அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி– கம்பன் வேறுபாடு-Part 2 (Post no.11,603)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,603

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது.

அனுமனை முதல் சந்திப்பிலேயே மிகவும் விரிவாக வால்மீகி வருணித்துவிடுகிறார். ஆனால் கம்பனோ சுருக்கி வரைகிறான் . பின்னர் பல இடங்களில் அனுமன் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான்.

வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காந்த அனுமன் படலத்தைத் தொடர்ந்து காண்போம். ஒவ்வொரு ஸ்லோகத்தையும்  நாம் சிறநத பேச்சாளருக்கு ஒப்பிடலாம். சொல்வன்மை அதிகாரத்தில், வள்ளுவன் குறிப்பிடும் அனைத்து பண்புகளையும் காணலாம்..

xxx

अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः |
कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || ४-३-३३

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஞ்ஜனஸ் தயாஹா

கஸ்ய ந ஆராத்யதே சித்தம் உத்யத் அஸே  அரேஹே அபி 4-3-33

உடலில் மூன்று இடங்களிலிருந்து வரக்கூடிய அவனது பேச்சு,  வசீகரிக்கச் செய்கிறது . எவனுடைய இதயத்தைத்தான் இது தொடாது? ஓங்கிய கத்தியுடன் வருபவனையும் கவரக்கூடியது .

அதாவது உருவிய கத்தியுடன் தாக்குவதற்கு வரும் எதிரியும் அனுமன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில்  கத்தியைக் கீழே போட்டுவிடுவானாம்

மூன்று இடங்களில் இருந்து சொற்கள்  வரும் என்று சம்ஸ்க்ருத உச்சரிப்பு PHONETICS சாஸ்திரம் சொல்கிறது உரசி = மார்பு,சிரஸி =தலை , கண்ட = கழுத்து என்று வியாக்கியானக்காரர்கள் விளக்குவர்.

XXX

एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |

सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || ४-३-३४

ஏவம்  விதோ யஸ்ய தூதோ ந பவேத்  பார்த்திவஸ்ய து

ஸித்தயந்தி  ஹி  கதம் தஸ்ய கார்யாணாம்  கதயோ அனக

மாசு மருவற்ற தூயவனே (லெட்சுமணா )! இப்படிப்பட்ட (சொல்வன்மையுடைய ) ஒரு தூதன் ஒரு அரசனுக்கு இருந்தால் அவன் வெல்ல முடியாத, சாதிக்க இயலாத , காரியம் ஏதேனும் உண்டோ !

இந்த இடத்தில் வள்ளுவனின் தூது என்ற அதிகாரத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

XXX

एवम् गुण गणैर् युक्ता यस्य स्युः कार्य साधकाः |

तस्य सिद्ध्यन्ति सर्वेऽर्था दूत वाक्य प्रचोदिताः || ४-३-३५

ஏவம் குண கணைர் யுக்தா யஸ்ய ஸ்யுஹு கார்ய ஸாதகாஹா

தஸ்ய ஸித்தயந்தி ஸர்வ அர்த்தா தூத வாக்ய ப்ரசோதிதாஹா 4-3-34

“Should a king have this kind of work accomplishers with a variety of virtues, all his objectives will be achieved impelled by such an envoy’s words…” Rama thus said to Lakshmana. [4-3-35]

பல்வேறு குணங்கள் ஒருங்கே கூடிய இப்படிப்பட்ட சாதனையாளர்கள் ஒரு அரசனுக்கு இருந்தால் அந்த தூதனின் சொல்வன்மையால் அரசனின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறிவிடும்.

இந்த இடத்தில் இரண்டு, மூன்று முக்கிய விஷயங்களை நாம் அறிதல் வேண்டும்.

உலகிலேயே தூதர் AMBASSADOR , MESSENGER என்ற பதவியை உருவாக்கி அதற்கு இலக்கணம் கற்பித்தது இந்துக்கள்தான். சாம, தான, பேத , தண்ட  என்ற நான்கு வித உபாயங்களில் முதல் உபாயம், ஒரு போரைத் தவிர்ப்பதற்காக தூது விடுவதாகும் . மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதை விரிவான இலக்கணத்துடன் காண்கிறோம்.பெண் கொலை கூடாது என்று சொல்லும் நீதி சாஸ்திரங்கள் அனைத்தும் தூதரைக் கொல்லக்கூடாது  என்றும் சொல்லும் . அனுமனைபிடித்து வாலில் தீ வைக்கச் சொன்ன இடத்திலும் இந்த தூதர் இலக்கணம் வருகிறது. இந்துக்கள் சொன்னதை இன்று உலகமே பின்பற்றுகிறது.

உலகில் எந்த நாட்டில் எந்த நாட்டுத் தூதரகம் இருந்தாலும் அதற்குள் வேறு எவரும் நுழைய முடியாது. அங்கு ஒருவர் அடைக்கலம் புகுந்துவிட்டால், அது இருக்கும் நாட்டின் அரசு கூட அவரைத் தொட முடியாது. இது பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காண முடியாது.

ரிக் வேதத்தில் உள்ள நாய் விடு தூது கவிதைதான் உலகின் முதல் தூது கவிதை (Sarama in Rig Veda= Hermes in Greek).

இந்த குறிப்பிட்ட சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் தூத வாக்ய என்ற பெயரில் ஒரு பிரபல நாடகமே உள்ளது காளிதாசனுக்கும் முந்தைய , காளிதாசனால் புகழப்பட்ட, பாஷா என்ற கவி எழுதிய 13 நாடகங்களில் ஒன்று தூத வாக்ய. Duta Vakya by Bhasa அது கிருஷ்ணரின் தூது பற்றிய நாடகம். கிருஷ்ணன் உள்ளே வரும்போது எவரும் எழுந்து  மரியாதை செய்யக்கூடாது என்று துரியோதணன் உத்தரவு போடுகிறான். ஆனால் அனைவரும் தம்மை அறியாமலே எழுந்து  நின்று தூதருக்குரிய மரியாதை தருகின்றனர். அரண்மனை சுவரில் இருந்த ‘திரவுபதி ஆடை உருவும் படத்தை’ அகற்றுங்கள் என்று கிருஷ்ணன் சொன்னவுடன் துரியோதனன் பயந்து போய் அகற்றுகிறான். பாண்டவர்களுக்கு  எந்த நிலமும், நாடும் கொடுக்க முடியாது என்கிறான். இறுதியில் தூதரை அவமானப்படுத்திய குற்றத்துக்காக திருதராஷ்டன் வந்து, கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அருமையான நாடகம். அதற்கு பாஷா பயன்படுத்திய சொல் இந்த ஸ்லோகத்தில் வருவது சாலப்பொருந்தும்.

XXX

இதன்பிறகு சுக்ரீவனை அழைத்து வருமாறு லெட்சுமணனை ராமன் அனுப்புகிறான். அனுமனும் அவனுடன் செல்கிறான்

XXX

இந்த ஸ்லோகங்களுக்கு உரை எழுதிய உரைகாரர்கள் சிக்ஷா (PHONETICS உச்சரிப்பு) சாஸ்திரத்தில் உள்ள பல விஷயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றும் எது சரியானது என்றும் பல கவிதைகள் உள்ளன. எது சாலச் சிறந்தது என்பதை மட்டும் அனுமனுடன் ஒப்பிடுவோம்.

maadhuryam akSharavyaktiH pada cchedaH tadaa tvaraa

dhairyam laya samanvitam ca ShaT ete paaThakaaH guNaaH

மாதுர்யம் அக்ஷர வ்யக்திஹி பத சேதஹ ததாத் வர

தைர்யம் லய ஸமன்விதம் ச ஷட் ஏதே பாதகாஹா குணாஹா

With sweet voice, enunciated syllables, properly parting the words, quick and confident, and rhythm included are the six best qualities of best reciters.

இனிமையான/கவர்ச்சியான குரல் , ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரிக்கும் விதம் , சொற்களைப் பிரிக்க வேண்டிய இடங்களில் பிரிக்கும் முறை , விரைவாக, நம்பிக்கைக்கையுடன் சொல்லும் விதம் , தடையற்ற பிரயோகம் ஆகிய ஆறும் சிறந்த பேச்சாளரின் குணங்களாகும்

(ஆகாசவாணியில் மற்றும் பி பி சி தமிழோசையில் சிறப்பாக செய்தி வாசித்த பலருடைய நினைவுகள் நமக்கு பளிச்சிடும் )

XXX

மேற் கூறியவற்றை ஒப்பிட குறள் பாக்கள் :

[பொருட்பால்அமைச்சியல்தூது]

ஆறு குணங்களை வள்ளுவன் 3+3 =6 ஆக தருகிறான்

 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு- 684

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க

Xx

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு–688

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

xxx

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

[பொருட்பால், அமைச்சியல், தூது]-குறள் 683

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

நூலாருள் நூல்வல்லன்= கவீம் கவீநாம் என்ற ரிக் வேத (Rig Veda) சொற்களின் மொழியாக்கம். இதைச் சொல்லித்தான் பிராமணர்கள் பூஜையைத் தொடங்குவர்  (கணாணாம்  த்வா …….. மந்திரம்)

Xxx

சொல்வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் -648

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்–643

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து –645

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது– 647

இவை அனைத்தும் வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில் இருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.

