பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!(Post No.9756)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9756

Date uploaded in London – –  –21 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!

ச.நாகராஜன்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகள் உண்டு. இவை காலத்தின் பொக்கிஷம். இவை தரும் விவரங்கள் ஏராளம், ஏராளம்!

தமிழ் மொழியில் பழமொழிகள் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கடந்த பல்லாயிரம் வருடமாக வாழ்ந்து வரும் மூத்த குடியான தமிழ்க் குடி தனது அனுபவத்தையும், அறிவையும் இந்தப் பழமொழிகளில் கொட்டி வைத்திருக்கிறது.

இவற்றைத் தொகுக்கப் பல முயற்சிகள் கடந்த பல நூறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்று வரை இந்த நல்ல முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வளரட்டும் இந்த முயற்சி.

10760 பழமொழிகளைத் தொகுத்து அனவரத விநாயகம் பிள்ளை என்பவர் 1912இல் ‘பழமொழி அகராதி’ என்ற நூலை வெளியிட்டார்.

1887இல் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 3644 பழமொழிகள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார். இதில் தனது ஆங்கில மொழிபெயர்ப்பையும் சில அரிய விவரங்களையும் அவர் தொகுத்துத் தந்தார்.

1842இல் முதன் முதலாக பழமொழி தொகுப்பு நூல் வெளியானது. இதை யாழ்ப்பாணத்தில் இருந்த பெர்சிவல் தொகுத்து ‘பழமொழித் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார்.

தமிழ் அறிஞரான கி.வா.ஜ. ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது அந்த வட்டாரத்தில் வழங்கி வந்த பழமொழிகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.

பின்னர் அவற்றை தொகுதிவாரியாக வெளியிட ஆரம்பித்தார்.

தமிழ்ப் பழமொழிகள் தொகுதி – 1இல் 5838 பழமொழிகள் இடம் பெற்றன. ‘அ’ முதல் ‘ஐ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 2இல் 5839 முதல் 11207 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘ஒ’ முதல் ‘சூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 3இல் 11208 முதல் 16967 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘செ’ முதல் ‘பூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தொகுதி – 4இல் 16968 முதல் 21355 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘பெ’ முதல் ‘ஸ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.

நான்காம் தொகுதியில் விடுபட்டுப் போன இன்னொரு 207 பழமொழிகள் பிற்சேர்க்கையாக  இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர அருஞ்சொற்பொருள் அகராதி ஒன்றும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.

மார்ஜாலம் என்ற சொல் பழமொழியில் வருகிறது. இதற்கான பொருள் என்ன? இந்த அருஞ்சொற்பொருள் அகராதியைப் பார்த்தால் பூனை என்று தெரிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கிய நூல்களுள் ஏராளமான பழமொழிகள் இடம் பெறுகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அமைகிறது பழமொழி நானூறு.  400 பாடல்களும் சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 401 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது. மூன்றுரை அரையனார் என்ற சமண முனிவர் இயற்றிய அற்புதமான இந்த நூல் 34 தலைப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் பழமொழி சார்ந்த ஒரு பேருண்மை இருக்கும் படி உள்ள சிறப்பான நூல் இது.

அப்பர் பெருமான் பழமொழியை அமைத்து ஒரு பழமொழி பதிகத்தையே அருளியுள்ளார்.

இன்றைய திரைப்படப் பாடல்களிலும் பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.

இன்னும் ஏராளமான பழமொழி சார்ந்த பாடல்கள், நூல்கள் தமிழில் உண்டு.

தமிழில் மட்டும் அல்ல பழமொழிகள். சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இந்த சம்ஸ்கிருத நூல்களின் தொகுப்போ விரிவானது; பெரியது.

இதர நாட்டு மொழிகளில் உள்ள பழமொழிகளின் தொகுப்புகள் அந்தந்த நாட்டில் உள்ள பழமொழி ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

சான்ஃபிரான்ஸிஸ்கோ நூல் நிலையத்திற்கு (அங்கு இருக்கும் போதெல்லாம்).அடிக்கடி செல்லும் வழக்கத்தைக் கொண்டவன் நான்.

அங்கு இப்படிப்பட்ட தொகுப்பு நூல்களைப் பார்த்தால் பிரமிப்பையே தரும்.

தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள பழமொழிகளின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட வேண்டும். இது ஒரு அரிய பெரிய முயற்சி. ஆனால் காலத்தின் கட்டாயத் தேவை இது. பொறுத்திருந்து பார்ப்போம் – யார் முயற்சியை எடுக்கிறார்கள் என்று!

****

TAGS- பழமொழிகள்கி.வா.ஜ.

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன் (Post No.9755)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9755

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் (RICHARD BRINSLEY SHERIDAN)  நகைச்சுவையுடன் எழுதும் நாடக ஆசிரியர் ஆவார்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பிறந்தார். நடிப்பும் நாடகமும் அவர் ரத்தத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள் ஆகும். அவரின் தந்தை ஒரு நடிகர். தாயாரோ நாடகங்களையும் நாவல்களையும் எழுதியவர்.

ஆயினும் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த இயலவில்லை. ஆகவே ஷெரிடன் , கல்வி கற்பதற்காக இங்கிலத்துக்குச் சென்றபோது, குடும்பம் பிரான்ஸுக்கு  குடியேறியது .

பிறந்த தேதி –அக்டோபர்  31, 1751

இறந்த தேதி – ஜூலை 7, 1816

வாழ்ந்த ஆண்டுகள் – 64

PUBLICATIONS எழுதிய நூல்கள் –

1775- தி ரைவல்ஸ்  THE RIVALS

1775 – செயின்ட் பாட்ரிக் டே SAINT PATRICK’S DAY

1775 – தி டுவேன்னா THE DUENNA

1777- தி ஸ்கூல் பார் ஸ்கேண்டல் THE SCHOOL FOR SCANDAL

1779 – தி க்ரிட்டிக் THE CRITIC

ஷெரிடனுக்கு 19 வயதான போது , அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு வந்தது.அவர்கள் பாத் என்னும் நகரில் வசித்தனர்.

அங்கு ஷெரிடன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.எலிசபெத் அன் லின்லி என்பவருடன் அவர் காதல் விவகாரத்தில் சிக்கினார். அவர் சிறந்த பாடகி.அவருக்காக இரண்டு முறை மற்றவர்களுடன் மோதினார் .1773ல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வந்தனர்

லண்டனில் டாக்டர் ஜான்ஸன் , ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஆகிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. எலிசபெத்தின் பாடல் தொழில் மூலமே அவர்கள் காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால் ஷெரிடன் , எழுத்துமூலம் பிழைக்க எண்ணினார்.

