Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இப்போது ஏராளமான சித்திரப் படைக்கதைகளும் அதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களும் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டது. SPIDER MAN /ஸ்பைடர் மென், SUPER MAN /சூப்பர்மேன், PHANTOM/ பேண்ட்டம் முதலிய கற்பனை உருவங்களை அறியாதோர் எவருமிலர். அந்த கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கும் பொம்மைகளும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் பொறித்த ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகள் செய்யும் சாகஸங்களைக் கண்டு, மகிழ்ந்து, பெற்றோர்கள் அவர்களைப் புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் அறிந்த கார்ட்டூன் கதாபாத்திரம் TARZAN டார்ஜான் ஒருவன்தான்.
இந்த டார்ஜான் என்னும் கார்ட்டூன் ஆளை உருவாக்கிய அமெரிக்க விசித்திரக் கதை எழுத்தாளர் EDGAR RICE BURROUGHS எட்கர் ரைஸ் பர்ரோஸ் ஆவார். அவருடைய கதையே சுவையான கதை.
பர்ரோஸ் , அமெரிக்காவில் சிகாகோ நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்த பெரிய அதிகாரி. ராணுவத்தில் எவ்வளவு கட்டுப்பா டு உண்டோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வீட்டிலும் எதிர்பார்ப்பவர். கட்டு திட்டங்களுக்கு இடையே வளர்ந்த பர்ரோஸ் , சிகாகோவில் (சரியான உச்சரிப்பு ஷிகாகோ) ஹார்வர்ட் பள்ளியில் ரோமானிய ,கிரேக்க வரலாற்றைப் படித்தார். அதில் வரும் வீரர், வீராங்கனைகளை போற்றி மகிழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அவருடைய சகோதரர் வைத்திருந்த மாட்டுப் பண்ணைக்கு (Cattle Ranch) பர்ரோஸ் அனுப்பப்பட்டார். ஆங்கில திரைப்படங்களில் வைல்ட் வெஸ்ட் WILD WEST படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும்; இருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் காரசாரமாக வாக்குவாதம் வந்தால் ஒருவர் தன் துப்பாக்கியை உருவி ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவான். அவ்வளளவு கரடு முரடான வாழ்க்கையுடையது அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாட்டுப் பண்ணைகள். அவர்களை COWBOSY ‘கவ் பாய்’ என்று அழைப்பர் .அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த பின்னர் புகழ்பெற்ற ராணுவ அகாடமியில் பர்ரோஸ் சேர்ந்தார்.
அங்கே அவரை சரியான சோம்பேறிப்பயல் இவன் என்று சொல்லி பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டனர் . பின்னர் மிச்சிகன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்று அமெரிக்க ராணுவத்தில் பர்ரோஸ் சேர்ந்தார். அவரை அப்பாச்சி APACHEES என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களை சுட்டுத்தள்ள அரிசோனா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிகாகோவுக்குத் திரும்பிவந்து பேனா , பென்சில் , காகிதம் விற்கும் தொழிலில் இறங்கினார். பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.
36 வயதானபோது அவருக்கு திடீரென்று எழுதத் துவங்கினார். விஞ்ஞான புனைக்கதைகளை SCIENCE FICTION வெளியிடும் ‘ஆல் ஸ்டோரி வீக்லி’ ALL STORY WEEKLY பத்திரிகைக்கு கதைகளை அனுப்பினார்.அப்போது அவர் படைத்த கற்பனைக் கதாபாத்திரம் டார்ஜான் என்னும் காட்டு மக்கள் வீரன் ஆவான். 39 வயதில் முதல் டார்ஜான் புஸ்தகம் வெளியானது.
டார்ஜான் யார் ?
ஒரு ஆங்கிலப் பிரபு தன்னுடைய மகனை ஆப்பிரிக்காவின் இருண்ட, அடர்ந்த காடுகளில் விட்டுவிட்டு வந்து விடுகிறார். அந்தச் சிறுவனை மனிதக் குரங்குகள் (APES) வளர்க்கின்றன. அவன்தான் டார்ஜான். அவன் தனது சாகசங்களால் காட்டு ராஜா ஆகிவிடுகிறான். குரங்கு போலவே மரத்துக்கு மரம் தாவி சாகசங்களை புரிவான். தீமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவான். இப்படி அவர் எழுதிய டார்ஜான் கதைகள் , நாவல்கள் இரண்டரைக் கோடி பிரதிகள் விற்பனையாகி அவரைப் புகழ் பெற வைத்தது. அவர் எழுதிய PLANET MARS பிளானட் மார்ஸ் செவ்வாய் கிரக கதைகளும் பெரிதும் வாசிக்கப்பட்டன. பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்ததாக கிரேக்க புராணங்கள் கூறும் ஹெர்குலீஸ், யூலிசிஸ் (ஆடிசியஸ்) போன்றவர்களை மனதில் கொண்டு அவர் உருவாக்கிய கற்பனைக் கதாப்பாத்திரம் டார்ஜான். தற்காலத்தில் அவரை மிஞ்சும் ஏராளமான கார்ட்டூன் வீரர்கள் வந்துவிட்டனர்!!
