Tamil and English Words 2700 Years Ago- Part 61 (Post No.10,024)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,024

Date uploaded in London – 26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -61

Tamil and English Words 2700 Years Ago- Part 61

பாணினி சூத்திர எண்கள்:–

6-2-5

Dhaayaatha is used by Panini to mean ‘ward’

Dhayaathi is used by Brahmins to denote close relatives.

தாயாதி = ஆண்/தந்தை  வழி உறவினர்

Dhaayaathi = male descendants of same ancestors; agnates

Xxx

6-2-8

Nivatha is used by Panini to denote protected from wind, protected by wind with slight changes

Extended meaning

Raajanivathe = protected by the king

Sukham maathru nivaatham = mother’s protection is sweet

I am reminded of Nevada in USA.( What we find in modern encyclopaedias linking Nevada to Spanish word is not correct. All names are of Red Indian origin;not Spanish )

நெவாடா – அமெரிக்க மாநிலம்

Xxxx

6-2-10

Kashaya is used by Panini

Kashaaya = decoction

People use it in native medicine preparations.

கஷாயம் = மருத்துவ உபயோகத்திலுள்ள சொல்

Xxx

6-2-13

Panini used Vaanija for Business, selling, commerce

வணிக, வாணிப , வாணிக = சங்கத் தமிழ் நூல், திருக்குறள் காண்க

பாணி என்ற ரிக் வேத சொல்லுடன் தொடர்புடையது; பணம் என்னும் சொல்லும் இதிலிருந்து வந்ததே

Vanika, vaanika are used in Sangam Tamil literature and Tirukkural.

Xxxx

6-2-18

Pathi is used by Panini, meaning owner, leader of

This is in use for several thousand years.

Ganapathi, grahaPathi, brhaspathi, senaapathii are used by all Indian languages

Amazing thing about pathi is , it has been used even by the seers of Rigveda

பதி = உரிமையாளர், தலைவர்; சென்ற கட்டுரையில் விளக்கப்பட்டது.

ரிக் வேத காலத்தில் இருந்து இன்றுவரை 6000 ஆண்டுகளாக புழக்கத்திலுள்ள சொல் ;கணபதி

Xxx

6 2 14

Maathraa

Means certain quantity

Maathrai is used by authors; grammarians.

மாத்திரை = அளவு; இலக்கண நூல்களில் காண்க

Xxxc

6-2-15

Gamana = going

Gamana siddha for sky bound mystics is used in Kutraala kuravanji.

கமன சித்தர் – திரிகூடப்ப ராஜப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி காண்க

Xxx

6-2-16

Pria, Preeti (Dear)

That which gives happiness

Both are used in feminine names throughout India.

ப்ரியா, பிரீதி = பெண்களின் பெயர்கள் (விரும்பக்கூடிய  குணம், அழகு உடையவர்கள்)

Xxx

6-2-17

Swaamini , swamin = one who owns ,owner

Swami becomes Saami in Tamil and used by Tamils in names; also addressing

கந்தசாமி,அய்யாச்சாமி துரைசாமி

Kanthasaami, Ayyaasaami, Duraisaami

Saami,give me some kaasu

சுவாமி, சாமி ஐயா, சாமி, தருமம் செய்யுங்க , காசு கொடுங்க

Xxx

6-2-20

Bhuvana

Bhu,bhuvana means earth

Bhuvaneswari,bhuvana are common female names

Bhu,Bhu I, bhuvana for earth are used in Tamil.

Bhuvi,bhoomi becomes Puvi in Tamil

M=V

புவனா, புவனேஸ்வரி, பூமி= புவி ; பூபதி /அரசன்

Xxx

6-2-21

Aabhaatha is used by Panini to denote hurdle,hindrance,obstruction

Aapaththu is used by Tamil s to mean dangerஆபத்து

Netheeyas is in this Sutra means very near

English Near is derived from it

Xxx

6-2-22

Poorva

Before, long ago

Poorveekam =Ancestry,ancestor is used

பூர்வ காலம், பூர்வீகம்

Xxx

6-2-26

Kumaaras cha is Panini’s sutra

Kumaara = young,youth is used in Tamil Kumaran

Kumaran= Murugan; Kumara sambhava of Kalidasa

குமரன் ; குன்று தோறும் ஆடும் குமரன் வடிவேலன்

குமார சம்பவம் = முருகன் பிறப்பு= காளிதாசனின் புகழ்பெற்ற காவியம்.

Xxx

6-2-29

Kaphaala =Skull ,pot; பானை

Bhakaala = skull; மண்டை ஓடு

Bowl is derived from this /skull shape; also Copra in Coconut

Kaphaala becomes cephalo in Latin

கபால; லத்தீன் மொழியில் செபாலஸ்

Xxx

TO BE CONTINUED………………………….

Tags- Panini in Tamil 61

பாரதி பாடல்களில் மந்திரச் சொற்கள் (Post No.10,023)

Bharatiyar statue, Madurai Setupati High School

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,023

Date uploaded in London – 26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்கினி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார். ரிக் வேத மந்திர எண்களையும் அவை உள்ள பாரதி பாடல் வரிகளையும் தனியே தருகின்றேன். இங்கு பாரதி சொல்லும் நேர்மறைச் சொற்களைக் காண்போம் (Positive words and thoughts) . பாரதி பாடலில் எதிர்மறைச் சொற்கள் (negatives) மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் அவை அதர்மத்திற்கு எதிரான சொற்களாகவே இருக்கும் .