23 வயதில்  தி ரைவல்ஸ் என்ற நாடகத்தை எழுதினார். அதே ஆண்டில் மேலும் இரண்டு நாடகங்களை எழுதி வெளியிட்டார். மூன்றும் வெற்றி அடைந்தன. உடனே பிரபல நாடக அரங்கு அவருக்கு நடிகர்/ மானேஜர் என்ற இரண்டு பணிகளை அளித்தது.

ஷெரிடன் எழுதிய நாடகங்களில் மிகவும் நகைச்சுவை ததும்பியது ஸ்கூல் ஃ பார் ஸ்கே ண்டல் என்ற நாடகம்தான். 18ம் நூற்றா ண்டின் நாடகங்களில் மிகவும் பிரபலமானது . முட்டாள்தனமும், கொடூரமும், சுய விளம்பரமும் கொண்ட மனிதர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் இது .

நாடகத்தில் பேசிப் பேசி நல்ல பேச்சாளராக உருவானார். இதன் மூலம் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியையும் வகித்தார்.

XXX

old article

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post …

https://tamilandvedas.com › ஷெர…

1.     

Translate this page

13 Aug 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஐரிஷ் கவிஞர், நாடக ஆசிரியர், அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த …

—subham—

tags- நகைச்சுவை, நாடக ஆசிரியர்,  ஷெரிடன்

சுபாஷிதங்களின் பெருமை! (Post 9753)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9753

Date uploaded in London – –  –20 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷிதங்களின் பெருமை!

ச.நாகராஜன்

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri) என்பவர் சம்ஸ்கிருத அறிஞர். அவரிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் சில:-

சுபாஷிதேன கீதேன யுவதீனாம் ச லீலயா |

மனோ ந பித்யதே யஸ்ய ச யோகீ ஹ்ருத்வா பசு: ||

சுபாஷிதம், இசை, அழகிகளின் லீலை ஆகியவற்றினால் இதயம் உருகாதவன் ஒன்று யோகியாக இருக்க வேண்டும் அல்லது மிருகமாக இருக்க வேண்டும்!

Surely he must be either a sage or a beast whose heart does not melt by the wise saying, music, and the grace of wonderful damsels.

*

சம்சாரகடுவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்ராம்ருதோபமே |

சுபாஷிதரஸாஸ்வாத: சங்கதி: சுஜதே ஜனே ||

சம்சாரம் என்னும் கசப்பான மரத்தில் அம்ருதத்திற்கொப்பான இரண்டு பழங்கள் உள்ளன. ஒன்று சுபாஷிதங்களின் ரஸத்தை உணர்ந்து அனுபவிப்பது; இரண்டாவது நல்லவர்களின் சேர்க்கை!

There are two fruits (goals) endowed with the taste of the Ambrosia to the bitter (fruit bearing) tree of the world : one is relishing the wise sayings and the company with the virtuous men is the other.

*

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம் |

மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசம்ஞா விதீயதே ||

உண்மையாகவே மூன்று ரத்தினங்கள் இந்த உலகில் உள்ளன. ஜலம், உணவு மற்றும் சுபாஷிதம் ஆகியவையே அவையாகும். ஆனால் மூடர்களோ கூழாங்கற்களை ரத்தினங்கள் என்று கூறுகின்றனர்.

(Really) there are three gems in this world: they are food, water and good saying. (But) the fools name (call) pubbles (as) gems.

*

அபூர்வ: கோபி கோஷோயம் வித்யதே தவ பாரதி |

வ்யயதோ புத்திமாயாதி க்ஷயமாயாதி சஞ்சயாத் ||

ஓ! பாரதி! உனது பொக்கிஷம் அபூர்வமான ஒன்றாகும்! ஏனெனில் அது செலவழிக்கப்படும் போது வளர்கிறது. அது செலவழிக்கப்படாமல் இருக்கும் போது குறைகிறது.

O Goddess of speech! Unique is thy treasure indeed! (Because) it waxes when it is spent away and wanes when it is unspent.

*

வித்வானேவ விஜானாதி வித்வத்ஜனபரிஷ்ரமம் |

நஹி வந்த்யா விஜானாதி குர்ஷீம் ப்ரஸவ வேதனாம் ||

ஒரு வித்வானின் உழைப்பை இன்னொரு வித்வானால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒரு கர்ப்பிணியின் பிரசவ வேதனையை மலடியால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

Only a scholar can understand the endeavor of a (another) scholar. Never can s sterile lady understand the acute laboures (of a pregnant lady).

***

tag- சுபாஷிதம்,

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -1 (Post No.9754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9754

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகம் / தனிமம் பற்றிய அதிசயமான விஷயங்களை இன்று காண்போம். பிரபஞ்ச்சத்திலுள்ள 118 தனிமங்களில் இதுவரை 34 மூ லகங்களைக் கண்டோம். இன்று சிலிகா SILICA என்னும் 35ஆவது தனிமத்தின் கதையைக் கேளுங்கள்.

பெண்களின் மார்பகத்தை அலங்கரிப்பது சிலிகா.

கம்யூட்டரில் கோடிக்கணக்கான விஷயங்களை  தேக்கி வைப்பது சிலிகா- SILICON CHIPS .

வீட்டின் கூரைகளில் சூரிய ஒளியை வாங்கி நமக்கு வெப்பமாக SOLAR PANELS மாற்றித்தருவது சிலிகா; உடலுக்கும் தேவைப்படுவது சிலிகா

இது வெறும் மணல் செய்யும் வேலை !

முதலில் செக்ஸியான விஷயத்துடன் சிலிகா பெரிய விஞ்ஞான விஷயங்களை ஆராய்வோம்

பல பெண்கள் தன் மார்பகங்கள் எடுப்பாக இல்லை என்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு செயற்கை SILICONE மார்பகங்கள் உடலுக்கு உள்ளே பொருத்தப்படுகின்றன. பல நடிகைகள் இப்படி செயற்கை அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டதை பத்திரிகைகளில் கிசு கிசு (GOSSIP) பகுதிகளில் படித்திருப்பீர்கள்.

சிலிகான் என்னும் தனிமம் (ELEMENT) மணலைக் குறிக்கும். சிலா என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்கு பாறை என்று பொருள். அதிலிருந்து நாம் வடிப்பதே கோவில் சிலைகள் ; லத்தீன் மொழியில் ‘சிலக்ஸ்’ என்பர். அதிலிருந்து அந்தச் சொல் ஐரோப்பிய மொழிகளில் பலவித அவதாரம் எடுத்தது.

உலகம் முழுதும் இந்தப் பொருள் நிரம்பி இருக்கிறது. அது மட்டுமல்ல விண்வெளியில் உளது. விண்கற்களில் சிலவற்றில் மணலின் கூட்டுப்பொருளான சிலிகன் டை ஆக்சைட் (SILICON DI OXIDE) இருக்கிறது.

