கீதையின் நான்காவது கட்டளை! (Post No.7115)

WRITTEN BY S Nagaarajan
swami_48@yahoo.com

Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-48 am
Post No. 7115

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7108 வெளியான தேதி : 18-10-2019 – கீதையின் மூன்றாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் நான்காவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் நான்காவது கட்டளை இது தான் :

 Thou Shalt Not Miss Thy Daily Appointment With God

 நீ கடவுளுடனான உனது தினசரி சந்திப்பை நழுவ விடாதே

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

கடவுளைப் பார்க்கலாம், உணரலாம், தொடலாம், கேட்கலாம் – மௌனத்தின் ஆழத்தில்!

கிறிஸ்தவ ஞானியான தாமஸ் மெர்டன் (Thomas Merton) ‘தி வாட்டர்ஸ் ஆஃப் சைலன்ஸ்’  (‘The Waters of Silence) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மௌனம் என்பது அழகிய, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதி என்று வர்ணிக்கிறார். மௌனம் மனதைச் சுத்தமாக்கும். இதயத்தை உயர்த்தும். ஆழத்தில் இருக்கும் ஆன்மாவைக் காட்டும்!

இந்த வேக யுகத்தில் ஏராளமான யுவதிகளும் இளைஞர்களும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்கிறார்கள். தங்களது செல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் சார்ஜ் செய்வது அவசியம் என்கின்றனர் அவர்கள்.

இதை நான் அன்றாடம் பார்க்கலாம்.

ஏராளமான செயல்களில் மனத்தையும் இதயத்தையும் ஈடுபடுத்தும் மனிதனும் கூட தன்னை அடிக்கடி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் – அனைத்து ஆற்றல்களுடன் கூடிய கடவுளிடம்.

பெரியோர்களும் மஹரிஷிகளும் மூன்று விதமான ப்ராரப்தங்களைக் கூறுகின்றனர்.

முதலாவது அனிச்ச ப்ராரப்தம் :- இறைவனின் செயல்கள் அனிச்ச ப்ராரப்தம். சுனாமி, காத்ரீன் சூறாவளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இரண்டாவது பரேச்ச ப்ராரப்தம் :  இவை கட்டாயத்தினால் நீங்கள் செய்யும் சில செயல்கள். எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளும் சிலரை மனிதர்கள் சபிக்கின்றனர்; பொருமுகின்றனர். இறைவனின் சக்தியே எங்கும் வியாபித்து அனைவரையும் செயல்பட வைக்கிறது என்று உணரும் போது நாம் கிளர்ச்சியுறச் தேவையே இருக்காது.

மூன்றாவது ஸ்வேச்ச ப்ராரப்தம் : நமது சொந்த மதியினால் நாம் ஆற்றும் செயல்கள் ஸ்வேச்ச ப்ராரப்தம் எனப்படும்.

இதை இப்படிச் செய்திருக்கலாம்… இது மட்டும் அப்படி இருந்தால் என்று பல முறை நாம் வருந்திச் சொல்கிறோம்.

எல்லாமே இறைவனின் செயல்கள். அந்த தெய்வீக ஆற்றலுடன் நமது சொந்த மதியை இணைக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.

அந்த ஆற்றலிடம் உங்களை ஒப்படைத்து விட்டால் உங்கள் பயணம் பாதுகாப்புள்ள ஒரு பயணமாக ஆகி விடும்.

கபீர் தாஸர் ஒரு முறை கங்கை நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்வாகப் பறவை ஒன்றைப் பார்த்தார்.

அந்தப் பறவை எப்போதும் எவ்வளவு தாகமாக இருந்த போதிலும் சுத்தமான நீரை மட்டுமே பருகும். எவ்வளவு நீர் இருந்தாலும் அதை அது தொடாது. வானிலிருந்து விழும் சுத்தமான மழைத் திவலைகளை மட்டுமே அது அருந்தும்.

அவர் பாடினார்:

நீரின்றி எப்படி மீனால் உயிர் வாழ முடியாதோ

சக்ரவாகப் பறவையின் தாகம் எப்படி ஒரு மழைத்துளியினால் மட்டுமே தீர்க்கப்படுமோ

அதே தீவிரத் தன்மையுடன் மகான்கள் இறைவனுக்காக ஏங்குகிறார்கள்!

அவனது தரிசனம் ஒன்றே அவர்களின் தாகத்தைத் தணிக்கும்!

இங்கிலாந்தில் பழைய காலத்து வாத்தியம் ஒன்றைக் காண முடியும். அதன் பெயர் ஏலியன் ஹார்ப் (Aeolian harp). அதை  தோட்டத்திலோ அல்லது திறந்த ஜன்னல்களின் முன்போ வைத்து விடுவார்கள்.

