காளிம்பன் வாழ்ந்த தொண்டை மண்டலம்! (Post.11,288)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,288

Date uploaded in London – –    23 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 28

காளிம்பன் வாழ்ந்த தொண்டை மண்டலம்!

ச.நாகராஜன்

காளிம்பன் என்ற வேளாள குல  பிரபு ஒருவன் யானை சேனையுடன் புகழ் பெற்று தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வந்தான்.

 அவனை ஒரு புலவர் அற்புதமாக ஒரு பாடலைப் பாடிப் புகழ்ந்தார்.

அந்த சிறப்புடைய பாடலை ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் தமிழ் இலக்கண  நூல் உதாரணப் பாடலாக எடுத்துக் காட்டியது.

அந்தப் பாடல் வருமாறு:-

விடஞ்சூழரவி னிடைநுடங்க வில்வாள் வீசி வெறியார் வேங்

கடஞ்சூழ் நாடன் காளிம்பன் கதிர்வேல்பாடு மாதங்கி

வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம் வடிக்கணீல மலர்தாந்தா

தடந்தோளினைமேல் வேய்தாந்தா மென்னுந்தன்கைத் தண்ணுமையே

இப்படிப்பட்ட அருமையான பிரபுவாகிய காளிம்பனைத் தன்னிடத்தே கொண்டதும் தொண்டை மண்டலம் தான் என தொண்டை மண்டல சதகம் தனது 28ஆம் பாடலில் கூறிப் புகழ்கிறது.

பாடல் இதோ:

இடஞ்சூழுங்காரிகை யாப்பிற்குதாரண மென்றுகொண்ட

விடஞ்சூழரவென் றெவாயிற்றோற்றி வெறிகமழ்வேங்

கடஞ்சூழ்கரடக் கடாக்களிற்றானியற் காளிம்பன்மேல்

வடஞ்சூழெனச்சொன்ன பாமாலையுந்தொண்டை மண்டலமே

பாடலின் பொருள்;

தமிழ் உலம் அனைத்திலும் சூழ்ந்திருக்கின்ற யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூலில் உதாரணமாக எடுத்தாளப் பட்ட பாடலான

‘விடஞ்சூழரவு’ என்று  தொடங்கி ‘வடஞ்சூழ்’ என்பதைப் பின்னால் கொண்டு முடிந்த பாடலானது பழமை வாய்ந்த புலவர் ஒருவரால்  பாடப்பெற்றது. அந்தப் பாமாலையைப் பெற்ற, மதம் பொருந்தித் தன் நிழலைச் சூழ்ந்து மலையும் கடாக் களிற்றுச் சேனையை உடையவனும் வேங்கட மலையைச் சூழ்ந்த தமிழ் நாட்டுக்கு அதிபனுமாகிய ‘காளிம்பன்’ என்னும் இயற்பெயரை உடைவனும் தொண்டை  வேளாளப் பிரபுக்களில் ஒருவனேயாம்.

ஒரு பிரபுவை தமிழ்ப் புலவர் அருமையாகப் பாட, அந்தப் பாடலை தமிழின் சிறந்த இலக்கண நூல்களுள் ஒன்றான யாப்பருங்கலக்காரிகை உதாரணச் செய்யுளாக எடுத்துக் காட்ட, அப்படிப்பட்ட புலவரையும், புலவர் பாடிய வள்ளலையும் கொண்டது தொண்டை மண்டலம்!

***

புத்தக அறிமுகம் – 65

விந்தை மனிதர்கள்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.மேஜிக் மன்னன் ஹௌடினி

 2.மேஜிக் நிபுணர் அலெக்ஸாண்டர் ஹெர்மன்

 3.ஸ்டாலினை மயக்கிய விந்தை மனிதர் வுல்ப் மெஸ்ஸிங்

 4.ரஷிய சாமியார் ரஸ்புடீன்

 5.அற்புதமனிதர் எட்கர் கேஸ்

 6.மெஸ்மரிஸத்தை உருவாக்கிய மேதை மெஸ்மர்

 7.சைக்கோ சிகிச்சையின் தந்தை க்விம்பி

 8.வெறும் கத்தியால் ஆபரேஷன் செய்தவர் – அரிகோ

 9.அந்தரத்தில் மிதக்கும் அற்புத மனிதர் ஹோம்

10.ஆவிகளைக் காட்டிய அதிசய மனிதர் – எக்லிங்டன்

11.உடலை விட்டு உயரே உலவியவர் – முல்டூன்

12.காலத்தை வென்ற ஓவியர் – லியனார்டோ டா வின்சி

13.ஒரு லட்சம் ஜாதகங்களை ஆராய்ந்தவர் – மைக்கேல்

14.கைரேகை மூலம் எதிர்காலம் சொன்னவர் – சீரோ

15.007ன் மூலகர்த்தா- விந்தை ஜோதிடர் ஜான் டீ

16.உலக பலன்களை விளக்கியவர் – நாஸ்டர்டாம்

17.சைக்கிக் டிடெக்டிவ் – நெல்ஸன் பால்மர்

18.பெண்டுலம் மூலம் கொலையைத் தடுத்து நிறுத்தியவர்- ராபின் வின்போ

19.அதிசய சம்பவங்களை ஆராய்ந்தவர் – சார்லஸ் ·போர்ட்

20.யூரி கெல்லர் – பார்வையாலேயே ஸ்பூனை வளைப்பவர்

21.நெப்போலியனை பிரமிக்க வைத்த பெண் -ஆருட ராணி லெனார்மனா

22.கென்னடி கொலையை முன்கூட்டியே சொன்னவர்- ஜீன் டிக்ஸன்

23.ஆவிகளின் தோழிகள்-·பாக்ஸ் சகோதரிகள்

24.விஞ்ஞானியை வியக்க வைத்தவர்- ·ப்ளோரன்ஸ் குக்

25.மேடம் ப்ளாவட்ஸ்கி – தியாஸபிகல் சொஸைடியை நிறுவியவர்

26.பெட்டி ஷைன் – கால்பந்து வீரர்களைக் காப்பவர்

27.ஜோன் குய்க்லி – ரீகனின் ஜோதிடர்

28.ஜோயன்னா சௌத்காட் – சுவர்க்கத்திற்கு பர்மிட் வழங்கியவர்

*

நூல் பற்றிய சிறு குறிப்பு இது :

அதிசயங்கள் கோடி உள்ள அண்டத்தில் மனிதன், இறைவனின் மகத்தான படைப்பு! ஐம்புலன்களால் அவன் ஆற்றும் செயல்கள் பிரமிப்பைத் தருகின்றன! ஆனால் ஐம்புலன்களையும் மீறிய விந்தைகளை நிகழ்த்தும் மனிதர்களைப் பற்றி அறியும்போதோ பிரமிப்பின் உச்சத்திற்கே நாம் செல்கிறோம்! இப்படிப்பட்ட 28 பேரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விந்தை மனிதர்களாகத் திகழ்வதற்கான காரணத்தையும் விளக்கும் விந்தை நூல் இது! தமிழில் இதுவரை வெளிவராத புதிய விஷயங்களைக் கொண்டுள்ள நூல்!! அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருப்பதைத் தனது அணிந்துரையில் தமிழறிஞர் திரு சு.ஸ்ரீபால் அவர்கள் பாராட்டியுள்ளார்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். விந்தை மனிதர்கள் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

KARI for Elephant is Not a Tamil Word?-Part 3 (Post No.11,287)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,287

Date uploaded in London – 22 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

We have seen so far, the oldest image of Elephant is in India (Indus- Saraswathi River basin civilization) and the oldest word for Elephant is in the Rig Veda, the oldest book in the world.

We have also seen that the word Elephant is derived from Sanskrit Ibha, that became erepa in Phoenician, elepas in Greek and Latin and Ibha in Tamil (see 500 year old Tiruppugaz of Arunagirinathar and older literature). We also saw that Karin is found in older Sanskrit literature.

Now I add more points from the most famous Tamil work Tirukkural of Tiruvalluvar:

Elephant is used by the poet at least in 8 places-

Kural – 500, 597, 599, 678, 758, 772, 774 and 1087

A fierce elephant that has faced lancers, can be foiled by a fox, if it is struck in a marshy ground – 500

Here Tiruvalluvar uses the animal fables such as Panchatantra and Hitopadesa to teach us that cunningness can defeat even the most powerful person. Great Hindu heroes like Veera Vallala were defeated by Sultans’ cunningness. Veera Sivaji used the same tactics to defeat the Moghul kings and Sultans

Though wounded with arrows, the elephant stands firm in his greatness; he who has spirit never loses heart when he fails- 597

Through elephant, the poet teaches us a lesson; Forward ever, Backward never.

The elephant is huge and has big tusks; but assailed by the tiger, he flinches in fear- 599

Ancient Tamil land was greener than today. Thick forests occupied in the west of Tamil Nadu. So poets know about the fights in forest.

