ANTANANARIVO (Reuters) -Madagascar’s interim president, who seized power in the Indian Ocean island nation last month, has unveiled a 300 kg (661 lb) gemstone that he said had been found in the presidential palace.
The dark boulder, streaked with shimmering green crystal, was shown on Tuesday evening inside the Ambohitsorohitra State Palace in the capital Antananarivo.
Madagascar’s interim president Colonel Michael Randrianirina has unveiled a 300 kg (661 lb) gemstone that he said had been found in the presidential palace.
Randrianirina, who seized power in the Indian Ocean island nation last month, described the gemstone as “emerald in matrix”.
The stone, described as an “emerald in matrix”, still needs expert analysis to determine the size and quality of the emerald embedded within.
“This is a national asset,” said Colonel Michael Randrianirina, as he stood beside the find.
“It might be sold, and it will be up to the minister to explain the procedures that will be followed to increase the state’s revenues,” he said, promising “complete transparency”.
He gave no details on how, when and where the stone was found, other than saying “upon arrival, we discovered this incredible national treasure” and “we do not know why it was brought here”.
Mines Minister Carl Andriamparany called the gemstone a collector’s dream. “An emerald with its natural matrix is rare,” he said, adding that officials have found no record of a similar stone ever documented in Madagascar.
The government said proceeds from a sale would go into the state treasury.
(Reporting by Lovasoa Rabary; Writing by Vincent Mumo Nzilani;Editing by Bate Felix and Alison Williams)
The dark boulder, streaked with shimmering green crystal, was displayed inside the Ambohitsorohitra State Palace in the capital Antananarivo on Tuesday evening. “This is a national asset,” said interim leader Randrianirina, as he stood beside the gemstone.
அன்டனாநார்னிவோ: மடகாஸ்கரின் அதிபர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்டு’ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புதிய ராணுவ ஆட்சியின் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியரினா தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், ஊழல், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், சமீபத்தில் இளம் தலைமுறையினர், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இது மிகப் பெரும் போராட்டமாக நாடு முழுதும் பரவியது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜோலினா, ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். இதற்கு ராணுவத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அவர்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து, தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறி முன்னாள் அதிபர் ராஜோலினா தன் பதவியை ராஜினாமா செய்து, கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, அந்நாட்டின் அதிபராக மைக்கேல் ராண்ட்ரியனரினா பதவியேற்றார்.
இந்நிலையில், ராண்ட்ரியனரினா கூறியுள்ளதாவது:அதிபர் மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள மரகத கல், தேசிய பொக்கிஷத்தில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். அரசு கருவூலம் கிட்டத்தட்ட காலியாகியுள்ள நிலையில், சர்வதேச நிதியுதவியைப் பெறவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் புதிய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
அரசு கருவூலத்தை நிரப்ப, அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட மரகத கல் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏன் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என எங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மரகத கல்லின் மதிப்பு, 213 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part Two
நேற்றறைய பதிவில் நம்மாழ்வார் தவளப்பொடி என்று சொன்னது விபூதியைத்தான் என்பதை மாணிக்க வாசகரின் திருக்கோவையார் அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலம் உறுதி செய்தோம்.
மாணிக்கவாசகர் காலம் சம்பந்தருக்கும் அப்பருக்கும் சற்று முந்தியது என்பதை திருவிளையாடல் புராண லீலைகள் அவைகளைக் குறிப்பிடும் அப்பர், சம்பந்தர் தேவாரப்பாடல்கள் மூலம் ஏற்கனவே ஐயம் திரிபற நிர்மாணித்தோம் .
திருக்கோவையாரிலும் குறிசொல்லும் நிகழச்சிகள் இருக்கின்றன அவைகளில் குறிசொல்லும் முறை, முருகனை காதல் நோய்பிடித்த பெண்ணிடமிருந்து விரட்டும் முறை ஆகியவற்றை மாணிக்கவாசகர் விரிவாக உரைக்கிறார் ஆடு பலி கொடுப்பதையும் சொல்கிறார் . அதை எல்லாம் கூறும் நம்மாழ்வார் ஏனப்பா இப்படியெல்லாம் செய்கிறீர்கள் தவளப்பொடி பூசி அவளைக் குணப்படுத்துங்கள் என்று சொல்லுவதைக் காண்போம். இதில் அந்தக்காலத்தில் காதல் நோய் பிடித்த பெண்களை அணங்கு / முருகன் தாக்கியதாக தாய்மார்கள் எண்ணி ஏமாந்ததை நம்மாழ்வார் கிண்டல் செய்கிறார்; ஏனெனில் காதலில் சிக்குண்ட பெண்ணுக்கும் அவளது தாய் ஏமாந்தது தெரியும்
THANKS TO PROJECT MADURAI WEBSITE &WISDOMLIB>ORG
கீழேயுள்ள திருக்கோவையார் , திருவாயமொழி பாடல்களைப் படித்தால் உங்களுக்குப் புரியும். தேவையான இடங்களில் தடித்த எழுத்தில் காட்டுகிறேன். எளிதான தமிழ் என்பதால் பொழிப்புரை தேவை இல்லை; இருந்தபோதிலும் விளங்காதவர்களுக்காக இருவர் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பினையும் கூடவே கொடுத்துள்ளேன் அவைகளை வெளியிட்ட ப்ராஜெக்ட் மதுரை அமைப்புக்கு நன்றி
NAMMALVAR’s ATTACK ON FORTUNE TELLNG
1
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம், இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது, திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க, நீர் இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே.
English translation of verse 4.6.2:
Ye, mothers, confounded, do not go the wrong way and propitiate The minor deity, You should know it is inappropriate; This young lady’s sickness is induced by the Supreme Lord. Better utter the words’ conch’ and ‘discus’, so as to be heard By her and you will then see it does her real good.
***
2
இது காண்மின் அன்னைமீர்! இக் கட்டுவிச்சி சொல் கொண்டு, நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின், மது வார் துழாய்முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால், அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே.
English translation of verse 4.6.3:
Look here, ye, elders, try the recipe I suggest. Listen not to this gipsy, you’d better desist From offering meat and liquor; if you would but laud The feet of the wondrous Lord with tuḷaci garland. Studded with honey, on His crown, the sure remedy It will be for this young lady’s unique malady.
***
3
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு, நீர் கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட, பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே.
English translation of verse 4.6.4:
Ye, ladies, what use is there, applying remedies queer, Leaving lumps of cooked rice, black and red, At the junction of cross-roads, by a quack misled? For this Nāyakī’s revival, better chant within her hearing, The holy names of the Lord Supreme, Who ate The worlds seven (during deluge) and then spat out.
