Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘த பவுண்டைன் ஹெட்’ THE FOUNTAINHEAD மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ATLAS SHRUGGED நாவல்களை எழுதிப் புகழ் பெற்ற பெண்மணி அய்ன் ராண்ட் AYN RAND ஆவார் . கம்யூனிசத்தின் பரம எதிரி; முதலாளித்துவத்தின் பெரிய ஆதரவாளர். ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
அய்ன் ராண்ட் AYN RAND எழுதிய நூல்களும் அவருடைய கொள்கைகளும் 1950, 1960ம் ஆண்டுகளில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன தனி மனித உரிமையே பெரிது; தனிப்பட்டவர் சுதந்திரம், தன் முயற்சி முக்கியம் வாய்ந்தது என்று பொருள்படும்படி அவர் நாவல்களை எழுதினார். அமெரிக்க ஜனாதிபதி ரீகன் ஆட்சிக் காலத்தில் அவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் அவை திரைப்படங்களாகவும் உருவாயின.
ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோது ரஷ்யப் புரட்சி வெடித்தது. ஜார் (CZAR) மன்னர் ஆட்சி ஒழிந்து கம்யூனிஸ ஆட்சி ஏற்பட்டது. அய்ன் ராண்ட் அதன் பின்னரும் ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் படித்தார். 18 வயதில் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் அவருக்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வெறுப்பை உண்டாக்கியது.
அமெரிக்காவில் குடியேறி 1931-ல் அமெரிக்க பிரஜை ஆனார். ஹாலிவுட்டில் திரைப்பட வசனங்களை எழுதும் பணியில் அமர்ந்தார். அமெரிக்காவுக்குப் போனவுடன் தீவிர கம்யூனிச எதிர்ப்பும், முதலாளித்துவ ஆதரவும் அதிகரித்தது மனிதர்கள் சுயமாகச் சிந்தித்து அவர்களுடைய சொந்த நலனுக்குப் பாடுபடுவதே முக்கியம். சமூகம் என்பது அதற்குப் பின்னரே என்று எழுதினார். இந்தக் கொளகைகளை அடிப்படையாக வைத்து ராண்ட் 4 நாவல்களை எழுதினார் அவருக்கு 31 வயதாகும்போதே அவருடைய முதல் நாவல் WE THE LIVING வீ த லிவிங் பதிப்பாகியது. அவர் படைத்த கதாநாயகன் சமூக நலன்களை ஒதுக்கிவிட்டு தனது ஆசைகள் பூர்த்தியாக உழை த்து அதில் வெற்றியும் அடைகிறான்.
அவர் எழுதிய மூன்றாவது நாவலான பவுண்டைன்ஹெட்டில் THE FOUNTAINHED கதாநாயகன் ஒரு கட்டிடக் கலைஞன். அவன் தனது உரிமைகளே பெரிது என்று எண்ணு வன் . இது திரைப்படம் ஆக்கப்பட்டபோது அதில், காரி கூ ப்பர் GARY COOPER முதலியோர் நடித்தனர். படமும் வெற்றிநடைபோட்டது.
பல்கலைக்கழக மாணவரிடையே அய்ன் ராண்டின் நாவல்கள் பிரபலமாகின. சுயநலத்துடன் செயல்படுவதே சரி என்று நினைத்தனர் அக்கால மக்கள். இப்போது அந்த தத்துவம் மாறிவிட்டது .
பிறந்த தேதி -பிப்ரவரி 2, 1905
இறந்த தேதி – மார்ச் 5, 1982
வாழ்ந்த ஆண்டுகள் -77
எழுதிய நூல்கள்…..
1936- WE THE LIVING
1938- ANTHEM
1943- THE FOUNTAINHEAD
1957- ATLAS SHRUGGED
1961- FOR THE NEW INTELLECTUAL
1965- THE VIRTUE OF SELFISHNESS
1969- THE ROMANTIC MANIFESTO
1971- THE NEW LEFT: THE NEW ANTI INDUSTRIAL REVOLUTION
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 2
ச.நாகராஜன்
இதை அறிவியல் நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட தலம் அவிநாசி என்று சொல்லி அதிசயிக்கலாம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை, அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி, சிவபிரான் அருளால் உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம். அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது சுந்தரர் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர். எங்கும் போகாமல், திருவொற்றியூரிலேயே இருப்பதாக சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்து கொண்ட அவர் திருவாரூர் சிவபிரானை பார்க்காமல் இருக்க முடியாமல் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டவே அவர் கண்கள் குருடாயின. நீ எனக்கு மகத்தில் புகுந்த சனி போல அல்லவா விளங்குகிறாய். என் கண்கள் குருடாகி விட்டனவே. பார்வையைத் தா என்று அன்புடன் அவர் சிவனை நிந்தை செய்கிறார். மகத்தில் சனி புகுந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிறது ஜோதிடம். பார்வையைத் தா என்று அவர் வேண்ட பின்னர் பார்வையையும் பெற்றார். சுந்தரர் நாடெங்கும் சிவஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்ததால் நாட்டிலே வழக்கில் உள்ள எளிய இனிய பழமொழிகளை வைத்து உணர்தற்கு அரிதாக உள்ள ஆழ்ந்த கருத்துக்களை விளக்குபவர். திருவிடைமருதூர் பதிகத்தை எடுத்துக் கொள்வோம் : கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்றது போல என்கிறார். அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன், புல் நினைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை, வாழைதான் பழுக்கும் நமக்கு – இப்படி வழக்குப் பழமொழிகளைத் தருகிறார் அவர். இன்னும் ஏராளமான பழமொழிகளை அவர் பாடல்களில் காணலாம்.
