‘சம்ஸ்கிருதத்துக்கு மேலான மொழியுமில்லை; பிராமணருக்கு மேலான ஜாதியுமில்லை’- Post 11,640

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,640

Date uploaded in London – –  7 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

ஐயர் வேதம்சம்ஸ்க்ருதம் ஜிந்தாபாத்- அம்பலவாணர் சொன்ன கசப்பான உண்மை!!

அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணர் சொல்கிறார் :

மலையில் உயர்ந்தது பொன்னிற மேரு ;

நதியில் உயர்ந்தது கங்கை;

ஒளியில் சிறந்தது சூரியன் ;

ஜாதியில் உயந்தவர் பிராமணர்;;

மொழிகளில் உயர்ந்தது சம்ஸ்க்ருதம் ;

நூல்களில் உயர்ந்தது வேதம் ;

தானங்களில் சிறந்தது அன்னதானம் ;

தெய்வங்களில் உயர்ந்தவர் அன்னையும் பிதாவும்! 

இதில் ஒன்றை ஒப்புக்கொண்டால் பிறவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி சூரியனையும், கங்கையையும் , மேருவையும், தாய் தந்தையரையும் சொன்ன நொடியில் ஐயரையும் வேதத்தையும், ஸம்ஸ்க்ருதத்தையும் உயரத்தில் தூக்கிவிடுகிறார் அம்பலவாணர். வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும், பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதத்தைவிட முக்கியமானது என்றும் சொல்கிறான். தேவாரம் திருவாசகம் போலவே ஆவினையும்  அந்தணரையும் இணைத்தே பாடுகிறான் . ஆனால் ஜாதியை மறந்துவிட்டு, ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவர்  உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். மேலும் சம்ஸ்க்ருத மொழியின் பழமை கருதி அம்பலவாணர் பாராட்டி இருக்கலாம். துருக்கியில் பொகஸ்கோயில் கி.மு 1380 தேதியுள்ள களிமண் கல்வெட்டில் கியூனிபார்ம் லிபியில் சம்ஸ்க்ருதம் உள்ளது. தமிழிலோ அதற்கு 1300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது. வேதங்களின் பழமையும் கி.மு 1500 என்றும் தமிழின் தொல்காப்பியம் கி.மு முதல் நூற்றாண்டு  என்றும் பெரும்பாலான அறிஞர் கூறுவதை ஒட்டி அம்பலவாணரும் எழுதினார் போலும்.

xxxx

முதல் பாடலில் வள்ளுவர் சொன்ன கருத்தையே சொல்கிறார்; ஊழில் பெருவலி யாவுளவிதியை வெல்ல முடியாதே! என்கிறார். சிலப்பதிகாரத்தின் கருத்தும் அதுவே; ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை வலியுறுத்தவே காவியத்தை எழுதியதாக இளங்கோ சொல்கிறார்.

Xxxx

இதை பிறர் சொல்லுவதுட ன் ஒப்பிடலாம் :

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துறை என்ற காலமும் போச்சே – பாரதியார்

xxx

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே

வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே –பாரதியார்

xxx

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

ஓதுவம் இஃதை எமக்கிலை  ஈடே –பாரதியார்

xxx

பிராமணர் பற்றி புத்தர்

ஒருவன் அமைதியான தூய்மையான, தன்னடக்கமான வாழ்க்கை வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கிழைக்காவிடில் அவன்தான் பிராமணன்; அவன்தான் சந்நியாசி; அவன்தான் பிக்ஷு – தம்ம பதம், ஸ்லோகம் 142; புத்தர் செப்பியது

ஒரு சன்யாசியும் பிராமணரும் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுபட்டுவிடுகிறார்கள் . அவர்  தாயாரையும் தந்தையையும் கொலை செய்திருந்தாலும் , இரண்டு நல்ல அரசர்களைக் கொலை செய்திருந்தாலும், ஒரு பெரிய ராஜ்யத்தையே அழித்திருந்தாலும்  அவர்கள் அந்த பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள் — தம்ம பதம், ஸ்லோகம் 294; புத்தர் செப்பியது .

ஒரு பிராமணனுக்கு தீங்கு செய்யாதே; பிராமணரும் எவருக்கும் தீங்கிழைக்கக்கூடாது அப்படித் தீங்கிழைப்பவனுக்கு என்ன நேருமோ; அடடா , என்ன நேருமோ.- தம்ம பதம், ஸ்லோகம் 389; புத்தர் செப்பியது.

Xxxx

விவேக சிந்தாமணி பாடல்கள்

 மாதம் மும்மாரி பெய்த காரணம்

வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை,

நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை,

மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை,

மாத மூன்று மழையெனப் பெய்யுமே.

xxxx

விதி மாறாதது

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,

மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும், தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம், மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

Meaning

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

xxxx

வினைமாற்றும்

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்,

தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க,

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ,

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ.

Meaning

நல்ல வாழ்வ வந்த போது மனதில் (அளவிற்கதிகமாக) மகிழ்ச்சி கொள்ளவேண்டாம். விவேகமுள்ளவர் விதியினால் தாழ்வானது வந்தபோதும் மனம் தளரமாட்டார். வினைப்பயனை யாராலே மாற்றமுடியும், பரம ஏழையாய் இருந்தவர் பல்லக்கில் ஏறுவதை பார்த்ததில்லையோ!

Xxxx

அந்தணர் அறம் மாறினால்..

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,

மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,

சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,

அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள்யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும்அரசனின் நல்லாட்சி மாறும்மந்திரங்களின் சக்தி குறையும்நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும்சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?

xxxx

ஒழுக்கம் உயர்வு தரும்

ஆசாரம் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம்,

ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவர் ஆவார்,

ஆசாரம் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப்,

பேசார்போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.

Xxxx

சிலப்பதிகாரத்தின் ஒட்டுமொத்த அறிவுரை

1.         அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.         ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.         உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

xxxxxx

அறப்பளீசுர சதகம் 54. ஊழ்வலி

கடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்

     காணும் படிக்கு ரைசெய்வர்,

  காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்

     காயத்தின் நிலைமை அறிவார்,

விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்

     விடாமல் தடுத்த டக்கி

  மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி

     விண்மீதி னும்தா வுவார்,

தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்

     தொகையான சித்தி யறிவார்,

  சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது

     துடைக்கவொரு நான்மு கற்கும்

அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

இ-ள்.) அண்ணலே – தலைவனே!, அருமை ……. தேவனே!, கடல்

அளவு உரைத்திடுவர் – கடலின் பரப்பைக் கணக்கிட்டுக் கூறுவர்,

அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் – திருமால்

நான்முகன் ஆகியவரின் வடிவத்தையும் காணுமாறு விளக்கிக் கூறுவர்,

காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் – உலகின் எவ்வகை

அளவையும் விளக்குவர். காயத்தின் நிலைமை அறிவார் –

உடற்கூறுபாட்டை உணர்வர், விடல் அரிய சீவநிலை காட்டுவார் –

விடுதற்கரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர், மூச்சையும் விடாமல்

தடுத்து அடக்கி மேன்மேலும் யோகசாதனை விளைப்பார் – மூச்சை

விடாமல் தடை செய்து அடக்கி மேலும் மேலும் யோகசித்தியைச் செய்வர்,

விண்மீதினும் எட்டித் தாவுவார் – வானத்திலும் எழும்பித் தாவுவர், தொடல்

அரிய பிரமநிலை காட்டுவார் – அடைய இயலாத பிரமத்தின் நிலையையும்

காண்பிப்பர், எண்வகைத் தொகையான சித்திஅறிவார் – எட்டு வகையான

எண்ணிக்கையுடைய சித்தியையும் தெரிவர் (எனினும்), சூழ்வினை

வரும்போது சிக்கி உழல்வார் – சூழும் பழைய வினைப்பயன் வரும்போது

அதனில் அகப்பட்டுத் தவிப்பர், ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு

அல – ஒப்பற்ற பிரமனுக்கும் அதனை அழிக்கும் வழி இல்லை, என

அளவுஇல் பலநூல் தெரிந்து சொலும் – என்று கணக்கற்ற பலநூல்கள்

அறிந்து கூறும்.

 ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று – சூழினும் தான்முந்

துறும்’ என்றார் வள்ளுவர்.

xxxxxxxxxxxxxxxxx

அறப்பளீசுர சதகம் 55. உயர்வு இல்லாதவை

வேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக

     மேருவுக்கு அதிக மலையும்,

  வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக

     மேதினியில் ஓடு நதியும்

சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,

     சூழ்கனற் கதிக சுசியும்

  தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,

     சுருதிக் குயர்ந்த கலையும்,

ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்

     அன்னதா னந்த னிலும்ஓர்

  அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்

     ஆராய்ந்த பேரு ரைசெய்வார்!

ஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்

அண்ணலே. கதிரவன் நான்முகன் வானவர் முனிவர் முதலோர் வாழ்த்த

வரும் முதல்வனே!, அருமை…..தேவனே!, வேதியர்க்கு அதிகம்ஆம் சாதியும்

– மறையவர்களுக்கு மேலான சாதியும், கனக மகமேருவுக்கு அதிக மலையும்

– பொன்மயமான மாமேருவினும் பெரிய மலையும், மேதினியில் வெண்திரை

கொழித்துவரு கங்கா நதிக்கு அதிகம் ஓடும் நதியும் – உலகிலே

வெண்மையான அலைகளை வீசி ஓடும் கங்கையாற்றினும் மேலாக ஓடும்ஆறும்சோதிதரும் ஆதவற்கு அதிகம்ஆம் காந்தியும் – ஒளியைத் தரும்

ஞாயிற்றினும் மேம்பட்ட ஒளிப்பொருளும், சூழ்கனற்கு அதிக சுசியும் –

சூழும் தீயினும் மேம்பட்ட தூய பொருளும்,

.தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும் – தூயவரான பெற்றோரினும்

மேலான தெய்வமும், சுருதிக்கு உயர்ந்த கலையும் – வேதத்தினும்

மேம்பட்ட நூல்களும், ஆதி வடமொழி தனக்கு அதிகம்ஆம் மொழியும்,

– முதன்மையான வடமொழியினும் உயர்ந்த மொழியும், நுகர் அன்ன

தானந்தனினும் ஓர் அதிக தானமும் – உண்ணப்படும் உணவுக்கொடையினும்

உயர்ந்த ஒரு கொடையும், இல்லையென்று பலநூல் எலாம் ஆராய்ந்தபேர்

உரை செய்வார் – இல்லையெனப் பல நூல்களையும் ஆராய்ச்சி

செய்தவர்கள் கூறுவார்கள்.

Xxxxx

Tags–பிராமணர், சம்ஸ்க்ருதம், உயர்வு, விதி, ஊழ்வினை , அம்பலவாணர்

S.Nagarajan  Article Index : December 2022 (Post No.11,639)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,639

Date uploaded in London –  7 JANUARY 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

SNR Article Index : December 2022

DECEMBER 2022

  1-12-2022 11491    தன் பெயரையே விருதுப் பெயராகக் கொசுத்த உத்தமச்   

                                       சோழன் – கொங்குமண்டல சதகம் பாடல் 87  புத்தக

                                        அறிமுகம் 128 : Who is more intelligent?              

 2-12-2022 11494     படிக்காசுப் புலவரின் புத்தக அறிமுகம் 129  : இலக்கிய

                                       உலகில் கம்பனின் காட்சி, வில்லியின் மாட்சி, சங்கப்

                புலவர்களின் ஆட்சி

 3-12-2022 11500         SNR Article Index November 2022 –  புத்தக அறிமுகம் 130 :

                                       வாக்கிற்கு அருணகிரி!              

 4-12-2022 11503         வாச பஜனம்!

 5-12-2022 11507        அருள்வாயே – 6 ( 46 முதல் 54 முடிய)

 6-12-2022 11511       நவீன மொபைல் போன், வீடியோ பூதங்கள்!

 7-12-2022 11515        ராமாயணத்தில் நதிகள் – 5

 8-12-2022 11519        எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்?

  9-12-2022 11523        அருள்வாயே – 7 ( 55 முதல் 64 முடிய)

10-12-2022 11527 ராமாயணத்தில் நதிகள் – 6

11-12-2022 11530     பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 8 மற்றும் 9வது

               பாடல்கள் – ஒரு பார்வை (124 முதல் 145 முடிய)

12-12-2022 11534 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்-110-12-22                

               உரை                

13-12-2022 11538காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்- 2 10-12-22 உரை

14-12-2022 11542 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்- 3 10-12-22 உரை

15-12-2022 11547 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -4 10-12-22 உரை

16-12-2022 11550  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -5 10-12-22 உரை

17-12-2022 11554  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -6 10-12-22 உரை

 18-12-2022 11558 காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -7 10-12-22 உரை

19-12-2022 11562  காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் -8 10-12-22 உரை

20-12-2022 11565   31 அப்ஸரஸ்கள்!             

21-12-2022 11569   உங்கள் உடலுக்கு உணவு எப்படி சக்தி ஊட்டுகிறது – 1 

              ஹெல்த்கேர் டிசம்பர் கட்டுரை

22-12-2022 11573    செப்பு மொழி 28 

23-12-2022 11576   செப்பு மொழி 29      

24-12-2022 11580    பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்! 

              கொங்குமண்டல சதகம் பாடல் 70             

25-12-2022 11584    அருள்வாயே – 7 

26-12-2022 11587   யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்

27-12-2022 11589    திருஞானசம்பந்தர் நளிர் ஜுரம் நீங்கப் பாடிய     

                             பாடல்! கொங்குமண்டல சதகம் பாடல் 48

28-12-2022 11594      ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 – Part 1

29-12-2022 11598      ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 – Part 2

30-12-2022 11601     பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட  50 முதல்

                                        72 கலைகள் – 1

31-12-2022 11605        பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல்

                                          72 கலைகள் – 2

***                      

PLEASE VISIT STALL NO.499 IN BOOK FAIR, CHENNAI


BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN AND S NAGARAJAN ARE DISPLAYED IN STALL NO.499 AT CHENNAI BOOK FAIR..

ONLY 20 BOOKS  ARE DISPLAYED OUT OF 200++++ BOOKS WRITTEN BY BOTH OF US.

IF YOU WANT PRINTED BOOKS PLEASE LET THEM KNOW WHEN YOU VISIT PUSTAKA.CO. STALL 

ONLY FOR PRINTED BOOKS, YOU HAVE TO INFORM THEM.

