வறுமையை ஒழிப்போம்; அக்டோபர் 17- வறுமை ஒழிப்பு தினம் (Post No.10,220)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,220

Date uploaded in London – 17 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் கோகுலம் கதிர் இதழில் அக்டோபர் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகிலிருந்து வறுமையை ஒழிப்போம்; அக்டோபர் 17- வறுமை ஒழிப்பு தினத்தின் அறைகூவல்!

ச.நாகராஜன்

“நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது எல்லையை மாற்றும், அது வேண்டாம்! ஆனால் ஏழ்மையின் மீது போர் தொடுத்தால் அது மனித குலத்தின் தொல்லையை மாற்றும்!அதைச் செய்வோம்!!”

தமிழர் தம் அறிவுச் செல்வமான ஔவை மூதாட்டி, ‘கொடியது எது’ என்று கேட்ட போது கூறிய வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை.                    “கொடியது கேட்கின் நெடிய வெவ் வேலோய் ! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். உலகில் இன்றுள்ள ஜனத்தொகை மொத்தம் 780 கோடி. இதில் பத்து சதவிகிதம் பேர் இன்றும் வறுமையில் வாடுகின்றனர்.

வறுமை என்பதை எப்படி வரையறுப்பது? ஒரு மனிதன் இந்தப் பூவுலகில் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளை இழந்து வாழ்வதே வறுமை எனச் சுருக்கமாகக் கூறி விடலாம். உணவு, உடை, உறைவிடம், குடிக்க பாதுகாப்பான நல்ல நீர், கல்விக்கான வாய்ப்பு, வாழ்க்கையில் சமூக மதிப்புடன் வாழ்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருந்தால் வறுமை இல்லை என்று பொருள். இந்த நிலையை 2030க்குள் எட்டி விட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.  உலகில் மொத்தம் 3 சதவிகிதம் தான் வறுமை இருக்கிறது என்ற நிலையை அடைந்தால் கூட போதும் என்பதே இன்றைய குறிக்கோள்!

ஒரு  குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை முழு வறுமை என்று சொல்லப்படுகிறது. ஒப்பீட்டு வறுமை என்பது இரு நிலைகளை வைத்து ஒப்பிட்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயித்து உன்னிடம் இருப்பதை விட என்னிடம் இருப்பது குறைவு என்று ஒப்பிட்டு உரைப்பதாகும். இதில் முழு வறுமை முதலில் நீக்கப்பட வேண்டும் என்பதே உலகின் இன்றைய குறிக்கோள்.

அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்டவை செல்வச் செழிப்புள்ள நாடுகளாக இருக்கும் போது ஆப்பிரிக்க நாடுகளில் (புருண்டி, மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, மலாவி, நைஜீரியா, மொஜாம்பிக், லைபீரியா, தெற்கு சூடான், கொமொரோஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட) பலவும், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளும் வறுமையை ஒழிக்க வேண்டிய வறுமை நிறைந்த நாடுகளாக இன்று உள்ளன.

வறுமை எவ்வளவு கொடுமை என்பதை ஒவ்வொரு மனிதனும் அவசியம் உணர வேண்டும். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்பது போல நைஜீரியா திரைப்படத் துறையை நோலிவுட் என்றும் ஜிம்பாப்வே திரைப்படத் துறையை ஜோலிவுட் என்றும் கூறுகின்றனர்.இங்கிருந்து வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் (The First Grader -2010 – Kenya உள்ளிட்ட ஏராளமான படங்கள்) வறுமையின் கோரத்தைக் காண்பிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் இருக்க முடியாது.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை                                                                                  தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்                                                                               கசிவந்த சொல்லயர் மேல் காமுறுதல் பத்தும்                                                                                      பசி வந்திடப் பறந்து போம்

என்ற ஔவையின் வாக்கு அப்படியே திரைக்காட்சிகளாக மிளிர்கின்றன. வறுமையில் குழந்தைகளும் பெண்களும் வாடி வதங்கும் காட்சிகள் திடமான மனத்தையும் கலங்க வைக்கும்.

ஒரு நாளைக்கு 183 ரூபாய் (இரண்டரை அமெரிக்க டாலர்) வருமானம் கூட இல்லாமல் உலகின் பாதி ஜனத்தொகையினர் (780 கோடியில் பாதிப் பேர்) வாழ்கின்றனர். 130 கோடி பேருக்கோ ஒரு நாளைக்கு 92 ரூபாய் (ஒண்ணே கால் அமெரிக்க டாலர்) தான் வருமானம். 9 பேர் உள்ள ஒரு குடும்பம் இரு அறைகளே உள்ள ஒரு கூரை வீட்டில், மண் தரையில் ஆங்காங்கே வாழ்வதையும் உலகெங்கும் பார்க்க முடிகிறது.

100 கோடி குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு 22000 குழந்தைகள் வறுமையினால் இறப்பதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவிக்கிறது. 75 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் டயரியா உள்ளிட்ட வியாதிகளால் ஒரு நாளைக்கு 2300 பேர் உலகில் இறக்கின்றனர்.

இதைப் போக்க :

  1. ஊடகங்களும் தனி மனிதர்களும் நிறுவனங்களும் இணைந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.

2) ஏழ்மையில் வாடும் ஒரு குழந்தைக்கேனும் ஆகும் கல்விச் செலவை வசதியுள்ளோர் தனி மனிதனாக இருந்து தம் தம் பொறுப்பில் ஏற்க முன் வர வேண்டும்.

3) பணமாக உதவி அளிக்க முடியாதோர் புத்தகமாகவோ, உணவுப் பொருள்களாகவோ தானமாகக் கொடுத்து முடிந்த அளவில் ஏழ்மையை ஒழிக்கலாம்.

