட்டியம்!!

17.மாதவியின் 11 வகை நடனங்கள்

18.மேலும் ஒரு உலக அதிசயம்: 2300 ஆண்டு

பழமையான நாடக அரங்கு!

19.நாட்டிய நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு

இணையானது – பரத முனி

20.சூரியகாந்திச் செடிகளும் வள்ளுவர் குறளும்

21அமேஜான், அல்லி ராணி கதை

22.’ஏழு அடி நட்பு’ சங்க இலக்கியத்தில் அதர்வண வேத மந்திரம்

23.உலகம் வியக்கும் விசில் WHISTLE மொழி

24.இந்துக்கள் தினமும் சொல்ல வேண்டிய துதிகள்

25.பருப்பு இல்லாத கல்யாணமா? பட்டாசு  இல்லாத தீபாவளியா?

26.பாரதி பாடல்களில் மந்திரச் சொற்கள்

27.புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர்

28.சம்ஸ்கிருதத்துக்கு உயிர் இருக்கிறதா?

29.ஒரு நல்ல மருத்துவ நூல் அறிமுகம்

*********************

BOOK 51

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

பொருளடக்கம்

1.வேத கால வானியல் அதிசயங்கள்

2.இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர்

 மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்!!

3.முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்!

(4).27 நட்சத்திரங்களில்எது முதல் நட்சத்திரம்?- 1

5.அஸ்வினி முதல் நட்சத்திரம் இல்லை! Part 2

(6).27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?- Part 3

7.ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா?

8.சனியை விட செவ்வாய் கிரஹம் பொல்லாதது-

பாபிலோனியர் ஜோதிடம்

9.ரிக் வேதத்தில் பூகம்பம்

10.உலகம் எப்படி அழியும்எப்போது அழியும்வள்ளுவன் தகவல்

11.வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

12.விநோதக் கனவுகள்கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

13.உஷார்! கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்: 3 பேர் பார்த்துவிட்டனர்!

14.எகிப்தியசுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

15.இந்தியாவின் அதிசய பீரங்கிகள்

16.இமயமலையில் புற்றுநோய்க்கு மருந்து

17.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்

18.ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-Part 1

19.ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-2

20.எண்களை/ ‘நம்பர்’களை வணங்கும் வினோத இந்துக்கள்!

21.உலகு இன்பக் கேணி! பாரதி சொன்னது உண்மையே!

22.சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம்

23.ஞானாநந்த தபோவன அதிசயம்- செவ்வாய் கிரஹ ஞானிகள்

24.குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல்

25.குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே…..

26.ஒரு கிலோ புதையல் விலை 75,000 பவுன்சாப்பிடலாம் !!

27.உள்ளம் உருகுதையாமுருகையாதுருவமும் உருகுதையா!

28.அஸ்ஸாமிலிருந்து ஒரு அதிசயச் செய்தி

29.மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

30.நெல்லிக்காய்இலந்தைப் பழ மகிமை: மருத்துவப் பொன்மொழிகள்

31.தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை  அறிவு –1

32.தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை  அறிவு – Part 2

33.கைகண்ட மருந்து/ மந்திரம் ! (Post No.11,424)

34.எதிர்காலத்தை அறிய உதவும் அற்புத மூலிகை

35.தீ எரிக்காது — இந்து மத அற்புதம் (3 pars)

36.டாக்டர் எலி –  நோய் கண்டுபிடிக்க உதவி!

XXXXX

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags- My Tamil books, தீதும் நன்றும் பிறர்தர வாரா’

ஜனவரி 2023 காலண்டர்: உணவு பற்றி பொன்மொழிகள் (Post.11,589)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,589

Date uploaded in London – 26 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆரோக்கியம் தொடர்பான 31 பொன்மொழிகள் (25-2-2015) , பழமொழிகள் ஏற்கனவே இங்கே வெளியிடப்பட்டன .உணவு பற்றி சில பொன்மொழிகளைப் பார்ப்போம் .

பண்டிகை நாட்கள் : ஜனவரி 1-ஆங்கிலப் புத்தாண்டு; 2- வைகுண்ட ஏகாதஸி ;6- ஆருத்ரா தரிசனம்; வட சாவித்ரி விரதம்; 11- தியாகராஜ ஆராதனை; கூடாரைவல்லி ; 12- விவேகானந்தர் ஜயந்தி ; 14- போகிப்பண்டிகை ; சாரதா தேவி  ஜயந்தி; 15- மகர சங்கராந்தி, பொங்கல் ; 16- மாட்டுப்பொங்கல் ; கனு ;திருவள்ளுவர் தினம்;  26- குடியரசு தினம்; 28- ரத ஸப்தமி ; 29- பீஷ்மாஷ்டமி ; 30 தை கிருத்திகை ; காந்தி நினைவு தினம்

முஹூர்த்த தினங்கள் — 18, 20, 23, 26, 27

தை அமாவாசை – 21; பெளர்ணமி -6

ஏகாதசி  உண்ணா விரத நாட்கள்  –2,18

ஜனவரி  1 ஞாயிற்றுக் கிழமை

கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை

xxx

ஜனவரி  2 திங்கட் கிழமை

கொழுத்த மீன் தின்றவன், குருவிக்கறிக்கு அசங்கியப்படுவானா ?

xxx

ஜனவரி  3 செவ்வாய்க் கிழமை

கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்

xxx

ஜனவரி  4 புதன் கிழமை

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்

xxx

ஜனவரி  5 வியாழக் கிழமை

உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி

xxx

ஜனவரி  6 வெள்ளிக் கிழமை

உண்டார் மேனி கண்டால் தெரியும்

xxx

ஜனவரி  7  சனிக் கிழமை

உண்டு கெட்டான் அவன், உண்ணாமல் கெட்டான் இவன்

xxx

ஜனவரி  8 ஞாயிற்றுக் கிழமை

உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன் ;உண்டு கெட்டான் சோனகன் ;