Ye, folks, this Nāyakī is terribly off colour, Alas! the methods you adopt can’t save her; Singing the names of the Lord who slew the tusker In must, let the dust from the feet of devotees pure Be on her strewn, there’s no remedy, so sure.
***
5
இந்த இடத்தில் பக்தர்களின் பாதத் தூள் வருகிறது உண்மைதான் . முந்திய பாட்டில் வெள்ளைப்பொடி என்று சொன்னது ஏன் என்பதுதான் என் கேள்வி
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர், பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால், மணியின் அணிநிற மாயன் தமர் அடி நீறுகொண்டு அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.
English translation of verse 4.6.6:
Ye, mothers, pity it is, in wrong methods you persist, It does only aggravate the malady; I insist That you on this young lady smear the dust Off the feet of devotees of the Lord Who excels The blue gem rare; no other remedy can work so well.
***
6
கழுதை உதடு – நம்மாழ்வார் கிண்டல்
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர், உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.
3184. Her friends say, “O mothers, you offer goats and liquor to the Anangu and worship her thinking that will cure your beautiful daughter, and you dance the Thunagai dance until your arms hurt. What is the use of seeing a donkey eating his food and seeing his lips when you are hungry? Bow to the devotees of the Mayappiran who recite the Vedas well.” –Kausalya Hart
Sathyamuthi Ayyangar below adds INFERIOR DEITY
English translation of verse 4.6.7:
Ye, elders, you think it is a cure rare and dear, For this young lady’s sickness when you offer Unto the inferior deity, sheep and liquor and, in distress, witness Men with trembling shoulders in awkward dance; Could you the moving lips of a donkey keep admiring As it eats up the paddy, spread out for drying? Better worship Vedic scholars, the holy men of the wondrous Lord.-Wisdomlib.org
MY COMMENTS
Inferior deity is not in the verse.
Lips of a Donkey actually refers to the lips of the dancer.
***
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்- பாதம் பணிந்து, இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய் ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய், கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.
3185. Her friends say, “O mothers, go to those who know the Vedas well and ask for their advice. Worship the divine feet of the god of gods as they tell you. You are not doing that to cure her sickness. It is wrong to say and do bad things. Drinking liquor, dancing the Anangu dance with loud music beating drums is wrong and shows you are not decent.”- Kausalya Hart
English translation of verse 4.6.8:
What you do, ye, mothers, is derogatory indeed, Speaking words unseemly, with a liberal use of liquor Amidst drum-beats propitiating the deity inferior, Instead of worshipping the feet of the Supreme Lord, Chief of Celestials, thro’ the good offices of Vedic Scholars, To cure the sickness of this young lady, the remedy sure.- -Sathyamuthi Ayyangar
***
MY COMMENTS
நம்மாழ்வார் சொல்லாத சொற்களையும் தீவிர வைஷ்ணவர்கள் , உரைகளில் சேர்ப்பதைக் கவனிக்கவும் . ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் துவக்கி உலகத்தையே வியப்புக்குள் ஆழ்த்திய பக்தி வேதாந்தப் பிரபுபாத சுவாமிகளும் பகவத் கீதை விளக்கத்தில் சிவபெருமானை Demi God , Inferior Deity டெமி காட், கீழான தெய்வம் என்று சுலோகத்துக்கு ஸ்லோகம் திட்டுவது விரும்பத்தக்கதும் அல்ல ; ஏற்புடைத்தும் அல்ல. கிருஷ்ணனைப் பரமாத்மா என்று புகழுங்கள், முருகனையும் சிவனையும் Demi God , Inferior Deity இன்பீரியர் டெய்ட்டி என்று பேசாதீர்கள்.
–subham—
Tags- நம்மாழ்வார் பாசுரம், விபூதி , ஜோதிடம்- Part 2, முருகனையும் சிவனையும், Demi God , Inferior Deity
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
பத்து லட்சம் வருடங்களுக்கு முன் உருவான ஏரியில் நீந்த ஆசையா? மோனோ லேக் போகலாமே –(MONO LAKE)
ச. நாகராஜன்
பத்து லட்சம் வருடங்களுக்கு முன் இயற்கை உருவாக்கிய ஏரியைப் பார்க்க வேண்டுமா. அதில் நீந்தவும் ஆசையா?
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மோனோ லேக் உங்களை ‘வா, வா’ என்று அழைக்கிறது.
இந்த ஏரி காரத்தன்மையும் உப்பும் கலந்த நீரைக் கொண்டதாகும்.
21 கிலோமீட்டர் நீளமும் 15 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இதன் பரப்பளவு மட்டும் 45133 ஏக்கர் ஆகும். இதன் அதிக பட்ச ஆழம் 159 அடி. சராசரியாக உள்ள அடி 57 அடி ஆகும்.
இதை ‘மூடிய ஏரி’ என்பார்கள். அதாவது இங்கிருந்து நீர் எங்கும் வெளியில் போகாது. ஒன்று ஆவியாக மாற வேண்டும். அல்லது நிலத்தடி நீராக இருத்தல் வேண்டும்.
இங்குள்ள இரால் மீன்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும் ஆல்கலி ஃப்ளை எனப்படும் பூச்சிகளும் இங்கு அதிகம். ஆகவே உணவு தேடி வரும் பறவைகளுக்கு இது அருமையான ஒரு இடமாக அமைகிறது.
ஷோர் பேர்ட் எனப்படும் கரைப்பறவைகளும் வாட்டர்பேர்ட் என அழைக்கப்படும் நீர்ப்பறவைகளும் இங்கு உள்ளன, இருபது லட்சம் வாட்டர் பேர்ட்கள்! 35 விதமான கரைப் பறவைகள்!!
பல மாதங்கள் இங்கு தங்கும் இவற்றைப் பார்க்க பறவை ஆர்வலர்கள் ஆயிரக் கணக்கில் கூடுகின்றனர்.
தென் அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கும் பல விசேஷப் பறவை இனங்களோ பார்ப்பதற்கே அற்புதமான காட்சியைத் தரும்.
இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களை குட்ஸாடிகா இன மக்கள் என்பார்கள். இவர்கள் பலூட் என்ற மொழியைப் பேசுபவர்கள்.
1953ல் வெளியான படமான ‘ஃபேர் விண்ட் டு ஜாவா’ என்ற திரைப்படத்தில் மோனோ லேக் இடம் பெற்றது.