4) பெண்களை இழிவு படுத்தாமல் அவர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்து ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

5) உலகளாவிய விதத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

6) அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, நல்ல நீர் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை பகுதி வாரியாக உறுதி செய்ய வேண்டும்.

7) கல்வி அறிவில்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். யுனிசெஃப்பின் கணக்கீட்டின் படி இன்று 100 கோடி பேருக்கு எழுத்தறிவு இல்லை.

வறுமை ஒழிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான கடமை என்ற விழிப்புணர்வே இன்றைய அவசியத் தேவை; அவசரத் தேவையும் கூட!

வறுமைக்கான காரணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளன. ஓரிடத்தில் குடிநீர் இல்லை என்றால் இன்னொரு இடத்தில் போரின் பாதிப்பினால் மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் பெண்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றால் இன்னொரு இடத்தில் எதிர்பாரா இயற்கைச் சீற்றங்கள், சீதோஷ்ண நிலை மாறுதல் ஆகியவை பாதிப்பை உருவாக்குகின்றன.

ஊட்டச் சத்து இல்லாமல் குழந்தைகள் நோஞ்சான்களாக ஓரிடத்தில் இருக்கும் போது தரமான கல்வி இல்லாமல் இன்னொரு இடத்தில் குழந்தைகள் வாடுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜனத்தொகைப் பெருக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இப்படிப் பல காரணங்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நீக்குவதே வறுமை ஒழிப்பு நாளின் உலகளாவிய நோக்கமாகும். அந்த நாள் தான் அக்டோபர் 17.

1987இல் அக்டோபர் 17ஆம் தேதியன்று பாரிஸில் ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க உறுதி பூண்டனர். அந்த நாளை ஐ.நா. 1992ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.

கொடிய வறுமை மனித குலப் பாதுகாப்பிற்கான பொதுவான அச்சுறுத்தலாகும். குற்றங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் அடிப்படை தாள முடியாத வறுமையே.

செய்யாத ஒரு குற்றத்திற்கான தண்டனையே வறுமை.

நன்கு ஆளப்படும் ஒரு நாட்டில் உள்ள வறுமை அந்த நாட்டின் வெட்கக் கேடு.

ஒரு நாட்டின் வரலாற்றை செல்வந்தர்கள் மட்டும் எழுதவும் கூடாது; பழிகளை மட்டும் ஏழைகள் மீது அவர்கள் போட்டு விடவும் கூடாது.

ஆகவே தான் வறுமை இல்லாத நாட்டைக் கனவு கண்ட திருமூலர் அன்றே சொன்னார் ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று கூறி உண்ணும் போது அடுத்தவரை நினைத்து அவருக்கும் ஒரு பிடி கொடு என்றார். அத்துடன் அவர் கூடவே சொன்னார்:

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

ஏழைக்கு ஒன்றைத் தரும் போது அது இறைவனுக்கும் சேரும்; ஆகவே இருவரையும் அது சேர்வதால் இரட்டிப்பு பலனைத் தரும் என்பது அவர் வாக்கு.

‘தேடு கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்’ என்றார் மகாகவி பாரதியார். ஆக கல்வியும், உணவும், நல்ல நீரும் இருப்பதை ஒவ்வொரு மனிதனும் உறுதிப் படுத்த சூளுரை எடுக்க வேண்டிய நாளாக அக்டோபர் 17 அமைகிறது.

வறுமை இல்லாத உலகை உருவாக்குவோம். மனித குலம் என்றும் வளமுடன் நீடித்து இருக்க நமது பங்கை ஆற்றுவோம்!

**

tags- –வறுமையை ஒழிப்போம், அக்டோபர் 17, வறுமை ஒழிப்பு, 

ஆதிசைவப் பிரபாவம் (Post No.10,219)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,219

Date uploaded in London – 17 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஆதிசைவப் பிரபாவம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!

ச.நாகராஜன்

கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை  சிவஸ்ரீ  கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார். 1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.

இந்த நூலை எழுதியவர் ஸ்ரீ  சோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.

பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர், விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது. பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை இவர் சாடுவதையும் காணலாம்.

ஆசாரியர் என்பவர் யார்? நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும், ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும், கிரியா பாதத்தில் சமர்த்தராகவும், யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும், சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும், சிவபூஜை, சிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.

இந்த லட்சணங்களை உடையவர்கள் ஆதி சைவரே.

சைவர் ஏழு பிரிவினராவர்.

  1. அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹா சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்ய சைவர்.

இதில் அநாதி சைவர் சிவபெருமான் ஒருவரே

ஆதி சைவர் சிவத்விஜர் . மஹா சைவர் பிராம்மணர்கள். அநு சைவர் க்ஷத்திரியர் மற்றும் வைசியர்கள்.  அவாந்தர சைவர் சூத்திரர்கள். பிரவர சைவர்கள் என்பவர் சவர்ன அம்பஷ்ட மத்யஸ்த குலாலர்கள், அந்த ஜாதியார் அந்ய சைவர் ஆவார்.

சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.

 ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதி  பரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.

இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.

சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.

48 பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ  சோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீ  கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.

சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.

பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீ  கார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.

40 ரூபாய் விலையுள்ள 48 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள், ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம், குளத்து மேட்டுத் தெரு, கள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.

வாழ்க சிவத்தொண்டு!

