Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
சமண மதத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர்தான் கடைசி தீர்த்தங்கரர். புத்தர் காலத்துக்கு சற்று முந்தி பீஹாரில் கொள்கைப் பரப்பு செய்தவர் . புத்தர், பாலி மொழியில் பேசி க்ஷத்ரியர்களைக் கவர்ந்தார் ; மஹாவீரர், அர்த்த மாகதி மொழியில் பேசி வைஸ்யர்களைக் கவர்ந்தார். இந்து சமய பெரியோர்கள் சம்ஸ்க்ருதத்தில் பேசி அனைவரையும் கவர்ந்தனர்.! சம்ஸ்க்ருதம் படித்தோருக்கு பாலி, அர்த்தமாகதி போன்ற மொழிகள் மிகவும் எளிதில் புரியும். நிற்க.
சமண மதக் கொள்கைகளை மஹாவீர வசனாம்ருதம் என்ற நூல் சொல்கிறது.
ஆயுள் குறைய மஹாவீரர் சொல்லும் 7 காரணங்கள் :
அஜ்ஜவ ஸாண நிமித்தே ஆஹாரே வேயணா பராகாயே
F பாஸே ஆணாபாணு சத்தவிஹம் ஜிஜ்ஜயே ஆஉம்
கீழ்கண்ட ஏழு வழி களில் மனித ஆயுள் குறைகிறது :
1.அத்யவசான
சில கவலைகளை நினைத்து நினைத்து ஏங்குதல் ; அதாவது தனக்கோ குடும்பத்திலோ ஏற்பட்ட துயர சம்பவங்களை நினைத்துக் கொண்டே இருத்தல் ; காதல், வெறுப்பு, அதிர்ச்சி தரும் சம்பவங்களும் இதில் அடக்கம் .
2.நிமித்த
ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள்
3.ஆஹார
அதிக உணவு, தவறான உணவு
4.வேதனா
நோய்கள் தரும் துன்பம்
5.பராகாத
உயரத்தில் இருந்து கீழே விழுதல் ; பொதுவாக விபத்துக்கள்
6.ஸ்பர்ஸ
விஷ ஜந்துக்களினால் ஏற்படும் மரணம் ; அல்லது பாறை விழுந்து, பாறையில் மோதி இறத்தல்
7.ஆண ப்ராண
மூச்சு விடுதலில் வரும் கோளாறுகள் நுரையீரல் கோளாறுகள்
எனது விளக்கம் –
1.கவலை , வெறுப்பு, தோல்வி முதலியன மனிதனைக் கொள்ளும் என்ற அரிய விஷயம் முதல் காரணத்தில் உளது . உலகெங்கிலும் நடக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை இதற்கு ஒரு சான்று . ஆகவே கவலை,வெறுப்பு ஆகியனவற்றை ஒதுக்கவேண்டும். கோபத்தினால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் என்ற பாரதியார் பாடலை இங்கே நினைவு கூறுதல் பொருத்தம் :-
சென்றதினி மீளாது மூடரே ! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் ! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதை த் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர் ;
தீமையெலாம் அழிந்து போம் , திரும்பி வாரா
— சுப்ரமண்ய பாரதியார்
இன்னும் ஒரு பாடலில் கோபமும் காதலும்/காமமும்தான் மனிதனின் ஆயுள் குறையக் காரணம் என்கிறார் :
அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன் ; சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை
— சுப்ரமண்ய பாரதியார்
XXXX
சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பார்
— சுப்ரமண்ய பாரதியார்
XXXX
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி ; சிறிய கோபம்
ஆபத்தாம் , அதிர்ச்சியிலே சிறியதாகும் ;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும் ;
கவலையினால் நாடியெலாம் சிதைந்து வேகும் ;
கோபத்தை வென்றிடவே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே
— சுப்ரமண்ய பாரதியார்
xxx
2. எவ்வளோ தொழிற்சாலை விபத்துக்களை தினமும் பத்திரிகையில் படிக்கிறோம். உலகில் எப்போதும் குறைந்தது 50 இடங்களில் போர், சண்டை, பெரிய மோதல் நடந்து வருகிறது இன்றி எக்கனாமிக் டைம்ஸ் ஆண்டு மலர் (Economic Times Annual Issue ) கூறும். ஆக ஆயுதங்களால் , கருவிகளால் மரணம் வரும் என்பது உண்மையே ; ஜப்பானில் அமெரிக்கா போட்ட இரண்டு அணுகுண்டுகளால் சில நொடிகளில் பல லட்சம் பேர் இறந்ததை உலகம் அறியும். அண்மைக்காலத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் இராக் , லிபியாவில் எவ்வளவு பேரைக் கொன்றனர் என்பது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது
3.ஆஹார
உணவு எவ்வளவு பேரைக் கொல்கிறது என்பதை எழுதப் போனால் ஒரு நூல் அளவுக்குக் கட்டுரை விரிந்துவிடும். சர்க்கரை நோய் வந்தால், அதன் சகோதர்கள் ரத்த அழுத்தமும், இருதய நோயும் வந்து விடும். உடற் பருமன் அதிகரித்தாலோ மூன்று நோய்களும் குடி ஏறி விடும். சத்தில்லாத உணவுகளையோ, விஷ உணவுகளையோ, அதிகமான மாமிச உணவுகளையோ சாப்பிவிட்டாலோ, நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வெற்றிலை பாக்குடன் (Invitation to diseases) வரவேற்றது போல ஆகிவிடும்.
4. நோய்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை; எந்த விஞ்ஞானியும் முன்கூட்டி எச்சரிக்காத கோவிட் (Covid) என்னும் சீன வைரஸ் கோடிக்கணக்காணோரைக் கொன்றதை உலகம் அறியும் ; குரங்கு அம்மை (Monkey Pox) , டெங்குக் காய்ச்சல் முதலியன அவ்வப்போது நம்மை அச்சுறுத்துகின்றன
5.விபத்துக்கள் எத்தனை மனிதர்களைக் கொல்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறது இது. பூகம்பம், சுனாமி, பாறைச் சரிவு, பனிச்சரிவு, பனிப்பொழிவு என்பன இதில் அடக்கம்
6.பாம்பு, தேள், சிலந்தி, சுறாமீன்கள், முதலை , சிங்கம், புலி, யானை முதலியவற்றால் இறப்போர் இந்த வகையில் சேரும்
7.மூச்சு தொடர்பான வியாதிகள்(Respiration Diseases) – ஆஸ்த்மா முதல் கொரோனா வரை எவ்வளவோ உள்ளன.இவற்றின் புள்ளி விவரங்களை அவ்வப்போது பத்திரிக்கைக் கட்டுரைகளில் காணலாம்.
