பூமியின் இருதயத்தைப் பிளக்காதே – வேத முனிவன் அறிவுரை (Post.10,581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,581

Date uploaded in London – –    20 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 12

புறச் சூழல் பாதுகாவலர்களும் பசுமை நண்பர்களும் தினமும் படிக்க வேண்டியது பூமி சூக்தம்; பரப்ப வேண்டியது பூமி சூக்தம் ; அதில் 35-ஆவது பாடலில்/ மந்திரத்தில் ஒரு அருமையான வரி வருகிறது. “நாங்கள் உன்னுடைய இருதயத்தையோ மர்மஸ்தானங்களையோ தாக்கிவிடாமல் இருக்க வேண்டும்” . இந்த வேண்டு கோள் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதாவது பைபிள் என்னும் நூல் உலகில் தோன்றுவதற்கு முன்னர், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தமிழர்கள் எழுத்தோ இலக்கியமோ அறியாத காலத்தில் அதர்வண வேத முனிவன் பாடியது. என்ன ஆச்சர்யம்!! எதிர்காலத்தில் கலியுகத்தில், விண்வெளியுகத்தில் நடக்கப்போகும் கொடுஞ்செயல்களை உணர்ந்து இப்படிப் பாடினர் போலும்!

மணற் கொள்ளை பற்றி தினமும் படிக்கிறோம்; ஆறுகளை வெட்டிக் குழிதோண்டி, சேரும் சகதியுமாகச் செய்யும் கும்பல்கள் உள ; மற்றோர் புறம் கனிமங்களை, தாது வளங்களை, ரத்தினைக் கற்களை, தங்கத்தைத் தோண்டி எடுக்கும் கும்பல்கள் உள . பூமிக்கு அடியிலும் கடல் நடுவிலும் அணுகுண்டு சோதனைகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் செய்து பல கோடி மீன்களையும் கடல் தாவரங்களையும் அழிப்பதைக் கேட்கிறோம் . இது தவிர கடல் பவளம், கடல் முத்து என்று அலையும் கும்பல்களும் இருக்கின்றன. பூமாதேவி மீது எப்போதும் மனிதன் தாக்குதலை நடத்திக்  கொண்டு இருக்கிறான். இயக்கையாக நடக்கும் காட்டுத் தீயை விட மனிதன் சுயநலத்துக்காக உண்டாக்கும் காட்டுத் தீ சம்பவங்களையும் பத்திரிகைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் பூமா தேவியோ நம் மீது கருணை கொண்டு நமக்கு உணவு தானியங்களை அளிக்கிறாள்.

33-ஆவது மந்திரத்தில் சூரியனை ‘நண்பன்’ என்று அழைக்கும் சொற்றொடர் முக்கியமானது. ரிக் வேதம் முழுதும் கடவுளை ‘நண்பர்’ என்றே முனிவர்கள் உரிமை பாராட்டுகின்றனர். தாய் தந்தை என்று அழைப்பதை விட ‘நண்பா!’ என்றே அழைக்கின்றனர்.

பிராமணர்கள் தினமும் நடுப்பகலில் சூரியனைப் பார்த்து சொல்லும் மந்திரத்தில் நூறாண்டுக்கு காலம் வாழ்வோமாக; நோய் நொடியில்லாமல் நல்ல கண் பார்வையுடன் உன்னைக் காண்பேனா குக ; நல்லசொற்கள், நல்ல பேச்சு, மகிழ்ச்சி, ஆனந்தம் 100 ஆண்டுகள் கிடைக்கட்டும் என்று வேண்டுகின்றனர். இந்தக் கருத்து எல்லா வேதங்களிலும் வருகிறது. எப்போதும் POSITIVE THINKING  பாசிட்டிவ் சிந்தனை! அது இன்று வரை தொடர்வது அதிசயமே!

34 -ஆவது மந்திரத்தில், மனிதன் புரண்டு படுத்து தூங்குவது பாடப்படுகிறது. ஒட்டு மொத்தக் கருத்து எங்களை நன்றாக தூங்க உதவி செய் என்பதே. மேலை நாட்டில் தூக்கம் வராமல் கஷ்டப்படுவோர்தான் அதிகம். நல்ல உறக்கம், நல்ல கனவு பற்றி தினமும் வேண்டும் மக்கள் இந்துக்கள்.

மனிதன் கனவு காணாமல் தூங்க  முடியாது என்று நவீன அறிவியல் கூறுகிறது. இதை அறிந்த இந்துக்கள் கெட்ட கனவுகள் எனக்கு வேண்டாம் என்று தினமும் வேண்டுகின்றனர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கெட்ட கனவுகள் அழியட்டும் என்று சொல்லி பிரார்த்தனையை முடிக்கிறார்கள். சிவன் கோவிலில் தினந்தோறும் அபிஷேகம் செய்யும் போது சொல்லும் ருத்ரம் சமகத்தில்  ‘இந்த நாள் நல்ல நாளாக இருக்கட்டும்; நல்ல தூக்கம் எங்களுக்கு கிடைக்கட்டும்’ என்று வேண்டுகின்றனர்

சாந்தி பாடம் என்பதைச் சொல்லிவிட்டு நீண்ட துதியைப் பாடுவார்கள். அதில் ‘சயனம் சமே , சுதினம் சமே’ என்ற சொற்கள் எனக்கு ‘நல்ல உறக்கம் தா, நல்ல தினத்தை அருளுக’ என்பது முதலில் வந்து விடும்

35 ஆவது மந்திரம்தான் இன்று எல்லா கட்டிடங்களிலும் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வேண்டியது “பூமியின் இருதயத்தையும் மர்ம  ஸ்தானத்தையும் காயப்படுத்தாமல் இருப்போமாகுக”. புறச் சூழலை பாதுகாருங்கள் பூமியைக் காப்பாற்றுங்கள் — என்ற இந்த சிந்தனை குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னவர் வந்ததை உலகம் முழுதும் பறை சாற்றுவது இந்துக்களின் கடமை.

