INDEX 45 FOR LONDON SWAMINATHAN’S AUGUST 2016 ENGLISH & TAMIL ARTICLES (Post. 9169)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9169

Date uploaded in London – –20 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

INDEX 45- AUGUST 2016

List of Tamil Posts

வேதநாயகம் பிள்ளையின் விநோதக் கடிதம் (post No.3106);31 ஆகஸ்ட் 2016

இந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள்?

நாகரீக வளர்ச்சியா? பின்னடைவா? (Post No.3103);30/8

பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல் (Post No.3105);30/8

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101);29/8

கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)

விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்? (Post No.3096);27/8

மறைந்து போன வேதங்கள்! (Post No.3093);26/8

புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!! (Post No.3090);25/8

தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089);24/8

தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்! (Post No.3085);23/8

சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)22/8

கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன் (Post No.3082)22/8

நான் பெருந்தமிழன்: பூதத்தாழ்வார் பெருமிதம்!! (Post No.3080)21/8

தாய்தன்னை அறியாத கன்று இல்லை! கம்பன் உவமை நயம்!! (Post No 3079);21/8

மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077);20/8

அஷ்ட லெட்சுமி கதை: ஒன்று வாங்கினால் ஏழு இலவசம்! (Post No.3075);20/8

எதிரியைக் கொல்லும் தமிழ் மொழி!(Post No.3074);19/8

தீர்த்த யாத்திரை அவசியமா? (Post No.3072);19/8

உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை! (Post No.3070);18/8

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068);17/8

அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்! (Post No.3066);16/8

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065);15/8

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064);15/8

துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061);14/8

5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்! (Post No.3058);13/8

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057);13/8

வால்டேர், வெப்ஸ்டர் தப்பித்த விதம்! சூடான பதில்கள் (Post No.3054);12/8

மோடி ‘டீ’ விற்றார்; லிங்கன் விஸ்கி விற்றார்!!- சூடான பதில்கள் (Post No.3051)11/8

மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3 (Post No.3048)

வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!! (Post No.3046);9/8

உங்களுக்கு 10, 9, 8, 7, 6 5, 4, 3, 2, 1 தெரியுமா? (Post No.3044);8/8

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்!-Part 1 (Post No.3042)7/8

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்! (Post No.3040)6/8

புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON (Post No.3037)5/8

கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)4/8

முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்! (Post No.3031)3/8

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)5/8

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)2/8

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026);1 ஆகஸ்ட் 2016

S NAGARAJAN’SS TAMIL  POSTS; ALREADY INDEXED-3087, 3062,3059, 3039, 3034, 3030, 3025

XXXXXXXXXXXXX

ENGLISH POSTS

Where is the need for a shield if you have patience? (Post No.3108);31 August  2016

Poverty Anecdotes (Post No. 3104);30/8

How many Law Books Hindus have? Why? (Post No.3102);29/8

Teacher teaches you only 25%- Hindu concept of Education (Post No. 3099);28/8

How much is Queen’s Letter worth? Shrewdness Anecdotes – Part 4 (Post No. 3097);27/8

Who Invented Holidays? 8 Days a Month? (Post No.3095)27/8

Disappearing Hindu Vedas (Post No.3095);26/8

Never run after your Hat! Shrewdness Anecdotes – Part 3 (Post No.3094);26/8

Four More Shrewdness Anecdotes (Post No.3092)25/8

Strange Caste Customs in Cochin and Travancore (Post No. 3091);25/8

Rabelais and Shrewdness Anecdotes (Post No.3088);24/8

List of Tamil Kings who performed Yagas and Yajnas -Post No. 308623/8

Tamil King’s Rajasuya Yagna! (Post No.3084);23/8

Part 6 – Comparative Proverbs about Different Castes (Post No.3081)22/8

Interesting Quote about WIFE in the Indian Epic (Post No.3078);21/8

Part-5: Anti- Weaver,Tanner, Scavenger Proverbs (Post No.3076);20/8

Is Pilgrimage Necessary? (Post No.3073);19/8

Proverbs on Oil Sellers, Tailors, Washer men and Fishermen (Post No.3071);18/8

HINDU GODS IN TAMIL BIBLE! (Post No.3069);17/8

Demolishing Dravidian Demon Theories! (Post No.3067);16/8

Anti-Barber, Goldsmith, Potter, Blacksmith, Carpenter Proverbs (Post No.3063);15/8

Tamil Taste and Sanskrit Taste! (Post No.3060);14/8

Sheridan, Disraeli, Crucifixion: Quick Thinking Anecdotes! (Post No. 3056);13/8

Proverbs against Kayasth and the Jats(Post No.3055);13/8

Voltaire and Webster: Quick Thinking Anecdotes (Post No.3053)#

Abraham Lincoln and Mark Twain–More Quick Thinking Anecdotes (Post No.3050);10/8

Quick thinking Anecdotes (Post No.3049);10/8

 Black Antelope in Manu: Strange Facts- Part 3 (Post No.3047)

Proverbs against Brahmins and Baniyas- Part 1 (Post No.3052)

Black Hole in Manu!! Wonderful and Strange Facts in Manu Smrti – Part -2 (Post No.3045);8/8

‘Save the Trees’ and ‘Save the Forests’ in Manu Smrti!(Post No.3043);7/8

Wonderful and Strange Facts in Manu Smrti (Post No.3041)6/8

Black Money and White Money in Sanskrit Literature! (Post No.3038)5/8

Two Types of Thieves (Post No.3035)4/8

Village Well is Ladies Club in India! (Post No. 3032)3/8

What is Agni Cayana? 10,800 Bricks in Five Layers!! (Post No.3029)2/8

Space Shuttle in Hindu Literature! (Post No.3027)1 AUGUST 2016

—-SUBHAM—-

tags-  Index 45, Swaminathan,August 2016

பாஸ்வரம் – உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 1 (Post.9168)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9168

Date uploaded in London – –20 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 29 மூலகம் பற்றி அறிந்தோம் . இன்று முப்பதாவதாக பாஸ்வரம் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.

பாஸ்வரம் (PHOSPHORUS)என்ற சம்ஸ்கிருதச்  சொல் கிரேக்கம், லத்தின் முதல் ஆங்கிலம் வரை எல்லா மொழிகளிலும் இருக்கிறது ‘முதா கரத்த மோதகம்’ என்ற கணேச பஞ்சரத்ன ஸ்லோகம் முதல் பல சூரிய துதிகளில் ‘பாஸ்வரம்’ வருகிறது. வெளிச்சம், சூரியன், ஒளி என்ற பொருள் கொண்ட சொல். இதே பொருள்தான் பாஸ்வரம் என்ற மூலகத்தின் பொருள். காற்றில் சிறிது நேரம் வைத்தால் தீப்பிடித்துவிடும். இது மஞ்சள்/வெள்ளை பாஸ்வரம் . இதைத் தீப்பிடிக்காமல் வைக்க சிவப்பு பாஸ்வரமாக்கி தீப்பெட்டி, தீக்குச்சி, மத்தாப்பு, பட்டாசு முதலியவற்றில் பயன்படுத்துவர் .