மோனோ லேக்கில் பார்ப்பதற்கே பிரமிக்க வைக்கும் இன்னொரு விசித்திரமான பாறை, டூஃபா ஆகும். கால்சியம் அதிகமாக உள்ள ஏரியின் அடியில் இருக்கும் நீரானது ஏரியின் மேல் பரப்பில் உள்ள நீரோடு கலக்கும் போது அதிலுள்ள கார்பனேட்டுகளுடன் சேரவே ஒரு வித இரசாயன விளைவு உண்டாகிறது. உடனே கால்சியம் கார்பனேட் உருவாகிறது – அதாவது சுண்ணாம்பு.
காலப் போக்கில் பல நூற்றாண்டுகளில் இது அருமையான நெடிய கோபுரம் போன்ற பாறைகளாக உருவாகின்றன. இது தான் டூஃபா டவர்! (TUFA TOWER)
லாஸ் ஏஞ்சலஸ் நகர் நிர்வாகம் இங்குள்ள நீரைப் பயன்படுத்தத் துவங்கியதால் ஏரியின் நீர் மட்டம் குறையவே இந்தா டூஃபா டவர்களின் உயரம் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது.
மக்கள் இதில் ஏறுவது, உடைப்பது போன்ற செய்கைகளில் ஈடுபடவே அழகிய இந்தப் பாறைகள் அழிய ஆரம்பித்தன. விழித்துக் கொண்ட நிர்வாகம் 1981 முதல் இதைத் தீவிரமாகப் பராமரிக்க ஆரம்பித்தது.
இயற்கை ஆர்வலர்கள் இங்கு வருபவர்களிடம் இந்த டூஃபா டவர்களைப் பார்த்து மகிழுங்கள்,, போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்; அதை உடைப்பது அதில் ஏறுவது போன்றவற்றைச் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இங்கு ஐந்து மைல் நீளமுள்ள அழகிய நடைபாதைகள் பயணிகளுக்கென்றே உள்ளன. இதில் நடந்து சென்று இயற்கையை அனுபவிக்கலாம். நேவி பீச் ட்ரெய்ல் என்ற மூன்றரை மைல் நீள நடைபாதையில் செல்லும் போது செவ்வாய் கிரக மேற்பரப்பைக் காணலாம். ஆக அயல்கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை இது எற்படுத்தும்.
இங்கு நீந்தலாமா? இந்தக் கேள்விக்குச் சரியான விடை – நீந்தலாம்!
ஆனால் காரமும் உப்பும் நிறைந்த நீரில் குளித்தால் பிறகு வெளியே வந்து மிக நன்றாக சுத்த நீரில் குளிக்க வேண்டும்.
பயணிகள் இங்கு விரும்பும் இன்னொரு செய்கை – கயாகிங் செய்வது?
கயாக் என்றால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு விசேஷ படகு ஆகும். இதை பழங்காலத்தில் மீன் பிடிக்க உபயோகித்ததால் இதை ஹண்டர்ஸ் போட் – வேட்டைப் படகு என்று சொல்வார்கள். இதில் பல விசேஷ வடிவமைப்புகள் உண்டு. இதில் ஏறி நீர் மேல் செல்லலாம்!
ஆக உலகின் அதி விநோதமான மோனோ லேக் பலவித உன்னத அனுபவங்களுக்கு இடம் கொடுக்கும் ஏரியாகும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் இரண்டு சுவையான விஷயங்கள் வருகின்றன : ஒன்று அவர் ஜோதிடத்தை, அதாவது குறி சொல்லுதல்/ வேலன் வெறியாடலை விவரமாக வருணித்துக் கிண்டல் செய்கிறார்.
இரண்டாவது , விபூதி பற்றிச் சொல்கிறார் ; இந்த விபூதி விஷயத்தை வைஷ்ணவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை பாசுரத்தைப் படிப்பதற்கு முன்பாக எனது வாதத்தை விளங்கிக் கொள்வதற்கு இரண்டு மூன்று விஷயங்களைச் சொல்லி விடுகிறேன். .
ஒன்று, அவர் பயன் படுத்தும் தவளப்பொடி என்பது விபூதிதான் ; ஏனெனில் தவள என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வெண்மை, வெள்ளை என்று பொருள் ; சரசுவதி பற்றி எல்லாத் துதிகளிலும் அவளை வருணிக்கும்போது இது வருகிறது ; அருணகிரிநாதர் தமிழில் கூட தவள சரசுவதி என்று பாடுகிறார்
இரண்டாவது இந்த விஷயம் மாணிக்க வாசகர் பாடிய திருக்கோவையாரிலும் வருகிறது
மூன்றாவது அருணகிரி பாடிய இன்னும் ஒரு பாடலில் வெண்பொடி என்று விபூதியைப் புகழ்கிறார்.
நாலாவதாக , நம்மாழ்வார் பாடிய இன்னுமொரு பாசுரத்தில் நீறு என்ற சொல்லை சாம்பலுக்குப் பயன்படுத்துகிறார் . நாமும் நீறு பூத்த நெருப்பு , திருநீறு என்ற சொற்களில் சாம்பலை/ விபூதியைக் குறிக்கிறோம்.
ஐந்தாவதாக, யாரவது வேலன் போல வெறியாடினாலோ, சாமி ஆடினாலோ பூஜாரியானவர் விபூதி அடித்து சாமியை மலை ஏற்றுவார் என்றும் படிக்கிறோம் இதைத்தான் நம்மாழ்வார் சொல்கிறார் என்பது என்னுடைய கருத்து ; இதோ நம்மாழ்வார் பாசுரம்
3182 இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால் தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)
3182. Her friends say, “To cure her sickness don’t dance with the Anangu. She has large eyes like kuvalai flowers and a red mouth like a kovvai fruit and her body is pale. Say the divine name of him who killed the angry rutting elephant kuvalayabeedam. Put on her forehead the divine red powder of the god and her sickness will go away.”
ஆங்கில மொழி பெயர்ப்பில் சிவப்புப் பொடி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளார் . வைஷ்ணவர்கள் வெளியிட்ட தமிழ்ப் பொழிப்புரைகளில் பக்கதர்களின் பாததுளிகள் (தூள்) என்று உரை செய்கின்றனர் .
இந்த இடத்தில் சிவப்பும் இல்லை! பக்தர்களின் பாதமும் இல்லை!! .
****
சரியான மொழிபெயர்ப்புக்கு நாம் திருக்கோவையாரைப் பார்க்க வேண்டும்.
