போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்! (Post No.11043)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,043

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்!

ச.நாகராஜன்

போதிதர்மர் மவுண்ட் சாங்கில் (Mt Song) ஒன்பது வருடம் காலம் தங்கி இருந்த பின்னர் ஷாலின் ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக அங்கிருந்து கிளம்பலானார். ஒரு புதிய அரசாங்கம் இந்த ஆலயத்தை நிறுவ ஆதரவை அளித்தது.

கிளம்புவதற்கு முன் போதிதர்மர் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்தார்.

“சீடர்களே! கிளம்புவதற்கான தருணம் இதோ வந்து விட்டது. இதுகாறும் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதை விளக்கும் விதமாக ஏதேனும் கூறுங்கள்” என்று அவர் கூறினார்.

சிஷ்யர்களில் மூத்தவரான டாவோ செங் ஃபு [Dao Fu (Seng Fu)] என்பவர் எழுந்தார்.

“எனது  பார்வையில், அது வார்த்தைகளுக்கோ சொற்றொடர்களுக்கோ அடங்காதது. அல்லது அது வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களிலிருந்து தனித்து இல்லாதது. இது தான் அந்த வழியின் செயல்பாடு.” என்று கூறினார் அவர்.

உடனே போதிதர்மர், “நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து எழுந்த ஜோங் சி (Zong Chi) என்ற சந்யாசினி கூறினார்: “நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அது அக்‌ஷோப்ய புத்தாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதில் ஒரு புகழ் வாய்ந்த சிறு கண்ணோட்டமே. ஒரு தடவை பார்த்து விட்டால் அதை மறுமுறை பார்க்கத் தேவையில்லை.”

(அக்க்ஷோப்ய என்றால்அசையாதது, என்றும் நேராக இருப்பது, நிலையானது என்று பொருள்)

உடனே போதிதர்மர், “நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து டாவோ யு (Dao Yu) என்ற சீடர் எழுந்து கூறினார்:

“நான்கு பூதங்களும், சூன்யம் தான். விழிப்புணர்வின் ஐந்து அங்கங்கள் உண்மையில் இருக்கையில்லாமல் உள்ளவையே. நான் பார்க்கையில் ஒரு நிகழ்வும் கூட புரிந்து கொள்வதற்காக இல்லை.”

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

கடைசியில் ஹூய்க் (Huike) எழுந்து அவரை வணங்கி நிமிர்ந்து நின்றார்.

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

பின்னால் அனைவரும் இவையெல்லாம் மேலோட்டமான மற்றும் ஆழமான நிலைகள் தாம்!  ஆனால் இவையெல்லாம் முன்னோர் கூறியதன் அர்த்தம் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டனர்.

“நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்பது கூண்டு விளக்குகளையும் தூண்களையும் பற்றிப் பேசுவது போல ஆகும்.

“நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்பது “இந்த மனமே தான் புத்தர்” என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்பது மலைகள், ஆறுகள் மற்றும் இந்த பெரிய பூமியைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்பது ஒரு மலரைச் சுழற்றுவதற்கும் கண்களை இமைப்பதற்கும் ஒப்பாகும்.

எதுவுமே மேலோட்டமானதும் இல்லை, ஆழமானதும் இல்லை. எதுவும் மேலானதில்லை அல்லது கீழானதில்லை.

இப்படிப் பார்த்தால், அப்போது தான் முன்னோர் கூறியதை உன்னால் பார்க்க முடியும்.

இரண்டாம் நிலை முன்னோரைப் பார்த்தால் நீ காவி உடை மற்றும் பிக்ஷா பாத்திரத்தின் மாறுதல் நிலையை உன்னால் பெற முடியும்.

விழிப்புணர்வு பெற்ற முன்னோரின் தர்ம சக்கரத்தின் சக்தியானது மிகவும் பெரியதாகும், அது பிரபஞ்சம் முழுவதையும் சுழல வைக்கும், ஒவ்வொரு அணுவையும் சுழற்ற வல்லது.

ஹூய்க்கின் கரங்களில் காவி உடையும் பிக்ஷா பாத்திரமும் மாற்றப்பட்டாலும் கூட, சத்தியமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கேட்கும்.

கூட்டம் முடிந்தது.

அனைவரும் புரிந்து கொண்டனர்.

போதிதர்மர் அங்கிருந்து ஷாலின் ஆலயத்தை நிறுவக் கிளம்பினார்.

***

tags-  போதிதர்மர் , ஷாலின் ஆலயம்

PATANJALI AND HIS COMMENTATORS (Post No.11,042)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,042

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are nine commentaries on Mahabhasya of Patanjali which can be arranged chronologically:

1.Bhartrhari’s Diipikaa

2.Kaiyata’s Pradiipa

3.Iisvaraanada’s Brhadvivarana

4.Pravatakopaadhyaaya’s Prakaasa

5.Annambhatta’s Uddyotana

6.Sivaramendra Sarasvati’s Ratnaprakaasa

7.Saastri Naaraayana’s Naaraayaniiya

8.Naagesa’s Uddyota

9.Vaidyanaatha Paayagunda’s Chaayaa

xxx

A Vrtti is only a short explanation (of sutras in a book)  or analysis with examples and counter examples. The Bhasya is a full fledged commentary. It may contain elaborate discussions on the meaning of  a Sutra, conflicting views and arguments, excursus and new propositions. From the ancient Maha Bhasya of Patanjli on Panini’s great grammar book Ashtadhyayi,  we come to know what was a lecture or debate of scholars in ancient times.

The massive introduction of debates in the bhasya has led to a denomination sometimes given to Mahabhasya, viz. Cuurni, a word which is analysed as signifying ‘that which smashes the argumentation of scholars’ (cuurnayati khandayati agesa panditaanaam tarkam iti). Thus the main features of the bhasya genre are that it deals with sutras and it displays all applications of intelligence to the concerned subject.

In the great genre of Bhasya, Patanjali’s bhasya on Panini’s sutra is qualified as ‘great’ (Mahaa). This qualification appears in a group of stanzas ascribed to Bhartuhari and inserted at the end of second Kaanda of ‘Vaakpadiiya’ , where the greatness is commented upon by qualifying ‘Maha’bhasya as

“the bottom of which has never been attained because of its profundity, but which looks shallow because  of its serene beauty.

The greatness is also mentioned in Kaiyata’s  Pradipa in association with the metaphor of an ocean Mahabhasya ‘Arnava’.

Isvarananda and Annambhatta comment that the greatness of this bhasya is due to its size and to its meaning (granthorthascha mahatvam)

Saastri naarayana speaks of the profundity of Mahabhasya  ‘Ghaambiiryayogena bhassyasya vyaakyeyatvam’.