இந்த ஏழு காரணங்களையும் விலக்கி விட்டு, ஆரோக்கியமான வாழ்வு வாழ எத்தனையோ வழிகள் உண்டு; நோய்கள் வந்தபின்னர் வருந்துவதை விட, வருமுன் காப்பதே அறிவுடைமை / புத்திசாலித்தனம் ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
செப்பு மொழி இருபத்திநான்கு!
ச.நாகராஜன்
1) சிரிக்காமல் இருக்கும் நாள், சிதைந்த நாளே! – சார்லி சாப்ளின்
A day without laughter is a day wasted. – Charlie Chaplin
2) மற்றவருக்கு நடக்கும் போது எல்லாமே வேடிக்கை தான்! – வில் ரோஜர்ஸ்
Everything is funny, as long as it’s happening to somebody else. – Will Rogers
3) சிரிப்பு என்பது உடனடி விடுமுறை – மில்டன் பெர்லி
Laugher is an instant vacation. – Milton Berle
4) இருவருக்கிடையே உள்ள குறுகிய தூரம் சிரிப்பு தான்! – விக்டர் போர்ஜ்
Laughter is the closest distance between two people. – Victor Borge
5) சீரியஸாக இருப்பதை நகைச்சுவையாகக் காட்டிக் கொள்வதே காமடி. –
பெட் உஸ்டினோவ்
Comey is simply a funny way of being serious. – Petr Ustinove
6) தர்க்கம் முடங்கி இருக்கும் நிலையே நகைச்சுவை – க்ருஸோ மார்க்ஸ்
Humor is reason gone mad. – Groucho Marx
7) நடக்கும் ஒரு நிலையை உங்களால் மாற்ற முடியாது போகலாம். ஆனால் நகைச்சுவையுடன் அது பற்றிய உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளலாமே. – ஆலன் க்லெய்ன்
You may not be able to change a situation, but with humor you can change your attitude about it. – Allen Klein
8) மனித மூளையிநன் பிரதானமான செயல்பாடு நகைச்சுவை தான்! – எட்வர்ட் டீ போனோ
Humor is by far the most significant activity of the human brain. – Edward de Bono
9) நகைச்சுவையை ஆராய்ந்து அலசுவது ஒரு தவளையை வெட்டிச் சோதனை செய்வது போலத் தான்! சிலருக்கு அப்படி செய்ய ஒரு ஆர்வம் உண்டு; விளைவு தவளை செத்துப் போகிறது. ஈ. பி.ஒய்ட்
Analyzing humor is like dissecting a frog. Few people are interested and the frog dies of it. – E.B.White
10) நகைச்சுவையின் ரகசியம் அது தரும் ஆச்சரியம் தான்! – டாக்டர் செயூஸ்
The secret to humor is surprise. – Dr. Seuss
11) மனித குலத்தின் மிகப் பெரிய வரபிரசாதம் நகைச்சுவையே. – மார்க் ட்வெயின்
Humor is mankind’s greatest blessing. – Mark Twain
12) பொது அறிவும் நகைச்சுவை உணர்வும் வெவ்வேறு வேகத்தில் போகும் ஒரே விஷயம் தான். நகைச்சுவை உணர்வு நடனமாடுகின்ற பொது அறிவு, அவ்வளவு தான்! – க்ளைவ் ஜேம்ஸ்
Common sense and a sense of humor are the same thing, moving at different speeds. A sense of humor is just common sense, dancing. Clive James.
13) காமடியின் கடமை வேடிக்கை காட்டி மனிதர்களைத் திருத்துவது தான்! – மோலியர்
The duty of comedy is to correct men by amusing them. – Moliere
14) பழிவாங்கும் தன்மை என்னிடம் இருப்பதாக எனது சிகிச்சையாளர் என்னிடம் கூறுகிறார்! பார்த்துக் கொள்கிறேன், அவரை!
My therapist says I have a preoccupation for revenge. We’ll see about that.
15) எதுவும் சரிப்பட்டு நடக்காது என்று நினைப்பவனிடமே கடனை வாங்குங்கள். அவன் ஒரு நாளும் அது திரும்பி வரும் என்று நினைக்க மாட்டான்.
Always borrow money from a pessimist. They’ll never expect it back.
16) குண்டாக இருப்பது உங்கள் குடும்பத்தில் ஓடுகின்ற ஒரு விஷயம் என்பது பிரச்சினை அல்ல; உங்கள் குடும்பத்தில் யாருமே ஓடுவதில்லை என்பது தான் பிரச்சினை!
The problem isn’t that obesity runs in your family. It’s that no one runs in your family.
17) புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான விசை பற்றிய புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைக் கீழே வைக்கவே முடியவில்லை!
I’m reading a book about anti-gravity. It’s impossible to put down.
18) சமீபத்திய ஆய்வு ஒன்று, ‘கொஞ்சம் கூட உடல் எடை கொண்ட பெண்மணி அதைப் பற்றி அவளிடம் பேசும் ஆண் மகனை விட கூட வாழ் நாள் கொண்டிருப்பதை’ உறுதிப்படுத்துகிறது.
A recent study has found that women who carry a little extra weight live longer than the men who mention it.
19) நேற்று இரவு எனது காதலி நான் அவள் சொல்வதைச் சரியாக கேட்பதே இல்லை என்று புகார் கூறினாள். ஒரு நிமிடம்… அவள் அப்படித்தான் சொன்னாள் என்று நினைக்கிறேன்!
Last night my girlfriend was complaining that I never listen to her… or something like that.
20) ஆடமும், ஈவும் தான் ஆப்பிளின் விதி மற்றும் நிபந்தனைகளைப் பற்றிக் கவலைப்படாத முதல் ஆசாமிகள்!
Adam & Eve were the first ones to ignore the Apple terms and conditions.
21) வேலையற்றவர் பற்றிய சில ஜோக்குகள் என்னிடம் இருக்கின்றன; ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.
I have a few jokes about unemployed people, but none of them work.
22)35க்கு மேல் பெண்கள் குழந்தைகளைப் பெறவே கூடாது; 35 குழந்தைகள் போதாதா, என்ன?!
“Women should not have children after 35. Really, 35 children are enough.”
23) நான் ஒரு வேலை தெரியாத மோசமான எலக்ட்ரீஷியன் என்பதை அறியும் போது பலரும் ஷாக்கிற்கு உள்ளாகிறார்கள்.
Most people are shocked when they find out how bad I am as an electrician.