36-ஆவது மந்திரத்தில் ஆறு பருவங்களும் வந்து விடுகின்றன. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஆறு பருவங்கள்தான். உலகின் ஏனைய பகுதிகளில்- ஐரோப்பாவில் 4 பருவங்கள். இமயம் முதல் குமரி வரையுள்ள இந்த கருத்து மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமையடி, மிதியடி, தடியடி கொடுக்கும் வரிகள். வேத கால இந்துக்கள் குளிர் பிரதேசத்திலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்லுவோரை தமிழர்கள் புரட்டிப் புரட்டி அடிக்கும் வரிகள்; சங்கத் தமிழ் இலக்கியத்தில் 6 பருவங்கள்; வேதத்தில் 6 பருவங்கள் இந்த எல்லா பருவங்களிலும் எங்கள் மீது உணவு மழை பொழிக ! சொரிக என்று முனிவன் வேண்டுகிறான்.

2100 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் பாடிய ருது சம்ஹாரம் என்ற பாடல் தொகுப்பு ஆறு பருவங்களை மிக அழகாக சித்தரிக்கிறது . அதைத் தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றினர். தமிழர்கள் பெரும்பொழுதையும் சிறு பொழுதையும் ஆறு, ஆறாக வகுத்தனர்

காளிதாசன் ஏன் ருதுசம்ஹார என்ற ஆறு பருவ வருணனைக் காவியத்தை கோடை காலத்துடன் துவங்கினான் என்று அறிஞர்கள் வியப்பர். அதற்கு விடை 36 ஆவது மந்திரத்தில் கிடைத்துவிட்டது . அ .வே. புலவனும் ‘க்ரீஷ்ம’ என்று கோடை  காலத்திலேயே துவங்குகிறான்.

இதோ நான்கு பாடல்களும், தமிழில் அவற்றின் பொருளும் —

யாவத் தே அபி விபஸ்யாமி பூமே ஸூர்யேன  மேதினா

தாவன் மே சக்ஷுர்மா மே ஷ்டோ த் தராமுத்தராம்  ஸ மாம் -33

யச்சயானஹ பர்யாவர்தே தக்ஷிணம் ஸவ்யமபி  பூமே பார்ஸ் வம்

உத்தா னாஸ்த்வா ப்ரதீசீம்  யத் புஷ்டீபிரதிசேமஹே

மா ஹிம்ஸிஸ்தத்ர நோ பூமே ஸர்வஸ்ய  ப்ரதீசீவரி -34

யத் தே பூமே விகனாமி க்ஷிப்ரம் ததபி ரோஹது

மா தே மர்ம விம்ருக்வரி மா தே ஹ்ருதயமர்பிபம் – 35

க்ரீஷ்மதே பூமே வர்ஷானி சரத் ஹேமந்தஹ சிசிரோ வசந்தஹ

க்ருதவஸ்தே விஹிதா ஹாயநீரஹோராத்ரே ப்ருதிவி நோ துஹாதாம் -36

xxx

பொருள்

சூரியனை நண்பனாகக் கொண்டு நான் உன்னைப் பார்க்கும் வரை , ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டு ஓடும்வரை, என்னுடைய கண் பார்வை மங்கக் கூடாது – 33

பூமி த தாயே ! உன் மீது நாங்கள்  வலது புறம், இடது புறம் சாய்த்து சாய்த்து உறங்கும்போதும் நிமிர்ந்து படுக்கும்போதும், புரண்டு படுக்கும்போதும் எங்களுக்கு இன்னல் செய்யவேண்டாம் . உன்னுடைய அருளால் எல்லோரும் உறங்குகிறார்கள் -34

நான் உன்னை தோண்டி, அகழ்ந்து எதை எடுத்தாலும் அது மீண்டும் வளரட்டும்; தூய்மை செய்யும் தாயே உன்னுடைய இருதயத்தையும் மர்ம ஸ்தானங்களையும் நாங்கள் காயப்படுத்தாமல் இருப்போமாகுக – 35

கோடை காலமும் குளிர் காலமும் மழைக் காலமும் இலையுதிர் காலமும் முன்பனி காலமும் பின்பனிக் காலமும் உன்னுடைய பருவங்கள் ; அவையே ஆண்டு என்பதையும் அதில் அடங்கிய இரவு பகலையும் உண்டாக்குபவை; அந்தக் காலம் முழுதும் எங்கள் மீது வளத்தை வாரி வழங்குவாயாகுக (பாலைச் சொரி வாயாகுக)-36

To be continued…………………………………

tags- பூமி சூக்த கட்டுரை 12, பூமி, இருதயம், மர்ம ஸ்தானம், பிளக்காதே 

மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி! (Post No.10,580)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,580
Date uploaded in London – – 20 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!

ச.நாகராஜன்

பலபட்டடைச் சொக்கநாதர் சிறந்த மீனாக்ஷி பக்தர். அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்ட அவர் மீனாக்ஷி அம்மனை தரிசித்தால் என்ன பேறு கிடைக்கும் என்பதை ஒரு பாடலில் தெரிவிக்கிறார் இப்படி:

முக்கட் பராபரை சொக்கப் பிரானெனு முன்னவனோ
டொக்கச் சிறந்த கயற்கண்ணி சந்நிதி யுற்றுமிகச்
செக்கச் சிவந்தபொற் றாமரைப் பாததெரிசனைக்கே
பக்கத் தடுத்தவர் சொர்க்கத் தினை யெட்டிப் பார்ப்பவரே

இதன் பொருள் : முக்கண் பராபரை – மூன்று கண்களையுடைய பராபரை (ஆகிய மீனாக்ஷி அம்மன்)
சொக்கப்ப்பிரான் எனும் முன்னவனோடு ஒக்க – சொக்கநாதன் என்னும் முதல்வனோடு சமமாக
சிறந்த – மேன்மை அடைந்திருக்கின்ற
கயல்கண்ணி = மீனாக்ஷியம்மையின் (அவளது)
சந்நிதி உற்று – சந்நிதிக்குச் சென்று
மிகச் செக்கச் சிவந்த – மிகுந்து செக்கச் செவேலென்று சிவப்பாக இருக்கும்
பொன் தாம்ரை – பொற்றாமரை போன்ற
பாதம் – திருவடிகளின்
தெரிசனைக்கும் – தரிசனம் செய்யும் பொருட்டு
பக்கத்து அடுத்தவர் – (அங்கு வந்து) பக்கத்து அடுத்தவர்
சொர்க்கத்தினை எட்டி பார்ப்பவர் – சொர்க்க லோகத்தை எட்டிப் பார்ப்பவராவர்!

