PICTURE QUIZ DATED 23rd  DECEMBER 2021(Post No.10,478)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,478

Date uploaded in London – –   23 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.WHAT HAPPENED ON THESE DATES WHICH CHANGED HISTORY?

2.WHRE IS THIS TEMPLE?

3.WHAT IS THIS TEMPLE ? AND WHAT IS THE NAME OF THE TANK?

4. WHERE IS THIS PYRAMID STRUCTURE?

5.WHERE IS THIS GATEWAY?

6.WHAT IS THIS TOWER? WHERE IS IT?

7.WHAT IS THIS TEMPLE CALLED?

8.MAP OF WHAT COUNTRY IS SHWN HERE?

9.WHERE IS THIS CATHEDRAL?

10.WHERE ARE THESE ELEPHANTS FROM?

ANSWERS:-

1.September 11, 2001:-World Trade Centre in Manhattan, New York was destroyed by a plane filled with fuel. An Egyptian terrorist piloted the plane.

December 7, 1941: Japanese Planes bombed Pearl Harbour and America joined the Second World War.

November 9, 1989:- Berlin Wall was demolished and Two Germanys merged as one country.

June 28, 1914:- First World War started by a Serbian Terrorist by shooting dead Archduke Franz Ferdinand, Imperial heir to the throne of Austria.

2. Tiruvannamalai Arunachaleswar Temple in Tamil Nadu

3.Madurai Sri Meenakshi Sundareswarar Temple and the Tank is called Golden Lotus Tank.

4.Chichen Itza in Yucatan, Mexico

5.Gateway of India, Mumbai

6. Eiffel Tower, Paris, France

7.Temple of Mahalakshmi , Mumbai

8.Map of Switzerland

9.Notredame Cathedral in Paris

10. Elephants are from Africa, very different from Indian elephants.

–subham–

tags – Picture quiz23122021

பூமி எப்படி விழாமல் நிற்கிறது? தமிழன், வேத ரிஷி கண்ட உண்மை ! (Post.10,477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,477

Date uploaded in London – –   23 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-1

பூவுலகத்தைப் பற்றி வேதகால மனிதன் சிந்தித்திருக்கிறான். அது மட்டுமல்ல . அவனுக்கு பூமி பற்றி மிகப் பரந்த விஞ்ஞான அறிவு இருந்திருக்கிறது. .3 விஷயங்கள் வேதத்தில்  தெளிவாக உள்ளன.

1.பூமி என்பது வட்ட வடிவமானது .

2.பூமி என்பது அந்தரத்தில் நிற்கிறது.

3.அது விழாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசையே காரணம்

பூமியை அண்டம்/முட்டை, கோளம் என்றே வருணித்துள்ளனர்; பிரபஞ்சமே வட்ட வடிவில் பலூன் போல ஊதிப் பெருத்து வருகிறது என்பதையும் அவர்கள் அறிவர் ; தமிழர்களும் இதை பின்பற்றி மிகவும் பிற்காலத்தில் பாடி வைத்தனர்

பூமியை ஏதோ தாங்கி நிற்கிறது? அது எது? என்ற கேள்வியை எழுப்பி விடை காண்கின்றனர். அதிலிருந்து இந்த பூமி விழாமல் இருக்கிறது என்ற கருத்து தொனிப்பதைக் காணலாம். ஏன் ‘தாங்கி’, ‘பாரத்தைச் சுமந்து’ என்ற சொற்கள் வந்தன? பிற்காலத்தில் ஆதி சேஷன் தலையில் பூமி நிற்பதாகவும்  , ஆமை முதுகில் நிற்பதாகவும் சொன்னதற்கு வேறு காரணங்கள் உள. .இதற்கு தார்மீக காரணம் ஒன்று; விஞ்ஞான காரணம் ஒன்று. அது பற்றி விரிவாகச் சொல்கிறேன்.

‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY – ALL ARE DERIVED FROM SANSKRIT GRAHA) என்று சூரியன், சந்திரன், பூமி எல்லாவற்றுக்கும் பெயரிட்டனர் முன்னோர்கள். இதன் பொருள் ‘பிடித்தல்’. ‘பாணிக் கிரஹணம்’ என்றால் ‘கைப்பிடித்தல்’ = கல்யாணம்; ‘சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம்’ என்றால் ஒரு நிழல் அவைகளைப் பிடிக்கிறது. ஆங்கிலத்தில் பிடித்தல், ஈர்த்தல் என்ற எல்லா சொற்களும் ‘கிரஹ’ (GRIP, GRAB, GRAVITY) என்ற வேர்ச் சொல்லில் இருந்தே வருகிறது. ஆக, கிராவிடி GRAVITY  என்னும் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே . தமிழர்களும் சம்ஸ்கிருதத்தை அப்படியே மொழி பெயர்த்து ‘கோள்’ என்றனர். கொள் (USED AS SUFFIX IN REFLEXIVE VERBS MEANING YOU KEEP IT FOR YOURSELF- YOU GRAB IT) என்ற வினைச் சொல்லுக்கும் ‘பற்றுதல் , பிடித்தல்’ என்றே பொருள்.

அதர்வண வேதத்தின் 12 ஆவது காண்டத்தின் முதல் துதி பூமி சூக்தம்; 63 பாடல்கள் அல்லது மந்திரங்கள் அடங்கியது. இதை உலகம் முழுதும் கட்டாய பாடமாக (COMPULSORY LESSON FOR ALL STUDENTS)  வைக்கவேண்டும். அற்புதமான விஞ்ஞான, சமூக, இயற்கை, மற்றும் புறச் சூழல்  விஷயங்களை ஒருவர் அருமையாகப் பாடியுள்ளார்..

அதை விரிவாக ஆராய்வதோடு ஆங்காங்கே ஒப்பிட்டும் காட்டுகிறேன்.

வையகமும் துயர்  தீர்கவே என்று சம்பந்தர் பாடினார் ; அது ‘லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என்பதன் மொழியாக்கம். அந்தக்கருத்து இந்தப்பாடலில் வருகிறது. மைத்ரீம் பஜத என்ற சம்ஸ்கிருதப் பாடலை இயற்றி, அதை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி மூலம் ஐ.நா சபையில் பாடவைத்தார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ;அந்தக் கருத்தும் இதில் வருகிறது .

ஒன்று பரம்பொருள் – நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி என்று பாரதியார் சொல்லும் கருத்ததும் இப்பாடலினின்று பிறந்த கருத்தே .

காண்டம் 12; சூக்தம் 474; பூமி (12 ஆவது காண்டத்தில் முதல் துதி)

ஸத்யம் ப்ருஹத்துதமுக்ரம் தீக்ஷ  தபோ ப்ரஹ்ம யக்ஞ ப்ருதிவீம் தாரயந்தி

ஸா நோ பூதஸ்ய  பவ்யஸ்ய பத்ன்யுரும்  லோகம் ப்ருதிவீ  நஹ க்ருணோது

எவ்வளவு எளிமையான சொற்கள்; இந்திய மொழிகள் அறிந்த அனைவருக்கும் தெரிந்த  சத்யம் /வாய்மை, தவம், தீட்சை , ருதம், பிரம்மம் , யக்ஞம், பிருத்வீ , உக்ரம் — இவைதான் முதல் மந்திரத்தில் வருகின்றன .

