ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2 (Post No.10,373)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,373

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2

ச.நாகராஜன்

தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சேர்ந்தனர்.

பாபா இருக்குமிடம் பிரசாந்தி நிலையம் என்ற பெயருடன் உருவானது. ஆயிரக்கணக்கான அருள் விளையாடல்களை அவர் நடத்த ஆரம்பிக்க உலகமே பிரமித்தது. நேரத்தைக் கருதி ஒரு சில முக்கிய அற்புதங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் உண்டு.ஆங்கிலத்தில் இதை அவ்ரா (AURA) என்று குறிப்பிடுவர். இந்த ஒளிவட்டத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களுள் தலையாய விஞ்ஞானி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி என்பவராவார். அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால் எந்த வித சாதனமுமின்றி ஒரு மனிதரின் அவுராவை தனது வெறும் கண்களாலேயே பார்க்கும் திறனைப் பெற்றவர். அவர் பாபாவை தரிசித்தார். ஆனந்தம் கொண்டார். 1979ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிருந்தாவன் அருகே ஸ்ரீ சத்ய சாயி கல்லூரி கட்டிடங்களின் திறப்பு விழாவில் ஸ்ரீ சத்ய சாயி கட்டிடங்களைத் திறந்து வைக்க, தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் எட்டாம் நாளன்று பாரனோஸ்கி உரை நிகழ்த்தினார். அந்த உரையில், “நான் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஃபோர்ட், இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிஸபத் நெதர்லாந்து ராணி வில்லெயுல்மினா ஆகியோர் இருந்த மேடைகளில் பேசியுள்ளேன்” என்று கூறிய அவர் ஸ்வாமியின் ஒளிவட்டம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதையும் அது அவர் பேசும் நபர் அல்லது தொடும் நபரை ஊடுருவி பிறகு திரும்பி வருவதையும் கண்டதாகவும், அவருடைய சக்தி எங்கும் பரவி இருப்பதாகவும் கூறினார். அவரது பிரேமை ஒளிவட்டத்தைக் கண்டு வியந்த அவர், Love Walking on Two Feet – நடமாடும் பிரேமை உருவம் – என்று அவரை வர்ணித்தார்.

அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி வால்டர் கோவான் என்பவர். அவர் தனது மனைவி எல்ஸியுடன் இந்தியா வந்து ஸ்வாமியை தரிசித்தார். சென்னையில் 1971 டிசம்பரில் எட்டாவது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் வந்த போது கன்னிமாரா ஹோட்டலில் தங்கி இருந்தார். டிசம்பர் 20ஆம் தேதி காலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு காலமானதாக அறிவிக்கப்பட்டு அவர் நாசியிலும் காதுகளிலும் பஞ்சும் வைக்கப்பட்டது. அவர் சவத்தை அப்புறப்படுத்த டாக்டர் உத்தரவிட்டார். பிறகு தனது அலுவலைக் கவனிக்கச் சென்ற அவர் திரும்பி கோவானின் அறைக்கு வந்த போது அவர் உயிருடன் இருந்தார். பஞ்சு அகற்றப்பட்டிருந்தது. இதயத் துடிப்பு சீராக இருந்தது. என்ன நடந்தது என்று டாக்டர் பிரமித்தார். பணியாளர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்த ஒருவர் கோவானைப் பார்க்க வந்ததாகவும் உடனே அவர் உயிர் பிழைத்தார் என்றும் கூறினர் கோவானே நடந்தது என்ன என்பதைப் பின்னர் விளக்கினார்.

தான் இறந்து வெகு உயரம் சென்றதாகவும் பாபா தன்னுடன் வந்ததாகவும் அவர் கூறினார். ஒரு இடத்தில் மேஜை ஒன்றில் தலைவராகக் காணப்பட்ட ஒருவரிடம் கோவானைப் பற்றிய பல ஆவணங்கள் பல மொழிகளில் தரப்பட்டன.அவை அவர் பல் வேறு காலங்களில் பல்வேறு கலாசாரங்களில் உயர்ந்த பதவி வகித்து வந்ததை அவை குறிப்பிட்டன. அதை பாபா மொழிபெயர்த்துக் கூறினார். அந்தத் தலைவரிடம் பாபா, கோவானைத் தன்னுடைய பாதுகாப்பில் அனுப்பி வைக்குமாறு கூற தலைவர் அதற்கு இணங்க இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். தான் மீண்டும் உயிருடன் இருப்பதை உணர்ந்ததாக கோவான் கூறினார். இப்படி இறந்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் நம் காலத்திலேயே நம் கண் முன்னாலே நடந்திருக்கிறது என்பது எத்துணை ஆச்சரியமான ஒன்று!

டாக்டர் பகவந்தம் கேம்பிரிட்ஜில் படித்த சுலபத்தில் மசியாதவர். சித்து வேலைகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. ஒரு முறை அவர் பாபாவைச் சந்தித்த போது அவரிடம் பாபா பகவத் கீதை வேண்டுமா, நான் கொடுத்தால் படிப்பீர்களா என்றார். ”இன்றே படிக்காவிட்டாலும் அதை பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்” என்றார் பகவந்தம்.

அவர் பார்த்துக் கொண்டே இருக்க கையை அசைத்தார் பாபா. அதிலிருந்து சிறிய அளவில் ஒரு கீதை புத்தகம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான மனப்பான்மை கொண்ட பகவந்தம் அதிசயித்து அது எந்த பிரஸ்ஸில் அடிக்கப்பட்டது என்று கேட்டார்.
‘சாயி பிரஸ்ஸில். தெலுங்கு எழுத்துக்களில் அடிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் உங்களுக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும்
என்றார் பாபா. பகவந்தம் பாபாவின் அணுக்கத் தொண்டராக ஆனார்; பகவான் தெலுங்கில் ஆற்றிய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பாக்கியத்தையும் பெற்றார்.

அமெரிக்காவில் பிரபலமான சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் (Dr. Samuel Sandweiss)என்பவர், தானே பாபாவிடம் பல அனுபவங்களைப் பெற்றார்.

Amazing! Unbelievable! Unthinkable! என்று தனது அனுபவங்கள் பலவற்றால் அவர் வியந்து கூறினார். இனி Psychiatry யே இல்லை! இனி உலகை Saichiatry யே ஆளும் என்று சிலேடையாக எழுதினார். அவரது Sai Baba The Holy Man and the Psychiatrist என்ற நூல் உலகப் புகழ் பெற்ற நூல்.

பாரா சைக்காலஜி எனப்படும் அதீத உளவியல் துறையில் நிபுணத்வம் கொண்ட பல விஞ்ஞானிகள் பாபாவிடம் வந்து அவரை ஆராய ஆரம்பித்தனர். கார்லிஸ் ஓஸில் என்ற விஞ்ஞானி பாபாவின் அனுமதியைப் பெற்று அவரை ஆராய ஆரம்பித்தார். அவருடன் ஹரால்ட்ஸன் என்பவரும் சேர்ந்தார்.

அங்கையை அசைத்து விபூதியை வரவழைத்து அவர்களிடம் தந்தார் பாபா. பல அதிசய அனுபவங்களைப் பெற்ற அவர்கள் 1975இல் கலிபோர்னியாவில் நடந்த பல்கலைக் கழக அதீத உளவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மகாநாட்டில் இந்த அற்புதங்களில் மோசடி இருப்பதற்கான சான்றாக எதையும் தங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றனர்.

***   தொடரும்

tags- சத்ய சாயி பாபா! – 2

LONDON CALLING GNANAMAYAM BROADCASTS ON 21,22 NOV.2021 (Post No.10,372)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,372

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXX

21-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  MRS APARNA SRIKANTH, CHENNAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   TIRUVANMIYUR TEMPLE 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & GROUP — 10 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

XXXX

22 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER –  MISS MANI KARNIKA, UDUPI

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON SRI SATHYA SAI BABA-15 MTS

Talk by London Swaminathan on RAIN IN ATHARVANA VEDA AND TAMIL LITERATURE -10 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10 mts.