For Naagesa the superiority of this bhasya over the other lies in the fact that ‘ even though it makes comments like them, it gives new teachings by formulating desiderta etc.

There is another saying  ‘ this bhasya is great , because it contains reflections on Vartikas’

Source – Commentaries on Mahabhasya.

–subham–

Tags – Patanjali, Mahabhasya, Commentators

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 58 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,041)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,041

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 58 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

யுக்த  சேதசஹ 7-30  நிலைத்த மனத்தினராய்

யுக்த சேஷ்டஸ்ய 6-17  மிதமான உழைப்புடையவனுக்கும்

யுக்த தமாஹா 12-2 யோகத்தை நன்குணர்ந்தவர்கள்

யுக்த ஸ்வப்ன அபோதஸ்ய 6-17   மிதமான உறக்கமும், விழிப்பும்   உடையவனுக்கும்

யுக்தஹ 2-39 கூடியவனாய்

யுக்தாத்மா 7-18  யோகத்தில் நிலைத்த

யுக்தா ஹார விஹாரஸ்ய 6-17  மிதமான ஊணூம், உலாவுதலும்  உடையவனுக்கும்

யுக்தே 1-14  பூட்டின

யுக்தைஹி 17-17 திட சித்தம் உடையவர்களும்

யுக்த்வா 9-34 நிலை நிறுத்தி

யுகபத் 11-12  ஒருங்கு கூடி

யுகஸ ஹஸ்ராந்தாம் 8-17

யுகே 4-8  யுகம்தோறும்

யுஜ்யதே 10-7  கூடியவன் ஆகின்றான்

யுஜ்யஸ்வ 2-38 முயல்வாய்

யுஞ்ஜ தஹ 6-19 அப்யசிக்கும்

யுஞ்சன் 6-15  ஒருமுகப்படுத்தி

யுஞ்ஜீத 6-10  நிலை நிறுத்த வேண்டும்

யுஞ்ஜ்யாத் 6-12   அப்யசிக்க வேண்டும்

யுத்த விசாரதாஹா 1-9 போரில் வல்லவர்கள்  20 WORDS

யுத்தம்  2-32 யுத்தத்தை

யுத்தாத் 2-31 யுத்தத்திலிருந்து

யுத்தாய 2-37 போருக்கு

யுத்தே 1-23   போரில்

யுதாமன்யு 1-6  பாஞ்சால வீரர் யுதாமன்யு

யுதி 1-4 போரில்

யுதிஷ்டிரஹ 1-16 யுதிஷ்டிர

யுத்ய 8-7  யுத்தம் செய்

யுத்யஸ்வ  11-34  போர் புரி

யுயுதானஹ 1-4  ஸாத்யகி

யுயுத்சவஹ 1-1 போருக்கு முனைந்துள்ள

யுயுத்ஸும் 1-28 போர் புரிய விரும்பி

யேன 2-17 எதனால்

யேஷாம் 1-33 எவர்கள் பொருட்டு

யோக்தவ்யஹ 6-23 அப்யாஸத்திற்குரியது

யோக க்ஷேமம் 9-22 ஒருவன் விரும்பி அடையாததை அடைதல் யோகம்; அடைந்ததைக் காப்பாற்றுதல் க்ஷேமம் ; கடவுள் இவ்விரண்டையும் தரு வார்

யோக தாரணாம் 8-12  யோக தாரணை யில்

யோக பலேன 8-10  யோகத்தின் வலிமையாலும்

யோக ப்ரஷ்டஹ 6-41 யோகத்திலிருந்து நழுவியவன்

யோக மாயா ஸமாவ்ருதஹ 7-25  யோக மாயையினால் மூடப்பட்டு        40 WORDS

யோக யக்ஞாஹா  4-28 யோகமாகிய யக்ஞத்தைச் செய்வோர்

யோக யுக்தஹ 5-6  யோகத்தைக் கூடிய

யோக யுக்தாத்மா 6-29  யோகத்தில் ஊன்றிய

யோக வித்தமாஹா 12-1 யோகத்தை நன்குணர்ந்தவர்கள்

யோக சம்ஜ்ஞிதம் 6-23  யோகம் என்று குறிப்பிட்டதாக

யோக சன்யஸ்த கர்மாணம் 4-41

யோக சம்சித்தஹ 4-38 யோகத்தில் சித்தி எய்தி  பக்குவம் அடைந்தவன்

யோக சம்சித்திம் 6-37 யோகத்தில் சித்தியை

யோக சேவயா 6-20  யோகாப்யாஸத்தால்

யோகஸ்தஹ 2-48 யோகத்தில் நிலைபெற்ற 50 WORDS

யோகஸ்ய  6-44  யோகத்தின்

யோகம் 2-53  யோகத்தை

யோகாய 2-50  யோகத்திற்காக

யோகாத் 6-37  யோகத்திலிருந்து

யோகாரூடஸ்ய 6-3  யோகத்தில் உயர்நிலை எய்திய

யோகாரூடஹ 6-4 யோகாரூடன்

யோகினம்  6-27  யோகியை

யோகீ 5-24  யோகி

யோகே  2-39 யோக விஷயத்தில்

யோகேன 10-7 யோகத்துடன்       60 WORDS

யோகேஸ்வர 11-4 யோகத்திற்கு இறைவா

யோகேஸ்வரஹ 18-78 யோகேஸ்வரனாகிய (கிருஷ்ணன் )

62 WORDS ARE ADDED FROM PARAAT 58 OF GITA WORDS INDEX IN TAMIL

ஞான (கடி) மொழிகள்-86 (Post No.11,040)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,040

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான (கடி) மொழிகள்-86

டை கட்டிய மீன் எது?

கெண் “டை”!

அரசுக்கு பிடித்த மரம் எது?

அரச மரம்!

எப்போதும் காயத்துடனேயே இருக்கும்நபர் யார்?

“சகாயம்”!

உட்கார்ந்திருந்தால் பணம்! எப்படி?

சப் “பணம்” கட்டி உட்காரும் போது!

மனதுக்குள் ஒரு உடம்பு……..எது?

சந் “தேகம்”!

மனித உடம்பிலுள்ள பாலம் எது?

கபாலம்!

மந்திரி-மன்னா! எதிரி நாட்டு மன்னன் மகாராணியை நமது

குதிரையில் கடத்திக் கொண்டு போய்விட்டான!

மன்னர்-ஆ! என் செல்வம் போய் விட்டதே!

மந்திரி- மகாராணியைத்தானே செல்வம்என்கிறீர்கள்?

