HAPPY HOLIDAYS FOR THREE DAYS
FOR OUR BLOGS
FRIDAY
SATURDAY and
SUNDAY
C U ALL ON MONDAY
tamilandvedas.com
swamiindology.blogspot.com
HAPPY HOLIDAYS FOR THREE DAYS
FOR OUR BLOGS
FRIDAY
SATURDAY and
SUNDAY
C U ALL ON MONDAY
tamilandvedas.com
swamiindology.blogspot.com
Posted by Tamil and Vedas on August 25, 2022
https://tamilandvedas.com/2022/08/25/holiday-notice/

Post No. 11,222
Date uploaded in London – 25 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
JAGANNATHA PANDITA (1590-1670) was a poet and critic. He used both grammar and logic to interpret many points in poetics/ alamkaara saastra. He discusses the viewpoints of the vaiaakarana and Naiyaayika side by side. One of the verses given by him is as follows:-
“The Udayachala by way of holding the rising sun by its peak makes the householders understand that the noble persons should offer hospitality to others”
.
Cuudaamanipade dhatte yombare ravimagatam
Sataam kaaryaatitheyiiti bodhayan grhamedhinah
The question is how can an inanimate mountain be the agent of an action of making others something?
The author gives the reply by saying that the non-sentient may be the agent of a causative verb by the way of being favourable to the performance of an action by some other sentient agent.
xxx
In the context of Vyatireka Alamkara Jagannatha gives the following verse as an example:
Mahendratulyam kavayo bhavantam
Vadantu kim taan iha vaarayaamah
Bhavan sahasraih samupaasyamaanah
Katham samaanastridasaadhipena
The poets call the king , who is the addressee here, equal to Indra, but how the king who is worshipped by thousands be equal to the lord (adhipa) of tri dasa (i.e. the gods of only 30.
Indra is called Mr.Thirty (tri dasa) in the Vedas. The word Tridasa usually means Gods. Here it is intended to mean the number thirty. Jagannatha refers to Paninian rules regarding samasas to justify the interpretation.
–subham–
Tags- Indra, Tridasa, Mr Thirty, King, Jagannatha Pandita, Udayachala
Posted by Tamil and Vedas on August 25, 2022
https://tamilandvedas.com/2022/08/25/indra-is-only-no-30-how-come-you-call-a-king-indra-post-no-11222/

Post No. 11,221
Date uploaded in London – 25 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஸம்ஸ்க்ருதத்தில் ஒரே எழுத்தை வைத்து அமைக்கும் அழகான கவிதைகள் உண்டு. இவைகளை சித்திரபந்தம் என்பர். தண்டின் (Dandin) என்னும் புலவர், மொழி அறிஞர் , இலக்கண வித்தகர் , கதாசிரியர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் எழுதிய தச குமார சரித்திரம், அவந்தி சுந்தரி என்னும் கதை, காவ்யா தரிசனம் என்னும் செய்யுள் இயல் நூல்கள் மிகவும் பிரபலமானவை. அலங்கார சாஸ்திரம் என்னும் யாப்பு அணி நூல் வகையைச் சேர்ந்தது காவ்யாதர்ச என்னும் நூல்.
இவருடைய தச குமார சரித்திரத்தைப் பின்பற்றி இத்தாலிய கதாசிரியர் பொகாஸியோ (Boccaccio) டெக்காமரன் (Decameron) என்ற கதையை எழுதியுள்ளார்.
காவ்யா தர்சன் ( தமிழில் காவ்யதரிசனம்) என்னும் நூலில் இவர் பல உதாரண செய்யுட்களைத் தந்துள்ளார். சித்ரபந்தம் என்பது எழுத்துக்களை பலவகைகளில் வைத்து பொருள்படைத்த செய்யுட்களை இயற்றுவதாகும். இவைகளை சப்தாலங்காரம் என்னும் அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார். ஸ்வர என்னும் உயிர்/ ஓசை நய எழுத்துக்களை வைத்தோ, வர்ண என்னும் (உயிர்) மெய் எழுத்துக்களை வைத்தோ அல்லது சொற்கள் பிறக்கும் இடத்தை வைத்தோ இவைகளை இயற்றலாம்.
ஒரே ஸ்வரமுள்ள கவிதைக்கு எடுத்துக்காட்டாக தண்டின் தரும் செய்யுள் இதோ ,
ஸாமாயாமா மாயாமாஸா
மாராநாயா யாணா ராமா
யாணா வாரா ராவா நாயா
மாயா ராமா மாரா யாமா
xxx
ஒரே உயிர் மெய்யெழுத்தைப் பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக அவர் தரும் செய்யுள் ,
நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ
நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி
xxx
ஒரே இடத்தில் பிறக்கும் எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,
அகா காங்கான் ககா காக காஹகாககஹ
அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக
இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணததை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .
இவைகளை எடுத்துக்காட்டிய ஸ்ருதிதாரா சக்ரவர்த்தி இவற்றின் பொருளைத் தரவில்லை ‘சம்ஸ்க்ருத செய்யுள் இயலின் மீது பாணினியின் தாக்கம்’ என்ற ஆங்கில நூலில் இவற்றைத் தந்துள்ளார்.
(ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோரிடமிருந்து பொருளை அறிந்து எழுதுவேன்.)
XXX
ஆயிரம் பேர் வணங்குவோனை முப்பது என்பதா !!
எண்களை வைத்து இந்திரனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு
கண்ணாயிரம் – ஆயிரம் கண்களை உடையவன் ;
முப்பதின் தலைவன் – த்ரி தச அதிபன் (த்ரிதசாதிப)
அதாவது 33 தேவர்களிள் தலைவன் .
அரசர்களை இந்திரன் என்று புகழ்வது உண்டு.
மஹேந்திர பல்லவன்
ராஜேந்திர சோழன்
நரேந்திர மோடி
என்பதை நாம் அறிவோம் .
ஒரு புலவர் இந்த எண்களை வைத்து கவி அமைத்து வியக்கிறார்!