இந்த உலகம் எப்படி இன்றும் விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது ? பூமி முட்டை வடிவில் இருந்தால் சமுத்திர நீர் ஏன் கீழே விழாமல் இருக்கிறது? வட்ட வடிவ அண்டத்தில் (அண்டம் = முட்டை)  கீழே இருப்போர் எப்படி தலை கீழாக நின்றும் விழாமல் இருக்கிறார்கள்?

இவ்வளவு கேள்விகளுக்கும்  தமிழன் சொன்ன விடை :-

புறநானூறு பாடல் 182. உண்டாலம்ம இவ்வுலகம்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182).

இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

:”இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.”

இதையே வள்ளுவரும் செப்புகிறார்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் – 82)

பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

இன்னொரு குறளில் ,

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். (குறள் – 996)

பொருள்: பண்புடையவர்கள் இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.

பாரத மாதா நவரத்தின மாலையில் கற்றவராலே உலகு காப்புற்றது என்று பாரதியாரும் பாடுகிறார் .

ஆக  உலகம் அழியாமல் இருக்க அமிர்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்ணுவோர் இருப்பது ஒரு காரணம். இரண்டாவது பண்புடையோர் இருப்பது மற்றொரு  காரணம். பண்புடையோரை வேதமும் பாரதியும் ஆரியர் என்று எல்லாப் பாடல்களிலும் படியிருப்பதைக் காணலாம். ஆரியர் அல்லாதோர் பூரியர் ; தஸ்யூக்கள் ; அ தாவது கிரிமினல்ஸ் CRIMINALS ; இந்தச் சொல் ஆங்கிலத்தில் ஸ்பூரியஸ் SPURIOUS என்று புழக்கத்தில் உள்ளது

ஸ்பூரியஸ் SPURIOUS = பூரியர் (ஆரியரின் ARYA x SPURIOUS எதிர்ப்பதம் )

SPURIOUS = FALSE, FAKE, ILLEGITIMATE

XXXX

அதர்வண வேதம் சொல்லும் காரணம்

சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார்  இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை  அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .

அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம் இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொ   வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து  ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM

உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM  என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்

இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ;  அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்

முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும் (ப=வ)

இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!

தவம் –

சங்க இலக்கியத்தில் சுமார் 50 இடங்களில் தவ/ம் என்ற சொல் வருகிறது; மஹா சம்ஸ்க்ருத மேதையான வள்ளுவன், பத்து குறள்களில் தவ/ம் என்ற சொல்லை பயன்படுத்துகிறான். சிலப்பதிகாரம், மணிமேகலையில் நிறைய இடங்களில் ‘தவம்’ வருகிறது இந்த வேத காலச் சொல்லை அறியாத தமிழன் இல்லை; அறியாவிட்டால் அவன் தமிழனும் இல்லை

தீட்சை யக்ஞம் ,பிரம்மம் முதலியன ஆன்மீக இலக்கியங்களில் மட்டும் வருகின்றன. ஆயினும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு நல்ல பாயிண்ட்  POINT சொல்கிறார். சங்க இலக்கியத்திலேயே ‘வேள்வி’ என்ற மொழிபெயர்ப்பு இருப்பதால் (யக்ஞ = வேள்வி) இது தமிழர்களும் இந்துக்களும் ஒரே வேத கலாசாரத்தில் வந்ததைக் காட்டுகிறது என்கிறார். வெள்ளைக்கார கிறிஸ்தவ மகா பாவிகள், இதை இறக்குமதி விஷயம் என்று சொன்னதற்கு அவர் மிதியடி கொடுக்கிறார் .

யஜ = அக்கினியில் ஆஹுதி கொடுத்து வேண்டுதல் =  யக்ஞம் ;

வேட்கை – தீ மூட்டி, நெய்ச் சோறு பெய்து , வேண்டுவதைப்  பெறுவது வேள்வி ; யஜ் =வேள்

XXX

முதல் மந்திரத்தில் இன்னும் ஒரு அற்புத தகவல் வருகிறது !

பூமியை ராணி என்று வருணிக்கிறார். பின் னொரு மந்திரத்தில் தாய் என்று இந்த ரிஷி வருணிக்கிறார் . அதை விட முக்கியமான விஷயம் எதிர்காலம் பற்றிப் பேசு வதாகும் ; ‘பூத,  பவிஷ்ய’ என்ற இரண்டு சொற்களைக் காணலாம். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் முதல் ஸ்லோகத்திலேயே பூத, பவிஷ்ய, பவத் என்று முக்காலமும் வருகிறது. இங்கு நிகழ் காலத்தைச் சொல் லத் தேவை இல்லை. புலவர் பாடிக்கொண்டிருக்கிறார். கடந்த காலம் போலவே வருங்காலமும் இருக்கட்டும் ; இந்த உலகம் மேலும் விரிவடைந்து காக்கட்டும் என்ற அருமையான வாசகம் உள்ளது. பூமியை பத்னி (மனைவி) என்று சொல்லி இருக்கிறார். இதை மகா ராணி என்றும் சொல்லலாம்.

ஆனால் புறநானூற்றுப் புலவரும் ‘நில மடந்தை’ என்று பாடுகிறார் . மன்னரின் மனைவி பூமி; அதாவது ராஜ்ய லக்ஷ்மி ; எல்லா மன்னர்களும் என்னை மட்டும் விட்டு விட்டுப் போகின்றனரே ; நான் மட்டும் தொடர்ந்து பூ பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றேனே  என்று மார்கண்டேயனார், புறநானூறு 365ல் பாடுகிறார் . புலவரின் பெயர் என்றும் 16 வயதுடன் வாழ்ந்த மார்க்கண்டேயனின் புராணக்கதையை நினைவுபடுத்தும். பாடலில் பூமாதேவி தன்னை ‘விலை நலப் பெண்டிர்’ என்று தாழ் த்திக்கொள்ளுவது நிலையாமையை வலியுறுத்தவே. முடிசார்ந்த மன்னரும் பின்னர்  பிடி சாம்பலாய்ப் போனதை நிலமகள் சொல்லி அழுகிறாள் என்கிறது புறநானூறு.

ஆக, பூத, பவிஷ்ய, பத்னி என்பதற்கெல்லாம் பெரு விளக்கம் தேவைப்படும் மந்திரம் முதல் மந்திரம்.

இன்னும் 62 மந்திரங்கள் இருக்கின்றன இந்தப் பாடலில்!! தொடர்ந்து காண்போம்.