புதைத்துக் கெட்டான் தமிழன்

xxx

ஜனவரி  9 திங்கட் கிழமை

உப்பிட்டுக் கெட்டது மாங்காய்  , உப்பிடாமற் கெட்டது தேங்காய்

xxx

ஜனவரி  10 செவ்வாய்க் கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெண்ணெயைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

xxx

ஜனவரி  11 புதன் கிழமை

வெங்காயம் உரிக்க உரிக்க தோலாயிருப்பது போல

xxx

ஜனவரி  12 வியாழக் கிழமை

விளக்கெண்ணையிற் போட்ட கழற்காய் போல

xxx

ஜனவரி  13 வெள்ளிக் கிழமை

மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்

xxx

ஜனவரி    14  சனிக் கிழமை

மாமரம் பழுத்தால் கிளிக்காகும் வேம்பு பழுத்தால் காக்கைக்காகும்

xxxx

ஜனவரி  15 ஞாயிற்றுக் கிழமை

பருப்பில்லாத கலியாணமா

xxxx

ஜனவரி  16 திங்கட் கிழமை

கூழ் குடித்தாலும் குளித்துக் குடி ; கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு

xxx

ஜனவரி  17 செவ்வாய்க் கிழமை

கூழைக் குடித்தாலும் குப்பை சுமந்தாலும் குப்பைக்காட்டுப் பெண்கள் ருக்குமணி ; பாலைக் குடித்தாலும் பட்டைக் கட்டினாலும் பட்டணத்துப் பெண்கள் தட்டுவாணி.

xxx

ஜனவரி  18 புதன் கிழமை

உண்ட உடம்பு உருகும், தின்ற பாக்கு சிவக்கும்

xxx

ஜனவரி  19 வியாழக் கிழமை

கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உண்ணாமற் சொல்லலாமா ?

xxx

ஜனவரி  20 வெள்ளிக் கிழமை

விலை மோரிலே வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம்

பண்ணுவான்

xxx

ஜனவரி  21  சனிக் கிழமை

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை 

xxx

ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை

கொழுக்கட்டைக்குத் தலை பார்த்து கடிக்கிறார்களா ?

xxx

ஜனவரி  23 திங்கட் கிழமை

கொள்ளுக்கு வாயைத் திறந்து கடிவாளத்துக்கு வாயை மூடும்

xxx

ஜனவரி  24 செவ்வாய்க் கிழமை

உண்டு கொழுத்தால், நண்டு  வளையில் இருக்குமா?

xxx

ஜனவரி  25 புதன் கிழமை

உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை.

ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல

xxx

ஜனவரி  26 வியாழக் கிழமை

பருப்புச் சோற்றுக்கு பதின்காதம் போவான்

xxx

ஜனவரி 27 வெள்ளிக் கிழமை

பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்

xxx

ஜனவரி  28  சனிக் கிழமை

சோற்றிலே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா

xxxx

ஜனவரி  29 ஞாயிற்றுக் கிழமை

தாய் தவிட்டுக்கு அழுகையில், பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது

xxxx

ஜனவரி  30 திங்கட் கிழமை

சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா

xxx

ஜனவரி  31 செவ்வாய்க் கிழமை

கூழு குடிக்கிறையா அப்பா? குறுணி குடிப்பேன் குப்பா!!

—subham—

 tags-ஜனவரி 2023, காலண்டர், உணவு ,  பொன்மொழிகள்

பணக்கார அவிசாரி பந்தியிலே,அஃதில்லாத அவிசாரி சந்தியிலே (Post No.11,588)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,588

Date uploaded in London – 26 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 34. ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்

தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண

     சந்த்ரன்நிகர் முகசூ னியம்!

  சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்

     தரும்பெரிய நகர்சூ னியம்!

மேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே

     மிக்கதே சச்சூ னியம்!

  மிக்கசற் புத்திரன் இலாததே நலமான

     வீறுசேர் கிருகசூ னியம்!

சோம்பாத தலைவரில் லாததே வளமுடன்

     சொல்லுயர் சபாசூ னியம்!

  தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே

     சுத்தசூ னியமென் பர்காண்!

ஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆம்பல் வதனத்தனைக் குகனை ஈன்று அருள் செய்த

அத்தனே – யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய

தலைவனே!, அருமை ………. தேவனே!,

தாம்பூல தாரணம் இலாததே

வருபூரண சந்திரன் நிகர்முக சூனியம் – தாம்பூலம் தரித்துக்கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், சற்சனர் இல்லாததே வெகுசனம் சேர்ந்து வாழ்தரும் பெரியநகர் சூனியம் –

நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க

தேசச்சூனியம் – உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், மிக்க சற்புத்திரன் இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம் – சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், சோம்பாத தலைவர் இல்லாததே

வளமுடன் சொல்உயர் சபாசூனியம் – ஊக்கமுடைய தலைவர்கள்

இல்லாமையேசெழிப்புடன் செப்பப்படுகின்ற அவைக்குப் பாழாகும், தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே சுத்தசூனியம் என்பர் –

பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.

     (வி-ரை.) ஆம்பல் – யானை. வதனம் (வட) முகம். சற்சனர் x

துர்ச்சனர். சூனியம் – பாழ். தாம்பூலத்திற்கு முகவாசம் என்று பெயர்.

தொன்மை + உலகு : தொல்லுலகு.

    (க-து.) எவற்றிற்கும் அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.

Xxxx

பணம் பற்றிய பாடல்களையும் பொன்மொழிகளையும் பார்த்தாலே செல்வம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துவிடும்

பணம் பற்றிய தமிழ்ப் பொன் மொழிகள்

பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும்,

மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை,

கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை,

பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.

—-விவேக சிந்தாமணி

கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள். ——-விவேக சிந்தாமணி

XXXX

பொன்னொடு மணியுண் டானால் புலையனும் கிளைஞன் என்று, தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வார்,

மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவா ராகில்

பின்னையும் ஆரோ வென்று, பேசுவார் ஏசு வாரே.— விவேக சிந்தாமணி

பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.– விவேக சிந்தாமணி

XXXXX

பணம் பத்தும் செய்யும்

xxx

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – குறள் 247

xxxx

பணக்கரன் பின்னால் பத்துப் பேர், பைத்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்

xxxx

பணமும் பத்தாயிருக்க வேணும், பெண்ணும் முத்தாயிருக்க வேணும் ,முறையிலேயும் அத்தை மகளாய் இருக்கவேணும்

 xxxx

பணமிருக்க வேணும், இல்லாவிட்டால் பத்து சனமிருக்கவேணும்

xxxx

முதலிலார்க்கு ஊதியம் இல்லை  – குறள் 449

xxxx

பணம் இருந்தால் பாட்சா, பணம் இல்லாவிட்டால் பக்கிரி


xxx

காசேதான் கடவுளடா; பணம் இல்லாதவன் பிணம்

xxx

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்

Xxxx

பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறது

Xxxx

காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்களும் ஆத்தாளும் கூட வருவார்கள்

