Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures
உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக்வேதத்தில் வரலாறு- 6 (இறுதிப் பகுதி )
25 மந்திரங்களைக் கொண்ட ரிக்வேத 112-ஆவது துதியின் கடைசி பகுதிக்கு வந்துவிட்டோம் . இது ரிக் வேத முதல் மண்டலத்தில் உள்ளது ;ஏராளமான பெயர்கள் இதில் வந்ததைக் கண்டோம்; பல அற்புதங்களையும் கண்டோம். இதில் குறிப்பிடப்பட்ட பல பெயர்கள் ஆயிரத்துக்கு மேலான துதிகளளைக் கொண்ட ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. அவைகளைப் பார்த்தால் மேலும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன.
மந்திரம் 22 (1-112-22)
போரில் பசுக்களுக்காகப் போராடும் வீரர்களையும் அவனது மனை, குதிரை, செல்வம் ஆகியவற்றையும் காக்கும் அஸ்வினி தேவர்களே எங்களையும் காப்பாற்றுங்கள் என்பது மந்திரம்..
இங்கு பசுக்கள்தான் பிரச்சினைக்குக் காரணம் என்பது பேசப்படுகிறது. இது உள் சண்டையாகவும் இருக்கலாம் . ஆநிரை கவர்தல் என்பது தமிழ் மன்னர்களிடையே இருந்ததை புறநானூற்றில் காண்கிறோம். மஹாபாரதத்தில் காண்கிறோம். ஆக வெள்ளையர்கள் சொன்னது போல இனச் சண்டையாக இருக்க வேண்டியதில்லை. குறிப்பாக திருடர்களை தஸ்யூக்கள் என்று அழைத்தனர். அவர்களுடன் சி ம்யூக்களும் வேறு சில மந்திரங்களில் பேசப்படுகின்றனர். வெள்ளைக்காரர்கள் அது பற்றி மவுனம் சாதிப்பர்.; அவர்கள் யார் மீது பழியைப் போடுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்!
xxx
மந்திரம் 23
இங்கு அர்ஜுனன் என்ற பெயர் வருகிறது. மஹாபாரத அர்ஜுனனுக்கும் முந்தையவர் ; ராவணன் காலத்து கார்த்த வீர்ய அர்ஜுனன் ஒருவன் இருந்ததையும் நாம் அறிவோம். இங்கு அர்ஜுனனின் புதல்வன் குத்சன், மற்றும் துர்விதி, நபிதி, துவசந்தி, புருஷந்தி ஆகியோரை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதைச் சொல்லி, எங்களையும் காப்பாற்றுங்கள் என்று புலவர்/ ரிஷி அழைக்கிறார்.
. குத்ச என்பவர் இந்திரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் . காண்க- மந்திரம் 1-51-6
இவர்கள் எல்லோரும் இந்திரனாலும் அஸ்வினியாலும் உதவப்பட்டவர்கள் என்பதால் பொதுவாக கடவுளால் காப்பாற்றப்பட்டவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்திரன் என்பது ஒரு நபர் அல்ல. கடவுள் அல்லது மன்னன் அல்லது தலைவன் என்றே பொருள். தமிழிலும் இறை, கோ என்பதெல்லாம் மன்னரையும் கடவுளையும் குறித்ததே.
நம்மைப் பொறுத்தவரை இவை அனைத்தும் வரலாற்று நிகழ்ச்சிகள். அதுவும் புராணம் சொல்லும் சந்திர சூரிய வம்சங்களைச் சேர்ந்த 140-க்கும் மேலான தலைமுறைகளுக்கு முந்தையோர்!
xxxx
மந்திரம் 24
நாங்கள் “இரவின் கடைசி ஜாமத்தில்/ யாமத்தில் கஷ்டம் வரும்போது” உங்களை அழைக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்கிறார் புலவர் . இதற்கு சாயனர் சொல்லும் பொருள்—” அதிக வெளிச்சம் இல்லாத நேரத்திலும் எங்களைக் காப்பாற்றுக” என்பதாகும். அவர் சொல்லுவதே பொருத்தம். சூரியன் உதயமாகும் முன் பிரம்ம முகூர்த்தத்தில் வேத கால முனிவர்கள் யாக யக்ஞங்களைத் துவங்குவதை உஷா முதலிய தேவதை வணக்க பாடல்களால் அறிகிறோம். ஆனால் வெளிநாட்டு குதர்க்கவாதிகள் இது “சூதாட்டத்தில் தோல்வி வரும்போது” என்று பொருள் என்பர்!!!
நம்மூர் அரசியல்வாதிகள் போல, அதாவது ‘பப்ளிசிட்டி’க்காக, ஏதேனும் அவ்வப்போது சர்ச்சசைக்குரிய அறிக்கை அல்லது ட்வீட் (tweet) வெளியிடுவது போல, வெளிநாட்டுக் கோமாளிகள் உளறுவதுண்டு.
xxx
மந்திரம் 25
இதில் தெளிவாக இரவிலும் பகலிலும் எப்போதும் எங்களைக் காப்பாற்றுக என்று வருகிறது..