24) எல்லா நாட்களிலும் அதிகம் வீணாக்கும் நாள் சிரிப்பில்லாத நாளே! -ஈ ஈ கம்மிங்ஸ்
The most wasted of all days is one without laughter. – E E Cummings
இந்நூலாசிரியர் திரு நாகராஜன் அவர்கள் எனது இனிய நண்பர். பலரையும் பாராட்டும் பண்பு கொண்டவர். மெத்தப் படித்தவர். அனுபவசாலி. ஆனாலும், மிக எளிமையானவர். இவரின் தந்தை தேசபக்தர் மற்றும் இலக்கியவாதி. அவரின் மகனான இவர், 5000க்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என அளித்தவர். இன்னும், வலைத்தளம், youtube என பவனி வரும் இவரின் இலக்கிய பயணத்தில், இந்தப் புத்தகம் இன்னொரு மைல்கல் என்றால் மிகை ஆகாது.
புத்தகத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. திரு ராஜம் அய்யர், மஹாகவி பாரதி, பட்டுக்கோட்டை என்ற பட்டியலை விவரித்து, அதே போல, 54 வயதிற்குள்ளேயே, யாருமே எட்டாத சாதனைகளை தொட்டவர் கவியரசர் என்று கூறியது சிறப்பு.
“கண்ணதாசன்” – இந்த வார்த்தை, தமிழோடு மட்டுமல்ல, தமிழர்களோடு மட்டுமல்ல, மனிதர்கள் அனைவரின் உணர்வுகளோடு ஒன்றிப்பிணைந்த வார்த்தை என்றால் மிகை ஆகாது. காரணம், பிறப்பு முதல், இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விற்கும் பாடல் தந்த பெருமை கொண்டவர் கண்ணதாசன்.
ஒரு கவிஞனுக்குத் தேவை மூன்று விஷயங்கள். நம்பிக்கை, திறமை, துணிவு. பாரதியைப் போலவே, கண்ணதாசனுக்கும், இது நன்றாகவே அமைந்திருந்தது. அதனால்தான், மரணம் அவனை முத்தமிடுவதற்கு 20 வருடங்கள் வருடங்களுக்கு முன்னரேயே, நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று
பாடினான். அவனுக்குப் பிடித்த தலைவர்களை எந்த அளவுக்கு உயரே தூக்கி வைத்தானோ, அவர்கள் கொள்கை மாறியபோது, அப்படியே அவர்களைத் தூக்கிப் போட்டான்.தான் கொண்ட தத்துவம் என்றும் மாறவில்லை – தலைவர்கள் மாறினார்கள், என்றே கூறினான். இப்படி அவன் செய்த போது குறிப்பிட்ட ஒரு கட்சியினர் செருப்பைத் தூக்கி எறிந்தபோது, கைகளில் பிடித்துக் கொண்டு பேசினான் – தலையில் உள்ளதை உபயோகிக்க தெரியாததால், காலில் உள்ளதை உபயோகிறார்கள் என்றான். அந்த அளவிற்கு, துணிச்சல் மற்றும் நம்பிக்கை, அவனிடம் நிறைந்திருந்தது. மதுபோதை மற்றும் மாது போதையில் தடுமாறியவன், என்றுமே புகழ் போதையில் நின்றதே இல்லை. எல்லாம், அந்த அன்னையின் அருள் என்றே கூறி வந்தான்.
கவிஅரசின் ஆற்றலை, அடுக்கடுக்கான நிகழ்வுகளை, அற்புதமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். பாரதியைப் போலத்தான் கவிஅரசும் என்று கூறி, அவனின் வார்த்தைகளுக்கு உள்ள சக்தியை –
கே ஆர் ராமசாமியின் பாட மாட்டேன் என்ற பாடலையும், இளையராஜா இசையமைக்க வந்த புதிதில் தான் எழுதிய பாடலையும் ஒப்பு நோக்கி இருப்பது சிறப்பு. வார்த்தைகளுக்கு VIBRATION உண்டு என்பது நிஜம்தானே. அதேபோல, கவியரசு ஒற்றை வார்த்தையை வைத்தே தமிழில் விளையாடினார் – தேன், பூ, காய், தான், நிலா எனப் பல. நூலாசிரியர், கவிஅரசின் இரு சொல் முத்திரை மூன்று சொல் முத்திரை எனப் பாடல்களை அடுக்கி இருக்கிறார். கண்ணதாசனின் முதற்பாடலான, கலங்காதிரு மனமே – கனவெல்லாம் நனவாகுமே என்ற பாடலே இரு சொல் முத்திரை என்பது புதிய செய்தி. அதேபோல, முத்தையாவின் (கவியரசு தான்) முத்தான மூன்று சொற்களை முத்துக் குளிக்க வாரீகளா என்று ஆரம்பித்து, வள்ளுவன் பாரதி பாடல்களை ஒப்பிட்டு இருப்பது குற்றால அருவியில் குளித்த சுகம். எழுத்தாளர் தி ஜ ர அவர்களைப் பாராட்டியது, அவரைத் தன் எழுத்து நடைக்கு முன்னோடியாகக் கொண்டது என்பதெல்லாம் சுவையான, புதிய செய்தி.
கவிஅரசின் காதல்,தத்துவப் பாடல்களை விதவிதமாய் விளக்கி வரும்போது, அவரின் அங்கதச் சுவையையும், சுவைப்படக் கூறியிருக்கிறார் ஆசிரியர். காற்றடிக்கும் போது, தென்னை மரம் ஏன் ஆடுகிறது தெரியுமா – தென்னையில் இருந்துதானே கள் வருகிறது என்பது ஒரு உதாரணம்.ஆம். தான் பல நேரங்களில் மது, மாது இவற்றுடன் இருப்பதைக்கூட, கவிஞர் தனக்கே உரிய பாணியில் கூறுவார் –
ஓர் கையில் மதுவும் ஓர் கையில் மாதுவும் சேர்ந்திருக்கும் வேளையில் என் ஜீவன் பிரிந்தால்தான் நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்
இல்லையேல் ஏன் வாழ்க்கை என்றே இறைவன் எனைக் கேட்பான்
என்பதில் என்ன ஒரு அங்கதம்? இப்படி வாழவில்லையா என்று இறைவன் இவரைக் கேட்பானாம்!!
அதேபோல, காலங்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும் கவிஞரின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் தலைப்பு தோன்றிய விதம், கதிரில் அதை படித்த மூதறிஞர் ராஜாஜி, கல்கி பத்திரிகைக்கு, கவிஞரை எழுத வைத்தது – கடைசிப்பக்கம் என கவிஞர் எழுதியது, தொடர்ந்து, பின்னாட்களில் சாகித்திய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி நாவலும் கல்கியில் எழுதியது எனப் பல சுவையான தகவல்கள் இந்தத் தலைமுறை அறியும்படி உள்ளது.
கவிஞரின் வார்த்தைகள் சத்தியமானவை என்பதற்கு, தமிழகம் மழையற்று இருந்த ஒரு நேரத்தில், அவரின்
ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே நல்லவர் தூங்கினால் நானிலம் தூங்குமே
என்ற கவிதையை நினைவு படுத்துகிறார். இந்தப் பாடல் எழுதி, பலர் வாசித்தபின், எதிர்பாராமல், மழை கொட்டியது என்பது தமிழகம் அறிந்த ஒன்று.
