ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2 (Post No.10,180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,180

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2

பின்னர் தெற்கு நோக்கி வந்த தீக்ஷிதர் திருத்தணியில் முருகப் பிரானை தரிசித்தார். தனது தந்தையார் அங்கு ஒரு மண்டலம் உபவாஸம் இருந்ததைப் போலவே தானும் ஒரு மண்டலம் உபவாஸம் இருந்தார். அப்போது அங்கே அவருக்கு தெய்வீக உள்ளொளி கிட்டியது. ஸ்கந்தாக்க்ஷரியை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் அவரிடம் வந்தார். அவர் பெயரைச் சொல்லி அழைத்தார். அவரது வாயில் ஒரு கல்கண்டுத் துட்டை இட்டார். தீக்ஷிதர் கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவர் முன் முதியவர் இல்லை மறைந்திருந்தார். வள்ளி தெய்வானை ஸமேத முருகப் பிரான் மயில் மீது வர முருகனின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. முருகனே முதியவர் உருவில் வந்து தனக்கு அருளியிருப்பதை தீக்ஷிதர் உணர்ந்தார். கல்கண்டை ஊட்டி முருகனே தனக்கு ஞானத்தை ஊட்டியதையும் அவர் உணர்ந்து கொண்டார். உடனே இசை வெள்ளம் அவர் நாவிலிருந்து வெளி வந்து கரை புரண்டோடியது.

ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதிஜயதி என்ற கீர்த்தனையை மாயாமாளவகௌள ராகத்தில் முதல் கீர்த்தனையாகப் புனைந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாடிய ஏராளமான கீர்த்தனைகளில் குரு குஹ என்று அவர் தனது முத்திரையைப் பதித்து வந்தார். இன்ன ராகம் என்றும் கூட கீர்த்தனைகளில் அவர் குறிப்பிடுவதுண்டு. சுமார் இருபது கீர்த்தனைகளை அவர் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். ஆனந்தபைரவி ராகத்தில் உள்ள மானஸ குரு குஹ ரூபம் பஜரே, பூர்வியில் உள்ள ஸ்ரீ குரு குஹஸ்ய தாஸோஹம் உள்ளிட்ட பல கீர்த்தனைகள் பிரபலமானவை.

திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் வந்த தீக்ஷிதர் காமாக்ஷியை தரிசித்தார். மனோஹரியில் அமைந்துள்ள கஞ்சதளாயதாக்ஷி என்ற கீர்த்தனை, ஹிந்தோளத்தில் அமைந்துள்ள நீரஜாக்ஷி உள்ளிட்ட பல கீர்த்தனைகளை ஆனந்தமாகப் பாடினார். பின்னர் திருவாரூரை அடைந்த அவர் அங்கேயே தங்கலானார். ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்து இறைவனின் புகழைப் பாடினார். இடையிடையே தீர்த்தஸ்தல யாத்திரையை அவ்வப்பொழுது மேற்கொண்டார்.

பஞ்சலிங்க கீர்த்தனைகளாக ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஐந்து புண்ய ஸ்தலங்களான காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில்  பைரவி ராகத்தில் சிந்தய மாகந்த மூல கந்தம், யமுனா கல்யாணி ராகத்தில் ஜம்பூபதே, ஸாரங்காவில் அருணாசல நாதம், உசேனியில் ஸ்ரீகாளஹஸ்தீசம், கேதாரத்தில் ஆனந்த நடன ப்ரகாசம் ஆகியவற்றை இயற்றி இசைத்துப் பாடினார். நவக்ரஹங்களில் ராகு கேது கிரகங்களை நீக்கி விட்டு ஏழு கிரகங்களுக்கும் ஏழு கீர்த்தனைகளை இசைத்துப் பாடினார். இவை இன்றளவும் பிரபலமாகி மேடைக் கச்சேரிகளில் இசைக்கப்படுகின்றன. மாயூரம் அடைந்த அவர் அங்கு அம்பிகையின் பேரில் ஸ்ரீ வித்யோபாஸனை முறையின் கீர்த்தனைகளை இயற்றி அருளினார்.

சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர் என்பதால் அதில் உள்ள எட்டு வேற்றுமைகளுக்கும் எட்டு கீர்த்தனைகள் இயற்றினார். அவர் இயற்றியுள்ள நவாவரண கீர்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது; பிரபலமானது. சாக்த, ஆகம் தந்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரம், யந்திரம், மூர்த்தி முதலிய ஆவரணங்களை எல்லாம் கம்பீரமான பாவங்களுடன் ஒப்பற்ற உரிய ராகங்களில் அவர் கிருதிகளாக அமைத்து  ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரண கீர்த்தனைகளாக இயற்றினார்.

இப்படி அவர் இயற்றியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள், அவருக்கு மந்திர சாஸ்திரம், யோகம், ஸ்ரீ வித்யை, ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் அவர் ஒரு அபார மேதை என்பதை விளக்குபவையாக அமைந்துள்ளன.

  • தொடரும்

tags- முத்துசாமி தீக்ஷிதர்! – 2

‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,179

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In Tamil Nadu you may find men named ‘ Mr One Thousand’ (Kan Ayiram in Tamil). But there is an awkward story behind this name in later Puranas and even in Mahabharata. I argue in this article that it was a false and funny story and it was developed later by the Pauranikas/Upanyasakas, i.e. people who delivered discourses. It was the style they followed even in explaining occurrences of solar and lunar eclipses. Hindus calculated the eclipses precisely and yet they kept on saying ‘the snake dragon devouring the moon or sun’. Even Kalidas and Sangam Tamil poets repeated this 2000 years ago. This shows that all scientific things were simplified in the way of popular and funny stories.

Rig Veda says very clearly that a solar eclipse finished before Atri finished reciting his verse/hymn. His disciples praised him for this feat. They did not know that Rishi Atri was an astronomer. No total eclipse can lost more than seven minutes. That too is very rare.

In the Mahabharata also, Krishna knew the day of solar eclipse. Jayadratha put down his bow and arrow thinking that the sun has already set, and he could take rest now. But Krishna asked Arjuna to shoot him down when the sun was out after the eclipse.

xxx

Here is a funny story about Indra.