இந்துக்களுக்கு இது புதிதல்ல. பிற்காலத்தில் கந்த சஷ்டிக் கவசம், விநாயக கவசம் முதலியன இதே மாதிரியில் அமைக்கப்பட்டன .
இந்தத் துதியில் மொத்தத்தில் அறுபதுக்கும் மேலான வேத கால தெய்வங்கள், அரசர்கள்,கொடைவள்ளல்கள், புலவர்கள், ரிஷிகள், வீரர்கள் ஆகியோரின் பெயர்கள் வருகின்றன. மேலும் பிற்காலத்தில் நாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், வட இந்திய பக்தர்கள் வாழ் க்கையில் காணும் பல அதிசயச் செய்திகளை இந்தத் துதியிலேயே கேட்கிறோம் ; பிற்கால கவச துதிகளைப் போல வேண்டுதல்கள் தென்படுகின்றன. சம்பந்தர் மற்றும் பிற்கால இசைக்கலைஞர்கள் தன பெயரை முத்திரையாகப் பயன்படுத்துவது போல இங்கும் ரிஷி தன் பெயரைச் சொல்லிப் பாடுகிறார்.
கடைசி மந்திரமாகிய 25 போலவே இந்தப் புலவரின் ஏனைய பல பாடல்கள் முடிகின்றன
“மித்திரனும் வருணனும் அதிதியும் சிந்துவும், பூமியும் வானமும் எங்களுடைய இந்த பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்களாகுக ” என்று இந்த ரிஷி தனது ஏனைய துதிகளை முடிக்கிறார். இப்படி பிற்கால பாடகர்கள் சில சொற்றோடர்களையோ பெயர்களையோ வைத்து கிருதிகள் எட்டுக்கட்டியதை நாம் காணலாம்.
ஆகவே பலவிதங்களிலும் முன்னோடியாகத் திகழும் ரிக்வேத 1-112 துதியை அனைவரும் படித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இதோ முழு துதியும் அதன் முழு ஆங்கில மொழிபெயர்ப்பும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோகக் கதை THOMAS HARDY
(1840 – 1928)
தாமஸ் ஹார்டி ஆங்கிலக் கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர். பிரிட்டனில் டார்செட் DORSET வட்டாரத்தில் UPPERBROCKHAMPTON-இல் பிறந்தார். சிறுவயதில் பூஞ்சலான (Delicate) உடல்வாகுடைய பையனாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தார். பிரெஞ் ச், லத்தீன், ஜெர்மன், கிரேக்க மொழிகளைக் கற்றார். அவரது தந்தையைப் போலவே கட்டி டம் கட்டும் பொறியியல் துறையில் இவருக்கு ஆர்வம். இதனால் 1856 முதல் 1861 வரை DORCHESTER என்னும் இடத்தில் ஒரு கட்டிடக் கலைஞரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1862இல் லண்டனுக்குச் சென்று 5 ஆண்டுகள் கட்டி டக்கலையை பயின்றார்.
முதல் முதலாக இவர் எழுதியது, தான் கட்டிய வீட்டைப் பற்றித்தான்! இவர் எழுதிய முதல் நாவல் ஒரு கொலை பற்றிய கதை. அதை மக்கள் ரசிக்கவில்லை.
மேலும் இரண்டு நாவல்களை எழுதினார். ஆனால் அவையும் வெற்றிபெறவில்லை. பின்னர் இவர் எழுதிய “FAR FROM THE MADDING CROWD” இவருடைய பெயரை பரப்பியது.
THE RETURN OF THE NATIVE, THE MAYOR OF CASTERBRIDGE, TESS OF THE D’URBERVILLES ஆகியன மிகவும் பிரபலமான புதினங்கள். இவர் சோகக் கதைகளை எழுதுவதில் மன்னன்.
இவர் கடைசியாக எழுதிய JUDGE THE OBSCURE என்னும் நாவலில் அந்தக் கால ஒழுக்கக்கேடுகளை கூறினார். இந்த நாவலை மக்கள் புறக்கணிக்கவே அவர் நாவல் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.
ஆனால் தனது கைவண்ணத்தை நாடகம் எழுதுவதில் காட்டினார். நெப்போலியன் ஆட்சிக்கால போர்களை மையமாகக் கொண்ட THE DYNASTYS என்ற நாடகத்தை எழுதினார். வாழ்நாளின் இறுதிநாட்களில் கவிதைகளை அதிகமாக எழுதினார்.
ஹார்டியின் வாழ்க்கை மேடுபள்ளங்கள் இல்லாமல் சீராகச் சென்றது. இவர் இருமுறை மணம் முடித்தவர். OXFORD, CAMBRIDGE, ST.ANDREWS, ABERDEEN, BRISTOL பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன.
WESTMINSTER ABBE-Yயில் (POETS’ CORNER) கவிஞர்கள் மூலையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தாமஸ் ஹார்டி எழுதிய 4 புகழ்பெற்ற புதினங்கள் சோகக் கதைகள் ஆகும். இதனால் இவரை ‘நாவல் எழுதிய ஷேக்ஸ்பியர்’ என்பர் விமர்சகர்கள்.; ஏனெனில் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், சோக நாடகங்கள் புகழ் பெற்றவை.
