மாதா, பிதா, குரு, தெய்வத்துக்கு நிகரானவர் யார் – அறப்பளீசுர சதகம் புது விளக்கம் (Post No.11,566)

UNION MINISTER SMRITI IRANI WITH HER FAMILY

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,566

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

28. இவர் இன்ன முறையர்: அறப்பளீசுர சதகம்

தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து

     தான்முடிப் போன்த மையன்ஆம்;

  தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்

     தாய்தந்தை யென்னல் ஆகும்;

ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ

     துதவுவோன் இட்ட தெய்வம்;

  உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்

     உரைப்பவன் குருஎன் னல்ஆம்;

எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே

     எண்ணிவரு வோன்பந் துஆம்;

  இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்

     எவன் எனினும் அவனே சுதன்

அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும் அண்ணலே

– அழகிய நீரையும் (கங்கையையும்) பாம்பையும் எப்போதும் அணிந்துள்ள

பெரியோனே!, அருமை …… தேவனே!,

 தன்னால் முடிக்க ஒண்ணாத

காரியம் வந்து முடிப்போன் தான் தமையன் ஆம் – தன்னாலே முற்றுவிக்க இயலாத அலுவலை வந்து முற்றுவிக்கும் ஒருவன் தனக்கு முன்பிறந்தோன் ஆவான்,

தன் தலைக்கு இடர் வந்தபோது மீட்டு உதவுவோன் தாய்

தந்தை என்னல் ஆகும் – தனக்குத் தலைபோகத்தக்க துன்பம்

உண்டானபோது அதிலிருந்து மீட்போன் அன்னையும் பிதாவும் ஆவான்,

ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது உதவுவோன் இட்ட

தெய்வம் – பகைவர் செய்கின்ற தீமையால் நலிந்த காலத்தில்

துணையாவோன் வழிபடும் தெய்வம் ஆவான், உத்தி புத்திகள் சொல்லி மேல்வரும் காரியம் உரைப்பவன் குரு என்னலாம் – (தொழில் செய்யும்) முறைமையையும் அறிவுரையையும் ஊட்டி எதிர் காலத்தில் வரும் பயனையும் மொழிபவனை ஆசிரியன் எனலாம், வரும் நன்மை தீமை

எந்நாளும் தனது என்ன எண்ணி வருவோன் பந்து ஆம் – வரக்கூடிய

நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாக நினைத்துத் (தன்னுடன் நட்புப்பூண்டு) வருவோன் உறவினன் ஆவான், இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன் எவன் எனினும் அவனே சுதன் – மனமறிந்து தன்மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.

Xxx

KRISHNA AND BALARAMA

ஒப்பிடுக —

சம்ஸ்க்ருதத்தில் 5 தந்தையர், 5 தாயார் , அதே போல தமிழிலும் பாடல்கள் உள்ளன .

தன்னையளித்தாள் தமையன் மனை குருவின்

பன்னியரசன் பயிறேவி- தன் மனையைப்

பெற்றாளிவரைவர் பேசி லெவருக்கும்

நற்றாய ரென்றே நவில்

பேசுமிடத்து தன்னைப் பெற்றவள், தமையனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, தன்னுடைய மனைவியைப் பெற்றவள் ஆகிய இந்த ஐந்து வகையினரையும் அவரவர்க்கு பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.. இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும்..

Xxx

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

Xxx

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

§  பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதாபயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

Xxxx

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

Xxxx

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்

சிறப்பின் உபதேசம் செய்தோன் – அறப்பெரிய

பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்

எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்..

Xxxx

VALLUVAR AND HIS WIFE

வள்ளுவனோ இந்த உலகத்தில் நல்ல முறையில் வாழும் அனைவரும் வானத்தில் உறையும் கடவுளுக்குச் சமம் என்று பொதுப்படையாகச் சொல்லி விடுகிறான்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்-குறள் 50

அவன் ‘அஹம்  பிரம்மாஸ்மி , ‘தத்வம் அசி’ என்ற உபநிஷத உண்மைகளை ஆதரிப்பவன் அல்லவா?

–subham–

Tags- தந்தை, தாய், தெய்வம், குரு , புது விளக்கம், அம்பலவாணர்

31 அப்ஸரஸ்கள் (Post No.11,565)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,565

Date uploaded in London – 20 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

31 அப்ஸரஸ்கள்

ச.நாகராஜன்

31 அப்ஸரஸ்கள் 

அதர்வண வேதத்தில் (4.37.4) ஒரு முக்கிய செய்தியைப் பார்க்கிறோம்.

ஆலமரத்திலும் அரச மரத்திலும் அப்ஸரஸ்கள் வாசம் செய்கிறார்களாம்!

தைத்திரீய சம்ஹிதை (3.4.8.4) அத்தி மரத்திலும் ஜாவா அத்தி மரத்திலும் அவர்கள் இருப்பதை உணர முடியும் என்கிறது.

ஆகவே இந்த மரங்களை வழிபடுவதன்  மூலம் அப்ஸரஸ்களின் அருளால் சகல சௌபாக்யங்களையும் பெறலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

31 அப்ஸரஸ்களின் பெயர்களை நமது சாஸ்திரங்களில் காண முடிகிறது.