எட்கர் ரைஸ் பர்ரோஸ்
பிறந்த தேதி – செப்டம்பர் 1, 1875
இறந்த தேதி – மார்ச் 19, 1950
வாழ்ந்த ஆண்டுகள் 74
பர்ரோஸ் எழுதிய கதைகள், நாவல்கள் :–
1914- TARZAN OF THE APES
1915 THE RETURN OF TARZAN
1917 – THE SON OF TARZAN
1917 – A PRINCESS OF MARS
1918 – THE GODS OF MARS
1922- AT THE EARTH’S CORE
1924 – THE LAND THAT TIME FORGOT
1928 – TARZAN, LORD OF THE JUNGLE
1939 – CARSON OF VENUS
1946 – ESCAPE ON VENUS.
–SUBHAM–
tags – டார்ஜான், அமெரிக்க கதாசிரியர், எட்கர் ரைஸ் பர்ரோஸ், Edgar Rice Burroughs
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 12-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில், வேத ஸ்ரேணி!
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை வயிரமாலைக் கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே!
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சென்னை மாநகரில் வேளச்சேரி என்று இன்று அறியப்படும் வேதஸ்ரேணியில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம் ஆகும். இது கிண்டிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
மூலவர் திரு நாமம் : ஸ்ரீ தண்டீஸ்வரர்
அம்பிகையின் திரு நாமம் : கருணாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிப் புராண வரலாறு ஒன்று உண்டு. திரேதா யுகத்தில் சோமுகாசுரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் தேவர்களை வென்று பிரம்ம லோகம் சென்றான். அங்கு பிரம்மாவும் நான்கு வேதங்களும் மட்டுமே வாசம் செய்தனர். சோமுகாசுரன் வருவதை அறிந்த பிரம்மா வேதங்களைப் புத்தக வடிவமாக மாற்றி விட்டு தான் மட்டும் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கலானார். பிரம்ம லோகத்தில் யாரும் இல்லாததைக் கண்ட அசுரன் கோபம் கொண்டு வேத புத்தகங்களை எடுத்துக் கொண்டு சமுத்திரத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். இதைக் கண்ணுற்ற பிரம்மா ஈஸ்வரனிடம் சென்று இதை முறையிட வேதங்களை மீட்கும் பணியை விஷ்ணுவிடம் ஈஸ்வரன் ஒப்படைத்தார். மஹாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து சோமுகாசுரனை வதம் செய்தார். வேதங்களை மீட்டு அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார். வேதங்கள் பிரம்மாவிடம், “ஐயனே! எங்களுக்கு அசுர தோஷம் நீங்க அருள்க” என்று வேண்டின. பிரம்மா, “பூலோகத்தில் தாரக வனம் என்ற இடத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கும் ஈஸ்வரனை தியானித்து பூஜித்தால் உங்களது அசுர தோஷம் நீங்கும்” என்று கூறி அருள் பாலித்தார்.
வேதங்களும் தாரக வனம் சென்று ஈஸ்வரனை பூஜிக்க ஈஸ்வரன் வேதங்களின் முன் தோன்றி அசுர தோஷத்தை நீக்கி அருளினார். வேதங்கள் ஈஸ்வரனை தியானித்து பூஜித்து வந்த ஸ்தலமே வேத ஸ்ரேணி என்ற பெயரைப் பெற்றது. காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி இப்போது வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.