இதோ பாரதியின் பாசிட்டிவ் (Positive words)  சொற்கள்-

இவற்றில் பெரும்பாலான வரிகள் ரிக் வேதத்தில் இந்திரன் மற்றும்  அக்னீ பற்றிய துதிகளில் உள்ளன:–

‘வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’ 

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ ( காயத்ரீ மந்திரம்)

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா

கடுமைகொண்ட தோளினாய் வா வா

தெளிவுபெற்ற மதியினாய்

ஏறு போல நடையினாய்

நோய்களற்ற உடலினாய்

நொய்மையற்ற சிந்தையாய்

இளைய பாரதித்தனாய்

எதிரில்லா வலத்தினாய்

வெற்றி கொண்ட கையினாய்

விநயம் கொண்ட நாவினாய்

முற்றி நின்ற வடிவினாய்

முழுமை சேர் முகத்தினாய்

எல்லாரும் ஓர் குலம்

எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் ஓர் நிறை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறை

இந்தியா உலகிற்களிக்கும்’

‘எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்’

‘அச்சமில்லை, அச்சமில்லை ‘

‘பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்’

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்

இமைப்பொழுதும் சோரா திருத்தல்’

‘ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி’

‘ஓம் சக்தியால் உலகில் ஏறு’

‘ஓம் சக்தி சக்திஎன்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு’

‘சக்தி சக்தி என்பார் சாகார்’

சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து

‘பின்னை ஒரு கவலையுமிங்கில்லை

பிரியாதே விடுதலையைப் பிடித்துக்கொள்வாய்’

‘செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்கவேண்டும் ‘

‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’

‘திண்ணிய நெஞ்சம்  வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்’

‘வல்லமை தாராயோ – இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே’

‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டியபடி செலும் உடல்’

நசையறு  மனம்

சுடர்தரும் உயிர்

அசைவறு  மதி

சக்தியைப் பாடும் நல் அகம் 

‘பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும்’

‘தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிட ச் செய்குவையே’

‘யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!’

‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்

பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’

‘பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்’

‘வானவர் விழையும் மாட்சியார் தேயம்’

‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’

‘அருவிபோலக் கவிபொழிய

எங்கள் அன்னை பாதம் பணிவேனே ‘

‘வாழிய செந்தமிழ்  வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மை வந் தெய்துக  தீதெலாம் நலிக’

‘அறம் வளர்ந்திடுக , மறம் மடிவுறுக’

‘சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக’

‘கிருத யுகம் எழுக மாதோ’

‘தெள்ளு கலைத்தமிழ் வாணி ! நினக்கொரு

விண்ணப்பஞ் செய்திடுவேன்

எள்ளத்தனைப் பொழுதும்   பயனின்றி

இராதென்றன்  நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி

வேல், சக்தி வேல், சக்தி வேல் ‘

Xxxx

எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ

இறப்பின்றித் துலங்குவாயே

இறவாய் , தமிழோடிருப்பாய்  நீ

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா

கடமை புரிவார் இன்புறுவார்

உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

வாழ்க வையம், வாழ்க வேதம்

அன்பென்று கொட்டு முரசே – மக்கள் அத்தனை பேரும் நிகராம்

ஒன்றென்று கொட்டு முரசே

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்றுதானறிதல் வேண்டும்

காக்கை குருவி எங்கள் ஜாதி

நிமிர்ந்த நன்னடை

நேர்கொண்ட பார்வை

நிமிர்ந்த ஞானச் செருக்கு

மங்கும் தீமை, பொங்கும் நலமே

நல்ல காலம் வருகுது! நல்ல காலம்  வருகுது !

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்

வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி

xxxx

இது ஒரு சாம்பிள் sample தான். இன்னும் நூறு  வரிகள் உள .

ரிக் வேதமும் பாரதியும் என்ற கட்டுரையில் மேலும் தருகிறேன்

–சுபம்-

tags – பாரதி பாடல்,  மந்திரச் சொற்கள், 

அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!(Post 10022)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,022

Date uploaded in London –  26 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!

ச.நாகராஜன்

இந்து மதத்தின் உன்னதமான இறை கொள்கையால் உலகிலுள்ள அனைத்து அறிஞர்களும் அதை வியந்து பாராட்டிப் போற்றுகின்றனர்.

ஏகம் ஸத்! விப்ரா: பஹுதா வதந்தி!!

உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்.

ஆக இந்த ஒரே பிரம்மம் என்ற கொள்கையே வேதக் கொள்கை.

இதிலிருந்து விரிந்து பரந்த பல கொள்கைகளை இன்று க்வாண்டம் மெகானிக்ஸ், க்வாண்டம் பிஸிக்ஸ் போன்ற நவீன அறிவியல் துறைகளும் கூட அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன; விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மாநாட்டில் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி உரையாற்றினார்.

அவர் தனது உரையில் புஷ்பதந்தர் இயற்றி அருளிய சிவ மஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஏழாம் ஸ்லோகத்தின் அர்த்தத்தை எடுத்துரைத்தார் இப்படி:-

 I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:

“As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.”

சிவமஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஸ்லோகமும் அதன் அர்த்தத்தையும் கீழே காணலாம். (ஆதாரம், நன்றி :- https://www.sanskrit-trikashaivism.com/en/shiva-mahimna-stotram-normal-translation/597)

 त्रयी साङ्ख्यं योगः पशुपतिमतं वैष्णवमिति प्रभिन्ने प्रस्थाने परमिदमदः पथ्यमिति च।
रुचीनां वैचित्र्यादृजुकुटिलनानापथजुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामर्णव इव॥७॥
Trayī sāṅkhyaṁ yogaḥ paśupatimataṁ vaiṣṇavamiti prabhinne prasthāne paramidamadaḥ pathyamiti ca|
Rucīnāṁ vaicitryādṛjukuṭilanānāpathajuṣāṁ nṛṇāmeko gamyastvamasi payasāmarṇava iva||7||

“The three Veda-s (trayī), Sāṅkhya (sāṅkhyam), Yoga (yogaḥ), the doctrine (matam) of Paśupati (paśupati) –i.e. the Śaiva doctrine– (and) the Vaiṣṇava (doctrine) –pertaining to Lord Viṣṇu– (vaiṣṇavam iti)”; in (these) different (prabhinne) source(s) (prasthāne) (there are) thus (iti ca) this (idam) and that (adas) way (pathyam) toward the Highest (State) (param) –i.e. there are various ways of realizing the Supreme Self or Śiva–. For the men (nṛṇām) who are devoted (juṣām) to multiple (nānā) paths (patha), straight and crooked ones (ṛju-kuṭila), in accordance with the variety (vaicitryāt) of their appetites (rucīnām), You (tvam) are (asi) the only (ekaḥ) goal to be attained (gamyaḥ), just as (iva) the ocean (is) (arṇavaḥ) with regard to the waters (payasām) –i.e. the water of rivers, rain, etc. ultimately flows into ocean–||7||

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவ மீதி

ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமித மத: பத்ய மிசி ச |

ருசீனாம் வைசித்ர்யாத் ருஜுகுடில நானாபத ஜுஷாம்

ந்ருணாமேகோ கம்யஸ் த்வமஸி பயஸாமர்ணவ இவ || (ஸ்லோகம் 7)

பொருள் :- வைதிக மதம், கபிலரின் ஸாங்க்ய மதம், பதஞ்சலியின் யோக மதம், சைவ மதம், பாஞ்சராத்திர மதம் என்று சாஸ்திர மார்க்கம் பலவிதமாக இருக்கும் போது இது தான் சிறந்தது அது தான் இதமானது என்றபடி (முன் வாசனையின் படி) விருப்பங்கள் வேறுபடுவதால் நேராயும் கோணலாயும் உள்ள பற்பல மார்க்கங்களில் (அல்லது மதங்களில்) செல்லுகின்ற மனிதர்களுக்கு நேராகவும் வளைவாகவும் செல்லுகின்ற நதிகளுக்கு (அடையும் ஒரே இடமாக அமையும்) கடல் போல பரமேஸ்வரனாகிய நீர் ஒருவரே புகலிடமாக இருக்கிறீர்!

இந்த மந்திரக் கருத்தையே தனது சிகாகோ உரையில் ஸ்வாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்; உலகையே தன் வசம் ஈர்த்தார்.

தினமும் காயத்ரி மந்திரம் ஜெபித்து சந்தியாவந்தனம் செய்யும் போது கூறும் மந்திரம் இது:

ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்

ஸர்வ தேவ நமஸ்கார: ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஆகாஸாத் – ஆகாயத்திலிருந்து

பதிதம் தோயம் – கீழே விழும் நீர்த்துளியானது

யதா கச்சதி ஸாகரம் – எப்படிக் கடலைச் சென்று அடைகின்றதோ (அதே போல)

ஸர்வ தேவ நமஸ்கார: – அனைத்து தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் (வழிபாடு)

ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி – ஸ்ரீ கேசவனையே சென்று அடைகிறது.

இதையும் இங்கு நினைத்துப் பார்த்து மகிழலாம்.

கச்சியப்ப சிவாசாரியார் தமிழில் இயற்றிய கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.

  • உற்பத்தி காண்டம் 2) அசுர காண்டம் 3) மகேந்திர காண்டம் 4) யுத்த காண்டம் 5) தேவ காண்டம் 6) தக்ஷ காண்டம்.

10345 செய்யுள்களைக் கொண்ட அற்புத நூல் இது.

தக்ஷ காண்டத்தில் 24 படலங்கள் உள்ளன. இதில் மட்டும் 2067 செய்யுள்கள் உள்ளன.

அவற்றுள் முதல் படலமாக அமைவது உபதேசப் படலம். அதில் வரும் 17வது செய்யுள் இது:-

“யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய்  முக்கண்

ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை

வேதம துரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் மேலாம்

நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென்றென்ன”

இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடிய ஒன்றே.

கடலை எல்லா நதிகளும் சென்று அடைவது போல பழம்பெரும் வேதம் உரைக்கும் மேலான புகழ் அனைத்தும் சிவனையே சேரும். எந்த ஒரு பொருளை யார் இறைஞ்சிடினும் அது முக்கண் ஆதி பிரானையே அடையும்.

ஆதிப் பரம்பொருள் ஒன்றே. அதை யார் எப்படி வழிபட்டாலும் அது அந்தப் பரம்பொருளையே சென்று சேரும்.

இதுவே வேதம் கூறும் கொள்கை!

எத்துணை அற்புதமானது!

