Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் !
சுமேரியா என்றால் என்ன?
இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.
ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?
படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் . இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .
இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?
பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.
அப்பேற்பட்ட பெருமை மிகு ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.
XXX
ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?
இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.
இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .
இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !
ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ சடங்குகள் தனி.
பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?
கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி என்று அழைப்பர்.
இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?
அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது
தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.
“உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி
பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்
கச்ச தேவி யதா சுகம்”
என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.
மந்திரத்தின் பொருள்
“பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.
அவள் கடவுள் தானே !
பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!
ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட் விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.
இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.
என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது
நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6
ச.நாகராஜன்
9. இந்தியா:
இந்தியர்கள் பழங்காலத்திலேயே ஹிந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தருபவையே. என்ற போதிலும் இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியர்ன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது; பின்னர் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரது ஆளுகைக்கு உட்பட்டது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாற்றப்பட்டனர். 1947ஆம் ஆண்டு முடிய இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% இஸ்லாமுக்கும் 1.5% கிறிஸ்தவத்திற்கும் மாற்றப்பட்டனர். ஹிந்துக்கள் இதர மதங்களுக்கு மாற்றப்பட்ட போது அவர்களோ மற்றவர்களை மதம் மாற்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இப்படியாக, இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்கள் ஹிந்து மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையே தங்கள் முன்னோராகக் கொண்டிருந்தனர். ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறியதற்கு கீழே உள்ள காரணங்களைச் சொல்லலாம்:
ஹிந்து மதத்தின் ஜாதி முறை:
ஹிந்து சமூகத்தின் அமைப்பு சில சமூகங்களை/ ஜாதிகளைக் கொண்டிருந்தது உலகியல் சார்ந்த விஷயங்களில் தீவிரமான குறைபாட்டைத் தந்தது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்த சமூகங்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தைத் தந்தது. ஆகவே கீழ் ஜாதி ஹிந்துக்களும் பழங்குடியினரும் தங்களது பழைய நம்பிக்கைகளை விட்டனர். உதாரணமாக, (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பெஹாவல்பூரைச் சேர்ந்த, சமூக ரீதியில் கீழாக இருந்த லோஹானா ராஜபுத்திரர்கள் முஸ்லீம் சூபி பரிதால் இஸ்லாமுக்கு மாற சில சலுகைகளைத் தந்த போது, இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். கிறிஸ்தவர்களில் சுமார் 80%, கீழ் ஜாதி பழங்குடியினர் ஆவர்.
1. இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்த ஒன்று – தேச பிரிவினை ஏற்பட்டு பஞ்சாப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டவுடன் 10000க்கும் மேற்பட்ட (துப்புரவுத் தொழிலாளர்கள்) மெஹ்தார்கள் தங்கள் தர்மத்தைக் காத்துக் கொள்ளவும் தங்கள் பெண்களின் கௌரவத்தைக் காக்கவும் இந்தியாவிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். துரதிர்ஷ்டவசமாகஅவர்கள் திருப்பித் திருப்பி வேண்டிய கோரிக்கைகளுக்கு நேரு செவி சாய்க்கவில்லை. இஸ்லாமிற்கு மாற்றப்படுகையில், அவர்களது பெண்மணிகள் தங்கள் தர்மத்தைக் காக்கவும் தங்களது சொந்த நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கவும்
எதிர்மறை விளைவுகளைத் தொடர்ந்து பொறுத்து வந்தனர். அவர்கள் திருப்பித் திருப்பி வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட போது கிறிஸ்தவ மிஷனரிகள் முன் வந்து குறுக்கிட்டு, தங்களது உதவிக்கரங்களை நீட்டினர். இதுவே காலகிரமத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மெஹ்தார் ஜனத்தொகை கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டதில் முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் படும் அவலமும் துயரங்களும் ஒருபோதும் உணரப்பட்டதில்லை. பாரதத்தை வந்து அடைந்த பின்னரும் சமூக ரீதியாக, தாங்கள் துப்புரவுத் தொழிலாளர்களாகவே தான் நடத்தப்படுவர் என்பதை மெஹ்தார் மக்கள் நன்கு அறிவர். ஆனால் தொடர்ந்து தங்கள் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அப்போது ஆண்டு வந்த போலி செக்குலர்வாதிகளான (ஹிந்து விரோத) அரசினால் இறுதியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்ட போது தோல்வி அடைந்தனர்.