இன்னொரு பாடலால் தன் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர்.

மைக்கார் குழற்பெண் வடிவாளைத் தென்னவன் மாமகளை
அக்காளை யோன் பங்கிலாத் தாளை மாறங்கை யானவளைத்
திக்கார் தொழுங்கயற் கண்ணாளை ஓர்தினஞ் சேவை செய்தால்
எக்காலமு மவர் சொர்க்காதி போகத் திருப்பவரே

ஒரே ஒரு தினம் மீனாக்ஷி சந்நிதி சென்று சேவை செய்தால் கூடப் போதும், எக்காலமும் சொர்க்க போகம் தான் என்று அறுதி இட்டு உறுதி கூறுகிறார் புலவர்.
பாடலின் பொருள்:
மை – மேகம் போன்ற
கார் – கருமை நிறமுள்ள
குழல் – கூந்தலை உடைய
பெண் வடிவாளை – பெண் உருவம் கொண்டவளை
தென்னவன் மாமகளை – பாண்டியனின் சிறந்த மகளை
அக்காளையோன் பங்கில் ஆத்தாளை – அந்த ரிஷப வாகனனாகிய சிவபிரானின் ஒரு பாகத்தில் உள்ள உலக மாதாவை
மால் தங்கை ஆனவளை – திருமாலுக்குத் தங்கையானவளை
திக்கார் தொழும் கயல் கண்ணாளை – திக்கிலுள்ளோர் அனைவரும் தொழும் மீன் போன்ற கண்களை உடையவளை
ஓர் தினம் சேவை செய்தால் – ஒரே ஒரு தினம் சேவித்தால்
எக்காலமும் – எந்தக் காலத்திலும்
அவர் – அப்படிச் சேவித்தவர்
சொர்க்காதி போகத்து இருப்பவரே – சொர்க்க முதலாகிய போக பூமிகளில் இருப்பவர் ஆவார்.
தேவியின் பெருமை, தேவியைத் துதிப்பதால் ஏற்படும் நற்பயன் ஆகியவற்றைச் சொல்லும் பலபட்டடைச் சொக்கநாதரின் பக்தியின் ஆழம் வெளிப்படும் பாடல்கள் இவை.
மீனாக்ஷி அம்மனைத் துதிப்போம்; சொர்க்க போகம் அனுபவிப்போம்!

tags – பலபட்டடைச் சொக்கநாதர், புலவர், பக்தர், மீனாக்ஷி


Animals taught us Yogasanas -3 (Post No.10,579 A)

Animals taught us Yogasanas -3 (Post No.10,579 A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,579-A

Date uploaded in London – –    19 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

49 YOGASANA PICTURES ARE SHARED BETWEEN TAMILANDVEDAS.COM AND SWAMIINDOLOGLY .BLOGSPOT.COM. TO GET ALL THE ASANA IMAGES PLEASE VISIT BOTH THE BLOGS.

PART A IN TAMILANDVEDAS.COM

PART B SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

PART THREE- A

PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

TAGA- YOGASANA 3

TAMILS FOLLOW VEDIC SEERS IN ‘WORD AND THOUGHT’ (Post No.10,578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,578

Date uploaded in London – –    19 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LET ME CONTINUE MY COMMENTARY ON THE MOST FAMOUS SECUALAR HYMN IN THE ATHARVA VEDA (AV) KNOWN AS ‘BHUMI SUKTAM’ OR ‘HYMN TO MOTHER EARTH’.

We have seen up to Mantra 28 out of 63 Mantras or stanzas in the hymn. Hindus spread the Five Elements concept (Pancha Bhutas) through out the world. They allocated separate qualities/Gunas and attributes to Water, Fire, Air, Earth, and Space/Ether. They also used them as similes. Earth has the Fragrance as its special Guna/quality. Fragrance is Gandha in Sanskrit. Tamils also use this. Another quality of earth is PATIENCE.

We dig it, excavate it, plough it, turn it upside down and yet it always helps like our own Mother. So, her virtue is Patience according to Tamil and Sanskrit scriptures. Here we see Tamil poet Tiru Valluvar repeat what the Atharva Veda seer said:-

The earth supports the men who dig at it. Similarly, bear with those who scorn you; that is the best virtue”- Kural 151

Another translation of the same couplet,

“Just like the earth which supports the men who dig it,

Men of virtue bear with those who heap scorn on them” – 151

Sangam Tamil literature book Paripatal also has this comparison (2-55 Paripatal)

This is an echo of AV mantra 29; Vedic seer praises ‘Patient Earth’.

Xxx

Mantra 30 is about the usefulness of Water. It helps us to maintain our body clean.

There are two important points here.

Hindus take bath every day before worshipping God. Whether one lives in cold Himalayas or scorching Kanyakumari, they take a shower. This explodes the Aryan Migration Myth proposed by the Max Muller gang and Marxist Gang. Water is part and parcel of a Hindu’s life. From birth to death he must use water according to scriptures . that shows Vedic Hindus belong to tropical region and NOT Central Asia or Siberia.

Mantra 30 is also used by Tamil poet Valluvar in his Kural couplet,

If rains fail, festivals of the year and the daily worship of God will cease -Tiruk Kural couplet 18

In Mantra 29 , the Vedic seer warns the Anti God trespassers saying ‘we offer them an unpleasant welcome’.