வாழிய வேதம்! வாழிய பாரதம்!! வாழ்க வாழ்க இணையிலா இந்து மதம்!!!

****

INDEX

ஸ்வாமி விவேகானந்தா சிகாகோ உரை

சிவ மஹிம்ன ஸ்தோத்ரம்

சந்தியாவந்தன மந்திரம்

கந்த புராணம் உபதேசப் படலச் செய்யுள்

tags – வழிபாடு, சிவ, மஹிம்ன ஸ்தோத்ரம்

ஆற்றலின் மகனே !கட்டிளங் காளையே! அக்கினி தேவனே ! (Post No.10,021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,021

Date uploaded in London – 25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும், பாரதியார் பாட்டு போல, எல்லாம் ஆக்க பூர்வமான சொற்களே இருக்கும். அது மட்டுமல்ல; நல்ல கற்பனை வளம் மிக்க சொற்களையும் உவமைகளையும்  காணலாம். அக்கினி தேவனை அழைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் ஹோமத் தீ மூட்டுவர். அப்போது சொல்லும் மந்திரங்களை ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்திலுள்ள இரண்டு துதிகளில் உள்ள ஆக்கபூர்வ அடை மொழிகளை, சொற்களை,  மட்டும் தருகிறேன் . இன்னொரு துதியில் அக்கினியை ‘ஒளி ஆடை அணிந்தவனே’ என்று புலவர் விளிக்கிறார் இங்கே நெய் முடியுடைவனே என்று பகர்கிறார்.

இதோ ரிக் வேதம் RV.8-60

அக்கினி தேவனை ரிஷி பர்க்க பிரகாதன் பாடுகிறார்.

ஆற்றலின் மகனே

நெய் கேசம் உடையவனே

பழையவனே

புலவனே (கவி)

சுத்தம் செய்பவனே

இன்பம் தருவோனே

வாரி வழங்குவோனே

பிரகாசிப்போனே

அதி இளைஞனே

நித்தியனே

சத்தியனே

மனைகளை அளிப்பவனே

பாலகனே

எங்கும் பரவியவனே

மஹானே

நண்பர்களை மேம்படுத்துவோனே

ஆற்றலின் தலைவனே

நலத்தை அளிப்பவனே

பலத்தின் தலைவனே

பலத்தின் மகனே

கொம்புகளைத் தீட்டும் காளையே

இரண்டு தாய் உடையவனே

(வேத காலத்தில் இரண்டு மரக்கட்டைகளை  வைத்து தீ உண்டாக்கினர்)

சூடான சுவாலையால் மேகத்தைக் கிழிப்பவனே

(மேகத்தின் இடையே ஒளிரும் கீற்று மின்னல்)

தடைப்படாத அக்கினியே

தேவனான அக்கினியே

ஜனங்களைக் காப்போனே

ஒளிச் செல்வனே

XXX

துதி RV.8-61 (ரிக்  வேதம்)

இது இந்திரனை நோக்கி ரிஷி பர்க பிரகாதன் பாடுவது-

இந்திரனே

புருவசுவே

மகவானே

விப்ரனே

அழகிய மோவாய் உள்ளவனே

பலத்தின் தலைவனே

சூரனே

வள்ளலே

பொன்னார் மேனியனே

தாங்க ஊற்றே

சதக்ரதுவே (சதாவதானி)

தடை படாதவனே

நண்பனே

செல்வபதியே

பகைவர்களைப் புடைப்பவனே

புரந்தரனே

இவ்வாறு பாசிட்டிவ் சொல்லாக்கத்தையே பாடினால் நமது மனதும் எதையும் செய்யும் சக்தி பெறு ம். எதையும் தாங்கும் சக்தியையும் பெறும்.

வேத மந்திரங்களை இசைக்க முடியாதோர் அதை கேட்கவாவது செய்யலாம்.

—SUBHAM—

TAGS– ரிக் வேதம், ஆக்கபூர்வ, சொல்லாக்கம் , ஆற்றல், அடைமொழி

August 2020 London Swaminathan Articles, Index-93 (Post No.10,020)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,020

Date uploaded in London – 25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

AUGUST 2020 ARTICLES , INDEX-93

More about Zoroaster from the Rigveda and Varahamihira,8436;

1 August 2020;

Scholar who translated Tamil Tolkappiam into English ,8441;2/8

Strange names in Hindu scriptures, 8447;3/8

Lord Shiva on power of Writing Mantras ,8461;6/8

Historic Day for India, 40 kilo Silver Brick,8474;8/8

Index 1 SSwaminathan s English Articles, November 2011;8480:9/8

Index 2; 8485;10/8

Index 3 for SSwaminathan s Articles for year 2011,2012 11/8;8491

Index 4;8496;12/8 for 2012

Index 5 for S Swaminathan s English and Tamil articles 8502;13/7

Index 6;2012;8508;14/8

Index 7;8515;15/8

Index 8;8521;16/8

Index 9;8527;17/8

Index 10;8532;18/8

Index 11;8538

Index 12;854420/8

Index 13;8550;

Index 14;8555;22/8

Index 15;8560;23/8

Tamil Q and A on Magnetic Pole Change 8566;24/8

Index 16;25/8

Kaliyuga Finito,now it is Dwapara Yuga,8577;26/8

Index 17;8583;27/8

30 Quotations on Children, particularly Sons,8588;28/8

Index 18;8594:29/8

Index 19;8605;31 August 2020

Throughout this year 2020,  Mr R Nanjappa’s English Articles were also published every day.

