ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாவல் ஆசிரியர் இயன் பிளெமிங் (Post No.9967)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9967

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜேம்ஸ் பாண்ட் JAMES BOND திரைப் ப்டங்களைப் பார்க்காதோர் இருக்கலாம். ஆனால் அதுபற்றி அறியாதோரும் இல்லை; கேள்விப்படாதோரும் இல்லை. பிரிட்டிஷ் ரகசிய ஏஜண்ட் SECRET AGENT 007 JAMES BOND ஜேம்ஸ் பாண்டை உருவாக்கியவர் இயன் பிளெமிங் IAN FLEMING என்ற ஆசிரியர் ஆவார். அவர் எழுதிய  அத்தனை ஜேம்ஸ் பாண்ட் நாவல் களும்  திரைப்படங்கள் ஆகி வெற்றி நடையும் போட்டன. அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று ரசிகர்களைக் காக்கவைக்கும் அளவுக்கு ருசிகரமானவை. இவற்றின் மூலம் புகழ்க்கொடி நாட்டிய நடிகர்கள் பலர் ஆவர்.

இதே ஆசிரியர் சிறுவர் சிறுமியருக்காக எழுதிய ‘சிட்டி சிட்டி பாங் பாங்’  CHITTY CHITTY BANG BANG  என்ற நவீன கால தேவதைக் கதையும் திரையுலகில் வெற்றி பெற்றது .

தென் கிழக்கு இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி CANTERBURY என்னும் ஊரில் பிளெமிங் பிறந்தார் . அவருடைய தந்தை,  முதல் உலகப் போரில் காலமானார். பிளெமிங் , பணக்காரப் பிரபுக்கள் பயின்ற ஈடன் ETON கல்லூரியில் படித்தார். அங்கு அவர் படிப்பு சுமார்தான். ஆயினும் விளையாட்டு விஷயங்களில் முதல் வரிசையில் நின்றார். பின்னர் புகழ் மிகு சாந்தர்ஸ்ட் ராணுவப் பள்ளியில் SANDHURST MILITARY ACADEMY படித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மொழிகளைக்  கற்றார் .

அவர் எடுத்துக் கொண்ட முதல் வேலை ராய்ட்டர்ஸ் REUTERS  செய்தி நிறுவனத்தின் மாஸ்கோ நிருபர் வேலை ஆகும். அங்கு தான் பிளெமிங்கிற்கு உளவாளிகளின்  ரகசிய உலகம் பற்றி பரிச்சயம் ஏற்பட்டது; இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவருக்கு ரகசிய ஏஜண்டுகள் பற்றி எழுத உதவியது. லண்டனுக்குத் திரும்பி வந்தவுடன் பாங்குகளில் பணியாற்றினார். ஸ்டாக்ப்ரோக்கராகவும் STOCKBROKER இருந்தார். இரண்டாவது உலகப்போர் காலத்தில் கடற்படை உளவு அதிகாரியாக SENIOR NAVAL INTELLIGENCE OFFICER வேலை செய்தார். அப்போது  உளவு வேலைகளின் சூட்சுமம் முழுதையும் அறிந்தார். இவைகளை வைத்து ஏன் ஒரு நாவல் எழுத க் கூடாது என்ற எண்ணம் உதித்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் ஆன தருவாயில், ‘காஸினோ ராயல்’ என்ற முதல் நாவலை எழுதினார் . அப்போது அவருக்கு வயது 46.

பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட் தோன்றும் 12 நாவல்களையும், 7 சிறுகதைகளையும் படைத்தார். அவை அனைத்தும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றன. ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் 1963-ல் வெளியானவுடன் ஜேம்ஸ்பாண்டின் புகழும் அவரை உருவாக்கிய இயன் பிளெமிங் புகழும் உலகம் முழுதும் பரவின.

இந்தக் கதைகளும் திரைப்படங்களும் பெரிய வெற்றி அடைய க் காரணங்கள் – ஜேம்ஸ்பாண்டின் சாகசச் செயல்கள்; இக்கட்டான நிலையில் தப்பிக்கக் கையாளும் சாதுர்ய வழிகள் , அவருடன் தொடர்பு கொள்ளும் அழகிகள், ஜேம்ஸ்பாண்ட் கையாளும் அதி நவீன உளவு சாதனங்கள்,  மற்றும் அந்தச் செயல்கள் நடைபெறும் கவர்ச்சியான இடங்கள்.

பிளெமிங் இறந்த பின்னரும் அவர் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கிறார் கற்பனைக் கதாநாயகன் ஜேம்ஸ் பாண்ட் .

பிறந்த தேதி  – மே 28, 1908

இறந்த தேதி –  ஆகஸ்ட் 12, 1964

வாழ்ந்த ஆண்டுகள் – 56

எழுதிய நாவல்கள், கதைகள் :–

1954 – CASINO ROYALE

1954 – LIVE AND LET DIE

1955 – MOONRAKER

1956 – DIAMONDS ARE FOR EVER

1957- FROM RUSSIA WITH LOVE

1958 – DR NO

1959 – GOLDFINGER

1961- THUNDERBALL

1964 – YOU ONLY LIVE TWICE

1964 – CHITTY CHITTY BANG BANG

சுபம்

TAGS- ஜேம்ஸ் பாண்ட் , நாவல் ஆசிரியர், இயன் பிளெமிங், IAN FLEMING, 007

சுந்தரர் வாழ்வில் அருளும் பொருளும் (Post No.9966)

WRITTEN BY DR M S SRI LAKSHMI, SINGAPORE

Post No. 9966

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுந்தரர் வாழ்வில் அருளும் பொருளும்