மஹேந்திர துல்யம் கவயோ பவந்தம்
வதந்து கிம் தான் இஹ வாரயாமஹ
பவான் ஸஹஸ்ரைஹி ஸமுபாஸ்யமானஹ
கதம் ஸமானஸ் த்ரிதஸாதிபேன
பொருள்
அரசனை கவிஞர்கள் இந்திரனே என்று புகழ்கிறார்கள் ; அதாவது இந்திரனுக்குச் சமமானவன் என்ற பொருளில்.
ஆயிரம் பேரால் வணங்கப்படும் அரசனை முப்பது பேரின் தலைவனுக்கச் சமம் என்று எப்படிக் கூற முடியும் ?
இதை எடுத்துக் காட்டகத் தரும் ஜகந்நாத பண்டிதர் இதுவும் பாணினி இலக்கணப்படி அமைந்த கவிதைதான் என்றும் பாணினியின் ஸமாஸ விதிகள் (பஹுவ்ரீஹி , தத்புருஷ சமாசங்கள்) இங்கே பயன்படுகின்றன என்றும் எழுதியுள்ளார் .
–சுபம்—
Tags- சித்திரபந்தம், ஜகந்நாத பண்டிதர், இந்திரன், காவ்யதரிசனம், தண்டின், Dandin, Kavyadarsa
Posted by Tamil and Vedas on August 25, 2022
https://tamilandvedas.com/2022/08/25/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/

Post No. 11,220
Date uploaded in London – – 25 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசய ஒற்றுமைகள்! – 3
ச.நாகராஜன்
மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
போவின் நாவல் தந்த ஆச்சரியம்
ஆங்கில நாவலாசிரியரான எட்கர் ஆலன் போ 19ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.
அவர் ‘தி நேரேடிவி ஆஃப் ஆர்தர் கார்டன் பிம்’ (The Narrative of Arthur Gordon Pym – Edgar Allan Poe) என்ற புத்தகத்தை எழுதினார்.
ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அதில் நான்கு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். ஒரு படகில் ஏறி பல நாட்கள் அவர்கள் பயணம் செய்கின்றனர். ரிச்சர்ட் பார்கர் என்ற காபின் பையனைக் கொன்று திங்க மற்ற மூவரும் முடிவு செய்கின்றனர்.
கதை வெளியாகி பல வருடங்கள் கழிந்தன.
1884ஆம் ஆண்டும். மிக்னோனெட் என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதில் நான்கு பேர் பிழைத்து ஒரு படகில் பல நாட்கள் பயணம் செய்தனர்.
அதில் மூன்று பேர் காபின் பையனைக் கொன்று உயிர் வாழ நினைத்து அவனைக் கொன்றனர். அந்த காபின் பையன் பெயர் ரிச்சர்ட் பார்கர்!
இரு மரணங்கள் தந்த ஆச்சரியம்
2002ஆம் ஆண்டு.
72 வயதான ஒரு இரட்டை சகோதரர்களில் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே அடுத்தவர் இறந்தார்.
வட ஃபின்லாந்தில் சாலை விபத்தில் ஒருவர் இறந்தார். அதே சாலையில் தான் அடுத்தவரும் அதே போல இறந்தார்.
முதலாமவரை அவர் ராஹே என்னுமிடத்தில் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு லாரி வந்து மோதவே அவர் இறந்தார். ஹெல்சிங்கி என்ற தலை நகரத்தினிலிருந்து வடக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்தது. இன்னொரு தனது சகோதரர் இறந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலேயே இறந்தார்.
இது ஒரு வரலாற்று அதிசயம்.
“இந்த சாலை போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலை என்றாலும் கூட இங்கு விபத்துக்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறாது” என்றார் மரிய லீனா ஹுஹ்தலா என்ற பெண் போலீஸ் அதிகாரி ராய்டர் செய்தி நிறுவனத்திடம்.
“என் ரோமம் குத்திட்டு நின்றது – இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பதை அறிந்த போது. மேலே இருக்கின்ற ஒருவன் ஏதோ செய்கிறான்” என்றே உணர்ந்தேன் என்றார் அவர்.
போகர் ஆச்சரியம்!
1858ஆம் ஆண்டு. போகர் விளையாட்டு ஒன்றில் ராபர்ட் ஃபாலன் என்பவர் போகர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த போது பழிவாங்கத் துடித்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 600 டாலரை அவர் ஏமாற்றி வென்றார் என்று கூறப்பட்டது.
போகரின் இருக்கை காலியானது. ஆனால் அதில் அமர யாரும் முன் வரவில்லை. ஏனெனில் அது துரதிர்ஷ்டம் பிடித்த இடம் என்று அனைவரும் கருதினர். அந்த 600 டாலரையும் யாரும் தொடவில்லை.
அப்போது அங்கு புதிதாக வந்த ஒருவர் ஃபாலனின் இடத்தில் அமர்ந்தார். அந்த 600 டாலரையும் எடுத்துக் கொண்டார்.
கொலை பற்றிய புலன் விசாரணைக்காக போலீசார் வந்த போது அந்த 600 டாலர் தொகை விளையாட்டில் ஜெயித்த வகையில் 2200 டாலராக உயர்ந்திருந்தது.
போலீசார் முதலில் இருந்த 600 டாலரைக் கேட்டனர். அதை ஃபாலனின் உறவினருக்குத் தர வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.
விசாரித்த போது அங்கு புதிதாக வந்து அமர்ந்தவர் ஃபாலனின் மகனே தான் என்பது தெரிய வந்தது.
அவர் தன் தந்தையை கடந்த ஏழு வருடங்களாகப் பார்க்கவே இல்லையாம்!
புத்தக ஆச்சரியம்!
1920ஆம் ஆண்டு.
அன்னி பார்ஷி என்ற பெண்மணி ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் பாரிஸுக்குச் சென்றிருந்த போது ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு புத்தகம் அவரைக் கவர்ந்தது. அது அவர் குழந்தையாக இருந்த போது அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம். ‘ஜாக் ஃப்ராஸ்ட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ என்பது அதன் பெயர்.
அந்த புத்தகத்தை ஆசையுடன் எடுத்த அவர் அதைத் தன் கணவருக்குக் காண்பித்து அந்த புத்தகமானது தான் குழந்தையாக இருந்த போது மிகவும் விரும்பிய ஒன்று என்று கூறினார்.