According to the Mahabharata, Indra seduced or tried to seduce Ahalya, wife of Gautama Rishi. And the sage’s curse impressed upon him a thousand marks resembling the female organ, so he was called Sa-yoni; but these marks were afterwards changed to eyes and hence he is called Netra Yoni and Sahasraksha, the thousand eyed (Yoni is female organ). But there is no support for this story in the  Rig Veda, the oldest book in the world .

Rig Veda called Agni, Varuna and Indra 1000 eyed. The meaning was they are all ‘omni scient’. They know everything and they could see everything. Even if human beings did something secretly, they would know.

But Tamils also believed the story of Indra with Thousand Eyes. We have a proof in Tamil Hymn Tevaram. Tiru Jnana Sambandar who lived 1400 years ago during the reign of Mahendra Pallava and Pandyan Nedumaran composed a poem in the village Tirukkannanar Temple near Vaitheeswaran koil in Tamil Nadu. Sambandar himself refers to 1000 eyes of Indra. After Indra’s prayer Lord Shiva changed his 1000 Yoni signs into 1000 eyes.

In Tiruvarur area there is another Kannayiranathar temple in Tirukkaravasal where Siva is said to have appeared with 1000 eyes before Brahma and gave him back his power of creation. Brahma who oversees Creation in Hinduism briefly lost it due to his arrogance.

xxx

In the Rig Veda tenth Mandala 10-79-5 Agni is said to have 1000 eyes.

“This man who quickly gives him food, who offers his gift of oil and butter and supports him

Him with his 1000 eyes he closely looks on; thou showest him thy face from all sides, Agni”.

Moreover, we should not take the number 1000 literally. In 10-73-3 , Indra is said to have 1000 wolves or hyenas in his mouth.

“Thousand hyenas in thy mouth thou holdest, O Indra , mayst thou turn the Asvins hither”.

In 8-45-26

Indra is said to have 1000 arms.

In battle of a thousand arms Indra drank Kadru’s soma juice;

There he displayed his manly might.

In another hymn Varuna is said to have 1000 eyes.

In the most famous

Purushasukta hymn RV.10-90-1

“A thousand heads, a thousand eyes, a thousand feet;

On every side pervading earth He fills a space ten fingers wide”.

All these hymns show that 1000 means many or several or a lot of.

In Indra’s story also, I guess that he was given the tattoos on his body to show that he is in the register of sex offenders. Indian literature gives details about giving tattoos to criminals. In all the stories of the olden days they say ‘ the person was taken on a donkey after impressing his body with black dots and red dots’. This shows that such a tattooing custom was prevalent in the olden days. Indra might have got such tattoos after the Ahalya incident. At one stage it was removed after Indra apologising publicly in temples.

tags- Indra, thousand eyes, Signs, Rig Veda

LONDON CALLING (HINDUS) 4-10-2021 (Post No.10178)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,178

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

4-10-2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – PRAYER – Ms.Sobhika Murugesan

Talk on Saundarya lahari of Adi Shankara by Professor S.Padmanabhan, Senior Lecturer, Sanskrit Department, University of Jaffna, Sri Lanka – 25 minutes

(also trustee of two famous temples in Sri Lanka)

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  AND COMPOSER SRI MUTHUSWAMI DEEKSHITAR-12 mts

Muthuswami Dikshitar Composition – song by Mrs Ranjani Dasarathi, Chennai -7 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR.70 MINUTES

XXXXX

 tags- broadcast4102021

LONDON CALLING (TAMILS) 3-10-2021 (Post No.10,177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,177

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

3-10-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  Ms. NANDHINI ARUNRAJ, Madurai

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  DAKSHINESWAR KALI TEMPLE IN KOLKATA –  10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

Mrs Durga viswanathan 

Mrs Harini Natarajan 

Mrs Srividhya Sriram 

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY JEYASHRI

–25 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

–subham–

tags- broadcast3102021

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,176

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

இன்னொரு ‘சுவையான’ விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிக் வேதம் பற்றிச் சொல்லுகிறேன். எகிப்திய கலாசாரம் பற்றி இருபது முப்பது நூல்கள் என் வீட்டில் (லண்டனில்) இருக்கிறது அதில் THE BOOK OF DEAD ‘தி புக் ஆப் டெட்’ இறந்தோர் பற்றிய புஸ்தகம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. அதில் சொன்ன பல விஷயங்களை இறந்தவர்கள் வீட்டில் வாசிக்கும் கருட புராணத்துடன் ஒப்பிடலாம். இறந்தோர் ஆவி பாதாள உலகத்துக்குச் செல்லுவது, ஒரு ஆற்றைக் கட்டப்பது, முதலிய விஷயங்கள் அதில் வருகின்றன.

திருக்குறளில் பிறவிப் பெருங்கடலை நீந்துவது பற்றி வள்ளுவர் பத்தாவது குறளில் பாடுகிறார். ஆனால் சம்ஸ்கிருதம் முழுவதும் பிறவிப் பெருங்கடலை கப்பலிலோ அல்லது படகிலோ கடப்பது பற்றியே பாடுகின்றனர் ; வள்ளுவன் ‘பக்கா’ நீச்சல் பேர்வழி போலும்!

என் அம்மா இறந்து போன செய்தி, நான் லண்டனில் இருந்தபோது வந்தது. எல்லாக் கிரியைகளையும் வழக்கமான நாட்களில் முடியுங்கள்; நான் மூன்றாவது நாள் கிரியை முதல் கலந்து கொள்கிறேன் என்று டெலிபோனில் சொல்லிவிட்டு, விமானத்தில் பறந்தேன். எனக்காக அங்கேயுள்ள பிராமணர்கள் மூன்று நாள் கிரியைகளை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக செய்துவைத்தார்கள் . பெரும் வெளிநாட்டுத் தலைவர்கள் டில்லியில் வந்து இறங்கியவுடன் நமது தேசீய கீதத்தை முழு க்கவும் இசைக்காமல் சுருக்கமாக இசைப்பார்கள் ABRIDGED VERSION OF NATIONAL ANTHEM  ; அது போல எனக்கு சுருக்கமான மந்திரம்.