Xxx

Mantra 31

Here again the poet is apologetic for treading on earth and requests Mother Earth to be pleasant in all the four directions. This is a genre followed by Hindus until this day.  They ask for a shield or armour which will protect them from bad things coming from four or eight directions. In Sanskrit those mantras are called Kavasam/shield/Armour. Tamils also recite it every day.

Here the poet repeats ‘May I not stumble while I live in this world’. He said it already in a previous verse.

The poet is not talking about physical stumbling; he talks about moral stumbling. He prays to Mother Earth that he should not deviate from the moral path. He should not fall in bad habits.

Xxx

Mantra 32

Again the Vedic poet talks about protection in all the four directions North, East, West, South (NEWS).

We also get another picture of ancient India; like today there were robbers who waylaid the people and took all their valuables. This is in 2000 year old Sangam Tamil literature and earlier Vedic literature. Pusan was the God who protected them according to Vedas. Poet prays for protection from such attacks. Damayanti episode in the Mahabharata gives us a vivid description of such an attack ( I have already written about it).

But the important message in this Mantra or stanza is ‘Take Deadly Weapons Far Away from Us’. The poet prays for a peaceful world where there is no war. Rig Veda is full of wars and battles; so do Sangam Tamil literature. If we open a history book, we read more about wars than good things. The world has already suffered from two World Wars in our own time. The annual review of Economic Times says that at any time there are at least 50 battles or clashes happening in the world. In our own time we saw George Bush of America and Tony Blair of Britain used lame excuse to attack Libya and Iraq. Politicians are modern day robbers that is mentioned in the previous Vedic verse.

A Tamil poet by name Bharatidasan also prayed for Warless World. That became a popular song in two Tamil films (Puthiyator Ulakam Seyvom; ketta poridum Ulakaththai Verodu Saippom)

Kanchi Paramacharya Swami of Tamil Nadu wrote a beautiful Sanskrit verse, that was sung by the famous singer M S Subbalakshmi in the United Nations Organisation. He also emphasized that the world should Renounce War (Yuddham Tyajatha). He simply echoed the AV poet’s prayer. In one Rig Vedic hymn the poet/seer says in crystal clear term ‘We don’t want War’.

Here is Kanchi Shankaracharya’s message:-


English Translation

With Friendship please serve,

And conquer all the hearts,

Please think that others are like you,

Renounce war for ever,

forsake competition for ever,

forsake force to get,

Some one else’s property,

For Mother Earth is a wish giving cow,

And God our father is most compassionate,

Restrain, Donate and Be kind,

To all the people of this world.

May All People of this World be Happy and Prosperous

May All People of this World be Happy and Prosperous

May All People of this World be Happy and Prosperous

(I have underlined the words from Rig Veda and Upanishad)

Sanskrit Original

Maithreem Bhajatha , Akhila Hruth Jethreem,

Atmavat eva paraan api pashyatha

Yuddham thyajatha , Spardhaam Tyajata , thyajatha Pareshwa akrama aakramanam

Jananee Prthivee Kaamadughaastey

JanakO Deva: Sakala Dayaalu

Daamyata Datta Dayathvam Janathaa

Sreyo Bhooyaath Sakala Janaanaam

Sreyo Bhooyaath Sakala Janaanaam

Sreyo Bhooyaath Sakala Janaanaam.

Xxx

LINGUISTIC TITBITS

Millions of Brahmin Hindus do thrice a day Sun Worship with water, known as Sandhyavandanam. They worship all important Vedic Gods, Goddess Gayatri and the Four Directions. The Sanskrit words found in the Mantra 31 for directions are used by Brahmins until today. Another wonder is that those Sanskrit words are used in Sangam Tamil Book Purananuru (verse 229 by Kudalur Kizar) in Tamilised form!

To be continued…………………………..

TAGS- earth, patience,  Kural 151, Atharva Veda, No war, Maithreem Bhajatha

இஸ்லாமியர்கள் பற்றிய இப்போதைய தகவல்! (Post No.10,577)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,577
Date uploaded in London – – 19 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

இஸ்லாமியர்கள் பற்றிய இப்போதைய தகவல்!

ச.நாகராஜன்

ஜப்பான்
ஜப்பான் என்றுமே இஸ்லாமியர்களைத் தனது நாட்டில் நிரந்தரமாகக் குடியேறி வாழ அனுமதித்ததில்லை. அவர்களால் அங்கு நிரந்தரமான சொத்து எதையும் வாங்க முடியாது. அவர்களால் சொந்தமாக எந்த வணிகமும் செய்ய முடியாது. வணிக நிறுவனத்தின் சொந்தக்காரராகவும் அங்கு இருக்க முடியாது.

இஸ்லாமிய வழிபாடு அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.
இஸ்லாமைப் பரப்ப முயலும் எந்த ஒரு இஸ்லாமிய சுற்றுலாப் பயணியும் உடனே பிடிக்கப்பட்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்படுவார்.

க்யூபா
முதன் முதலாக ஒரு மசூதி கட்டத் திட்டமிடப்பட்டதை கியூபா நிராகரித்து விட்டது. அனுமதி தர மறுக்கப்பட்டது.

அங்கோலா
அங்கோலா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் அதிகாரபூர்வமாகவே இஸ்லாத்தைத் தடை செய்துள்ளன.

நார்வே
2000 இஸ்லாமியர்கள் சண்டையிடும் குற்றத்திற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். குற்றமிழைக்கும் இஸ்லாமியர்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நார்வே நாட்டின் குற்றங்கள் 72 விழுக்காடு குறைந்துள்ளது!
அங்குள்ள ஜெயில் அதிகாரிகள் சிறைச்சாலைகள் பாதி காலியாகவே இப்போது உள்ளன என்று அறிவித்துள்ளனர்.
நீதிமன்றங்கள் அநேகமாக காலியாகவே வேலை எதுவுமின்றி உள்ளன.

