ஹனுமான் பிறந்த அஞ்சனா பர்வதம் (Post No.9868)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9868

Date uploaded in London – –   19 JULY   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 18-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான ஹனுமான் பிறந்த இடமான அஞ்சனா பர்வதம் ஆகும். உலகின் ஆதி காவியமான வால்மீகி ராமாயணம் கூறும் கிஷ்கிந்தா பகுதி இதுவே. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோவில். துங்கபத்ரா நதிக் கரையில் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் கூடிய மலைப் பகுதியில் உள்ள இந்தக் கோவிலுக்குச் செல்ல மலைமீது ஒரு சமயத்தில் இருவர் மட்டுமே நடக்கக் கூடிய அளவில் குறுகலான படிகள் உள்ளன. 550 படிகளைக் கடந்து மேலே சென்றால் கோவிலை அடையலாம். ஆஞ்சனேயர் பிறந்த இடம் என்பதால் மலை உச்சியிலும் செல்லும் வழியிலும் ஏராளமான வானரங்களைப் பார்க்கலாம். வெள்ளையடிக்கப்பட்ட வெண்மை நிறச் சுவர் கொண்ட சிறிய கோவில் இது. தூரத்திலிருந்தே இந்தக் கோவிலின் மீதுள்ள கூம்பு வடிவுள்ள மாடத்தில் பறக்கும் காவிக் கொடியைக் காணலாம்.

கோவிலின் முன்னே தீப ஸ்தம்பமும் துளசி மாடமும் உள்ளன. முன் மண்டபமும் அதை அடுத்து கர்பக்ரஹமும் உள்ளன. ஆஞ்சநேயப் பெருமான் செந்தூரக் காப்பில் அருள் மிகு தோற்றத்துடன் காட்சி அளிப்பதைக் கண்டு களிக்கலாம். ஹனுமத் ஜெயந்தி அன்று  ‘ஸ்ரீ ராம் கீ ஜெய்’ என்ற கோஷமிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளாக வந்து ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். இந்தப் புனிதமான பர்வதத்தைப் பற்றி இதிஹாஸ புராணங்கள் கூறும் வரலாறுகள் உண்டு.

அஞ்சனா தேவி 7000 ஆண்டுகள் தவம் செய்து ஆஞ்சனேயரை மகனாகப் பெற்ற இடம் இதுவே. அஞ்சனா தேவிக்கும் வாயு பகவானுக்கும் பராக்ரமசாலியான ஆஞ்சனேயர் பிறந்தார். சூரியனுடன் கூடவே அவருக்கு இணையான வேகத்தில் சென்று பல கலைகளையும் அவரிடமிருந்து கற்றார். கிஷ்கிந்தாவை அரசாண்ட வாலி தன் தம்பியான சுக்ரீவனைத் துரத்தவே, சுக்ரீவன் இந்தப் பகுதியில் வந்து இருக்கலானார். அவருக்குச் சொல்லின் செல்வனான ஹனுமார் துணையாக அமைந்தார். சீதையைத் தேடி வந்த ராமரும் லக்ஷ்மணரும் இந்தப் பகுதியில் வரும் போது ஹனுமார் அவர்களைச் சந்தித்து அவர்களை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்து ராம சேவையில் இறங்கினார். ராமாயணத்தில் விவரிக்கப்படும் இந்தச் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள் இவையே என்பதை எண்ணி, உணர்ந்து இந்தப் பகுதிக்கு வரும்போது ஒவ்வொரு இடமாகப் பார்த்து உள்ளம் பூரிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள மாதங்க மலை மாதங்க மஹரிஷியின் பெயரால் அமைந்துள்ள ஒன்று.  இந்தப் பகுதியில் நுழைந்தால் உனக்கு மரணம் ஏற்படும் என்று வாலிக்கு மாதங்க மஹரிஷி சாபமிட்டதால் வாலியால் இந்தப் பக்கமே வரமுடியவில்லை. இந்த மலையே ஹம்பியில் உயரமான இடம். இங்குள்ள விட்டலர் கோவில் அருகேயே ராமரால் வதம் செய்யப்பட்ட வாலி எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாலியின் கோட்டை இருந்த பகுதியைச் சுட்டிக் காட்டுவதாக இங்குள்ள வாலி குகை திகழ்கிறது. சுக்ரீவனின் பட்டாபிஷேகம் நடந்த இடமும் இந்தப் பகுதியில் தான்.

ஸ்படிகம் போல ஜொலிஜொலிக்கும் ஸ்படிக மலை இங்குள்ளது.