ஆதாரம், நன்றி : Truth Vol 88 No 21 dated 11-12-2020
{Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus) }
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:
Preserving Hinduism – Sanatan Dharma
9. India:
Indians were referred to as ‘Hindus’ in ancient times and the two terms were fairly synonymous. However, large parts of the country passed under Islamic rule and subsequently under Portuguese, French, Dutch and British rule. Millions of Hindus were converted to Islam and Christianity till; by 1947 C.E. approximately 25% and 1.5% of the population of the Indian Subcontinent had converted to Islam and Christianity respectively. While Hindus converted to other religions, they themselves refused to accept any converts. Thus, most indigenous Muslims(26) and Christians are descended from Hindu and Buddhist Indian ancestors. We may summarize the following causes for the conversion of Hindus to Islam and Christianity:
a. Hindu Caste System:
The social structure of the Hindu society put some communities/castes at a severe disadvantage in all temporal matters. Islam and Christianity offered these communities social equality and so several Low Caste Hindus and tribals left their ancestral beliefs. For instance, the socially inferior Lohana Rajputs of Bahawalpur (now in Pakistan) converted to Islam when the Muslim Sufi Farid offered them sops for converting to Islam. About 80% Christians in India have Low Caste or Tribal origins.
[1. It deserves mention that after the partition of Punjab and creation of Pakistan, more than 10,000 Mehtars (Sanitary Workers) sought safe passage to India to save their Dharma and honour of their women. Unfortunately Nehru lent a deaf air to their repeated prayers. Their women continued to bear the brunt of the rabid proselytising Moslems, to protect their Dharma and continued to remain anchored to their moorings. After their repeated appeals were ignored, Christian Missionaries came forward and extended their helpful hands to intervene. This ultimately resulted in the conversion of the tormented Mehtar population to Christianity over years. The woes and sorrows of those Hindus in Pakistan was never recognised. The Mehtars knew that socially they will continue to remain sweepers only after reaching Bharat, but failed in their persistent effort to save their Dharma till being finally ignored by the then ruling pseudo-secular (anti-Hindu) ruling dispensation.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிப்ரவரி 2021 காலண்டர்
பண்டிகை நாட்கள் -பிப்ரவரி .11- தை அம்மாவாசை ; 14- காதலர் தினம் ; 16- வசந்த பஞ்சமி ; 19 -ரத சப்தமி , சிவாஜி ஐயந்தி ; 27- மாசி மகம் , கேரளத்தில் ஆட்டுக்கல் பொங்கல் விழா , குரு ரவிதாஸ் ஜயந்தி
மடியில் தலை வைத்து உறங்குவோரை வீழ்த்துவது ஆண்மையா – ஹிதோபதேசம்
அங்கமாருஹ்ய ஸுப் தானா ம் வதே கிம் நாம பவுருஷம்
XXX
பிப்ரவரி 11 வியாழக் கிழமை
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். ( திருக்குறள் – 771)
பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக (HERO STONES FOR DEAD SOLDIERS) நிற்பவர் மிகப் பலர்
XXXX
பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. (திருக்குறள் – 776)
கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே வீரனாவான்
XXXX
பிப்ரவரி 13 சனிக் கிழமை
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். ( திருக்குறள் – 779)
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, சாகிற வீரரை, சூளுரை பிழைத்ததற்காக யாரும் தண்டிக்கமாட்டார்கள்
XXX
பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை
புஜே வீ ர்யம் நிவசதி ந வாசி – சம்ஸ்க்ருத பழமொழி
வாய்ச் சொல்லில் வீரம் இல்லை; புஜ பலத்தில் இருக்கிறது.