 13 நாள் கிரியைகளில் எந்த நாள் என்று நினைவில்லை. ஈமச் சடங்கு  செய்யும் இடத்தில் ஒருநாள் அந்த புரோகிதர்கள் வாழை இலை , அதன் மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிறிய கப்பலை , படகை செய்து வைத்திருந்தார்கள். துக்கமான ஒரு நிகழ்ச்சியிலும் என ஆர்வமும் ஆராய்ச்சியும் வெளிக்காட்டின .

சுவாமிகளே ! இது என்ன ஈமச் சடங்கில் கப்பல் பொம்மை எதற்காக? என்று கேட்டேன். அம்மாவின் ஆவி நதியைக் கடந்து போக வேண்டும் இல்லையா ? என்றார் புரோகிதர். இப்படி எகிப்திலும் சில விஷயங்கள் வருவது கண்டு வியந்தேன். அதை விட  வியப்பு .ரிக் வேதத்தில் நேற்று அந்த கப்பல் விஷயத்தை படித்தபோது ஏற்பட்டது:-

வேள்விக் கப்பல் உவமை – 10-44-6;

இறந்தவனுக்கான  கப்பல் 10-56-7; 10-58-5

விண்கப்பல் – 10-63-10;

புறநானூறு சொல்லும் வலவன் ஏவா வானவூர்தி PILOTLESS PLANE OR DRONE  ; கண்ணகியை ஏற்றிச் செல்ல கோவலன் கொண்டுவந்த விண்கப்பல் (காண்க- வஞ்சிக் காண்டம் -சிலப்பதிகாரம் ; ALSO வனபர்வம் -மஹாபாரதம் PILOTED SPEACE SHIP )

XXXX

10-59-7; 10-58-5;

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பிராமணர்கள் ஈமச் சடங்கில் ஓதும் மந்திரங்களில் 3 விஷயங்கள் வருகின்றன.

1.இறந்தவர்களின் ஆவி ஒளி ரூபத்தில் பயணம் செய்வது

2.கப்பலில் சென்று கரைகடப்பது ; சில நேரங்களில் விண்கப்பல்- சில இடங்களில் கடல்- கப்பல்

3.மீண்டும் வருக என்று ஆவியை அழைப்பது (மறு  பிறப்பு)

அர்ஜுனனை மாதலி என்பற பைலட் / PILOT OF SPACE SHIP விண்வெளி விமானி , இந்திரலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காட்சி மஹாபாரத வன பாவத்தில் வருகிறது. அங்கு ஒளி ரூபத்தில் பலர் உலவுவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சர்யத்துடன் வினாத் தொடுக்கிறான்.

அதற்கு அர்ஜுனனுக்கு PILOT OF SPACE SHIP MR MATHARI/ LI ஸ்பேஸ் ஷிப் பைலட் மாதரி பதில் கொடுக்கையில் “இவர்களைத்தான் நீங்கள் பூமியில் நட்சத்திரங்களாகப் பார்க்கிறீர்கள்” என்கிறான். இதை என்னால் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியாது. ஆயினும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் எல்லோரும் நடசத்திரத் துகல்களில் இருந்து பிறந்ததை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். (WE ARE ALL STAR DUST)  இதை பி பி.சி ஸ்கை அட் நிகழ்சசியில் பிரிட்டிஷ் ஆஸ்தான விண்வெளி அறிஞர் பாட்ரிக் மோர் (PATRICK MOORE , SKY AT NIGHT, BBC) சொன்னபோது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே ! இது மஹாபாரத  வன பர்வத்தில் உள்ளதே என்று  (இது பற்றி முன்னரே இங்கு நிறைய எழுதியுள்ளேன் )

XXXX

பிராமணர்  வீட்டில் நடுகல்

எனக்கு மிகவும் சின்ன வயது; அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது மட்டும் காதில் விழுந்தது; கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. தாத்தா இறந்து போனார், அவருடைய ஆவிக்கு இருட்டுப் பாதையில் வழி    காட்டுவதற்காக, நாங்கள் பேரப் பிள்ளைகள், நெய் பந்தத்தை ஏந்தி நிற்க, கோவிந்த கோவிந்த என்ற முழ க்கத்துடன் XXXXXX தூக்கினர் (அமங்களச் சொற்களை எழுதக் க கூடாது); சுடுகாட்டுக்கும் அப்பாவுடன்  போனேன்; தகனக் கிரியை முடிந்தது. வயதான தாத்தாதான். அப்படியும் என் அப்பாவின் கண்ணில் சிறு துளிகள் வழிந்தன. அந்த துக்ககதர நிகழ்ச்சியில் அந்த வெட்டியான் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.

“சாமி, ஒரு கவலையும் இல்லாமல் போங்க சாமி. நாளைக்கு காலைல வாங்க; மல்லி கைப் பூப் போல சாம்பல் (அஸ்தி) தரேன்”. என்ன தொழில் சுத்தம் பாருங்கள். அவன் தொழில் சடலத்தை எரிப்பது; சாம்பல் தருவது ; அதிலும் அவன் 100 சதவிகித பெர்பெக்ஷன் CENT PERCENT PERFECTION IN HIS JOB பற்றிப் பேசுகிறான் !!

மல்லிகைப்  பூ போல தாத்தா சாம்பல் !!!

சப்ஜெக்டுக்கு வருகிறேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் பேசியது :

கல்லை எங்கே புதைப்பது?

என்ன கல் ? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நாங்கள் வசித்ததோ மதுரை வடக்கு மாசி வீதியில் 20ம் எண் வீடு; பைரவப் பிள்ளைக்குச் சொந்தமானது; நாங்கள் பணக்காரர் அல்ல. வாடகைவீட்டில் எங்கே கல் புதைப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதற்கு எப்போது அர்த்தம் புரிந்தது தெரியுமா?

லண்டனிலிருந்து பறந்து சென்று என் அம்மாவின் ஈமக்ரியைகளில் கலந்து கொண்டது பற்றிச் சொன்னேன் அல்லவா? அங்கும் ஒரு கல்லை வைத்து பல நாள் மந்திரங்கள் சொல்லி அந்த சடங்குகள் நடந்த இடத்திலேயே என் அண்ணனை கொண்டு புதைக்கச் சொன்னார் சாஸ்திரிகள் (வீட்டுப் புரோகிதர்); அதுவரை நான் நடுகல் (HERO STONES)  புதைக்கும் வழக்கம் பழந்தமிழர் இடையே மட்டும் இருந்தது என்று எண்ணி இருந்தேன். நடுகல் பற்றி இரண்டு தொல் பொருட் துறை புஸ்தகமும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நடுகல் நம் இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது- அதை கிறிஸ்தவர்கள் (EPITAPH IN BURIAL GROUNDS) , முஸ்லீம்களும் பின்பற்றி இறந்தோர் இடத்தில் கல் புதைக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது..