சுந்தரர் இனிய தமிழிலே வித்தகர். அவர் பாடல்களில் நாம் காணும் சொற்கள் மொத்தம் 30322.. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய் அமிர்தத் துளியே.
சுந்தரர் அனைத்து மகான்களின், அடியார்களின் பாராட்டுகளைப் பெற்றவர். எடுத்துக்காட்டிற்குச் சில!
வாழ்வாவது மாயம் என்று உரைத்தோன் மாமலர்த் தாள்
தாழ்வாம் எப்போதும் தலை என்று பாடினார் அருட்பிரகாச வள்ளலார்.
புராணத் திருமலை நாதர் தனது சொக்கநாத உலாவில், “ மலரடைந்த புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளை, வா என்ற பெருமாளும்” என்றும்,“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு” என்றும் இன்னும் பலவாறாக அவரைப் புகழ்கிறார். குமரகுருபரரோ,”சொல்மாலை தொடுத்தணிந்த தொண்டர்” என்று புகழ்கிறார். சேக்கிழார் பிரானோ அவரது சொல்மாலைகளைத் தமிழ் மாலை என்றும் இன்னும் பல விதத்திலும் புகழ்ந்து கூறுகிறார். அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் காப்பியத் தலைவர் அல்லவா சுந்தரர்! அவரைப் புகழ்ந்துரைக்க அவரிடம் புகழுரைக்குப் பஞ்சமேது?! ஆனால் இவை எல்லாம் பொய்யுரை அன்று; பொருளுரையாகும்!
சுந்தரர் அடியார்க்கு அடியானாக இருக்க விரும்புவதை திருவாலங்காடு பதிகம் முழுவதிலும் காணலாம். “ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே” என்று குறிப்பிடுகிறார்! அத்துணை எளிமையும் சிவனடியார் பால் மதிப்பும் கொண்டவர் அவர்!
கடவுள்எப்படி இருப்பார் என்பதைச் சுவைபட அவர் சொல்லும் விதமே தனி! பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்திடைச் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருள் சுடர் ஒப்பாய் என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் தலத்தில் அவர் விவரிக்கிறார். கடவுளைக் காட்டு என்னும் நாத்திகர்களுக்கு அவர் தரும் நல்ல பதில் இது. பழத்தின் சுவையை எவனாலாவது காண்பிக்க முடியுமா, அனுபவிக்க அல்லவோ வேண்டும் அது! தமிழ்ப் பண்ணின் சுகமே சுகம் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும்? அனுபவிப்பது அல்லவோ சங்கீத சுகம்! ஆண்டவன் அருளை அடைதல் அன்றோ விவரிக்க முடியாத சுகம்! கடவுள் எங்கு இருக்கிறார்? வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் அவர், சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார் என்பதுவே அவர் பதில்! நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை கதிரானை என்று கூறி சரணடைந்தவர் தம் உள்ளத்திலேயே அவன் உறைகின்றான் என்கிறார் அவர்!
திருஞானசம்பந்தர் தொடங்கி சுந்தரர் வரை வளர்க்கப்பட்ட கேள்விகளாகக் கேட்கும் பதிகம் ஒன்று புதுப் பாணிப் பாடல் உத்தியைத் தருகிறது. பாறு தாங்கிய காடரோ, தேனை ஆடு முக்கண்ணரோ, கோணல் மாமதி சூடரோ என்ற பாடல்களால் பின்னாலே வந்த திரைப்படக் கவிஞர்கள் கூட அதைத் தமக்கு உகந்தது என எடுத்துக் கொண்டனர் இல்லையா? என்ன தவம் செய்தனை யசோதா, உள்ளிட்ட அருமையான கீர்த்தனைகளைக் கேட்டு ரசிக்கிறோம். இன்னும் அவரால் உத்வேகம் பெற்ற கவிஞர்கள் நூற்றுக் கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, பேசுவது கிளியா, பாடுவது குயிலா என்று இப்படி கேள்விப் பாடல்களாக அல்லவா இயற்றியுள்ளனர்! இரு சொற்களை அடுக்கிப் பாடும் அவரது உத்தியும் இன்றைய நாட்களில் கவிஞர்களால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. பொன்னவன் பொன்னவன்,மின்னவன் மின்னவன், அன்னவன், அன்னவன் ,என்னவன் என்னவன் என்ற பாணியில் எத்தனை பாடல்களை இன்று நாம் கேட்கிறோம்!