YOU MAY GIVE YOUR NAME , E MAIL OR MOBILE PHONE NUMBER WITH THE BOOK NAME/S YOU WOULD LIKE TO BUY.

BOOKS  ARE ALWAYS AVAILABLE ON LINE.

PLEASE NOTE THE BOOK FAIR ADDRESS GIVEN ABOVE.

POSTED ON 6-1-2023

சென்னை புத்தகக் காட்சி 2023 – 

நாள் : 06-01-2023 முதல் 22-01-2023 நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 600035.

Tamil Hindu Encyclopaedia -45 ;Tamil Spirits and Ghosts  வருத்தும் தெய்வம் contd…(Post.11,638)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,638

Date uploaded in London – –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ancient Tamils believed that some of the nymphs, spirits or ghosts are troublesome, bothersome, and annoying.

Even if you look at them, they will give you trouble. They are called Attacking Nymphs தாக்கு அணங்கு.

If it is not causing any trouble the Tamils considered them gods residing there. They even compared it to the Kinnaras in Puranas.

Perum .line 493-494 கின்னரம்‌ முரலும்‌. ௮ணங்குடைச்‌ சாரல்‌. (பெரும்‌.493-494),

Other places :’அணங்கு வீழ்வு அன்ன. பூந்தொடி மகளிர்‌! (madur.மதுரை.446), ‘எம்‌ அணங்கு அன்னோளே: (akamஅ௧.366:16)

Xxx

Attacking nymphs ,particularly ,attack young girls according to Sangam Tamil poets

கண்டார்க்குத்‌ தாக்கு அணங்கு இக்காரிகை

காண்மின்‌!’ (பரி.11 122), pari

தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்‌ அன்னாய்‌!: (ஐங்‌ 23-4) ainkuru

மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;

காப்பும்‌ பூண்டிசின்‌. கடையும்‌ போகலை! (௮௧.7:4-5)akam

Another name given to such spirits is சூர்  Suur;  they live in mountainous areas. Tamils believed that they even kill people. Even the mountain goats won’t touch the plants grown in such Suur inhabited areas in the hills.

“உருமும்‌, சூரும்‌, இரைதேர்‌ அரவமும்‌,

வழுவின்‌ வழாஅ விழுமம்‌, அவர்‌

குழுமலை விடரகம்‌, உடையவால்‌ எனவே”

(குறிஞ்சி.255-261) kurinjip

Xxxx

Mountain goats won’t eat the plants

“வாடல கொல்லோ தாமே –அவன்‌ மலைப்‌

போருடை வருடையும் (mountain goats) ‌ பாயா,

கூருடை அடுக்கத்த கொயற்கு அருந்‌ தழையே?’

(நற்‌.359:7-9) natri

xxxx

They also scare you to such an extent that you would shiver and shake at the sight of them

சூர்ப்பனிப்பு அன்ன தண்வரல்‌.

ஆலியொடு(அ௧.304:3)

Xxx

KARAIKKAL AMMAIYAR

One man compares his lady love to Suurara Makalir (Suur Nymphs) who is not only a rare being but also troublesome

நேர்கொள்‌ நெடுவரைக்‌ கவாஅன்‌

சூரர் மகளிரின்‌ பெறற்கு அரியோளே’ (௮௧.162:: 24-26),

‘சூரர மகளிரின்‌ நின்ற நீ மற்று

யாரையோ? எம்‌ அணங்கியோய்‌! உண்கு. (௮௧.32: 7-8).

xxxx

Tamil men used such divine women to make vows or promises . A man holding his lady love’s hand and says I swear in the name of Suur Nymphs

“எக்கர்‌ நண்ணிய எம்ஊர்‌ வியன்‌ துறை,

நேர்‌இறை முன்கை பற்றி,

சூரர மகளிரோடு உற்ற சூளே (குறுந்‌.53:5-7)

xxx

One may be reminded of the great Saivite Woman Saint Karaikkal Ammaiyar (Madame of Karaikkal- previously French ruled territory in Tamil Nadu). When she got one mango fruit in a miraculous way,  her husband refused to live with her saying she is a divine woman. Then she assumed the form of an ugly woman and called herself Peyaar= Miss Ghost.

Xxxxx

They live in ponds in the mountain creeks

“ஆஅய்‌ நல்நாட்டு அணங்குடைச்‌ சிலம்பில்‌,

கவிரம்‌ பெயரிய உருகெழு கவாஅன்‌

ஏர்மலர்‌ நிறை சுனை உறையும்‌:

குர்மகள்‌ மாதோ என்னும்‌’- என்‌ நெஞ்சே (akamஅக.197:14-17)

xxx

DANCING BEAUTIES

Tamils gave us detailed description of the Suur Ladies’ appearance as well. They wear red colour Kanthal flowers and blue colour Kuvalai flowers on their hair and dance to the tune of thundering waterfalls.

“கடவுட்‌ கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

பறியாக்‌ குவளை மலரொடு காந்தட்‌

குருதி ஒண்பூ உருகெழக்‌ கட்டி,

பெருவரை அடுக்கம்‌ பொற்பச்‌ சூர்மகள்‌

அருவி இன்‌ இயத்து ஆடும்‌ நாடன்‌’ (நற்‌.34:1-5),

xxxx

Tiru murugatrupadai gives us more details about their dance. They wear red sarees, and body full of jewels from head to foot. The scene is an enthralling one according to poet Nakkirar.

மால்‌ வரை நிவந்த சேண்‌ உயர்‌ வெற்பில்‌

கிண்கிணி கவைஇய ஒண்செஞ்‌ சீறடி,

கணைக்கால்‌, வாங்கிய நுசுப்பின்‌. பணைத்தோள்‌.

கோபத்து அன்ன தோயாப்‌ பூந்துகில்‌:

பல்‌ காசு நிரைத்த சில்காழ்‌ அல்குல்‌.

கைபுனைந்து இயற்றாக்‌ கவின்பெறு வனப்பின்‌,

நாவலோடு பெயரிய பொலம்புனை  அவிர்  இழை.

சேண்‌ இகழந்து விளங்கும்‌ செயிார் தீர்‌ மேனி

குரர மகளிர்‌ ஆடும் சோலை   — (முருகு Murugu. 12-41)

To be continued…………………………………………………………

Tags-  Attacking, troublesome, Nymphs, Sur Women, attacking women, வருத்தும் தெய்வம், தாக்கு அணங்கு, சூரர மகளிர்

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? – ரமணர் யார்? – Post.11,637

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,637

Date uploaded in London –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஜனவரி 6, 2023 – ஆருத்ரா தரிசன நன்னாள்.

1879ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன நன்னாளன்று (புனர்வசு நக்ஷத்திரத்தில்) அவதரித்த  மஹரிஷி ரமணர். அவரை வணங்கிப் போற்றுவோம்.

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? – ரமணர் யார்? – மஹரிஷியின் விளக்கம்!

ச.நாகராஜன்

பகவான் ரமண மஹரிஷி படைத்த அற்புதமான ஒரு நூல் உள்ளது நாற்பது.

இதில் நாம் அறிய வேண்டிய ரகசியங்கள் அனைத்தும் இருப்பதால் இதை ஓர்ந்து படித்து உணரல் வேண்டும்.