Xxxx

பணக்கார அவிசாரி பந்தியிலே, அதில்லாத அவிசாரி சந்தியிலே

Xxxx

பணமிருந்தால் பத்தும் வந்து சேரும்

Xxxx

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே- கா.மு.செரீப் (திரைப்படப் பாடல்)

 Xxxx

பணம் குலமாகும் ,பசி கறியாகும்

 XXXX

சபைக்கு அழகு அறிஞர்

‘‘கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்குஅறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்து உண்ணும்

தன்மை யிலாளர் அயல்இருப்பும், இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல– —திரிகடுகம்

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து

வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்

பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்

பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)

XXX

சபைக்கு அழகு விகட கவி (தெனாலி ராமன்)

நகைச்சுவை இறை வணக்கம்

ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா

சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக

ககனே- ஆகாயத்திற்கு

காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு

க்ரகரத்னானி – வீட்டிற்கழகு

மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது

சயனே- படுக்கைக்கு

மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது

சபாரத்னானி- சபைக்கு அழகாவது

விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்

தெனாலி ராமன் போன்ற விகட கவிகள் பேரறிஞராகத் திகழ்ந்தனர் 

XXX

நேர்மையான ஆட்சி இல்லாத நாடு பாழ்

கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழுங் காடு நன்றே. 63– வெற்றிவேற்கை

கொடுங்கோல் மன்னர் ஆளும் நாட்டில் வாழ்வதை விடக்

கொடிய புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லது.

கொடுங்கோல் மன்னன் புலியை விடக் கொடுமையானவன்.

XX

குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்

[பொருட்பால்அரசியல்கொடுங்கோன்மை]

பொருள்

நூல்கள் கூறியுள்ள அரச நீதி தவறி, ஒழுக்கம் தவறி, நடுவுநிலைமை தவறி ஒரு மன்னன் ஆட்சி செய்தால் அந்நாட்டின் பெருமை புகழ் செல்வம் உணவு ஆயுதங்கள் மழை ஆகியவை தவறும். மழை பொழியாமல் போனால் நாடு வறண்டு விடும். மிகுந்த துன்பம் நிலவும். அத்தகைய ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சி. 

XXXX

மனு நீதி நூல் சொன்னதையே  வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்

यत्र वर्जयते राजा पापकृद्भ्यो धनागमम् ।

तत्र कालेन जायन्ते मानवा दीर्घजीविनः ॥ २४६ ॥

யத்ர  வர்ஜயதே  ராஜா பாபக்ருத்ப்யோ  தனாகமம்

தத்ர காலேன ஜாயந்தே மானவா  தீர்க்க ஜீவனஹ

—-9-246 MANU SMMRITI

எந்த நாட்டில்அரசன்  பாவிகளிடமிருந்து  செல்வத்தைப் பெறுவதில்லையோ அந்த நாட்டில் முறையான விதத்தில் பிறந்து நீண்ட கால ம் சுகமாக வாழ்வார்கள் -9-246

XXX

निष्पद्यन्ते च सस्यानि यथोप्तानि विशां पृथक् ।

बालाश्च न प्रमीयन्ते विकृतं च न जायते ॥ २४७ ॥

நிஷ்பத்யந்தே  ச சஸ்யானி யதோப்புதானி விசாம் ப்ருதக்

பாலாஸ் ச  ந பிரமீயந்தே விக்ருதம் ச ந ஜாயதே 9-247

விவசாயிகளின் பயிர்கள் செழித்து வளரும் ; குழந்தைகள் மரணம் அடையாது ; உடலூனமுள்ள பிள்ளைகளும் பிறக்காது.

XXX

BONUS POINTS- TAMIL FILM SONGS

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை

உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்

எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்

அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை

எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்

உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்

முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

XXX

ANOTHER TAMIL FILM SONG

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு
பல பேரும் போவதாலே

கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க

காலேஜு படிப்பு காப்பியாத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளு பொழைக்குதாம்
அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்டரி அடிக்குதாம்..
எப்படி..

ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே..மாப்பிள்ளே
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேடு மாமா..

ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்

வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்..
மேலே?

இதுக்கு மேலே
சொல்ல மாட்டேண்டி பொம்பளே

இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணங்காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது

என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே..இன்னும் கேளு
அப்புறம்..?

போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பெண்சாதி பேச்சைக் கேளு.
அப்பிடியாஆஹா.

நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது.

பட்டணம்தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே..
மாமா ஏம்மா?

என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு
என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு
எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் ..

ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம் (2)

–SUBHAM—

TAGS- அவிசாரி, பட்டணம், மனு நீதி நூல், பணம் பந்தியிலே, பணம் ,தமிழ், பொன் மொழிகள் ,

ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கே இருக்கிறார்?- யோக வாசிஷ்டம் பதில்(11,587)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,587

Date uploaded in London – 26 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகவாசிஷ்டம் 

யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்!

ச.நாகராஜன் 

முன்னொரு காலத்தில் பெரும் மஹரிஷிகள் அனைவரும் தேவ சபையில் ஒருங்கே கூடினர்.  அப்போது ஒரு கேள்வி எழுந்தது.

 உலகில் வசித்துக் கொண்டிருந்தாலும் உலக சம்பந்தமான தொடர்பு சிறிதும் ஏற்படாத மஹா ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? – இது தான் கேள்வி.

 அப்போது சாதாதபர் என்னும் மஹரிஷி சபையோரைப் பார்த்துச் சொல்லலானார் : “ ரிஷி பெருமக்களே! மஹாமேருவின் ஈசான கோணத்தில் எத்தகைய தவம் செய்தாலும் செல்வதற்கு மிக அரிதாக உள்ள ஒரு ரகசியமான இடத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் பொந்திலே காகத்தின் உருவத்தில் புஸுண்டர் என்ற மாபெரும் யோகியார் இருக்கிறார். அவரைப் போன்ற இன்னொருவரைக் காண்பது அரிது”.