A tame elephant is employed to ensnare a wild one. So make one action the means of achieving another- 678

This is a good lesson. Attract someone with something.

The oldest reference to this is available Kautilya’s Artha shastra; later we find it in 2000 year old Akananuru. Paranar gives some interesting information about catching elephants.  Some Tamil men used to visit prostitutes in the night. One woman accuses them of immoral behaviour and the news reaches the ears of that courtesan. Immediately she says, Let him come to this red light area; I will drag him by his neck chain and clothes and hug him and bind him with my plaited hair and imprison him in my chest, in front of his own woman,  like the Aryan trained women elephants catch the male elephants. If I don’t do it I will consider my mother has wasted her time in raising me.

Here we get the word Aryan trained female elephants. So it looks like North Indians used this technique first. Tamils used another technique to catch elephants, which is also described in the literature. They dug a big pit and hid it by covering it with bamboo sticks and leaves in their usual route. When they come to drink water, at least one of them will fall in the pit. Then they catch it and bring it home.

VALMIKI RAMAYANA

Valmiki also used it 3-56-31, 6-16-6

तत्रैनां तर्जनैर्घोरैः पुनस्सान्त्वैश्च मैथिलीम्।

आनयध्वं वशं सर्वा वन्यां गजवधूमिव।।3.56.31।।

Translation


तत्र there, सर्वाः all, एनां मैथिलीम् this Sita, घोरैः terrrific, तर्जनैः threatening, पुनः again, सान्त्वश्च by gently coaxing, वन्याम् wild, गजवधूमिव like a female elephant, वशम् under control, आनयध्वम् being her.


There you all bring her under control through forcing and cajoling as one would do to tame a wild she elephant.

shruuyante hastibhir giitaaH shlokaaH padma vane puraa |
paasha hastaan naraan dR^iSTvaa shR^iNu taan gadato mama || 6-16-6

“Previously in a forest called Padmavana, some maxims were spoken by elephants, which saw men with nooses in hand. Hear and I shall tell them.”

naagnirnaanyaani shastraaNi na naH paashaa bhayaavahaaH |
ghoraaH svaarthaprayuktaastu j~naatayo no bhayaavahaaH || 6-16-7

“For us, fire or weapons or nooses are not begetting fear. The terrific kinsmen, incited by selfishness are begetting fear to us.”

Xxx

Having Wealth is watching Elephant Fighting from High Hill

What is achieved by a man that has wealth is like witnessing a fight between elephants, having climbed to the top of a hill- 758

Tiruvalluvar himself should have watched such a fight in the thick of the forest. Ancient Hindu kings arranged fights between bulls, cocks and elephants ( I have published a picture of arranged elephant fight from an old English book in my blog)

This couplet comes under the topic ‘On Making Wealth’ .

Tiruvalluvar used elephants more than any other animal to teach us moral lessons and management lessons. No wonder he did it because the ancient Chera (Kerala) country was full of elephants. There is even a saying in Tamil that (Pandya country is famous for pearls, Choza country is famous for food (rice) and Chera country is famous for Elephants.2000 year old Sangam poets also used this animal more than others.

The poet compares the safety and security of a person getting down to a business enterprise, with the full backing of limitless financial resources behind him, without any risks in the undertaking, to the person on the hill watching the fighting elephants.

The chief advantage of wealth is the security it gives

xxx

Aim High

Tiruvalluvar give us a management lesson. Think like Ambani and Adani and achieve it; think like Tata, Birla, Goenka and Mittal and achieve it ; even if you fail in it, you don’t lose much; always Aim High is his lesson taught through elephants.

To hold a lance aimed at an elephant and miss it better than an arrow that has hit a hare in the forest- 772

Having thrown his spear at an elephant, he is delighted to pull out the spear struck in his own body- 774.

Both these couplets occur under the topic Valour. The poet is taking us to a battle field where a hero is facing an elephant brigade. The whole world knows that Hindus invented Chess game (Chatur Anga= Four Fold army) on the basis of four fold army – Ratha Gaja Turaga Pathaathi- Chariot, Elephants, Horse, Footmen (soldiers).

Think big and get it done is the lesson, we learn from the elephants.

For the Kural couplet 774 ,Dr S M Diaz, IG of Police, Tamil Nadu, gives us more information in his beautiful English commentary on Tirukkural.

His translation is

A soldier’s javelin wounded an elephant, which ran away with it, but looking around for a weapon,

He spotted another javelin stuck in his own body and smilingly retrieved it.

Diaz adds

Rajaji (First Governor General of India) interprets it

“The hero hurls his javelin at the attacking elephant, which runs away with the javelin sticking to its body. He then looks about for a fresh weapon, with which to receive the next elephant. At that time, he realises for the first time, that a javelin has pierced him  and is sticking in his own body, without his having known it. Smiling at joy in finding a weapon, he plucks it out and arms himself with it.

Tamil Nadu Police Medal

IPS officer Diaz adds,

“In  this connection, I recollect some pride, that I was instrumental in helping to fabricate the design of the Chief Minister’s Police Medal on instructions from the then Chief Minister, representing the soldier plucking his steel from his own body and standing ready to face the next elephant. This medal is awarded every year for gallantry to policemen on September 15.

xxx

The bodice that her well formed bosom is the cloth that covers the eyes of an elephant in a rut- 1087

This is poet Kalidasa’s favourite image as well.

In the foot note on this couplet V V S Iyer records:

But for the vestment (covering her beauteous breasts) men would be smitten by her beauty and die. It is usual for mahouts to cover with  metal plates the eyes of the elephants, which are expected to become rabid.

Diaz adds

By drawing a veil across the full and beautiful breasts of the young lady , Valluvar enhances the beauty and aesthetics of the female form. On the other hand , Kalidasa, in Sakunthalam, does the opposite. In the first clandestine view by Dushyanta of Sakunthala, her garments are loosened by a lady attendant, and the breasts are brought into his clear view.

To be continued………………………………..

 Tags- Elephant fights, Tirukkural, Rut, S M Diaz, Valmiki, Elephant catching, Kautilya

செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு! (Post No.11,286)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,286

Date uploaded in London – –    22 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  மானேஜ்மெண்ட் வழிகள்!

செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு!

 ச.நாகராஜன்

நாம்சென் பள்ளத்தாக்கில் ஒரு குடிசையில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர்.

கணவன் ஹூ சாங் எப்போதும் புத்தகம் படித்த வண்ணமாகவே இருப்பார். நல்ல அறிவாளி. ஏழு வருடங்கள் இப்படி கழிந்தன.

ஒரு நாள் ஹூவின் மனைவி அவரிடம் வந்தாள்.

 “இதோ பாருங்கள்! இனி மேல் என்னால் முடியாது! உங்கள் புத்தகப் படிப்பால் பயன் என்ன? எனது இளமையெல்லாம் வீணாகப் போய் விட்டது. மாற்றிக் கொள்ள ஒரு ரவிக்கையும் கிடையாது. உள்ளாடையும் கிடையாது. மூன்று நாட்களாக எனக்கு உணவும் இல்லை. இனிமேல் என்னால் முடியாது! என்ன செய்வது, சொல்லுங்கள்?” என்றாள் அந்தப் பெண்மணி.

 இதைக் கேட்டவுடன் தனது புத்தகத்தை மூடினார் ஹூ.

தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். ஒரு முடிவுக்கு வந்தவர் போல திடீரென்று எழுந்த அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் வெளியே கிளம்பினார்.

நகரின் மையப் பகுதிக்கு வந்த அவர் அங்கு சென்ற ஒருவரைப் பார்த்து வணங்கினார்.

“ஐயா! இந்த நகரில் பெரிய பணக்காரர் யார்? தயவு செய்து சொல்லுங்கள்” என்றார்.

 கேள்வி கேட்டவரை விநோதமாகப் பார்த்த அந்த வழிப்போக்கர்,

“ஐயா! நீர் எந்த ஊர்? இப்படி ஒரு கேள்வியை இங்கு நின்று கொண்டு கேட்கிறீர்கள்! இதோ, எதிரில் பாருங்கள். ஜொலிஜொலிக்கும் மாபெரும் மாளிகையை! இங்கு தான் ஊரின் பெரிய செல்வந்தர் வசிக்கிறார். அவரைப் பார்க்க 12 வாயில்களைக் கடந்து போக வேண்டும்” என்று சொன்னார்.

 அவருக்கு நன்றி தெரிவித்த ஹூ 12 வாயில்களைக் கடந்து செல்வந்தர் பேட்டி கொடுக்கும் பெரிய அறைக்குச் சென்றார்.