1) அந்தரா

2) க்ஷரவத்யா

3) ப்ரியமுக்யா

4) சுரோத்தமா

5) மிஸ்ரகேஷி

6) சாஷீ

7) பர்ணினி

8) அலம்புஷா

9) மாரீசீ

10) புத்ரிகா

11) வித்யுத்வர்ணா

12) திலோத்தமா

13) அத்ரிகா

14) லக்ஷணா

15) தேவி

16) ரம்பா

17) மனோரமா

18) சுவரா

19) சுவாஹு

20) புர்ணிதா

21) சுப்ரதிஷ்டதா

22) புண்டரீகா

23) சுகந்தா

24) சுதந்தா

25) சுரஸா

26) ஹேமா

27) சாரத்வதி

28) சுவ்ருத்தா

29) கமலா

30) சுபுஜா

31) ஹம்ஸபாதா

xxx

*

ஐந்து விஷயங்களைச் சொல்லாதே!

1) அர்த்த நாசம் – நமது பொருள் இழப்பைச் சொல்லக் கூடாது.

2) மனஸ்தாபம் – மன உளைச்சலை யாருக்கும் சொல்லக் கூடாது.

3) க்ருஹே துஸ்சரிதானி – வீட்டில் நடந்த கெட்ட நடத்தையை யாருக்கும் சொல்லக் கூடாது.

4) வஞ்சனம் – துரோகம்

5) அபமானம் – நமக்கு நேர்ந்த அவமானம்

அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச |

வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாஷயேத் ||

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 153/28

ஒரு புத்திமானானவன் பொருள் இழப்பு, மன உளைச்சல், வீட்டில் நடந்த கெட்ட நடத்தை, துரோகம், அவமானம் ஆகிய ஐந்தையும் யாருக்கும் சொல்ல மாட்டான்.

xxx

*

ஐந்து வகை ஆனந்தம்

ஆனந்தம் ஐந்து வகைப்படும்.

1) விஷயானந்தம் – உலகியல் சம்பந்தமான ஆனந்தம்

2) யோகானந்தம் – யோகத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்

3) அத்வைதானந்தம் – அத்வைதத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்

4) விதேஹானந்தம் – தேகத்திற்கும் அப்பாற்பட்டு பெறக்கூடிய ஆனந்தம்

5) ப்ரஹ்மானந்தம் – மிக உயரியதான ப்ரம்மானந்தம்

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதானந்த ஏவ ச |

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மானந்தஸ்ச பஞ்சமா: ||

xxxx

அதர்மம் வசிக்கும் இடங்கள் நான்கு

1) த்யூதம் – சூதாடும் இடம்

2) பானம் – கள் குடிக்கும் இடம் (டாஸ்மார்க்)

3) ஸ்த்ரியா:  – பெண்கள் ( இங்கு பெண்கள் என்பதை வழி தவறிய பெண்கள் – வேசிகள் என்று கொள்ள வேண்டும்)

4) சூனா – மிருகங்களை வெட்டும் இடம்.

இந்த நான்கு இடங்களும் அதர்மம் குடியிருக்கும் இடங்களாகும்.

அம்ப்யர்திதஸ்ததா தஸ்மை ஸ்தானானி கலயே ததௌ |

த்யூதம் பானம் ஸ்த்ரீயள் சூனா யத்ராதர்மஸ்சதுர்வித: ||

   பாகவத புராணம் 1.17.38

xxx

*

மூன்று வித சக்திகள்

ஒரு மனிதனுக்கு சக்தி மூன்று வகையில் வரும்.

1) ஞான சக்தி : அறிவினால் வரும் சக்தி

2) க்ரியா சக்தி : செயலினால் வரும் சக்தி

3) அர்த்த சக்தி : செல்வத்தினால் வரும் சக்தி

த்ரயாணாம் சக்தயஸ்திதஸ்ர: தத்வவீமி தவானத |

ஞானசக்தி: க்ரியாசக்திரர்தசக்திஸ்ததா பரா ||

  தேவி பாகவதம் III.7.25

***

Beautiful sloka on Silver Plate to Silver Tongued Srinivasa Sastri (Post No.11,564)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,564

Date uploaded in London – 19 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

The Right Honourable Silver tongue V S Srinivasa Sastri (1869-1946) was a famous orator, teacher, legislator, politician, and freedom fighter. He was born just before Mahatma Gandhi in Valangaiman in Tamil Nadu and so Gandhi used to call him ‘My Elder Brother’. Though both had different political viewpoints on several issues, Gandhi always respected him and visited him in hospital just before Sastri’s death.

Srinivasa Sastri’s command over English language was praised by English scholars in Britain, and he was considered one of the five best English speakers in the world.

Sastri delivered thirty lectures on Valmiki Ramayana between April 1944 and November 1944 under the auspices of Samskrit Academy in the Madras Sanskrit college grounds. His weekly lectures attracted a huge crowd every Wednesday. Later his lectures were published in a book which has seen many editions until now. Those who were present in the discourses watched the occasional emotional broke down of the lecturer.

He himself said about it, “When I read the book, I read that book and nothing else; my whole mind is devoted to it. A hard hearted man like me, I read it, and, strange to say there is not a page which does not bring tears into my eyes! Any fine sentiment, any tender feeling,  any affection between brother and brother , any reunions of being that have been separated for a time, aye, any homage to friendship, to gratitude or any of those eternal abiding virtues of human character brings tears into my eyes! I stop; I cannot go on; I have to wait and wipe my eyes and then go on. Why do I do that? A hardened man of the world, Why do I do that? Why has it that effect on me? I suppose it is because deep down in my nature, going to strata which perhaps in my waking life I shall never touch,  there is a spirit of the utmost reverence and affection for those great characters”.

xxx

One would remember two great saints while reading this. Manikkavasagar, the great Saivite saint and Kulasekara Alvar, the great Vaishnavite saint. Manikkavasagar’s Tiruvasagam says that God can be reached by those who cry (for him). It is like a baby crying for its mother.