தாமரை மலர்களால் நிரம்பி உள்ள பம்பா சரோவர் என்ற குளத்தில், தெள்ளத் தெளிந்த ஸ்படிகம் போன்ற நீர் உள்ளது.

அனேகுந்தி என்ற கிராமத்தின் அருகிலேயே ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சிந்தாமணி என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர். சிந்தாமணி ஆலயம் இங்கு உள்ளது. இந்த இடத்தில் தான் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இறுதிப் போர் நடந்தது. ராமர் மறைந்திருந்து வாலியின் மீது பாணத்தை ஏவிய இடம் இதுவே.

சீதையை இலங்கையில் கண்டு திரும்பி வருகையில் வானரங்கள் மிகுந்த மகிழ்ச்சியால் மதுவனத்தில் தேனைக் குடித்து அதை அழிக்க ஆரம்பித்த செய்தியை ராமாயணத்தில் காண்கிறோம். அந்த மதுவனப் பகுதியும் இங்கே தான் உள்ளது.  ராமர் லக்ஷ்மணருடன் இங்குள்ள மால்யவான் பர்வதத்தில் நான்கு மாதங்கள் தங்கி இருந்தார்.

இங்குள்ள இன்னொரு ஆஸ்ரமம் சபரி ஆஸ்ரமம். இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பிவருகையில் இங்குள்ள இடத்தில் சீதா தேவியார் குளித்த இடம் சீதா குண்ட் என்று அழைக்கப்படுகிறது. கிஷ்கிந்தையில் உள்ள அனைவரையும் ராம பட்டாபிஷேகத்திற்கு அழைத்துச் செல்ல புஷ்பக விமானம் இங்கு இறங்கிய செய்தியால் சீதை இங்கு குளித்த செய்தியும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ராம, சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேயரின் பாதம் பட்ட பூமி இதுவே. இராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் இடம் பெறும் பல பகுதிகள் ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றியும் அருகேயும் அமைந்திருப்பதால் இது மிகச் சிறந்த புண்ய ஸ்தலமாகக் கொண்டாடப்படுவதில் வியப்பே இல்லை. சுமார் ஐநூறு இதிஹாச, புராண, சரித்திரச் சிறப்பு மிக்க இடங்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.       

மனோஜவம் மாருத துல்ய வேகம்  ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |


வாதாத்மஜம் வானரயூத முக்யம்  ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

ஆஞ்சனேய பகவான் கி ஜெய்! நன்றி வணக்கம்!       

***

tags-  சபரி ஆஸ்ரமம், ஹனுமான் , அஞ்சனா பர்வதம், பிறந்த இடம்

காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான் நடக்கிறது! (9867 Post)

கர்னல் ஷெராக் (Col Sherag) தெரிவிக்கிறார்:-

01)   1.5 லக்ஷம் ஹிந்து-சீக்கிய குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்போராக ஆகி விட்டனர்.

02)     உமர் அப்துல்லா, மெஹ்பூபாவிகு வழங்கப்பட்ட சலுகைகள்/வசதிகள் நீக்கப்பட்டு விட்டன.

03)     ஜம்மு காஷ்மீர் நேஷனல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மீதும் காஷ்மீர் கட்டுப்பாடுகள் விதிப்பது நீக்கப்பட்டது.

04)     ஹிந்து புனிதத்தலங்களின் மீதான காஷ்மீரின் கட்டுப்பாடு நீங்கியது.

05)     1990இல் ஹிந்துக்கள் காஷ்மீரில் விட்டு விட்ட சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோரின் மீது, தானாகவே நடவடிக்கை எடுக்க அதற்குரிய அதிகாரமையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06)     ஜம்முகாஷ்மீரில் உள்ள அனைத்து கோல்ஃப் மற்றும் இதர கிளப்புகளின் மீதான கட்டுப்பாடை காஷ்மீர் இழந்தது.

07)     பல்கலைக் கழக விஷயங்களில் காஷ்மீர் முதல் அமைச்சரின் பங்கு இனி இருக்கவே இருக்காது.

08)     தேச விரோதிகளுக்கு ஜம்முகாஷ்மீரில் 42 வருடங்களுக்கு முன்னர் தரப்பட்டிருந்த சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டது.பப்ளிக் சேஃப்டி ஆக்ட், 1978இன் படி நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்போர் ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலும் கூட எந்தச் சிறையிலும் இனி அடைக்கப்படலாம்.