***

tags- ஆதிசைவப் பிரபாவம்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 67 (Post No.10,218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,218

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -66

Tamil and English Words 2700 Years Ago- Part 67

பாணினி சூத்திர எண்கள்:–

7-2-102

தத் – அது THAT

யத் – எது

ஏதத் – இது THIS

XXX

7-2-112

Anena அனேன = பல = அநேக

M /அனேன= MANY

XXX

7-3-4

த்வார் = டோர் DOOR

துவாரகா DWARAKA = இந்தியாவின் கதவு = நுழைவாயில் GATE WAY OF INDIA

கபாடபுரம் KAPATA PUR = கபாட = கதவு KAPATA= KAVATA = KATAVU IN TAMIL

வடக்கில் துவாரகாவும், தெற்கில் கபாட புரமும் , வெளிநாட்டு வணிகர்களுக்கு நுழை வாயிலாக GATEWAY OF INDIA இருந்தன.

XXXX

7-3-11

ருதுRTU = RUT /மத நீர்

XXX

7-3-14

கிராம நகராணாம் GRAAMA NAGARAANAAM

பாணினியின் சூத்திரத்தில் உள்ள இந்த வரிகள் இன்றும் அப்படியே இந்திய

மொழிகளில் கிராமம் , நகரம் என்று வழங்கப்படுகிறது வேத காலம் முதல் மாறாத சொற்கள்.

XXX

7-3-18 புரட்டாசி PURATTASI- PURATTAATHI- PROSHTAPATHA = BHADRAPATHA

ப்ரோஷ்டபத என்ற நக்ஷத்ரத்தை பாணினி ஒரு எடுத்து க்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து வந்த மாதப் பெயரை இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காணலாம் .

தமிழில் வழங்கும் எல்லா மாதப் பெயர்களும் ஸம்ஸ்க்ருத மொழியிலிருந்து வந்ததை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தெய்வத்தின் குரலில் அழகாக விளக்குகிறார்.

புரட்டாசி என்பது ப்ரோஷ்டபத என்பதிலிருந்து வந்தது. இதை இன்றும் இலங்கை மக்கள் புரட்டாதி என்றே எழுதுவார்கள்.

XXX

7-3-25

ஜங்கல= ஜங்கிள் JUNGLE = புதர்க்காடு , பொட்டல் காடு

JUNGLE என்பது ஸம்ஸ்க்ருதத்திலிருந்து இந்தி வழியாக ஆங்கிலத்துக்குள் சென்றது .

XXXX

7-3-26

அர்த ARDHA என்பது தமிழில் அரை HALF ஆனது பரிமாணம்/ DIMENSION  இன்றும் புழக்கத்தில் உள்ளது

XXX

7-3-30

ESWARA = KING, RSA = KING

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லும் நிபுணர், ஈஸ்வர/ஈஸ, சுத்த ஆகியவற்றை இன்றும் தமிழ் உள்பட இந்திய மொழிகள் பின்பற்றுகின்றன.

சுத்தம் மட்டும் – ஸூசி = செளச்ச = சுத்த என்று உருமாகி இருக்கிறது .

இதையும் முன்னரே விளக்கினோம் SION = TION உச்சரிப்பு இன்றும் ஆங்கிலத்தில் உருமாறி உள்ளது.

ஈஸ/ ஈஸ்வரன் என்பது மன்னனைக் குறிக்கும்

மன்னனுக்கும் கடவுளுக்கும் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஒரே பெயர்.

ராஜ ராஜேஸ்வர , பிருஹதீஸ்வர……….

ராணிகளை தேவி என்றும் ராஜாவை தேவன் என்றும் அழைப்பதைக் கல்வெட்டுகளில் காணலாம்.

புறநானூற்றில் தீக்குளித்த ராணியின் பெயர் பூதப் பாண்டியன் பெருந்தேவி

BHUTA PANDYA DEVI

XXX

7-3-37

சா = கூர்மையாக்கு SHARPEN

ஸா SAA = SAW

வே VE = நெய்தல் WEAVE

வ்யா VYA =WRAP= COVER  = மூடு , சுற்றிக்கட்டு வேஷ்டி =VEST

XXXX

7-3-40

பியோ = பயம் = FEAR = PHOBIA

To be continued………………………………….

TAGS – PANINI IN TAMIL 66

பகவத்கீதை சொற்கள் Index 2 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post No.10,217

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,217

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அக்ஷய: (அக்ஷயஹ) – 10-33 முடிவற்ற

அக்ஷர ஸமுத்பவம் -3-15 அழிவற்ற பரம்பொருளில் தோன்றியது

அக்ஷர: (அக்ஷரஹ) – 8-21 அழியாதது ; பழுதுபடாதது

அக்ஷராணாம் – 10-33  எழுத்துக்களுள்

அக்ஷராத் – 15-18 அழியக்கூடியதற்கும்

அகிலம் – 4-33 எல்லா

அகதா ஸூன் -2-11 உயிர் இழக்காதவர்கள்

அக்னி : (அக்நிஹி ) -4-37

அக்னெள – 15-12 அக்னியில் ; தீயில்

அக்ரே – 18-37- முதலில் , ஆரம்பத்தில்

அகம் – 3-13- பாவம்

அகாயு : (அகாயுஹு )-3-16 பாவத்தில் ஆ யுளைக் கழிப்பவன் )

அங்கானி -2-58 அங்கங்களை ; உடல் உறுப்புகளை

அசரம் -13-15 அசையாத (பொருள் )

அசலப்பிரதிஷ்டம் -2-70 – நிலை குலையாதது

அசலம் -6-13  அசையாமல்

அசல: (அசலஹ )- 2-24  அசைவில்லாதது

அசலா – 2-53-  அசைவற்று

அசலாம் -7-21 அசையாததாக

அசலேன- 8-10 அசையாத

அசாபலம் -16-2 மனவுறுதி

அசிந்த்யரூபம் -8-9 சிந்தித்தற்கரிய உருவம் (உடையவனும்)