மன்னர்-ஊஹூம், எனது குதிரையை!

கடிகாரம் வைக்கும் பெட்டியை எப்படி அழைக்கலாம்?

“மணி பர்ஸ்”!

மான் எந்த இடங்களில் இருக்கும்?

“அந்த மான்”, வலங்கை “மான்”

கஷ்டத்தில் இருக்கும் பறவை எது?

“பஞ்ச” வர்ணக் கிளி!

கரை கண்ட வியாதி எது?

சர்க் “கரை” வியாதி்!

ஆவிக்கு பயப்படாதவர் யார்?

இட்லி சுடுபவர்!

xxx

சிப்பாய்-1 இனிமேல் நம் மன்னர் அந்தப்புரத்திற்கு போகவே முடியாது!

நமது ராணி தடை செய்து விட்டார்!

சிப்பாய்-2 அப்புறம் மன்னர் என்ன செய்தார்?

சிப்பாய்-1 அந்தப்புரத்திற்கு “நொந்தப் புரம்”என பெயர் மாற்றி விட்டார்!

xxx

பூனை 1 – அந்த மாடல் அழகி மேல் விழுந்து பிறாண்டி விட்டு

வருகிறாயே ஏன்?

பூனை 2- கேட் வாக் cat walk ங்கற பெயர்ல நம்மளோட நடையை கிண்டல்

பண்ணினாள்.அதான் கோபம் வந்து பிறாண்டிப்புட்டேன்!

xxx

நோயாளி- இந்த ஆபரேஷன் முடிஞ்சதும் என்ன பண்ணிவீங்க?

டாக்டர் -உங்களுக்கு அடுத்த ஆபரேஷனுக்கான தேதி குறிச்சிடுவோம்!

xxx

சிப்பாய்-1 போர் முரசு ஒலிக்கிறதே! நமது மன்னர் போருக்கு போக ஆயத்தமாகிறாரா?

சிப்பாய் 2 இல்லை இல்லை,மகாராணியும் அவரது மரு மகளும் சண்டை போடப் போகிறார்களாம்! அதான் இப்படி!

Xxx

நிறைய சொத்துள்ள நாடு எது?

“ஆஸ்தி”ரேலியா!

எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டில்?

“சிரியா”!

வாய் உள்ள தீவு எது?

ஹ”வாய்”!

ஒரு மனிதன் தனக்குத்தானே தூண்டில் போட்டுக் கொள்ளும் நாள் எது?

“கல்யாண நாள்”!

உபயோகிக்க உபயோகிக்க கூர்மை அதிகமாவது எது?

வாயிலுள்ள “நாக்கு”!

மோசமான கையெழுத்துக்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?

“டாக்டர்களின் வியாதி”!

தையல்கார்ருக்கு பிடித்த காய் எது?

“கத்தரி”க்காய்!

புண்ணியம் செய்யாத காய் எது?

“பாவ”க்காய்

கோயம்புத்தூர்கார ர்களுக்கு பிடித்த காய் எது?

“கோவை”க்காய்!

சமையலுக்கு உதவாத காய் எது?

“சொக்காய்”!

ரௌடிகளுக்கு பிடித்த பூ எது?

“காலி” பிளவர்!

இரக்கமுள்ள கிழங்கு எது? 45

“கருணை” கிழங்கு!

வழிகாட்டும் காய்?

பீட் “ரூட்”

குத்தும் கிழங்கு எது?

“முள்”ளங்கி!

புண்ணானது எது?

வெங் “காயம்”

நவ கிரகத்தில் ஒன்று எது?

பூ “சனி”க்காய்!

மயக்கும் பழம்?

மாதுளம் பழம்!

கொய்தபின் பொய்யான பெயருடைய் பழம்?

கொய்யாப் பழம்!

கதை-சரித்திரம்-சமூகம் அடங்கிய பழம்?

“நாவல்” பழம்!

எந்த ஊருக்கு சொந்தம்?

கோவைப் பழம்!

சாப்பிட்டால் குமட்டும் பழம்?

குமுட்டிப் பழம்!

ராமருக்கு பிடிச்ச பழம்?

சீதாப் பழம்!

போதைப்பழம்?

சாத்துக் “குடி”

கணக்கு பழம்?

ஆரஞ்சு!

xxx

பேச்சோ பேச்சு

மளிகை கடைக்காரர் – கலப்படமான பேச்சு

வெண்ணெய் கடைக்காரர் – உருக்கமான பேச்சு

துணிக் கடைக்காரர்- அளவான பேச்சு

எண்ணெய்கடைக்காரர்-வழ வழா கொழ கொழா பேச்சு

கம்ப்யூட்டரிஸ்ட் -பட படப்பான பேச்சு

விறகு கடைக்காரர் – வெட்டு ஒண்ணு , துண்டு இரண்டாக பேச்சு

பொற்கொல்லர் – உருக்கமாக இருக்கும

கல்லறை காவலர் – அடக்கமாக இருக்கும்

எப்போதும் நாத ஒலி கேட்கும் நகர் எது?

“ஷெனாய்” நகர்!

சென்னையில் இருமலை போக்கும் ரோடு எது?

“ஹால்ஸ்” ரோடு!

சென்னையில் எப்போதும் நிழலாக இருக்கும் ரோடு எது?

“உட்ஸ்” ரோடு!

Xxx

டாக்டரிடம் நோயாளிகள்

சமையல் காரர் – வயிற்று வலி!

காதல் கதை எழுதுபவர் – இதய நோய்!

வக்கீல் – வாதம்!

சங்கீத விமர்சகர் – காது வலி!

xxx

“R” ங்கறதர ரேஷன் கடைன்னு சொல்லலாம்……

எப்படி?

அதுக்கு முன்னாடி “Q” இருக்கே!

Xxx

ஏய் , வாயை ஊது…..?………

ஊ…….

என்ன லேசா வருது?……

எட்டணாவுக்கு அவ்ளோதான் வரும்!

THE END

Tags-  ஞான மொழிகள்86

நடந்தவை தான் நம்புங்கள் – 20 (Post No.11,039)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,039

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 20

ச.நாகராஜன்

1

மார்க் ட்வெயினின் குடை

மார்க் ட்வெய்ன் (Mark Twain – 1835-1910) தனது ஓட்டையாகிப் போன குடையை எப்படியாவது விட்டெறிய வேண்டும் என்று முயன்றார்.

தன்னால் எப்படி அந்தக் குடையை ஒரு வழியாக கை கழுவி விட முடிந்தது என்ற கதையை அவர் இப்படிச் சொன்னார்!

