Date: 22 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 14-08 am Post No. 7125
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Hindu
Rule in South East Asian countries must be made a compulsory subject in India. Students
must study it from the high school days, the history, stage by stage because it
is a 1500 year long history covering nearly eight countries and their relationship
with India and China. The glory of Tamils will also be revealed through this
study.
Choza and
Pandya kings had powerful naval forces and they were able to defeat kings in
Indonesia by sending forces from the mainland. Tamil king Sri Maran began the
long history in Vietnam (Champa). He was taken there by saints like Agastya and
Kaundinya. The names of these two Brahmin saints are all over South East Asian
countries.
After the
earliest inscription of Sri Maran (Pandya) in second century CE we come across
Pandya and Choza inscriptions only from tenth century. Probably cordial
relationship existed between the Kings in mainland and kings in South East Asia
(S.E.A.) till that time.
Two inscriptions
of Rajendra Choza (in India), dated 1017
and 1022 respectively, refer to his conquest in Kataha or Kadaram (Keddah in
Malayan peninsula). Several inscriptions of later period beginning from 1024-5 CE give a detailed account
of his oversea conquests, giving a long list of countries conquered by him.
Rajendra Choza
sent a big naval expedition and defeated Sangama Vijayottunga Varman, the King
of Kadaram. Then follow the 13 countries or places won by him, beginning with Sri Vijaya and ending with
Kadram (covering the areas of present day Cambodia, Thailand ,Malaysia and
Indonesia).
Source –
Thiruvalangadu Plates dated 1017-18
The great
oversea victory is a unique event in the annals of Indian history. It proves the
existence of a powerful naval forces in ancient India.
Two
inscriptions of Vira Rajendra inform us
that sometime before 1069-79 CE , he conquered Kadaram on behalf of a king who
sought his help. This shows some power struggle there even after Rajendra Choza’s
victory.
Half a
century after this, Choza Kulottunga (1070-1118) also talk of destroying
Kadaram.
Chinese
chronicles refer to this place as the kingdom of San-fo-tsi. The king who ruled
this kingdom was Sili- Tieh- wa (Sri Deva).
Sri Deva
may be Rajendra Choza, according to Dr R C Majumdar, the authority on S E A history.
Pandyan
Naval Forces
The Ceylonese
chronicles have preserved an interesting account of two invasions of Ceylon by
a king of Javaka , called Chandrabhanu , about 1236 and 1256. In an inscription
dated 1264 CE, Jatavarman Vira Pandya of South India claims to have killed the
Savaka (Java) king, and in another inscription , dated the next year, the king
of Kadaram was said to have been defeated by him. It must be Chandrabhanu who
was killed.
Arab
writers used Zabag for Javaka (te present day Java ,part of Indonesia).
An inscription
of Chnadrabhanu has been found at Chaiya near Ligor and it has been dated 1230
CE. The king has been identified with the Javaka king of that name. He is said
to have been born in the family of lotus and called Lord of Tambralinga. This
seems to indicate the head quarters of Javaka (zabag) were in Malayan peninsula
(My
comment:- Tambra= Lotus= Thamarai in Tamil)
The lists
of Tamil and Sanskrit inscriptions of Malayan
Peninsula are in Wikipedia:-
Sanskrit inscriptions:
–
Ligor,
Kedah, Kutai Tugu inscriptions
Tamil inscriptions:-
Neusu,
Kedah, Barus inscriptions.
Source Book R C Majumdar’s Ancient Indian Colonisation in S E A.
Date: 22 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-42 am Post No. 7124
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம்
ஆண்டில் நான் வாரம் தோறும் தினமணி பத்திரிக்கையில் எழுதி வந்த உலகப் பலகணி
ப்குதியிலிருந்து மேலும் ஒரு கட்டுரை.
அனைவரும்
போற்றும் 500 வயது மரம் ! published in Dinamani on
6-9-1992; written by S Swaminathan from London
இது
போல நாமும் புகழ்பெற்ற மரங்களை, குறிப்பாகத் தமிழ் நாட்டுக் கோவில் தல மரங்களப் பாதுகாக்க வேண்டும்.