அவரது கணவர் அதை வாங்கி முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தார்.
அதில் ‘அன்னி பாரிஷ் , 209, என். வெபர் ஸ்ட்ரீட், கொலொரோடோ ஸ்ப்ரிங்ஸ்’ என்று எழுதி இருந்தது.
அந்தப் புத்தகம் குழந்தையாக இருந்த போது அன்னி பாரிஷ் வைத்திருந்த புத்தகமே தான்!
இவை சில எடுத்துக்காட்டுகளே. தொகுக்கப் போனால் ஆயிரக் கணக்கில் இப்படி உண்மைச் சம்பவங்களைத் தொகுக்கலாம்.
இதற்கு என்ன அர்த்தம்? தற்செயல் ஒற்றுமையா? இறைவனின் திருவிளையாடலா?
முற்றும்

புத்தக அறிமுகம் – 39
மஹாபாரத மர்மம்!
பாகம் 2
பொருளடக்கம்
1. நாரத மஹரிஷியும் மஹாபாரதப் போரும்!
2. போர் போர், மஹாபாரதப் பெரும் போர் – துரியோதனனின் கேள்வி!
3. மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?
4. ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?
5. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்!
6. மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி!
7. மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை!
9. பேர் படைத்த விஜயனுக்கும் பார் படைத்த துரியோதனனுக்கும் போர்! போரை நிறுத்த தூது சென்ற கண்ணன்!!
11.மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!
12. வில்லி பாரதத்தில் விராட பர்வத்தில் கடவுள் வாழ்த்துக்கள்!
13. 3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!
15. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?
16. விதுரர் கூறும் விதுர நீதி – 1
17. விதுரர் கூறும் விதுர நீதி – 2
18. விதுரர் கூறும் விதுர நீதி – 3
19. விதுரர் கூறும் விதுர நீதி – 4
20. விதுரர் கூறும் விதுர நீதி – 5
21. விதுரர் கூறும் விதுர நீதி – 6
22. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!
23. கண்ணன் இதழ் குழலே, காட்டும் வெற்றி ஒளியே!
*
நூலில் நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி இது :
என்னுரை
உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.
இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.
இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.
இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.
விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.
அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.
வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.
இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.
இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.
சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.
முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.
இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.
அவ்வப்பொழுது ஞான ஆலயம் குழும பத்திரிகைகள், http://www.tamilandvedas.com ப்ளாக் ஆகியவற்றில் மஹாபாரத மர்மங்களை விளக்கி அவ்வப்பொழுது எழுதி வந்தேன்.
முதல் பாகம் வெளிவந்ததைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் வெளி வருகிறது..
இந்த பாகத்தில் போர் பற்றிய அதிசய விவரங்கள், விஞ்ஞானிகளும் வியக்கும் மஹாபாரதப் போரின் அஸ்திரங்கள், மஹாபாரதம் தரும் ஜோதிட உண்மைகள், வில்லிபுத்தூராரின் பாரதத்தில் அவர் அழகிய தமிழில் வழங்கும் அற்புதச் செய்திகள், கண்ணனைப் பற்றிய சுவையான செய்திகள் ஆகியவை கட்டுரைகளின் வாயிலாகத் தரப்படுகின்றன.
இந்தக் கட்டுரைகளை அவ்வப்பொழுது வெளியிட்ட ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோஸியம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக் லண்டன் திரு ச. சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றி உரித்தாகுக.
கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி என்னை ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக!
இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தைக் கற்போம்; உயர்வோம்!
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
7-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**
Posted by Tamil and Vedas on August 25, 2022
https://tamilandvedas.com/2022/08/25/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3post-no-11220/

Post No. 11,219
Date uploaded in London – 24 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Sanskrit Verse with one Consonant -‘Nuunam nunnaani naanena naananenaananaani nah’(Post.11219)
Poet Dandin of seventh century CE discusses Citra bandhas ( ingenious arrangementS of letters) under the section on Sabdaalamkaaras. In this context he refers to three varieties of compositions each having restrictions or limitations with regard to Svara/vowels and Varna/consonants respectively.
Yah svarasthaana varnaanaam niyamo duskaresvasau
Istascatuhpra bhrtyesa darsyate sukarah parah
Kaavyaadarsa 3-83 (KD)
The purport of this verse is as follows:
There may be compositions having only a limited number of vowels or letters, belonging only to a limited number of places of articulation, or only having a limited number of consonants. Such compositions were desirable for the earlier theorists as varieties of what is called Duskara Yamaka. Such compositions become more and more difficult if they have only four Svaras, for instance, or only three or only two or only one Svara.
Dandin proposes to illustrate compositions having four or three or two or one only of either vowel or consonant or place of articulation. Such compositions are difficult. Those having more than four of vowels etc are said to be easier to compose. An example of a verse having only one Svara, as given by Dandin is as follows:
Saamaayaamaa maayaa maasaa
Maaraanaayaa naayaa yaanaa raamaa
Yaanaavaaraaraavaanaayaa
Maayaaraamaa maaraayaamaa
KD 3-87
An example of the use of only one consonant, as given by Dandin, is as follows
Nuunam nunnaani naanena naananenaananaani nah
Naanena nanu naanuunenaine naanaanino niniih
KD 3-95
An example of composition containing letters belonging to one place of articulation, as given by Dandin is as follows:
Aga gangaan gakaakaa kagaa hakaa ghakaa kakahaa
Ahaahaanka khagaan kaaga kankaa gakha gakaa kaka
KD3-91
It may be noted here that the whole conception of a composition with a limited number of vowel etc. presupposes a knowledge of grammar in respect of the vowels and consonants and more particularly in respect of the places of articulation ( uccaarana sthaanaani). For instance for composing and also appreciating the beauty of the verse
Agaa gangaa…………. one must have the idea of the dictum
Akuhavisarjaniiyaanaam kanthah
As incorporated into their works by the grammarians from the siksaa works of Panini and other such authorities.