அந்தப் பழைய குடையை அவர் முதலில் குப்பைத் தொட்டியில் போட்டார். ஆனால் அவர் மேல் மிகுந்த அக்கறையுள்ள ஒரு மனிதன் அதை அவரிடம் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்தான் : “சார், இதோ உங்கள் குடை” என்று.

அடுத்து அவர் அதை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டார். ஆனால் கிணறை ரிப்பேர் செய்ய வந்த ஒருவன் அதைப் பார்த்து எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டான்.

பார்த்தார் ட்வெய்ன். இன்னும் பல வழிகளில் முயன்றார் அதை அகற்ற!

ஊஹூம், ஒன்றும் பலிக்கவில்லை. குடை பத்திரமாக ஒவ்வொரு முறையும் அவரிடமே வந்து சேர்ந்தது.

இறுதியில் அவர் தன் குடையை ஒரு நண்பருக்குக் கடனாகத் தந்தார் – நிச்சயம் திருப்பித் தந்து விட வேண்டுமென்ற நிபந்தனையுடன்!

குடை திரும்பி வரவே இல்லை!

2

தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!

 பிரபல எழுத்தாளரான ஜி.கே.செஸ்டர்டன் (G.K. Chesterton – 1874-1936) ஒரு முறை தனது இலக்கிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், ‘திடிரென்று தனித்த தீவில் அகப்பட்டுக் கொண்டால் நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள்?’ என்று ஒரு கேள்வியை நண்பர்களிடையே கேட்டார்.

ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த எழுத்தாளரையும் கவிஞரையும் குறிப்பிட ஆரம்பித்தனர் – ஷேக்ஸ்பியர், பைபிள் என்று இப்படி!

ஆனால் செஸ்டர்டன் கூறினார் “ தாமஸ் கைடின் ப்ராக்டிகல் ஷிப் பில்டிங்கைத் தான் படிப்பேன் என்று. (Thomas’s Guide to Practival Shipbuilding)

3

ஹெச். ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!

பிரபல எழுத்தாளரான ஹெச். ஜி.வெல்ஸ் (H.G.Wells 1866-1946) மரணப்படுக்கையில் இருந்தார்.

அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரிடம் கடைசியாக ஏதாவது கூறுமாறு வேண்டினர்.

“நான் சாவதில் பிஸியாக இருக்கிறேனே” என்றார் அவர்.

(I am busy dying!)

4.

அம்மாவும் அப்பாவும்!

ஒரு மிக மிக வயதான பணக்காரக் கிழவரை மணக்க விரும்பினாள் ஒரு இளம் பெண்.

“குழந்தைகளைக் கூடப் பெற்றுக் கொள்ளலாம்” என்றாள் அவள்.

ஆனால் பணக்காரரோ, “எனது பெற்றோர் அதற்கு விட மாட்டார்களே” என்றார்.

திடுக்கிட்டுப் போன அந்த இளம் பெண், “உங்கள் பெற்றோர் யார்?” என்று கேட்டாள்.

அதற்கு அவர் கூறினார் : “என் அம்மா இயற்கைத் தாய். அப்பா காலம்! (Mother Nature and Father Time)

5

சர்ச்சிலின் வார்த்தைகள்

சர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill – 1874-1965) 1955இல் அரசுப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.

என்றாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ சலுகையின் காரணமாக அவர் தனக்கு நினைத்த போதெல்லாம் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருவார், அங்கு நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

எண்பது வயது தாண்டிய நிலையில் ஒரு நாள் அவர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருகை புரிந்தார்.

அவரை அவரது இருக்கைக்கு அழைத்துச் செல்ல இரு உதவியாளர்கள் வந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மெதுவாக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தனர்.

ஒருவர் கூறினார் : “இந்த வயசான பெரிசு ரொம்பவும் தளர்ந்து போயிடிச்சி!”

அடுத்தவர் கூறினார் : தளர்ந்தது மட்டுமல்ல; கிறுக்கும் பிடிச்சிடிச்சி!”

முதலாமவர் கூறினார் : “மூளையும் போயிடிச்சின்னு சொல்றாங்க!”

சர்ச்சில் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் மெதுவாக அவர்களை நோக்கிக் கூறினார்: “அது மட்டுமா சொல்றாங்க! கிழட்டுக்கு சுத்தமா காது கேட்காதுன்னு கூட உங்க கிட்ட சொல்லி இருப்பாங்களே!”

***

tags- சர்ச்சில், ஹெச். ஜி.வெல்ஸ், மார்க் ட்வெய்ன்

MY VISIT TO TIRUKKURUNKUDI & NANGUNERI (Post No.11038)

for pictures go swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,038

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

MY VISIT TO TIRUKKURUNKUDI & NANGUNERI

After seeing beautiful sculptures of Tirukkurunkudi Temple on Facebook, I had been longing to go to Titukkurungudi. At last my dream was fulfilled on 5th of June,2022. We finished three temples on that day, the most famous temple of Tirunelveli- Nellaipaapar- Kanthimathi temple and Vishnu temples in Tirukkurunkudi and Nanguneri.

The god in T.K temple is called Azakiya Nambirayar .

Where is it?

About 40 kilometres from Tirunelveli is this little town. In addition to beautiful sculptures (see my pictures in the evening light), it has a long heritage. I will give them in bullet points:

1.One of the 108 Vaishnavite Holy shrines

2.Sanctified by the songs of Nammazvar, Periyalvar and Tirumangai Azvar. That takes the age of temple to seventh century or before.

3.The Vishnu deities dug out of this place are installed in nearby Nanguneri temple.

4.When the great Vaishnavite saint Ramanuja visited this shrine, the god himself came and received Pancha samskaram ( Initiation)

5. Nampaduvan, a disciple, met a Brahmin Ghost on his way to this temple. The Brahma Rakshasa (Brahmin sinners become ghosts) wanted to eat Nampaduvan. He told the ghost that he would become its prey only after worshipping the Vishnu in the temple. On his return he told the ghost to devour him, but it refused saying that it had enough for the day. Nampaduvan gave the ghost half of the Temple prasad/ fruit he ate, and the ghost returned to its original form as a Brahmin. That is, he was released from the curse.

6.Tirumangai Azvar reached the feet of God here.

7.A shrine for Shiva is inside the temple. Beautiful idols of Nataraja, Subrahmanya, Vinayaka, Sivakami and Somaskandar are in the temple

8.Though it is a small temple, it  maintains an elephant. I think the TVS company is helping the temple.

9.Varahapurana sings the glory of the temple

10.The word Kurunkudi in the name of the village signified the Vamana Avatara (a dwarf) of Lord Vishnu. The deity is also known by the names Nindra Nambi, Vaishnava nambi and Vaduga nambi (short)

11.Goddees is called Kurungudi Valli

12.Theertha/ Holy water is called Tiruppar Kadal.