Kulasekhara was a king in Kerala. He was great Vishnu devotee. Every day he listened to Ramayana from a great orator. When Rama- Kara dushana fighting scene came in the Ramayana, the discourser was graphic in his description saying that Kara came with a big army, the Chera King, who was deeply into Ramayana, stood up and called his minister to order all his army to march forward to support Rama. He also was preparing to put on his army uniform. The wise minister called the speaker and asked him to say that Karan was defeated and got killed by Rama in a second. He also said so and then Kulasekhara ordered his army to come back.

From such stories and more from narrations in Periyapurana and Alvar Charitra (life history) we see great devotees and their emotional reactions.

Xxx

V S S Sastri’s speeches were appreciated by all the devotes of Rama. The organisers made special arrangements to take shorthand notes of his lectures and so we got them in a book form titled Lectures on The Ramayana by The Rt.Hon. V S Srinivasa Sastri (published by Madras Samskrit Academy ).

Silver Plate To Sastri

The concluding function was celebrated in traditional manner on 8-11-1944. The then President of Samskrit Academy Sri P S Sivaswami Aiyar who was in the chair, observed that by delivering these lectures on the national epic of India, the distinguished lecturer had added one more to the manifold and valuable services rendered by him to the country; the Academy and the enthusiastic audience presented the lecturer, in grateful admiration, with a shawl , an address and a silver plate inscribed with the verse:

संस्कार क्रम संपन्नाम् अद्भुताम् अविलम्बिताम् |
उच्चारयति कल्याणीम् वाचम् हृदय हर्षिणीम् || ४-३-३२

32. samskaara krama sampannaanaam = refinement, orderly, he has; adbhutam = remarkable; a vilambitam = un-delaying; uccaarayati kalyaaNiim vaacha = speaks, propitious, words; hrR^idaya harSiNiim = heart-pleasing ones.

“He has orderly refinement in speech that is remarkable and un-delaying, and he speaks propitious words that are heart-pleasing.[4-3-32]

What an appropriate verse !

This is said about Hanuman – Master of Words/language , by Sri Rama in Kishkinda Kanda of Valmiki Ramayana.

xxxx subham xxxx

Tags- Srinivasa sastri, Silver tongued, Silver plate, Ramayana lectures, Hanuman, Sloka

கள் குடித்து, தேள் கொட்டி, பேயும் பிடித்த குரங்கு பற்றி அறப்பளீசுர சதகம் (Post.11,563)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,563

Date uploaded in London – 19 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

    27. நற்பண்புக்கு இடமிலார்

ARAPPALISURA SATAKAM VERSE 27 WITH MY COMMENTARY

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு

     வெங்காஞ் சொறிப்பு தலிலே

  வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்

     மேவுமோ? மேவா துபோல்,

குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,

     கூடவே இளமை உண்டாய்க்,

  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க

     குவலயந் தனில்அ வர்க்கு,

நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்

     நிதானமும் பெரியோர் கள்மேல்

  நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்

     நினைவிலும் வராது கண்டாய்;

அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!

     அண்ணலே ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே –

புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, அண்ணலே –

தலைவனே! அருமை………..தேவனே!,

வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்குபேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்

கொட்டிட – (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்

சன்மார்க்கம் மேவுமோ – (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோமேவாதுபோல் – (அவ்வாறு அக் குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் – சிற்றறிவுடன், அதில் அற்ப சாதியாய் – மேலும் இழிசெயலுடைய குலத்தினராய்கூடவே இளமை உண்டாய்

– அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு –

அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது

தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும்மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும்ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.

Xxxx

குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்? என்று தமிழ்ப் பழமொழி உள்ளது . அதை  அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை அம்பலவாணர் இயற்றியுள்ளார். அதை இளமையும் அதிகாரமும் கீழ்ப்பிறப்பும் உள்ள ஒரு மனிதனுடன் ஒப்பிடுகிறார் . நல்ல ஒப்பீடு. அத்துடன் அரிப்பை  உண்டாக்கும் ஒரு வகைச் செடியையும் சேர்த்துள்ளார் . சாதாரண மாகவே குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் மரத்துக்கு மரம் தாவும் . அத்தோடு

மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்தால் அனர்த்தம்தான் . இதை ஒப்பிட இதோ ஒரு பாடல்,


திரைப்படம்: மனம் ஒரு குரங்கு

இயற்றியவர்: வீ. சீதாராமன்

இசை: டி.பி. ராமச்சந்திரன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்

தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்

பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது

அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது

நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்

கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்

கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்

கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்

காசு வருமென்றால் மானம் விலைபேசும்

நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்

நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்

தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்

பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு 

Xxxx

பொல்லாத மூர்க்கர்கள் பற்றி படிக்காசுத்தம்பிரான் அழகாகப் பாடிவிட்டார் :

பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும்

நல்லார்க்கு உண்டான குணம் வருமோ  நடுச் சாமத்திலே

சல்லாப் புடவை குளிர்  தாங்குமோ? பெரும் சந்தையினில்

செல்லாப் பணம் செல்லுமோ? தில்லைவாழும்  சிதம்பரனே

பொருள்:

தில்லை வாழும் அம்பலவாண !

நள்ளிரவில் மெல்லிய உடையானது  வாடைக்காற்றைத் தடுக்குமா ?

பெரிய சந்தையில் செல்லாக்காசை செல்லும்படி செய்ய முடியுமா?