SONGS BY VARIOUS SINGERS -10 MTS MANI KARNIKA, VINAYA

MANGALAM BY MRS LAKSHMI RAMESH, CHENNAI

—- subham—

Tags – broadcasts 21,22-11-2021

‘CHRISTIANS BURNED ALIVE 9 MILLION WOMEN’ – CHAMBERS ENCYCLOPEDIA (Post.10,371)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,371

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

CHRISTIAN ATROCITY AGAINST WOMEN

Christians dubbed all pagans as witches and burned them alive. Joan of Arc is the most famous woman and heroine burned alive. But until 1920s the church justified it and turned a blind eye to the problem. Only in 1920, she was made a martyr/saint. Later she became Saint Joan. Napoleon Bonaparte announced that Joan was the national symbol of France. Catholic church feared that France could also turn anti- Catholic like the Protestant Germany.

George Bernard Shaw brings out the animosity of Christian preachers against women like Joan, the Maid of Orleans.

Christians have been practising  witch hunt for 2000 years. The most famous woman mathematician Hypatia was dragged down to the streets like a dog by Christian fanatics and killed violently in Egypt. The world of science knows what happened to Copernicus and Galileo.

In Christian dictionary, a witch is one who does not practise Christianity and practise another faith. Hypatia was so beautiful that she did not want to show her beauty, thinking that it would distract the students , taught maths from behind a curtain. She taught that sun is the centre of the world and all the planets are going around it. She lived in the 4th century CE in Alexandria in Egypt. 1500 years later Kepler was given credit for this Helio- centric theory. Hypatia might have got this theory from Hindus of Alexandria in Egypt. There were sizeable number of Hindu scholars and businessmen in Alexandria according to early Greek and Roman writers.

Hindus knew that the Sun was in the centre and around which earth and other planets orbited. They calculated eclipses correctly and gave the names appropriately because of this knowledge; slowest orbiting planet was given the name Sanais Charan- slow moving  (Saneeswaran is a wrong word for Saturn) and named the heaviest planet Jupiter /Guru. Guru means ‘heavy’ as well one who elevates his disciple to a higher place. Latest NASA scientists’ discovery shows that planet Guru/Jupiter is not only the largest but also it has catapulting effect. A satellite can use Guru’s gravitational pull to go higher and higher without spending any fuel. Hindu Guru does the same for his dieciple!!

xxx

PICTURES FROM WIKIPEDIA

Ralph T H Griffith adds the following note as a foot note to Atharva Veda Sukta 171; Canto/Book 5; hymn 29

“This invocation of Agni to counteract and destroy malevolent fiends who sapped men’s strengths and took their lives is a far more sensible than the European belief, countenanced by the law and generally prevalent even at the beginning of last century, which attributed any insidious  and unaccountable illness to the malevolent machinations and noxious charms of witches, who were usually poor old women with wrinkled faces , hairy lips, squinting eyes, squeaking voices and scolding tongues. Dr Sprenger in his ‘Life of Mohammed’ computes the entire number of persons who have been burned as witches during the Christian epoch at NINE MILLIONS – Chambers Encyclopaedia/ Witchcraft”

xxx

What was hidden by Griffith

Joan of Arc’s burning and Hypatia’s killing show that the Witch hunt has been going on for nearly 1700 years. Christian priests authorised them. People gathered in large numbers and celebrated burning of women.

Muslim invaders killed more people who refused to convert themselves.

Greeks poisoned  their opponents and the best example is Socrates.

Romans were more barbarous and killed the slaves by throwing them to wild animals like tigers and lions. A vast crowd sitting in In the huge  stadium watched happily the tearing of human beings by wild animals.

Now for Americans, shooting and killing people like ducks has become a hobby. Are we progressing or regressing?

In the Atharva Veda sukta it was only a ‘ghost busting mantra’. No loss of life is reported.

Hindu children must learn all these things properly to counteract the anti -Hindu preachers.

–subham–

 TAGS- CHRISTIAN, BURNING WOMEN, 9 MILLION, HYPATIA, JOAN OF ARC, WITCHES

90 லட்சம் பெண்கள் உயிருடன் எரிப்பு – சேம்பர்ஸ் கலைக் களஞ்சியம் திடுக்கிடும் தகவல் (10,370)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,370

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை இல்லாத பெண்களை பேய்மகள் , சூன்யக்காரி என்று சொல்லி உயிருடன் எரித்துக்கொல்வதை உலகம் நன்கு அறியும் . பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை, பேரழகி ஜோன் ஆப் ஆ ர்க்கை  (JOAN OF ARC ஆர்க் நகர ஜோன் ) உயிருடன் எரித்துக் கொன்றதால் இது உலகம் முழுதும் அம்பலமாகியது. பின்னர் போப்பாண்டவர் இதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு அவளை செயின்ட் / புனிதவதி என்று அறிவித்தார். பெர்னார்ட் ஷா எழுதிய நாடகத்தில் இந்த அநியாயத்தைக் கண்டித்தார்  (பெர்னார்ட் ஷா நாடகத்தை  லண்டன் சுவாமிநாதன் பி.பி.சி. தமிழோசைக்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ).

வெள்ளைக்கார மஹா பாவிகள் இதைப் பற்றி எழுதவே மாட்டார்கள்; அது மட்டுமல்ல இது 19-ம் நூற்றாண்டு வரை நடந்தது. அப்படி பெண்களை உயிரோடு எரிக்கையில் ஊரே கூ டி நின்று வேடிக்கை பார்க்கும். கூத்தாடி மகிழ்வார்கள். அங்குள்ள சிறுவர் சிறுமியர் மனதில் அனுதாபம், பரிதாபம் தோன்றக்கூடாது என்பதற்காக அவள் சூன்யக்காரி, மந்திரத்தால் இந்த ஊரையே  நாசம் செய்ய முயன்றாள் என்று வதந்தியைப் பரப்புவார்கள் . பின்னர் அவளை கயிற்றால் கட்டி, வைக்கப்போரில் வைத்து கொளுத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். இதற்கெல்லாம் முன்னின்று அனுமதி கொடுப்பவர் கிறிஸ்தவப் பாதிரி. இதே போல மதம் மாறாதவர்களை முஸ்லீம்கள் கொன்று குவித்தார்கள் . இந்த வரலாற்று உண்மை களை ஆதாரபூர்வமாக இந்துக்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

மாற்று மதத்தினர் இந்து மதத்தினரைத் தாக்கிப் பிரசாரம் செய்தால் இதை அச்சிட்டு அவர்கள் கைகளில் கொடுக்க வேண்டும்.

முதலில் CHAMBERS ENCYCLOPAEDIA சேம்பர்ஸ் என்சைக்ளோபீடியா என்ன கூறுகிறது என்பதைப்  பார்ப்போம் .

அதர்வண வேதம் ஐந்தாம் காண்டத்தில் 28-ஆவது மந்திரம் (ஸூக்தம் எண் 171) பேய் ஒட்டும் மந்திரம் ஆகும் .அதுபற்றி வேத மந்திரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ரால்ப் டி .எச் . கிரிப்பித்  RALPH T H GRIFFITH இவ்வாறு கூறுகிறார்

” கெட்ட பிசாசுகளை அழிக்க அக்கினியை நாடும் இப்பழக்கம் ஐரோப்பாவில் உள்ளதைவிட தேவலை போல் உள்ளது. அங்கு சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்  தோன்றிய பயங்கரமான பேய்களுக்கு பெண் மந்திரவாதிகள்தான் கரணம் என்று நம்பினர்; மக்களும் கூட அதை நம்பினர். அம்மந்திரவாதிகள் பொதுவாக ஏழைக் கிழவிகளாக இருப்பார்கள். சுருக்கங்கள் நிறைந்த முகம், ரோமங்கள் அடர்ந்த உதடுகள் , பூனைக் கண்கள், கீச் என்ற குரல்,  வசைபாடும் நாக்குகள் உடையோர் என்று அவர்களை வருணிப்பார்கள். கிறிஸ்தவ சகாப் தத்தில் சுமார் 90 லட்சம் பெண் மந்திரவாதிகள் எரிக்கப்பட்டதாக டாக்டர் ஸ்ப்ரெங்கர் ” முகமது நபியின் வாழ் க்கைச் சரிதம் என்ற நூலில் கூறுகிறார்- ஆதாரம் சூன்யக் காரிகள் – சேம்பர்ஸ் என்சைக்ளோபீடியா  WICHCRAFT ,CHAMBRS ENCYCLOPEDIA.