XXX

ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளை மட்டும் காண்போம்:

10-15-3

நான் கருணைமிக்க பிதாக்களை (இறந்து போன முன்னோர்கள்) – அடைந்தேன் . நான் விஷ்ணுவிடமிருந்து புதல்வனையும், வம்ச விருத்தியையும் பெற்றேன்; சோம ரசத்தைக் குடித்து இன்புறும் அவர்கள் இங்கே –  பூமிக்கு– அடிக்கடி வருகிறார்கள்; இந்த தர்ப்பைப் புல்லின் மீது அமர்கிறார்கள்.

திருக்குறள்

10-15-6

இங்கே கால்களை மடித்து தெற்குப் பக்கத்தில்  உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்த அவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் . பிதாக்களே ; மனிதர்களின் பலவீனம் காரணமாக நாங்கள் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால் அத்தற்காக எங்களைத் தண்டித்துவிடாதீர்கள் .

இறந்தோர் தென் திசையில் வாழ்வதை வள்ளுவரும் தென்புலத்தார் என்று குறிப்பிடுகிறார்.(குறள் 43)

அவி /ஹவிஸ் HAVIS  என்பதையும் 259, 413 குறள்களில் பயன்படுத்துகிறார்.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச்  சொற்களை முதல் 50 குறள்களில் வள்ளுவர் அள்ளித் தெளிக்கிறார். பிற்காலத்தில் சில திராவிடங்கள் உளறிக்கொட்டி கிளறி மூ டும் என்பதை அறிந்து ரிக் வேதச்  சொற்களான ஹவிஸ், தென்புலத்தார், அமிர்தம், தெய்வம்  ஆகியவற்றையும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

மேற்கூறிய குறிப்புகள் மறு  உலகம் ஒன்று உண்டு, அது தென் திசையில் இருக்கிறது; அங்குள்ள நம் முன்னோர்கள், நாம்  அழைக்கும்போது பூமிக்கு வந்து நெய் கலந்த சோற்று உருண்டை/ ஹவிஸ், எள் , நீர் ஆகியவற்றை ஏற்பது தெரிகிறது. பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 24 முறை- அதிகமாக 94 முறை – இப்படி இறந்துபோன முன்னோர்களை வீட்டுக்கு அழைத்து  எள்ளும் நீரும் இறைப்பதைக் காணலாம். (நான் லண்டனிலும் இதைச் செய்கிறேன்; ஹவிஸ் மட்டும் திதி என்று வருடத்துக்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. முற்காலத்தில் இதை மக்கள் தினமும் செய்தனர் என்பது குறள் 43ல் வரும் பஞ்ச யக்ஞம் மூலம் வெளிப்படுகிறது.

தொடரும்…………………….

tags– புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை ,

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 1 (Post No.10,175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,175

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 4-10-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

பாரத பூமி இசை பூமி; சங்கீத பூமி: நமது வேதங்களிலேயே இசை பற்றிய விவரங்கள் ஏராளம் உண்டு. சாம வேதம் கூறும் நுட்பங்களை நாம் நன்கு அறிவோம். இந்த இசையை ஓங்கி வளரச் செய்ய மூன்று மூர்த்திகள் பாரதத்தில் சமீப காலத்தில அவதரித்தனர். சங்கீத மும்மூர்த்திகள் என்று உலகம் கொண்டாடும் அவர்கள் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆவர்.

இவர்களுள் ராகத்திற்கு தியாகராஜ ஸ்வாமிகளையும்  பாவத்திற்கு முத்துசாமி தீக்ஷிதரையும் தாளத்திற்கு சியாமா சாஸ்திரிகளையும் கூறி சங்கீத உலகம் புகழ்ந்து கொண்டாடும்.

தீக்ஷிதர் அவதரித்த குடும்பம் இசை ஞானத்தில் மேன்மையான ஒரு குடும்பமாகும்.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் வீணை வாசிப்பதில் வல்லுநர். தீக்ஷிதர் உபயோகப்படுத்திய வீணை இன்றும் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் அழகுறப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல கீர்த்தனைகளில் அவருக்கு விசேஷமாகப் பிடிக்கும் வீணையும் இடம் பெறுவதில் வியப்பில்லை.

இந்தச் சிறிய வீணை மீது சம்ஸ்கிருதத்தில் ராம என்ற எழுத்துக்கள் உள்ளன. இந்த வீணை அவருக்குக் கிடைத்தது பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. அதை இந்த உரையின் பின்னால் காண்போம்.

அவர் ஸ்ரீபுரம் என்றும் ஹ்ருத் கமலாபுரம் என்றும் சிறப்புற அழைக்கப்படும் திருவாரூரில் 1775ஆம் ஆண்டு மன்மத வருடம் பங்குனி மாதம் 24ஆம் நாள் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். அன்று திருவாரூர் தியாகராஜாவின் வஸந்தோத்ஸவ தினம்! கர்நாடக சங்கீதத்திற்கான க்ஷேத்திரம் என திருவாரூரை சிறப்பித்துக் கூறுவர்.

வடக்கே முகலாயர் ஆட்சி சொல்லொணாத் துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தவே ஏராளமான குடும்பங்கள் புலம் பெயர்ந்து தெற்கு நோக்கி வந்தன. அப்படிப்பட குடும்பங்களில் ஒன்று காஞ்சிபுரத்திற்கு அடுத்த விரிஞ்சிபுரத்திற்கு வந்தது. அங்கிருந்து அது திருவாரூருக்குக் குடியேறியது. அந்தக் குடும்பத்தில் ராமசாமி தீக்ஷிதர் என்ற பெயருடன் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்தக் காலத்தில் முத்து வேங்கடமகி என்பவர் சங்கீதத்தில் மேன்மை பெற்றிருந்தார். அவரிடம் ராமசாமி தீக்ஷிதர் நன்கு பயின்று நல்ல வித்வான் ஆனார். இவரே ஹம்ஸ்த்வனி என்று அனைவராலும் அறியப்படும் ராகத்தை உருவாக்கியவர் ஆவார். வேங்கடகிருஷ்ண என்ற முத்திரையை வைத்து 44 ராகங்களில் அன்னை  மீனாட்சியம்மன் பேரில் ஒரு ராகமாலிகை கீர்த்தனையையும் இவர் செய்துள்ளார்.