பெண்கள் தன் மார்பகப் பகுதியில் வைக்கும் செயற்கை முலைகள் சிலிகோன் SILICONES எனப்படும். ரசாயன பாஷையில் இதை ஆர்கா னோ சிலிகோன் – ஆக்சிஜன் பாலிமர் (ORGANO SILICONE- OXYGEN POLYMERS)  என்பர். அமெரிக்காவில் பெண்கள் இதை அழகு சாதன பொருளாகப் COSMETICS பயன்படுத்தவே உலகம் முழுதும் பரவி பெரும் (COURT CASES) வழக்குகளை உண்டாக்கி  பல கோடி டாலர் நஷ்ட ஈட்டுச் செய்திகளாக உருவாயின.

1960 களில் துவங்கிய சிலிகோன் பொருத்தல் 1990-களில் நஷ்ட ஈடு கோரும் வழக்குகளாக மாறின. சிலிகோன் என்னும் செயற்கை உறுப்பைப் பொருத்திக் கொண்ட பெண்கள் அது உடலுக்குள் ஒழுகி (LEAKING) ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்குவதாக புகார் செய்தனர். இதனால் இது தொடர்பான புதிய சட்டங்கள், கட்டுப்பாடு விதிமுறைகள் பிறந்தன. செயற்கை மார்பக  சிலிகோன்களை உற்பத்தி செய்த மிகப்பெரிய நிறுவனமான டவ் கார்னிங் DOW CORNING கம்பெனி திவால் ஆகியது. அது மூன்று பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க நேரிட்டது.

அமெரிக்காவில் இந்த மோகம் முடிவுக்கு வந்தது. ஆயினும் உலகின் மற்ற நாடுகளில் இப்போதும் சிலிகோன்  பொருத்துதல் நடை பெறுகிறது.

உண்மை என்ன ?

மணலைக் கொண்டு செய்யும் இந்த சிலிகோன் உண்மையில் பிரச்சனை எதையும் உண்டாக்காது என்று அமெரிக்கா மற்றும் சுவீடன் நாட்டிலுள்ள புகழ்மிகு விஞ்ஞான நிறுவனங்கள் நிரூபித்தன. இதனால் புற்றுநோய் (CANCER) வரும் என்பதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. தவறான ஆபரேஷன் முறைகளால் ஏற்படும் கோளாறுகள் எல்லா வகை ஆபரேஷன்களிலும் நிகழக்கூடும் அதற்கும் சிலிகோனுக்கும் தொடர்பு இல்லை.

****

சர்ப்ரைஸ், சர்ப்ரைஸ் SURPRISE SURPRISE

சிலிகோன் பற்றிய கெட்ட செய்திக்கு  நேர்மாறான நல்ல செய்தியும் உண்டு. தீ விபத்துக்களில் உடல் கருகி  உருமாறியவர்களுக்கு  உதவுவது இந்த சிலிகோன் தான் .கருகிய தோலின் மீது சிலிகோன் ஜெல் பூசினால் புதிய திசுக்கள் வேகமாக வளர்ந்து குணமடைகிறார்கள் என்பதை ஸ்கட்லாந்தின் கிளாஸ்கோ நகர ஆஸ்பத்திரி பேராசிரியர் ஹென்றி ரெய்ட் PROF HENRY REID, CANNIESBURN HOSPITAL, GLASGOW, SCOTLAND, UK.கண்டுபிடித்தார்.

***

GEM STONES

மணல் என்று நாம் ஆற்றின், கடலின் கரைகளில் காண்பது சிலிக்கன் டை  ஆக்சைட் SILICON DI OXIDE ஆகும். இதன் மறு  வடிவங்களே கிறிஸ்டல் CRYSTAL எனப்படும் ஸ்படிகம் மற்றும் குவார்ட்ஸ் QUARTZ  எனப்படும் கண்ணாடிக்கல் ஆகும். இதில் வேறு சில ரசாயன உப்புக்கள் கலக்கும் பொழுது ஓபல் , அமெதிஸ்ட் OPAL , AMETHYST  எனப்படும் ரத்தினக் கற்களும் உருவாகின்றன.

–தொடரும்

tags- சிலிகா, மணல், செயற்கை மார்பகம்,  முலை , சிலிகோன்

Tamil and English Words 2700 years ago-55 (Post 9752)

Tamil and English Words 2700 years ago-55 (Post 9752)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9752

Date uploaded in London – –19 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -55

Xxxx

5-4-2

தண்ட

Danda = punish, punishment

தண்டம் செலுத்தல்

தண்டித்தல், தண்டனை  என்பதெல்லாம் இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் இருந்து வருகிறது

த்வீபதிகான் தண்டிதஹ  என்றால் இரண்டு கால் பணம்/ நாணயங்கள் தண்டிக்கப்பட்டான் என்று பொருள்

Pathikaan = PADIK kaasu in Tamil

Padi = quarter/ foot

படிக்காசு என்றால் கால் நாணயம் என்று பொருள்.

Quarter may be one fourth of a sovereign= 2 grams gold

இது தங்க மாக இருந்தால் மதிப்பு அதிகம்

பத = கால்/foot உடல் உறுப்பு; பத = கால்/ 1/4 ஒரு கால் பகுதி

தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும்  மட்டுமே உள்ள சொல்.

Jnana Sambandar and Appar, Tamil saints, used PADIK KAASU to buy grains for the public during times of drought in Tamil Nadu 1400 years ago

ஆகையால் படிக்காசு என்பது  கால் நாணயம் /பணம்

இதிலிருந்துதான் தினப்படி, ; படி = அலவன்ஸ் என்பன வந்தன

பயணப் படி; வாடகைப் படி முதலியன இதிலிருந்து விரிவடைந்த சொற்கள் ஆகும்

Xxx

5-4-3

ஸ்தூல = பருமன்  ஆன

Stuula = stout

ஸ்தூல = ஸ்டவுட்

அணுக = அணுவைப் போன்ற= மிகச் சிறிய

Anu = atomic in size

xxx

5-4-4

எடுத்துக்காட்டில்

சின்ன = முழுதும் உடைக்கப்பட்டது ; broken fully

பின்ன = முழுதும் பிளக்கப்பட்டது ;  split or cut fully

Chinnaa binna = made into bits and pieces

என்ற சொற்கள் காட்டப்பட்டுள்ளன .

தமிழில் சின்னாபின்னமாகியது என்பர்

கணக்குப் பாடத்திலும் வகு, பகு என்பதில் ‘பின்னம்’ வரும்.

xxx

5-4-5

ந ஸாமி  வசனே என்பது சூத்திரம்

ஸாமி = அரை/பாதி  ; ஆங்கிலத்தில் செமி

Saami = Semi in English

Ardha – half; arai in Tamil

அர்த்த = அரை

அர்த்த என்பது தமிழில் அரை என்று மருவி இருக்கலாம்

5-4-9

இந்த சூத்திரத்தில் ஜாதி என்ற சொல் வருகிறது

Jaati = group

Tamils have nbeen using it at least for 1400 years . it is in Tevaram with Tamil Saa= Jaa

இதற்கான எடுத்துக் காட்டில் ப்ராஹ்மண ஜாதி என்ற சொல் காட்டப்படுகிறது.