தவளத்த நீறணியும் தடந்தோள்
அண்ணல் – திருக்கோவையார்
23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே
இதன் பொருள்: சுரும்பு ஆர் குழல் தூ மொழி- சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்;
தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் – வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல் ;
தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு பாகத்துளளாகிய
அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன
கவளத்தயானை – அவன் அன்றுரித்த யானையையொக்குங் கவளத் தையுடைய யானையை: கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும்
இதில் தவளத்த நீறு – விபூதி அணிந்த என்ற பொருளில் வந்திருக்கிறது . ஆகையால் நம்மாழ்வாரும் விபூதியைப் பூசி சாமியை மலை ஏற்றுங்கள் என்கிறார் என்பதே சரியான பொருள்; இதை மறுப்பாரும் உளரோ ?
இரண்டாவது பகுதியில் அணங்கு ஆடுதல் பற்றி நம்மாழ்வாவர் தரும் அதிசய விஷயங்களைக் காண்போம்
****
சாமி ஆடுதல்: எனது பழைய கட்டுரை
டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்
Posted on April 15, 2012
To be continued………………………
Tags–அணங்கு ஆடுதல், வேலன் வெறியாடல், குறி சொல்லுதல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சாருவாகம் என்பது நாஸ்திக கருத்துக்களை எடுத்துரைக்கும் ஒரு பிரிவாகும்; லோகாயதம் என்ற சொல்லே பழைய நூல்களில் உள்ளது உண்டாக்கியவர் சார்வாக முனிவர் அல்லது பிருஹஸ்பதி என்று சொல்வார்கள் ஆனால் இது பிற்காலக் கருத்து; சார்வாகம் என்பதற்கு கேட்பதற்கு சுவையான பேச்சு என்ற பொருளும் உண்டு. இந்துக்களும் பௌத்த மதத்தினரும் இந்தப் பிரிவினரைத் தாக்கி பரப்புரை செய்தனர் . கடவுள் இல்லை; மறுபிறப்பு, பாவ , புண்ணியம் நரகம் ,சொர்க்கம் என்பதெல்லாம் கிடையாது என்பன இவர்கள் கருத்து . பிற்காலத்தில் எழுந்த இந்தப்பிரிவினருக்கு கொஞ்சமும் ஆதரவு கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கும் பணம் படைத்த வர்களுக்கும் சந்தேகப்பேர்வழிகளுக்கும் ஆரம்பத்தில் கடவுள் எதிர்ப்பு எண்ணம் இருக்கும். ராமாயணத்திலும் ஜாபாலி மகரிஷி ராமபிரானுக்கு இதைப் போதிக்கிறார் அத்தகையோருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. உலகில் கடவுள் எதிர்ப்பு இல்லாத மதம் இல்லை
***
CHARVAKA (chaarvaaka)
It is an atheistic philosophy, but later than Jainism and Buddhism. Questioning or challenging or doubting the existence of God is in all the religions. Then the saints threaten such people with punishments in hell. A layman will have such questions when he sees good people suffering and bad people prospering. Others have this materialistic approach when they are young and affluent. Lokaayata (materialistic) thought or concept is the old name for it.
In Ramayana, Jabali rishi speaks on this line. But the fact of the matter is at no point in the history of mankind we have a big number of atheists. Atheists don’t believe in Sin, Hell Heaven, God or rebirth. It has no impact in the history of Hindu religion. If we get 99 percent literature in support of religion, atheists may get one percent literature or followers. As a philosophy it is attributed to Charvaka or Brihaspati. Everything said by the so-called scholars is uncertain or without proof. Charvaka means Juicy Talk.
***
சிதம்பரம்–சிற்றம்பலம்
தமிழ்நாட்டில் நடராஜர் வடிவம் உள்ள கோவில் சிதம்பரம். சைவர்களுக்கு கோவில் என்றாலே அது சிதம்பரத்தைக் குறிக்கும்;வைணவர்களுக்கு கோவில் என்றாலே அது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். சிதம்பரத்திலுள்ள நூற்றியெட்டு நாட்டிய கரணங்கள் மிகவும் பிரபலமானவை . இங்குள்ள 1000 கால் மண்டபமும் ரத வடிவிலான நாட்டிய சபை மண்டபமும் குறிப்பிடத்தக்கவை. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச தத்துவத்தை சிதம்பரம் குறிக்கிறது . சிதம்பரம் நடராஜர் கோவில் தில்லைவாழ் அந்தணர்கள் என்னும் தீட்சிதர்கள் கையில் இருக்கிறது அவர்கள் திறம்படக் கோவில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். அந்தக் காலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சம மரியாதை கொடுக்கப்பட்டதால் கோயிலுக்குள்ளேயே கோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியும் உளது இருவரையும் ஒருங்கே வணங்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு உண்டு
CHIDAMBARAM- CITRAMPALAM
Chidambaram in tamil nadu is the most sacred temple for saivites in the state. The word temple means only Chidambaram for them . it is the site of famous Nataraja temple dedicated to lord siva . dancer’s patron deity is Nataraja, that is siva in dancing form. From the choza kings’ period we get beautiful bronzes of Nataraja . the temple has 108 different postures of lord siva as the cosmic dancer. The temple has a large hall with thousand pillars and the Nrtta Sabha, a performing arts hall constructed in the form of a giant chariot. In the olden days there was no difference between Lord Vishnu and Lord Shiva. Lord Govindaraja Perumal, a form of Vishnu has also a shrine in the temple. Dikshitas maintain this temple with good administration. Also called CITRAMPALAM .
***
வலம் வருதல்
இந்துக்கள், கோவிலையும் எந்தப் புனிதப் பொருட்களையும் வலமாகச் சுற்றி வந்து வணங்குவார்கள் ஒரு கடவுள் சிலை அல்லது பூஜை நடக்கும் இடம் அல்லது சாது சந்யாசிகள் இருந்தால் அவர்களை பிரதக்ஷிணமாக வந்து வணங்குவது மரபு. இதை மூன்று முறை செய்வது சம்பிரதாயம். அசுப காரியங்களில் எதிர்ப்புறமாக, அதாவது இடமாகச் சுற்றுவார்கள்
CIRCUMAMBULATION
The tradition of walking around a temple or anything sacred in clockwise direction what is known as PRADAKSHINA. Hindus go round in a clockwise direction if there is a statue or an ascetic or a yaga kunda. In case of anything to do with funeral rites they go in the opposite direction that is anti-clockwise.
