Ancient Tamil Encyclopaedia- Part 22; One Thousand Interesting Facts! -Part 22 (Post No.15,093)

Written by London Swaminathan

Post No. 15,093

Date uploaded in London –  16 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

 Oldest Tamil Historian Mamular

Part Twenty Two

129.

பிராயோபவேசம் ,வடக்கிருத்தல்யாழ்முறிநாதர்,, மாமூலனார், கதவில் பல் சின்னம் யாழை முறித்த பாணன்மூல நட்சத்திரம்

Mamular (mahaa moolar) is the oldest Tamil Historian. He is the only poet who sang about Nandas and Mauryas of fifth and fourth centuries BCE.

Though another great Brahmin poet Paranar from Kerala region mentioned about eighty historical anecdotes, the highest number, he was junior to Mamular.

Mahaa moola must have been born on Moola star/nakshatra day like another great Tamil poet Tiru Moolar. He was from Kashmir who gave us 3000 Tamil verses on Yoga etc lived 1000 years after the great Sangam poet Maamoolar.

Sangam Tamil poets Paranar, Mamular and many others give us the history of Tamil Land, what is now called Tamil Nadu in India.

Maamoolar (hereafterwards MM) gives some interesting details about golden treasure of Nandas as well. MM contributed at least 27 verses in Akananuru (naanooru=400).

His name is a Sanskrit name like Paranar and Kapilar. Lord Shiva in the famous Kanchipuram temple is also called Maamoolar. There they attribute the name to the mango tree (Maa Maram in Tamil).

***

130

MM gives us following details about Kings:

a) Pulli of Venkatam Hills (the Balaji or Venkata Achala Pathi temple at Venkata Hills is the richest temple in the world and that was the northern border of Tamil speaking world in ancient times.)

b) Nannan of Ezil Hills.

c) Badaga/ Vaduka chief Katti is one of them. Vaduka now stands for Telugu speaking people (B=V are interchangeable through out India from Sangam days (Rig Vedic saBhaa was changed as aVai in Sangam poems)

d) Other names in his poems: Kannan Ezini, Paanan and Anji)

***

131

Important note about Great Choza emperor Karikaalan

One of the greatest Tamil emperors is Karaikaal Chozan. He went up to the Himalaya and engraved his Tiger emblem there. He defeated another great king of Chera/ Kerala country named Nedun Cheralaathan. Chera king died by fast unto death called Praayopavesa.

***

132

Fast unto death

Hindus , when they wanted to die, sit facing Holy North and starve themselves to death. This is seen in Valmiki Ramayana, Bhagavata etc and they called it Praayopavesa.

Parikshit is described to have observed the prayopavesa when the Bhagavata Purana was narrated to him by the sage Shuka, son of Vyasa.

In 1982, Acharya Vinoba Bhave (spiritual successor of Mahatma Gandhi) died by prayopavesa.

On 11 January 1997 Swami Nirmalananda subjected himself to prayopavesa.

In October 2001, Satguru Sivaya Subramuniyaswami subjected himself to prayopavesa. Subramuniyaswami was diagnosed to be suffering from terminal intestinal cancer. He later died on the 32nd day of his fast on November 12.

Kopperun choza also starved to death; his friends including great Tamil poet Pisir Aaanthaiyaar joined him.

Sanskrit dictionary

[«previous (P) next»] — Prayopavesha in Sanskrit glossary

Prāyopaveśa (प्रायोपवेश).—sitting down and abstaining from food and thus preparing oneself for death, fasting oneself to death; मया प्रायोपवेशनं कृतं विद्धि (mayā prāyopaveśanaṃ kṛtaṃ viddhi) Pañcatantra (Bombay) 4; प्रायोपवेशनमति- र्नृपतिर्बभूव (prāyopaveśanamati- rnṛpatirbabhūva) R.8.94; प्रायोपवेशसदृशं व्रतमास्थितस्य (prāyopaveśasadṛśaṃ vratamāsthitasya) Ve.3.1.

Derivable forms: prāyopaveśaḥ (प्रायोपवेशः).

Prāyopaveśa is a Sanskrit compound consisting of the terms prāya and upaveśa (उपवेश). See also (synonyms): prāyopagamanaprāyopaveśanaprāyopaveśanikā.

(Above is from wisdomlib.org)

Pancha Pandavas along with Draupadi walked up the Himalayas in the holy north and died.

***

133

Chera’s sea expedition

MM also sang about Cheralathan’s sea expedition where he cut the Kadampa tree (Totem symbol) of his enemy in the middle of the sea. He also won several countries in the north and brought the treasure to his town Manththai

***

134.

Tooth Relic

We read lot about Buddha’s Tooth Relic which is holy. But here in MM’s poems we read about enemy’s teeth embedded on the door of the victorious one. Ezini was defeated by Maththi. Chera won Maththi and brought his teeth buried them on the door.

(Z= special L of Tamil language)

***

135

Controversial Information

MM said that Uthiyan Cheral, a Chera/Kerala king, fed the Mahabharata warriors. If we believe that literally that Chera should have lived in about 3100 BCE! which is impossible.

The word used in MM poem is Perum Soru meaning great food. It is actually a great feast to commemorate the dead people. That is food in memory of the war heroes. Bhagavad Gita, Sangam book Purananuru and books from Non Hindu religions say that war heroes reach heaven. They have Visa free direct flight to heaven! So, they are remembered, and feast is organised.

***

136

Lyre Broken in Disappointment

Another interesting detail added by MM is a singer breaking his Yaaz (Veena/ lyre) when Evvy died in the battle field. This may be compared to another incident that happened 1400 years ago in Dharmapuram. That was the birth place of great musician named Thiru Neelakanta Yaazpaanar. He was a great Yaaz/ Lyre instrumentalist. He accompanied the Boy Saint Tiru Gnana Sambandar with his wife Mathanka Choolaamani. When he became very proud of his skill, Lord Shiva wanted to teach him a lesson. When Sambandar came to his town he could not cope up with Sambandar’s singing. When he was about to break his lyre, Shiva himself played on his instrument and so even today Shiva appears in a rare form here. He holds a lyre in his hand in this temple. Musicians also break their instruments when they get disappointed. That was reported to us by MM two thousand years ago.

Now let us go into details of Nadas and Mauryas.

To be continued………………

 Tags -பிராயோபவேசம் வடக்கிருத்தல் யாழ்முறிநாதர், மாமூலனார், கதவில் பல் சின்னம் , யாழை முறித்த பாணன், மூல நட்சத்திரம், Ancient Tamil Encyclopaedia- Part 2, One Thousand Interesting Facts! -Part 22, Oldest Tamil Historian Mamular

எகிப்தின் ஜீவ ரத்த ஓட்டம் நைல் நதி! (Post No.15,092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,092

Date uploaded in London –   16 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

23-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

எகிப்தின் ஜீவ ரத்த ஓட்டம் நைல் நதி! 

ச. நாகராஜன்

லேக் விக்டோரியாவில் ஆரம்பித்து மெடிடரெனியன் கடலில் கலக்கும் நைல் நதி உலகின் நீளமான நதி என்ற புகழைப் பெற்றுள்ள நதியாகும்.

4160 மைல்கள் ஓடும் இந்த நதியானது ஆப்பிரிக்காவை வளப்படுத்தும் அற்புதமான இயற்கையின் கொடையாகும். பதினோரு லட்சம் சதுர மைல் பரப்பை வளப்படுத்தும் இது ஆப்பிரிக்க கண்டத்தின் பத்தில் ஒரு பகுதியை வளமாக்குகிறது; தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியே ஓடி மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.

 நைல் நதியால் அதிகம் பயன் அடையும் நாடுகள் எகிப்து மற்றும் சூடான் ஆகும்.

 கிரேக்க வரலாற்று ஆசிரியனான ஹெரொடோடஸ் நைல் நதியின் நன்கொடையே எகிப்து என்று கூறி இந்த நதியைப் புகழ்கிறார்.

 எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதை யாருமே அறிய முடியாதபடி இருக்கும் இந்த நதி சந்திரனின் மலைகளிலிருந்து தோன்றி இறங்குகிறது என்றார் தாலமி என்ற கிரேக்க வானியல் நிபுணர்.

 7000 வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்த விவசாயிகள் இந்த நதியின் தோற்றம் மர்மமாக இருந்ததால் இதை ஹபி என்று பெயரிட்டு கடவுளாக வழிபட்டு வந்தனர்.

 வடிகனில் இன்றும் இருக்கும் ஒரு பழைய கால ஹபியின் சிலை இருபது அங்குல உயரமே உள்ள 16 குழந்தைகள் சுற்றி இருக்க சாய்ந்தவாறே சோளத்தைப் பிடித்திருக்கும் காட்சியைச் சித்தரிக்கிறது.