இதில் ரமண மஹரிஷி ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவு பட விளக்குகிறார் – 17ஆம் பாடலில்

பாடல் இதோ:

உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்

குடலளவே நான்ற னுணரார்க் – குடலுள்ளே

தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே

யின்னவர்தம் பேதமென வெண்

பாடலின் பொருள்;

தன்னை உணரார்க்கு – தன்னை உணராத அஞ்ஞானிக்கும்

உணர்ந்தார்க்கு – தன்னை உணர்ந்த ஞானிக்கும்

உடல் நானே – இந்த தேகமானது நானேயாகும்.

     அதாவது தேகமே ஆத்மா ஆகும்.

தன் உணரார்க்கு – தன்னை அறியாத அஞ்ஞானிக்கு

நான் உடலளவே – நான் என்னும் ஆத்ம உணரு உடலின் அளவேயாகும்.

உடல் உள்ளே தன் உணர்ந்தார்க்கு – உடலின் உள்ளே தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கு ( ஜீவன் முக்தனுக்கு)

நான் தான் எல்லை அற ஒளிரும் – நான் என்னும் ஆன்மா எல்லையற்றுத் தன்மயமாய்ப் பிரகாசிக்கும்

இதுவே இன்னவர் தம் பேதம் என எண் – இந்த இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான் என்று அறிவாயாக.

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் பொதுவாக உள்ளது தேஹமே.

இந்த தேகமே நானே ஆகும்.

தேகமே ஆன்மா ஆகும்.

ஆனால் தன்னை அறியாத அஞ்ஞானிக்குஅதாவது சாமானியனுக்குநான் என்ற சொல்லின் உணர்வு தனது உடல் அளவுடன் நின்று விடுகிறது.

ஆனால் தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கோ நான் என்பது எல்லையற்று எங்கு தன்மயமாய் ப்ரகாசிக்கும் ஆன்மா ஆகும்.

இருவருக்கும் உள்ள வேறுபாடு இது தான்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அஞ்ஞானிக்கு உடலே நான்.

ஆனால் ஒரு ஞானிக்கோ உடலும் நானே!

ஒருமுறைபகவான் ரமணரிடம் அமிர்த நாத யதீந்திரர் என்னும் பெரியவர் ஒருவர் வந்தார்.

ரமணன் யார்?’ என்று கேட்டு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்.

அதற்கு ரமணர் உடனடியாக அருளித் தந்த பதில் இது:

அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்

வறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்

இப்படி எங்கும் ஒளிரும் பரமாத்மனே தானாய் ஒளிர்வதை அவரே இந்தப் பாடல் மூலம் விளக்கி அருளி விட்டார்.

ஆனால் அன்றாடம் அன்பர்கள் வந்து பேசும் போது அவர், ‘நான் இதைக் கேட்டேனேநான் அதை எழுதினேனே’ என்பார்.

இங்கு அவர் குறிப்பிடும் நான் என்ற சொல் அன்றாட வாழ்க்கைக்கு உரியதான நடைமுறை வழக்கில் இருக்கும் விவகாரச் சொல்.

ஆனால் உண்மையில் அவர் நான் என்று எப்போதும் தன்மயமாய் பிரகாசிக்கும் ஆன்மாவிலேயே உறைந்திருந்தார் என்பதுவே உண்மை.

பிரம்மத்தை அறிந்த ஞானி அதற்குப் பின்னர் நாம் கண்ணால் காணும் உலகைக் காண மாட்டான்.

ஆனால் ஒரு அஞ்ஞானியோ தனது கற்பனா உலகையே உண்மை என்று எண்ணுவதால் ஆதாரமான உலகை அறிய மாட்டான்.

இதுவே ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு.

ஒரு அஞ்ஞானி ஞானியாக முடியுமா?

முடியும் என்று அருளினார் மஹரிஷி.

எப்படி என்ற கேள்விக்கும் அவர் விடையைத் தெளிவாகத் தந்துள்ளார்.

நான் யார்’ என்ற விசாரத்தைப் பயிற்சியாக மேற்கொள்.

அப்போது உன்னை நீ யார் என்று உணர்வாய்”

இதுவே அவரது உபதேசம்.

இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இந்தப் பேருண்மையைஅறிதற்கு அரிய ரகசியத்தை அவர் எந்த நூலையும் படித்து அறியவில்லையாரையும் நாடித் தெரிந்து  கொள்ளவில்லை.

அருணாசலனின் கருணையால் தன் அனுபவத்தால் சுயமாக உணர்ந்து கொண்டார்.

அதை கருணை மனத்துடன் உலகினர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

ரமண மஹரிஷி பிறந்த நாள் ; 30-12-1879 – திருவாதிரை நன்னாள்

ரமண மஹரிஷி சமாதி தினம் : 14-4-1950

ரமண மஹரிஷியின் ஜன்ம நக்ஷத்திரம் : புனர்பூசம் 

***

Tags- ரமண மஹரிஷி

நடராஜர் பற்றி டாக்டர் நாகசாமியின் அரிய கண்டு பிடிப்பு (Post No.11,636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,636

Date uploaded in London – –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

உலகப்புகழ் பெற்ற வரலாற்று அறிஞர், தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி இன்று நம்மிடையே இல்லாத போதும் அவர்தம் ஆராய்ச்சி அரிய பல தகவகல்களைத் தந்த வண்ணமுள்ளன. அவர் சிவபுரம் நடராஜர்  சிலையை லண்டன் கோர்ட்டில் வாதாடி வென்ற கதை அனைவருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லப்பபோவது வேறு கதை.

கோழி முதலில் வந்ததா?  முட்டை முதலில் வந்ததா ? ஆண் முதலில் பிறந்தானா , பெண் முதலில் பிறந்தாளா? என்பதெல்லாம் திருப்திகரமான பதில் சொல்ல முடியாத கேள்விகள் . இதே பாணியில் நடராஜர் சிலை முதலில் வந்ததா, ஆடல் வல்லானின் வர்ணனை முதலில் வந்ததா? என்பது அறிஞர் பெருமக்கள் விவாதிக்கும் ஒரு விஷயம்.

நடராஜர் சிலை என்பதை இன்று கல்லிலும் விக்ரகத்திலும் கண்டு உலகமே வியக்கிறது. இது சோழர் காலத்தில் வந்தது என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. “இல்லை இல்லை அதற்கும் பின்னர் வந்தது” என்பர் வெள்ளைக்காரர்கள் . கிபி.600-ல் ஞான சம்பந்தர் காலத்திலேயே நடராஜர் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததை தேவார பாடல்கள் பாடல்கள் மூலம் காட்டுகிறார டாக்டர் இரா. நாகசாமி. அவர் எழுதிய  ஆங்கில நூலில் (Tamil Nadu The Land of Vedas) இது பற்றி விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.

அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்தில் பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகர் இது பற்றி சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால் அவரும் ஆடல் வல்லானை, நட ராஜப் பெருமானை நாம் இன்று சிலையில் காண்பது போலவே வருணிக்கிறார் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர்.