அவரது நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை; அப்படி ஒரு நகைச்சுவைத் திலகம் அவர்; எடுத்துக்காட்டிற்கு ஒரே ஒரு பாடல் - நமண நந்தியும் கரும வீரனும் தருமசேனனும் என்று இவர் குமணன் மாமலைக் குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாணிலா அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே!
எப்படி ஒரு கிண்டல் பாருங்கள் - ‘ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி’ என்கிறார்!
* தொடரும்
tags- பரிமாணம் ,காப்பியத் தலைவர், சுந்தரர்! –2
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Bharata, author of Natyasastra, gives amazing details about the role of colours in the dance dramas. It is not surprising to see the use of colours because we see colour coding even in Bhagavatha. Krishna wearing yellow clothes is called Peetambaradhari and Balarama wearing blue clothes is called Neelambaradhari.
Bharata even applies colour coding for seats. Please see the link given at the end.
Hindus’ obsession with colours began in Rigvedic period. Indra’s horses are described as tawny coloured. Sometimes they are red. Different colour skins of cows are also mentioned by Vedic Rishis.
Coming to ornaments and hair styles, he gives minute details. Before going into the details of colours and ornaments, let me make my comments
Hindu dramas of ancient India followed their own rules in ornaments and dresses. It has nothing to do with the Greek dramas . The big difference between the Hindu statues and Greek statues is ornaments. Greeks don’t wear ornaments. Hindu statues and paintings of Ajanta, Bharhut,Sanchi, Aamaravati are seen wearing ornaments all over the body. They have names for ornaments from head to toe.
Colour coding is also not found in Greece .
Another important point is the division of Hindu society. Foreigners who translated Vedas made adjective words into proper nouns. Arya should be translated as ‘educated, cultured ‘ etc. But they put capital A for Arya and made them a race. In the same way Dravidians should be southerners. But they put one capital D for the word and made it a race. We have very good evidence against Maxmuller gang, the advocates of Aryan-Dravidian theory. Here in Natyasastra, we don’t find Aryan or Dravidians. If Dravidians are mentioned we know it is about southerners. But they are mentioned with other peoples. In short, they are not racial.
Now let us look at the colours , from Chapter 23 of Natya sastra
Make- up (Slokas 72-89)
“Now I shall speak about the proper make up of male characters.
First of all their bodies should be painted. White, blue, yellow and red are primary colours. There are derivative colours as well as minor colours.
The derivatives are
White + blue = Pandu (yellowish white)
White +red = Padma (lotus colour )
Yellow +blue = Harita (Green)
Blue + Red = Kasaya (deep red)
Red + Yellow = Gaura (pale red)
Besides these, there are many colours made up of three or four primary colours.
Once the fans get used to these colours, they can easily understand the story. Dialogues may be inaudible, but the colours of characters will help them to recognise them.
Bharata continues with hair styles and ornaments…
Slokas 49-61
Celestial women should be distinguished by their ornaments and costumes, and females of Vidhyadhara, Yaska, Naga and Apsara groups as well as daughters of sages and gods to be distinguished by their costumes. The same rule applies to Siddha, Gandharva, Raksasa and human females.
(Here we must note that there is no Arya or Dravidian classification. Through out devotional Tamil literature Lord shiva is addressed as Arya. It has no racial connotation.)
The vidhyadhara women should have their hair tied in a top knot, must have many pearls, but wear white costume.
The Yaska and apsara women should wear many jewels, costume to be the same but the yaksa women’s hair must be worn in a Sikha. The naga women should wear ornaments like goddesses, should wear ornaments of pearls and jewels, but the latter must be in the form of wild fruits.
Daughters of sages must wear their hair in a single braid and there should not be many ornaments.
The siddha women must wear plenty of ornaments pearls and emeralds and yellow costumes.
The gandhrva women should wear ornaments of rubies, costumes of saffron colour and a Vina in their hands.
The Rakshasa women should wear blue stones, white protruding teeth and black costume; the goddess pearls and Vaidurya and costumes green like a parrot tail, but this only while they are enjoying love;I n other conditions white.
xxx
Hair styles for different regions are as follows…..
Avanti women- curled hair
Gauda- a sikha pasa
Abhira women- two braids with head band
North east women- a sikhandaka standing up. They must cover their body up to the hair.
Women of South- wear tattoos on their fore heads
Then he describes make ups for different characters.
Let me summarise,
All these show that our drama and dance have unique features. The oldest portion of Natyasastra goes back to fifth century BCE.