Xxx subham xxxx

tags-

பூமி சூக்தம் , அதர்வண வேதம், உண்டாலம்ம , நிலமகள் சத்யம், ருதம், தவம்

மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்! (Post No.10476)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,476
Date uploaded in London – – 23 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்!
ச.நாகராஜன்

பாரதம் கண்ட 64 கலைகளில் இசைக் கலை மிக முக்கியமானது. அந்தக் கலையிலும் வாத்தியங்கள் அற்புதமான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவை.
இந்திய மக்களின் வாழ்க்கையில் இசையும் வாத்தியங்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் காலம் காலமாக முழுவதுமாகக் கலந்திருப்பதை நமது இதிஹாஸங்களான இராமாயணம், மஹாபாரதத்தில் காணலாம். வேதங்கள் இசை மஹிமை பற்றியும் ஒலியின் சக்தி பற்றியும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன; ஒலி பற்றிய பல அபூர்வ இரகசியங்களை அவை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் நமக்கு ஒரு அபூர்வமான நூலைப் படைத்து அளித்திருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன்.
பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பிள்ளையவ்ர்களைப் பற்றித் தெரிந்திராதவர்களே இல்லை. அவரது பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர். பாரம்பரிய சங்கீதம் இவர் ரத்தத்தில் ஊறியதற்கு இந்த ஒரு காரணம் போதாதா என்ன?
மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இசை சம்பந்தமான மிருதங்க இசை மரபு என்ற அரிய ஆய்வை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது ஆய்வின் அடிப்படையில் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
அதில் ஒரு புத்தகம் : மிருதங்க இசை மரபு.
104 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகதம் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.
முன்னுரை, மிருதங்கம் தோற்றம், வளர்ச்சி, மிருதங்கம் தயாரிப்பு மரபு, மிருதங்கம் பாட மரபு, மிருதங்கம் வாசிப்பு மரபு, முடிவுரை ஆகிய தலைப்புகளில் ஏராளமான சுவையான செய்திகளைப் படித்து வியக்கிறோம். பிரமிக்கிறோம்.

முன்னுரையில் நூலாசிரியர் தரும் சுவையான தகவல்களில் சில :
இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் தமிழகத்தில் இருந்தன. சர்.சி.வி.ராமன் மிருதங்க வாத்தியத்தின் மீது அபார பற்று கொண்டவர். அதன் ஒலி பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.
தினமும் காலையில் எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் ஒன்றாக மிருதங்கத்தை நமது சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன.
அடுத்து மிருதங்கம் அதன் தோற்றம் வளர்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தில் சிவபிரானிடமிருந்து எப்படி வாத்தியங்கள் தோன்றின என்ற வரலாறு நமக்குக் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் அர்ஜுனன் மிருதங்கம் வாசித்தது, சங்க இலக்கியத்தில் வாத்தியங்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள், கல்வெட்டு தரும் சான்றுகள் என பிரமிக்க வைக்கும் தகவல்கள் ஓரிழையாகத் தரப்படுகிறது.
மிருதங்க வாத்தியம் மரபு வழுவாது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம். இந்தத் தயாரிப்பாளர்கள் எந்த ஊர்களில் இருக்கிறார்கள் என்பதும் தரப்படுகிறது.


தாளத்தினைப் போட்டு பாடல்களைப் பாடும் போது அவற்றிற்குத் துணையாகப் பலவகைத் தாள வாத்தியங்கள் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும், மிருதங்கத்திற்குரிய சொற்கள், கால அளவு மிக நுட்பமாக இங்கு விளக்கப்பட்டுள்ளன.
சில சொற்களை மிருதங்கத்தின் இரு புறங்களிலும் வாசிப்பதனால் தான் நாதம் பிறக்கிறது.
நாதம் நாதம் நாதம்
நாதத்தேயோர் நலிவுண்டாயின்
சேதம் சேதம் சேதம்

தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கோர் தடையுண்டாயின்
கூளம் கூளம் கூளம்
என்ற மஹாகவி பாரதியாரின் கவிதா சொற்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை இந்த நூலாசிரியர் திரு க.தியாகராஜன் தக்க தகவல்களைத் தந்து நிரூபிக்கும் போது இவ்வளவு நுட்பமான நாம் அறிய வேண்டிய ஆழ்ந்த விஷயங்கள் உள்ளனவே என்ற வியப்பு மேலிடுகிறது. சங்கீதப் பயிற்சி கொள்வோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

மிருதங்க சம்பந்தமான தற்போதைய பாட திட்டத்தையும் 1966இல் தோற்றுவிக்கப்பட்டு மிக அருமையாக நடந்து வரும் மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பற்றிய விவரங்களையும் இந்த அத்தியாயம் கூடவே தருகிறது.
அடுத்து மிருதங்கம் வாசிப்பு மரபை விவரிக்கும் ஆசிரியர் மிருதங்கம் பற்றி பல மிருதங்க நிபுணர்கள் கூறிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தருகிறார்.

வயலினும் மிருதங்கமும் இல்லாத இசைக் கச்சேரிகளே தற்போது இல்லை. மிருதங்க வாசிப்பில் பாணி, தனித்தன்மைகள் (Different Styles) வேறுபடுகின்றன.
முடிவுரையில் பிரபஞ்சம் உள்ள வரை இயக்கங்கள் உண்டு. இயக்கம் உள்ளவரை லயம் உண்டு. லயம் உள்ளவரை ஜீவன் உண்டு. உயிர் உண்டு. லயத்திற்கே உயிர் கொடுக்கும், உருவைக் கொடுக்கும் மிருதங்க இசை மரபானது இசைத்துறைக்கு மட்டுமல்லாது உலகம் மேம்படவே வழிகளைத் தரும் என்று கூறி நூலை முடிக்கிறார் தியாகராஜன்.
அறிவியல் ரீதியாகத் தரப்பட்டுள்ள சான்றுகளைப் படித்தபின்னர் ஆம் என்று நாமும் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறோம்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கூறி இருக்கிறாரே, “ஸொகஸுகா மிருதங்க தாளமு” என்பதில் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பதை நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்வர்.

இந்த நூலுக்குத் தமிழக அரசு தக்க விருதைத் தர வேண்டும்; மத்திய அரசு தக்கபடி இவரை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் இதைப் படிப்போர் மனதில் எழுவது இயல்பே.

இவர் ஆய்வுக்கு தக்க முறையில் ஊக்கம் அளித்த ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலய முதல்வர் திருமதி டாக்டர் லதா வர்மா பாராட்டுக்கு உரியவர்.

இந்த நூல் அனைத்து நூலகங்களையும் சங்கீதத்தில் ஆர்வமுள்ளோர் இல்லங்களையும் அலங்கரித்து, ஏராளமான இசை விற்பன்னர்களை துறை சார்ந்த அறிவுடன் உருவாக்கும் என்று நம்பலாம்.

மொத்தத்தில் நல்ல ஒரு இசைக் கச்சேரியைத் தகுந்த மிருதங்க வாத்தியத்துடன் கேட்டு அனுபவித்த உணர்வை இந்த நூல் தருகிறது.
முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!


நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014

tags-மிருதங்க இசை மரபு, க. தியாகராஜன்,

APAAMAARGA HERB IN 4 HYMNS IN ATHARVANA VEDA (Post No.10,475)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,475

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

A herb called Apaamaarga is mentioned at least in four hymns of Atharvana Veda(AV). It shows its importance. Magical qualities of this herb make interesting reading. I have given here all the four verses. Let me mention the interesting bits first with my comments:

Apamarga is Achyranthes Aspera; it is Naayuruvi in Tamil according to Wikipedia

Ralph T H Griffith gives the following information in the footnotes: –

What is Apamarga?

It is identified as Achyranthes Aspera, a biennial plant frequently used in incantations, in medicines, in washing linen and in sacrifices, and still believed to have the power of making men proof against the stings of scorpions. It is called also Paraakpushpii, Pratyak Pushpii, and Pratyak parni from the reverted direction of  the growth of its leaves, flowers and fruit.

See also AV. IV-19- 4,7; VI-129-3; and VII-65-1

What is the meaning in Sanskrit?

Apaa= with; mrj= to cleanse, wipe.

This hymn is a charm , addressed to the plant endowed with magical virtues to secure immunity from various kinds of evil, and restoration of health.

xxx

MY COMMENTS

The first two mantras praise the virtues of this herb as ‘Conquering’ and ‘Queen of Medicines’. It banishes the curse.

Other mantras in the hymn are about evil spirits, which are driven out by this herb.

Tamils still believe in such things. The most famous Kavasam (armour, shield) in Tamil is on Lord Skanda composed by Devaraya Swamikal. It is recited by all Saivite Tamils. That has a long list of ghosts, fiends, and evil spirits. By reciting this Kavsam, all those evil spirits are driven away. It is an echo of Vedic mantras.

Hanuman Chalisa , the most famous hymn in the North, also considered an antidote for evil spirits; the hymn says ‘Bhuta Pisacha nikata nahim ave’, where Hanuman’s name is recited.

In the olden days even the virus and bacteria were listed as evil sprits. So South Indian Hindus used neem leaves to get immunity from small pox, chicken pox etc. and those neem leaves are considered symbol of goddess.

If the identification of this plant as Nayuruvi in Tamil is correct, then we can add one more interesting point. That herb is used in Navagraha Homa done in all House warming ceremonies. (My comments continues at the end of the hymns.)


HYMN XVII; BOOK 4; AV; SUKTA 119

A charm to secure freedom from various evils

1.We seize and hold thee, Conquering One! the queen of medi-
   cines that heal.
  O Plant, I have endowed thee with a hundred powers for every
   man,

2.Still conquering, banishing the curse, mighty, with thy reverted.
   bloom.
  Thee and all Plants have I invoked: Hence let it save us! was
   my prayer.
3.She who hath cursed us with a curse, or hath conceived a
   murderous sin,
  Or seized our son to take his blood, may she devour the child
   she bare.
4.What magic they have wrought for thee in dish unbaked or
   burnt dark-red,
  What they have wrought in flesh undressed,—conquer the
   sorcerers therewith.
5.Ill dream and wretchedness of life, Rākshasa, monster, stingy
   hags,
  All the she-fiends of evil name and voice, we drive away from
   us.
6.Death caused by famine, caused by thirst, failure of children,.
   loss of kine,
  With thee, O Apāmārga, all this ill we cleanse and wipe away.
7.Death caused by thirst, death caused by stress of hunger, loss at
   play with dice,
  All this, O Apāmārga with thine aid we cleanse and wipe away.


8.The Apāmārga is alone the sovran of all Plants that grow.
  With this we wipe away whate’er hath fallen on thee: go in
   health!

XXXX

HYMN XVIII; BOOK 4; AV

A counter-charm against the incantations of enemies

1.The moonlight equalleth the sun, night is the rival of the day.
  I make effectual power my help: let magic arts be impotent.
2.Gods! if one make and bring a spell on some man’s house who
   knows it not,
  Close as the calf that sucks the cow may it revert and cling to
   him.
3.When one puts poison in a dish of unbaked clay to kill a man,
  It cracks when set upon the fire with the sharp sound of many
   stones.
4.Endowed with thousand powers! adjure the bald and those with
   necks awry.
  Back to its author turn the spell like a dear damsel to her
   friend!
5.I with this Plant have ruined all malignant powers of witchery.
  The spell which they have laid upon thy field, thy cattle, or thy
   men.
6.No power had he who wrought the spell: he hurt his foot, he
   broke his toe.
  His act hath brought us happiness and pain and sorrow to him-
   self.


7.Let Apāmārga sweep away chronic disease and every curse,
  Sweep sorceresses clean away, and all malignant stingy hags.


8.Sweep thou away the sorcerers, all stingy fiendish hags away.
  All this, O Apāmārga, with thine aid we wipe away from us.

XXXX

HYMN CXXIX; BOOK 6; AV

A charm for success and happiness

1.With fortune of the Sisu tree—with Indra as my friend to aid
  I give myself a happy fate. Fly and begone, Malignities!
2.That splendour and felicity wherewith thou hast excelled the
   trees
  Give me therewith a happy fate. Fly and begone, Malignities
3.Blind fortune, with reverted leaves that is deposited in trees—
  Give me therewith a happy fate. Fly and begone, Malignities.

XXX

HYMN LXV; BOOK 7; AV

A charm against imprecation and threatened evils

1.With retroverted fruit hast thou, O Apāmārga, sprung and
   grown.
  Hence into distance most remote drive every curse away from,
   me.
2.Whatever evil we have done, whatever vile or sinful act,
  With thee, O Apāmārga, who lookest all ways, we wipe it off.
3.If with the cripple we have lived, whose teeth are black and
   nails deformed,
  With thee, O Apāmārga, we wipe all that ill away from us.

Hymn 18 given above adds interesting details about collecting this plant:-

The plant is collected during night time on full moon days .

Mantra 1 in hymn 18 says: I gather a plant whose efficacy is undoubted, which shall counteract the magical practises of malignant fiends and sorcerers.

In short people believed in its medical and magical qualities. Westerners are affected mentally than any other place. They spend a lot of time and money in counselling. Psychologists make good money in ‘driving away the evil thoughts/spirits. Hindus don’t waste time or money; they are advised to go to temples and breath fresh air and enjoy nature. They get cured within a few months. Westerners spoil the people with lithium tablets. So, mantras like this have more psychological benefits for the patients and the family that looks after the patients.

Nowadays Apamarga is sold commercially .

–subham–

எல்லாம் சிவரூபம் (Post 10,450a)

மாயன் மையானான் BY A NARAYANAN

Date Posted 24 December 2021

மண் தோன்றிய மங்கை

கண்டதெல்லாம் கண்ணனாக

வண்ணக் கவிதையாய் தீட்டிய

பண்ணோடிணையும் பாசுரங்கள்

விண்ணோரும் கேட்டு வியந்தனரோ

எண்ணத்திலடங்காதோனை தன்

கண்ணிடும் மையாகத் தீட்டத்

திண்ணமாய் இருக்கிறாளோ இம்

மண்ணுலக ஆரணங்கோ.