முதலில் டாக்டர் நாகசாமி சொல்வதன் சுருக்கத்தைத் தருகிறேன்

கலை வரலாற்றை எழுதிய சில மேல்நாட்டார் (Art Historians)   நட ராஜ என்ற சொல் 14-ஆவது நூற்றாண்டினை ஒட்டி எழுந்தது . ஆகையால் இதில் வைதீக தொடர்பு (Nothing to do with Vedic Tradition)  — ஏதுமில்லை என்று கூறுவார்.கள் . ஆனந்த குமாரசாமி காட்டிய சில இலக்கியக் குறிப்புகளை பார்த்தும் கூட நடராஜ என்ற சொல் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது என்பர்.

சம்பந்தர்  தேவாரத்தில் நடனம் ஆடிய ராஜா என்றே குறிப்பிடுகிறார் . ஆகவே கி.பி.600க்கு முன்னதாகவே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .

இதோ திருப்புகலி திருத்தலப் பாடல்

திருப்புகலி –தேவாரம் 1-30-9

324  மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்

       தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி

       நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்

       பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9

நடம் ஆடிய வேந்தன் = நட  ராஜா ;

(வேந்தன்= ராஜா)

Xxxx 

சம்பந்தர் ஊரான சீர்காழியில், அவர் பாடிய பாடலில் சொக்க நிருத்த நடனம் பற்றிப்   பாடுகிறார். இது பரத முனி எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது  நாட்டிய சாஸ்திரத்தின் ஆறாவது  அத்தியாயத்தில் சுத்த ந்ருத்தத்தை , சிவ பெருமான், நந்தி கேஸ்வரருக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் அதை பரத முனிக்குக் கற்பித்ததாக காணப்படுகிறது. இதோ சீர்காழி திருத்தலப் பாடல் :-:-

திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்

சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே

புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்

போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்

தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்

கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்

காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே. 1-126-5

பின்னர் டாக்டர் சாமி, சுத்த நிருத்தம் , 108 கரணங்களில் இருப்பது பற்றி விளக்குகிறார். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சொக்க தாண்டவம் என்பதும் கி.பி.600க்கு முந்தியதுதான் என்பதை  சம்பந்தர் தேவாரம் காட்டுவதாச் சொல்கிறார்.

திருச்சிற்றேமம் என்னும் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல் அனைத்திலும் சிவன் ஆடலைக் குறிப்பிடுவதோடு அவருடைய முக்கியப் பணியே அது தான் என்றும் பாடுகிறார்:–

தேவாரம் மூன்றாம் திருமுறை

42. திருச்சிற்றேமம் – கொல்லிக்கௌவாணம்

3244.     நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்

குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-

சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்

                                            சிற்றேமத்தான்;

“இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே. 3-42-1

நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக்

கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-

படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;

கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!   3-42-3

Xxx

Shiva likes dance of others as well

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாகசாமி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.. சிவனுக்கு, தான் ஆடுவது மட்டும்தான் பிடிக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அழகான பெண்கள் பாடிக்கொண்டே ஆடுவதையும் சிவன் ரசிக்கிறாராம் . இதோ அந்தப் பாடல் .

2649.பங்கயம்மலர்ச்சீறடிபஞ்சு உறு மெல்விரல்அரவு அல்குல்,
மங்கைமார் பலர் மயில்குயில்கிளிஎன மிழற்றிய
                                                 
மொழியார்மென்
கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர்
                         ;
நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகிசங்கரன் திரு அருள் பெறல்
                                                    
எளிது ஆமே.

(அவருடைய ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்குமானால் அது என்னுடையதே)

xxxxx

என் கருத்து

சிவனை நாம் இன்று நடராஜராகக் காண்பதும் சிதம்பரத்தில் அவர் நடனமாடும் காட்சி  கொடுப்பதும்  சோழர் காலத்துக்கும் முந்தியது. அதாவது மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்துக்கும் முந்தியது.. அப்பர், சம்பந்தர் தேவாரம் மட்டுமின்றி காலத்தால் அவருக்கும் முந்தி வாழ்ந்த மாணிக்க வாசகர் பாடலிலும் இதே செய்தியைக் காண்கிறோம். குறிப்பாக மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பாடிய திருவெம்பாவையில் இந்த ஆடல் செய்தி வருவது டாக்டர் நாகசாமி சொன்ன செய்திக்கு மேலும் வலுவூட்டுகிறது

திருவெம்பாவை பாடல் 12

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

சிதம்பரத்தில் அவர் பாடிய பாடல் இது. கையில் அனலை வைத்துக்கொண்டு ஆடும் கூத்தன் என்பதால் நாராஜர் உருவத்தைக்கண்டே பாடியிருக்க வேண்டும் . இதோ மேலும் தெளிவான பாடல்,

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

பதப்பொருள் : காது ஆர் குழை ஆட – காதில் பொருந்திய குழை அசையவும்பைம்பூண் கலன் ஆட – பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும்கோதை குழல் ஆட – பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட – மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்,

இதில் உடல் பகுதிகள் மட்டுமின்றி அணிகலன்களின்  ஆட்டத்தையும் காண்கிறோம் ;  தற்போது நமக்குக் கிடைக்கும் நடராஜர் விக்ரகங்களில் அவர் சடை கூட இரு புறமும் பறப்பதைப் பார்க்கிறோம் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்கவாசகர்.

இது ஒருவர் கற்பனையில் உதித்த காட்சி அல்ல என்பது நால்வர் வர்ணனையிலும்  வருவதால், — தில்லைக்கூத்தன் சிலை — அதாவது நடராஜர் வடிவம்—- சம்பந்தர் காலத்துக்கும் முன்னரே இருந்திருக்க வேண்டும்  அதிகை வீரட்டானத்தில்கூட , ஆடும் காட்சியை சம்பந்தர் பாடுகிறார்.

    பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி   

    பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்   

    கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்   

    வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே.    1.46.7

இதில் வரும் அருமையான வரி, உமா பாட, சிவன் ஆடினார் என்பதாகும். அதிகை வீரட்டானத்தில் சம்பந்தர் பாடிய தேவாரம் இது.

ஆக சிவன் ஆடிய காட்சி, சுவற்றில் படமாகவோ கற்சிலையாகவோ, விக்ரகமாகவோ எங்கும் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்பர் பாடிய காலத்துக்குப் பின்னர் வந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் என்பதை அப்படியே காண முடிகிறது உலகிலேயே அழகான, அற்புதமான சிலை அது.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே..

1977ம் ஆண்டில் எங்கள் 45 பேரை டாக்டர் இரா நாகசாமி தமிழ்நாடு தொல்பொருட் துறை பேருந்தில் திருவனந்தபுரம் முதல் சிதம்பரம் வரை சுற்றிக் காட்டியபோது இச்சிலையின் முன் நின்று  அப்பர் தேவாரத்தை எடுத்துரைத்தார் ; கண்களை விட்டு அகலாத காட்சி அது.

ஆருத்ரா தரிசன நாளான இன்று அவன் ஆடலை மனக்கண் முன் கண்டு பாடிப் பரவுமோவாக

–subham—

Tags-  நடராஜா , நடனம் , வேந்தன், டாக்டர் நாகசாமி, , நிருத்தம்

ஜோதிடம் உண்மைதான்: அம்பலவாணர் கருத்து (Post No.11,635)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,635

Date uploaded in London – –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Xxx 

ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions)   ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்  போன்றது.

உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில்  சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .

தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர்.