இதைக் கேள்வியுற்ற வசிஷ்ட மஹரிஷி தனது தவத்தின் வலிமையாலும் யோக சக்தியாலும் அந்த மரத்தின் அருகில் சென்றார். அங்கே புஸுண்ட மஹரிஷியைக் கண்டார்.

அவரிடம் அர்க்யம் பாத்யம் ஆகிய அனைத்து உபசாரங்களையும் பெற்றார்.

பின்னர் வினவலானார் தனது சந்தேகத்தை! 

“ ஓ! யோகீஸ்வரரே! வெகு நீண்ட காலமாக உலகில் நீங்கள் வசிக்கிறீர்கள். உங்களது அனுபவத்தில் கண்ட விஷயங்களைச் சற்று எனக்குச் சொல்லுங்கள்” என்று அவர் வேண்டினார்.

அப்போது புஸுண்ட மஹரிஷி பல ரகசியங்களை அவரிடம் விண்டுரைத்தார்.

அவை அதிசயிக்கத்தக்க விவரங்கள்! யோகம், ஞானம் பற்றிய பல மர்மமான விஷயங்களை அவர் எடுத்துரைத்தார். 

பின்னர் கூறினார் இப்படி:

 : ஓ, முனிவரே! நீர் பிரம்மாவினால் இதற்கு முன் ஏழு தடவை உண்டாக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பிரம்மாவின் சங்கல்பத்தால் கர்ப்பவாசம் இன்றி நீர் தோன்றினீர்.  அப்படித் தோன்றிய ஜன்மங்களில் இது உமக்கு எட்டாவது ஜன்மம். ஒரு சமயம் ஆகாயத்திலிருந்து நீர் பிரம்மாவின் சங்கல்பத்தினால் தோன்றினீர். இன்னொரு சமயம் அக்னியிலிருந்து தோன்றினீர்.

பூமி அந்தர்தானம் அடைந்து கூர்மத்தினால் சமுத்திரத்திலிருந்து உத்தாரணம் செய்யப்பட்டதை இதற்கு முன் ஐந்து கல்பங்களில் கண்டிருக்கிறேன்.

இப்போது நடந்த அம்ருத மதனமானது நான் கண்டதில் பனிரெண்டாவது தடவை ஏற்படுவதாகும். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கீழே கொண்டு போனதை மூன்று தடவை நான் கண்டிருக்கிறேன்.

 ஹரியானவர் பரந்தாமராகத் தோற்றமுற்ற அவதாரங்களில் எட்டை நான் பார்த்திருக்கிறேன். திரிபுர சம்ஹாரங்களில் முப்பதைப் பார்த்திருக்கிறேன். தக்ஷயக்ஞ நாசம் இரண்டு முறை கண்டிருக்கிறேன்.

ஒரே விஷயத்தைச் சொல்லுவதாகவும் பல பாடங்களை உடையதாயும் உள்ள புராணங்கள் கலியில் நஷ்டமடைந்து போக அவை மீண்டும் ஒவ்வொரு சதுர்யுகத்திலும் மீண்டும் பிரவர்த்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 ராமாயணம் என்னும் வேறு இதிஹாஸம் ஒன்று லட்சம் கிரந்தங்களோடு கூடிய ஞான சாஸ்திரமாகத் தோன்றியதைக் கண்டிருக்கிறேன்.

 பூபார நிவிருத்திக்காக வசுதேவர் இல்லத்தில் கிருஷ்ணன் என்னும் பெயரை உடைய பதினாறாவது அவதாரமானது விஷ்ணுவுக்கு இனி ஏற்படப் போகிறது.

இதற்கு முன் அந்த அவதாரத்தில் பதினைந்து அவதாரங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு சமயம் ருத்திரர் சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் பிரம்மா சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் விஷ்ணு சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் முனிவரது சிருஷ்டியையும் கண்டிருக்கிறேன்.

 ஒரு கல்பத்தில் தாமரை மலரிலிருந்தும் ஒரு சமயம் ஜலத்திலிருந்தும் ஒரு கல்பத்தில் அண்டத்திலிருந்தும் ஒரு கல்பத்தை ஆகாயத்திலிருந்தும் பிரம்மா உண்டாகியதைக் கண்டிருக்கிறேன்.

 இப்படிப் பல விஷயங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்தனர்.

 நாம் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம். மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம்.இது இந்த கல்பத்தில் ஏழாவது மன்வந்தரம்.

இப்போது இருப்பது பிரம்மாவின் 51வது வருடம்.

இப்படிப்பட்ட நீண்ட ஒரு சரிதத்தை சிருஷ்டி பற்றிக் கேள்விப்பட்ட கார்ல் சகன் என்ற விஞ்ஞானி மலைத்தே போனார்.

சிருஷ்டியின் மர்மத்தைக் கூறும் சிதம்பரம் நோக்கி வந்தார். நடராஜரை தரிசித்தார்.

தனது காஸ்மாஸ் என்ற பிரபலமான அமெரிக்க தொடரின் ஒரு பகுதியின் ஆரம்பத்தில் நடராஜரைக் காண்பித்தார்.

நமது பிரபஞ்சம் பற்றிய அறிவு விஞ்ஞான பூர்வமானது.

இதை முற்றிலுமாக அறிந்து கொள்ள கல்பம் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாதது!