நாராயணன்

xxxxxxxxxxxxxxxxxxxxxx

பழனி

POSTED ON 23-12-2021

குன்றுதோரும் , நின்றோன் கோலமயிலேறி

ஞாலமெலாம் சுற்றி வந்தும் கை நழுவிய

பழம் வேழமுகன் கை காண அப்பனையும்

அன்னையையும் அண்ணனையும் துறந்து

ஆண்டி கோலமாயிருந்தும் அண்டியோர்

வேண்டியதை ஈன்றிடும் தருமசிவபாலன்

கிட்டாப்பழத்தால்  எட்டா ஞானப் பழமாய்

நின்ற குன்றே பழம் நீ மருவிய பழனி

நித்தத்தில் சித்தமாய் நின்றோன் தாளடி

நின்றோர் நிலமிசை நீடு வாழ்வர்

நாராயணன்

RITTEN BY DR. A. NARAYANAN

Post No. 10,450 a

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விரிசடையோன் செஞ்சடையோன்

பனி நீர் கங்கை திரு முடியோன்

பிறை சூடியோன் பீடுடையோன்

நெருப்பாக நெற்றிக்கண்ணுடையோன்

கரு நாகம் மாலையாயுடையோன்

திரு நீறு பூசுடர் மேனியுடையோன்

புலித்தோல் ஆடையுடையோன்

ஆல கால விடம் கண்டமுடையோன்

உடல் பாதியில் உமையுடையோன்

உடுக்கை ஒரு கையுடையோன்

மறு கை மழு உடையோன்

தூக்கிய திருவடி ஆடிய பாதத்தைத்

வீடு பெற  நாடுவோர் வீடடைவீரே

நாராயணன் 

Tags-  சிவரூபம்

TAMIL LESSON FROM LONDON-1

இது ஒரு பழக்கடை ; இவர் பழங்கள் விற்கிறார்

WRITTEN BY LONDON SWAMINATHAN

CONTACT- http://www.tamilandvedas.com

Also swamiindology.blogspot.com

Date- 22 December 2021

I taught Tamil at SOAS, University of London, for over 20 years as a part time tutor. I prepared lot of lessons to cater to the students at different levels. I was part of Cambridge University Tamil Examinations at GCSE and A Level and ASSET languages.

I am uploading Tamil lessons prepared over 20 years. Some pictures or tabular columns are from other books or sites. I will explain them as far as possible.

Feel free to contact me for clarfications or tutions.

Here is the First Lesson

Ival Oru Pen; Ival Pusthakam Padikkiraal.

She (is) a girl. She reads (a) book

Note:

இவள் (ஒரு) பெண் ; இவள் புஸ்தகம் படிக்கிறாள்

In Tamil short sentences can be formed without a verb.

in Tamil articles like a or an or the are optional; they are not alwayes used.

xxx

FRUIT SHOP (Picture is at the top)

This (is) a Fruit Shop. He sells fruits

Pazam = Fruit in singular

when you add Kal it becomes plural- Fruits.

In Engish you add S in most of the words.

If I say VirkiraaN= male

If I say virkiraaL = female

If I say VirkiraaR = gender free verb; but respectful.

Vil= to sell

Virkiraar = present tense

Kadai = Shop

Fruit Shop = Pazak Kadai

Ivar = He (with respectful R at the end.

இது ஒரு பழக்கடை ; இவர் பழங்கள் விற்கிறார்.

xxx

These (are) Stones

இவைகள் கற்கள் = Ivaikal Karkal
கல்= Kal = Stone
கற்கள்= Karkal = Stones
இவை = Ivai = These
இவைகள்= Ivaikal = These

Adding Kal, we change a word into plural.

xxxx

இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room
அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher
அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes
குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)

to be continued………………………………….

Tag- London Tamil lesson 1

அதிசய மூலிகை ‘அபாமார்கன்’ – – அதர்வண வேத அதிசயச் செய்தி (Post No.10,474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,474

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட”

………………………………………………….

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்” — கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

XXX

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக்கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

Xxxx

அபா மார்கம் என்றால் என்ன ?

தேள் கடி போன்ற விஷத்தை நீக்க இது பயன்படுகிறது மருந்துகள், யாகங்களிலும் உபயோகிக்கிறார்கள்; இதனுடைய வேறு பெயர்கள்- பராக் புஷ்பம், பிரத்யாக புஷ்பம்,  பிரத்யாக பரணி

இந்தப் பெயரின் சம்ஸ்க்ருத மொழி விளக்கம் —

அபா = உடன், உதவியுடன் ; ம்ரிஜ் = துடைத்து அழி = அபாமார்க ; ஏழாவது மந்திரத்தில் இது வினைச் சொல்லாக வந்துள்ளது

இதனுடைய தாவரவியல் பெயர்—

ACHYRANTHES ASPERA ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

மேல் விவரம் — லினன் போன்ற சணல் நார் துணிகளைச் சுத்தப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்

இதனுடைய இலைகளும் பூக்களும்

எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதால் இதை ‘பராக்’ என்ற சொல்லின் மூலம் விளக்குகிறார்கள்

இந்த மூலிகையை 4-19-4, 6-129-3;  7-65-1 ஆகிய மந்திரங்களிலும் காணலாம்.

xxx

எனது விமர்சனம்

இந்துக்களிடையே இரண்டு, மூன்று  நம்பிக்கைகள் உண்டு

1. நாம் செய்த பாவத்தால் நோய்கள் வரும்

2. நாம் மற்றவர்க்கு தீங்கு செய்தால் நமக்குத் தீங்கு வரும்

3. பிறர், பில்லி, சூனியம், மாய மந்திரத்தால் நமக்கு நோய்களைத் தர  முடியும் .

இவை அனைத்துக்கும் விஞ்ஞான விளக்கமும் உளது

1. பாவம் என்பது என்ன ? கெட்ட உணவு, அதிக உணவு  உண்ணுதல், குடித்தல் , பெண் வழிச்  சேரல் , புகை பிடித்தல் முதலியன  இவை தீமை என்பதை டாக்டர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் – குறள் 202-  என்பது வள்ளுவன் வாக்கு.

2.நாம் மற்றவர்க்கு தீங்கிழைத்தால் அது நமக்கு கெடுதி செய்யும். உணமைதான் ; அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள் ; அதுமட்டுமல்ல; கோபம், ஆத்திரம், சாபம் இடுதல் முதலியன ஒருவரின் சக்தியை உறிஞ்சுவிடும், மன நிலையைப் பாதிக்கும் என்று உள்ளவியல் – PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட் — நிபுணர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்

இந்துக்கள் இதற்கும் மேல் ஒருபடி சென்று தர்மமே நம்மைத் தண்டிக்கும் என்பர். பக்கா ஹிந்துவான  வள்ளுவனும் — மறந்தும் பிறன்கேடு சூழற்க , சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு — குறள் 204 — என்கிறான். இது தர் மோ ரக்ஷதி ரக்ஷிதஹ — என்பதன் மறு  வடிவம்.