 நைல் நதி வெள்ளை நைல் என்றும் நீல நைல் என்றும் இரு நதிகளாகப் பாய்ந்து வருகிறது.

 வெள்ளை நதியில் பாய்ந்து வரும் நீரில் பெரும்பகுதி தெற்கு சூடானில் சதுப்பு நிலத்தில் தேங்கி விடுவதால் எகிப்தின் நீர் வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியையே தருகிறது.  ஆனால் நீல நைல் நதியோ 1000 மைல் ஓடி ஐந்தில் நான்கு பகுதி நீரை எகிப்துக்குத் தருகிறது.

 வெள்ள நீர் வீணாவதைத் தடுக்க பிரம்மாண்ட,மான அஸ்வான் அணை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 364 அடி. இதன் நீளம் 12565 அடி.

 சூடானிலும் எகிப்திலும் வருடம் முழுவதும் நைல் நதியில் படகுகளைச் செலுத்த முடியும்.

 எதியோப்பியாவில் அழகான டிஸ்ஸிஸாட் நீர்வீழ்ச்சியை நீல நைல் நதி உருவாக்குகிறது!

 பெட்ரோ பேயஸ் (Petro Paez) என்ற ஒரு போர்த்துக்கீசியர் நீல நைல் நதியின் தோற்றத்தை ஆராயக் கிளம்பினார். எதியோப்பியாவில் 6000 அடி உயரத்தில் அமைந்திருந்த லேக் தாராவிலிருந்து இது ஆரம்பமாகிறது என்று கண்டுபிடித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வெள்ளை நைல் பற்றிய தோற்றத்தை யாரும் ஆராயவில்லை. 1857ம் ஆண்டு லண்டனில் வாழ்ந்து வந்த ரிச்சர்ட் பர்டன் (Richard Burton) என்பவர் இதை ஆராய முயன்றார். அவருடன் ஜான் ஸ்பெக் என்பவரும் இணைந்து நீல நைல் நதியானது லேக் தங்கனீகாவில் தோன்றுகிறது என்று கண்டு பிடித்தனர்.

ஆனால் ஸ்பெக் மேலும் முன்னேறிச் சென்று இது லேக் விக்டோரியாவில் ஆரம்பமாகிறது என்று கூறினார்.

ஆனால் பின்னால் வந்தவர்கள் லேக் விக்டோரியாவிலும் பல ஆறுகள் வந்து கலப்பதால் இது தான் நைல் நதியின் தோற்றம் என்று சொல்ல முடியாது என்று வாதாடினர்.

வெள்ளை நைல் நதியானது மர்ச்சிஸன் நீர்வீழ்ச்சியாக 120 அடி உயரத்திலிருந்து சுட் என்ற இடத்தில் விழுந்து அழகான காட்சியைத் தருகிறது.

அங்குள்ள சூடானின் தலை நகரமான கர்த்தூம் என்ற இடத்தில் நீல நைலுடன் கலக்கிறது.

நீல நைல் நதி நிஜமாகவே நீல நிறத்தில் காட்சி அளிக்க இங்கு வெள்ளை நைல் நதி லேசான பச்சை நிறத்துடன் காட்சி அளிக்கிறது. இரு நதிகளும் இணைந்து பாய்ந்து  எகிப்தில் மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.

எகிப்தின் ஜீவனுக்கான ரத்த ஓட்டமாக நைல் நதி ஓடியது; ஓடிக் கொண்டிருக்கிறது ஓடும் என்பது தான் நைல் நதியின் சிறப்பாகும்.

 நடந்தாய் வாழி நைல் நதியே என்று வாழ்த்துவோம்.

***

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-14 (Post.15,091)

Written by London Swaminathan

Post No. 15,091

Date uploaded in London –  15 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 அர்ஜுனன் சொன்னான் …………………….

‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.

கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று

கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்

பாஞ்சாலி சபதம் பாரதி பாடல்- ARJUNA SAID IT.

மகாபாரத முடிவுரை English Version will be posted tomorrow.

பஞ்ச பாண்டவர்கள் – யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன் , நகுலன் சகாதேவன் !

முதல் மூவர் குந்திக்குப் பிறந்தவர்கள் ; கடைசி இருவர் மாத்ரிக்குப் பிறந்தவர்கள். இவர்கள் யமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தவர்கள்  அதற்கான மந்திரத்தை துர்வாச முனிவர், குந்திக்கு அளித்தார் . அதை அவள், மாத்ரிக்குச் சொல்லிக் கொடுத்தாள் பாண்டுவின் இரண்டு மனைவியிடையே அற்புதமான ஒற்றுமை! சக்களத்தி சண்டை இல்லை !!

யுதிஷ்டிரன் என்னும் தர்மனின் பெரிய வீக்னஸ் Weakness – பலவீனம் சூதாட்டம்.. பீ மனின் குணம் அசுர  பலம்!  பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியான திரெளபதி  அ ஞ் ஞாதா வாசத்தின் போது கீசகனால் துன்புறுத்தப்பட்டாள்; அவனை பீமன் கிழித்தெறிந்தான் ; திரெளபதியின் கூந்தல் முடியும் சபதத்தை நிறைவேற்ற  துரியோதனனின் தொடைட்யைக் கிழித்து பீமன் உதவினான் ; அர்ஜுனன் மூலம் நமக்கு பகவத் கீதை கிடைத்தது. ஜயத்ரதன் பீஷ்மன் ஆகியோரைக் கொல்வதற்கு கண்ணன் போ ட்ட திட்டங்களுக்கு ஆமாம்  சாமி போட்டான் ; வில்லுக்கு விஜயன் என்ற பெயர் எடுத்தான் சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்றான் தென்னாடு வரை வந்து அல்லி ராணியை மணந்தான் சுபத்ரா வைக்க கடத்தி வந்து திருமணம் புரிந்தான் ஆயினும் போர் என்பதன் கொடுமைக்கு மகன் அபிமன்யுவையே பாலி கொடுத்தான்  நகுல சஹா தேவர்கள் வீரர்கள் மட்டுமின்றி ஜோதிடத்தில் வான சாத்திரத்தில் வல்லவர்கள் இதனால் சூரிய கிரகண நாளை பயன்டுத்தி ஜயத்ரதனை வீழ்த்த உதவினார்கள். தர்மன் சொன்ன ஒரே பொய் அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்பதாகும். அவர் யானை என்ற சொல்லினை சன்னக்குரலில் சொன்னது மகா பொய்! தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் இறந்தான் என்ன்று தவறாக எண்ணிய துரோணர் வாழ்வு போர்க்களத்தில் முடிந்தது உலகில் எத்தனை சூது வாதுகள் உண்டோ அத்தனையையும் மஹாபாரதத்தில் காணலாம் இத்தனை வஞ்ககங்களுக்கும் மூல காரணம் கிருஷ்ணன் ; முடிவு நன்றாக இருக்குமானால் வஞ்சக வழிகளை பின்பற்றுவது தவறில்லை END JUSTIFIES MEANS என்பது அவனது பாலிசி. ஆயினும் அவதார புருஷன் என்பதால் அவன் செய்த அற்புதங்களையும் சமாதான தூதுகளையும் மறக்கக்கூடாது. திரெளபதியின் மானத்தைக் காக்க மழை போல  புடவைகளை அருளினான். போரில் ஆயுதம் எடுக்காமலேயே வெற்றி பெற்றான். இறுதி முடிவு பரிதாபமானதே!

கிருஷ்ணன் வேடனால் கொல்லப்பட்டான்; பஞ்ச பாண்டவர்களும் திரெளபதியும் புனித வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக வீழ்ந்து இறந்தனர்; மாத்ரி பாண்டுவின் சிதையில் தீப்பாய்ந்து இறந்தாள் ; காந்தாரி திருத ராஷ்ட்ரன் குந்தி– காட்டுத்தீயில் கருகி  இறந்தனர்; கர்ணனும் போர்க்களத்தில் மறைந்தான்.

செஞ் சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக கர்ணன் இறுதிவரை தீய துரியோதனனுக்கு உதவினான்; கொடைக்கு அடையாளமாக விளங்கினான் அவனுடைய கவச குண்டலங்கள் இருந்தால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்த கண்ணன் பிராமண வேடத்தில் இந்திரனை அனுப்பி அதையும் கவர்ந்தான் இத்தனைக்கும் காரணம் கர்ணன் தேர்ப்பாகன் மகன், ஆகையால் அவன் அரசர் போட்டியில் பங்கேற்க முடியாது என்று பாண்டவர் ஆட்சேபித்த போது அவனை அங்க தேச மன்னனாக அறிவித்தான் துரியோதனன்; இது அவனது அரசியல் அறிவினைக் காட்டுகிறது.