இரண்டாவது சுவையான விஷயம்

இதை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்தியதாகும் . அந்தக் காலத்தில் இந்தியர்கள் தயாரித்த துணிகளையே , பயன்படுத்த வேண்டும் என்று சுதந்திர வீரர்கள் வேண்டு கோள் விடுத்தநர். அ தைக் கேளாமல் சிலர் வெளிநாட்டுத் துணிகளை விற்றனர். அத்தகைய பிரிட்டிஷ் ஆதரவு துணிக்கடைகளில்  துணிகளை எரிக்க விடுதலை வீரர்கள் அந்த துணிக்கடைகளில் பாஸ்வரத்தை வைத்து விடுவாராம். அன்றிரவு கடைகள் தீப்பற்றி எரியும் என்பதைச் சொல்லத்  தேவையில்லை.

இன்னொரு சுவையான மொழியியல் விஷயம் ‘வ’ என்பது ‘ப’ ஆக மாறும். நாம் ‘வங்கம்’ என்றால் வங்காளிகள் ‘பெங்கால்’ என்பர். அவர்கள் பிரணா’ப்’ குமார் முகர்ஜி என்றால் நாம் அழகாக பிரண’வ’ குமார என்போம்.இதேபோல ஆங்கிலத்தில் பாஸ்’ப’ரஸ் என்பர். நாம் அதை பாஸ்’வ’ரம் என்போம் ‘பரஸ்’ – ‘வரம்’ ஆகும். இதை மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவனும் பயன்படுத்தினான். ‘பாபி’ என்ற சம்ஸ்கிருத சொல்லை அவன் ‘பாவி’ என்று குறளில் மாற்றுகிறான்.

பாஸ்வரம் உடலுக்கும் தேவை; நிலத்துக்கும் தேவை.நமது உடலுக்கு ஏன் தேவை ?

எலும்பும் பல்லும் வளரத் தேவை . மற்றும் பல பணிகளை செய்யும் உடல் என்சைம்,  டி என் ஏ DNA ஆகியவற்றுக்கும் தேவை .

நிலத்துக்கு ஏன் தேவை?

தாவரங்கள் வளருவதற்கு பொட்டாசியம் நைட்ரஜன் , பாஸ்வரம்  அவசியம். பாஸ்வரம்  அதிகம் இல்லாத நிலங்களில் தாவரங்கள் போதுமான வளர்ச்ச்சியில்லாமல் சிறுத்துப் போகும். விதைகளும் பலம் குன்றிப் போகும் . அறுவடையும் குறையும். இதற்காக பாஸ்பேட் உரங்கள் அவசியம் . இயற்கையான பாஸ்பேட் உரம் உண்டாக்க தேவையற்ற மக்கிப்போன தாவரப் பொருட்களுடன் பாஸ்பேட் தூ ளைச்  சேர்த்தும் இதைத் தயாரிப்பார்கள்.

xxxx

ஒரு எச்சரிக்கை 

எந்த மருத்துவக் கட்டுரையைப் படித்தாலும் அதிலுள்ள மருத்துவ விஷயங்களை டாக்டர்களைக் க லந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது. இதை என் எழுதுகிறேன் என்றால் நிலத்துக்குப் போடும் பாஸ்பேட் வேறு. உடலுக்குத்   தேவைப்படுவோருக்காக விற்கும் பாஸ்பேட் மாத்திரைகள் வேறு .

குழந்தையின் வளர்ச்சிக்கு போதுமான அளவு உடலில் பாஸ்வரச் சத்து இல்லையென்றால் டாக்டர் சொல்லுவார். அவர் சொல்லிய அளவுப்படி தாய் எடுக்கலாம் .

இனி ரசாயன விஷயங்களைச் சொல்கிறேன்

இது உலோகமல்ல (non-metal) . இது ஒரு உப்பு. இது மஞ்சள்/வெள்ளை  , சிவப்பு, கருப்பு என்று மூன்று வகைப்படும். வெள்ளை என்பதை சாதாரணமாக காற்றில் வைத்தாலேயே மஞ்சள் நிறமாகி எரியத் துவங்கிவிடும் ஆகையால் அதை நீருக்குள் வைத்திருப்பர்

ரசாயன குறியீடு P

அணு எண் 15

உருகு நிலை – 44 டிகிரி சி / வெள்ளை பாஸ்வரம்

கொதிநிலை – 280 டிகிரி சி / வெள்ளை பாஸ்வரம்

வெள்ளை பாஸ்வரம் அதிக விஷம் உடைய மூலகம் .

வெள்ளை பாஸ்வரத்தை பலநாட்களுக்கு மூடிய கலத்தில் வைத்து சூடாக்கி சிவப்பு பாஸ்வரத்தை உண்டாக்குவர் . அதிக அழுத்தம் கொடுத்தால் கிடைப்பது கருப்பு பாஸ்வரம். மின்சாரத்தைக் கடத்தும் சக்தி கொண்டது.

 பாஸ்வரம் – 31 என்ற கதிரியக்கம் இல்லாத  ஐசடோப் கிடைக்கிறது இதை வெள்ளை பாஸ்வரம் -32 என்ற கதிரியக்க பாஸ்வரமாக மாற்றி ஆராய்சசிகளில் பயன்படுத்துவர்

பா கிடைக்கும் நாடுகள்

ரஷ்யா , அமெரிக்கா , மொராக்கோ , டுனிஷியா , டோகோ, நவூரு

வெள்ளை பாஸ்வரம் இருக்கும் உணவுப் பொருட்கள்

இறைச்சி ,  முட்டை , பால், சீஸ் என்னும் பாலாடைக்கட்டி, சூரியகாந்தி விதைகள் , பூசணி விதைகள், கோழிக்கறி.

xxxx

மூத்திரத்தில் பாஸ்வரம் !! கண்டுபிடித்தது யார் ?