இதே போல, ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் எது நிதர்சனமான சான்று (unquestionable evidence)  என்றும் அடுக்குகிறார் அம்பலவாணர். பேதிமருந்தின் பலனைப் பார்த்தாலேயே வைத்திய சாஸ்திரம் உண்மை என்பதை அறிவீர்கள்; ஒருவன் ஏன் அரசனாக இருக்கிறான், இன்னும் ஒருவன் ஏன் அடிமையாக இருக்கிறான் என்பதே பாவ புண்ணியத்தைக் காட்டிவிடும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பொன்மொழியும் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற வள்ளுவன் குறளும்  (37)  பாவ புண்ணிய பலன்களைச்  சு ட்டிக்காட்டுகின்றன.

அரிச்சுவடியில் ஹரி என்றோ ஓம் நமோ நாராயணா என்றோ எழுதுவதன் மூலம் திருமாலின் பெருமையும், யஜுர் வேதத்தில் நம சிவாய  என்ற மந்திரத்தைத் தாங்கிவரும் ருத்ரம் -சமகம் என்ற மந்திரத்தின் மூலம்  சிவ பெருமானின் பெருமையும் புலப்படும் என்கிறார்

Xxxxx

அடுத்த பாடலில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் பிறவியின் காரணமாக  குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார்  புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)

Old Articles on the same theme

ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா?

https://tamilandvedas.com › ஜோ…

16 Mar 2015 — இதுமட்டுமின்றி நாடி ஜோதிடம், கேரளத்தில் உள்ள சோழி சோதிடம் (பிரஸ்னம்) இவைகளும் …

You’ve visited this page 4 times. Last visit: 05/12/22

மணல் ஜோதிடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·Translate this page

7 Oct 2017 — தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279).

2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம்

https://tamilandvedas.com › 2700-…

16 Mar 2021 — 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம் ; மெகஸ்தனிஸ் அற்புத தகவல் (Post 9387).

ஜோதிடம் | Tamil and Vedas | Page 2

https://tamilandvedas.com › tag › page

ஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர்.

கயிறு சார்த்திப் பார்த்தல் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

8 Jun 2020 — ஜோதிடம்| Tamil and Vedas. tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது …

சோசியம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

·

15 Apr 2016 — இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே கட்டுரை …

ஆரூடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம்.

அறப்பளீசுர சதகம் அம்பலவாணர்

          அறப்பளீசுர சதகம் 52. உண்மையுணர் குறி

சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய

     சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!

  சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு

     தூயமாத் திரைசாட்சி ஆம்!

ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்

     காளடிமை யேசாட்சி ஆம்!

  அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்

     அரிச்சுவடி யேசாட்சி ஆம்!

நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர

     நமகசம கம்சாட்சி ஆம்!

  நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்

     நாளும் அர்ச் சனைசெய் சரணத்

தாதிநா யகமிக்க வேதநா யகனான

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அரி அயன் நாளும் அர்ச்சனைசெய் சரணத்து ஆதிநாயக –

திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய

முதன்மையான தலைவனே!, மிக்கவேத நாயகன் ஆன அண்ணலே –

சிறந்த மறைமுதல்வனான பெரியோனே!, அருமை …….. தேவனே!, சோதிடம்

பொய்யாது மெய்என்பது அறிவு அரிய சூழ்கிரகணம் சாட்சி ஆம் – கணித

நூல் பொய்படாது. உண்மையே என்பதற்கு அறிஞரேயல்லாமல்

பொதுமக்களால் அறியமுடியாத சூழும் கிரகணமே சான்று ஆகும், சொல்

பெரிய வாகடம் நிசம் என்கை பேதிதரு தூயமாத்திரை சாட்சிஆம் –

புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத் தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும், ஆதியில் செய்ததவம் உண்டு

இல்லை என்பதற்கு ஆள் அடிமையே சாட்சி ஆம் – முன்னே செய்த

நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அடிமையுமே சான்று

ஆகும். அரி தேவதேவன் என்பதை அறிய முதல் நூல் அரிச்சுவடியே

சாட்சிஆம் – திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்கற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும், மா தேவனே

நாதன் என்பதற்கோ ருத்ர நமகசமகம் சாட்சி ஆம் – சிவபெருமானே

தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் உருத்திர நமகசமகம் என்னும் மறைப்பனுவலே சான்று ஆகும், நாயேனை ரட்சிப்பது உன்பாரம் – நாய்

போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.

XXXX

அறப்பளீசுர சதகம் 53. பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,

     கல்வியும், கருணை விளைவும்,

  கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,

     கனரூபம் உளமங் கையும்,

அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,

     ஆண்மையும், அமுத மொழியும்,

  ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்

     ஆகிவரும் அன்றி, நிலமேல்

நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்

     நண்ணுமோ? ரஸ்தா ளிதன்

  நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது

     நாள்செயினும் வாரா துகாண்!

அலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) அலங்காரம்ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்

அண்ணலே – அழகாக மலர்ந்த கொன்றை மாலையை மிலைந்த

பெரியோனே!, அருமை …….. தேவனே!, கலங்காத சித்தமும் – குழம்பாத

மனமும்செல்வமும் – நல்ல பேறும், ஞானமும் – அறிவும்கல்வியும் –

கலையும், கருணை விளையும் – அருட்பெருக்கும்கருது அரிய வடிவமும் –

நினைவுக்கரிய உருவ அழகும் போகமும் – நுகர்ச்சியும் (அனுபவமும்),

தியாகமும் – கொடையும், கனரூபம் உள மங்கையும் – பேரழகுடைய

மனைவியும்,அலங்காத வீரமும் – அசைவில்லாத துணிவும், பொறுமையும் –

(பிறர் குற்றம்) பொறுத்தலும், தந்திரமும் – சூழ்ச்சியும், ஆண்மையும் –

ஆளுந்திறனும்அமுதமொழியும் – இனிய சொல்லும், ஆன இச்செயல்

எலாம் – ஆகிய இவை யாவும்சனன வாசனையினால் ஆகிவரும் அன்றி – பிறப்பின் தொடர்பினால்

இயற்கையிலே உண்டாகி வருமே அல்லாமல், நிலம்மேல் நலம்சேரும்

ஒருவரைப் பார்த்து – உலகில் நலம் பெற்று இருக்கும் ஒருவரைக்கண்டு,

அது பெறக் கருதின் நண்ணுமோ – அந்த இயல்பை அடைய நினைத்தால்

ஆகுமோ? இரஸ்தாளிதன் நற்சுவை தனக்குவர வேம்பு நெடிதுநாள்

தவம்செயினும் வாராது – இரஸ்தாளி வாழையின் நல்ல சுவை தனக்குக்

கிடைக்கவேண்டி வேம்பு நீண்ட நாள் தவம் புரிந்தாலும் கிடைக்காது.

     (க-து.) நல்வினையால் இயல்பாகவே அமையவேண்டிய இவை

செயற்கையால் அமையா.

— subham—-

Tags–ஜோதிடம், பாவ புண்ணியம், பிறவிக்குணம் , அம்பலவாணர், அறப்பளீசுர சதகம்

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 6 (Post.11,543-part 6)  

WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 6

Date uploaded in London – 6 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 18

வழிந்து பெருகும் மத நீர் யானையை

எழுந்து முன் நின்று தாக்கும் கொடுந்தோள்

வலியன் நந்தகோபன் மருமகள் நப்பின்னாய்!

