WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,709
Date uploaded in London – – 3 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(FOR PICTURES GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com)
பிரெஞ்சு மொழியில் எப்படி பிள்ளை Fils (Filius in Latin) வந்தது ? என்பதே என் கேள்வி
பிள்ளை என்றால் பொதுவாக மகன் என்ற பொருளில் இன்று பயன்படுத்துகிறோம். ஆயினும் பிள்ளை எதனுடைய குட்டியாகவோ, குஞ்சாகவோ இருக்க முடியும். மேலும் இது ஆண் , பெண் இரண்டுக்கும் பயன்படும்
ஆண் பிள்ளை, பெண் பிள்ளை, அணில் பிள்ளை etc.
1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி தரும் பொருள்-
அணில், அன்றிற் குஞ்சு, இளமையோன், கரிக்குருவி, காகம், கிளி, கீரி தெங்கு, கமுகு இவற்றின் கன்று, மகன், குட்டி, குழந்தை, இளைஞன், மரப்பாவை , ஒரு பட்டப் பெயர், சாதி, இளமை, சிறுமை என்று அடுக்குகிறது.
இதுதவிர பிள்ளைப்பேறு முதலிய சொற்களும் தொடர்ந்து வருகின்றன.
xxxxxx
ஒரு மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை அல்லது தாவரத்தின் இளம் நிலை (Young, Little ones) என்பது தெளிவாகிறது
பிள்ளை என்பதன் ஸம்ஸ்க்ருத அர்த்தம் ‘புத்ர (Putra in Sanskrit) ’. இது வேத காலம் முதல் வழங்கும் சொல்.
இதன் தமிழ் வடிவம் ‘புதல்வன் (Putra= Puthalva in Tamil)’.
சங்க இலக்கியத்தில் ‘மகன்’ என்று சொல்ல வரும் இடங்களில் புதல்வ – என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
xxxx
பிள்ளை :– இதோ புள்ளி விவரம்–
தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 8 இடங்கள்
நற்றிணை – 91, 181, 367, 385,
குறுந்தொகை – 46, 92, 139
அகநானூறு – 193, 257, 290, 297
புற நானூறு- 117, 342, 380, 389
ஐங்குறு நூறு 24, 151, 160
‘பிள்ளை’, வேறு வேறு பொருள்களில் பயன்படுகிறது.
xxx xxxxxxxxxxxx
புதல்வன் (Puthalva in Sangam Literature) புள்ளி விவரம்:–
தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் குறைந்தது 7 இடங்களில் வருகிறது
சங்க இலக்கியத்தில் சுமார் 70 இடங்களில் வருகிறது.
அதாவது பிள்ளை – என்பதைவிட சுமார் 4 மடங்கு சம்ஸ்க்ருத சொல் அதிகம்.
Xxxxx
Fils in French
பிரெஞ்சு மொழியில் F ஈல்ஸ் FILS என்ற சொல் மகன் என்பதைக் குறிக்கும். இது லத்தீன் (Filius in Latin) மொழியில் இருந்து வந்தது. லத்தீன் மொழி ஸம்ஸ்க்ருதத்துக்கு மிகவும் நெருக்கமானது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ் மொழியோ இதிலிருந்து வேறுபட்ட திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது மொழி இயல் வல்லுநர் கூறும் விஷயம். ஆனால் நிறைய தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதை பல கட்டுரைகளில் நான் காட்டிவிட்டேன். இந்த ‘பிள்ளை’ PILLAY என்பதும் அது போல ஒன்று என்பது என் வாதம்.
எனது மொழிக் கொள்கை — உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழிகள் தமிழும் ஸம்ஸ்க்ருதமும் என்பதே. எந்த பழைய சொல்லையும் இதன் ஒரு மூலத்துடன் இணைத்து விடலாம். மூலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வேர் (Mula= Root) என்று பொருள். ஆகவே தமிழும் ஸம்ஸ்க்ருதமுமே வேர் – உலகின் பழைய மொழிகளின் வேர் என்பது எனது துணிபு.
ஒரு சொல்லை மட்டும் நான் இதை எழுதவில்லை. இந்த பிளாக்கில் உள்ள 100க்கும் மேலான என் கட்டுரைகளைப்ப படித்தால் இது தனியானது அல்ல என்பது விளங்கும் . இதோ பிரெஞ்சு மொழியின் மூலம் – அதாவது சொற் பிறப்பியல் (Etymology of Pillai/ Fils/Son)
SON (Pillai in Tamil)
French- Fils ;
Galician – Fillo
Hungarian – Fiu
Italian- Figlio
Portuguese – Filho
Latin- Filius
Xxxx
Daughter
French- Fille
Latin- Filia
Latin is the older than French and Italain. So linguists say it is derived from Latin
Xxx
My Etymology
Puthra in Sanskrit = Puthalva in Tamil = Fils in French; Filius in Latin
R=L change is universal.
Where did Latin get it from?
Filius= Priya in Sanskrit meaning; Darling.
xxx
Homo/ Man = Mahan/Son in Tamil
Mirror image of Homo is Moho(n)= Mahan in Tamil= Son
If you read it in reverse, it becomes Moho/n
Xxx
Conclusion
Though we use Makan and Pillai for Son in Tamil today, Pillai is a foreign word in Tamil. That is why Pillai is used less than Puthalva in 2000 year old Sangam Tamil Literature.
–subham—
Tags- பிள்ளை, பிரெஞ்சு , புத்ர, புதல்வன், சம்ஸ்க்ருதம், லத்தீன் , தமிழ் சொல்