கர்ணனை சூரிய தேவன் அருளால் பெற்ற குந்தி தேவி அவனை ஆற்றில் விட்டது முதல் தப்பு ; முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்தது. அவள் முன்கூட்டியே உண்மையை அமபலப்படுத்தி இருந்தாலும் மகா பாரதம் நடந்திருக்காது விதி செய்த சதி; கடைசி நேரத்தில் கர்ணனுக்கு மட்டும் உணமையைச்  சொன்னாள் அவன் உப்பிடாதவரலாய் வரை  உள்ளவையும் வு  நினைப்பேன் என்று சொல்லி தாய் சொல்லினையே தட்டினான் ; அற்புதமான நன்றி உணர்வு!

தீயோரிடமும் ஒவ்வொரு நற்குணம் இருப்பதைக் காண முடிகிறது. துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சூதாட்டம் ஆடியபோது தாயக்கட்டத்தைப் பறிக்க பானுமதியை தொட்டதில் அவள் முத்துமாலை அறுந்தது. உள்ளே நுழைந்த துரியோதணன் சிறிதும் இருவர் நடத்தையில் சந்தேகம் அடையாமல் எடுக்கவோ கோர்க்கவோ – முத்துக்களைக் கோர்த்து தரட்டுமா? என்று கேட்டான்! எத்தனை அருமையான குணம். ஒவ்வொரு மாபாரதச் செய்தியும் அந்தக்காலத்தில் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக அமைந்திருக்கும்.

துரியோதனாதிகள் பொறாமைத் தீயில் வெந்து மாண்டார்கள். பொறாமை என்பது ஒரு குலத்தையே அழிக்கும் என்பதுதா ன் மாபாரத்தின் முக்கிய அறிவுரை என்று சொன்னாலும் மிகை ஆகாது.  மனித குலத்துக்கு மஹாபாரதம் எண்ணற்ற பாடங்களைக் கற்பிக்கிறது. இத்தனைக்கும் அப்போது கலியுகம் கூடத்  துவங்கவில்லை. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தர்ம- அதர்மப் போராட்டம் மகாபாரதம்.

 அர்ஜுனன் சொன்னான் ,

‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;

தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.

கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று

கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்

. தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான்

பாஞ்சாலி சபதம் பாரதி பாடல்

என்று பாரதி சொன்னது சரியே. இறுதியில் தர்மம் வென்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற மர்மத்தை உலகம் கற்க வழி தேடி விதி செய்தான்

விஷ்ணு சஹஸ்ர நாமம், பகவத் கீதை, யக்ஷப் ப்ரச்னம்  (பேயின் கேள்விகளுக்கு தர்மன் அளித்த பதில்), இன்னும் பல கீதைகளை உள்ளடக்கியது  மகாபாரதம். இரண்டு லட்சம் வரிகளில், சொல்ல வேண்டிய அனைத்தையும் வியாசர் சொல்லச் சொல்ல அதை விநாயகன் எழுதித் தரவே உலகின் மிகப்பெரிய இதிகாசம் உருவானது!

To be continued…..

Tags- ‘“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்,பாஞ்சாலி சபதம், பாரதி பாடல், Hinduism through 500 Pictures in Tamil, English, படங்கள், இந்து மதம் கற்போம்- part 14

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி -Part 5 (Post No.15,090)

Written by London Swaminathan

Post No. 15,090

Date uploaded in London –  15 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART FIVE

அக்கினி – நெருப்பு, தீ ; வேத  கால தெய்வங்களில் மிக முக்கியமான தெய்வம்

Agni: Fire; one of the important Vedic gods

***

அகத்திக் கீரை – உணவாகப் பயன்படும் கீரை. பசு மாடுகளுக்கு கொடுப்பது புண்ணியம்;

Agathi Green Leaves:- West Indian pea tree செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா (Sesbania grandiflora). Feeding cows with it is considered a holy ritual.

***

அங்கப் பிரதட்சிணம்

ஒரு நேர்த்திக் கடன்; கோவில் பிரகாரத்தில் படுக்கை வாட்டில் உருண்டு வலம் வருதல்

Anga Pradakshina:

 Going round the sanctum of a temple  by rolling along the prakaaram/corridor around it.  Devotees do it as a fulfilment of a vow.

***

அசரீரி – வானத்திலிருர்ந்து கேட்கும் ஒலி  இனி நிகழக்கூடிய ஒரு நிகழ்ச்சியை இது தெரிவிக்கும் ;அசரீரி என்றால் சரீரம் இல்லாமல்– உடலிலிருந்து இல்லாமல் – மர்மமான முறையில் வரக்கூடிய செய்தி

Asareeri

Astral voice  ; voice believed to be from heaven . literally voice not from a human body.

***

அஷ்டமி, நவமி

தமிழ் இந்துக்கள் இந்த இரண்டு திதிகளில் நல்ல, சுப காரியங்களை செய்யமாட்டார்கள். அமாவாசை அல்லது பெளர்ணமிக்கு எடடாவது நாள் அஷ்டமி; ஒன்பதாம் நாள் நவமி ;

ஆயினும் கிருஷ்னன்  பிறந்த  நாள்  ஜன்மாஷ்டமி ; ராமன்  பிறந்த  நாள்  ராம  நவமி .

Ashtami is eighth day after full moon or new moon in a month. Navami is ninth day after full moon or new moon in a month. Tamil Hindus won’t do any auspicious things like wedding or any new venture but Krishna’s birth day is Jamaashtami; Rama’s birth day is Raam Navami  !

***

அந்தாதி – முதல் பாடலில் வரும் கடைசி சொல் அல்லது வரி, அதைத் தொடர்ந்து வரும் அடுத்த பாடலின் முதல் சொல் அல்லது வரியாக அமைத்துப் பாடுவது உ.ம். அபிராமி அந்தாதி, சரஸ்வதி அந்தாதி

Anthaathi

Anthaathi is a genre in Tamil and Sanskrit poems ; the last word or phrase or line of a verse will be the  initial word of the next/ following  verse ; famous anthaathis ;Abhiraami anthaathi Sarasvati anthaathi .

***

அம்பாள் அம்மன் – சைவ கோவிலில் வழிபடப்படும் பெண் தெய்வம்; பொதுவாக சைவர்கள், சிவனின் மனைவியான பார்வதி, உமா, மீனாட்சிக்குப் பயன்படுத்தும் சொல் ; வைணவர்கள் தாயார் என்ற சொல்லைப் பயப்படுத்துவார்கள் உ.ம் காளிகாம்பாள், மாரி அம்மன்; மதுரை மீனாட்சி கோவிலில் அம்மன் சந்நிதி

Ambaal

Ambaal also amman – goddess in Saivite temples; general term for Shiva’s wife Paarvati, Umaa, Meenaakshi. Examples- Kaalikaambaal temple, Chennai, Durgai amman , Maari amman temple; Amman sannithi in Madurai temple. Vaishnavites use the term Thaayaar for goddess, wife of Vishnu 

***

அர்த்தநாரீஸ்வரர் – சிவன் கோவில்களில் ஒரே சிலை அல்லது விக்கிரகத்தின் ஒரு பாதி ஆண்- சிவனாகவும் மறு பாதி பெண் /  சக்தியாகவும் காட்டப்பட்டிருக்கும்  சிவன் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்று பொருள்

Ardhanaareesvarar

Ardha naareeswarar – Shiva and Sakti appearing in one body, idol, statue . left side of the idol is female/shakti and right side represents shiva. It is one of the forms of Shiva in Saivite temples. Meaning :- nwithout a female or male, the world can’t exist or function. Lord shiva is potential energy; goddess is kinetic energy.

***

அமாவாசை – மாதம்  தோறும் வரும் ஒரு திதி ; தேய்பிறை நிலவின் கடைசி நாள் . இறந்து போன முன்னோருக்கு அன்றைய தினம் இந்துக்கள்  தர்ப்பணம் கொடுப்பார்கள்; அதாவது எள்ளும் நீரும் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்வார்கள். ஆடி மாதம் தை மாதம் ஆகிய மாதங்களில்  முக்கிய அமாவாசை வருவதால் எல்லா சமூகத்தினரும் ஆறு, புனித குளம், கடற்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்வார்கள் சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்போர் 12  மாதப் பிறப்பு நாட்களிலும் தர்ப்பணம் செய்கிறார்கள்

Amaavaasyai

Amaavaasai – New Moon day; orthodox Hindus pay oblations to departed souls on New Moon Days in addition to First day of all the 12 Tamil months  . Aadi and Thai month new moon days are most important. People from all communities go to river banks or sea a coast or famous holy tanks and perform Tarpanam. It means satisfying the departed souls with water and sesame seeds.