09)     ஜம்முவிலிருது அரசு அலுவலகம் இனி காஷ்மீருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜம்முவிலிருந்தே செயல்படலாம். (ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த அலுவலகம் -பைல்கள் உட்பட- காஷ்மீருக்கு மாறுவது வழக்கம்)

10)     பரூக், உமர், ஆஜாத், மெஹ்பூபா உள்ளிட்ட பழைய முதல் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், வசதிகள் நீக்கப்பட்டன. இதில் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

11)     அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டன. இங்குள்ள பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டிருப்பது இனி இல்லை. மாற்றப்படலாம்.

12)     தர்மாத் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டிலோ அல்லது அந்தத் தலத்திற்கான தல வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ இதுவரை ஹிந்து புனிதத் தலங்கள் இருந்தன.இனி இந்த வாரியங்கள் நியூ டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.

13)     ஜம்மு காஷ்மீர் வக்ஃப் போர்ட் கூட நியூ டெல்லியினால் எடுக்கப்பட்டு விட்டது. அதன் முழு சொத்துக்கள் இதுவரை காஷ்மீர் முஸ்லீம்களின் நன்கொடைகளால் உருவாக்கப்பட்டிருந்தன. இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் இவை வரும்.

14)      பண்டிட்களிடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகத்திற்கு நியூ டெல்லி அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்.

15)     கோல்ஃப் மைதானங்கள் மட்டுமல்ல, அனைத்து காட்டு நிலங்களும் கூட நியூ டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. டூரிஸ்ட் டெவலப்மெண்ட் அதிகாரிகளும் இனி டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பர். இந்தியாவிலிருந்தே இனி நிலங்களை லீசுக்கு விடலாம். வசதிகளை யாருக்கும் தரலாம்.

16)     முன்பிருந்ததைப் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி வாரண்ட் ப்ரெஸிடென்ஸில் (Warrant of Precedence) 15ஆம் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறார்.

17)     ஜம்மு காஷ்மீர் முதன்மந்திரியினால் பல்கலைக்கழக போர்ட் மற்றும் வக்ஃப் போர்டுக்கு செய்யப்பட்ட நாமினேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

18)      அனைத்து காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரிகளும் குறைந்த முக்கியத்துவம் கொண்டுள்ள நிலைகளில் வைக்கப்பட்டதோடு, உள்ளூர் வாசிகள் அல்லாத அதிகாரிகள் நிர்வாகத்தை இயக்க ஜம்முவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

19)     ஆயிரக்கணக்கான லேண்ட் பேங்குகள் (Land Banks of thousands of Kanals) இந்த மாநிலம் சாராத மற்றவருக்கு ‘Investment and Industry’ என்ற பெயரில் தரப்படும்.

நமது MHA (Ministry of Home Affairs) அதிக விளம்பரப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமின்றி, ஓசையின்றி இவை அனைத்தையும் அமுல் படுத்தியுள்ளது.

       சாதனை தான்!

***

INDEX

ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் மாற்றம்.

19 மாற்றங்களின் பட்டியல்

ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் முழுமையான பகுதியான ஆகி விட்டதற்கான சான்றுகள்!

Source and Thanks to Truth Vol 89 No 12 Dated 2-7-2021 – https://m.facebook

Tags- ஜம்மு ,காஷ்மீர், மாற்றம்

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் – பகுதி 2 (Post No.9864)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9864

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேத உரையாடல்/ சம்பாஷணைக் கவிதைகள்

xxxx

RV.1-165

அகஸ்தியர், இந்திரன், மருத்துக்கள் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.1-170

அகஸ்தியருக்கும்  இந்திரனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.1-179

அகஸ்தியருக்கும் , லோபாமுத்திரைக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.3-33

விச்வாமித்ரன் -நதிகள் இடையே நடைபெறும் உரையாடல்

xxx

RV.4-18

ரிஷி வாம தேவன், இந்திரன், அதிதி ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல்

xxx

RV.4-26/27

வாமதேவன் – இந்திரன் –  பருந்து இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