ராமஸ்வாமி தீக்ஷிதருக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற மனக்குறை இருந்தது. அவர் வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்கு வாலாம்பிகா, வைத்தீஸ்வரன், முத்துக்குமரன் ஆகிய மும்மூர்த்திகளின் சந்நிதியில் நாற்பது நாள் உபவாசமிருந்து வந்தார். உபவாசம் முடிந்த நாளன்று வாலாம்பிகா அவரது கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றைக் கொடுத்து விட்டு மறைந்தாள். முத்து முத்தாக முத்துமாலையாய் கீர்த்தனங்கள் தொடுக்கப் போகும் ஒரு குழந்தையை அவருக்குத் தந்து அருள் பாலிப்பதாக அம்பிகை அந்த முத்து மாலை மூலம் தனது சூசகக் குறிப்பைச் சொன்னாள் போலும்! அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு முத்துஸ்வாமி என்ற பெயரைச் சூட்டினார். அதற்குப் பிறகு அவருக்கு  சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என்று இருவர் அவருக்குப் பிறந்தனர்.

மணலியிலிருந்து முத்து கிருஷ்ண முதலியார் என்று ஒருவர் ஒருசமயம் திருவாரூருக்குத் தரிசனத்திற்காக வந்தார். அவர் திரும்பும் போது தன்னுடன் ராமஸ்வாமி தீக்ஷிதரின் குடும்பத்தை மணலிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வேங்கட கிருஷ்ண முதலியாராலும் அவரது தம்பி சின்னையா முதலியாராலும் ராமஸ்வாமி குடும்பத்தினர் நன்கு ஆதரிக்கப்பட்டு வந்தனர். சின்னையா முதலியார் மீது தனது நூற்றெட்டு ராகதாள மாலிகையைப் பாடி ராமஸ்வாமி தீக்ஷிதர் கனகாபிஷேகம் பெற்றார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

#

ஒரு சமயம் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் தம்பியான சின்னஸ்வாமிக்கு கண் பார்வை மங்கிப் போக ராமஸ்வாமி தீக்ஷிதர் திருப்பதி சென்று வேங்கடாஜலபதி முன்பு நின்று வேகவாஹினி ராகத்தில் ஆரம்பித்து நாற்பத்தெட்டு ராகங்கள் பாடி சின்னஸ்வாமிக்குப் பார்வையை மீண்டும் பெற்றார். இப்படிப்பட்ட பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் தீக்ஷிதர் வளர்ந்து வரும் போது ஒரு நாள் சிதம்பரநாத யோகி என்பவர் தீக்ஷிதரைப் பார்த்து அவரைத் தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அவரை குருவாகக் கொண்டார் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

சிதம்பரநாத யோகியுடன் வாரணாசிக்குச் சென்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவரிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசம் பெற்றார். அத்துடன் யோகா, வேதாந்த சூத்ரங்கள், இசை நுட்பங்கள் ஆகியவற்றையும் சிதம்பரநாத யோகி அவருக்குப் போதித்து வந்தார். ஒரு நாள் அவர் தீக்ஷிதரை கங்கையில் குளிக்குமாறு கூற தீக்ஷிதரும் கங்கையில் மூழ்கினார். அவர் வெளியே வந்த போது கங்கையிலிருந்து அவர் எடுத்து வந்த அழகிய வீணை ஒன்று அவர் கையில் இருந்தது. அதில் இருந்த ராம என்ற அக்ஷரங்களைப் பார்த்த குரு மனம் மிக மகிழ்ந்தார். தீக்ஷிதரை அவர் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் அவர் கங்கையில் மூழ்கினார். வெளியே வரவில்லை. கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு கங்கையுடனேயே கலந்தார் அவர்.  

– தொடரும்

tags – முத்துசாமி தீக்ஷிதர்

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!(Post No.10,174)

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!    (Post No.10,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,174

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்முடைய பிளாக் Blog கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் ஒருவர் வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை பற்றி இல்லையாமே, இவை எல்லாம் புத்த, ஜைன மதத்திலிருந்து வந்ததாமே ! இது உண்மையா என்று கேட்டிருந்தார் .

சுருக்கமான பதில்- ரிக் வேதம் உலகில் பழமையான புஸ்தகம். அதிலேயே இந்தக் கருத்துக்கள் உள்ளன.அதைத் தொடர்ந்து வந்த பிராமணங்கள் என்னும் நூல்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவற்றில் தெள்ளத் தெளிவாக, ஐயம் திரிபற, இந்த விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் புத்த, ஜைன மதநூல்களுக்கு முற்பட்டவை என்பதைத் ‘தள்ளிப்போன வெள்ளைக்காரர்களும்’ ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை இந்து மதத்திலிருந்து ஏனைய கீழ்த்திசை மதங்களுக்கு — அதாவது இந்து மதத்தின் கிளை மதங்களுக்குச் சென்றன என்பதே உண்மை.

முதலில், காலக் கணிப்பை எடுத்துக்கொள்வோம். நமது பஞ்சாங்கமும் மத நூல்களும் சொல்லும் கருத்துக்களை ஏற்காத– எதிர்த்துப் பேசுவோர்– சொல்லும் கருத்துக்கள் இவை என்பதை முதலில் நாம் மனதிற் கொள்ளவேண்டும் ;  நமது பஞ்சாங்கங்கள் கி.மு 3102-ல் கலி யுகம் துவங்குவதாகச் சொல்லுகின்றன சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. அதன்படி பகவத் கீதை அதற்கு முந்திய நூல். அதில் இரண்டாவது அத்தியாயத்தில் மறு பிறப்பு, கர்ம வினை என்பன தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஒரு வேளை கீதையின் காலத்தைச் சந்தேகிப்பவர்கள், வேறு சில ஆதாரங்களைக் கேட்கலாம். பிருஹத் ஆரண்யக உபநிஷத் மற்றும் சதபத பிரா(ஹ்)மணம் முதலிய நூல்களில் இருப்பதை வெளிநாட்டோரும் ஒப்புக் கொள்வதோடு அந்த நூல்களுக்கு கி.மு.850 அல்லது 800 என்றும் தேதி குறித்துவிட்டனர். அப்படிப்பார்த்தாலும் புத்தர், மஹாவீரர் முதலியோருக்கு முன்னரே இது எழுத்து வடிவில் வந்து விட்டது.