***

அர்ச்சனை அர்ச்சகர்அர்ச்சனைத் தட்டு

கோவிலில் அல்லது புனித மடங்களில் பூ, குங்குமம், மஞ்சள் நிற அரிசி/அக்ஷதை முதலியவற்றைக் கொண்டு  இறைவனுக்கு செய்யும் வழிபாடு அர்ச்சனை ஆகும். இதைக் கோவிலில் செய்து கொடுப்பவர் அர்ச்சகர். கோவில் வாசலில் விற்கப்படும் அர்ச்சனைத் தட்டு அல்லது கூடையில் தேவையான பொருட்களுடன் ஊதுபத்தி தேங்காய் பழமும் இருக்கும்.  விருப்பப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம் முதலியவற்றைச் சொன்னால் அவர்கள் பெயரால் குருக்கள்/ அர்ச்சகர், அர்ச்சனை செய்வார். பொதுவாக இறைவனின் 108  நாமக்களைச் சொல்லி இதைச் செய்வார்கள்.

Archakar archanai archanai plate or thattu

Archanai a form of worship , particulary in temples or holy Mutts , with flowers , yellow rice called Akshata or Kunkumam. They offer fruits, coconuts and incense sticks at that time .

Archakar is the temple priest who does it on behalf of the devotees .

Archanai basket or plate or thattu in Tamil, contains all the necessary things.

Optional- Those who wish may say the names of family members and their birth stars to the priest and he will perform the worship for the welfare of those mentioned . Priests recites 108 names of God while doing it.

***

அஷ்டமா சித்திகள் – யோகப்பயிர்ச்சு முகுளம் ஒருவர் அடையக்கூடிய எட்டு பெரிய அற்புத சக்திகள் இவை அவற்றின் பெயர்களும் அவை தரும் அற்புத சக்தியும் பின்வருமாறு; இதை அடைந்தோர் சுலபமாக அற்புதங்களை நிகழ்த்த முடியும்

அணிமா – அணுவை விட சிறியதாகும் சக்தி;

மஹிமா- மலையை விட பெரிதாகும் சக்தி /தன்மை;

கரிமா- மிகவும் கனமாகும் தன்மை / சக்தி;

லஹிமா – பஞ்சைக் காட்டிலும் எடையைக் குறைக்கும் சக்தி;

பிராப்தி – எந்த ஒரு வடிவத்தையும் எடுக்கும் சக்தி;

பிராகாம்யம் – எதையும் அனுபவிக்கும் சக்தி;

ஈஸித்வம் – எதையும் கட்டுப்படுத்தும் சக்தி;

வசித்துவம் – எவரையும் எதையும் வசப்படுத்தும் சக்தி

இவை அனைத்துக்கும் உதாரணங்கள் சாது சான்யாசிகள் செய்த அற்புதங்களில் உள்ளன

Ashtamaa Siddhis – Eight Great Mysterious Powers. Hindus believe that those who practise Yoga, can great Eight great powers. They are considered miracles. They are:

Anima- a person can assume the very subtlest form at any time.

Mahimaa- A man who attains this Siddhi can make his body many times larger. 

Garimaa- This is the Siddhi by which seeker can increase his weight infinitely

Lahimaa- the seeker can lighten his weight lighter than cotton.

Praapti- ‘ Prapti” means reaching all the places, acquiring all items

Praakaamya- This Siddhi provides the energy to perform unique and incredible miracles

Iisithvam- Ishitva’ means supremacy over nature and ability to force influence upon others.

Vasithvam ‘Vasitva’ means ability to control material elements. Also people.

Hanuman had all these eight miraculous powers .

***

அஷ்ட ஐஸ்வர்யம் அல்லது  அஷ்ட லட்சுமி

எட்டு வகையான பேறுகள்- தானம் தான்யம், பசு, பணம், புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் 

அஷ்ட லட்சுமி –

1.ஆதி லட்சுமி – அலை மகள் ; விஷ்ணுவின் மார்பில் உறைபவள்.

2. தன லட்சுமி – செல்வத்தை வாரி வழங்குபவள்.

3.தான்ய லட்சுமி – எப்போதும் உணவினை நல்குபவள்.

 4) கஜ லட்சுமி – செல்வத்தையும் அதிகாரத்தையும் வாகனத்தையும் அருள்பவள்; இரு புறமும் யானைகள் இருக்கும்,

5) சந்தான  லட்சுமி – குழந்தைச் செல்வத்தை அருள்பவள்

6) வீர லட்சுமி – வீரத்தையும் தைரியத்தையும் அளிப்பவள்

7) வித்யா  லட்சுமி – நல்லறிவினையும் கல்வியையும்

8) விஜய லட்சுமி – எடுத்த காரியம் யாவினும் வெற்றி; எங்கும் வெற்றி அளிப்பவள்.

1.Adi Lakshmi-Adi Lakshmi is said to be her primordial form

2. Dhana Lakshmi- she gives “wealth” in terms of money, gold, property, or any other sort of tangible monetary utility

3.Dhanya Lakshmi- she provides agricultural wealth like rice wheat,grains, pulses etc.

 4) Gaja Lakshmi- Worshipped as the “giver of animal wealth  Gaja, which means “elephant,” also signifies power and royalty, Flanked on either side by two elephants , Gaja Lakshmi sits on  lotus .

5) Santana Lakshmi- Traditionally prayed to by couples desiring children, Santana Lakshmi (santana meaning “progeny,” or “children”) symbolizes fertility. 

6) Veera Lakshmi- A symbol of bravery and valor, Veera Lakshmi blesses worshippers with the strength and victory.

7) Vidya Lakshmi- As vidya means “knowledge,” this is the form of Lakshmi that helps guide one’s intellectual development.

8) Vijaya Lakshmi- Vijaya Lakshmi, whose first name means “victory,” is a significator of success, instilling devotees with hope and inspiration.  

***

அருந்ததி காட்டல் – கல்யாணம் நடந்த நாள்  இரவில் மணமக்களை வெளியே அழைத்துச் சென்று சப்தரிஷி மண்டல நட்சத்திர கூட்டத்தில் வசிஷ்ட மகரிஷியைய்ச் சுற்றி வரும் அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டும் சடங்கு . இதைக் காணும் மணப்பெண் அருந்ததி போல கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்பதும் வசைஷ்டர் அருந்ததி போல கணவன்- மனைவி இருவரும் இணைபிரியாமல் வாழ வேண்டும் என்பதும் கருத்தாகும் . அருந்ததி – வசிஷ்ட நடச்சத்திரம் என்பது இரட்டை நட்சத்திர வகை ஆகும். ஆதாவது ஒன்றின் ஈர்ப்பு விசையால் மற்றோன்று அதைச் சுற்றிவரும். பெண்கள் விளையாடும் தட்டாமாலை போல இரண்டு ஈர்ப்பு விசையும் சமமாக இருப்பதால் மோதாமல் சுற்றிவரும் . இவ்வளவையும் முதல் நாள் இரவிலேயே சொல்லாமல் சொல்லிக்கொடுப்பது இந்துமதம்.

Arundhati Showing – Arundhati is the wife of seer Vasistha. She is the symbol of chastity. Both stars are part of Saptarishi mandala also known as Great Bear constellation in the north. On the wedding day nigh , bride is taken to open space and the priest points to Arundhati star. It is to inculcate the virtue of chastity. Alcor is the astronomical name. it is a double star system where Arundhati and Vasishta revolve around each other.

***

அடுத்ததாக அஷ்ட திக் பாலகர்கள், அஷ்ட புஷ்பங்கள், அஷ்ட மூர்த்திகள், அறுகோணம் முதலியவற்றைக் காண்போம்

To be continued…………………………..

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி -Part 5 (Post No.15,090) 

சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி (RUWENZORI) (Post No.15,089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,089

Date uploaded in London –   15 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

 உலகின் அதிசய இடங்கள்!

சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி (RUWENZORI)

ச. நாகராஜன் 

1888ம் ஆண்டு.

சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளைக் கேள்விப்பட்டிருந்தார் அந்த புதுப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் உள்ள அறிஞரான ஹென்றி ஸ்டான்லி!

கிரேக்கத்தில் வாழ்ந்து வந்த பிரபல கணித மேதையான தாலமி சந்திர மலைகளைப் பற்றிய கதைகளை நிறையவே கூறி இருந்தார். அந்த மலைகளிலிருந்து தான் நைல் நதியே தோன்றியது என்பது அவரது வியாக்கியானம். இதையெல்லாம் படித்து மகிழ்ந்திருந்த ஸ்டான்லி இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் ஆல்பெர்ட் ஏரிக் கரையோரம் நடந்து கொண்டிருந்தார்.