*** 

Tags- யோக வாசிஷ்டம், புஸுண்டோபாக்யானம்புஸுண்டர்

பிராமண, வைசிய, க்ஷத்ரியர்க்கு எதனால் வெற்றி ? அம்பலவாணர் கருத்து (Post.11,586)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,586

Date uploaded in London – 25 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 33. வெற்றி யிடம்

கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;

     காமுகர்க் கதிக சயமோ

  கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்

     கைவிசே டந்தன் னிலே;

நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்கு

     நாளும்ரண சூரத் திலே

  நற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;

     ஞானவே தியர்த மக்கோ

குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்

     1கூடிய துலாக்கோ லிலே;

  குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்

     குறையாத கொழுமு னையிலே;

அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்

     ஆம்என்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ……… தேவனே!, கலைவலாருக்கு மதுரவாக்கில்

அதிகசயம் – கலையிற் சிறந்தவர்கட்கு இனிய மொழியிலே மிகு வெற்றி

(உண்டு), காமுகர்க்குக் கைப்பொருளிலே அதிகசயம் – காமத்திலே

ஈடுபட்டவர்கட்குக்

________________________________________

     1. ‘கூறிய’ என்றும் பாடம்.கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). வரும் மருத்துவர்க்குக்
கைவிசேடந்தன்னில் சயம் – முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக்
கைராசியால் வெற்றி (உண்டாகும்), நலம் உடைய வேசையர்க்கு அழகிலே- நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு),நாளும் அரசர்க்கு ரணசூரத்திலே – எப்போதும் மன்னவர்கட்குப் போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நற்றவர்க்கு உலகுபுகழ்பொறையிலே அதிக சயம் – நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), ஞானவேதியர் தமக்கோ குலமகிமை தன்னிலே – அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய பெருமையினாலே வெற்றி உண்டாகும், வைசியர்க்கோ கூடிய துலாக்கோலிலே சயம் – வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம் இல்லாத வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் – குற்றம்
அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே
(உழுவதால்) வெற்றி உண்டாகும்அலைவுஇல் குதிரைக்கு நடைவேகத்தில்அதிக சயம் ஆம் என்பர் – வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.

     (க-து.) அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான்
வெற்றியுண்டாகும்.

Xxx

My commentary on verse 33 of ARAPPALISURA SATAKAM

வெற்றி வேற்கை (நறுந்தொகை) எழுதிய அரசர் அதிவீரராம பாண்டியனும் அம்பலவாரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்.


வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் 4

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை 5

வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் 6

உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் 7

XXX

பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் 11

குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் 12

விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் 13

XXX

காலையும் மாலையும் நான் மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே 65

குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே 66

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே 67

வித்தும் ஏரும் உளவா இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே 68

XXX

தவம் செய்வோருக்கு பொறுமை அவசியம் ஏன்?

அப்போது அவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டாது; வெற்றி வரும் நேரத்தில் அஹங்காரமும் காம எண்ணங்களும் வலை வீசும்; அதில் அகப்பட்டு சிறை சென்ற ஆனந்தாக்களை பத்திரிக்கையில் படிக்கிறோம் . விசுவாமித்திரர் அகம்கார வெறியில் வஸிட்டரின் காமதேனுவைப் பறிக்கப் பார்த்தார்; நல்ல அடி வாங்கினார் ;பின்னர் திரிசங்குவை உடலுடன் இந்திரலோகத்துக்கு அனுப்பி, அவர்கள் அவரை பூமிக்கு உருட்டிவிட்டபோது மற்றோரு அடி வாங்கினார் மேனகா வலையில் சிக்கி தவத்தை இழந்தார். அவர் மன்னர்- ஞானி; ஆக அவருக்கு பொறுமை இல்லாததால் மும்முறை தோற்றார். பின்னர் தவற்றை உணர்ந்து பக்குவ நிலை அடைந்தார். பிராமணர் பட்டத்தை அவருக்கு வசிஷ்டரே தந்தார்.

XXX

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

ஒரு தவசி ராம கிருஷ்ண பரமஹம்ஸரிடம் வந்தார். வர, வர தனக்கு ஞான திருஷ்டி அதிகரிப்பதாகச் சொல்லி. தொலை தூரத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் முன் கூட்டியே தெரிவதாகவும் அதைத்தானே சரி பார்த்து அறிந்த தாகவும் சொன்னார். உடனே தவத்தை சில நாட்களுக்கு நிறுத்தும்படி பரமஹம்ஸர் சொன்னார். வந்தவர் வியப்புடன் ஏன் நிறுத்தவேண்டும் என்று வினவினார். தவம் சித்தி அடையப்போகும் நேரத்தில் இப்படி தேவதைகள் வந்து திசை திருப்பும் என்றும் ஆகையால் அதை நிறுத்த, சில நாட்கள் தவம் செய்வதை கைவிடுதல் நன்று என்றும் சொன்னார்.

இன்னொருவர் வந்து தான் தியானம் செய்யும்போது பழைய தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுப்பதாக வருத்தத்துடன் செப்பினார். அதற்கும் பரமஹம்ஸர் தக்க பதில் கொடுத்தார். எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தை எவ்வளவு கவிழ்த்து எண்ணெயை வெளியேற்றினாலும் சிறிது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நம்முடைய பழைய எண்ணங்களும் அப்படித்தான். எளிதில் போகாது.ஆகையால் அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தியானம் செய்யலாம் என்கிறார். தியானத்தில் வெற்றி அடைய நிறைய பொறுமை வேண்டும்.

XXXX

நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணஹ

குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா — என்று

சம்ஸ்க்ருத சுபாஷிதம் செப்பும்.

மனிதனுக்கு அழகு எடுப்பான தோற்றம் ;

அந்த உருவத்துக்கு அழகு நல்ல குணம்;

அந்த குணத்துக்கு அழகு தருவது ஞானம்;

அந்த ஞானத்துக்கு அழகு சேர்ப்பது பொறுமை

XXXX

மற்றொரு பொறுமை ஸ்லோகம் இதோ :

கோகிலானாம் ஸ்வரம் ரூபம் பாதிவ்ரத்யம் து யோஷிதாம்

வித்யா ரூபம் விரூபாணாம்  க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

குயிலுக்கு அழகு அதன் இனிய குரல் ;

பெண்களுக்கு அழகு கற்பு;

அசிங்கமான தோற்றம் உடையோருக்கு அழகு அவர்கள் கற்ற கல்வி;

தவசிகளுக்கு அழகு பொறுமை .!

சாணக்கியர் கதை அனைவரும் அறிந்ததே ; அழகற்ற கருத்த பிராமணர் அவர். ஒரு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரை , நந்த வம்ஸத்து மன்னர், தர தர என்று வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தவே உனது சாம்ராஜ்யத்தை வேரறுக்காதவரை என் குடுமியை முடிய மாட்டேன் என்று வீர சபதம் செய்தார். அதன் படி நந்த வம்சத்தை பூண்டோடு அழித்து, அலெக்ஸ்சாண்டரையும்  அச்சுறுத்தக்கூடிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை நிறுவினார். மஹா மேதாவி; ஆனால் தோற்றத்தில் விகாரம்.