கடைசி விஷயம்,  எல்லா பண்பாடுகளிலும் உளது. ஐரோப்பாவில் 19 வயது பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜோன்  ஆப் ஆர்க் உள்பட 90 லட்சம் பெண்களை சூன்யக்காரி என்று சொல்லி கிறிஸ்தவர்கள் , உயிருடன் எரித்துக் கொன்றதை GRIFFITH கிரிப்பித், வேத மொழி பெயர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார். உலகம் முழுதும் இப்படி நடந்துள்ளது.

இந்துக்கள் அப்படி யாரையும் கொல்லவில்லை ; ஆனால் சூனியம் வைத்தலை நம்புகிறோம். இதில் சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள்; மக்களுக்கு அவற்றைச் சொன்னால் புரியாது; ஆகையால் பேய், பிசாசு என்று சொல்லி வேப்பிலை போன்ற உண்மையிலேயே மருத்துவ குணம் உள்ள செடிகொடிகளை பயன்படுத்தினர். இரண்டாவது விஷயம் மன நோயைக் குணப்படுத்த நோயாளிக்கும், நோயாளியின் குடும்பத்துக்கும் நம்பிக்கை ஊட்ட சில விஷயங்களைக் ‘கற்பித்து’ விரட்ட வேண்டும்.

 வெளிநாடுகளில் மன நோய் உடையவர்களைக் குணப்படுத்துவது ஒரு பெரிய பிசினஸ் (Money Making Industry) . ஐந்தில் ஒருவருக்கு மன நோய் தாக்கியதாக புள்ளி விவரம் கூறுகிறது. நல்ல தூக்கம் தூங்கும் வயதுள்ள ஆட்கள் வெளிநாட்டில் இல்லை; சிறுவர்கள் மட்டுமே நல்ல தூக்கம் தூங்குகிறார்கள். மன உளைச்சவர்கள், சண்டை போடுவோர் முதலியோர் கவுன்சலிங் COUNSELLING என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டாலர்களை டாக்டர்களுக்கு கொடுக்கின்றனர். இந்துக்கள் மாய மந்திரம் என்று சொல்லி 5, 6 மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள். அவர்களும் பெரும்பாலும் குணம் அடைந்து விடுகிறார்கள்.

ஆயினும் பில்லி சூனியம் வெகு அபூர்வமாக நடை பெறுவதுண்டு . இதை கோடிக்கணக்கான இந்துக்கள் நம்புவதை கந்த சஷ்டிக் கவசம் முதலிய மந்திரங்கள் காட்டுகின்றன.; இது பற்றிய அச்சமும் மக்களிடையே இருக்கக்கூடாது என்பதற்காகவே தேவராய சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்றே நாம் கருத வேண்டும் .

தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு…

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்”

………………………… கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

—SUBHAM–

TAGS- அபாமார்க , நாயுருவி, அதர்வண வேதம், கந்த சஷ்டிக் கவசம், பில்லி, சூனியம்

பகவத்கீதை சொற்கள் INDEX-31; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -31 (Post.10,473)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,473

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-31; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -31

Ga sound

க்ர சமானஹ  11-30  விழுங்கி

க்ர சிஷ்னுஹூ  13-16  விழுங்குவதாயும்

க்லானிஹி 4-7  குறைவு, தாழ்வு

xxxx

Gha sound

காதயதி 2-21 கொல்விப்பான்

கோரம் 11-49 பயங்கரமான………………………………….. 5 WORDS

கோரே  3-1  கொடிய

கோஷஹ  1-19 ஒலி , கோஷம்

க் னதஹ   1-35 கொல்லுபவர்

க் ராணம்   15-9 நாசி, மூக்கு

Xxx

Cha sound

சக்ர ஹஸ்தம் 11-46 கையில் சக்ரம் உடையோன் ………………… 10

சக்ரம் 3-16 – சக்ரம்

சக்ரிணம் 11-17 சக்ரதாரி

சக்ஷுஹு 5-27 கண்கள்

சஞ்சலவாத்  6-33  உள்ளம் ஸஞ்சலம் உடைய து ஆகையால்

சஞ்சலம் 6-26  சஞ்ச லமானது…………………. 15

சதுர்புஜே ன  11-46  நான்கு கைகளுடன்

சதுர் விதம் 15-14  நான்கு விதமான

சதுர் விதாஹா  7-16   நான்கு வகையான

சத்வாரஹ 10-6  நால்வர் – சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்

சந்த்ர மசி 15-12- சந்திரனில் ……………..20

சமும் 1-3 ராணுவம், படை

சரதாம் 2-67  அலைகின்ற

சரதி 2-71 சஞ்சரிக்கின் றானோ

சரன்  2-64  அனுபவித்துக்கொண்டு

சரந்தி –  8-11  பின்பற்றுகிறார்களோ………………………… 25

சரம்  13-15  அசையும் பொருளாக

சராசரஸ்ய 11-43 அசையும், அசையாத 

சராசரம் 10-39 அசையும், அசையாத 

சலதி  6-21  நழுவுதல்

சலம்  6-35  நிலையற்றது …………………… 30

சலிதமானஸஹ  6-37  நழுவிய மனத்தை உடையவன்

சாதுர்வர்ண்யம்  4-13   நான்கு ஜாதிகள் …………………. 32

32 WORDS ADDED IN THIS PART 31

TO BE CONTINUED……………………………………

tags- gita tamil index 31

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2 (Post No.10,472)

ALL PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN DURING HIS VISIT TO NERUR IN 2019

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,472
Date uploaded in London – – 22 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2
ச.நாகராஜன்

தஞ்சாவூரில் இரு முஸ்லீம் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் பெருமையை அறிந்து அவர் முகமது நபியால் அனுப்பப்பட்டவர் என்று கருதினர். அவரைச் சந்தித்து அவரது அருளாசியையும் அவர்கள் பெற்றனர். தங்களது மத வழக்கப்படி அல்லாவை எப்படித் தொழுவார்களோ அதே போலவே சதாசிவ ப்ரஹ்மேந்திராளையும் அவர்கள் தொழுவார்கள். அவருடனேயே அவர்கள் இருந்து காலத்தைக் கழித்தனர். அவரது அருளைப் பெற்றதால் பெரிய மகான்களாக அவர்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான் என அனைவரும் அழைப்பர். அவர்கள் இறந்தபின் அவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் சமாதி எழுப்பப்பட்டது.. அது இரட்டை மஸ்தான் சமாதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரே சமயத்தில் அவர் மூன்று இடங்களில் தோன்றிய சம்பவ்ம் ஒன்று உண்டு. திருச்செந்தூரில் பாம்பு கடித்து இறந்த மணப்பெண்ணை அவர் உயிர்ப்பித்தார்; அதே சமயம் தஞ்சாவூர் அருகே கொதித்துக் கொண்டிருந்த வெல்லப்பாகைத் தண்ணீர் அருந்துவது போல கையால் மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் சிதம்பரத்தில் தரபாடித் திருவிழாவில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்.