தூரத்தில் ஆகாயத்தில் ஒரே மேக மூட்டம். திடீரென்று அந்த மேகங்கள் சற்று கலைந்து விலகவே அவருக்கு பிரமிக்க வைக்கும் மலைச் சிகரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. பிரமித்துப் போனார் அவர். இதுவரை உலகினர் யாரும் அறியாத ருவென்ஜோரி (RUWENZORI)

 மலையைக் கண்டு மகிழ்ந்த அவர் உலகத்திற்கு இது பற்றி முதன் முதலாக அறிவித்தார்.

ஆப்பிரிக்காவின் பழங்குடியினரின் மொழியில் உள்ள ருவென்ஜோரி என்ற வார்த்தைக்கு ‘மழையை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். உண்மை தான், கொட்டு கொட்டென்று கொட்டிய மழையினால் அற்புதமான ஆப்பிரிக்க காடுகள் உருவாகியிருந்தன. 

ஹென்றியைத் தொடர்ந்து பின்னால் 1906ம் ஆண்டு இத்தாலியில் அப்ருஜ்ஜியின் டியூக்காக இருந்த ல்யூகி அமடியோ டி சவோயா தைரியமாகத் தன் குழுவினருடன் ருவென்ஜோரி மலையில் ஏறினார். அந்த மலைத்தொடரை வரைபடமாக முதன் முதலாக வரைந்தார். 

ஜைரே- உகாண்டா எல்லையில் இருந்த இந்த மலைத்தொடரில் 16000 அடி உயரமுள்ள ஒன்பது சிகரங்கள் இருந்தன. அதிக உயரமுள்ள மலை 16736 அடி கொண்டதாகும். வருடத்திற்கு முன்னூறு நாட்கள் இந்த மலைச்சிகரங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்திருக்கும்! 

மீதி நாட்களில் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதைப் பார்ப்பார்கள்.

ருவென்ஜோரி மலைத்தொடர் 75 மைல் நீளமும் 30 மைல் அகலமும் உள்ளது. 

இது எரிமலையினால் உண்டான மலை அல்ல. இருபது லட்சம் வருடங்களுக்கு முன்னால் பாறையினால் உருவான மலையாகும்.

 ஆறரை அடி உயரமுள்ள கோரைப்புல்களின் வழியே யானைகள் வழியை உருவாக்கிச் செல்லும். 

பாலூட்டி விலங்குகளின் ஒன்றான ஹைரக்ஸ் (HYRAX) என்ற விலங்கை இங்கு காணலாம். பார்ப்பதற்கு முயல் போல இருக்கும் இது பன்றியைப் போல குரல் கொடுக்கும். 7000 அடி உயரத்தில் ருவென்ஜோரியின் ஆதி மிருகமான இது காணப்படுகிறது.

ஐந்து அங்குல நீளமே உள்ள மூன்று கொம்புள்ள பச்சோந்தி இங்கு மட்டுமே காணப்படுகிறது.

தாவர வகைகளில் அரிதான லொபிலியா (LOBELIA) 20 அடி உயரம் வரை வளர்ந்து பார்ப்பவரை மலைக்க வைக்கும்.

மழையினால் பெருகும் நீரானது காங்கோ நதியை வெள்ளமாக ஆக்கி நைல் நதிக்கும் நீரைக் கொண்டு சேர்க்கிறது.

 ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இயற்கை ஆர்வலர் ஒருவர் ஏழு கிலோ எடையுள்ள லொபிலியாவை வெட்டவே அதைப் பார்த்த ஆதிவாசிகள் அதைத் தொடக்கூட மறுத்து விட்டனர். அது முடுலும்பு (MUDULUMBU) என்று கூறிய அவர்கள் அதைத் தொட்டால் மரணம் நிச்சயம் என்றனர்.

ருவென்ஜோரி மலைத் தொடரில் உள்ள ஒரு 16042 அடி உயரமுள்ள ஒரு சிகரமானது அதை 19ம் நூற்றாண்டில் ஆய்வு செய்த ஆங்கிலேயரான ஜான் ஹானிங் ஸ்பெக் (JOHN HANNING SPEKE) பெயரால் மவுண்ட் ஸ்பெக் என்று அழைக்கப்படுகிறது. 

எப்போதும் மேகத்தால் மறைக்கப்பட்டு மிக அரிதாகவே காணப்படும் ருவென்ஜோரி மலைத் தொடர் உலகில் உள்ள அதிசய மலைகளில் ஒன்றாகும்!

அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதை இன்றும் பார்க்கிறார்கள் அது மேகமூட்டத்திலிருந்து வெளியே வந்து தோற்றமளிக்கும் போது!

***

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-13 (Post No.15,088)

பீஷ்ம,

Written by London Swaminathan

Post No. 15,088

Date uploaded in London –  14 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part Thirteen

நேற்று வெளியான படங்களில் உள்ளோர் கதைச் சுருக்கம் :

இந்தோனேஷியா நாட்டின் வயங் பொம்மலாலட்டத்தில் மகாபாரதம்:–

பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர , பாண்டு

***

, குந்தி 

கர்ணன் 

யுதிஷ்டிர (தர்மன்)

 பீம

அர்ஜுனன்

பராசரர்

வசிஷ்டரின் பேரர்; சக்திக்கும் அதஷ்யந்தி என்ற பெண்ணுக்கும் பிறந்த ரிஷி. யமுனை நதியைக் கடக்க சத்யவதி என்ற படகோட்டி உதவியபோது அவள் மீது தீராக்காதல் கொண்டார் ; அதன் விளைவாகப் பிறந்தவரே மஹாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி;  சத்யவதியின் கன்னித்தன்மை போகாது, நீங்காது என்றும் பராசரர் வரம் அளித்தார்.

மஹாபாரதத்தில் ஜாதிவிட்டு ஜாதியில் கலப்பு மணம் செய்ததும் கடத்தல் திருமணம் செய்ததும் பல கதைகளில் வருகிறது.  . இது தவிர பெண்களுக்கு சுயம்வரம் மூலம் கணவனைத் தெரிந்தெடுக்கும் சுதந்திர உரிமையும் இருந்தது.

****

சத்யவதி

இந்த மீனவப் பெண்ணின் வேறு பெயர்கள்- மத்ஸ்ய கந்தா /மீனின் நாற்றம்; யோஜனகந்தா – தொலைதூரம் நாறும் பெண்மணி !

உபரிசாரன் என்ற மன்னனுக்கும் அத்ரிகா என்ற தேவ லோக அழகிக்கும் பிறந்த பேரழகி; ஆனால் தசராஜா என்ற மீனவனால் வளர்க்கப்பட்டாள்; சந்தனு மஹாராஜனுக்கு படகோட்டியபோது யமுனை நதிக்கரையில் காதல் தீ மூண்டது; அவளை மணக்க , சந்தனுவுக்கு காதல் பைத்தியம் பிடித்தது.   திருமணம் செய்ய விரும்பியபோது எனக்குப் பிறக்கும் மகன்தான் நாட்டை ஆளவேண்டும் என்று நிபந்தனை போட்டாள்; உண்மையான தகுதி சந்தனுவின் புதல்வன் தேவ விரதனுக்கு இருந்தது; தந்தையின் காதல் பைத்தியத்தையும் சத்யவதியின் குடும்ப நிபந்தனையையும் அறிந்த தேவ விரதன் நான் வாழ் நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்டிப்பேன்எனக்கோ இனி வரும் என் சந்ததிக்கோ நாடாளும் உரிமை  வேண்டாம் என்று சபதம் செய்தார். ஈரேழு உலகமும் அந்த மகத்தான தியாகத்தைக் கண்டு பீஷ்ம பீஷ்ம என்று ஆனந்தக் கூச்சலிட்டனர். அதி பயங்கர அற்புதம் என்று அந்தச் சொல்லுக்குப் பொருள். அதிலிருந்து அவருக்குப் பீஷ்மர் என்ற பெயரே நிலைத்தது .