1669ம் ஆண்டில் ஜெர்மனியில் ஹென்னிக் பிராண்ட் (Hennig Brandt) என்பவர் இதை மூத்திரத்தை ஆவியாக்கி கண்டுபிடித்தார்

‘வேலையில்லாத அம்பட்டன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்’ என்பது தமிழ் பழமொழி . அதுபோல பிராண்ட் , முத்திரத்தைக் காய்சும்போது தங்கிப்போன கசடை ஆவியாக்கி குளிரவைத்தார் பாஸ்பரஸ் கிடைத்தது. மஹா சந்தோஷம் .

ஈயத்தையும் இரும்பையும் தங்கமாக்கும் ரசவாதக் குளிகையைக் (Philosopher’s Stone) கண்டுபிடித்ததாக நம்பி யாருக்கும் சொல்லாமல் ரஹஸ்யம் காத்ததார் .பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக டேனியல் கிராப்ட் என்பவரிடம் விற்றார். அவர் அதை ஐரோப்பா முழுதும் தம்பட்டம் அடித்துப் பெயர் பெற்றார். குங்கல் என்ற ஜெர்மனியருக்கு ரஹசியத்தைச் சொல்லிதருவதாக விலை பேசினார். அவர் கேட்ட விலையைத் தராமல் தானே பாஸ்வரத்தை உண்டாக்கத் தெரிந்துகொண்டார். பிறகு காப்ரெய்ட் லீப்னிட்ஸுக்கு சொல்லிக் கொடுத்து காசு வாங்கினார் . இப்படிப் பதுங்கிப் பதுங்கி வேலை செய்ததால் ஏனைய மூவரும் தாங்களே இதைக் கண்டுபிடித்ததாகப் பெருமை அடித்துக் கொண்டனர் .

இரண்டாவது பகுதியில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தின் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரக் கணக்கான  பொது மக்களைக் கொன்று குவித்த வன்செயலையும் இந்த மூலகத்தின் பொருளாதார, மருத்துவ, உணவு, போர் உபயோகங்களையும் காண்போம்.

HAMBURG DESTROYED BY PHOSPHORUS BOMBS

To be continued………………………………………………

TAG- பாஸ்வரம்

Let us Laugh; More Jokes from Kattukuty (Post No.9167)

Compiled  BY KATTUKKUTY

Post No. 9167

Date uploaded in London – – 20 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Here are more jokes from Kattukuty collection which is over 50 years old.

tags– kattukuty jokes 

எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன? புராணத்துளிகள் : 3-ம் பாகம் (9166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9166

Date uploaded in London – –20 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 1 : கட்டுரை எண் 9119 வெளியான தேதி 9-1-2021; அத்தியாயம் 2 கட்டுரை எண் 9123 வெளியான தேதி 9-1-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 3

ச.நாகராஜன்

7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன?

கருடனை நோக்கி திருமால் கூறுவது : “எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியது. ஆகவே அந்த தானியம் மிகவும் பரிசுத்தமானது. எள் இரு வகைப்படும். ஒன்று கறுப்பு நிறமுள்ள எள். இன்னொன்று வெள்ளை நிறமுள்ள எள். இதில் எதை தானங்களோடு சேர்த்துக் கொடுத்தாலும் அது சிறப்புடையதே. சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதிருக்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். தர்ப்பைப் புல்லானது ஆதியில் ஆகாயத்தில் உருவாயிற்று. அந்த தர்ப்பைப் புல்லின் இரு கோடிகளில் பிரமனும் சிவனும் வாசம் செய்ய நடுவில்  ஸ்ரீ ஹரியானவர் வாசம் செய்கிறார். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் உள்ளிட்ட கர்மங்கள் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்னிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மால்ய தோஷம் என்பது கிடையாது.

                                              – கருட புராணம்

8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?

ஸ்ரீமத் பாகவம் முதலாம் ஸ்கந்தத்தில் பரீக்ஷித் மஹாராஜாவின் ஜனனம் பற்றிய 12ஆம் அத்தியாயத்தில் வருவது இது.

அந்தணர்கள் பலர் தர்மபுத்திரரைச் சந்தித்து பரீக்ஷித்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பல விசேஷ பலன்களைக் கூறி விட்டு வெகுமதி பெற்றுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர்.

அந்த அந்தணர்களால் பல்வேறு குணங்கள் எல்லாம் கூறப்பட்ட உத்தரையின் புதல்வன், பரீக்ஷித் என்று உலகில் புகழ் பெற்றான், ஏனெனில், திறமையெல்லாம் அமைந்த பிரபுவாகிய அவன், தாய் வயிற்றில் இருக்கும் போது, தான் கண்ட பரம புருஷனை (ஸ்ரீ  கிருஷ்ணரை) தியானம் செய்து கொண்டு இவ்வுலகத்தில் மனிதர்களுக்குள்  அந்த பரம புருஷன் இருக்கிறானா என்று தேடிக் கொண்டே இருந்தான். அங்ஙனம் தேடிப் பார்த்து  ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரம புருஷன் என்று நிச்சயித்தான். ஆகவே இவன் பரீக்ஷித் என்று உலகமெங்கும் புகழ் பெற்றான்,

(அதாவது தான் கருப்பையில் இருக்கும் போது கண்ட புருஷன் எவனாய் இருப்பான் என்று பரீக்ஷை செய்து கொண்டே இருந்ததால் அவன் பரீக்ஷித் என்ற பெயரைப் பெற்றான் என்பது பெறப்படுகிறது.)

9) திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?

ஸ்ரீமத் பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயத்தில் வருவது இது.

விதுரன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து திருதராஷ்டிரனுக்குக் கூறிய இறுதி அறிவுரை :-

“ராஜனே! இந்த இடத்திலிருந்து சீக்கிரம் நீர் புறப்படுவீராக. நமக்குச் சமீபத்தில் நெருங்கி வந்திருக்கும் பயத்தைப் பற்றி ஆலோசிப்பீராக. எவ்வகைக் காரணத்தினாலும் எப்பொழுதும் எதற்குத் தடை செய்ய முடியாதோ அப்படிப்பட்டதும், பகவானுடைய ஆக்ஞைப்படி மாறாமல் நடப்பதும் ஆகிய மரண காலம் நம் எல்லோருக்கும் இதோ சமீபத்து வந்திருக்கிறது. இதோ, தோன்றுகின்ற உயிர்கள் எல்லாம் மரண காலம் நெருங்கி வரப் பெறின் மிகுதியும் பிரியத்திற்குரிய உயிரை விட்டுப் பிரிந்து போகப் பெறுமென்றால், உயிரைத் தொடர்ந்து மற்ற செல்வம் உள்ளிட்ட அனைத்தும் விடுபட்டுவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட காலம் நமக்கு இப்போது வெகு அருகில் வந்துள்ளது. உமது தந்தை, உமது உடன் தோன்றல், நண்பர்கள், புதல்வர்கள் ஆகிய இவ்வனைவரும் மரணம் அடைந்தார்கள். வாலிப வயதும் போய் விட்டது. சரீரமும், கிழத்தனத்தால் மூடப்பெற்று விட்டது. ஆயினும் உயிர் வாழ்வதற்காக எதிரியின் வீட்டை அடுத்திருக்கின்றீர்! ஆ! என்ன ஆச்சரியம் இது!! உயிர்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற  விருப்பம் மென் மேலும் எல்லையில்லாமல் வளர்ந்து வரும் தன்மையது. நீர் அந்த ஆசையினால் அல்லவோ, பீமன் அவமதித்துக் கொடுத்த பிண்டத்தையும் வாங்கிப் புசித்து விட்டு, வீட்டைக் காக்கும் நாய் போல விழுந்து கிடக்கிறீர்!̀…