                    முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி

மூவர்தமிழ் எனப்போற்றப்படும் தேவாரத்தில் சுந்தரர் தேவாரத்தைத் “திருப்பாட்டு” என்று சொல்லும் வழக்கம் உண்டு. தேவாரம் பாடிய  இம்மூவரையும் ஒப்பிட்டுச் சொல்லும்போது “சம்பந்தர் தன்னைப் பாடினார்; அப்பர் என்னைப் பாடினார்; சுந்தரர் பொன்னைப் பாடினார்”  என்று இறைவனே  சொன்னதாகச் சொல்லப்படும் வழக்கும் உண்டு.  கைலாயத்தில் இறைவனின் அணுக்கத்தொண்டராய் விளங்கிய  ஆலாலசுந்தரர் பூவுலகில் சுந்தரமூர்த்தியாக அவதரித்தார்.சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள். சுந்தரர் போலவே சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் அழகானவை;இசைநயம் மிக்கவை;இலக்கியச்செழுமை கொண்டவை. பொன்வேண்டிப் பாடியவை, வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடியவை என்பனவற்றைச் சுந்தரர் தேவாரத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறினாலும் இவருடைய பக்திச்சிறப்பு வியக்கத்தக்கது. “மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” எனச் சிவனடி மறவாச் சிந்தையும், “ “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்று ஐந்தெழுத்தை உச்சரிக்கும் நாவும் கொண்டவர் சுந்தரர். தன்முனைப்பு சிறிதும் இல்லாத காரணத்தால் சிவபெருமான் அவருக்கு எளிவந்த பிரான் ஆனார்; சுந்தரரோ தம்பிரான் தோழர் ஆனார். பொதுவாகச் சிவனடியார்கள் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குபவர்கள். அப்படியிருக்க சுந்தரர் தேவாரத்தில் அருளும் பொருளும் என்ற தலைப்பில் நான் பேசத் துணிந்ததற்குத் “ திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் “ என்று பாடிய  பக்திப்பெருநோக்கே காரணமாகும்.  

மாதொருபாகனாம் சிவபெருமானுக்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலவிளக்கான சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சுந்தரரின் அவதார நோக்கத்தை “ தீதகன்று உலகம் உய்யத் திருவவதாரம் செய்தார் “ என்று பாடுகிறார். திருத்தொண்டத்தொகை என்னும் சீரிய நூலைப் பெறுவதற்காக “ மாதவம் செய்த  தென்திசை  வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத்தொகை தர” நம்பியாரூரர் அவதரித்தார் என்கிறது பெரியபுராணம்.சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பக்திமேம்பாடு காரணமாக  அவர் ‘வன்தொண்டர்’ என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்பட்டவர். இவர் சகமார்க்கம் தோழமை நெறியால் இறைவனை வழிபட்டவர். சைவசமயக்குரவர் நால்வருள்ளும் ஒப்பீட்டு முறையில் நோக்கும்போது இவர் மற்ற மூவரை விடவும் உலகவாழ்வின் இன்பங்களைப் பெற்று மகிழ்ந்து  சிவனைப் பாடி மகிழ்ந்தவர். பெரியபுராணத்தின் பெருந்தலைவராய் விளங்கும்   இப்பெருமானின் பாடல்களில் மற்ற மூவரின் பாடல்களைப்போலப் பேரளவில்   உலகவெறுப்பையோ, துறவையோ காணமுடியாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சுந்தரர் அறக்கருத்துகளாகக் கூறியுள்ளார்.

 “ பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா !

        எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

        வைத்தாய்பெண்ணைத்தென்பால்வெண்ணெய்நல்லூர்

                                               (அருள்துறையுள்

        அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே”

எனப் பாடிச் சிவபெருமானுக்கு மீளா அடிமை ஆனவர். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்னும் மணிவாசகர் மணிவாக்கை உள்ளத்தில் நினைந்து சுந்தரரின் பித்தா பிறைசூடி என்னும் பதிகத்தை நோக்கினால் சுந்தரரின் பக்திச்சிறப்பும்  அவர் பெற்ற அருள்திறமும் நமக்குப் புலப்படும். சுந்தரரின் உள்ளத்தில் இறைவன் பேரருளோடு தன்னை வைத்து  ஆட்கொண்டதால் இப்பதிகம் “பேரருள் பேசும் பதிகம்” என்று சமயச்சான்றோர்களால் போற்றப்படுகிறது.

திருத்தலப்பயணங்களை  மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்ற நம்பியாரூரர் திருத்துறையூர்ப் பதியில் எழுந்தருளி உள்ள  சிட்டகுருநாதப் பெருமானிடம் “ உன்னை வேண்டிக்கொள்வேன் தவநெறியே “என வேண்டுகிறார்.நம்பியாரூரர் இறைவனைவழிபட்டு  நமக்கெல்லாம் வழிகாட்டுகிறார். சுந்தரரின் வழிபாட்டு நெறியை நமக்குக் கண்முன்னே சித்திரமாக வடித்துக்காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

   “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள

      அளப்பரும் கரணங்கள் நான்கும்

   சிந்தையே  ஆகக் குணமொரு மூன்றும்

      திருச்சாத்  துவிகமே  யாக

   இந்துவாழ் சடையான்  ஆடும்

     எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

   வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து

      மாறிலா  மகிழ்ச்சியில் மலர்ந்தார் “

இறைவனின் அருட்கருணையைப்   பெற ஐம்புலன்களும் அந்தக் கரணங்களும்  பேரின்பவெள்ளத்துள்  திளைத்து மகிழ்ந்திருக்கவேண்டும். “ஆரூரில் அம்மானுக்கு ஆளாகிய ஆரூரன் அடியவர்க்கெல்லாம் அடியவன்” என்று இறையடியார்களை வழிபடும் சங்கமவழிபாட்டிலேயும் தலைநின்றவர். மிகுந்த தன்னடக்கத்துடன் ஆண்டவனின் பெருமையை அறியாதது போலவே அடியார்களின் பெருமையையும் அறியாத எளியேன் என் சொல்லிப் பாடுவேன் என்றபோது தியாகேசப்பெருமான் அவருக்கு “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”என்று  அடிஎடுத்துக் கொடுக்கிறார். திருவாரூரில் இறைவன் தன்னைச் சுந்தரருக்குத் தோழனாகக் கொடுத்தான். இது எப்பேர்ப்பட்ட பேறு! சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய பேறா?  உலகுக்கே  தலைவனாய்  இலங்கும் ஒப்பற்ற பரம்பொருள் சுந்தரரின் தோழர் ஆகிறார். சுந்தரருக்கு இறைவன் அருளிய  திறத்தை “ முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்,சித்தமெலாம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே “ என மணிவாசகர் வியப்பதுபோல நாமும் வியக்கிறோம். இறைவனே தோழனாகிவிட்டார்.அப்புறம் என்ன !  சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் காதல் தூது செல்கிறார்.ஆகவேதான் சுந்தரர் ”பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே” என்று பாடுகிறார். நட்பின் உரிமையால் சிவபெருமானிடம் பொருளை வேண்டிப்பெறுகிறார். இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகின்ற திருமுதுகுன்றத்தில்  “நஞ்சியிடை” என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொருள் வேண்டுகிறார்.  உன்னுடைய  அருள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று காத்துக்கிடக்கும்  உன் அடியார்கள் இறந்துபோய்விட்டால் நீ வழங்கும் அருள் பயன் இல்லாமல் போய்விடும்.பஞ்சியிடைப் புட்டில் கீறுமோ?ஆகவே இன்றே இப்போதே அருள்செய் என்று பன்னீராயிரம் பொன்னை வேண்டிப்பெற்றார்.அதுவும் அந்தப் பொன் எல்லாம் பரவையார் வீட்டில் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறார். பரம்பொருளும் அசரீரியாக இங்குள்ள மணிமுத்தா ஆற்றி  ல்போட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில்  பெற்றுக்கொள்க  என்கிறார். இந்தத் திருவிளையாடலைக் குறிக்கும் வகையில் “ ஆற்றிலே போட்டுவிட்டுக் குளத்திலே தேடுவதுபோல்” என்ற சொலவடையே மக்களிடம் வழங்கப்பெறுகிறது.