சத்யவதிக்கு விசித்திர வீரியன், சித்ராங்கதன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தனர்; இருவரும் குழந்தை இல்லாமல் இறந்தனர். அந்தக் காலத்தில் வம்ச விருத்திக்காக மற்றவர்களுடன் குழந்தைபெற்று ராஜ்யத்தை நடத்தும் வழக்கம் இருந்தது. அதன்படி விசித்திர வீர்யனின் மனைவி அம்பாலிகா மற்றும் அம்பிகா மூலம் பாண்டு திருதராஷ்ட்ரன் பிறந்தனர் ;ராஜ மாதாவாக காலம் கடத்திய சத்யவதி, வானப்பிரஸ்த வாழ்க்கைக்காக அம்பிகா, அம்பாலிகாவுடன் கானகம் சென்று உயிர்நீத்தார்  

SATYAVATI

Smelly fisher woman; though born to King Uparichara and Apsaras beauty Adrika, she was brought up by Fishermen leader Dashraja. Though terribly smelly, she was a beauty. When she helped King Shantanu, to cross River Yamuna Shantanu madly fell in love and wanted to marry her. Like any clever woman, she put a condition that her son only must rule the kingdom. Devavrata, Shantanu’s son was the legal heir; Knowing his  father’s predicament he declared  publicly that he would never marry and remain a Brahmachari. Whole world was wonder struck on hearing his vow; they shouted in ecstasy Bhishma! Bhishma! Meaning Terrific, Wonderful vow!

Satyavati gave birth to two sons Vichitraveeya and Chitrangatha; both died without children. In those days queens or princesses are allowed to produce children through Brahmins or Rishis just to continue the Vamsa/lineage. Thus Ambalika gave birth to Pandu and Ambika to Dhritarashtra through Vyasa.

Satyavati was Rajamata for a long time and went to forest with Ambika and  Ambalika to spend her last days.

****

பாண்டு

பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் இறந்த பிறகு  அவருடைய மனைவி அம்பாலிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர் . தாத்தா சந்தனுவுக்குப் பின்னர் ஹஸ்தினாபுரத்தை ஆண்டார்; குந்தி, மாத்ரி என்ற இருவரை மணந்து காலம் கடத்துகையில் காட்டில் மான் தோல் அணிந்த கிண்டம ரிஷியையையும் அவரது மனைவியையும் தவறுதலாகக் கொன்றார்; தன்னைப்போல கலவி இன்பம் அனுபவித்தால் அவர் இறந்துவிடுவார் என்று கிண்டம ரிஷி சபித்தார். இதனால் வருத்தமுற்ற பாண்டு கானக வாழ்க்கையை நடத்துவதற்கு காட்டிற்குச் சென்றார். பிராமண  ரிஷிகள் மூலம் அவர்கள் இருவரும் குழந்தை பெற்று வம்ஸத்தை விருத்தி செய்யவேண்டும் என்று பாண்டு சொன்னபோது குந்திக்குத் துர்வாச முனிவர் அளித்த வரங்கள் நினைவுக்கு வந்தன அந்த மந்திரம் மூலம் யமன், வாயு, இந்திரன் ஆகியோரை வரவழைத்து அவர்கள் மூலம் தர்மன் என்னும் யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன் ஆகியோரைப் பெற்றாள்; மாத்ரிக்கும் மந்திரத்தைச் சொல்லித் தரவே அவள், அஸ்வினி குமாரர் என்ற இரட்டையர் மூலம் நகுல சகாதேவன் என்னும் இரட்டையரைப் பெற்றாள்  .இதற்குப் பின்னர் ஒரு நாள் மாத்ரியை நெருங்கி இன்பம் துய்க்க முயன்றபோது கிண்டம ரிஷியின் சாபத்தை மாத்ரி நினைவுபடுத்தியும் கூட பாண்டு கலவியில் ஈடுபடவே இறந்தார்.

PANDU

Born to Ambalika and Vyasa , Pandu ruled Hasinapuram for a long time. During a hunting expedition he killed  Kindama Rishi and his wife mistaking them for mating deer. Kindama cursed Pandu that he would also die the moment he attempted to enjoy conjugal bliss.

Pandu felt very sad and went to forest to lead a Vanaprastha life. Kunti and Madri his two wives accompanied him. Both of them used the boon given by Durvasa and produced Five Children – Pandavas Yuthisthira, Bhima, Arjuna, twins Nakula, Sahadeva–through Yama, Vayu, Indra and Ashvini Devas.

One day he wanted to enjoy conjugal bliss with Madri, in spite of her warning about Kindama’s curse. But he did not listen to her and died.

****

திருதராஷ்டிரன்

பிறவியிலேயே குருடர்; அவரை  மணந்த  ஆப்கானிஸ்தான் நாட்டு காண்டஹார் நகர பெண் காந்தாரியும் வாழ்நாள் முழுதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தியாகம்  செய்தார் .அவர்களுக்கு துரியோதணன் முதலிய 99  பிள்ளைகளும் துஸ் சலா என்ற பெண்ணும் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பொறாமையின் சின்னமாக விளங்கினர் அதைத் தாயும் தந்தையும் தடுக்காததால் குலமே போரில் நாசம் அடைந்தது

அம்பிகாவுக்கும் வியாசருக்கும் பிறந்தவர்; பாண்டு மற்றும்  திருதராஷ்டிரன் ஆகிய இருவரில், பாண்டு ராஜ்யத்தை ஆண்டார் ; அந்தகர் என்பதால் திருதராஷ்டிரன் ஆளமுடியவில்லை. தனது இறந்த மகன்களை ஒரு முறையாவது காணவேண்டும் என்று ஆவல் தெரிவித்தவுடன் வியாசர் அவருக்கு ஒரு நொடி நேரம் கண் களைக் கொடுத்தார் போருக்குப் பின்னர், யுதிஷ்டிரர் ஆண்ட காலத்தில், அவருக்கு சகல மரியாதையும் கிடைத்தது. இறுதியில் அந்தக் கால வழக்கப்படி வானப்பிரஸ்தம் என்னும் கானக வாழ்வினை ஏற்க குந்தி, காந்தாரி, திருத ராஷ்டிரன் ஆகிய மூவரும் காட்டுக்குச் சென்றனர்; அங்கு ஏற்பட்ட பயங்கரத் தீயில் தப்பி  ஓடாமல் மூவரும் ஒருவர் ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாக தீயில் கருகி உயிர் நீத்தனர். அவர்களுடன் சென்ற சஞ்சயன் மட்டும் ஒடிப்போய் உயிர்தப்பினார்.

***

Dhritarashtra

Dhritarashtra born to Ambika and Vyasa was blind from his birth. He married Gandhari from Afghanistan and she also lived like a blind folded woman throughout her life.  Pandu ruled the kingdom because of his brother’s blindness. Gandhari gave birth to 99 sons and one daughter. All of them were symbol of jealousy. Both Dhritarashtra and Gandhari never corrected their mistakes and thus they brought their own destruction in the Mahabharata war. After the war he wanted to see his dead sons. Vyasa gave him momentary eyesight to see Duryodhana and his brothers. After the war, Yuthisthira ruled Hastinapura for 36 years. Both Gandhari and Dhritarashtra were looked after well. When they were very old accompanied by Kunti they went to the forest for Vanaprasta life. There they died in big forest fire. They joined hands with one another  and died happily in the roaring fire. Sanjaya escaped from the forest fire.

துஷ்சாசனன்

****

துஷ்சாசனன்

துரியோதண சகோதரர்களில் மூத்தவர்; சகுனி, கர்னுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிரிகளாகப்ப் பாவித்தார் ; சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களின் மனைவியான திரெளபதியின் புடவையை சபையில் உருவ முயன்றார் ; திரெளபதியைக் கண்ணன் காப்பாற்றினார். துரியோதனன் தோல்வியில் துவண்டபோது தற்கொலை செய்துகொள்ள இருந்ததைத் தடுத்தார். மகாபாரத யுத்தத்தில் பீமன் அவரைக் கொடுரமாகக் கொன்றார். துஷ்சாசனனின் கையைப் பிய்த்து அதனாலேயே அடித்துக்கொன்று இருதயத்தைப் பிடுங்கி எறிந்தார். ஒரு பெண்ணின் மீது பட்ட  துஷ்சாசனனின் கரம் அவ்வளவு சித்திரவதைக்கு உள்ளானது!!

DUSHASANA

Dushasan -Eldest of the Gandhari’s sons. They were called Kauravas. With the bad company of Shakuni , he spoiled all peace attempts between the Kauravas and Pandavas. He dragged Draupadi, wife of five Pandavas in the assembly and publicly disrobed her. But Lord Krishna with his magical power made her garment a never ending  longer and longer garment. In the war Bhima cut that hand and with that hand beat him to death. He used the same hand to pluck out his hearth and threw I out. It served as a lesson to trouble makers

துரியோதன

,நகுல, சஹாதேவ 

To be continued………………………

Tags- Hinduism through 500 Pictures , Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம்,  கற்போம்-13,  வயங் பொம்மலாலட்டம், மகாபாரதம் , பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர, பாண்டு, , நகுல, சஹாதேவ ,கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் , குந்தி 

TWO MORE NEW BOOKS FROM LONDON SWAMINATHAN

FOLLOWING TWO BOOKS ARE JUST RELEASED BY PUSTAKA.CO.IN

THE ABOVE PUBLISHER HAS RELEASED MY 153 BOOKS SO FAR.