 செல்வந்தரைப் பார்த்து வணங்கிய ஹூ, “ஐயா! வணக்கம்! எனக்கு பத்தாயிரம் யாங் வேண்டும். ஒரு நல்ல வியாபாரத்தைத் தொடங்கப் போகிறேன். அதை உங்களுக்கு விரைவில் திருப்பித் தந்து விடுவேன்”

என்றார்.

 செல்வந்தர் ஒரு கணம் கூட தாமதிக்காமல், “தருகிறேன். யாரிடம் எப்போது தர வேண்டும்?” என்று கேட்டார்.

“உடனேயே தாருங்கள். அந்தப் பணத்தை சந்தையில் உள்ள பெரிய கமிஷன் வியாபாரிடம் தந்து விடுங்கள். அவரை நான் பார்க்கிறேன்”

என்றார் ஹூ.

 “இதோ உடனேயே சந்தையில் பெரிய கமிஷன் வியாபாரியான கிம்மிடம் அதைத் தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார் செல்வந்தர்.

 “மிக்க நன்றி! அடிக்கடி வந்து பார்த்து உங்களைத் தொந்தரவு செய்ய  மாட்டேன். அடுத்து பணத்தைத் திருப்பிக் கொடுக்க வரும் போது பார்க்கிறேன்” என்ற ஹூ அவரை வணங்கி விட்டுச் சென்றார்.

 ஹூ சென்றவுடன் செல்வந்தரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நோக்கிச் சரமாரியாக கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

 “யார் இந்த ஆள்? இதுவரை இவரை யாருமே பார்த்தது கிடையாது.

பார்க்க மிகவும் சாதாரணமாக இருக்கிறார்! இவருக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இது சரியா!” என்று அவர்கள் கேட்டனர்.

 செல்வந்தர் பதில் கூறலானார்: ”இங்கு வருபவர்கள் எல்லாம் நெளிந்து குழைந்து உண்மையே இல்லாத வார்த்தையை எல்லாம் சொல்லி என்னைப் புகழ்ந்து பின்னர் பணத்தைக் கேட்பார்கள். இதோ வந்தாரே, அவரது முகத்தில் உண்மை ஒளி வீசுகிறது. சொல்வதைச் செய்து காட்டுபவர் அவர். வளவள என்று பேசாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டியதைச் சொன்னார். பெற வேண்டியதைப் பெற்றார். பாருங்கள், கூடிய விரைவில் இந்த நகரிலேயே பெரிய வணிகராக அவர் திகழப் போகிறார்”

 பல பேரைத் தினமும் பார்க்கும் செல்வந்தரின் கணிப்பு படியே

நடந்தது.

வணிகத்தில் துணிந்து செயலாற்றிய ஹூ பெரும் லாபத்தைப் பெற்றார். கடனைத் திருப்பிச் செலுத்தினார்.

அவரது மனைவி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

 சரி, இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

 ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது துணிவுடன் அதில் இறங்கி முனைப்புடன் செயலாற்றுங்கள் (Enter Action With Boldness) என்பது தான் நீதி!

 ‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)

Enter Action With Boldness) என்பது தான் அவர் கூறும் இருபத்தி எட்டாவது விதி!

**

புத்தக அறிமுகம் – 64

சிறுவர் புராணக் கதைகள்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.  துருவன்

2. பிரகலாதன்

3. பகீரதன்

4. ஸ்ரீ கிருஷ்ணர்

*

நூல் பற்றிய சிறு குறிப்பு இது :

இந்துப் புராணங்கள் தங்கச் சுரங்கங்கள்! வற்றாத ஜீவ நதிகள்! இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைகளை இந்நூலில் காணலாம். திட உறுதிக்கு உதாரணமான துருவன், பக்திக்கு உதாரணமான பிரகலாதன், விடாமுயற்சிக்கு உதாரணமான பகீரதன், வாழ்க்கையை முறையாக வாழக் கீதை மூலம் பாதை வகுத்துத் தந்த அவதார புருஷன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆகியோரின் வரலாறுகளைப் புராணத்தின் மூலத்திலிருந்து வழுவாமல், சுவையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் சிறுவர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே ஏற்றது!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சிறுவர் புராணக் கதைகள் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

KARI for Elephant is Not a Tamil Word? Part 2 (Post No.11,285)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,285

Date uploaded in London – 21 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 Elephant is one of the animals mentioned a lot in Tamil literature. There is a special genre called Barani, which is sung only on a hero who killed 1000 elephants. It is an exaggeration, and the real meaning is one who has encountered many elephants in aa battle. Kalingathu Barani in Tamil describe it in detail.

We have also read about the Huna king Mihirakula whose hobby is to drive elephants to the edge of mountain cliff and happily watching their rolling down the hills and broken into pieces.

Another thing mentioned in our literature is kings watching pre -arranged elephant fighting in the vast play ground; he used to sit on a high and safe stage with his paraphernalia and watch it.

Natural fights between elephant and tiger or lion in the dense and thick forest are described in Tamil literature.

Magesthenes’ account of catching the elephants agrees with the present practice. ‘Catching an elephant with an elephant’ is a phrase used by Chanakya and Tiruvalluvar in their books. They use a female elephant to lure a male elephant.

Appolonius of Tyana in the close of the first half of our modern era, has give detailed description of Indian elephants. He found wild elephants from marsh as stupid and idle while those from plains were useful animals, tractable and imitative. The later were taught to dance, to jump to the sound of pipe. He speaks very high about their docile nature, love for their keeper and how they would eat from their master’s hand like a dog and coax him with their trunks. He tells that at night these animals would moan piteously (quite different from their usual roar) to bewail their slavery.

According to Q.Curtius Rufus (41-54 CE) the elephants of India are more tamed than those tamed in Africa and their size corresponds to their strength. Pliny agrees with Curtius and notes that India produced the largest elephants. Arrian describes the modes in which they are hunted. Polybius says that the African elephants would neither endure the smell nor the trumpeting of their Indian congeners….

Xxx

Elephant in Amarakosa

The oldest thesaurus in the world is Amarakosa in Sanskrit. It is at least 2000 year old. It has the following information on elephant:-

२.७.१०००)  दन्ती दन्तावलो हस्ती द्विरदोऽनेकपो द्विपः

(२.७.१००१)  मतङ्गजो गजो नागः कुञ्जरो वारणः करी

(२.७.१००२)  इभः स्तम्बेरभः पद्मी यूथनाथस्तु यूथपः

(२.७.१००३)  मदोत्कटो मदकलः कलभः करिशावकः

(२.७.१००४)  प्रभिन्नो गर्जितो मत्तः समावुद्वान्तनिर्मदौ

(२.७.१००५)  हास्तिकं गजता वृन्दे करिणी धेनुका वशा

(२.७.१००६)  गण्डः कटो मदो दानं वमथुः करशीकरः

(२.७.१००७)  कुम्भौ तु पिण्डौ शिरसस्तयोर्मध्ये विदुः पुमान्

(२.७.१००८)  अवग्रहो ललाटं स्यादीषिका त्वक्षिकूटकम्

(२.७.१००९)  अपाङ्गदेशो निर्याणं कर्णमूलं तु चूलिका

(२.७.१०१०)  अधः कुम्भस्य वाहित्थं प्रतिमानमधोऽस्य यत्

(२.७.१०११)  आसनं स्कन्धदेशः स्यात्पद्मकं बिन्दुजालकम्

(२.७.१०१२)  पार्श्वभागः पक्षभागो दन्तभागस्तु योऽग्रतः

(२.७.१०१३)  द्वौ पूर्वपश्चाज्जङ्घादिदेशौ गात्रावरे क्रमात्

(२.७.१०१४)  तोत्रं वेणुकमालानं बन्धस्तम्भेऽथ श‍ृङ्खले

(२.७.१०१५)  अन्दुको निगडोऽस्त्री स्यादङ्कुशोऽस्त्री सृणिः स्त्रियाम्

(२.७.१०१६)  दूष्या (चूषा) कक्ष्या वरत्रा स्यात्कल्पना सज्जना समे

(२.७.१०१७)  प्रवेण्यास्तरणं वर्णः परिस्तोमः कुथो द्वयोः

(२.७.१०१८)  वीतं त्वसारं हस्त्यश्वं वारी तु गजबन्धनी

Amarasimha, the author of the lexicon, lists the names of elephant, its rut, furiousness, female elephant, and then its temporal juice, water emitted from its trunk. Then he describes its frontal globes, forehead, eye ball root of  ear, corner of its eye, part below the frontal globes, tusks, marks on its face, shoulder, and thigh.

He even goes into the details of pike to drive him, hook to guide him, post to which he is secured, chain for his feet, leather girt, dressing an elephant, its stable etc.

No language has such a unique thesaurus/ lexicon. Tamils followed Amarasimha and composed their so called Tamil Nikandus, but with lot of Sanskrit words.

There are over 100 proverbs on elephants in Tamil.