புலர்ந்த பொழுதறிய கோழிகள் கூவலும் மாதவிப்

பந்தல் மேல் குயில்களும் கூவப் பூங்குழல் மணமும்

பந்தார் விரல்களையுடையவளே! சீ ரார் வளையொலிக்க

செந்தாமரைக்கையால் தாள் திறந்துன் அகமுடையோன்

பேர் பாட முறையிடுமெமை மகிழ் விக்க வேண்டி

வாயிலிற்றிரண்ட வனிதை குழாம் வாழியே.

பூ மகளோ! ஆழ்வான் பூங்கா வனத்துப்

புனையா ஓவியம் போன்ற பூங்கொடியோ!

புவி தவழ்ந்த பொன் நாள் முதல் பூ வாய்

புகன்றதோ பொய்யுடலில் மெய்யாகப்

பொருளுள்ளடங்கியுமடங்காத வனுமானப்

புருடோத்தமன் நாராயணனே.*

நாராயணன்

XXXX

மார்கழித்திங்கள் 19

குத்து விளக்கொளியில் கோட்டுக்கால் கட்டில் மேவிய

அழகு,தண்மை,மென்மை,வெண்மை, நறுமை

குழைத்த படுக்கை ஏறிய கோவலனே!கொத்தலர்

கூந்தலும் குவிந்த தனமுடைய நப்பின்னை மார்பு

தழுவிய பறந்த மார்பினனே! திறவாதோ திருக்கண்

பாராதோ எமை என கெஞ்சிய வஞ்சியர்க்கு

போறாதிம்மைவிழிக்கண்ணாள் மார்புறங்கிய

பொழு தென அவன் குறை கூறியது தகுமுனக்காயினும்

நீ! எங்களைப் புறக்கணிப்பது பொருந்தாதோ உன்

கருணையுள்ளத்துக்கெனப் பாடிய கோதை வாழியே

நாளுமொரு நாளும் திருநாளாகா

நாரணன் நினைவிலா நாளானால்

ஊரும் பேரூராயினு மூராகா

உருவமோ அருவமோ கோயிலிலா

பேரும் பலபேருடையான் பேணுவதோ

பெருந்தவத்தோரடி பணிந்தோரை

தேறுமிவர் பிறவி கடை தேறும்

பெருந்தவத்தோர் பின் செல்ல

நாராயணன்

XXXXXXX

மார்கழித்திங்கள் 20

முப்பத்து மூன்று வகையான அமரர்க்கு வருமல்லல்களை

முப்போதேயறிந்து எப்போதும் முன் சென்று செற்றாரை

முறியடிக்கும் விருப்பு வெறுப்பில்லா விமலன்

துயிலெழமூத்தாள் திருமதிக்கிணையான பொலியுமங்கங்களுடைய

ஓரகத்தாள் நப்பின்னையை துயிலெழுந்து ஆடியும்

ஆலவட்டமும் தந்து அவள் நாயகனை உடனே தம்முடன்

நீராட்டப் பரிந்துரைக்க வேண்டிய கோதை வாழியே

றி வெண்ணெய் களவாடியுண்ட வாயோனே

உலகமுண்ட வாயோனாய் உள்ளோனாக

உலகனைத்தும் உள் பொருளானோன், களவாடி

உறவாடிய நெஞ்சங்கள் பலவாயினும் அவனுள்

நிறைவாய் நிலைப்பவள் நிலமங்கை கோதையே

நாராயணன்

XXXXX

மார்கழித்திங்கள் 21

ஏந்திய கலசங்கள் பொங்கி வழிந்து,கை மாற

இடைவிடாப் பால் சொரியும் என்ணற்றப் பசுக்களை

உடையவனான நந்தகோபனின் குமரனும் மறையுள்

உறைவதை மறையே அறியாப் பெருமையுடையவனும்

குறையாத தேசில் நிறைவாய் ஒளிரும் பரமனே! வலி

குலைந்தப் பகையோர் வலிமையறிந்துனதடிமையராய்

கூடிய உன் வாயிலில் எளியோராய் உனதடி தலை

குனிந்த குலமக்களை துயிலெழுந்தருள்வாயே வென

குலத்தோர் குறை தீர்க்கப் பாடிய கோதை வாழியே

வாடினாள் வருந்தினாள் வாயினாற்பாடினாள்

தேடினாள் நாடினாள் ஓடினாள் ஆடினாள்

மூடினாள் நாணத்தால் முகத்தை முகுந்தனின்

மூச்சுத் தென்றலாய் தொட்ட வெண் மதியாளை

முகில் வண்ணன் திரையிடச் சிறையில்

பிறந்த மறையோனை மனதிற்சிறையிட்ட

நில நங்கை வாழியே.

நாராயணன்

Xxxx

மார்கழித்திங்கள் 22

அகண்டு பறந்து விரிந்த அழகிய இப்புவியை

ஆண்ட பெரு மன்னர்கள் அகம்பாவம்

அற்றுறுதியாகி அனந்தனுன் மஞ்சத்தடி தஞ்சம்

அடைந்தது போல் கூடியோரெம்மீது பிளந்தவாய்

சதங்கையுள்ளாடும் மணி போன்று மலர்ந்து

மலராத செந்தாமரைக் கண்ணால் விடு

மதியும் தொடு சூரியனுமாய் ஒருங்கிணைந்த

உன் பார்வையொன்றே போதுமென தங்கள்

சாபம் நீக்கிட வேண்டிய நங்கையர் வாழியே

படி வாயில் நின்றரங்கனழகில் அகமகிழ்ந்து

கூடிய ஆழ்வார்கள்  பாசுரங்களால்   தேசுடையோனைப்

பாடியும் மூடிய கண்கள் திறந்தவன், தேடியவள்

கடைவாயில் நிற்பது கண்டு பின் தங்குமணங்கோ

நடை பயின்ற நாள் முதலென்னைத் தன் நாவிலே

குடிவைக்க இடை வந்தோர் நீவீர் சற்றே விலகி எம்

அடி சேர்க்குமவளை யாம் கைப்பிடிக்கும் நன்னாள்

கூடிற்றோ வென குமிழ்ந்த வாயுடையரங்கன்

கூறாமல் கூறினானோ

நாராயணன்

To be continued………………………………………

தமிழுக்குக் கொடுத்த ஓரி! (Post No.11,634)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,634

Date uploaded in London –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 43 

தமிழுக்குக் கொடுத்த ஓரி!

ச.நாகராஜன் 

பழங்காலத்தில் கொங்குமண்டலத்தில் சிறப்புற அமைந்துள்ள பகுதி கொல்லி மலை.

இந்தக் கொல்லி மலைக்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் பெரும் வள்ளலாக வாழ்ந்து வந்தான் ஓரி என்னும் மன்னன்,

தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளும் படி எல்லா வளப்பமும் பொருந்தியதாக அமைந்திருந்தது கொல்லி மலை. கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்டு வந்தான் ஓரி.

அவன் அல்லும் பகலும் தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்ற பெயரையும் பெற்றான்.

 இவனை ஆதனோரி என்று வல் வில் ஓரி என்றும் கூறுவர்.

அகநானூறு, “ஒரி பல்பழப்பலவின் பயங்கெழு கொல்லி” என்றும் குறுந்தொகை, “ வல்விலோரி கொல்லிக் குடவரை” என்றும் கூறுவதைப் பார்க்கலாம்.