Hardy has been called the Shakespeare of the English novel and the four great Hardian tragedies — Tess of the D’urbeivilles, Jude the Obscure, The Mayor of Casterbridge and The Return of The Native— have been likened to the four great Shakespearean tragedies.
–subham—
tags- Thomas Hardy, Tragedy Novels, சோகக் கதை, மன்னன், தாமஸ் ஹார்டி ,
சவூதி அரேபியா ஹிந்து இதிஹாஸங்கள், பழக்க வழக்கங்கள், அதன் நடைமுறைகள், மற்றும் புராணங்கள் ஆகியவற்றை தனது கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.
மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார். சவூதி அரசு எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒன்று. இளவரசர் பன்முகம் சார்ந்த பொருளாதாரத்தை விரும்புகிறார்.
உலகமயமாக்கப்பட்ட உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீவிருது 2018இல் வழங்கப்பட்டது.
**
இந்தியா ராணுவத்திற்கென உலகில் அதிகம் செலவழிக்கும் மூன்றாவது நாடு!
ராணுவத்திற்கென அதிகம் செலவழிக்கும் மூன்றாவது பெரிய நாடாக உலகில் இந்தியா திகழ்கிறது. 72900 கோடி டாலரை 2020இல் இந்தியா செல்வழித்துள்ளது. இருப்பினும் அது அமெரிக்காவை ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே தான் உள்ளது. அமெரிக்கா இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாகவும் சீனா நான்கு மடங்கு அதிகமாகவும் ராணுவத்திற்கென செலவழிக்கிறது. உலகளாவிய ராணுவச் செலவை எடுத்துக் கொண்டால் அது 2020இல் 198100 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6% அதிகமாகும்.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா 27-4-2021 இதழ்)
நன்றி : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021
இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:-
Snippets
I. Saudi Arabia Introduces Ramayana, Mahabharata, Yoga and Ayurveda in its curriculum : (The Organiser, 23.04.2021)
The Kingdom of Saudi Arabia has introduced Hindu epics, customs, practices and mythology in its curriculum.
Henceforth, children would also be taught about Ramayana, Mahabharata, Yoga and Ayurveda.
The religious study texts would also include chapters about Buddhism and other religions too. It’s all part of the vision 2030 document prepared under the guidance of Prince Mohammad Bin Salman.
Prince Salman, under his vision to bring dramatic changes in how the Kingdom operates, has been implementing widespread change in its policies.
The Kingdom has an overly oil-dependent economy. Prince wants a more diversified economy.
And to prepare the younger generation for a more globalised world, English language has been made compulsory.
Nouf Almorwaai, a Saudi-based Yoga teacher tweeted on April 15 a screenshot of her child’s question paper, which has questions about Hinduism and Buddhism.
Almorwaai was conferred Padma Shri in 2018 for popularising Yoga in Saudi Arabia.
II. India 3rd largest military spender :
India remains the third largest militaryspender, doling out $ 729 billion in 2020, though still far behind US, which spends over 10 times and China (Four times). The total global military expenditure rose to $1981 billion in 2020, an increase of 2.6% from 2019. (TOI, 27.4.2021)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜெர்மானிய கவிஞர் கெத்தா
GOETHE (1749 – 1832)
ஜெர்மானிய எழுத்தாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர் கெத்தா . இவருடைய முழுப்பெயர் JOHANN WOLFGANG VON GOETHE.
இவர் ஒரு எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – மேதை.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவர் வசதியாக வாழ்ந்தவர். செல்வச் செழிப்பு காரணமாக வீட்டிற்கே ஆசிரியர்கள் வந்து பாடம் கற்பித்தனர். பள்ளிப்படிப்பு இவ்வாறு முடிந்த பின்னர் லீப்ஸிக் பல்கலைகழகம், ஸ்டிராஸ்ப்ர்க் பல்கலைகழகம் ஆகியவற்றில் படித்தார். சட்டப்படிப்பு படித்த போதிலும் வழக்குரைஞராக தொழில் நடத்திய காலம் மிகவும் குறைவே. அவரது கைகள் கவிதை எழுதத் துடித்தன. மிகவும் அழகான கவிதைகளை எழுதினார். ஜெர்மானிய மொழி இலக்கியத்தில் அவை மிகமிக அழகான கவிதைகளாக் கருதப்படுகின்றன.
22 வயதானபோது கெத்தா WETZLAR என்னுமிடத்திற்குச் சென்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். அப்போது அவருடைய நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயர நிகழ்ச்சியும், இவர் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதும் இவர் புதிய நூல் ஒன்றை எழுத ஊற்றுக் கண்ணாக அமைந்தன. THE SORROWS OF YOUNG WERTHER என்ற அந்த நூல் மூலம் இவரது புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது.