காவல் துறையினருக்கு இப்போது பல ஆக்க பூர்வமான பணியில் ஈடுபட நிறைய நேரம் கிடைத்துள்ளது.
குறிப்பாக அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அனைவரும் சாலையில் ஆபத்தின்றி விபத்தின்றி செல்லுமாறு செய்யத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

ஜெர்மனி
ஜெர்மனியில் மட்டும் ஒரு வருடத்தில் 81 மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய போலீஸ் 13 ஜிஹாதிகளைக் கைது செய்துள்ளது.

சீனா
சீனா 22 இஸ்லாமிய இமாம்களை சிறைக்கு அனுப்பியுள்ளது. அவர்களது தண்டனைக் காலம் 16 முதல் 20 ஆண்டுகள் வரை உள்ளது.
18 ஜிஹாதிகளுக்கு அவர்கள் மரணதண்டனை விதித்துள்ளனர்.
தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுவதை சீனா நிராகரித்துள்ளது.
ஜிஞ்ஜியாங் மாகாணத்தில் அரசுக் கட்டிடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
நூற்றுக் கணக்கான இஸ்லாமியக் குடும்பத்தினர் தங்கள் சொந்த இல்லத்திற்குச் செல்ல மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் தங்களை கிறிஸ்தவ நாடுகள் விரும்புவதில்லை என்பதை உணரத் தொடங்கியுள்ளனர். IS ஆல் சிரியா மற்றும் இராக்கில் நடக்கும் தொடர் போர்கள், இளம் சிறார்களையும் , இளம் தாய்மார்களையும் கொன்று குவிப்பது ஆகியவை இந்த நாடுகளில் யாருக்கும் பிடிக்கவில்லை. இளம் பெண்களை செக்ஸுக்கு அடிமையாக்குவதைக் கண்டு அவர்கள் திகைத்து வெறுக்கின்றனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் ஹோம் செக்ரடரி ஆண்டி சோஷியல் பிஹேவியர் ஆர்டர் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி சமூக விரோதிகளை வெளியேற்ற முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.

செக்கோஸ்லேவேகியா
இஸ்லாமை சாத்தான் என்று எண்ணி செக் நாடு அதை அனுமதிக்கவில்லை.

அமெரிக்க மாகாணங்கள்
பல அமெரிக்க மாகாணங்கள் சர்ச்சைக்குரிய ஒரு மசோதாவை நிறைவேற்ற உள்ளன. இதன்படி பல அயல்நாட்டு சட்டங்கள் – ஷரியத் சட்டம் உட்பட – தடை செய்யப்படும்.

போலந்து
‘போலந்து டிஃபென்ஸ் லீக்’ இஸ்லாமியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது அங்குள்ள 16 மாகாணங்கள் ஷரியத் சட்டத்தைத் தடை செய்துள்ளன.

வட அயர்லாந்து
வட அயர்லாந்தில் உள்ள பல இஸ்லாமியர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பத் தயாராகி விட்டனர். உள்ளூர்க்காரர்களுடன் ஏற்படும் மோதலை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை.
பெல்ஃபாஸ்டில் நடந்த ஒரு மோதலின் விளைவாக இந்த முடிவு அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஐரிஷ் இளம் பெண்களைக் கூட்டு பலாத்காரத்தை ஷரியத் சட்டத்தின் படி செய்ய வேண்டும் என்று கூறியதை ஒட்டி கலவரம் வெடித்தது.
அங்குள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் காயம்பட்ட் இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை தருவதில் அக்கறையே காட்டவில்லை.

ஒரு பேண்டேஜைப் போட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

நார்த் கரோலினா
நார்த் கரோலினா இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை தடை செய்து அதை கிரிமினல் குற்றம் என்று அறிவித்துள்ளது.

நெதர்லாந்து
நெதர்லாந்து எம் பிக்கள் (MP) மசூதிகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மைக்கே டெ க்ராப் (Michael De Graf) என்ற எம் பி தனது பார்டி ஃபார் ஃப்ரீடம் கட்சியின் சார்பில் பேசுகையில், நெதர்லாந்தில் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட வேண்டும். இஸ்லாம் இல்லாமல் நெதர்லாந்து வாழ்வதற்கு ஒரு அற்புதமான நாடாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.

இவை அனைத்தும் Bloomberg, September 7, 2020 – https:// timesof india.indiatimes.com தரும் கவலையூட்டும் செய்திகள்.

இது உண்மை தானா என்பதை முதலில் உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர், இஸ்லாமிய சாமானியர்கள் அனைவரும் ஒன்று கூடி ஏன் இப்படி உலக நாடுகள் தங்களை வெறுத்து ஒதுக்கி அப்புறப்படுத்துகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

செய்வார்களா?


tags- இஸ்லாமியர்

Animals taught us Yogasanas -2 (Post No.10,576 A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,576-A

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

49 YOGASANA PICTURES ARE SHARED BETWEEN TAMILANDVEDAS.COM AND SWAMIINDOLOGLY .BLOGSPOT.COM. TO GET ALL THE ASANA IMAGES PLEASE VISIT BOTH THE BLOGS.

PART A IN TAMILANDVEDAS.COM

PART B SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

PART TWO- A

TAGS- YOGASANAS-2

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை (Post No.10,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,575

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 11

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

PATIENCE AND EARTH

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

அதர்வண வேத பாடல் / மந்திரம் 28 வரை கண்டோம். 63 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் இதோ 29-ஆவது மந்திரம் :-

மந்திரம் 29

விம்ருக்வரீம் ப்ருதிவீ மா வதாமிம் க்ஷமாம் பூமிக்கு ப்ரஹ்மணா வாவ்ருத்தானாம்

ஊர்ஜம் புஷ்டம் பிப்ரதிம்மன்னபாகம்  க்ருதம் த்வாபி  நி ஷீதேம பூமே -29

பொருள்

பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே ,  உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா? 

இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.

எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது

‘நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்’ (உன்னுடைய பொறுமை நிலத்தைப் போன்றது)

சம்ஸ்க்ருதத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது

ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்

XXX

WATER AND PURITY

மந்திரம் 30

சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நி தத்மஹ

பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30

சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது

  எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன்

இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

Xxxx

STUMBLING BLOCKS

மந்திரம்/ பாடல் 31

யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்

ஸ்யோநாஸ்தா மஹ்யம் சரதே பவந்து மா நி  பப்தம் புவனே நிஸ்ரியாணஹ –31

பொருள்

உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்

என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.

இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !

இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER  விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை  செய்யும்  சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,

புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!

அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.

XXXX

பாடல் 32

மா நஹ பஸ்சான்மா  புரஸ்தான்னுதிஷ்டா மோத்தராத்தராதுத

ஸ்வஸ்தி பூமே நோ பவ மா விதன் பரிபந்தினோ வரீயோ யாவயா வதம் –32

பொருள்

மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.

பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32

கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத   என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..

இமயம் முதல் குமரி வரை நம் சிந்தனை ஒன்றே.

TO BE CONTINUED…………………

TAGS- பூமி, பொறுமை, அகழ்வாரை , பூமிஸூக்தம்-11

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம் (Post.10,574)

WRITTEN BY DR. A. NARAYANAN, LONDON

Post No. 10,574

Date uploaded in London – –   18 JANUARY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம்

                                                                 ( தமிழாக்கம்)

Translated into Tamil by Dr A Narayanan , London, UK

                                 (ஆதி சங்கர பகவத் பாதர் திருவடிகளே சரணம்)

நலம் தர வேண்டுவோமோ  நான்முகனும்

இந்திராதி தேவர்கள்  நாடிப்போற்றும் மலை

போன்ற இடையூறுகளைக்  களைய கணபதி

எனும் ஆனைமுகம் கொண்ட பால சிங்கனே                    1

சொல்லும் பொருளும் அறியாதோன் இயற்றவோ

செய்யுளும் உரை நடையும் இயலான் நாவிலோ

செந்தில் முருகன் வீற்றிருக்க வருமோ வியப்பாக

சொல்லும் பொருளும் இணைந்த கவிதை                            2

மலை மீதமர்ந்தோன் மறையுள் மறைந்தோன்

மனதைக் கவர்ந்தோன் சித்தத்தில் விரிந்தோன்

ஓதும் வேதத்துட்பொருளோனான முருகனும் பரம 

சிவபாலனுமான லோகபாலனைத் துதிக்கிறேன்               3 

முறையிட்டு வருவோரை  பிறவிக்கடல்

கரை சேரவே செந்தூர் கடலோரம் கோயில்

கொண்ட சக்திக் குமரனே புனிதனான

உன் சரணையடைகின்றேன்                                                       4

ஓங்கி எழும் அலைகள் கரை மோதி

உரு த்தெரியாப் போவது காட்டுவதோ

பெருந்துயரும் மறையும் கோயிலில்

செந்தூரான் கழலடியே கரையானதாலே                                5

கந்தமா மலை முகட்டில் பந்தமாய்  நின்ற

கந்தனை ஏறி வந்து அடி பணிவோர் வாழ்வு

உயர்வற உயர்நலமருளும் அறுமுகனை

அயருறா அனவரதமும் துதிப்பேனே                                      6

இன்னல்கள் யாவும் ஈடேறும் கடற்கரையில்

சென்னிய முனிவர்களுக்குகந்த கந்தம்

கமழும் சுகந்த மலைக்குகையில் ஒளி வீசும்

குகன் கழலடி பணிவோம்                                                         7

மாணிக்கம் பதித்தப் பட்டு மஞ்சத்தில் வீற்று

வேண்டுவதெல்லாம் ஈன்றிடும் தேவர்களின்

தெய்வ நாயகனாய் ஆயிரம் ஆதவன் போல்

ஒளியூரும் கார்த்திகேயனே நினைவாகிறான்                    8

செந்தாமரைக் கழல்களீணைந்த சதங்கைகள்

அழகும் அவையுரைத்தெழுப்பும் அமிருத தாரை

ஒலியில் சித்தம் கவரும் நித்தன் பத கமலத்தில்

மனம் துவளும் வண்டாய் மகிழ்வேனே                              9



பொன் வண்ண ஆடையும் பசும்

பொன் பட்டியும் இடை தழுவிய

மேகலையின் கிங்கிணி ஒலியில்

கண் கூசக் காட்சி தரும் கந்தனே                                      10

கழலடிகள் பற்றுமடியார்களை காக்கும்

கந்தனே தாரகசூரனை வதைக்க வேட்டுவ

மன்னனின் வார்குழல் வஞ்சி வள்ளி குங்கு

மப்பூத்தோய்ந்த மார்பகமிருகத்தழுவ செந்

தோளனான செந்திலோனைப் பணிகிறேன்                 11

பிரமனைத் தண்டித்துலகம் படைத்த கரங்களே

போர் வாரணங்களை வதைத்துப் பகைவரையழிக்க

வாசவனுக்கு வலமாயிருந்துலகம் காத்த

வலிவான கரங்களாவதால் சரணடைகிறேன்               12

முகில் காணா சரத் கால வானில் ஆறு

முழு மதிகளாய் மாசிலா ஒளியோனாய்

ஆறு சந்திரங்களுக்கொப்பானவன்

ஆறு முகங்களிணைந்த கந்தனே                                      13

புன்னகை பொழியும் மலர் தாமரையொத்த 

ஆறுமுகங்களில் பொன் வண்டுக்கூட்டங்களய்

ஒளிரும்பார்வையும் கொவ்வைப்பழ உதடொடு

ஒழுகும் அழகன் ஆறுமுகனையே பணிகிறேன்            14

கருணையே வடிவான கந்தனே!