To be continued………………………

 Tags- Amarakosa, Amarasimha, Elephant, catching, Greek view, Karin, Tamil word

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)- Post No.11284

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,284

Date uploaded in London – 21 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா) பெண்கள் -7 (இறுதிப் பகுதி)

அபூர்வமாக பெண்ணே வேறு ஒரு ஆடவனுடன் சேர்ந்ததை அஹல்யா- இந்திரன் சம்பவத்தில் காணலாம் . அஹல்யா தெரிந்தே தவறு செய்கிறாள்

பெண்கள் தவறு செய்ததாக வரும் பகுதி மிகமிகக் குறைவு; அப்படி நேர்ந்ததையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதி அதை இன்றும் புராண , இதிகாசங்களில் நம்மை வாசிக்க வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் . இதில் இரண்டு உண்மை நமக்குத் தெரிகிறது

1.புராண, இதிஹாங்கள் அனைத்தும் உண்மையே. அவர்கள் கசப்பான உண்மைகளைக் கூட மறைக்கவில்லை. அப்படி மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இதை மறைத்து இருப்பார்கள். அது மட்டுமல்ல. அந்த அ ஹல்யாவும் , தனது தவறுக்கு வருந்தி தண்டனையை ஏற்றுக்கொண்டதால் இன்றுவரை உதாரணமான பெண்மணிகளின் பெயர்களில் அவள் பெயரையும் சேர்த்து போற்றி வணங்குகின்றனர் .

அஹல்யாத்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

இரண்டாவது உண்மை, இது மற்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் எச்சரிக்கை! ஏனெனில் தவறிழைத்த இந்திரனும் தண்டிக்கப்பட்டான் . யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல பெரியோரும்கூட தவறு செய்ய முடியும். துர்கா சப்த ஸ்லோகீயின் முதல் ஸ்லோகம் இதற்கு உதாரணம். ஞானிகளையும் கூட (அவர்கள் அகந்தை காரணமாக) ஒரு நிமிடத்தில் துர்கா தேவி விழுத்தாட்டிவிடுவாளாம் .ஞானீனாம் அபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா

பலாத் ஆக்ருஷ்ய மோஹயா மஹாமாயா பிரயச்சதி

XXX

EVERY SINNER HAS A FUTURE; EVERY SAINT HAS A PAST

ஒவ்வொரு ‘பாவி’க்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு

ஒவ்வொரு முனிவனுக்கும் (தவறான) கடந்த காலமும் உண்டு –என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

இந்து மதத்தில் பாவமன்னிப்பு உண்டு என்பதற்கு அஹல்யா, அஜாமிளன் கதைகள் உதாரணம்.

XXXX

அஹல்யா சம்பவம் குறித்து வால்மீகி சொல்வதைக் காண்போம்:

1-48-18/19

ஓ பேரழகியே !ஆசைவயப்பட்டவர்கள் மாதவிலக்கு காலம் முடிவதற்காக காத்திருக்க மாட்டார்கள் ( குழந்தை பெறுவதற்கு உரிய தருணத்துக்காக); அழகிய இடை உடைய பெண்ணே நாம் இருவரும் சேருவதை நான் விரும்புகிறேன் — என்று இந்திரன் கூறுகிறான்.

ऋतुकालं प्रतीक्षन्ते नार्थिनस्सुसमाहिते

सङ्गमं त्वहमिच्छामि त्वया सह सुमध्यमे।।

ருது காலம் ப்ரதீக்ஷந்தே நார்த்தி நஸ் ஸுஸமமாஹிதே

ஸங்கமம் த்வஹம் இச்சாமி த்வயா  ஸஹ ஸுமத்யமே  (வா.ரா) 1.48.18

सुसमाहिते சமமான உறுப்புகளை உடைய அழகியே!, अर्थिन:ஆசை வயப்பட்டவர்கள் , ऋतुकालम् ருது காலம் வரும்வரை , न प्रतीक्षन्ते காத்திருக்கமாட்டார்கள் , सुमध्यमे அழகிய இடை உடையவளே , अहम् I, त्वया सह நான் உன்னோடு  सङ्गमम् இணைவதற்கு , इच्छामि ஆசைப்படுகிறேன்.

XXXX

ரகு நந்தன! இந்திரன்தான் சந்நியாசி வேடத்தில் வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் அவனுடன் கூட விரும்பினாள்

मुनिवेषं सहस्राक्षं विज्ञाय रघुनन्दन।

मतिं चकार दुर्मेधा देवराजकुतूहलात्।।1.48.19

முனிவேஷம் ஸஹஸ்ராக்ஷம்  விக்ஞாய ரகுநந்தன

மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் –1.48.19

रघुनन्दन ராமா , दुर्मेधा: தீய எண்ணம் கொண்ட , मुनिवेषम् முனிவர் வேடத்திலுள்ள , सहस्राक्षम् கண்ணாயிரம்/ இந்திரன் , विज्ञाय என்பதை அறிந்தும் , देवराजकुतूहलात् வானுலக வேந்தனின் ஆசைக்கு , मतिं चकार இணங்கிணாள் .

Xxx

விதவையர் வாழ்வு

கணவனை இழந்தோர், விரத வாழ்வு கடைப்பிடித்தனர். தலைவாரி பூச்சூட வில்லை. அணிகலன்களை அணியவில்லை. ஆயினும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் .பட்டாபிஷேகம், திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய அனைத்திலும் அவர்களும் பங்கு கொண்டதை வா. வருணிக்கிறார்.

na paryadevanvidhavA na cha vyAlakR^itaM bhayam |

na vyAdhijaM bhayan vApi rAme rAjyaM prashAsati || 6-128-99

ந பர்யதேவன் விதவா  ந ச வ்யாலாக்ரிதம்  பயம்

ந வ்யாதிஜம் பயன் வாபி ராமே ராஜ்யம் ப்ரஷாசதி 6-128-99

99. ராமே = ராமன் ; ப்ரஷஸ்தி = ஆட்சிபுரிகையில் ; ராஜ்யம் – அந்த நாட்டில்  ந விதவாஹா பர்யதேவன் ;  வருத்தம் அடைந்த விதவைகள் எவருமிலர்.;ந பயம் ஆஸீத் -பயம் என்பதே இல்லை ; வ்யாலாக்ரிதம் – வன விலங்குகளிடமிருந்து; ந பயம்- அச்சமே இல்லை. வ்யாதிஜம் -நோய்களிடம் இருந்தும் (பயமில்லை)’

கெளசல்யா தேவிக்கு ராம , லட்சுமண, சுக்ரீவன் ஆகியோர் உரிய மரியாதை செலுத்தும் காட்சி வா.ரா.வில் இருப்பதால் விதவைகள் புறக்கணிக்கப்பட்ட வில்லை என்பதை அறிய முடிகிறது.

–subham—

TAGS- ராமாயணம் , (வா.ரா) ,பெண்கள் ,பஞ்ச கன்யா ஸ்லோகம்

அறிவியல் அறிஞர் வாழ்வில்!-10 (Post No.11,283)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,283

Date uploaded in London – –    21 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்!  10

ச.நாகராஜன்

19

ஆவி உலகத்தை ஆராய்ந்த விஞ்ஞானி வாலஸ்!

ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russel Wallace பிறப்பு 8-1-1823 மறைவு 7-11-1913) பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்ததில் முக்கியமான விஞ்ஞானி. இவர் சார்லஸ் டார்வினின் சம காலத்தவர். பெரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு இவர் ஆவி உலகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். வியக்க வைக்கும் பல அனுபவங்களையும் பெற்றார்.

1869ஆம் ஆண்டு வாலஸை அவரது நண்பரான ராபர்ட் சேம்பர்ஸ் (Robert Chambers) என்பவர், மிகப் பணக்காரப் பெண்மணீயான மிஸ் டக்ளஸுக்கு  (Miss Douglas) அறிமுகப்படுத்தி வைத்தார்.

மிஸ் டக்ளஸ் ஆவி உலகத் தொடர்பில் ஆர்வம் உள்ளவர். லண்டனில் சவுத் அட்லி தெருவில் உள்ள அவரது வீட்டில் இப்படி ஆவி உலக சம்பாஷணைகள் அடிக்கடி நடைபெறும்.

ஒரு நாள் நடைபெற்ற சம்பவம் இது:

ஹாஸ்க்ஸ்பி (Haxby) என்ற ஒரு இளைஞர் தபால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். அவர் ஒரு சிறந்த மீடியம் – ஆவிகளுடன் பேசுபவர்.

ஒரு நாள் ஆவி ஒன்றிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் திரைச்சீலை நடுவிலிருந்து தலைப்பாகையுடன் பெரிய டர்பன் அணிந்து வெள்ளை வெளேரென செருப்பு அணிந்த கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெரிய உருவம் தோன்றியது. அந்த அறையில் அங்கும் இங்கும் அது சென்றது. சுற்றிச் சுற்றிப் போகின்ற போது பெரிய இசைப்பெட்டியைத் தூக்கியது. தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆடியது. ஒவ்வொருவர் அருகிலும் வந்து வணங்கியது. தனது ஆடைகளையும் கையையும் தொட்டுப் பார்க்கவும் அனுமதித்தது.