எவன் ஒருவன் தன் புத்தியினால் இந்த சம்சாரத்தின் மீது வைராக்கியம் உண்டாகப் பெற்று இந்திரியங்களை ஜெயித்து தன்னையே பற்றி இருப்பவரது சம்சார பந்தத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு பிள்ளை, பெண்டிரது வீட்டை விட்டுப் போவானோ அவனே மனிதர்களுள் சிறந்தவன். ஆகவே, நீர் வடதிசையை நோக்கிச் செல்வீராக!”

***

tags– எள், தர்ப்பை, புராணத்துளிகள்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 27 (Post No.9165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9165

Date uploaded in London – –19 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -27

3-2-126

Laghu –Light

லகு – இலகுவான , லேசான

Lavate— Float/தெப்பம்

வல்லம் – படகு –

xxx

3-2-129

Vayas— Vayathu வயது

Vayas —V/age; Also AYUSH/Age ஆயுள்

Sakti –Skill, capacity to do

Sakti is used in most of the Indian languages.

சக்தி – விசை

Xxx

3-2-132

Suu– Juice, squeeze

Suu– chew, get the juice out of it.

சாறு பி ழி

Old English ceowan “to bite, gnaw, chew,” from West Germanic *keuwwan (source also of Middle Low German keuwen, Dutch kauwen, Old High German kiuwan, German kauen), perhaps from PIE *gyeu- “to chew” (source also of Old Church Slavonic živo “to chew,” Lithuanian žiaunos “jaws,” Persian javidan “to chew”).

இந்த வழியில் பார்த்தாலும்  ஸம்ஸ்க்ருத தொடர்புடையதே ‘ஜம்ப’ என்றால் தாடை என்று பொருள்.

xxxxx

3-2-133

Arha — Fit to

In Tamil Arukathai

அருகதை

Xxx

3-2-136

Ishnu ending is interesting.

12 words are given as examples; few of them

Rosishnu, varthishnu, sarishnu

It sounds like Malayalam present tense

Atikkunnu/ beating, kazikkunnu/eating etc

But the meanings and grammar are different.

இஷ்ன்னு — வில் முடியும் 1 சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மலையாள த்தில் ‘ன்னு’ என்பது நிகழ்கால முடிவு. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒரு செயலைச் செய்கிறவன்

In Panini it meant one who does something – verbal noun

சப்த அளவில் மட்டுமே ஒற்றுமை

Xxx

3-2-138

In the commentary comes Lohita Chandana/ red sandal

L= r

Rohita= red

Chandana – saanthu, saantham in Tamil

ரோஹித சந்தன – செஞ்சந்தனம்

சந்தனம் தமிழ்ச் சொல்

xxxx

3-2-139

Glasnu – one who is tired

Kalaippu in Tamil is tiredness களைப்பு

Xxxx

DRUIDS IN STONEHENGE, ENGLAND

3-2-140

Grusnu- greedy man

Grus- greed

Dhrusnu – bold

It is related English names

Andrew -Drew

“Andrew” is frequently shortened to “Andy” or “Drew”. The word is derived from the Greek: Ἀνδρέας, Andreas, itself related to Ancient Greek: ἀνήρ/ἀνδρός aner/andros, “man” (as opposed to “woman”), thus meaning “manly” and, as consequence, “brave”, “strong”, “courageous”, and “warrior”.

ஆண்ட்ரு , ட்ரு என்பன தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த பெயர்

ஆண் என்ற கிரேக்க மொழிச் சொல் தமிழில் இருந்து கிரேக்க நாட்டுக்குச் சென்றது. த்ருஷ்ணு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு துணிச்சல் மிக்க என்று பொருள். ட்ருய்ட் என்ற மர்மம் மிக்க பழங்குடி மக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கும் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.

ட்ருய்ட் என்பதை திராவிடர் என்போரும் உளர்

An – aan in tamil mean man, manly/aanmai

Drew in Irish mean descendant of Druids .

Druids are

Drew (/druː/) is both a surname and a given name. As a surname, it is derived from the Irish Ó Draoi, literally meaning “Descendant of the Druid”.[1] As a male given name, it is a shortened version of Andrew.

In short Drew and Andrew are Tamil- Sanskrit hybrid ords.

Bold man – An Drew

So neither greek is indo European nor tamil is Dravidian

நான் 50-க்கும் மேலான தமிழ்ச் சொற்களை இதுவரை பட்டியலிட்டு கிரேக்க மொழி தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிறந்தது என்று காட்டியுள்ளேன்.

So far I have listed over50 tamil words in ancient Greek; all other Greek words are from Sanskrit

DRUIDS IN STONE HENGE IN ENGLAND

Xxxx

3-2-142

There are 30 examples with 30 verbs to explain this sutra.

Out of the 30 erbs or verbal nouns, we get familiar words used throughout india

For the list, look at these words

Yogi, Thyagi, Viveki, Drohi, Abhachari, Paridevi / parithaapi

இந்த சூத்திரத்தை விளக்குவதற்கு 30 வினைச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாம் சர்வ்சாதாரணமாகப் பயன்படுத்தும் சொற்களும் ஆக்கப்பட்டிருக்கின்றன .