–subham—

TAGS- வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில்

ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர்  போடும் மதிப்பெண்! (Post 11,602)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,602

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 38. இழிவு

இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை

     என்னுமவன் அவனின் ஈனன்

  ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்

     திடும்மூடன் அவனில் ஈனன்!

உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி

     உதவிடான் அவனில் ஈனன்!

  உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்

     உலுத்தனோ அவனில் ஈனன்!

பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்

     பலகால் அலைந்து திரியப்

  பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே

     பாரில்எல் லோர்க்கும் ஈனன்!

அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்

     அமுதனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த

இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,

எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………

தேவனே!,

புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்

இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –

அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்

அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்

மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு

எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே

நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்

உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்

பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறிபலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகேஇல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்

எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.

     (வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,

இயல்வது கரவேல்’ ‘

ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.

xxx

1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,-  45 / 100 Marks

 2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks

3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks

4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி

ஏமாற்றுவது இழிவு—25/100 Marks

5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்

இழிவு- 15 /100 Marks

6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks

Xxx

VALLUVAR’S ATTACK குறளில் வள்ளுவர்

இந்த ஆறு வகையானோரை சில பாடல்கள் மூலம் ஒப்பிட்டு மகிழ்வோம்

இரவச்சம் அதிகாரம்

BEGGING IS WORSE; NOT TO BEG IS WORTH MILLION DOLLARS

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்-குறள் 1061

சீ சீ!!  நண்பர்களிடம் கூட பிச்சை எடுக்காதே; அது கோடி ரூபாய்க்கு சமம்.

XXX

BODDY HELL ! LET GOD BRAMA ALSO  BEG

குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் -குறள் 1062

ஏய் பிரம்மா ! ஏன் பிச்சைக்காரர்களைப் படைத்தாய் ? ஒழிந்து போ ! நீயும் பிச்சை எடு ‘ அப்ப தெரியும் உனக்கு.

XXX

VALLUVAR’S SARCASM

குறள் 1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்—1070

கடைசி குறளில் வள்ளுவர் SACASTIC REMARK நக்கல் /பகடி/ நையாண்டி செய்கிறார் .

அது சரி; உனக்கு பிச்சை போட முடியாது என்று சொன்னவுடன் பிச்சைக்காரன் உயிர் பறந்து போயிடுது ! ஏண்டா மஹா பாவி! இல்லன்னு சொன்னியே! உன் உயிர் எங்கடா ஒளியுது HIDING?/ எனக்கே கண்டு பிடிக்க முடியலையே!!

XXX

AVVAIYAR CLASSIFICATION

உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

 “நல்வழி”  ஔவையார் 

உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு;  தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி

XXX

Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!

க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி

ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி

“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”

இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!

xxx 

Trees and Men; Three Types of Men

3 வகை மனிதர்கள் பாக்கு மரம்பனை மரம் தென்னை மரம்

தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்

பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே  பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.

தென்னைமர மனிதர்கள்

தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.

பாக்கு மரமனிதர்கள்

பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.

xxxx

முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees

தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.

தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்

இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்

கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா 

— SUBHAM —

tags-கருமிகள், வகை, அம்பலவாணர் ,மதிப்பெண் 

பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட  72 கலைகள்! – 1 (Post.11,601)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,601

Date uploaded in London – 30 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 1 

ச.நாகராஜன் 

பாரத தேசத்தை அடியோடு அழித்து கிறிஸ்தவ மதத்தை இங்கு வேரூன்றச் செய்ய வேண்டி, இந்த நாட்டை கிறிஸ்தவ நாடாக ஆக்க முயற்சித்த பாதகன் மெக்காலே.

அவனது பாடத் திட்டத்தால் உடையால் இந்தியராகவும் உள்ளத்தாலும் உணர்வாலும் பழக்க வழக்கதினாலும் கிறிஸ்தவராக மாற்றச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பாடத் திட்டம் என்ன?

நமக்குத் தெரிந்த வரை  மூன்று பாடங்கள் உண்டு – விஞ்ஞானம், கலைகள் மற்றும் வணிகம்.  (Science, Arts and Commerce)

1978ஆம் ஆண்டு முடிய இந்தியாவில் நாம் எஞ்ஜினியரிங் பாடத் திட்டத்தில், சிவில், மெகானிகல், எலக்ட்ரிகல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தோம்.

1858ஆம் ஆண்டுக்கு  முன்னர் பாரதப் பள்ளிக்கூடங்களில் 50 முதல் 72 விதமான கலைகள் கற்றுத் தரப்பட்டன என்று சொன்னால் அனைவருக்கும் இன்று மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!

திட்டமிடப்பட்டு இந்தப் பள்ளிகள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன.

1811ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் அதே ஆண்டில் பாரதத்தில் எத்தனை பள்ளிகள் இருந்தன தெரியுமா?

ஏழு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பள்ளிகள்!

7,32,000 பள்ளிகள்!!

அந்தப் பள்ளிகள் கீழ்க்கண்ட பாடங்களைச் சொல்லிக் கொடுத்தன:

 1) அக்னி வித்யா (ஆற்றல்)

 2) வாயு வித்யா  (காற்று)

 3) ஜல வித்யா (நீர்)

 4) அந்தரிக்‌ஷ வித்யா (விண்வெளி விஞ்ஞானம்)

 5) ப்ருத்வி வித்யா ( சற்றுப்புறச் சூழல்)

 6) சூர்ய வித்யா (சூரிய ஆற்றல்)

 7) சந்த்ர மற்றும் லோக் வித்யா (சந்திரனைப் பற்றிய பாடம்)

 8) மேக் வித்யா (காலநிலை முன்னறிவிப்பு)

 9) தாது ஊர்ஜா வித்யா (எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றல்)

10) திவா சா ராத்ரி வித்யா (சர்காடியன் அறிவு)

11) சிருஷ்டி வித்யா (படைப்பும் அபிவிருத்தியும்)

12) ககோள விக்ஞான் (ஜோதிர் வித்யா – வானவியல்)

13) பூகோள வித்யா (பூகோளம்)

14) கால வித்யா (காலம் பற்றிய படிப்பு)

15) பூகர்ப்ப வித்யா (நிலவியல் மற்றும் சுரங்கத் தொழில்)

16) க்ரஹ ரத்ன மற்றும் தாது வித்யா (ரத்தினங்கள் மற்றும் உலோகங்கள்)

17) ஆகர்ஷன் வித்யா (புவி ஈர்ப்பு விசை)

18) ப்ரகாஷ் வித்யா (ஒளி ஆற்றல்)

19) சஞ்சார் வித்யா (தகவல் தொடர்பு)

20) வைமானிக் சாஸ்த்ர (விமானவியல்)

21) ஜல்யான் வித்யா (நீரில் செல்லும் வாகனங்கள்)

22) ஆக்னேய அஸ்த்ரா ( தீக் கருவிகள் மற்றும் வெடிமருந்து)

23) ஜீவ விக்ஞான் வித்யா (உயிரியல்)

24) யக்ஞ வித்யா ( உலோக அறிவியல்)

25) வ்யாபார் வித்யா (வணிகவியல்)

26) க்ரிஷ் வித்யா (விவசாய இயல்)

27) பசுபாலன் வித்யா (மிருகவியல்)

28) பக்ஷி பாலன் வித்யா (பறவைகள் வளர்ப்பு)

29) யந்த்ர கதி சாஸ்த்ரம் (இயந்திரவியல்)

30) யான் நிர்மாண் (வாகன வடிவமைப்பு)

31) ரத்னாகர் (அலங்காரம் மற்றும் நகைகள் வடிவமைப்பு)

32) கும்ப்கர் வித்யா (பானைகள் செய்தல்)

33) லோஹார் (கொல்லர்)

34) தக்காஸ் (உரிமை வரி)

35) சித்ர சில்பம் (சாயமேற்றல் மற்றும் வண்ண ஓவியக்கலை)

36) சூத்ரதார் (தச்சுத் தொழில்)

37) பரிவாஹன் சஞ்சார் வா வியாபார் (இடப்பெயர்வு மேலாண்மை)

38) வாஸ்துகார் வித்யா (கட்டிடக் கலை)

39) ரந்தான் வித்யா (சமையல் கலை)

40) வாஹன் வித்யா (வாகனம் ஓட்டுதல்)

41) ஜலபாத் பரிவாஹன் (நீர்நிலை மேலாண்மை)

42) சாங்கிகீ (புள்ளிவிவர இயல்)

43) பசு-சிக்ஷா (கால்நடை மருத்துவம்)

44) உத்யான்பாலன் (தாவரவியல்)

45) வன பாலன் (வனவியல்)

46) சஹ்யோகீ (மருத்துவத் துறை உதவிப் பிரிவு)

47) பௌத ரஸாயன கணித சாஸ்த்ரம் (அறிவியல்)

48) ஆயுர்வேத சிக்ஷா (மருத்துவம்)

49) சல்ய சாஸ்த்ரம் (அறுவை சிகிச்சை)

50) அஷ்டாங்க யோகா (யோகம்)

51) மானசிக் ரோக சிகித்ஸா (உளவியல் சிகிச்சை)

52) பாஷா வியாகரண், சாஹித்ய, சதார்ஷன் (மொழி, இலக்கணம், காவியம் உள்ளிட்டவை)

இவை அனைத்தும் பாரதப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயரின் பாடத்திட்டத்துடன் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் மறைந்து விட்டன.