DR SPRENGHER IN HIS BOOK ‘ LIFE OF MOHAMMED’.

குறிப்பிட்ட அதர்வண வேத மந்திரத்தில் ஜாதவேதஸ் என்னும் அக்கினி தேவன் குறித்துப் பாடும் பாடலில் உயிர்க்கொலை எதுவுமில்லை. பேய் பிசாசுகள் மீது சாபம் மட்டுமே உளது. ஆகையால் கிரிப்பித் இது ரொம்பவும் தேவலை போல இருக்கிறதே. எங்கள் ஐரோப்பா மிகவும் மோசம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

XXXX

கிரிப்பித் மறைத்த விஷயங்கள்

வயதான, ஆதரவற்ற, தனித்து வாழும் பெண்கள் எவருக்கும் ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லை. அவர்கள் எரிக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்தை ஏற்காத இளம்பெண்களையும் இப்படி எரித்தார்கள். கிரிப்பித் மிகவும் சாதுர்யமாக, ஜோன் ஆப் ஆர்க் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆர்லியன்ஸ் நகர பேரழகி ஜோன், 19 வயதில் சூன்யக்காரி முத்திரை குத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாள் . இது 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இறுதியாக நெப்போலியன் இந்த அக்கிரமத்தைக் கண்டித்து அவளை பிரான்ஸ் நாட்டின் தேசீய சின்னம் என்றும் அறிவித்தார். இதற்கு மேலும் இந்த அநியாயத்தைக் கண்டிக்காமல் இருந்தால் பிரான்சும் ஜெர்மனி போல கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் என்று கருதி 1920ம் ஆண்டில் நா ங்கள் செய்தது மஹா தப்பு; அவளை இன்று முதல் பு ண்ய ஆத்மா என்று வணங்குவோம் என்று அறிவித்தார் அப் போதைய போப்பாண்டவர்.

கிறிஸ்தவர்கள் இதை 2000 ஆண்டுகளாக செய்து வந்தனர். 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைப்பேஷியா HYPATIA என்னும் பேரழகி எகிப்து நாட்டில் மக்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்தார். அவர் பிற்காலத்தில் கெப்ளர் KEPLER  கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் சூரிய சித்தாந்தத்தை 1700 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார். அவளை கிறிஸ்தவ மத விரோதி என்று முத்திரை குத்தி படுகொலை செய்தனர். கோபர்நிக்கஸ், கலீலியோ போன்ற விஞ்ஞானிகளை கிறிஸ்தவர்கள் கொடுமைப் படுத்தியதை எல்லா புஸ்தகங்களிலும் காணலாம்.

ஹைப்பேஷியா HYPATIA கொல்லப்பட்ட அ லெக்ஸ்சாண்ட்ரியா துறைமுகத்தில் இந்துக்கள் காலனி  HINDU COLONY இருந்தது. இந்து வணிகர்கள் அங்கு பெரும் அளவில் இருந்தனர். ஆக , ஹைபேசியா சொன்ன புதுமை விஷயம் இந்துக்களின் கண்டுபிடிப்பே. ஏனெனில் கிரஹணம் பற்றிய தகவல்கள் 2000 ஆண்டுகளாக சங்கத் தமிழ் நூல்களிலும்  அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் உளது. நாம் நாள் தோறும் பார்க்கும் பஞ்சாங்கத்திலும் உளது. ஆக சூரியனைச் சுற்றித்தான் கிரகங்கள், பூமி முதலியன செல்கின்றன என்பது இந்துக்களுக்குத் தெரியும். அல்லது கிரஹணத்தை சொல்லியிருக்க முடியாது .

கிறிஸ்தவ, முஸ்லீம் படுகொலைகளை மார்க்ஸீயக் கும்பலும், வாத்திகன் ஆதரவு கும்பலும் மறைத்து வருகின்றன. இவற்றை இந்து மத சிறுவர் சிறுமியர்க்கு கற்பது மிகவும் அவசியம் ஆகும் .

இதைவிட கொடூரமான சம் பவம்  கிரேக்க நாட்டிலும் இத்தாலியிலும் நடந்தன. கிரேக்க நாட்டில் அவர்களுடைய தெய்வத்துக்கு எதிராகப்  பேசிய சாக்ரடீஸ் முதலியோருக்கு கட்டைப் பஞ்சாயத்து நடத்தி கட்டாய விஷம் கொடுத்துக் கொன்றனர். ரோமானிய மன்னர்கள் அசுரர்கள். ராவணன் போன்றவர்கள். அவர்கள் அடிமைகளையும் போர் எதிரிகளையும் சிங்கம் புலிகள் முன்னிலையில் தூக்கி எறிந்து சண்டை போட்டு சாகுங்கள் —  என்று சொல்லி வேடிக்கை பார்த்தனர். அதை வேடிக்கை பார்க்க பிரம்மாண்டமான ஸ்டேடியம் கட்டினார்கள் ( கட்டுரையாளர் லண்டன் சாமிநாதன் இரண்டு முறை ரோம் சென்ற போதும் அந்தக் கட்டிடங்களை புகைப்படம் எடுத்து முன்னரே  இங்கு வெளியிட்டுள்ளார்.)

90 லட்சம் பெண்களின் ஆன்மா சாந்தி அடைவதாக !

PLEASE GO TO WIKIPEDIA FOR MORE INFORMATION ABOUT HYPATIA OF ALEXANDRA, JOAN OF ARC OF FRANCE.

–SUBHAM–

tags- சூன்யக்காரி பிரான்ஸ் , வீராங்கனை,  ஜோன் ஆப் ஆர்க்  ,JOAN OF ARC , Hypatia, ஹைப்பேஷியா

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 1(Post No.10,369)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,369

Date uploaded in London – –   23 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

நாளை நவம்பர் மாதம் 23ஆம் தேதி. அவதார புருஷர் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் ஜெயந்தி தினம். அதையொட்டிய இந்த உரையில் எனது அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டு பிறகு பாபாவைப் பற்றிச் சொல்ல எண்ணுகிறேன்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் முற்பகுதியில் நவம்பர் மாதம் 23 ஆம் தேதியை ஒட்டிய முன் தினமொன்றில் மதுரையிலிருந்து ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பக்தர்களின் குடும்பங்கள் பல புட்டபர்த்திக்குச் செல்லத் திட்டமிட்டன. அதில் எனது குடும்பமும் ஒன்று. எனது தந்தையார் தினமணி ஸ்ரீ வெ.சந்தானம் எங்களையும் ஒரு காரில் அழைத்துச் சென்றார். மதுரையில் பெரும் வியாபாரியும் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பக்தருமான ஸ்ரீ P.S.A சுப்ரமணியம் செட்டியார் தலைமையில் LIC இல் பணி புரிந்த பெரிய அதிகாரி ஸ்ரீ K R K பட் உள்ளிட்டோர் அவரவர் காரில் சென்றோம்.

புட்டபர்த்தி அடைந்தவுடன் அங்கு ஸ்ரீ கஸ்தூரி அவர்களைச் சந்தித்தோம். அந்தக் காலத்தில் இப்போது காணும் பிரம்மாண்டமான புட்டபர்த்தி இல்லை.