XXXX

ஆகஸ்ட் 2020 கட்டுரைகள் ; Index 93

சருக்கரை பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8437, 1 ஆகஸ்ட் 2020

கிணறு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8442, 2/8

கீரை  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8445, 3/8

குளவி பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8452, 4/8

ஒளவையார் போடும் புதிர்கள், 8451,4/8

குளம்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8457, 5/8

கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள் ! அ ,அ, அ , 8456, 5/8

கனவு  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8462, 6/8

முள்ளம் பன்றி முள்ளை ஐயர்கள் பயன்படுத்துவது ஏன் ?8467, 7/8

மாங்கல்யம் தந்து நானேன , கல்யாண வைபோகமே 8466, சீனிவாசன் ,8466,7/8

கடைகள்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8468, 7/8

மூக்கு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8473, 8/8

உனக்கும் எனக்கும்தான் பொருத்தம் , சீனிவாசன் கட்டுரை, 8472,8/8

வீடு வாங்கலியோ வீடு,  சீனிவாசன் கட்டுரை, 8477,9/8

தாய் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்8478, 9/8

எந்த ஊர், என்ன பேர் சொல்லுங்கோ ,8479, 9/8

எழுத்து  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8484,10/8

கிருஹப் ப்ரவேசத்துக்கு நல்ல நாள் எது? சீனிவாசன் கட்டுரை,8483,10/8

தேர்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8489,11/8

கைக்கு மாறும் பணமே , சீனிவாசன் கட்டுரை,8488,10/8

எள் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8495,12/8

வந்தாள் மஹாலெட்சுமியே சீனிவாசன் கட்டுரை,8494,12/8

சிவபக்தர் படம் இங்கே, பெயர் எங்கே?8497,12/8

புளியமரம்   பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8501,13/8

ராகுவும், கேதுவும்  சீனிவாசன் கட்டுரை,8500,13/8

அக்கிரகாரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8507,14/8

நீங்கள் ஜனாதிபதி ஆகவேண்டுமா?? சீனிவாசன் கட்டுரை,8506,14/8

சிவபக்தர் படம் இங்கே, பெயர் எங்கே?-2 8503,13/8

சிவபக்தர் படம் இங்கே, பெயர் எங்கே?-3; 8509,14/8

அரசமரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8513,15/8

கத்துக்குட்டியின் 17 ஜோதிட- வானியல் கேள்விகள்; சீனிவாசன் கட்டுரை,8512,15/8

கத்துக்குட்டியின் நேற்றைய கேள்விகளுக்குப் பதில்- 8520

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம், 8518,16/8

பிள்ளையார்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8519; 16/8

பஞ்சாங்க ரகசியம் -1; 8524,  சீனிவாசன் கட்டுரை,8524,17/8

வெள்ளை வேண்டாம், கம்பன் ,வள்ளுவன் போர்க்கொடி , 8526,17/6

உதடு  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8525,17/8

பஞ்சாங்க ரகசியங்கள்  -2; 8530,  சீனிவாசன் கட்டுரை,18/8

பஞ்சாங்க ரகசியங்கள் -3 ; 8535,  சீனிவாசன் கட்டுரை,19/8

கை   பற்றிய 7 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8531,18/8

ஆறு   பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8536,19/8

காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை , 8537, 19/8

பஞ்சாங்க ரகசியங்கள் -4 ; 8541,  சீனிவாசன் கட்டுரை,20/8

தலை  பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8542,20/8

தாமிரம் பற்றிய சுவையான விஞ்ஞான , வரலாற்று விஷயங்கள்,8543,20/8

பஞ்சாங்க ரகசியங்கள் -5 ; 8547,  சீனிவாசன் கட்டுரை,21/8

கடல் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8548,21/8

தீர்த்த யாத்திரை செய்வதால் பலன் உண்ட?8549, 218

 ஒரே ஒருமுறைதான் உன்னோடு….சீனிவாசன் கட்டுரை,8553, 22/8

 நீ பாதி, நான் பாதி , சீனிவாசன் கட்டுரை, 8558, 23/8

குப்பை பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8554,22/8

கொல்லன் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8559,23/8

தம்பி பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8564, 24/8

உலகம் அழியுமா? புதிய புஸ்தகம், புதிய செய்தி; 8565,24/8

தமிழ் கேள்வி பதில் on Magnetic Pole Change 8566, 24/8

முடிஞ்சா காப்பி அடி, சீனிவாசன் கட்டுரை;8563, 24/8

கடன்  பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள், 8571 25/8

நாடி ஜோதிடம் பலித்தது; லண்டனில் நாடி ஜோதிடம் 8560, 8570

(சீனிவாசன், சாமிநாதன் கட்டுரைகள்)

ஜோதிடக் கட்டுரை- சொன்னாலும் வெட்கமடா ,சீனிவாசன் கட்டுரை, 857526/8கலியுகம் முடிந்து துவார  யுகம் நடக்கிறது 8576/26/8

கம்பளி பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8578, 26/8

சாண் முழம்  பற்றிய 6 பழ மொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8582, 27/8

உப்பு  பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8588, 28/8

அடிக்கல்ல குளிரு , சீனிவாசன் கட்டுரை, சகுனம், 8581,27/8

நான் பார்த்ததிலே  அவன்……..சீனிவாசன் ,  8586, 28/8

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த (செப்.காலண்டர்),8592, 29/8

