தமிழ் தெரியுமா? வா- வந்தான், போ- போந்தான்? (Post No.10,137)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,137

Date uploaded in London – 26 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

This was written for a Tamil Magazine recently.

தமிழ் தெரியுமா? வா- வந்தான், போ- போந்தான்? (Post No.10,137)

தமிழைத்  தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுத் தருவது எளிது. ஏனெனில் அவர்கள் ரத்தத்தில் இது  உள்ளது . தாயின் கருப்பையில்  இருக்கும் போதே கரு கற்றுக்கொள்ளத் துவங்குகிறது என்ற புராணக் கதைகளும் தேவாரப்  பாடல்களும் உண்மைதான் என்று தற்கால விஞ்ஞான உண்மைகள் நிரூபிக்கின்றன (எ .கா . அஷ்டா வக்ரன் கதை; கருவுற்ற நாள் முதலாக ….. பாடல்).

ஆனால் ஐரோப்பிய மொழிகள் பேசுவோருக்கு தமிழைக் கற்பிக்க 4 வழி அணுகுமுறை தேவை..

இறந்த காலத்தில் (PAST TENSE) 7 வகை உண்டு என்பது தொல்காப்பியத்திலும் இல்லை. பவணந்தி முனிவரின் நன்னூலிலும் இல்லை.

முதலில் 4 வழி அணுகு முறை என்ன என்பதைச் சொல்லிவிட்டு இறந்தகால அதிசயம் பற்றி மட்டும் சொல்கிறேன் .

1.தமிழ் எழுத்துக்களைக் கற்பிக்கும் போது 247 எழுத்துக்கள் என்று சொல்லி அச்சுறுத்தாமல் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய்யெழுத்துக்கள் (12+18=30) என்று சொல்லி கற்பிக்க வேண்டும். சில ஒலிகளை உண்டாக முன்னும் பின்னும், மேலும் கீழும் சில கீறல்கள் செய்வோம் (DIACRITICAL MARKS)  என்று காட்ட வேண்டும் (க, கா, கி, கீ கு கூ ….)

2.இரண்டாவதாக ரோமன் எழுத்திலும் தமிழ் எழுத்திலும் (ROMAN SCRIPT- AVAN, NAAN, NEE) எழுத வேண்டும்

3. ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கு நேர் மாறானது இந்திய மொழி அமைப்பு என்பதை முதலிலேயே மனதில் பதிப்பிக்க வேண்டும் இந்திய மொழிகள் S O V எஸ் ஓ வி = எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை (SUBJECT OBJECT VERB) என்பதைக் காட்ட வேண்டும்.

4.நாலாவதாக உச்சரிப்பு- தமிழில் 3 ந, ன ண , 3 ல, ள ழ , 2 ர ற இருப்பதை விளக்கி உச்சரிப்பு பற்றி எச்சரிக்க வேண்டும் .

இதற்குப் பின்னர் ஆழமாக தமிழ் கற்க  விரும்பினால் பழமொழிகள், மரபுச் சொற்றோடர்கள் (PROVERBS, IDIOMS AND PHRASES) , முதலியவற்றைக் கற்பிக்கலாம்.

நிகழ் கால (PRESENT TENSE) வினைச் சொற்களை ஒரே வகையில் உருவாக்கிவிடலாம் (நிற்’கிறா’ன் , வரு’கிறா’ன் , போ’கிறே’ன் = கி ற)

வருங்கால வினைச் சொற்களை (FUTURE TENSE) இரண்டே வகைகளில் – வழிகளில் உருவாக்கலாம் ( பேசு’வான்’, வரு’வான்’. கற்’பான்’ , ஏற்’பான்’ = வ்வ  அல்லது ப்ப )

ஆனால் மிகவும் சிக்கலானது இறந்த காலம் (PAST TENSE) . அதில் எத்தனை வகை பாருங்கள்! இதை நாம் முறையாக அறிந்தால் வட இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் தமிழை புரியவைப்பது எளிது. இதைக் கண்டுபிடித்து எழுதியவர் GRAUL (YEAR 1855)

(ARDEN MADE MORE CHANGES LATER LIKE (A).WEAK, (B)MIDDLE AND (C).STRONG  VERBS)

XXX

EXAMPLES

CLASS ONE VERBS

1 A SEY- SEYTHEN செய்- செய்தேன்

1 B KOL – KONDEN கொள் – கொண்டேன்

1C VEL – VENDREN வெல் – வென்றேன்

CLASS TWO

UTKAR – UTKARNTHEN

உட்கார் – உட்கார்ந்தேன்

CLASS THREE

VANGU – VANGINEN

VANGU – VANGINEN

வாங்கு- வாங்கினேன் தமிழிலுள்ள ஏழுவகை வினைச் சொற்களில் மூன்றாவது வகை வினைச் சொற்கள்தான் அதிகம் 

ஆடு, பாடு, விளையாடு போல பல சொற்கள் இதில் அடக்கம்.

AND IN THE NEUTER GENDER  WE HAVE THREE FORMS

VANGIYATHU, VANGITRU, VANGINA

அஃறிணையில்  வாங்கியது, வாங்கிற்று , வாங்கின என்றெல்லாம் வரும்

CLASS FOUR

SAAPPIDU – SAPPITTEN

சாப்பிடு – சாப்பிட்டேன்

PERU – PETREN

பெறு – பெற்றேன்

CLASS FIVE

5 A. UN – UNDEN உண் – உண்டேன்

5 B.THIN – THINDREN தின் – தின்றேன்

5 C.KEL – KETTEN கேள் – கேட்டேன்

5.D. VIL- VITREN வில் – விற்றேன்

CLASS 6

PAR- PARTHTHEN

பார்- பார்த்தேன்

CLASS 7

NADA – NADANTHEN

நடந்தேன்

APART FROM THESE SEVEN CLASSES RARE VERBS LIKE

SAA – SETHTHEN  ARE ALSO THERE IN

IF YOU CONJUGATE

SAA – SARTHTHEN

SAA – SAATHTHEN

SAA- SAANTHEN FOLLOWING ONE OF THE SEVEN CLASSES IT WOULD BE WRONG.

‘சா’ என்னும் வினைச் சொல்லை, இறந்த காலத்தில்  ‘செத்தேன்’ என்போம்.

முன்னர் சொன்ன எவ்வகையிலும் இது அடங்காது .