1712-1718இல் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அமைச்சரான மல்லாரி பண்டிட் அவரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்கவில்லை என்றும் அவரது அருளாசி வேண்டும் என்றும் வேண்ட அவர் ஆசி வழங்கி ஆத்ம வித்யாவிலாஸம் என்ற நூலையும் அவருக்கு அளித்தார்.

மௌனமாகவே தன் நாட்களைக் கழித்து வந்த போது ஒரு நாள் திருவிசைநல்லூர் ஐயாவாள் உங்கள் குரு பேசத்தானே கூடாது என்றிருக்கிறார், இறைவனைத் துதிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே என்றார். அந்தக் கணத்திலிருந்து இறைவன் மீது அற்புதமான பல கிருதிகளை சதாசிவர் இயற்றிப் பாடலானார். பிரபலமான அவரது பாடல்கள் ஏராளமான சங்கீத கச்சேரிகளில் இன்றும் இடம் பெற்று வருகின்றன. அவரது பாடல்கள் பரமஹம்ஸ அல்லது ஹம்ஸ என்ற முத்திரையைக் கொண்டிருக்கும். பஜரே யதுநாதம், பஜரே கோபாலம், ஸ்மர வாரம் சேதஹ போன்ற பாடல்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். சாமா ராகத்தில் அமைந்த மானஸ சஞ்சரரே மிகவும் பிரபலமான ஒரு பாடல்.

this picture is taken from public domain

ஏராளமான அபூர்வ நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். யோகசூத்திர விருத்தி, பிரும்ம சூத்திர விருத்தி, சித்தாந்த கல்பவல்லி, சிவமானஸ பூஜை, ஆகிய நூல்களைக் குறிப்பாகச் சொல்லலாம். குரு ரத்தினமாலிகை என்ற அவரது நூல் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆசார்யர்களின் திவ்ய சரிதங்களையும் பாரத தேசத்தில் அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்களைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றிய செய்திகளையும் தருகிறது. நவ மணி மாலா என்ற நூல் அவரது குருவான பரமசிவேந்திர சரஸ்வதியைப் போற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். ஆத்ம வித்யா விலாஸம் என்ற நூல் 62 செய்யுள்களைக் கொண்டுள்ள ஒரு சம்ஸ்கிருத நூல்.

திருவிசைநல்லூரில் வாழ்ந்து வந்த சதாசிவர் அங்கிருந்து நெரூருக்குச் சென்றார். நெரூர் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தவம் செய்யவும் தனித்து வாழவும் உகந்த இடமாக அது அமைந்திருந்தது. அது மட்டுமின்றி அங்குள்ள ஆறு தெற்கு நோக்கிப் பாய்வதால் அது காசிக்குச் சமமாகக் கருதப்பட்டது.

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் 1755ஆம் ஆண்டு மக நக்ஷத்திரத்தன்று வைசாக சுக்ல தசமியில் சமாதி நிலை எய்தினார். தான் சமாதி அடைவதற்கு முன்னர் அங்கு சமாதியில் ஒரு வில்வ மரம் தழைக்கும் என்று அவர் கூறினார். காசியிலிருந்து ஒரு அந்தணர் லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார். அன்றே நமக்கு நிர்யாணம் ஏற்படும். அகண்ட காவிரியின் தென்கரையில் நெரூரில் சமாதி வைத்து வில்வ மரத்தையும் அங்கு வளரச் செய்யுங்கள் என்றார். அதே போலவே நடந்தது. அதே போல சமாதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த பாணலிங்கத்தை புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமான் ஸ்தாபித்தார். அங்கு ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது.
அவர் மூன்று இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் கூறுவர்.

தமிழ் நாட்டில் உள்ள நெரூர், மதுரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய மூன்று இடங்களில் அவர் சமாதி அடைந்தார்.

மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மானாமதுரை சிவன் கோவிலின் பின்புறம் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் சமாதி உள்ளது. அதிஷ்டானத்தின் மீதுள்ள கல் சிற்பத்தில் காயத்ரி, காமதேனு, திரிசூலம் ஆகிய மூன்றும் செதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர நர்மதா நதிக்கரையில் உள்ள ஓங்காரம் என்ற இடத்தில் அவர் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காசியிலும் அவர் சமாதி அடைந்ததாகவும் அங்கும் பூஜைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

தான் வாழ்ந்த காலத்தில் அவர் பல இடங்களிலும் விக்ரஹங்கள் மற்றும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அவர் ஸ்ரீ சக்ரம் ஒன்றை ஸ்தாபித்தார்.

இவர் அருளிய கீர்த்தனைகள் மற்றும் நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பிரும்ம லக்ஷணங்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட்டதால் அவர் சதாசிவ பிரம்மம் என்ற பெயரை அடைந்து போற்றப்படுகிறார்.
அவருடைய பாதுகைகள் மோஹனூர் அசல தீபேஸ்வரர் சிவாலயத்தில் உள்ளது. இது நெரூரிலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மிகப் பெரும் மகானான இவரைப் பற்றி ஆதார பூர்வமான வரலாற்றுக் குறிப்புகளுடனான சரித்திரம் முழுமையாக வெளிவரவில்லை என்பது ஒரு குறையே!

ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளை போற்றுவோமாக! அவர் அருளைப் பெறுவோமாக!!

நன்றி வணக்கம்!


tags– நெரூர்,சதாசிவ , ப்ரஹ்மேந்திராள் -2,

எதிர்காலத்தை அறிய உதவும் அற்புத மூலிகை (Post No.10,471)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,471

Date uploaded in London – –   21 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.

இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி

முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.

அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால்  பார்க்கிறான்;அவன் தூரம்  பார்க்கிறான்;அவன்  பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.

வெளிநாட்டார்  விளக்கம்

இந்தப் பாடலுக்கு ரால்ப் டி  எச் கிரிப்பித் RALPH T H GRIFFITH  சில விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

முதல் மந்திரத்தில் வரும் “அவன்” என்பது ‘சதாபுஷ்பம்’ என்னும் மூலிகை என்று பழைய வியாக்கியனக்காரர்களில் ஒருவரான தாரிலர் (DAARILA) சொல்கிறார்; ஆனால் அது என்ன மூலிகை என்று எவருக்கும் தெரியாது. ஆயிரக் கணக்கான இடங்களில் குறிப்பிடப்படும் சோம ரஸ மூலிகையே என்ன என்று எவருக்கும் தெரியாத பொழுது ‘சதா புஷ்பம்’ பற்றித் தெரியாததில் வியப்பில்லை!