4-42

ரிஷி திரஸதஸ்யு புருகுத்சன் – இந்திரா வருணர் இடையேயான உரையாடல்

xxx

RV .7-33

வசிஷ்டருக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் இடையேயான உரையாடல்

xxxx

8-91

அபலை – இந்திரன் இடையேயான உரையாடல்

xxxx

10-102

ரிஷி முத்கலனின்  மனைவி – ரதத்தில் பூட்டப்பட்ட காளை யுடன் உரையாடல்

xxxx

RV.10-86

இந்திரன், இந்திராணி, வ்ருஷாகபி  ஆகியோருடன் உரையாடல்

xxx

RV.10-135

யமன் – இறந்தோர் ஆவி

xxx

RV.10-51

அக்கினி- தேவர்கள் இடையே உரையாடல்

Xxxx

RV.10-124

இந்திரன்- அக்கினி இடையே உரையாடல்

Xxxx

10-108

சரமா என்ற பெண் நாயும் – பாணி என்னும் வணிகர்களுக்கும்

Xxx

10-28

இந்திரனுக்கும்  மகன் வசுக்ரனுக்கும்

Xxx

RV.10-95, 

அபலைக்கும் இந்திரனுக்கும்

Xxxx

இவை தவிர இன்னும் சில உரையாடல் கவிதைகள் உள . அவை உரையாடலா இல்லையா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கிறது.

–subham —

 tags- ரிக் வேத, நாட்டிய நாடகங்கள் – 2, உரையாடல், கவிதைகள்,

அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM) புகழ் ஜார்ஜ் ஆர்வெல் (Post No.9863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9863

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில நாவல் ஆசிரியரும், கவிஞரும் கட்டுரையாளருமான ஜார்ஜ் ஆர்வெல்( GEORGE ORWELL ) லின்  உண்மைப் பெயர் எரிக் ஆர்தர் பிளேர்( ERIC ARTHUR BLAIR ) ஆகும். அவர் எழுதிய அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM)  மற்றும் நைன்டீன் எய்ட்டி போர் (NINETEEN EIGHTY FOUR) (1984) ஆகிய இரண்டும் புகழ் பெற்ற நாவல்கள் ஆகும். அரசியல் நிலவரத்தை ( SATIRE) கேலியும் கிண்டலும் செய்யும் பழி கரப்பு  அங்கதம் நிறைந்தவை அவை.

“எல்லா பிராணிகளும் சமமானவை (சம உரிமை உள்ளவை); ஆனால் சில பிராணிகள் மற்றவற்றைவிட கொஞ்சம் கூடுதல் சமத்துவம் உடையவை “ (All animals are equal, but some are more equal than others) என்ற இவருடைய பொன்மொழி அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை சாடும் வாசகம் இது.

ஆங்கில தம்பதியருக்கு இந்தியாவில் பிறந்தவர் ஜார்ஜ். ஆயினும் குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டனில் ஈடன் (Eton College) கல்லூரியில் படித்த பின்னால் 1922 முதல் 1927 வரை பர்மாவில் போலீஸ் வேலையில் இருந்தார் . ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்த பின்னர் குறைந்த சம்பள வேலைகளை மேற்கொண்டு அதே நேரத்தில் தான் எழுதியவற்றை அச்சிட முயன்றார்.

முப்பது வயதில் முதல் புஸ்தகம் (DOWN AND OUT IN PARIS AND LONDON)

வெளியானது. அதில் தன்னுடைய வாழ்க்கையை விவரித்தார். பின்னர் எழுதிய நாவல் (THE ROAD TO WIGAN PIER) ஒன்றில் அந்தக் காலத்தில் பிரிட்டனில் உழைக்கும் வர்க்கம் பட்ட கஷ்டங்களை சித்தரித்தார்.

ஸ்பெயின் நாட்டின் உள் நாட்டு யுத்தத்தில் (Spanish Civil War) )  இடது சாரி ரிபப்ளிகன் தரப்பில் போரிட்டு காயம் அடைந்தார். இடதுசாரி எண்ணங்கள் இருந்தபோதும் ரிபப்ளின்களை ஆதரித்த கம்யூனிஸ்டுகளை வெறுத்தார் . அவர்களைத் தாக்கி ஒரு நாவலும் (HOMAGE TO CATALONIA)  எழுதினார்.

இரண்டாவது உலகப் போர் காலத்தில் ராணுவ சேவை செய்யும் தகுதி இல்லாததால் பி.பி.சி.யில் பணியாற்றினார்.உலகப் போர் முடியும் தருவாயில் அனிமல் பார்ம் (Animal Farm)  கதை எழுதினார். இதில் மனித ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் பிராணிகள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு புது ஆட்சி அமைக்கின்றன. பன்றிகள் ஆட்சியாளர் பதவியில் அமர்கின்றன அதாவது புரட்சி என்பது எப்படி கேலிக் கூத்து ஆகிவிடும் என்பதை படம்பிடித்துக் காட்டுவதே அவர் நோக்கம்.