கொல்லிக் குடவரை என்பதால் கொல்லி மலையின் மேற்குப் பகுதியே இவனது பகுதி எனத் தோன்றுகிறது.

கொல்லி மலையின் மேற்குப் பகுதி பூந்துறை நாட்டின் இணை நாடான ஏழூர் நாட்டின் தொடர், ராசிபுர நாட்டின் பகுதி, வாளவந்தி நாட்டின் பங்கான தூசியூர் நாட்டினிடமும் இது பொருந்தியுள்ளது.

கடையெழு வள்ளல்களில் இன்னொருவனான காரிக்கு இவன் பகைவன். பரணர் நற்றிணையிலும் (265ஆம் பாடல்), கபிலர் 320ஆம் பாடலிலும், குறுந்தொகை 100ஆம் பாடலிலும் இவன் சிறப்பிக்கப்பட்டிருக்கிறான்.

கொல்லி மலையின் மேற்குப் பகுதிகள் இன்றும் சிறப்புற இருக்கின்றன. வாளவந்தி நாடு – வலப்பூர் நாடு – அரியூர் நாடு – குண்டூர் நாடு – தேவானூர் நாடு – சேவூர் நாடு – தின்னனூர் நாடு – ஆகிய இந்த ஏழு நாடுகளும்  சேலம் மாவட்டத்தில் நாமக்கல் பகுதியில் உள்ளன.

பயில நாடு – பிறக்கரை நாடு – சித்தூர் நாடு – இடைப்புளி நாடு – திருப்பளி நாடு – குண்டுனி நாடு – ஆலத்தூர் நாடு ஆகிய இந்த ஏழு நாடுகளும் ஆற்றூர் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஓரியை கொங்குமண்டல சதகம் பாடல் 43இல் பாராட்டிப் புகழ்கிறது இப்படி:

விரையார் தொடையணி மூவேந்த ராசை மிகுந்துநச்சத்

தரைமீ தெலாவள முஞ்செறி கொல்லித் தடவரையாள்

துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரந்து செம்பொன்

வரையா தளித்தநல் லோரிவள்ளல் கொங்கு மண்டலமே

 பொருள் :

தமிழ்நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளத் தக்க எல்லா வளப்பமும் பொருந்திய கொல்லி மலைக்கு அரசனாய், அல்லும் பகலும் ஓயாது தமிழுக்குச் செம்பொன் கொடுப்போனான ஓரி என்னும் வள்ளலும் கொங்குமண்டலத்தைச் சார்ந்தவனே என்பதாம்.

***

 tags-   கடையெழு வள்ளல், ஓரி ,கொல்லி மலை

வேத மழையில் நனைய ஆசையா? உபநிடதத் தென்றலில் உலவ ஆசையா? (11,633)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,633

Date uploaded in London – –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

வேத மழையில் நனைய ஆசையா? உபநிடதத் தென்றலில்

உலவ  ஆசையா?

லண்டன் சுவாமிநாதனின் புதிய புத்தகம் இருக்கையில் இரண்டும் நிறைவேறுமே !

புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொருள் பொதிந்த அறிவியல், சமய, பொது அறிவுரைகள் உளவா?

இதோ விடை கூறும் புத்தகம் வந்துவிட்டது

புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

பொருளடக்கம்

1.புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல்

கள்ளப்பிள்ளையார் வரை!

2.நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்!

3. வலஞ்சுழி, இடஞ்சுழிப் பிள்ளையார்கள்

4.வாதாபி கணபதிம் பஜே ஹம்

5.விநாயகரின் ரசாயன யுத்தம்

6.பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து!

7.விநாயக கவச அற்புதங்கள்; கவசம் எழுதியது யார் ?

8. விநாயகப் பெருமானின் 16 நாமங்கள்

9.பிள்ளையார் வினா-விடை (க்விஸ்)

(10).21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?

11.புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா?

12.புராணங்களின் காலம் என்ன?

13.ஒரே பாடலில் 18 புராணம்

14.இந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள்!

15.‘‘ஞானப் படகு’’ பற்றி தேவாரமும் கீதையும் தரும் தகவல்

16.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்

 இந்திய வரலாறு – 1

17.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்

 இந்திய வரலாறு – 2

18.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில்

 இந்திய வரலாறு – 3

19.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;

ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 4

20.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;

ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 5

21.உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்;

ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 6

22.திருவிளையாடல் புராணம் உண்மையே!

23.அதிசய மன்னர்கள் எழுதிய அற்புத புத்தகங்கள்!

(24). 72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள்

25.அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது!

26.மாநுடப் பிறவி அரிது! அரிது!!

27.மன்னர்களை வசப்படுத்திய பேரழகி

28.புத்தர் பற்றிய ஐந்து அதிசய விஷயங்கள் !

29.இந்தியா 250,000 ஆண்டு பழமையானது

30.இந்திய அதிசயம்: இந்தியாவின் நீண்ட நெடுஞ்சுவர்

31.வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

  32.பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

33. தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

34.தமிழ் மொழி பற்றி கம்பன்

 35.அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடியினர் வழிபடுவது ஏன்?

36.சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

37.அடங்காதவரை அடக்குவது எப்படி?

38.தமிழா , சோதிடத்தை நம்படா!  வாகடத்தை நம்படா!!

******************

BOOK 53

உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

பொருளடக்கம்

1.ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!

2.உபநிஷத அற்புதங்கள் – 1

3.உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

4.உபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

5.வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்!

6.காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!

7. த…………த…………த…………தேசிய கீதம் ஆக்கலாமே!

8. 108 உபநிஷத்துகளின் பட்டியல்

9.ஸம்ஸ்க்ருதத்தில் 650 நாடகங்கள்- நேருஜி தகவல்

10.வரருசி தமிழனா? க-ட-ப- யாதி எண் முறையை

அவர் கண்டுபிடித்தாரா ?

11.சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம் !

12.மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும்

அதிசயத் தகவல்கள்

13.வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2

14. காடுகள் பற்றி ரிக் வேத கவிதை – கொஞ்சம் என் சுய சரிதை

15.ரிக் வேதத்தில் குழப்பத்தை உண்டாக்கும்  ‘மனு’க்கள்!

16.ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம்

17.வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!

18.வானவியல் முறையில் வேதத்தின் காலம்!

19.ஸம்ஸ்க்ருதம் படித்த வில்லியம் ஹென்றி

ராபின்ஸனின் சுவையான கதை

20. ‘நாங்கள் ரிஷிகள் ஆகவேண்டும்’ – ரிக் வேதத்தில் கோரிக்கை

21.ரிக்வேதத்தில்  வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம்

22.ரிக்வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள் -1

23. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!-2

24. ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!- Part 3

25.ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4

26.அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை!

27.கிரிப்பித் முகத்திரை கிழிந்தது! அழியாத மா கவிதை –

ரிக் வேதக் கவிதை! – பகுதி 2

28. அழியாத மா கவிதை -3, ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை -3

29. தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -Part 1

30.தமிழில் ரிக் வேதக் கவிதைகள் -2

**************************

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

 tags-வேத மழை, உபநிடதத் தென்றல், புராணங்கள், புளுகு,  மூட்டைகளா?   ,