27 Feb 2021 — The ”Natya Shastra” is the oldest extant literature in the field of dramatic arts. The black-coloured sculpture, conceptualised by classical …
Colour Coding of Seats in Ancient Theatres! | Tamil and Vedas
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பற்றி முன்னரே பல கட்டுரைகள் இதே ‘பிளாக்’கில் எழுதி வெளியிட்டு விட்டேன். அவர் பற்றிய மேலும் சில குறிப்புகள் இதோ :
பிறந்த தேதி – செப்டம்பர் 18, 1709
இறந்த தேதி – டிசம்பர் 13, 1784
வாழ்ந்த ஆண்டுகள் – 75
பதினெட்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கிய அறிஞர் சாமுவேல் ஜான்சன் DOCTOR SAMUEL JOHNSON. அவர் ஆங்கில அகராதியை முதல் முதலில் உருவாக்கினார். அவர் இலக்கிய விமர்சகர்,புலவர், மொழி பெயர்ப்பாளர்.
இங்கிலாந்தில் லிச்பீல்ட் (LICHFIELD) என்னும் இடத்தில் பிறந்த அவர், தந்தையின் புஸ்தகக் கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாகப் படித்தபோதிலும் வறுமை காரணமாக பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.
ஜான்சன் பயந்த சுபாவம் உள்ளவர். மேலும் பழகும் விதமும் இங்கிதமும் அறியாதவர். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் பார்வைக்குறைவும் , செவிட்டுத் தன்மையும் இருந்தது. வேலை கிடைக்காமையால் அடிக்கடி மனச் சோர்வும் ஏற்பட்டது.
28 வயதில் லண்டனில் குடியேறி 20 ஆண்டுகளுக்குப் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். 53 வயதில் அரசாங்கம் ஒரு பென்சன் கொடுக்கும் வரையில் அவரை வறுமை வாட்டியது.
இலக்கிய சேவைக்காக அரசு அவருக்கு பென்சன் கொடுத்தது. அவருடைய நண்பர் ஜேம்ஸ் பாஸ்வெல் JAMES BOSWELL அவருடைய மேதாவிலாசத்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டினார். பி காலத்தில் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதினார்.
29 வயதில் ஜான்சன் எழுதிய லண்டன் LONDON என்ற கவிதை வெளியானது . இது லத்தீன் மொழிக்கு கவிஞர் யுவனல் (JUVENAL’S THIRD SATIRE) கவிதையைத் தழுவியது. அதற்கு வரவேற்பு கிட்டவில்லை.அவருடைய மற் றொரு கவிதையைத் தழுவி எழுதிய கவிதை (THE VANITY OF HUMAN WISHES), ஆசை வயப்பட்ட மனிதன் படும் அல்லல்களை எடுத்துக்காட்டுகிறது.
‘ஆங்கிலப் புலவர்களின் வாழ்க்கை வரலாறு’ LIVES OF THE ENGLISH POETS என்று அவர் எழுதிய நூலில்தான் அவருடைய திறமை வெளிப்பட்டது. ஒவ்வொரு புலவரின் கவிதைகளை அவர் விமர்சித்தது அவருடைய புலமையைக் காட்டியது . அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது .
ஏழு ஆண்டுகள் உழைத்து 40,00 சொற்களைக் கொண்ட முதல் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இதனால் ஆங்கில இலக்கிய உலகில் அழியாத இடம் பெற்றார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் நமஸ்காரம். வணக்கம். இன்றைய தினம் ஆடி மாதம் சுவாதி நன்னாளையொட்டி சுந்தரர் சப்தாஹம் – ஏழு நாள் விழாவின் இரண்டாவது நாளாக இன்றைய நன்னாள் அமைகிறது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் சைவர்களை ஒருங்கிணைத்து சிவனருளைப் பெற்றுத் தரும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானாசிரியர்களுக்கும் எனது நமஸ்காரங்கள். சிவனடியார்களுக்கும் மெய்யன்பர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் என் நமஸ்காரம் வணக்கம். நாயன்மார்களில் பன்முகப் பரிமாணமும் சிறப்புக்களையும் கொண்ட காப்பியத் தலைவராகவும் ஒரு அபூர்வமான நாயனாராகவும் சுந்தர மூர்த்தி நாயனார் திகழ்கிறார்.
அது என்ன பன்முகப்பரிமாணம் என்றால் அதற்கு பதிலை விரித்துக் கொண்டே போகலாம்.
முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார்.
திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் போலல்லாது சிவபிரானை சகா த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ என்று சகாவாக, ஏன் அனைத்துமாக அவர் சிவபிரானை வழிபட்டதும் அவரது வாழ்க்கையில் ஒரு தனிச் சிறப்பாகும்.
நடுநாட்டில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்தவர் சுந்தரர். அவரது இயற்பெயர் ஆரூரன். ஆலாலசுந்தரர் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவலோகத்தில் பார்வதி தேவியாருக்கு சேடியராக இருந்த கமலினி, அனிந்திதை ஆகிய இருவரைப் பார்த்து ஆசை கொண்டார். அதனால் அவரை பூலோகம் சென்று அதன் பயனை அனுபவிக்குமாறு சிவபிரான் அருள்பாலிக்க அவர் பூவுலகில் பிறந்தார். தேவியாரின் சேடியர் இருவரும் பரவையாராகவும் சங்கிலியாராகவும் பிறந்தனர். 18 தேவ நாட்கள் அதாவது 18 மனித ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து செயற்கரிய பணியை எல்லாம் செய்து முடித்து தன் இருப்பிடம் மீண்டார் அவர்.