இன்று ஜாதி என்பதை அதே பொருளில் பயன்படுத்துகிறோம் .

ஆயினும் பாணினி அந்தப் பொருளைக் குறித்தாரா என்பது கேள்விக்குறியே.

ஒரு பிரிவு, ஒரு அணி என்று அவர் சொல்கிறார்.

Xxx

5-4-10

ஸ்தான = நிலை, இடம்

Staan = Status = position; place

தந்தையின் ஸ்தானத்தில் மகன் நிற்கிறான்

கோ ஸ்தானம் = மாடுகள் இருக்கும் இடம்; மாட்டுத் தொழுவம்

ஸ்தான் = Status ஸ்டேட்டஸ் ஆனது

ஸ்தான் என்பது பல நாடுகளில் இருக்கிறது

Attached to many countries such as Aghani+stan, Kazaka+stan, Uzbeki+stan; Turagastan = Turkey

துரகஸ் தானம் = துருக்கி = குதிரை உள்ள நாடு

கஜக , பாகிஸ் , உஸ்பெக்கிஸ் , ஆப்கானிஸ் + ஸ்தான்.

xxx

5-4-11

சூத்திரத்தில் தரு = மரம் எடுத்த்த்துக்காட்டா க உள்ளது.

தரு= ட்ரீ ஆனது.

Taru= Tree

xxx

5-4-16
visarino matsye

here visaarin means Fish
the word Pisces is derived from Visaarin
P=V
visarin becomes Meen in Tamil
P=V=M

the Tamil word Meena in Rig Veda is not a Tamil word.
I have already written an article on it.
so the summary is
Meena = Pisces= Visarin

மீன என்ற தமிழ்ச் சொல் ரிக்வேதத்தில் இருப்பதாகச் சொல்லுவார்கள்.
இதுவும் நீர் என்ற சொல்லும் சம் ஸ்ருதத் தொடர்பு மொழியில் இருப்பதால் அவை ஒரே மூலத்திலிருந்து தமிழ் சம்ஸ்க்ருதத்தில் வந்தவ என்று முன்னரே காட்டியு ள்ளேன் (எனது கட்டுரையில்)

நீரெய்ட்ஸ் என்பது கிரேக்க மொழியில் நீர்த் தேவதைகள்.

இந்த குறிப்பிட்ட சூத்திரத்தில் விஸாரின் என்பது மீனைக் குறிக்கும் என்று பாணினி கூறுகிறார்.
விஸாரின் = பைஸரின் = பை ஸஸ் / மீனா ராசி
பை ஸஸ்= மீன் -= வைஸாரின்
ப=வ


xxx
5-4-25
8 Varttika notes added to this sutra. One of them is Nava= Nutana.
nava becomes Novel, New in English.
Even Tamils use Naveena

நவ / நூதன = நாவல், நவீனம்
xxx
5-4-33
kaalaa= black
Yama is Kaalan who is black
Kaali is black
These are used in modern Tamil.
in the examples given by commentators Kalikaa Saadi is given it means Black Sari or Saaree
in English Sari is used.
xxx
5-4-39
Mruda for Mud
Mrudha becomes Mud in English and Man in Tamil
xxx

tags – Tamil in Panini 55

பிரடெரிக் நீட்ஸே (GOD IS DEAD) , கடவுள் பற்றி இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

பிரடெரிக் நீட்ஸே , கடவுள் பற்றி (GOD IS DEAD)  இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9751

Date uploaded in London – –19 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் செத்துப்போனான்’ ‘GOD IS DEAD’  என்றார் புகழ் பெற்ற ஜெர்மானிய தத்துவ ஞானி பிரெடெரிக் நீட்ஸே FRIEDRICH NIETZSCHE . கிறிஸ்தவ மதத்தையும் தாக்கினார். ஏன் ?

நீட்ஸே யார் ?

புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டு தத்துவ ஞானி (Phiosopher) , மொழியியல் (Philologist) அறிஞர்.

பிறந்த தேதி – 15  அக்டோபர் , 1844

இறந்த தேதி – 25 ஆகஸ்ட், 1900

வாழ்ந்த ஆண்டுகள் 55

நீட்ஸேயின் எழுத்துக்கள், படைப்புகள் மேலை நாட்டு அரசியல் மற்றும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .

ஒரு சின்ன ஜெர்மானிய கிராமத்தில் நீட்ஸே பிறந்தார்.அவருக்கு 5 வயதானபோது தந்தை இறந்தார். இதனால் அவரது  சகோதரியையும்  அவரையும் தாயார்  வளர்த்தார். அவர் பான் (BONN) நகர பல்கலைக்கழகத்தில் இறையியல் (THEOLOGY) படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதை விட்டு தத்துவம் (PHILOSOPHY) படிக்கச் சென்றார்.

 நீட்ஸே அதி மேதாவி. 24 வயதிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேஸல் (BAZEL) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் அப்போது பிரபல ஜெர்மானிய இசை மேதை, சாஹித்ய கர்த்தா ரிச்சர்ட் வாக்னருடன் (RICHARD WAGNER)  நட்பு ஏற்பட்டது.  நீட்ஸே கொண்டிருந்த கருத்துக்களையே அவரும் கொண்டிருந்தார்.

அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தனது கருத்துக்களை அன் ‘டைம்லி மெடிடேஷன்ஸ்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். ஜெர்மானிய கலாசாரம் மற்றும் அப்போதைய நிறுவனங்களை அவர் சாடினார்.

தனது புரட்சிகரமான கருத்துக்களை ‘தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா’ (THUS SPOKE ZARATHUSTRA) என்ற நூலிலும் ‘பியாண்ட்  குட் அன்ட் ஈவில்’ (BEYOND GOOD AND EVIL)  என்ற நூலிலும் பிரகடனம் செய்தார்.

கிறிஸ்தவ மதம் இக்காலத்துக்குப் பொருந்தாது. தனி மனிதர்கள் எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்துணர்ந்து சொல்ல வேண்டும் ,பின்பற்ற  வேண்டும் என்று கூறி “கடவுள் இறந்துவிட்டார் God is Dead” என்ற வாசகத்தின் மூலம் வெளியிட்டார்.

இதைக்கேட்ட பல அறிஞர்கள் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தனர்; மேலும் பலர் வெகுண்டு எழுந்தனர்.

ஒரு நல்ல உதாரண புருஷன்/ எடுத்துக்காட்டான மனிதன் என்பவன் தன் உணர்ச்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அதை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்றார் . இது 19-ஆவது நூற்றாண்டின் நாவல்களிலும் நாடகங்களிலும் செல்வாக்கு பெற்று புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியது.