XXX
பிப்ரவரி 15 திங்கட்கிழமை
பிரதாப சஹாயா ஹி சத்வவன்தஹ- சம்ஸ்க்ருத பழமொழி
விரமுள்ளவனுக்கு ஆண்மையே துணை
XXX
பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை
புவு ருஷேன வினா மூல்யம் புருஷஸ்ய எ கிஞ்சன
வீரமில்லாதவனுக்கு மதிப்பு எதுவுமில்லை – கஹா வத் ரத்னாகர்
மரம் பொய் சொல்வதில்லை,வெட்டுகிறோம்;மந்திரி பொய் சொல்கிறார், மாலை போடுகிறோம்!(Post No.9200)
Compiled BY KATTUKKUTY
Post No. 9200
Date uploaded in London – – 29 January 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் -20
BY Kattukutty
உண்மை நிலை உணர்வு+கனவுகள்= லட்சியவாதி உண்மை நிலை உணர்வு-கனவுகள்=மிருகம் உண்மை நிலை உணர்வு+நகைச்சுவை=யதார்த்தவாதி கனவுகள்-நகைச்சுவை= வெறியன் உண்மை நிலை உணர்வு+கனவுகள்+நகைச்சுவை=அறிஞன்
லட்சிய உலகம்எப்படி இருக்க வேண்டும்என்று கனவு காண்கின்ற சக்தி இருக்க வேண்டும். உண்மையில் உலகம் எப்படி இருக்கின்றது என்பதைக் காண்கின்ற தெளிவு வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் புன்னகையோடு ஏற்றுகொள்கிற மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவனே அறிஞன். XXXX
அதோ நிற்கிறாரே,என் உறவுக்காரர்களிலேயே பரம ஏழை….. அவர் உங்களுக்கு என்ன உறவு??? என் கணவர் !!!
XXXX
மண் பொய் சொல்வதில்லை மிதிக்கிறோம் மரம் பொய் சொல்வதில்லை வெட்டுகிறோம் மந்திரி பொய் சொல்கிறார் மாலை போடுகிறோம்
XXXX
வினோத சட்டம் 1779 -ல் ஒரு வினோதமான சட்டம் பிரிட்டனில் இயற்றப்பட்டது. அதன்படி ஒரு பெண் சென்ட், அழகு சாதனங்கள், பொய்ப்பல், குதிகால் உயர்ந்த பாத அணி ஆகியவற்றை தரித்து ஆண்களை மயக்கி மணந்து கொள்ளக் கூடாது…… இந்த சட்டம் இன்றுவரை ரத்து செய்யப்படவில்லையாம்!!! XXXX
ஒருத்தி- ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றாரே உன் கணவர் என்ன பிடித்து வந்தார்??? மற்றொருத்தி – ஜல தோஷம் பிடித்து வந்தார்………. XXXX
உண்மை செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்புமுன், பொய் உலகை பாதி சுற்றி வந்து விடுகிறது !!! ஜேம்ஸ் கல்லகன் XXXX
ஒரு அனுபவ பழமொழி இருட்டில் வருவதெல்லாம் பேயல்ல.உங்கள் மனைவியாகக் கூட இருக்கலாம்……….. XXXX
ஒரு நல்ல வாக்கியம் இப்படி சிதைந்து கிடக்கிறது……. வால். ஒரு நயம். லக்கி அது என்ன வாக்கியம்??? விடை- “ஒரு நல்ல வாக்கியம்” XXX
மோசமான கை எழுத்துக்கு மற்றொரு பெயர் “ டாக்டர்களின் வியாதி”!!!! XXXX
காலனைக் கண்டு அஞ்சாதவர் உலகில் யாரே இருக்க முடியும்? திருவோடு ஏந்தும் பிச்சைக்காரன் முதல் மாநிலம் ஆளும் மஹாராஜன் வரை யாரால் தான் காலனின் பாசக் கயிறிலிருந்து தப்ப முடியும்?
ஆனால் அருணகிரிநாதரோ முருகனே தன் தனி வழிக்குத் துணை ஆவான் என்கிறார்.
நாளும் கோளும் முருக பக்தர்களை ஒன்றும் செய்யாது என்பது அவரது அருள் வாக்கு.
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூறறு என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே என்று தைரியமாக அவர் கூறும் போது பக்தர்களும் அந்த கந்தரலங்காரத்தைப் பாடி தம் தம் வினையகற்றி முருகனின் அருளைப் பெறுவது திண்ணம் அல்லவா!
நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்க்கு அவர் தரும் எச்சரிக்கை கடுமையானது!
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து திருப்புகழானது ஓதுபவர்க்கு என்னென்ன நலன்களைத் தரும் என்பதையும் அவரே கூறுகிறார்:
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறைப்புகழ் உரைக்கும் செயல் தாராய்!
எதைப் பெற எந்தத் திருப்புகழைப் பாட வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது!