ரிக் வேதத்தில் உள்ளது

இந்து மத நூல்கள் பெரிய சமுத்திரம் போல விரிவானவை ; எவரேனும் அவை முழுவதையும் படித்திருக்க முடியுமா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்லுவேன். ஆனால் ஏனைய மத நூல்களை ஒரே நாளில் பிடித்துவிடலாம். மேலும் நமது நூல்கள் மிகவும் அப்டேட் Update  ஆனவை. வேதம் தவிர மற்ற எல்லா நூல்களையும் நம் முன்னோர்கள் Update அப்டேட் செய்துள்ளனர்- புதுமைப்படுத்தியுள்ளனர். சில விஷயங்களை விளக்கத்துக்காக சேர்த்துள்ளனர். வெளிநாட்டார் கடைசியில் சேர்க்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து தேதி குறிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்கள், அதில் சொல்லிய கருத்துக்களை நம்பாதவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களை அப்பணியில் பணம் கொடுத்து  ஈடு  படுத்தியவர்கள் ‘கிறிஸ்தவ மத கொள்கைகளை வலியுறுத்த உம்மை இப்பணியில் நியமித்துள்ளோம்’ என்றும் எழுத்து வடிவில் எழுதியும் வைத்துவிட்டனர். நம் வீட்டு எதிரி– குடும்ப எதிரி — நம் குடும்பத்திலுள்ளோர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னால் நாம் உடனேயே அவைகளை உதறித் தள்ளிவிடுவோம். அது போல எதிரிகளின் கருத்தை ஏற்க வேண்டியது இல்லை.

அது சரி, ஒரு இந்து மத அன்பர், உண்மையிலேயே இது பற்றி தெரிந்து கொள்ள நம்மை அணுகினால் நாம் என்ன சொல்லுவோம்? இதோ பதில்.

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மரணம், இறுதிச் சடங்கு, மக் கிரியைகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. அவற்றில் இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. இந்த மந்திரங்களை இன்றும் ஒருவர் இறந்தபின்னர் முதல் 13 நாட்களின் சடங்குகளில் பிராமணர்கள், பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஈமக் கிரியை விஷயங்களை எவரும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொவதில்லை. ஆனால் மிகவும்  வியாப்பான விஷயம், ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பாடும் பாட்டுக்களில் கூட  இந்தக் கருத்துக்கள் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

ரிக்வேத மந்திரங்களில் நுழைவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஓரிரு விஷயங்களை சொல்லுகிறேன்.. முப்பது வருடங்களுக்கு முன்னால் — அதாவது 1987ல் பிரிட்டிஷ் அரசு என்னை லண்டனுக்கு பி.பி.சி . தமிழோசை ஒலிபரப்புக்கு அழைத்ததற்கு முன்னால்— நான் மதுரை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ் (மாவட்டச் செயலர்) பொறுப்பில் இருந்தேன். மேலூர், உசிலம்பட்டி , திருமங்கலம், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் முதலிய இடங்களுக்குச் சென்று ஆர். எஸ்.எஸ். கிளைகளைத் துவக்குவது, கூட்டங்களில் பேசுவது முதலியன வழக்கமான பணிகள் . ஒருமுறை உசிலம்பட்டி சென்றபோது பஸ் நிலையத்தில் பஸ்  நின்றவுடன் ஜன்னல் வழியாக கையை நுழைத்து காசு கேட்டு நச்சரித்தவன் கையில் ஒரு சிப்பலா க்கட்டையை வைத்து அடித்துக் கொண்டு பாடிய பாடல் என்னை அசத்திவிட்டத்து ; உபநிஷத்திலும் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் சொல்லும் கருத்துக்களை அவன் நாட்டுப்புற பாடலாகப் பாடுகிறான். கையில், பையில் இருந்த பணத்தில் ஊர் போய்ச்  சேரத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு  மிச்சத்தை அவன் கையில் போட்டேன் .

Xxx

லண்டனில் நான் BBC பி.பி.சி ஒப்பந்த வேலை பார்த்தது ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அதற்குப் பின்னர்  நான் பார்த்த பகுதி நேர வேலையில் ஒன்று, பிரபல ஆஸ்பத்திரியொன்றின் மொழிபெயர்ப்பாளர் வேலை. அதில் ஒரு புற்று நோய் நோயாளி இறக்கப்போகிறார் என்பதை அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அறிவிக்கும் நாள் வந்தது. இங்கெல்லாம் இவ்விஷயத்தை பட்டவர்த்தனாமாக்ச் சொல்லி விடுவார்கள். ஆனால் பக்குவமாக, சுற்றிவளைத்து, ஒரு மணிநேரம் பேசிவிட்டு, மிகவும் அழகாகச் சொல்லுவார்கள். அந்த SPECIALIST NURSES ஸ்பெஷலிஸ்ட் நர்ஸுகள்  இருவர், முதலில் குடும்பத்தினரை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி உயில் முதலியவற்றை எழுதச்  சொல்லுங்கள், அவருக்குக்ப் பிடித்த விஷயங்களைக் கேட்டு அதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் விக்கி விக்கி அழுதனர்.

பிறகு நோயாளியிடம் வந்து ஒரு அரை மணிநேரம் பேசிய பின்னர் விஷயத்தை உடை த்தோம் . அவர் அழ வும் இல்லை ஷாக் ஆகவும் இல்லை. “ஆமாம், ஆமாம், காடு வா,வா என்கிறது ;வீடு போ, போ, என்கிறது; போகத்தா னே வேண்டும்; எல்லாம் முடித்துவிட்டேனே” என்றார் . அவர் சொன்னதை நான் அ ப்படியே மொழி பெயர்த்துச் சொன்னேன். நர்ஸுகள்  லண் டன் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை . ஆள் மூளை குழம்பிவிட்டதோ என்று என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சுருக்கமாக வானப்பிரஸ்தம் என்னும் இந்துக்களின் மூன்றாவது கட்டத்தைச் சொல்லி வயதான இந்துக்கள் இதை அடிக்கடி வீட்டில் சொல்லுவார்கள். அவரும் மரணத்தை எதிர்கொண்டு மறு உலகத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று.