அனைவரும் அந்த உருவத்தை கதவு அருகில் நிற்கச் சொன்னார்கள். அந்த உருவத்தின் உயரம் குறிக்கப்பட்டது.

பின்னர் ஹென்ஸ்லீ வெட்ஜ்வுட் (Hensleigh Wedgwood) என்பவர் செருப்பை அளக்கும் ஒரு ஸ்கேலை எடுத்துக் கொண்டு வந்து அந்த உருவத்தை ஒரு நாற்காலியில் அமரச் செய்து செருப்பைக் கழட்டி விட்டு அதன் காலைச் சுற்றி மார்க் செய்தார்.

நெடு நேரம் பேசிய பின்னர் அந்த ஆவி அங்கிருந்து சென்றது.

உடனே அனைவரும் ஆவியுடன் பேசிய மீடியமான ஹாக்ஸ்பியை உட்காரச் சொல்லி அவரது காலைச் சுற்றி மார்க் செய்தனர்.

ஆவியின் காலடிச் சுவடு அளவானது மீடியமாக இருந்த ஹாக்ஸ்பியின் காலடி அளவை விட ஒன்றே கால் அங்குலம் அதிகமாக இருந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

அதே போல கதவருகில் குறிக்கப்பட்ட உயரமானது மீடியமான ஹாக்ஸ்பியின் உயரத்தை விட ஆறு அங்குலம் அதிகமாக இருந்தது.

அறையின் கதவும் ஜன்னலும் நன்றாக மூடப்பட்டு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் அந்த ஆவி உலகப் பேச்சு உண்மை தான் என்பதை நிரூபித்தது.

என்றாலும் கூட விஞ்ஞானியாக இருக்கும் வாலஸ் இதையெல்லாம் நம்பக் கூடாது என்று அவரது நண்பர்கள் பலர் கூறினார்கள். ஆனால் வாலஸோ தன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். அவர் எழுதிய தி ஸயிண்டிஃபிக் ஆஸ்பெக்ட் ஆஃப் தி சூப்பர்நேச்சுரல்’ (The Scientific Aspect of the Supernatural) என்ற புத்தகம் புகழ்பெற்ற ஒரு நூல்!

20 

மனதில் கேட்ட கேள்விகளுக்கு விடையைப் பெற்ற விஞ்ஞானி!

 ஆவி உலகம் என்று ஒன்று உண்டு; ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாம் என நம்பிய விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தகுந்த பலரில் ஒருவர் செயிண்ட் ஜார்ஜ் ஜாக்ஸன் மிவார்ட்! (St. George Jackson Mivart பிறப்பு 30-11-1827 மறைவு 1-4-1900). லண்டனில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு உயிரியல் நிபுணர். இறை நம்பிக்கை உடையவர்.

மிவார்ட், ‘தி ஸயிண்டிஃபிக் ஆஸ்பெக்ட் ஆஃப் தி சூப்பர்நேச்சுரல்’ (The Scientific Aspect of the Supernatural) என்ற புத்தகத்தை எழுதிய விஞ்ஞானி வாலஸின் நண்பர். அந்த நூலை ரசித்துப் படித்தவர்.

இந்தப் புத்தகத்தால் கவரப்பட்ட அவர் தானே ஆவி உலக ஆராய்ச்சியில் ஈடுபடலானார்.

1878ஆம் ஆண்டு, குளிர்காலம். இடம் : இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரம்.

வாலஸுக்குத் தெரிந்த திருமதி குப்பி ( Mrs Guppy) என்ற ஒரு மீடியம் தனது கணவருடன் அங்கு வாழ்ந்து வந்தார்.

குப்பிக்கு வாலஸ் தனது நண்பரான மிவார்ட் பற்றிய அறிமுகக் கடிதம் ஒன்றையும் கொடுத்து அனுப்பி இருந்தார்.

மிவார்ட் மூன்று முறை குப்பியுடன் ஆவி உலகத் தொடர்பைக் கொண்டார்.

முதல் முறையில் மிவார்ட் பல கேள்விகளை தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டார். அதற்கான விடைகளை ஆவி உலகிலிருந்து பெற்றார். இது வெகுவாக அவரை ஆச்சரியப்படுத்தியது.

இன்னொரு முறை இந்த ஆவி உலகத் தொடர்பு ஒரு இருட்டறையில் நடைபெற்றது. திடீரென்று அந்த அறையில் மர்மமான முறையில் மலர்கள் தோன்றின.

வாலஸுக்கு எழுதிய கடிதத்தில் மிவார்ட் எழுதினார் இப்படி: “அறைக் கதவு மூடி இருந்தது. அறை நன்றாக சோதனை செய்யப்பட்டிருந்தது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நான் ஆச்சரியமே படவில்லை. ஏனெனில் உங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் இது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நிகழ்வு என்னை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. ஒரே ஒரு தரம் பார்த்த உண்மை நூறு தடவை பார்த்ததற்குச் சமம்!”

இந்தக் கடிதத்தில் மிவார்ட் தனது பல முடிவுகளை வாலஸுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.

அவற்றில் முக்கியமானவை :

“1) எனக்கு இதுவரை தெரியாத,  புலன்கள் மூலமாக உணரத்தக்க பல பொருள்களை எடுத்துச் செல்லும் ஒரு புது சக்தியைப் பார்த்தேன்.

2) நேரில் உதவும் உதவியாளர்களைத் தவிர்த்து அப்படி இல்லாமல் தானே பலவற்றைச் செய்யும் ஒரு அறிவையும் பார்த்தேன்.

3) இந்த ஆவி உலகத் தொடர்பு நிகழ்வுகளில் எனது மனதில் உள்ளதை அறியக் கூடிய ஒரு அறிவார்ந்த சக்தியும் தன்னை எனக்குக் காட்டியது.

சில வருடங்களுக்குப் பிறகு மிவார்ட் பிரான்ஸில் உள்ள லூர்தூஸுக்கு சென்றார். அங்கு நிகழும் கன்னி மேரி நிகழ்த்தும் அற்புதங்களையும் ஆராய ஆரம்பித்தார்.

21

காயத்ரி மந்திரத்தின் பெருமையைக் கூறிய விஞ்ஞானி

இந்திய நாட்டைப் பெரிதும் மதித்து நேசித்த பெரிய விஞ்ஞானி ஜே.பி.ஹால்டேன் (J.B.Haldane பிறப்பு 5-11-1892 மறைவு 1-12-1964).

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஹால்டேன். ஜாக் என்ற செல்லப் பெயரால் அனைவராலும் அறியப்பட்டவர்.

அவர் உயிரியலில் வல்லுநர். தாவர இயலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். 1917ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தியாவுக்கு வந்த அவர் இந்தியப் பண்பாடு, ஹிந்து மதம், இந்திய வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெரிதும் கவரப்பட்டார். இந்தியாவிற்கே போக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

லண்டன் யுனிவர்ஸிடி காலேஜிலிருந்து தனது பதவியை விட்டு விட்டு 1957ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர் 1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் காலமாகும் வரை இந்தியாவிலேயே இருந்தார்.

பிரிட்டனின் அரசியல் கொள்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. உலகெங்கும் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளும் போது கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக் காட்டுவது போல, இந்திய மொழிகளில் உள்ள இலக்கியத்திலிருந்து அனாயசமாக மேற்கோள்களை எடுத்து அள்ளி வீசுவார். கொல்கத்தாவில் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட்டில் அவருக்கு பணியாற்ற அழைப்பு வரவே அங்கு அவர் வந்தார்.

400 ஆய்வு பேப்பர்களையும் 24 புத்தகங்களையும் படைத்த அவர், “ஹிந்து  மதம் ஒரு அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருப்பது இந்தியர்களுக்கு ஒரு பெரிய வரபிரசாதமாகும்” என்று குறிப்பிட்டார்.

காயத்ரி மந்திரம் பற்றி அடுத்து அவர் சொன்ன கருத்து இந்து மதத்திற்கே பெருமை தரும் ஒன்றாகும்.

“காயத்ரி மந்திரத்தை ஓதுவது புவி, காற்று, வான் ஆகியவை பெருமை வாய்ந்தவை என்பதை நினைவுபடுத்துவதாகும். அவை பற்றி மிகுந்த சக்தியுடன் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நூற்றுக்கு ஒருவர் இதை ஓதினால் கூட போதும், இந்தியா அறிவியலில் உலகிற்கே தலைமை வகித்து நடத்தும்”

(Hinduism enjoins a scientific attitude and this is a great advantage for Indians in their approach to science. The repetition of Gayatri Mantra reminds one that earth, air, and sky are a glory and that it is one’s duty to think about them to the utmost of his power. If one out of hundred persons who repeat it would do the same, India would lead the world in science.