பிரசாந்தி நிலையம் மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அருகே பல சிறிய வீடுகள். அதில் ஒன்றில் ஸ்ரீ கஸ்தூரி இருந்தார். அவருடன் அளவளாவி மகிழ்ந்தோம். மறு நாள் ஸ்ரீ பாபா எங்களை இண்டர்வியூவுக்கு அழைத்தார். எனது தந்தையாருக்கு தன் அங்கை அசைவில் கையை அசைத்து தனது விஸிடிங் கார்ட் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். பல அருளுரைகளையும் கூறினார்.

மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும். திரும்பி ஊர் வந்து சேர்ந்தோம். அன்று முதல் SAI ACTIVITIES சாயி சேவா தொடங்கியது.

எனது தந்தையார் ஏராளமான சாயி கீர்த்தனைகளை இயற்றினார். நேரம் காலம் இல்லை. நினைத்த போது கீர்த்தனைகள் எழும். அதை உடனே எழுதிக் கொள்வார். சங்கீத வித்வான்கள் பலரும் அதைப் பாடி மகிழ்ந்தனர். அதை சாயிபாபாவிடம் சமர்ப்பித்த போது அது ஏற்கனவே எழுதும் போதே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் பதங்கள் நடனமாடி வந்திருக்கின்றன என்றும் அவர் கூறி அருளினார்.

நான் சேவா தள் அமைப்பில் சேர்ந்து வாராவாரம் மதுரை ஜெனரல் ஹாஸ்பிடல் சென்று சேவை செய்வது, அதி காலை 5 மணிக்கு நகர சங்கீர்த்தன், ஞாயிறு அன்று ஸ்டடி சர்க்கிள், கோவிலில் உழவாரப் பணி, அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மெடிகல் கேம்ப் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டேன். ஏராளமான இடங்களில் பஜனை நடைபெறும். ஒவ்வொருவருக்கும் ஒரு திவ்ய அனுபவம். பல படங்களிலிருந்து விபூதி மழை பொழியும். பகவான் மதுரை விஜயம் செய்தார். அவரது பேச்சை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்தார்.

சென்னை மாநிலத்தில் மாநில அளவிலான சேவா தள் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டேன். அதில் மாநிலத்திற்கான முதல் பரிசைப் பெற்றேன்.சென்னை ஆபட்ஸ்பரியில் நடந்த விழாவில் பாபாவின் திருக்கரங்களினால் அவர் எழுதிய ராமகதா ரஸ வாஹினி நூலை -அவர் கையெழுத்திட்டுக் கொடுத்த நூலை – அவரிடமிருந்து பெறும் பெரும் பாக்கியத்தையும் பெற்றேன்.

இன்னும் பிரசாந்தி நிலைய அனுபவங்கள், மாநாடு, ஆங்காங்குள்ள ஊர்களில் ஏற்பட்ட அனுபவங்கள் என அடுத்தடுத்து ஏராளம் ஏற்படலாயின.

அவர் கலியுகத்தில் அவதரித்த மாபெரும் அவதாரம் என்பதை உணர்ந்த கோடிக் கணக்கான பக்தர்களில் அடியேனும் ஒருவனாக ஆகியதோடு மட்டுமின்றி அவரது வரலாற்றை தமிழில் அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ற நூலாக எழுதி டிசம்பர் 2002இல் வெளியிட்டேன். 368 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் அவரது பல உரைகளின் பகுதிகளும் கூட ‘அம்ருத சாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரி’ என்ற இணைப்பாகத் தரப்பட்டிருந்தது. இந்த எனது முன் உரையுடன், இனி அவரது வாழ்க்கை சரிதத்திற்கு வருவோம்.

      ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தர்மாவரம் அருகே உள்ளது புட்டபர்த்தி என்னும் சிறிய கிராமம். இங்கு க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்த ராஜு வம்சத்தினர் நெடுங்காலமாக வசித்து வந்தனர். பாரத்வாஜ கோத்திரத்தையும் ஆபஸ்தம்ப சூத்திரத்தையும் சேர்ந்த ஸ்ரீ கொண்டம ராஜு ‘ரத்னாகர’ என்ற பெயரைக் கொண்டவர். ஆகவே இவரை ரத்னாகர கொண்டமராஜு என அனைவரும் அழைப்பர். இவருடைய மனைவி லக்ஷ்மம்மா சத்ய நாராயண பூஜையைப் பயபக்தியுடன் செய்து வந்தவர். இவருக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவருடைய மூத்த மகனான பெத்த வெங்கமராஜு ஈஸ்வரம்மா என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி காலை எட்டு மணிக்கு திருவாதிரை நக்ஷத்திரத்தில்  மூன்றாவது மகனாக அவதார புருஷர் சத்ய நாராயணன் அவதரித்தார். தன் அவதார பணியை நிறைவேற்றக் காத்திருந்த பாலகன் ,1940ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதி பள்ளிக்கூடம் நோக்கிச் சென்ற பாலகன், திரும்பி வந்து தன் புத்தகங்களை அண்ணன் வீட்டில் எறிந்து விட்டு, “என் பக்தர்கள் என்னை அழைக்கின்றனர். நான் கிளம்பி விட்டேன்” என்றார்.

அன்று தனது பக்தரான கலால் இன்ஸ்பெக்டரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு வீட்டைச் சுற்றி இருந்த மாந்தோப்பில் ஒரு கல்லின் மீது அமர்ந்து,

“மானஸ பஜரே குரு சரணம், துஸ்தர பவ சாகர தரணம் என்று பாடி தனது முதல் உபதேசத்தை ஆரம்பித்தார்.

***   தொடரும்

tags- சத்ய சாயி பாபா! – 1, sathya sai

Who is London Swaminathan-9 ; More Miracles by Swamiji! (Post No.10,368)

Velukkudi Sri Krishnan in London
I am garlanding the great speaker

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,368

Date uploaded in London – –   22 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I wrote about our first meeting with Swamiji Krishna with my dad , elder brother and Indian Express manager Mr J S M. Another thing also happened in the very first meeting. He looked at me and said,

Sama is very intelligent (All Swaminathans of Thanjavur District are called Sama in abbreviated form)

I was very upsent and angry. I thought how dare this man calls ‘me only’ intelligent when I am standing along with my elder brother. Immediately Swamiji said,

Sama is very angry because I did not praise his elder brother. Then he said good things about him as well.

Swamiji always ask people like us to prostrate before his mother first and then only he would accept ur Namaskarams to him. Probably this is to teach every one should respect his or her mother . We see such things with Sathya Sai Baba’s mother Eswaramba, Lord Krishna’s mother Devaki even his foster mother cowherdess Yasotha. We sing their glory even today in Bhajans. It is one way of teaching everyone that Mother comes first.

xxx

Once I was asked to come to Tenkasi all alone so that I can accompany him to Chenganoor, Ariyankavu and Kulathupuzai. My famliy was very hesitant and scared. There was no mobile phone in those days. Unless Swamiji’s car picks me up and then go to a PCO (public call office) they can’t contact my family.

With 100 ++++ instructions from my father where to sit in the train, what I should not do on the train, how people can easily cheat me etc. I was packed into a train. Somehow I reached Tenkasi by an express train in 3 or 4 hours. The car was waiting for me. Then they informed my family. A great ‘daring’ trip! I was a hero in front of my family!

My eldest brother was studying at PACR Polytechnic in Rajapalayam. He belongs to the first batch in the institution. He was also given such instructions before me! So, I was not the first victim.

In course of time, Swamiji asked me not to continue my friendship with a particular boy. I asked Swamiji How do I know what boy you are talking about. Because in those days there was no fear for any one’s life. No parent worried about their children going out. At 4 pm the school is finished. At 5 pm every child , boy or girl, is out of their house. Boys never return home until 11 pm in the night. For a brief period, one would run home just for one’s dinner and then join 101 different games, all on the road. I had scores of friends.