மதுரை, காஞ்சீபுரம்
போன்ற இடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட பட்டுப் போன மரங்களை விஞ்ஞான முறையில்
கார்பன் டேட்டிங் செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.
புத்தரின்
போதி/ அரச மரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் புகழ்பெறாத பெரிய ஆலமரங்கள், நம்மாழ்வாரின் புளிய மரம், தான்ஸேனின் புளிய மரம், கட்டபொம்மனின் தூக்கு மரம்
முதலியவற்றையும் சுற்றுலாத் தலங்கள் ஆக்க வேண்டும்.
மேலும்
புகழ்பெற்ற மரங்கள் பற்றித் தபால் தலைகள் வெளியிட வேண்டும்.
கட்டபொம்மன்
தூக்கிலிடப்பட்ட மரத்துக்கு அடியில், போகும் வரும் யாத்ரீகர்கள் ஒரு சிறு
கல்லைப் போட்டு மரியாதை செய்வர் என்று எழுதப்பட்ட, 100 ஆண்டுக்கு முந்தைய புஸ்தகத்தை பேஸ்
புக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அந்த இடம் இருந்தால் , அதையெல்லாம் மரியாதைக்குரிய
சின்னங்களாக மாற்ற வேண்டும்.
என்னிடமே பிரிட்டனின் புகழ்பெற்ற மரங்கள் பற்றிய நூலும்
மாதம் தோறும் வெளியாகும் மரங்கள் பற்றிய பத்திரிக்கையும் உள்ளன. இது போல மரம்
அறிவு பெருகி “மரத்தடியர்கள்” அதிகரிக்க வேண்டும்.
மரத்தடியர்கள்
= மரத்துக்கு அடியில் வசிப்போர்! வானப் ப்ரஸ்தர்கள்; புத்தர், நம்மாழ்வார் போன்ற ஞானிகள்.
மரங்கள் பற்றி எனது பிளாக்கில் 20, 30 கட்டுரைகள் உள. படித்து இன்புறுக.
Following is
from Daily Mail (Nov.14, 2014)
The Major Oak in Nottinghamshire’s Sherwood Forest was a clear
winner in a public vote run by the Woodland Trust.
It
claimed 2,317 votes or 18 per cent of the 13,000 cast in just eight days
earlier this month.
The
Major Oak is said to be where Robin Hood and his Merry Men slept when not
stealing from the rich and giving to the poor.
It
gets its name from Major Hayman Rooke, an 18th century historian, who described
it in 1790.
But
it is thought to have stood within what is now Nottinghamshire County Council’s
Sherwood Forest Country Park for up to 1,000 years.
It
boasts a girth of 33ft, a spread of 92 ft, weighs 23 tons and each year
produces up to 150,000 acorns.
Its
nearest rivals were two other ancient oaks – Old Knobbley in Mistley, Essex,
and the Ickwell Oak in Ickwell, Bedfordshire.
7 branched Palmyra Tree, Kallal Tamarind Tree of NammalvarPicture by Lalgudi VedaTree Worship in VaranasiSangu/ Conch Katha Perumal TempleSave Our Trees; Dont cut them.TansenTansen’s Famous Tamarind Tree
Date: 22 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 6-33 am Post No. 7123
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் : 7115 வெளியான தேதி : 20-10-2019 – கீதையின் நான்காவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.
ஏழு கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை
இது தான் :
Whatever Thou
Doest, Do It for the Love of God
நீ எதைச் செய்தாலும் கடவுளின்
மீது அன்பு கொண்டு செய்
இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
எந்தச் செயலைச் செய்தாலும் மனிதர்களை
மகிழ்விக்கச் செய்யக் கூடாது. ஆனால் இறைவனின் அருளைப் பெறவே செய்ய வேண்டும்.
டெட்சு – ஜென் ஒரு புத்த துறவி.