தவழ்ந்து செல்லும் காற்று அதன் மீது பட்டு தெய்வீக இசை ஒன்றை எழுப்பும்.

நாமும் கூட இறைவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருந்தால் ஏலியன் ஹார்ப் போல அவரும் நம் மீது அழகிய இசையை எழுப்புவார். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்- அது ஆழ்ந்த அமைதியில் மௌனத்தில் மட்டுமே எழும்!

மொத்தத்தில் இறைவனுடன் நாம் ‘Tune up’ செய்து கொண்டால் போதும்.

அவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்!

***

தமிழ் WORD SEARCH / குறுக்கெழுத்துப் போட்டி (Post No.7114)

WRITTEN BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-58
Post No. 7114

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.


அட
இந்த ஒன்பது தெரியாதவர் யார்விலைதான் அதிகம்.

குறுக்கும் நெடுக்குமாகப் போங்கள்கொஞ்சம் வளைந்தும்நெளிந்தும் பாருங்களேன்.

ANSWERS–

நவரத்தினங்கள் :– வை  ம்நீலம்மர கதம்மாணி க்கம்முத்து,

பவ ளம்கோமேதகம்புஷ்  ரா கம்,  வைடூர் யம்

–subham–

SHOWER OF GEMS & GOLD ON LORD SHIVA (Post No.7113)

COMPILED BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

–subham–

சிங்கப்பூரில் சிவபெருமான்! வியட்நாமில் முருகன்!! (Post No.7112)

Shiva in Singapore Museum
Shiva in Berlin Museum

WRITTEN BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-50 am
Post No. 7112

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

broken Murug/ SKANDA
MURUGA/ SKANDA WITH HEAD IN 1903
DANANAG MUSEUM IN VIETNAM

நல்ல வாழ்க்கைக்குத் தேவையானது எது? (Pot No.7111)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-05 am
Post No. 7111

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் (Health care Magazine) அக்டோபர் 2019 இதழில் வெளியான கட்டுரை 

புத்தகச் சுருக்கம்

நல்ல வாழ்க்கைக்குத் தேவையானது எது?

Program for Dynamic Health : (ப்ரோக்ராம் ஃபார் டைனமிக் ஹெல்த்) : எழுதியவர் : T.C.Fry

ச.நாகராஜன்

1

Natural Hygiene எனப்படும் இயற்கை சுகாதாரத்தை அறிமுகப்படுத்தியவர் டி.சி.    ஃப்ரை.

1926, ஜூலை மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில் ஓக்லஹாமா, பென்னிங்டனில் பிறந்த அவருக்கு 1970இல் இயற்கை உணவு சார்ந்த வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. அதை ஆராயத் தொடங்கினார். ஏராளமான புத்தகங்களை எழுதினார். 1976இல் Health Sciences Institute ஒன்றையும் நிறுவினார்.தனது 69ஆம் வயதில் காலமானார்.

அவர் எழுதிய புத்தகங்களுள் ஒன்று “Program for Dynamic Health”.

 118 பக்கமே உள்ள இந்தச் சிறிய புத்தகம் ஆரோக்கியத்துடன் வாழ பல முக்கிய குறிப்புகளை அளிக்கிறது.

புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

2

ஒரு நல்ல வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத காரணிகள் 18.

அவையாவன : சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், சுத்தம், வெப்பம், தூக்கம், சத்துள்ள உணவு, உடல் பயிற்சி, ஓய்வும் இளைப்பாறுதலும்,சூரிய ஒளி, உணர்ச்சிகளில் நிதானம், இன்பமான சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பான வாழ்வும் அதற்கான வழிமுறையும், தன்னான்மைத் திறம்,ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல்,  பயனுள்ள வேலையை உருவாக்கல்,உடைமை, இயற்கையான உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்தல், கலை, அழகுணர்ச்சிகளில் ஈடுபாடு ஆகியவை.

உபவாசமிருத்தல் : நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திட்டமிட்ட கட்டுப்பாடான உபவாசம் தேவை. குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பழ வகைகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைக்கப்பட்ட உணவு வகைகளைக் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

உடல்பயிற்சியின் போது அனைத்து அங்கங்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும்.

எப்போதும் நிமிர்ந்து உட்காருதல் நல்லது. நடக்கும் போது நிமிர்ந்த தலையுடன் நடத்தல் வேண்டும்.

களைத்துப் போயிருந்தால் சற்று ஓய்வெடுங்கள். ஓய்வெடுக்கும் போது படிக்காதீர்கள். டி.வி.பார்க்காதீர்கள்.

சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள, அமைதியான, இருட்டு அறையில் உகந்த சீதோஷ்ண நிலையில் தூங்குவது அவசியம்.

சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டே இருங்கள்.

வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதை அடைவதற்கான செயல்களில் இறங்குங்கள். நல்ல பிடித்தமான ஹாபி ஒன்றில் ஈடுபடுங்கள்.

டிக்‌ஷனரி ஆஃப் மேன்’ஸ் ஃபுட்ஸ் – டாக்டர் வில்லியம் எஸ்ஸர் (Dictionary of  Man’s Foods  by Dr William Esser) எழுதியதைப் படித்து சாப்பிடுவதற்குரிய உணவு வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். (அதாவது Sweet Fruit, Sub Acid Fruit,  Acid Fruit, Melons, Proteins, Starches, Non Starchy Vegetables ஆகியவை எவை எவை என்பதைத் தெரிந்து கொண்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்)

அமிலம் மற்றும் ஸ்டார்ச் உணவு வகைகளைத் தனித் தனி நேரங்களில் (காலை, மதியம், இரவு சாப்பாடு போன்றவற்றில்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டால் அஜீர்ணம் ஏற்படும்.

அதே போல புரோட்டீனையும் கார்போ ஹைட் ரேட்டையும் தனித் தனி நேரங்களில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இப்படி எதை எதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற பட்டியலின் படி சாப்பிட வேண்டும்.

உணவில் 80 % ஆல்கலைன் உணவைச் சேர்க்க வேண்டும்.

Bread – ப்ரெட்- என்பது ஹெல்த்கேர் உணர்வுள்ள ஒருவரின் உணவில் வரவே கூடாது.

சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு இன்ஆர்கானிக்! அதைச் சேர்க்கவே கூடாது.

உடலில் அதிகமான திரவச் சேர்க்கை உப்பினாலேயே ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

உங்களது நாடித்துடிப்பை சரிபார்க்கத் தவற வேண்டாம். மிகப் பெரும் விளையாட்டு வீரர்களின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 30 முதல் 40 வரை தான் இருக்கிறது!

மருத்துவர்கள் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு சராசரியாக 72  இருக்கும்  எனக் கூறுகிறார்கள். ஆனால் இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கான ஒன்று!

ஓய்வாக இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:

வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 40 முதல் 50 வரை

வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 46 முதல் 56 வரை

ஆண் குழந்தை :   நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை

பெண் குழந்தை :   நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை

தினசரி வேலைகள் 8 முதல் 12 வரை நாடித் துடிப்பை அதிகரிக்கலாம்.

 வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இருக்கும் ஒருவரின் சராசரி நாடித் துடிப்பு இதோ:

வயதுக்கு வந்த ஒரு ஆண் : நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை

வயதுக்கு வந்த ஒரு பெண் : நிமிடத்திற்கு 56 முதல் 66 வரை

ஆண் குழந்தை :   நிமிடத்திற்கு 60 முதல் 70 வரை

பெண் குழந்தை :   நிமிடத்திற்கு 66 முதல் 76 வரை

காப்பி என்பது பழக்கத்திற்கு நம்மை அடிமையாக்க வைக்கும் ஒரு ஊக்கி. நிகோடின் போலவே அதையும் விஷம் என்றே சொல்லலாம்.

ஜீனியில் ஊட்டச்சத்தே கிடையாது. அதில் கலோரி வேல்யூ தான் உண்டு. உடலில் ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களை அது

‘கொள்ளையடிக்கிறது’.

டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் அனைவரும் தலைவலிக்காக எடுத்துக் கொள்ளும் ஆஸ்பிரின் தனது கெமிக்கல் வினையால் நரம்புகளை செயலிழக்கச் செய்கிறது.

மருந்துகள் அனைத்துமே எந்த ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குவது இல்லை. அவைகளுக்கு எந்தத் திசுவையும் உருவாக்கும் ‘அறிவு’ இல்லை.

இயற்கை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு ஆரோக்கியம் மட்டும் உறுதியாவதில்லை, ஏராளமான மருத்துவச் செலவுகளும் மிச்சமாகிறது.

இதை அனுபவித்து உணர்ந்து பாருங்கள்!

3

கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :

மேலே கண்ட நூலை முழுவதுமாகப் படிப்பதால் உணவுத் திட்டம், உணவு வகைகள், உடலுக்குத் தீங்கு பயக்கும் உணவுகள் ஆகியவை நமக்கு நன்கு தெரிகிறது; தெளிவடைகிறோம்.