காதுவரை நீண்டகன்ற பன்னிரண்டு

கண்களின் கனிந்த பார்வையால் கழலடி

பணிவோரை காண உனக்கென்ன தீங்கு                        15

அழகே வடிவாய் அரன் அங்கத்தினிற் தோன்றி

ஆறு முறை உச்சி முகர்ந்து அரனே ஆசி கூறி

ஆறு முகங்களில் அகமகிழ ஒளி வீசும் கிரீடங்கள்

அலங்கரித்த உலகைக்காப்போனைப் பணிகிறேன்   16

பொங்கும் மேனி அழகில் தங்கும் ரத்னத் தோள் வளைகள்

எங்கும் ஒளி வீச செவியிலசையும் குண்டலங்களிலொளிரு

மிரு கன்னங்களும் இடைத்தழுவிய மஞ்சப் பட்டாடையும் கை

தாங்கிய வேலோடு சிவபாலன் ஒழுகுக என்னகமும் புறமும்           17

குழந்தைக் குமரன் கூப்பிட்டத் தருணமேத்

தாய் மடியினின்றுத் தாவினானோ விரித்த

தந்தை இரு கைகளணைப்பில் ஆனந்தித்த

தளிர் மேனிக் குமரனைச் சரணடைகிறேன்           18

குமரனே!  சிவகுமரனே! கந்தனே! சேனாபதியே!  

கோலமயில்வாகனனே!  குகனே!வேலனே!

வள்ளி நாயகனே!அடியார்கள் அல்லல் தீர்ப்போனே!