13.Follows the Tenkalai tradition

14.In front of the temple is a Mandapa (stone Hall) with huge and beautiful sculptures of Rathi, Manmatha and others.

15. The temple’s granite walls have a lot of small sculptures. I am reminded of Thousand Pillar Hall of Madurai Meenakshi Temple. Probably the Mandapa in front of the temple was erected during Nayak Period.

16.The Dwajasthamba (Flag Post) of the temple doesn’t align with the main shrine. There is a story about it. When Nampaduvan came, the post was blocking the view of the main deity. When he prayed for a better view, the post moved away. It reminds one of Nandanar story where the stone Nandhi blocked his view and then moved at his request.

xxx

VISIT TO NANGUNERI

On our way back to Tirunelveli (Nellai), we went to Nanguneri Perumal/Vishnu temple.

At that time, temple was celebrating its annual festival. Though we could not see the Moolavar (main shrine), we had good dharsan of the of the Festival deity (Urchavar) in procession. The Jeeyar was leading the procession. There was a huge crowd waiting.

Some of the salient features of the temple

1.Vishnu in the temple is called Vaanamaamalai. Goddesses are Sri Devi, Bhu Devi and Sri Vara Mangai

2. Sung and sanctified by Nammalvar.

3.Out of the 108 holy shrines of Vishnu, eight are considered Svayambhu (not man made; sculptures came from nature)

4.Special feature of the temple is Oil Well. The oil used to anoint the deity is poured into a well and it is given as Prasad. It is believed that it ha medicinal properties.

5.The legend is that a king of Sindhu desa, who was cursed to become a dog was relieved of his curse after bathing in the lotus tank here.

6. It is about 25 Kilometres from Tirunelveli

7. It is famous for its sculptures on its pillars. Each pillar has got multiple sculptures.  Lord Rama hugging Hanuman, Purusha Mrga catching Bheema are few of them ( I did not have time to see them because the festival procession was happening outside the temple.)

My earlier Visit

I might have enjoyed it about 50 or 60 years ago. When I was a school boy , my parents took us to Nanguneri and other shrines. What I remember now is catching and holding big fruits hanging from the trees in TVS farm. Even when I went there in June 2022, I could see the big board displaying TVS Farm. They have best varieties of fruit trees. The place is called Ervadi (not the one in Ramnad district). We have even photos of those fruit trees taken 50 or 60 years ago.

The places I mentioned above are close to the forests of Western Ghats. Still, one could see the peace and serenity of nature.

Last but not the least, if one wants to enjoy the sculptures and nature, one should stay in the place for at least one or two days. My trip has always been a whirlwind tour. I covered 35 temples in 22 towns in addition to attending weddings and Shasti Apta Poorthi.

Who will miss wedding dinners?

In my Madurai there is a saying- Soththukkup pinnar thaan Sokkanathar (meaning God comes only after Food).

–subham–

ஞானமொழிகள்-85 (Post No.11,037)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,037

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கடி ஜோக்ஸ்

மெக்கானிக்கு பிடித்த சோப் எது?

தெரியல்லையே?

“வீல்” சோப்!

அரிச்சந்திரனுக்கு பிடிச்ச பிஸ்கட் எது?

“ட்ரூ”பிஸ்கட்!

உட்கார முடியாத தரை எது?

புளியோதரை!

காக்கா ஏன் கருப்பாக இருக்கு?

அது வெய்யிலில் சுற்றுவதால்!

இனிக்கும் ஈ எது?

“தேனீ”!

கல்யாணமாகாத ஊர் எது?

“!கன்னியா குமரி”!

ஓசையுள்ள விமான நிலையம் எது?

“டம் டம்”!

நிறத்தின் பெயருடைய பழம் எது?

“ஆரஞ்சு”!

சாப்பிட முடியாத பன் எது?

“ரிப்பன்”

xxx

தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்குறார்?

அவருக்கு இன்ஸ்பெக்டர் பட்டம்தான் வேணுமாம்.அப்பதான்

நிறைய மாமூல் வாங்கலாமாம்!

xxx

என் மருமக கிட்ட வீட்ட கோவில் மாதரி வச்சுக்கணும்ன்னு

சொன்னது தப்பா போச்சு…..

ஏன் ஏன்ன ஆச்சு?

வீட்டு வாசல்ல ஒரு உண்டியல வைச்சுட்டா!

xxx

நம்ம தலைவருக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தோம்ன்னு

வருத்தப்படறாங்க….

ஏன்?

ஆஸ்பத்திரி, கட்டில்லாம் எப்ப தருவாங்கன்னு கேக்குறாராம்?

xxxx

பொண்ண பாத்து பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அடிச்சிட்டாங்களா?

சொன்னது அவ அக்காவப்பாத்து….. அவபுருஷன்கிட்டேயே……

xxx

அந்த ஆள் ரொம்ப அப்பாவியா இருக்காரு

எப்படி சொல்றே?

பேப்பர்மசாலாவுக்கு வருடச்சந்தா கட்டலாமான்னு கேக்குறார்!

xxx

தலைவருக்கு இங்கிலீஷ் பேசணும்ன்னு ஆசை…….

அதுக்காக மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீன்னு நூறு வரைக்கும்

சொல்லணுமா??

xxx

கிரிக்கட்டில் ஓரு

ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்

டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்

கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌

இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா

நான் மூடு அவுட்

இப்படிக்கு

பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.

Xxx

அந்த மான் ஏன கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது?

அது பக்தி மான் அதுதான்!

உலகத்திலேயே எந்த நாட்டுக்காரங்க சரிக்க மாட்டாங்க?

சிரியா!

ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை போட்டுமா தலைவர் சோகமா

இருக்காரு?

எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டோட ஜெராக்ஸ் காப்பியாம்!

xxx

கடன் தொல்லையிலிருந்து விடுபட ராசிக்கல் மோதிரம்

போட்டிருந்தீங்களே ……..எங்கே அது?

கடன்தொல்ல தாங்காம அடகு வச்சிட்டேன்!

xxx

ஒரு ரூபா நாணயம் ஆணா பெண்ணா?

தெரியல்லையே?

பெண்தான் ! அதனோட தலைக்கு பின்னால்தான் பூ இருக்கே!

xxx

எதுக்குய்யா தலைவருக்கு பிஸ்கட் மாலை போடற?

அவர்தன் கட்சிக்கு நாயா உழைக்கறதா சொல்லிகிட்டுருக்காரே!