I HAVE PUBLISHED TW0 MORE NEW BOOKS,

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – Sayings of Great Saints:  From Bhartruhari to Vidura

(also Chanakya, Confucius, Kabir, Mira Bhai, Tulsidas, Tyagaraja)

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – October 2025

Subject – Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 10,000 articles in English and Tamil and over 150 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

Contents

1.Beautiful Quotations on Upanishads

2.Ma Anandamayi’s Quotations

3.Tiru Valluvar’s Sayings!

4.Sanskrit Quotations from Niti Vakyamritam

5.Quotations from Rabindranath Tagore

6.Sayings from Arthasastra of Chanakya

7.More Maxims of Chanakya

8.Gandhi’s Quotations on Hinduism

9.Sayings of Confucius

10.Quotes from Bhartruhari’s Niti Sataka

11.More Quotations on Guru!

12.Quotations from Garuda Purana

13. Quotations on Vedic God Varuna

14. Quotations from Vidura Neeti 

15.Saint Purandaradasa’s Quotations

16. Saint Mirabai’s Quotes

17.Quotations from Saint Tyagaraja Keertanas

18.Sayings of Tulsidas

19.Quotes by Jawaharlal Nehru

20. Tamil Quotes on Wisdom and Knowledge

21.Saint Kabir’s Quotations

22.Quotations on Mind

***

Foreword

One more quotation book! Quotation books are many, but each one is unique. This is my second quotation book in English. I posted sayings of great people in my blogs in monthly calendars. I covered mostly Hindu saints and poets. This time I included Chinese philosopher Confucius also. I have covered certain topics such as Guru, wisdom and mind. Vedas and Upanishads are also used.

These books would help public speakers, writers and students. Any man who seeks knowledge from Hindu scriptures would also find it useful.

I have included 22 topics in this book.

For Tamil readers ,I have already published two quotations books in Tamil.

London Swaminathan

October 2025

Swami_48@yahoo.com

Swaminathan.santanam@gmail.com

********

ABOUT THE BOOK AND THE AUTHOR

Titleகாளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும்

அற்புத ஒற்றுமை!     

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – October 2025

Subject – Literature

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 150 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

பொருளடக்கம்

காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும்

அற்புத ஒற்றுமை!      BOOK TITLE

1.சங்க இலக்கியத்தில் பிள்ளையார், கொழுக்கட்டை, மோதகம்!

2 காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் கடவுள் வாழ்த்து

3. நற்றிணையில் விஷ்ணு பற்றி கடவுள் வாழ்த்து

4.சங்க இலக்கியத்தில், காளிதாசன் நூல்களில் சூரியன் வழிபாடு-1

5.சூரியன் வழிபாடு-2

6.சூரியன் வழிபாடு-3

7.சூரிய எப்படி ஹீலியோஸ் என்று மாறியது?

8.காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு

9.  ராமனும் கடல், ராவணனும் கடல்!

10. விஷ்ணு ! சொல்லினுள் வாய்மை நீ, அறத்தினுள் அன்பு நீ !

11. விஷ்ணு அவதாரங்கள்!

12.காளிதாசன் காவியங்களில் கொடி, வாகனம்!

13. ஆதி சேஷன், பிரம்மா!

14.காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிரம்மா!

15.காளிதாசன் காவியங்களில் இந்திரன்!

16.இந்திரன் ஒப்பீடு –2

17.இந்திரன் ஒப்பீடு! -3

18.சங்க இலக்கியத்திலும் காளிதாசன் நூல்களிலும் உமா

19.  பிறை வழிபாடு

20 .காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் -1

21.சங்கீதம் –2

22. சங்கீதம்—3

23. அவுணர்கள், அரக்கர்கள் -Part 1

24.அசுரர்கள், ராக்ஷஸர்கள் –2

25. சுராங்கனி, அசுரர்கள், ராக்ஷஸர்கள், அணங்கு –3

26.சங்க இலக்கியத்தில் தர்ம, அர்த்த, காம மோக்ஷ!

—SUBHAM–

நூல் அட்டையில் சிவபெருமான் படம் உள்ளது

முன்னுரை

இந்து மதக் கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரம்மா , இந்திரன் முதலியோர் குறித்து சங்க இலக்கிய நூல்களும் காளிதாசனின் ஏழு நூல்களும் ஒருமித்த குரலில் பேசுகின்றன என்று நான் எழுதிய கட்டுரைத் தொடர்களின் தொகுப்பே இந்த நூல் . முருகன் பற்றியும் மன்மதன் பற்றியும் ஏற்கனவே வெளியான நூலில் எழுதிவிட்டதால் இங்கே சேர்க்கவில்லை. அதே போல இமய மலை பற்றி சங்க இலக்கியமும் காளிதாசனும் என்ன சொன்னார்கள் என்பதையும் வேறு ஒரு நூலில் கொடுத்துவிட்டேன் . அசுரர்கள், அணங்குகள் பற்றியும் கூட இரு இலக்கியங்களும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளன; சங்கீதம் பற்றியும் ஒரே அணுகுமுறை உள்ளது; அதையும் இந்த நூலில் காணலாம்.  இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கருத்து சங்க காலத்துக்கும் முன்னரே நிலவியதையும் இக்கட்டுரைகள் மூலம் உய்த்து உணரலாம் . கடவுளரின் கொடிகள், வாஹனங்கள் பற்றியும் கூட அவைகள் பேசுகின்றன. ஆகவே இந்துமத்தின் புராண, இதிஹாசங்கள் தமிழர்களுக்கு அத்துப்படி என்பதை என்னுடைய ஆங்கில, தமிழ் நூல்களை படிப்போர் உறுதிபட அறியலாம்.

கடவுள் தொடர்பில்லாத இயற்கை வருணனை, பெண்கள் வருணனை, உவமைகள் முதலிய விஷயங்களை நான் பல நூல்களில் கொடுத்துள்ளேன்; இந்த நூலில் கடவுள் வாழ்த்து முதல் அரக்கர்கள் அழிவு வரை காணலாம்.

வெள்ளைக்காரன் வந்துதான் இந்தியா என்ற முழுத் தோற்றத்தை நமக்கு கற்றுக் கொடுத்தான் என்று உளறும் அரைவேக்காடுகளுக்கு, சான்றுகளுடன் பதில் தருவதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.

1.KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

2.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

இவை இரண்டும் முன்னரே புஸ்தக.காம் வெளியிட்ட என்னுடைய நூல்கள் ஆகும்.  இமயமலை பற்றி பழமொழிகள் தொடர்பான  என்னுடைய ஆங்கில நூலில் ஒரு விரிவான பகுதியைச் சேர்த்துள்ளேன்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

செப்டம்பர் 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

please go to Pustaka.co.in at Bengaluru to read all the books for a small fee.

–subham

Tags- new books, release

Cartoons from Deccan Chronicle up to 14 10 2025


Cartoons from Deccan Chronicle up to 14 10 2025.

posted by London Swaminathan

–subham–

tags- Cartoons, Deccan Chronicle

Ancient Tamil Encyclopaedia- Part 21; One Thousand Interesting Facts! -Part 21 (Post No.15,087)

Written by London Swaminathan

Post No. 15,087

Date uploaded in London –  14 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Akananuru wonders continued……………

127

அகநானூறு அதிசயங்கள்

Perumpanatruppadai, one of the 18 major books of Sangam age described the vegetarian food available in a Brahmins house. That shows Brahmins have been vegetarians for at least 2000 years. Half baked Dravidians and Marxists are spreading a lie that vegetarianism came to Tamil Nadu from Jainism. It is true that Jains are very good vegetarians even today. But Brahmins have been vegetarians even before that. Lord Krishna explained what is Sattwik (good food for a devotee) food in Bhagavad Gita.

More over we never see Gautama Buddha or Mahavira in 30,000 lines in Sangam literature. The ungrammatical one line or two lined Brahmi inscriptions with Prakrit words show that Jain ascetics have just entered Tamil Nadu. Only in Post Sangam Tamil epic Silappadikaram we read more about Jains. Another proof is Tamils never stopped killing each other in the name of heroism. Wars and destructions continued according to Sangam literature. Killing people is not approved in Jainism and Buddhism.

***

Akam verse 37 gives information about what farmers in the villages had as food. It is mostly vegetarian food. They drank toddy a lot. they plucked parrot beak shaped mangoes and placed them in the mud pot. When there was a good brezze from the south they drank the sour liquid that came from the mangoes. They used cups made up of palm leaves. Then they consumed rice gruel that was prepared in boiled milk with horse gram and moong dhal.