‘1984’ என்ற தலைப்பில் நாவல் எழுதிய பின்னர் காச நோயால் (TB) இறந்தார். 1984 நாவலில் சர்வாதிகார ஆட்சியில் எப்படி பயந்து சாக வேண்டி இருக்கிறது என்பதை வருணிக்கிறார். எப்போதும் (Big Brother is Watching You) பெரிய ஆசாமி உன்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்ற வசனம் அதில் திரும்பத்  திரும்ப வரும். இதுவும் பிற்காலத்தில் அடிக்கடி பயன்படும் பொன்மொழியாக மாறியது.

ஜார்ஜ் ஆர்வெல்

பிறந்த தேதி – ஜனவரி 23, 1903

இறந்த தேதி – ஜனவரி 21, 1950

வாழ்ந்த ஆண்டுகள் – 46

அவருடைய நூல்கள்:–

1933- DOWN AND OUT IN PARIS AND LONDON

1934 – BURMESE DAYS

1935 – A CLERGYMAN’S DAUGHTER

1936- KEEP THE ASPIDISTRA FLYING

1937- THE ROAD TO WIGAN PIER

1938- HOMAGE TO CATALONIA

1939- COMING UP FOR AIR

1945 – ANIMAL FARM

1949- NINETEEN EIGHTY- FOUR

–subham–

tags- அனிமல் ஃபார்ம் ,  ஜார்ஜ் ஆர்வெல், George Orwell

எவன் உண்மையான சாது? (Post No.9862)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9862

Date uploaded in London – 18 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9824 (வெளியான தேதி: 7-7-2021)

 எவன் உண்மையான சாது? 

ச.நாகராஜன் 

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பதினைந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

வ்ரதே விவாதம் விமதிம் விவேகே ஸத்யேதிஷங்காம் வினயே விகாரம் |

குணேவமானம் குஷலே நிஷேதம் தர்மே விரோதம் ந கரோதி சாது: ||

 ஒரு சாது விரதங்களைப் பற்றி எதிர்த்து விவாதம் செய்ய மாட்டான். விவேகமான ஒன்றைப் பற்றி எதிர்க்க மாட்டான். ஸத்யத்தைப் பற்றி முடிவே இல்லாத சந்தேகத்தைக் கொள்ள மாட்டான். வினயத்தை விகாரமாக எடுத்துக் கொள்ள மாட்டான். குணத்தை அவமதிக்க மாட்டான். புனிதமான ஒன்றைத் தடுக்க மாட்டான். எது தர்மமோ அதை எதிர்க்க மாட்டான்,

The virtuous man does not quarrel or adversely argue in the case of a religious vow, does not show dissent in the case of discrimination, never entertains an endless doubt in the case of a reality, never takes benevolence as an unnatural quality, never insults a merit, never prohibits an auspicious thing and never opposes what is right or proper.

*

கல: சம்ஷபமாத்ராணி பரசித்தத்ராணி பஷ்யதி |
ஆத்மனோ பில்வமாத்ராணி பஷ்யன்னபி ந பஷ்யதி ||

மற்றவர்களிடம் உள்ள கடுகு போன்ற சிறு குறைகளைக் கூட ஒரு கெட்ட மனிதன் கூறி விடுவான். ஆனால் பில்வப் பழம் போல பெரிதாக இருக்கும் தன் குறைகளைக் காண மாட்டான்.

The Wicked man locates the defects in the case of others even though they are as small as mustard seed and fails to notice his own defects although they are as big as Bilva fruits.

*

ந நரஸ்ய நரோ தாஸோ தாஸ ச்ரார்தஸ்ய பூபதே |

கௌரவம் லாகவம் சாபி தனாதனநிபந்தனம் ||

ஓ, மன்னா! ஒரு மனிதன் ஒரு போதும் இன்னொரு மனிதனுக்கு அடிமை இல்லை. கௌரவமோ அவமதிப்போ ஒருவனிடம் பணம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தே காண்பிக்கப்படுகிறது.

O King! Never is a human being slave to another human being. Respect or insult (shown to a person) are only due to (his having) money or absence of money.

*

வயோவ்ருத்தாஸ்தபோவ்ருத்தா ஞானவ்ருத்தாஸ்ச யே பரே |

தே சர்வே தனவ்ருத்தஸ்ய த்வாரி திஷ்டந்தி கிங்கரா: ||

வயதினால் பெரியவர்களும், தவத்தினால் பெரியவர்களும், அறிவினால் பெரியவர்களும் இதர நற்குணங்களால் பெரியவர்களும் செல்வத்தினால் பெரியவன் வீட்டு வாசலில் வேலைக்காரர்கள் போல நிற்கின்றனர்.