நீட்ஸே சொல்லாத விஷயங்களை அவரது பெயரில் ஹிட்லரின் ஜெர்மானிய நாஜி கடசியினர் பரப்பியதால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; யூத மத எதிர்ப்புக்கு நாஜி கட்சிக்காரர்கள் நீட்ஸேயின் பெயரைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தனர். பிற்காலத்தில் இந்தப் புளுகு அம்பலப்படுத்தப்பட்டது. பின்னர் நீட்ஸேயின் புகழ்  மீண்டும் உச்சிக்குச் சென்றது .

நீட்ஸேயின் முக்கிய படைப்புகள் இதோ :-

1872- THE BIRTH OF TRAGEDY

1873-76 UNTIMELY MEDITATIONS

1878-90 HUMAN,  ALL -TOO- HUMAN

1883-85 THUS SPOKE ZARATHUSTRA – A BOOK FOR ALL AND NONE

1886 BEYOND GOOD AND EVIL

1887 ON THE GENEOLOGY OF MORALS

1889 TWILIGHT OF THE IDOLS

XXX

PUBLISHED AFTER HE DIED:–

1901 THE WILL TO POWER

1908 ECCE HOMO

சுவிட்சர்லாந்தில் சில்வபானா ஏரி  இருந்த இடத்தில் இரண்டு சாலைகளுக்கு இடையே நடக்கும்போது பிரமிடு வடிவிலுள்ள மிகப்பெரிய பாறையைக்  கண்டவுடன் அவருக்குத் தோன்றிய எண்ணங்களை தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா புஸ்தகத்தில் 4 பகுதிகளாக வெயிட்டார். இது ஒரு தத்துவ நாவல். இதில் அதிக சொற்சிலம்பம் உண்டு; பிற மொழிகளில் அப்படியே மொழி பெயர்க்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் அவர் எப்படி, என்ன பொருளில் பயன்படுத்துகிறார் என்பதை  விளக்க வேண்டிவரும்.

–SUBHAM–

TAGS- பிரடெரிக் நீட்ஸே ,GOD IS DEAD , கடவுள் பற்றி,  

சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஏழ்மை வராது! (Post No.9750)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9750

Date uploaded in London – –  –19 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஆயிரம் ஜென்மங்களிலும் ஏழ்மை வராது!

ச.நாகராஜன்

குறிப்பு : (Eng Translation from : RSS Sanga Shaka book)

ஏகம் விஷரஸம் ஹந்தி சஸ்த்ரேணைகஷ்ச  வத்யதே |                         சராஷ்ட்ரம் சப்ரஜம் ஹந்தி ராஜானாம் மந்த்ர விப்லவ: ||

விஷமானது ஒருவனைத் தான் கொல்லும்; ஆயுதங்களோ பல பேரைக் கொல்லும். ஆனால் தவறான  முடிவை ஒரு அரசன் எடுத்தாலோ அல்லது அவனது அமைச்சர்கள் எடுத்தாலோ, அது ஒரு தேசத்தையும் அதில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்து விடும்.

Poison kills but one person at a time while a weapon can destroy many more. Incorrect decisions by the king or by his ministers, by contrast, can destroy the entire nation and its citizens.

*

ஆதித்யஸ்ய நமஸ்காரம் யே குர்வந்தி தினே தினே | ஜன்மாந்தரஸஹஸ்ரேஷு தாரித்ர்யம் நோபஜாயதே ||

சூரியனை  எவர் ஒருவர் போற்றித் தினமும் துதிக்கிறாரோ அவருக்கு ஆயிரம் ஜென்மங்களிலும் தரித்திரம் வராது. சூரியனைப் போலக் காலம் தவறாமல் கடமையைச் செய்வோர் ஒரு நாளும் ஏழையாக இருக்க மாட்டார்கள்.

Those who adore and worship the sun everyday will not inherit poverty over thousands of births. People who are punctual in their duties like the sun will never be poor.

*

ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைர்ஜ்யேஷ்டத்வமுச்யதேI குணாத் குருத்வாமாயாதி துக்தம் ததி த்ருதம் கமாத் ||

முதன்மைத்தன்மை (ஜ்யேஷ்டத்வம்) என்பது பிறப்பினால் வருவது அல்ல; ஒருவனின் குணங்களினால் பெறப்படுவது அது. அது எப்படி பாலானது தயிராகவும் நெய்யாகவும் படிப்படியாக மாறுகிறதோ அதே போல (நல்ல) குணங்களினால் அடையப்படுவது அது.

Greatness is not ascribed at birth; it is rather acquired by qualities possessed by the individual. It increases progressively like the transformation of milk into yogurt, and ghee.

*

உத்யமேன ஹி சித்யந்தி கார்யணி ந மநோரதை: |                     ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||          

நல்ல விளைவுகள் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே அடையப்படும். மான் சும்மா இருக்கும் சிங்கத்தின் வாயில் விழும் மானைப் போல பகல் கனவினா (மனோரததினால்) அல்ல.

Results are obtained by hard work and industry; not by daydreaming just as deer do not fall (willingly) into the mouth of the idle lion.

                                              *                                      ஸ்தானப்ரஷ்டா: ந ஷோபதே தந்தா: கேஷா நகா நரா: |               இதி விஞ்ஞாய மதியான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||             

பற்கள், மயிர், நகங்கள், மனிதர்கள் அவை அவற்றின் உரிய இடங்களில் இல்லாத போது பிரகாசிப்பதில்லை. இந்தப் பழமொழியின் உண்மையை அறிந்த புத்திசாலிகள் தங்கள் இடத்தை அதாவது ஸ்வஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது.                                                        Teeth, hair, nails, and men do not shine when not in their places. Knowing this adage, the wise should not leave their place or location.

                              *                                                               உதயே சவிதா ரக்தோ ரக்த:ஸ்சாச்தமயே ததா |                    ஸம்பத்தௌ ச விபத்தௌ ச மஹாமேகரூபதா ||   (மஹாபாரதம்)

சூரியன் உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் சிவப்பாகக் காட்சி அளிக்கிறான. அது போலவே மஹான்கள் நல்ல காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் ஒரே நிலையில் (உறுதியுடன்) இருக்கிறார்கள்.

**

TAGS- சூரியனை  துதி, ஏழ்மை , வராது, 

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2 (Post No.9749)

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2 (Post No.9749)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9749

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கட்டுரையின் முதல் பகுதி நேற்று 17-6-2021 வெளியானது. இது இரண்டாம் பகுதி.

சுவையான கதையைச்  சொல்கிறேன் ……….