பூவுலகில் சுந்தரத் தோற்றத்துடன் அவதரித்த அவருக்கு சிவபிரானே சுந்தரர் என்ற அழகிய நாமத்தை அளித்தார்.
தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய சிறுவனைக் கண்ட திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையில் வளர்க்கலானார். மணமுடிக்கும் வயதில் அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் வேளையில் சிவபிரான் அங்கு வந்து அவரை தடுத்தாட் கொண்டார். சிவபிரானுக்கே அவர் மீளா அடிமையானார். அவர் பாடிய பாடல்கள் மொத்தம் 38000 என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஏழாம் திருமுறையில் அவர் இயற்றியுள்ள பதிகங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை 101 பதிகங்கள். 84 தலங்களுக்குச் சென்று அவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1037. சுந்தர நாயனாரின் பாடல்கள் அனைத்தும் அவற்றின் சிறப்பைக் கருதி, திருப்பாட்டு என்று விசேஷமாக அழைக்கப்படுகிறது.
அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அவர் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் பண்கள் உண்டு. ஆகவே அவை பண் சுமந்த பாடல்கள் என்று சிறப்பாகக் கூறப்படுகின்றன.அத்தோடு தேவாரப் பாடல்களில் செந்துருத்திப் பண்ணில் பாடலை இயற்றியவர் அவர் ஒருவரே தான். வேறு யாரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
அவர் ஆற்றியுள்ள அற்புதங்கள் பல.
Time and Space என்று கூறுகின்றோமே காலம், வெளி என்று! – இவை இரண்டையும் கடந்த அருளாளர் அவர். ஏனெனில் காலமும் கணக்கும் நீத்த காரணனின் தோழர் அல்லவா அவர்!
சிவபிரான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் அவர் எடுத்த போது உலகமே வியந்தது. Space – இடம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் நிரூபித்தார்.
அடுத்து அவிநாசி என்று இன்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூரில், அவர் சிவனடியார் வீட்டில் நடந்த ஒரு உபநயன விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது எதிர் வீட்டிலிருந்து வந்த அழுகைக் குரலைக் கேட்டு அது என்ன அழுகைக் குரல் என்று விசாரிக்க, சிவனடியாரின் பிள்ளையின் வயதை ஒத்த தன் மகனை இழந்த தாயின் புலம்பல் அது என்று கேட்டு பச்சாதாபம் கொண்டார். இரு வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயதாகியிருந்த போது அவனை குளத்திலிருந்த முதலை ஒன்று விழுங்கிற்று என்று அறிந்து கொண்ட அவர் நேராக குளத்தருகே சென்றார். தனது நெருங்கிய தோழரான சிவபிரானை நோக்கிப் பாடலானார். இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்! நான்காவது பாடலில், உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்று இப்படி கட்டளை இடும் தொனியில் பாடினார்.
உடனே நீரில்லாமல் வற்றி இருந்த குளத்தில் நீர் நிரம்பியது. அதனுள்ளிருந்து இரண்டு வருடங்கள் முன் ஐந்து வயதாக இருந்த பாலகனை விழுங்கிய முதலை இப்போது ஏழு வயதாக் வளர்ந்த நிலையில் அவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றது. இது அவர் காலம் கடந்த அருளாளர் என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் வியந்து ஆராயும் TIME TRAVELஐ இது மெய்ப்பிக்கிறது. காலம் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதில் அவதாரங்களும் அருளாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனி ம்ஹரிஷியின் குருகுலத்தில் குருகுலவாசம் முடிந்த நிலையில் குருதக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது ஆசாரியர் நீ எனக்கு மாணவனாக வந்ததே என் பாக்கியம் என்கிறார். ஆனால் ஆசிரமத்தின் உள்ளிலிருந்து குரு பத்னியின் அழுகைக் குரல் கேட்கவே கிருஷ்ணர் பதறிப் போய் என்ன விஷயம் என்று கேட்கிறார். குரு பத்னி தன் மகன் காலன் வசம் அகப்பட்டுக் கொண்டதைக் கூறி வருந்த, கிருஷ்ண பிரான், இதோ கொண்டு வருகிறேன் உங்கள் மகனை என்று கூறி விட்டு ஒரே பாய்ச்சலில் அவன் மகன் இருந்த பிரபஞ்சம் சென்று அவனை மீட்டு வரும் வரலாறு அதிசயமான ஒன்று. அதே போல திருஞானசம்பந்தர் இறந்து அஸ்தியாக இருந்த பூம்பாவையை மயிலையில் உயிருடன் மீட்ட சம்பவமும் அற்புதமானதே. Miracles are visiting cards of Saints! -அற்புதங்கள் என்பது அருளாளர்களின் அடையாள முகவரிகள்-என்பதே உண்மை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே
–திருமந்திரம்
திருமந்திரத்தில் பசுக்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறதோ அது ரிக்வேதத்தின் எதிரொலி ஆகும்.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திருந்து பத்தாவது மண்டலம் வரை உள்ள
10,000 மந்திரங்களில் பசுக்களைப் பற்றியும் குதிரைகள் பற்றியும் ஏராளமான
குறிப்புகள் உள்ளன. அதில் குதிரைகள் பற்றிய விஷயங்களில் அதிகப் புதுமை இல்லை.