எ கா. யோகி, தியாகி, துரோகி, விவேகி அபசாரி, பரி தேவி /பரிதாபி

English connection

Yogi- yoke

Drohi – traitor

Xxx

3-2-150

Gruth – greed

Jwal – fiery; jewel

3-2-153

Kamra yuvathy – likeable young girl

Kamana yuvathy –  —-do—

கமரா யுவதி, கமன யுவதி- ஆசையை உண்டாக்கும் பெண் , விரும்பத் தக்கவள்

யுவ – இளம்

கமரா- காம/ஆசை/விருப்பம்

Yuva – youth, young

Kama – kaama

Used through out ancient tamil literature

சங்கத் தமிழ், திருக்குறளில் காம என்பது மிகவும் பயன்படும் சம்ஸ்கிருதத் சொல்

Xxx SUBHAM XXXX

TAGS- TAMIL WORDS IN PANINI 27

துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸும் நியான் வாயு கண்டுபிடிப்பும் (Post No.9164)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9164

Date uploaded in London – –19 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தப் பிரபஞ்சசத்தை உருவாக்கும் 118 மூலகங்களில் (ELEMENTS) இதுவரை 28 தனிமங்களைக் கண்டோம். இன்று 29ஆவது மூலகத்தை அறிவோம்.

நியான் (NEON) என்ற வாயுவின் சரியான உச்சரிப்பு நீயான் (நியான்= NEENYON நீ- யோன்) .  ‘நவ’ என்ற சம்ஸ்கிருத்த் சொல்லில் இருந்து வந்தது நியூ / NEW புதிய என்ற சொல். அதிலிருந்து உதித்தத்தே புதிய= நியான் வாயு.

இந்த வாயுவினால் மற்ற மூலகங்களுடன் இணைந்து பணிபுரிய முடியாது. ஆகையால் இவை மக்கள், பிராணிகள் விஷயத்தில் எந்தப் பங்கும் ஆற்றுவதில்லை இதை போலவுள்ள ஆர்கான், க்ரிப்டான் , ஸெனான் என்ற வாயுக்களும் நோபிள் NOBLE  , அதாவது பிரபுக்கள் போன்றவை. அதிகம் மற்றவர்களுடம் கலவாத வகையின.

வில்லியம் ராம்ஸே , மாரிஸ் ட்ராவர்ஸ் (WILLIAM RAMSAY , MORRIS TRAVERS)  என்ற 2 விஞ்ஞானிகள் லண்டனில் 1898ல் அபூர்வ வாயுக்கள் எனப்படும் பிரபுக்கள் வாயுக்கள் பற்றி ஆராய்ந்போது திடீரென அதிக ஒளிபடைத்த வாயுவைக் (CRIMSON RED LIGHT) கண்டனர் . ‘புதிய’ என்பதற்கான ‘நியாஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து நாமகரணம் செய்தனர்.

வாயு என்பது தமிழில் ‘வளி’ எனப்படும் ஆகையால் நியானை ‘புதுவளி’ என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து..

முதலில் நியான் பற்றிய சுவையான கதையைக் கேளுங்கள் .

ராம்சேயும் ட்ராவர்ஸும் இதைக் கண்டு பிடித்ததாக உலகம் நம்பினாலும் அதே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில்UNIVERSITY COLLEGE, LONDON பணியாற்றிய விஞ்ஞானி NORMAN COLLIE தான்தான் நியானைக் கண்டுபிடித்தவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் ஹைட்ரஜன் வாயுவில் நிறமாலையைக் கண்டுபிடிக்குமாய்வில் ஈடுபட்டபோது சிவப்பு ஒளி வந்ததை வைத்து புதுவளி  என்று அறிந்தார்.

1973ல் வெளியான ஒரு  புஸ்தகம் (THE SNOWS OF YESTER YEAR- NORMAN COLLIE BY WILLIAM TAYLOR, 1973)    இவரும் தன்னிச்சையாக கண்டுபிடித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது

ஜே .நார்மன் கோலி (1859-1942) ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பேராசிரியர் PROFESSOR OF ORGANIC CHEMISTRY, UNIVERSITY COLLEGE .அதுமட்டுமல்ல; அவரை  முன் மாதிரியாகக் கொண்டு தான் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சர் ஆர்தர்   கானன்டாயில் .ஷெர்லாக் ஹோம்ஸும் பல துப்புகளை ரசாய   ரீதியில் துலக்குவார்.நார்மன் கோலி சிறந்த ரசாயன நிபுணர். நல்ல மலையேறும் சாகசப் புலி. 

நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நியான் வளி 65 பில்லியன் டன் உளது. ஆகையால் காற்றைக் கறந்து நியானைப் பெறலாம் . அதிகமாக உள்ள தனிமப்பட்டியலில் இது ஐந்தாமிடத்தில் உளது.

XXXX

நியான் NEON வாயு விளக்குகள்

இதன் முக்கிய உபயோகம் விளம்பர போர்டுகள் ஆகும். நல்ல சிவப்பு வர்ண ஒளி தருவதால் விளம்பரம் செய்யும் விளக்குகளில் இது முதலிடம் வகிக்கிறது.

இது தவிர மூடுபனிக் காலத்தில் சாலைகளிலும், நீர் மூழ்கி சாதனங்களிலும், லேஸர் ஒளிக்கருவிகளிலும் பய    படுகிறது. மிகவும் குறைந்த வெப்பத்தில் குளிர் ஊட்டும் திரவம் ஆகவும் இருக்கிறது.

மூவுலக அட்டவணையில் 18-ஆவது குழுவைச் சேர்ந்தது. அதில் மேலும் 6 தனிமங்கள் உண்டு. இவை அனைத்தும் மந்த வாயுக்கள். ஏனைய  மூலகங்களுடன் எளிதில் சேரா.

இரசாயனத் தகவல்கள்

குறியீடு Ne என் ஈ

அணு எண் – 10

கொதி நிலை – மைனஸ் -249 Cசி

உருகு நிலை- மைனஸ் -246 Cசி

இதற்கு 3 ஐசடோப்புகள் இருக்கின்றன .

ஐசடோப் என்பது ஒரு தனிமத்தின் மற்றோர் அவதாரம் / பிறப்பு.

—SUBHAM—

tags – நியான் வாயு ,.ஷெர்லாக் ஹோம்ஸ் 

MORE JOKES FROM 50 YEAR OLD COLLECTION(Post.9163)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 9163

Date uploaded in London – – 19 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Here are more jokes from the 50 year old collection of Chennai Kattukuty….

tags- more jokes

அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் (Post No.9162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9162

Date uploaded in London – –19 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 VOICE RECORDING IS IN GNANAMAYAM PAGE; FACEBOOK, YOU TUBE

லண்டனிலிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை!

அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம்                                      

  ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் பற்றி இன்று காண்போம்.

மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக எதையும் அடைய முடியும் என்று ஹிந்து மத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றனஉரிய வழிகளைக் காட்டுகின்றன!

யந்திரம் என்பது பல்வேறு வடிவங்களை அமைத்து அதில் மந்திரங்களைப் பிரயோகித்து ஒரு சக்தியை உருவாக்கி விரும்புவதை அடைய வழி வகுப்பதாகும்.