Science and the Enquiring Mind’, ‘The Hindustan Times’, May, 18, 1956)

காயத்ரி மந்திரம் பற்றி அவர் கூறிய பொன்மொழி :-

The Gayatri Mantra should be carved on the doors of every laboratory of the world“.

“காயத்ரி மந்திரம் உலகில் உள்ள ஒவ்வொரு லாபரட்டரியின் கதவுகளில் பொறிக்கப்பட வேண்டும்.”

***

புத்தக அறிமுகம் – 63

வெற்றிக்கலை!

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.வெற்றிக்கலை

 2.குறிக்கோள்

 3.நம்பிக்கை

 4.உற்சாகமே உயிர்

 5.மலர்ச்சி, மகிழ்ச்சி

 6.இனிமையான ஆளுமை

 7.ஒத்துழைப்பு

 8.சேமிப்பு

 9.கற்பனை வளம், மூளையின் நுட்பம்

10.ஒருமுனைப்படுத்தல்

11.சுயயோசனை

12.தலைமைப்பண்பு

13.தோல்வியில் துவளாமை

14.தன்னடக்கம்

15.ஆக்கபூர்வமான சிந்தனை

16.சரியான முடிவு எடுத்தல்

17.உடல் நலமும், ஓய்வும்

18.இறை நம்பிக்கை

19.பிரார்த்தனையின் வலிமை

20.ஊதியத்திற்கு மேல் உழைத்தல்

21.சகிப்புத்தன்மை

22.நேரத்தைப் பயன்படுத்தல்

23.நேரத்தைப் பயன்படுத்தல் -2

24.மறத்தலும், மன்னித்தலும்

25.வெற்றிக்கு உற்ற துணை

26.முடிவுரை

27.படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல்

*

நூல் பற்றிய சிறு குறிப்பு இது :

வெற்றி என்பது என்ன? அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல்! குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மேல் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர்.

இந்த நூலுக்கு முன்னுரை வழங்கி கௌரவித்திருப்பவர்

பிரபல டைரக்டரும் கதாசிரியரும் பாக்யா இதழின் ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள்.

அவர் தனது முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார். 

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். வெற்றிக்கலை நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

‘Kari’ for Elephant is Not a Tamil Word?-1 (Post No.11,282)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,282

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

WE HAVE AT LEAST 45 WORDS FOR ELEPHANT IN TAMIL NIKANDU/thesaurus (See My Earlier Article)

Since ancient Tamils considered Tamil and Sanskrit two eyes of the same man they never differentiated the two words in dictionaries and thesauruses.  There is no Tamil dictionary or nikandu/thesaurus without Sanskrit words. In fact, my research shows that there are more Sanskrit words in these so-called Tamil dictionaries.it shows Tamils considered both of them their own mother tongues. It is true with Tamil literature as well. They used both  the languages as if their own mother tongues. There is another reason which supports my theory that both the languages came from the same root;  devotees of Siva believe that both the languages came from the sound of kettle drum of Lord Siva

Kari in Tamil means charcoal or elephant. But other meanings such as hand, witness, black pepper, accusation are also there.

In Sanskrit Kaarin and Karin are used for elephant. And Hasti, Ibha, Gaja are also used.

Now the question is KARI  a Tamil word or not?

If we take it chronologically it comes first only in Sanskrit.

Wilson in his translation of the Rig Veda finds it in 4-34-3 of Rig Veda. Most famous Sanskrit lexicon/ thesaurus Amarakosa lists many names for elephant including Kari.

I can interpret it in two ways. The animal which is black (kari in Tamil) is Kari; so it is a Tamil world

The animal which has a prominent hand/trunk (Kara= Hand) is Karin; so it is Sanskrit.

One rare and interesting co incidence is both Kari in Tamil and Ibha in Sanskrit mean ‘Number Eight’ as well!

Kari is found in more ancient literature in Sanskrit. Mahabharata, Kiratarjuniya, Amarakosa etc and the authors used Karin for elephant.

In Tamil, Kari means Charcoal or that which is burnt to ash. For elephant, Sangam poets used Vezam, Yaanai, Kaliru and seldom used Kari.

xxx

Etymology of Elephant from Sanskrit

The English word Elephant is derived from Sanskrit ‘Ibah’, which is found in the Vedas. It changed to Erepa in Phoenician. R/L changes are seen through out the world. Panini was the first one to put it in grammar. Erepa became elepha in Greek and Latin. Elephant is a holy animal for Hindus .All the temples and Mutts do Go Puja (cow worship) and Gaja Puja (elephant worship). The oldest picture of elephant is in the Indus seal. That shows Hindus are the one who took it to different parts of the world. It is part of Chatur Anaga of army and Chaturanga/chess game as well.

Asvaghosa , who came after Kalidasa, also refers to elephants with the names , Gaja, Gajendra, Hasti, Kari, Karin , Kunjara, Kalabha, Vaarana, Naag, Rsabha, Dvipa and Dviipendra. Many names are in the Amarakosa.

Egypt, though  an African country, did not use elephant at all . We cant see it Egyptian Pyramid paintings . Only after contacting with Hindus they learnt to control horses and elephants .

Hastin, Gaja, Karin , Rsabha and Ebha are all found in the Vedic literature

The chess game that was invented by Hindus also made elephant as part of the four fold army. The name of Asvattama, the elephant, was used to defeat the Kauravas. All the elephants have special names in Hindu books.

Asvaghosa says

The elephants are found in the forests of Himalayas. They caught them with the help of elephant catchers. Sometimes they became wild and were controlled with help of Ankusa.

To be continued………………………….

tgs- Elephant, etymology, Ibha, Indus seal, Rig Veda

திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம்(Post No.11,281)

image of Kenneth Petera, American wrestler

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,281

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பல நூல்கள் 32 சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிக் குறிப்பிட்டாலும் அவை என்னவென்ன என்று சொல்லுவதில்லை. பரஞ்சோதி முனிவர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் உக்கிர குமார பாண்டியன் திரு அவதார படலத்தில் இது பற்றித் தெளிவாகப் பாடி இருக்கிறார்..

சாமுத்திரிகா லட்சணம் என்ற சாஸ்திரம் 64 கலைகளில் ஒன்று. உடல் உறுப்புகளின் அமைப்பைக் கொண்டு ஒருவனின் குணாதிசயங்களை சொல்லும் அபூர்வ இந்து சமய அறிவியல் உண்மை ஆகும். இதை மேல் நாட்டினர் கூட இன்னும் சரிவர ஆராயவில்லை. அவ்வப்போது வரும் கட்டுரைகள் மூலம் சில செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். ஆனால் இந்துக்கள் இதுபற்றி நூல்களே எழுதிவிட்டனர். பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த பழைய தமிழ் நூலின் பல பக்ககங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன்.

ராம பிரானை வருணிக்கும் வால்மீகியும்  கம்பனும் அவருக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு நீண்ட கைகள் இருந்ததைச் சொல்ல தவறுவது இல்லை. ஆஜானு பாஹு, அரவிந்த லோசனம் (தாமரைக் கண்ணான் உலகு- குறள் )  என்று வருணிப்பர். நீண்ட கண்கள் இருப்பதைத் தாமரை இதழ்க்கண் போன்ற கண் என்பர். வள்ளுவன் கூட அதைச் சொல்லிவிட்டான் (குறள் 1103).

இதை விஞ்ஞான ரீதியிலும் விளக்கலாம். ஆதி காலத்தில் ஈட்டி, வேல் வருவதற்கு முன்னர் மனிதர்கள் வில், அம்பு களைப் பயன்படுத்தி வேட்டை ஆடினார்கள்; பகைவரை மாய்த்தார்கள் ; அதில் வெற்றி பெறுபவன் நீண்ட கைகளை உடையவனா கத்தான் இருப்பான். அம்பினை இழுத்து இழுத்து கைகள் நீண்டுவிடும்; அவனுக்குப் பிறக்கும் சந்ததியினரும் அப்படியே ஆஜானு பாஹு வாகப் பிறப்பர் ; அவர்களே வில் வித்தைக் கலையில் , போரில், சிறந்து விளங்கியிருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். சாமுத்ரிகா சாஸ்திரம் இப்படி அனுபவ ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டதே.

பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :

அவயவ உறுப்புகளில் உன்னத உறுப்பு ஆறு , நீண்ட  உறுப்பு ஐந்து, சூக்கும உறுப்பு ஐந்து, குறுக்க  உறுப்பு நான்கு, அகல  உறுப்பு இரண்டு, சிவந்த  உறுப்பு ஏழு,  ஆழ்ந்த  உறுப்பு மூன்று ஆகிய 32  உறுப்புகள் அதற்கான இலக்கண நூலில் சொல்லப்பட்டுள்ளன . அவைகளை விரித்துரைப்பின் ,

வயிறு, தோள் , நெற்றி , நாசி, மார்பு, கையடி இவை (6) ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரன் ஆவான்.