பஞ்சாங்கம் பலித்தது , .சீனிவாசன், 8597, 30/8

கோடீஸ்வர ஜாதகம் எது? சீனிவாசன், 8591, 29/8

லட்சாதிபதியாக 4 சுலபமான வழி கள் 8602, சீனிவாசன் கட்டுரை 31/8

சித்திரம் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8593, 29/8

பொன் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8599, 30/8

வைரம்  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ;8603, 31/8

18 என்ற எண்ணின் மஹிமை- 1, 8598, 30/8

எண் பதினெட்டின் மஹிமை -2;  8604, 31 ஆகஸ்ட் 2020

—subham—

tags- Index 93, August 2020, Articles

‘தூங்கும் அழகி’ எழுதிய, க்ரிம் சகோதரர்கள் (Post No.10,019)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,019

Date uploaded in London – 25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

ஜெர்மனியைச் சேர்ந்த க்ரிம் சகோதரர்களை GRIMM BROTHERS  உலகம் என்றும் மறவாது. ஏனெனில் அவர்கள் ஐரோப்பா கண்டத்தில் வாய் மொழியாகப்  புழங்கிய புகழ்பெற்ற நாட்டுப்புற கதைகளை எழுத்து வடிவில் தொகுத்து அளித்தனர். அவர்கள் இவ்வாறு செய்திராவிடில் பல கதைகள் அழிந்தே போயிருக்கும். அல்லது காலப்போக்கில் உருமாறிப் போகும் .

SLEEPING BEAUTY உறங்கும் பேரழகி/ஸ்லீப்பிங் பியூட்டி , SNOW WHITE ஸ்னோ ஒயிட், RUMPLESTILTSKIN ரம்புல்ஸ்டில்ட்ஸ்கின்  ஆகியன மேலை நாட்டுச் சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் கதைகளாகும் .

ஜேகப் க்ரிம் , வில்லம் (வில்லியம்) க்ரிம் JACOB GRIMM AND WILHELM GRIMM ஆகிய இரண்டு சகோதர்கள்தான் இந்த அரிய, பெரிய வேலை யைச்  செய்தனர். இருவரும் ஹனோ HANAU என்ற ஜெர்மன் நகரில் பிறந்தனர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் , மார்பர்க் பல்கலைக்கழகத்திலே MARBURG UNIVERSITY படிப்பைத் தொடர குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டனர். படிப்பை முடித்துக் கொண்டு இரண்டு பெரும் நூலகங்கள், அரசாங்க அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள் என்று பல இடங்களில் வேலை செய்தார்கள் .

1812 முதல் 1822க்குள் மூன்று நாட்டுப்புற கதைத் தொகுப்புகளை வெளியிட்டனர். இன்றும் அவை க்ரிம் சகோதரர்களின் தேவதைக்  GRIMMS’ FAIRY TALES கதைகள் என்ற பெயரில் படிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள்  நிதி திரட்டினர் . இப்போது நாம் காணும் பெரிய ஜெர்மனி நாடு அந்தக் காலத்தில் பல குட்டி நாடுகளாகவும். சிற்றரரசர் ஆளும் பகுதிகளாகவும் இருந்தன. ஜெர்மனி ஒன்றுபட வேண்டும் என்று இந்த சகோதரர்களும் ஏனைய தலைவர்களைப்  போல விரும்பினார்கள் . அவர்கள் ஜெர்மன் மொழியும், கலாச்சாரமும் ஒன்றே என்று காட்டவும் தேவதைக்  கதைத் தொகுப்புகளைப் பயன்படுத்தினர். அவர்களுடைய ஆராய்ச்சி இதற்கு உதவியது.

அவர்கள் கதைகளைத் தொகுத்ததோடு நில்லாமல் அவைகளைச் சுவைபடச் சொன்னார்கள்; எழுதினார்கள். பழங்கால உலகில் நிலவிய மாயாஜாலம், அவர்களுடைய மேதாவிலாசம் ஆகியவற்றையும் நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்தினர். ஆகையால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் எழுதிய வடிவிலேயே இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன.

ஜேகப் க்ரிம் JACOB GRIMM

பிறந்த தேதி – ஜனவரி 4, 1785

இறந்த தேதி – செப்டம்பர் 20, 1863

வாழ்ந்த ஆண்டுகள் -78

****

வில்லம்  க்ரிம் WILHELM GRIMM

பிறந்த தேதி — பிப்ரவரி 24, 1786

இறந்த தேதி –  டிசம்பர் 16, 1859

வாழ்ந்த ஆண்டுகள் – 73

மொழியியல் துறையில் இவர்கள் செய்த ஆராய்ச்சியால் கிரிம் விதி என்ற ஒரு விதியும் உருவாக்கப்பட்டது

***

வெளியிட்ட நூல்கள்

1812-1822 – Grimms’ Fairy Tales (3 volumes)

–Subham–

tags -க்ரிம் சகோதரர்கள்

குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்! – 2(Post No.10,018)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,018

Date uploaded in London –  25 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்! – 2

((வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 23-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)(

ஒரு நாள் குகை நமச்சிவாயர் தனது சீடனை சோதிக்க எண்ணி தான் சாப்பிட்டதை தனது திருவோட்டில் உமிழ்ந்து அதை குரு நமச்சிவாயரிடம் கொடுத்தார். “இதை யார் காலடியும் படாத இடத்தில் கொட்டு” என்றார். ஆழ்ந்து சிந்தித்த குரு நமச்சிவாயர் யார் காலடியும் படாத இடம் தானே, என்று அதை தானே உண்டு விட்டார். பின்னர் குகை நமச்சிவாயர், “அதை எங்கே கொட்டினாய்?” என்று கேட்க குரு நமச்சிவாயர் அதைத் தானே உண்டு விட்டதாகவும் அது யார் காலடியும் படாத இடம் என்றும் கூறினார்.