So when I asked Which friend? He asked me to say the names of friends  one by one  . I reeled out the long list. At one name, he said STOP. He is the one I meant. I know he is not a good boy, but he did not do any bad thing to me. Any way I followed Swamiji’s words in letter and spirit.

By the way, I would tell you the world that existed 65 years ago when I was an elementary school boy. Joseph Tito, President  of Yugoslavia visited Madurai with the Prime Minister of India Jawaharlal Nehru. Both of them were part of Non Aligned Movement. We , children were given national flags of the countries and asked to wave when the motorcade pass by. We did it standing along North Masi Street where my Yadavas School was situated. Both the leaders were at our arm’s length. They used to stop and wave back to us. They accepted garlands from congress party people. Very rarely you see police presence. Nowadays even to see Goddess Meenakshi in the world-famous temple, I have to deposit my mobile phone and pass through electronic gate like airport security. Are we progressing or regressing? Deteriorating?

Once RSS leader Guruiji Golwalkar referred to US and said America is a decaying nation, in one of his lectures in Tamil Nadu. Though I was a staunch supporter of RSS, I did not like his remarks. But now I feel his words are true. If you look at the mindset of America, you could see what they do to get petrol. Just for petrol they are ready to bomb any country and kill any political leader who refuse to give them petroleum. We have heard about drug addict, alcohol addict but not about petrol addict and gun addicts. Their hobby is gun fight like Western Movies.

Sorry that my train derailed; let me put it back on the rails again. So Swamiji did lot of little, little miracles like this. Once my father wanted to go to Palani to deliver a talk and listen to some friend’s concert. By the way Swamiji was a great lover of music; I think Sowdiah and others used to play violin before him. When my father returned next day, he said that the singer had sore throat and the concert was a flop. My father was wonder struck. How did you know this Swamiji? Have you met anyone else who returned from last night concert? Asked my father.

He smiled and said I was there listening to him  for a while. So one can travel by thought. He used to predict anyone’s future just by looking at him.

Same time another strange thing happened. My father was the one who publish Madurai Dinamani. In that paper one news item crept in without his knowledge. A person named Mr Sathanam ( my father’s name) was electrocuted (to death???) in Palani last noght! My father was joking Yama might have gone to the wrong address ,so I escaped!

Swamiji With Kanchi Paramacharya 

Or Did Swamiji play any miracle by visiting Palani on that day?? Who knows it? Co incidence or Miracle?

But Swamijis can do it. We know the most famous anecdote of Kanchi Paramacharya. Famous singer MS Subbulakshmi took leave of Shankaracharya and was about to leave. Shnakaracharya said ‘stay tonight in Kanchipuram; go tomorrow. She was greatly annoyed because of her other concerts already booked. Next day, whole of India was talking about the worst railway accident in the history. Ariyalur Train accident. Entire train went into river with all the passengers while it was passing through the flooded Kaveri River bridge. So in some cases Swamjis can stop one dying ; they do it very rarely. Lal Bahadur Shastri, then railway minister, later prime minister of India resigned his post immediately taking moral responsibility for the worst accident.

I will write about the miserable deaths of Jayalalitha, LTTE Prabhakaran , Michael Jackson, Mrs Indira Gandhi, Premadasa etc and how Sadhu Sanyasins knew them beforehand. It is not part of my autobiography. So I will do it separately.

xxx

Back to Swamiji

This is about my father supporting a sinner in Madurai. He took him to Achankoil Pushpanchali Festival. We also went to the Dharma Sastha/Ayyappa  Temple at that time.

(Do you want a titbit here? More than Dharma sastha’s Pushpanchali, we brothers, praised the food they served at the end; till this day we remember the food but not Lord Ayyappa!!! We talk and talk about it whenever Achan koil is mentioned)

The sinner was contesting a Ward in a local body election. After the Pushpanchali and a good meal, we took leave of Swamiji. My father introduced that gentleman to Swamiji. Every time he was introduced, Swamiji deliberately turned away his face. My father did not take it as an insult, but thought the person is going to be defeated. After two failed attempts my dad tried again to open the subject of electoral contest by showing him. This time Swamiji listened and then said, ‘I will pray to Ganapathi’.

In general Sadhu Sanyasins have different wordings to convey different messages. Those who are always with a  Swamiji only would know the gradation in blessings. ‘I will pray for you’ means it is difficult to succeed. My father got worried because our entire family was canvassing for him for nothing. Utter stupidity: we know his loose morals but to enjoy his jokes we sued to go to his house. A rich guy. I wouldn’t say how he became rich. Then any Maduraiwalla would easily identify him. My father calculated and said to him that he would win by 65 votes. Because we know all the Brahmin voters there and their split between Rajaji’s Swatantra Party and this guy’s congress party. As predicted by my father he won by 65 votes, a very thin majority. My father did it by sheer calculation, nothing to do with miracle.

Months later we met Swamiji somewhere on another occasion. He himself opened the topic of ‘Sinner Introduction’.

Santhanam (my father) brought a bad guy and asked me to bless him. I couldn’t. Santhanam never asked me any favour for his own family. But he asked please bless this guy for victory. Ganapthi (Lord Ganesh) refused it. I had to fight with Ganapathi for his victory.

This incident and MS ‘s escape from the worst Railway accident show that Gurus can change the fate of someone who they like.

Actually Swamiji’s would not interfere in everyone’s destiny. They want you to suffer so that your sins disappear. It is like you repay your debts. I was visiting Hindu Prisoners in England Jails. In one of the prisons, I was surprised to read in the Hindu Prison Manual that the prisoners are punished so that their sins are cured or spent. Once they are out of Prison, he or she is a sinless person.

xxxxx

tags- Swamiji Krishna, More Miracles

மலையாள மின்னல், ஈழ மின்னல் சூழ மின்னுதே!  வேதத்தில் அற்புத மழை  வருணனை (10,367)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,367

Date uploaded in London – –   22 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிராமப் புறங்களில் அதிகாலை நேரத்தில் எழுந்திருப்போ ருக்கு இயற்கை அன்னை  எவ்வளவு அழகானவள் என்பது தெரியும். பூமியைப் பற்றி அற்புதமான ஒரு சூக்தம்/ பாடல், அதர்வண வேதத்தில்  உள்ளது எல்லோருக்கும் தெரியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு அற்புதமான வருணனை செய்தவர்கள் வேத கால ரிஷி முனிவர்கள் ஆவர். இதே போல ரிக்வேதம் முழுதும் உஷஸ் என்னும் அதி காலைப்  பொழுதின் அற்புத வருணனை காணப்படுகிறது இதை மட்டும்  கவனித்த வெளிநாட்டினர் மேலும் பல அற்புதக் காட்சிகளை நமக்கு எடுத்துச் சொல்லவில்லை. காட்டுத் தீ ஏற்பட்டால் என்ன நிகழும், மழை யும் புயற்காற்றும் சேர்ந்து அடித்தால் என்ன நிகழும், பெரிய மிருகங்களை விழுங்கும் மலைப்பாம்புகள், கானக தேவதை இரவில் எப்படி பயமில்லாமல்  அங்கேயே இரவில் வசிக்கிறாள் , உயர ப்பறக்கும்  கழுகுகள் — இப்படி நிறைய காட்சிகள் வேதங்களில் இருக்கின்றன.

பாரதியார் வேதத்தை நன்கு அறிந்தவர். அவருடைய மழை , புயற்காற்றுப் பாடல்களிலும் இதைக் காணலாம். மலைபடு கடாம்  போன்ற சங்க கால நூல்களிலும் அதற்குப் பின்னர் எழுந் த சிலப்பதிகாரத்திலும் இப்படி நிறைய இயற்கைக் காட்சிகள் உளது

இங்கே ஒரே ஒரு அதர்வண வேத மழைப் பாடலைக் காண்போம். குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த வேதத்தில் உள்ள விஷயங்கள் அப்படியே அண்மைக்காலத்தில் எழுந்த முக்கூடற் பள்ளுவிலும் பாரதியார் பாடல்களிலும் இருப்பதை ஒப்பிட்டு மகிழலாம்.