தாரகனை வதைத்தவனே! எம்மை என்றும் காப்பாயாக     19

அடங்கியதோ ஐம்பொறிகள் செயலற்றதாக

அடித் தொண்டை சளி வாய் வெளித்தள்ள நடுங்கி

ஆடிய உடல் அனாதையாகி மரணமெனுமச்சத்தில்

ஆட்கொள்வாயோ குகனே !என் முன்னுடனே தோன்றி          20

சினங்கொண்ட யமதூதர்கள் மரணத்தருவாயில்

சீறி வெட்டு குத்து கொளுத்து என்றென்னை

அச்சுறுத்தும்போது அஞ்சாதே என்று வேலேந்திய

ஆறுமுகனாய் மயிலேறி எனைக் காக்க வருவாயோ             21

தலைவா! என் தலையுன் தாளிணைந்து வேண்டுவதோ

நிலை குலைந்தென்னுயிர் பிரியும் இறுதி காலத்திலுன்

நினைவில் நாவேதும் நவிலாதினும் பொருட்படுத்தாது

எனைக் காப்பாயோ கருணைக்கடல் கந்தனே!                          22

பத்மாசூரன் தாரகாசுரன் சிம்மமுகன் எனும் அசுரர்கள்

கொண்ட வர வலிமையில் விண்ணோரும் மண்ணோரும்

கொடுமையில் கொந்தளிக்க  வேலேடுத்தவ்வசுரர்களை

வதைத்த கந்தனே! என் மனவேதனையழிய நீயே கதி            23

துயரமெனும் சுமையால் தொய்து நிற்குமெனக்குத்

தோளிணைந்த உறவினனாய் என்றுமென்னுடன்

துணைவனான உமை பாலனே! நானிரப்பதோ

தீய எண்ணங்களிடையுரா பக்திக்கருள் புரிவாயே                 24

தாரகனை மாய்த்தவனின் திரு நீறு மடித்த இலைக்

கண்டவுடன் அபஸ்மாரம், மேகநோய் குஷ்டம்,காசம்,

குன்மம்,பைத்தியம் போன்ற கொடிய நோய்களும்

பிசாசுகளும் பறந்து போவது திரு நீறின் மகிமையே               25

காண்பதெல்லாம் கந்தனாக, செவி கேட்பதெல்லாம்

கந்தன் புகழாக வாய் மொழிவதவன் கீர்த்தி சரிதமாக

கந்தனுக்கே கைகள் தொண்டு புரிய காலமெல்லாம்

காயத்தை கந்தனுக்கற்பணிக்க அருள்வாயோ குகனே        26

பக்தியெனும் பாதைகள் பலவாக விருப்பத்திற்கேற்ப

பல தெய்வங்களைத் தொழுபவரோ முனிவர்களும்

சில மனிதர்களுமாக பாமரராயிழிந்தோர் பக்திக்குத்

தன்னையே தந்திடும் நீயே கண் கண்ட கடவுள்

குமரனே! உற்றாரும் உறவினர்களும் மற்றுமென்

குடும்பத்தாரும் ஆடவரும் பெண்டிரும் விலங்

குட்பட கந்தனையே சிந்தனையில் வைத்துத்

துதித்து சரணடைய அருள்வாயே                                          28

கிரௌஞ்ச மலையுருவாயிருந்து அல்லல்கொடுத்த

அசுரனைக் கொடும் வேலால் கொன்றது போலென்

உடல் துயருறும் மிருகங்களையும் நாய்களையும்

புட்களையும்(தீ வினைகள்)*  வேலால் களைவாயோ        29

*உட்கருத்து

தாய் தந்தையர் தனையர் பிழை பொறுத்துத்

தவிர்பது போல் தேவசேனாபதியே !தரணிக்கே

தந்தையாகிய நீயுன் தனயங்களுளிச்சிறிய

தனயன் பிழைகளைப் பொறுப்பாயாக                              30

கந்தனே! உன்னோடிணைந்ததில் பெருமையடையும்

கடலுமதை சார்ந்த சிந்து தேசமான செந்தூருக்கும்

வேலுக்கும் சேவலுக்கும் மயிலுக்கும் ஆட்டிற்கும்

மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள்

அளவிலாப் புகழுடன் ஆனந்த வடிவாய்

அகண்ட ஒளியாய் ஆனந்தக் கடலாய்

அனைத்துயிர்க்கும் முத்தியளிக்கும்

சக்திக் குமனுக்கென்றும் வெற்றி

வளம்பெறவாழ்விற்கு நன் மக்களையும்

மனையாளையும் நீங்காத செல்வமும்

நீண்ட ஆயுளும் ஈன்றிடுமே குகப்

பெருமானின் இத்தோத்திரம்                                  33 

நாராயணன் 

XXXX

தைப் பூசம்

திங்களோர் பூசம்

தைத்திங்கள் தனிப்பூசம்

நேசமாய்  நம்முடனிரு ந்து

தேசம் பலவற்றில்

மோசமான நோய் பீடிக்க

வீசுகின்ற வேலில்

நாசமாகுமோ பசியும் பிணியும்

தேசுடன் வாழ 

பாசம் பொழிபவனோ

பழனியப்பன்

நாராயணன் 

XXXX

மறையோ திரையோ

திரையின் பின் நிற்கும்

பறை தரும் நீ அறிவாயே

முறையிடுமடியார்கள் உன்

மறை முகம் கண்டு

கரை சேரும் காலம்

நிறைவாகும் பொழுதும் நீ

வரையறுத்ததுதானே

நாராயணன்

–SUBHAM—

tags- ஆதி சங்கர,  சுப்ரமண்ய புஜங்கம்

Efficacy of Vishnu Sahasranamam! (Post No.10,573)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,573
Date uploaded in London – – 18 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Efficacy of Vishnu Sahasranamam!
Santhanam Nagarajan

After the Kurukshetra war Yudhishthira went to see Bhishma. Bhisma was lying in arrow bed. Lord Krishna advised Yudihisthira to seek advise from Bhishma. He did so.
The dialogue between them is narrated in Anusasayan Parva of Mahabharata. Bhishma gives the Lord’s thousand names in Vishnu Sahasranama.

There are 108 verses in Vishnusajasranama. Each and every name has got its own hidden potentials.
Learned saints have prescribed certain names for curing certain ailments. They have also prescribed certain verses for recitation to fulfill one’s desired desire.
I am giving below one portion of the above details for the benefit of all.

Education: to gain knowledge
Vedo veda-vidha-vyango vedango veda-vit-kavih || Sloka 14
To cure stomach ache
Bhrajishnu rbhojanam bhokta sahishnu rajaga-dadijah | Sloka 16
For enthusiasm
Ateendriyo maha-mayo mahotsaho maha-balah || Sloka 18
To get shukshma buddhi
Maha-buddhir-maha-veeryo maha-shaktir-maha-dyuthih | Sloka 19
Eys sight improvement

Sahasra-moordha vishvatma saha-srakshah saha-srapat || Sloka 24
To gain great respect
Satkarta satkruta-sadhuh jahnur-narayano narah || Sloka 26
To fulfill one’s desires
Siddhar-thah siddha-sankalpah siddhida siddhi-sadhanah || Sloka 27

For Marriage
Kamaha-kama-krutkantah kamah kama-pradah prabhuh || Sloka 32
Great job
Vyava-sayo vyava-sthanah sams-thanah sthanado dhruvah | Sloka 42
To get over Fear of Deatth
Vaikunthah purushah pranah pranadah pranavah pruthuh | Sloka 44
To gain Wealth

Artho-nartho maha-kosho maha-bhogo maha-dhanah || Sloka 46
To have good mind (Buddhi)
Sarva-darshee nivru-tatma sarva-gno gnana muttamam || Sloka 48
To have Ananda (pleasure)
Anando nandano nandah satya-dharma trivi-kramah || Sloka 56
For Kshemam

Anivarthee nivru-ttatma samkshepta kshema-krutchhivah | Sloka 64
To get away from all Shoka (pain, difficulties)
Bhooshayo bhooshano bhooti vishoka shoka-nashanah || Sloka 67
To cure diseases
Poornah poorayita punyah punya-keerti rana-mayah || Sloka 73
For Liberation (Moksha)

Sadgati satkruti-satta sadbhooti satpa-rayanah | Sloka 75
Chhatru jayam (Victory over enemies)
Sulabha suvratah siddhah shatruji chhatru-tapanah | Sloka 88
To distance oneself from all accidents
Amoorti ranagho chintyo bhaya-krudbhaya-nashanah || Sloka 89
For Mangalam

Svastida svasti-krut svasti svastibhuk svasti-dakshinah || Sloka 96
To avoid bad dreams
Uttarano dushkrutiha punyo dussvapna nashanah | Sloka 99
For Papa nasam
Devakee nandana srashta kshiteeshah papa-nashanah || Sloka 106
It is desirable to chant the full thousand names regularly in the morning or evening hours so that all round properiety will be ensured.
From time immemorial, thousands and thousnads have benefitted by reciting this regularly. It is a regular practice in religious homes of Hindus.

Our sastras/ scriptures like Siddhisaram karma vibhaga samuchchayam etc have prescribed Vishnusahasranamam for pariharams ( to remove various illness/thoshas)
If we devote sometime, we will be able to find more and more information to remove all of our thoshas!

NOTE
Published in http://www.ezinearticles.com on 7-12-21
Article Source: https://EzineArticles.com/expert/Santhanam_Nagarajan/19574 Article Source: http://EzineArticles.com/9434905

OLD ARTICLES

Three Books on a ‘Deity with a Thousand Names’: Vishnu …https://tamilandvedas.com › 2015/04/17 › three-books-…17 Apr 2015 — Compiled from London swaminathan Post No 1806; Date 17th April 2015 Uploaded in London at 15-24 The first book review is from my old paper …

யோகாசனத்தை நமக்குக் கற்றுக் கொடுத்தது மிருகங்கள் ! (Post 10,572)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,572

Date uploaded in London – –    17 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம்.  அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.

பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.

நான் கூறும் சில காரணங்கள்:

உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !

புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.

பகவத் கீதை 2-58

மனு ஸ்ம்ருதி  7-105

திருக்குறள் 126

திருமந்திரம்  2360

XXX

தவளை அதிசயம்

கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும்  பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில்  பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.

இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..

திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண்  ங்கள் வேறு :

ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.

அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப்  படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து  பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப்  பயன்படுத்தலாம்.

–SUBHAM–

tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்