 ஒரு நாள் குகை நமச்சிவாயர் ஒரு வெண்பாவின் பாதியைப் பாடினார் இப்படி:

“ஆல் பழுத்துப் பட்சியினுக் காகார மானதென

வேல் பழுத்து நின்ற நிலை வீ ணிலென –

இத்தோடு நிறுத்தியவர் தனது சீடனை நோக்கி, “இதை நீ முடி பார்க்கலாம்” என்றார்.

உடனே குரு நமச்சிவாயர் ‘”சாலவனச்

செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ

ஐயா நமச்சிவா யா” என்று முடித்தார்.

சீடனின் பக்குவ நிலையைக் கண்ட குகை நமச்சிவாயர், “அப்பனே! நீ ஞானத்தில் சிறந்தவன், இது போக க்ஷேத்ரம். நீ இங்கு இருக்க வேண்டா, தெய்வீக க்ஷேத்ரமான சிதம்பரம் செல்லலாம். நான் அண்ணாமலைக்கு அடிமையாக இருந்து இங்கேயே வாழ்கிறேன்” என்றார். குரு நமச்சிவாயர் இதனால் வருந்தினார். ஆனால் குகை நமச்சிவாயரோ, “இரு யானைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட முடியாது, கூடாது “ என்றார்.

தனது குருவின் வாக்கைப் போற்றிய குரு நமச்சிவாயர் உடனே பத்துப் பாடல்களால் குருவின் பெருமையைப் போற்றிப் பாடினார்.

“வாக்காலே தியானத்தாலே மனமகிழ் கிருபையாலே

நோக்காலே (ஸ்)பரிசத்தாலே நுண்ணிய பிறவி தீர்க்கும்

தாக்கான நமசிவாயம் சலக்கமெய் யாடுகின்ற

நாற்காலி காலதானால் நான் முத்தி பெறலுமாமே”

இப்படி குருநாதரைப் போற்றி விட்டு பிரியா விடை பெற்று குரு நமச்சிவாயர் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரம் நோக்கிப் புறப்பட்ட அவர் பசியால் வாடினார். அண்ணாமலை ஈசனைத் தொழுது உண்ணாமுலை தேவியை பசி தீர்க்குமாறு ஒரு பாடலைப் பாடினார்..

அண்ணா மலையார் அகத்துக் கினியாளே

உண்ணா முலையே உமையாளே – நண்ணா

நினைதோறும் போற்றி செய நின்னடியார் உண்ண

மனைதோறுஞ் சோறு கொண்டு வா

அவரது வேண்டுதலைக் கேட்ட அம்மை மனமிரங்கினாள்.

உடனே அம்பிகை அங்கு தனக்கு அர்த்தஜாம பிரசாதமாக தரப்பட்ட சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை தங்கத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து அவருக்குத் தந்தார். பிரசாதத்தை உண்டு பசியாறிய அவர் தங்கத் தட்டை ஒரு மரத்தின் அடியில் வீசினார்.

காலையில் கோவிலில் தங்கத் தட்டைக் காணாத அர்ச்சகர் திகைத்தார். பலரும் அங்கு குழுமி தங்கத் தட்டைத் தேட ஆரம்பித்தனர். “தங்கத் தட்டு மரத்தின் அடியில் கிடக்கிறது. அங்கே செல்லுங்கள்” என்று கோவிலிலிருந்து அசரீரி ஒலி எழவே அனைவரும் அங்கே சென்று தட்டை எடுத்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரிக்கு குரு நமச்சிவாயர் வரவே அவருக்கு தில்லை நகரின் வானளாவிய கோபுரங்கள் நான்கும் தெரிந்தன.

உடனே மனமுருகிய குரு நமச்சிவாயர்,

கோபுரங்கள் நான்கினையும் கண்ட மட்டிற் குற்றமெலாம்

தீ பரந்த பஞ்சது போல் சென்றதே – நூபுரங்கள்

ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்

பார்க்கின்றார்க் கென்னோ பலன்” என்று பாடி சிதம்பரநாதனை வழிபட்டார்.   

     தில்லையில் நடனமாடும் கூத்தப் பிரானை தரிசித்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அது அவரது குருவான குகை நமச்சிவாயர் போல அவருக்குக் காட்சி தரவே ஆனந்தம் பொங்கப் பாடினார் இப்படி:-

“திருவணாமலையிறி குகை நமசிவாய தேசிக வடிவமாயிருந்து

கரவனாமடியேன் சென்னி மேல் உனது கழலினை வைத்தவாறுணரேன்

விரகநாரியரைப் புதல்வரைப் பொருளை வேண்டிய வேண்டியதனைத்தும்

பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்பலவனே! பரமராசியனே!”

பரமராசியனை அதி வேகத்தில் நூறு பாடல்களில் அவர் போற்றிப் பாடிய பாமாலை பரமராசிய மாலை என்று போற்றப்படுகிறது. இன்றும் அப்பாடல்கள் நம்மிடையே உள்ளன.