அசிந்த்யம் – 12-3  மனதுக்கெட்டாததும்

அசிந்த்ய:  (அசிந்த்யஹ )- 2-25 மனதுக்கெட்டாதது

அசி ரேன -4-39 தாமதமின்றி

அசேதஸ: (அசேதஸஹ )- 3-32 அவிவேகிகள்; விவேகமற்றவர்கள்

அச்சேத்ய : (அச்சேத்யஹ)- 2-24 வெட்ட முடியாதது

அச்யுத – 1-21-கிருஷ்ணன், விஷ்ணு (தன்னுடைய உயர்ந்த  நிலையிலிருந்து இறங்காதவர்

28 words in index part 2 ( I will give Sanskrit / Devanagari words in the next part)

To be continued………………………………..

tag s- Gita word Index 2, Tamil , 

RARE PICTURES OF INDIAN AND SRI LANKAN SCHOLARS FROM M D CONWAY BOOK- 2 (Post.10,216)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,216

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel  CONWAY.

Year of publication 1906, Boston and New York

(Book available at SOAS, University of London Library)

Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway,  William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle

Part two

ramabai
pandava castle
K C SEN
JAIN PICTURE
–sybham-

tags- rare pictures, M D Conway, Blavatsky, Kesava Chandra Sen, Rama bhai

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63 (Post No.10,215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,215

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63

பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள் : T.N. இராமச்சந்திரன்

      சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளையின் சார்பில் 7-3-2002 அன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகச் சார்பில் ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்திய அன்றே இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

48 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பாரதி ஆய்வுகள் – இதுவரை, பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று அத்தியாயங்களில் சிந்தனையைத் தூண்டி விடும் விஷயங்கள் அடுக்கடுக்காகத்த் தரப் படுகின்றன.

முதல் அத்தியாயம் மிக விரிவாக பாரதியார் பற்றிய ஏராளமான நூல்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

‘பாரதியார் ஒரு விராட் புருஷர்; அவரை உங்கள் சிறு விரலால் அளந்து காட்டத் துணியாதீர்கள்’ என்ற இந்த நூலாசிரியரின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது.

பாரதியாரைப் பற்றிய பல விவரங்கள் பிழைபடப் பல நூல்களிலும் தரப்பட்டுள்ளன. (சில விவரங்களை தமிழ் உலகம் அறியவே இல்லை.)

இவற்றைக் களைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த ஆதங்கம்.

பாரதியின் நூல்களுக்குப் பர்மா அரசாங்கம் தடை விதித்தது. அதையொட்டித் தமிழ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தடை விதித்தவர் பின்னாளில் காங்கிரல் அமைச்சராக விளங்கிய பி. சுப்பராயன் அவர்கள். இதைக் க்ண்டு

கொதித்தெழுந்தார் சத்தியமூர்த்தி. அவரது கிடுகிடுக்க வைக்கும் ஆங்கிலப் பேச்சுக்கள் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்கன.

பாரதியார் நண்பர்கள் பற்றி வந்துள்ள விவரங்களில் கபாலி சாஸ்திரியார் இடம் பெறாததை சுட்டிக் காட்டும் நூலாசிரியர் அது பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பாரதியாரைப் பற்றி வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் திரு இராமச்சந்திரன்.

இதுவரை வந்த ஆய்வுகளை முதல் அத்தியாயத்தில் சித்தரிக்கும் அவர், இரண்டாவது அத்தியாயமான ‘பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் முயற்சிகளை விவரிக்கிறார்.

திரு சீனி விசுவநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள கால வரிசைப்படியான பாரதியார் எழுத்துக்கள் என்ற நூலில் 263 தலைப்புகளில்  24-1-1897 தொடங்கி 29-12-1906 வரையிலான எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

பாரதியாரின் வடமொழி அறிவு பற்றித் தனி ஒரு நூல் வேண்டும் என்ற நூலாசிரியரின் கூற்றை அனைவரும் ஆமோதிப்பர். 

சூரத் காங்கிரஸ் கூட்டத்தை வருணித்து மகாகவி மூன்று மொழிகளைக் கலந்து  காங்கிரஸ் கீதை என்று ஒரு பனுவல் படைத்தார்.

யாரும் அறியாத செய்தி இது. இதில் உள்ள ஒரு சுலோகத்தை – தேவி வஸந்தானந்தா தந்ததை – இந்த நூலில் காண முடிகிறது:

“தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேத யுயுத்ஸவஹ

மாமகாகஹ எக்ஸ்ட்ரீமிஸ்ட் மாடரேட்ஸ் சைவ கிமகுர்வத ஸஞ்சயா”

பாரதியின் பல கவிதைகளில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருள் கண்டு அதை விவரிப்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.

காணி (நிலம் வேண்டும் என்ற பாடல்) அம்பு (அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் என்ற பாடல்) ஆகிய சொற்களுக்கு உண்மையான அர்த்தத்தை விவரிக்கிறார்.

சீனி.விசுவநாதன் வெளியிட்டுள்ள பாரதி நூற்பெயர்க்கோவை என்ற தொகுப்பு நூலில் சுமார் 370 நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இதில் 275 நூல்கள் விவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர் பற்றி 1982  முடிய 1,50,000 நூல்கள் வெளியாகி இருப்பதையும் வருடத்திற்கு சுமார் 3000 நூல்கள் ஷேக்ஸ்பியர் பற்றி வெளியாகி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார் திரு இராமச்சந்திரன். ஷேக்ஸ்பியர் பற்றிய வினா விடை நூல்கள் நிறைய உள்ளன. அது போல பாரதியார் பற்றியும் வினா- விடை நூல்கள் வேண்டும். 1000 கேள்விகள் கொண்ட நூறு நூல்களை வெளியிட வேண்டும் என்பது இவரது ஆசை. அவ்வளவுக்கு விஷயங்கள் உள்ளன.