All those that are great by the age, great by their penance and great by their wisdom and great by other merits keep standing as peons at the doors of a man who is great by his wealth.

*

யத்ததாஸி விசிஷ்டோப்யோ யச்யாஷ்நாஸி தினே தினே |

தத்தே வித்தமஹம் மன்யே சேஷமன்யஸ்ய  ரக்ஷஸி ||

தகுதி உடையோருக்கு தானம் செய்யும் பணமும், தினமும் நீ உண்பதும் அதாவது  ஒவ்வொரு நாளும் நீ அனுபவிப்பதும் உனக்கே உரித்தாகுகிறது. உனது மற்ற அனைத்து சம்பாத்தியமும் அதைக் காப்பாற்றுவதும் ‘மற்றவர்களுக்காக மட்டுமே’ தான்!

Of your wealth whatever you donate to the deserving and what you eat, i.e., enjoy day after day really belongs to you. The rest you are earning and protecting ‘only’ for others.

***

INDEX

உண்மையான சாது யார்?

தன் குறை காணாமல் பிறர் குறை காண்பவனே கெட்ட மனிதன்

பணம் இருப்பதைப் பொறுத்தே கௌரவமும் அவமதிப்பும்

செல்வந்தன் வீட்டு வாசலில் வேலைக்காரர் போல அனைவரும் நிற்பர்

மற்ற்வர்களுக்கான சம்பாத்தியமும் உனக்கான சம்பாத்தியமும் எவை எவை?

Tags- உண்மையான, சாது,

மூன்று சகோதரிகள் ; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!(9861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9861

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிராண்டி சகோதரிகள் (Bronte Sisters) மூவருக்கும் இடையேயான மிகப்பெரிய ஒற்றுமைகள் – மூவரும் நாவல் எழுதினர். மூவரும் 38 வயதுக்குள் இறந்தார்கள்!

ஆங்கிலத்தில் அதிகம் படிக்கப்பட்ட நுல்களில் Jane Eyre ஜேன் அயர் நாவலும் Wuthering Heights வுதெரிங் ஹைட் நாவலும்  குறிப்பிடத்தக்கவை உணர்ச்சி வசமூட்டும் நாவல்கள்  இவை .

****

ஷாலட் பிராண்டி CHARLOTTE BRONTE

பிறந்த தேதி – ஏப்ரல் 21, 1816

இறந்த தேதி – மார்ச் 31, 1855

வாழ்ந்த ஆண்டுகள் – 38

படைப்புகள் PUBLICATIONS

1847 – JANE EYRE

1849- SHIRLEY

1853 – VILLETTE

PUBLISHED AFTER SHE DIED-

1857 –  THE PROFESSOR

XXXXX

எமிலி EMILY BRONTE

பிறந்த தேதி -ஜூலை 30, 1818

இறந்த தேதி – டிசம்பர் 1, 1848

வாழ்ந்த ஆண்டுகள் – 30

படைப்புகள் PUBLICATIONS

1847- WUTHERING HEIGHTS

XXXX

ஆன் ANNE BRONTE

பிறந்த தேதி – ஜனவரி 17, 1820

இறந்த தேதி – மே 28, 1849

வாழ்ந்த ஆண்டுகள் – 29

படைப்புகள் PUBLICATIONS

1847- AGNES GREY

1848 – THE TENANT OF WILDFELL HALL

XXXX

மூவரும் வடக்கு இங்கிலாந்தில் யார்க்ஷைர் பொட்டல்காட்டுப் பகுதியில் பிறந்தார்கள்.மூத்தவள் ஆன் Anne பிறந்தவுடன் தாயார் இறந்தார்.

அவருடன் பிறந்த 4 சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் தந்தையும் அத்தையும் வளர்க்க வேண்டியதாயிற்று . அவரோ சமயப்  பிசாரகர். இரண்டு மூத்த சகோதரிகள் இளம் வயதில் இறந்தனர். ஏனையோர் வீட்டிலேயே கல்வி கற்றனர். புதர்க் காடுகளில் (மூர் moor ) விளையாடி பொழுதைக் களித்தனர். வீட்டிலுள்ள புஸ்தகங்களை எல்லாம் படித்து முடித்தனர்.பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் அதிகம் இல்லை. ஆயினும் ஆசிரியராகப் பணியாற்றினர் அல்லது பள்ளி நிர்வாகி பதவி வகித்தனர். சாலட் , எமிலி ஆன் ஆகிய மூன்று சகோதரிகளும் சேர்ந்து 846ல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர்.அவற்றில் எமிலியின் கவிதைகள் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அவை விற்று முடிப்பதற்குள் மூன்று சகோதரிகளும் கதை எழுத உட்கார்ந்தனர்.ஆளுக்கு ஒரு நாவலை எழுதி 1847ல் வெளியிட்டனர்.