ஒளியைக் கிரகிக்கின்ற  கண், கபோலம் , செங்கை, நாசி, நடு மார்பு, இவ்வைந்தும் (5) நீண்டு இருக்குமாயின் நன்மையாம் .

தலை மயிர், உடல், விரற்கணு , நகம், பல் (5)  இவ்வைந்தும் சிரியதாயிருப்பின் ஆயுள் விருத்தி .

கோசம்( ஜனன உறுப்பு), கணைக்கால், நாக்கு, முதுகு, இந்த (4) நான் கும் குறுகி இருக்குமாயின் செல்வப் பெருக்காம்.

சிரம், நெற்றி  இவ்விரண்டும்(2)  அகன்றிருக்குமாயின் இதுவும் நன்றாகும் .

உள்ளங்கால் ,உள்ளங்கை , கண்கள், இதழ்க்கடை, அண்ணம் , நாக்கு, நகம் இவை ஏழும் (7) சிவந்திருக்குமாயின் மிகுந்த இன்பம் உண்டாகும்.

இகல் வலி , ஓசை, நாபி என்று சொல்லுகின்ற இவை மூன்றும் (3) ஆழ்ந்திருப்பின் எவர்க்கும் மேலான நன்மையுண்டாகும் .

xxxx

திருவிளையாடல் புராணம்

உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும் 

அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச் 

சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே 

இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப.

960

வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும் 

உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண் கபோலம் 

புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும் துண்டம் 

வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும் நன்மை.

961

நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும் 

சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந் நான்கும் 

குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று ஆய்ந்தோர் 

அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும் நன்றாம்.

962

அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு 

நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம் 

இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த 

தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் என்ன.

963

எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு 

நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம் 

                                     காக்க 

வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா 

அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து 

                                    சூழும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முன்னர் வெளியான சாமுத்ரிகா லக்ஷண கட்டுரைகள்

32 சாமுத்ரிகா லக்ஷணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 32-…

·Translate this page

20 Jul 2018 — WRITTEN by London swaminathan. Date: 20 JULY 2018. Time uploaded in London – 18-29 (British Summer Time). Post No. 5240.

தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள் …

https://tamilandvedas.com › தெய…

·Translate this page

26 Sept 2020 — ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் …

சாமுத்ரிகா லட்சணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

·Translate this page

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com … சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142).

Missing: லக்ஷணம் ‎| Must include: லக்ஷணம்

You’ve visited this page 3 times. Last visit: 20/09/22

TAGS- திருவிளையாடல் புராணம், சாமுத்ரிகா லட்சணம், 32 உறுப்பு, பரஞ்சோதி முனிவர்

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6(Post No.11,280)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,280

Date uploaded in London – 20 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கணவனுடன் சிதைத்தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறும்  “சதி”  (SATI) என்னும் வழக்கத்தை ரிக் வேதமோ, மனு நீதி நூலோ குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணமும்  (வா.ரா. ) இது பற்றிப் பேசவில்லை. இடைச் செருகல் என்று கருதப்படும் உத்தர காண்டத்தில் மட்டும் வேதவதி , அவருடைய தாயார் இப்படி இறந்ததாகக் கூறுகிறார். அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை. தசரதன் மனைவியரோ, வாலியின் மனைவியரோ அப்படி இறக்கவுமில்லை.

Xxx

விலை மாதரும் ஆடல் அழகிகளும்

ஆண்களை மகிழ்விக்கும் “கணிகா” மகளிர் (COURTESANS) பற்றியும் வால்மீகி  பாடி இருக்கிறார்.அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகத்துக்கு கணிகா” மகளிர் அழைத்து வரப்பட்டனர்.

ராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வந்தபோது வரவேற்பு  கொடுத்தவர் அணியில் அவர்களும் இருந்தனர்.

கலைகளில் வல்லவர்களான  அவர்களை அரண்மனை சேவைக்கும் அழைத்தனர் (2-3-17,6-127-3/4, 1-10-5)

சில ஸ்லோகங்களை மட்டும் காண்போம் 

पताकाः च பாவட்டாக்களும் , आबध्यन्ताम् கட்டப்படட்டும் , राजमार्गः च தேசீய நெடுஞ்சாலை முழுதும் , सिंच्यतां च தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படட்டும்  सर्वे எல்லா , तालावचराः நடிகர், நடிகையரும் , स्वलङ्कृताःநன்கு அலங்கரிக்கப்பட்ட , गणिकाः च ஆடல் அழகிகளும் , नृपवेश्मनःஅரண்மனை , द्वितीयाम् இரண்டாவது , कक्ष्याम् அறைக்கு , आसाद्य அழைத்துவரப்பட்டு , तिष्ठन्तु அமரும்படி செய்யுங்கள்

(ராமர் பட்டாபிஷேகத்துக்காக ) சாலைகள் முழுதும் தோரணம் கட்டுங்கள் ; தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யுங்கள்;நடிகர், நடிகையர், அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அரண்மனையின் இரண்டாவது அறையில் அமர்த்துங்கள்

आबध्यन्तां पताकाश्च राजमार्गश्च सिंच्यताम्।

सर्वे च तालावचरा गणिकाश्च स्वलङ्कृताः।।2.3.17।।

कक्ष्यां द्वितीयामासाद्य तिष्ठन्तु नृपवेश्मनः।

ஆபத்யந்தாம் பதாகாஸ் ச  ராஜமார்கஸ்ச்ச ஸிஞ்சயதாம்

ஸர்வே ச தாலா வசரா கணிகாஸ் ச ஸ்வலங்க்ருதாஹா

கக்ஷ்யாம் த்விதீயாமாஸாத்ய  திஷ்டந்து ந்ருபவேஸ்மனஹ 

XXX

गणिकास्तत्र गच्छन्तु रूपवत्यस्स्वलङ्कृता:।

प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:।।1.10.5।।

கணிகாஸ் ச கச்சந்து ரூப வத்யஸ்வலங்க்ருதாஹா

ப்ரலோப்ய விவிதோ பாயை ரானே ஷ் யந்தீஹ ஸத் க்ருதாஹா

ஆடல் அழகிகளை அனுப்பி ரிஷ்ய ச்ருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவரை ஏமாற்றி அழைத்துவர ஏற்பாடு:-

रूपवत्य: அழகான , स्वलङ्कृता: அலங்காரம் செய்துகொண்ட/ மேக் அப் போட்டுக்கொண்ட , गणिका: கவர்ச்சிக்  கன்னிகள்  , सत्कृता: தகுந்த மரியாதையோடு , तत्र அங்கே , गच्छन्तु போகட்டும் , विविधोपायै: பல்வேறு சேஷ்டைகள் செய்து , प्रलोभ्य மயக்கி , इह இங்கே , आनेष्यन्ति அழைத்துவாருங்கள்

அழகிய, அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அனுப்பிவையுங்கள் அவர்கள் பலவகையான வழிகளில் ஆசை காட்டி மரியாதையுடன் இங்கே (கலைக்கோட்டு முனிவரை) கொண்டுவரச்செய்யுங்கள்.

இதிலிருந்து அக்காலத்தில் ஆண்களை மயக்கி, சொக்கவைத்து இழுக்கும் ஆடல் அழகிகள் இருந்ததை அறியலாம் ; சிலப்பதிகார மாதவியிடத்திலும் இதைக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் அக நானூறு, குறுந்தொகை, நற்றிணை , கலித்தொகை முதலிய நூல்களில் ஏராளமான பரத்தையர் (கவர்ச்சிக் கன்னிகள்) பற்றிய விஷயங்கள் வருகின்றன என்பதையும் குறிப்பிடுதல் பொருத்தம்

காம சூத்திரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரும் வேசியர் 64 கலைகளிலும் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பார். (காம சூத்திரம் 1-3-20)

XXXX

 ராம- ராவண யுத்தம் முடிந்து ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் ஆடல் அழகிகள் பற்றிய குறிப்பைக் காண்கிறோம் : ” புராண கதைகளைச் சொல்லும் , அரசர்களின் வம்ச புகழ்பாடும் பாணர்கள் , இசைக்கலை வல்லுநர்கள், ஆடல் அழகிகள் எல்லோரும் வரட்டும்.ராமனுடைய சந்திரன் போன்ற குளிர்ச்சிமிக்க, ஒளிபொருந்திய முகத்தைக் காண, ராஜமாதாக்கள் , மந்திரிகள் , பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்கள் சங்கத்தினரும் குடும்பத்தினரும் இங்கே கூடட்டும்  என்று வால்மீகி பாடியிருப்பதையும் காணலாம்.