அருள் பெற பாடுங்கள் உம்பர் தருதேநுமணிக்கசிவாகி பாடலை
யமன் வருவதை நினைத்து பயப்படாமல் இருக்க ஒரு பாடல் இசைந்த ஏறும் கரிஉரி போர்வையும் என்ற பாடல்
தரிசனம் வேண்ட ஒரு பாடல் ஓலையும் தூதரும் கண்டு என்ற பாடல்
எப்போதும் எதிலும் முருகனின் துணை வேண்ட ஒரு பாடல் ;
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவநன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே
இப்படி திருப்புகழின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தித்திக்கும் திருப்புகழ் பாடல்களை வெவ்வேறு இனிய ராகங்களில் கேட்கும் போதும் பாடும் போதும் அருள் உலகில் திளைப்பது உண்மை.
தமிழின் வல்லமையையும் முருகனையும் அருளையும் தரும் திருப்புகழைப் பரப்புவதும் பேணுவதும் தமிழர் தம் தலையாய கடமை.
இந்தப் பணியை சிரமேற்கொண்டு நடத்தி வரும் லண்டன் திரு கல்யாண சுந்தர சிவாசாரியார் லண்டனில் நடக்கும் எந்த நல்ல காரியத்தையும் முன்னின்று நடத்துபவர். இப்போதோ நியூஜிலாந்திலிருந்து அமெரிக்கா வரை அவர் புகழ் பரந்து விரிந்திருக்கிறது. அவர் இன்று என்னை தொடர்பு கொண்டு பேச அழைத்த போது முருகனின் அருளே அழைத்தது என எண்ணி மகிழ்ந்தேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம் உரித்தாகுக.
தோகை மேல் உலவும்கந்தன் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமக்கு வேலை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்தைச் சேர்ந்த 30 முத்திரைகள் (SEALS) மெசப்பொட்டேமியாவில் கிடைத்துள்ளன. இது மிகப் பழைய செய்தி ; அவைகளில் இரண்டு முத்திரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவைகளின் காலம் 4500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அப்போது வேத கால நாகரிகம் உச்ச கட்டத்தில் இருந்தது. இது எப்படி தெரிகிறது என்றால் ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் ஊர், உரு, உருக்ஷிதி என்ற சொற்கள் வருகின்றன.. அவைகளை ‘பெரிய இடம்’ என்று சாயனர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்த்தார். இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் உரு, ஊர் என்றால் பெரிய இடம் என்பது 2000 ஆண்டுப் பழமையான தமிச் சங்க இலக்கியத்திலும் உளது. உரு, உரு கெழு என்று நிறைய இடங்களில் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூலம் ஒன்றுதான் என்று பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், காஞ்சி பராமசர்ய சுவாமிகள், இலண்டன் சுவாமிநாதன் ஆகியோர் சொல்லுவது உண்மையே.
SUMERIAN KING NARA SIMHAN OR NARA CHANDRAN LIKE OUR HARICHANDRAN
உரு என்றால் ‘அழகு’. அது சம்ஸ்கிருத்தத்தில் உள்ள ‘ரூப’ என்பதன் மருவு. என் நண்பரின் பெண்ணின் பெயர ‘ரூபா’. உருவத்தைப் பொறித்து நாணயத்தை வெளியிட்டதால் அதை ‘ரூபாய்’ என்று இன்றுவரை சொல்கிறோம்.
‘உரு’ என்பதன் மற்ற பொருள் —
பெரிய, நீண்ட, தோணி, ஒரு நோய் – என்று 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி சொல்லும் .
சுமேரியாவில் ஊர்,கிஷ் (CITY STATES UR, KISH IN SUMER)
ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோர் பெரும்பாலும் சாயன பாஷ்யத்தைப் பின்பற்றிவிட்டு இடை இடையே தங்களுடைய ‘விஷம’ , ‘விஷ’ கருத்துக்களையும் ஊன்றிவைத்துள்ளனர். ஆனால் தற்கால ஆராய்சசிகள் அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டன .
ரிக் வேதம் 6500 ஆண்டுகள் பழமையானது என்பது பாலகங்காதர திலகர், ஹெர்மன் ஜாகோபி ஆகியோரின் முடிபு. மாக்ஸ்முல்லர் இது கி.மு 1500 அல்லது அதற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்கிறார். அவரைப் புரட்டிப் புரட்டி அடித்த விண்டர்நிட்ஸ், வில் சன் ஆகிய எல்லோரும் கி.மு 2000 அல்லது அதற்கும் முன் என்றனர்.எது எப்படியாகிலும் இதுவே சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது பி.கே சட்டோபாத்யாயா எக்பர்ட் ரிக்டர் உஷனஸ் ஆகியோரின் துணிபு.