ஆன், வயது 27,   எழுதியது அக்கனஸ் க்ரே.

எமிலி , வயது 29,   எழுதியது வுதெரிங் ஹைட்ஸ்

ஷாலட் , வயது 31, எழுதியது  ஜேன் அயர்

மூவரும் தன்  சொந்த அனுபவங்களை உணர்ச்சி பொங்க எழுதினார்கள் . இம்மூன்றில் கடைசி இரண்டு  நாவல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன.

ஒரு துணிச்சலான ஏழைப் பெண், கடுமையான குணம் உடைய நிலச் சுவான்தார் மீது காதல் கொண்ட கதை ஜேன் அயர் கதையாகும்.

யார்க் க்ஷைர் பொட்டல் காட்டில் (Yorkshire Moor)  நடக்கும் காதல், வெறுப்பு , பழிவாங்குதல் ஆகியவற்றை வர்ணிக்கிறது வுதெரிங் ஹைட்ஸ் .  இதன் மொழி அமைப்பு வேகம் மிக்கது.வேறு எந்த விக்ட்டோரியன் கால நாவலிலும் இத்தகைய வன்மொழியைக் காணமுடியாது.

1849ம் ஆண்டில் எமிலியும்,ஆனும்  சகோதரனும் டிபி TB எனும் காச நோயால் இறந்தனர்.. 1854ல் ஷாலட்டு ஒரு மதப் பிரசாரகரை மணந்தார். மறு ஆண்டில் பிரசவ வேதனையில் இறந்தார் .

–SUBHAM–

TAGS – மூன்று சகோதரிகள், எமிலி, ஸாலட், ஆன் , பிராண்டி

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்! (Post No.9859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9859

Date uploaded in London – 17 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

ச.நாகராஜன் 

01)   உலகின் ஆதி நூல் பிறந்த இடம் பாரதம் தான். இவை வேதங்கள் எனப் படுகின்றன. ஆச்சரியமான விஷயம், இவை அனைத்தும் என்று பிறந்ததோ அதே வடிவில், அதே உச்சரிப்புடன் , வாய் மொழியாகவே பரம்பரை பரம்பரையாக வந்து இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன!

02)   உலகின் மாபெரும் இதிஹாஸங்கள் பாரதத்திலேயே தோன்றியுள்ளன. அவையாவன: 1) மஹாபாரதம் 2) ராமாயணம்.

கிரேக்க இதிஹாஸங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விடப் பெரியது மஹாபாரதம்!

03)   தேசம் என்ற கருத்தை மிகச் சாதாரணமாக நமது முன்னோர்கள் கூறி விட்டனர். “மாதா பூமிஹி, புத்ரோஹம் ப்ருதிவ்யாஹ” – “இந்த பூமியே நமது அன்னை; நான் இதன் புதல்வன்” – இந்தக் கருத்தை பன்னெடுங்காலம் முன்பே கூறிய பூமி பாரதமே!

04)   நமது பழம் பெரும் புராணமான பாகவதம் கூறுகிறது : “கோடிக்கணக்கான ஆண்டுகள் சுவர்க்கத்தில் வாழ்வதை விட ஒரு சில கணங்கள் பாரதத்தில் வாழ்வது சாலச் சிறந்தது”

05)   பல தத்துவங்கள், பல மொழிகளைப் பேசுவோர் இணக்கமாக வாழும் நம ஒருமைப் பாட்டை பழம் பெரும் வேதமான அதர்வண வேதம் கூறி இருக்கிறது :”நமது இந்த அன்னை பூமி பல மொழிகளைப் பேசுவோருக்கும், பல தத்துவங்களைப் பின்பற்றுவோருக்கும் சமமான புகலிடத்தைத் தருகிறது.”

ஜானம் பிப்ரத பஹுதா விவாசஸ்ம்

நானா தர்மாணம் ப்ரித்வி ய்தோகுசம்

06)   உலக அன்னை இந்தியா

நம் இனத்தின் தாயகம் பாரதம். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம். நம் தத்துவ சாஸ்திரத்தின் தாய் இந்தியா. கிறிஸ்துவ சமய லட்சியங்களுக்கெல்லாம், புத்தரின் மூலம் உதவிய தாய் இந்தியா. சுய ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும், கிராம சமுதாயத்தின் மூலம் வழிகாட்டிய தாய் இந்தியா. இந்திய மாதா நம் அனைவருக்கும் அநேக வழிகளில் தாய்.