‘கா’ என்றால் காத்தேன் என்று சொல்லி விடலாம்

சா- சாதேன் ,சார்த்தேன், சாத்தேன் , சாந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆக, மொத்தத்தில் எல்லா வினைச் சொற்களையும் பட்டியலிட்டால் இப்படி ஏழு முறையில் இறந்தகாலச் சொற்கள் வரும். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டோர் இயல்பாகவே பேசிப் பழகி விடுவதால் இப்படி பலவகைகளில் நாம் இறந்த காலச் சொல்லை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே இயல்பாகப் பேசிவிடுகிறோம். வெளிநாட்டினர் தவறில்லாமல் பேச வேண்டுமானால் நாம் அவர்களுக்கு இதைக் கற்பித்தே ஆக வேண்டும்.

வாழ்க தமிழ்!  வளர்க தமிழ்!!

tags- தமிழ் தெரியுமா, Tamil Verbs

பாரதியார் பற்றிய நூல்கள் – 61 (PostNo.10136)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,136

Date uploaded in London – 26 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 61

பிரின்ஸிபால் சாரநாதனின் கட்டுரைகள்!

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்களில் இது வரை 60 நூல்களைப் பார்த்து விட்டோம். சில வானொலி உரைகள், சில கட்டுரைகளும் அதன் அருமை கருதி இந்தப் பகுதியில் வெளியிடப்பட்டது.

சேக்கிழார் அடிப்பொடி என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வழி வழி பாரதி’ என்ற நூலைப் பற்றி 60வது அத்தியாயத்தில் பார்த்தோம். 28-8-2019 (கட்டுரை எண் 6944).

ஒரு இடைவெளிக்குப் பின்னர்  மீண்டும் பாரதியார் பற்றிய நூல்கள் மற்றும் அரிய கட்டுரைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

புகழ் பெற்ற கல்வியாளரும் தேசபக்தருமான பிரின்ஸிபால் சாரநாதன் அவர்களைப் பற்றி சோ.அழகப்ப செட்டியார் எழுதிய கட்டுரையை திரு ஏ.கே.செட்டியார் தனது குமரி மலர் மாத இதழில்  (மலர் 39 இதழ் 8) வெளியிட்டிருந்தார். அதில் திருச்சி தேசீயக் கல்லூரியில் பல்லாண்டுகள்  முதல்வராக இருந்து பல்லாயிரக்கணக்கான பண்புடைய மாணவர்களை உருவாக்கிய அவரைப் பற்றிய செய்திகள் பலவற்றைச் சுவைபட அழகப்ப செட்டியார் தந்துள்ளார். 1942இல் ஆங்கிலேயர் ஆட்சி மஹாத்மா காந்திஜியைச் சிறையில் வைத்தது. நாடே கொதித்தெழுந்தது. அப்போது திருச்சி தேசீயக் கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.காவல் துறையினர் பல கல்லூரிகளில் அமைதி நிலவ உதவி புரிந்தனர். ஆனால் சாரநாதனோ காவல் துறையை உள்ளே புக அனுமதிக்கவில்லை. மாணவர்களிடம் அவர் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று கூறி விட்டார். மாணவர்களும் கலைந்து சென்றனர்.

    அவர் பாரதியாரைப் பற்றி எழுதிய இரு கட்டுரைகள் 1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நினைவு மலரில் வெளியிடப்பட்டது. முதலாவது கட்டுரை சீனி.விசுவநாதன் முதலியோர் தொகுத்த மணிமாலை என்ற நூலில் வெளி வந்துள்ளது. பாரதி திருநாள் என்ற இரண்டாவது கட்டுரையை 1964ஆம் ஆண்டில் பிரதி எடுக்கச் செய்து, அதனைப் பாரதி நூற்றாண்டில் வெளியிடுவதற்காக பாரதி அன்பர் ரா.அ.பத்மநாபன் திரு ஏ.கே.செட்டியாருக்கு அனுப்ப,  இரு கட்டுரைகளையும் அவர் 1982 நவம்பர் குமரி மலர் இதழில் வெளியிட்டார்.

அதில் வரும் சில பகுதிகளை இங்கு காண்போம்.

*

பிரின்ஸிபால் சாரநாதனின் சொற்கள் அப்படியே இங்கு தரப்படுகிறது.

சுப்பிரமணிய பாரதி

“சுப்பிரமணிய பாரதியின் இன்ப மொழியே தமிழருக்கு வருங்காலத்தில் ‘செல்வத்தில் செல்வமாக’ இருக்கும். அதுவே, அவர் பாடிய வண்ணம், ‘வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி’, ‘ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை’ கொண்டு வாழ்வதாகும்.”

“தமிழ் இலக்கியத்திற்கு பாரதியின் கவிதையினால் கிடைத்த நற்பயன் யாது? தமிழ் நாட்டுக் கவிகளுக்குள் பாரதியின் சிறப்பு என்ன? பாரதியிடமிருந்து பாரெங்கும் வீசும் சாத்திரத்தின் மணம் யாது என்று கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் கூறலாம். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதி இளங்கோவைப் புகழ்ந்தார். இன்ப மொழியிலும், மன ஈரத்திலும், மானிடர் வாழ்க்கையில் தான் வைத்த வாஞ்சையிலும், காதலிலும், சாதலிலும், நடுநிலை பேணுதலிலும், பாரதியும் இளங்கோவும் ஒருவர்க்கொருவர் நிகராவார்கள். இதைக் “கண்ணன் பாட்டில்” பார்க்கலாம்.

“பாயுமொளி நீயெனக்கு – பார்க்கும் விழி நானுனக்கு

தோயுமது நீயெனக்கு – தும்பியடி நானுனக்கு

வாயுரைக்க வருகுதில்லை”

என்று தொடங்கும் ‘கண்ணம்மா – என் காதலி’ என்ற பாட்டு முழுவதையும் படித்து இன்புறுங்கள்”

“பாரதியின் கவிதையை நாம் – தாயுமானவ சுவாமிகள் கடவுளைப் பாடியவாறு –

“பாடுகின்ற பனுவலோர்கள்

தேடுகின்ற செல்வமே

நாடுகின்ற ஞானமன்றில்

ஆடுகின்ற வழகனே”

என்றே கொண்டாடுவோம். “ஆடுகின்ற அழகனே” என்பது சுப்பிரமணிய பாரதியின் ஆண்மையும் அழகும் வாய்ந்த ஆத்மாவுக்குப் பொருத்தமாகும்”.