புத்த மத அறநூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது அவரது
பேரவா. இப்படிச் செய்தால் புத்தரின் உபதேசங்கள் ஜப்பானியரைச் சுலபமாக சென்றடையும் என்று
அவர் எண்ணினார்.
ஆனால் இதற்காக பெரும் நிதி தேவை
என்பதை உணர்ந்தார். ஆனால் மனம் தளராது ஒரு பொதுநல நிதி ஒன்றை அவர் ஏற்படுத்தி அனைவரிடமும்
நிதி உதவி கேட்டு சேகரிக்க ஆரம்பித்தார்.
பத்து வருட காலம் கழிந்தது.
தேவையான நிதி சேர்ந்தது. தனது பணியை ஆரம்பிக்க வேண்டியது தான் என்று அவர் எண்ணினார்.
அப்போது ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
உடனடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தேவையான உதவியைச் செய்ய தான் சேகரித்த நிதி அனைத்தையும் கொடுத்தார்.
ஆனால் தான் ஆரம்பித்த பணியை
அவர் அப்படியே விட்டு விடவில்லை.
மீண்டும் பணம் சேகரிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு பத்து வருட காலம் கழிந்தது.
போதுமான நிதி சேர்ந்தது.
இந்தச் சமயம்
இன்னொரு பேரிடர் வந்தது. அவர் தான் சேகரித்திருந்த நிதி அனைத்தையும் மக்களுக்கு உதவி
செய்வதற்கென இந்த முறையும் கொடுத்தார்.
ஆனால் அவர் தான் எடுத்த பணியை
விடுவதாயில்லை.
அடுத்து இந்த முறையும அவர் நிதியைச்
சேகரிக்க ஆரம்பித்தார். இன்னொரு பத்து ஆண்டுகள் ஓடிய பின்னர் போதுமான பணம் சேர்ந்தது.
கடைசி கடைசியாக ஜப்பானிய மக்களுக்கு
புத்தமத அறநூல்கள் சென்று சேர்ந்தன.
ஜப்பானிய மக்கள் மிக்க அன்புடன்
அதை ‘தி தேர்ட் இம்ப்ரெஷன்’ – (The Third Impression)- மூன்றாவது பதிப்பு என்று கூறினர்.
முதல் இரண்டு பதிப்புகள் செயல்
முறைப் பதிப்புகளாம். மூன்றாவது பதிப்பு தான் அச்சிடப்பட்ட பதிப்பாம்!
டெட்சு – ஜென் உண்மையான ஒரு
கர்மயோகி. அவர் எதைச் செய்தாலும் இறையன்புடன் செய்தார்.
ரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு
வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனதைப் பொறுக்கமாட்டாத சிலர் அவரிடம் வந்து,
“நீங்கள் ஒரு பித்தலாட்டக்காரர். கடவுளிடம் பேசுவதாக நீர் பொய் சொல்கிறீர். எங்கே,
அந்தக் கடவுளை எங்களிடம் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று கூவினர்.
“காட்டாவிட்டால், அவரிடமே உங்களை
“அனுப்பி விடுவோம்” என்று அவர்களில்
ஒருவர் எச்சரிக்கவும் செய்தார்.
ரமண மஹரிஷி சாந்தமாக இருந்தார்;
அனைத்தையும் கேட்டார்.
பின்னர் அவர்களிடம், “நாளை காலை
எல்லோரும் வந்து விடுங்கள் . கடவுளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.
அடுத்த நாள் அனைவரும் வந்து
குழுமி விட்டனர்.
ரமணர் அவர்கள் அனைவரையும் இருள்
அடர்ந்த காட்டினூடே அழைத்துச் சென்றார்.
அங்கு சிதிலமடைந்த குடிசை ஒன்று
இருந்தது.
அதற்குள் இரண்டு ஆடிப்போன கட்டில்கள்
இருந்தன.