       -வில் டியூரண்ட், தத்துவ சாஸ்திர அறிஞர்

07)இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம்; இறைவனின் காரியம். இறைவனே நம் மாலுமி. நம் லட்சியத்தை நோக்கி நம்மை அவன் இட்டுச் செல்வான்.

       –  மஹரிஷி அரவிந்தர்

07)     ந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால்பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால்இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால்மனிதகுலம் அன்பின் சிகரத்தைபரந்த உள்ளத்தின் உச்ச நிலையைதூய்மையின் உயரத்தைஅமைதியின் எல்லையைஎல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.

08)      

– ஸ்வாமி விவேகானந்தர் (எழுமின், விழிமின் நூலிலிருந்து தொகுப்பு திரு ஏகாநாத்ஜி ரானடே தமிழில் ஆர். கோபாலன்)

09) புராதன இந்தியா அசாதாரணமான சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

                                 –   தார்ன்டன் (Mr Thornton)

10) எல்லா எழுத்தாளர்களின் ஒருமித்த கருத்துப்படி இந்தியா உலகில் அனைவரும் ஏற்கும் வசிப்பிடமாகும். உலகின் மிக இன்பமான ஒரு பகுதியாகும். அதன் புழுதி காற்றை விட சுத்தமானது. அதன் காற்றோ தூய்மையைக் காட்டிலும் தூய்மையானது

    அப்துல்லா வஸாஃப் – 14ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த வரலாற்று ஆசிரியர் ( Abdulla Wassaf – 14th Century Historian)

***

INDEX

பாரதம், ஆதிநூல் வேதம், இன்றும் இருப்பவை;மஹாபாரதம், இராமாயணம்,

சுவர்க்க வாழ்வை விட பாரத வாழ்வு சிறந்தது, பல தத்துவங்களுக்கும் சமமான இடம்,சம்ஸ்கிருதம், புத்தர், அனைவருக்கும் தாய், இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம், அரவிந்தர், ஆன்மாவின் இறுதி வீடு, புனித புண்ணிய பூமி, விவேகானந்தர், எழுமின் விழிமின் நூல், ஏக்நாத்ஜி ரானடே, R. கோபாலன், தார்ன்டன், பாரத புழுதி காற்றை விட தூய்மை; காற்று தூய்மையை விட தூய்மை, அப்துல்லா வஸாஃப்

tags – பொன்னொளிர் ,பாரதம், 

LONDON CALLING (HINDUS) 19-7-2021 (Post No.9872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9872

Date uploaded in London –19 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-7- 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER – LONDON SINGER Mrs Harini Raghu, COMPOSITION BY LONDON DR A NARAYANAN

தோழிப்பாட்டு (PRAYER)

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி    (பாடும்போது முதல் 2 அடிகளைத்திரும்பப்பாடவும்)                                                                                 

அவன் வஞ்சியரிருவர்  கொஞ்சிய நிலையில்

தஞ்சமடைந்தானடி தோழி  

தன்னையும் மறந்தானடி  தோழி

கார்த்திகைக் குமரிகள் கை வளர்ந்த வேலன்

வேதியர்கள்  போற்றும் ஞானசிவபாலன்

கருணை  விழியும் கனிவு  தோற்றமும்

கண்டவுடனே கரையும் குறையெலாம்

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி

பன்னிருகை வேலன்

பார் வதி குமாரன்

பரமசிவபாலன்

பக்தபரிபாலன்

சித்தர்களின் நித்தன்

சிங்கார வேலன்

எந்த ஊருமவன் சொந்த ஊரே  

எந்த  நாடுமவன் சொந்த நாடே

குன்றிருப்பின்னது குமரன்  நாடே

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி

DR A NARAYANAN, LONDON

நாராயணன்

Talk by B.KANNAN, DELHI on “அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”- 14 mts

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SAMARTHA  RAMADASA

– 14 MTS

ASHTAPATHI -23 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -7 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 55 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS.

–subham–

tags- broadcast1972021

LONDON CALLING (TAMILS) 18-7-2021 (Post.9871)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9871

Date uploaded in London –19 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON CALLING TAMILS  18-7-2021

18-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer MISS MAHISHA SRINIVAS, PARIS, FRANCE

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON Hampi Anjaneya Temple8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 65 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- broadcast18721