*

அடுத்து பிரின்ஸிபால் சாரநாதன் எழுதிய் இன்னொரு கட்டுரை ‘பாரதி திருநாள்’ என்பதாகும். 1941இல் எழுதப்பட்டது இது.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை அவர் சொற்களில் அப்படியே காண்போம்:-

“கவியானவன் அழகுத் தெய்வத்தைப் பேணி, நல்லது பேசி, மக்களை இன்புறச் செய்யும் வேலையிலேயே அமர்ந்திருப்பானென்று நினைப்பது தவறு. பழைய இத்தாலியக் கவி டாந்தேயைப் பற்றி பிரௌனிங் என்ற ஆங்கிலக் கவி என்ன சொல்லுகிறார்?

“Dante, who loved well because he hated,

Hated wickedness that hinders Loving”

“அன்பைத் தடுக்கும் கொடிய வெறுப்பையே வெறுத்து, அன்பையே வளர்த்தான் கவி டாந்தே” என்று கூறியிருக்கிறார். இந்த வாக்கியம் நம் பாரதியாருக்கு மிகப் பொருத்தமாயுள்ளது.

“எல்லாமாகிக் கலந்து நிறைந்த பின்

    ஏழைமையுண்டோடா – மனமே

பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்

    புத்தி மயக்கமுண்டோ?”

என்று உரக்கக் கூவுகிறார் பாரதியார். இப்பொழுதும், இந்நெருக்கடியிலும், நம் தேசத்தில் ஒரு சிறிதும் தேச மக்களுக்குள் புத்தி மயக்கம் போகவில்லையே? பாரதியார் இன்று உயிருடனிருந்தால் பழைய மாதிரியே வருந்திக் கிடப்பாரே?

இதை நாம்  மாற்ற வேண்டாமா?

“சொல்லொன்று வேண்டும் தேவசக்திகளை

நம்முள்ளே நிலைபெறச் செய்யும்

சொல் வேண்டும்”

என்று கூறி பாரதியார் “சொல்” என்று ஓர் கவி பாடினார். அதன் கடைசி வரிகள் இவை.

“வலிமை வலிமை யென்று பாடுவோம் – என்றும்

      வாழுஞ் சுடர்க் குலத்தை நாடுவோம்

கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம் – நெஞ்சிற்

      கவலை யிருளனைத்தும் நீங்கினோம்

அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்

   அனலைப் பணிந்து மலர் தூவுவோம்

தமிழிற் பழமறையைப் பாடுவோம் – என்றுந்

    தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்”

*

மிக அருமையான இரு கட்டுரைகளை சாரநாதன் அவர்களின் நினைவு மலர் தாங்கி வந்தது. ஷேக்ஸ்பியர் இலக்கியத்தில் இணையற்ற மேதை எனப் போற்றப்பட்டவர் சாரநாதன். கவிதையை ரசிக்கும் பாங்கு படைத்தவர். அவர் பாரதியைப் பற்றி 1941இல் கணித்த கணிப்புகளை இந்த இரு கட்டுரைகளில் காண்கிறோம்.

பாரதி இலக்கியத்தில் முக்கியமானவை இவ்விரு கட்டுரைகள். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டியவை இவை.

***

tags-பாரதியார் பற்றிய நூல்கள் – 61

மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX – 2 (Post No.10,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,135

Date uploaded in London – 26 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX முதல் பகுதியில் 1 முதல் 30 நூல்கள் முடிய உள்ள விவரங்களைக் காணலாம். இதோ அடுத்த 30 நூல்கள்!

மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX – 2

31 முதல் 60 நூல்கள் முடிய

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் நூல்கள் என்ற தலைப்பில் மஹாகவியைப் பற்றிய நூல்கள், முக்கியமான கட்டுரைகள், வானொலி உரைகள் பற்றிய எனது கட்டுரைகளின் குறிப்பேடு இது:

கட்டுரை எண், வெளியான தேதி, நூல் / கட்டுரை/வானொலி உரை பற்றிய தலைப்பும் தரப்பட்டுள்ளது. இவற்றை www.tamilandvedas.com இல் படித்து மகிழலாம்

பாரதி      கட்டுரை   வெளியான    நூலின் பெயர்              எழுதியவர்

நூல்கள்       எண்       தேதி

31           3942                        26-5-17      ஸ்ரீஅரவிந்த தரிசனம் அமுதன் நினைவு அஞ்சலி

32    3963         2-6-17 ஸ்ரீ கபாலி சாஸ்திரிக்கு உதவியது          

33    3978         7-6-17 புதுவை வாழ்க்கை  -1

      3984         9-6-17 புதுவை வாழ்க்கை  -2

      3990         11-6-17 புதுவை வாழ்க்கை -3

34    4076         13-7-17 பாரதியாரின் தம்பி

35    4094         19-7-17 மஹாத்மாவும் மஹாகவியும் கல்கி

36    4144         10-8-17 பாரதிதாசன் கவிதைகள்      பாரதிதாசன்   

37    4157         24-8-17 நாமக்கல் கவிஞர்  கவிதைகள்

38            4198                        10-9-17  பாரதியார் பற்றிய கட்டுரைகள் ரா.பி. சேதுப்பிள்ளை  

39            4251                        28-9-17   காலவரிசைப்படுத்தப்பட்ட நூல்கள் சீனி.விசுவநாதன்

40            4278                        7-10-17 மகாகவி பாரதியார்-சில புதிய உண்மைகள் 

                                                        சீனி.விசுவநாதன்

41    4320       21-10-17 சுப்ரமண்ய பாரதி பிரேமா நந்தகுமார்

42     4364       4-11-17    ஆஷ் கொலை வழக்கு         ரகமி

43    4424       23-11-17  மகாகவி பாரதியார் (கட்டுரை)   விஜயா பாரதி 

44    4454                   3-12-17    வரகவி பாரதியார் பண்டித தி.இராமானுசன்

45    4529                  22-12-17   மகாகவி பாரதியார் எம்.திருச்செல்வம்

46    4604        11-1-18 பாரதியார் வரலாறும் கவிதையும் ப.மீ.சுந்தரம்

47    4715       8-2-18 பாரதியும் உலகமும்           பெரியசாமி தூரன்

48    4937       22-4-18   பாரதி யுகம்                  ப.கோதண்டராமன்

49    5037   23-5-18   இரு மகா கவிகள்       க.கைலாசபதி

50    5090   9-6-18    பாரதி ஆய்வுகள்        க.கைலாசபதி

51̀    5130   20-6-18   பாரதி சபதம்          மது.ச.விமலானந்தம்      

52    5170     2-7-18   பாட்டும் சபதமும்    மது.ச. விமலானந்தம்

53    5205   11-7-18   புதுமைப் புலவன் பாரதி    சுகி.சுப்பிரமணியன்

54    5245   22-7-18    பாரதி வழி               ப. ஜீவானந்தம்

55    5276     1-8-18    பாரதி பாடம்             ஜெயகாந்தன்

56    5345   21-8-18    பாரதி கண்ட சித்தர்கள்

57    5549   17-10-18 பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு சா.தாசன்