இந்தப் பள்ளிகள் எப்படி மறைந்தன?

அடுத்துப் பார்ப்போம்.

*** (தொடரும்)

அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி- கம்பன் வேறுபாடு-Part 1 (Post No.11,600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,600

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx

யார் கொலோ சொல்லின் செல்வன்? என்று அநுமனைப் பார்த்து ராமபிரான் வியந்ததாக கம்பன் சொல்லுவான் .

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றேயார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

Xxx

कपिरूपं परित्यज्य हनुमान्मारुतात्मजः।

भिक्षुरूपं ततो भेजे शठबुद्धितया कपिः4.3.2।।

கபி ரூபம் பரித்யஜ்ய ஹநுமான் மாருதாத்மஜஹ

பிக்ஷு ரூபம் ததோ பேஜே சட புத்தி தயா கபிஹி

Hanuman, son of the Wind god, with an ingenious mind assumed the guise of a mendicant.

வாயு பகவானின் மகனான அனுமன் , குரங்கு உருவத்தை விட்டுவிட்டு , புத்திசாலித்தனமாக , பிச்சை கேட்கும் ஒரு சந்நியாசி உருவத்தை எடுத்துக்கொண்டான்.

ஆனால் கம்பனோ பிரம்மச்சாரி (மாணவன் )உருவத்தை எடுத்துக்கொண்டதாகச் சொல்லுவான்

மாணவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை,  நாம் இன்று ஸ்டூடெண்ட் STUDENT என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.

“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).– கம்ப ராமாயணம் – கிட்கிந்தா காண்டம் — அனுமன் படலம்.

Xxxx

வால்மீகி சொல்லுவதைப் பார்ப்போம்

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।

नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम्4.3.28।।

நான்ருக்வேத வினீதஸ்ய நாயஜு ர்வேததாரிண ஹ

நாஸாமவேத விதூஷஸ் சக்யமேவம் விபாஷிதும்

ஒருவன் ருக், யஜுர், சாம வேதங்களைக் கற்காவிட்டால்  இவ்வளவு நன்றாகப் பேச முடியாது.

Xxx

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।

बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्4.3.29।।

நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ ன மனேன பஹுதா ச்ருதம்

பஹு வ்யாஹரதா அநேந ந கிஞ்சித் அப சப்திதம்

‘Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech.

நிச்சயமாக அவன் முழு இலக்கணத்தையும் படித்திருக்கவேண்டும் . அவன் பேசிய பேச்சில் ஒரு தவறான சொல்கூட வரவில்லை.

Xxx

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा।

अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्4.3.30।।

நமுகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோர்ஸ்ததா

அன்யேஷ்வபி  ச காத்ரேஷு தோஷ ஸ் ஸம்விதிதஹ க்வச்சித் 

No fault can be found in his face, eyes, forehead, between the eyebrows or any other part of his body (during his expression).அவனுடைய  முகத்திலோ கண்களிலோ நெற்றியிலோ, புருவங்களிலோ அல்லது உடலின் வேறு எந்த உறுப்பிலும் குற்றம், குறை எதையம் காணவில்லை

xxx

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम्।

उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे4.3.31।।

அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிளம்பிதம் அத்ருதம்  

உரஸ்தம் கண்டகம் வாக்கியம் வர்ததே மத்யமே ஸ்வரே

அவிஸ்தரம் – வள வள என்றும்

அஸந்திக்தம் – விட்டு விட்டும்

அவிளம்பிதம் – இழுத்து இழுத்தும்

அத்ருதம் – விரைவாகவும் இல்லை.

 வாக்யம்- வாக்கியங்கள் / சொற்றொடர்கள் 

உரஸ்தம் – உள்ளத்திலிருந்தும்

கண்டகம் – கழுத்திலிருந்தும்  

மத்யமே – நிதானமான

ஸ்வரே – குரலில்

வர்ததே- இருக்கின்றன /பெருக்கெடுக்கின்றன

Xxx

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சொற்பொழிவுகள்

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।

उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम्4.3.32।।

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிளம்பிதாம்

உச்சா ரயதி கல்யாணீம்  வாசம் ஹ்ருதய காரிணீம்

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம்- செம்மையான சொற் பிரயோகம்

 அத்ருதாம் -விரைவாகவு மில்லை

அவிளம்பிதாம் – ஜவ்வாக இழுக்கவும் இல்லை

கல்யாணீம் –  மங்களகரமான

ஹ்ருதய காரிணீம் – உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

வாசம் – வாக்கியங்களை

உச்சாரயதி- பேசுகிறார் .

இந்த ஸ்லோகத்தைத்தான் வெள்ளித்தட்டில் பொறித்து வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரிக்கு (Silver Tongued Right Honourable V S Srinivasa Sastry) சென்னை அறிஞர்கள் 1944-ம் ஆண்டில் பரிசளித்து , பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.. அவர் அந்த ஆண்டில் வால்மீகி ராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் 30 அற்புதமான சொற்பொழிவுகள் நடத்தியமைக்காக அளிக்கப்பட பரிசு அது.அந்த சொற்கள் அனுமனின் சொல் நயத்துக்கும் அவரது இலக்கிய நயத்துக்கும் பொருத்தமானவை.

ஆங்கில மொழியில் அபாரமான அறிவு பெற்றவர்கள் உலகில் ஐந்தே பேர்தான் . அவர்களில் ஒருவர் வலங்கைமான் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி . காந்திஜியால் என் அண்ணன் எனறு அழைக்கப்பட்டவர்

xxx

கம்பன் இவ்வளவு விரிவாக அனுமனை வருணிக்கவில்லை இரண்டே பாடல்களில் முடித்துவிடுகிறான்

To be continued…………………………………………….

TAGS- வால்மீகி , கம்பன் , அனுமன் வருணனை , சொல்லின் செல்வன் , சீனிவாச சாத்திரி , சில்வர் டங் , ராமாயண  சொற்பொழிவு

தமிழ்நாட்டில் ஆட்சி மாற வறுமையே காரணம்! (Post No.11,599)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,599

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வறுமையின் கொடுமை– அறப்பளீசுர சதகம்

அறப்பளீசுர சதகம் 37. வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?

     வெகுவித்தை கற்றும் என்ன?

  மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?

     மிகுமானி ஆகில் என்ன?

பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார

     பரனாய் இருந்தும் என்ன?

  பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?

     பாக்கியம் இலாத போது;

வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!

     வந்தசுற் றமும்இ கழுமே!

  மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!

     மனைவியும் தூறு சொல்வாள்!

ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆலாலம் உண்ட கனிவாயனே – நஞ்சுண்ட

கனிபோலச்சிவந்த வாயை யுடையவனே! நேயனே அன்புடையவனே!,

அனகனே – குற்றம் இல்லாதவனே!, பாக்கியம் இலாதபோது – செல்வம்

இல்லாவிட்டால், மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன – உயர்ந்த குலத்திற் பிறந்தாலும் அதனாற் பயன் இல்லை. வெகுவித்தை கற்றும் என்ன – மிகுதியான கலைகளைப் படித்துணர்ந்தாலும் பயன் இல்லைமிக்க அதிரூபமொடு சற்குணம் இருந்து என்ன – பேரழகுடன் நற்பண்பு இருந்தாலும் பயனில்லைமிகுமானி ஆகில்என்ன – சிறந்த

மானமுடையவனானாலும் பயனில்லை. பாலான மொழியுடையன்

ஆய்என்ன – இனிய மொழிகளை இயம்புவோனானாலும் பயன் இல்லை, பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன –

உலகிலே வீரமும் அறிவும் உடையவனெனினும் ஒரு பயனும் இல்லை. பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் – ஈன்ற அன்னையும் இயல்பாகவே வெறுப்பாள், வந்த சுற்றமும் இகழும் – வருகின்ற உறவினரும் இகழ்வர், அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் –எல்லோரும் மதிப்பின்றி உரையாடுவர், மனைவியும் தூறுசொல்வாள் இல்லாளும் குறைகூறுவாள்.