Xxx

அதர்வண வேதம் – காண்டம் 4- பாடல் 15 (சூக்தம் 117- மழை )

1. மழை மேகங்களே ஒன்று சேருங்கள் ; காற்று வீசி உங்களை வேகமாக அனுப்பட்டும் ;காளை போல முழங்குங்கள்; பூமியில் கொட்டி அதைத் திருப்தி செய்யுங்கள் .

2.மருத் தேவர்களின் வேகத்தையும் , தாராள குணத்தையும் காட்டட்டும்; மழைத் தாரைகள் இந்த பூமிக்கு மகிழ்ச்சி ஊட்டட்டும்; புவியெங்கும் பல்வேறு வர்ணங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் தாவரங்கள் முளைக்கட்டும் .

3.பாடல் பாடும் எங்களுக்கு இந்தக் காட்சிகளைக் காட்டு. எங்கும் பிரவாகம் எடுக்கட்டும். (மீண்டும் சென்ற பாடலின் கடைசி வரி.) புவியெங்கும் பல்வேறு வர்ணங்களிலும், பல்வேறு வடிவங்களிலும் தாவரங்கள் முளைக்கட்டும் .

4.பர்ஜன்யனே ! மருத் கணங்கள் / காற்று தேவனின் படைகள் கர்ஜித்து சங்கீதத்தை அதிகரிக்கட்டும். கொட்டும் மழை  பூமியில் பொழியட்டும்

5.மருத் தேவர்களே ! சமுத்திரத்தினின்று உங்கள் சக்தியால் உயர்த்துங்கள் ; மேகங்கள், காளை மாடுகள் போல கர்ஜித்து பூமியில் மலை பெய்யட்டும்

6.கர்ஜனை செய்; இடி முழக்கம் செய்; கடலை க் கலக்கு; பர்ஜன்யனே (மழைக்  கடவுளே) இந்த பூமியை

தேன் மழையால் நனை ; ஒல்லியான மெலிந்த பசு , வீட்டிற்குப் போகட்டும்,

7.ஊற்றுகளும் பூமியில் வாழும் பாம்புகளும் உங்களைக்   காக்கட்டும் . மருத் என்னும் காற்று தேவர்கள் உண்டாக்கும் மழை  பூமியில் பொழியட்டும்.

8.ஒவ்வொரு திசையிலும் மின்னல் மின்னட்டும்;; எல்லா திசையிலும் காற்று வீசட்டும் .மருத் என்னும் காற்று தேவர்கள் உண்டாக்கும் மழை  பூமியில் பொழியட்டும்.

9.தண்ணீரும், மின்னலும், மேகங்களும் மழையும் பாம்புகளும் உங்களைக் காக்கட்டும்.;மருத் என்னும் காற்று தேவர்கள் உண்டாக்கும் மழை  பூமியில் பொழியட்டும்.

10. அக்கினி தேவன் , தாவரங்களுக்கு அதிபதி ; அவன் தண்ணீருக்குகுள்  வசிக்கிறான் அந்த ஜாதவேதஸ், வானிலிருந்து மழை , அமிர்தம், நல்ல காற்றை அளிப்பானாக (திருக்குறளில் வானிலிருந்து வரும் நீரை அமிர்தம் என்று வள்ளு வர் சொல்லுவது ஒப்பிடத்தக்கது)

11.பிரஜாபதியானவன் கடலைப் பொங்கச் செய்யட்டும் ; குதிரையின் உயிர் அணுக்கள் இடி முழக்கத்துடன் பூமியில் விழட்டும்

12.அசுர சக்தியுடைய எங்கள் தந்தை, மழையை கொட்டித் தீர்க்கட்டும். வருண தேவனே நீர்ச் சூழல்களை உண்டாக்கு ; கால்வாய்கள், சிற்றோடைகளில் நீர் பெருக்கெடுக்கட்டும். தவளைகள் அதில் அழகிய கைகளுடன்  நீந்தி குரல் எழுப்பட்டும்

13.விரதம் அனுசரிக்கும் பிராமணர்களைப் போல ஓராண்டு மவுன விரதம் அனுஷ்டித்த தவளைகள் மழையால் புத்துணர்ச்சி பெற்றுவிட்டன.

பெண் தவளையே  அதனுடன் பேசு; தாதுரியே , நான்கு காலையும் விரித்து நீந்து, குரல் எழுப்பு.

15. ஏ கணவக்கா ! ஏ கைமக்கா ! தாதுரியே ! நீ நடுவில் இருக்கிறாய்.  பித்ருக்களே ! மழையை அனுபவித்து மகிழுங்கள்.மருத்துக்களின் உள்ளத்தை வெல்லுங்கள் .

16. பெரிய தொட்டியை மேலே உயர்த்திக் கொட்டுங்கள். எங்களை சுற்றி காற்று வீசட்டும்; மின்னல் மின்னட்டும். யாக யக்ஞங்கள் பெருகட்டும்; தாவரங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கட்டும்.

Xxxx

தமிழ்ப் பாடல்களில் காணும் தவளை, மின்னல், இடி, வெள்ளம் எல்லாம் மேற்கூறிய 16 மந்திரங்களில் இருக்கின்றன . ஆயினும் கடைசியில் கண்வக்கா , கைமகா, தாதுரீ என்ற தவளைப் பெயர்கள் விநோதமானவை. இதற் கு அர்த்தம் தெரியவில்லை.

மேலும் அசுர வருணன் என்பது நல்ல பொருளிலும் ‘அசுரர்’ என்ற சொல் பயப்படுத்தப் படுவதைக் காட்டுகிறது.

தமிழ்ப் பாடலில் இல்லாத பாம்புகளையும் இதில் காண்கிறோம். அவைகள் உங்களைக் காக்கட்டும் என்பது ஒரு வேலை உங்களைக் கடிக்காமல் இருக்கட்டும் என்ற பொருளில் வந்திருக்கலாம் . மழைக் காலத்தில் பாம்புகள் வெளியே வருவது இயற்கை. வெள்ளமும் அவைகளை அ டித்துக் கொண்டு வரும்

இவை எல்லா மொழி படலக்ளுக்கும் முந்தியவை என்பதால் இன்னும் சிற்ப்புடையன.

ஏழாவது மந்திரத்தில் அஜகரா’ என்று மலைப் பாம்பை குறிப்பிடுகிறார் ரிஷி. இதன் பொருள் ஆட்டை விழுங்கும் மலைப் பாம்பு என்பதாகும்; சங்கத் தமிழ் இலக்கியம் யானையை விழுங்கும் மலைப்பாம்பு பற்றிப் பாடுகிறது

வெப்ப சக்தி தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் , கடல் மூலம் மழை உண்டாகின்றது, மழை பெய்வதால் புதிய தாவரங்களும் உருவாகும்– ஆகிய விஞ்ஞான உண்மைகளும் இருக்கின்றன. மேல் உலகத்திலிருந்து உயிரின ங்கள் வருகின்றன என்ற நம்பிக்கை பல இன  மக்களிடையே உண்டு. இதை ஓரளவு அறிவியல் ஒப்புக்கொள்கிறது. காற்று மூ லம் பலவகை விதைகள் பரவுவது மட்டுமின்றி விண்கல் மூலமும் உயிர் மூலக்கூறுகள் வருவதை இப்போது விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது.  இதை ‘குதிரைகளின் விந்து’ என்ற மறைமுக பாஷையில்  முனிவர் பாடுகிறார்

பிராமணர்களின் மவுன விரதத்துக்கும் தவளைகளுக்கும் உள்ள ஒற்றுமையை ரிக் வேதத்தில் வசிட்டரும் பாடியுள்ளார். ஒருவேளை பிராமணர்கள் ஆண்டுதோறும் மழைக்காலத் துவக்கத்தில் வேதாரம்பம் என்று மீண்டும் துவங்குவதை இது குறிக்கலாம்.