XXX

பார்ப்பனர் பற்றி வள்ளுவரே சொல்லிவிட்டார். வேதத்தை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒழுக்கத்தைக் கைவிட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது. அந்தக் காலத்தில் பிராமணர் மூலம் செய்திகளை அனுப்புவார்கள் ; அதைத் தொல்காப்பியரும் சொல்கிறார். கோவலனுக்கு மாதவி அனுப்பிய மன்னிப்பு LOVE LETTER லவ் லெட்டரை பார்ப்பனர் கையில் கொடுத்து அனுப்பியதை சிலப்பதிகாரம் செப்புகிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மீது.

குறள் 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பிராமணர்கள் அடிப்படை வேலை, வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.

தைவாதீனம் ஜகத் சர்வம்

மந்திராதீனம் து தைவதம்

தன்மந்த்ரம் பிராஹ்மணாதீனம்

பிராஹ்மணோ  மமதேவதா

பொருள்: “உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் மந்திரங்களும் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை – பிராமணர்களே எனது தெய்வம்” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்

இவை அனைத்தும் ஒழுக்கமுள்ள, வேத வாழ்வினைக் கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களைப் பற்றி சொன்ன வசனங்கள்.

XXX

விவேக சிந்தாமணி பாடலும் அந்தணர் ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்

மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமையாகும்

சந்திரன் கதிரோன் சாயும்  தரணியில் தேசும்  மாளும்

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

அந்தணர் தம் கடமை குன்றுவாரேயானால்,

வானுலக அரசன் இந்திரன் பெற்றிருக்கும் பேறுகள் குன்றும்.

மண்ணுலக அரசர்கள் பெற்றிருக்கும் பேறுகள் மாற்றம் அடையும்.

மலைகளின் நிலைகள் பெயரும்.

தெருக்களிலும், அயலிடங்களிலும் வறுமை நிலை தோன்றும்.

சந்திரன், சூரியன் ஒளி சாயும். உலகின் ஒளி அழியும்.

உலகில் யார்தாம் நலமுடன் வாழ்வார்?

XXXsubham xxxx

tags– பிராமண, வைசிய, க்ஷத்ரியர்,  வெற்றி , அம்பலவாணர் கருத்து

Tamil Hindu Encyclopaedia; 42, Nymphs, Ghosts, and Local Gods in Sangam Tamil Corpus (Post.11,585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,585

Date uploaded in London – 25 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Ancient Tamils believed in Nymphs, Ghosts, Spirits and Local Gods like the Vedic people. We see unknown and unexplainable ghosts and spirits  in the Rigveda and Atharvana Veda. I have already given the long list in my blogs. Even today the village goddesses have only Sanskrit names. Kanchi Paramacharya Swami has explained it in his beautiful lecture.

Many half baked , so called scholars write that these are Dravidian Gods. But all of them have Sanskrit names or stories connected with Hindu gods. In the Veda also we see Raakaayi, Mookaayi, Aranyani (forest nymph), Bhumadevi, Mahaamaayi etc

Greeks and Sumers also have similar stories.

Like their north Indian counterparts , ancient Tamils saw nymphs in all the natural entities; they sing about nymphs in forests, trees, ponds, lakes, mountains, parks, meeting points of streets, city squares, crematoriums , battle fields, musical instruments, animals etc . Hundreds of references are in 2000 year old literature. We see similar things in ancient Greece.  They have special names for nymphs of different localities, unlike Tamils . Greeks called them,

Nereides – water nymphs. Neer for water is not a Tamil word. Greeks took it from Rigveda to Greece.

Naiades- Mountain nymphs

Oceanides – Ocean , sea nymphs

Dryads – trees; from Sanskrit Taru, Daru

Most of them are female spirits like Yakshis in Sanskrit. Tamils also considered them feminine spirits. Because of this belief, Hindus gave full respect to all that is Nature and saved the environment

Sangam Age Tamils used அணங்கு, பேய், கடவுள், தெய்வம், சூரரமகளிர் for the nymphs and spirits. Local people worshipped them with special rites.

The following passage lists all the places where the nymphs reside

மலையும்‌ மரமும்‌ மரம்செறி காவும்‌

காடும்‌ மேடும்‌ கள்ளியும்‌ புதரும்‌.

சுனையும்‌ துருத்தியும்‌ சுழியும்‌ கடலும்‌:

நாடும ஊரும்‌ நல்மனை இடங்களும்‌

மருவு சந்தியும மறுகுகூடு சதுக்கமும்‌:

மன்றில்‌ பொதியிலில்‌ கந்துடை நிலையிலும்

யாழிலும்‌ பிறவிலும்‌ எங்கனும்‌ மன்னி.

உவந்துறை கடவுளர்‌ காட்சியும்‌ உளவே.

This includes all the sources listed above.

Xxx

Like Vedic people, they approached them with a reverential fear. We see it in Bhumi Sukta of the Atharvana Veda and Aranyani sukta of the Rig Veda, the oldest book in the world.

‘உருகெழு மரபின்‌ கடவுள்‌: (பதிற் ,21:8) is the description we find in Pathitrupathu, which means fearful and troublesome god.

Xxx

Tirumurukatruppadai (Murugu) gives the list as Forest, Garden, River Islands, River, Pond, Square, Street Meeting Points, Parks,Public Meeting places, Godly places etc

காடும்‌ காவும்‌, கவின்‌ பெறு துருத்தியும்‌

யாறும்‌ குளனும்‌. வேறுபல்‌ வைப்பும்‌,

சதுக்கமும்‌ சந்தியும்‌ புதுப்பூங்‌ கடம்பும்‌.

மன்றமும்‌ பொதியிலும்‌ கந்துடை நிலையிலும்‌

(முருகு 223-225)

Xxx

Paripatal adds Trees like banyan, Kadamba, River islands, Hills etc where Gods reside

ஆலமும்‌, கடம்பும்‌, நல்‌ யாற்று நடுவும்‌.

கால்‌ வழக்கு அறுநிலைக குன்றமும்‌, பிறவும்‌

அவ்வவை மேலிய வேறுவேறு பெயரோய்‌

(பரி .4:67-69)

Xxx

People worship such places , report Kalittokai verse.