1800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் காலன் (Galen) என்பவர் இரும்புத் துகளை பேதி மாத்திரையாக பயன்படுத்தலாம் என்றார். ஆனால் உண்மையில் அது மலத்தைக் கட்டுப்படுத்தும் என்பதை இன்று நாம் அறிவோம்.

காய்கறிச் சாம்பலில் இரும்பு இருப்பதை அறிந்த இத்தாலிய மருத்துவர் வின்செஞ்சோ மெங்கினி (Menghini) 1740-களில் ஒரு விந்தையான சோதனையைச் செய்தார் . ஒரு நாயைப் பிடித்து அதற்கு இரும்புச் சத்து அதிகமுள்ள உணவைக் கொடுத்து அதன் ரத்தத்தை எடுத்தார். அதைக் கருக்கி சாம்பல் ஆக்கி அதை காந்தம் அருகில் கொண்டு சென்றார். அப்போது ரத்தத்தில் இரும்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆயினும் இதன் முழு விவரத்தையும் 1832-ம் ஆண்டில் டாக்டர் பிளான்ட் (Dr Bland) வெளிப்படுத்தினார் . ரத்த சோகை உள்ள ஒரு நோயாளிக்கு இரும்பு சல்பேட் மாத்திரைகளைக் கொடுத்து குணப்படுத்தினார்.

ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த ஹீமோகுளோபின் உயிர் வாயுவான ஆக்சிஜனை எல்லா செல்களுக்கும் அளிக்கிறது என்பதை இன்று நாம் எல்லோரும் பள்ளியிலே கற்றுக்கொண்டு விடுகிறோம்.

xxx

இரும்பைக் கண்டுபிடித்தது யார் ?

உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் ‘க்ருஷ்ண அயஸ்’ என்ற பெயரில் இரும்பு பற்றி பாடல்கள் உள்ளன. தில்லியில் குப்தர் காலம் முதல் துருப்பிடிக்காமல் இன்றும் நின்று கொண்டிருக்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும். 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இரும்பினால் ஆன கத்தி, வாள் பற்றிய குறிப்புகள் உள . இந்தியாவுக்கு வெளியே துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இரும்புத் தொழில்  ஆலைகள் , பட்டறைகள் இருந்தன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுப் பழமையான இரும்புப் பொருட்கள் கிடைத்தன. ஆயினும் அவை வானத்தில் இருந்து விழுந்த விண்கற்களைப் (Meteorites) பயன்படுத்தி செய்யப்பட்டவை. அதில் 7 சதவிகித நிக்கல் உலோகமும் இருப்பதை வைத்து இதை அறிந்தனர். விண்வெளியில் இருந்து பூமியில் விழும் விண்கற்களில் (Meteorites)  இப்படி இரும்பும் நிக்கலும் இருப்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

கிரேக்க நாட்டிலுள்ள மக்னிஷியா (MAGNESIA IN IONIA )என்னும் ஊரிலிருந்து வந்த இரும்புத்தாது மற்ற இரும்புடன் ஒட்டிக் கொள்வதை கிரேக்கர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதற்கு மாக்னெட் (MAGNETS)  என்று பெயர் வைத்தனர் . இன்று அதை நாம் காந்தம் என்கிறோம். காந்தம் பற்றிய குறிப்புகள் காளிதாசன் பாடல்களிலும் திருமூலரின் திருமந்திரத்திலும்  இருப்பது குறிப்பிடத்  தக்கது

xxx

போரில் இரும்பு ஆயுதங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் போரில் இரும்பினாலான வாட்களைப் (Swords) பயன்படுத்தி வருகின்றனர். இன்றும் போர்த்தி தளவாடங்களான டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகளில் இரும்புதான் முக்கிய உலோகம். ரோமானிய போர்த் தெய்வமான மார்ஸ்(Mars)  எனப்படும் செவ்வாய் தேவதையுடன் இரும்பைத் தொடர்புபடுத்தி எழுதினர் . பிளினி (PLINY)  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்:-

“இரும்பைக் கொண்டு கட்டிடம் கட்டுகிறோம்; பாறைகளைப் பிளக்கிறோம் இன்னும் பல பயனுள்ள செய ல்களைச் செய்கிறோம். ஆனால் அதே நேரத்தில் இரும்பைப் பயன்படுத்தி போர் செய்கிறோம், கொலை, கொள்ளையும் செய்கிறோம். நேருக்கு நேர் மட்டுமா? எந்திரங்கள் மூலம் தொலைவிலுள்ள இலக்குகளையும் பறக்கும் ஆயுதங்கள் மூலம் தாக்குகிறோம்”. இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலம் பல் !!

xxx

இரும்பு எங்கே கிடைக்கிறது ?

இரும்பு கலந்த தாதுக்கள் ஹேமடைட், மாக்னடைட் , சிடரைட்  முதலியன ஆகும். இவை அதிகம் கிடைக்கும் நாடுகள்- இந்தியா , சீனா , பிரேஸில் , ஆஸ்திரேலியா , ரஷ்யா , அமெரிக்கா , கனடா .

இரும்பில் தேனிரும்பு, வார்ப்பிரும்பு , எஃ கு (Pig Iron, Cast Iron, Steel) என்று பல வகைகள் உள்ளன.

இரும்பினால் கட்டப்பட்ட பாரிஸ் நகர ஜபல் (Eiffel Tower in Paris, France) கோபுரத்தை, 100 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரும் குறைகூறி எள்ளி நகை ஆடினர் . இன்றோ அது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா கவர்ச்சியாகத் திகழ்கிறது

xxx

பொருளாதார உபயோகங்கள்

இரும்பு இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம் . நாம் உபயோகிக்கும் ஆணி முதல் கம்ப்யுட்டர் , கார், விமானம் வரை எல்லாவற்றிலும் இரும்பும் அதனுடன் கலந்த கலப்பு உலோகமும் தான் இருக்கின்றன. இதைப் படிக்கும்போது உங்களைச் சுற்றிலும் உள்ள பொருள்களை நோட்டமிடுங்கள் . பெரும்பாலானவற்றில் இரும்பு இருப்பதைக் கண்டு வியப்பீர்கள் . பேனா முதல் நாணயம் வரை பலவற்றில் இரும்பின் கலப்பு இருக்கிறது; இயந்திரங்கள், பட்டறைகள் இல்லாத இடமும் உண்டோ!

இரும்பின் இரண்டு முக்கிய குணங்கள்

1.ஒன்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்ளும்.

2.இரண்டு துருப்பிடிக்கும்; அதாவது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து இரும்பு ஆக்சைடுகளை உண்டாக்கும்; குறிப்பாக ஈரப்பதம் இருந்தால் அதிகம் ‘ஆக்சிடேஷன்’ நடக்கும்.

xxx

இரும்பின் ரசாயன தகவல் :–

குறியீடு – Fe (எப்ஈ); பெர்ரம் என்ற லத்தின் சொல்லின் சுருக்கம்.