Source: Paninian influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty ,Pratibha Prakashan, 2008
–SUBHAM-
TAGS- Dandin, poetics, citrabandhas, consonant verse, articulation, vowel,
Posted by Tamil and Vedas on August 24, 2022
https://tamilandvedas.com/2022/08/24/verse-with-one-consonant-nuunam-nunnaani-naanena-naananenaananaani-nahpost-11219/
Post No. 11,218
Date uploaded in London – 24 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Eleven Dramas of Jain Sanskrit Scholar Ramachandra Suri
Rama chandra soori was a disciple of the well known Jain scholar Hemachandra Soori. He composed the Dholka stone inscription in Northern Gujarat. The ‘prasasti’ is dated to 12th century CE. The inscription written in beautiful characters is found in a fragment only and contains verses from 71 to 103, the last one reading as
Prabandha sata nirmati pratita kiirtikaa myodayah
Prasasti mathulaami maamakrta raamachandro munih
The two stone slabs containing the first seventy verses have not yet been discovered. Out of the hundred prabandhas said to have been composed by him only 35 have been traced. Out of his other literary works at least eleven dramas namely,
Nala vilaasa
Yadu vilaasa
Sathya harischandra
Nirbhaya bheema vyaayoga
Mallikaa makaranda
Raagava abyudhaya
Rohinii mrkaanka
Vanamaalaa naatikaa
Kaumudee mithraananda
Yaadhava abhyudhaya
Raghu vilaasa have been found.
His work Kumaara vihaara sataka is also found. He is also the author of a collection of verses called Sudhaakalasa.
A treatise named Naatya darpana also composed by him in collaboration with Gunachandra soori and a work on Jain logic have been found.
The poet lived from 1110 to 1173 and was a court poet of the Gujarat Chalukya kings,
Siddharaaja Jayasimha and
Kumaarapaala.
For his high literary attainments, king Siddharaaja had honoured him with the title Kavikataaramalla.
According to Prabhaavaakaachaara, Devasuri was the court poet of Jayasimha and had defeated the Digambara scholar Kumudachandraachaarya in a dispute held in the presence of the king.
–subham—
Tags- Eleven Dramas, Jain Scholar, Ramachandra Suri, Sanskrit
Posted by Tamil and Vedas on August 24, 2022
https://tamilandvedas.com/2022/08/24/eleven-dramas-of-jain-sanskrit-scholar-ramachandra-suri-post-11218/

Post No. 11,217
Date uploaded in London – – 24 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசய ஒற்றுமைகள்! – 2
ச.நாகராஜன்
மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
வண்டு வந்த ஆச்சரியம்
எந்த ஒருவரையும் அனாவசியமாக விமரிசனம் செய்யும் சில குதர்க்கவாதிகளும் அல்பமான தர்க்கவாதிகளும், அரைகுறை விஞ்ஞானிகளும் கார்ல் ஜங்கிடம் வாலாட்ட முடியாது.
அப்படிப்பட்ட அற்புத விஞ்ஞானி அவர்.

அவரை ஒரு சமயம் ஒரு இளம் பெண்மணி சந்தித்து தான் கண்ட கனவை விவரித்தார். அந்த பெண்ணின் கனவில் ஒரு தங்க நிற வண்டு ஒரு சிக்கலான நேரத்தில் தோன்றியது. அதை அவர் விவரிக்க, அதை ஜங் மூடிய தனது ஜன்னலுக்கு முன்னால் இருந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
திடீரென்று அவருக்கு ஒரு சப்தம் கேட்டது. யாரோ மெதுவாக தட்டுவது போல இருந்தது அந்த சப்தம்.
ஜங் திரும்பிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்!
ஒரு அபூர்வமான வண்டு ஜன்னல் தகடைத் தட்டிக் கொண்டிருந்தது!
ஜங் அவசரமாக ஜன்னலைத் திறந்தார். ஒரு பூச்சி பறந்து வந்தது. உள்ளே வந்த அந்தப் பறக்கும் பூச்சியை அவர் பிடித்தார்.
அது அபூர்வமான ஒரு வகை வண்டு.
இது போன்ற ஒரு சம்பவம் அவர் வாழ்வில் என்றுமே நிகழ்ந்ததில்லை என்பதை வியப்பின் உச்சிக்கே சென்ற ஜங் தனது The Structure and Dynamics of the Psyche இல் விவரித்துள்ளார்.
அதைக் கீழே காணலாம்.
From The Structure and Dynamics of the Psyche: “A young woman I was treating had, at a critical moment, a dream in which she was given a golden scarab. While she was telling me this dream I sat with my back to the closed window. Suddenly I heard a noise behind me, like a gentle tapping. I turned round and saw a flying insect knocking against the windowpane from outside. I opened the window and caught the creature in the air as it flew in. It was the nearest analogy to the golden scarab that one finds in our latitudes, a scarabaeid beetle, the common rose-chafer (Cetonia aurata) which contrary to its usual habits had evidently felt an urge to get into a dark room at this particular moment. I must admit that nothing like it ever happened to me before or since, and that the dream of the patient has remained unique in my experience.” – Carl Jung
புத்தகம் தந்த ஆச்சரியம்!
1973ஆம் ஆண்டு. பிரபல நடிகரான அந்தோணி ஹாப்கின்ஸ் ‘தி கேர்ள் ஃப்ரம் பெட்ரோவ்கா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். இதை எழுதியவர் ஜார்ஜ் ஃபெய்ஃபர். ஆனால் இந்த நாவலை லண்டனில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உட்கார்ந்த போது அங்கு ஒரு புத்தகம் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம்!
அது அவர் தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம் தான்! அது மட்டுமல்ல, அது அந்த எழுத்தாளரின் சொந்த பிரதி. அதில் அவர் குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார். அந்த எழுத்தாளர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தார். அந்த பிரதி அவரது காரிலிருந்து திருடப்பட்டிருந்தது.
அது தான் அந்த ரயில்வே பிளாட்பாரத்தில் ஹாப்கின்ஸுக்குக் கிடைத்தது!
போட்டோ தந்த ஆச்சரியம்!
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது ஆண் குழந்தையை 1914இல் போட்டோ எடுத்தார். அதை ஸ்ட்ராஸ்பர்க்கில் டெவலப் செய்தார். அந்தக் காலத்தில் ஃபிலிம் ப்ளேட்டுகள் தனித் தனியாகத் தரப்பட்டு வந்தது.