அறிவில்லாமல் தீய செயல்களைச் செய்யும் மூடருக்கு

எவ்வளவு புத்திமதி சொன்னாலும் நல்ல குணம் வருமா ?

வராது .அவர்கள் கள் குடித்து  , தே ளும் கொட்டி, பேயும் பிடித்து ,

அரிப்பை உண்டாக்கும் செடியில் விழுந்த கு ரங்கினைப் போலவே நடப்பர்.

XXX

 ‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை

பிடிப்பர்.’ என்ற பழமொழியையும் இத்துடன் ஒப்பிடலாம்.

XXXX

தாயுமானவர் அறைகூவல்:– சேரவாரும் ஜெகத்தீரே!


காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!

மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்

Xxxx

READ ALSO MY OLD ARTICLES

மனம் ஒரு குரங்கு – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·Translate this page

17 Feb 2014 — நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது …

You visited this page on 18/12/22.

சங்கடம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

·Translate this page

21 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … குரங்குகள்‘ (மனம் ஒரு குரங்கு) என்ற …

You visited this page on 18/12/22.

மனிதர்காள்! | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·Translate this page

20 Apr 2014 — மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் …

You visited this page on 18/12/22.

—-SUBHAM—-

TAGS—கள், குடித்து, தேள், கொட்டி , பேய் ,குரங்கு,  அறப்பளீசுர சதகம், மனம் ஒரு குரங்கு

காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 8 (Post No.11,562)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,562

Date uploaded in London – 19 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 8

ச.நாகராஜன்

பல துறைகளில் அவர் புகுந்தாலும் தமிழே அவரை வாழ வைத்தது; அவரைக் காலத்தை வென்று நிலையாக நிலைக்க வைத்திருக்கிறது.

அவரே இதைக் கூறுகிறார்:

ஜனநா யகம்என்னும் சந்தைக்கு நான் தந்த

   சரக்குகள் விற்கவில்லை

தமிழ்நா யகம் என்னும் பெயரன்றி மற்றென்னைத்

   தழுவுவார் யாருமில்லை

இனநா யகம்சாதிப்  பணநா யகம்யாவும்

    இயல்பாக வாழுமுலகில்

இருளூடு கண்கட்டித் தருமத்தை நான்தேடி

    இதுவரை காணவில்லை

வனவாசம் போனபின் மனவாசம் அஞ்சாத

    வாசத்தைத் தேடுமனமே!

மைதான விளையாட்டுப் பொய்யென்று கவிபாடு

   வருங்காலம் உணரும்வனமே!

கண்ணதாசனின் இந்தக் கவிதை அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

காலம் வென்ற தமிழுடன்  தன் தமிழால் காலம் வென்று நிற்பார் கவியரசர் கண்ணதாசன்!

கலங்காதிரு மனமே என ஆரம்பித்து கண்ணே கலைமானே என்று முடித்துத் தன் கவிதைப் பூமாலையைத் தமிழ் அன்னைக்குச் சமர்ப்பித்து முடித்துக் கொண்டார் கவிஞர்!

MY LIFE IS MY MESSAGE என்று கூறினார் மகாத்மா காந்திஜி. ஆனால் கவிஞரோ என் வாழ்க்கையை யாரும் பார்க்காதீர்கள்எனது கவிதையைப் படித்து அதனைப் பின்பற்றுங்கள் என்றார்.

My poems are my messages என்பது அவர் வாக்கு!

ஒரு கவிஞன் என்பவன் யார் அவனது சக்தி என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் குடந்தை வேலன் என்னும் அற்புதக் கவிஞர். ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற அவரது கவிதை வரிகளில் சில :

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு                                                       

 சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு                                       

சூளை கிளப்பிடுவோம்

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்                                             சட்டென ஓங்குது பார் – எழில்                                                          சிப்பியில் முத்தெனச் சொல்லினில்                                              வையச் சிலிர்ப்பு கிளம்புது பார்

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்                                                                           

வீழ்ந்தே உடைந்ததடா -யாம்                                                                                     

நாதக்குழம்பில் புனைந்திட்ட                                                                 

சொற்கடம் ஞாலம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் + தம் எனப் பிரித்துப் படிக்க வேண்டும்)

இந்தக் கவிதைச் சித்தனின் இலக்கணத்தை வைத்துப் பார்க்கும் போது, சொற்களால் ஜாலம் செய்து ஞாலம் ஆள வந்த, வேதக் குயவன் படைத்திட்ட, கவியரசு கண்ணதாசனின் பூதவுடல் வீழ்ந்தே உடைந்தாலும் அவர் நாதக் குழம்பில் புனைந்திட்ட சொற்கள் என்றும் உலகை ஆளும் என்பதில் ஐயமுண்டோ!

புறநானூற்றுப் புலவர்களின் நெஞ்சாழமும், கம்பனின் கவித்துவமும், இளங்கோவின் இரு சொல் திறமையும், வில்லிப்புத்தூராரின் உவமைத் திறனும், பாரதியின் புதிய, எளிய தமிழின் நளின நடையையும்,  கையாண்ட கண்ணதாசன் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன். காலத்தை வென்ற கவிஞன்.

உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை என்ற தேசிகவிநாயகம் பிள்ளையின் இலக்கணத்தை மெய்ப்பித்தவர் கவிஞர்.

உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற பாரதியின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கவிஞர்.

தமிழிடமிருந்து கண்ணதாசன் பெற்றது அதிகம் என்றால் தமிழுக்குக் கண்ணதாசன் தந்தது அதை விட அதிகம் என்பது தான் சிறந்த ஒரு மதிப்பீடாக இருக்க  முடியும்.