அடுத்து இன்னொரு வரலாறும் உண்டு. துவாபர யுகத்தில் மிருகண்டு முனிவருக்குப் புத்திரராக அவதரித்த மார்க்கண்டேய மஹரிஷிக்கு 16 வயது வரை மட்டுமே ஆயுள் உண்டு என்பதை அறிந்த மிருகண்டு முனிவர் மிகவும் வருத்தமுற மார்க்கண்டேயர் தான் திருக்கடையூர் சென்று சிவனை வழிபடப்போவதாகத் தெரிவித்தார். அங்கு சென்று வழிபட சிவன் யமன் தன் பாசக்கயிற்றை வீசும் போது மார்க்கண்டேயர் சிவனைத் தழுவிக் கொண்டார். சிவன் யமனைத் தன் காலால் உதைத்து அவனது தண்டத்தைப் பறித்துக் கொண்டார். தண்டத்தை இழந்த யமன் மிகவும் வருத்தமுற்று கைலாயம் நோக்கிச் செல்லலானான். அவனை இடைமறித்த நாரத மஹரிஷி, “அங்கே செல்ல அவசியமில்லை. இங்கே வேதஸ்ரேணியில் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருக்கும் சிவபிரானை வழிபட்டால் உமக்குப் பிராயச்சித்தம் கிடைக்கும்” என்று அருளுரை கூறினார். யமனும் அப்படியே இங்கு வழிபட்டான். அவன் ஒரு குளத்தை அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து சிவபிரானுக்கு மனமுருகப் பிரார்த்திக்க மனம் மிக மகிழ்ந்தார் சிவ பிரான். அவனது தண்டத்தை அவனுக்குத் தந்து அருளி தண்டீஸ்வரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். யமன் வழிபட்ட தீர்த்தமே யமதீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. ஆலயத்திற்கு வெளியே இது அழகுற இன்றும் தெள்ளிய நீருடன் அமைந்துள்ளது.
கலியுகத்தில் இந்த ஆலயத்தைச் சோழ மன்னர்கள் நன்கு பரிபாலித்து வந்தனர். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த அப்பைய தீக்ஷிதர் ஆரணிக்கு அடுத்துள்ள அடையபலம் என்ற ஊரில் அவதரித்தார். அவர் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து வரும் போது வேதஸ்ரேணிக்கு வந்தார். அம்மையின்றி அப்பன் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட அவர் இங்கேயே தங்கி, அம்மையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஒரு யாகம் செய்தார்; ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கினார். அது அப்பைய தீர்த்தம் என்ற பெயரைப் பெற்றது. இந்தக் குளமானது இன்று ஐஐடி (IIT) காம்பஸில் உள்ளது. இது அப்ளாங்குளம் என்று பெயர் மருவி இப்போது கூறப்படுகிறது.
அப்பைய தீக்ஷிதருக்கு அம்பிகையின் கருணைக் கடாக்ஷம் கிடைத்ததால் அம்பிகை கருணாம்பிகை என்ற பெயரைப் பெற்றாள். இப்போது இந்த ஆலயம் ஸ்ரீ கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. காஞ்சி மஹாபெரியவாள் சென்னையில் சிறிது காலம் இருந்த போது திருவான்மியூருக்கு வந்து தரிசித்து பின்னர் காலணி இல்லாமல் இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார். இங்கு லிங்கம் ஸ்வயம்புவாக அதாவது மாணிக்கக் கல் வடிவில் தோன்றி அருள் பாலிக்கிறார். மகர சங்கராந்தி நன்னாளில் சூரிய ஒளி அதிகாலையில் லிங்கத்தின் மீது பட்டு வழிபடும் படி ஆலய அமைப்பு அமைக்கப்பட்டது. இன்று கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இந்த ஒளி விழுவதைத் தடுக்கின்றன.
இங்கு தெற்கில் அமைந்துள்ள ராஜ கோபுரம் வழியாக உள்ளே சென்று இறைவனை பக்தர்கள் இப்போது தரிசிக்கின்றனர். கிழக்கு கோபுரம் தனியே வாயிலுடன் அமைந்துள்ளது. தண்டீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அம்பாளோ ராஜகோபுரத்தில் நுழையும் போதே நேரடியாகக் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள். கர்பக்ருஹத்தை அடுத்து உள்ளது இடைக்கழி மண்டபம். அதனை அடுத்து முன் மண்டபமும் இருக்க அங்கு துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் ஈஸ்வரனுக்கு வலப்பக்கம் விநாயகரும் இடப்பக்கம் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் ஸ்ரீ சக்ரம் அமைந்துள்ள ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும். அம்பிகையின் கர்பக்ருஹத்தில் அம்பிகையின் பாதத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளி பிரகாரத்தில் வில்வ விருக்ஷத்தின் அடியில் வைத்தீஸ்வரர், அதற்கு அப்பால் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், நவகிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.
இந்த ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அவை சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை எப்படி கண்ணே போல் காத்து வந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்கு தம்பதியினரின் அறுபதாம் கல்யாணம் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கருணாம்பிகையும் தண்டீஸ்வரரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 12-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYA NARAYANAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
காசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்
காசி இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் VIDEO CONFERENCING முறையில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.,11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அதேநேரத்தில், நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது. செப்.,11 மிகவும் முக்கியம். 1893-ம் ஆண்டு இதே நாளில் தான் சிகாகோ நகரில், மனிதநேயத்தின் பண்புகள் குறித்து விவேகானந்தர் பேசினார்.
ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக, தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணியபாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மீது ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
இதுதொடர்பாக வாராணசி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதியை முகலாய மன்னர் ஒளரங்கசீப் கட்டியதாகவும், அந்த மசூதி உள்ள நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் கூறி அங்குள்ள விரைவு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த அந்த நீதிமன்றம் கோயிலும் மசூதியும் உள்ள வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தர பிரதேச வக்ஃபு வாரியம், வாராணசியைச் சேர்ந்த அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி குழுவின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பாட்டியா வியாழக்கிழமை அறிவித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் அனைவரின் வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறை சோதனை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றம் விசாரித்து உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்திருக்க வேண்டும். வாராணசி விரைவு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. கோயிலை இடித்துதான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி ஆகியவற்றின் சார்பில் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Xxxx
விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரம் முதலிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி பத்து நாட்களுக்கு நடைபெறும்.. சில மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையைக் கரைப்பார்கள்
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன் ” கணபதி பாப்பா மோரியா !என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.
XXX
முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் உரை
/ 100
இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது, ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. ஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்,
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புனேயில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசினார்:
அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் தலைவர்களும் வலுவாக ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எந்த பயமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்திற்கும் விரோதமானவர்கள் அல்ல.
இந்து என்ற சொல் தாய் மண், முன்னோர்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்ததாகும். எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. அவர்கள் மதம், மொழி மற்றும் இனத்தில் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இந்துக்கள்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து படையெடுப்பாளர்கள் மூலம் மட்டுமே இஸ்லாம் இந்தியாவிற்கு வந்தது. இது வரலாறு.
தேவையற்ற சர்ச்சைகளை எதிர்த்து அடிப்படைவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும். இதை விரைவாகச் செய்தால், நமது சமுதாயத்திற்கு குறைவான சேதம் ஏற்படும்.
இந்தியாவுக்கு சூப்பர் பவர் அளவுக்கு சக்தி உள்ளது. யாரையும் அச்சுறுத்தவில்லை. அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சிக்கு இந்தியா அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்து என்ற சொல் எந்த இனம், மதம் அல்லது மொழி அடையாளத்தைக் குறிக்கவில்லை. இந்து மதம் என்பது மிக உயர்ந்த பாரம்பரியத்திற்கு வழங்கப்பட்ட பெயர். வாழும் ஒவ்வொருவரையும் உயர்த்துவதே. எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து.
முஸ்லிம்கள் இந்தியாவில் யாருக்கும் பயப்படதேவை இல்லை இந்துக்கள் யாருக்கும் விரோதமானவர்கள் அல்ல. அனைவரின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பிரிக்க விரும்பும் சிலர் நாங்கள் ஒன்றல்ல, நாங்கள் தனித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். யாரும் அதற்கு இரையாகிவிடக் கூடாது. நாம் ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். ஆர்எஸ்எஸ்ஸில் நாம் நினைப்பது இதுதான். இதை உங்களுக்கு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். “இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
Xxxx
திருப்பதியில் செப்., 8 முதல் பொது தரிசனம்: துவங்கியது ‘டோக்கன்‘ வினியோகம்
கோவிட் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனினும், ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
கோவிட் பாதிப்பு குறைந்ததை அடுத்து இன்று (செப்., 8) முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2,000 டோக்கன்கள் தர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் வளாகத்தில் காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
xxxxxxxxxxxx
அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்
‘அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்’ என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by NITHYA SOWMY
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by NITHYA SOWMY
XXXX
PRIME MINISTERModi announces Chair at BHU in honour of Tamil poet Subramania Bharati
PRIME MINISTER Modi made the announcement on the 100th death anniversary of Subramania Bharati, while inaugurating Ahmedabad-based Sardardham Bhavan via video conferencing. He also extended Ganesh Chaturthi greetings to the people.
Prime Minister Narendra Modi on Saturday announced the setting up of chair in memory of Tamil poet Subramania Bharati at Banaras Hindu University (BHU) for Tamil studies. The Chair will be established in the faculty of arts at the BHU.
PM Modi made the announcement on the 100th death anniversary of Subramania Bharati, while inaugurating Ahmedabad-based Sardardham Bhavan via video conferencing. The Tamil poet passed away on this date in 1921.
“Today, September 11, is another big occasion. Today is the 100th death anniversary of India’s great scholar, philosopher and freedom fighter ‘Subramanya Bharati’ ji. The vision of “Ek Bharat Shreshtha Bharat” that Sardar Saheb used to carry, the same philosophy has been shining with full divinity in the Tamil writings of Mahakavi Bharati,” PM Modi said on the occasion.