வண்ண வண்ண தாவரங்களும் பலவகை மூலிகைகளும் வளரட்டும் என்று முனிவர் பாடுவதும் அவைகள் இன்பமாக வாழட்டும் என்ற கடைசி மந்திரமும் நமக்கு “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பெருமான் பாடலை நினைவு படுத்தும். அதுமட்டுமல்ல விபூதி பூஷன் வ ந்தோ பாத்தியாய எழுதிய வனவாசி (வங்காளி மொழியில் ஆரண்யக் ) நாவலைப் படித்தோருக்கு யுகல்  பிரசாத் என்னும் இளைஞன் காட்டில் ஒவ்வொரு இடத்திலும் அழகிய தாவர விதைகளை விதைத்துவிட்டு, ஓராண்டுக்குப் பின்னர் அதே இடத் திற்குச் சென்று அவை பூத்திருப்பதைக் கண்டு   மகிழும் காட்சிகளும் நம் மனக்கண் முந்   வரும் ;

இதைத் தமிழர்களும் ரசித்தனர் என்பது பள்ளர் பாடும் பள்ளுப் பாட்டு, சிலப்பதிகார வையை, காவிரி நதி வருணனைகள்; மலைபபடு கடாம் போன்ற சங்க இலக்கியத்தில் வரும் FOREST ORCHESTRA கானக ஆர்கெஸ்டரா , பாரதியாரின் இயற்கை வருணனை ஆகியவற்றைப் படித்து மகிழ்ந்தோருக்கு நன்கு விளங்கும்

Xxx

பின் வரும் பாடல்களை படித்து விட்டு அதர்வண வேத மந்திரங்களை மீண்டும் ஒரு முறை படியுங்கள். அவை கிரேக்க, சீ ன, ஹீப்ரு, தமிழ் மொழி இலக்கி யம் எல்லாம் உருவானதற்கு முன்னர் நமது ரிஷிகள் சம்ஸ்க்ருதத்தில் பாடியவை என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள். அ தன்  பெருமை, மஹத்துவம் நன்றாகப் புரிபடும்.

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி – மலை

யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே – கேணி

நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே – மழை

தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே

போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்

புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே

(முக்கூடற் .பள்ளு . 30)

Xxx

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்

கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

(பாடல் 54: 1)- திருக்குற்றாலக் குறவஞ்சி

Xxxx

பாரதி பாடல்

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்

All the Eight Directions shatter

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

Dheem tarikita Dheem tarikita Dheem tarikita Dheem tarikita

பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்

Hills on the side break away, letting the floods

பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட

To sweep and leap; flowing , flooding

தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்

Takkat thatching kitaththom –  World/universe

சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு

Tilting, slanting, dancing – gusty winds blow like a fiend

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

Wind is blowing with drumming noise

தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

Takkath thaam tarikkita thaam tarikkita thaam tarikkita

வெட்டி யடிக்குது மின்னல் கடல்

Lightning flashes cutting and crossing the sky- sea waves

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

Dashes against the sky heroically

கொட்டி யிடிக்குது மேகம்-கூ

Clouds thunder – howling winds making noise

கூவென்று விண்னைக் குடையுது காற்று

They drill the sky with  roaring  sound

சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று

Sattach sata sata  Sattach sata sata   tattaa

தாளங் கொட்டிக் கனைக்குது வானம்

hitting the sky with beats and neighing noise

எட்டுத் திசையும் இடிய –மழை

Eight directions collapsing

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

Where from the rain came my little brother.

அண்டம் குலுங்குது தம்பி-தலை

Earth is shaking ; and the 1000 headed snake

ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை

Dancing and jumping like a fiend- And directions jump

வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்

Devas in the Heaven burst into joy

செண்டு புடைத்திடு கின்றார்-என்ன

and showering honours

தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்

What a Divine show we are enjoying

கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

Seen and seen with our own eyes

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்             

Dance of Time we see with our own eyes.              

—subham–

#tags-மலையாள மின்னல், ஈழ மின்னல், வேதத்தில்  மழை,  அற்புத  வருணனை

திருவான்மியூர் ஆலயம் அறிவோம் (Post No.10,366)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,366

Date uploaded in London – –   22 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 21-11-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவான்மியூர்

நீதி நின்னை அல்லால் நெறி யாதும் நினைந்து அறியேன்

ஓதீ நால்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்

சேதீ சேதம் இல்லாத திருவான்மியூர் உறையும்

ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே!

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

    ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சென்னை நகரின் தென் பகுதியில் அமைந்துள்ளதும் ஆதி கவியான வால்மீகி பெரும் தவத்தை இயற்றிய தலமுமான திருவான்மியூர் திருத்தலம் ஆகும். இங்கு தான மருந்தீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது.

இங்கு ஸ்வயம்பு லிங்கமாக அமைந்துள்ள இறைவனின் திருநாமம் : ஸ்ரீ மருந்தீஸ்வரர் அல்லது பால்வண்ண நாதர்

அம்மன் : திரிபுரசுந்தரி, சொக்க நாயகி

ஸ்தல வ்ருக்ஷம் : வன்னி மரம் 

தீர்த்தம் : சிவபிரானின் சடையிலிருந்த கங்கையிலிருந்து சிந்திய ஐந்து துளிகள் இங்கு ஐந்து தீர்த்தங்களாக உருவெடுத்துள்ளன. ஆலயத்தின் கிழக்குக் கோபுரத்திற்கு அருகே சித்திரை குளம் என்ற இந்திரனுக்கு நற்கதி அளித்த புனலையும் காணலாம்.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு பிரசித்தி பெற்ற ஒன்று. ஒரு சமயம் காமதேனு வசிஷ்ட மஹரிஷியிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், “நீ பூலோகத்தில் பசுவாகப் பிறப்பாயாக” என்று சாபமிட்டார்.தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு சாப விமோசனம் அருளுமாறு வசிஷ்டரை வணங்கிக் கேட்க, அவர், “திருவான்மியூரில் எழுந்தருளியுள்ள மருந்தீஸ்வரரை வணங்கி அவருக்குத் தினமும் பால் அபிஷேகம் செய்து வா, உனக்கு சாப விமோசனம் ஏற்படும்” என்றார். அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பாலாய்ப் பொழிந்து அபிஷேகம் செய்து வந்தது. சாப விமோசனமும் பெற்றது. பால் பொழிவினால் வெண்மையாக லிங்கம் காட்சி அளிக்க அவர் பால்வண்ன நாதர் என்ற பெயரைப் பெற்றார். மூலவர் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் சற்றே சாய்ந்த தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். வேட்டையாட வந்த சதயூ மன்னனிடமிருந்து தப்பிச் சென்ற காமதேனுவின் குளம்புகள் ஈசனின் மீது பட்டது. அந்த வடுவை இன்றும் ஈசனிடம் காணலாம்.

இத்தலம் பற்றிய இன்னொரு புராண வரலாறும் உண்டு.