குடிசைக்குள் சென்ற அனைவரும்
அங்கு ஒரு வயதான தம்பதியினர் கட்டில்களில் படுத்திருப்பதைப் பார்த்தனர். இருவரும் தொழுநோயால்
பீடிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்தவுடனேயே கூட்டத்தினர்
வெகு வேகமாக வெளியே சென்று தூரத்தில் நின்றனர்.
ரமணரோ அவர்கள் காயத்தைக் கழுவி
கட்டுப் போட்டார். மெதுவாக நடந்த இந்தச் செயல் மூன்று மணி நேரம் நீடித்தது.
பின்னர் கூட்டத்தினரை நோக்கிய
ரமணர்,”அதோ அவர்களிடம்
நான் கடவுளைப் பார்க்கிறேன். அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் மூலமாக இறைவனுக்கு நான்
தொண்டு செய்கிறேன்” என்றார்.
அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர்.
அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரது அருளுக்காக வேண்டினர்.
மனிதன் மற்றவர்களுக்கு உதவி
செய்யும் போது அவன் இறைவனின் பக்கத்தில் இருக்கிறான்.
எந்தச் செயலைச் செய்தாலும் இறைவன்
மீதான அன்புடன் செய்ய வேண்டும்!
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 21-00 Post No. 7122
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Common Sanskrit words and names are used in the square
ACROSS
1. (8 LETTERS) – HANUMAN WAS THIS KING’S CHIEF MINSTER
8. (6) – LOWER LIP
9. (4) WELL ( WATERSOURCE)
10.– (4) ROPE, BANYAN
TREE
11. – ^) NOTORIOUS TAMIL KING OF SANGAM AGE WHO EXCECUTED A
TEENAGE GIRL FOR TAKING A MANGO THAT HAD FALLEN INTO A STREAM.
13.– (3) SANSKRIT ABBREVIATION FOR SAUBHAGYAVATHI ETC.
DOWN
1. – (9 LETTERS) THE WHEEL
OF KRISHNA, VISHNU
2. A – (6) NAME OF MANU; THE BEST AMONG THE THREE
3. – (7)- RAM’S NAME BECAUSE HE WAS BORN IN RAGHU VAMSA
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 13-19 Post No. 7121
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 11-52 am Post No. 7120
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப்
பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி
வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை
குன்றாத கட்டுரை ‘காட்டுராணி பூலான்
தேவி’ அதை மட்டும் பெரிது படுத்திக்
காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old
Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –
எனது
தினமணிக் கட்டுரைக்குப் பின்னர் பூலான் தேவி இரு முறை எம்.பி.ஆனார்.
அவரைப்
பற்றி நிறைய புஸ்தகங்கள் வெளியாகின. திரைப்படமும் வெளியானது.
2001ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரால் சுடப்பட்ட உயர் ஜாதி மக்களின்
ஆதரவாளர்கள் அவரைச் சுட்டுகொன்றனர்.
கர்ம
வினை எல்லோரையும் நிழல் போலத் தொடர்ந்து வந்து அடிக்கும் என்பதற்கு பூலான்
தேவியின் வாழ்க்கை ஒரு சான்று.
கொலைகளையும் கொள்ளைகளையும் நியாயப்படுத்தி காசு செய்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்களுக்கு விழுந்த மரண அடி இது.
written by s swaminathan from london
More from
Wikipedia
கைதும் விடுதலையும்
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய
முதல்_மந்திரி
அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி
அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார்
ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை
அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை
செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள்.
இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி
அரசு, பூலான்தேவிக்கு
எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள்
சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான்
தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும்
பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு
இருந்தனர்.
மக்களவை உறுப்பினர்
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி
சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை
“எம்.பி” ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி
சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில்
போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.)
எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி
அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில்
இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு
ஜுலை மாதம் 5_ந்தேதி
உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம்
உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை
தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில்
சேர்ந்தார். 1996_ம் ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி
கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை
கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது
இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்
அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
“
கொலை
2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து
மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார்.
அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில்
ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டாலும், அவர்
இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத்
தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி
உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை
செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா
குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14-8-2014ல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]
Date: 21 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-13 am Post No. 7119
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 19-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 3
ச.நாகராஜன்
சங்க காலம் முதல் கண்ணதாசன் வரை
தலைவன் தலைவியிடம் உன்னை விட்டு ஒருநாளும் பிரியமாட்டேன் என்று சொல்லும் ஒரு காட்சி.
அரக்கில் பதிந்த வைரத்தைப் போல உன்னை விட்டு ஒருநாளும் பிரிய மாட்டேன் என்கிறான் அவன்.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே இன்று பழனி என்று நாம் அழைக்கும் சங்க காலப் பொதினி நகரில் வைரத்தைப் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடை பெற்று வந்தது. இங்கு பட்டை தீட்டும் நிபுணருக்கு காரோடன் என்று பெயர். ஒரு குச்சியின் முனையில் அரக்கை வைத்து, அந்த அரக்கின் நுனியில் வைரத்தை வைத்துப் பட்டை தீட்டுவது வழக்கம். ஆக
“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரிந்திலம்” என்ற சங்க இலக்கியத்தின் வரி நமக்குக் காதலின் ஆழத்தை விளக்குகிறது.
‘அரக்குடன் ஒட்டிய பிரிக்க முடியாத வைரத்தைப் போல உன்னுடன் ஒட்டி பிரிய மாட்டேன்’ என்கிறான் காதலன், காதலியிடம்.
அகநானூற்றில் களிற்றியானையில் வரும் முதல் பாடலில் மலரும் காட்சி இது.
இன்னொரு காட்சியை சிறுபாணாற்றுப்படை சித்தரிக்கிறது. பாணன் பார்க்கும் காட்சி இது.
‘இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த’ என்ற வரி சங்க காலத்தில் வைரமானது அன்றாடத் தமிழரின் வாழ்க்கையில் எத்தகைய சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிவிக்கிறது.
‘தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்’ – கவியரசு கண்ணதாசன் பாசமலருக்காக வரைந்த வைர வரி இது.
வளம் வாய்ந்த வைர நாடாக தமிழகம் விளங்கியதை இது போன்ற நூற்றுக் கணக்கான அழகிய பாடல்கள் சித்தரிக்கின்றன.
மஹாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற இதிஹாஸங்கள் வைரம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகின்றன.
வைரத்தின் ஒளிச் சிதறலால் இரவே இல்லையாம் அயோத்தியிலும் இலங்கையிலும்! வைரங்கள் பதிக்கப்பட்ட மதில்களும் மாளிகைகளும் ஒளி வீசுவதை எண்ணிப் பார்த்து பிரமிக்கிறோம். அனைவரும் அணிந்திருக்கும் வைரங்களின் ஒளியால் சூரிய ஒளி மங்கி விடுகிறதாம்!
இது போல இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்கள் வைரத்தின் ஒரிஜினல் பூமியான இந்தியா பற்றி எத்தனை ஆயிரம் செய்திகளைத் தருகின்றன என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
வைரத்தின் 12 குற்றங்கள்
வைரத்தின் குற்றங்களையும் குணங்களையும் தரும் தமிழ் நூல்களும் பல.
வைரத்தின் குற்றங்கள் 12.
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை,கரி, விந்து, காகபாதம்,இருத்து, கோடியில்லன, கோடி முரிந்தன, தாரை மழுங்கல் ஆகிய பன்னிரெண்டும் குற்றங்கள். இவற்றில் மிக மோசமானவை 4.
காகபாதம் நாகம் கொல்லும். (காகபிந்து என்றால் கரும்புள்ளி என்று பொருள்)
விந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.
மலம் பிரியாதது நிலந்தரு கிளை கெடும் (மலம், உறவினர் அனைவரையும் அழித்து விடும்)
கீற்று வரலினை ஏற்றவர் மாய்வர். (கீற்று உள்ள வைரத்தை அணிபவர் மரணம் அடைவர்)
ஐந்து நல்ல குணங்கள்
வைரத்தின் குணங்கள் 5.