“I am also making an important announcement on this occasion. It has been decided to establish a chair in the name of Subramanya Bharti ji at Banaras Hindu University. ‘Subramanya Bharati Chair’ on Tamil Studies will be established in Faculty of Arts of BHU,” the Prime Minister added.
Earlier in the day, paid tributes to Bharati, recalling his “rich scholarship, multi-faceted contributions to our nation, noble ideals on social justice and women empowerment”.
xxx
10-sq-km area around Krishna Janmabhoomi now a pilgrimage site
Around 10 days after the announcement made by Chief minister Yogi Adityanath on the occasion of Janmashtami in Mathura, the state government has issued a notification declaring the 10 square kilometre range comprising 22 wards under the jurisdiction of the Mathura-Vrindavan Municipal Corporation a Pavitra Teertha Sthal (pious place of pilgrimage). The sale of alcohol and non-vegetarian food is now banned in the area.
The CHIEF MINISTER went on to ask the Mathura district administration to work on banning meat and liquor in the vicinity of seven Hindu pilgrimage sites in the land of Lord Krishna. He also promised to relocate and rehabilitate those involved in the trade of liquor and meat businesses near these pilgrimage sites.
xxxx
At 47%, Hinduism biggest gainer in religious conversion in Kerala
While the BJP, in its election manifesto, has promised an Uttar Pradesh model law against forceful religious conversion and ‘love jihad’ in Kerala to woo Hindu and Christian voters, the data sourced by TNIE from the government gazettes paint an altogether different picture.
According to official figures for the year 2020, the biggest gainer – in terms of new converts – was Hinduism. People who embraced Hinduism constituted 47 per cent of religious conversions in Kerala during the one-year period under reference.
Of the total 506 people who registered their change of religion with the government, 241 were those who converted from Christianity or Islam to Hinduism. A total of 144 persons adopted Islam whereas Christianity received 119 new believers in the year, shows the data.
xxxx
President Kovind, PM Modi extended Ganesh Chaturthi greetings to people
Ganesh Chaturthi, a ten-day festival that starts on the fourth day of the Hindu month Bhadrapada, started on September 10 this year.
President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi on Friday extended greetings to people on the occasion of Ganesh Chaturthi.
xxxxx
Vinayaka idols made by prisoners sold out
Idol making is one of the activities introduced along with weaving and yoga to keep the prisoners occupied and give them something to look forward to in life, said the Inspector General of Prisons in PUDUCHERRY
Vinayaka Chaturthi has come as a blessing for convicts in the Puducherry Central Jail at Kalapet who made 51 beautiful Vinayaka idols that sold out in minutes, as part of a major prison reform programme. The reforms started rolling since July to make Puducherry Central Jail a model prison in association with Sri Aurobindo Society, Inspector General of Prisons Ravideep Singh Chahar told The New Indian Express.
xxxx
Gyanvapi mosque case: Allahabad HC stays Varanasi court’s order on archaeological survey
The Allahabad High Court on Thursday put a stay on an order passed by a lower court in Uttar Pradesh’s Varanasi city in April, allowing an archaeological survey of the Kashi Vishwanath Temple and Gyanvapi Mosque complex, Bar and Bench reported.
Justice Prakash Padia said that the court in Varanasi should not have decided on the matter since certain petitions related to the case were pending before the High Court, Live Law reported.
The Allahabad high court on Thursday stayed proceedings in the Kashi Vishwanath Mandir-Gyanvapi Masjid case in a Varanasi court, effectively suspending a controversial archaeological survey of the premises to determine whether a Hindu temple was partially razed to build the 17th-century mosque.
The court also granted three weeks’ time to the Union and state governments to file their replies on the issue. The mosque abuts the famous Kashi Vishwanath temple and has been embroiled in a decades-old legal dispute.
Xxx
Hindus & Muslims in India have common ancestors:
RSS chief Bhagwat said
Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Monday said Hindus and Muslims share the same ancestry and every Indian citizen is a “Hindu”.
Speaking at an event here organised by Pune-based Global Strategic Policy Foundation, he said “sane” Muslim leaders should stand firmly against fundamentalists and added the minority community does not have to fear anything in India as Hindus don”t hold enmity towards anyone.
Hindus and Muslims share the same ancestry, Bhagwat said.
“Hindu is not a word that denotes any race, religion or linguistic identity. Hindu is a name given to the rich heritage that strives for upliftment of every living and non-living entity. Hence, for us, every Indian is a Hindu,” he said.