பங்குனி உத்திரப் பெருவிழாச் செலவுக்காகப் பொருள் வேண்டும்  சுந்தரர் பெருமானுக்கு. அவர் திருப்புகலூர்த் தலத்திலே இறைவனை  வழிபட்ட பின் அங்குள்ள மண்டபத்தில்     தலைக்குச் செங்கற்களை வைத்தபடி உறங்கிவிடுகிறார். அவர் நித்திரை கலைந்து விழித்துப் பார்க்கும்போது செங்கற்கள் தங்கக் கற்களாக மாறிவிடுகின்றன. உடனே பரம்பொருளின் அருள்திறம் வியந்து  பொன்செய்த புனிதனைப் பாடுகிறார்.

   “தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

      சார்வினும் தொண்டர் தருகிலாப்

   பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை

       புகலூர் பாடுமின் புலவீர்காள்

   இம்மையே தரும் சோறும் கூறையும்

      ஏத்தலாம் இடர்கெடலுமாம்

   அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

       யாதும் ஐயுறவு இல்லையே “ 

என்று பாடுகிறார்.  சுந்தரர் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அல்லது அவர் வாயிலாக இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்பல. பொன்னும் பொருளும் பெறுவதற்கு  மட்டும் இறைவனைப் பாடியதாக இளையர்கள் எண்ணிவிடக் கூடாது. இரு கண்பார்வையையும் இழந்தபோது ஒரு கண் பார்வையைத் திருவாரூரிலும் மற்றொரு கண்பார்வையைக் காஞ்சிபுரத்திலும் பெற்றார். இவர் அவினாசியில் முதலை உண்ட பாலனை எழுப்பினார். இவருக்காகக் காவிரி ஆறு இரு கூறாகி நின்றது. வெள்ளை யானை மீது அமர்ந்து சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலாயம் சென்றது போன்ற அற்புதங்கள் சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்ததற்கு இறையருளே காரணம் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ?. இந்த அற்புதங்கள் எல்லாம் சிவபக்தியாலும் சிவனருளாலுமே சுந்தரர்க்கு வாய்த்தன.வீரத்தின் மிடுக்கு இல்லாதவனை வீமன் என்றும் அர்ஜுனன் என்றும் புகழ்வதால் பயன் என்ன? கொடுக்கிலாதானைப் பாரி என்று புகழ்வதால் பயன் என்ன? இப்படிப் பல கேள்விக்கணைகளைத் தொடுத்து “மன்னா மனிசரைப் பாடாமல்” பரம்பொருளைப் பாடி உய்திபெறுங்கள் என்பதே சுந்தரர் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடமாகும்.

                         முற்றும்

tags- சுந்தரர் வாழ்வு

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –3 (Post No.9965)

 
SUNDARAMURTHY SWAMIKAL, MADRAS MUSEUM

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9965

Date uploaded in London –  12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 
 

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 3

ச.நாகராஜன்

S NAGARAJAN, BENGALURU
சுந்தரர் ஒரு சிறந்த இயற்கைக் கவிஞர். உலகின் ஆகப் பெரிய சிறந்த இயற்கை வர்ணனைப் பாடலாக கருதப்படுவது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் எழுதிய டாஃபோடில்ஸ் கவிதையாகும். இங்கிலாந்தில் 1805ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று அவர் தனது சகோதரி டோராதியுடன் லேக் டிஸ்ட்ரிக்ட் என்னுமிடத்தில் ஒரு ஏரிக்கரையோரம் நடந்து சென்றார். அங்கு கவிஞர் திடீரென ஒரு திருப்பத்தில் ஆயிரக்கணக்கான தங்க நிற டாஃபோடில்ஸ் மலர்களைப் பார்த்து வியந்து அதிசயித்து நின்றார். இந்தக் காட்சியை அப்படியே என்றும் நிலைத்து நிற்கும் வண்ணம் 1807இல் கவிதையாக்கினார்.                                                         I wandered lonely as a Cloud
   That floats on high o'er Vales and Hills,
When all at once I saw a crowd,
   A host of golden Daffodils;
Beside the Lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.      ஏரிக்கரையோரம் தென்றல் காற்றில் நாட்டியம் ஆடின மலர்கள். இந்தக் காட்சியால் என்ன பயன் அவருக்கு? தனிமையிலே சூன்யமான ஒரு நிலையில் ஒரு ஈஸி சேரில் அவர் இருக்கும் போது - vacant or in pensive mood - அகக் கண்ணில் அந்த மலர்கள் தோன்றி ஆட இதயம் குளிர்ந்து இன்பம் மலர்ந்து அவரும் அவற்றுடன் ஆடுகிறார்.

     For oft when on my couch I lie
   In vacant or in pensive mood,
   They flash upon that inward eye
   Which is the bliss of solitude,
   And then my heart with pleasure fills,
   And dances with the Daffodils.

சரி, இப்போது நமது சுந்தரருக்கு வருவோம்.

ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை

அப்படி அழகாய அணி நடை மட அன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே என்கிறார். நீலம் ஒளியுடன் கூடி ஒளி நீலம் ஆகி ஓங்குகிறது. அந்த ஒளி எங்கும் பரவுகிறது. வானமெங்கும், மலர்ப் பொய்கை எங்கும். அப்படி அழகாய அணி நடை மட அன்னம் அங்கே மெய்ப்படுகிறது. நீல நிறக் கடல்! நீல நிற ஆகாயம் நமக்குத் தெரியும். ஆனால் ஒளி நீலம் ஓங்கிய காட்சி தங்க நிற டாஃபோடில்ஸை விட அழகிய காட்சியாக அமைகிறது அல்லவா! அங்கு வோர்ட்ஸ்வொர்த் போல இயற்கையை மட்டும் காண்பிக்காமல், இயற்கையுடன் ஆன்மீகத்தையும் கலந்து சிவனைக் காண்பிக்கிறார் சுந்தரர். ஆக, ஆகப் பெரும் இயற்கைக் கவிஞராக ஆகி விடுகிறார் இரு வரிகளில்! அடுத்து திருக்கலய நல்லூர் பதிகத்தில் முதல் பாட்டை மட்டும் இங்கு பார்ப்போம்:

குரும்பைமுலை மலர்க்குழவி கொண்ட தவம் கண்டு

 குறிப்பிணெடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து

விரும்பு வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த

   விண்ணவர்கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட

    அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்

  கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூர் காணே

அடடா! என்ன அழகிய பாடல்! அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட

    அணிமயில்கள் நடமாடும் அணி பொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்

  கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூரைப் பாருங்கள்! இதற்கு இணையாக உலக மொழிகளிலே இன்னொரு இயற்கை வர்ணனைப் பாட்டு உண்டா என்ன? தேடிப் பார்த்தால் மிக அரிதாகவே இது போன்ற பாடல்கள் உலக மொழிகளில் நமக்கு கிடைக்கக் கூடும்! இப்படி அவரது இயற்கை வர்ணனைகளை நூற்றுக் கணக்கில் கூறிக் கொண்டே போகலாம்.

எமபயம் நீங்க பத்துப் பாடல்களை கோயில் திருத்தலத்தில் அருளியவர் சுந்தரரே. தருமனார் தம் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் என்று அவர் கூறும் போது பாடலில் சிவ மயம் கமழ எம பயம் தீருகிறதல்லவா!

சிவபக்தர் ஒருவர் பாடினார் இப்படி: கிரீடே நிஷேஷோ லலாடே ஹூதாஷோ புஜே போகிராஜோ கலே காலிமா ச| தனௌ காமினீ  யஸ்ய தத்துல்யதேவம் ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே 
கிரீடே நிஷேஷோ - தலையிலே சந்திரன் லலாடே ஹூதாஷோ - நெற்றியில் தீ ; புஜே போகிராஜோ - புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா; கலே காலிமா  - கழுத்தில் கறுப்பு வண்ணம்| தனௌ காமினீ  யஸ்ய தத்துல்யதேவம் -அவனுடைய மனைவி அவனுடைய உடலிலேயே! இப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை நான் அறிந்ததில்லை; அறிந்ததில்லை அறிந்ததில்லை என்கிறார். 
சிவபிரானையே தன் முழு முதல் தெய்வமாகக் கொண்ட சுந்தரரும் கூட இதே போல சிவனை பித்தா பிறைசூடி என்றும், வண்டார்குழலி உமைநங்கை பங்கா என்றும், பாதி ஓர் பெண்ணை வைத்தாய் என்றும், மாமணி நாகம் அரைக்கு அணிந்து என்றும், பொன்னார் மேனியன் என்றும் புலித்தோலை அரைக்கசைத்து சடைமேல் கொன்றை அணிந்தவன் என்றும் இப்படி எல்லாம் பாடல்கள் முழுவதும் சிவபிரானை வர்ணிக்கும் விதமே தனி! பொன்னே, நல்மணியே, வெண்முத்தே, செம்பவளக் குன்றமே ஈசன் என்று உன்னைப் புகழ்வேன் என்று இப்படிப் பலபடியாக அவர் போற்றுகிறார்.      

                                                           பக்தி சூத்திரத்தை சுந்தரர் வாழ்ந்து காட்டும் பாங்கே தனி! நாரத பக்தி சூத்திரத்தில் நாரத மஹரிஷி 84 சூத்திரங்களை அருளியுள்ளார். அதில் 55வது சூத்திரம் ஒரு பெரும் ரகசியத்தைத் தருகிறது. அதன் திரண்ட சுருக்கம் இது தான்: - தத் சிந்தனம் தத் வாக்யம் தத் அவலோக்யம் தத் பரம் என்று இறைவனைச் சேரும் விதத்தை அவர் கூறி அருளியுள்ளார். தத் சிந்தனம் அவனைப் பற்றியே சிந்தனை செய்தல்.தத் வாக்யம் அவனைப் பற்றியே பேசுதல். தத் அவலோக்யம் அவனுடனேயே இணைந்திருத்தல் இப்படிச் செய்தால் இறுதி நிலை தத் பரம். அவ்னாகவே ஆதல்! சுந்தரர் அவனைப் பற்றியே - சிவனைப் பற்றியே - சிந்தித்திருந்தார். நற்றவா உன்னை நான்  மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார். அவனைப் பற்றியே பேசினார், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடினார் அவனுடனேயே தோழமை கொண்டார். வன்மையாகப் பேசி வன் தொண்டர் என்ற செல்லப் பெயரையும் பெற்றார். இறுதியில், ‘வேண்டேன் மனை வாழ்க்கை’ என்ற நிலையில் சிவபிரான் அவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டருளினார் தத் பரமாக!  வெள்ளை யானை மீதேறி கைலாயம் வருக என்று அவர் அருள் பாலிக்க கரி மீது ஏறிக் கைலாயம் பறந்தார் அவர். அவரது உற்ற தோழரான சேரமான் பெருமாள் நாயனார் உள்ளுணர்வினால் தன் நண்பர் கைலாயம் செல்வதை அறிந்து, “ நீர் கரி மீது சென்றால் நான் இதோ, பரி மீது வருகிறேன் என்று குதிரை மீது ஏறி அவருடன் கைலாயம் ஏகினார். 
ஆக சுந்தர மூர்த்தி நாயனாரின் சரித்திரம் ஒரு பன்முகப் பரிமாணத்தைக் காட்டுகிறதல்லவா! முதலில் அவர் ஒரு சிவனடியார். சிவனடியார்க்கு அடியார். தமிழ் வித்தகர். இசைக் கலைஞர். தலம் தோறும் சென்று தரிசித்த அருளாளர். இயற்கைக் கவிஞர். எளிதாக இறைவனை விளக்கியவர். சிவ ரகசியங்களை விண்டு கூறியவர். பக்தி சூத்திரத்தை  வாழ்ந்து காட்டி விளக்கியவர். செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது, காவிரி ஆறு பிரிந்து வழி விடச் செய்தது,  சங்கிலியாரை மணக்க சிவபிரானையே தூது செல்ல வைத்தது உள்ளிட்ட அற்புதங்களை நிகழ்த்திய அருளாளர். ‘பெரிய புராணக்’ காப்பியத்தின், பெரிய்ய்ய்ய புராணத்தின் தலைவர். நம் நெஞ்சம் நிறை மகான். அவர் அடி போற்றுவோம். வணங்குவோம். அவர் புகழ் பரப்புவோமாக!