உலகில் வாழும் மனிதர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நோக்குடன் அருளாளர்கள் ஆலயத்தில் மூல விக்கிரகத்தின் – பீடத்திலோ அல்லது ஆலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலோ யந்திர பிரதிஷ்டை செய்து வந்தனர். திருப்பதியில் ஜன ஆகர்ஷண, தன ஆகர்ஷண யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாலேயே அங்கு மக்கள் திரள் திரளாகக் குவிகிறார்கள், ஏராளமான செல்வமும் வந்து குவிகிறது என்று பெரியோர் கூறுவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் யந்திரமும் பிரசித்தி பெற்றது.

யந்திரங்களுள் சிறந்தது அளப்பரிய ஆற்றல் கொண்டது ஸ்ரீயந்த்ரம்

இதை ஸ்ரீசக்ரம் என்று சொல்வது வழக்கம். இது இருக்கும் இடமே மங்களகரமானது.

இதன் மூலமே மஹா சக்தியை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். அண்ட சராசரத்தின் அடையாளச் சின்னமே ஸ்ரீசக்ரமாகும். ஸ்ரீசக்ரம் உள்ளிட்ட பல்வேறு யந்திரங்கள் பிரக்ஞையின் பல்வேறு நிலைகளை எட்ட உதவுகின்றன.     ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

மந்திரத்திற்கு மஹிமை உண்டா என்று ஒலி அலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) (1904-1972) முனைந்தார்.

பொறுமையாக ஒவ்வொரு ஒலி அலையையும் அவர் பத்து ஆண்டுக் காலம் பரிசோதித்தார். க்ளிசரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்றவற்றில் ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் (Low Frequency Sound Waves) சாதாரணமான ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரண படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன!

“ஓ என்ற ஒலி அலை, ஒரு வட்டத்தை உருவாக்கியது. உடனே “ஓம் என்ற ஒலி அலையை அவர் உருவாக்கினார். அதிலே ஸ்ரீசக்ரம் உருவானது!

     ஹான்ஸ் ஜென்னி ஆச்சரியப்பட்டுப் போனார். பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீசக்ரம் வழிபடப்பட்டு வருகிறது. ஓம் உச்சரிக்கப்பட்டு வருகிறது!

ஜென்னி தன் ஆய்வுகளின் மூலம் ஒலி அலைகள் உருவங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார். அத்தோடு மனித உடலில் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அதற்கு உரித்தான ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் வந்தார். “ஓம் என்று உச்சரிப்பதும் அதைப் போற்றி வழிபடுவதும், ஸ்ரீசக்ர வழிபாடும் உடலுக்கும் மனதிற்கும் எல்லையற்ற சக்திகளையும் இதர நலன்களையும் நல்குகிறது என்று அவரது ஆய்வு சிறப்பான முடிவைத் தெரிவிக்கிறது!

ஸ்ரீசக்ரத்தின் பெருமையைக் கேட்ட உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதை ஆராய ஆரம்பித்து விட்டனர். மாஸ்கோ பல்கலைக் கழக இயற்பியல் விஞ்ஞானியான அலெக்ஸி குலைச்சேவ் (Alexie Kulaichev) மற்றும் ரஷிய நாட்டு விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த கோவலான் சென்கோ என்ற இருவரும் ஸ்ரீசக்ரத்தை ஆராயப் புகுந்தனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு எல்லையற்ற பிரமிப்பையும் வியப்பையும் தந்தது,

கம்ப்யூட்டராலேயே ஸ்ரீசக்ர கோணங்களையும் அமைப்பையும் ஆராய முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

“இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் ஸ்ரீசக்ரத்தை ஆராய முடியவில்லை என்றும் அதை ஆராய்வதற்குச் சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாடுகள் உள்ளன; அது தற்போதைய கணினியின் செயல்திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது (Their analysis involved a complex system of algebraic equations and a complicated computations which are beyond the capability of the present generation of computers) என்று அவர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த சக்கரத்தை எப்படி முன்னோர்கள் அமைத்தனர், ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டும் போது அதன் பல்வேறு வெட்டுப் புள்ளிகள் ஒரே இடத்தில் சேர்வதை எப்படி அவர்களால் அறிய முடிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்!

“How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding!”

ஸ்ரீசக்ரத்தின் மஹிமையைப் பல்வேறு விதமாகவும் அவர்கள் ஆராய்ந்தனர். ஸ்ரீசக்ரம் உளவியல் சம்பந்தமான அனைத்து மனநோய்களையும் போக்க வல்லது என்று அவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றனர், மிக மிக சரியான அளவுகளுடன் அதை எப்படி வரைவது என்று தெரிந்து கொண்டு அந்த முறையில் அமைக்கப்படும் ஸ்ரீசக்ரம் மட்டுமே இந்த விதமான சக்தியைப் பெறுகிறது. அலெக்ஸி குலைச்சேவ் தனது ஆராய்ச்சியில் ஸ்ரீசக்ரம் போன்ற ஒரு போலி யந்திரத்தைச் செய்து அதை ஆய்வு செய்த போது அது எந்த நோயையும் குணப்படுத்தவில்லை. ஆக உரிய அளவுகளுடன் உரிய முறையில் உள்ள ஸ்ரீசக்ரமே சக்தி வாய்ந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக உறுதிப் படுத்தினார் அவர். அவரது ஆய்வுரையை அங்கீகரிக்க அவரது திட்டத் தலைவருக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட போது அவரும் இப்படிப்பட்ட பலன்களை உறுதி செய்து கொண்ட பின்னரேயே அந்த ஆய்வை அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

ஸ்ரீசக்ரத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. நடுவில் பிந்துவும் (புள்ளி), சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ள அமைப்பு என்று ஒரு வரியில் சுலபமாக ஸ்ரீசக்ரத்தை விவரித்துச் சொல்லி விட்டாலும் எல்லையற்ற பிரபஞ்சத்தின் மர்மத்தை அது உள்ளடக்கி இருக்கிறது என்றே அதன் ஆற்றலை உணர்ந்தோர் கூறுவர்.

ஒன்பது முக்கோணங்களில் மேல் நோக்கிய நான்கும் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன,

மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடாக ஸ்ரீசக்ர வழிபாடு அமைகிறது. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, முக்திப் பேறு என இப்படி இக பர நலன்கள் அனைத்தையும் தரும் அற்புத யந்திரம் ஸ்ரீசக்ரமாகும்!