‘துறையும்‌ ஆலமும்‌ தொல்வலி மராஅமும்‌

முறையுளி பராஅய்‌, பசய்ந்தனர்‌, தொழூ௨

(கலி.101 13-14)

Xxx

Mountain Spirits

The Greeks called them “The Oreads”

The Oreads (oros, “mountain”) were nymphs of mountains and grottoes; the Napaeae (nape, “dell”) and the Alseids (alsos, “grove”) were nymphs of glens and groves; the Dryads or Hamadryads presided over forests and trees.

In Sanskrit we have Goddesses in each Mountain such as Vindhyavasini in Vindhya mountains, Mookambhika in the Western Ghats, Santoshi  Mata and Parvati in the Himalayas, Kanaka Durga in Indrakeeladri Hills in Andhra Pradesh etc.

Tamils also worshipped the hills as Gods

Sangam Tamils sang about the Devas residing in Meru (Sirupan.Lines 205/6 and Perumpan. Lines 429/30.)

Meru is the centre and highest point in Sri Chakra Yantra. We have Meru in all parts of the world such as Pameer (Paa Meru), Khmer and Kumari (Khu Meru), Sumerians (Su Meru; they claimed they came from a far off mountain area/India; Meru in Kenya in Africa etc.

Xxx

Sangam Age Tamils believed that all hills are places where Gods reside

(Anangu- Nymph- அணங்கு)

அணங்குடை நெடுவரை: (௮௧.23:1); ‘Akam 23-1

அணங்குடைக்‌. கவாஅன்‌! (௮௧.79:11); Akam

‘வான்  கோட்டுக்‌ க டவுள்‌, ஓங்குவனர* – அகம் 348 -6

அணங்குடை வரைப்பு’ (௮௧,372:1); ‘கடுந்திறல்‌. Akam

அணங்கின்‌ நெடும்‌ பெருங்‌ குன்றத்து’ (௮௧.378:34); Akam 

‘மலை உறை கடவுள்‌: (நற்‌.359:3); Natr.

அணங்கொடு நின்றது மலை நற்‌.165:8) Natr.

xxx

They guard the people

“அருந்தெறல்‌ மரபின்‌ கடவுள்/God‌ காப்ப,

பெருந்தேன்‌ தூங்கும்‌ தாடுகாண்‌ நனந்தலை,

அணங்கு/Nymphடை வரைப்பின்‌, பாழி ஆங்கண்‌”

(௮௧.372:1-3)  Akam

“ஈர்ந்தண்‌ சிலம்பின்‌ இருள்‌ தூங்கு நளி முழை

அருத்திறல்‌ கடவுள்/God‌ காக்கும்‌ உயர்சிமை:

பெருங்கல்‌ நாடன்‌ பேகனும்‌’ (புற.158:10-12), Puram

The Gods in the mountain protect the people, they sang.

It makes sense because the hills only prevented invasions of enemies from the other side of the mountain.

Xxx

Beautiful Apsaras from Deva Loka/Divine World/Heaven

Tamils called them Mountain Women ‘வரையர மகளிர்‌’ . They said that the bards and dancers crossing the Mountains should not stay in such places for long because they will give you sickness.

Throughout the Atharva Veda, we see all bacteria and Viruses are described as evil spirits. That is the layman’s language. Tamils also said don’t stay in cold places for long otherwise you would get troubles (Influenza fever or Pneumonia or even Malaria)

“அனையது அன்று அவன்‌ மலைமிசை நாடே –

நிரை இதழ்க்‌ குவளைக்‌ கடிவீ தொடினும்‌,

‘வரைஅர மகளிர்‌ இருக்கை காணினும்‌,

உயிர்செல வெம்பிப்‌ பனித்தலும்‌ உரியிர்‌;

பலநாள்‌ நில்லாது நிலநாடு படர்மின்‌

(மலைபடு.188-192) Malaipadukadaam

This passage warns the bards and their wives not to stay for long in mountainous areas because you will be made to shiver (with fever)

xxx

Tamils believed those Apsaras or Angels live in caves and they are invisible to human beings. (Akam Verse௮௧.343:11-18).

Tamil poets used this Apsaras as similes to describe the rare sight of a girl (lady love) of the beauty of a ladylove.

‘வரையர மகனிரின்‌ அரியள்‌: (Ainkurஐங்‌.191:4, Akam௮௧.352:11)

To be continued………………………………………

Tags- Tamil , Anangu, Nymphs, Pey, Surara Makalir, Tamil Spirits, Ghosts

அருள்வாயே! – 7 (Post No.11,584)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,584

Date uploaded in London – 25 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 7

(55 முதல் 64 முடிய)

ச.நாகராஜன்

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

55) திருத்தணிகை

சேவற்கொடி யொடுசி கண்டியின்

 மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய

   தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே

பாடல் எண் 300 –   ‘வாருற்றெழும் ‘எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச்சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!

56) குன்றுதோறாடல்

   இதயந் தனிலி ருந்து க்ருபையாகி

    இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே

பாடல் எண் 303 –   ‘அதிருங் கழல் பணிந்து ‘எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!

57) குன்றுதோறாடல்

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திர ஞான மூறு

   செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே

பாடல் எண் 306 –   ‘வஞ்சக லோப மூடர்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச் செய்வாயாக!

58) ஆறு திருப்பதி

கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை

  கழலிணை பெறவேயினி யருள்வாயே

பாடல் எண் 307 –   ‘அலைகடல் நிகராகிய‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி) அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடி இணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக!

59) காஞ்சீபுரம்

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்

  திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்

    சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே

பாடல் எண் 314 –   ‘புன மடந்தைக்கு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து  அருள்வாய்?

60) காஞ்சீபுரம்

பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்

  செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்

    றடைதரும் பக்வத் தைத்தமி யற்கென் றருள்வாயே

பாடல் எண் 316 –   ‘செறிதரும் செப்பத்து‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும்) பெருமான் நீ என்றும் நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?

61) காஞ்சீபுரம்

  தங்கரிவையும் துத்துத் துத்துவெனக்கண் டுமியாமற்

  றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்

    கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்

     டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே

பாடல் எண் 319 –   ‘தசைதுறுந்தொக்கு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   உடன் தங்கியிருந்த பெண்களும் ‘தூ, தூ’ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும், போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?

62) காஞ்சீபுரம்

  இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்

    இதவிய பாதாம்புய மருள்வாயே

பாடல் எண் 338 –   ‘கமலரு சோகாம்பர‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   (இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!