திரைத்துறையில் பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், நினைவுப் பாடல்கள், லட்சியப் பாடல்கள், வினா-விடை பாடல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குடிபோதைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள், ராகங்கள் கொண்ட பாடல்கள், இதிஹாஸ புராணப் பாடல்கள், தமிழின் பெருமை பற்றிய பாடல்கள், படகு, கார், குதிரை சவாரி பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், ஒரு சொல்லே பலமுறை வரும் பாடல்கள் போன்ற அனைத்தையும் எடுத்து ஆராய்ந்தால் அதில் கவியரசr கண்ணதாசனின் பெரும் பங்கும் அவர் தம் புலமையும் புலப்படும்.

நாள் தோறும் அவரது பாடலை கேட்கும் தோறும் அவருக்குச் சிரம் தாழ்த்தித் தமிழ் நெஞ்சங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றன!

இந்த உரையில் கண்ணதாசனின் கட்டுரைகள்நாவல்கள்கேள்வி-பதில்செப்பு மொழி பதினெட்டுஅவரது வனவாசம்,  மனவாசம்அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றைநேரத்தைக் கருதிச் சொல்லவில்லை. அவற்றையும் அன்பர்கள் படிக்க வேண்டும்

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

அங்கே ராமனும், கண்ணனும், தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

தமிழர்களாகிய நமக்கு மாபெரும் கடமை ஒன்று இருக்கிறது.

கண்ணதாசனின் எழுத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். கவியரசு பற்றி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் கட்டுரையையும் நூலையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும்.

நூற்றுக் கணக்கான தலைப்புகளில் கவியரசைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.

அறிவியலில் கண்ணதாசன், தத்துவத்தில் கண்ணதாசன், அகத்துறையில், புறத்தில், பக்தி இலக்கியத்தில், வடமொழி இலக்கியத்தில், சந்த வகைகளில், கவினுறு சொற்களில், தமிழ் விந்தைகளில் — என இப்படி ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.

இதை  முன்னெடுத்து கண்ணதாசன் கலைக்கூடமும் நான் ஓர் ஐ.ஏ.எஸ் அகாடமியும் முன் நின்று கண்ணதாசன் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.

தமிழர்கள் தலையாய கடமையான இதற்கு உதவி புரிய முன் வர வேண்டும்.

இந்த நல் வாய்ப்பினை எனக்குத் தந்த அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அமைகின்றேன்.

நன்றி வணக்கம்!

**** 

You tube link

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

 கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

இந்த உரைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

***

Pustakam Hastha Lakshanam –Beauty of Hand is Enhanced by a Book (Post .11,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,561

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Following are my latest books in English

Book 24

Rewrite Indian History (book title)

Contents

1.Indian History: Vivekananda’s Advice!

2.Biggest Brainwash in the World!

3.Hindu Wonder – 57 Generations at One Go!

4.Amazing History in one Rig Vedic Hymn! 38 Names at one go!!

(5).160 Kings in Rig Veda!

6.More About Rig Vedic Kings : Nine Interesting Points

(7).35 Historical Records in the Rig Veda

8.Mahabharata and Ramayana Kings in the Rig Veda

9.Ancient Tamils Amazing Historical Sense

10.Amazons of India! 

11.Mankind originated in Asia!

12.Rig Vedic Kings and Their Dates

13.One Hundred Wonders of Karnataka- 1

14.One Hundred Wonders of Karnataka- 2

15.One Hundred Wonders of Karnataka- 3

16.One Hundred Wonders of Karnataka- 4

17.One Hundred Wonders of Karnataka- 5

18.How did Ancient Hindus find Submarine Mountains?

19.Oldest Historian in the World; Rig Veda Reveals-1

20.Oldest Historian in the World; Rig Veda Reveals-2

21.Oldest Historian in the World; Rig Veda Reveals-3

22.Oldest Historian in the World; Rig Veda Reveals-4

23.Oldest Historian in the World; Rig Veda Reveals-5

24.Oldest Historian in the World; Rig Veda Reveals-6

25.Four Wings of Hindu Army: Blow to Aryan- Dravidian Theory!

26.Eighteen groups of Indians!

27.Indus Valley Case: Lord Indra Acquitted

28.Mahabharat Names Vs Indus Valley Names

29.Who is Dhananjayan?

30.Hindus Migrated  to Europe 8000 Years Ago!

31.Was Stonehenge in England a Hindu Temple?

32.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain!

xxxxx

BOOK 23

Tamil Hindus 2000 Years Ago!   (Book title)

(Please note the first 15 parts of Tamil Hindu Encyclopaedia were published under the title Hinduism in Sangam Tamil Literature)

Contents

1.Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha – God of Love -மன்மதன், காமன்)

2.Tamil Hindu Encyclopaedia – 17 (Tamil Lovers= Rathi+ Manmatha காதல் ஓவியங்கள்)

3.Kama deva – Hindu God of Love in Tamil and Sanskrit Literature!