****
சதுரங்கம்
சதுரங்கம் (Chess) என்ற விளையாட்டு இந்தியாவில் தோன்றியது; ரத, கஜ, துரக, பதாதிகள் என்பது நாற் படை ஆகும். தேர் ப்படை ,கஜம் என்பது யானைப் படை, துரகம் என்பது குதிரைப் படை ,பதாதி என்பது காலாட் படை ; இந்த நான்கு படைகளும் சேர்ந்தது சதுரங்கம்.; இதை காய்களாக வைத்து விளையாடும் ஆட்டமே சதுரங்கம் ஆங்கிலத்தில் செஸ் என்பார்கள்
CHATURANGA- CHESS GAME
Chatur means Four; anga means part ; Four fold Army
1 a complete army consisting of elephants, chariots, cavalry and infantry; चतुरङ्गसमायुक्तं मया सह च तं नय (caturaṅgasamāyuktaṃ mayā saha ca taṃ naya) Rām.1.2. 1; एको हि खञ्जनवरो नलिनीदलस्थो दृष्टः करोति चतुरङ्गबलाधिपत्यम् (eko hi khañjanavaro nalinīdalastho dṛṣṭaḥ karoti caturaṅgabalādhipatyam) Ś. Til.4; चतुरङ्गबलो राजा जगतीं वशमानयेत् । अहं पञ्चाङ्गबलवाना- काशं वशमानये (caturaṅgabalo rājā jagatīṃ vaśamānayet | ahaṃ pañcāṅgabalavānā- kāśaṃ vaśamānaye) || Subhāṣ.
2) a sort of chess. The board game was invented by the Hindus.
***
சந்தனக்காப்பு
இறைவனுக்கும் இறைவிக்கும் சந்தனத்தைப் பூசி சந்தன உருவமாகக் காட்சி தரும் அலங்காரம்
Chandanakkaappu
Chandanam is sandal. Anointing an idol with sandal paste is one of the alankaarams/ decorating gods’ idols and statues. It is done after aishekam, ritual bathing of an idol.
****
சந்திரகாசம்
ராவணனுக்கு சிவபெருமான் கொடுத்த வாளின் பெயர் சந்திர காசம் அல்லது சந்திரஹாசம் .சாம கானம் பாடியதற்காக சிவபெருமான் இதைக் கொடுத்தார்.
Chandrahaasam
The divine sword granted by lord siva to demon Ravana, after he pleased him by singing saama gaanam.
***
சந்திரசேகரன் சந்திர சூடன்
சந்திர சேகர் , சந்திர சூ டன் என்பன சிவா பெருமானின் பெயர்; தலையில் பிரேக் சந்திரனை இணைந்திருப்பதால் பிறை சூடி என்பார்கள் ; சம்ஸ்கிருதத்தில் சந்திர சேகரன் என்பார்கள்
***
சந்திரன்
நிலவுக்கு இன்னும் ஒரு பெயர் -சோமன்
தமிழ்நாட்டுக் கோவில்களில் பிரகாரத்துக்கு வெளியே சந்திரனும் சூரியனும் சிலைகளாக உள்ளார்கள் ; திசைக்கான தேவர்களில் வடகிழக்கு திசைக்கு அதிபதியாகவும் சந்திரன் இருக்கிறார். தக்ஷனுடைய 27 புதல்விகளையும் மணந்ததாக புராணங்கள் சொல்லும். அவர்களில் ரோகிணி நட்சத்திரத்திடம் சந்திரன் அதிகப்பிரியம் காட்டியதாகவும் அதில் காணப்படுகிறது; தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தன்று கல்யாணம் செய்துகொண்டதை அக நானுறு காட்டுகிறது, இது பிருஹத் சம்ஹிதா நூலிலும் உளது. தமிழ்ப் பெண்கள் பிறையை வழிபட்ட செய்தியும் சங்க இலக்கியத்தில் உள்ளது பிறையை தேவியரும் சிவனும் முடியில் அல்லது நெற்றியில் அணிந்தனர்
Chandran, Chandrachudan
Moon is Chandra in Sanskrit, used in all Indian languages one of the nine celestial objects called navagrahas worshipped by the hindus. Gods and goddesses has crescent moon on their fore heads so lord siva is called chandrasuudan, Chandrasekaran and goddess is called Chandra kalaa. A special shrine is constructed for sun and moon outside the main shrine called garbhagriha in Saivite temples.
According to puranas, he married 27 daughters of Daksha. Those 27 are worshipped as 27 stars. He favoured Rohini star and so Hindus celebrated weddings on Rohini star day according to Sangam Tamil literature and Brhat Samhita of Varahamihira. Ancient Tamils worshipped crescent moon according to Sangam Tamil literature
***
செண்பகப்பூ
மஞ்சள் நிறத்திலுள்ள இந்தப்பூ இறைவனுக்கு உகந்ததால் சாத்துகிறார்கள் இந்த மலர் சிவபெருமானுக்கும் முருகனுக்கும் மிகவும் பிரியமானது. இறைவிக்குப் படைக்கும் அஷ்ட புஷ்பங்களில் இதுவும் ஒன்று
Chenpakam – a very fragrant large yellow flower tree.
Michelia champaka is the botanical name it is one of the ashta pushpa- eight sacred flowers offered to gods and goddess.
****
சக்ரவாகப் புள்
சம்ஸ்கிருதத்திலும் தமிழ் மொழியும் புலவர்கள் இந்த பறவையை அடிக்கடி உவ மையாகப் பயன்படுத்துகிறார்கள்;இணை பிரியாத கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறுவார்கள் . இரண்டும் பிரிந்து இருந்தால் , அவை மற்ற ஒன்றினைக் கூப்பிடும். இதை இறைவனை வழிபாடும் பக்தர்களுக்கும் உவமையாக்குவார்கள். ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் இந்தப் பறவையை உவமையாகக் கையாண்டுள்ளார்
CHAKRAVAAKAM
It is a fabled bird called the ruddy goose. These birds are reputed for their conjugal fidelity. If the couples are separated, they would suffer extremely Hindu poets use this bird as a simile to illustrate the suffering of a devotee who is separated from God
The cakravāka bird and the sun; one of similes (or pairs) given in Śivānandalaharī 59 of Adi Shankara. The cakravāka couples, it is believed, are separated and mourn during night; hence, their longing for the sun.
To be continued…………….
Tags- Charvaka,atheist, சக்ரவாகப் புள், chess, வலம்வருதல், சிதம்பரம்— சிற்றம்பலம்19HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி — Part 19
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஐந்து ஐந்தாகக் கூறப்படும் சுவையான நல்ல விஷயங்கள் இதோ!