மூன்றாம் அத்தியாயமான, ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும், பாரதியார் போற்றிய நம் நாட்டு, வெளி நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்பு வரையப்பட வேண்டும். உலக அளவில் பாரதியார் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற முத்து முத்தான யோசனைகளை எதிர்கால ஆய்வாளருக்குத் தருகிறார் நூலாசிரியர்.

பல பிழையான தகவல்களை அடியோடு களைந்து அதிகாரபூர்வமான பாரதியார் வாழ்க்கை பற்றிய நூல் ஒன்று வேண்டும் என்பதைச் சொல்வதோடு இனி பிழையான கருத்துக்களைச் சொல்லவும் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

நூலின் இணைப்பாக மாதிரிப் புதிர் வினா- விடை ஒன்றும் தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால ஆய்வுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் நல்லவொரு அரிய சேவையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.

பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

***

சேக்கிழார் அடிப்பொடி திரு T.N. இராமச்சந்திரன் பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தையும் கரைத்துக் குடித்தவர். வழக்கறிஞராக இருந்தவர் தமிழ் இலக்கியத்தின் பால் தீராக் காதல் கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார்; சுமார் 50000 நூல்களை தனி ஒருவராகத் தனக்காகச் சேகரித்து வைத்த பெரும் மேதை. 18-8-1934இல் பிறந்த அவர் சமீபத்தில் 6-4-2021 அன்று மறைந்தார்.

tags- பாரதி , எதிர்கால ஆய்வுகள் , T.N. இராமச்சந்திரன், 

RARE PICTURES OF INDIAN AND SRI LANKAN SCHOLARS FROM M D CONWAY BOOK- 1 (Post.10,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,214

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel  CONWAY.

Year of publication 1906, Boston and New York

(Book available at SOAS, University of London Library)

Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway,  William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle.

tags– M D Conway, My Pilgrimage, Wisemen of the East, Indian, Sri Lankan, Scholars

பகவத்கீதை சொற்கள் Index 1 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post No.10,213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,213

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அகர்த்தாரம் – 4-13 செயலில் இறங்காதவர்

அகர்ம  – 4-16 செயலின்மை , கர்மம் என்று கருதப்படாதது

அகர்ம க்ருத் -3-5 ஒரு கர்மத்திலும்   ஈடுபடாமல்

அகர்மண: – 3-8 செயலின்மை  (: இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இதை  முன் உள்ள எழுத்துக்குத் தக உச்சரிக்க வேண்டும்; இங்கே ஹ என்ற ஒலி = அக்கர்மணஹ ) கர்மம் செய்யாமை

அகர்மணி -2-47 செயலின்மையில் 

அகல்மஷம் – 6-27 மாசு மருவற்ற; குற்றமில்லாத ; பாவமற்றவன்

அகார : -10-33  அ – காரம் ; அகர முதலஎழுத்தெல்லாம் (குறள் 1)

அகார்யம் – 18-31 செய்யக் கூடாத செயல்

அகீர்த்திகரம் – 2-2 புகழ் தராத செயல் ; பழிக்கிடமானது

அகீர்த்திம்  -2-34 அவமானமான ; பழியை

அகீர்த்தி:  -2-34 அவமான  ( இங்கே : விசர்க்கத்தை ஹி என்று உச்சரிக்கவும்;அகீர்த்திஹி ); பழிச் சொல்

அகுர்வத -1-1 செய்தார்கள்

அகுசலம் -18-10 தகுதியற்ற, தானம் தவம் அற்ற

அக்ருத புத்தித்தவாத் – 18-16 திருந்தாத புத்தியால் ; புத்தி தெளிவின்மையால் ;அறிவின்மையால்

அக்ருத ஆத்மன:(அக்ருதாத்மனஹ )-15-11 செய்கையால் திருந்தாத ;சுய கட்டுப்பாடின்மை

அக்ருதேன – 3-18 கர்மம் / செயல் செய்யாததால்

அக்ருஸ்த்னவித : 3-29 தெளிவற்ற/  குறைந்த அறிவுடன்

அக்ரிய:-6-1 கர்மம் செய்யாதவன்

அக்ரோத: 16-2 கோபத்தை கட்டுப்படுத்தல் ;சினமின்மை

அக்லேத்ய: 2-24 நனைக்க முடியாதது

அக்ஷய்யம் -5-21 அழியாத ; இறவாத     21 WORDS COVERED IN INDEX 1

TO BE CONTINUED…………………………..

tags — BHAGAVAD GITA, TAMIL WORD INDEX 1

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4 (Post No.10,212)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,212

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!- Part 4

நதிகள் துதி 10-75-5

இதுதான் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற நதிகள் துதி. இதில் கங்கை நதியில் துவங்கி வரிசைக் கிரமத்தில் யமுனை ,சரஸ்வதி,சுதுத்ரி, பருஷ்ணி என்று மேற்கு நோக்கிச் செல்கின்றனர். இதனால்  இந்து நாகரீகம் கங்கையில் துவங்கியது உறுதியாகிறது. அதை 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழரின் 2500 பாடல்களும் உறுதி செய்கின்றன. ஏனெனில் தமிழர்களுக்கு கங்கை, யமுனை தெரியும், இமயம், முனிவர்கள் தெரியும்; அமிர்தம், இந்திரன் தெரியும்; அருந்ததி, சப்தரிஷிகள் தெரியும். இவை அனைத்தும் புறநானூறு அகநாநூறு முதலிய நூல்களில் வருகின்றன. ஆனால் சிந்து, சரஸ்வதி, சோம ரசம் பற்றிய குறிப்புகளே இல்லை; ஆகவே கங்கைதான் முதலில் வந்தது என்பது புலனாகிறது

இதை   ஒத்துக் கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிடினும் ஆப்கானிஸ்தான் முதல் டில்லி, மேற்கு வங்கம் வரை ஓடும் நதிகளைக் குறிப்பிடுவதால், இந்து மகா சாம்ராஜ்யத்தை வேதங்கள் குறிப்பிடுவதால் வேத கால பூகோள எல்லையும் விளங்கும் .