TO BE CONTINUED…………………………………

Tags- வால்மீகி , ராமாயணத்தில், பெண்கள்-6,ஆடல் அழகி, கணிகா

அறிவியல் அறிஞர் வாழ்வில் 9 (Post No.11,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,279

Date uploaded in London – –    20 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் – 9

ச.நாகராஜன்

17

இன்ஃபைனைட் ஹோட்டல்!

டேவிட் ஹில்பெர்ட்  (David Hilbert பிறப்பு : 23-1-1862 மறைவு :14-2-1943) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கணித மேதை.உலகின் அனைத்து கணித மேதைகளாலும் மதிக்கப்பட்டவர். இன்ஃபினிடி  செட் (Infinity Set) என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு சிந்தனை சோதனையைச் (Thought Experiment) செய்தார். அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல் அல்லது ஹில்பர்ட் ஹோட்டல் என்பதாகும். அது அனைவரையும் கவர்ந்த ஒன்று. இன்ஃபினிடி என்பது எல்லையற்ற கணக்கற்ற ஒன்று.

அவரது சிந்தனை சோதனை இது தான்!

மிக நீண்ட ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்டு அலுத்து களைத்து அவ்வளவாகத் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு நீங்கள் வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் திகைப்பைத் தரும் வண்ணம் அங்கு ஒரு ஹோட்டலிலும் உங்களுக்குத் தங்க அறை கிடைக்கவில்லை. கடைசியாக அங்கு ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.

அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல். அங்காவது ஒரு அறை கிடைக்காதா என்று அங்கு நீங்கள் விரைகிறீர்கள்.

பெயருக்குத் தகுந்தாற் போல எண்ணிக்கை கடந்த அறைகள் அங்கு இருக்க வேண்டுமல்லவா!

அங்கு வரவேற்பு டெஸ்கில் இருந்த ரிஸப்ஷனிஸ்டைப் பார்த்து எனக்கு ஒரு அறை வேண்டும் என்கிறீர்கள்.

அவர் சற்று தலையை ஆட்டியவாறே, “மன்னிக்க வேண்டும், எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார்!

“என்ன, இது இன்ஃபைனைட் ஹோட்டல் ஆயிற்றே” என்கிறீர்கள்.

“ஆமாம்! அது உண்மை தான்! ஆனால் அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார் அவர்.

சற்று யோசித்துப் பார்த்த உங்களுக்கு ஒரு அருமையான யோசனை உதிக்கிறது.

“எனக்கு நிச்சயமாக ஒரு அறை வேண்டும். நீண்ட பயணத்திற்குப் பிறகு களைத்துப் போய் இங்கு வந்திருக்கிறேன்.  எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்!” என்கிறீர்கள்.

உங்களைப் பார்த்த அவர், “நிச்சயமாக, சொல்லுங்கள் என்ன உதவி?” என்கிறார்.

“ஹோட்டலிலோ எண்ணிக்கை அற்ற அறைகள் இருக்கின்றன. முதலாம் அறையில் இருப்பவரை அடுத்த அறைக்கு மாற்றுங்கள். அடுத்த அறையில் இருப்பவரை அதற்கு அடுத்த அறைக்கு மாற்றுங்கள். காலியாக இருக்கும் முதல் ரூமை எனக்குத் தந்து விடுங்கள். இப்படி மொத்த பேரையும் அடுத்தடுத்த அறைக்கு மாற்றி விட்டீர்கள் என்றால் முதலில் எத்தனை அறைகள் ஒதுக்கி இருந்தீர்களோ அதே எண்ணிக்கையில் தானே மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். எல்லோருக்கும் அறை உண்டு; எனக்கும் உண்டே!” –

என்று முடிக்கிறீர்கள் நீங்கள்!

உங்களது இந்த யோசனை எப்படி?

இது இன்ஃபினிடி என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுவதுமாக விளக்குகிறதல்லவா!

அனைவரும் இதைக் கேட்டு ரசித்தனர்; இன்றளவும் ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்!

18

டெஸ்கார்டஸின் கடவுள்!

டெஸ்கார்டெஸ் (Descartes) பிரான்ஸின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர். (பிறப்பு 31-3-1596 மறைவு 11-2-1650).தெய்வ நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர். ராணுவத்தில் தன்னார்வல படை வீரராக அவர் சேர்ந்தார். ப்ராடஸ்டெண்டுகள் கத்தோலிக்கர்களுடன் சண்டையிட்ட 30 வருட ப்ரேக் (Siege of Prague) முற்றுகையிலும் அவர் கலந்து கொண்டார்.

ஒரு சமயம் தெற்கு ஜெர்மனியில் பயணம் செய்கையில் அவர் பிரபல கணித மேதையும் விஞ்ஞானியுமான ஜோஹன் ஃபால்ஹேபரைச் (Johann Faulhaber) சந்தித்தார். ஜோஹன் விஞ்ஞானி மட்டுமல்லாமல் ஒரு தெய்வீக யோகியும் கூட. அவர் கணிதத்திலும் தெய்வீக யோகத்திலும் தனது சில கொள்கைகளை டெஸ்கார்டஸுக்குக் கற்பித்தார். அதிலிருந்து டெஸ்கார்டஸுக்கு அவற்றில் அதிக ஆர்வம் பிறந்தது.

அவருக்கு கணித மேதையான ப்லெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) சிறந்த நண்பராக விளங்கினார்.

பாஸ்கல் தான் தியரி ஆஃப் பிராபபலிடியைக் (Theroy of Probability) கண்டவர்.

அவருக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு.

“கடவுளை நம்பு. அவரை நம்பினால் இறப்பிற்கு பின் அவர் நம்மைக் காப்பார்; ஒருவேளை கடவுள் இல்லை என்றாலும் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை; ஆனால் நம்பாமல் இருந்தாலோ நரகத்திற்கு அல்லவா போக வேண்டி இருக்கும் “ என்றார் அவர்.

டெஸ்கார்டஸ் 1628இல் ஹாலந்து சென்றார். 1637ஆம் ஆண்டு தனது பிரசித்தமான “The Discourse on the Method” என்ற நூலை வெளியிட்டார்.அவரது இந்த புத்தகம் ப்ராடஸ்டெண்டுகளுக்கு ஆத்திரத்தைத் தந்தது. அவரை மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு அவர்கள் வற்புறுத்தினர். இதனால் மனம் வருந்தி அவர் ஸ்வீடனுக்குக் கிளம்பினார். ஆனால் 1650ஆண்டு ப்ளூவினால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தெய்வ நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் முரண்பாடு இல்லை ஏ என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். இதனால் அனைவராலும் அவர் மதிக்கப்படுகிறார்.

***

புத்தக அறிமுகம் – 62

சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க்கவிதைகளும் அறிவுரைகளும்!

பொருளடக்கம்

என்னுரை

1. மான் விழியாளுக்கு எது ஆபரணம்?

2. ஆறு கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு சொற்றொடர்!

3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?

5. மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்?

6. கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள்!

7. வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?

8. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

9. கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!

10. கேள்விகள் பல; பதிலோ ஒரு வார்த்தையில்!

11. சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

12. 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!

13. நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!

14. எனக்கு மூன்று மனைவிகள்!

15. கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்!

16. உப்பே உத்தமம்!

17. மேலானவன் யார்? மேதாவி யார்?

18. புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!

19. வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

20. மஹாத்மா என்பவர் யார்?

21. இறந்ததற்குச் சமம்!

22. காளிதாஸன் மீது போஜனின் நட்பு!

23. கீதத்தின் பெருமை!

24. படிப்பது எப்படி?

25. பாரதத்தின் பெருமை!

26. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

27. பேராசை பெரு நஷ்டம் – மூன்று சுபாஷிதங்கள்!

28. பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல!

29. கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

30. வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

பிற்சேர்க்கை – 1

பிற்சேர்க்கை – 2

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமுமே.

இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளன; பாரதத்திலேயே கல்வெட்டுக்களில் இலக்கியச் செல்வம் பொதிந்திருக்கிறது. இன்னும் முறையாக அவை தொகுக்கப்படவில்லை.

சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். அதில் தனி ஒரு இடத்தை சுபாஷிதங்கள் பெறுகின்றன.

பல தனிப்பாடல்களைத் தொகுத்து உள்ள தொகுப்பு நூல்களும் ஏராளமாக உள்ளன.

இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.

அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் – 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்களை அடுத்து இந்த நூல் வெளியாகிறது.

கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.

இவற்றை www.tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி
சான்பிரான்ஸிஸ்கோ                         ச.நாகராஜன்
10-9-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**