சௌந்தர்ய லஹரிக்கு விரிவுரை எழுதிய லக்ஷ்மிதரர் பதினொன்றாம் சுலோக விரிவுரையில் ஸ்ரீசக்ரத்தை மதம், இனம், வர்ணம், பால், வயது, அந்தஸ்து, கல்வி பாகுபாடின்றி அனைவரும் வழிபடலாம் என்று உரைக்கிறார்.

அகஸ்திய மாமுனிவர் அம்பாளின் அணுக்க பக்தையான தனது மனைவி லோபாமுத்ராவிடம் திரிபுரசுந்தரியின் அருளைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அப்படிப்பட்ட லோபாமுத்ராவை “லோபாமுத்ராவால் அர்ச்சிக்கப்படுபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் 648வது நாமத்தில் கூறி அவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது!

பவிஷ்யோத்தர புராணத்தில் அவர், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காட்டிலும் சக்தி வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் இதை வழிபடலாம் என ஆணித்தரமாகக் கூறுவதால் அனைவருக்கும் ஏற்ற வழிபாடு ஸ்ரீசக்ர வழிபாடு என்பது பெறப்படுகிறது.

திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஐந்தடி உயரம் உடையவள். அங்கே கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப் போன அர்ச்சகர்கள் வீடு திரும்பாமல் அன்றே இறந்து போவது வழக்கமாக இருந்தது. இதை எண்ணி அனைவரும் சொல்ல மாளாத துக்கம் அடைந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஆதி சங்கரர் அங்கே வந்து நான்கு அங்குலம் உள்ள பூப்ரஸ்தார சக்கரத்தைத் தங்கத்தில் செய்து அதில் வைரம் பதித்து அம்மனின் இரு காதுகளிலும் அணிவித்தார். அம்மனின் கடும் உக்கிரத்தைத் தணிவித்து அம்மனை அர்ச்சிக்க அனுமதியும் தந்தார். அம்மன் அர்ச்சனையை ஏற்றதுடன் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இதர சௌபாக்கியங்களையும் அருள ஆரம்பித்தாள்.

ஸ்ரீசக்ர ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை ஈடுபடுத்திய பலருள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்வாமி ப்ரணவானந்தர். (14-1-1896 அன்று பிறந்த இவர் தநனது 93ஆம் வயதில் 17-5-1989 அன்று இறைவனுடன் கலந்தார். 1976ஆம் குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.

பிரபல ஆங்கில எழுத்தாளரான பால் ப்ரண்டன் அவருடனான தனது அனுபவங்களை ‘ஹெர்மிட் இன் தி ஹிமாலயாஸ் என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.

சுமார் 180க்கும் மேலான ஸ்ரீசக்ர பிரதிஷ்டைகளை நேரில் கண்டு ப்ரணவானந்தர் அவற்றை ஆராய்ந்தார். ஸ்ரீசக்ரத்தின் அனைத்து அம்சங்களையும் நலங்களையும் விளக்கும் அவர் ஸ்ரீசக்ர வழிபாடு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்கிறார்.

சென்னையில் திருவேற்காட்டிலும் மாங்காட்டிலும் உள்ள ஸ்ரீசக்ரம் மிக்க சக்தி வாய்ந்தவை. மாங்காட்டில் உள்ள கோயில் ஒன்றே பாரதம் முழுவதிலும் ஸ்ரீசக்ரத்திற்காக அமைந்துள்ள ஒரே கோவில் ஆகும். தஞ்சாவூர் அரண்மனையில் மரகதத்தால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.சென்னையில், வேளச்சேரியில் தண்டீஸ்வரர் கோவிலில் அப்பைய தீக்ஷிதர் ஸ்தாபித்த பூப்ரஸ்தார யந்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.

தமிழகத்தில் சிதம்பரத்தில் கோகிலாம்பா கோவில், காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளிட்ட சுமார் 14 இடங்களில் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

யந்திரங்களிலேயே உன்னதமானது என்பதால் இதை ‘சர்வச் ரேஷ்ட யந்திரம் என்பர்.

ஸ்ரீசக்ரத்தை சுவரில் தொங்க விடக்கூடாது. கிடைமட்டமாக வைத்து வழிபட வேண்டும். சரியாக் இதை வழிபடும் முறையை குரு மூலமாகக் கற்று வழிபடுதலே சாலச் சிறந்தது. இதைத் தூய மனதுடன் வழிபடுவோர் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறுவர். தீய நோக்குடன் இதை வழிபட்டால் இது செயலிழப்பதோடு வழிபடுவோருக்குத் தீங்கையே விளைவிக்கும்.

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸ்ரீசக்ரத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:-

“கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது.  Divine Design! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.” (தெய்வத்தின் குரல் ஆறாம் தொகுதியில் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்). அவர் தரும் எச்சரிக்கையும் ஒன்று உண்டு! :- “இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர்.               அனைத்து அதிர்ஷ்டங்களையும் நலன்களையும் ஒருங்கே அள்ளித் தரும் ஸ்ரீசக்ரத்தை அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம் என்றே அழைக்கலாம்.  ஸ்ரீசக்ரத்தை உரிய முறையில் வழிபடுவோமாக; இகபர நலன்களைப் பெறுவோமாக; உயர்வோமாக! நன்றி வணக்கம்! 

***

குறிப்பு:-

ஸ்வாமி ப்ரணவானந்தரின் புத்தகம் கிடைக்குமிடம்:-

A Treatise on Sri Chakra

By Swami Pravananda F.R.G.S (Of Holy Kailas Manasarovar)

240 Pages

Publishers : Sri Swami Pranavananda Trust

Yenuulamahal, East Godavari Dt, Andhra Pradesh Pincode: 533233

TAGS- அறிவியல் , ஸ்ரீசக்ர ரகசியம், ப்ரணவானந்த

LONDON CALLING (HINDUS) 18-1-2021 (Post No.9161)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9161

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

GNANA MAYAM BROADCAST

18TH  JANUARY 2021 MONDAY

Maitrim bhajata – SIGNATURE SONG

THE HIGHLIGHT OF TODAY’S BROACAST WAS DR CHITRA’S TALK ON THE IMPACT OF TAMIL CULTURE IN THAILAND. SHE USED PICTURES FROM BOTH TAMIL ANDU AND THAILAND TO SHOW HOW THE FESTIVALS, THE GODS, RITUALS, RELIGIOUS LITERATURE LIKE TIRUVEMBAVAI WERE SIMILAR. THOUGH IT WAS A BUDDHIST COUNTRY STILL BRAHMINS CROWN THE KING BY RECITING TAMIL VERSES. SHE TOLD THAT NOT ONLY THAILAND BUT ALSO KOREA HAS MANY SIMILARITIES. HER COLLECTION OF PICTURES PROVED HER STATEMENTS BEYOND DOUBT

EARLIER PRODUCER LONDON SWAMINATHAN, WHILE INTRODUCING DR CHITRA FROM HONG KONG UNIVERSITY, TOLD THAT THOUGH SHE WAS A COMPUTER PERSONNEL, SHE IS WELL VERSED IN TAMIL AND HELPING TO SPREAD TAMIL CULTURE OVERSEAS.