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த நதிகள் பட்டியலில் உள்ள  சில நதிகளைக்  கூட நாம் அடையாளம் காண இயலவில்லை; வேதங்கள் அவ்வளவு பழமை உடைத்து .

ஆர்ஜீகீ, சுஸோமா , என்பன விபாஸா , சிந்து நதிகள் என்று யாஸ்கர் கூறுவதை வெள்ளைக்காரர்கள் சாத்தியமற்றது என்கின்றனர்.

எட்டாவது மந்திரத்தில் சிலாமாவதி ஊர்ணாவதி என்பன நதிகள் என்று சொல்லும் சாயனர் அவை சிந்து நதியின் காரணப் பெயர்கள் என்கிறார் . சிலாமா செடிகள் வளர்ந்து இருப்பதாலும் கம்பளி கிடைப்பதாலும் இப்படிப் பெயர்கள் என்கிறார். அவைகளுக்கும் ஆதாரம் இப்போது கிடைக்கவில்லை.

நதிகள் பற்றிய துதியிலும் கிரிப்பித் GRIFFITH விஷமம் நன்றாக புலப்படும்; கங்கை என்பது தொலைதூர நதி என்பதால் அதை முதலில் சொன்னார் என்று சொல்லிவிட்டு மேலும் அது ஒரு பெண்ணின் பெயர் என்றும் சொல்கிறார். உண்மையில் அதில் உள்ள எல்லா நதிகளின் பெயர்களையும்  இன்றுவரை பெண்கள் சூட்டி வருகின்றனர் . தமிழ்ப் பெண்கள் கூட கோமதி, சிந்து, கங்கா, ஜமுனா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்

Xxx

கல்யாண மந்திரங்கள் 10-85-6 ரைபி, நாராஸம்சீ, காதா

இன்றும் கூட பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , சம்பிரதாய முறைக் கல்யாணங்களிலும் ரிக்வேத கல்யாண மந்திரத்தின் பெரும்பகுதி பயன்படுகிறது. ஆயினும் இவைகளில் உள்ள சில சொற்களின் பொருள் விவாதத்துக்கு உரியனவாக இருக்கின்றன. அதாவது உறுதியான பொருள் எவருக்கும் தெரியவில்லை. வேத காலத்துக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாயனாரின் உரையை ஓரளவு நம்பலாம் ; ஆயினும் அவர் சம்பிரதாயத்தை உடைத்து வேதத்துக்குப் பொருள் கண்டதால் பழ மைவாதிகள் அதை ஏற்பதில்லை.

“ரைபீ ,  அவளுடைய (கல்யாணப் பெண்ணின் ) தோழி; நாராசம்சீ அவளுடைய தாசீ; சூரியையுடைய அழகான ஆடை ‘காதை’யால் அலங்கரிக்கப்பட்டிருந்தது”- 10-85-6

 இவை பெண்களின் பெயர்கள் ; இவைகளை உருவக வருணனை என்று கருதுகின்றனர்.  ஏன் இந்தப் பெயர்கள்?  விளங்கவில்லை. இவை விளங்காததால், இவைகளை வேதத்துக்குப் புறம்பானவை என்றும் எழுதிவிட்டனர்!!!

‘தனக்குப் புரியாவிட்டால் அது எல்லாம் திராவிட செல்வாக்கு! என்பன அடி முட்டாள்களின், விஷமிகளின் வாதம்’

xxxx

கோசம் 10-85-7

இது மணப் பெண்ணின் பெட்டியா, ஆடையா, தேரின் பாகமா என்று பல்வேறு கருத்துக்கள்!! என்ன வினோதம் !

“அவளுடைய மஞ்சனையில் எண்ணமே தலையணை; அவள் காணும் காட்சியே கண்ணுக்கு மை ; அவள் கணவனிடம் சென்றபோது வானமும் பூமியும் அவள் பொக்கிஷம் /கோசம்” — இது மந்திரம்

Xxxx

10-85-28 கிருத்யை

ஒரு பெண் தேவதை அல்லது பேய்    அல்லது துஷ்ட  தேவதை

XXX

10-85-35 ஆசசனம், விசசனம் , அதிவிகர்த்தனம்

இவை பல வகை ஆடைகளாக இருக்கலாம் என்பது ஒரு விளக்கம் ; ஆ னால் அகராதியில் காணும் பொருள்:– கொல்லுதல் , வெட்டுதல், துண்டு போடுதல்; இந்த அகராதியே சர்ச்சைக்குரியது ; கோல்ட்ஸ்டக்கர் GOLDSTUCKER இதை கிழி , கிழி என்று கிழித்து விடுகிறார். பசுக்கொலை செய்து தினமும் பிளேட்டில் பரிமாறுவோர் செய்த St Petersburg Dictionary செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி அது. மேலும் இந்துக்கள் கோவில்களிலோ, கல்யாண விருந்துகளிலோ இன்று வரை மாமிசம் படைக்க மாட்டார்கள் ; சீக்கியர்கள் கூட இதைப் பின்பற்றுகின்றனர்.