Bhagwat emphasized Muslims don”t have to fear anyone in India as Hindus don”t hold enmity towards anyone and Indians have always been committed to the well-being of all.
Kerala Governor Arif Mohammad Khan and Lt Gen Syed Ata Hasnain (retd), Chancellor, Central University of Kashmir, were among other prominent speakers at the event.
Khan said more diversity leads to a prosperous society and added “Indian culture considers everyone equal.”
The Kerala Governor quoted several ancient scriptures to highlight the all-encompassing nature of Hinduism.
XXXX
Odisha Celebrates Nuakhai festival
The drought-like situation and the pandemic notwithstanding, Nuakhai, the agrarian festival of Western Odisha, was celebrated with religious fervour and tradition across Western Odisha on Saturday.
As per tradition, the first harvested crop was offered to Goddess Samaleswari in Sambalpur at the stipulated ‘lagna’ (auspicious moment) between 10.15 am and 10.25 am.
The presiding deity SAMALESWARI was dressed in a new saree and decorated with ornaments as the priests of Samaleswari temple performed the rituals.
Thousands of devotees thronged the shrine to worship the goddess.
Nuakhai also marks the homecoming of family members and relatives working outside.
The festival is also known for lip-smacking delicacies like ‘Muga Bara’, ‘Ras Bara’, ‘Muga Mada’, ‘Suji Mada’, ‘Chaula Mada’, ‘Kakara Pitha’ and ‘Kheeri’ all of which are relished during family feasting.
The ‘Nuakhai Juhar’ ritual involves seeking the blessings of elders for long life, happiness and prosperity.
Xxxxx
Hindus shocked at 5th vandalizing of Swindon temple in Britain
Hindus globally are highly concerned regarding reports of the fifth vandalizing of Swindon Hindu Temple & Cultural Centre in South West England since May; this temple meets the spiritual needs of about 20,000 Hindus of the area.
Reports suggest that the break-in resulted in desecrating of deities, vandalizing of sacred altar and rooms, stealing of cash worth thousands of pounds and artefacts, damaging of doors, etc.; sending the area’s Hindu community into a state of anguish and fear.
Rajan Zed, president of the Universal Society of Hinduism, in a statement in Nevada (USA) today, said that it was appalling for the worldwide Hindus to hear about such incidents happening to a Hindu house of worship
Zed urged United Kingdom authorities to take this issue seriously and take action to put an end to such crimes .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 2
பாரதியாரைக் கற்றால் உலக கவிகளின் அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.
चिड़ियोंसेमैंबाजबनाऊ , गीदड़ोंकोमैंशेरबनाऊ ! सवालाखसेएकलडाऊ, तभीगोबिंदसिंहनामकहउँ – சிட்டுக் குருவி ராஜாளி ஆகும், சிறு நரி சிங்கமாகும். ஒன்றேகால் லக்ஷம் பேருடன் ஒருவன் சண்டை இடுவான். அப்படி நேரும் போது அங்கே குரு கோவிந்த சிம்மன் பேரைக் கேட்பாய்!
இதை சொல் ஒன்று வேண்டும் என்ற பாடலில் ஈயைக் கருட நிலை ஏற்றுவீர்’ என்ற அவர் வரியில் காணலாம்.யோகசித்தி பாடலில் ‘பன்றிப் போத்தைச் சிங்கவேறாக்கல்” என்கிறார்.
‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா, ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’ என்பதை பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற வரிகளில் காணலாம்.
To Sophia என்ற ஷெல்லியின் கவிதையில் வரும் Thy deep eyes a double planet என்பதை சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்பதில் காணலாம். இப்படி நூற்றுக் கணக்கில் உதாரணங்களை அடுக்கலாம்.
தனித்துவம் மிகுந்து உலகக் கவிஞர்களில் உயர்ந்தவன் என்பதைச் சுட்டிக் காட்ட, ஒரு பாடல் – ‘தேனை மறந்து விட்ட வண்டும், ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி, ஆசை முகம் மறந்து போச்சே!’ இந்த ஒன்று போதாதா, போதாது என்றால் இன்னொன்று இதோ – ‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட வெறும் வெளியிலிரத்த களியொடு பூதம் பாட, பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூட களித்தாடுங் காளீ, சாமுண்டி கங்காளீ, அன்னை அன்னை அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை’ என்ற பாடலுக்குத் தான் ஒப்புவமை உண்டா! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் உலக மகாகவியின் ஒப்பற்ற பாட்டுத் திறனுக்கு!