Xxx

My commentary

வறுமை பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் எவருமில்லை; புறநானூற்றுப் புலவர்கள் முதல் பாரதி வரை பாடிப் புலம்பிய விஷயம் வறுமை. கந்தலாடைகளுடன் போன புலவர்களும் பாணர்களும் எப்படிப் பொன்னாடைகளுடன் திரும்பி வந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன. பாரதியோ வறுமையில் வாடிய புலவருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவன் ;அப்படியிருந்தும் ‘இல்லை’ என்ற கொடுமை இல்லை யாக வைப்பேன்’ என்று சூளுரைத்தான்..

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை! 

இன்னொரு இடத்தில்

மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

XXXX

வறுமையினால் மாமிசம் சாப்பிட்ட முனிவர்கள் பட்டியல்

நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக்  கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின்  வாதம்.

மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில்  இந்தப் பட்டியல் உள்ளது

Manu 10-105 முதல் 10-108 வரை 4 எடுத்துக்காட்டுகள்.

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பது தமிழ்ப் பொன்மொழி .

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு,

தாளாண்மை (விடா முயற்சி), காமம் ஆகிய 10 குணங்களும் பறந்துவிடுமாம்.

உணவே  கிடைக்காதபோது பிராமணர்களும்– வேத கால ரிஷிகளும்– மாமிசம் சாப்பிட்டனர்- சண்டாளன் கையிலிருந்து சாப்பிட்டனர். தச்சுத் தொழிலாளியிடம் கடன் வாங்கினர்

இதோ நாலு கதைகள் :-

10-105 ஐதரேய பிராஹ்மணம் –7-13/16 — அஜிகர்த்தா என்ற பிராமணன் கதையைச் சொல்கிறது.

அவனை வறுமை வாட்டியகாலையில் சுனஸ்சேபன் என்ற மகனையே விற்றான். பின்னர் விஸ்வாமித்ரர் அவனை விடுவித்தார்.பின்னர் அந்தப் பையன் மன்னன் ஆனான் ;இந்தக் கதை பிற்கால இலக்கியங்களிலும்  பலமுறை சொல்லப்பட்டுள்ளது

10-106 ரிக் வேதத்திலும் ( 4-18-13 ) , மகா பாரதத்திலும்  வரும் கதை வாமதேவ கௌதமரின் கதை.

பசியும் பட்டினியும் பஞ்சமும் தலை விரித்தாடிய ஒரு காலத்தில் வாம தேவர், நாய் மாமிசம் சாப்பிட்டார் .

10-107  ரிக் வேதத்தின் 6-45-31க்கு சாயனர் எழுதிய பாஷ்யத்தில் இக்கதை வருகிறது. பரத்வாஜ மகரிஷி அவருடைய மகன்களுடன் நடுக்காட்டில் சிக்கித் தவித்தார். பசியால் வாடினர். அப்பொழுது பிருது என்னும் தச்சுத் தொழிலாளியிடம் பசு மாடுகளை வாங்கிக் கொண்டார். இன்னும் சில இடங்களில் ப்ருது அல்லது வ்ருது , ஒரு மன்னன் என்றும் சொல்லப்படும்; சாங்க்யாயன சிரௌத சூத்திரத்திலும் — 16-11-11 — இக்கதை வருகிறது.

10-108  மகா பாரதத்திலும் புராணங்களிலும் வரும் கதை விசுவாமித்திரர் பற்றியது . அவர் ஒரு சண்டாளன் கையிலிருந்து நாய் மாமிசம் வாங்கிச் சாப்பிட்டார். பசியின் கொடுமையே இதற்குக் காரணம்

இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர்  தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா  என்றும் சொல்கிறார்.

xxxxx

இதோ சில வறுமைப் பாடல்கள் :

அவ்வையார் பாடியது:

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.

Xxx

விவேக சிந்தாமணிப் பாடல்கள்

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே. 21

Xxxx

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,

     புண்ணியம் இல்லை, என்றும்

மருவிய கீர்த்தி இல்லை,

     மைந்தரில் பெருமை இல்லை,

கருதிய கருமம் இல்லை,

     கதிபெற வழியும் இல்லை,

பெருநிலம் தனில் சஞ்சாரப்

     பிரேதமாய்த் திரிகுவாரே.

Xxxx

இன்மையைப்பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.: உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும்.

பிறந்த குலமாயும்பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு (நாலடி 285)

Xxxx

மணிமேகலை 11- 9

பசி என்னும் பிணி – பாவி

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

பொருள்

பசிப்பிணி என்னும் பாவி என்ன செய்யும்?

குடிப்பிறப்புப் பெருமையை அழிக்கும்.

சிறப்புகள் இல்லாமல் செய்யும்.

கல்வி என்னும் செல்வத்தைக் கைவிட்டுவிடும்.

செய்யத் தகாதன செய்வதற்கு நாணும் பண்பினை விலக்கிவிடும்.

உடல் அழகைக் கெடுத்துவிடும்.

பெண்ணுக்கு முன் நிற்க முடியாமல் வெளியில் நிறுத்தும்.

இந்தப் பசிப்பிணியைப் போக்கியவரின் புகழை என்  நாவால் முழுமையாகச் சொல்ல இயலாது. – தீவதிலகை இதனைக் கூறி மேலும் தொடர்கிறாள்.

Xxx

நல்குரவு /வறுமை பற்றி வள்ளுவர்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்–குறள் 1044:

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

xxx

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்— குறள் 1046

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Xxx

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும் –குறள் 1047

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Xxxx

பாகவத புராணத்தில்,  குசேலர் வறுமையில் வாடிய கதை உள்ளது.சுதாமா அல்லது குசேலர், கந்தைத் துணியில் அவலைக் கொண்டுபோய் பழைய கிளாஸ்மேட் கிருஷ்ணரிடம் கொடுத்தார் , அவர் ஒரு பிடி அவலை  உண்ட உடனே, குசேலரின்  குடிசை அரண்மனையாக மாறிய  அற்புதக் கதையை நாம் அறிவோம்

xxxx

ரஷ்யப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் (Russian and French Revolutions)

“Let them eat cake” is the traditional translation of the French phrase “Qu’ils mangent de la brioche”, said to have been spoken in the 17th or 18th century by “a great princess” (Marie-Antoinette) upon being told that the peasants had no bread. Marie-Antoinette was guillotined in 1793. She was only 37 years old when her head was cut off in Guillotine.

உலகின் மிகப்பெரிய இரண்டு  புரட்சிகள் வறுமை காரணமாக வெடித்தவைதான். மக்கள் சாப்பிட ரொட்டி இல்லை என்று சொன்னவுடன் அவர்கள் கேக் சாப்பிடட்டுமே என்று பிரெஞ்சு மஹாராணி மேரி ஆண்டாயினட் சொன்னதும் புரட்சிக்கு ஒரு காரணம். 37 வயதில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் எந்திரத்தில் தலை துண்டிக்கப்பட்டாள் ; பாரிஸ் மாநகரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று ,அதை வேடிக்கை பார்த்து, சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கும் வறுமையே காரணம்  தமிழர்கள் நீண்ட வரிசையில் நின்று ரேஷன் கடைகளில் புழுத்த அரிசியை வாங்கிய 1964ம் ஆண்டு,  ஒரு காங்கிரஸ் அமைச்சர் எலி மாமிசம் சாப்பிடலாமே என்று சொன்னவுடன் கொந்தளிப்பு ஏற்பட்டது . 1965ம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புக்கு கிளர்ச்சியைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழர்கள் வேட்டு வைத்தனர். தினமணி போன்ற தேசீய பத்திரிக்கைகளும் காங்கிரசுக்கு எதிராக வோட்டளிக்கும்படி பகிரங்கமாக எழுதியதற்கு வறுமையே காரணம்..

கரீபி ஹடாவோ தேஷ் பசாவோ 

Garibi Hatao Desh Bachao (“Remove poverty, rescue the country”)  என்ற கோஷத்தை 1971 தேர்தல் பிரசாரத்தின் முன்வைத்து இந்திராகாந்தி வெற்றி பெற்றதையும் இந்தியர்கள் அறிவர்.

வறுமை என்பது உலகெங்கிலும் உண்டு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தோன்றவும் பிரிட்டிஷாரின் வறுமையே காரணம் ; அவர்களுடைய வறுமை நிலையை விடோரியன் கால நாவல்களில் படிக்கலாம் . உலகெங்கும் பிரிட்டிஷார் சென்று மக்களை ஏமாற்றியும், சுரண்டியும், படுகொலை செய்தும் பிரிட்டனை பெரிய நாடாக்கினார்கள்; பிறவியில் பிச்சைகாரர்கள் பிரிட்டிஷ் மக்கள்.! வறுமை காரணமாக உலகெங்கையும் ஆக்ரமித்தனர்; அவர்களைப் பார்த்து பிரெஞ்சு, டச்சுக் கார்களும் உலகை ஆக்ரமித்தனர். வறுமை செய்த கொடுமை இது!