பலகை எட்டு, கோணம் ஆறு, தாரை, சுத்தி, தராசம் என்பன குணங்கள்.
குற்றங்களையும் குணங்களையும் நிபுணர்கள் மட்டுமே அறிவர்.
சாமானியனுக்குப் புரியும் வகையில் சொன்னால் கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக் கூடாது.
அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்ல பட்டைகளின் ஒளிப் பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப் பயன்.
நல்ல பலன்கள்
நல்ல பலன்கள் என்பவை : அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும். மனம் எப்போதும் அலை பாயாது அமைதியுடன் இருக்கும். எதிலும் அதிர்ஷ்டம் வரும். கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும். செல்வம் சேரும். வளம் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர். செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.
கண்கள், தொண்டை, ஜனன உறுப்புகள், ஜீரண மண்டலம், சிறுநீரகக் கல் ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகள் நீங்கவும் வைரம் அணிதல் சிறந்தது. செய்வினை உள்ளிட்ட அதிமானுஷ்ய தீய சக்திகளால் பயம் ஏற்படாது.
கிரேக்க நாட்டின் பேரறிஞரான ப்ளினி வைரம் விஷத்தை முறிக்க வல்லது என்றும் சித்தபிரமையை நீக்க வல்லது என்றும் குறிப்பிடுகிறார். ஒயினிலோ அல்லது நீரிலோ வைரத்தை அமிழ்த்தி விட்டு அதை அருந்தினால் மூட்டு வலி, மஞ்சள் காமாலை, இரத்தக் கசிவு உள்ளிட்டவை நீங்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கெட்ட கனவுகளைப் போக்கும், பிசாசுகளை அண்ட விடாது தீய கண் திருஷ்டியை வைரம் போக்கும் என்றும் அவர் விவரமாகக் குறிப்பிடுகிறா
ரஸ ஜல நிதி தரும் உண்மைகள்
ரஸ ஜல நிதி வைரத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறது.
1) ஆண் (Masculine) 2) பெண் (Feminine) 3) நியூட்ரல் (Neutral)
ஆண் வைரம் என்பது ஆறு அல்லது எட்டு முகம் கொண்டது. வானவில் போன்ற வர்ணஜாலங்களைக் காண்பிப்பது. கோடுகள், புள்ளிகள் அற்றது.
பெண் வைரம் என்பது உருளை வடிவமானது. ஆறு கோணம் கொண்டது. ஆண், பெண் இரண்டுமற்ற நியூட்ரல், மூன்று கோணம் கொண்டது.மெலிதானது. நீளமானது.
முதல் இரண்டு ரகங்களும் அணியக் கூடியவை. மூன்றாவது ரகம் விலக்கப்பட வேண்டிய ஒன்று.
வைர வடிவங்களும் ஜொலிக்கும் பட்டைகளும்
உயர் ரக வைரம் இலேசாக இருக்கும்.
அதன் ஒப்பற்ற குணங்களில் ஒன்று, அதை எக்ஸ் ரே ஒளியில் பார்த்தோமெனில் அது ஒளியைக் கக்கும். (Flourescence). ஆகவே வைரத்தை ஏனைய கற்களிலிருந்து இனம் பிரிக்க எக்ஸ் ரே பயன்படுத்தப்படுகிறது.
வைரத்தில் 58 வெட்டுகள் இருக்கும். பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஜொலிக்கும். (படத்தில் 58 வெட்டுகளைக் காணலாம். மேல் பகுதியில் 33ம் கீழ்ப் பகுதியில் 25ம் இருப்பது வழக்கம்)
ஹாலந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் தான் உலகிலேயே மிகப் பெரிய பட்டை தீட்டும் இடம் ஆகும்.
வைரத்தினாலும் எண்ணெயினாலும் பூசப்பட்ட சுழலும் உலோக பிளேடு ஒன்றைக் கொண்டு வைரத்தை அறுப்பார்கள். இப்படி அறுக்க இரண்டு நாட்கள் ஆகும்.