சாதாகாதலுக்கும், கள்ள காதலுக்கும் என்ன வித்தியாசம்?

சாதா காதல்ன்னா அப்பா அடிப்பார்! கள்ளக்காதல்ன்னா

புருஷன் அடிப்பான்!

Xxx

வேலைக்காரி போட்டோவ ஏன் பர்ஸுல வச்சிருக்கே?

அதப் பார்த்தாத்தான் வீட்டுக்கு போகணும்ன்னு

நினைப்பே வருது!

xxx

அவர்போலி டாக்டர்ன்னு எப்படி கண்டு பிடிச்சே?

மூச்சு விட சிரம்மா இருக்குன்னு சொன்னேன்

அவர் அதுக்கு வேற ஆள அரேஞ்சு பண்ணவான்னு

கேட்டார்!

xxx

மரியாத இல்லாத பூ எது?

வாடா மல்லி!

xxx

அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சே?

கால்ல வெடிப்பு இருக்குன்னு சொன்னேன் அதுக்கென்ன

“கம்” போட்டு ஒட்டிடலாமேன்னு சொன்னாரே!

xxx

தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்……

அப்படி என்ன சிக்கல்?

எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்?

xxx

ஏண்டா காலேஜுக்கு போகல்லே?

இன்னைக்கு லீவு…….

உனக்கா, காலேஜுக்கா?

எதிர் வீட்டு பத்மாவுக்கு!

xxx

மாப்பிள்ளை அழைப்பு எங்கேயிருந்து?

வேறெங்கேயிருந்து, செனட்ரல் ஜெயில்லேருந்து!

xxx

நீதிபதி – கோயில்ல சாமி தலையிலிருந்த கிரீடத்த திருடினயா?

குற்றவாளி – ஆமா எஜமான், சாமிக்கு மொட்டை போடறதா

வேண்டிகிட்டேன்!

xxx

ஒரு குத்துச் சண்டை வீர ர் இன்னொரு குத்துச் சண்டை

வீர ருக்கு கடிதம் எழுதினா எப்படி எழுதுவார்?

பலம், பலம் அறிய ஆவல்!

திருடனுக்கும் போலீஸுக்கும் என்ன வித்தியாசம்?

“தொப்பை” தான்!

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமா

மடக்கிட்டார்!

எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வச்சுடறதாக சொல்லிட்டார்!

xxx

தலைவர் அன்னைக்கு பேசின பேச்ச மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டங்க

போலிருக்கு……

என்ன அச்சு?

என பின்னால் ஒரு படையே இருக்குன்னு சொல்லப்போக தொண்டர்கள் அனைவரும் களிம்பு வாங்கி அனுப்புச்சுட்டங்களாம்!

THE END

Tags- ஞானமொழிகள்85

சுவரின் மறுபக்கம்! (Post No.11,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,036

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சுவரின் மறுபக்கம்!

ச.நாகராஜன்

ஒரு அழகிய இளம் பெண் தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு பூத்துக் குலுங்கும் மலர்களின் மீது அளவிலா ஆசை. ஆகவே விதவிதமான மலர்ச் செடிகளை வாங்கி தன் தோட்டத்தில் நட்டு, நீர் பாய்ச்சி வளர்த்து வந்தாள்.

அவளது பாட்டி அவளை மிகவும் ஊக்குவித்து வளர்த்து வந்தாள். நல்ல காரியங்களுக்கு எப்போதுமே பயன் உண்டு என்றும் பலனை எதிர்பார்க்காமல் எதையும் செய்யக் கற்றுக் கொள் என்றும் அவள் அடிக்கடி கூறுவது உண்டு.

பகவத் கீதையின் முக்கியமான தத்துவங்கள் இவை என்பதை அவள் அறிவாள்.

ஒரு நாள் பாட்டி அவளிடம் ஒரு மலர்ச் செடியின் படத்தைக் காண்பித்தாள். அதை வாங்கிப் பார்த்த இளம் பெண் அது பூத்துக் குலுங்கியவுடன் ஏந்தி நிற்கும் அழகிய மலர்களின் படத்தைப் பார்த்து மயங்கி ந்ன்றாள்.

அப்படி ஒரு வர்ண ஜாலம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.

மனமெல்லாம் உற்சாகத்தால் நிறைய நாள் முழுவதும் அவளால் ஏராளமான பணிகளை  வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.

ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் அவள்.

நிச்சயமாக அந்த மலர்ச் செடியை வாங்கித் தன் தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது என்பது தான் அவளது  முடிவான தீர்மானம்.

உடனே கடைக்குச் சென்றாள். தேடிப்பிடித்து அந்தச் செடியை வாங்கி தன் தோட்டத்தில் காம்பவுண்டு சுவருக்கு அருகே பயிரிட்டாள்.

தினமும் கவனமாக அதற்கு நீர் ஊற்றி வளர்த்து வந்தாள். செடி மெல்ல மெல்ல வளர்நதது. உயரமானது.

முன் பக்கம் பச்சைப் பசேலென இலைகள்; கிளைகள். ஆனால மலர்களைக் காணோம்.

இளம்பெண் கவனமாக உற்றுக் கவனிப்பாள். ஏதேனும் ஒரு ம்லராவது அரும்பி இருக்கிறதா என்று பார்ப்பாள்.

ஊஹூம். ஒன்றைக் கூடக் காணோம்.

சற்று ஏமாற்றம் தான் அவளுக்கு.

இருந்தாலும் விடவில்லை. நீரை கவனமாக வேரில் ஊற்றி வந்தாள்.

ஒரு நாள் காலை விரக்தியோடு அந்தச் செடியின் அருகில் வந்து நின்றாள், பார்த்தாள், ஒரு அரும்பு கூடக் காணோம்.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“மேடம், தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச்!”

அடுத்த வீட்டுக்காரரின் குரல் காம்பவுண்டின் அந்தப் பக்கத்திலிருந்து வந்தது.

அவர் புன்சிரிப்புடன் மலர்ச்சியுடன் உற்சாகமாகத் தொடர்ந்தார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இன்று உங்களை நேரில் சந்தித்து எனது  மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க ஆசை. எப்போது வரலாம்?”

இளம் பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுத்தவீட்டில் இருப்பவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரைப் பார்க்கத்தான் கூட்டம் கூடும்; அவரது அப்பாயிண்ட்மென்ட் யாருக்குமே கிடைக்காது. இளம் பெண்ணுக்கே இத்தனை காலமாக அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

அப்ப்டி இருக்க, அவர் எதற்கு தனக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே!

குழம்பி நின்றாள் இளம் பெண்.