ஜெர்மனியின் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த WEIMAR நகருக்கு கெத்தா 1775இல் குடியேறினார். அந்த நகரின் சூழ்நிலையில் மனதைப் பறிகொடுத்த அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை அங்கேயே காலம் தள்ளினார். WEIMARஇல்அவர் PRIVY கவுன்சிலராக ஆனதோடு புகழ் பெற்ற மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.
FAUST என்ற நாடகத்தையும் WELHELM MEISTER’S APPRENTISSHIP என்ற நூலையும் அவர் எழுதினார், இவைகளை முடிக்க பல ஆண்டுகள் பிடித்தன.
இவருக்கு எழுத்துத்துறையைத் தவிர உடற்கூறு (ANATOMY) தாவரவியல் (BOTANY) வேதியியல் (CHEMISTRY) கட்டடக்கலை (ARCHITECT) பொறியியல் (ENGINEERING) ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு.
1786இல் இவர் இதாலி சென்று வந்தார். WEIMAR திரும்பி வந்தவுடன் தனது பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவருடன் வாழ்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய கடைசி கால் நூற்றாண்டுக்கால வாழ்வு இவரை ஜெர்மனியின் மிகப்பெரிய மனிதராக மாற்றியது. ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய மனிதர்கள் இவரைக் காணவந்தனர். 83ஆவது வயதில் WEIMAR-இல் கெத்தா உயிர் நீத்தார்.
கெத்தாவுக்கு இந்திய ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. தெய்வீகச் சாகுந்தலம் என்று பாரதி தனது கவிதையில் புகழ்ந்த உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தல நாடகத்தைப் புகழ்ந்து கெத்தாவும் கவிதை புனைந்துள்ளார்.
Johann Wolfgang Von Goethe, German poet, dramatist, biologist, theoretical physicist and polymath expressed his admiration in 1792 for Shakulntala as:
Willst du die Blüthe des frühen, die Früchte des späteren Jahres,
Willst du, was reizt und entzückt, willst du was sättigt und nährt,
Willst du den Himmel, die Erde, mit Einem Namen begreifen;
Nenn’ ich, Sakuntala, Dich, and so ist Alles gesagt.—Goethe
Wouldst thou the young year’s blossoms and the fruits of its decline And all by which the soul is charmed, enraptured, feasted, fed, Wouldst thou the earth and heaven itself in one sole name combine? I name thee, O Sakuntala! and all at once is said.
—translation by E.B. Eastwick
It means – If you wish to see the young flowers of Spring and the ready to pluck fruits of Summer at once; or if you wish to see that object which pleases, hypnotises, delights and quenches you at once; or if you wish to see the earth and heaven in one look; I invoke the name of Shakuntala and all quests are answered at once- Goethe
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளில் ஒன்றைத்தான் இன்னும் ஆராய்ந்து வருகிறோம் . இதில் தேனீக்களுக்கு தேன் கொடுப்பதும் அஸ்வினி தேவர்கள் என்று ஒரு மந்திரம் வருகிறது. இது போல ரிக் வேதம் முழுதும் சோமலதை (Soma Plant) என்னும் அற்புத மூலி கையை பருந்து (Falcon) கொண்டுவந்து தருவதாக மந்திரங்கள் வருகின்றன. இதுபற்றியெல்லாம் மாக்ஸ் முல்லர் கும்பல் மவுனம் சாதிக்கின்றது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல் சொல்லுவது போல சோம ரசம் என்பது ஒரு போதையூட்டும் பானம் என்பதை நம்புவோமானால் உலகின் முதல் போதை மருந்து நூல் ரிக் வேதம் என்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும் . ஏனெனில் ரிக் வேதத்தில் பெரும்பாலான மந்திரங்களில் சோம ரஸம் வருகிறது. அதுமட்டுமல்ல சூர்யோதயத்துக்கு முன்னால் , குளித்துவிட்டு, மடி, ஆசாரத்துடன் மந்திரம் சொல்லிக் குடித்ததாக வருகிறது . அது மட்டுமல்ல அரிதான அந்த ரசத்தை கடவுளுக்கும் , குறிப்பாக இந்திரனுக்கும் தீயில் ஊற்றி வீணடித்தையும் நாம் நம்பவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மாக்ஸ்முல்லர் கும்பல் முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான மொழி பெயர்ப்பைச் செய்துள்ளது. ரிக் வேதத்தை அனைவரும் படித்து இந்தக் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும் .
xxx
தொடர்ந்து இந்தக் கவிதையின் மந்திரங்களைக் காண்போம் (ரிக்.1-112-18)
மந்திரம் 18
இதில் அங்கீரஸ முனிவர், மநு பற்றி வருகிறது; முன்னரே கண்டோம்;
திருடப்பட்ட பசுக்களை “குகையில் ஒளித்து வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாக” இங்கும் வருகிறது . இதுவும் “கிணற்றில் தள்ளிவிடப்பட்ட முனிவர்களும்” பல இடங்களில் வருவதால் இதை அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் மறைபொருளை அறிய வேண்டும். இந்த மந்திரத்தில் அவைகளை மலைகளில் ஒளிந்துகொண்டு இருக்கும் மேகங்கள் என்று உரைகாரர் செப்புவர் .