தில்லையில் அவர் நடத்திய அற்புதங்கள் ஏராளம். பொன் தாம்பாளத்தை ஏந்தி நடராஜப் பெருமானை அவர் துதிக்கவே அதில் ஒரு பொற்காசு விண்ணிலிருந்து விழுந்தது. நடராஜருக்கு அப்போது இல்லாமல் இருந்த பாதச் சிலம்பு, கிண்கிணி, வீர கண்டாமணி உள்ளிட்ட ஆபரணங்களை நிறைய பொருள் செலவில் அவர் தயாரித்து நடராஜருக்கு அணிவித்ததோடு ஒரு முறை அனைவரும் பார்க்க நடராஜரை கூத்தியற்றிக் காட்டுமாறு வேண்டினார். நடராஜரும் கூத்தியற்றிக் காட்டினார். இப்படிப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அவரது அற்புதங்கள் ஒரு நீண்ட பட்டியலாகும்.

For the truly faithful no miracle is necessary, for those who doubt no miracle is sufficient – Nancy Gibbs

நம்பிக்கை உடையவர்களுக்கு அற்புதங்கள் அவசியமே இல்லை, சந்தேகப் பேர்வழிகளுக்கு எத்தனை அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவை போதுமானதில்லை என்பது உண்மையான வாக்கியம்!

     நீண்ட காலம் வாழ்ந்து பின்னர் திருப்பெருந்துறையிலே குரு நமச்சிவாயர் முக்தி அடைந்தார்.

குகை நமச்சிவாயரும் நீண்ட காலம் வாழ்ந்து திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்தார். அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள கோபுரத்திலிருந்து மலையில் ஏறினால் சிறிது தூரத்தில் இந்த ஜீவ சமாதி ஆலயத்தை அடையலாம். குகை நமச்சிவாயர் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பல நமக்குக் கிடைக்கவில்லை.  அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா,  உள்ளிட்ட சில நூல்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன.

சித்தர் பூமி பாரதம் என்பதை நிரூபிக்கும் வகையில் சித்தர் பரம்பரையில் தோன்றி அனைவருக்கும் அருள் பாலித்த குகை நமச்சிவாயர் மற்றும் குரு நமச்சிவாயர் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்.

நன்றி, வணக்கம்!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

t a g s — குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர் – 2

AMAZING EPITHETS OF VEDIC GODS IN RIG VEDA! (Post No.10,017)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,017

Date uploaded in London – 24 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WHEN YOU READ POSITIVE WORDS, YOU GET POSITIVE THOUGHTS. WHEN YOU GET POSTIVE THOUGHTS, YOU STRIVE HARD AND WIN IN ALL YOUR WORKS. IT LOOKS LIKE THAT IS HOW THE VEDIC SEERS APPROACHED LIFE. LOOK AT THE POSITIVE EPITHETS, ADJECTIVES IN JUST TWO HYMNS IN EIGHTH MANDALA OF THE RIG VEDA, THE OLDEST ANTHOLOGY IN THE WORLD.

TO AGNI/Fire

8-60

O Son of Strength

Child of Force/ Power

Best offeror

Cheerful

Sage

Herald

Bright God

Pure Lord

Most youthful

Eternal

Famed art thou

Preserver

Righteous

O refulgent kindled god

Most resplendent blaze

Conquering guards

Auspicious

Unassailable

Nearest Friend

O Helper

Bestow on us more glorious but righteous

O Excellent in Strength

Quicken our thoughts that find out wealth

Child of Strength

Agni ! Praise singer

Lord of Men

Burner of Raksasas

O thou Rich in Light

Drive hunger to distant pastures

(Griffith Translation; also available in Wikipedia)

Xxx

RV 8-61

To Indra

Strong

Independent Ruler

Thy soul longs for Soma Juice

Victor in the fight

Vanquishing even the Invincible

Changeless in Truth

O Fair of Cheek

Thunderer

Lord of Power

O Golden Well(spring)

Bring me whatever thing I ask

Fort render

Breaker down of Forts

Mighty one

Our Friend

Powerful Conqueror

Debt Claimer

Best Charioteer

Lover of the Song

A crushing Warrior

O Satakratu (Lord of 100 Tasks)

Lord of the Brave

–subham–

 rig Veda- Rig Veda, Epithets, Vedic Gods, Positive thoughts 

LONDON CALLING GNANAMAYAM 23-8-2021 (Post No.10,016)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,016

Date uploaded in London – 24 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

23 -8– 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN

LONDON DR V S MANI’S INTERVIEW ON E BOOK PUBLISHING- 20 MINUTES

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT GURU NAMASIVAYAR AND GUHAI NAMASIVAYAR 15 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

SONG BY MRS ANNAPURANI PANCHANATHAN-4

TOTAL TIME- APPR. 05 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014;

NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com ) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast2382021

LONDON CALLING THAMIL MUZAKKAM 22-8-2021

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,015

Date uploaded in London – 24 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

22-8-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – MRS KRITHIGA BALAJI, DUBLIN, IRELAND.

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ONVEERA RAGHAVA PERUMAL TEMPLE IN THIRUVALLUR10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  –  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

Talk by Mr Chokkalingam, Teacher MDT college Higher Secondary School on Bharatiyar Class room and Webinar in connection with Bharati Memorial centenary

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014;

NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com ) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags – broadcast22-8-2021