4. Tamil Kaaman Pandikai/Festival in Rome and Greece!

5.Tamil Hindu Encyclopaedia – 18 (Vedas & Brahmins வேதங்களும் பிராமணர்களும்)

6.Tamil Hindu Encyclopaedia – 19 ( Brahmins அந்தணர்,  பிராமணர்)

7.Tamil Hindu Encyclopaedia – 20 ( Brahmins பார்ப்பான், பார்ப்பன மகன், பார்ப்பனி) –

8.Tamil Hindu Encyclopaedia – 21 (Yaga, Yagnas, Gotras யாக, யக்ஞங்கள், கோத்ரங்கள்)

9.Tamil Hindu Encyclopaedia – 22 (தமிழ் மன்னர் செய்த யாகங்கள் Yagas by Tamil Kings)

10.Tamil Hindu Encyclopaedia 23 (Havis =ஹவிஸ், ஆவுதி; Yupa யூபம்)

11.Yupa Post in Sangam Tamil Literature and Rig Veda

12.Amazing Rig Vedic Yupa in Sangam Tamil Literature

13.Rig Vedic Hariyupia and Indus Valley Harappa

 14.Tamil Hindu Encyclopaedia :24 (Yaga Smoke,

Brahmin Murder  யாகப் புகை,  ஐயர் கொலை)

15.Tamil Hindu Encyclopaedia 25 ( Thirty Three Devas and Yama-

தேவர்கள், யமன்) in Sangam Tamil Poems

16.Importance 12 Tamil Months: Chittirai, Vaikasi Festivals and Beliefs- Part 1

17. Importance 12 Tamil Months: Aani , Aadi, Aavani  Festivals and Beliefs- Part 2

18. Importance 12 Tamil Months…. Purattaasi – Part 3

19. Importance 12 Tamil Months…. Aippasi, Kaarthikai- Part 4

20. Importance 12 Tamil Months…. Maarkazi, Thai- Part 5

21. Importance 12 Tamil Months…. Maasi, Panguni – Part 6

*****************

HOW AND WHERE YOU CAN GET THEM?

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags- my books pustakam, hastha lakshanam

Tamil Hindu Encyclopaedia – 39; கந்தன், வேலன் Skanda ,Velan in Sangam Tamil Books (Post No.11,560)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,560

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is second part on Murugan/Skandan in Sangam Tamil Literature

Birth of Muruga

Paripatal poem 5 gives a detailed description about Muruga’s birth. Tripurantaka /Siva had union with his wife Uma and her foetus got divided into seven parts due to the interference of Indra . Actually ,the embryo or foetus was produced from the third eye of Lord Siva/Tripurantaka. Brahma received it and gave it to Indra, who could not handle it. So, he struck it with his weapon which got divided into seven parts. The seven parts were received by Sapta/ Seven Rishis. They gave it to their wives after processing them in Yaga fire . Arundhati, the chastest woman of Hindu literature, did not consume it. Other six women gave birth to six baby boys on lotus flowers in the beautiful pond in the Himalayas. Indra got angry and struck at six babies and they became one boy with six heads.

பரிபாடல் 5

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

5

உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,        30

6

‘விலங்கு’ என, விண்ணோர் வேள்வி முதல்வன்

விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது

அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,

எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு

திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் அருள:    35

7

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை

நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,

சாலார்; தானே தரிக்க’ என, அவர் அவி     40

உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்

8

தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,

வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,

அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:  45

9

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;

10

நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,                   50

11

அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,

எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,

அறு வேறு துணியும் அறுவர் ஆகி,

ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

xxx

The six mothers are referred to in other Sangam poems as well Pari 8-126; Murugu 255;Pari  9-6

மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த செல்வன் Pari 8-126

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ Murugu 255

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

மறு மிடற்று அண்ணற்கு ,மதி ஆரல் பிறந்தோய் Pari  9-6/7

Xxxx

Lord Muruga’s avatar is mentioned by many Sangam poets in

Murugu 253-255

Perum . 458/459

Kali 81-9; 83-84

Xxx

Paripatal 5 adds that Indra and his battalion got defeated in the war with Six Faced, 12 Handed Muruga. And the defeated Devas gave a memento each to Muruga. They are

Fire god /agni gave Cock

Indra gave Peacock

Yama gave Whit goat

And others also gave you and you hold the following 12 in your hands: Goat, Peacock, Cock, Bow, Tree, Sword, Spear, Axe, Trisula, Fire pot, Garland and Gem

ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய  55

போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,

13

அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,

செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து

வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,

திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;        60

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,

இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;

ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த

மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,தாமரை

பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,          65

செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,

தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,

வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,

14

மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்

பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.     70

Xxx

There are beautiful descriptions of his appearance in Murugu 1-11, 77-125

He is red like the rising sun in the sea. His 12 hands do different tasks; he has six faces  and seated on a peacock. His garlands and dress also looked fame red

Pari 5-11; 14-21; 21-67

Xxx

திருமுருகாற்றுப்படை 1-9

“[All beings of the] world rejoice when the Sun, praised by many, rises shedding its rays over the eastern ocean and traverses [in clockwise direction] around the MahAmEru mountain [centre of the Universe]; likewise shines forth Lord Murugan’s splendour of light, that is seen not only by the external eyes of the Lord’s devotees from far, but also perceived by the inner vision of devotees with their eyelids closed.

முருகன் தோற்றம் – விளக்கம்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு  

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,         5

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,  

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

Xxx

திருமுருகாற்றுப்படை

.”Lord Murugan is riding a male tusker, whose spotted forehead bears the scars made by the sharply-pointed-goad. The tusker’s forehead is well adorned with dangling wreaths of unfading blossoms [made of gold] and a fine frontal plate; when the death- wielding yaman-like-tusker walks rapidly like the blowing of strong wind, the bells hanging on either side produce tinkling sound alternately.