கயிலை மலையில் சிவ பார்வதி திருமணம் நடக்கும் போது அனைவரும் அங்கு கூடவே வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. உடனே அதை சமன் செய்ய தென்புலம் செல்லுமாறு ஈசன் அகத்தியரிடம் கூறவே அகத்தியரும் தென் புலம் வந்தார். அவருக்குத் தனது கல்யாண கோலத்தை இங்கு வன்னி மரத்தடியில் ஈசன் காட்சி அளித்தார். அத்துடன் அகஸ்திய மஹரிஷிக்கு இறைவன்  உலகில் உள்ள அனைத்து வகையான நோய்களைப் பற்றியும் அதைத் தீர்ப்பதற்கான மூலிகைகள் மற்றும் மருந்துகள் பற்றியும் கூறி அருள் பாலித்தார். ஆகவே தான் இங்குள்ள இறைவன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி மஹரிஷி நாரதரிடம் முக்திப் பேறுக்கான வழி கேட்க அவர் இங்கு வந்து அவரைத் தவம் புரியச் சொன்னார். அவருக்கும் வன்னி மரத்தடியில் ஈசன் தரிசனம் தந்து அருள் பாலித்தார். இன்னொரு தகவலின் படி மார்க்கண்டேய மஹரிஷி வால்மீகி முனிவரை எங்கு அவர் இறைவனின் அசரீரியைக் கேட்கிறாரோ அங்கு அவருக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்ல வால்மீகி மஹரிஷி இங்கு வரும் போது அவருக்கு “நான் இங்கு உள்ளேன்” என்ற அசரீரி கேட்கவே இங்கேயே அவர் தவம் புரிந்து முக்தி அடைந்தார். அவரது பெயரால் இந்த இடம் திரு வால்மீகிநகர் என்று ஆனது. காலப்போக்கில் மருவி திருவான்மியூர் ஆயிற்று.

ஒரு முறை சூரிய பகவானுக்குப் பல அசுரர்கள் தொல்லை தரவே அவரால் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆகவே அவரே நேராக இங்கு வந்து ஈஸ்வரனைத் துதிக்க அவரது தொல்லை ஒரு முடிவுக்கு வந்தது. அவர் மாலை நேரத்தில் தொழுவதற்கு வசதியாகவே இங்குள்ள லிங்கம் மேற்குப் பார்த்து இருப்பதாக ஐதீகம்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான கோவில். ஆலயத்தின் கிழக்கில் ஏழு நிலை இராஜகோபுரமும் அதையடுத்து 5 நிலை கோபுரமும் மேற்கில் 5 நிலை கோபுரமும் உள்ள இந்தத் திருக்கோவிலில் பக்தர்கள் நெடுஞ்சாலையைப் பார்த்து அமைந்துள்ள மேற்கு வாயில் வழியே உள்ளே செல்கின்றனர். கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றவுடன் வலது புறத்தில் பிரசித்தி பெற்ற 36 தூண்கள் கொண்டுள்ள தியாகராஜ மண்டபம் உள்ளது. இங்கு தியாகராஜர் பத்ர பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நான்கு கரங்களுடன் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். அவரது இரு கரங்கள் அங்குச பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. கிழக்கு வெளி பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர் சந்நிதிகள் உள்ளன.நாயன்மார்கள்,தொகையடியார்கள் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் உள்ளிட்ட பலரையும் இங்கு தரிசித்து வணங்கலாம்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் அப்பர் பிரான் ஒரு பதிகத்தையும் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலைப் பாடியுள்ளார். திருவான்மியூர் தல புராணம் இத்தலம் பற்றிய ஏராளமான திவ்ய வரலாறுகளை எடுத்துரைக்கிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரரும் திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.              

திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:                                                                                                                      ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்ப்

பாதி பெண் உரு ஆய பரமன் என்று

ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர்

வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே!

நன்றி, வணக்கம்!                                  

***

tags- மருந்தீஸ்வரர், திருவான்மியூர், வால்மீகி

ஓசோனைக் காப்போம்! (Post No.10,365)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,365

Date uploaded in London – –   22 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

16-11-2021 காலை ஒலிபரப்பான ஆறாவது உரை கீழே தரப்படுகிறது. 

                        ஓசோனைக் காப்போம்!

                        ச.நாகராஜன்                                                                  

ஓசோன் படலம் (OZONE LAYER) என்பது பூமி வாழ் உயிரினத்தைக் காக்கும் படலமாகும். ஓசோன் என்றால் என்ன? அதைக் காப்பதற்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு (O3) ஆகும். பூமியிலிருந்து 15லிருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் வளி மண்டலத்தில் அடர்த்தியாக உள்ள பெரிய பரப்பாகும். இது வெளிர் நீல நிறமுள்ள நிலைத்தன்மையற்ற வாயு ஆகும்.

சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் ரேஸ் (Ultra Violet Rays) எனப்படும் புற ஊதாக் கதிர்கள் மூலம் பூமிக்கு ஏற்படும் ஆபத்தை இந்த ஓசோன் படலம் தடுத்து நிறுத்துகிறது. புற ஊதாக் கதிர்கள் பூமியில் விழுமானால் அனைத்து உயிரினமும் அழிந்துபடும். ஆகவே இந்த ஓசோன் படலத்தைக் காப்பாற்றுவது மனித குலத்தின் இன்றியமையாத கடமை ஆகிறது.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஸ்பிரே வேதிப் பொருள்கள், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் குளோரோ புளுரோ கார்பன்கள், பிளாஸ்டிக் நுரையிலிருந்து வரும் வேதிப் பொருள்கள் ஆகிய இவை அனைத்தும் மெதுவாக மேலே வானத்தில் சென்று புற ஊதாக் கதிர்களில் பட்டு உடைகிறது. குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்கள் புற உதாக் கதிர்கள் மூலம் உடைக்கப்படும் போது ஒரு குளோரின் அணு உருவாகிறது. இந்த ஒரு அணு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை நாசமாக்குகிறது. ஆகவே வளி மண்டலத்தில் ஓசோன் அடர்த்தி குறைந்துவிட்டது.

இந்த அடர்த்தி குறையவே புற ஊதாக் கதிர்கள் பூமியில் இப்போது விழ ஆரம்பித்து விட்டன. இதனால் தோல் புற்று நோய், கண்ணில் புரை ஆகியவை உருவாவதோடு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் குறைவு படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் குளோரின், புரோமின் போன்ற அணுக்களே ஓசோன் அழிவதற்கான காரணம் ஆகும்.

1995ஆம் ஆண்டு இரசாயனத்தில் – வேதியியலில் – நோபல் பரிசு பெற்ற ஷெர்வுட் ரோலெண்ட், பால் க்ரட்சன், மரியா மொலினா (Sherwood Rowland, Paul Crutzen and Mario Molina) போன்றவர்கள் கூட இது பற்றிய மர்மம் விளங்க மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றனர். 

ஆகவே தொழிற்சாலை நச்சுக் கழிவுகளையும், லக்ஷக்கணக்கான வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையையும் தடுத்து நிறுத்துவது இன்றைய அவசர, அவசிய தேவையாகிறது. இது மட்டுமின்றி இந்தப் பேராபத்தால் உணவு உற்பத்தி குறையும் நிலை ஏற்படுகிறது. மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் சுற்றுப்புறச் சூழலே மாசுபட்டு கெடுகிறது.

ஆகவே 1985இல் வியன்னா கருத்தரங்கிலும், (Vienna Convention) தொடர்ந்து 1987இல் உருவாக்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறையிலும் (Montreal Protocol) நம்மைக் காக்கும் ஓசோன் படலத்தை நாம் காக்க பல வழிமுறைகள் வகுக்கப்பட்டன. 198 நாடுகள் ஒப்புக் கொண்ட இந்த நடைமுறையின் அடிப்படைக் கருத்து குளோரோ புளோரோ கார்பன் நச்சுக் கழிவை நிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.

அதை ஒவ்வொரு மனிதனும் தலைப் பொறுப்பாகக் கொள்வோம். ஓசோன் படலத்தைக் காப்போம்!

***

tags — ஓசோன் படலம் ,OZONE LAYER, 

PLEASE JOIN US TODAY MONDAY 22-11-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

XXX

22 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER – 

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON SRI SATHYA SAI BABA-15 MTS

Talk by London Swaminathan on Kamba Ramayannam -10 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 10 mts.

SONGS BY VARIOUS SINGERS -10 MTS

APPR. 50 MINUTES

XXXXX

 TAGS- publicity22112021