எக்பர்ட் ரிக்டர் உஷனஸ் எழுதிய புஸ்தகத்தில் ஊர், கிஷ் முதலிய சுமேரிய நகரங்களில் கிடைத்த சிந்துவெளி முத்திரைகள் வேத மந்திரங்களின் வாசகம் என்பார் .அதை ஏற்காதவர்களும் ரிக் வேதத்தில் உள்ள உரு , க்ஷிதி = ஊரு கிஷ் என்பதை முழு அளவு விளக்க முடியாமல் திணறுகின்றனர். இதோ ரிக் வேத மந்திரம் —
ரிக் வேதம் 7-100-4
திருப்பாவையிலும் , ஆழ்வார் பாசுரங்களிலும் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று விஷ்ணு புகழப்படுகிறார் . அதாவது சின்ன பிராமணப் பையன் வடிவில் வாமனனாக வந்த விஷ்ணு, உருவத்தில் வளர்ந்து ‘த்ரி விக்ரமன்’ ஆனார். அப்போது அவர் அளந்த மூன்று அடி விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இந்தக் கவிதையிலும் RV 7-100-4 வருகிறது
“இந்த விஷ்ணு, மனுவுக்கு இருப்பிடத்தை அளிக்க விரும்பி இந்த பூமியை மூன்று அடியால் அளந்தான். அவனைத் துதிக்கும் மக்கள் நிலையாக வாழ்கிறார்கள் . அவர் மக்களுக்காக பெரிய வீடுகளை செய்தார்” . .
இங்கே மொழி பெயர்ப்பில் வரும் ‘பரந்த மனை’ என்பது சாயனரின் மொழிபெயர்ப்பு. சம்ஸ்கிருதத்தில் உள்ள அதற்கான சொல் ‘உரு க்ஷிதி’ ; இது ஊர் , கிஷ் என்பதன் மருவு. இப்போது இராக் என்று நாம் அழைக்கும் இடத்தின் பழைய பெயர் மெச பொட்டேமியா . அதன் கீழ் பகுதி சுமேரியா . அங்கு இந்துக்கள் என்று வசிக்கத் துவங்கினர் என்பது சிந்து- சரஸ்வதி தீர முத்திரைகளாலும், அங்கு கிடைத்த தேக்கு மரத் துண்டுகளாலும் தெரிகிறது.
மேலும் ஒரு துதி — ரிக் 9-84-1
“சோமனே! தேவர்களை மகிழ்விப்பவனும் , விறுவிறுப்பானவனும் ஆன நீ பாய்ந்து வா. இந்திரனுக்காகவும் வருணனுக்காகவும் வாயுவுக்காகவும் பாய்ந்து வா. எங்களுக்கு பரந்த நிலத்தை மகிழ்ச்சியுடன் தருக . அந்த யக்ஞத்தின் பரந்த நிலத்திற்கு தேவர்களை அழை” .
இங்கும் ‘பரந்த நிலத்தில்’ எல்லோரும் சந்திக்க வேண்டப்படுகிறது. இதற்கான சம்ஸ்கிருதத் சொல் ‘உரு’.
இதையெல்லாம் கூட எல்லோரும் இரு பொருள்பட மொழி பெயர்த்துவிடலாம் ; பத்தாவது மண்டலத்தில் வரும் கவிதையை எவரும் மாற்ற முடியாது. அங்கு உரு க்ஷய வருகிறது
ரிக் RV 10-118-7/8/9
“அக்னியே , உன் அழியாத சுவாலையால் ராக்ஷசர்களை எரித்துவிடு; சனாதன விதிகளை பாதுகாக்கும் நீ சுடர் விட்டுப் பிரகாசி ;
அக்கினியே பரந்த இடத்திலே பிரகாசிக்கும் நீ, உன் ஜோதியால் யாதுதானிகளை சாம்பலாக்கு” .
யாதுதானி =அரக்கி , ராக்ஷஸி
இந்த இடத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் நீ உருக்ஷ்யர் களினிடையே பிரகாசிக்கிறாய் என்று எழுதுகின்றனர்.