ஆங்கிலத்தில் புகழ்பெற்ற (Milton’s Paradise Lost) சொர்க்க இழப்பு கவிதையை எழுதியவர் மில்டன் என்ற புலவர் ஆவார்.  இங்கிலாந்தில் ஐ பிரைட் EYE BRIGHT / கண் ஒளி என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை வேறொன்றுடன் கலந்து மைக்கேல் (Arhangel Michael) என்ற தேவதை ஆதாமின் கண்களில் விட்டதாகவும் இதனால் ADAM ஆதாம் எதிர்காலத்தைப் பார்க்கும் வல்லமை பெற்றதாகவும் விளக்கம் சொல்கிறார்கள்.

வள்ளுவர் பல இடங்களில் சொல்லும் ‘அனிச்சம்’ என்னும் மலரையோ, மயிர் நீப்பின் வாழாக் கவரி மானையோ  இதுவரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் !

ஆனால் இது உண்மையா ? கப்சாவா என்றால் உண்மை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்துக்களிடம் பவிஷ்ய புராணம் உளது. அதில் எதிர் காலம் பற்றி உளது. கலியுகத்தில் என்ன என்ன நடக்கும் என்பதை பல புராணங்களும் மஹாபாரதமும் பேசுகின்றன. அது பற்றி இங்கு முன்னரே எழுதியுள்ளேன்.

   மேலும் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா ,  அர்ஜுனனுக்கு எதிர்காலத்தைக் காட்டுவதையும் பார்க்கிறோம். அர்ஜுனன் , தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு முன்னரே ‘காலம் TIME என்னும் சக்தி அவர்களைக் கப்ளிகரம் செய்து Blackhole பிளாக் ஹோல் என்னும் கருந் துளைக்குள் இழுப்பதைக் கண்ணன் காட்டுகிறான். அது மட்டுமல்ல. சுந்தர மூர்த்தி சுவாமிகள், சம்பந்தர் போன்றோர் காலத்திற்குள் பின்னோக்கிச் (Time Machine) சென்று மாண்ட இருவரை மீட்டு வந்த கதையும் பெரிய புராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது அவர்கள் இருவரும் திரும்பி வந்த காலத்தில் என்ன வயது ஆகி இருக்குமோ அந்த வயதில் திரும்பி வந்ததையும் சேக்கிழார் பெருமான் செப்புகிறார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது; நாம் அறியாத இன்னொரு பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கிறது. அங்கு எல்லாம் முன்னரே நடந்த கதையாக பதிவாகிறது. வெகு அபூர்வமாக ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் தலையிட்டு காலச் சக்கரத்தைத் திருப்பி விடுகிறார்கள். ஆனால் எல்லார் விஷயத்திலும் இதைச் செய்வதில்லை!

மந்திர மூலிகை விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல் ‘அவன்’ , ‘அது’ என்று பேசவும் காரணம் உளது. ஒரு கெட்டவன் போதும்!உலகையே அழிப்பதற்கு ! அவர்கள் கைகளில் இத்தகைய மூலிகை கிடைத்தால் ஆபத்து. மாயா ஜால சக்தி பெறும் பல சாது சந்யாசிகள் அவர்களுக்குக் கிடைத்த அபூர்வ சக்திகளை துஷ் பிரயோகம் செய்து சிறையில் அவதிப்படும் செய்திகளையும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம்  இதனால்தான் அவர்கள் வெளிப்படையாக சில ரகசியங்களை சொல்லுவதில்லை.

இதே துதியில் மேலும் சில அபூர்வ விஷயங்கள் வருகின்றன.

மூன்று பூமிகள், மூன்று வானங்களைப் பார்க்கும் சக்தி பற்றி Mantra No.2 மந்திரம் இரண்டு பேசுகிறது

இதற்கெல்லாம் கிரிப்பித் Griffith  போன்றோரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

கருடன் பற்றி வரும் மந்திரத்தை சூரியன் என்று சொல்கின்றனர். கருடன் போல சூரியனும் பார்க்க முடியும் என்று விளக்குகின்றனர். அது தவறாக இருக்கலாம். ஏனெனில் இன்னொரு மந்திரத்தில் கருடனுக்கு மூலிகையைக் கண்டு பிடிக்கும் அபூர்வ சக்தி உண்டு என்று சொல்லுகின்னர் . ரிக் வேதத்தில் 20, 30 இடங்களில் கருடன் அல்லது பருந் து  அபூர்வ (Soma) மூலிகையைக் கொண்டுவந்து தருவதாக முனிவர்கள் பாடிவைத்துள்ளனர்.

நாலாவது மந்திரத்தில் 1000 கண்ணுள்ள இறைவனே என் வலது கையில் அந்த மூலிகையை வைத்தால் நான் ஆரியர் , சூத்திரர் அனைவரையும்  காணமுடியும் என்கிறார் ரிஷி. 1000 கண் கடவுள் என்பது பிற்காலத்தில் இந்திரனை மட்டும் குறித்தாலும் அதற்கு முன், ல்லா வேத கால கடவுளருக்கும் அந்த அடை மொழி வருகிறது. வலதின் சிறப்பை தமிழர்கள் நன்கு அறிவர். வலது புறம் விழும் இரையை மட்டுமே புலி சாப்பிடும் என்று சங்க இலக்கிய புலவர்கள் பாடுகின்றனர். “மண மகளே!  மண மகளே!! உன் வலது காலை எடுத்து வைத்து (வீட்டுக்குள்) வா” என்று பாடுகிறோம்.; ஆரியர் முதல் சூத்திரர் வரை என்பது மனிதர்கள் எல்லோரையும் என்ற பொருளில் கையாளப்படுகிறது. சம் பந்தர் “வாழ்க அந்தணர் , வானவர் ஆனினம்” என்றால் பார்ப்பனர், பசு மட்டும் வாழ்கவே என்று பொருள் அல்ல; அவர்கள் முதலாகவுள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாரும் வாழ்க என்றே பொருள்.

கடைசி  4 மந்திரங்களில் பேய் பிசாசுகளை விரட்டும் சக்தியும் இந்த   மூலிகைக்கு  உண்டு என்று ரிஷி பாடுகிறார் . இடையே இரண்டு உவமைகளும் வருகின்றன . “களைப்படைந்த மண மகள்  படுக்கையை நாடுவது போல”, என்றும் “நான்கு கண் நாய்” பற்றியும் பாடுகிறார். நான்கு கண் நாய் என்பது யமன் கொண்டுவரும் இரண்டு நாய்களின்(2+2=4)  கண்கள் என்று ரிக் வேதம் பாடுகிறது.

ஆக மொத்தத்தில் நிறைய விஷயங்களை இக்கவிதை காட்டுகிறது.

இதை கற்பனை, கப்ஸா என்று யாராவது கருதினால் விஞ்ஞான புனைக் கதைகள் எழுதுவதில் வேத கால முனிவர்களே முன்னோடிகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று வெளிநாடுகளில் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன.

–சுபம் —

tags- வருங்காலம், எதிர்காலம், மூலிகை, அதர்வண வேதம் , காட்டும் , மில்டன்