முதலாம் உலகப் போர் வெடித்தது. அந்தப் பெண்மணியால் ஸ்ட்ராஸ்பர்க்கிற்குச் செல்ல முடியவில்லை. போனது போனது தான் என்று அவர் அந்த பிலிமை வாங்காது விட்டு விட்டார்.
இரண்டு வருடங்கள் ஓடின.
அவர் நூறு மைல் தள்ளி இருந்த ப்ராங்க்ஃபர்ட்டில் ஒரு பிலிம் ப்ளேட்டை தனது புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வாங்கினார்.
அந்த பிலிம் டெவலப் செய்யப்பட்டது.
என்ன ஆச்சரியம்!
அந்தக் குழந்தையின் போட்டோ அதற்கு முன்னால் பிறந்திருந்த குழந்தையின் படத்தின் மீது சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது!
முதல் பிலிம் டெவலப் செய்யப்படாத நிலையில் அதே பிலிம் இரு குழந்தைகளையும் காட்டிய போது அவர் பிரமித்தார்.
டெவலப் செய்யப்படாத பிலிம் விற்பனைக்குத் தரப்பட அதை இவர் வாங்க இவருக்கு அவரது இரு குழந்தைகளின் படமும் ஒன்றின் மீது ஒன்றாகக் கிடைத்தது.
இதையெல்லாம் என்னவென்று சொல்வது? விஞ்ஞானம் இதற்கு ஒரு விளக்கத்தை அளிக்க முடியுமா என்ன?
***
புத்தக அறிமுகம் – 38
மஹாபாரத மர்மம்!
பாகம் 1

பொருளடக்கம்
1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்
2. மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது? மஹாபாரதம் படிப்பதால் என்ன பயன்?
3. மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!
4. பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்!
5. ஒரே ஒரு ஸ்லோகத்தில் மஹாபாரதம்!
6. சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!
7.துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம் : காந்தாரி!
9.கிருஷ்ணரின் வருகையும் மறைவும்!
10. பிரபஞ்ச நாயகன் போரின் நாயகனாகிப் புரிந்த லீலைகள்!
11.பாண்டவர் வெல்லத் தடைகள் ஆயிரம்! தர்மம்
12. அஸ்வத்தாமனை துரியோதனன் நம்பாமலிருக்க மாயக் கண்ணன் செய்த ஜாலம்!
13. பதினெட்டாம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!
14. மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?
15. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!
17. “சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!
18. மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!
19. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?
20. மஹாபாரத ரகசியம் – கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?
21. தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.
இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.
இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.
இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.
விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.
அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.
வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.
அது மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் தனது திருவுள்ளத்தினால் அருளிய பகவத் கீதையும் இதில் தான் அமைந்துள்ளது.
இன்னும் ஏராளமான பகுதிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
விஷ்ணு சஹஸ்ர நாமம், யக்ஷ ப்ரஸ்னம், விதுர நீதி, சத ருத்ரீயம் போன்ற பல அபூர்வமான பகுதிகள் இதில் உள்ளன.
புராண விளக்கங்களை இதில் காணலாம். ரிஷிகளின் சரித்திரங்களும் இதில் உண்டு.
அஸ்திரங்களைப் பற்றிய விவரணம் இதில் உண்டு.
தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் இதில் பதில் உண்டு.
ஆன்மீக பூமியான பாரத தேசம் பற்றிய பிரமிக்க வைக்கும் செய்திகள் இதில் உண்டு.
ஆங்காங்கே உள்ள சம்வாதங்கள் என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் மனித குலத்திற்கு என்றும் துணை நிற்கும் வழிகாட்டும் நெறிகளைத் தருபவை.
இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.
இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.
சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.
முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.
இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.
அவ்வப்பொழுது ஞான ஆலயம், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் ப்ளாக் வழியே மஹாபாரத மர்மங்களை விளக்கிக் கொஞ்சம் எழுதி வந்திருக்கிறேன்.
இந்தக் கட்டுரைகளையும் கீதை காட்டும் பாதை பற்றிய எனது கட்டுரைகளையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட எண்ணம் கொண்டு இந்த முதல் பாகத்தை முதலில் வெளியிடுகிறேன்.
இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ
27-7-2022
ச.நாகராஜன்
Posted by Tamil and Vedas on August 24, 2022
https://tamilandvedas.com/2022/08/24/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2-post-no-11217/


Post No. 11,216
Date uploaded in London – 23 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
குஜராத்தின் புகழ்பெற்ற சமண முனிவர் ஹேமசந்திர சூரியின் சீடர் ராமசந்திர சூரி.இவரைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது தோல்கா (Dholka வட குஜராத்) கல்வெட்டு. இது 12-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.
அச்சுப் பொறித்த்தாற்போல அழகிய எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுத் துண்டில் எண் 71 முதல் 103 வரையுள்ள பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கவில்லை .
கடைசி பாடலை மட்டும் காண்போம்
ப்ரபந்த சத நிர்மிதிப்ரதித கீர்த்திகாம்யோதயஹ
ப்ரசஸ்திமதுலாமிமாமக்ருத ராமசந்த்ரோ முனிஹி
இதிலிருந்து அவர் 100 பாடல்களைக் கொண்ட பிரபந்தம் எழுதியது தெரிகிறது. ஆனால் முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் இதுவரை கிடைக்கவில்லை. 35 செய்யட்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன.
அவர் எழுதிய நாடகங்கள்
நள விலாஸ , யது விலாஸ, ஸத்ய ஹரிச்சந்திர, நிர்பய பீம வ்யாயோயக , மல்லிகா மகரந்த , ராகவாப்யுதய , ரோஹிணி ம்ருகாங்க , வனமாலா நாடிகா , கெளமுதீ மித்ரானந்த, யாதவாப்யுதய , ரகு விலாஸ, குமார ரவி ஹாரா சதக .