அந்த வெள்ளைக்கார நர்ஸுகளுக்கு எவ்வளவு புரிந்ததோ கடவுளுக்கே வெளிச்சம். உசிலம்பட்டி பஸ்  நிலைய பிச்சைக்காரனோ இறந்து போன புற்று நோய்காரனோ  பகவத் கீதையையோ பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தையோ படித்திருக்க மாட்டார்கள். ஆனால்  அவர்களுடைய மரபணுவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊன்றிய வேத தத்துவங்கள் வெளிப்படுகின்றன என்றே நான் சொல்லுவேன்.

மரணம் தொடர்பாக உள்ள மந்திரங்களை வெள்ளைக்கார்களும் கூட விளக்காமல் அப்படியே மொழி பெயர்த்துவிட்டனர். நான் ரிக் வேதத்தில் 9000 மந்திரங்களுக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் சுமார் 1000 மந்திரங்களே பாக்கி. இதுவரை படித்த ஈமச் சடங்கு மந்திரங்களுக்கு பல இடங்களில் அர்த்தம் புரிவதில்லை.  பல மர்மமான புரியாத விஷயங்களைப் பேசுகினன்றனர் . ஆகவே இந்து மதம் பற்றிப் பேசுவோர் அதை முழுமையாக அறியவில்லை .

எங்கள் வீட்டுக்கு வாரம் தோறும் பிச்சை எடுக்க ஓர் நாமம் போட்டவர் வருவார். இராமனின் பெயரைச் சொன்னால் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே என்ற கம்ப ராமாயணப்  பாடலை வாசலில் நின்று பாடுவார். உடனே சகோதரர்களில் ஒருவர் ஓடிச் சென்று அவர் பாத்திரத்தில் ஒரு பிடி அரிசி அல்லது ஒரு அணா காசு போடுவோம். கொஞ்சம்  தாமதமானால் அவர் அந்தப்பாடலை உரத்த குரலில் பாடி எங்களை மிரட்டுவார். நாங்கள் அண் ணன் தம்பி களுக்குள் ஜோக் அடித்துக் கொள்ளுவோம்; ஏய் , அதிகார ப் பிச்சைக்காரன் வந்துட்டான் ; அவன் அதிகாரம் செய்து அதட்டுவதற்குள் காசு போடுவோம் என்று பேசிக் கொள்வோம். அவர் பாடிய இராமன் என்னும் இரண்டு எழுத்தினால் ஜென் மமும் மரணமும் இன்றித் தீருமே என்பது இன்றும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. யார் இவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய தத்துவங்களைச்  சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தில் யார்  ஏற்றிவிட்டார்கள் ?

அமிர்தம்

காலா காலமாக நாம் நம்பும் விஷயங்கள் இவை. இதற்குப்  பெரிய ஆதாரம் “அமிர்தம்” என்ற சொல்லில் இருக்கிறது. இந்த சம்ஸ்கிருதகி  சொல் சங்க இலக்கியத்திலும் உளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய இந்தச் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான முறைகள் வரும்.

 இந்த அமிர்தம் என்பது என்ன காட்டுகிறது? மரணமில்லாப் பெரு வாழ்வு தரக்கூடியது அமிர்தம்.

எங்கே? இறைவனின் திருப்பாதத்தில் அல்லது சொர்க்கத்தில். அது கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்ற கருத்து ரிக் வேதம் முழுதும் இந்தச்  சொல்லால்  எதிரொலிக்கப்படுகிறது.

TO BE CONTINUED……………………

XXXXX

  tags –புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை,  ,ரிக்வேத,ம் 

RARE PICTURES OF HINDU GODS IN DACCA MUSEUM, BANGLADESH- 3 (Post No.10,173)

KALYANASUNDARA IMAGES IN BANGLADESH

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,173

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING ARE THE PICTURES OF IDOLS AND STATUES OF HINDU GODS IN DACCA MUSEUM. THIS IS FROM A BOOK PUBLISHED IN 1929 ,AVAILABLE NOW IN THE SOAS LIBRARY,  UNIVERSITY OF LONDON. I USED ‘I PAD’ TO TAKE THESE PICTURES.

BOOK TITLE

ICONOGRAPHY OF BUDDHIST AND BRAHMANICAL SCULPTURES IN THE DACCA MUSEUM BY

NALINI KANTA BHATTASALI, DACCA, 1929

PART 3 – SURYA AND GODDESSES

ALINGHANAMURTI IMAGES
AGHORA
KARTIKEYA, SURYA
ALL THE ABOVE ARE SURYA SCULPTURES
SARASVATI
ALL THE ABOVE ARE GAURI IMAGES
DANTURA
MAHAMAYA

TAGS- – DACCA MUSEUM-3, GODDESSES, SURYA, ALINGHANA MURTI, KALYANASUNDARA, DANTURA, MAHAMAYA, GAURI, SARASVATI, MAHISASURAMARDHANI

கல்கத்தா காளி! ஆலயம் அறிவோம்! (Post No.10,172)

DAKSHINESWAR KALI TEMPLE

KOLKATA KALI TEMPLE

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,172

Date uploaded in London – –   4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 3-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கல்கத்தா காளி!

யாதுமாகி நின்றாய் -காளி – எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் – காளி – தெய்வலீலை அன்றோ?