வேகமாகப் போகும் குதிரைகள் வேண்டும் , போருக்கு ஏற்ற குதிரைகள் வேண்டும்
என்று கோருகின்றனர். ஆனால் பசுக்கள் பற்றி புதுமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன . குகைகளில் மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டான் அல்லது வேறு ஒரு கடவுள் மீட்டார் என்று எல்லா மண்டல ரிஷிகளும் பாடுகின்றனர்.
இதைப் படிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு முறை குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டதையா அவர்கள் இப்படி அடுத்தடுத்து பாடுகின்றனர்? அல்லது ஒவ்வொரு முறையும் இப்படி எதிரிகள் மறைத்து வைத்தார்களா?
எந்த மந்திரத்துக்கும் மூன்று வகை விளக்கம் சொல்ல முடியும்.
1.மந்திரத்துக்கு இலக்கிய ரீதியில் அர்த்தம் சொல்லாதே (Don’t take it literally) . அதன் மூலம் வரும் ஒலி அலைகளால் நல்ல விளைவுகள் ஏற்படும் அதைப் பாடிக்கொண்டே இரு. இதுதான்
பழமைவாதிகள் அணுகுமுறை . மடாதிபதிகளும் இப்படியே நம்புகின்றனர்.
2.மேலை நாட்டினரும் இந்து மத விரோதிகளும் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் பார்த்து புதிய வியாக்கியானம் செய்வார்கள். பெரும்பாலும் விஷமத்தனமான விளக்கமாகவே இருக்கும் .
‘சிஸ்ன தேவாஹா’ என்பதை காமத்தை வழிபடுவோர், செக்ஸ் (Lewd) விரும்பிகள் என்றே பல வெள்ளைக்காரர்களும் மொழிபெயர்த்தனர் . அவர்களில் விஷம் கொண்ட விஷமிகள் இது ஆண்குறியைக் குறிக்கும். ஆண் குறி என்பது சிவ லிங்கத்தைக் குறிக்கும். இது சைவர்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது; சிந்து வெளி மக்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது என்றெல்லாம் எழுதி அசிங்கப்படுத்தினர் .
3.மூன்றாவது அணுகுமுறை – அவர்கள் மறை பொருளில் , சிலேடைப் பொருளில் வேறு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்பர்.
இதில் எதுவும் சாத்தியமே. திரைப்படப் பாடல்களில் கூட இப்படி இரு பொருள்படும்படி பாடி செக்ஸ் விஷயங்களைக் கொண்டு வருவதைக் காண்கிறோம்.
சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார், திருமூலர் போன்றோர் வெறும் எண்களை மட்டும் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். வேதங்களிலும் ஒரே ம ந்திரத்தில் ஆறுமுறை எண் மூன்று வருவதைக் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த கம்ப ராமாயணப் பாடலான “அஞ்சிலே ஒன்று பெற்றான்”…………. என்பதில் எண் 5 என்பது பல பொருள்களில் வருவதை அறிவோம்.
மறை பொருளுக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரை ஜவுளிக்கடைகளில் பெண்கள் பயங்கரமாகப் பே ரம் பேசுகையில் கடை ஊழியர் கடை முதலாளியை ஒரு பார்வை பார்ப்பார். அவர்கள் தங்களுக்கே உரிய பரி பாஷையில் வாடிக்கையாளருக்கு இந்த விலையில் கொடு அல்லது கொடுக்காதே என்று சொல்லுவர் . அது தமிழ்ச் சொல்லாகவே இருக்கும் ஆனால் அதன் பொருள் வாடிக்கையாளருக்கு விளங்காது . இன்னொரு உதா ரணமும் சொல்லலாம் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாதென்பதற்காக பெற்றோர்கள் ‘க’ என்ற எழுத்தை எல்லா எழுத்துக்களுடனும் சேர்ப்பர். சாக்லேட் என்பது குழந்தைகளுக்குத் தெரியக கூடாது என்பதற்காக கசா, கக் , கலே , கட் எங்கே இருக்கிறது ? என்பர் .
ஆகையால் வேத மந்திரத்தை இந்து மத அறிஞர்களே அணுகமுடியும். நாம் பார்ப்பதோ, வேத மந்திரங்களை நம்பாத, வேத மதத்துக்கு எதிரான, வேதங்களை செயல் முறையில் உபயோகிக்காத ‘அஹிந்து’க்களின் பொருள் ஆகும்.