ஆனால் சமைக்காத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் போன்ற ஆலோசனைகள் இந்தக் கால கட்டத்திற்கும் அவரவர் உடலமைப்பு, வியாதி ஆகியவற்றிற்கும் பொருந்துமா என்பது விளங்கவில்லை.

இந்த நூலின் ஆசிரியரின் யோசனைகளுக்குக் கடுமையான விமரிசனங்கள் எழுந்தாலும் கூட இந்த நூல் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளதை எண்ணினாலேயே இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது தெரியவரும்.

அன்பர்கள் இந்த நூலைப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்; கடைப்பிடிக்கும் முன்பு தங்கள் குடும்ப மருத்துவரையும் நல்ல ஆலோசனைக்காக நாடி உணவு பற்றிய ஆலோசனைகளையும் பெறலாம்.

இயற்கை ஆரோக்கியம் பெற வாழ்த்துக்கள்!

***

உலகின் மிகப்பெரிய வௌவால் (Post No.7110)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 18 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-12
Post No. 7110

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 28-6-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘உலகின் மிகப்பெரிய வௌவால்’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை  (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்

இதன் இருப்பிடம்- கொமரோஸ் தீவு

இதன் பெயர் – பறக்கும் நரி

இறக்கைகளை விரித்தால் சுமார் 5 அடி அகலம்

எடை – சுமார் ஒரு கிலோ

இது பழம் தின்னும் வௌவால் வகை

வௌவாலின் வகைகள் – 980

மேலும் படியுங்கள்

கீதையின் மூன்றாவது கட்டளை! (Post No.7108)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 18 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-37 AM
Post No. 7108

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7101 வெளியான தேதி : 16-10-2019 – கீதையின் இரண்டாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் மூன்றாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் மூன்றாவது கட்டளை இது தான் :

 Thou Shalt Do Thy Duty and a Little More

நீ உனது கடமையை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரும் பாடகியான மாப்ரிபான் (Mabribon) ஒரு நாள் மாலை தன்னைப் பார்க்க வருபவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

பல பேரைச் சந்தித்த பிறகு, தனது வேலைக்காரியிடம், “மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.

தனது விசிறிகளிடம் பேசி அவர்களைத் திருப்திப்படுத்துவதை அவர் தனது கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரே ஒருவர் தான் இருக்கிறார்,அம்மா” என்றாள் வேலைக்காரி. “அதுவும் அவன் ஒரு சிறு பையன்” என்றாள் அவள்.

“சரி, உள்ளே அனுப்பு” என்றார் மாப்ரிபான்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்த மாப்ரிபான். “வா, உள்ளே வா, உன் பெயர் என்ன?” என்றா.

“பியரி” என்றான் பையன்.

“சொல், உனக்கு என்ன வேண்டும்?” மாப்ரிபான் கேட்க பையன் பதில் சொன்னான் :” எனது அம்மா… மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். நான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீங்கள் பாடினால் .. அதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்தால்.. மிகவும் உதவியாக இருக்கும். இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன்”

“அட, உனது கவிதையைக் கொடு. அப்படியே உன் முகவரியையும் சேர்த்துக் கொடு.”

பையன் கவிதையுடன் முகவரியையும் சேர்த்துக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

மறுநாள் மாப்ரிமான் அந்தக் கவிதையை அரங்கத்தில் பாடினார்.

அனைவருக்கும் அந்தக் கவிதை பிடித்திருந்தது – அவருக்கும் தான்!

அனைவரும் ஆரவாரித்துக் கை தட்டினர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக அவர் பியரியின் வீட்டிற்குச் சென்றார்.

அவனையும் அவனது தாயாரையும் பார்த்தார்.

“பியரி, உனது கவிதை பிரமாதம். அனைவரும் அதைப் பாராட்டினர். இதோ இந்தா” என்று அன்று நிகழ்ச்சியில் கிடைத்த முழுப்பணத்தையும் மாப்ரிபான் அளித்தார்.

“உனது தாயாருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது செய்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

நன்கொடை, உதவி என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு கடமைக்கும் சற்று மேலாகச் செய்வது தான் சேவை.

அதை செய்யத் தவறக் கூடாது

*

பிரபல ஓவியரான மைக்கேலேஞ்சலோவிற்கு 20 வருட காலம் நம்பிக்கைக்குரியவராயும் பணி செய்பவராகவும் இருந்தவர் ஆர்பினோ (Arbino) என்பவர்.