*
பாரதியாரைப் போற்றி ஆயிரக்கணக்கில் கவிதைகளும் கட்டுரைகளும் துணுக்குகளும் கடந்த நூறு ஆண்டுகளில் வெளி வந்துள்ளன. பாரதியாரைப் போற்றிய ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எண்ணம் கொண்டு தொகுக்க ஆரம்பித்தேன். இந்தக் கவிதைகள் http://www.tamilandvedas.comஇல்11-12-2017இல் (கட்டுரை எண் 4479) ஆரம்பித்து 90வது அத்தியாயத்தில் 14-5-2008இல் (கட்டுரை எண் 5008) முடிவுற்றது. நேரம் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
வி.ஜி.சீனிவாசன்
இவரே சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் சிலை நிறுவுவதற்கான கமிட்டியின் செயலாளராக இருந்து சிலையை நிறுவியவர். பாரதியே இவர் சுவாசம். இவர் எங்களது பாரதி ஆசான். ஆகவே இவரது பாடல்களில் ஒன்றை முதலாவதாகக் கொண்டு இந்த நூலைத் தொகுத்தேன்.
தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்
தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்
செய்த புகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்
எய்திடுமோ என்றனுக்கு மே
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடல்களில் பாரதி ஓர் ஆசான் என்ற கவிதையின் ஒரு பகுதி :
அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே
அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்
விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி
நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் நீண்ட கவிதையிலிருந்து ஒரு கண்ணி :
உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க
ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!
பாரதிதாசன் : ‘புதுநெறி காட்டிய புலவன்’-இல் ஒரு பகுதி
பைந்தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ ! சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
கவியரசு கண்ணதாசன்:
சந்திர சூரியர் உள்ளவரையிலும்
சாவினை வென்று விட்டான் – ஒரு
சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்
தாய்மையை வார்த்துவிட்டான்
இந்திரதேவரும் காலில் விழும்படி
என்னென்ன பாடிவிட்டான் – அவன்
இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி
ஏற்றமுரைத்து விட்டான்
பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) பாடலில் ஒரு பகுதி:
பூ மணக்குது புகழ் மணக்குது புண்ணியர் பாடலிலே
பா மணக்குது பயன் மணக்குது பாரதி பாட்டுள்ளே
கவிஞர் கே.பி. அறிவானந்தம்
2003ஆம் ஆண்டு பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர். பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.
நாடகக் காவலர் R.S.மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், திருநாவுக்கரசர், உள்ளிட்ட பல மேடை நாடகங்களை எழுதியவர் இவரே. பாரத மாதா பார்வையில் பாரதி என்ற கவிதையில் ஒரு பகுதி.
சொந்த மண்ணை விட்டு வந்து
சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?
இந்தி யாவில் சிறையி லென்னை
இட்ட போதும் தாழ்ச்சியோ?
இந்த வாழ்வு தேவை யில்லை
என்று வந்து சிறையிலே
தந்த துன்பம் ஏற்று மீண்டாய்
சார்ந்த நட்பால் விரைவிலே
ஹா.கி. வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் கவிதையில் ஒரு பகுதி:_
வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்! கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்!
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல் போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Gnanamayam Channel in London has arranged a week long Bharati Memorial Centenary lectures via Zoom and Facebook.com. Many singers also participated in it. On 11th September 2021, the main event took place. Everyone enjoyed the 2 hours 15 minutes programme. Young and old from different parts of the world took part in it.
11-9-2021 IN SPECIAL BROADCAST FOR GREAT POET BHARATI
PLEASE JOIN US TODAY 11-9-2021 IN SPECIAL BROADCAST TO REMEMBER AND PAY RESPECT TO THE GREATEST TAMIL POET BHARATI . IT IS 100 YEARS SINCE HE DIED. TO COMMEMORATE BHARATI’S 100th DEATH ANNIVERSARY, GNANAMAYAM CHANNEL IS DOING A SPECIAL BROADCAST FROM LONDON.
USUAL TIME- LONDON TIME 2 PM ;INDIAN TIME 6-30 PM
USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM
IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR MONDAY ZOOM LINK.
SPEECHES BY DEDICATED TAMIL SCHOLARS AND SONGS BY DEVOTED SINGERS ARE BROADCAST.
FOLLOWING IS OUR PROGRAMME.
Prayer Mrs Sasikala Janakiraman
Talks by
MR SUBRAMANIAN SITARAMAN, MUMBAI
வாராது வந்த மாமணி
MR S NAGARAJAN, BENGALURU
பார் போற்றும் மகாகவி பாரதியார்!
DR NARAYANAN KANNAN, CHENNAI (with Shobika Murukesan)
xxx
பேச்சு.
கலைஞானச்சுடர். ஸ்ரீமதி. சுபாஷினி.