அணு எடை – 26

உருகு நிலை – 1535 டிகிரி C ஸி

கொதி நிலை – 2750 டிகிரி C ஸி

சுத்தமான நிலையில் இரும்பு என்னும் உலோகம் வெள்ளி போல பள பளக்கும் . ஈரப்பதம் இல்லாத இடங்களில் துருப்பிடிக்காது. துருப்பிடிப்பதைத் தடுக்க வேறு உலோகங்களைக் கொண்டு பூச்சு கொடுத்தால் போதும்.

இதற்கு நான்கு ஐசடோப்புகள் இருக்கின்றன. எதற்கும் கதிரியக்கம் இல்லை.

எளிதில் அமிலத்தில் கரையக்கூடியது இது .

xxx

கீரை சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!

இந்த பூமியில் இரும்புக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் பூமியின் பெரும்பகுதி இரும்புதான். நமது பூமியின் விட்டம் 12,742 கிலோமீட்டர் . இதன் உட்கருவின் (Core) விட்டம் 7000 கி.மீ .. அதிலும் 2000 கிலோமீட்டர் குறுக்களவுக்கு  முழுக்க முழுக்க (Solid Iron) இரும்புதான்!

சிலவகை பாக்டீரியாக்கள் அவற்றிலுள்ள இரும்புத் துகளை ‘காம்பஸ்’ என்னும் திசை காட்டும் கருவியாகப் பயன்படுத்துகின்றன. தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் மிகவும் தேவை இரும்புதான் .

கீரை பற்றிய ஒரு சுவையான விஷயத்துடன் கட்டுரையை முடிப்போம். பச்சை நிறம் உடைய தாவரங்களில் இரும்பு இருப்பது உண்மையே. ஆனால் கீரையிலுள்ள இரும்பு ச்சத்தை உடல் (not assimilated) ஏற்றுக்கொள்வதில்லை . ஆதிகாலத்தில் வெளியான பிரசுரங்களில் வெளியிடப்பட்ட தகவல் தவறு. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. கீரை நிறைய சாப்பிடுங்கள். ஆனால் இரும்புச் சத்துக்காக சாப்பிட்டு ஏமாறாதீர்கள்!!

–subham–

 tags- இரும்பு -2,  இரும்புச் சத்து-2

April 2019 London Swaminathan Articles; Index 77 (Post No.9748)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9748

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

April 2019 Index 77

More Tamil Temple Wonders,6223;3 April 2019

14 important Vishnu Temples in Kanchipuram,6226;4/4

Drama was a Success,but Audience was a Failure- Oscar Wilde,

6229;5/4

Lizard Worship in Tamil Nadu and Rome, 6232;6/4

Swami s crossword 642019; 6233;6/4

Aurangzeb , Robert Clive and Varsdaraja Perumal Temple,

6236; 7/4

Swami s crossword 842019; 6241;8/4

Uttara merur Wonders, 6242;8/4

If dramatist Corneill were alive I would make him King- Napoleon,

6240: 8/4

What to see, Where to go in Kanchipuram? 6245;9/4

Producers Anecdotes, 6250;10/4

Dangerous ,Evil Eye from Egypt to Australia 6252;11 4

Please hit me, Husband begged to his wife ,6256;12/4

Swami s crossword 1242019; 6258;12/4

Manu on Witness ,perjury , debt collection, 6261;13/4

My visit to Horoscope Temple, 6262;14/4

My visit to Ghost buster Samadhi,6268;15/4

How did Gopala krishna Bharathiyar compose

Nandanar Charitham?6278; 18/4

Chennai Airport Treasures, 6271;17/4

Never Draw a Caricature, Hogarth’s

Advice to a Lady, 6272;17/4

Earrings and Bracelets are not real Ornaments, 6275;16/4

Tamil-Nandanaar chariththiram uruvana kathai, 6279; 19/4

Number one in literature, 6283;19/4

Swami s crossword, 19419;6282

All about number Two, 6287;20/4

Swami s crossword 21419; 6289

Become a Doctor, Bury your Pictures, 6291;21/4

Glory of Number Three, 6293;22/4

Gingee Fort and Temples, 6301;23/4

Ugly Eiffel Tower,6304;24/4

Swami s crossword 25419;6308;