கவிஞரின் வனவாச (ஆரம்பகால) வாழ்வை, அருணகிரி, அப்பரடிகள், நாவுக்கரசர் இவர்களின் தொடக்க கால வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, கவிஞர், திராவிடமாயையிலிருந்து மீண்ட வரலாற்றை நயம்படக் கூறியிருக்கிறார். செத்தமொழி பெற்றமகன், தமிழைப் பார்த்து திணறுகிறார் என்றே வடமொழியைத் தாக்கி எழுதிய காலத்தை, முட்டாள்தனம் என வருந்தி, பிராயச்சித்தம் போல, வடமொழியில் கொஞ்சம் பயிற்சியும் பெற்றார். தமிழ் மொழி உயிர் – வடமொழி ஆத்மா என்று கவியரசு கூறிய சிறப்பைக் கூறியிருப்பது மிக அழகு. தொடர்ந்து தனது இனிய நண்பர் ஆஷா நடராஜன் அவர்களுடன் இணைந்து, பகவத் கீதை, பஜ கோவிந்தம், கீத கோவிந்தம், கனகதாரா ஸ்தோத்திரம் என பல வடமொழி நூல்களை தமிழ்ப் படுத்தினார், கவிஞர். அவரின் ஒரு வடமொழிப் பாடலும், கிருஷ்ணகானம் இசைத் தட்டில் இடம் பெற்றதைக் குறிப்பிடுகிறார் (அமர ஜீவிதம் – சுவாமி அமுத வாசகம் என்ற பாடல்)
நிறைவாக, பார்த்தது கோடி- பட்டது கோடி – சேர்த்தது என்ன! சிறந்த அனுபவம்! என்ற வரிகளைக் கோடிட்டு, இந்த எண்ணமே, கவிஞருக்கு, ஆன்மிகம், மற்றும் விரிந்த மனம், நம்பிக்கை, எதிர்காலம் என்பதையெல்லாம் காட்டியது என்கிறார். நான் ஒரு ஹிந்து என்று மிக
தைரியமாக, ஆணித்தரமாக, மனதின் குரலாக அவர் கூறி இருப்பதையும், நூலாசிரியர், அழகாக எடுத்து உரைக்கிறார். ஆம், கவிஞரின் –
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க வேளை பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல,
என்பது சத்தியமான வார்த்தைகள் தானே? இப்படி, பல்வேறு நேரங்களில், பல்வேறு கட்டுரைகள் எழுதியதை, ஒரு தொகுப்பாக, நூலாசிரியர் கொண்டு வந்திருப்பது, வாசமுள்ள மலர்களை வண்ணக் குவியலாக்கி, மணம் வீசும் மாலையாக்கித் தந்திருப்பது போல, படிப்போருக்கு மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் தந்து, மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் நான் வணங்கும் குருநாதரை வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்
20-12-2021
முனைவர் தென்காசி கணேசன், சென்னை 600092 (94447 94010)
புத்தகத்தில் எனது முன்னுரையில் ஒரு பகுதி இது:
முன்னுரை
இந்த நூலின் உள்ளே கவியரசனின் கவிதை ஜாலத்தைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு பெரும் கடலில் சில துளிகளை இனம் காட்டியுள்ளேன், அவ்வளவு தான்!
இந்த நூலுக்கு அருமையானதொரு அணிந்துரையைத் தந்து என்னைக் கௌரவித்த எனது இனிய நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு கணேசன் அவர்கள் டிவிஎஸ், அசோக் லேலண்ட் & எல்.டி. நிறுவனங்களில் மனித வளத்துறைப் பிரிவில் மேனாள் துணைப் பொது மேலாளர். ஆன்மீகப் பேச்சாளர், எழுத்தாளர். பல அமைப்புகளின் உயிர் நாடி. கண்ணதாசனின் ஊன்றித் தோய்ந்தவர். பல நூல்களை எழுதியவர்.
திரைப்படப் பாடல்கள் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம் இவர் என்றால் அது மிகையாகாது. அது மட்டுமல்ல, திரைப்படத் துறை சார்ந்த அனைவரையும் உரிய முறையில் பெரும் விழாக்கள் எடுத்து கௌரவிப்பவர். அவரது தமிழ் உணர்விற்கு மீண்டும் நன்றி.
இந்த நூலை அழகிய முறையில் வெளியிட முன் வந்திருக்கும் ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
ச. நாகராஜன் பெங்களூர் 21-12-2021
*.
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
The more you get, the more you want;
Greed always increases with gain.
“When a thing could have been accomplished with two Masas only , it is not accomplished even by ten millions”.
Once a Brahmin by name Kapila went to a king only to get two Maasas of gold only. The king pleased with him for his truthfulness , asked him to ask for anything that he liked. Kapila then started thinking whether he should ask for a thousand, or ten thousand or a hundred thousand,and so on. And then all of a sudden it dawned on him that he had gone to the king originally with the ides of getting two Maasas only. And he realised the futility of it all, and renounced the world there and then.
Sloka for this in Ardhamagadi language.
There is no limit
Jahaa loho tahaa loho laahaa loho pavaddayi
Domaasakayam kajjam kodiiye vi na viddiyam
Xxxx
The disciple asks the preceptor
How should a true monk walk
How should he stand
How should he talk
How should he lie down/sleep
How should he eat or talk, so that he may not bind sinful karman
The preceptor answers
He, a true monk should walk, stand, sit or sleep with proper self control.
Eating and speaking with proper control, he will not bind any sinful Karman around the soul.
Kaham chare Kaham chidde kaham bhase kaham saye
Kaham bhunjantho bhaasantho paavam kammam na bandayii
Jayam chare jayam chidde jayam aase jayam saye
Jayam bhunjantho bhaasantho paavam kammam na bandayii
Xxx
Seven Things that Reduce Life Span
Life diminishes in the following seven ways
Seven causes of decay and death
1.Adhyavasaana
Brooding over some shocking incident, sorrow, love, hatred etc
2.Nimitta
Wounds inflicted by weapons etc
3.Aahaara
Excess of food
4.Vedanaa
Suffering pain, agony,diseases
5.Paraaghaata
Wound s caused by falling down etc from great heights
6.Sparsa
Coming into contact with hard stone or a poisonous reptile
7.Aana praana
Respiration; when the respiratory system fails, suffocation, asphyxia
To be continued………………………..
tags- jains, gems, Masa coin, gold, greed, Kapila, story, life span, 7 things
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகில் இரண்டு மஹாவீரர்கள்தான் உண்டு. ஒருவர் ஜெய வீர ஆஞ்சநேயன் (ஹனுமான்); மற்றொருவர் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆன மஹாவீரர். புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்று அவ்வைப்பாட்டி கூறியது போல இவர்கள் இருவரும் ஜிதேந்த்ரியன் ; அதாவது இந்திரியங்களை– புலன்களை — வென்ற மகா வீரர்கள்; அவர்களின் சிலைகளை பார்த்தாலேயே நமக்கும் புலன் அடக்கம் வந்து விடும்.