திருவள்ளுவர் ஐம்புலன்களுக்கு ஐந்து மத யானைகளை ஒப்பிடுகிறார். அவர்கள் பயன்படுத்தும் இடத்தைக்கொண்டு யானை என்பதற்கு புலன்/ இந்திரியம் என்று நாம் பொருள் கற்பிக்கிறோம். இதே போல திருமூலரும் பசுக்களை ஐம்புலன்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்-
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே
–திருமந்திரம்
இங்கு பார்ப்பான் என்பது உள்முகமாகப் பார்க்கும் அகக்கண் உடையவன் இரு பொருள் கொள்ள வேண்டும். அவனிடமுள்ள பசுக்கள் ஐம்புலன்கள்.; அதைக் கட்டுப்படுத்தாமல் மேயவிட்டால் அது ஆசை வயப்பட்டு வெறி கொண்டு திரியும் . அதையடக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் அவை உள்ளத்திலே அமிர்த தாரையைப் பொழியும். அதாவது யோகத்தில் நிலைத்து நிற்பவர்கள் புலன் இன்பங்களைக் கைவிட்டால், அவர்கள் உள்ளத்தில் பால் போன்ற தூய்மை ஏற்படும். பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் போல இந்தப்பாலால் உள்ளத்துக்குக் உரம் கிடைக்கும் .
இப்போது ரிக் வேத மந்திரங்களை ஒப்பிடுங்கள் :-
ரிக் வேதம் 1-6-5
இந்திரனே, நீ காற்று தேவனான ‘மருத்’ கூடச் சேர்ந்து குகையினுள் மறக்கப்பட்டிருந்த பசுக்களைக் கண்டு பிடித்தாய் .
இதற்கு உரை எழுதியோர் இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் (இடி, மின்னல்) மலையிலுள்ள மேகங்களை வெளிக்கொணர்ந்தார். (மேகங்கள் = பசுக்கள்)
1-11-5
வஜ்ராயுதத்தை ஏந்தி நிற்கும் நீ (இந்திரன்), பசுக்களை மறைத்து வைத்திருந்த வலனின் குகையைத் திறந்தாய்; அவனால் துன்பமுற்ற தேவர்கள் உன்னுடைய நட்பை பெற்றவுடன் அச்சத்தை விட்டார்கள்
இங்கேயும் பசுக்கள் என்பதற்கு மேகங்கள் என்றே உரைகாரர்கள் எழுதியு ள்ளனர்
7-87-4
பசுவுக்கு மூவேழு நாமங்கள் உண்டு
இதற்கு உரை எழுதியோர் இங்கு பசு என்பது ‘சொல்’ WORD என்றும் 21 வகையான வேள்விகள் அல்லது 21 சந்தங்கள் என்றும் ஊகிக்கின்றனர் . தமிழ் இலக்கிய புறநானூற்றிலும் (பாடல் 166) மூவேழ் துறை, யாகம் தொடர்பான பொருளில் வருகிறது.
1-191-14
இங்கு மூவேழு பெட்டை மயில்கள் என்று விஷக்கடி மந்திரத்தில் வருகிறது. பாம்பும் மயிலும் எதிரி என்பது தெரிந்ததே.1-191-12ல் மூவேழு அக்கினிப் பொறி கள் என்றும் ரிஷி அகஸ்தியர் பாடுகிறார். இங்கெல்லாம் 3x 7=21 என்பதன் பொருள் விளங்கவில்லை சாயனர் 21 பொறிகளை 21 பறவைகள் என்கிறார். ஏன் 21 என்று எவருக்கும் சொல்ல முடியவில்லை .4-1-16 மந்திரத்திலும் பசுவுக்கு 21 பெயர்கள் என்ற வரி வருகிறது .
2-34-1
காற்று தேவதைகளான மருத் தேவர்கள் பசுக்களை புலப்படுத்தினார்கள் ; பசு= மேகம்
XXX
இவ்வாறு ரிக் வேதம் முழுதும் பசு, குகை, 21 மர்மம் வருகிறது. ஒரு சின்ன விஷயத்தை எதற்காக ரிஷிகள் மீண்டும் மீண்டும் பாடவேண்டும்? அதை எதற்காக சொல் மாறாமல் எழுத்தாக கூடாது என்று சொல்லி வாயமொழி மூலம் மட்டுமே பரப்ப வேண்டும்?
திருமூலர் எதற்கு ஐம்புலன்களையும் பசுவாக உருவகிக்கவேண்டும் ? இதனால்தான் இதை மறை= ரஹஸ்யம் என்கிறோம். மறைவான பொருள் உடைய வேதத்தை அதைப் பயிலாத, அதை இந்துக்களைப் போல மதிக்காத , இது விரோத சக்திகள் மொழிபெயர்க்கப் போய் தோல்வியே கண்டார்கள் மாக்ஸ்முல்லர் கும்பலை சேர்ந்த 20 க்கும் மேலான வெள்ளையாட்கள், மனம்போனபடி அர்த்தம் எழுதிவைத்து இருக்கிறார்கள்!
நாம் உண்மைப் பொருளை உணர வேதத்தைப் போற்றும், வேதத்தைப் பின்பற்றும் பெரியோர்களின் வாயிலாகவே கேட்கவேண்டும்/ தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த வரிகள் அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது.