இயக்குனர், தேஜஸ்வராலயா கலைக்கூடம்.
ஆசிரியர், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.
திரு. இளைய தம்பி ஜெயந்திரன்.
விரிவுரையாளர், சைவசிந்தாந்த துறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
பாரதியார் பாடல்கள்.
செல்வி. கார்த்திகா கார்த்தீஸ்வரன்.
செல்வி. அபிலாஷிகா கணேசமூர்த்தி.
செல்வி. தேஜஸ்வினி பிரணவன்
செல்வி. ஜெகார்த்திகா கணேசமூர்த்தி.
xxxx
BHARATI SONGS SUNG BY SINGERS FROM DUBAI, SINGAPORE, SRI LANKA, AUSTRALIA AND INDIA
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)
பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதி நினைவு நூற்றாண்டு தினமானது இதோ இப்போது இன்று உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.
இவர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!
எதார்த்தத்தைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி. எதார்த்தம் தான் கவிதை என்றால்.
“பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை
மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்
நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்
ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ”
என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.
வெறும் யதார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.
இது போலவே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.
நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.
பின்னர் கவிதை என்பது தான் என்ன?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-
உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!
ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.
கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.
புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி. அது ஆன்ற பொருளைத் தரும்.
தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்
அவியகத் துறைகள் தாங்கி இருக்கும், அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)
தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.
(கோதாவரியைப் போல) அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும் இது கம்பனின் வாக்கு.
வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளுடன் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.
ஆஹா, இது அல்லவா கவிதை! இதை இயற்றியவன் கவிச் சக்கரவர்த்தி அல்லவா! ஆம் கம்பன் இயற்றியது தான் இது. இது தான் கவிதை!
இந்த இலக்கணத்திற்கெல்லாம் உட்பட்டு இதற்கு அப்பாலும் சென்று கவிதை படைத்த ஒரு அற்புதக் கவிஞன் தான் மகாகவி பாரதி!
காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி தனக்குத் தொழிலே கவிதை தான் என்கிறான்!
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
இது தான் பாரதியின் தொழில்.
கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் ‘கவிதைத் தொழில் மன்னனின்’ – நம் பாரதியின் – சுய சரிதைச் சுருக்கம்!
காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.
கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் கவிதா சக்தி பற்றி தரும் விளக்கம் இது தான்:-
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்
இந்த கவிதா வரிகளில் கம்பனின் சவி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.
என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை பளீரென்று சொல்கிறார் பாரதியார்.
இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!
எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை! எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை! எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை!
இது தான் கவிதையா! இது கவிதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை! விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!
ஆனால் இந்தக் கவிதைக்கான இலக்கணத்தை அனுபவிக்க ஒரு எளிய வழி உண்டு.
அது பாரதியாரின் கவிதைகளைப் படிப்பது தான்; அனுபவிப்பது தான்; உணர்வது தான். அப்போது தேனின் சுவை என்ன என்பதை சொற்களால் விளக்க முயன்று தோற்றுப் போன ஒருவன் ஒரு துளி தேனை அருந்தியவுடன் விளக்கமே தேவையில்லை என்று சொல்வது போல பாரதியின் கவிதைகளைப் படித்து அனுபவிப்பவன் கவிதா இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்வான்.
****
சரி, ஒரு கவிஞன் அப்படி என்ன தான் செய்து விட முடியும்.? குடந்தை வேலன் என்னும் ஒரு கவிஞர் விடை தருகிறார். யார் இந்தக் குடந்தை வேலன் என்பதை இன்று வரை அறிய முயன்று வருகிறேன். தெரியவில்லை. இவர் பாடிய கவிதைச் சித்தன் கும்மாளத்தில் சில பகுதிகள் இதோ:
கவிதைச் சித்தன் கும்மாளம்!
எழுதியவர் குடந்தைவேலன்
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த
அண்டப் பெருவெளியும் – மிகக்
கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்
குடுக்கையில் நின்றாடும்
வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு
வீணர்களே வாரும் – இந்த
மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்
மந்திரத்தில் பாரும்
வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த
மண்ணைச் சுருட்டிடுவோம் பர
மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே
மூப்பில் ஆழ்த்திடுவோம்
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா –யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்
ஞானம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)
என்ன ஒரு அருமையான கவிதை! இது தான் கவிதை செய்யும் ஜாலம்! இந்த ஜாலத்தைத் தான் மஹாகவி பன்முகப் பரிமாணத்துடன் தன் கவிதைகள் மூலம் செய்தார் என்று சுருங்கச் சொல்லி விடலாம்!