புத்தர் எப்படி மக்கள் பேசிய பாலி மொழியில் பேசினாரா அதே போல மஹாவீரர் அவர் மாநிலமான பீஹாரில் வழங்கிய அர்த்தமாகதி மொழியில் பேசினார். பாலி , அர்த்தமாகதி என்பனவெல்லாம் சமஸ்கிருதத்தின் கிளை மொழிகள். சம்ஸ்க்ருதம் அறிந்ததோர் அவைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். மஹாவீரர் அர்த்த மாகதி மொழியில் சொன்ன விஷயங்கள் ஸ்லோகங்களாக, மஹாவீர வசனாம்ருதம் என்று தொகுக்கப்பட்டுள்ளன (வசன+ அம்ருதம் = வசனாம்ருதம் ).
அதிலிருந்து இரண்டு கதைகளைக் காண்போம்.
சில வர்த்தகர்கள் ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு‘ என்ற ஆன்றோர் மொழிக்கு இணங்க செல்வம் தேடிப் புறப்பட்டனர் . அவர்கள் அதிர்ஷ்டம் , முதலில் ஒரு இரும்புச் சுரங்கத்தைக் கண்டார்கள். உடனே சாக்குகள் நிறைய (Iron ores) இரும்புத் தாதுக்களை நிரப்பி இழுத்து வந்தனர் . பல மைல்கள் கடந்து வந்த பின்னர் காரீய (Lead) சுரங்கத்தைக் கண்டனர். உடனேயே இரும்புச் சாக்குகளை விட்டு விட்டு ஈயச் சாக்குகளை சுமந்து வந்தனர். பின்னர் தாமிரச் (Copper) சுரங்கத்தைக் கண்டனர். அட, இதற்கு இன்னும் விலை மதிப்பு அதிகம். ஆகையால் ஈயத்தை எல்லாம் கொட்டிவிட்டு தாமிரத்தை எடுத்துச் செல்வோம் என்று தாமிரத் தாதுக்கள் நிரம்பிய சாக்குகளை இழுத்து வந்தனர். ஆனால் அவர்களில் ஒருவன் மட்டும் இவற்றின் மதிப்பு பற்றி அறியாமல், பிறர் சொன்னதையும் கேளாமல், இரும்பை மட்டும் தொடர்ந்து சுமந்து வந்தான். பின்னர் அவர்கள் வெள்ளிச் (Silver Mine) சுரங்கத்துக்கு வந்தனர். கடைசியாக தங்கச் சுரங்கத்தைக்(Gold Mine) கண்டனர். ஒவ்வொரு முறையும் முன்னதை விட மதிப்புமிக்க உலோகங்களைக் கண்டவுடன், பழைய மதிப்புக்குறைந்த உலோகங்களை விட்டு நல்லதை, விலை உயர்ந்ததை, எடுத்துச் சென்றனர். ஆனால் பிடிவாதக்காரனாக இருந்த ஒரு வணிகன் மட்டும் இரும்பைச் சுமந்து வந்து ஏமாந்தான் ; அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல என்றும் சொல்லாமாம் ; அல்லது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற பழமொழியையும் ஒப்பிடலாம்.
இதைச் சொல்லும் மஹாவீரர் ஸ்லோகம் ஒரு நீதியைப் போதிக்கிறது:
நல்ல மதக் கொள்கையை விட்டு வேறு ஒன்றை நாடாதே .சின்ன விஷயங்களுக்காக பெரியதைத் தியாகம் செய்யாதே. அப்படிச் செய்தால் பின்னர் வருந்த நேரிடும்; எப்படி என்றால் இரும்பை மட்டும் சுமந்தவன் கதை போல .
இதோ அந்த அர்த்தமாகதி மொழி ஸ்லோகம் :
மா ஏயம் அவமனந்தா அப்பே ணம் லும்பஹா பஹும்
ஏயஸ்ச உ அமோக்காயே அயோஹாரி வ்வ ஜூரஹ
இந்தக் கதையை கேசி குமார சமண என்பவர் பாயேசி என்ற மன்னனுக்குச் சொன்னார். இது ராய பாஸேன ஜ்ஜம் என்ற நூலில் உள்ளது.
XXX
கபில ப்ராஹ்மணன் கதை
ஜஹா லோஹோ தஹா லோஹா லாஹா லோஹா பவத்தஈ
தோமாஸகயம் கஜ்ஜம் கோடீ ஏ வி ந நிட்டியம்
“உனக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவுக்கு தேவையும் அதிகரிக்கும்; லாபம் கிடைக்கக் கிடைக்க பேராசை வரும்; இரண்டு மாச காசுகளுக்குச் செய்யக்கூடியதை பத்து மில்லியன்/கோடி கிடைத்தாலும் செய்யமுடியாது”
மாச என்பது வேத காலம் முதல் இருந்து வரும் தங்கக் காசின் பெயர்; இது பற்றிய கதையாவது :
கபிலன் என்ற பிராஹ்மணன் ஒரு அரசனிடம் சென்று இரண்டு ‘மாச காசுகள்’ தருமப்படி வேண்டினான். ஏன் இரண்டு காசுகள் மட்டும் கேட்கிறீர்கள்? என்று அரசன் கேட்கவே எனக்கு அவ்வளவுதான் தேவை என்கிறார். அ வருடைய நேர்மையை மெச்சிய அரசன், ஓ பிராமணா ! நீ எவ்வளவு வேண்டுமானாலும் கேள்; நான் தருகிறேன். உங்கள் வாய்மையைப் பார்த்து நான் வியப்படைகிறேன் என்றான் மன்னன்
உடனே கபிலர் மனதில் எண்ண அலைகள் எழுந்தன. நான் ஆயிரம் தங்கக் காசுகள் கேட்பேன்; இல்லை, இல்லை 10,000 தங்கக் காசுகள் கேட்கலாமே ! ஏன் , நூறாயிரம் காசுகள் கேட்டால் என்ன , அவர்தான் கொடுக்கிறேன் என்கிறாரே. இப்படி எண்ண அலைகளில் சிக்கிய அவருக்குத் திடீரென்று ஞானோதயம் உதித்தது. அடக்கடவுளே ! ஆசைக்கு அளவே இல்லை என்று ஆன்றோர்கள் செப்பினரே. நான் இரண்டு மாச காசு கேட்க வந்ததே தப்பு , தவறு என்று எண்ணியவாறு அரசனிடம் Good Bye குட் பை சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அது மட்டுமல்லாமல் அந்த இடத்திலேயே ஒரு காவித் துணியை வாங்க்கிப் போட்டுக்கொண்டு சந்நியாசி ஆகிவிட்டார்.