பேராசிரியர் வில்சன் இவைகளை ‘சுற்றி அணியும் துணி’, ‘தலையில் அணியும் துணி’, ‘பிரிவுகள் உள்ள பாவாடை’ என்கிறார்.

xxxx

சிறைச் சாலையில் நான்

ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறேன். பிரிட்டிஷ் சிறைச் சாலைகளில் உள்ள இந்துக் கைதிகளைக் கண்டு  அவர்களுக்குப் பிரார்த்தனை முதலியவற்றை வழங்கும் பணியையும் பகுதி நேர வேலையாகச் (Part Time Prison Chaplain) செய்துவந்தேன். மிகக் குறைவான இந்துக்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர் ஆனால் முஸ்லிம்களோ 25 சதவிகிதத்துக்கு மேல் ! அதாவது அவர்களுடைய ஜனத் தொகை விகிதாசாரத்தைவிட மிக மிக அதிகம்.

ஒரு சிறையில், இந்துக் கைதிகள், விசாரணைக் கைதிகள், என்னைக் கண்டவுடன் ஒடி ஒளிந்தனர். பெரும்பாலும் மாமிசம் சாப்பிடும் இலங்கைத் தமிழர்கள்; ஏனப்பா இப்படி எல்லோரும் மறைந்து மறைத்து போகிறார்கள் என்று ஒருவரைப் பிடித்து விசாரித்தேன். அவர் உண்மையைக் கக்கிவிட்டார். “ஐயா நாங்கள் எல்லோரும் இன்று லஞ்ச் Non Vegetarian Lunch  நேரத்தில் மாமிசம் சாப்பிட்டுவிட்டோம். ‘அது’ சாப்பிட்டுவிட்டால் பிரார்த்தனை செய்யக்கூடாது; சுத்தம் இல்லையே என்றார் .

“அடப் பாவி மகன்களா ! இதை வாய் திறந்து முன்னமே சொல்லி இருந்தால், நான் வரும் தினத்தை அல்லது நேரத்தை மாற்றி இருப்பேனே” என்றேன். பின்னர் இதை அதிகாரிகளுடன் விவாதித்து நேரத்தை மாற்றிக்கொண்டேன் . மாமிசம் சாப்பிட்டால் சீக்கியர்கள் கூட பிரார்த்தனைக்கு வரமாட்டார்களாம். லண்டனில் மாமிசம் சாப்பிடும் சீக்கியர்கள், குருத்வராவில் கல்யாணம், பிரார்த்தனை வைத்துக்கொண்டாலும் அங்கே மாமிச விருந்து தர மாட்டார்கள். இதே போல சம்பிரதாய முறையில் கல்யாணம் செய்யும் எந்த ஜாதியினரும் மாமிச விருந்து கொடுப்பதில்லை. இப்போது காலம் கெட்டுவிட்டது எப்படி நடக்கிறதோ யாம் அறியோம் பராபரமே.

இதனால்தான் நம் சம்பிரதாயங்களை அறியாத, பின்பற்றாத, நம்பாத வெளியார்கள் எழுதும் வியாக்கியானங்களை நம்பக் கூடாது.இந்துவான எனக்கே சிறைக் கைதிகள் நழுவிச் சென்றபோதுதான் ஒரு ‘பாடம்’ lesson கிடைத்தது!

பத்தாவது மண்டலத்தில்  (துதிகள் 1 முதல் 85 வரை) நான் கண்ட புரியாத சொற்களைத் தந்தேன் மேலும் பின்னர் காண்போம்.

–சுபம் —

Tags-  ரிக் வேதத்தில் ,பேய்கள், தேவதைகள்,

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 2 (Post No.10,211)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,211

Date uploaded in London – 15 OCTOBER  2021       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்! – 2

இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புத சம்பங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இவரது இசை ஈடுபாட்டைக் குறிக்கும் ஒன்றாகும்.

ஒருமுறை தஞ்சை ராஜா இவரது இசை ஈடுபாட்டை பரீட்சிக்க விரும்பியபோது இவர் தன்னை ஒரு கருங்கல் சுவருக்குள் அடைத்துக் கொண்டார். தம்புராவை மீட்டிக் கொண்டு ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார். பத்து நாட்கள் நீரும் ஆகாரமும் இன்றி அங்கேயே இருந்து பததாம் நாள் மன்னன் கருங்கல் சுவரைத் திறந்து பார்த்த போது முதல் நாள் பார்த்தது போலவே ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாராம். மன்னரும் மற்றவரும் பிரமித்துப் போயினர். இவர் இசை மேல் கொண்டிருந்த ஈடுபாட்டை அனைவரும் நன்கு உணர்ந்தனர்.

இவரது  ஒவ்வொரு கீர்த்தனையும் காமாக்ஷி அம்மனிடம் இவர் கொண்டுள்ள அபார பக்தியை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

தனது அளப்பரிய சங்கீத ஞானத்தைக் கொண்டு பங்காரு காமாக்ஷி தேவியைப் பற்றி பல ஸ்தோத்திரப் பாடல்களை இவர் பாடலானார்.

இசைத் துறையில் தாள வகைகளில் பல புதிய சாதனைகளைப் படைத்தார் சியாமா சாஸ்திரிகள்.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலுமாக சுமார் 300 கீர்த்தனைகளை அவர் இயற்றியுள்ளார். தமிழில் மிகக் குறைந்த அளவு கீர்த்தனைகளே அவரால் இயற்றப்பட்டன. தருணமிதம்மா என்ற கீர்த்தனையும் என்னேரமும் என்ற கீர்த்தனையும் அவரது பிரபலமான தமிழ்க் கீர்த்தனைகள் ஆகும். சியாமகிருஷ்ண என்ற தனது முத்திரையை அவர் பாடல்களில் பதிப்பது வழக்கம்.