அடுத்த மந்திரத்தில்
“நீ மனித இனத்தில் மிகவும் போற்றப்படுகிறாய். நீ அவர்கள் தரும் அவி ஸை தேவர்களுக்கு எடுத்துச் செல்கிறாய். உன்னை உ ருக்ஸயர்கள் பொரித்த துதிக்கின்றனர்” .
இந்த மந் திரத்தில் உருக்சயர்களை பாடகர் என்றும் அரசன் என்றும் பல மொழி பெயர்ப்பாளர்கள் பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்வார்கள்.
XXXX
எப்போதும் நாம் சொல்லும் வியாக்கியானத்துக்கு கூடுதல் சான்றுகள் தேவை.
இதை ஊர் , கிஷ் (CITY STATES URU AND KISH) என்ற இரண்டு சுமேரிய ராஜ்யங்களை தொடர்பு படுத்திப் பேச நமக்கு அங்கு கிடைத்த தேக்கு, சிந்து-சரஸ்வதி நாகரீக முத்திரைகள் உதவுகின்றன. என்னுடைய ஆராய்ச்சி பல மன்னர்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதைக் காட்டுகின்றன
XXXX
லண்டன் சுவாமிநாதன் ஆய்வு
Kish கிஷ் ராஜ்யம்
Enmebaragesi – Kesi suffix is very common India ; even Maoris of New Zealand had Uru kesi as a name. we have Neelakesi , Rishikesi etc. he ruled kish in 2650 BCE
‘கேஸி’ என்று முடியும் பெயர்கள் நீல கேசி, ரிஷி கேச முதலியன ;நியூசிலாந்து நாட்டில் மயோரி பழங்குடி மக்களும் ‘உரு கேசி = அழகிய முடி’ என்ற பொருளில் பயன்படுத்துவதை ஆர்யதரங்கிணி நூலில் ஏ. கல்யாணராமன் காட்டியுள்ளார்
Agga is the next king we know of. It is Aja whom we find in Raghuvamsam of Kalidasa and puranas.
அக்கா – அஜ என்ற மன்னன் ராமனுக்கும் முன்னால் இருந்த சூர்ய குல மன்னன். காளி தாசனால் ரகு வம்ச காவியத்தில் அழகாகப் போற்றப்பட்டவன் .
Ur nanshe ruled in 2500 BCE
நஞ்ச என்பது நன்னன்/ சந்திரன் ஆக இருக்கலாம். பல சுமேரிய பெயர்களில் நன்னா உண்டு
Ur in Sumerian means dog as well. But here it may be his town – Ur
உர் என்றால் சுமேரிய மொழியில் நாய் என்ற பொருளும்; உண்டு சம்ஸ்கிருதத்திலும் ‘குர்’ ரம் உண்டு
Tamil poets are called with their town names in Sangam literature.
ஊர் என்பதை முன்னொட்டாக பயன்படுத்துவதை சங்கப் புலவர் பெயர்களிலும் காணலாம். மதுரை, கருவூர், உறையூர் என்ற ஊர் பெயர்களுக்குப் பின்னர் புலவர் பெயர் வரும்
Then we have Akul – shiva’s name followed by 5 names with Natum . it may be Nathan like my name swami Nathan.
அகுல் , ஆகுல – சிவன் பெயர்
xxxx
ஊர் ராஜ்ய மன்னர்கள் (CITY STATE UR)
ஊர் = புரம் =புரி
நாகபுரி = நாக்பூர் ; ஜெயபுரி = ஜெய்ப்பூர்
Kings of Ur
First king is
Ur Nammu – 2112 BCE
ஊரு நம்மு
Shulgi 2094 BCE
சுளகி
Then we have three Sanskrit names
Sin is Chandra / moon in Sumerian ; I read it as sena ; Mahabharata has many sena names
மிகவும் தெளிவான சம்ஸ்கிருதப் பெயர்கள்
We have Ramachandra, Kaushik Chandra, Ravi Chandran and many more chanders
ராம சந்திரன், சரத் சந்திரன், கௌஷிக் சந்திரன், ரவிச் சந்திரன் என்ற பெயர்களை நாம் இன்றும் வைக்கிறோம். சில சுமேரிய பெயர்களில் சந்திரன் முதலில் வருகிறது. அதையும் நாம் சந்திர சேகரன் , சந்திரமோகன், சந்திரகாந்தா என்ற பெயர்களுடன் ஒப்பிட முடிகிறது
In Sumer we have
Amar sin – 2046 BCE அமர சேனன் அல்லது சந்திரன்
Shu sin – 2037 BCE சு சேனன் அல்லது சு சந்திரன்
Ibbi sin – 2026 BCE ரவி சேனன் அல்லது ரவிச் சந்திரன்
‘சின்’ (SIN) என்பது சுமேரிய மொழியில் சந்திரன்.