This image has an empty alt attribute; its file name is 55ed6-img_2611.jpg
KALYANJI, LONDON

இந்த நன்னாளில் அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து சில வார்த்தைகளைப் பேசப் பணித்த அன்பர்களுக்கும் இவ்விழாவிற்கு மூல காரணமாய் இருந்து சிவப் பணியைச் செய்து வரும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும் இந்த உரையைச் செவி மடுத்த பெரியோர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் அன்பர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்! தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                      ***                

முற்றும்

TAGS- காப்பியத் தலைவர், சுந்தரர்! –3,

‘அட்லஸ் ஷ்ரக்ட்’ திரைப்படப் புகழ் நாவல் ஆசிரியை அய்ன் ராண்ட் (9964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9964

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘த பவுண்டைன் ஹெட்’ THE FOUNTAINHEAD மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ATLAS SHRUGGED நாவல்களை எழுதிப் புகழ் பெற்ற பெண்மணி அய்ன் ராண்ட் AYN RAND ஆவார் . கம்யூனிசத்தின் பரம எதிரி; முதலாளித்துவத்தின் பெரிய ஆதரவாளர். ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்.

அய்ன் ராண்ட் AYN RAND எழுதிய நூல்களும் அவருடைய கொள்கைகளும் 1950, 1960ம் ஆண்டுகளில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன தனி மனித உரிமையே பெரிது; தனிப்பட்டவர் சுதந்திரம், தன்  முயற்சி முக்கியம் வாய்ந்தது என்று பொருள்படும்படி அவர் நாவல்களை எழுதினார். அமெரிக்க ஜனாதிபதி ரீகன் ஆட்சிக் காலத்தில் அவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் அவை திரைப்படங்களாகவும் உருவாயின.

ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோது ரஷ்யப் புரட்சி வெடித்தது. ஜார் (CZAR) மன்னர் ஆட்சி ஒழிந்து கம்யூனிஸ ஆட்சி ஏற்பட்டது. அய்ன் ராண்ட் அதன் பின்னரும் ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் படித்தார். 18 வயதில் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் அவருக்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வெறுப்பை உண்டாக்கியது.

அமெரிக்காவில்  குடியேறி  1931-ல் அமெரிக்க பிரஜை ஆனார். ஹாலிவுட்டில் திரைப்பட வசனங்களை எழுதும் பணியில் அமர்ந்தார். அமெரிக்காவுக்குப் போனவுடன் தீவிர கம்யூனிச எதிர்ப்பும், முதலாளித்துவ ஆதரவும் அதிகரித்தது மனிதர்கள் சுயமாகச் சிந்தித்து அவர்களுடைய சொந்த நலனுக்குப் பாடுபடுவதே முக்கியம். சமூகம் என்பது அதற்குப் பின்னரே என்று எழுதினார். இந்தக் கொளகைகளை அடிப்படையாக வைத்து ராண்ட் 4 நாவல்களை எழுதினார் அவருக்கு 31 வயதாகும்போதே அவருடைய முதல் நாவல் WE THE LIVING வீ த லிவிங் பதிப்பாகியது. அவர் படைத்த கதாநாயகன் சமூக நலன்களை ஒதுக்கிவிட்டு தனது ஆசைகள் பூர்த்தியாக உழை த்து  அதில் வெற்றியும் அடைகிறான்.

அவர் எழுதிய மூன்றாவது நாவலான பவுண்டைன்ஹெட்டில் THE FOUNTAINHED கதாநாயகன் ஒரு கட்டிடக் கலைஞன். அவன் தனது உரிமைகளே பெரிது என்று எண்ணு வன் . இது திரைப்படம் ஆக்கப்பட்டபோது அதில், காரி கூ ப்பர் GARY COOPER முதலியோர் நடித்தனர். படமும் வெற்றிநடைபோட்டது.

பல்கலைக்கழக மாணவரிடையே அய்ன் ராண்டின் நாவல்கள் பிரபலமாகின. சுயநலத்துடன் செயல்படுவதே சரி என்று நினைத்தனர் அக்கால மக்கள்.  இப்போது அந்த தத்துவம் மாறிவிட்டது .

பிறந்த தேதி -பிப்ரவரி 2, 1905

இறந்த தேதி – மார்ச் 5, 1982

வாழ்ந்த ஆண்டுகள் -77

எழுதிய நூல்கள்…..

1936- WE THE LIVING

1938- ANTHEM

1943- THE FOUNTAINHEAD

1957- ATLAS SHRUGGED

1961- FOR THE NEW INTELLECTUAL

1965- THE VIRTUE OF SELFISHNESS

1969- THE ROMANTIC MANIFESTO

1971- THE NEW LEFT: THE NEW ANTI INDUSTRIAL REVOLUTION

1982- PHILOSOPHY: WHO NEEDS IT?

–SUBHAM–

tags- அட்லஸ் ஷ்ரக்ட்,   நாவல் ஆசிரியை, அய்ன் ராண்ட் , Ayn Rand, Atlas Shrugged

சேலையில் கண்ணன் லீலை! (Post No.9963)

WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN

Post No. 9963

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேலையில் கண்ணன் லீலை– சேலை கவர்ந்தவனே சேலை கொடுத்தவன்