Xxxx subham xxxx

Tags- வறுமை, அறப்பளீசுர சதகம், கொடுமை, ஆட்சி மாற்றம், புரட்சி, பிரெஞ்சு , ரஷ்ய, பசி, பாவி, மணிமேகலை, நல்குரவு , பத்தும் 

ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38- Part 2 (Post No.11,598)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,598

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி! 

ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 : அதில் அதிசயமான ஒன்றரை நாள்! – 2

                                                             ச.நாகராஜன்

ராமாயணத்தின் கால விமரிசனத்தைச் செய்தால் நமக்கு பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்படும்.

ராமர் 11000 வருடங்கள் ஆண்டதாக இதிஹாஸம் கூறுகிறது.

ஆனால் அவரது வாழ்வில் முக்கிய நிகழ்ச்சியோ முதல் 38 வருடங்களில் நடைபெற்று முடிந்து விடுகிறது.

 ராவணனின் வாழ்நாளோ இன்னும் அதிசயிக்க வைக்கும் ஒன்று.

பல ஆயிரம் ஆண்டுகள் அவன் தபஸ் செய்வதாக அறிகிறோம்.

‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெரும் தவமும்’ என கவிச் சக்கரவர்த்தி கம்பன் ராவணனின் வாழ்நாளைக் கோடிட்டுக் காட்டுகிறான்.

ஆக நீண்ட நெடுங்காலத்தில் ஒரு சிறிய கால அளவீட்டினில் நடந்ததே ராமாயணம் தரும் அதிசய சம்பவங்கள்.

ராமருடனான ஹனுமாரின் தொடர்பு :-

சீதையை மீட்க ராமர் இலங்கையை நோக்கிச் செல்லும் வரை 8 மாதங்கள் 27 நாட்களாகும்.

 ஹனுமானின் அனைத்துச் சாதனைகளும் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டவையே. இலங்கைக்குச் சென்றது, மீண்டு வந்தது, ராமரிடம் நடந்ததை எல்லாம் சொன்னது ஆகிய அனைத்தும் ஒன்றரை நாட்களிலேயே நடந்து முடிந்து விட்டது.

 ராவணனுடனான ராமரின் போர் நிகழ்ந்த நாட்கள் வெறும் 7 நாட்கள் மட்டுமே.

ராமர் வனவாசம் செய்த காலம் 13 வருடங்கள் ஒரு மாதம். சீதையை அவர் விட்டுப் பிரிந்திருந்த காலம் 9 மாதங்கள் 20 நாட்கள்.

லங்கையிலிருந்து அவர் கிஷ்கிந்தை, நந்திகிராமம் வழியாக அயோத்திக்கு முடி சூட திரும்பி வந்தது இரண்டே நாட்களில்!

வனத்திற்குச் செல்லும் முன்னர் சீதையை மணந்து அவர் சந்தோஷமாக இருந்த காலம் 12 வருடங்கள் 1 மாதம் 10 நாட்கள். அவர் வனவாசம் செய்ததோ 14 வருடங்கள், சீதையுடன் வாழ்ந்த காலத்தை விட இது அதிகம்.

 அயோத்தியில் ராமர் வாழ்ந்த 24 வருடங்கள் அமைதியான காலம். அதே போல வனவாசத்தில் 13 வருடங்களும் அமைதியான காலமே.

 ராமரின் அவதார நோக்கம், அதாவது ராவண வதம் நிகழ்ந்தது ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே.

 அவருடைய ராவணனுடனான போரோ 7 நாட்களில் மட்டுமே நிகழ்ந்தது.

ஹனுமானின் செயற்கரிய செயலோ (சீதையை அசோகவனத்தில் கண்டது, ராவணனைச் சந்தித்தது, அவனுக்கு அறவுரை கூறியது, இலங்கையை எரியூட்டியது,திரும்பி ராமரிடம் வந்து செய்தியைச் சொன்னது) ஒன்றரை நாட்களிலேயே முடிந்து விட்டது. காலமெல்லாம் பேசப்படுகிறார், துதிக்கப்படுகிறார்.

அடுத்த இருபதரை (20 ½) நாட்களில் அவர் மற்ற காரியங்களைச் செய்து முடிக்கிறார்.

 ராவணன் சீதையைத் தூக்கி வந்தது ஒரு நாளில். அவன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தது 9 மாதங்கள்.

 செயற்கரிய தவம் அவன் செய்தாலும், அனைவரையும் அடக்கி அவன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் ஒரு நாளில் செய்த தவறே அவனை காலமெல்லாம் அனைவரும் இகழும் வண்ணம் ஆக்கி விட்டது.

ஆகவே, மிகப் பெரிய அவதாரங்கள், மகான்கள், அருளாளர்கள் பெரிய செயல்களை மிகக் குறுகிய காலத்தில் செய்வதையும் அதன் விளைவாக அவர்கள், காலத்தை வென்று எல்லாக் காலமும் போற்றப்படுவதையும் பார்க்க முடிகிறது.

 ராமாயணம் முழுவதிலும் வாழ்வாங்கு வாழ்வதற்கான விதிகள், சூத்திரங்கள் ஆங்காங்கே தரப்படுகின்றன.

ஆகவே ராமாயணத்தை தினம் தோறும் படிக்க வேண்டும் என்பது வெற்றி பெற விரும்புவோரின் முதல் யுக்தியாக அமைகிறது. 

குறிப்பு :

காலம் பற்றிய அட்டவணை காலம்சென்ற வித்வான் D.T.தாத்தாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.

இந்த விவரத்தை அப்படியே மறுபிரசுரம் செய்துள்ளார்

திரு S.V. பார்த்தசாரதி அவர்கள், தனது புத்தத்தில்.

புத்தகம் : “ Whatever is Your Profession

                                       Valmiki’s

                              GUIDE TO GOOD LIFE

வெளியிட்ட ஆண்டு : 1975

நன்றி : வித்வான் திரு  D.T.தாத்தாசாரியார்,

திரு திரு S.V. பார்த்தசாரதி அவர்கள், 

***

இந்தத் தொடர் நிறைவுறுகிறது.

LEARN TAMIL VERBS (1000 VERBS) PART 37- USEFUL PHRASES CONTINUED (Post No.11,597)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,597

Date uploaded in London – 28 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Picture Details

உங்களுக்கு கணக்கு பிடிக்குமா ? Do you like Maths?

உங்களுக்கு கணக்கு தெரியுமா? Do you know Maths? Or do

you know accounts?

xxxx

LET US LEARN MORE IMPERSONAL VERBS

Do you understand German?

Ungalukku german puriyuma?

உங்களுக்கு ஜெர்மன் புரியுமா ?

விளங்குமா ? ‘VILANGUMAA’ IS USED BY SRI LANKAN TAMILS

XXX

Do you know French?

Ungalukku French theriyuma?

உங்களுக்கு பிரெஞ்சு  தெரியுமா?

XXX

It is enough

Ithu podhum

இது போதும்

XXX

This is not enough

Ithu podhaadhu

இது போதாது

XXx

I want still more

Innum konjam vendum

இன்னும் கொஞ்சம் வேண்டும்

Word order – still  –some– wanted

xxx

I don’t want coffee

Enakku kaappi vendaam

எனக்கு காப்பி வேண்டாம்

xxx

I want cold milk

Enakku kulirntha paal vendum

எனக்கு குளிர்ந்த பால் வேண்டும்

Word order- To me—cold—milk – want

Xxx

Health Topics

I would like to buy some medicines

Naan konjam marunthu vaanga virumbukiren/vendum

நான்  கொஞ்சம் (some, little) மருந்து (medicine) வாங்க (to buy) விரும்புகிறேன் /  வேண்டும்

Xxx

Please call the doctor/police/ambulance

Thayavu seithu doctorai kooppidungal

தயவுசெய்து டாக்டரை  கூப்பிடுங்கள்

போலீசை (Police) , ஆம்புலன்ஸை (Ambulance) கூப்பிடுங்கள் (Please call)

கூப்பிடுங் “கள்”= plural suffix KAL கள் gives the sense of respect= please

In English we generally add “S” to make plural

Pen= pen+s

Pencil= Pencil+s

In Tamil we add  “KAL /கள்”

Penaa = Penaakkal = Pens

Pencil = pencilkal = Pencils

xxx

I am not feeling well

Enakku udambu sariyillai

எனக்கு உடம்பு சரியில்லை

To me – body – not OK

xxx

I have head ache/stomach pain

Enakku thalai vali/ vayitru vali

எனக்கு தலை வலி/ வயிற்று வலி / பல் வலி/ கால் வலி

To me —  head ache—stomach pain— tooth pain— leg pain

xxx

I want to go to the hospital/doctor/surgery

Naan maruthuva manaikku poga vendum

நான் மருத்துவ மனைக்கு போக வேண்டும்

ஆஸ்பத்திரிக்கு = aaspaththirikku = To Hospital

xxx

HOTEL ROOM BOOKINGS

Can I speak to the manager please?

Naan managerudam pesalama?

நான் மானேஜருடன் பேசலாமா

I – with manager— speak??

Aa  is interrogative suffix; it will become a question when you add AA

Pesalaam = may speak; PesalaaMAA= may I speak

xxx

Do you have any rooms available?