–poet name Vitruutru Mootheyinanar

பாடல்: 37

மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்

கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்

பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்,

மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,

வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித் 5

தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை

வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்

கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்

புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை

வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக், 10

கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக்

கொள்ளொடு பயறுபால் விரைஇவெள்ளிக்

கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை

வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய,

பருதிஅம் குப்பை சுற்றிப், பகல்செல, 15

மருத மரநிழல், எருதொடு வதியும்

காமர் வேனில்மன் இது,

மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே! -Akanaanuuru 37

***

128

Oh Lord Skanda! Save my daughter who eloped with a man

தெய்வத்திற்குப்  (to the deity) பரா அயது (pray; praarthi )

In Akam verse 35, a mother is praying to Lord Muruga (Skanda) to save her daughter who ran away with a man.

Here we get a few interesting points.

The Tamil word for prayer is in English too!

Praarthi in Sanskrit is corrupted in English as pray . in Tamil the word for pray is PARAA AYA; closer to English word ‘Pray’.

Another interesting point is the description of the arid land (Paalai in Tamil) by poet Kudavayil Keeraththanaar.

In that land, the Maravar community sacrifice a lamb or goat, drink toddy and dance beating the kettle drum in front of a hero stone. The hero stone is erected with the inscribed name of a hero who was killed in recovering the cows from the enemy. The stone has peacock feathers. Maravas worshipped it This is how Hindus start a war which is in Mahabharata and Rig Veda. They invade a country after stealing cows from enemy territory.

So not only we found Sanskrit Praarthana as Paraaya in Tami but also Stealing cows from the enemy territory. it is called “Aa nirai Kavarthal and Aa Nirai Meettal” in Tamil.

The third interesting point is mother praying to Lord Muruga in the house. Actually Muruga is mentioned only by the commentator. The commentators take this liberty, based on similar poems.

Another interesting point is historical details in the poem. The poet says that the eloped girl had very dark hair like the dark sands of Pennai River in the village Kodungkaal ruled by Malaiya maan Tirumudikkaari of Tirukkovilur.

The last interesting point the mother wishes that the man must adorn her daughter with flowers and keep her face in his bosom so that she sleeps happily.

It is interesting to see so much historical and geographical  information used in a simple love poem.

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,

வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-

தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை

நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்

முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த 5

வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;

நடுகல் பீலி சூட்டித்துடிப்படுத்துத்,

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்

போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம் 10

துணிந்து பிறள் ஆயினள் ஆயினும்அணிந்து அணிந்து,

ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத்தன்

மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-

துஞ்சா முழவிற் கோவற் கோமான்

நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை, 15

பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்

நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு,

அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! –Akanaanuuru verse 35.

My old article

Krishna’s Restaurant in Dwaraka – Hot Satwic Food Sold!

November 20, 2011

***

Tamil Taste and Sanskrit Taste! (Post No.3060)

Date: 14th    August 2016

Post No. 3060

****

To be continued………………………

Tags-Ancient Tamil Encyclopaedia- Part 21, One Thousand Interesting Facts! -Part 21, Akananuru wonders

எலக்ட்ரிக் கேர்ள் ஆஞ்சலிக் காடின்! (ANGELIQUE COTTIN) (Post.15,086)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,086

Date uploaded in London –   14 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

எலக்ட்ரிக் கேர்ள் ஆஞ்சலிக் காடின்! (ANGELIQUE COTTIN) 

ச. நாகராஜன்

                                             பிராங்கோயிஸ் அராகோ 

உலகமே கண்டிராத ஒரு அதிசய ஆற்றலைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து உலகமே அதிசயித்தது.

அந்தப் பெண்ணின் பெயர் ஆஞ்சலிக் காடின்.

பிரான்ஸ் நாட்டில் போவிக்னி (BOUVIGNY) என்ற கிராமத்தில் 1832ம் ஆண்டு அந்தப் பெண் பிறந்தாள்.

1846ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அவளுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு அதிசய சம்பவம் நடந்தது.

மற்ற பெண்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் ஓக் மரத்தினால் செய்யப்பட்ட சட்டம் ஒன்றில் பட்டு க்ளவ்ஸ்களை அவள் நெய்து கொண்டிருந்தாள்.

திடீரென்று உயிர் பெற்றது போல அந்தச் சட்டம் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்தது. அதை நிறுத்தப் பார்த்தார்கள் முடியவில்லை. அந்தச் சட்டத்தில் இருந்த ஒரு உருளை திடீரென விடுபட்டுப் பறந்து சற்று தூரத்தில் போய் விழுந்தது. அலறி அடித்துக் கொண்டு ஒவென்று கத்தியவாறே பெண்கள் அங்கிருந்து ஓடினர்.

உடனே அந்த சட்டம் பழைய நிலைக்கு வந்தது. பெண்கள் அருகே வந்தனர். மறுபடியும் ஒரு ஆட்டம்!  

தொடர்ந்து அலறல். பெண்களின் ஓட்டம். இது பல முறை நடந்தது. அனைவரும் திகைத்தனர்.

பின்னர் தான் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தனர்.

ஆஞ்சலிக் அந்த சட்டத்தை நெருங்கும் போது தான் அது ஆட ஆரம்பிக்கிறது என்றும் அவள் நகர்ந்தால் அது தனது இடத்தில் அமர்ந்து விடுகிறது என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஆஞ்சலிக்கின் வீட்டார் அரண்டு போயினர்.

தங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சந்தேகப்பட்ட அவர்கள் ஆஞ்சலிக்கை உள்ளூர் சர்ச்சுக்கு அழைத்துச் சென்றனர் – பேயை ஒட்ட!

சர்ச்சில் இருந்த பாதிரியார் அவளை ஒரு மருத்துவரிடமும் காண்பிக்குமாறு ஆலோசனை கூறவே பிரபல மருத்துவரான டாக்டர் டாஞ்சோவிடம் (Dr Tanchou) அவளை அழைத்துச் சென்றனர்.

இப்போது அவள் சக்தி இன்னும் வீரியம் கொண்டது.

இந்தச் சம்பவம் அனைத்து செய்தித்தாள்களிலும் வரவே பிரான்ஸே அல்லோலகல்லோலப்பட்டது.

அவள் அருகே சென்றவர்களுக்கும் ஒரு எலக்ட்ரிக் ஷாக் அனுபவம் கிடைத்தது. நேராக இருக்கும் ஊசி அவள் அருகே வந்தால் ஆட ஆரம்பித்தது.

டாக்டர் டாஞ்சோவும் அவளது பெற்றோரும் அவளை பாரிஸில் உள்ள பாரிஸ் அகாடமி ஆப் ஸயின்ஸஸுக்கு அழைத்துச் சென்றனர்.

 பிரான்ஸ் நாட்டின் பிரபல விஞ்ஞானியும், அரசியல்வாதியும், வானவியல் நிபுணருமான பிராங்கோயிஸ் அராகோ (Francois Arago) அவளைத் தன் சோதனைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். இதை ஆராய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. 

மேஜையின் மீது பேனா, பேப்பர் உள்ளிட்ட எந்தப் பொருளும் ஆஞ்சலிக் அருகில் வந்தவுடனே நகர்ந்து பறக்க ஆரம்பித்தது. 

விஞ்ஞானி அதிசயித்தார். மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இந்த சக்தி தீவிரம் அடையும். அப்போது அவளது உடலின் இடது பக்கம் சூடாக இருக்கும். 

ஒரு நாற்காலியில் அரைபாகத்தில் விஞ்ஞானி உட்கார, அடுத்த அரை பாகத்தில் ஆஞ்சலிக்கை உட்கார அவர் அழைத்தார். அவள் உட்கார்ந்தவுடன், அவ்வளவு தான், அவரைத் தள்ளி விட்டு நாற்காலி நகர்ந்தது. இப்படி ஒரு சக்தி அவளிடம் இருக்கிறது என்பதை அராகோ உறுதிப் படுத்தினார்.

பத்து வாரங்கள் இந்த மின்சக்தி அவள் உடலில் இருந்தது. பின்னர் அவளை விட்டு அகன்றது.

அவள் பூப்புப் பருவம் அடைவதை ஒட்டி இந்த சக்தி அவள் உடலில் புகுந்திருக்குமோ என்ற ஊகத்தை ஒருவர் கிளப்பினார். 

ஆனால் யாராலும் காரணம் கண்டுபிடிக்க  முடியாத ஒரு அபூர்வ சக்தி அவளிடம் வந்தது; அது தானே போனது! உலகில் இப்படி ஒரு விவரிக்க முடியாத அதிசய மின்சக்தி கொண்டிருந்த பெண் ஆஞ்சலிக் ஒருத்தி தான் என்பதை வரலாறு கூறுகிறது!

***