ச. நாகராஜன்
நம்முடைய சாஸ்திரங்களிலிருந்து மிக முக்கியமான விஷயங்களைச் சுவைபடத் தொகுத்துத் தருபவை சம்ஸ்கிருத சுபாஷிதங்கள். இவை பல்லாயிரக் கணக்கில் உள்ளன.
அவற்றில் ஐந்து ஐந்தாகக் கூறப்படும் சில விஷயங்களின் தொகுப்பு இது:
ஒரு காரியத்தைச் செய்யும் போது கவனிக்க வேண்டிய பஞ்சாங்க அம்சங்கள்
1) திதி 2) வாரம் (கிழமை) 3) நட்சத்திரம் 4) யோகம் 5) கரணம்
இந்த ஐந்து பஞ்சாங்க அம்சங்களையும் ஒரு காரியத்தைச் செய்யும்போது கவனிக்க வேண்டும்,
ஒரு காரியத்தைச் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டியவர்கள் ஐவர்.
ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர், நம்முடைய நலனுக்கு உதவுபவர்கள் யார், எதிராகச் செயல்படக் கூடியவர் யார் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
1) மித்ரர்கள் (நண்பர்கள்) 2) எதிரிகள் 3) மத்யஸ்தமாக எதிரியும் அல்ல, நண்பனும் அல்ல என்று நடுநிலையுடன் இருப்பவர்கள் 4) நம்மை நம்பி இருப்பவர்கள் 5) ஆதரவாளர்கள்.
இந்த ஐவரையும் பற்றி அறிந்து கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்.
தேவதைகளை ஆராதிப்பது எதற்காக?
தேவதைகளை ஆராதிப்பது ஐந்து விஷயங்களைப் பெறுவதற்காக. அவையாவன: 1) புகழ் 2) ஸ்வர்க்கம் அடைதல் 3) ஆயுள் 4) செல்வம் அடைதல் 5) வம்ச விருத்தி
கீழ்க்கண்ட ஐந்து இடங்களில் ஒரு போதும் வசிக்கக் கூடாது. அந்த இடங்கள் யாவை?
1) பணம் சம்பாதிக்க முடியாத இடத்தில் வசிக்கக் கூடாது.
2) பயமாக இருக்கும் இடத்தில் வசிக்கக் கூடாது
3) அவமானப்படும் இடத்தில் இருக்கக் கூடாது.
4) மிகுந்த இரக்கப்பட்டு நம்மை நடத்தும் இடத்தில் இருக்கக்கூடாது.
5) தர்மமாக இரந்து வாழும் இடத்தில் வசிக்கக் கூடாது.
உழைத்து கண்ணியமாக, நல்ல தொழில் நடக்கும் இடத்தில் நல்லவிதமாக நடத்தப்படும் பயமில்லாத இடத்தில், வாழ வேண்டும். இரக்கத்துடன் பரிதாபமாக நடத்தப்படும், இடத்திலும் பிச்சை போட்டு வாழும் இடத்திலும் வசிக்கவே கூடாது.
ஒரு சிசுவானது கர்ப்பத்தில் இருக்கும்போதே ஐந்து விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அவை யாவை?
1) ஆயுள் 2) கர்மா (தொழில்) 3) அறிவு 4)செல்வம் 5) முடிவு
இதிஹாஸ, புராணங்களில் ஞானிகளாகச் சொல்லப்படுபவர் ஐவர். அவர்கள் யார்?
1) கிருஷ்ணர் 2) சுகர் 3) ஜனக மன்னன் 4) ராகவர் 5) வசிஷ்டர்
தந்தையாக கருதப்பட வேண்டியவர்கள் ஐவர். அவர்கள் யார்?
1) ஜனிதா – பெற்ற தந்தை 2) உபநீதா – எவர் ஆரம்பித்து வைக்கிறாரோ அவர் 3) வித்யாதாதா – கல்வி புகட்டும் ஆசிரியர் 4) அன்னதாதா – உணவளிப்பவர் 5) பயத்ராதா – பயத்திலிருந்து காப்பவர்.
இவர்கள் ஒருவனின் தந்தை போல கருதப்பட வேண்டியவர்கள் ஆவர்.
வணங்கப்பட வேண்டியவர்கள் ஐவர். அவர்கள் யார்?
1) கடவுள் 2) முன்னோர் 3) (நல்ல) மனிதர்கள் 4) சந்யாசிகள் 5) விருந்தினர்.
திருப்திப்படுத்த முடியாத ஐவர் யாவர்
திருப்திப் படுத்த முடியாத ஐவர் இவர்கள் தாம்:
1) வீட்டு மாப்பிள்ளை 2) வயிறு 3) மனைவி 4) அக்னி 5) கடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபெருமானின் இரண்டு வடிவங்கள்: அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன்
Ardhanarishwara:
Long before feminist movements arose in the West to advocate for equality, Hindu philosophy had already acknowledged that man and woman share a deeply interdependent relationship, each fulfilling a vital role. Just as a balance scale is steady only when both sides are equal in weight, life attains balance when both genders enjoy equal respect and rights.
This truth was embodied by none other than Mahadev Himself when He manifested as Ardhanarishwara — one half Shiva and the other Devi Parvati (or Adi Shakti). Yet, this form represents far more than external gender equality. It teaches the importance of harmonizing the masculine and feminine energies within ourselves — not in the physical sense, but as spiritual and psychological principles that dwell in every being.
***
Harihar in Karnataka , Sankaranarayanan in Tamil Nadu
The god Harihareshwara is a combination of the gods Shiva and Vishnu. There is a story behind the avatar of this god. In ancient days this place was known as “Guharanya”, a dense jungle and habitat of a demon Guhasura. He had a gift that no human or Rakshasa or god can kill him. And he started harassing people around this place. Then Vishnu and Shiva came together in a new avatara called Hari – Hara (Harihara) – and killed demon Guhasura
Harihara is situated on the banks of the Tungabhadra River, 275 kilometres North of Bengaluru. Harihar and Davangere (14 km away) are referred as “twin cities”.
***
Tiruupaarkatal near Kanchipuram
Similar stories are behind two more famous temples.
Full name of Sankarankoil in Tirunelveli region is Sankara Narayanan Koil, where Shiva appeared as Sankara+Narayanan at the request of his wife Parvati.