பூதம் ஐந்தும் ஆனாய் -காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்

போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்

மஹாகவி பாரதியார் திருநாமம் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக அமையும், கல்கத்தாவில் உள்ள காளி கோவில் ஆகும். ஆதி கங்கா என்று அழைக்கப்படும் பாகீரதி நதிக் கரையில் உள்ள காளிகட்டில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இது இப்போது ஜனசந்தடி மிக்க டாலிகஞ்ச் பகுதி என அழைக்கப்படுகிறது. காளிகாட் அல்லது காளிகட்டா என்பதிலிருந்தே தான், கல்கத்தா என்ற பெயர் அமைந்ததாகக் கூறப்படுகிறது. பார்வதி தேவியின் அங்க பாகங்கள் பாரதெமெங்கும் விழுந்த சமயத்தில் அவளது வலது காலின் விரல்கள் காலேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் தான் விழுந்தது. இங்கு உக்கிர வடிவில் கொலுவீற்றிருக்கும் அன்னை பார்வதி தேவி, காளி என்று அழைக்கப்படுகிறார். க்ஷேத்ரபாலகரான சிவபிரான், நகுலேஷ்வரர் என்றும் அழைக்க்கப்படுகிறார்.

காளியின் இடது மேற்கரத்தில் மகா பத்ராத்மஜன் என்னும் வாள் உள்ளது. கீழ்க்கையில் இரத்தம் சொட்டும் அசுரனின் தலை உள்ளது. வலது மேற்கரத்தில் அபய முத்திரையும் கீழ்க் கரத்தில் வர முத்திரையும் தாங்கி அன்னை அபயமளிக்கிறாள். கருமை நிறத்தில் மண்டை ஓட்டு மாலை அணிந்து அசுரனை வதம் செய்து உக்கிரத்துடன் திரும்பி வந்த அன்னையை யாராலும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் சிவபிரான் வழியில் குறுக்காகப் படுத்தார். அவர் மேல் கால் இடறி விழவே தன் தவறை எண்ணிய அம்மன் தன் நாக்கைக் கடிக்கவே அந்த நிலையே காளி வடிவமானது. இவள் சம்ஹார நாயகி என்பதால் மூன்று கண்களுடன் தோற்றம் தருகிறாள். காளியில் கழுத்தில் உள்ள 51 கபால மாலை கோடானு கோடி மந்திரங்களுக்கு ஆதாரமான 51 மாத்ருகா அக்ஷரங்கள் ஆகும்.

இந்தத் தலத்தைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. மஹரிஷி கபிலர் இங்கு கங்கா சாகர் எனப்படும் கங்காநதி, வங்கக் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் வசித்து வந்தார். சில காபாலிகர்கள் அவரைத் தரிசிக்க அங்கு வரும் போது வழியிலே ஒரு அதிசய பாறை காளி வடிவில் தென்பட்டது. அவர்கள் நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து வழிபடலாயினர். அதுவே இன்று நாம் காணும் காளிகட்டில் உள்ள காளி சிலை.

இன்னொரு வரலாறும் உண்டு. ஆத்மாராம் என்று ஒரு தேவி உபாசகர் இருந்தார். அவர் ஒருநாள் மாலை நேரத்தில் தனது ஜெபம், பூஜையை முடித்த போது கண்களைப் பறிக்கும் ஒரு ஒளி தோன்றியது. மறுநாள் காலை அவர் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு பாகீரதி ஆற்றின் அடியில் மனிதக் கால் விரல்கள் போல வடிவமைக்கப்பட்ட ஒரு கல் இருந்ததைக் கண்டார். அதுவே பார்வதி தேவியின் விரல்கள் என எண்ணிய அவர் அதை ஸ்தாபித்து பூஜை செய்து வரலானார். அதுவே மஹாசக்தி பீடமாயிற்று. கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. அதுவே நகுலேஷ்வர பைரவர் என்ற நாமத்துடன் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. விரல்கள் போலக் காணப்பட்ட அந்தக் கல் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு காளி சிலையின் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்கத்தா காளி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள இன்னொரு காளி கோவில் ஆகும். ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கும் தெய்வம் காளியின் ஒரு அம்சமான பவதாரிணி ஆகும். இங்கு தான் இந்த தேவியை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பூஜை செய்து வந்தார். 1847ஆம் ஆண்டில் ஜமீந்தாரிணியாக இருந்த ராணி ராஸமணி தேவியார் காசிக்கு யாத்திரையாகச் செல்ல விரும்பினார். 24 படகுகளில் சுற்றம் சூழ அவர் கிளம்பத் தயாராக இருந்த போது முதல் நாள் அவர் கனவில், அவர் அங்கு வரத் தேவை இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கு அழகிய கோவிலை நிர்மாணிக்குமாறும் கூறி அருள் பாலித்தாள் அம்பாள். உடனே அப்படி ஒரு கோவிலை அவர் நிர்மாணித்தார். இந்தக் கோவில் ஒன்பது விமான அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஆற்றங்கரையில் சிவனுக்கு பன்னிரண்டு சிறு கோவில்கள் அமைந்துள்ளன.

அங்கு பூஜை செய்து வந்த பரமஹம்ஸரின் தமையனார் காலமாகவே அந்த பதவி பரமஹம்ஸருக்குத் தரப்பட்டது. இந்தக் கோவிலில் தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் தரிசனத்தைப் பெற்றதோடு காளியுடன் நேருக்கு நேர் பேசும் பேரருளையும் பெற்றார். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் பரமஹம்சரைச் சந்தித்து அருள் பெற்றார். இங்கு தான் துறவியாக ஆக வேண்டும் என்ற முடிவை ஸ்வாமி விவேகானந்தர் எடுத்தார். உலக பிரசித்தி பெற்ற ராமகிருஷ்ண மடத்தைப் பின்னால் அவர் இங்கு தான் ஸ்தாபித்தார். வங்காளத்தில் மிகவும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும் நவராத்திரியின் போது வெகு விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்க்கா மாதாவின் அருளைப் பெற வழி வகுக்கும் இந்த பூஜை இன்றளவும் வங்காளத்திலும் பாரதத்தின் இதர பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! 

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கல்கத்தா மஹாகாளியும் நகுலேஷ்வரரும் தக்ஷிணேஸ்வர பவதாரிணியும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மஹாகவி பாரதியாரின் அருள் வாக்கு இது:                    காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்                வேளையொத்த விறலும் பாரில் வேந்தர் ஏத்தும் புகழும்                     யாளியொத்த வலியும் என்றும் இன்பம் நிற்கும் மனமும்                       வாழி! ஈதல் வேண்டும் – அன்னாய் – வாழ்க, நின்றன் அருளே   

                               நன்றி வணக்கம்!             

 ***

tags – கல்கத்தா, காளி, தக்ஷிணேஸ்வர, கோவில்