இந்த மந்திரத்தில் ‘பால் வெள்ளம்’ என்பதை மழைப் பொழிவு என்பர். இதை படிக்கும்போது “பாலுக்கழுத மகனுக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்ற வரி நினைவுக்கு வருகிறது
xxx
மந்திரம் 19
இங்கு விமதன் என்பவருக்கு அஸ்வினி தேவர்கள் மனைவியைக் கொண்டுவந்ததை புலவர் பாராட்டுகிறார். விமதன் என்பவர் ஒரு ரிஷி என்றும் அவருக்கு புருவித்ரன் மகள் மனைவி ஆனதாகவும் உரைகார்கள் உரைப்பர். இதில் அஸ்வினி தேவர்கள் “சிவப்பு வர்ண பசுக்களை” மீட்டதாகப் பாடுகிறார். இதற்கு சிவப்பு நிற மேகங்கள் என்று அர்த்தம் கற்ப்பிக்கப்படுகிறது . அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இதைவிட முக்கியமான செய்தி சுதாசுக்கு செல்வம் கிடைக்க வழி செய்த அஸ்வினி தேவர்களே எங்களுக்கும் உதவுங்கள் என்ற வரிகளாகும். சுதாஸ் ஒரு பெரிய மன்னன். மிகப்பெரிய போரில் அவன் வெற்றி பெற இந்திரன் உதவியதாக ஏழாவது மண்டலத்தின் 18-ஆவது பாடலில் நீண்ட வரலாறு கூறப்பட்டுள்ளது .இதற்கு அடுத்த முக்கியக் கவிதை அதுதான். அதைப்பற்றி தனியே எழுதுவேன் . இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட விரும்புகிறேன். சு+தாச , திவோ+ தாச /தச என்றெல்லாம் வேத கால மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. தாச , தஸ்யூ என்பன இழி பொருளில் பயன்படுத்தப்படுவதாக கூறும் கும்பல் இது பற்றி மவுனம் சாதிக்கிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்து ஒழிந்தது போல வேத கால மன்னர்களிடையேயும் சண்டை நடந்துள்ளது. அதில் பிஜாவான என்ற மன்னரின் மகன் சுதாஸ் வெற்றிபெற்ற செய்தி வருகிறது. வேத காலத்தில் தஸ்யூக்கள் என்னும் திருடர்களுடன் நடந்த சண்டையைக் கூட இனவாதப் போர் என்று மாக்ஸ்முல்லர் கும்பல் சித்தரிப்பது முழுப் பொய். சுதாஸ் சம்பந்தப்பட்ட போரில் பத்து அரசர்கள் சண்டையிட்டதை பின்னர் காண்போம். கரிகாலன் ஏழு அரசர்களை வென்று ஏழாரம் போட்டது போன்ற பெரிய யுத்தம் அது. ஆக சுதாஸ் பற்றிய வெற்றிச் செய்தியையும் இங்கே காண்கிறோம்.
சுதாஸ் பற்றிய ஏழாவது மண்டல துதியில் ஒரு அற்புதமான செய்தி வருகிறது. யமுனை நதி குறிப்பிடப்படுகிறது. மேலை நாட்டுக்கும்பல் இதைப்படித்துவிட்டு நம்ப முடியவில்லையே, புரியவில்லையே என்று பேந்தப் பேந்த முழிக்கிறது . ஏனெனில் ஈரான் நாட்டிலிருந்து டில்லிக்கு அருகில் ஓடும் யமுனை வரையுள்ள உலகின் பிரம்மாண்ட நிலப்பரப்பு பற்றி ரிக் வேத மன்னர் ஆட்சி வருகிறது. இதை மாக்ஸ்முல்லர் கும்பலால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பக்கம் வேத கால இந்துக்களை நாடோடிக்கும்பல் என்று வருணித்த பயல்கள் இதற்கு விளக்கம் சொல்லமுடியாமல் திணறுகிறார்கள் .
xxx
மந்திரம் 20 (1-112-20)
பூஜ்யு , அத்ரிகு , ருதுஸ் தூபம் ஆகிய மூவர் தொடர்பான அதிசயச் செய்திகள் இங்கே புகழப் படுகின்றன.
அஸ்வினி தேவர்கள் செய்த மிகப்பெரிய சாஹஸச் செயல் புஜ்யுவை நடுக்கடலில் இருந்து கப்பலில் மீட்டதாகும். முன்னரே ஒரு மந்திரத்தில் கண்டோம்.
இங்கு மேலும் இரண்டு செய்திகள் என்னவென்றால் அத்ரிகு, ருதுஸ் துபன் என்ற இரண்டு ரிஷிகளுக்கு அஸ்வினி தேவர்கள் செய்த உதவியாகும். ருதுஸ்தூபனுக்கு உணவு கொடுத்ததாக வருகிறது; இதுபற்றி அதிகம் தெரியவில்லை. அதற்கு முன் வரும் ‘சுபராம்’ என்பதை சாயனர் உரிச் சொல்லாகக் கொண்டு உணவு பற்றி கதைக்கிறார் .