கண்ணனையே  கணவனாயடைய கோபியக்

கன்னியர்கள் காத்யாயனீ நோன்பு காத்துக்

களைந்த ஆடைகளைக்  கரையில் வைத்துக்

களிப்புடன் யமுனை நதியில் நீராட  அங்கு

வந்த வாசுதேவனுக்கு வம்புக் கிழுப்பதற்கு

வாய்ப்பாக நாணம் நதியிலேப் பறிபோகும்

அச்சமில்லா ஆய்ச்சியக் கன்னியருக்குப்

பாடம் கற்பிக்க கரையிருந்த சேலைகளை

ஒரு தருக்கிளையில் தொங்க தொங்கியதோ

மங்கையர்  நாணமும் மரக்கிளையிலே

கண்ணன் கவர்ந்த சேலைகள் தருக்கிளையிலே

கண்ட கழுத்தளவு நீரில் நின்ற கன்னியர்கள்

கெஞ்சியும் கொஞ்சியும் தளராக் கார் வண்ணன்

சாத்திரமேற்கா நிர்வாண நீராட்டத்தில் வரம்பு

மீறி வழுவிய நீங்கள் அந்நிலையிலேயேக் கரை

ஏறி சேலை பெறுவதோர் பரிகாரமெனக் கண்டிக்க

தண்ணீர் வெந்நீராக கண்ணீர் சொரிந்த கன்னியர்

மன்னிக்க மன்றாட மரம் தழுவிய சேலைகளை

மங்கையரிடை தவழ மனமிரங்கிய மாதவன்

சேலை கவர்ந்தீன்ற முதல் லீலை

பண்டொரு நாள்  கௌரவன் துரியோதனன்                     

பங்காளிப் பகையில் பாண்டவர் உடைமைகளைப்         

பறிக்கத் தருமனை சூதாட்டத்துக் கீர்த்து வஞ்சகச்      

சூதில் வாரி எடுத்தானோ  தம்பிகளுட்படத் தரும        

னுடைமையெலா மெனும் நிலையில் தலை தரை       

நோக்கத் தன்னயும் பணயமாய் வைத்திழந்த காலை    

துரியோதனன் காலுருண்டதோ பஞ்சவர் முடி                     

எஞ்சியவளோ பாஞ்சாலி விட்டதைப் பிடிக்க                                                 

மிஞ்சியது வெறி கெஞ்சியது விவேகம் ஆனால்                    

மத களிர் சூதில் மிதிபட்டாளோ பாஞ்சாலி !                   

பகடையுருட்டாட்டத்தில் பணயமாய் பறிபோன

பஞ்சாலியைத்  துரியோதனன் அரசவைக்கிழுத்து

அரங்கேற்றியதோ அவள் கற்புக் களவாடும்

காட்சியாக துயிலுரிக்கத்  தம்பி துச்சாசனனை

ஏவ இடை தழுவிய சேலையை வலிவான கரங்கள்

இழுக்கத் தடுத்துப் பிடித்தப் பஞ்சாலி கைகள் தளர

இரு கரங்கள் மேல் தூக்கிக் கோவிந்தாவென்றக்

கூக்குரலில் வண்ணச் சேலைகள் ஓயா அலைபோல    

பூ மகளையும் போர்த்து விஞ்சுமளவு வர கோவிந்தன்

விந்தையே சேலையைக்  கொடுத்ததும்.

 நாராயணன்

Poem by Dr A Narayanan, London

Xxx

One more poem by Dr A Narayanan

காலன் கணக்கு

கழுதைபோல் சுமந்த வினைகள் காலங்கள் கடந்தும்

உழுத உடலில் விதைத்த கருமங்களில் சருமப்பை வாட

விழுந்த தருணம் இரு கரங்கள் விண்ணோக்கி த்

தொழ நாடி நரம்பு தளர்ந்த பின் நாராயணனை

விழித்தாலும் வேந்தனோ வேதியனோ வித்தகனுக்கோ 

கூனிக் குறுகிய வினைகளின் சுமை அசலுக்கு விஞ்சிய

வட்டிக் கடன் போலக் காலனெனும் கடன்காரன் கதவைத்  

தட்டி கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கழியாதோ

உன் கணக்குப் பல சன்மங்களிலு மென இவர் வீடு 

காலியாக விளைந்த மறு பிறவி தொடருமெங்கோ

 நாராயணன்   

Poem by Dr A Narayanan, London

tags- சேலை, கண்ணன், லீலை,  கவர்ந்தவன் ,கொடுத்தவன், 

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! –2 (Post No.9962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9962

Date uploaded in London –  11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.

பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 2

ச.நாகராஜன்

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் அவிநாசி என்று சொல்லி அதிசயிக்கலாம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை, அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி, சிவபிரான் அருளால் உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.      அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சுந்தரர் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவர். எங்கும் போகாமல், திருவொற்றியூரிலேயே இருப்பதாக சத்தியம் செய்து சங்கிலியாரை மணந்து கொண்ட அவர் திருவாரூர் சிவபிரானை பார்க்காமல் இருக்க முடியாமல் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டவே அவர் கண்கள் குருடாயின. நீ எனக்கு மகத்தில் புகுந்த சனி போல அல்லவா விளங்குகிறாய். என் கண்கள் குருடாகி விட்டனவே. பார்வையைத் தா என்று அன்புடன் அவர் சிவனை நிந்தை செய்கிறார். மகத்தில் சனி புகுந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்கிறது ஜோதிடம். பார்வையைத் தா என்று அவர் வேண்ட பின்னர் பார்வையையும் பெற்றார்.                                                                                                                                                                            சுந்தரர் நாடெங்கும் சிவஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்ததால் நாட்டிலே வழக்கில் உள்ள எளிய  இனிய பழமொழிகளை வைத்து உணர்தற்கு அரிதாக உள்ள ஆழ்ந்த கருத்துக்களை விளக்குபவர். திருவிடைமருதூர் பதிகத்தை எடுத்துக் கொள்வோம் : கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்றது போல என்கிறார். அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்,  புல் நினைப் பனி வெங்கதிர் கண்டால் போலும் வாழ்க்கை பொருள் இலை, வாழைதான் பழுக்கும் நமக்கு  – இப்படி வழக்குப் பழமொழிகளைத் தருகிறார் அவர். இன்னும் ஏராளமான பழமொழிகளை  அவர் பாடல்களில் காணலாம்.                                        

சுந்தரர் இனிய தமிழிலே வித்தகர். அவர் பாடல்களில் நாம் காணும்  சொற்கள் மொத்தம் 30322.. ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய் அமிர்தத் துளியே.                                                                       

சுந்தரர் அனைத்து மகான்களின், அடியார்களின் பாராட்டுகளைப் பெற்றவர். எடுத்துக்காட்டிற்குச் சில!                                               

வாழ்வாவது மாயம் என்று உரைத்தோன் மாமலர்த் தாள்                

தாழ்வாம் எப்போதும் தலை என்று பாடினார் அருட்பிரகாச வள்ளலார். 

புராணத் திருமலை நாதர் தனது சொக்கநாத உலாவில், “ மலரடைந்த புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப் பிள்ளை, வா என்ற பெருமாளும்” என்றும்,“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு” என்றும் இன்னும் பலவாறாக அவரைப் புகழ்கிறார்.   குமரகுருபரரோ,”சொல்மாலை தொடுத்தணிந்த தொண்டர்” என்று புகழ்கிறார்.  சேக்கிழார் பிரானோ அவரது சொல்மாலைகளைத் தமிழ் மாலை என்றும் இன்னும் பல விதத்திலும்  புகழ்ந்து கூறுகிறார். அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தின் காப்பியத் தலைவர் அல்லவா சுந்தரர்! அவரைப் புகழ்ந்துரைக்க அவரிடம் புகழுரைக்குப் பஞ்சமேது?! ஆனால் இவை எல்லாம் பொய்யுரை அன்று; பொருளுரையாகும்!           