Roomgal irukkiratha/ roomgal kidaikkuma?

ரூம்கள் இருக்கிறதா ? ரூம்கள் கிடைக்குமா

ரூம்= Room அறை ; better use English word ROOM and not Tamil ARAI; the reason is if you mis pronounce it அரை SLAP , it means a slap on your cheek!

It will mean May I ger a slap?

xxx

For one person/two persons

Oruvarukku/ irandu perukku

ஒருவருக்கு – இரண்டு பேருக்கு

xxxx

For one day/ two days

Oru nalaikku/ irandu naatkalukku

ஒரு நாளைக்கு/  இரண்டு நாட்களுக்கு

Xxxx

How much is it per person/per night?

Oru aalukku oru nalaikku evvalavu?

ஒரு ஆளுக்கு , ஒரு நாளைக்கு , எவ்வளவு?

xxx

BUYING THINGS

How much is……..?

——— vilai evvalavu?

விலை (Price) எவ்வளவு (how much)?

xxxx

Where is……….?

———– enge irukkirathu

எங்கே (where) இருக்கிறது is?

xxx

What is this?

Ithu enna?

இது(this) என்ன (what)?

xxx

When?= Eppodhu?= எப்போது?

xxx

How?

Eppadi? Evvalavu?

எப்படி, எவ்வளவு

xxx

Why?= En?= ஏன்

xxx

Show me the (thing/picture/toy)

Padaththai (picture) kattungal

படத்தைக் (Picture) காட்டுங்கள்

Thing= PORULAI; / பொருளை,

Toy= BOMMAIYAI /பொம்மையை

xxx

Too much

Migavum athigam= மிகவும் அதிகம்

xxx

Will you give it for………rupees?

—— rupaikku tharuveergala?

ரூபாய்க்கு தருவீர்களா?

xxx

Yes = Aamam ஆமாம் ,

Sri Lankan Tamils will say OM ஓம் = Yes

xxxx

No= Illai= இல்லை

xxx

Don’t know= Theriyathu= தெரியாது

xxx

Don’t want= Vendam= வேண்டாம்

xxx

Don’t like= Pidikkathu= பிடிக்காது

Xxx

Can you tell (recommend) me a good restaurant/hotel?

Oru nalla hotel solla mudiyuma?

ஒரு நல்ல ஹோட்டல் சொல்ல முடியுமா ?

xxx

Do you know John Smith?

Ungalukku john smithai theriyuma?

உங்களுக்கு ஜான் ஸ்மித்தை  தெரியுமா?

உங்களுக்கு பீமனை (த்) தெரியுமா?= Do you know Bhima?

xxxx

Do you know where (Taj Lodge) is?

Taj lodge enge irukkirathu theriyuma?

தாஜ் லாட்ஜ் எங்கே இருக்கிறது ?

xxxx

It is good/It is not good

இது நல்லது / இது நல்லது இல்லை

xxxx

It is bad = இது கெட்டது Ithu Kettathu

It is very beautiful = இது அழகானது = Ithu Azakaanathu

xxx

It is too small/  இது ரொம்ப (informal) சின்னது/ சிறியது

Ithu Romba Siinathu/ Siriyathu

மிகவும் (formal)= Mikavum

too big ரொம்ப பெரியது ; மிகவும் பெரியது = Ithu Romba Periyathu= Mikavum Periyathu

Romba is colloquial; Mikavum is literal

XXXX

To be continued………………………………………

 Tags- Useful phrases, Tamil verbs, 

Tamil Hindu Encyclopaedia 43 -Tamil Ghost and Nymph பேய், பிசாசு, அணங்கு (Post No.11,596)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,596

Date uploaded in London – 28 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with Sangam Tamil’s fear and belief about Ghosts and Nymphs.

This is the second part on Tamil Nymphs.

2000 year ago, Tamils thought the nymphs are very beautiful, like the Apsaras from Deve loka/Heaven.

Some poets used them as similes to portray lady love.

A poet described a woman as beautiful as mountain beauties in

Ainkurunuru verse

‘வரையர மகளிர்‌ புரையும்‌’ சாயலள் , ஐயள் : (ஐங்‌.255-3/4)

xxx

They sang that divine women come to those hills and play and the flowers wither away and spread all over the place because of this. Kabilar of

Kurinjippaattu says this

வரை அர  மகளிரின்‌ சாஅய்‌, விழைதக.

விண்‌ பொரும்‌ சென்னிக்‌ கிளைஇய காந்தள்‌

தண்‌ கமழ்‌ அலரி தாஅய்‌, நன்பல.

வம்பு விரி களத்தின்‌ கவின் பெறு பொலிந்த

குன்று கெழு நாடன்‌ (குறிஞ்சி 195-199) KURINJIPPATTU

One would be reminded of Meghadutam poem of Kalidas. In fact, G .U .Pope and other scholars say that KURINJIPPATTU of Kabilar is an imitation of great poet Kalidas’ Meghadutam.

Xxx

One girl warns her lover not to cross the hills in night time just to see her, because the mountain people who offer food to such nymphs may mistake him for a nymph and get scared. See KALITTOKAI 52-9/10

மணம்‌ கமழ்‌ நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்‌

அணங்கு என அஞ்சுவர்‌ சிறு குடியோரே: (கலி.52:9-10)

XXX

What the hill tribes offer to such mountain god is also detailed in

Natrinai 165-3/5 and Akam 348-2/10

*அணங்கொடு நின்றது மலை, வான்‌ கொள்க எனக்‌

கடவுள்‌ ஓங்கு வரை பேண்மார்‌, வேட்டு எழுந்து,

கிளையொடு மகிழும்‌ குன்ற நாடன்‌’ (நற்‌. 165:3-5),

xx

பயிர்ப்புறப்‌ பலவின்‌ எதிர்ச்சுளை அளைஇ.

‘இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்‌

நெடுங்கண்‌ ஆடு அமைப்‌ பழுநி. கடுந்திறல்‌

பாபபுக்‌ கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்‌

கடவுள்‌ ஓங்கு வரைக்கு ஓச்சி, குறவர்‌

முறித்தழை மகளிர்‌ மடுப்ப, மாந்தி,

அடுக்கல்‌ ஏனல்‌ இரும்புனம்‌ மறந்துழி’ (அ௧.348:2-10)

Meaning

The hill tribes assemble and make a sweet fruit salad- similar to  Palani Panchamirtham –

They mix sweet mangoes and jack fruit in mountain honey and offer it. With it they offer toddy that was stored in bamboo pipes for some time to get fermented. Following this, the womenfolk offer the toddy to their men. They dance and dance forgetting themselves; they became drunk.

Xxx

Other passages in Kalittokai and Malaipadukadam describe the method of worship. The bards and their wives pay tributes by playing Kurinji raga/tune on

Yaaz/ lyre.  They are advised to do it. This shows that Tamils had very strong belief in such mountain gods and to avoid any trouble they must do it.

Following are the relevant verses,

வரை உறை தெய்லம்‌ உவப்ப, உவந்து,

குரவை தழீஇ யாம்‌ ஆட, குரவையுள்‌

கொண்டு நிலை பாடிக்காண்‌ (கலி.39:27-29) KALI

xxx

செரு மிக்குப்‌ புகலும்‌ திருஆர்‌ மார்பன்‌

உரும்‌ உரறு கருவிய பெருமலை பிற்பட,

இறும்பூது கருவிய இன்கூரல்‌ விறலியர்‌

நறுங்கார்‌ அடுக்கத்துத்‌ குறிஞ்சி பாடி, _

கைதொழுஉப்‌ பரவி, பழிச்சினிர்‌ கழிமின்‌

(மலைபடு.356-360) MALAIPADUKADAAM

XXX

FOREST GODS – ARANYANI OF RIG VEDA

Like the Vedic people, Tamil Hindus saw Gods everywhere. We have beautiful Aaranyani Sukta in the Rig Veda, the oldest book in the world, and the Bhumi Sukta of Atharvana Veda.

A poet recounts what he sees in Chera country, modern Kerala state in South India. Commenting on Pathitruppaththu lines, one commentator says,

Big forests in your country have become temples; small forests become your army camps. Because of this all the mountain paths are free of troubles (from animals and robbers).

xx

Porunaraatruppdai poet relates the singing bards go to forests everyday and praise the gods there. The womenfolk sing and the menfolk play on Yaaz / lyre with rhythm to suit their songs.

Following is the verses

காடே கடவுள்‌ மேன: புறவே

ஒள்‌ இழை மகளிரொடு மள்ளர்‌ மேன;

ஆறே அவ்‌ அனைத்து (பதிற்‌,13:20-22)

xxx

பெடை மயில்‌ உருவின்‌ பெருந் தகு பாடினி

பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்‌.