மந்திரம் 21
இந்த மந்திரத்தில் நிறைய அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன. மற்ற மந்திரங்களில் ‘தேன் சொட்டும் அஸ்வினியர்’ என்று போற்றினர். இங்கே தேனீக்களுக்கு தேன் கொடுத்தவர்களும் அவர்கள்தான் என்கிறார் புலவர்.
ஒரு இளைஞனை குதிரை ரேஸில் வெல்ல வைக்கவும் பாடுகிறார் . அந்த இளைஞன் புருகுத்சன் என்று உரைகாரர் பகர்வர். ஆக இது நாடோடி ஸமூகமல்ல . குதிரை ரேஸ் முதலியன விளையாடிய நாகரீக சமூகம் என்று தெரிகிறது.
கிருசானு யார் ?
இம்மந்திரத்தில் கிருசானுவை அஸ்வினியர் காத்ததாக வருகிறது. இவரை தேவலோக சோம ரஸ பாதுகாவலர் என்று எழுதிவிட்டு 1-155 மந்திரத்தில் இவரை அரக்கர்- ஒரு வேளை அமிர்தமான மழையைத் தடுக்கும் வறட்சி என்னும் அசுரனாக இருக்கலாம் என்று பிதற்றுகின்றனர். மேலை நாட்டு கோமாளிக் கும்பலோ இவரை பார்ஸி மொழி அவஸ்தா புஸ்தகத்தில் உள்ள கெரிசானியுடன் ஒப்பிடுகிறது மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம் இது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மோடி அவர்களின் சாதனைகள்!
ச.நாகராஜன்
உலகமே வியக்கும் வண்ணம் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட் கொள்ளை நோய் பரவிய சமயம் உதவி செய்தவர் பாரத பிரதமர் மோடிஜி. அந்த நாட்டுத் தலைவர்கள் எல்லாம் நெஞ்சு நெகிழ இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததை உலகம் அறியும்.
இப்போது கொரானாவின் இரண்டாவது அலை இந்தியாவை வேகமாகத் தாக்கும் போது உலகின் பல்வேறு நாடுகள் நமக்குத் தேவையான எல்லா விதத்திலும் உதவி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
ஒரு நல்ல தலைவரை மக்கள் எப்படி ஆதரிக்க வேண்டும்?
மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவரை ஊக்குவிக்க வேண்டும். நமக்கு எதிர்பாராத ஒரு ஆபத்து வந்த நிலையில் 130 கோடி பேரும் ஒரே மனதுடன் ஒரே உடலை எடுத்தது போல நின்று ஆபத்தைச் சமாளிக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவிலோ….
கம்யூனிஸ்டுகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்டுகள் ஆக்ஸிஜன் வாகன்களை ஏற்றி வரும் தண்டவாளைத்தைப் பெயர்த்து விபத்து ஏற்படச் செய்வதை டிவி காட்சியாகப் பார்த்து திகைக்கிறோம்.
இந்த ஆபத்தை அரசியலாக மாற்றித் தனது ஆதாயத்திற்காகக் “கடுமையாக உழைக்கும்” அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம்!
போலி செகுலரிஸ்டுகளுக்கோ ஒரே கொண்டாட்டம் – உடனே “எதற்கெடுத்தாலும்” மோடி ராஜிநாமாவை வேண்டுவது அவர்கள் கூடப் பிறந்த பழக்கம்.
தனிப் பெரும் உலகத் தலைவராகத் திகழும் மோடிஜி முதலில் போலி செகுலரிசத்தை உடைத்த முதல் பிரதமராகத் திகழ்கிறார்.
அயோத்யாவில் பூமி பூஜையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த முதல் ஹிந்து பிரதமர் அவர் தான்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதை நாம் அறிவோம்.
அரசு பணத்தை சோம்நாத் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்யப் பயன்படுத்தக் கூடாது என்று காந்திஜி போட்ட நிபந்தனையையும் நாம் அறிவோம்.
இப்படிப் பட்ட “செகுலர் இந்தியாவில்” மசூதி வழிபாட்டு உரிமையில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது; நுழைப்பது இல்லை.
கிறிஸ்தவ சர்ச்சுகள் வழிபாட்டு உரிமையில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது; நுழைப்பதும் இல்லை.
ஆனால் “இளிச்சவாய் ஹிந்துக்களை” எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் புரட்டிப் போட்டு அடிக்கலாம்.
போகட்டும் அயோத்தி ராமர் காப்பாற்றுவார் இந்தியாவை! – பெரும் வல்லரசாக ஆகி வருகிறது இந்தியா என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிந்து விட்டன; அங்கீகரித்தும் விட்டன!
இனி மோடிஜி என்ன செய்தார் இதுவரை என்று ஒரு பார்வையைப் பார்த்துத் “தொலைவோம்!