58.    6384   14-5-19 பாரதியார் கவிதைகளில் அணி நயம் – 1 சிவ மாதவன்

      6391   15-5-19 பாரதியார் கவிதைகளில் அணி நயம் – 2 சிவ மாதவன் 59.       6454    29-5-19   வீர வாஞ்சி                         ரகமி     60.  6939   27-8-19 வழி வழி பாரதி – 1 சேக்கிழார் அடிப்பொடி  

                                                   T.N.ராமச்சந்திரன்  

     6944  28-8-19வழி வழி பாரதி – 1 சேக்கிழார் அடிப்பொடி 

                                                  T.N.ராமச்சந்திரன்  

***

tags- பாரதியார் நூல்கள் , INDEX,

PLEASE JOIN US TODAY SUNDAY 26-9-2021

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

XXX

26-9-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

BENGALURU MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON Akilandesswari Temple in Tiruchi-  10 MTS

Thiruppugaz Amirtham – by LONDON MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY, LONDON

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY LONDON SWAMINATHAN, LONDON

–20 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram, MADURAI

XXXX subham xxxx

Tags –  publicity26921

தோள் கண்டார் தோளே கண்டார்- கம்பனுக்குப் போட்டி! (Post.10,134)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,134

Date uploaded in London – 25 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தோள் கண்டார் தோளே கண்டார்- கம்பனுக்குப் போட்டி!

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

–(பால. 1028)- கம்பராமாயணம்

ராமனின் வடிவழகை வருணிக்க வந்த கம்பன் அருமையான ஒரு பாடலை நமக்கு அளித்தார்.தமிழ் விரும்பிகளுக்கு நன்கு தெரிந்த பாடல் இது.

இதே போல ஒரு பாடலை கம்பனுக்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழி கவிஞன் பாடி விட்டான்.

காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி நூலில் 700 அகத்திணைப் பாடல்கள் உள்ளன . அவற்றில் ஒன்று இது.

ஹாலன் என்ற சாதவாகன மன்னன், கோடிப் பாடல்களில் இருந்து 700 பாடல்களை தேர்தெடுத்ததாக அதே புஸ்தகத்தில் ஒரு கவிதையும் உளது. இங்கே ‘கோடி’ என்பதை பத்து மில்லியன்- 100 லட்சம்– என்று கொள்ளாமல் ஏராளமான கவிதைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள 2000 அகத்துறை  பாடல்களைப் போலவே சமகாலத்தில் இப்படி பிராகிருத மொழியிலும் உளது. சுமார் 300 கவிஞர்கள் பாடிய பாடல்கள் இவை. ஆயினும் நிறைய இடைச் செருகல் இருப்பதால் 700க்கும் மேலான கவிதைகள் இத்தொகுப்பில் உள . மொத்தத்தில் 2000 ஆண்டுப் பழமையான நூல் என்று சொல்லலாம். அகநானூற்றில் உள்ள சில புலவர்கள் பெயர்கள் இதிலும் உள்ளன. சங்க இலக்கியத்தில் காணப்படும் பிரம்மச்சாரி , (குண்டுகட்  ) பாலியாதன் ஆகிய பெயர்கள் சில எடுத்துக் காட்டுகள்.

ராமனுடைய உடல் அழகு எப்படிப் பட்டதென்றால் , அவருடைய உடலில்  ஒரு அங்கத்தைக் கண்டவர்கள் அதிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் வியந்து பார்த்துக் கொண்டு இருப்பார்க்களாம் ; யாரும் தேகத்தின் முழு அழகைக் காண முடியவில்லையாம் ! அதைச் சொன்ன கம்பன் ஒரு அருமையான உவமையையும் நமக்கு அளிக்கிறான். எப்படி மதத்தைப் பின்பற்றுவோர் தன் கடவுளே சிறந்தவர் என்று அதையே பற்றிக்கொண்டு, போற்றிக்கொண்டு,  இருப்பார்களோ அப்படி அவர்கள் உடல் அழகினையும் ரசிப்பார்களாம் .

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழிக் கவிஞன் பாடிய பாடலை பன்மொழிப் புலவர் மு.கு ஜெகந்நாத ராஜா இப்படித் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.:

எப்படிச் சொல்வ தேந்திழை எழிலே!

எங்கெங்கவ ள்  அங்கங்களிற்  பதியும்

பார்வையதுவே பங்கத் தழுந்தி

வீழ்த்த வலி யில் விடை போலெழாதே

–பர்வத குமாரன்  (3-71)

இங்கே தலைவியின் அழகு/ எழில் வருணிக்கப்படுகிறது எந்த அங்கத்தில் என் பார்வை விழுகிறதோ அதிலிருந்து கண்கள் எழுவதே இல்லை – இவ்வாறு தலைவன் கூறுகிறான்  ; இதற்கு அவன் கூறும் உவமை உழவன் உவமையாகும் . உழுகின்ற காளை (விடை) மாடுகள் எப்படி சேற்றில் (பங்கம்) ஆழப் பதிகின்றனவோ அப்படிப் பதிந்தன என்கிறான் . அதாவது கண்களால் அவளுடைய உடலை உழுது விடுகிறான் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவ்விரு புலவரில் கம்பனே சிறந்தவன் என்பது என் கணிப்பு. ஏனெனில் பெண்களின் உடல் அழகு வருணனை எல்லா நாட்டு, எல்லா மொழி இலக்கியங்களிலும் உளது. அதை ஒரு ஆண்  மகனுக்கு — இராம பிரானுக்கு –ஏற்றிச் சொன்ன கம்பனின் திறமையே திறமை; புலமையே புலமை. வடுவூர் போன்ற இடங்களில் விக்கிரகமாக வடிக்கப்பட்ட இராமனின் அழகை ரசித்தோருக்கு இது நன்கு விளங்கும். பிராகிருத மொழிக் கவிஞன் பாடியதை மேம்போக்கான உடல் அழகு என்றால் கம்பன் சொன்ன அழகை தெய்வீக அழகு எனலாம்.!

காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

https://tamilandvedas.com › காத…

· Translate this page

11 Jan 2015 — நான், காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில … இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் …


காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்! – Tamil and …

https://tamilandvedas.com › காத…

· Translate this page

9 Jan 2015 — கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை …


புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை

https://tamilandvedas.com › புகழ…

· Translate this page

6 Jan 2015 — பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது.

Did Hala copy Kalidas in GSS? | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/01/09 › did-hala-cop…

9 Jan 2015 — Research Paper written by london swaminathan Research article No 1561; Dated 9th January 2015. Gatha Sapta Sati (GSS) is a Prakrit book of …

–subham—

Tags- காதா சப்த சதி ,ஹாலன் , கம்பன், உடல் அழகு, தோள் கண்டார்

மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX (Post.10,133)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,133

Date uploaded in London – 25 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் நூல்கள் என்ற தலைப்பில் மஹாகவியைப் பற்றிய நூல்கள், முக்கியமான கட்டுரைகள், வானொலி உரைகள் பற்றிய எனது கட்டுரைகளின் குறிப்பேடு இது:

கட்டுரை எண், வெளியான தேதி, நூல் / கட்டுரை/வானொலி உரை பற்றிய தலைப்பும் தரப்பட்டுள்ளது. இவற்றை www.tamilandvedas.com இல் படித்து மகிழலாம்

பாரதி      கட்டுரை   வெளியான    நூலின் பெயர்              எழுதியவர்

நூல்கள்       எண்       தேதி

01           2091                        22-8-15                   என் தந்தை              சகுந்தலா பாரதி

02    2095         24-8-15 பாரதி நினைவுகள்       யதுகிரி அம்மாள்

03    2099         26-8-15       வானொலி உரை         செல்லம்மா பாரதி

04    2102         27-8-15 நான் கண்ட நால்வர்     வெ.சாமிநாத சர்மா

05    2106         29-8-15 பாரதி புதையல் – 3       ரா.அ.பத்மநாபன்

06    2132         7-9-15        வானொலி உரை         அமுதன்

07    2146         11-9-15 மஹாகவி பாரதியார்     வ.ரா.

08            2192                        27-9-15                   Subramanya Bharathi

                                                                                Patriot and Poet                   P.Mahadevan

09            2213                        4-1015                     பாரதியார் கவிநயம்                ரா.அ.பத்மநாபன்

10            2298                        4-11-15                   கண்ணன் என் கவி       கு.ப.ரா & சிட்டி

11    2316         10-12-15      நான் கண்டதும் கேட்டதும் பி.ஸ்ரீ

12     2380          11-12-15       பாரதி பிறந்தார்          கல்கி

13    3428         8-12-16 பாரதியும் திலகரும்   பெ.நா.அப்புஸ்வாமி

14    3431                       9-12-16     பாரதியை ஒட்டிய நினைவுகள் பெ.நா.அப்புஸ்வாமி

15    3434                        10-12-16                ANNOTATED BIOGRAPHY             VIJAYA BHARATHI    

16    3477         24-12-16   1. குமரி மலர் கட்டுரைகள்   ஏ.கே.செட்டியார்

17    3493        28-12-16   2. குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

18    3509         3-1-17     3.குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

19    3533         11-1-17     4.குமரி மலர் கட்டுரைகள்   ஏ.கே.செட்டியார்

20    3562         21-1-17     5.குமரி மலர் கட்டுரைகள்   ஏ.கே.செட்டியார்

21̀    3676         28-2-17     6.குமரி மலர் கட்டுரைகள்   ஏ.கே.செட்டியார்

22    3688̀̀         4-3-17      7. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்

23    3755         25-3-17   8. குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

24    3761         27-3-17   9. குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

25    3767         29-3-17  10. குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

26    3774         31-3-17  11. குமரி மலர் கட்டுரைகள்    ஏ.கே.செட்டியார்

27    3870         2-4-17 நினைவு மஞ்சரி- கட்டுரைகள் உ.வே.சாமிநாதையர்

28.    3851         26-4-17 பாரதியும் ஏவிஎம்மும் சில உண்மைகள்

                                                ஸ்ரீ ஹரி கிருஷ்ணன்

29.    3879          5-5-17 சொன்னால் நம்ப மாட்டீர்கள் சின்ன

                                                              அண்ணாமலை

30.    3897          11-5-17 சென்று போன சில நாட்கள் எஸ்.ஜி. ராமானுஜுலு                                                              நாயுடு

***

tags-  பாரதியார் நூல்கள், INDEX

தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்! (Post.10,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,132

Date uploaded in London – 25 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

ச.நாகராஜன்

அற்புதமான சுபாஷிதங்கள் கவிதைகளைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. கவிதையின் மதிப்பையும் சுவையையும் அறியும் கவிதா ரஸிகர்களே இப்படிப்பட்ட சுபாஷிதங்களைத் தர முடியும். அவற்றில் நான்கு சுபாஷிதங்கள் இங்கு தரப்படுகின்றன.

1

கவி கரோதி பத்யானி லாலயத்யுத்தமோ ஜன: |

தரு: ப்ரசூதே புஷ்பாணி  மருத் வஹதி சௌரபம் ||

கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் உத்தம மனிதர்களே அவர்களை ஆதரிக்கின்றனர். மரமானது பூக்களைப் புஷ்பிக்கிறது. ஆனால் தென்றலே மணத்தைப் பரப்புகிறது.

The poet composes the verses, but the best of men patronises them; the tree puts forth flowers, but the breeze spread the fragrance (K.V. Sarma)

2

கவி சூயதி காவ்யானி   ஹ்ருதா வததி சஜ்ஜனா: |

சூதே முக்தாள் பயோ ராஷிர்   வஹந்தி தருணீஸ்தனா: ||

கவிஞன் (நல்ல) கவிதைகளை இயற்றுகிறான். ஆனால் அவை நல்ல மனிதர்களால் அவர்கள் இதயத்தில் போற்றப்படுகிறது. கடலானது முத்துக்களைத் தருகிறது. ஆனால் அவற்றை பேரழகிகள் மார்பகத்தில் அணிந்து கொள்கிறார்கள்.

A poet composes (good) poems but they are appreciated by good people in their hearts: the sea gives birth to pearls, but they are worn on the bosoms of young women. (A.A.R.)