ஆர்பினோவிற்கு வயது அதிகமாகவே தள்ளாமை வந்து விட்டது. நீண்டகாலம் தான் இருக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

மைக்கேலேஞ்சலோ அவரை நன்கு ஓய்வு எடுத்து சக்தியை சேமிக்கும்படி கூறி அதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆர்பினோ அதற்கு இணங்கவில்லை.”உங்களுக்கு நான் ஒரு சுமையாக ஆகி விடுவேனே” என்றார்.

ஆனால் மைக்கேலேஞ்சலோ அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“ஒரு சுமையும் இல்லை நான் இரவும் பகலும் உங்களைப்பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

சொன்னபடியே தன் வார்த்தையை அவர் காப்பாற்றினார்.

ஆர்பினோ நோய்வாய்ப்பட்டார். அவரை நன்கு பார்த்துக் கொண்ட மைக்கேலேஞ்சலோ ஆர்பினோவின் இறுதி நாட்களில் அவர் படுக்கை அருகே அமர்ந்து ஒரு பெரிய அற்புதமான ஓவியத்தையும் வரைந்து முடித்தார்.

*

அமெரிக்க ஜனாதிபதி க்ளீவ்லேண்ட் (Cleaveland)  ஒரு பயணத்திற்காக ரயிலில் ஏறினார். அவருடன் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரிச்சர்ட் கில்டரும் (Richard Gilder) அதே ரயிலில் பயணம் செய்தார்.

ஜனாதிபதி அந்த ரயிலில் பயணம் செய்வதைக் கேட்ட ரிச்சர்ட் அவரைத் தேடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டிய  முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது.

 ஆனால் எவ்வளவு தேடியும் அவரால் ஜனாதிபதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழப்பமடைந்த ரிச்சர்ட் கடைசி கோச்சுக்குச் சென்று ரயில் கண்டக்டரிடம் ஜனாதிபதி எங்கே என்று கேட்டார்.

என்ன ஆச்சரியம். அங்கே ஒரு மர பெஞ்சில் ஜனாதிபதி அமர்ந்திருந்தார்.

ஒரு பெண்மணி தனது குழந்தையுடன் ரயிலில் ஏற தனது சீட்டை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து விட்டு மர பெஞ்சில் அமர்ந்து பயணிக்கலானார் க்ளீவ்லேண்ட்!

*

இது போன்ற இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கடுக்காகச் சொல்லி சாது வாஸ்வானி கடமையைச் செய்யும் போது அதில் பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

****

SKANDA IN VIETNAM LOST HIS HEAD IN 1988 (Post No.7107)

Skanda with head

Compiled by  london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-14
Post No. 7107

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Lord Skanda (also known as Muruga, Kartikeya, Kumara, Guha) lost his head in 1988. His Vahana peacock also lost its head but the beautiful feather of his Vahana is still intact. The original pictures are with head intact. No book gives the details of this lost head. They hope that it would turn up one day. But I doubt it.

My Son is a place in Vietnam where lot of Hindu statues ere discovered in 1903. Numerous sculptures emerged from the thick vegetation when Henri Parmentier and Charles Carpeaux cleared the bushes. Among them was the statue of Skanda and the broken piece of peacock’s feather. Skanda and another statue of Ganesa were photographed by Charles Carpeaux.

“Peacock is beautifully sculpted in stone. With legs folded the bird is sadly without its head, originally reaching god’s hips, which was not found during excavations. A fine network of incisions into the stone running over the bird’s body evokes with precision the characteristic plumage of the bird; on the back it yields a formal play of great beauty.

The vajra he holds in hiss right hand and the five chignons also assist in identifying him. Skanda in his young appearance as Kumara wears several  pieces of jewellery. The head sadly lost in about 1988  once bore particular earrings, mixing flower motifs and pendants with pears inserted into elongate lobes.

One can only hope that the head of this piece, happily known and published for a long period, might one day be recovered.

  • Vibrancy in stone.
  • Skanda in Danang Museum in Vietnam
old picture with head.

ஏழு யக்ஞங்கள், 7 சந்தங்கள், 7 ஸ்வரங்கள் (Post No.7106)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-54
Post No. 7106

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அதிசய பாலைவனத் தாவரம்(Post No.7105)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-05
Post No. 7105

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992ன் ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 31-5-1992ல் வெளியான 4 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘அதிசய பாலைவனத் தாவரம்’. அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை  (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்

இதன் இருப்பிடம்- அமெரிக்கா;

இதன் பெயர் – சாயுவாரோ:

இதன் எடை – 11 டன். அதாவது இரண்டு யானை எடை.

இதன் வயது – 200 ஆண்டுக்கு மேல்!

மேலும் படியுங்கள்