In Tirupparkatal, we have slightly a different story. An ardent Vishnu devotee had a vow of having his food only after visiting a Vishnu temple every day. When he came to Tiruupaarkatal, he could not see any Vishnu temple. When he was starving and praying, an old man came and told that there was a Vishnu temple. When he took him into a Shiva temple, despite his protest, Lord Shiva appeared as Sankara and Narayana .
In many Tevara and Divya Prabantha poems we see verses in praise of this Hari Hara form. Several centuries ago, there was a conflict between Saivites and Vaishnavites and God himself settled that conflict by appearing in this combined form.
***
சிவபெருமானுடைய வடிவங்கள்
சிவபுராணத்தில் சிவனுக்கு 64 வடிவங்கள் கூறப்படுகின்றன அவற்றின் உருவமற்ற வழிபாட்டை குறிக்கும் சிவலிங்கத்தை காண்கிறோம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தையும் காண்கிறோம் மே லை உலகத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் கேட்டு இயக்கம் நடத்துவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களும் பெண்களும் சரி என்ற கருத்தினை விளக்கும் உருவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும் இதில் சிவனையும் சக்தியையும் பாதி பாதியாக காண்கின்றோம் ஆண்களோடு பெண்களும் சரி நிக்ர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே இன்று பாரதியார் பாடினார். அந்த பாட்டிற்கு காரணமே இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான்! சிவன் இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவன் இல்லை. இரண்டு சக்தி களும் கூடினால் தான் உலகம் நடைபெறும் என்ற பெரிய கருத்தினை இந்த வடிவம் காட்டுகிறது.
இதையே இன்னொரு விதமாகச் சொல்வது சங்கர நாராயணன் வடிவம் ஆகும்.
***
சங்கர நாராயணன் , ஹரிஹரன்
அர்த்த நாரீஸ்வரனில் பாதி சக்தி; அதே போல சங்கர நாராயணன் என்றா சிவனின் வடிவத்தில் பாதி நாராயணன் ; இதன் தத்துவம் என்னெவென்றால் சிவா சக்தி வடிவமே சங்கர நாராயணன்
நாராயணன்= சக்தி
சிவன் என்பது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல்
சக்தி என்பது செயல்படும்/ பயன்படும் ஆற்றல்.
****
Tirupparkadal story as told by Sri Kanchi Paramacharya (1894-1994)
சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:
திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.
அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.
“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.
“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.
கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்
வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.
கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!
திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.
****
சங்கரன் கோவில் ,கர்நாடகத்தில் உள்ளஹரிஹர் (ஹரிஹரன்) நகராக கோவில்களிலும் கதைகள் உண்டு.
சங்கரன்கோவிலில் உமையம்மையின் நீண்ட தவத்துக்கு பின்னர் சிவபெருமானே ஹரி ஹரன் என்ற உருவத்தில் தோன்றினார் என்பது ஸ்தல புராணம்
ஹரிஹர் என்னுமிடத்தில் ஒரு அசுரன் மனிதனாலும் தெய்வத்தாலும் அசுரனாலும் சாகாமல் இருக்க வரம் பெற்றான் அவனது வரத்துக்கு அப்பாற்பட்டதே அரனும் அரியும் ஒன்றுபட்ட வடிவம். இந்த ஹரிஹர உருவத்தினால் குஹ்யாசுரன் என்ற அசு சுரன் கொல்லப்பட்டான்
–subham—
Tags– சங்கரன் கோவில், ஹரிஹர் , அர்த்த நாரீஸ்வரன், அரன், அரி, திருப்பாற்கடல் Harihar, Sankara Narayanan , Tirupparkatal, Ardhanareesvar, Combined form Siva Sakti, Hinduism through 500 Pictures in Tamil and English-27 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 27
The waves from the sea broke the boats and so they did not go for fishing. Luckily one shark came to the shore, and they caught it and shared it with the community of fishermen.
Kottu meen is the word used for the shark.
***
203
The beauty of the woman is compared to the port of Thondi. This port is mentioned by the Greeks as well.
The message of the poet conveyed is ‘the man should marry this woman quickly because there is much gossip in the town’.
The name of the poet Am Muuvan is Lord Shiva’s name according to my research. Muuvan- ‘Three in One’ is used for Shiva who has Three Eyes; another meaning is one who never becomes old/aged. It is in Tevaram verses.
***
அகநானுறு பாடல் 11 .
பாடல்:11
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, 5
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம் 10
அவரும் பெறுகுவர் மன்னே! ………………
204
Kartikai Deepam
Akananuru verse 11 sung by Avvaiyar (avvaiyaar) gives us important detail about the famous Kartikai Deepa/Lamp festival. If one visits Tamil Nadu on Kartikai Full Moon day (Purnima) one can see millions of Mud lamps are lighted at the sun set in every nook and corner of the town. This is practised even today. North Indians practise such lighting during Deepavali, but Tamils light the lamps inside and outside the houses on Kartikai full moon day/Purnima day.
Poetess Avvaiyaar gives this as a simile which means it is widely practised. She says the flowers of the silk cotton trees in a row looked like Kartikai lamps that were lighted by the women shouting happily.
205
Another simile used by the poetess is also interesting. The sand dunes in the waterless river looked like an open brazier and the branches of the trees hugging them is like humans. My man will also get it, says a house woman, who is suffering from temporary separation. She is addressing her friend.
Kartikai festival is mentioned in Kalittokai also.
***
பாடல்:12 (யாயேகண்ணினும்)
யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; 5
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
206
Keladi Temple, Karnataka
Mythical Bharanda bird- one body two heads
Akananuru verse 12 by poet Kapilar is the most interesting one because it mentioned the Ganda Bharanda pakshi – the bird with two heads but one body. This bird is still used in the stamps, currencies, coins, flags and emblems. The oldest image of the bird is in Sumeria; later Vijayanagara kings used this bird as an royal emblem; even now we see it in Karnataka royal emblems.
Companion /friend of the lady love used this bird as a simile. She said I and she are like a bird with two heads with a single body. She told the lover, ‘If you don’t get married quickly she will die. That means when she dies, I will also die’.
***
207
The poem is full of beautiful natural sceneries: Venkai tree flowers on the ground looked like a Venkai (tiger).
Mother of the girl protects her like her eye. Father of the girl says, ‘my darling don’t walk on the ground; your feet will become red’.
***
208
Another simile is about the parrots. Guardian girls of the millet fields are singing to drive away the foraging parrots. But the parrots mistake it for their companions’ voice and rush to the fields to eat the grains. Parrots’ sweet voice= girls’ sweet songs!