களிறு வழங்கு அதிர கானத்து அல்கி,

இலைஇ ல்‌ மராஅத்த, எவ்வம்‌ தாங்கி,

வலை வலந்தன்ன மெல்நிழல்‌ மருங்கில்‌,

காடு’உறை கடவுட்‌ கடன்‌ கழிப்பிய பின்றை –

(பொருந. 47-52)

xxx

Compare them with the Vedic Suktas

“Now the poet moves to dark tropical rain forests where tigers and lions roam.  And also the uncivilised, uncultured cannibals- the demons known as Rakshasas.

Bhumi sukta Verse 50 mentioned ghosts or demons unknown to us today- Arayas, Kimidins. We know the Picasas and Rakshas from later literature. Strangely the poet mentioned the Gandharvas and Apsaras in the hated list. It may be due to that they distract one from good path. They were the heavenly singers and dancers. Ancient people believed that they take various forms , come to earth and fool people or trap people into bad habits”.

Xxx

Stanza 51 described the beautiful birds and the stormy monsoon days. Rig Veda also referred to Forest fires. Here we see the flames in the sky- thunder and lightning – and flames on the earth, -the forest fires.

Along with some scenes from the civilized cities the poet shows us the tropical rain forests. A true picture of earth!

Xxx

Ode to Forest Goddess from Rig Veda

Probably this is the oldest and most beautiful poem on Forest. The scent of the forest, the sounds heard in the forest, the strength of the forest (she doesn’t need to plough and cultivate), the vegetarian food of the forest queen, the title as Queen, the status as Goddess- all such words and epithets show great appreciation for the forest.

 Here is the poem:- Ode to Forest Goddess

1. GODDESS of wild and forest who seems to vanish from the sight.

     How is it that thou seek not the village? Art thou not afraid?

2. What time the grasshopper replies and swells the shrill cicala’s voice,

     Seeming to sound with tinkling bells, the Lady of the Wood exults.

3. And, yonder, cattle seem to graze, what seems a dwelling-place appears:

     Or else at eve the Lady of the Forest seems to free the wains.

4. Here one is calling to his cow, another there hath felled a tree:

     At eve the dweller in the wood fancies that somebody hath screamed.

5. The Goddess never slays, unless some murderous enemy approach.

     Man eats of savoury fruit and then takes, even as he wills, his rest.

6. Now have I praised the Forest Queen, sweet-scented, redolent of balm,

     The Mother of all sylvan things, who tills not but hath stores of food.

Same Poem in Sanskrit……………………….

The method of addressing is followed even by the 2000 year old Tamil Sangam poets: The poet says Aranyaanii! Aranyaanii! Tamils used such repetitions in Purananauru verses–195, 228, 256, 285, 301 etc

10.146.01   (Mandala. Sukta. Rik)

अर॑ण्या॒न्यर॑ण्यान्य॒सौ या प्रेव॒ नश्य॑सि ।

क॒था ग्रामं॒ न पृ॑च्छसि॒ न त्वा॒ भीरि॑व विंदती३ँ ॥

araṇyāni ǀ araṇyāni ǀ asau ǀ yā ǀ pra-iva ǀ naśyasi ǀ

kathā ǀ grāmam ǀ na ǀ pṛcchasi ǀ na ǀ tvā ǀ bhīḥ-iva ǀ vindatīm̐ ǁ

10.146.02   (Mandala. Sukta. Rik)

वृ॒षा॒र॒वाय॒ वद॑ते॒ यदु॒पाव॑ति चिच्चि॒कः ।

आ॒घा॒टिभि॑रिव धा॒वय॑न्नरण्या॒निर्म॑हीयते ॥

vṛṣa-ravāya ǀ vadate ǀ yat ǀ upa-avati ǀ ciccikaḥ ǀ

āghāṭibhiḥ-iva ǀ dhāvayan ǀ araṇyāniḥ ǀ mahīyate ǁ

10.146.03   (Mandala. Sukta. Rik)

उ॒त गाव॑ इवादंत्यु॒त वेश्मे॑व दृश्यते ।

उ॒तो अ॑रण्या॒निः सा॒यं श॑क॒टीरि॑व सर्जति ॥

uta ǀ gāvaḥ-iva ǀ adanti ǀ uta ǀ veśma-iva ǀ dṛśyate ǀ

uto iti ǀ araṇyāniḥ ǀ sāyam ǀ śakaṭīḥ-iva ǀ sarjati ǁ

10.146.04   (Mandala. Sukta. Rik)

गामं॒गैष आ ह्व॑यति॒ दार्वं॒गैषो अपा॑वधीत् ।

वस॑न्नरण्या॒न्यां सा॒यमक्रु॑क्ष॒दिति॑ मन्यते ॥

gām ǀ aṅga ǀ eṣaḥ ǀ ā ǀ hvayati ǀ dāru ǀ aṅga ǀ eṣaḥ ǀ apa ǀ avadhīt ǀ

vasan ǀ araṇyānyām ǀ sāyam ǀ akrukṣat ǀ iti ǀ manyate ǁ

10.146.05   (Mandala. Sukta. Rik)

न वा अ॑रण्या॒निर्हं॑त्य॒न्यश्चेन्नाभि॒गच्छ॑ति ।

स्वा॒दोः फल॑स्य ज॒ग्ध्वाय॑ यथा॒कामं॒ नि प॑द्यते ॥

na ǀ vai ǀ araṇyāniḥ ǀ hanti ǀ anyaḥ ǀ ca ǀ it ǀ na ǀ abhi-gacchati ǀ

svādoḥ ǀ phalasya ǀ jagdhvāya ǀ yathā-kāmam ǀ ni ǀ padyate ǁ

10.146.06   (Mandala. Sukta. Rik)

आंज॑नगंधिं सुर॒भिं ब॑ह्व॒न्नामकृ॑षीवलां ।

प्राहं मृ॒गाणां॑ मा॒तर॑मरण्या॒निम॑शंसिषं ॥

āñjana-gandhim ǀ surabhim ǀ bahu-annām ǀ akṛṣi-valām ǀ

pra ǀ aham ǀ mṛgāṇām ǀ mātaram ǀ araṇyānim ǀ aśaṃsiṣam ǁ

to be continued…………………………………

Tags- Tamil ghosts, Forest ,God, Nymphs, Mountain,

சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு மிளகாய்ப்பொடி, பூரிக்கு உருளைக்கிழங்கு வேண்டும்! (Post No.11,595)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,595

Date uploaded in London – 28 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீசுர சதகம் 36. இதற்கு இது வேண்டும்

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்

     தம்புத்தி கேட்க வேண்டும்;

  தான்அதிக சூரனே ஆகினும் கூடவே

     தளசேக ரங்கள் வேண்டும்;

கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்

     கற்றோரை நத்த வேண்டும்;

  காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்

     கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;

தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்

     சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;

  சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்

 தூண்டுகோல் ஒன்று வேண்டும்;

அனற்கண்ண னே!படிக சங்கம்நிகர் வண்ணனே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அனல் கண்ணனே – (நெற்றியில்) நெருப்புக்

கண்ணுடையவனே!, படிகம் சங்கம் நிகர்வண்ணனே – படிகத்தைப்

போலவும் சங்கைப் போலவும் (வெண்மையான) நிறத்தவனே!, ஐயனே –

தலைவனே! அருமை …… தேவனே!,

தனக்கு வெகுபுத்தி உண்டாயினும்

வேறொருவர் தம் புத்தி கேட்கவேண்டும் – தனக்கு மிகுந்த அறிவு

இருந்தாலும் மற்றவரின் அறிவுரையையும் கேட்டுத் தெளிதல் வேண்டும்,

தான் அதிக சூரனே ஆகினும் கூடவே தளசேகரங்கள் வேண்டும் – தான்

பெரிய வீரனே ஆனாலும் தன்னுடன் படைகளைச் சேர்த்துக்கொள்வதும் வேண்டும், கனக்கின்ற வித்துவான் ஆகினுந் தன்னினும் கற்றோரை நத்தவேண்டும் – பெரிய புலவனானாலும் தன்னைவிடப் புலமையுடையோரை அடுத்தல் வேண்டும், காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலில்

கருத்துஉள்ள மந்திரி வேண்டும் – உலகைத் தான் ஒருவனே ஆண்டாலும் தன் வாயிலில் ஓர் ஆராய்ச்சியுடைய அமைச்சன் வேண்டும். தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும் சுதிகூட்ட ஒருவன் வேண்டும், இசைப் பண்புடைய இசைப் புலவனே ஆனாலும் சுதி (சுருதி ) கூட்டித்தர ஒருவன் வேண்டும்,சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கி்டத் தூண்டுகோல் ஒன்று வேண்டும் – ஒளிதரும் விளக்கேயானாலும் நன்றாக எரிவதற்குத் தூண்டுகோல் ஒன்றிருக்க வேண்டும்.

     (க-து.) யாவருக்கும் எத்துறையினும் துணைவேண்டும்.

Xxx

My commentary on Arappalisura Sataka verse  36

சுருதி போடுவோர் இல்லாமல் வித்வான்கள் பாடமாட்டார்கள்;

விளக்கு ஏற்றும் பெண்கள், ஏதேனும் தூண்டுகோலை வைத்திருப்பார்கள்.