இந்த இரண்டு கதைகளும் மஹா வீர வசன அம்ருத நூலின் விளக்க உரையில் உள்ளன.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!
ச.நாகராஜன்
உலகமே பயப்படும் கொடிய வியாதியான கான்ஸர் எத்தனை பேரைக் கொன்றிருக்கிறது என்பதற்குக் கணக்கே இல்லை.
இந்த வியாதிக்கு ஒரு மருந்தே இல்லை போலும் என்று நினைத்திருந்த சமயத்தில் தான் தனது அரிய ஆராய்ச்சி மூலம் ஒரு நம்பிக்கையைத் தந்தார் ஜேன் ரைட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி! (தோற்றம் : 20, நவம்பர் 1919 மறைவு 19, பிப்ரவரி 2013) (
அமெரிக்காவில் மன்ஹாட்டனில் ஜேன் பரம்பரையான டாக்டர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தாக்களான சியா கெட்சம் ரைட் (Ceah Ketcham Wright)மற்றும் வில்லியம் ஃப்லெட்சர் (William Fletcher) ஆகியோர் டாக்டர்களே! ஜேனின் தந்தையான லூயி டாம்கின்ஸ் ரைட் (Louis Tompkins Wright)ந்ஒரு தேர்ந்த சர்ஜன். கான்ஸரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ந்து வந்தவர்.
இந்தப் பரம்பரையில் வந்தவர் தான் ஜேன்; என்றாலும் கூட அவருக்கு நல்ல ஓவியராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. ஆனால் அவரது தந்தை தான் அவரை மெடிகல் படிக்கலாமே என்று யோசனை கூறினார்.
உடனே வைத்தியத் துறையில் இறங்கினார் அவர். முப்பது வயது ஆரம்பிக்கும் போது அவர் கான்ஸரைப் பற்றி ஆராய ஆரம்பித்தார். 1952இல் ஹார்லெம் மருத்துவமனையில் கான்ஸர் ரிஸர்ச் ஃபவுண்டேஷனின் டைரக்டராக ஆனார்.
கேன்ஸர் வியாதியினால் பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அனைவருக்கும் பொருந்தும்படியான ஒரு மருந்து இல்லை என்பது தான் அவரது முடிவு.
கான்ஸரைப் பரப்பும் செல்களை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது தான் அவரது ஆய்வின் ஒரே நோக்கம்.
1945ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கான்ஸர் ஆய்வு மையத்தின் இயக்குநர் இந்த பிரச்சினையை அழகாக இப்படிச் சொன்னார்: “ இடது காதை பங்கப்படுத்தினாலும் வலது காதை அப்படியே பங்கமில்லாமல் வைக்க முடிவது எப்படி என்பதற்கான ஒரு ஏஜண்டை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!”
ஒரு இரசாயன ஆயுதத்தைக் கையில் எடுத்து கான்ஸரைத் தாக்க முடியுமா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை என்று தெரிய வந்தது.
கான்ஸர் கிருமிகள் எப்படிப் பரவுகின்றன என்பதே தெரியாத நிலை!
அப்போது கான்ஸர் வியாதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு விபத்து கான்ஸர் வியாதியைத் தீர்க்க வழியைக் காட்டியது!
1943ஆம் ஆண்டு கடுகு வாயுவை (mustard gas) ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கடற்படைக் கப்பல், விபத்து ஏற்பட கடலில் மூழ்கியது. கப்பல் கடலில் மூழ்கும் போது கடுகு வாயு வெளிப்படவே அதனால் பாதிக்கப்பட்டு ஏராளமான வீரர்கள் இறந்தனர்.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டன.
அப்போது ஒரு விஷயம் வெளிப்பட்டது.
தொற்றுவியாதி பரவுவதைத் தடுக்கும் வெள்ளை அணுக்கள் அவர்கள் உடலில் சிதிலமாகி இருந்தன. இந்த செல்கள் தான் லூகேமியா நோயாளிகளிடம் கான்ஸரைப் பரப்பவும் காரணமாக அமைந்திருந்தன.
1946இல் முதன்முதலாக ஒரு கான்ஸர் நோயாளிக்கு ஊசி மூலம் நைட்ரஜன் மஸ்டர்ட் செலுத்தப்பட்டது. அதில் சற்று குணம் காணப்பட்டது.
அதிலிருந்து கான்ஸர் வியாதிக்கான சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வரலானார் ஜேன்.
மார்பகப் புற்று நோய்க்குத் தரப்படும் மருந்து கோலன் புற்று நோய்க்குச் சரிப்பட்டு வரவில்லை.
ஒவ்வொரு கேன்ஸர் நோயாளியையும் தீவிரமாக ஆராய வேண்டி இருந்தது.
ஆகவே சுமார் 22 வருடங்கள் ஒவ்வொரு நோயாளியையும் ஆராய்ந்து கொண்டே இருந்தார் ஜேன். ஒவ்வொரு நோயாளியின் கட்டியிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து அதைத் தன் சோதனைச்சாலையில் ஆராய ஆரம்பித்தார் அவர். டிஷ்யூ கல்சரில் அவரது ஆய்வு முடிவுகள் பெரிய பயனை கான்ஸர் சிகிச்சையில் தந்தது.
உலகம் கீமோ தெராபி (Chemo therapy) என்ற புதிய சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க முடிந்தது.
அவர் கண்டுபிடித்த புதிய முறைகளைப் பற்றி அவரது இரு மகள்களுமே அறிந்திருக்கவில்லை.
அவர் இறந்த பின்னர் அவரது நோயாளிகளும் நண்பர்களும் அவரைப் புகழ்ந்து பேசிய போது தான் அவரைப் பற்றிய முழு விவரங்களும் உலகினருக்குத் தெரிய ஆரம்பித்தது.
1987இல் அவர் பணி ஒய்வு பெற்ற பின்னர் வண்ண ஓவியங்களிலும் மர்ம நாவல்கள் படிப்பதிலும், கடல்பயணம் செய்வதிலும் மனதைச் செலுத்தி மகிழ்ந்தார்.
2013ஆம் ஆண்டு நியூ ஜெர்ஸியில் குட்டன்பர்க்கில் தனது 93ஆம் வயதில் மன நிறைவுடன் அவர் மறைந்தார்.
தன் வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை அவர் சாதித்த பின்னரே மறைந்தார்.
***
.
புத்தக அறிமுகம் – 9
நோய் தீர, இன்பம் சேர, வினை தேய தேவாரம், திருவாசகம்!
தெய்வத் தமிழின் பெருமையை உணர ஏராளமான பாடல்கள் உள்ளன.
பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் தெய்வத் தமிழின் பெருமையை உணர்வதோடு இறைவனின் திருவருளையும் பெறலாம்.
உலகியல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேறுகளை தர வல்லது பன்னிரு திருமுறைப் பாடல்கள்.
செல்வம் பெருகும். நோய் தீரும். வினை தேயும். சிவனருள் கிட்டும். அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெருகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை ஞான ஆலயம், www.tamilandvedas.com உள்ளிட்ட பத்திரிகைகள், ப்ளாக்குகளில் எழுதி வந்தேன்.
அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கட்டுரைகள் வெளியாகி வந்த போது படித்துப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சளா ரமேஷ், லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தேவார, திருவாசகத்தை ஓதி அனைத்து நல் பேறுகளையும் பெற இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நன்றி. பங்களூர்
ச.நாகராஜன்
11-4-2022
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
Mahavira s teachings are in Ardhamagadi language. It is a type of Prakrita, spoken dialect of Sanskrit. Any one who knows Sanskrit can easily understand it. His teachings are collected in the book
Mahaaviira Vacanaamrtam.
Following are the slokas
Ajjavasaananimitte aahaare veyanaaparaagaaye
Fase aanaapaanu sattaviham jinjaye Aaum
Xxx
As a cart driver , who knowingly leaves the even and smooth highway and getting on a rugged road, repents when the axle is broken, even so the fool, who transgresses religion or abandons it, embrace s unrighteousness, repents when he is a prey to death, like the cart driver repenting for the broken axle.
Jahaa saagadio Jaanam samam hichchaa mahaapaham
Visamam magga moyinno akke baggammi soyayee
Evam dhammam viukkamma ahammam padivajjiyaa
Baale machchumuham patte akke magge va soyayee
Akke =axle = Achchu in Tamil. Achchu is a Sanskrit word used in Tamil.
Jaanam = Gnanam
Magga = Maarga
Patha = Path = paathai in Tamil . Sanskrit word used by Tamils
Xxxx
Story
Do not , by disdaining this right path, lose much for the sake of little.
By not discarding this wrong path you will repent later on, like one merchant who carried the load of iron.
Maa eyam avamannanthaa appenam lumpahaa bahum
Eyascha u amokkaaye ayohaari vva juraha
This story is told in Raaya pasena ajjam by Kesikumaara Saamana to king Paesi.
Some merchants started on a journey. They first came upon a mine of iron. All of them took a load of iron with them and proceeded forward. In due course they came upon mines of copper, lead, silver and finally gold . All except one merchant, discarded their previous burden in exchange for one more precious. But one man would not discard the load of iron. Now, just as because of his obstinacy and pig headedness, he lost so much for so little, similarly people who cling to false faiths, will suffer a great loss.
Xxx
As a crane is produced from an egg, and an egg is produced from a crane, so the wise say that the desire is the origin of delusion, and delusion is the origin of desire.
This is a vicious circle. A man caught in this whirligig or eddies, must make a strenuous effort to get out of it; otherwise he is lost.
to be continued……………………………..
Tags- Jains, Mahavira, Story, Iron, Gold Mine, king Paesi.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தெருக்குறள்—வெள்ளத்துப்பால்
—————————————————————————————
தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை
————————————————————————————————–
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
‘போட்’டினில் பின் செல்பவர்
———-
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
———————
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர்.
————————-
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
—————————–
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
————————-
வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
—————————-
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
———————————
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
———————————————-
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
———————————————-
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
————————————————————
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை *
சிரிக்காம படிக்கனும்*
*ஜட்ஜ்:* எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???
*விண்ணப்பதாரர்:* ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .
அதனால் விவாகரத்து தாருங்கள். …
*ஜட்ஜ்:* இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. , பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப்படியும் போகலேன்னா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.
நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா…?
அறிவியலை அனைத்துத் துறைகளுக்கும் கொண்டு செல்லலாம் என்றும் பெண்கள் இதில் இணைய வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் அவர் பாடுபட்டார்.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸில் டன்ஸ்டேபிள் (Dunstable, Massachusetts) என்ற இடத்தில் பிறந்த எல்லனுக்கு கல்வியின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. எதையும் கற்க வேண்டும் என்ற துடிப்பால் அவர்
மசாசூசெட்ஸில் எம் ஐ டியில் (MIT) சேர விண்ணப்பித்தார். மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் 1870இல் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
ஆனால் பெண்களை பல்கலைக் கழகத்தில் நுழைய விடத் தயக்கம் காட்டிய பல்கலைக் கழக நிர்வாகம், அவரது பல்கலைக் கழக கட்டணத்தை ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸியாக எடுத்துக் கொண்டது.
யாராவது ஒருவர் ஒரு பெண் எப்படி இங்கு படிக்கலாம் என்று கேட்டால் அது முறையான் அட்மிஷன் இல்லை என்று தப்பித்துக் கொள்ளவே இந்த முறையை நிர்வாகம் கடைப்பிடித்தது.
தனது நகரத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருப்பதைக் கண்டு வேதனைப் பட்டார் எல்லன்.
அறிவியல் மூலம் இந்த நிலையைப் போக்க முடியும் என்ற உத்வேகத்தால் தனக்கு என ஒரு சிறு சோதனைச் சாலையை அமைத்துக் கொண்டார்.
சுமார் 20000 நீர் மாதிரிகளை அவர் சோதனை செய்து பார்த்தார்.
நீரை எப்படி சுத்தம் செய்வது என்பதை ஆராய்ந்து கண்டு பிடித்தார்.
அவரது பெரு முயற்சியின் காரணமாக மக்கள் சுத்தமான நீரைப் பெற முடிந்தது.
அத்துடன் அவர் நிற்கவில்லை, பெண்களின் படிப்புரிமைக்காகப் பாடுபட ஆரம்பித்தார்.
தபால் மூலம் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற ஒரு புது வழிமுறையைத் தோற்றுவித்தார்.
அதிகம் வீட்டு வேலை பார்த்துக் கொண்டே படிப்பதால் ஆரோக்கியம் சீர் கெடுவதாக பெண்களிடம் ஒரு பிரச்சினை எழுந்தது. உடனே பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான வழிமுறைகளை அவர் ஆராயலானார்.
அவரது பெருமுயற்சியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் தொடர்ந்து முதன் முதலாக பெண்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படலாயினர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்க வேண்டும் என்று முதலில் முழங்கியவர் அவர்.
ஆனால் 1890இல் அவர் ஆரம்பித்த இந்த முயற்சி 116 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒபாமாவின் மனைவி மிசெல் ஒபாமாவின் மூலம் வெற்றி அடைந்தது. அவர் ஆரோக்கியமான பள்ளிக்குழந்தை உணவை அறிமுகப்படுத்தினார்.