3

கவி கரோதி காவ்யானி ஸ்வாது ஜானாதி பண்டித: |

சுந்தர்யா அபி லாவண்யம் பதிர்ஜானாதி நோ பிதா ||

கவிஞன் கவிதைகளை இயற்றுகிறான்.ஆனால் அதன் சுவையை அறிஞன் ஒருவனே அறிகிறான். ஒரு பேரழகியின் லாவண்யத்தை அவன் கணவனே அறிவான். அவளது தந்தை அறிய மாட்டான்.

The poet composes poems, but the wise man knows its taste: the charms of the damsel is known to the husband, not to the father. (K.V.Sarma)

4

கவித்வசக்திம்ஹி  திவோவதீர்ணா  பூமௌ சுதாசார இவார்ய புண்யாத் |

புனர்க்ரஹிதும்  நிஜவஸ்து தேவா:  சமாகதாஸ்தத் கவய: சமுத்கா: ||

மனிதர்களின் புண்ணியத்தால் சுவர்க்கத்திலிருந்து கவிதா சக்தி புவிக்கு அமிர்த மழையாக இறங்கியுள்ளது.  தேவர்களே கவிஞர்கள் போல தங்களது உடைமைகளை மீட்டெடுக்க வந்துள்ளார்கள் என்பது போலத் தோன்றுகிறது.

Poetic power has descended down to the earth from the heavens as a nectarine shower on accout of man’s meritorious deeds. And it would seem that the gods too have come down in the guise of poets, keen to retrieve their possession. (K.V. Sarma)

***

tags– கவிஞர்கள், தேவர்கள், புவி

LAST PART OF RIG VEDIC POET’S UNIQUE DIALOGUE WITH TWO RIVERS-3 (Post No.10,131)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,131

Date uploaded in London – 24 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THIS IS THE THIRD AND LAST PART OF RIG VEDIC POET’S UNIQUE DIALOGUE WITH TWO RIVERS.

 We saw in the past two days a unique conversation between the seer Visvamitra and two rivers Vipas and Sutudri. They are identified with modern day rivers Beas and Sutlej.

Here is my commentary on the last five mantras of 3-33

3-33-9

Visvamitra addresses the rivers as Sisters! In the third mantra/stanza we saw the rivers as Mother. Hindus are the only people in the world who worship rivers as Goddesses. All the rivers have feminine names and each one has a legend. The poet requests the rivers to flow below the axle of the wagon and car.

3-33-10

Here the rivers speak. They use two beautiful similes. Yes ; we would lower our level ‘like a nursing mother and yield like a maiden to her lover.

These types of similes are seen throughout the Rig Veda. We see well-knit family connections with love and affection between the relatives. Similes of husband and wife coming together, children running into the garments of mother, son getting the warmth of his father, lover and lady love hugging together etc are found in Vedas. Very often cow and calf are compared to mother and child.

3-33-11

Here we read about the poet and his clan the Bharatas crossing the river.  The poet urges the rivers to flow rapidly (after their crossing). Indra’s help in feeding the rivers (through rain) is also mentioned. Poet’s words “ I crave your favour who deserve our worship” are to be noted. In the eighth stanza we saw rivers saying NAMASTE. Even today this greeting is used by all Indians. Here Visvamitra says they/the rivers deserve worship.

Today Hindus worship not only rivers but also water. Hindu brahmins sprinkle water on their head thrice a day praising water as medicine and the take water in sips as well.

3-33-12

Here the poet concludes saying they have all crossed the river and it can roll swiftly onward.

Hindus believe that saints and seers like Visvamitra can control natural forces such as rivers, rain and wind, even ocean. In the Ramayana we read about Rama commanding the sea to obey. In the Bhagavata Purana we see river Yamuna parting away to give way to Vasudeva carrying Baby Krishna. In Adi Shankara’s life we see his command over flooded river. In Sangam Tamil literature Rama commands the birds in a banyan tree and then they shut their mouths. It happened when Rama was consulting Civil engineer Nala about building a bridge across the sea. So I would take these stanzas as water miracle performed by Visvamitra. Two rivers obeyed his commands and the additional message is to show respect and reverence to Rivers.

3-33-13

Griffith has added a foot note saying that it is in different metre and so a later addition. Stanzas with different metres occur in ancient Tamil and Sanskrit literature. Not only the differences in metre but also the repetitions. Here in 13th mantra we see the same message repeated.

Prof . Wilson following Sayana, gives a somewhat different version of the stanza:

Let your waves/rivers so flow that the pin of the yoke may be above their waters; leave the trace full, and may the two streams exempt from misfortune or defect and uncensured, exhibit no (present) increase.

I take it as a blessing to the rivers given by Visvamitra.

This hymn shows the environmental awareness among ancient Indians. ‘Humble us not mid men’ in the eighth stanza is the message Visvamitra gives to humanity through the rivers. Never treat rivers with contempt; never pollute them.

Confluence of Sutudri/Sutlej and the Vipas/Beas takes place near Amritsar in Punjab.

–subham–

tags- Visvamitra, Dialogue with rivers, Vipas, Sutudri, last part, RV 3-33

அழியாத மா கவிதை -3, ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை -3 (Post No.10,130)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,130

Date uploaded in London – 24 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விசுவாமித்திர முனிவர் நதிகளுடன் உரையாடல்

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்திலுள்ள 33-வது துதியின் 13 மந்திரங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டு மந்திரங்களில் கண்ட அற்புத விஷயங்களைப் பார்த்தோம். இதோ கடைசி 5 மந்திரங்களின் சாரம்:

3-33-9

விசுவாமித்திரர் நதிகளிடம் சொல்கிறார் :

சகோதரிகளான நதிகளே !

உங்களைப் போற்றிப் பாடும் என் துதியை அன்போடு செவி மடுப்பீர்களாகுக !

நான் தொலை தூரத்திலிருந்து வண்டியோடு வந்திருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து ஓடுங்கள் ; நான் உங்களைக் கடந்து செல்ல உதவுங்கள் ; நீங்கள் என் வண்டிச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்குமாறு செல்லுங்கள் .