XXX

Prayer BY MRS SWARNALATHA FROM TIRUPPUR

S Swaminathan’s Tamil Article ‘DOCTOR MURUGAN AND PATIENT ARUNAGIRINATHAR’ –read by MRS VAISHNAVI ANAND

MRS DAYA NARAYAN SANG A   SHIVA HYMN

PRODUCER LONDON SWAMINATHAN INTRODUCED DR CHITRA.

Dr. CHITRA FROM HONGKONG SPOKE ON “IMPACT OF TAMIL CULTURE IN THAILAND”.

MRS LAKSHMI RAMASWAMY —  SONG – UNNAI ALLAAL BY PAPANASAM SIVAN IN KALYANI RAGA.

Mr . S NAGARAJAN’S TALK ON “MYSTERIES OF SRI CHAKRA”

MRS SARASWATHY CHANDRASEKARAN SANG FIRST ASHTAPATHY

Mrs SRI VIDHYA from Dubai –Bharatiyar Episode-5- 

DR KANNAN spoke on ALVARS

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- Gnanamayam18121

LONDON CALLING (TAMILS) 17-1-2021(Post No.9160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9160

Date uploaded in London – –18 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER  , PART OF GNANAMAYAM CHANNEL,  BROADCAST THE FOLLOWING PROGRAMS ON 17TH JANUARY 2021 FROM LONDON.

THE HIGHIGHT OF THE BROADCAST WAS A TALK BY TAMIL WRITER B. KANNAN OF DELHI. HE SPOKE ABOUT THE TIRUVALLUVAR TEMPLE, WITH WHICH HE WAS ASSOCIATED FROM HIS BOYHOOD DAYS. HE GAVE VERY RARE INFORMATION ABOUT THE FESTIVALS, THE VALLUVAR IDOL AND THE PROMINENT VISITORS TO THE TEMPLE IN MYLAPORE, CHENNAI. HE ALSO TOUCHED BREFLY THE HISTORY OF VALLUVAR, HIS FRIEND ELELASINGAN AND THE RARE TREES INSIDE THE TEMPE COMPLEX.

7-1-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் திரு பா.கண்ணன் அவர்கள் மயிலை திருவள்ளுவர் கோவிலைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார்.

அவரை திரு ச.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுக உரையைக் கீழே காணலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம்மிடையே உரையாற்ற பிரபல எழுத்தாளர் திரு பா.கண்ணன் அவர்கள் வந்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது புது டில்லியில் வசித்து வருகிறார்.

இவர் எனது இனிய நண்பர். வயதால் மூத்த குடிமகன் என்றாலும் மனதால் ஊக்கமும் உற்சாகமும் கொண்ட இளைஞர்.

மயிலாப்பூரிலே பி.எஸ். உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் விவேகாநந்தா மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

பின் புனே வந்து அங்கு ஒரு கனரகத் தொழிற்சாலையில் 11 ஆண்டுகள்

வேலை பார்த்தார். பின்னர் ஜாம்ஜெட்பூர் சென்று அங்கு டாடா ஸ்டீல் கம்பெனியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தனது மகனுடன் புதுடெல்லியில் துவாரகா பகுதியில் வசித்து வருகிறார்.

1962இல் எழுத ஆரம்பித்த இவர் குமுதம் வார இதழ் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டார்; இவரது ஒரு பக்கக் கதை தேர்வு பெற்று பிரசுரிக்கப்பட்டது. கல்கியில் நவராத்திரி திரைப்படம் பற்றி இவர் எழுதிய

விமரிசனம் தேர்வாயிற்று. ஆனந்தவிகடன் இதழில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.

பணி ஓய்வு பெற்ற பின்னர் நிறைய ஆன்மீக இதழ்களில் இவர் கட்டுரைகள் பிரசுரமாயின; தொடர்ந்து ஞான ஆலயம் உள்ளிட்ட ஆன்மீக இதழ்களில் பிரசுரமாகி வருகின்றன.

 78 வயதில் அடி எடுத்து வைத்துள்ள இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத புத்தகங்களை ஊன்றிப் படிக்கும் ஒரு புத்தகப் புழு. தான் படித்து அறிந்து கொண்டதை உலகிற்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் இதுவே தனது எழுத்தின் நோக்கம் என்கிறார்.

உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துப் புத்துணர்ச்சி ஊட்டுவது இந்த எழுத்துப் பணியும் அதற்கு உந்து கோலாக விளங்கும் ஆன்மீகப் பயணங்களும் தான் என்பது இவரது முடிவார்ந்த முடிவு.

எதையும் ஊன்றிப் படித்து ஆய்வு செய்து பின்னரே, ஆய்வுக் கட்டுரைகள் படைப்பது இவரது தனிச் சிறப்பு.

அந்த வகையில் மயிலையில் திருவள்ளுவர் கோவில் தெருவிலேயே வசித்த இவர் பொய்யாமொழிப் புலவரைப் பற்றி நன்கு ஆராய்ந்தார். அந்த ஆய்வின் முடிவாக இவர் கண்ட உண்மைகளையே இப்போது நாம் கேட்கப் போகிறோம். இவரை ஞானமயம் சார்பில் வருக வருக என மனமுவந்து வரவேற்கிறோம். இதோ திரு கண்ணன் அவர்கள்

உரையைக் கேட்போம்..

Vaalka thamil mozi – signature tune

Prayer by Ms Pavithra Prabhu

Mrs Brhannayaki Sathyanarayanan  – Talk on Suryanar Koil Temple –

TIRUPPUGAZ  by Mrs Jayanthi Sundar and Mr Natarajan and Mrs Nirmala Natarajan

WORLD HINDU NEWS ROUNDUP in English and Tamil –

BY MRS SUJATHA RENGANATHAN &

MRS VAISHNAVI ANAND

Pongal song by MRS DAYA NARAYANAN –

Mr B Kannan from Delhi spoke on the topic “Tiruvalluvar Temple, in Mylapore”

Bengaluru Nagarajan introduced the speaker.

Tiruppavai – Notru swargam- BY CHENNAI MRS LAKSHMI RAMASWAMY- 

XXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER? tamil thunder 17121

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- tamil thunder 17121