***
209
MY OLD ARTICLE POSTED HERE IN YEAR 2011
Double Headed Eagle: Sumerian-Indian Connection
By S Swaminathan, Posted on 18th December 2011.
There are striking similarities between the Indian and Sumerian civilizations. One of them is the use of the Double Headed Eagle as a royal symbol. From 3800 BC until today this mythical bird is used as a symbol of royalty. Russia and other Eastern European countries use it on their currency notes and national flags. Tamil Nadu, Karnataka and Andhra Pradesh praise the mighty strength of this bird in coins, sculptures and literature.
The Panchatantra used the story of double headed bird, also known as Ganda Berunda bird, to emphasize unity.
Ancient Cankam (Sangam) Tamil literature used this bird in their love poetry. Devotional poets of India like Ekanath also used this bird as a simile.
Sumerians considered this bird the symbol of God Ninurta of Lagash. They thought it had divine power. We can trace the history of this mythical bird from the Sumerian days. A cylindrical seal shows the double headed eagle from 3800 BC. Later, the Hittite empire which had its capital in Bogazkoy (in Modern Turkey) used it in several monuments. Even today we can see the monuments displaying this symbol in huge sculptures in Hattusa and Yazilikaya. Bogazkoy was the place where a tablet with the names of the Vedic Gods Indra, Mitra, Nasatya and Varuna was discovered. The tablet was dated 1380 BC. This establishes the Indian connection of the region.
Even the Holy Roman Empire and the Byzantine Empire used this symbol. This Hindu symbol was used by the Christians.
In Sanskrit literature – the Panchatantra (book of fables) has a story about Ganda Berunda bird. It says that the bird had two heads but one stomach. In the story, one head wanted to drink Amrita (ambrosia) but the other head went for poison. Ultimately, the head that drank the poison made the bird die. The moral of the story is that disunity is dangerous.
Tamil literature, dated two thousand years old, mentions it in three places. In Akananuru, poet Kapilar (verse 12) compares this double-headed, single-bellied bird to two people in love. Though there were two physical bodies, they have one life. Nallanthuvanar also used this simile in Paripatal (Verse 8-72). But another Tamil poet Maruthan Ilanagan in Kalithokai (verse 89) used this bird in the form of two fighting heads, like the Panchatantra story. It shows that Indians from one end of the land to the other knew this bird very well. Thakadur Yaththirai is a lost Tamil book, but excerpts are available as quotes in other works. These quotes compared the fight between two kings Athiyaman and Peruncheral Irumporai to the double headed bird fighting with itself. (Ref. Purath thirattu verse 785).
The Bird that lifts elephants
The most imaginative story of the bird comes from the Vijayanagar Empire. Gold Coins issued by Achyuta Raya (1530-1542) show the Ganda Berunda bird lifting an elephant in each of its beaks. Its power is legendary. Other coins show each head holding a snake. Before Achyuta Raya Devaraya II (1422-1446) issued coins with the bird’s name in Deva Nagari script.
Jain Stupa at Sirkap, Taxila is the most ancient Ganda Berunda monument in India. We can see this mythical bird sculptures in Srisailam, Keladi, Koramangala, Belur and the medieval art of Sri Lanka.
Recently even dances were choreographed showing the magical strength of the bird. Dasara Flower Show in Mysore had a 10-foot flower decoration of the bird to commemorate the 500th anniversary of the bird symbol in Karnataka.
The Wodeyar family of Mysore use this as their royal emblem. Later the Government of Karnataka used it as the emblem of the state. There are stories connecting this bird with the Narasimha (Man-Lion) avatara of Vishnu.
Eastern European country Albania has this bird in its national flag. Several countries issued stamps and coins as well. Russian Roubles and Kopeks had this bird.
In the Eastern Province Erzurum of Turkey, a huge double headed eagle is being erected in 2011 which is visible from space. Turkey gives so much importance to this legendary bird.
An ancient monument of Turkey shows this bird lifting two hares on its beaks. But the imagination of Indians made it a dinosaur lifting two elephants on its beaks!
Double Headed Bird in Hinduism
Here is the full detail of the twin headed bird:
Post No. 13,071
Date uploaded in London – – 7 March 2024
Double headed bird is called Bharanda, Gaṇḍabheruṇḍa, Bhāraṇḍa (भारण्ड) in Hinduism. It is a Sanskrit word. From Sumerian Civilization to Vijayanagara Samrajya of 14th century we see this bird in art and architecture. The strange thing about this bird is still the East European countries and Russia use this bird in their national emblems or Flags or coins.
The Gaṇḍabheruṇḍa (गण्डभेरुण्ड), a double-headed eagle, has been the State symbol of many royal dynasties especially in South India. According to the archaeologists and historians, the bird signifies peace, progress and power. The Purāṇas indicate that Viṣṇu as Gaṇḍabheruṇḍa subdued Śiva as Śarabha after Narasiṃha was conquered by Śarabha.
Hindus used it in many places. A rishi was named Bharanda in Yoga Vasistha. It is not unusual to see a bird name for a seer. Many of our Rishis/ Seers have bird names such as Kausika, Bharadwaja, Chandilya etc.
Bharaṇḍa (भरण्ड) is another name for Bheruṇḍa or Garuḍa, as mentioned in the foreword to volume 7 of the translation of the Kathāsaritsāgara.
Probably Panchatantra which is 2000 year old is the earliest Sanskrit book that used this bird .
Bhāraṇḍa (भारण्ड) refers to “fabulous three-legged birds”, as mentioned in chapter 1.5 [ādīśvara-caritra] of Hemacandra’s 11th century Triṣaṣṭiśalākāpuruṣacaritra: an ancient Sanskrit epic poem narrating the history and legends of sixty-three illustrious persons in Jainism
The two headed eagle is holding two elephants in his claws and beaks, revealing his enormous powers. In a coin found in Madurai, he is holding a snake in his beak.
All 2-dimensional depictions show a symmetrical image in which he is a double-headed eagle while other images show his long tail feathers like a peafowl. In the Chennakeshava Temple, Beluru, Karnataka, Gandaberunda as a two headed eagle is carved in a scene of chain of destruction, which results in the destruction of the universe.
Gandaberunda is a form of Narasimha, the fourth incarnation of Vishnu in the Dashavatara of Vishnu and he disemboweled and killed both Sharabha and Hiranyakashipu at the same time. He is present in many Hindu scriptures.
—subham—-
Tags- Double headed bird, Ganda Bheranda bird, Akananuru, Kartikai Deepam, Ancient Tamil Encyclopaedia -Part 34; One Thousand Interesting Facts -Part 34