எனது வியாக்கியானம்

சோமம் என்னும் அற்புதக் குளிகையைப் பறிப்பதற்காக முனிவர் மேற்கிலுள்ள மலைகளை நோக்கிச் செல்கிறார் . இதை சாயனர், யாஸ்கர் போன்றோர் எழுதி இருப்பதை கிரிப்பித் Ralph T H Griffith என்பவர் மறைத்ததை நேற்று கண்டோம். இப்போது அந்த நதிகளை சகோதரிகளே! என்று விளிக்கிறார் . உலகில் நதிகளை இன்றுவரை தாயாகவும் சகோதரியாகவும் போற்றி வணங் கும் ஒரே சமுதாயம் இந்துதான். விசுவாமித்திரரே மூன்றாவது மந்திரத்தில் நதியைத்  ‘தாய்’ என்று அழைக்கிறார் . நான் வண்டியில் வந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் தொலை தூரத்தைக் கடக்கும் அருமையான சாலை  வசதிகள் இருந்தன . சக்கரத்தின் பயன்பாடு ரிக் வேதத்தில் இருப்பது போல உலகில் வேறு எந்த பழைய இலக்கியத்திலும் இல்லை . தேரின் உறுப்புகள், பகுதிகள் பற்றி 60 சொற்கள் வேத கால இலக்கியத்தில் உள்ளன.

வாழ்க்கை என்னும் வண்டி, சுகமாகப் பயணம் செய்ய வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் வலுவாக, சம நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு சக்கர உவமையும் அதை இணைக்கும் கட்டையையும் ரிக் வேதப் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துகின்றனர். அதைத் திருவள்ளுவரும் சொல்கிறார். வள்ளுவர் பயன்படுத்தும் ‘அச்சு’ Axis என்பதே ரிக் வேத சம்ஸ்கிருதத் சொல்!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து – திருக்குறள் 667

XXX

3-33-10

புலவனே !/ கவிஞனே

தேரோடும் வண்டியோடும் தொலைவிலிருந்து வந்திருக்கிறாய் என்று நீ சொன்னது எங்கள் காதில் விழுந்தது. நாங்கள் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் தாயைப் போலும், காதலைனக் கட்டித் தழுவும் இளம் பெண்னைப் போலவும் தாழ்ந்து பணிவோம்; உன்னை வணங் குவோம்

எனது வியாக்கியானம்:

என்ன அற்புதமான பணிவு; என்ன அற்புதமான உவமைகள்!

விசுவாமித்திரன், நதிகளை சகோதரி என்றான். நதிகள் உடனே தாய் போலவும் அன்புள்ள காதலி போலவும் பணிவோம் என்கின்றன. இந்த தாய் உவமை, மற்றும் தாயின் முந்தானையில் டி ஒளியும் குழந்தையின் உவமை, காதலன்-காதலி கட்டித் தழுவும் உவமை, கணவன்- மனைவி இன்பம் துய்க்கும் செக்சி sexy உவமை ஆகி யன ரிக் வேதம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வேதகால இந்துக்கள். ‘உலகு இன்பக் கேணி என்று நல் பல் வேதம் உரைத்த’ –என்பது பாரதியாரின் வாக்கு. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும் எண்ணில் யாதும் குறையிலை என்ற ஞான சம்பந்தரின் வாக்கினை வேத காலத்திற்குச் சூட்டலாம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

XXX

3-33-11

விசுவாமித்திரனின் பதில்:

நதிகளே ! நீங்கள் என்னைக் கடக்கச் செய்தீர்கள்; அதுபோல பரத குல மக்களும், வீரர்களும்  கடந்து செல்லுவார்கள் . பின்னர் இந்திரனால் நிரப்பப்படும் நீங்கள் பிரவாகம் எடுத்து ஓடுங்கள் ; முன் போலவே பெருகுக ; வந்தனத்துக்குரிய நான் உங்கள் நல்லதரவை நாடுகிறேன்

எனது வியாக்கியானம்

நதிகள் போன்ற இயற்கைக் சக்திகள் அனைத்தும் விசுவாமித்திரன் போன்ற தவ வலிமை உடையோருக்குக் கீழ்ப்படியும். ஆதி சங்கரர் கோதாவரி வெள்ளத்ததைக் கட்டுப்படுத்தினார் . வாசுதேவனுக்கு கிருஷ்ணன் என்னும் குழந்தையை எடுத்துச் செல்வதற்காக யமுனை நதி வழிவிட்டது . இதை பைபிள்கார்களும் காப்பி அடித்து மோசஸுக்கு செங்கடல் வழிவிட்டதாக எழுதிவைத்துள்ளனர். ஆகையால் இதை தண்ணீர் அற்புதங்களில் சேர்க்க Water Miracles வேண்டும். அப்படி அற்புத விஷயமாக இல்லாவிடில் இது ரிக் வேதத்தில் இடம்பெறாது..

வண்ணகத்துக்குரிய , வந்தனத்துக்குரிய என்ற சொற்கள் சாதாரண ஆள் இல்லை என்பதைக் காட்டுகிறது; இந்த சொற்களை நதிகளின் பால் ஏற்றினாலும் அவைகளை இந்துக்கள் வணங்கியதை அறிவோம்.

XXX

3-33-12

பரதர்கள் பசுக்களை நாடி நதிகளைக் கடந்து சென்றார்கள் . புலவனுக்கு நதியின் நல்லாதரவு  கிடைத்தது . உங்கள் அலைகளோடு ஓடுங்கள் ;செல்வத்தைப் பொழியுங்கள்; உணவை அளியுங்கள் வளம் பெருக்குங்கள்; வேகமாக ஓடுங்கள் .

எனது வியாக்கியானம்

விசுவாமித்திரன் பல தேர்களுடனும் பெரும் படையுடனும் வந்திருப்பது தெரிகிறது. ‘பசுக்களை’ நாடி என்று சாயனர் உரையில் சேர்க்கிறார் ; பசு என்பதற்குப் பல பொருள் உண்டு. ஒரு வேளை இங்கே சோமம் என்னும் மூலிகையைக் குறிக்கலாம். ஏனெனில் சாயனரே ,நிறைய  செல்வத்துடன் இரண்டு நதிகள் கூடும் இடத்திற்கு முனிவர் வந்ததாகச் சொல்கிறார்.

ராமாயண, புராணக் கதைகளின் பின்னணியில் பார்க்கும்போது அவர் கிழக்கிலுள்ள சரயூ (அயோத்தி மாநகரம்) நதி பகுதியில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றதாகவே பொருந்தும். காரணத்தையும் சாயனரே சொல்லிவிட்டார். சோம மூலிகையை பறிப்பதற்காக என்று.

XXX

3-3-13

நதிகளே , உங்களுடைய அலைகள் நுகத்தின் கயிற்றுக்குக் கீழே பாய்க ; கட்டுக்களைப் பற்றாதீர்கள்.. பாவமற்றவர்களும் , துன்பம் அளிக்காதவர்களும் , தடைப்படாதவர்களுமான இரு நதிகளும் — நாங்கள் கடந்து செல்லும் வரை — பெருகாமல் இருப்பார்களாகுக.