                                         சுந்தரர் அடியார்க்கு அடியானாக இருக்க விரும்புவதை திருவாலங்காடு பதிகம் முழுவதிலும் காணலாம். “ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே” என்று குறிப்பிடுகிறார்! அத்துணை எளிமையும் சிவனடியார் பால் மதிப்பும் கொண்டவர் அவர்!

கடவுள்எப்படி இருப்பார் என்பதைச் சுவைபட அவர் சொல்லும் விதமே தனி! பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்திடைச் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய், கடு இருள் சுடர் ஒப்பாய் என்று திருக்குருகாவூர் வெள்ளடைத் தலத்தில் அவர் விவரிக்கிறார். கடவுளைக் காட்டு என்னும் நாத்திகர்களுக்கு அவர் தரும் நல்ல பதில் இது. பழத்தின் சுவையை எவனாலாவது காண்பிக்க முடியுமா, அனுபவிக்க அல்லவோ வேண்டும் அது! தமிழ்ப் பண்ணின் சுகமே சுகம் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும்? அனுபவிப்பது அல்லவோ சங்கீத சுகம்! ஆண்டவன் அருளை அடைதல் அன்றோ விவரிக்க முடியாத சுகம்! கடவுள் எங்கு இருக்கிறார்? வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் அவர், சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார் என்பதுவே அவர் பதில்! நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை கதிரானை என்று கூறி சரணடைந்தவர் தம் உள்ளத்திலேயே அவன் உறைகின்றான் என்கிறார் அவர்!

திருஞானசம்பந்தர் தொடங்கி சுந்தரர் வரை வளர்க்கப்பட்ட கேள்விகளாகக் கேட்கும் பதிகம் ஒன்று புதுப் பாணிப் பாடல் உத்தியைத் தருகிறது. பாறு தாங்கிய காடரோ, தேனை ஆடு முக்கண்ணரோ, கோணல் மாமதி சூடரோ என்ற பாடல்களால் பின்னாலே வந்த திரைப்படக் கவிஞர்கள் கூட அதைத் தமக்கு உகந்தது என எடுத்துக் கொண்டனர் இல்லையா? என்ன தவம் செய்தனை யசோதா, உள்ளிட்ட அருமையான கீர்த்தனைகளைக் கேட்டு ரசிக்கிறோம். இன்னும் அவரால் உத்வேகம் பெற்ற கவிஞர்கள் நூற்றுக் கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, பேசுவது கிளியா, பாடுவது குயிலா என்று இப்படி கேள்விப் பாடல்களாக அல்லவா இயற்றியுள்ளனர்! இரு சொற்களை அடுக்கிப் பாடும் அவரது உத்தியும் இன்றைய நாட்களில் கவிஞர்களால் பெரிதும் பின்பற்றப்படுகிறது. பொன்னவன் பொன்னவன்,மின்னவன் மின்னவன், அன்னவன், அன்னவன் ,என்னவன் என்னவன் என்ற பாணியில் எத்தனை பாடல்களை இன்று நாம் கேட்கிறோம்!
அவரது நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லை; அப்படி ஒரு நகைச்சுவைத் திலகம் அவர்; எடுத்துக்காட்டிற்கு ஒரே ஒரு பாடல் -                   நமண நந்தியும் கரும வீரனும் தருமசேனனும் என்று இவர்           குமணன் மாமலைக் குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாணிலா அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே!
எப்படி ஒரு கிண்டல் பாருங்கள் - ‘ஞமண ஞாஞண ஞாணம் ஞோணம் என்று ஓதி’ என்கிறார்!

                          *                     தொடரும்


tags-  பரிமாணம் ,காப்பியத் தலைவர்,  சுந்தரர்! –2


 

COLOUR FOR ACTORS AND ORNAMENTS IN NATYASHASTRA (Post No.9961)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9961

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Bharata, author of Natyasastra, gives amazing details about the role of colours in the dance dramas. It is not surprising to see the use of colours because we see colour coding even in Bhagavatha. Krishna wearing yellow clothes is called Peetambaradhari and Balarama wearing blue clothes is called Neelambaradhari.

Bharata even applies colour coding for seats. Please see the link given at the end.

Hindus’ obsession with colours began in Rigvedic period. Indra’s horses are described as tawny coloured. Sometimes they are red. Different colour skins of cows are also mentioned by Vedic Rishis.

Coming to ornaments and hair styles, he gives minute details. Before going into the details of colours and ornaments, let me make my comments

  1. Hindu dramas of ancient India followed their own rules in ornaments and dresses. It has nothing to do with the Greek dramas . The big difference between the Hindu statues and Greek statues is ornaments. Greeks don’t wear ornaments. Hindu statues and paintings of Ajanta, Bharhut,Sanchi, Aamaravati are seen wearing ornaments all over the body. They have names for ornaments from head to toe.
  • Colour coding is also not found in Greece .
  • Another important point is the division of Hindu society. Foreigners who translated Vedas made adjective words into proper nouns. Arya should be translated as ‘educated, cultured ‘ etc. But they put capital A for Arya and made them a race. In the same way Dravidians should be southerners. But they put one capital D for the word and made it a race. We have very good evidence against Maxmuller gang, the advocates of Aryan-Dravidian theory. Here in Natyasastra, we don’t find Aryan or Dravidians. If Dravidians are mentioned we know it is about southerners. But they are mentioned with other peoples. In short, they are not racial.

Now let us look at the colours , from Chapter 23 of Natya sastra

Make- up (Slokas 72-89)

“Now I shall speak about the proper make up of male characters.

First of all their bodies should be painted. White, blue, yellow and red are primary colours. There are derivative colours as well as minor colours.

The derivatives are

White + blue = Pandu (yellowish white)

White +red = Padma (lotus colour )

Yellow +blue =  Harita (Green)

Blue + Red = Kasaya (deep red)

Red + Yellow = Gaura (pale red)

Besides these, there are many colours made up of three or four primary colours.

Once the fans get used to these colours, they can easily understand the story. Dialogues may be inaudible, but the colours of characters will help them to recognise them.

Bharata continues with hair styles and ornaments…

Slokas 49-61

Celestial women should be distinguished by their ornaments and costumes, and females of Vidhyadhara, Yaska, Naga and Apsara groups as well as daughters of sages and gods to be distinguished by their costumes. The same rule applies to Siddha, Gandharva, Raksasa  and human females.

(Here we must note that there is no Arya or Dravidian classification. Through out devotional Tamil literature Lord shiva is addressed as Arya. It has no racial connotation.)