1) 12000 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை இது வரை அமைத்துள்ளார்
2) 70 லட்சம் வீடுகளைக் கட்டி விட்டார்
3) பல லட்சம் கழிப்பறைகள் பாரதமெங்கும் உருவாக்கப்பட்டு விட்டன
4) 15 புதிய எய்ம்ஸ் – AIIMS- மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
5) புதிய சப்மரீன்கள் கட்டப்பட்டுள்ளன
6) தேஜஸ் விமானம் இந்தியாவிலேயே கட்டப்பட்டுள்ளது
7) ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்கை செய்து நமது பலத்தையும் உறுதியையும் காண்பித்துள்ளோம்
8) ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் ஓடி ஒளிந்துள்ளனர்
9) மதமாற்றம் செய்ய கோடிக்கணக்கில் உள் நாட்டில் வெவ்வேறு வழியில் வந்த “கள்ளப் பணம்” தடுக்கப்பட்டுள்ளது
10) முப்படைகளும் வலுவாக்கப்பட்டுள்ளன
11) ராம் மந்திரை அயோத்யாவில் அமைக்கும் கனவு நனவாக ஆகி வருகிறது 12) ஆர்டிகிள் 370 பற்றிய தீர்மானம்
13) 65 நாடுகளுடன் வணிக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
14) எந்த சீனாவைக் கண்டு நாம் பயந்து வந்தோமோ அந்த சீனா நம்மைக் கண்டு பயப்பட ஆரம்பித்திருக்கிறது
15) க்ரோத் ரேட் மேம்பட்டு வருகிறது (கொரானாவால் ஏற்பட்ட தற்காலிக சரிவு இருக்கிறது என்பது உண்மையே)
16) 12 ரூபாய்க்கு 2 லட்சம் இன்சூரன்ஸ் தொகை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது
17) டீ மானிடைசேஷன் மூலமாக பாகிஸ்தானுக்கு அடி; நக்ஸலைட்டுகளுக்கும் தீவிரவாதிகளுக்கு அடி. அவர்கள் சேர்த்து வைத்தக் கள்ளப்பணம் அம்போ!
18) சவூதி அரேபியாவில் ஷேக் ஒரு கோவில் கட்ட முனைந்துள்ளார்
19) காஷ்மீரில் அனைவருக்கும் இப்போது சரிசம உரிமை உண்டு; சொத்துக்கள் வாங்கலாம்; விற்கலாம்
20) சொந்தக்காரர்களுக்கும் வாரிசுகளுக்கும் தவறாமல் அளிக்கப்படும் சலுகைகள், பதவிகள் இல்லை சொந்த அம்மா ஆடோரிக்ஷாவில் தான் போகிறார். சகோதரர்கள், உறவினர்கள் அவரவர் சாதாரண வேலைகளைத் தான் பார்த்து வருகின்றனர்.
21) உலகம் வியக்கும் வண்ணம் விண்வெளியில் வலம் வருகிறோம். நமது இஸ்ரோ அபார சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அது வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது!
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தனி மரியாதை உள்ளது.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டு சொல்லலாம்.
ஆனால் இது பொறுக்காத அரசியல் தலைவர்கள், போலி செகுலரிஸ்டுகள், அவர்களுக்குத் தாளம் போட்டுப் பிழைக்கும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சிகள், பேச்சாளர்கள் அதிகமாகி வருவதும் உண்மையே!
அவர்களைப் பார்க்க – கைப்புண்ணை கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டாம் என்பது போல – பெரிய முயற்சி ஒன்றும் வேண்டாம்.
பார்த்தாலேயே தெரியும் அவர்கள் யார் யார் என்று! இவர்களைப் புறம் தள்ளி ஒதுக்கி வைப்போம்.
மோடிஜி அவர்களுக்கு இந்த கொரானா காலத்தில் கூட இருந்து உறுதுணையாக நிற்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. செய்வோம்; கொரானாவை வெல்வோம்!
***
NARENDRA MODI’S ACHIEVEMENTS IN SEVEN YEARS
*What PM Modi did in 7 years…*
International Memberships
● EBRD Membership
● International Energy Agency
● Australia Group
● SCO Membership
● Wassenaar Arrangement
● MTCR Membership
● CREN
● Asian Infrastructure Investment Bank
● International Solar Alliance
Security Pacts
● Military Logistic Pact ‘LEMOA’ with USA
● Military Logistic Pact ‘MLSA’ with France
● Military Logistic Pact with South Korea
● Cross Servicing Agreement ‘ACSA’ with Japan.
● MLSA pact with Australia.
● Military Logistic Pact with Russia.
● Access to ‘Sabang Port’ Indonesia
● Naval Base at ‘Assomption Island’
● Military base in ‘Agalega Island’
● Access to ‘Duqm Port’ in Oman
● To Build ‘Trincomalee Port’ Sri Lanka
● Maritime Logistic Pact with Singapore
● White Shipping Pact with Israel.