வைரத்தின் முகங்களுக்குப் பல பெயர்கள் உண்டு.
Table,Star,Templet,Lozene,Quotin,Cross, Skew,Skilt என இப்படிப் பல பெயர்கள்!
வடிவங்களும் கூட இதயம் (Heart), பியர் (piar), ஓவல் (Oval), எமரால்ட் ( Emerald) என இப்படிப் பல பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
பேரமில்லாத வைர வியாபாரம்!
வைர வியாபாரத்தின் உலகத் தலைமையகம் டீ பீர்ஸ் நிறுவனம் தான். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டீ பீர்ஸ் கன்ஸாலிடேடட் மைன்ஸ் என்ற நிறுவனம் வைரங்களை லண்டனிலுள்ள மத்திய விற்பனை நிலையம் எனப்படும் Central Selling Organisation- CSO-க்கு அனுப்புகிறது.
சூரிய ஒளி நன்கு விழுகின்ற வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இங்குள்ள 600 தொழிலாளிகள் – அனைவரும் வைர நிபுணர்கள் – 5000 விதமாக வைரத்தைத் தரம் பிரிக்கிறார்கள்.
நகைகளுக்கு உகந்தது அல்ல எனப்படும் வைரங்கள் தொழிலகம் உள்ளிட்ட இதரப் பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிபுணர்கள் இயந்திரங்களைக் கையாளுவதில்லை. கைத்திறனையும் தங்கள் நிபுணத்துவத்தையும் கொண்டு தான் வைரத்தைப் பிரிக்கிறார்கள்.
வைரம் வாங்குவதில் பேரம் என்பதே கிடையாது. சொன்ன விலை சொன்னது தான்!
ஆண்டுக்கு பத்து முறை மட்டுமே லண்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் வைர விற்பனை நடைபெறும். சுமார் முன்னூறு வியாபாரிகள் உலகெங்குமிலிருந்து வந்து வைரங்களை வாங்குகிறார்கள்.
வாங்க வருவோர் தங்கள் தேவை என்ன என்பதை முதலில் சொல்ல வேண்டும். பின்னர் வைரங்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் தரப்படும். அதை வியாபாரிகள் பார்வையிடுவர். பின்னர் வாங்குவர். வாங்கும் போது மொத்த அட்டைப் பெட்டியையும் வாங்க வேண்டும். பிடிக்கவில்லையெனில் அப்படியே திருப்பிக் கொடுத்து விடலாம்.
ஒரு வைரத்தை வாங்கும்போது நம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு C உள்ளது. அது தான் Certificate. விற்பவர் தானே கொடுத்துக் கொள்ளும் லாபரட்டரி சர்டிபிகேட் அல்லது விற்கும் நிறுவனத்தின் சர்டிபிகேட் அல்ல இங்கு குறிப்பிடப்படுவது. GIA (ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா) போன்ற அதிகாரபூர்வ நிறுவனங்களின் சர்டிபிகேட் உள்ளதா என்பதையே பார்க்க வேண்டும்.
சுக்ரனுக்குரியது வைரம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்ரனுக்குரியது வைரம். சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.
கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
மணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு. குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்.
நகைகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களைத் தவிர இதர ரகங்கள் தொழிலகத்தில் பல்வேறு பயன்பாட்டுகளுக்காகவும், பல சாதனங்களின் தயாரிப்பிற்கும் உதவுகின்றன.
கண்ணிற்கான காண்டாக்ட் லென்ஸில் வைரம், விண்ணில் பறக்கும் விண்கல ஜன்னலில் வைரம் என ஆயிரக் கணக்கில் வைரங்களைப் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.
எம்.எஸ்., பத்மினி, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ
பாரத் ரத்னா இசையரசி எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குச் சென்றவர்கள், குறிப்பாகப் பெண்மணிகள், அவரது இசையை வானளாவப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் அவரது டால் அடிக்கும் வைர மூக்குத்தி பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.