The vidhyadhara women should have their hair tied in a top knot, must have many pearls, but wear white costume.

The Yaska and apsara women should wear many jewels, costume to be the same but the yaksa women’s hair must be worn in a Sikha. The naga women should wear ornaments like goddesses, should wear ornaments of pearls and jewels, but the latter must be in the form of wild fruits.

Daughters of sages must wear their hair in a single braid and there should not be many ornaments.

The siddha women must wear plenty of ornaments pearls and emeralds and yellow costumes.

The gandhrva women should wear ornaments of rubies, costumes of saffron colour and a Vina in their hands.

The Rakshasa women should wear blue stones, white protruding teeth and black costume; the goddess pearls and Vaidurya and costumes green like a parrot tail, but this only while they are enjoying love;I n other conditions white.

xxx

Hair styles for different regions are as follows…..

Avanti women- curled hair

Gauda- a sikha pasa

Abhira women- two braids with head band

North east women- a sikhandaka standing up. They must cover their body up to the hair.

Women of South- wear tattoos on their fore heads

Then he describes make ups for different characters.

Let me summarise,

All these show that our drama and dance have unique features. The oldest portion of Natyasastra goes back to fifth century BCE.

I will give the list of ornaments separately

Links to old articles:-

Natya sastra | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › natya-sastra

  1.  

27 Feb 2021 — The ”Natya Shastra” is the oldest extant literature in the field of dramatic arts. The black-coloured sculpture, conceptualised by classical …


Colour Coding of Seats in Ancient Theatres! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/13 › colour-codin…

  1.  

13 May 2014 — In the Natya sastras we have references to 18 different types of stages. … The Natyasastra of Bharata is a compendious treatise on …

You visited this page on 03/08/21.

–Subham–

tags- natya sastra, colours, costumes, ornaments, Bharata

LONDON CALLING ‘GNANAMAYAM’ 9-8-2021 (Post No.9960)

COMPIED BY LONDON SWAMINATHAN

Post No. 9960

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

9-8-2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN, LONDON

DR CHAMUNDEESWARY FROM LONDON AND SUBRAMANIAN SITARAMAN FROM INDIA -DISCUSSION ON THEIR NEW DANCE DRAMA PROJECT – SECOND PART 25 MTS

ABHANGAM SONG BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Sri Aurobindo (Aravinthar)– 13 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXX

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags —  broadcast982021, gnanamayam

LONDON CALLING ‘TAMIL MUZAKKAM’ 8-8-2021 (Post No.9959)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9959

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

8-8-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – LONDON BALASUBRAHMANYAN

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON THIRUVIDAIMARUDUR TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- TAMIL MUZAKKAM, BROADCAST882021,

மீண்டும் ‘அகராதி பிடித்த’ டாக்டர் ஜான்சன் (Post No.9958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9958

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பற்றி முன்னரே பல கட்டுரைகள் இதே ‘பிளாக்’கில் எழுதி வெளியிட்டு விட்டேன். அவர் பற்றிய மேலும் சில குறிப்புகள் இதோ :

பிறந்த தேதி – செப்டம்பர் 18, 1709

இறந்த தேதி – டிசம்பர் 13, 1784

வாழ்ந்த ஆண்டுகள் – 75

பதினெட்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கிய அறிஞர் சாமுவேல் ஜான்சன் DOCTOR SAMUEL JOHNSON. அவர் ஆங்கில அகராதியை முதல் முதலில் உருவாக்கினார். அவர் இலக்கிய விமர்சகர்,புலவர், மொழி பெயர்ப்பாளர்.

இங்கிலாந்தில் லிச்பீல்ட் (LICHFIELD)  என்னும் இடத்தில் பிறந்த அவர், தந்தையின் புஸ்தகக் கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாகப் படித்தபோதிலும் வறுமை காரணமாக பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.

ஜான்சன் பயந்த சுபாவம் உள்ளவர். மேலும் பழகும் விதமும் இங்கிதமும் அறியாதவர். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் பார்வைக்குறைவும் , செவிட்டுத் தன்மையும் இருந்தது. வேலை கிடைக்காமையால் அடிக்கடி மனச் சோர்வும் ஏற்பட்டது.

28 வயதில் லண்டனில் குடியேறி 20 ஆண்டுகளுக்குப் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். 53 வயதில் அரசாங்கம் ஒரு பென்சன்  கொடுக்கும் வரையில் அவரை வறுமை வாட்டியது.

இலக்கிய சேவைக்காக அரசு அவருக்கு பென்சன் கொடுத்தது. வருடைய நண்பர்  ஜேம்ஸ் பாஸ்வெல் JAMES BOSWELL  அவருடைய மேதாவிலாசத்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டினார். பி காலத்தில் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதினார்.

29 வயதில் ஜான்சன் எழுதிய லண்டன் LONDON என்ற கவிதை வெளியானது . இது லத்தீன் மொழிக்கு கவிஞர் யுவனல் (JUVENAL’S  THIRD SATIRE) கவிதையைத் தழுவியது. அதற்கு வரவேற்பு கிட்டவில்லை.அவருடைய மற் றொரு  கவிதையைத் தழுவி எழுதிய கவிதை (THE VANITY OF HUMAN WISHES), ஆசை வயப்பட்ட  மனிதன் படும் அல்லல்களை எடுத்துக்காட்டுகிறது.

‘ஆங்கிலப் புலவர்களின் வாழ்க்கை வரலாறு’ LIVES OF THE ENGLISH POETS  என்று அவர் எழுதிய நூலில்தான் அவருடைய திறமை வெளிப்பட்டது. ஒவ்வொரு புலவரின் கவிதைகளை அவர் விமர்சித்தது அவருடைய புலமையைக்  காட்டியது . அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது .

ஏழு ஆண்டுகள் உழைத்து 40,00 சொற்களைக் கொண்ட முதல் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இதனால் ஆங்கில இலக்கிய உலகில் அழியாத இடம் பெற்றார்.

அவருடைய கவிதைகள் ,நூல்கள்…..

1738- LONDON

1744- AN ACCOUNT OF THE LIFE OF MR RICHARD SAVAGE

1749- THE VANITY OF HUMAN WISHES

1755- DICTIOARY OF THE ENGLISH LANGUAGE

1759- RASSELAS, PRINCE OF ABYSSINIA

1779-1781 – LIVES OF THE ENGLISH POETS.

PLEASE SEE THE LINKS FOR  MY OLD ARTICLES

அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன் (Post No.9653 …

https://tamilandvedas.com › அகர…

27 May 2021 — சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் …

–subham–

tags- அகராதி , டாக்டர் ஜான்சன், Dr Johnson