இவை அனைத்தும் கிடைத்துவிட்டன. சுதா கலச என்ற பாடல் தொகுப்பையும் இவர் இயற்றினார் குண சந்த்ர சூரி என்பவருட இணைந்து அவர் எழுதிய நாட்யதர்பண என்ற நூலும் கிடைத்திருக்கிறது . அவர் கி.பி (பொ .ஆ.) 1110 முதல் 1173 வரை வாழ்ந்தார் குஜராத் சாளுக்கிய வம்ச அரசர்கள் சித்தராஜ ஜெயசிம்ஹ, மற்றும் குமாரபால ஆகியோரின் ஆஸ்தான புலவராகவும் இருந்தார்..அவருடைய இலக்கிய படைப்புகளைக் கண்டு வியந்த மன்னன் சித்தராஜ ஜெயசிம்மன், புலவருக்கு ‘கவி கடார மல்ல’ என்ற சிறப்பு விருது வழங்கினார் .மன்னருக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் திகம்பர சமணப் பிரிவினைச் சார்ந்த ஒரு அறிஞரை வென்றார். அவருக்கு ஒரு கண் தெரியாது என்பதும் வரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது..
Xxx
யசோதர்மன் புகழ் பாடிய கவி வாஸுல
ஹூண மன்னன் மிஹிரகுலனைத் தோற்கடித்த மன்னன் யசோதர்மன் ஆவார் . கல்வெட்டின் காலம் பொது ஆண்டு (கி.பி.) 532. கக்க என்பவரின் மகனான வாஸுல இயற்றிய கவிதைகள் மாண்டசோர் தூண் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதே செய்யுட்களானாலும் நல்ல தரமான கவிதைகள் அவை.
நல்ல கற்பனைத் திறனைக்கொண்ட அவரது பாடலின் ஒரு பகுதி இதோ :
காமேவோண்மாதுமூர்த்வம் விகணயிதுமிவ ஜ்யோதிஷாம் சக்ரவாளம்
நிர்தேஷ்ட்டும் மார்கமுச்சைர்திவ இவ ஸுக்ருதோ பார்ஜிதாயாஹா ஸ்வ கீர்த்தே …….
இதே போல எட்டாவது பாடலின் பிற்பகுதியும் இவர் கற்பனை சிறகடித்துப் ப றப்பதைக் காட்டும்:
இத்யுத்கர்ஷம் குணானாம் லிகிதுமிவ யசோதர்மண ஸ் சந்த்ரபிம்பே
ராகாதுத் க்ஷிப்த உச்சைர் புஜ இவ ருசிமான்யஹ ப்ரு திவ்யாம் விபாதி
மேலும் 28 கவிகளைக் கொண்ட மற்றும் ஒரு மாண்டசோர் கல்வெட்டையும் இவரே செய்ததாகத் தெரிகிறது . மன்னர்கள் யசோதர்மன் மற்றும் விஷ்ணுவர்தனனின் (பொ .ஆ.532) புகழ்பாடும் பிரசஸ்தி இது.
புலவர் பெயர் இல்லாவிடினும் ஒரே ஆண்டு மூலமாகவும் கல்வெட்டைச் செதுக்கிய சிற்பி கோவிந்தன் என்ற பெயர் மூலமாகவும் ஒரே புலவர் யாத்தவை என்பதை அறிய முடிகிறது.
Xxx
அரிய ஸம்ஸ்க்ருத நாடகம்

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்கள் எண்ணிலடங்கா. தமிழில் 2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஒரு நாடகமும் நமக்குக் கிடைக்காதது தமிழர்களின் துர்பாக்கியமே.
சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் மட்டும் எழுதினாலேயே ஒரு புஸ்தகம் அளவுக்குப் பெரிதாகிவிடும் !
நாலாம் விக்ரஹ ராஜதேவ என்பவர் அருணாராஜனின் புதல்வர். இவர் ஆஜ்மீர்-சாகம்பரியை (Rajasthan) ஆண்ட சிற்றரசர். ஆண்டு; 1153-1164. அவர் இயற்றிய நாடகத்தின் பெயர் ஹரகேளி நாடகம். இது ஒரு அருமையான நாடகம். இவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. முதல் நூற்றாண்டில் காளிதாசன் நாடகம் இயற்றினான். அவருக்கு முன்னர் பாஷா எழுதிய நாடகங்களும் கிடைத்து இருக்கின்றன. ஆயினும் 1000 ஆண்டுக்குப் பின்னரும் அதே போல ஒரு சுவை குன்றாத நாடகம் எழுதியவர் விக்ரஹ ராஜ தேவ ஆவார். அர்ஜுனனும் சிவ பிரானும் போட்ட சண்டை பற்றியது இது.
ஆஜ்மீர் (Rajasthan) ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கல்வெட்டு இருந்தது . ஸம்ஸ்க்ருத கல்லூரியாக இருந்த இடத்தைப் பின்னர் முஸ்லீம்கள் மசூதி ஆக்கிவிட்டனர்
போஜ மன்னனின் நண்பனும் ஹுன வம்சத்தில் தோன்றியவனுமான பாஸ்கர என்பவன் இதைப் படி எடுத்துள்ளான். ஆயினும் முழு நாடகம் கிடைக்கவில்லை.
புலவரும் மன்னருமான விக்ரஹாராஜதேவ இறந்த பின்னர் , உலகம் புலவர்களின் நண்பர்கள் இல்லாத அளவுக்கு வறியதாகிவிட்டதாம் !!
-சுபம்-
TAGS- விக்ரஹாராஜதேவ, ஆஜ்மீர் , கல்லூரி, சம்ஸ்க்ருத,, நாடகங்கள், ராமசந்திர சூரி.,தோல்கா, யசோதர்மன் , வாஸுல
Posted by Tamil and Vedas on August 23, 2022
https://tamilandvedas.com/2022/08/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-70-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/

Post No. 11,215
Date uploaded in London – – 23 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசய ஒற்றுமைகள்! – 1
ச.நாகராஜன்
உலகில் நடைபெறும் நிகழ்வுகளில் பல நம்மை பிரமிக்க வைக்கும்.
இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளில் ஒன்று கோஇன்சிடென்ஸ் எனப்படும் தற்செயல் ஒற்றுமை.