மாஞ்சி, சிந்தாமணி, கல்கடா (பார்வதி நினு என்ற கீர்த்தனை)  உள்ளிட்ட பல அபூர்வ ராகங்களை அவர் கையாண்ட விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிந்தாமணி ராகத்தில் முதன் முதல் கீர்த்தனை இயற்றியவர் அவரே. ஆனந்த பைரவி, சாவேரி, கல்யாணி ஆகிய ராகங்கள் அவரை மிகவும் கவர்ந்த ராகங்களாகும்.

ஒருமுறை யாத்திரையை மேற்கொண்டு அவர் புதுக்கோட்டை சென்ற போது அன்பர் ஒருவர் மதுரை சென்று மீனாக்ஷியம்மன் மீது கீர்த்தனை இயற்றலாமே என்று கூறினர். உடனே மதுரை சென்ற சியாமா சாஸ்திரிகள் அங்கு நவரத்தினமாலிகை என்னும் பிரபலமான ஒன்பது கீர்த்தனைகளை இயற்றிப் பாடினார். ஆஹிரி ராகத்தில் மாயம்மா என்ற கீர்த்தனையில் நம்மிதி நம்மிதி நம்மிதினி உன்னை நம்பினேன் நம்பினேன், நம்பினேனே என்று அவர் உள்ளமுருக்கும் வகையில் பாடி இருக்கிறார்.

ஆலயத்தில் அவரை யார் என்று யாரும் உணராத நிலையில் அங்கிருந்த அர்ச்சகர் மீது ஆவேசம் வந்து அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்து கௌரவிக்க வேண்டும் என்று அருள் வாக்கு பிறக்க, உடனே அவர் அங்கு வெகுவாக கௌரவிக்கப்பட்டார்.

ஸரோஜ தள நேத்ரி – சங்கராபரணம்

தேவி மீன நேத்ரி – சங்கராபரணம்

மரிவேறே கதி – ஆனந்தபைரவி

நன்னுப்ரோவு லலிதே – லலிதா

தேவி நீ பதராஸ காம்போதி

மீனலோசன ப்ரோவ – தன்யாசி உள்ளிட்ட கீர்த்தனைகளையும் மத்யமாவதி ராகத்தில் உள்ள பாலிஞ்சு காமாக்ஷி, புன்னாகவராளி ராகத்தில் உள்ள கனக ஷைல விஹாரி உள்ளிட்ட ஏராளமான கீர்த்தனைகளையும் அனைவரும் இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஸ்வரஜதியில் அவரது நிபுணத்வம் எல்லையற்றது. பைரவி, தோடி, யதுகுல காம்போதி ஆகிய ராகங்களில் அவரது ஸ்வரஜதிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். தேர்ந்த நிபுணர்களும், சாமானியர்களும் வியக்கும் வண்ணம் உள்ள அவரது கீர்த்தனைகள் காலத்தை வென்றவை. சங்கீத கணிதத்தில் அவர் ஆற்றியுள்ள சேவையை அவர் தன் கைப்பட எழுதியுள்ள 79 அக்ஷர தாள பிரஸ்தார வரைபடங்களில் கண்டு மகிழ முடியும்; வியக்க முடியும்!

சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி சங்கீத விற்பன்னர்கள் கூறுகையில், “தியாகராஜரின் கீர்த்தனைகள் திராக்ஷா பாகம் என்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் நாரிகேள பாகம் என்றும் அதாவது தேங்காயை நாரை உரித்து ஒட்டை உடைத்துச் சாப்பிடுவது போல என்றும் சியாமா சாஸ்திரிகளின் இசையை கதலீ பாகம் என்றும் அதாவது எளிதாக வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுவது போல என்றும் கூறுவர்.

சாஸ்திரிகளின் 64 வயது நடந்து கொண்டிருந்த போது அவர் மனைவி மறைந்தார். மிகுந்த துக்கம் அடைந்த அவர் “அவ சாக அஞ்சு நாள், செத்து ஆறு நாள் என்று கூறினார். அருகிலிருந்தோர் அவர் மனைவி இறப்பதற்கு அஞ்சுவதாக அவர் ‘அஞ்சினாள் என்று கூறுவதாக நினைத்தனர். ஆனால் அவர் மனைவி இறந்து ஐந்து நாட்கள் கழிந்தன. ஆறாம் நாள் அவர் காமாக்ஷியுடன் கலந்தார்; முக்தி அடைந்தார். அப்போது தான் அனைவருக்கும் அவர் தன் இறுதியை, மனைவி மறைந்த ஐந்து நாள்கள் கழித்த ஆறாம் நாள் தான் மறையப் போவதாகக் கூறியதை உணர்ந்தனர். அவர் 1827ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி – விபவ வருஷம் தை  மாதம், 26ஆம் நாள் சுக்ல நவமி திதி தினத்தன்று தன் மகனின் மடி மீது தலை வைத்தவாறே ‘சிவே பாஹி காமாக்ஷி பரதேவதே என்று கூறியபடியே இறைவனுடன் கலந்தார். சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசு 1985 டிசம்பர் 21ஆம் தேதியன்று ஒரு ரூபாய் மதிப்பிலான தபால் தலையை வெளியிட்டது.

சங்கீதத்தில் ஒரு புதிய பார்வையுடன் கம்பீரமான நடை போட்டு அனைவரையும் வியக்க வைத்த சியாமா சாஸ்திரிகளின் நினைவைப் போற்றுவோம்; பங்காரு காமாக்ஷியின் அருளைப் பெறுவோம்; உயர்வோமாக!

நன்றி வணக்கம்!

            ***           

முற்றும்

tags- சியாமா சாஸ்திரிகள் 2