“என்ன.. என்ன.. எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னை சந்திக்க நீங்கள் நேரம் கேட்பதாவது. நான் என்ன செய்தேன்?” திக்கித் திணறி ஒருவாறு பேசி முடித்தாள் அவள்.

“என்ன செய்தீர்களாவது? இதோ இந்தப் பக்கம் வந்து பாருங்கள்” என்று அழைத்தார் அவர்.

தனது வீட்டு வாயில் கதவு வழியே வெளியேறி இத்தனை நாள் வரை போகாத அந்த பிரபலத்தின் வீட்டின் கதவைத் தாண்டி உள்ளே சென்றாள் அவள்.

அங்கிருந்த வாட்ச்மேன் மரியாதையுடன் அவளை வணங்கி அவளை அழைத்துச் சென்றான்.

காம்பவுண்டிற்கு இந்தப் பக்கம் தன் செடியின் பல கிளைகள் சாய்ந்திருந்ததைக் கண்டாள் அவள்.

அடடா! என்ன ஒரு அற்புதம். மலர்கள், வண்ண மலர்கள், பூத்துக் குலுங்கும் புது மலர்கள்!

உற்சாகத்தின் ஊற்று!

“இது நீங்கள் இல்லாமல் இப்படி வளர்ந்து அழகிய காட்சியைத் தருமா? இதைக் காலையில் பார்த்து நான் எதைச் செய்தாலும் அது வெற்றி தான். சமீப காலமாக எனது புகழ்  மேலோங்கி வருவதற்கு காரணமே இந்த மலர்களின் காட்சி தான். அதற்கு மூல காரணமே நீங்கள் தான். நன்றி. வீட்டிற்குள்ளே வர முடியுமா?”

பிரபலத்தின் பேச்சைக் கேட்டு விக்கித்து நின்றாள் இளம் பெண்.

வண்ணமயமான மலர்களைக் கண்டாள், புன்சிரிப்புடன் தன்னை குதூகலமாக வரவேற்ற பிரபலத்தையும் பார்த்தாள்.

காலையில் பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த அவளது பாட்டி காம்பவுண்டின் தனது பக்கத்தில் இருந்து இளம் பெண்ணைப் பார்த்து மெதுவாகத் தலை அசைத்து புன்சிரிப்பு ஒன்றை நழுவ விட்டார்.

அந்தத் தலையசைப்பு, ‘அது அப்படித்தான்’ என்று கூறியது.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் ஒரு மறு பக்கம் உண்டு என்ற மாபெரும் ரகசியத்தை அந்தப் பெண் அப்போது தான் உணர்ந்தாள்.

சுவரின் மறுபக்கத்தில் அது இருக்கக்கூடும்; நம்மால் உடனே பார்க்கமுடியாதபடி கூட அது இருக்கக்கூடும்.

செய்தல் உன் கடனே – அறம்

செய்தல் உன் கடனே அதில்

எய்துறும் பயனில் எண்ணம் வையாதே! – (மஹாகவி பாரதியார்)

***

தீக்குளித்த 2 பெண்களின் பெயரில் புதிய ராகம் (Post No.11,035)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,035

Date uploaded in London – –    20 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

குஜராத்தில் வட்நாகர் என்னும் இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளாக நகர் / நாகர பிராமணர்கள் வசித்து வந்தனர். அவர்களைப் பற்றிய சில கதைகள்  இதோ :-

ஒரு சமயம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் குஜராத்துக்கு வந்தார். அப்பொழுது தானா, ரீரி என்ற இரண்டு பெண்கள் மலஹரி ராகத்தை அழகாகப் பாடினார்கள். அதில் மயங்கிப் போன அக்பர் அவர்களை டில்லிக்கு வந்து ஆஸ்தானப் பாடகிகளாக பதவி ஏற்க வரவேற்றார். ஆனால் நாகர பிராமணர்கள அதற்கு இசைவு தெரிவிக்க மறுத்தனர் . முகலாயர்களின் தீய எண்ணங்கள் அவர்களுக்கு தெரியும். பெரிய போர் மூண்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இரண்டு பெண்களும் தங்களால் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவை எண்ணி வருந்தி தீக்குளித்து இறந்தனர். இன்றும் வட்நாகர் சுடுகாட்டில் அவர்களுக்கு நினைவுச் சின்னம் இருக்கிறது

அக்பரின் அவைக்கள புலவர் தான்சேன் உலகப் புகழ்பெற்றவர். தீக்குளித்து உயிர்நீத்து  தியாகம் செய்த இரண்டு பெண்களின் நினைவாக அவர் ஒரு ராகத்தை இயற்றி அதற்கு ‘தான ரீரி’  என்றே பெயரிட்டார். இதனால் காலத்தால் அழியாத இடம் பெற்றுவிட்டனர் அவ்விரு பெண்களும்.

xxx

மற்றொரு சம்பவம்

நாகர பிராமணர்கள் பல்கலை வித்தகர்கள்; ரசாட்சி நிர்வாகம், அமைச்சர் வேலை, ராஜ தந்திரம், போர்க்கலை ஆகிய அனைத்தும் அறிந்தவர்கள். மாதவ் என்பவர் கடைசி ராஜபுத்திர மன்னர் கரண் கேலாவிடம் வெளி பார்த்து வந்தார். ஒரு சமயம் அரசாங்க வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். அந்த சமயத்தில் மன்னரின் கொடிய பார்வை மாதவின் மனைவி பக்கம் திரும்பியது. அவளுடைய சகோதரர் கேசவ் என்பவர் மன்னரைத் தடுத்தார். அப்போது நடந்த சண்டையில் கேசவ் கொல்லப்பட்டார். மாதவ், ஊருக்குத் திரும்பியவுடன் நடந்ததை அறிந்தார். ரத்தம் கொதிக்க வெகுண்டு எழுந்தார். அப்போது டில்லியை அரசாண்ட மஹா பாவி, கொடுங்கோலன், கொள்ளைக்காரன், மத வெறியன் அலாவுதீன் கில்ஜி ஆவான். தென்னாட்டுக் கோவில்களை சூறையாடி, தரைமட்டமாக்கி , தங்கம் முழுவதையும் அள்ளிச் சென்றவன். அவனிடம் போய் உதவிகேட்டார் மாதவ். பாலுக்கு பூனையை காவலுக்கு அழைத்தது போல அவனை அழைத்தார். அவனும் படைகளுடன் வந்து கரண் கேலா என்ற மன்னரைத் தோற்கடித்தான். அத்தோடு நில்லாமல் மாதவின் மனைவி, மகளை கடத்திச் சென்று முஸ்லீம் மதத்துக்கு மாற்றினான் . பின்னர் நடந்ததை எழுத்தில் வடிக்கத் தேவையே இல்லை.