63) காஞ்சீபுரம்

  பார டைக்கலக் கோல மாமெனத்

    தாப ரித்துநித்தார மீதெனப்

      பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே

பாடல் எண் 343 –   ‘சீசி முப்புர‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :   உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஒரு ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்ய அருள்வாயாக்

64) காஞ்சீபுரம்

  விதன முற்றிட மிக வாழும்

விரகு கெட்டரு நரகு விட்டிரு

 வினைய றப்பத மருள்வாயே

பாடல் எண் 345 –   ‘படி றொழுக்கமும்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும், அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக! 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

Learn Tamil Verbs Part -36; Verbs Present, Future, Past Continuous  கொண்டு , இரு (Post No.11,583)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,583

Date uploaded in London – 24 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Picture Line:-

இந்தப் படத்தில்- in this picture–  உலகப் புகழ்பெற்ற – world famous–வரலாற்றுப் பேரறிஞர் Historian /scholar– டாக்டர் நாகசாமி – Dr Nagaswamy– அவருடைய புஸ்தகத்தைப் – his book —படித்துக் கொண்டு இருக்கிறார் —reading

xxx

Let us learn some verbs with ‘ING’

Eg. Going, Coming, Eating, reading etc.

It is called Gerund

Gerund

GRAMMAR

  1. a verb form which functions as a noun, in Latin ending in -ndum (declinable), in English ending in -ing (e.g. asking in do you mind my asking you? ).
  2.  

 We may call it as Present, Future, Past Continuous

Xxx

How to from it?

You must know the Converbial form of each verb and then add to it KONDU/ கொண்டு and then add conjugation of IRU/ இரு

இரு is Be ( We have seen the conjugation of Be and converbial already. But I will remind you again

Xxxx

Examples

Naan saappittuk kondu irukkiren – I am eating

Naan eating

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்

நான் சாப்பிட்டு –கொண்டு — இருக்கிறேன்

xxxxx

நான்  வந்து கொண்டிருக்கிறேன் –Naan Vanthu Kondu Irukkiren

நான் வந்து –கொண்டு — இருக்கிறேன் – I am coming

xxxx

நான் போய்க் கொண்டிருக்கிறேன் – Naan Poyk Kondu Irukkiren

நான் போய்க் –கொண்டு — இருக்கிறேன் I am going

xxxx

நான் படித்துக் கொண்டிருக்கிறேன் Naan Padiththuk Kondu Irukkiren

நான் படித்துக் –கொண்டு — இருக்கிறேன் I am reading / studying

xxxx

நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் Naan Vilayaadik Kondu Irukkiren

நான் விளையாடிக் –கொண்டு — இருக்கிறேன் I am playing

xxxx

நான் பாடிக் கொண்டிருக்கிறேன் – Naan Paadik Kondu Irukkiren

நான் பாடிக் –கொண்டு — இருக்கிறேன் I am singing

Xxx

More Examples in Present tense

Avan odik kondu irukkiraan– அவன் ஓடிக்கொண்டு இருக்கிறான்

He is running

Xxx

Aval aadikkondu irukkiraal -அவள் ஆடிக்கொண்டு இருக்கிறாள் 

She is dancing

Xxx

Avargal thoongki kondu irukkiraarkal – அவர்கள்  தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் 

They are sleeping

xxxx

Nee pesikkondu  irukkiraay -நீ பேசிக் கொண்டு இருக்கிறாய்

You are talking or speaking

Xxxx

Neengkal pesikkondu irukkireerkal- நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் 

You are talking or speaking

Xxx

Naay vilaiyaadik kondu irukkirathu நாய் விளையாடிக் கொண்டு இருக்கிறது  

Dog is playing

Xxx

Naangkal ezuthik kondu irukkirom நாங்கள்  எழுதிக் கொண்டு இருக்கிறோம்  

We are writing

Xxxx

For Future Iruppen, Iruppom, iruppaay, irupeerkal, irppaan, iruppaal, iruppaarkal, irukkum

For past tense – irunthen, irunthom, irunthaay, iruntheerkal, irunthaan, irunthaal, irunthaarkal, irunthathu

PLEASE LOOK AT THE FOLLOWING CHART FOR TAMIL WORDS.

XX

SUMMARY

GET THE CONVERBIAL OF A VERB

ADD KONDU+ ADD PGN OF VERB IRU (BE)

XXXX

LET US LEARN SOME NEW VERBS; 16 verbs are given below

முந்து MUNTHU= OVERTAKE  முந்துகிறேன் முந்துவேன் முந்தினேன்

உந்து – UNTHU – PUSH, SPRING FORWARD, URGE உந்தினோம் உந்தவில்லை

குந்து – KUNTHU – SIT DOWN குந்தினார்கள்

சிந்து – SPILL – சிந்தினாள்

ஏந்து – HOLD – ஏந்துவான்

XXXX

PADI – READ/ STUDY படி, (Avan Pustakam Padikkiraan- He reads a book)

MUDI – FINISH, COMPLETE முடி, (Avarkal pesi mudiththarkal – they finished talking or They completed a transaction)

KADI- BITE கடி, ( Poonai eliyaik kadiththathu- Cat bit the mouse)

IDI- push, dash against, demolish, pound இடி, (Penkal meethu Idikkathe- Don’t dash against girls)

VADI – FILTER, வடி,  (ennaiyai vadiththaan – filtered oil)

NADI- ACT நடி (naan naadakaththil nadikkiren- I act in a drama)

KUDI- DRINK குடி , (avargal Madhu Kudipparkal- They will drink liquor)

VEDI- LIGHT FIRE CTRACKERS OR (BOMB) EXPLODE வெடி , (siruvarkal vedi vediththaarkal- Boys fired fire crackers)

THUDI- SUFFER IN PAIN, துடி , (valiyaal thudiththaal she suffered in pain)

MADI – FOLD மடி (Avargal Madikkak Koodaathu= they should not fold)

ADI – HIT, BEAT அடி (vaaththiyaar paiyanai adippar- Teacher will hit the boy)

PIDI – CATCH/ HOLD பிடி- naangkal panthaip pidiththom We caught the ball

–subham—-

 Tags- Continuous, Gerund, Ing verbs, Kondu, Iru, Be