Noise of Music, Least Disagreeable 6307;25/4

Say Hello, Rest will Follow, 6311; 26/4

Number Three in Sanskrit and Tami literature, 6315;27/4

Swami s crossword 27429,6317; verse verse two

31 Knowledge Wisdom Sayings, 6318;28/4u

Kallanai Dam, Marvel of Tamil Engineers ,6323; 29/4

Samadhi of a Great Saint in Nerur, 6328; April 30;2019

xxxx

ஏப்ரல் 2019 தமிழ் கட்டுரைகள்

6 நாட்களில் 30 கோவில்கள் சூறாவளிச் சுற்றுப்

பயணம்! பு திய உண்மைகள் ;6224, ஏப்ரல் 1, 2021

108ல் பதினான்கு காஞ்சியில்!கோவிலில் தங்க மழை , 6228, 5/4

பள்ளி கொண்டானும் பல்லி கொண்டானும் , 6231,6/4

வரதராஜப் பெருமாள் கோவில் கிசயங்கள், 6235, 7/4

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (த.கு.போ) 7419,6237

அதிசயம் நிறைந்த தேர்தல் புகழ் உத்திரமேரூர்,6239, 8/4

காஞ்சிபுரத்தில் சகுந்தலா ஜகந்நாதன் மியூஸியம் , 6244,9/4

த. கு. போ.9419, 6247

கண் திருஷ்டி ஆபத்து: உலகம் முழுதும் நம்பும் உண்மை, 6249,10/4

ஒரே கல்லில் 4 மாங்காய் ! காஞ்சியில் கிடைக்கும், 6253, 11/4

ரகசியமான 12 ராசி மோதிரம், 6257,12/4

மலை மீது குட்டி திருப்பதி – மலை வையாவூர், 6260, 13/4

மநு சொல்லும் 2 அதிசயக் கதைகள் ,6263, 14/4

லண்டனில்  பஞ்சாங்க படனம் , பஞ்சாங்கம் ஒரு

என்சைக்ளோபீடியா , 6266, 15/4

பெண்ணே கேலிச் சித்த்ரம் வேண்டவே வேண்டாம் ,6277,16/4

த. கு. போ.15419, 6267, 15/4

பேயை விரட்டும் சித்தர் கோவில், 6270, 17/4

நடிகைக்குக்  கிடைத்த அற்புதப் பரிசு , 6274, 18/4

கைக்குக் கங்கணம் அழகா? காத்துக்குக்

குண்டலம் அழகா ?6280, 19/4

இறந்த யானை எழுந்த கதை,6281,19/4

வத்தக் குழம்பு வைப்பது எப்படி?6286, 20/4

த.கு.போ.20419, 6285

தாஜ்மஹால் ரகசியம்- பகுதி 1; 6292, 21/4

த.கு.போ.22419, 6295

பகுத்தறிவுத் தம்பிகளின் மூட நம்பிக்கைகள் 6296, 22/4

ஊட்டத்தூ ர் கோவில் அதிசயங்கள், 6297, 22/4

தாஜ் மஹால் ரகசியம் 2, 6294, 22/4

தாஜ் மஹால் ரகசியம் 3, 6298

என் மூன்றின் மகத்துவம், 6300, 23/4

,மருத்துவதில் எண்  மூன்று , 6303, 24/4

பெரியவா செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி,6306, 25/4

அட என் அவலட்சணமே ?  ஐ பல் கோபுரமே, 6305,25/4

த.கு.போ.26419, 6313

பெண்களைக் கவர மூன்று வலிகள்- தமிழர்

கண்டுபிடிப்பு ,6314, 27/4

அது கழுதைக்குக் கூட தெரியும்- சங்கீத மேதை பாய்ச்சல், 6310, 26/4

31 அறிவு ஞானம் பற்றிய பொன்மொழிகள்,6320, 28/4

முனிவர்களாலும் முடியாது- கம்பன்  வியப்பு, 6322, 29/4

மூன்று சகோதரிகள்- காஞ்சிப் பெரியவர் தகவல், 6326, 30 ஏப்ரல் 2019

குரோமியம் தரும் நோய்களும் செய்யும் நன்மையும், 6327, 30/4

tags- april 2019, index 77, ஏப்ரல் 2019, தமிழ் கட்டுரைகள்,

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Post N.9737)

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்  (Post N.9737)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9737

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Walt Whitman) ஆவார் . அவர் எழுதிய லீவ்ஸ் ஆப் கிராஸ் (Leaves of Grass) என்னும் கவிதைத் தொகுப்பு உலக இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.

பிறந்த தேதி – 31-5-1819

இறந்த தேதி – 26-3-1892

வாழ்ந்த ஆண்டுகள் 72

Publications:–
1855 Leaves of Grass
1865 Drum Taps
1865-86 Sequel to Drum Taps
1871 Democratic Vistas
1875 Memoranda during the War
1882 Specimen Days and Collect

அமெரிக்காவில் லாங் ஐலண்டில் பிறந்தார். ப்ரூக்ளினில் வாழ்ந்தார்.அவருடைய தந்தை ஒரு மரத் தச்சர். விட்மன், கிராமப்புற பள்ளிகளில் பயின்றார். ஒரு அச்சக  ஊழியர் ஆக வாழ்க்கையைத் துவங்கினார். பெரும்பாலும் லாங் ஐலண்டில் இளமைப் பருவத்தைக் கழித்ததால் அந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு மயங்கினார் இதனால் இவரது படைப்புகளில் இயற்கை கொஞ்சி விளையாடுவதைக் காணலாம்.

ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளராக மாறி நியூயார்க்கில் பனி புரிந்தார். ஒரு முறை நியூ ஆர்லியன்ஸ் செல்ல நேரிட்டது. அப்போது தான் வெளி உலகத்தை அறிந்தார். அடக் கடவுளே! இந்த உலகம் இவ்வளவு பெரியதா, இவ்வளவு வித விதமான மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஒரே வியப்பு! வயதும் இளம் வயது . பின்னர் நியூயார்க் நகருக்குத் திரும்பி வந்தார். அந்த நகரத்திலும் புதியோர் வருகையால் பெரிய மாறுதல்கள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தன, புதியோரின் வருகையும், பல தேச மக்களின் வருகையும் அமெரிக்க மக்களின் சுதந்திர தாகமும் இவரைப் புதுக்கவிதைகள் எழுத ஊக்குவித்தன.

அவருடைய புதுக்கவிதைகளை வெளியிட எல்லோரும் மறுத்துவிட்டனர். பாலியல் விஷயங்களை அவர் பட்டவர்த்தனமாக எழுதியதும் எதுகை மோனை இல்லாமல் வசன கவிதை (Blank Verse) எழுதியதும் பதிப்பாளர்களைக் கவரவில்லை.

அவரே சொந்த செலவில் 36 வயதானபோது ‘லீவ்ஸ் ஆப் கிராஸ்’ கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதில் இயற்கை, மனித சுதந்திரம், மனிதர்களின் சகோதரத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலித்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் நர்சாக (Nurse)  பணியாற்றினார்.போர்க் கால அனுபவங்களை கவிதைகளாக எழுதி ட்ரம் டேப்ஸ் (Drum Taps) என்ற பெயரில் வெளியிட்டார்.

ஆப்ரஹாம் லிங்கன் இறந்தவுடன்  வால்ட் விட்மன் எழுதிய கவிதை ‘O Captain ! My Captain!’ ஓ கேப்டன் மை கேப்டன் என்பது மிகவும் பிரபலம்  அடைந்தது. இதன் மூலமும் இவர் புகழ் அதிகரித்தது.

O Captain! My Captain!

BY WALT WHITMAN

O Captain! my Captain! our fearful trip is done,

The ship has weather’d every rack, the prize we sought is won,

The port is near, the bells I hear, the people all exulting,

While follow eyes the steady keel, the vessel grim and daring;

                         But O heart! heart! heart!

                            O the bleeding drops of red,

                               Where on the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

O Captain! my Captain! rise up and hear the bells;

Rise up—for you the flag is flung—for you the bugle trills,

For you bouquets and ribbon’d wreaths—for you the shores a-crowding,

For you they call, the swaying mass, their eager faces turning;

                         Here Captain! dear father!

                            This arm beneath your head!

                               It is some dream that on the deck,

                                 You’ve fallen cold and dead.

My Captain does not answer, his lips are pale and still,

My father does not feel my arm, he has no pulse nor will,

The ship is anchor’d safe and sound, its voyage closed and done,

From fearful trip the victor ship comes in with object won;

                         Exult O shores, and ring O bells!

                            But I with mournful tread,

                               Walk the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

xxxx

விட்மன் பற்றிய முந்தைய கட்டுரைகள் :–

அமெரிக்காவைக் கலக்கிய …

https://tamilandvedas.com › அமெ…

19 Nov 2017 — வால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், … வால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை​ …

அமெரிக்கா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

2 Jul 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … உலகப் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் …

Walt Whitman | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › walt-whitman

18 Nov 2017 — Compiled by London Swaminathan. Date: 18 NOVEMBER 2017. Time uploaded in London- 20-35. Post No. 4409. Pictures shown here are …

AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No.5512 …

https://tamilandvedas.com › 2018/10/06 › americas-gre…

1.     

6 Oct 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No …

tags-  அமெரிக்கக் கவிஞர், வால்ட் விட்மன், Walt Whitman