பிரதமருக்கு உதவி செய்ய காபினெட் CABINET இருக்கும்;

அறிஞருக்குத் துணை அவரைவிடப் பேரறிஞர்  இருக்கவேண்டும்;

ஒரு ராணுவத்தின் பலம் SECOND IN COMMAND செகண்ட் இன் கமாண்டைப் பொருத்தது.

‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்லுவார்கள்; ஏனெனில் அவர்தான் எத்தகைய பிரச்சனையிலும் கைகொடுத்து உதவக்கூடிய நம்பிக்கையான துணை.

இதையெல்லாம் வள்ளுவனும் முன்னரே சொல்லிவிட்டான்,

XXXX

நாம் என்ன செய்கிறோம்;?

தட்டில் இட்டிலி விழுந்தால், எள்ளு மிளகாய்பொடிக்காக காத்திருக்கிறோம்;

பூரியை மட்டும் போட்டால் ஏன் உருளைக்கிழங்கு செய்யவில்லையா? என்று கேட்கிறோம்

சப்பாத்தி சாப்பிட குருமா வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு துணை , சப்போர்ட் SUPPORT வேண்டியிருக்கிறது.

தயிர் சாதத்துக்கு ஆவக்காய் ஊறுகாய், அல்லது மோர் மிளகாய் வேண்டும்;

சின்ன விஷயம்தான் ,ஆனால் , துணை இல்லாமல் எதைச் செய்தாலும் அது சோபிக்காது.

xxxx

ஒரு போரில் வெற்றி பெற முன்னேறிச் செல்லும் ராணுவத்துக்கு பின்பலம் SECOND IN COMMAND இருக்கவேண்டும்..

xxxx

மந்திரிசபை CABINET  அவசியம்

ஒரு பிரதம மந்திரிக்கு எல்லா விஷயங்களையும் கவனிக்க பெரிய மந்திரிசபைCABINET  இருக்கவேண்டும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்—குறள் 448

பொருள்

கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்—குறள் 443

பெரியாரைப் போற்றி, தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கிஇனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

XXXX

சுருதியின் மகிமை பற்றி பாரதியார்

தாளத்தின், ராகத்தின், சுருதியின் மகிமையை உணர்ந்தவர் மஹா கவி பாரதியார். அவர் பல பாடல்களுக்கு இசை அமைத்து அதை பாடி ராகத்துடன் பாடல்களை வெளியிட்டார்  . இதோ அத்தகைய  இசை மேதை சொல்கிறார்,

இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். … (காதல்)

3.
நாதம்நாதம்நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம்சேதம்சேதம். … (காதல்)

4.
தாளம்தாளம்தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம்கூளம்கூளம். … (காதல்)

5.
பண்ணேபண்ணேபண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணேமண்ணேமண்ணே. … (காதல்)— பாரதியார் குயில்பாட்டு

Xxxx

சத்சங்கம் பற்றி  பர்த்ருஹரி பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்; மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

it removes the mind’s dullness.
it sprinkles truth in speech.
it increases dignity.
it drives away evil.
it purifies the intellect.
it spreads fame everywhere.
you tell me!
what does good company
not provide to men? |1-23| Nītiśataka

xxxx

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது– கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

—subham—-

TAGS ; சுருதி, விளக்கு, தூண்டுகோல், அறிஞர் உறவு, அறப்பளீசுர சதகம், துணை , ராணுவ பலம், பர்த்ருஹரிபாரதியார் குயில்பாட்டு

ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 – Part 1 (Post No.11,594)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,594

Date uploaded in London – 28 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தின் முக்கிய வருடங்கள் 38 : அதில் அதிசயமான ஒன்றரை நாள்! – Part1

 ச.நாகராஜன்

உலகின் ஆகப் பெரியதும் புனிதமானதுமான இதிஹாஸமான ராமாயணத்தில் முக்கிய வருடங்கள் 38 தான் என்றால் அது ஆச்சரியமாக இல்லை?!

கோடானு கோடி பேர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக அதைப் படித்து எல்லையற்ற நன்மைகளை அடைந்து வருகின்றனர்; இனியும் வருங்காலத்தில் அனைவரும் அடையப் போகின்றனர்.

எல்லையற்ற மஹிமை கொண்ட ஒரு புனித புருஷரைப் போற்றுகிறோம், ஆனால் அது 38 வருடங்களில் அவர் வாழ்வில் நடந்த வாழ்க்கையைப் பற்றித் தான் என்றால் பிரமிப்பாயில்லை?

38 வருடங்களில் பிரபஞ்ச நாயகனாக ஒருவர் உயர முடியுமா?

முடியும், மஹா விஷ்ணுவினால் முடியும்!

அவரே ராமாவதாரம் எடுத்தார்.

அந்த 38 வருடங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா?

எண் சம்பவம்                                   வருடம் மாதம்  நாள்

 1.   பிறந்ததிலிருந்து சீதையை மணந்தது முடிய      12   –     –

 2.   திருமணத்திற்குப் பிறகு அயோத்தியில் வசித்தது 12    –     –

 3.   ரிஷிகளுடன் சித்ர கூடத்தில் இருந்தது               10    –     –

 4.   சுதீக்‌க்ஷணரின் ஆஸ்ரமத்தில் இருந்தது           2    –     –

 5.   கர, தூஷணர்களுடன் போர் வரை – பஞ்சவடியில் 1    1     25

 6.   சீதை கடத்தப்பட்டதும், சுக்ரீவ மகுடாபிஷேகமும் –     2     –

 7.   குளிர்காலத்தில் கழிந்தது                       –     4    –

 8.   சுக்ரீவன் சேனையைத் திரட்டியது               –     1    –

 9.   சீதையைத் தேடியது                            –     2    –

10.   குகையிலிருந்து வந்தது, ஹனுமானின் லங்கை

     விஜயம், ஹனுமான் திரும்பி ராமரிடம் வருதல்,

     சேனையை ஒருங்குபடுத்தல்                    –     –     15

11.   கடற்கரையை ராமர் அடைதல், தர்ப்பசயனம்     –     –     3

12.   இலங்கைக்குப் பாலம் அமைத்தல்               –     –      5

13.   ராவணனுடன் யுத்தம்                           –     –     7

14.   ராவணனின் உடலை அகற்றல், அயோத்தி

     திரும்பல்                                       –     –     5

                                                     —————————–

                           மொத்தம்                 38    –     –

                                                     —————————–

மொத்த வருடங்கள் 38 மட்டுமே!

இதை ராமாயணத்தின் காண்டங்களின் படி பார்த்தால் வரும் அட்டவணை இது:-

எண் காண்டம்                                   வருடம் மாதம்  நாள்

 1. பால காண்டம் – ராமரின் இளமைப் பருவம்        12    –       –

 2. அயோத்யா காண்டம்- அயோத்தியில்

    ராமரின் மணவாழ்க்கை                                12    1      10

 3. ஆரண்ய காண்டம்                                13    1       0

 4. கிஷ்கிந்தா காண்டம் – சுக்ரீவனுடன் நட்பு          0    8       27

          கணக்கில் வராதது                         –    –       1

 5.  சுந்தர காண்டம்  – ஹனுமான் இலங்கைக்குச்

    சென்று மீண்டும் ராமரிடம் திரும்பி வருதல்      –     –     1 ½

 6.  யுத்த காண்டம் – ராம-ராவண யுத்தம்             –     –       20

நந்தி கிராமம் வருதல், ராம பட்டாபிஷேகம்           –    –        2

                                                           ———————————

                           மொத்தம்                  38   –        –

                                                     ———————————

இதில் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஹனுமாரின் ஒன்றரை நாள் சாதனை தான்.

ஒன்றரை நாளில் செயற்கரிய காரியத்தைச் சாதித்து அனைவரும் வியந்து பிரமிக்கும் வண்ணம் லங்கை சென்று சீதையை தரிசித்து மீண்டும் திரும்பி வந்தவர் ஹனுமார்.

நினைக்க நினைக்க பிரமிப்பூட்டும் இந்த விஷயத்தினால் காலமெல்லாம் கோடானுகோடி பேர்கள் துதிக்கும் பெரும் நாயகனாக சொல்லின் செல்வன் விளங்குகிறார்.

இதில் உள்ள முக்கியமான அம்சங்களை இன்னும் அடுத்துப் பார்ப்போம்.

குறிப்பு :

மேற்படி அட்டவணை காலம்சென்ற வித்வான் D.T.தாத்தாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.

இந்த விவரத்தை அப்படியே மறுபிரசுரம் செய்துள்ளார்

திரு S.V. பார்த்தசாரதி அவர்கள், தனது புத்தத்தில்.

புத்தகம் : “ Whatever is Your Profession

                                       Valmiki’s

                              GUIDE TO GOOD LIFE

வெளியிட்ட ஆண்டு : 1975

நன்றி : வித்வான் திரு  D.T.தாத்தாசாரியார்,

திரு திரு S.V. பார்த்தசாரதி அவர்கள்,

to be continued 

***