ஆனால் இவை தற்செயலாக ஏற்பட்டவையா அல்லது இறைவனின் ஒரு திருவிளையாடலா?
இதோ சிலவற்றைப் படித்துப் பாருங்கள்; பின்னர் உங்கள் முடிவுக்கு வாருங்கள்!
அமெரிக்க ஆச்சரியம்!
அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களான தாமஸ் ஜெஃபர்ஸனும் ஜான் ஆடம்ஸும் (Thoman Jefferson and John Adams) சுதந்திர பிரகடனத்தைத் (Declaration of Independence) தயாரிக்க ஆரம்பித்தனர். ஜெஃபர்ஸன் பிரகடனத்தைத் தயார் செய்து ஆடம்ஸிடம் காண்பித்தார். பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடன் சேர்ந்து ஜான் ஆடம்ஸ் அதை சீராக்கி மெருகூட்டித் தந்தார். 1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காண்டினெண்டல் காங்கிரஸ் (Continental Congress) அதை அங்கீகரித்தது. இது நடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1826, ஜூலை 4ஆம் தேதி ஜெஃபர்ஸனும் ஆடம்ஸும் – இருவரும் – ஒரே தேதியில் இறந்தனர். அது அமெரிக்க சுதந்திர தினமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது!
ஹோட்டலில் ஆச்சரியம்!
1953ஆம் ஆண்டு. தொலைக்காட்சி ரிபோர்ட்டரான இர்வ் குப்சினெட் (Irv Kupcinet)இரண்டாம் எலிஸபத்தின் முடிசூட்டு விழாவை நேரில் பார்த்து நிகழ்ச்சியைத் தயாரிக்க லண்டன் சென்றார். சவாய் ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் ஒரு டிராயரில் அவர் சில பொருள்களைப் பார்த்தார். அவையெல்லாம் ஹாரி ஹானின் (Harry Hannin) என்பவருடையது என்பதை அதிலிருந்த அடையாளங்கள் மூலம் அவர் கண்டுபிடித்தார். ஹாரி ஹானின் பிரபலமான ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு வீரர். அவர் ஹார்லெம் க்ளோபெட்ராட்டர்ஸின் நண்பர். ஹார்லெம் குப்சினெட்டுக்கு நண்பர். இதை நினைத்து ஆச்சரியப்பட்டார் குப்சினெட். இரண்டு நாட்கள் கழித்து ஒரு கடிதம் ஹானினிடமிருந்து அவருக்கு வந்தது. அதில் அவர் தான் பாரிஸில் ஹோட்டல் மெரிஸில் தங்கியிருந்த போது குப்செனெட்டின் ஒரு ‘டை’யைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார்!
டாக்ஸி ஆச்சரியம்!
1975ஆம் ஆண்டு. பெர்முடா மொபெடை ஒரு மனிதர் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஒரு டாக்ஸி மோத அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ஒரு வருடம் கழித்து அவரது சகோதரரும் அதே போலவே உயிர் இழந்தார். அவர் ஓட்டியது அதே பெர்முடா மொபெட் தான்! இன்னும் ஆச்சரியம் என்னவெனில் அவர் மீது மோதியது அதே டாக்ஸி தான், அதை ஓட்டியவரும் அதே டிரைவர் தான், அவர் ஏற்றி வந்த பயணியும் முன்பு ஏற்றி வந்த அதே பயணிதான்!
மர ஆச்சரியம்!
1883ஆம் ஆண்டு. ஹென்றி ஜைக்லேண்ட் என்பவர் தனது காதலியுடன் நட்பை முறித்துக் கொண்டார். மனமுடைந்த காதலி மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரர் ஜைக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து அவரைச் சுட்டார். தான் சுட்டதில் ஜைக்லேண்ட் இறந்து விட்டார் என்று நினைத்துக் கொண்ட அவர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் ஜைக்லேண்ட் சாகவில்லை. குண்டு அவர் முகத்தை உராய்ந்து கொண்டு மட்டுமே சென்று ஒரு மரத்தைத் துளைத்தது. க்ஷண நேரத்தில் அவர் பிழைத்தார். சில வருடங்கள் கழித்த பின்னர் ஜைக்லேண்ட் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார். அந்த குண்டு அதனுள்ளேயே இருந்தது. மரம் பிரம்மாண்டமானதாக இருந்ததால் வெட்டி முறிப்பது என்பது சாத்தியப்படாது என உணர்ந்த ஜைக்லேண்ட் அதை டைனமைட் வைத்து தகர்க்க முயன்றார். டைனமைட் வெடித்தது.
அது வெடித்து மரம் சிதற அதன் உள்ளிருந்த குண்டு சீறிப் பாய்ந்து ஜைக்லேண்டின் மண்டையைத் துளைத்து அவரைக் கொன்றது!
ராஜ ஆச்சரியம்!
இத்தாலியில் மொன்ஸா என்ற இடத்தில் மன்னர் அம்பர்டோ I (Kinf Umberto I) தனது தளகர்த்தரான ஜெனரல் எமிலியோ போஞ்சியா வாடியா (General Emilio Ponzia- Vadia) என்பவருடன் ஒரு சிறிய உணவு விடுதியில் உணவருந்தச் சென்றார்.
அவரது ஆர்டரை எடுக்க வந்தவர் உணவு விடுதியின் உரிமையாளர்.
அவரைப் பார்த்த மன்னர் அசந்து போனார். ஏனெனில் அவர் அச்சு அசலாகத் தன்னைப் போல இருந்தது தான் அவரை அப்படி பிரமிக்க வைத்தது!
இருவரும் இந்த உருவ ஒற்றுமை பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
பேச்சில் அவர்கள் கண்டு பிடித்த சுவையான ஒற்றுமைகள் இவை:
இருவரும் ஒரே வருடம் ஒரே மாதம் ஒரே தேதியில் பிறந்தவர்கள்!
(மார்ச் 14, 1844)
இருவரும் பிறந்த இடம் ஒரே நகரம் தான்!
இருவரும் மணந்த பெண்ணின் பெயர் ஒன்றே தான். மார்கெரிடா (Margherita) என்பது தான் அந்தப் பெயர்.