தில்லானா மோகனாம்பாளில் பத்மினியின் ஜொலிக்கும் முக்குத்தியும் நகைகளும் நாட்டியப் பேரொளியின் நடனம் பேசப்பட்ட அளவு பெரிதும் பேசப்பட்டவை.
இன்னும் எலிஸபத் டெய்லரின் வைர மோதிரம், க்ரேஸ் கெல்லியின் வைர நகை ஆகியவை உலகினரின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பே இல்லை.
எலிஸபத் டெய்லர், “பெரிய பெண்மணிகளுக்கு பெரிய வைரங்கள் தேவை” (Big girls need big Diamonds) என்று ஒரு போடு போட்டார்.
பிரபல அமெரிக்க டி.வி.சீரியல் பிரபலமான நிகோல் ரிச்சி, “உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போல – பிரகாசமானவர்கள்.அழகானவர்கள்.மிக்க மதிப்புடையவர்கள், எப்போதும் ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் என்று சொன்ன பொன்மொழி வைர மொழியாக மதிக்கப்படுகிறது.
உலகை மயக்கிய பேரழகி மர்லின் மன்ரோ 1953ஆம் ஆண்டு,’ஒரு பெண்மணியின் உண்மைத் தோழி வைரமே’ என்று பிரகடனம் செய்தார்.
நாரீமணிகளின் உண்மைத் தோழி வைரங்கள் தானே?
எப்போதும் நிலைத்து நிற்பது வைரம் மட்டுமே!
இதற்கான ஆங்கில வாசகங்களான், ‘Diamond’s are girl’s best friend’, A Diamond is For Ever’ என்ற விளம்பர வாசகங்களை பற்பல கோடி ரூபாய்களைச் செலவழித்து டீ பீர்ஸ் நிறுவனம் உலகத்தில் மறக்க முடியாதபடி நிலை நிறுத்தி விட்டது.
Date: 20 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 20-38 Post No. 7118
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Sri Venkaiah Naidu , Vice President of India,
released a new postage stamp in May 2019 to commemorate the 750th
birth anniversary of Sri Vedanta Desika, the great Vaishnavite philosopher.
Vedanta Desikan wrote over 100
books. He was considered the incarnation of The Bell that Brahma used in the
worship of Lord Venkateswara in Tirumalai (Thiruppahi) Temple
‘Sri Vedanta Desikan is one of the most
prominent preceptors in the Srivaishnava tradition and one of the most
effulgent luminaries to have graced this land’, the Vice President said.
The Vice President termed Sri Vedanta Desikan’s scholarship as truly
outstanding and said that he had authored brilliant poems, prose, drama, epics,
commentaries, scientific texts and philosophical treatises in Sanskrit, Tamil,
Prakrit and Manipravalam.
Shri Naidu emphasized that Vedanta Desikan was much more than a spiritual teacher and said that he was a multi-faceted personality– a scientist, a logician, a mathematician, a literary genius, a linguist, a military strategist and much more.
THE STORY OF THE BELL
To commemorate the 700th birth
anniversary of the great saint a silver bell was made and sent to 60 towns to
spread the message of Sri Desikan.
Following interesting anecdotes are in the commemoration
Souvenir.
Why no bell is used inside the Balaji temple?
What happened to the Bell that Brahma used?
An old man’s contribution of heavier cup!
A man who won several cups in Tennis offered
all his cups to make the bell; and then what happened?
A poor woman who came with a broken silver
spoon.
Several interesting anecdotes like these are in
the souvenir. Please see the attachments.
I have already given the story of the Shoes of
Sringeri Shankaracharya that were sent to Benares Hindu University, Rama’s shoes
that ruled Kosala Kingdom for 14 years and the other shoes of great men in the
museums and Pujas in India and the Hindu Hymns on Shoes. Here is the Story of a
Bell:-
Date: 20 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 16-53 Post No. 7117
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.
Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-59 am
Post No. 7116
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.