Big Steps
● OROP for Veterans
● 7th Pay Commission
● MSP Increased For Farmers
● PM Kisan Samman Nidhi
● MSME 1 Crore Loan
● GST Slab Reduction
● MSME 40 Lac Turnover Limit for GST
Financial Saving
● Black Money Recovered : 94K Cr+
● Undisclosed Income : 1.3 lac cr+
● NPA Recovered : 5.63 lac cr+
● Extra Saving for Defence : 1.92 lac cr+
● DBT Saving : 1.78 lac cr+
● Disinvestment Saving : 2.8 Lac cr+
● Auction of Mines : 1.81 lac cr+
Major Defence Deals
● Rafale Multirole Fighter
● S-400 SAM
● Project 17A Frigates
● Barak-8 MRSAM
● ‘Arihant Class’ Nuclear Submarine
● ‘Apache’ & ‘Chinook’ Helicopter
● AKULA-II Nuclear Submarine
● Project 11356 class Frigates
● M777, ‘Dhanush’ Howitzer Artilary
● K-9 Tracked Howitzer
● AK-203 Assault Rifle
● “MH-60R” Naval Helicopter deal signed.
Big 56″ Actions
● Mayanmar Strike
● Surgical Strikes
● Balakot Air Strike
● Banned Jamaat-e-Isl’ami
● Doklam Stand-off
● JKLF Banned
● Sealing of Border with ‘Pak’ & ‘Bangladesh’
● No Major Terrorist Attack on Civilians
● Galwan Stand-Off
Big Changes
● Swiss Bank Deposits Reduced By 91%
● Extreme Poor reduced to 5 Cr from 26 Cr in 2011
● Ease of Doing Business Ranking 63
● UPI transactions 2,641 mn in Apr’21
● Highest Foodgrain Production 303 mn tonne in 2020-21.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Let us continue with the Rigvedic hymn 1-112
Mantra 18 ( RV 1-112-18)
Here Angiras and Manu are referred to.
Angiras is a seer. Manu is a Rajarsi, already dealt with in mantra 16.
Here we come across ‘Flood of Milk’ , also cows shut up in the cave. The explanation given says, the rain clouds prevented from pouring out their water.
Clouds described as cows and ‘their detention in the caves’ is used very often in the Vedas.
Mantra 19
Here we come across two more historical personages
Seer Vimada and King Sudas.
Foreign jokers are silent about Su+ Das, Divo +Dasa.
In other places they describe ‘das’ ‘dasa’ ‘dasyu’ as derogatory terms.
But Vedic kings themselves had these “das and dasa” suffixes
Vimada got a wife through the Asvins. Commentators say it was the daughter of Purumitra. Rishi Vimada’s name occurs in five more hymns.
But the most important name is Sudas, son of Pijavana, King of the Trtsus.
It was one of the historical wars where Sudas won with the help of Indra.
Fully described in the commentaries of Rigveda 7-18
Foreign clowns were surprised and baffled because the Seveth mandala hymn mentioned River Yamuna. Foreign clowns struggle to get the meaning of 7-18. Griffith as usual say it is difficult to understand because of the difficult phraseology.
Rig Veda’s most important war comes upto River Yamnua!!
Several thousand square miles from Iran to Uttarpradesh covered by the Rig Veda.
Anyway I will deal with that’s hymn separately.
Here ruddy cows are described as red clouds!
Mantra 20
Mantra gives more mysterious names in addition to famous Bhujyu, already dealt with here in mantra 6. Asvins’ greatest sea adventure is with Bhujyu.
But here Adhrigu is also said to have been protected by the Asvins.
Sayana says he was another seer .
Another name Rtastup is also portrayed as a seer by Sayana. He got food from the Asvins.
We don’t know much about these seers.
Another word Subharaa is an adjective according to Sayana.
It may also be the name of a person.
Mantra 21
Asvins are always associated with Honey. In this mantra Asvins are said to have provided the delicious honey to the bees!
No commentator explains this!!
Here we come across one more person Krsanu, who is one of the celestial guardians of Soma. RV 4-27-3 where Krsanu occurs is a mysterious hymn which associated Soma with Falcon or Eagle.
Through out the Vedas we see falcons and eagles bringing mysterious Soma. But some half -baked botanists and doctors described it as a mushroom , this and that, 125 years ago. They could not explain why Eagle is associated with Soma. Had the foreigners really identified Soma they would have marketed it like Coca Cola by this time and made billions of dollars. All their identifications are wrong.
Why should Krsanu protect it in heaven?
More over Krsanu is helped in war according to a commentator. What war?
He is identified with Keresani in Avesta, which is doubtful.
This mantra says that Asvins helped a young man to win a horse race. Commentators say it is Purukutsa.
Vedas mentioned Horse races, festivals and dances in addition to Kings.So it was not a nomadic community. They ruled a vast area from Afghanistan/Iran to Uttar Pradesh!
The geography Rig Veda baffled the foreign jesters and so they tried to identify the actual rivers with some imaginary rivers!
Don’t take my word for it. If you read the entire Rig Veda and loot athe commentaries of 25+ jokers , you would also come to the same conclusion. What is it?
Vedas, as the name suggests, is Knowledge, not nomadic poems.