இத்தாலியின் மன்னராக அம்பர்டோ என்று முடி சூட்டப்பட்டாரோ அதே தேதியில் தான் உணவு விடுதியை அதன் உரிமையாளர் திறந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி மன்னருக்கு ஒரு செய்தி வந்தது. அந்த உணவு விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் ஒரு துப்பாக்கிச் சூடில் இறந்து விட்டார் என்பது தான் அந்தச் செய்தி. உடனே மன்னர் தனது துக்கச் செய்தியை அனுப்பினார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் அவரைக் கொலை செய்தான். மன்னரும் அதே தேதி மாண்டு போனார்!
இவையெல்லாம் விளக்கம் சொல்ல முடியாத தற்செயல் ஒற்றுமைகளா, அல்லது இறைவனின் திருவிளையாடலா?!
***

புத்தக அறிமுகம் – 37
கொங்கு மண்டல சித்தர்கள், புலவர்கள்,
தலங்கள்! – பாகம் 2
பொருளடக்கம்
முதல் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!
1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?
2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!
3.மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!
4. கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!
5. பயறு மிளகானது: சிவபிரான் திருவிளையாடல்!
6. முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!
இரண்டாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள்
7. செங்குன்றூர் கிழார் பாடிய திருவள்ளுவ மாலை வெண்பா!
8. வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!
9. யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!
10. பெரும் புகழ் படைத்த முத்தரையர் ஆண்ட இடம் எது?
11. கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!
12. தம்பிக்குத் தலை கொடுக்க முன் வந்த அண்ணன்!
13. சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும் திருவாவடுதுறை மட வரலாறும்!
14. ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!
16. சுரிகை ஆயுதப்போரில் வல்ல தித்தன் என்னும் அகளங்க சோழன்!
17. ஆணுக்கு அறிவு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?
18. தமிழுக்காகத் தாலியை ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!
20. மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!
21. புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டி!
22. வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!
23. பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!
24. காவிரியைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு வந்த அல்லாளன் இளையான்!
25. புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!
26. பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!
27. கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!
28. விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!
29. வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!
30. பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்!
31. தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!
32. வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்!
33. புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!
34. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!
பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.
தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல நூறு வரலாறுகளைக் கொண்டது. இதை இயற்றியவர் கார்மேகக் கவிஞர் என்பவர்.
கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.
கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.
இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.
இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.
இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
3-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**
Posted by Tamil and Vedas on August 23, 2022
https://tamilandvedas.com/2022/08/23/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1-post-no11215/

Post No. 11,214
Date uploaded in London – 22 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Ravikirti (ravikeerti), a Jain poet composed the well known Aihoe (aykola) inscription of Chalukya king Pulikesin II alias Sathyaasraya dated 634 CE. It is in Karnataka. The poet built a Jain temple. The inscription is of great importance from the historical as well as from the literary point of view. He has mentioned both Kalidasa and Bharavi (kaalidaasa, bhaaravi), from which we come to know that these two great Sanskrit poets were very popular even in the South at that time.
Ravikirti tried to emulate them. He is thoroughly well versed in the rules of Alankaara saastra (poetics). He has freely used in the Prasasti many phrases and ideas which are parallel to those found in Kalidasa’s Raghuvamsa and Bharavi’s Kratarjuniyam (Kiraataarjuniiyam).
Xxx
Two Madhavas
We come across two poets by name Maadhava in Bihar and Gujarat inscriptions. Both of them are good poets.
Madhava composed Bhagirathpur stone inscription of Anumati Devi. It is in Mithila area of Bihar.
Anumati Devi, was daughter in law of Harinarayana, wife of Ramabhadra and mother of Kamsanarayana of the Oinsvaaraa dynasty of Mithila in Bihar. It is dated Lakshmana sena samvatsara 394 or 403 corresponding to 1512 CE. It records a temple built by Anumati Devi.
The poet belonged to the same family as Siva Jha , father of Makhadevi and is mentioned in the anthology Rasikajeevana of Gadhaadhara Bhatta of Mithila. The panegyric consists of nine verses. Here is verse no.2
“Through her gifts, she destroyed the extraordinary poverty of the world; through her glory she rendered tens of thousands of people more beautiful (delighted) than the autumn moon; through her modesty and prudence, she brought relatives under her control. Such a repository of bright virtues unique in the world got this temple built.”
Daanairyaa dalayaam babhoova jagathaam daaritrachamatyutkatam
Keertyaa yaa saradindusundarataraa lokaamschakaaraayuthaan
Kinchochchairvinayaannayaacha vasataam neetaa yayaa bhaandavaah
Seyam visvavilakshanojwalagunagraamaa matam nirmame
The record refers to another poet named Kuladhara who also seems to have composed a eulogy of the queen.
Xxx
Naagara Braahmana Maadhava
He was a Brahmin of Chamatkarapura, son of Munjiga. He composed a Saptasloki (seven verses) which is inscribed on a stone slab in Vanthali in Saurashtra (Gujarat). The record refers to the time of Gujarat Chalukya king Sarngadeva and is dated 1290 CE.
The poet calls himself Visvamaadhava. He seems to be a good poet. The following verse is one from the Saptasloki:
Srngaara bhangisubagaah subagaana veechivaachaalakandakuharaa muhuraattaveenaah
Gaayanti …………… giraanagaraajasrngamaaruhya guhyachakoradrso yasosya
The same poet seems to have also composed the incomplete, but highly poetical, inscription preserved in the Rajkot Museum. The first half of verse 31 of the Rajkot inscription is identical with the first half of verse 3 of the Vanthalli inscription.
It is our duty to collect and publish all the verses from thousands of inscriptions spread all over India. If they are translated into English and vernacular languages, all can appreciate the beauty of those verses.
Source – Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof.D.B.Diskalkar, Pune, 1993 (with my inputs)
–subham–tags- Aihole, Mithila, Anumati Devi, Madhava, Ravikirti, Inscriptions, Sanskrit
Posted by Tamil and Vedas on August 22, 2022
https://tamilandvedas.com/2022/08/22/sanskrit-verses-in-bihar-gujarat-karnataka-inscriptions-post-no-11214/