ஆனால் மஹாபாரத மன்னர் பெயர்கள் சேன (SENA) என்று முடிவதால் நான் சேன என்று எழுதுகிறேன்
I gave only the kings who ruled 4000 years ago.
இவை அனைத்தும் 4000 ஆண்டுக்கு முந்தையவை. இதற்குப் பின்னர் 3500 ஆண்டுகளில் தெளிவான, சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் உள .
எ .கா – தசரத, பிரதர்தன
So there is no doubt that they were Hindus who went there and settled and ruled. Later Mitannian kings have very pure Sanskrit names from 1400 BCE.
ஆகையால் அவர்கள் இந்துக்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை
முதலில் அங்கு போனவர்கள் அமைதியாகக் குடியேறியதையும் பின்னர் அவர்களை அசிரியர்கள் ASSYRIANS/ அசுரர்கள் தாக்கியவுடன் அவர்களை நாம் திருப்பித் தாக்கியதையும் ரிக் வேதப் பாடல்களில் காணமுடிகிறது.
ரிக் வேதத்தின் ஏழாம் மண்டலம் காலத்தால் முந்தியது. பத்தாம் மண்டலம் பிந்தியது. அங்கு தாக்குதல், எரித்தல் , அழித்தல் சொற்களைக் காணலாம். முதலில் அவை இல்லை. அசீரிய மன்னர்கள் தங்களை அசுரர் (ASUR) என்றே அழைத்துக் கொண்டனர். ஆக ரிக் வேதம் சொல்லும் அசுரர், ராக்ஷஸர்கள் சுமேரியாவில் நம்மைத் தாக்கியவர்களே என்பதும் தெளிவாகிறது; .ரிக் வேதம் என்பது 500 ஆண்டுக் ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்ட கவிதைகள் என்பது ஆன்றோர் கருத்து. தமிழ்ச் சங்கக் கவிதைகள் 2500ம் சுமார் 400 ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்டவை
கீழ்கண்ட எனது பழைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன் :
சுமேரிய | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சும…
4 Dec 2019 — … this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com … சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்!
சுமேரிய மருத்துவம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சும…
2 Nov 2019 — Tagged with சுமேரிய மருத்துவம். சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும் (Post No.7168) … https://tamilandvedas.com › tag › புத்தர்-நோ…
Swami’s Indology Blog: ‘மூன்றில் இரண்டு …
swamiindology.blogspot.com › post-…
2 Feb 2019 — 10 Oct 2014 – இப்போது மேற்காசியாவில் உள்ளசுமேரிய பாபிலோனிய … சுமேரியாவில் களிமண் ஏடுகளில் … https://tamilandvedas.com/2014/05/13/%e0%ae%9a …
11 May 2014 — Picture of Eagle headed genie from Assyria 883 BCE. There are 60,000 lines on clay tablets in chaste Sumerian ’emegir’ and another 60,000 …
19 Sept 2020 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com I wrote about Sumukan Mystery six year ago. Now I have got …
2 Aug 2015 — (I have already shown that even the most popular Valentine day symbol of an ‘arrow piercing the heart’ is from the Atharva Veda). bes. image of …
18 Nov 2014 — God Baal of Sumer ( Indra of Sumer) Research paper written by London … of clay which is then brought to life is another image of creation.
Posts about Sumer written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; thanks. Rig Veda, the oldest book in the world, contains references to …
31 Oct 2019 — 7159 Pictures are taken from various sources; beware of copyright … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … I have chosen 30 Sumerian Proverbs which are similar to Indian …
31 Oct 2019 — Posts about Sumerian Proverbs written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …
14 Sept 2014 — He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps …
–subham–
TAGS- சுமேரியா , இந்து தாக்குதல், உரு, ஊர், கிஷ், உருக்ஷிதி , ரிக் வேதம்