எனது வியாக்கியானம்

கடைசி மந்திரம் வேறு சந்தத்தில் (meter)  அமைந்துள்ளதால் இதை பிற்சேர்க்கை என்று கிரிப்பித் அடிக்குறிப்பு கூறுகிறது. இந்தப் பிரச்சனை தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் நெடுகிலும் உண்டு. எங்காவது ஒரு யாப்பு இலக்கண வேறுபாடு இருந்தால் அதைச் சந்தேகிப்பதுண்டு. அப்படியே பார்த்தாலும் இந்த துதியின் / சூக்தத்தின் பொருள் மாறுபடாது .

மேலும், இந்தக் கடைசி மந்திரம் ‘கூறியது கூறல்’ என்ற இலக்கண குற்றத்துக்கு கீழே வருகிறது. அதாவது சொன்ன விஷயத்தையே  மீண்டும் சொன்னதாகிறது.

ஹொரேஸ் Horace என்ற கவிஞரும் இப்படிச் சொல்லி இருப்பதாக அடிக்குறிப்பு கூறும்.

வில்ஸன் (Prof. Wilson) என்ற மொழிபெயர்ப்பாளர் சாயனரைப் பின்பற்றி பின் வருமாறு மொழி பெயர்க்கிறார்

“உங்களுடைய பிரவாகம் நுகத்துக்கும் கீழே பாயட்டும். இரண்டு நதிகளும் துரதிருஷ்டம், குற்றச் சாட்டுகள்  மற்றும் குறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கட்டும் . தற்போது அதிகம் பாயாமல் இருக்கட்டும்”.

இங்கே நதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குவது போலும் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.

நதிகளைப் பற்றி இப்படி எவரும் பாடியதும் இல்லை. அவைகளை உயிருள்ள ஒரு ஜீவனாக மாற்றி எவரும் பேச வைத்ததும் இல்லை.

வாழ்க விசுவாமித்திர முனிவன் ! வளர்க புனித நதிகள்!!

–SUBHAM–

tags -அழியாத மா கவிதை -3,  விசுவாமித்திர முனிவர், நதிகளுடன் உரையாடல்,

51 கோவில்கள் பற்றிய கட்டுரைகள்- ஆலயம் அறிவோம் INDEX (Post No.10,129)

Compiled  BY S NAGARAJAN

Post No. 10,129

Date uploaded in London – 24 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம் INDEX

(2nd November 2020, to 20th September 2021)

by திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

ஆலயம் அறிவோம் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆலயங்கள் பற்றிய குறிப்பேடு கீழே தரப்படுகிறது. http://www.tamilandvedas.comஇல் வெளியான கட்டுரை எண், தேதி, ஆலய விவரம் ஆகியவற்றைக் கீழே காணலாம்.

தொடர்  கட்டுரை   தேதி    ஆலயம்

எண்     எண்

01       8881 2-11-20 ஸ்ரீரங்கபட்டணம், மைசூர்

02       8906 9-11-20 ஸ்ரீ சைலம்

03       8939 17-11-20       மதுரா

04       8960 23-11-20       திருச்செந்தூர்

05       8981 29-11-20       திருவண்ணாமலை

06       9007 6-12-20 புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்

07       9034 13-12-20       காசி

08       9057 20-12-20       ஸ்ரீரங்கம்

09       9083 28-12-20       திருநள்ளாறு

10       9101 3-1-21  சிதம்பரம்

11       9128 10-1-21 உஜ்ஜயினி

12       9154 17-1-21 சூரியனார் கோவில்

13       9183 24-1-21 குருவாயூர்

14       9209 31-1-21 வைத்தீஸ்வரன் கோவில்

15       9239 7-2-21  திருப்பதி

16       9263 14-2-21 ராமேஸ்வரம்

17       9290 21-2-21 ரிஷிகேசம்

18       9321 28-2-21 கேதார்நாத்

19       9355 8-3-21  கைலாயம்

20       9381 14-3-21 பத்ரிநாத்

21       9405 21-3-21 புரி ஜகந்நாத்

22       9431 28-3-21 சோம்நாத்

23       9457 4-4-21  தஞ்சை பிரகதீஸ்வரர்

24       9479 11-4-21 காஞ்சிபுரம்

25       9505 18-4-21 திருமாலிருஞ்சோலை

26       9530 25-4-21 மதுரை

27       9557 3-5-21  காமாக்யா ஆலயம்

28       9586 10-5-21 பண்டரிபுரம்

29       9615 17-5-21 திருப்பரங்குன்றம்

30       9637 23-5-21 சீர்காழி

31       9669 31-5-21 கன்யாகுமரி

32       9699 7-6-21 அபு மலைத் தலங்கள்

33       9703 14-6-21 அனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயம், 

                            திருவனந்தபுரம்    

34     9757         21-6-21 திருநாகேஸ்வரம்

35     9784         28-6-21 ஸ்ரீ காளஹஸ்தி

36     9817         5-7-21  திருக்கருகாவூர்

37     9842         12-7-21 மும்பை சித்தி விநாயகர் ஆலயம்

38     9868         19-7-21 அஞ்சனா பர்வதம், ஹனுமார் ஆலயம்

39     9895         26-7-21 பழநி

40     9922         2-8-21  ஒப்பிலியப்பன் ஆலயம், கும்பகோணம்

41     9954         9-8-21  திருவிடைமருதூர்

42     9981         16-8-21 வைஷ்ணவி தேவி ஆலயம்,ஜம்மு-காஷ்மீர்

43     10007         23-8-21 திருவள்ளூர்

44     10033         30-8-21 பிருந்தாவனம்

45     10061         6-9-21  திருவலஞ்சுழி

46     10088         13-9-21 தண்டீஸ்வரர் ஆலயம், சென்னை

47     10113         20-9-21        கங்காபூர் ஸ்ரீதத்தாத்ரேயர் ஆலயம், கர்நாடகம்

மேற்படி ஆலயங்களைத் தவிர செப்டம்பர், அக்டோபர் 2020 இல் பங்களூர் செய்தி மடலில் மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம், சிருங்கேரி, கொல்லூர் மூகாம்பிகை, கொக்கி சுப்ரமண்யர் ஆகிய ஆலயங்கள் பற்றியும் அறிந்தோம்.

ஆக இதுவரை யாத்திரையில் இடம் பெற்ற தலங்களின் எண்ணிக்கை மொத்தம் 51.

***

tags — ஆலயம் அறிவோம், INDEX,