Lord Murugan’s sacred hair on the crowned-head is artistically arranged in five styles of thAmam, magudam, pathumam, kimpuri, and kOdagam, and adorned with gems-stones of contrasting colours, dazzling with the brightness of lightning. The finely- wrought golden magara-shaped-ear- rings of the Lord are dangling with a brightness like that of the stars that surround the lustrous moon which sheds its light even on distant earth. The effulgence of the Lord’s sacred faces is perceived by the minds of the sages who carry out their penances with faultless vow … “

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர,

படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை,         80

கூற்றத் தன்ன மாற்று அரு மொய்ம்பின்,

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி

மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப,         85

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்ப,

தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:     90 

Xxx

 What do the six faces do?

“One of the Lord’s sacred faces produces many sparkling splendours, so that the world, engulfed by darkignorance, may appear flawessly bright;

 another sacred face of the Lord, praised by the Lord’s devotees, joyfully confers on them all the gracious favours requested by them;

 another sacred face of the Lord ensures that sacrificial rituals of sages, conducted in accordance with true scriptures, are not disturbed by evil forces;

 another sacred face of the Lord expounds to the sages such great truths which are not revealed by true scriptures, and enlightens their minds just as the moon shows all the directions of the world;

 another sacred face of the Lord annihilates the demonic forces in battle, so that the sacrificial rituals may be held on the battle-field to celebrate the victory;

 another sacred face of the Lord rejoices together with the hunter’s young daughter VaLLi-ammai of creeper-like-slender-waist [representing ichchA-sakthi] … “

 தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே:     90

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,

பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,   

ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ   95

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம் 

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,

திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம் 

செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,   

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100

குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்  

மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின் 

(English translation is from Kaumaram.com)

To be continued………………………………….

 Tags- Muruga, Skanda, Six Faces, Birth, 12 Hands, Indra

லண்டன் டாக்டர் அ .நாராயணனின் மார்கழிக் கவிதைகள்(Post.11,543-part 2)

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543-2

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழி 2

அஞ்சுகம் கரமேந்திய வஞ்சிக் கொடியாளே

கஞ்சன் வயிற்றிருந்த நெருப்பான நெடுமாலை

நெஞ்ச முருகும் பாமாலைப் பஞ்சணையிலே 

தஞ்ச மடைய வைத்தவளுமிந்தத் தாரகையே              2.5

நான் மறை போற்றும்  நாரணன் பேர் பாடி

நாளோர் பாவை நற்றமிழில் பண்ணிசையாக

நாச்சியார்  திருமொழியில் பேச்சிலே மயங்கி  

ஆய்ச்சியன் மையல் கொண்ட மங்கை வாழி                2.6

வையத்து வாழ்வோருய்ய மார்கழித்திங்களில்

நெய்யும் பாலுமுண்ணா அதி காலை நீராடி 

மையிடாக்கண்களும் நறு மலரிடாக் கூந்தலுமாய்

பொய்யும் புன்னெறியும் புறங்கூறலையும் புறம்

பெய்தி வாயும் வயிறும் வரந்தியோர் எஞ்சா                

அன்னமிட்டு  நோன்பு காத்துப் பாற்கடலில்

பையத்துயின்ற பரமனடிபாடிப்பணிந்த  நங்

கையர் குழாம் நாயகி நப்பின்னை வாழியே                 2.8

நாராயணன்

Xxxx

மார்கழி 3

மூவுலகளந்த  முகுந்தன் மலரடியே முதலாக

முறையான நூற்ற நோன்பிலே மும்மாரி   

முகில்களோர் திங்களிற் சொரிந்ததிலே

முளைவிட்டச் செந்நெல்ஓங்கிய நிலத்திலே 

ஊடு கயலோட கறவைகள் மடி கனத்ததிலே

முலை பீச்சிய பால் தாங்கிய குடம் வழிய

தீங்கின்றி நாடெல்லாம் தீராச் செல்வம் பெற

பன்னோர் நலம் கோரியக் கோதை வாழியே

மறையுள் நின்ற மாதவனோ யாதவனே

குறையொன்று மில்லாக் கோவலனாக 

நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி

வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி 

Xxxx

மார்கழித் திங்கள் 4

மறையுள் நின்ற மாதவனோ யாதவனே

குறையொன்று மில்லாக் கோவலனாக 

நிறைவான செல்வம் நீங்காதருள வேண்டி

வரையிலாதோனைப் பாடிய பாவை வாழி 

வீங்கு நீர் கடலொத்த உடலோன், கை

வாங்கிய நீரால் கார் முகில் வண்ணனாக

தாங்கிய கரங்களில் மின்னிய ஆழியும்

முழங்கிய சங்கும் வில் விடுத்த சரம்போல் 

மழையில் உலகோர் உய்ய இயற்கையில் 

இழைந்தியங்கும் இருடிகேசனுக்கு மார்கழி

நீராடி தூயமங்கையராய்த் தூயானைத்தொழ

கோரிக்கை வைத்த கோதைநாயகி வாழியே

நாராயணன்

To be continued………………………………

ஆடினாள், பாடினாள்; முறத்தால் கணவனை சாடினாள்– அவ்வையார் அதிர்ச்சி (Post.11,559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,559

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 26

Arappalisura sataka verse 26 with my commentary 

         26. ஆகாதவை, அறப்பளீசுர சதகம்

உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி

     உறவாடும் உறவும் உறவோ?

  உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ

     றுண்டவர்க் கன்னம் ஆமோ?

தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு

     தக்கபயிர் பயிரா குமோ?

  தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்

     தானையும் தானை யாமோ?

விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு

     விருப்பமும் விருப்ப மாமோ?

  வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்

     மிக்கசீ வனமா குமோ?

அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 (இ-ள்.) அள்ளாத இருங் கருணையாளனே – குறையாத

பேரருளாளனே!, தேவர் தொழும் ஆதியே – அமரர் வணங்கும்

முதல்வனே!, அருமை ………. தேவனே!,

உள்அன்பு இலாத பேர்

தித்திக்கவே பேசி உறவாடும் உறவும் உறவோ – மனத்திலே அன்பு

இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும் உறவாகுமோ?, அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு அன்னம் ஆமோ – அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, தள்ளாது இருந்துகொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ – ஊக்கமின்றி வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர் நல்ல பயன் தருமோ?, தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன்சென்றிடும் தானையும் தானை ஆமோ – படைத்தலைவன் ஒருவன் இல்லாமல் முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ? விள்ளாத

போகம் இல்லாத பெண்மேல் வரும் விருப்பமும் விருப்பம் ஆமோ –

பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும் ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? வெகு கடன்பட்டபேர் செய்கின்ற சீவனமும் மிக்க சீவனம் ஆகுமோ – மிகு கடன்

கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?

xxxx

இதை ஒப்பிட அவ்வையார் வாழ்வில் நடந்த சம்பவம் தனிப்பாடல் திரட்டில்  உள்ளது.

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

XXX

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள். 

XXX

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

XXXX 

NO ENTRY BOARD AND ONE WAY TRAFFIC BOARD 

ஒருதலைக் காமம் என்பது சாலையில் உள்ள ONE WAY TRAFFIC BOARD

ஒன் வே டிராஃபிக் போர்டு; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; இது NO ENTRY BOARD நோ எண்ட்ரீ போர்டு போன்றது. உள்ளே நுழைந்தால் தொல்லைதான் ; எல்லோரும் நடிகையையோ, பணக்காரியையோ மணக்க முடியாது. 

XXXX 

நட்பு என்பது பசப்பான சொற்கள் நிறைந்தது அல்ல–குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

XXX

Tags–அறப்பளீசுர , சதகம், மண்ணைவி, அன்பான , உணவு, போலி நட்பு, அவ்வையார், தனிப்பாடல்கள்

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 7 (Post No.11,558)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,558

Date uploaded in London – 18 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 7

ச.நாகராஜன் 

கண்ணதாசனை அறிவியல் ரீதியாகவும் பார்க்க முடியும்.

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் எந்தாய் போற்றி

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போறி

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி

கர்ணன் படத்தில் வரும் இந்தப் பாடலைப் போற்றாதவர் கிடையாது.

முதல் வரியில் வேதக் கருத்தைத் தொட்டு ஆரம்பித்தவர் இறுதியில் அறிவியலில் முடிக்கிறார்.

சூரியன் எத்தனை பில்லியன் ஆண்டுகள்(ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஒளி தந்துள்ளான். ஒளி தரப் போகிறான். இந்த நானிலம் எத்தனை பில்லியன் ஆண்டுகள் இருக்கப் போகிறது. அறிவியல் ரீதியாக ஒரு பிரம்மாண்ட கணிதம் வருகிறது. அத்துணை ஆண்டுகள் நாம் சூரியனைப் போற்றுவோமாக என்கிறார் கவிஞர்.

ஆயிரம் வாசம் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்பதில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 40000 எண்ணங்களை எண்ணுகிறான் என்று அறிவியல் கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

சென்னையைச் சேர்ந்த நாஞ்சில் ஷா என்பவர் காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்  தலைமேலே அமரப் போகும்  சாதனை தான் எப்போ தென்பீர்

என்று ஒரு கேள்வியைகவிதையாகவே கேட்டார்.

அதற்கு கவிதையாகவே கவிஞர் பதில் கூறினார்!

அவரது பதில் இது:-

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்                              

  நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்                                     

ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்                                        அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்                                      

சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்                                               

 தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?                                        

 வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்                                      

 வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

When troubles come to trouble you do not allow the troubles to trouble you but allow the troubles to trouble the trouble so that no trouble is free to trouble you; let not the troubles trouble let the troubles trouble the troubles  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதையே வள்ளுவர் 623வது குறளில்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர் என்றார்.

துன்பம் நேர்ந்த போது அதற்காகத் துன்பப்படாதவர்கள் வந்துற்ற துன்பத்திற்கே துன்பத்தினை உண்டாக்கி வெற்றி காண்பார்கள் என்பது அவர் தரும் செய்தி.

பல துன்பங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டு ஜெயித்தவர் அவர்.

காலத்தைக் கடந்து வெற்றி பெற்றவர் தனது ஐம்பதாவது ஆண்டு பிறந்த நாளில் ஒரு சுயமதிப்பீட்டைச் செய்து கொள்கிறார்:

“ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”

என்றார். ஆனால் இறைவன் அவனது பாடல்களைத் தன்னருகே இருந்து கேட்க அவரை சீக்கிரமே அழைத்து விட்டான் போலும்.

தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                       

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன் –நான்

பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்                                             

படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்                                                                                                மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்

நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த                                                                                      நிலையிலும் எனக்கு மரணமில்லை

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.

ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.

‘அந்த நிலையினில்’ அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.

 அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில் ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!

‘கண்களை மூடினாலும்’ காலமெல்லாம் ஜீவித்திருப்பதை ‘சிம்பாலிக்காக’ உணர்த்தி விட்டாரோ, என்னவோ!

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்  இப்படி:

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

கவிதையின் கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவர் காலத்தை வென்ற கவிஞனாக ஒளிர்கிறார்.

You tube link

https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –

கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.

நாகராஜன் 

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்

தொடரும்