ஒரு ஆழ்வார் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்று ஆடிப்பாடி கூத்தாடுகிறார் . அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரிஷி கண்டேன் கண்டேன், கண் முன்பாக அவன் தேரைக் கண்டேன் என்கின்றனர்.!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS ஆவார்.
புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தி ல் மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டனர். ஆங்கிலப்புலவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் வரிசையில் முதல் வரிசையில் நிற்பவர் யேட்ஸ் . அயர்லாந்தில் பிறந்து அயர்லாந்தில் வாழ்ந்து அயர்லாந்தின் பழமைக் காவியங்களைத் தொகுத்து அவற்றைப் போற்றியதால் ஐரிஷ் மக்களின் பெருமதிப்பையும் பெற்றார்.
டபிள்யூ .பி. யேட்ஸ் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் DUBLIN, IRELAND பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில மொழி எழுத்தாளர் . தன்னுடைய காலத்தில் வாழும் மிகப்பெரிய கவிஞர் GREATEST POET என்று T.S.. எலியட்டால் பாராட்டப்பட்டவர் . 1923-ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது லண்டனிலும் அயர்லாந்திலும் மாறி, மாறி வாழ்ந்தாலும் அயர்லாந்தையே தாய்வீடாகக் கொண்டவர்.லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்து மதம் , புத்த மதம் முதலிய ஆசிய சமயங்களில் ASIAN RELIGIONS வேட்கை பிறந்தது. மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலில் SUPER NATURAL POWERS நம்பிக்கை ஏற்பட்டது . அயர்லாந்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்ததால் அயர்லாந்தின் நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.
24 வயதிலேயே இந்த நூல்கள் அச்சாகின. அவருடைய கவிதைகளில் பழங்காலம் பற்றிய ஏக்கம் இருக்கும். நாம் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டு சோழர் காலத்தில் வாழ மாட்டோமா என்று ஏங்குவது போல.
1936ம் ஆண்டில் புரோஹித் சுவாமி என்ற இந்தியருடன் மத்திய தரைக்கடல் பிரதேசம் மற்றும் மயோர்கா MAJORCA தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் இந்து மத உபநிஷத்துகளில் மிகவும் முக்கியமான பத்து உபநிடதங்களை TEN PRINCIPLE UPANISHADS இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் .
1889-ல் மாட் கான் MAUD GONE என்ற ஐரிஷ் நடிகையைக் கண்டு, காதல் கொண்டு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். மாட் கான் அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போராடியர். இவரும் மனைவிக்கு ஆதரவாக அயர்லாந்து அரசியலில் குதித்தார். இதன் தாக்கத்தை இவருடைய கவிதைகளில் காணலாம் .
எழுத்தின் ஆற்றலை, பேனா முனையின் வலிமையை, உணர்ந்த அவர் தனது கவிதைகளையும், நாடகங்களையும் அயர்லாந்து ஓன்றுபட பயன்படுத்தினார். ஐரிஷ் புராணக் கதைகளையும் வாய் மொழி இலக்கியத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட்டார். 1896-ல் அயர்லாந்துக்குத் திரும்பிய அவர் லேடி கிரிகரி LADY GREGORY என்ற பெண்மணியை , பணக்கார பிரபு வம்ச பெண்ணைச் சந்தித்தார். அவருக்கும் இவரைப் போலவே பழமையில் ஆர்வ இருந்ததால் 1904-ம் ஆண்டில் ABBEY THEATRE GROUP அப்பி தியேட்டர் குரூப்பை நிறுவினார். இது மிகவும் பிரபலம் அடைந்தது . மக்களைக் கவரும் நாடகங்களை இருவரும் மேடை ஏற்றினர்
எ விஷன் A VISION – ‘நான் காணும் காட்சி’ என்ற நூலில் இவர் தனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வெளியிட்டார். வயது ஆக ஆக அவர் நம்பிக்கை ஆல் போல் தழைத்தது; அருகு போல வேரூன்றியது. இவருடைய நான்கு நாடகங்களையும் பல கவிதைகளையும் படிக்காத ஆங்கில இலக்கிய ரசிகர்கள் இல்லை.
Maud Gone
பிறந்த தேதி – ஜூன் 13, 1865
இறந்த தேதி – ஜனவரி 28, 1939
வாழ்ந்த ஆண்டுகள் – 73
எழுதிய நூல்கள் –
1889- THE WANDERINGS OF OISIN AND OTHER POEMS
1893- THE CELTIC TWILIGHT
1894 – THE LAND OF HEART’S DESIRE
1897 – THE SECRET ROSE
1902 – CATHLEEN NI HOULIBAN
1925 – A VISION
1928- THE TOWER
1933- THE WINDING STAIR
1936- 39 THE LAST POEMS AND PLAYS
–SUBHAM–
tags- உபநிஷத், மொழிபெயர்த்த, நோபல் பரிசு , கவிஞர் W B.யேட்ஸ் , W B YEATS