Xxx

மூன்றாவது சம்பவம்

அனார்த்த என்ற இடத்தை ஆண்டு வந்த சமத்கார் என்னும் மன்னர் ஒரு முறை வேட்டை ஆட வந்தார். குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மானைக் கொன்றார். அந்த மான் அவரைச் சபிக்கவே, மன்னருக்கு வெண்குஷ்ட நோய் வந்தது . அத ஊர் பிராமணர்கள் மூலிகை மருத்துவம் மூலம் மன்னரைக் குணப்படுத்தினார்கள் . மனம் மகிழ்ந்த மன்னன், பிராமணர்களுக்கு நிலம், பொருள் ஆகியவற்றைத் தானமாக அளித்தான். ஆனால் தானத்தை வாங்க பிராமணர்கள் மறுத்தனர். பின்னர் மஹாராணி கெஞ்சிக் கேட்டதன் பேரில் 72 பிராமண குடும்பங்களில் 68 பேரின் மனைவியர் தானத்தை ஏற்றனர். இறுதிவரை மானம் , மரியாதையுடன் வாழ்ந்த 4 பிராமணர்கள், குடும்பத்துடன் இமயமலைக்குச் சென்றுவிட்டனர். தானம் வாங்கி வாழ்ந்த 68 குடும்பங்களின் பேரில் 68 கோத்திரங்கள் உருவானதாக ஒரு கதை.

மற்றொரு கதையும் உண்டு. நோயைத் தீர்த்த பிராமணர்களுக்காக அரசன், அவர்கள் வணங்கும் ஹத்கேஸ்வருக்கு  ஒரு கோவில் கட்டி, சமத்கார்பூர் என்ற நகரையும் உருவாக்கியதாகவும் அதுவே பல பெயர்களாக மாறி, இறுதியில் வட்நாகர் என்று அழைக்கப்பட்டதாகவும், அங்கு வசித்த பிராமணர்களுக்கு ‘நாகர பிராமணர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள்.

இவர்கள் ஆதிகாலத்தில் தற்போது, லடாக் என்று அழைக்கப்படும் ஹட்டாக் என்ற இடத்திலிருந்து குஜராத்தில் குடியேறினராம். வெளிநாட்டினரின் படை எடுப்புகளால் இவர்கள் இடம்பெயர்ந்து பல மாநிலங்களுக்கும் குடியேறினர். இவர்களின் குல ஒழுக்கத்தை நிலை நாட்ட கி.பி.347-ல் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டதாக கந்த புராணத்தின்  ‘நாகர் காண்டம்’ கூறும்.

குஜராத்தில் முதல் முதலில் பெண் பட்டதாரிகளான (1901) பெண்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே. பெண்களுக்கு அதிக உரிமைகளைக் கொடுத்தவர்கள் நாகர பிராமணர்கள். இப்போது குஜராத்துக்கு வெளியேயும் இவர்கள் வாழ்கின்றனர்.

-சுபம்-

Tags- குஜராத், வட்நாகர், நகர் / நாகர,  பிராமணர்கள், அக்பர், தானா, ரீரி, தான்சேன், ராகம்

A MUSICAL RAGA IN THE NAME OF TWO FAMOUS GIRLS (Post No.11,044)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,034

Date uploaded in London – –    20 JUNE 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Nagars are Gujarati Brahmins. They have great adaptability. During the Mughal era they dominated nearly every filed of activity- diplomacy, statesmanship and war.  They helped the rulers to administer the state and won their confidence. In recognition of their services, they received big jagirs/ estates. They learnt Persian and Arabic and excelled as writers.

They once came into contact with Akbar.  On a visit to Vadnagar in Gujarat, Akbar was so charmed with the singing of the raga Malhar by the Nagar sisters, Tana and Riri, and he invited them to Delhi to become his court musicians. But the Nagars took offence at this invitation which led to serious rift between the rulers and the proud Nagars. Many thousands were killed in the encounter that followed and the sisters immolated themselves.

 A monument (deri) still stands to their memory in the Mahakaleshwar cremation ground of Vadnagar. It is in memory of these sisters that Tansen named his own Raag ‘Tanariri’.

After the struggle with the Mughals , the Nagars gradually left Vadnagar and settled down in various towns in Gujarat and other states.

Xxx

There is a legend that the last Rajput ruler Karan Ghela had a Nagar minister Madhav, who was a brave soldier, an able stateman and astute diplomat. Once, when he was away from home on state business the king cast his eyes on Madhav’s wife and his brother Keshav, who tried to defend her honour, was killed in the skirmish that followed. On his return Madhav was so enraged at what he learnt that he went to Delhi to seek the help of Alauddin Khilji, the then ruler, to avenge himself. But though Alauddin overcame Karan Ghela in battle , he also abducted Madhav’s wife Kamaladevi and her daughter and converted them to Islam.

Xxx

To preserve their identity, Nagars formulated a certain code of conduct in 347 CE which is recorded in the Nagar Khand of Skanda Purana. It forbids inter caste marriages and eating with those outside one’s estate and prescribes 48 rituals or samskaras. When Vadnagar was invaded by foreigners Nagars sought shelter in Saurashtra and Rajasthan. Some of them became Jains and Buddhists and a number of Jain texts were the works of the Nagars. The Chinese pilgrim Hien Tsang refereed to them in his account of Indian pilgrimage.

Xxx

Nagar women have enjoyed a privileged status since ancient times. The first women graduates of Gujarat (in 1901), Vidhyagauri Nilkanth and Sharadaben Mehta were Nagars.

Recent research points out they were from Hatak (modern Ladakh) and their presiding deity is the Lord of Hatak, Hatkesh or Hatkeshwar.

Xxx

According to a legend, while on a hunt King Chamatkar of Anarta killed a deer suckling her young. The deer cursed him and as a result he developed leukoderma. The Brahmanas who lived in those parts cured him with herbs and he rewarded hem with gifts money and lands which they refused, being men of high principles. But the queen persuaded 68 of 72 wives to accept the gift. The four families who refused the gifts went away to the Himalayas and but the other 68 Brahmanas stayed on and believed to be the founders of 68 Gotras of Nagars

According to another version the king showed his gratitude by renovating an old city for them and consecrating a temple to Hatkeshwar, there the new city being named Chamatkarpur. Another name of the city is Vadnagar and the Brahmanas who lived there came to be known as Nagars.

Source : Religions and communities of India, Edited by P N Chopra.

 tags- Tanariri, Raga, Tansen, Akbar, Nagars, Vadnagar, Brahmins, Gujarati