எல்லன் பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்தார்.
ஹோம் எகனாமிக்ஸ் மூவ்மெண்ட் எனப்படும் ‘இல்ல பொருளாதார இயக்கத்தை’ நிறுவியவரும் அவரே. துப்புரவுத் துறையில் (Sanitary) மகத்தான சாதனையை அவர் படைத்தார்.
தனது கணவரின் துணையோடு வருடத்திற்கு ஆயிரம் டாலரை மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்திற்கு, பெண்கள் பரிசோதனைச்சாலைக்காக அவர் வழங்கி வந்தார்.
1911 மார்ச் 30ஆம் நாள் இதயவலியால் மூச்சு முட்டல் (angina) ஏற்பட்டு அவர் மறைந்தார்.
பெண் கல்வி, துப்புரவு, குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டம் என இப்படிப் பல துறைகளிலும் முன்னோடியாக நின்ற அவரை உலகம் மறக்காது.
தமிழ் என்னும் விந்தையில் (வி)சித்திர கவி விளக்கம் என்ற தலைப்பில் 27 அத்தியாயங்கள் அடங்கிய எனது நூல் 2022 ஜனவரியில் வெளியிடப்பட்டது.
நூலுக்கு முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி, மேனாள் விரிவுரையாளர் (பணிநிறைவு), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அணிந்துரை தந்து என்னைக் கௌரவித்தார்.
அதில் சதுரங்க பந்தம், சருப்பதோ பத்திரம், கூட சதுர்த்தம், கோ மூத்திரி, மாலை மாற்று, சுழிகுளம், திரிபங்கி ஆகிய தமிழ் கவிதா விசித்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக இந்த நூல் மலர்கிறது.
இதில் வல்லின எழுத்துப் பாட்டு, மெல்லின எழுத்துப் பாட்டு, இடையின எழுத்துப் பாட்டு உள்ளிட்ட பல தமிழ் கவிதா விந்தைகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் www.tamilandvedas.com இல் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ்அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைப் படித்து என்னை ஊக்குவித்த அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் எனது நன்றி.
புத்தகமாக வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டவர்களின் விருப்பம் இதை வெளியிடுவதன் மூலம் நிறைவேறியுள்ளது.
தமிழ், அளக்கமுடியா ஒரு மாபெரும் கடல். அதில் உள்ள விந்தைகள் ஏராளம். அவற்றில் இன்னும் பலவற்றை அடுத்த பாகத்தில் காணலாம்.
நன்றி. சான்பிரான்ஸிஸ்கோ 18-7-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
Gems from Jain Literature- 1
Big numbers
Jains were great mathematicians. Mahavira, who was senior to Buddha lived in North India 2600 years ago. We may say that he lived before the famous Greek philosophers. The teachings of Jains are almost similar to the Hindus. Jains also believed in the Karma theory, re births and Moksha. They practised stricter Ahimsa/non violence towards all living beings. Like Hindus, men and women became ascetics. One sect of them did not wear clothes and they were called Digambaras meaning Sky clad. Another sect wore white clothes, and they were called Svetambharas. English word White came from Sanskrit word Swetha.
Jains were fascinated with numbers and they have their own classification of Time.
The following is taken from Jain scriptures
The smallest or indivisible unit of Time- 1 Samaya
Countless or innumerable Samayas – 1 Aavalikaa
Numerous Aavalikaas —— 1 swaasa/ breath
Two Svaasas/ breaths ——. 1 Praana
Seven Praanasankatam —- 1 Stoka
Seven Stokas——- 1 Lava
77 Lavas ———- 1 Muhuurta
30 Muhuurtas—- 1 Day / 24 Hours
15 days—- 1 Paksha
Two Pakshas — one month
Two months — one season
Three seasons —- one Ayana
Two Ayanas—— one year or Samvatsara
100 years—- one century
Ten centuries— 1000 years
84000 lakhyears — one Puurvaanga
84 Lakh Puurvaanga s — one Puurva
Thus one Puurva consists of 7056 0000000000 years
The ancient seers have calculated figures even beyond these. But as figures are of no avail in calculating and arriving at those figures, they have resorted to comparisons. Thus, if you have a well, one Yojana/8 miles in length, one yojana in breadth/ circumference and one yojana in depth, and fill it with extremely thin human hair and press them down in such a manner that even if an army were to march over it, the hair would not go down; and if you were to empty that well out one piece of hair at an interval of 100 years, then the time required to empty the well constitutes one Palyopama.
Ten crores into ten crores of Palyopamas constitute one Sagaropama.
20 crores into20 crores of Sagaropamas make one Kala Chakra and countless Kala chakras make one Pudgalaparaavarta.
One may think these are not useful in practical life. But the modern day astronomers use the computers for biliions of calculations before launching a satellite. When they talk about the distance of stars and galaxies they use huge numbers. Laymen may think they are not useful.
Rig Veda divided a year into six seasons. Tamil literature also followed the Vedas. We see the same division in Jain literature. Number 84,000 plays same role in both the religions. The number of living creatures is 84 lakhs. The big calculations in time is also similar to Hindu calculations of Manvantara.
Lord Krishna in Bhagavad Gita also gives very big numbers (Sahsra Yuga Paryantham) ; the day of Brahma is 1000 Chatur Yugas and the night of Brahma is again 1000 Chatur Yugas. And he lives for 100 years. That is one Param. One Chatur Yuga is equal to 4,32,000 years. We cant even write one Brahma’s age in numbers. These calculations show that there are Extra Terrestrial Civilizations where the calculation of Time is different. If a May fly knows mathematics it will tell its babies some huge numbers when it talks about human lives. The May fly lives for only one day. So Hindus know that we are small pebbles on the shores of mighty oceans. When Krishna showed Arjuna Viswa Rupa Darsan, he described his brightness equal to 1000 suns (Divi Surya Sahasrasya); when a little Hindu girl begins his studies, she praises Lord Ganesh as bright as ten million suns (Koti Surya Smaprabha); when other religions talked in terms of 40s, Hindus thought about billions.
Tamil poet Tiruvalluvar talks about 10 times ten millions or ten to the power of ten millions (Paththu Adukkiya Koti in Tamil)
Jains lived a peaceful life in North India, but in Tamil Nadu and Karnataka they involved in politics 1400 years ago. That resulted in big clashes between the Saivaites and the Jains in Tami Nadu. They made a big contribution to Tamil literature. They started writing and painting in Tamil Nadu caves. Hindus followed them. Jains who came to Tamil Nadu probably copied Emperor Asoka.
Source :-
The Teachings of Lord Mahavira (with my inputs)
Sri Mahavira Vacanamrtam
Pronunciation— Srii Mahaaviira vacanaamrtam
To be continued
tags- Mahavira, Mathematics, Jains, Gems, Literature